Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Super super arumai a story pogudhu sagi..interesting...one of my favourite song♥️♥️rendu per dance um paartha feel andha song a padichadhum....photographer edutha photo superuuu..midhuna nalla ponnu avala aemathirukanga pola vanadhi appa..ipa andha kilavi pota kanakku vanadhiku therinja avalavadhu support pannuva..enna saga pogudho andha ponnuku edhum aagama seinga ka.ava moonu maatha baby oda accident aanuchuni sonnadhu andha baby diya pola...barathi kovil poitu mei marandhu ellame seithadhu happy ovvoru scene um arumai tiyanam pannadhu ava manasukku nimmadhiya koduthuruku...ellame super ka..sema..nice ud
மிக்க மிக்க நன்றி சகி ஒரு நடிகையைப் பற்றி எழுதும்போது வாசகர்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று யோசித்தேன் நீங்கள் பாராட்டும் போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகோ
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Adaddada ennada idhu...ponnamma kannama nu dhool la pogudhu...wowowowo😍😍😍😍😍ees la alaga irku. Sena dance aadiyadhum sema shock avanga amma thaan baratham tgeriyumnunsonnaga maganukum theriyumnu ippathan theriyudhu.akka thangai renduthukku vayiru eriyattum loosunga enna jenmam....vizha ku vara sirappu virundhinar yaraunu enaku oru guessing irku ees ka sonna thittuvinga 😜😜😜😜adhunala na sollala....oru vagaila diya oda family package kandupidichuten paarpom.sena ku ippave moochu muttudhu ivlo kashta padran.innum poga poga ennanavo..aama susi ku ennathan aachu aalaye kaanom...super ud ka ..nxt padika poren luv u..💞 byeeee
கோ சிறப்பு விருந்தினரை வைத்து நீங்கள் யார் என்று தெரிந்து கொண்டிருக்கலாம் .

உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி டா தங்கையே .

நேரம் ஒதுக்கி வாசித்து நீண்ட விமர்சனம் தருவதற்கும் மனதார நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
மிகவும் அருமையான பதிவு அழகான கதை கடவுளே இவர்களை இணைத்து வைத்து விட்டார். ஆனால் என்ன இன்னும் நான்கு வருடம் காத்துக் கொண்டு இருக்க வேண்டும்...

இந்த ஆத்விக் என்ன பண்ண போரணு தெரியலை.அவன் மகிமா,மதுரா மூனு பேரும் ஏதோ பன்னப் போரங்கள?ரொம்ப interst ஆக போய்க் கொண்டிருக்கிறது.இவர்கள் அனைவர் வாழ்விலும் நடக்கும் மர்மம் எப்பொழுது நீங்கும் ரொம்ப அருமை சிஸ்டர்😍😍😍
 

BalaSneha ammu

New member
Messages
1
Reaction score
0
Points
1
Super epi isai ma atvik Oda luv success akuma thiya manasula apdi Oru ename Ila and Sri Yoda antha boldness Nala iruku and thiya ishu Oda frndz bond super 🤩🤩🤩🤩
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Super epi isai ma atvik Oda luv success akuma thiya manasula apdi Oru ename Ila and Sri Yoda antha boldness Nala iruku and thiya ishu Oda frndz bond super 🤩🤩🤩🤩
நன்றி டா செல்லகுட்டி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .
❤❤❤❤❤❤❤
 

Ananya deva

New member
Messages
22
Reaction score
1
Points
3
Paavam indha vidyama apdiye silk ma'am kadhai madhriye irukula knjm, paavam ellarkum eevlo kastam la 😞 nethu indha advik payale vittutane ekka Andha thiya kitta solli avana naalu poda sollunga 😠 evan punishment kudukaranamae 💪 velupudunga
 

Anitha Sundar

Active member
Messages
116
Reaction score
64
Points
28
வெப்பம் - 10

மிதுனா, ஊட்டியில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தின் நடுவில், ஹீரோவுடன் பாடலுக்கு நடனமாடி முடித்துவிட்டு, கால்கள் எல்லாம் வலி எடுக்க, மாலை வேளையில் தனது ஹோட்டல் அறையில் படுத்திருந்தாள். மனமெல்லாம் தன் தங்கை பேசிய வார்த்தைகளே காதுக்குள் ரிங்காரமிட்டது.

ஒரே இடத்தில் படுத்திருந்தால் மனம் இப்படித்தான் வேதனைப்படும் என்பதால், மெல்ல எழுந்து ரிஷிக்கு கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, அருகிலிருக்கும் தேயிலைத் தோட்டத்திற்குள் நடக்க ஆரம்பித்தாள்.

அந்த நேரம், ஒரு புதருக்குள் ஒரு பெண், “என்னை விட்டுவிடு. நான் வீட்டுக்குப் போகனும். ப்ளீஸ்…” என்று கத்தி கத்தி அழும் சத்தம் கேட்கவும், மிதுனா நின்றாள்.

மெல்ல புதரை விலக்கிவிட்டு, யாருன்னு வந்து எட்டிப் பார்க்க இருபத்தி ஐந்து மதிக்கத்தக்க ஓருவன், 17 வயது நிரம்பிய சிறுபெண்ணைப் போட்டு, கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்து கொண்டிருந்தான். இதைக் கண்டதும் மிதுனாவிற்கு கோபம் பொங்கியது. தானும் சிறுவயதில் அடிவாங்கிய ஞாபகம் வரவும், வேகமாய் அங்கே சென்று, அவன் கையைப் பிடித்து திருப்பி மொத்து மொத்தென்று அடித்து உதைத்து, “எதுக்குடா சின்னப் பெண்ணைப் போட்டு அடிக்கிற?”

அவனோ தனது பாக்கெட்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து, மிதுனாவை நோக்கிச் சுடப்போக லாவகமாய் குனிந்து, சினிமா தொழிலில் வேலை செய்யும் போது தன்னை தற்காத்துக் கொள்ள கற்றுக்கொண்ட கலைகளால், அவனை அடித்து நின்றிருந்தவளின் துப்பட்டாவால், அவனின் கைகளை கட்டிப்போட்டு, அவன் கத்தாமல் இருக்க வாயிற்குள் துணியை வைத்து அடைத்தார்.

அந்தப் பெண்ணின் கன்னத்தில் பளாரென்று அறைந்து, “இந்த வயசில் இப்படி ஒருத்தனை நம்பி தனியாய் புதருக்குள் வந்திருக்கிற. அறிவில்லையா...?”

“நான் சசிரேகா. சென்னைதான் என் ஊர். கல்லூரியின் முதலாம் வருடம் இப்போத்தான் சேர்ந்து இருக்கேன். இவனால ரெண்டு வாரமாய் காலேஜ்க்குப் போகல.

எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்கனுமென்பது ஆசை. அதனால் திரையுலகத்தில் நுழைவதற்கு வாய்ப்புக்காக யாரைப் பார்ப்பது என்று கூகுளில் தேடிக் கொண்டிக்கும் போதுதான், இவனைப்பற்றி முகநூலில் பார்த்தேன்.

இவனும் சென்னையில் தான் வசிக்கிறான். பெயர் மூகேஷ். இவனின் முகநூல் பக்கத்தில், தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலருடன் எடுத்துக் கொண்ட படத்தைத் பகிர்வான். நான் இவனைப் பின்தொடர்ந்து தினமும் பார்த்துக் கொண்டே வந்தேன். இவன் எல்லா நடிகர் நடிகைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, நானே தான் அவனிடம் பேச ஆரம்பித்தேன்.

அவனும் தமிழ் திரையுலகில் உள்ள பலநடிகர்கள், இயக்குநர்களுடன் எனக்கு மிகவும் நெருக்கம் இருப்பதாய்ச் சொன்னான். தினமும் பேச ஆரம்பித்தோம். பேசும் போது சினிமா திரையுலகில் நான் மிகவும் செல்வாக்கு மிக்க ஆள் என்றான். அவனின் முகநூல் பதிவில் இருந்த நடிகர்கள் எல்லாம், பெரிய பெரிய ஆட்கள்.

அவனின் பேச்சுக்களை நம்பி, நான் அவனிடம் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையிருக்கிறது. படங்களில் வாய்ப்பு வாங்கித்தர முடியுமான்னு கேட்டேன். கண்டிப்பாய், நான் உனக்கு பட வாய்ப்புகள் வாங்கித் தர்றேன் என்று சொன்னான்.

தினமும் பேசப்பேச, அவன் என்னைக் காதலிப்பதாய்ச் சொன்னான். அவ்வப்போது அவன் வீட்டுக்குப் போவேன். ஒரு நாள் கூட என்னிடம் தப்பாய் நடந்ததே இல்லை.

இந்த நேரத்தில், வீட்டில் என் காதல் விவகாரம் தெரிய வந்தது. அம்மா என்னை அடித்து விட்டார்கள். சினிமாவில் நடிக்கப் போறேன் என்று சொன்னதும், அப்பாவும் அம்மாவும் என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பவே இல்லை. எனக்கு பெரிய நடிகையாக வேண்டும் என்பது என் கனவு. முகேஷ் அதை நிறைவேற்றுகிறேன் என்று சொன்னான்.

ஒருநாள் போட்டோ ஷூட் எடுத்தால்தான் நீ பிரபலமாக முடியும் என்றான். நான் கோவையில் இருக்கேன். இங்கே பிரபலமான இயக்குனரின் பெயரைச் சொல்லி, அவர் இங்கு தான் புதுமுகத்திற்கான போட்டோ ஷூட் நடத்துகிறார். நீயும் வா என்றான்.

அவனை காதலிப்பதாலும், அவன் தன்னிடம் ஒரு நாள் கூட தவறாக நடந்து கொள்ளாததாலும், அவன் பேச்சை நம்பி வீட்டில் சொல்லாமல் ஓடி வந்தேன். கோயமுத்தூரில் அவனின் நண்பன் வீட்டுக்குக் கூட்டிப் போனான். அவனுடன் பேசிட்டிருந்தேன். சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். சாப்பிட்டேன். அவ்வளவுதான் தெரியும். என்ன நடந்தது என்ன பண்ணினான் ஒண்ணுமே தெரியல.

நேற்று காலையில் ஒரு ஃபோட்டோ ஷூட்டுக்காக ஊட்டி போகனும்னு சொல்லவும், நானும் வந்தேன். இங்கே நேற்று மாலை வந்தோம். இவன் இயக்குனரோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் தான் பெரிய வாய்ப்புகள் தருவார் என்று மிரட்டுறான்.

நான் மாட்டேன் என்று சொன்னதும், அவன் மொபைல் போனை எடுத்து நீட்டினான். அதில் முந்தின நாள் இரவு, நான் சுய நினைவின்றிக் கிடந்தேன். என்னிடம் அசிங்கமாய் நடந்து, அதையே படம் எடுத்திருக்கான். எடுத்த படத்தை இணையத்தில் விட்டு விடுவேன் என்று மிரட்டினான். நான் இவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தேன். துரத்தி வந்தவன் என்னை கொலை பண்ண முயற்சிக்கிறான். ப்ளீஸ் மேடம் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில், அந்த இயக்குனர் இந்த ஹோட்டலுக்கு வந்து விடுவான். ப்ளீஸ் மேடம் என்று காலில் விழுந்து கெஞ்ச, மிதுனா, அவளை அள்ளி அணைத்துக் கொண்டாள்.

மிதுனாவின் கண்ணிலிருந்து வழியும் கண்ணீரின் காரணம், அவளுக்கு மட்டுமே தெரியும். ஒரு பெண் தன் அப்பா, சகோதரனுக்கு அடுத்து அதிகமாய் நம்புவது காதலன். ஆனால், அந்தக் காதலுக்கு தகுதி இல்லாதவர்கள் இவனைப் போன்றவர்கள். உண்மையாக நேசிக்கும் பெண்களுக்கு மட்டும் தகுதியே இல்லாத காதலர்கள் கிடைப்பது பெண்ணின் துரதிருஷ்டமே...!

தனது செல்போனில் ரிஷிக்கு அழைத்து விட்டு, அவளிடம், “நீ சாப்பிட்டாயா...?”

அவளோ “இல்லை மேடம். பசிக்குது.” என்றதும், மிதுனாவின் கண்ணில் வலியும் வருத்தமும்.

ரிஷி வந்ததும், அவனைப் பற்றிச் சொல்ல, அவனை நாலு மிதி மிதிக்கவும், அவன் மயக்க நிலைக்குச் சென்று விட்டான்.

மிதுனா, “இந்தப் பெண்ணின் பெயர் பேப்பரில் எதிலும் வந்து விடக்கூடாது ரிஷி. என்ன பண்ணலாம்...?”

பின் அவளின் நினைவில் வந்தது புகழ்பெற்ற நடிகர் புகழேந்தி. ‘பெண்னவளின் ஆருயிர் நண்பன். சொந்த ஊர் கோயம்புத்தூர். ஆனால், இப்போ எங்க இருக்கான்னு தெரியலையே?’ என்ற சிந்தனையில் தன் நண்பனுக்கு அழைத்தாள்.

“ஹாய் மேடம். உங்களுக்கு என் ஞாபகம் எல்லாம் இருக்கா...?”

“நம்மைப் பற்றி அப்புறம் பேசிக்கலாம். ஒரு முக்கியமான விசயமென்று நடந்ததைச் சொன்னாள். நான் இப்போ கோயம்புத்தூரில் தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே வர்றேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

மிதுனா ரிஷியிடம் “நீ கொஞ்சநேரம் இந்த புதருக்குள் இவனைப் பார்த்துக்கோ. மயக்கம் தெளிந்தால் மீண்டும் மிதி. அடிச்சு மொகரையை டேமேஜ் பண்ணு. புகழ் வந்த பின் நானும் வர்றேன்.”

அவளை அழைத்துக் கொண்டு போய், ஹோட்டலில் அமர்த்தி, சாப்பாடு வரவைத்து அவளுக்குக் கொடுத்தாள். அவள் சாப்பிட்டு முடித்ததும் தனதறைக்கு, கூட்டிக் கொண்டு போனாள்.

பின் அவளிடம் “ஒரு பெண் பெற்றோர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வருவது தப்பில்லையா...? இப்படி வந்தால், எவன் உன்னை சும்மா விடுவான்? பெற்றோர் கூட இருக்கும் நடிகைகளுக்கே, அத்தனை கஷ்டம். இதில் தனியாய் வந்து சிக்கியிருக்க?”

அவளின் கண்ணில் கண்ணீர். “நான் பெரிய தப்பு பண்ணிட்டேன், மேடம்.”

“உன் வீட்டில் பணக்கஷ்டமா...? சாப்பிடுவதற்கு எல்லாம் பணம் இல்லையா...?”

“அப்பா வங்கியில் வேலை பார்க்கிறார். பணத்திற்கு எல்லாம் எங்கள் வீட்டில் பிரச்சனையே இல்லை மேடம். சொல்லப் போனால், நான் வீட்டிற்கு ஒரே பெண் மேடம். எனக்கு சின்ன வயசுல இருந்து, பெரிய சினிமா நட்சத்திரம் ஆகனும் என்பது என் கனவு.நீங்கள் எல்லாம் இன்று பெரிய நட்சத்திரமாக இருப்பது போல, நானும் ஒரு நாள் ஆக வேண்டாமா...?”

“ஹா... ஹா…. பேருக்குத்தான் நான் பெரிய நட்சத்திரம்.”

சசியோ, “மிதுனா என்றால் தெரியாதவர்களே கிடையாது. புகழின் உச்சியில் இருக்கிறீங்க. வாழ்வில் அனைத்தும் கிடைத்து வெற்றியின் உச்சத்தில் நீங்க.”

மிதுனா " புகழ் இருக்கு. பணம் வேண்டாம் வேண்டாமென்று சொல்ற அளவுக்கு இருக்கு. ஆனால் மனநிறைவோ, மன நிம்மதியோ கொஞ்சம் கூட இல்லை. அதீத மன அழுத்தம். பல நாள் நான் தூங்கினதே இல்லை.”

“விருப்பம் இல்லாமல் தான் சினிமாவுக்கு வந்தீங்களா...?”

“ஆமாம். ஏழ்மை துரத்த வந்தேன். நடிப்பு… என் கனவில்லை.”

“உங்க கஷ்டத்திற்காக நடிக்க வந்தீங்களா...?"

“ஆமாம்! நாங்க பணக்காரர்களும் இல்லை. ஏழையும் இல்லை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். என் வீட்டிற்கு நான் மூத்த பெண். என் அப்பாவுக்கு ஆண் குழந்தை என்றால் அவ்வளவு பிடிக்கும். எங்களையும் ரொம்பப் பிடிக்கும். ஆனால், அவருக்கு என்னமோ அந்தச் சென்னையில் இருக்கும் அத்தனை சொத்தும் அவருரோடது போல நினைப்பு. அதை அனுபவிக்க, ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்ற வருத்தம் போல..” என்று நக்கலாய் சொல்லியவள்,

“நான்கு பெண் குழந்தைகளுக்கு அப்புறம் பையன்.

ஆண் குழந்தை வேண்டி, கோவில் கோவிலாய் விரதமிருப்பார்கள். என் அம்மாவின் வேண்டுதல் கடவுளுக்குக் கேட்டது போல. கடைசியாகப் பிறந்தவன் தான் என் தம்பி.”

“ஏன் மேடம், உங்களுக்கு ஆம்பளப் பையன் பிடிக்காதா...?”

"என் அப்பா, பையன் பையன்னு சொன்னதால் பிடிக்காமல் இருந்துச்சு. ஆனால், என் தம்பியை என் கையில் தூக்கின நொடியிலிருந்து, நான் அவனுக்கு இன்னொரு அம்மா. அவனை அவ்வளவு பிடிக்கும்.

அப்பா தனியார் கம்பெனியில் கணக்காளராய் வேலை பார்த்தார். பணத்திற்குப் பிரச்சனை இல்லை. ஆனால், சேமிப்பு ஓண்ணுமில்லை. இருக்க சொந்த வீடு. நல்லாத்தான் போச்சு. அம்மா பரதநாட்டியக் கலைஞர். சின்ன வயதிலிருந்தே பரதம் கத்துகிட்டேன். நான் பள்ளி ஆண்டு விழாவில் பரதம் ஆடினேன். விழாவிற்கு பள்ளிக்கு வந்த இயக்குனர் ஓருவர், என் நடனம் பார்த்து பிடித்துப் போக, என் வீட்டிற்கு வந்து அப்பாவிடம் என்னை அவரின் படத்தில் நடிப்பதற்காகக் கேட்டார். என் அப்பா மறுத்துவிட்டார்.

ஒருநாள், என் பதினான்கு வயதில் தூக்கத்திலே அப்பா இறந்து விட்டார். அப்பத்தான் ஒரு அப்பாவின் பங்கு என்னன்னு தெரிஞ்சது. அம்மா நிலைகுலைந்து போனாங்க. அடுத்த மாசம் சாப்பாட்டிற்கே வலியில்லை. என் தங்கச்சி அனைவரும் குழந்தைங்க. யாரை நம்பியும் குழந்தைகளான பிள்ளைகளை வீட்டில் தனியாய் விட்டுவிட்டுப் போகமுடியாது.

ஒரு ரெண்டுமாதம் சாப்பாட்டிற்கு பயங்கர கஷ்டம். தினமும் விதவிதமாய் சாப்பிட்டு விட்டு, திடீரென்று பட்டினி கிடந்தால் எப்படியிருக்கும்?

அந்த நேரம், என்னை படத்தில் நடிக்கக் கேட்ட இயக்குனர், எங்கள் தெருவில் குடி வந்தார். அவரின் படத்திற்கு இன்னும் நாயகி கிடைக்காததால் தேடிக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டின் சூழ்நிலை புரிய, என் அம்மாவிடம் வந்து மீண்டும் கேட்ட போது, இரவில் சாப்பிடவே பற்றாக்குறை. விடிந்தால் மீண்டும் சாப்பிடணும். அதற்குப் பணம் வேண்டுமே...!

அம்மா தலையாட்டினார். நான் படத்திற்கு நடிக்க வந்தேன். அப்போ வந்தது, இந்த சினிமா வாழ்க்கைக்கு.

ஓரு நடிகை என்பவள் ரசிகர்களை மகிழ்விப்பவள். ஆனால், என் அகத்திற்குள் சொல்ல முடியாத பல கஷ்டங்கள். ஊரார் அறியாத கண்ணீரும், சோகமும் மறைந்திருக்கு.

சினிமாவில் மிதுனா என்பவள் ஆடி, பாடி, சிரித்து, மகிழ்ந்து வாழ்பவள். அவளுக்கென்ன குறை? மிகவும் சந்தோஷமானவன்னு காட்டிக் கொண்டு நடிக்கிறேன். சினிமா வாழ்க்கையில், நான் எதிர்கொண்ட பிரச்னைகள் ஏராளம்.

உனக்கு ஒரு கஷ்டமெனில் உன்னைக் கையில் வைத்துத் தாங்க, அம்மாவும் அப்பாவும் இருக்காங்க. நல்ல எதிர்காலம் இருக்கும் போது எதற்காக சவக் குழியில் விழனுமென்று ஆசைப்படுற?

நீ பார்த்த சினிமா, வெறும் மூன்று மணி நேரம். அதில் அழுகை, சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் கலந்து வரும். கதையின் நாயகிக்கு ஒரு கஷ்டம் வந்தால், கதாநாயகன் வந்து காப்பாற்றுவான். ஆனால், நிஜவாழ்க்கை அதற்கு நேர்மாறானது.

வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் பார்த்து வந்த மனிதர்களைப் போல, சினிமாவிற்குள் நுழைந்ததும், நமக்கு யாரைப் பார்த்தாலும் ஒரு ஒட்டுதல் உண்டாகும். அந்த மாதிரி நடிப்புத் தொழிலிலும் நாம் ஓருவனை நம்புவோம். அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருப்போம். பெயர் புகழ் அத்தனையும் இழப்போம். யாரை கதாநாயகன் என்று நினைக் கின்றோமோ, அவன் தான் நம்மைக் கொண்டு போய் குழிக்குள் தள்ளுவான்.

உனக்கு சினிமாவில் நடிக்கனுமென்று ஆசை இருந்தால், போய் நல்லா படித்து முடித்து விட்டு, உன் பெற்றோரின் துணையுடன், பாதுகாப்பாய் படதில் நடி. சரியா...?

இப்போ, நீ கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா, தூங்கு.”

அவளோ “எனக்கு தூக்கமே வராது மேடம். எனக்கு எங்க அம்மாவைப் பாக்கணும் போல இருக்கு.”

சிறுது நேரத்தில் புகழேந்தி வந்ததும், அலை பேசியில் தகவல் கொடுக்க, இரு பெண்களும் கிளம்பி, அந்த தேயிலைத் தோட்டத்திற்குள் வந்தனர்.

சசி, அங்கிருந்த புகழேந்தியைக் கண்டதும், “சார் நீங்களா...?”

“நானே தான்!” என்றதும் சசி வாய் பிளந்தாள்.

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற ஹீரோ. ஒரு ஆட்டோகிராப் வாங்கனும் என்றால், காலையிலும் இரவிலும் வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள். இவனைப் பார்ப்பது என்றால் அவ்வளவு கஷ்டம். ஆனால், ‘இந்த மேடம் கூப்பிட்டதும் ஒரு நிமிடத்தில் வந்திருக்கிறார் என்றால், அவர்களுக்குள் அப்படி என்ன உறவு...?’

புகழேந்தி வரும் போதே ஊட்டியில் இருக்கும் தனது நண்பன் மற்றும் காவல் அதிகாரிக்கு அழைத்து விசயத்தை சொல்லி இருந்தான். காவல் அதிகாரிகளும் அந்த ஹோட்டலின் உரிமையாளரை அழைத்து விஷயத்தைச் சொல்லியதும், அவர் தங்கள் ஹோட்டலின் ஊழியர்களை வைத்து, முகேஷ் தங்கியிருந்த அறையையும், பக்கத்தில் தங்கியிருக்கும் இயக்குனரின் அறையையும் சோதனை போட்டதில், அங்கே, ஒரு இளம் பெண் மயக்க நிலையில் கிடந்தாள்.

அவளை மீட்டு எடுத்து விட்டு, காவல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். பின் ஹோட்டலின் உரிமையாளர், அந்த இருவரின் பெயரிலும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க, காவல் அதிகாரி வாங்கிக் கொண்டார்.

மயக்க நிலையில் இருந்த பெண் தெளிந்ததும், போலீஸ் அவளிடம் விசாரித்ததில், “புது முகத்திற்கான போட்டோ ஷூட் எடுக்கிறோம் என்று சொல்லி முகேஷ் வர வழைத்தான். ஆனால் என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான்.”

“நீங்க இவர்களின் பெயரில் புகார் கொடுக்கிறீர்களா...?”

“கண்டிப்பாய் கொடுக்கிறேன். ஏனெனில் எனது வீட்டில் சொல்லி விட்டுத்தான் போட்டோ சூட்டுக்கு வந்தேன். புகார் கொடுத்தால் தான், இவனை மாதிரி உள்ளவர்களை நம்பி, எந்தப் பொண்ணும் வர மாட்டாங்க!” என்றதும், இருவரின் பெயர்களிலும் புகார் வாங்கி, இருவரையும் அழைத்துக் கொண்டு காவலர் சென்று விட்டனர்.

புகார் கொடுத்தவள் அப்படியே சிலை போல் அமர்ந்திருக்க, மிதுனா அவளிடம் “ஏம்மா, டல்லா இருக்க...? ஏன்மா?”

“மேடம், எனக்கு சினிமா என்பது கனவு. தமிழ் தெரியும். நடனம் தெரியும். நாடக கம்பெனியில் பல நாள் பயிற்சி பெற்றிருக்கிறேன். ஆனால், இவனை மாதிரி ஆட்களால் பிடித்த துறைக்குள் கால் வைக்க முடியாதே...! இனிமேல், வீட்டில் யாரையும் நம்பி அனுப்ப மாட்டார்கள். அது தான் பயம்.”

மிதுனா புகழேந்தி இடம், “இந்தப் பெண் மாலினிக்கு ஒரு வாய்ப்பு வாங்கித் தர முடியுமா...?”

புகழேந்திக்கும் ரிஷிக்கும் ஆச்சர்யமே...! புகழேந்தி விழி விரித்தான். பின் “நீ கஷ்டப்பட்ட போது கூட யாரிடமும் கையேந்தி நிற்கல. ஆனால், இன்று ஒரு பெண்ணிற்காக சிபாரிசு பண்றயே...!”

“ஆமாம். சசிக்கு சினிமா ஆர்வம் இருக்கு. அது தவிர அதற்காக எதையும் படிக்கவில்லை. ஆனால், இந்தப் பெண்ணோ சினிமாவிற்காக தன்னை தயார்படுத்தி இருக்கிறாள்.”

புகழேந்தி “ஹாய் மாலினி! மிதுனாவினால் கண்டிப்பாய் உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு உண்டு. நான் எனது புதுப் படத்தில் உன்னை அறிமுகப் படுத்துகிறேன். ஆனால், அதற்கப்புறம் உன் திறமையால் வளரனும். உன்னை நீயே பாதுகாத்துக் கொள்ளனும். சரியா...!”

மாலினி மிதுனாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அவளின் கையை தட்டிவிட்டு, “கடவுளைத் தவிர யாரையும் கும்பிடாதே! நீ எந்த ஊர் மா...?”
"தஞ்சாவூர்."

புகழேந்தி தனது பெர்சனல் நம்பர் மற்றும் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, “இன்னும் மூன்று நாளில் உனது குடும்பத்தாருடன் சென்னையில் வந்து என்னை மீட் பண்ணு.” என்று சொல்லி நம்பிக்கையான கால் டாக்ஸியில், அவளை அனுப்பி வைத்தனர்.

பின் சசிக்கு ஒரு கால் டாக்சி புக் பண்ண, சசி ஓடி வந்து மிதுனாவைக் கட்டிக்கொண்டு, “நான் யாரை நம்பியும் போக மாட்டேன். தனியாப் போக பயமா இருக்கு. அம்மா அப்பா வீட்டுக்குள் சேர்த்துக்க மாட்டாங்க...!”

மிதுனா கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்தவள், “ஓகே ரிஷி! நம்ம இப்பவே சென்னை கிளம்பலாம். டாக்சி புக் பண்ணு.”

புகழேந்தி “மேடம், நீங்கள் என் காரிலேயே வரலாம். அடியேன் பாக்கியம் செய்தவனாவேன்.”

ரிஷி, “மேடம், இவர் நமக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறார். நீங்க ஒரு நன்றி கூட சொல்லலையே...!”

புகழேந்தி புன்னகையோடு, “நல்ல நண்பர்களுக்குள் நன்றியும் மன்னிப்பும் கிடையாது, ரிஷி. 17 வருஷத்தில் ஒரு முறை கூட சொல்லிக் கொண்டது இல்லை.”

மிதுனா “நான் உன் காரில் வர்றேன். ஆனால், நான் வரும் விசயத்தை யாருக்கும் சொல்லக் கூடாது.”

அவனோ திரும்பி முறைத்து, “வித்யா, என்னிடம் பல்லாயிரம் முறை உன்னைப் பற்றிக் கேட்டும், நான் இப்ப வரை வாய் திறக்கவில்லை. நினைவில் வைத்துக்கொள்.” என்று சொல்லி முன்னே செல்ல,

ரிஷியும் அவளிடம், “மேடம், உங்க பேரு மிதுனா தானே...!”

"ஆமாம்! அதற்கு என்ன?"

“அது வந்து, புகழ் சார், உங்களை வித்யான்னு சொன்னார்!”

“வித்யா தான் எனது பெயர். சினிமாவிற்காக மிதுனா.”

இதுவரை புரியாத புதிராக இருந்த மிதுனாவைப் பற்றி, ரிஷிக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய வந்தது. பரதநாட்டியம் ஆடும் பெண்ணவள், பெயர் வித்யா. அவள் கூப்பிட்டால் ஓடி வந்து உதவி செய்யும் பல பிரபலங்கள். ஏனோ, பெண்ணவளின் மீது, நாளுக்கு நாள் மதிப்பு கூடிக் கொண்டே இருந்தது.

ஆனால், ‘இவள் சென்னை செல்லும் விசயத்தை சென்னையில் யாருக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறாள்’ என்ற யோசனையே அவன் மனதைக் குழப்பியது.


சுடும்...!



.
semma interesting story but film industry kasta padra ladies nelama roma kastampa
 

Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
அத்தியாயம் – 9


சேனாவின் வார்த்தைகளால், இல்லாத தலைவலி இப்போது வந்து ஒட்டிக் கொண்டதை உணர்ந்த போது, தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.

சுமித்திரை தன் பேத்திக்கு சூடான பால் கொண்டு வந்து கொடுத்து, மாத்திரை ஒன்றைக் கொடுத்து “போட்டுக் கோடி...!” என,

அவள் போட்டுவிட்டு பாட்டியின் தோளில் சாய்ந்து அமர்ந்தாள்.

அந்த நேரம் வந்த விதுபாரதி, “எல்லாரும் கோவிலுக்குப் போலாமா?” என்று கேட்டுக் கொண்டே பார்க்க,

தியா, தன் அம்மாவின் தோளில் சாய்ந்து படுத்துக் இருப்பதைக் கண்டதும், மகளின் அருகே வந்து நெற்றியில் கைவைத்து “என்ன ஆச்சு குட்டி? உடம்பு ஏதும் சரியில்லையா...?”

“லைட்டா தலைவலி மா...! இப்போது சரியாயிடுச்சு! கோவிலுக்குப் போகலாம்.” என்றதும்,

விதுபாரதி தனது தம்பியை அழைத்து, "கால்டாக்சி புக் பண்ணிட்டியாடா?"

சுமித்திரையோ, "எதுக்கு இந்த நேரத்தில் கால் டாக்சி? பக்கத்தில் இருக்கும் சேனா தம்பியை கூப்பிடட்டுமா...?"

தியாழினி கோபமாய், “பாட்டி அவங்க பக்கத்து வீட்டுக்காரங்க மட்டும் தான்! எதுக்கு எடுத்தாலும் அவங்ககிட்ட போய் நிற்க வேண்டாம். எதற்கும் அவங்களையே கூப்பிட்டா, அவங்களுக்கு தொல்லையாத் தெரிவோம். இத்தனை நாள் நம்ம யாரையும் நம்பி இல்லை, பாட்டி. அவங்களை தூரமாய் வச்சுக்கலாம். டாக்சியில் போலாம்.” என்று நிற்காமல் பேசும் பேத்தியைப் பார்த்தவர்,

கொஞ்ச நேரத்திற்கு முன் அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்தப்ப இருந்து, இவள் முகமே சரியில்லையே...! சரி அப்புறம் பேசிக்கலாம் என்று முடிவு பண்ணினர்.

விதுபாரதி தன் மகளின் அருகே வந்து அவளின் தலையில் செல்ல முத்தம் வைத்து, “இப்பதான் நீ என் பொண்ணு. நம்ம எப்பவும் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது...!”

அந்த நேரம் அங்கே வந்த தேவகி, “உள்ளே வரலாமா...?”

சுமித்திரை மனதிற்குள் ‘தியா பேசினது ஏதும் கேட்டு இருப்பாரோ’ என்று கலக்கத்துடன், “உள்ளே வாம்மா!” என்றார்.

“நீங்க எங்கயோ கிளம்பிட்டீங்க...! இந்த நேரத்தில் நான் வந்து தொந்தரவு ஏதும் செய்து விட்டேனா...?”

சுமித்திரை வேகமாய் “அதெல்லாம் ஒன்னும் இல்லை. வாங்க வந்து உட்காருங்க.” என்றார்.

தேவகி சுமித்திரையின் அருகே வந்து, “அம்மா, தியா பேசினதைக் கேட்டேன். நீங்க எந்த நேரம் வேண்டு மானாலும் கூப்பிடலாம். எங்களுக்கு தொல்லையாய் இருக்காது. நானும் என் மகனும் உங்களின் உறவை வேண்டுமென்று தான் நினைக்கிறோம். என்னடா பத்து நாளில் பக்கத்து வீட்டுக் காரங்களோடு எப்படின்னு நினைக்கிறீங்களா...?

நானும் என் கணவரும், காதலிச்சு வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணினோம். நல்லா போயிட்டு இருந்த வாழ்க்கையில், எங்க பையன் பிறந்தான். அவ்வளவு சந்தோஷம். என் குடும்பத்தில் என் அப்பாவும் அண்ணனும் ஊரெல்லாம் எங்களைத் தேடிக்கொண்டே இருந்தவர்கள், ஒருநாள் எங்களைத் தேடி கண்டு பிடிச்சுட்டார். என் கணவர் அவரின் நண்பரின் வீட்டில் என்னையும், என் மகனையும் விட்டுவிட்டு, அவர்களிடம் சமாதானம் பேசி, சரி பண்ணிய பின் அழைத்துப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனவர்தான், அதற்கப்புறம் பிணமாகத்தான் வந்தார்.

என் கணவர் இறந்த பிறகு, எனக்கு வாழ்க்கையே வாழப் பிடிக்கல. ஆனால், சேனாவிற்காகத் தான் வாழவே ஆரம்பித்தேன். அந்த நிமிஷத்துல இருந்து, என் ரத்த உறவுகள் அக்கம் பக்கம் அனைத்தையும் விட்டுவிட்டு தனியாய்த்தான் இருக்கேன்.

நானும் என் மகனும் மட்டும்தான். உறவுன்னு எங்களுக்குன்னு யாருமே இல்லை. என் கணவரின் பென்ஷன் பணம் வருது. அதை வைத்து மகனைப் படிக்க வச்சிட்டேன். என் கணவரின் நண்பரின் உதவியால், அவரோட காலேஜிலேயே சீட் கிடைக்க, அங்கேயே படித்து, அங்கேயே வேலையும் வாங்கியாச்சு.

இத்தனைநாள் தனிமையிலே ஓட்டிட்டேன். சுமித்திரை அம்மாவைப் பார்க்கும் போது, எனக்கு ஒரு அம்மா கிடைத்த மகிழ்ச்சி. அதனாலதான் உங்க கூட உறவாய் இருக்க நான் விரும்புறேன்.

உங்களுக்கு எந்த நேரத்தில், என்ன வேணும்னாலும் என்னையும் என் மகனையும் இங்கு தாராளமாய் கூப்பிடலாம். ஏனோ உங்களை சந்தித்த பின்னாடி தான், எங்களுக்கும் ஒரு உறவு கிடைத்த மகிழ்ச்சி.”

பின் தியாழினியைப் பார்த்து, “இளம் வயதிலே எனக்கு புருஷன் இல்லாததால், அடுத்தவரின் பார்வை என்மேல் தப்பாய் விழுந்தது. அதையெல்லாம் தவிர்ப்பதற்காக, நான் யார் கூடவும் பேச்சு வார்த்தையே வச்சுக்க மாட்டேன். ஆனால், உங்க வீட்டில் தான் என்னை போல சுமித்திரை அம்மாவும் இருப்பதால், ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைத்தது. எனக்கும் இப்போ வயசு ஆயிடுச்சு இல்லையா...?

அவனும் காலையில் காலேஜ் போனால், சாயந்திரம் தான் வருவான். இடைப்பட்ட நேரம் தனிமையில் கிடந்து தவிக்கிறேன். பேச்சுத் துணைக்கு கூட ஆள் இல்லாமல் மனநோய் வந்திடுமோன்னு பயமா இருக்கு. அதனால தான் நான் இங்கே வந்தேன். உங்களுக்குப் பிடிக்கலன்னா இனி மேல் வரமாட்டேன்.”

“சாரி ஆன்ட்டி. நான் நீங்க வரவேண்டாமுன்னு சொல்லல. நீங்க எங்க வீட்டுக்கு வரலாம்.” என்றாள்.

சுமித்திரை வேகமாய் அவரின் கையைப் பிடித்து, “தேவகி எனக்கு ஏற்கனவே 4 பொண்ணுங்க. ஒரு பையன். அதுல புதுசா ஆறாவது நீயுமுன்னு நினைச்சுக்கிறேன்.”

தியாவோ “பாட்டி, வயசானா பெற்ற பிள்ளைங்க எத்தனைன்னு கூடவா மறந்திடும். உங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன்.” என்று நினைவுப் படுத்தவும், சுமித்திரை, விது, வினோ மூவரும் ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்போதுதான் ‘தன்னையும் மீறி உளறிவிட்டோமே...! இனி கவனமாய் இருக்கனும்’ என்று யோசித்து பேத்தியைப் பார்க்க, அவள் சாதாரணமாய் இருக்கவும் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டார்.

தேவகி சுமித்ராவின் முகத்தையே பார்த்தார். அவர் முகம் போகும் போக்கை வைத்து, அவர் ஏதோ ஒரு ரகசியத்தை தியாவிடம் மறைத்திருக்கிறார் போலும்.

அவரைப் போலவே அவரின் மகள்களின் முகத்திலும் ஒரு பதட்டம் இருந்ததை உணர்ந்தவர், பேச்சை மாற்ற எண்ணி, “ஓகே, இனிமே நம்ம எப்போதும் உறவாய் இருக்கலாமா?” என்றார்.

விதுபாரதிக்கும் ஒரு விதவையாய் ஒரு பெண் படும் துன்பமும் தனிமையின் உணர்வும் புரிந்ததால், தேவகியின் கை பிடித்து,

“நீங்கள் எங்களுக்கு உறவாய் கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி தான். எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி இருக்கோம். கால் டாக்ஸி புக் பண்ணி இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும். நீங்களும் வாங்க போயிட்டு வரலாம்.”

சுமித்திரை, “தேவகி நீயும் வரணும். எல்லோரும் சேர்ந்து போய் வரலாம்.” என்றார்.

“இந்த நேரத்தில் வயசுப் பெண்ணை வச்சுட்டு, எதுக்கு கால் டாக்ஸி? நான் சேனாவை வரச் சொல்றேன்.”

தேவகியும் அவனும் கிளம்பி வந்தனர்.

ஓட்டுனர் இருக்கையில் சேனா. அவன் பக்கத்தில் இருந்த இருக்கையில் சுமித்திரையும், தேவகியும் அமர்ந்து கொள்ள, பின்னிருக்கையில் அம்மாவும் சித்தியும் அமர்ந்து கொள்ள, கடைசியாக தியாழினி அமர்ந்தாள்.

அனைவரும் பத்து வருடப் பழக்கம் போல பேசிக் கொள்ள, பெண்ணவள் அதில் கலந்து கொள்ளாமல் சாலைகளில் கவனம் பதித்தாள். ஆனாலும், மனம் எதிலும் நிலை கொள்ளாமல் அவன் பேசிய வார்த்தைகளை அசை போட்டு வதம் செய்தது. பின் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

கண்ணாடி வழியே, அவளது செய்கைகளை கவனித்துக் கொண்டே தான் வந்தான். அவள் தன்னை ஒரு முறை கூட பார்க்கவில்லை என்று மனம் வருந்தியது. ‘அவளை அருகே வரவேண்டாம் என்று சொல்லும் மனம்தான், அவளையே தேடுது.’ என்று தன்னைத் தானே நினைத்து, நொந்து கொண்டான்.

தேவகி எதையோ சொல்வதற்காக, “தியா” என்ற போது, அவள் அமைதியாய் கண்மூடிப் படுத்திருக்க, சுமித்திரை தான் “அவளுக்கு மாலையிலிருந்து ஒரே தலைவலி. மாத்திரை போட்டிருக்கிறாள். அதனால் தூங்கி விட்டாள் போலும்.”

பெசண்ட் நகர் வந்ததும், “குட்டிமா இறங்கு.” என்று பெற்றவள் எழுப்பும் போது கண் விழித்தாள். கண்ணெல்லாம் சிவந்திருந்தது. காரை விட்டு இறங்கும் போது தான், அவனைப் பார்த்தாள்.

கோவிலுக்கு செல்வதற்காக வேஷ்டி சட்டையில். இவ்வளவு நேரம் மான ரோசம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மனம், சட்டென்று அவன் காலடியில் விழத் தயாராக நின்றது. அதையும் மீறி ரோசம் அவளைக் கட்டுப்படுத்த, அவன் பக்கமே செல்லும் மனதையும் கண்களையும் அடக்கிக் கொண்டு பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

தேவகி அலைகடலின் சத்தம் கேட்டு, அப்படியே சிலாகித்து நின்றார். சுமித்திரை அவரிடம் “இந்த அலையின் சத்தம் உன் காதுக்கு எப்படி கேட்கிறது?”

"ஓம்" என்று கேட்பது போல இருக்கு.

“ஆமாம். நானும் சிறுவயதில் இருந்து இந்த கோவிலுக்கு வந்து இருக்கேன். ஓயாது ஒலிக்கும் இந்தச் சத்தம் ஓம் என்ற மந்திரத்தை உச்சரிப்பது போலவே எனக்குத் தோன்றும்.” என்று சொல்லவும்,

தேவகி தன் காதுகளைக் கூர்ந்து, “ஆமாம். எனக்கும் அப்படித் தான் தோணுது.” என்று இருவரும் பேசிக் கொண்டே ஆலயத்தினுள் புகுந்தனர்.

அவர்களின் பேச்சில் சிரித்த தியாழினி, தன் பாட்டியிடம் “அலை வந்து பொத்து பொத்துன்னு அடிச்சிட்டு இருக்கு. உனக்கு மட்டும் ஓம்முன்னு கேட்குதா...? உன் காதை மருத்துவரிடம் காட்டிச் செக் பண்ணனும்.”

அனைவரும் கோவிலுக்குச் சென்று அஷ்ட லக்ஷ்மியில் அடங்கும் எட்டு லட்சுமிகளையும் வணங்கி விட்டு, தெய்வங்களான நாராயணன் தன் தேவியான திருமகள் நாச்சியாரோடு அருள்பாலிக்க, கடவுளிடம் மனமார வேண்டிக் கொண்டிருந்தனர்.

சுமித்திரை, விதுபாரதி, வினோதினி மூவரின் வேண்டுதல்களும் தியாவின் வாழ்க்கை நல்லபடியாய் இருக்கனும். கணவன் நல்ல மனுசனாய் வரவேண்டும். போன ஜென்மத்தில் செய்த பாவம், இப்போ வரை துரத்துகிறது. அவள் நல்லா வாழனுமென்று வேண்டினர். தேவகியின் வேண்டுதல் தன் மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்து, நல்லா வாழணும் என்று. ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் ஊரில் இருக்கும் அனைவரும் நல்லா இருக்கணும் என்ற வேண்டுதலை மட்டும் கடவுளிடம் வைத்தனர்.

சாமி கும்பிட்டு குங்குமம் கொடுக்க, சுமித்திரை தியா நெற்றியில் வைக்க, தேவகி சேனா நெற்றியில் வைத்துவிட்டு, மகனை முன்னிறுத்தி, “கடவுளிடம் வேண்டிக் கொள். நல்லபடியாய் திருமணம் நடக்கனுமென்று.” என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த குருக்கள், ‘குடும்பத்துடன் வரவும் திருமணத்திற்காகத் தான் வந்திருக்கிறார்கள் போலும். வேட்டி சட்டையில் இருப்பவன் மணமகன். தாவணியில் இருப்பவள் மணப்பெண்’ என்று நினைத்தவர், சுமித்திரையிடம், “வேட்டி சட்டையில் இருக்கும் இவர் யார்?”

“என் மகன்.” என்றார்.

“அந்தப்பெண் யார்?” என்றதும் விது பாரதியோ “என் பொண்ணு” என்றார்.

“நீ முன்னாடி வாம்மா” என்றதும், தியா வந்து முன்னே நிற்க, குருக்கள் மாலைகளால் நிரம்பி வழியும் கடவுள் விஷ்ணுவின் கழுத்தில் இருக்கும் மாலைகளில் ஒன்றை எடுத்து சேனாவின் கழுத்தில் போட்டார். பின் மகாலட்சுமியின் கழுத்தில் இருக்கும் மாலைகளில் ஒன்றை எடுத்து தியாழினியின் கழுத்தில் போட்டார்.

“ரெண்டு பேரின் ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்கு. அந்த விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் பார்த்தது போல இருக்கு. நல்லா வாழணும். திருமணம் நல்லபடியாக நடக்கட்டும்.” என்று கடவுளின் பாதத்தில் இருக்கும் பூக்களை எடுத்து, இருவரின் தலையிலும் போட்டு ஆசி வழங்கினார்.

தியாழியும் சேனாவும் நிமிர்ந்து ஓருவரை ஒருவர் பார்க்க, ‘சற்று நேரத்துக்கு முன்பு வேண்டாமென்று சொன்னானே’ என்று நினைக்க, சொன்னவனோ அப்படியே நின்றான்.

இந்தச் செயலால் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கூட்டம் வரவும், குருக்கள் தள்ளிப் போங்க என்றதும் சுமித்திரை தேவகியைப் பார்த்தார். அவரின் முகத்தில் கூட மகிழ்ச்சி தான் இருந்தது.

அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி இருந்தாலும் பெற்றவரின் மனதில் பயம். அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அனைவரின் மனதிலும் பல்வேறு சிந்தனைகள்.

முகத்திற்கும் மனதிற்கும் திரை போட்டு மறைத்து சாமி கும்பிட்டு முடித்து, அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.

இரவில் தியாழினி உறக்கத்தைத் தொலைத்தாள். தன் மனம் ஒன்றை நாடுது. அதையே கடவுளும் ஆதரிக்கிறார் என்றால், ஒருவேளை இவர் தான் என் வாழ்க்கையா...? என்ற பெண்ணவளும்,

“வேண்டாம் என்றாலும் சூழ்நிலை இணைக்குதே...! இவள் தான் என் வாழ்க்கையா?’ என்று ஆடவனும் யோசிக்கத் தொடங்கி இருந்தனர்.

விடிந்தது இருவரும் கல்லூரி சென்று, பின் தேவகி தன் வீட்டில் இருக்கும் கணவனின் புகைப்படத்தின் முன் வேண்டிவிட்டு, சுமித்திரையின் வீட்டிற்கு வந்தார்.

பின் சுமித்திரையிடம் “நேற்று கோவிலில் கடவுளிடம் என் மகனுக்கு நல்ல பொண்ணு அமையனுமென்று வேண்டினேன். அந்த நேரம் கடவுள் தியாவைக் காட்டுகிறார். இருவரையும் சாமியே இணைத்து வைப்பதை, தற்செயலாய் நடந்ததா அல்லது கடவுளின் விருப்பமா என்று தெரியலையே...! உங்களுக்கு அப்படி தோணுச்சா?”

அவரும் “நானும் கடவுளிடம் என் பேத்திக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு தான் வேண்டினேன். சேனாவைக் காட்டிய போது மனதிற்குள் சந்தோசம் தான், ஆனால்…” என்று இழுத்து விதுவைப் பார்த்தார்.

விதுபாரதி தேவகியிடம், “நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள். எங்கள் குடும்பங்களில் சொல்லப்படாத பல ரகசியங்கள் இருக்கு. தியா படித்து முடிக்க இன்னும் நாலு வருஷம் இருக்கு. நாலு வருஷத்துக்குள் எத்தனையோ நடந்து முடியலாம். மனித வாழ்வில் நாளை என்பதே நிச்சயம் இல்லாத ஒன்று. நாலு வருஷம் கழிச்சு, நம்ம எல்லோரும் உயிரோடு இருந்தால், இது பற்றி பேசலாம். இதற்கு முன்னாடியே உங்க பையனுக்கு நல்ல பொண்ணு கிடைத்தால், திருமணத்தை முடித்து விடுங்கள் என்று சொல்லி பேச்சை முடித்து விட்டார்.

……………….

அன்று கல்லூரி முடிந்து, ஐஸ்வர்யாவும் தியாவும் வந்து கொண்டிருக்கும் பொழுது, ஆத்விக் தனது காரை கொண்டு வந்து சாலையை மறித்து இடையில் நிறுத்தி, வழிமறித்தான். சொன்னால் திருந்துகிற ஜென்மம் இல்லை என்பதால்,

“ஐஸ்வர்யா! நீ வண்டிய ஓட்டு.” என்றதும்,

அவளோ அவன் காரை சுற்றி வளைத்துக்கொண்டு வாகனத்தை ஓட்ட, கோபம் வந்த ஆத்விக் பின்னாடியே துரத்திக் கொண்டு வரவும், ஐஸ்வர்யா வேகமாய் வண்டியை ஓட்டி வந்து தியாவின் வீட்டில் நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் வந்தனர்.

வீட்டிற்குள் பதட்டமாய் வரும் தியாவையும் அவளது தோழியையும் கண்ட விதுபாரதி, “என்னாச்சு குட்டி?” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்தார். அதற்குள் பின்னாடியே ஆத்விக் வந்துவிட்டான்.

தியா பதட்டமாய் “அம்மா... அம்மா இவன் டார்ச்சர் பண்றான்.” என்றதும்,

முன்னே வந்த விதுபாரதி, அவனின் கன்னத்தில் பளார் என்று அறைந்து, “ஒரு பொண்ணு வேண்டாமுன்னு சொல்றாளே? பிடிகக்லை என்று தெரிந்தும், எதுக்குடா டார்ச்சர் பண்றீங்க...?”

“எனக்கு தியா வேணும். நான் அவளை லவ் பண்றேன். எனக்கு அவளை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.”

“என் பொண்ணை நீ விரும்புறது உன் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தெரியுமா...?”

“என் அம்மாவிற்குத் தெரியும்.”

“சரி, உன் அம்மா நம்பர் கொடு!”

அந்த செல்போன் மூலம் அவரின் அம்மா எண்ணிற்கு அழைத்து, அவரை வரவழைக்க, அவர் அடுத்த அரை மணி நேரத்தில் பதட்டமாய் வந்தாள்.

வந்தவர் கைகூப்பி வணக்கம் சொல்லி, வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தார்.

ஆத்விக்கின் அம்மாவின் பார்வையில் புரிந்தது. இவர்கள் நமக்கு சமமானவர்களா என்று வீட்டை சரி பார்க்கிறார் என்று.

உடனே விதுபாரதி, “நான் ஒரு பரதநாட்டியக் கலைஞர். அமெரிக்காவில் பலபேருக்கு நடனம் பயிற்றுவிக்கும் சாதாரண ஆசிரியர். மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் சாதரண ஆசிரியர். கணவர் இல்லை. மிடில் கிளாஸ் குடும்பம். என் பொண்ணுக்கு, உங்க பையனை பிடிக்கவில்லை. அது அவனுக்குப் புரிய மாட்டேங்குது.”

“மன்னிச்சிடுங்க. இனிமேல் என் பையன் உங்க பொண்ணை தொந்தரவு பண்ண மாட்டான்.” என்று சொல்லிவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

காருக்குள் ஏறி அமர்ந்ததும் தன் மகனிடம் “பொண்ணு அழகாத்தான் இருக்காள். ஆனால் அதை வைத்து ஒன்னும் பண்ண முடியாது. உன் அப்பாவிடம் வேலை பார்க்கும் ஆட்களின் வீடு அளவுக்குத்தான் இந்த வீடு இருக்கு.

உன் அப்பாவிற்கு இது சுத்தமாப் பிடிக்காது, ஆத்விக். புரிஞ்சதா...? உன் அப்பாவின் பி.ஏ சம்பளமே ரெண்டு லட்சம்.

அதையும் மீறி அவள் உன்னைக் காதலித்தால் கூட, ஏதாவது ஒண்ணு செய்யலாம். அவளுக்குத் தான் உன்னைப் பிடிக்கவே இல்லையே. கண்ணா...! பிடிக்காத பெண்ணை வற்புறுத்துதல் தவறுடா...! இனிமேல் அவள் பின்னாடி சுத்தக் கூடாது.” என்று அவன் கையை எடுத்து தன் தலைமேல் வைத்து, “இது, அம்மா மேல சத்தியம்.” என்றார்.

வீட்டிற்கு வந்த அவனுக்கு, ஏனோ மனம் முழுவதும் வலியாக இருந்தது. பெரிய பணக்கார பிடித்திருக்கிறது நினைத்ததெல்லாம் நொடிப்பொழுதில் கிடைத்து, இன்று ஒரு பொருள் இருக்கும் இடத்தில் ஒரு பெண். விரும்பிய பொருள் உடனே கிடைத்தது போல், தியாவும் வேண்டுமென்று மனம் அடம் பிடித்தது. கிடைக்காத அவளின் மீது வெறுப்பும், தன் காதலின் வலியும் கோபம் என்னென்னமோ எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

இரண்டு நாளாய் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் மகன், வெளியே எங்கேயும் போகவில்லை. ஏதாவது செய்து கொள்வானோ என்ற பயத்தில், இளவரசி அவனையே பார்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கணவனிடம் மறைப்பது தவறு என்று புரிந்து, அவருக்கு அழைத்தார்.

வந்தவர், நடந்த அனைத்தையும் கேட்டுவிட்டு மனைவியை இரண்டு முறையும், மகனை பலமுறையும் அடித்தார்.

மகனிடம் “நீ யாரு...? எவ்ளோ பெரிய ஆளு! நாளை இந்த நாட்டின் முதலமைச்சர். போயும் போயும் ஒரு சாதாரண பொண்ணு வேண்டுமா...? உனக்கு ஏற்கனவே நான் பொண்ணு பார்த்துட்டேன். பொண்ணு வேற யாரும் இல்லை. என் நண்பன் மணிச்சந்திரன் பொண்ணு, அம்ரிதா தான் உனக்கானவள். அவளை நீ படிக்கும் கல்லூரிக்கு மாற்றச் சொல்றேன். அவளைக் கூட்டிக் கொண்டு போறது முதல், மீண்டும் அழைத்து வருவது உன் வேலை. புரியுதா...!

நாளையிலிருந்து ஒழுக்கமாய் படிக்கப் போறதாய் இருந்தால் கல்லூரிக்குப் போ. மீறிக் காதல் கீதல் என்று வந்தால், அந்த பொண்ணை குடும்பத்தோடு எரித்து விடுவேன்.” என்று திட்டிவிட்டு,

மனைவியை முறைத்து, “இவனைப் பார்ப்பதை விட அப்படி என்ன வேலை உனக்கு...?” கோபமாய் போனவருக்கு, பிறந்ததிலிருந்து அடிக்காத மகனை முதல் முறை அடித்துவிட்டதால் மனம் வாடியது. மீண்டும் திரும்பி வந்தவர், அவனின் கன்னத்தைத் தொட்டுப் பார்த்து,

“சாரிடா. நீ என் உயிர். இந்த உயிருக்கு இந்த உலகத்தில் இருக்கும் சிறப்பானதை மட்டும் தான், நான் கொடுப்பேன்.

அம்ரிதா, உன் அம்மா மாதிரி குணமானவள்டா. அப்படியே, உன் அம்மா உன்னை எப்படி பார்த்துக் கொள்வாளோ, அதைவிட பத்து மடங்கு பார்த்துப்பா.

இன்னொன்னு, நீ மட்டும் மணிச்சந்திரனின் மகளைக் கட்டிக்கிட்டால், அவனிடம் இருக்கும் அத்தனை சொத்தும் உனக்குத்தான்.

அம்ரிதாவின் தாய் மாமன், அதான் அவளின் அம்மா மலர்விழியின் அண்ணன், வாமனன், கோடீஸ்வரனுக்கே கோடீஸ்வரன். உன் கல்லூரியில் மேஜர் முதலீடு அவனோடது. அவன் கைகாட்டும் ஆட்களுக்குத்தான் கட்சியில் இடம். இந்த உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் அவனுக்கு சொத்து இருக்கு. அவன் இனிமேலும் சம்பாதிக்கும் அத்தனை சொத்தும் அம்ரிதாவிற்கே...!

வாமனனைப் பகைத்து விட்டால், நம் அரசியல் வாழ்க்கையே ஆட்டம் கண்டு விடும். அவனுக்கும் மணிச்சந்திரனுக்கும் பண பலமும் ஆள் பலமும் என்னை விட பலமடங்கு அதிகம். அப்பேர்ப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீ வாரிசு ஆகனும். ஆகிவிட்டால், நீ இந்த நாட்டுக்கே ராஜாவாகி விடுவாய். புரியுதா...!

இன்னொன்னு, அம்ரிதா மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வடித்தால், அந்த கண்ணீருக்கு காரணமான அவர்களை, மணிச்சந்திரன் சும்மாவே விடமாட்டான்.

அம்ரிதா உன்னை விரும்புறாள். பார்த்துக்கோ...!”

ஆத்விக், “இனிமேல் அவளே வந்தாலும், அவளை நான் ஏற்றுக்க மாட்டேன்பா. ஆனால் என்னை வேணாம்னு சொன்னவளுக்கு, நான் ஒரு சின்ன பனிஷ்மென்ட்டாவது கொடுப்பேன். அதுக்கு மட்டும், நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணனும்.”

“இங்க பாரு ஆத்விக், உன்னைக் கடிச்சிருச்சுன்னு இந்த மாதிரி கொசுவையெல்லாம் போயி, உன் கையால் அடிக்கணும் என்று நினைத்தால், அது உன் முட்டாள் தனம். உன் பெயர் எந்த சூழ்நிலையிலும், தவறானதாய் யாருக்கும் தெரியக்கூடாது.” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

‘யார் என்ன சொன்னாலும், அவளுக்கு ஒரு பாடம் நடத்தியே தீருவேன்.’ என்று ஆக்விக் மனதிற்குள் குறித்துக் கொண்டான்.

கதை மாந்தர்களின் பெயர் குழப்பம் நீக்க,

சுமித்திரை

வித்யாபாரதி

விதுபாரதி

விசித்ரா

வினோதினி

விபின்சிவராஜ்

தியாழினி

ஐஸ்வர்யா

கிரண்

சசிரேகா

ரிஷி

தேவகி - ஸ்ரீதர்சேனா

மணிச்சந்திரன்- மலர்விழி-அம்ரிதா

இளவரசன்- இளவரசி- ஆத்விக்

வாமனன்- வானதி

பாண்டித்துரை-மகிமா, மதுரா

சுடும்...

Coment pls

Adada idhunga onnu ninaicha kadavul vera mathri mudichu podrare oruvelai mudichu rmba strong a irkumo...paarpom..sena Kum diya kum ena vidhichurukunnu ...ilavarasan pecha kettu aathvik pays chumma irundha diya thappicha illana ennamo sirappa sambavam plan panna poraan.adhu ennagada oruthy virumbalannu sonnalum avala torture pandradhu..palakatha maathungada..unakaga unga dad periya idathula sammandhamlam paarthu irkar andha ponnu vera manasula aasaiya alarthukittu vekkamlam paduthu🙈🙈paavam.superana ud sagi...waiting for nxt ud
 

Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
கோ சிறப்பு விருந்தினரை வைத்து நீங்கள் யார் என்று தெரிந்து கொண்டிருக்கலாம் .

உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி டா தங்கையே .

நேரம் ஒதுக்கி வாசித்து நீண்ட விமர்சனம் தருவதற்கும் மனதார நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
Apdiya yosikiren😜😜
 
Top Bottom