Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Akka chance ae illai..unga writing ..arumaiyana frnds pugal n vidhya...frnds kills sry thanks rendum illain17yrs aa..rishi semaya confuse aaytar 🤩...sasi vandhachu...amma appa vai edhrthu vandhu namma aasaikalai adaiyanumnu illai.avanga permission oda avanga support oda avanga aasai pattadhum niraivetrikollalam...adhuve nalladhum kooda.mithuna Chennai porale ennana nadakka pogudho...enaku oru doubt diya vidhu oda ponnuna....3mth baby a irkumbodhu visham vatchukollapaarthingannu sonnalae vidhya andha 3mth vayithukulla irundha baby enga🤔🤔aahaaaa..sema excited a irke ees ka..supera kondu poringa..interesting.. nice ud.waiting for nxt ud
மிதுனா, ஊட்டியில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தின் நடுவில், ஹீரோவுடன் பாடலுக்கு நடனமாடி முடித்துவிட்டு, கால்கள் எல்லாம் வலி எடுக்க, மாலை வேளையில் தனது ஹோட்டல் அறையில் படுத்திருந்தாள். மனமெல்லாம் தன் தங்கை பேசிய வார்த்தைகளே காதுக்குள் ரிங்காரமிட்டது.

ஒரே இடத்தில் படுத்திருந்தால் மனம் இப்படித்தான் வேதனைப்படும் என்பதால், மெல்ல எழுந்து ரிஷிக்கு கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, அருகிலிருக்கும் தேயிலைத் தோட்டத்திற்குள் நடக்க ஆரம்பித்தாள்.

அந்த நேரம், ஒரு புதருக்குள் ஒரு பெண், “என்னை விட்டுவிடு. நான் வீட்டுக்குப் போகனும். ப்ளீஸ்…” என்று கத்தி கத்தி அழும் சத்தம் கேட்கவும், மிதுனா நின்றாள்.

மெல்ல புதரை விலக்கிவிட்டு, யாருன்னு வந்து எட்டிப் பார்க்க இருபத்தி ஐந்து மதிக்கத்தக்க ஓருவன், 17 வயது நிரம்பிய சிறுபெண்ணைப் போட்டு, கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்து கொண்டிருந்தான். இதைக் கண்டதும் மிதுனாவிற்கு கோபம் பொங்கியது. தானும் சிறுவயதில் அடிவாங்கிய ஞாபகம் வரவும், வேகமாய் அங்கே சென்று, அவன் கையைப் பிடித்து திருப்பி மொத்து மொத்தென்று அடித்து உதைத்து, “எதுக்குடா சின்னப் பெண்ணைப் போட்டு அடிக்கிற?”

அவனோ தனது பாக்கெட்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து, மிதுனாவை நோக்கிச் சுடப்போக லாவகமாய் குனிந்து, சினிமா தொழிலில் வேலை செய்யும் போது தன்னை தற்காத்துக் கொள்ள கற்றுக்கொண்ட கலைகளால், அவனை அடித்து நின்றிருந்தவளின் துப்பட்டாவால், அவனின் கைகளை கட்டிப்போட்டு, அவன் கத்தாமல் இருக்க வாயிற்குள் துணியை வைத்து அடைத்தார்.

அந்தப் பெண்ணின் கன்னத்தில் பளாரென்று அறைந்து, “இந்த வயசில் இப்படி ஒருத்தனை நம்பி தனியாய் புதருக்குள் வந்திருக்கிற. அறிவில்லையா...?”

“நான் சசிரேகா. சென்னைதான் என் ஊர். கல்லூரியின் முதலாம் வருடம் இப்போத்தான் சேர்ந்து இருக்கேன். இவனால ரெண்டு வாரமாய் காலேஜ்க்குப் போகல.

எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்கனுமென்பது ஆசை. அதனால் திரையுலகத்தில் நுழைவதற்கு வாய்ப்புக்காக யாரைப் பார்ப்பது என்று கூகுளில் தேடிக் கொண்டிக்கும் போதுதான், இவனைப்பற்றி முகநூலில் பார்த்தேன்.

இவனும் சென்னையில் தான் வசிக்கிறான். பெயர் மூகேஷ். இவனின் முகநூல் பக்கத்தில், தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலருடன் எடுத்துக் கொண்ட படத்தைத் பகிர்வான். நான் இவனைப் பின்தொடர்ந்து தினமும் பார்த்துக் கொண்டே வந்தேன். இவன் எல்லா நடிகர் நடிகைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, நானே தான் அவனிடம் பேச ஆரம்பித்தேன்.

அவனும் தமிழ் திரையுலகில் உள்ள பலநடிகர்கள், இயக்குநர்களுடன் எனக்கு மிகவும் நெருக்கம் இருப்பதாய்ச் சொன்னான். தினமும் பேச ஆரம்பித்தோம். பேசும் போது சினிமா திரையுலகில் நான் மிகவும் செல்வாக்கு மிக்க ஆள் என்றான். அவனின் முகநூல் பதிவில் இருந்த நடிகர்கள் எல்லாம், பெரிய பெரிய ஆட்கள்.

அவனின் பேச்சுக்களை நம்பி, நான் அவனிடம் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையிருக்கிறது. படங்களில் வாய்ப்பு வாங்கித்தர முடியுமான்னு கேட்டேன். கண்டிப்பாய், நான் உனக்கு பட வாய்ப்புகள் வாங்கித் தர்றேன் என்று சொன்னான்.

தினமும் பேசப்பேச, அவன் என்னைக் காதலிப்பதாய்ச் சொன்னான். அவ்வப்போது அவன் வீட்டுக்குப் போவேன். ஒரு நாள் கூட என்னிடம் தப்பாய் நடந்ததே இல்லை.

இந்த நேரத்தில், வீட்டில் என் காதல் விவகாரம் தெரிய வந்தது. அம்மா என்னை அடித்து விட்டார்கள். சினிமாவில் நடிக்கப் போறேன் என்று சொன்னதும், அப்பாவும் அம்மாவும் என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பவே இல்லை. எனக்கு பெரிய நடிகையாக வேண்டும் என்பது என் கனவு. முகேஷ் அதை நிறைவேற்றுகிறேன் என்று சொன்னான்.

ஒருநாள் போட்டோ ஷூட் எடுத்தால்தான் நீ பிரபலமாக முடியும் என்றான். நான் கோவையில் இருக்கேன். இங்கே பிரபலமான இயக்குனரின் பெயரைச் சொல்லி, அவர் இங்கு தான் புதுமுகத்திற்கான போட்டோ ஷூட் நடத்துகிறார். நீயும் வா என்றான்.

அவனை காதலிப்பதாலும், அவன் தன்னிடம் ஒரு நாள் கூட தவறாக நடந்து கொள்ளாததாலும், அவன் பேச்சை நம்பி வீட்டில் சொல்லாமல் ஓடி வந்தேன். கோயமுத்தூரில் அவனின் நண்பன் வீட்டுக்குக் கூட்டிப் போனான். அவனுடன் பேசிட்டிருந்தேன். சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். சாப்பிட்டேன். அவ்வளவுதான் தெரியும். என்ன நடந்தது என்ன பண்ணினான் ஒண்ணுமே தெரியல.

நேற்று காலையில் ஒரு ஃபோட்டோ ஷூட்டுக்காக ஊட்டி போகனும்னு சொல்லவும், நானும் வந்தேன். இங்கே நேற்று மாலை வந்தோம். இவன் இயக்குனரோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் தான் பெரிய வாய்ப்புகள் தருவார் என்று மிரட்டுறான்.

நான் மாட்டேன் என்று சொன்னதும், அவன் மொபைல் போனை எடுத்து நீட்டினான். அதில் முந்தின நாள் இரவு, நான் சுய நினைவின்றிக் கிடந்தேன். என்னிடம் அசிங்கமாய் நடந்து, அதையே படம் எடுத்திருக்கான். எடுத்த படத்தை இணையத்தில் விட்டு விடுவேன் என்று மிரட்டினான். நான் இவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தேன். துரத்தி வந்தவன் என்னை கொலை பண்ண முயற்சிக்கிறான். ப்ளீஸ் மேடம் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில், அந்த இயக்குனர் இந்த ஹோட்டலுக்கு வந்து விடுவான். ப்ளீஸ் மேடம் என்று காலில் விழுந்து கெஞ்ச, மிதுனா, அவளை அள்ளி அணைத்துக் கொண்டாள்.

மிதுனாவின் கண்ணிலிருந்து வழியும் கண்ணீரின் காரணம், அவளுக்கு மட்டுமே தெரியும். ஒரு பெண் தன் அப்பா, சகோதரனுக்கு அடுத்து அதிகமாய் நம்புவது காதலன். ஆனால், அந்தக் காதலுக்கு தகுதி இல்லாதவர்கள் இவனைப் போன்றவர்கள். உண்மையாக நேசிக்கும் பெண்களுக்கு மட்டும் தகுதியே இல்லாத காதலர்கள் கிடைப்பது பெண்ணின் துரதிருஷ்டமே...!

தனது செல்போனில் ரிஷிக்கு அழைத்து விட்டு, அவளிடம், “நீ சாப்பிட்டாயா...?”

அவளோ “இல்லை மேடம். பசிக்குது.” என்றதும், மிதுனாவின் கண்ணில் வலியும் வருத்தமும்.

ரிஷி வந்ததும், அவனைப் பற்றிச் சொல்ல, அவனை நாலு மிதி மிதிக்கவும், அவன் மயக்க நிலைக்குச் சென்று விட்டான்.

மிதுனா, “இந்தப் பெண்ணின் பெயர் பேப்பரில் எதிலும் வந்து விடக்கூடாது ரிஷி. என்ன பண்ணலாம்...?”

பின் அவளின் நினைவில் வந்தது புகழ்பெற்ற நடிகர் புகழேந்தி. ‘பெண்னவளின் ஆருயிர் நண்பன். சொந்த ஊர் கோயம்புத்தூர். ஆனால், இப்போ எங்க இருக்கான்னு தெரியலையே?’ என்ற சிந்தனையில் தன் நண்பனுக்கு அழைத்தாள்.

“ஹாய் மேடம். உங்களுக்கு என் ஞாபகம் எல்லாம் இருக்கா...?”

“நம்மைப் பற்றி அப்புறம் பேசிக்கலாம். ஒரு முக்கியமான விசயமென்று நடந்ததைச் சொன்னாள். நான் இப்போ கோயம்புத்தூரில் தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே வர்றேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

மிதுனா ரிஷியிடம் “நீ கொஞ்சநேரம் இந்த புதருக்குள் இவனைப் பார்த்துக்கோ. மயக்கம் தெளிந்தால் மீண்டும் மிதி. அடிச்சு மொகரையை டேமேஜ் பண்ணு. புகழ் வந்த பின் நானும் வர்றேன்.”

அவளை அழைத்துக் கொண்டு போய், ஹோட்டலில் அமர்த்தி, சாப்பாடு வரவைத்து அவளுக்குக் கொடுத்தாள். அவள் சாப்பிட்டு முடித்ததும் தனதறைக்கு, கூட்டிக் கொண்டு போனாள்.

பின் அவளிடம் “ஒரு பெண் பெற்றோர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வருவது தப்பில்லையா...? இப்படி வந்தால், எவன் உன்னை சும்மா விடுவான்? பெற்றோர் கூட இருக்கும் நடிகைகளுக்கே, அத்தனை கஷ்டம். இதில் தனியாய் வந்து சிக்கியிருக்க?”

அவளின் கண்ணில் கண்ணீர். “நான் பெரிய தப்பு பண்ணிட்டேன், மேடம்.”

“உன் வீட்டில் பணக்கஷ்டமா...? சாப்பிடுவதற்கு எல்லாம் பணம் இல்லையா...?”

“அப்பா வங்கியில் வேலை பார்க்கிறார். பணத்திற்கு எல்லாம் எங்கள் வீட்டில் பிரச்சனையே இல்லை மேடம். சொல்லப் போனால், நான் வீட்டிற்கு ஒரே பெண் மேடம். எனக்கு சின்ன வயசுல இருந்து, பெரிய சினிமா நட்சத்திரம் ஆகனும் என்பது என் கனவு.நீங்கள் எல்லாம் இன்று பெரிய நட்சத்திரமாக இருப்பது போல, நானும் ஒரு நாள் ஆக வேண்டாமா...?”

“ஹா... ஹா…. பேருக்குத்தான் நான் பெரிய நட்சத்திரம்.”

சசியோ, “மிதுனா என்றால் தெரியாதவர்களே கிடையாது. புகழின் உச்சியில் இருக்கிறீங்க. வாழ்வில் அனைத்தும் கிடைத்து வெற்றியின் உச்சத்தில் நீங்க.”

மிதுனா " புகழ் இருக்கு. பணம் வேண்டாம் வேண்டாமென்று சொல்ற அளவுக்கு இருக்கு. ஆனால் மனநிறைவோ, மன நிம்மதியோ கொஞ்சம் கூட இல்லை. அதீத மன அழுத்தம். பல நாள் நான் தூங்கினதே இல்லை.”

“விருப்பம் இல்லாமல் தான் சினிமாவுக்கு வந்தீங்களா...?”

“ஆமாம். ஏழ்மை துரத்த வந்தேன். நடிப்பு… என் கனவில்லை.”

“உங்க கஷ்டத்திற்காக நடிக்க வந்தீங்களா...?"

“ஆமாம்! நாங்க பணக்காரர்களும் இல்லை. ஏழையும் இல்லை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். என் வீட்டிற்கு நான் மூத்த பெண். என் அப்பாவுக்கு ஆண் குழந்தை என்றால் அவ்வளவு பிடிக்கும். எங்களையும் ரொம்பப் பிடிக்கும். ஆனால், அவருக்கு என்னமோ அந்தச் சென்னையில் இருக்கும் அத்தனை சொத்தும் அவருரோடது போல நினைப்பு. அதை அனுபவிக்க, ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்ற வருத்தம் போல..” என்று நக்கலாய் சொல்லியவள்,

“நான்கு பெண் குழந்தைகளுக்கு அப்புறம் பையன்.

ஆண் குழந்தை வேண்டி, கோவில் கோவிலாய் விரதமிருப்பார்கள். என் அம்மாவின் வேண்டுதல் கடவுளுக்குக் கேட்டது போல. கடைசியாகப் பிறந்தவன் தான் என் தம்பி.”

“ஏன் மேடம், உங்களுக்கு ஆம்பளப் பையன் பிடிக்காதா...?”

"என் அப்பா, பையன் பையன்னு சொன்னதால் பிடிக்காமல் இருந்துச்சு. ஆனால், என் தம்பியை என் கையில் தூக்கின நொடியிலிருந்து, நான் அவனுக்கு இன்னொரு அம்மா. அவனை அவ்வளவு பிடிக்கும்.

அப்பா தனியார் கம்பெனியில் கணக்காளராய் வேலை பார்த்தார். பணத்திற்குப் பிரச்சனை இல்லை. ஆனால், சேமிப்பு ஓண்ணுமில்லை. இருக்க சொந்த வீடு. நல்லாத்தான் போச்சு. அம்மா பரதநாட்டியக் கலைஞர். சின்ன வயதிலிருந்தே பரதம் கத்துகிட்டேன். நான் பள்ளி ஆண்டு விழாவில் பரதம் ஆடினேன். விழாவிற்கு பள்ளிக்கு வந்த இயக்குனர் ஓருவர், என் நடனம் பார்த்து பிடித்துப் போக, என் வீட்டிற்கு வந்து அப்பாவிடம் என்னை அவரின் படத்தில் நடிப்பதற்காகக் கேட்டார். என் அப்பா மறுத்துவிட்டார்.

ஒருநாள், என் பதினான்கு வயதில் தூக்கத்திலே அப்பா இறந்து விட்டார். அப்பத்தான் ஒரு அப்பாவின் பங்கு என்னன்னு தெரிஞ்சது. அம்மா நிலைகுலைந்து போனாங்க. அடுத்த மாசம் சாப்பாட்டிற்கே வலியில்லை. என் தங்கச்சி அனைவரும் குழந்தைங்க. யாரை நம்பியும் குழந்தைகளான பிள்ளைகளை வீட்டில் தனியாய் விட்டுவிட்டுப் போகமுடியாது.

ஒரு ரெண்டுமாதம் சாப்பாட்டிற்கு பயங்கர கஷ்டம். தினமும் விதவிதமாய் சாப்பிட்டு விட்டு, திடீரென்று பட்டினி கிடந்தால் எப்படியிருக்கும்?

அந்த நேரம், என்னை படத்தில் நடிக்கக் கேட்ட இயக்குனர், எங்கள் தெருவில் குடி வந்தார். அவரின் படத்திற்கு இன்னும் நாயகி கிடைக்காததால் தேடிக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டின் சூழ்நிலை புரிய, என் அம்மாவிடம் வந்து மீண்டும் கேட்ட போது, இரவில் சாப்பிடவே பற்றாக்குறை. விடிந்தால் மீண்டும் சாப்பிடணும். அதற்குப் பணம் வேண்டுமே...!

அம்மா தலையாட்டினார். நான் படத்திற்கு நடிக்க வந்தேன். அப்போ வந்தது, இந்த சினிமா வாழ்க்கைக்கு.

ஓரு நடிகை என்பவள் ரசிகர்களை மகிழ்விப்பவள். ஆனால், என் அகத்திற்குள் சொல்ல முடியாத பல கஷ்டங்கள். ஊரார் அறியாத கண்ணீரும், சோகமும் மறைந்திருக்கு.

சினிமாவில் மிதுனா என்பவள் ஆடி, பாடி, சிரித்து, மகிழ்ந்து வாழ்பவள். அவளுக்கென்ன குறை? மிகவும் சந்தோஷமானவன்னு காட்டிக் கொண்டு நடிக்கிறேன். சினிமா வாழ்க்கையில், நான் எதிர்கொண்ட பிரச்னைகள் ஏராளம்.

உனக்கு ஒரு கஷ்டமெனில் உன்னைக் கையில் வைத்துத் தாங்க, அம்மாவும் அப்பாவும் இருக்காங்க. நல்ல எதிர்காலம் இருக்கும் போது எதற்காக சவக் குழியில் விழனுமென்று ஆசைப்படுற?

நீ பார்த்த சினிமா, வெறும் மூன்று மணி நேரம். அதில் அழுகை, சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் கலந்து வரும். கதையின் நாயகிக்கு ஒரு கஷ்டம் வந்தால், கதாநாயகன் வந்து காப்பாற்றுவான். ஆனால், நிஜவாழ்க்கை அதற்கு நேர்மாறானது.

வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் பார்த்து வந்த மனிதர்களைப் போல, சினிமாவிற்குள் நுழைந்ததும், நமக்கு யாரைப் பார்த்தாலும் ஒரு ஒட்டுதல் உண்டாகும். அந்த மாதிரி நடிப்புத் தொழிலிலும் நாம் ஓருவனை நம்புவோம். அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருப்போம். பெயர் புகழ் அத்தனையும் இழப்போம். யாரை கதாநாயகன் என்று நினைக் கின்றோமோ, அவன் தான் நம்மைக் கொண்டு போய் குழிக்குள் தள்ளுவான்.

உனக்கு சினிமாவில் நடிக்கனுமென்று ஆசை இருந்தால், போய் நல்லா படித்து முடித்து விட்டு, உன் பெற்றோரின் துணையுடன், பாதுகாப்பாய் படதில் நடி. சரியா...?

இப்போ, நீ கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா, தூங்கு.”

அவளோ “எனக்கு தூக்கமே வராது மேடம். எனக்கு எங்க அம்மாவைப் பாக்கணும் போல இருக்கு.”

சிறுது நேரத்தில் புகழேந்தி வந்ததும், அலை பேசியில் தகவல் கொடுக்க, இரு பெண்களும் கிளம்பி, அந்த தேயிலைத் தோட்டத்திற்குள் வந்தனர்.

சசி, அங்கிருந்த புகழேந்தியைக் கண்டதும், “சார் நீங்களா...?”

“நானே தான்!” என்றதும் சசி வாய் பிளந்தாள்.

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற ஹீரோ. ஒரு ஆட்டோகிராப் வாங்கனும் என்றால், காலையிலும் இரவிலும் வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள். இவனைப் பார்ப்பது என்றால் அவ்வளவு கஷ்டம். ஆனால், ‘இந்த மேடம் கூப்பிட்டதும் ஒரு நிமிடத்தில் வந்திருக்கிறார் என்றால், அவர்களுக்குள் அப்படி என்ன உறவு...?’

புகழேந்தி வரும் போதே ஊட்டியில் இருக்கும் தனது நண்பன் மற்றும் காவல் அதிகாரிக்கு அழைத்து விசயத்தை சொல்லி இருந்தான். காவல் அதிகாரிகளும் அந்த ஹோட்டலின் உரிமையாளரை அழைத்து விஷயத்தைச் சொல்லியதும், அவர் தங்கள் ஹோட்டலின் ஊழியர்களை வைத்து, முகேஷ் தங்கியிருந்த அறையையும், பக்கத்தில் தங்கியிருக்கும் இயக்குனரின் அறையையும் சோதனை போட்டதில், அங்கே, ஒரு இளம் பெண் மயக்க நிலையில் கிடந்தாள்.

அவளை மீட்டு எடுத்து விட்டு, காவல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். பின் ஹோட்டலின் உரிமையாளர், அந்த இருவரின் பெயரிலும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க, காவல் அதிகாரி வாங்கிக் கொண்டார்.

மயக்க நிலையில் இருந்த பெண் தெளிந்ததும், போலீஸ் அவளிடம் விசாரித்ததில், “புது முகத்திற்கான போட்டோ ஷூட் எடுக்கிறோம் என்று சொல்லி முகேஷ் வர வழைத்தான். ஆனால் என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான்.”

“நீங்க இவர்களின் பெயரில் புகார் கொடுக்கிறீர்களா...?”

“கண்டிப்பாய் கொடுக்கிறேன். ஏனெனில் எனது வீட்டில் சொல்லி விட்டுத்தான் போட்டோ சூட்டுக்கு வந்தேன். புகார் கொடுத்தால் தான், இவனை மாதிரி உள்ளவர்களை நம்பி, எந்தப் பொண்ணும் வர மாட்டாங்க!” என்றதும், இருவரின் பெயர்களிலும் புகார் வாங்கி, இருவரையும் அழைத்துக் கொண்டு காவலர் சென்று விட்டனர்.

புகார் கொடுத்தவள் அப்படியே சிலை போல் அமர்ந்திருக்க, மிதுனா அவளிடம் “ஏம்மா, டல்லா இருக்க...? ஏன்மா?”

“மேடம், எனக்கு சினிமா என்பது கனவு. தமிழ் தெரியும். நடனம் தெரியும். நாடக கம்பெனியில் பல நாள் பயிற்சி பெற்றிருக்கிறேன். ஆனால், இவனை மாதிரி ஆட்களால் பிடித்த துறைக்குள் கால் வைக்க முடியாதே...! இனிமேல், வீட்டில் யாரையும் நம்பி அனுப்ப மாட்டார்கள். அது தான் பயம்.”

மிதுனா புகழேந்தி இடம், “இந்தப் பெண் மாலினிக்கு ஒரு வாய்ப்பு வாங்கித் தர முடியுமா...?”

புகழேந்திக்கும் ரிஷிக்கும் ஆச்சர்யமே...! புகழேந்தி விழி விரித்தான். பின் “நீ கஷ்டப்பட்ட போது கூட யாரிடமும் கையேந்தி நிற்கல. ஆனால், இன்று ஒரு பெண்ணிற்காக சிபாரிசு பண்றயே...!”

“ஆமாம். சசிக்கு சினிமா ஆர்வம் இருக்கு. அது தவிர அதற்காக எதையும் படிக்கவில்லை. ஆனால், இந்தப் பெண்ணோ சினிமாவிற்காக தன்னை தயார்படுத்தி இருக்கிறாள்.”

புகழேந்தி “ஹாய் மாலினி! மிதுனாவினால் கண்டிப்பாய் உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு உண்டு. நான் எனது புதுப் படத்தில் உன்னை அறிமுகப் படுத்துகிறேன். ஆனால், அதற்கப்புறம் உன் திறமையால் வளரனும். உன்னை நீயே பாதுகாத்துக் கொள்ளனும். சரியா...!”

மாலினி மிதுனாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அவளின் கையை தட்டிவிட்டு, “கடவுளைத் தவிர யாரையும் கும்பிடாதே! நீ எந்த ஊர் மா...?”
"தஞ்சாவூர்."

புகழேந்தி தனது பெர்சனல் நம்பர் மற்றும் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, “இன்னும் மூன்று நாளில் உனது குடும்பத்தாருடன் சென்னையில் வந்து என்னை மீட் பண்ணு.” என்று சொல்லி நம்பிக்கையான கால் டாக்ஸியில், அவளை அனுப்பி வைத்தனர்.

பின் சசிக்கு ஒரு கால் டாக்சி புக் பண்ண, சசி ஓடி வந்து மிதுனாவைக் கட்டிக்கொண்டு, “நான் யாரை நம்பியும் போக மாட்டேன். தனியாப் போக பயமா இருக்கு. அம்மா அப்பா வீட்டுக்குள் சேர்த்துக்க மாட்டாங்க...!”

மிதுனா கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்தவள், “ஓகே ரிஷி! நம்ம இப்பவே சென்னை கிளம்பலாம். டாக்சி புக் பண்ணு.”

புகழேந்தி “மேடம், நீங்கள் என் காரிலேயே வரலாம். அடியேன் பாக்கியம் செய்தவனாவேன்.”

ரிஷி, “மேடம், இவர் நமக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறார். நீங்க ஒரு நன்றி கூட சொல்லலையே...!”

புகழேந்தி புன்னகையோடு, “நல்ல நண்பர்களுக்குள் நன்றியும் மன்னிப்பும் கிடையாது, ரிஷி. 17 வருஷத்தில் ஒரு முறை கூட சொல்லிக் கொண்டது இல்லை.”

மிதுனா “நான் உன் காரில் வர்றேன். ஆனால், நான் வரும் விசயத்தை யாருக்கும் சொல்லக் கூடாது.”

அவனோ திரும்பி முறைத்து, “வித்யா, என்னிடம் பல்லாயிரம் முறை உன்னைப் பற்றிக் கேட்டும், நான் இப்ப வரை வாய் திறக்கவில்லை. நினைவில் வைத்துக்கொள்.” என்று சொல்லி முன்னே செல்ல,

ரிஷியும் அவளிடம், “மேடம், உங்க பேரு மிதுனா தானே...!”

"ஆமாம்! அதற்கு என்ன?"

“அது வந்து, புகழ் சார், உங்களை வித்யான்னு சொன்னார்!”

“வித்யா தான் எனது பெயர். சினிமாவிற்காக மிதுனா.”

இதுவரை புரியாத புதிராக இருந்த மிதுனாவைப் பற்றி, ரிஷிக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய வந்தது. பரதநாட்டியம் ஆடும் பெண்ணவள், பெயர் வித்யா. அவள் கூப்பிட்டால் ஓடி வந்து உதவி செய்யும் பல பிரபலங்கள். ஏனோ, பெண்ணவளின் மீது, நாளுக்கு நாள் மதிப்பு கூடிக் கொண்டே இருந்தது.

ஆனால், ‘இவள் சென்னை செல்லும் விசயத்தை சென்னையில் யாருக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறாள்’ என்ற யோசனையே அவன் மனதைக் குழப்பியது.


சுடும்...!



.
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
மிகவும் அருமையான பதிவு எவ்வளவு பெண்கள் இந்தக் காலத்தில் இன்னும் இந்த மாதிரி இருக்கும் பிராடு களை நம்பி ஏமாந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள்.மிதுனா மேல் ரிஷி போல எனக்கும் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கிறது😍😍😍
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சிஸ் ஸ்டோரி செமையா இருக்கு.10 எபியும் இன்னைக்குத்தான் படிச்சேன்...பரதநாட்டியம் ஆடிய பெண் குத்தாட்டம் போடக் காரணம் என்னவோ..வித்யா புகழ் நட்பு அழகு..சசி இப்படி வந்து மாட்டிருக்கா..முகேஷ் போன்ற ஆட்களை என்ன செய்வது..சினிமாத்துறையில் இருப்பவர்களின் நிலை வருத்தத்திற்குரியதாக இருக்கிறது...வானதி யின் தந்தை எவ்வளவு கொடூரமானவனாய் இருக்கிறான்....
தியாவை நேசிக்கும் ஆத்விக்..
சேனாவை விரும்பும் மகிமா..
மகிமா,மதுரா வின் சகோதர பாசம் சூப்பர்...
ஆத்விக் தியாவை தண்டிக்க நினைக்கிறான்..ஐ லைக் சேனா கேரக்டர்..சேனா தியா காதல் சூப்பர்...ஐஸ்வர்யா டேன்ஸ் சூப்பர்..தியா சித்தி,பாட்டி,மாமா,விது,தேவகி எல்லாரும் கலக்கறாங்க.....ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...........
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Adada idhunga onnu ninaicha kadavul vera mathri mudichu podrare oruvelai mudichu rmba strong a irkumo...paarpom..sena Kum diya kum ena vidhichurukunnu ...ilavarasan pecha kettu aathvik pays chumma irundha diya thappicha illana ennamo sirappa sambavam plan panna poraan.adhu ennagada oruthy virumbalannu sonnalum avala torture pandradhu..palakatha maathungada..unakaga unga dad periya idathula sammandhamlam paarthu irkar andha ponnu vera manasula aasaiya alarthukittu vekkamlam paduthu🙈🙈paavam.superana ud sagi...waiting for nxt ud
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி. ஆம் கடவுள் போட்ட முடிச்சு என்னவாயிருக்கும் என்று வரும் வாரங்களில் படித்து தெரிந்துகொள்ளலாம். நீண்ட விமர்சனம் தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்
 

Ananya deva

New member
Messages
22
Reaction score
1
Points
3
Ennakka ivlo aniyayam ah iruku oru family fulla va kasta padanum 🙄 epdiachu andha actress thia va achum paka chance kedaikatum nu ninachutu vasichan paravalla neenga whole family.aum meet panna vachuteenga 💙 enimel achu onna happy a irukatum apro andha rowdy thatha va naalu podunga epdium andha kelavan dha evangala kolla aalu anupirukan 😠😠😠 apro andha comedy peice medhuvadai vaayilaye rendu podunga epdi pesuthu 😠😠😠 akka nalla chance u epdiachu kiran note a thiya va kuduka vachurunga avaluku mooku nalla udaiatum
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
மிகவும் அருமை அருமை..இந்த மிதுனா வாழ்வில் என்ன என்ன ரகசியம் இருக்கிறது தெரிந்து கொள்ள மிகவும் அவழக உள்ளது.அதுவும் இல்லாமல் இவர்கள் குடும்பம்,இவர்களுக்கு என்ன ஆகி விட்டது எல்லாம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது😍😍😍

மிதுரா ரொம்ப அறிவு போ உனக்கு உங்க அக்காவை சேர்த்து வைகராத விட்டுட்டு தியா சேனாவை சேர்த்து வைகார.அதுவும் இல்லாம இப்போ கிரண் வேற relation இன்னும் நீ பண்ணறது எல்லாம் தியாக்கு சாதகமாக தா இருக்கு😍😍😍
 

Anitha Sundar

Active member
Messages
116
Reaction score
64
Points
28
அத்தியாயம் - 11

விடியல் மிகவும் அழகாய் விடிந்தது.

புகழேந்தியின் வாகனம் சென்னைக்குள் அடி எடுத்து வைக்க, புகழ், திரும்பி தன் தோழியைப் பார்த்தான்.

கண்ணெல்லாம் ஒரு எதிர்பார்ப்பு, குழந்தை முதல் முறையாய் ஒரு கடைக்கு கூட்டிச் சென்றால், ஆவலாய் பார்ப்பது போல, ஜன்னலின் வழியே சென்னையை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

அவளின் ரசனையை கலைக்க விரும்பாதவன், சசியின் புறம் திரும்பினான். அவளும் உறங்கவில்லை தான். ‘வீட்டில் பெற்றவர்கள் என்ன செல்வார்களோ...?’ என்ற பயம், அவள் வயிற்றுக்குள் போட்டுப் பிசைய, முந்தின நாள் முகேஷ் அவளிடம் நடந்து கொண்ட விதமும் நினைவு வர, அவளும் உறக்கத்தை தொலைத்து இருந்தாள். சென்னைக்குள் செல்லச் செல்ல பயந்த குழந்தையைப் போல் ஒடுங்கி அமர்ந்து இருந்தாள்.

அவளின் முகவோட்டத்தைக் கண்ட புகழ், “சசி பயப்படாதே...! ரிலாக்ஸ். உன் வீடு எங்கே இருக்கு...?” என்றதும், அவள் தனது விலாசத்தைச் சொல்லவும், தலையாட்டிவிட்டு, பின் “வித்யா” என்றான்.

அவள் திரும்பவும் “சசியை, நேராக நம்ம வீட்டிற்குப் கூட்டிட்டுப் போலாமா...? இல்லை, இவளைக் கொண்டு போய் அவளின் வீட்டில் விட்டு விட்டுப் போலாமா...?”

“முதலில் இவளின் வீட்டுக்குப் போகலாம். அப்புறம் நம்ம வீட்டுக்கு போலாம்.” என்றதும், ரிஷி ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.

‘நம்ம வீடா...? என்ன இவர்களுக்குள் இவ்வளவு பிணைப்பு’ என்று.

சசியின் வீட்டுக்கு முதலில் சென்றனர். அங்கே போனதும், வீட்டின் காலிங் பெல்லை அழுத்த, கதவைத் திறந்த சசியின் தாய்,

“எங்கடி போய் தொலைஞ்ச பாவி!” என்று அவளின் கன்னங்களில் பளார் பளார் என்று அறைய, மிதுனா ஓடிப் போய் அவரின் கையைப் பிடித்துத் தடுத்தாள்.

அப்போதுதான் அவளைப் பார்த்துக் கொண்டே மகளின் பின்னால் இருந்தவர்களை பார்த்ததும், ‘புகழேந்தி. பெரிய நடிகன் இவர். நம் வீட்டிற்கு ஏன் வந்து இருக்கிறார்?’ என்று வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தார்.

சசியின் தகப்பனார் வந்தவருக்கு வணக்கம் சொல்லவும், மற்றவர்களும் பதிலுக்கு வணக்கம் வைத்தனர். அவரின் கையில் குளுக்கோஸ் ஏற்றியதற்கான தடம் தெரிந்தது.


சசியின் தாய், “இவளைக் காணோமென்றதும், துடித்துப் போய் விட்டோம். என் புருஷன் போலீஸ் ஸ்டேஷனில் அவருக்கு தெரிந்த நண்பரின் மூலம் சொல்லி, தினமும் ரோடு ரோடாக இவளைத் தேடினோம். சென்னை முழுவதும், நானும் அவரும் நாயாய் அலைந்தோம். பெண் பிள்ளை. கண்டவணிடம் சிக்கிவிட்டால்... வயதுப் பெண் காணாமல் போனால் எப்படி நடுங்கும்...? கொஞ்சமாச்சும் உனக்கு பொறுப்பிருக்காடி...?

அப்பா அவருக்கு தெரிஞ்ச ஃப்ரெண்ட் மூலம், அந்த மூகேஷ் வீட்டுக்குப் போய் பார்த்தால், அவன் வீட்டிலேயே இல்லடி. விசாரித்ததில் அவன் சரியான பொம்பளப் பொறுக்கிடி. பிராடுடி. அதில் மயங்கி விழுந்திட்டார். பிரஷர் கூடி, குளுக்கோஸ் ஏற்றி வந்திருக்கோம்.”

சசி தலை கவிழ்ந்தாள்.

பெற்றவரின் கோபம் நியாயமானதால், மிதுனா, அவர்கள் பேசி முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, பின் நடந்ததை சொல்லும் போது, பெற்றவர்களுக்கு உயிரே போய்விட்டது.

“அவள் ஏதோ அறியாமல் செய்து விட்டாள். இனி வாழ்நாள் முழுவதும் தப்பே செய்ய மாட்டாள். நான் மட்டும் ஒரு அஞ்சு நிமிஷம் தாமதமாகப் போய் இருந்தாலும், இந்நேரம் உங்கள் மகளின் பிணத்தைத் தான் பார்த்திருக்க முடியும். இனி அவள் வாழ்க்கையில் யாரையுமே நம்ப மாட்டாள். நல்லா படிப்பாள். நீங்க மட்டும் குத்திப் பேசாமல், அவளுக்கு கொஞ்சம் சப்போர்ட்டாய் இருக்கணும்.”

“ஐயோ! அவன் வீடியோ எடுத்து வைத்து, உன்னை மிரட்டினால் என்னடி பண்றது?”

புகழேந்தி, “பயப்படாதீங்கமா...! அதையெல்லாம் நேற்றே வாங்கி உடைத்துப் போட்டாச்சு...! காலேஜில் பேசி, இவளை சேர்த்து விடுங்கள்.” என்றான்.

சசியின் பெற்றோர்கள் மிதுனா, புகழேந்தி மற்றும் ரிஷி மூவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு, “நன்றி. உங்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் பத்தாது.”

ரிஷியோ, “நன்றி எல்லாம் வேணாம். கொஞ்சம் காஃபி கொடுங்க. பசிக்குது.”

சசியின் பெற்றவர் “பதட்டத்தில் குடிக்க கொடுக்காமல் மறந்திட்டேன். மன்னிச்சிடுங்க.”

காஃபி கொடுத்தவர், பின் “இங்கே, நீங்க இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்.” என்று சொல்லி, அவர்களுக்கு பின் காலை டிபனை கொடுத்து மனத்திருப்தியுடன் கவனித்ததும், மூவரும் நன்றி சொல்லிவிட்டு வெளியே கிளம்பும் வேளையில்,

சசியின் அம்மா மிதுனாவிடம், “நீங்க சென்னை வந்தால், நம்ம வீட்டில் தான் தங்கனும். இனி சென்னையில் உங்களுக்குன்னு ஒரு சொந்தம் இருக்கு.”

சசியோ ஓடிவந்து மிதுனாவைக் கட்டிக் கொண்டாள். “கடவுள் எப்படி இருப்பார் என்று தெரியாது. ஆனால், நீங்க எப்போதுமே எனக்கு கடவுள்.”

மிதுனா கலங்கும் அவளின் விழிகளை துடைத்து விட்டு, “நான் கடவுள் கிடையாது! கடவுள் என்னை அழைத்து, உனக்கு உதவி செய்யச் சொல்லி இருக்கிறார். நம்மால் முடிந்த உதவியை, எப்போதும் யாருக்கேனும் நாம் செய்து கொண்டே இருக்கணும். முக்கியமாய் நடந்ததை மறந்து, படிப்பில் கவனம் செலுத்து.”

“காலேஜுக்கு ரெண்டு வாரம் லீவு போட்டுட்டேன், மேடம். இனிமேல் என்னை சேர்த்துப்பாங்களோ மாட்டாங்களோ...!”

புகழேந்தி, “நீ எந்த காலேஜில் படிக்கிற...?”

பெண்ணவள் தான் படிக்கும் கல்லூரி பற்றிச் சொல்லவும், புகழேந்தி சசியின் பெற்றோரிடம், “நீங்க போய் கல்லூரியின் பிரின்ஸிபல் இடம் பேசுங்க. அப்படி சேர்த்துக்காவிட்டால் எனக்கு கூப்பிடுங்க. அந்தக் கல்லூரியின் தாளாளர் வாமனன் என் நண்பர்.”

ஏனோ, அந்தப் பேரைக் கேட்டதும், மிதுனாவின் மனதிற்குள் ஒரு கோபம். அதை கட்டுப்படுத்தி விட்டு, சசியிடம்,

“நீ எதற்கும் கவலைப்படக் கூடாது. நல்லா படிக்கணும். அம்மா அப்பா பேச்சை கேட்கனும். காதல் கீதல் என்று மேலும் விழக் கூடாது. உனக்கான மாப்பிள்ளை அமைய வேண்டிய நேரத்தில், சரியாக அமையும். பை!” என்று சொல்லி மூவரும் கிளம்பி புகழேந்தியின் வீட்டுக்கு வந்தனர்.

மறு நாள், வழக்கம் போல சசியின் பெற்றவர்கள் கல்லூரியில் வந்து பேச, பள்ளியின் முதல்வர் ஒத்துக் கொள்ளவில்லை. பின் புகழேந்திக்கு அழைக்க, புகழேந்தி வாமனனிடம் பேசவும், சசியை சேர்த்துக் கொண்டனர்.

ஸ்ரீதர் சேனா, தனது வகுப்பில் அட்டெண்ட்டன்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் போது, “எக்ஸ்க்யூஸ் மீ சார்!” என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்ப, அங்கே சசிரேகா நின்றிருந்தாள்.

சேனா அவளை முறைத்து, “கல்லூரிக்கு வரா விட்டால் ஃபோன் பண்ணி தகவல் சொல்லத் தெரியாதா...?”

“சார், மருத்துவமனையில் இருந்தேன். அதான் சொல்ல முடியவில்லை.” என்றதும்,

“சரி சரி. இப்போ நீ ஓகேவா...?” என்றதும் தலையாட்டவும், “கோ டூ யுவர் ப்ளேஸ்!” என்றதும் வந்தவள், தனது தோழிகளின் அருகே அமர்ந்து கொண்டாள்.

தியா, தெரியாமல் கூட அவன் பக்கம் பார்வையை செலுத்த வில்லை. தியா மற்றும் ஐஸ், சசியைப் பார்த்து மகிழ்ச்சியாய் வரவேற்க, ‘இதுவே தனக்குப் போதும். தன் வாழ்க்கையில்’ என்று நினைத்தவள். முதன் முறையாய் சசி பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.

சேனா வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது, மதுரா வகுப்பைச் சுற்றி நோட்டம் விட, மாணவர்கள் அனைவரும் வகுப்பில் கவனமாக இருந்தனர். தன் அக்காவை அடித்து விட்டானே என்ற கோபத்தில், அவனை எப்படி அசிங்கப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

தியாவின் பின்னால் தான் மதுராவின் இருக்கை. வகுப்பு எடுத்து முடித்தவுடன், சேனா வகுப்பறையையே சுற்றிச் சுற்றி வருவான்.

இன்றும் வழக்கம்போல் அவன் வகுப்பை சுற்றிக் கொண்டே வரும் போது, மதுரா, தன் காலை வெளியே நீட்ட, அதில் தட்டி, தியாவின் மேல் விழுந்தான்.

இருவருக்குமே அந்த நொடி, ஒரு மாதிரி ஆகிவிட்டது. சேனாவின் கன்னத்தில் தியாவின் நெற்றியில் இருந்த குங்குமம் ஒட்டி விட்டது. வேக வேகமாய் எழுந்தவன், “சாரி…!” என்று சொல்லிவிட்டு, ஏதோ தட்டி விட்டது போல் இருந்தது என்று தோன்ற குனிந்து பார்த்தான்.

சேனா புரிந்து கொண்டான். இது மதுராவின் வேலையாகத்தான் இருக்குமென்று. பின் கோபமாய், “கால்களை எதுக்கு வெளியே நீட்டுற? அடுத்தவங்க தட்டி விழுவாங்கன்னு தெரியாதா...?”

அவளோ நக்கலாய் “சார்...! உங்க கன்னத்தில் குங்குமம்.” என்று கிண்டல் பண்ண, அதை கைகளால் தட்டி விட்டு, மதுராவை முறைத்து விட்டுச் சென்றான்.

தியா கோபமாய் பின்னால் திரும்பி, “ஹேய்.. நீ வேண்டுமென்றேதான பண்ற?”

அவளோ எல்லோருக்கும் கேட்கும் விதமாய், “உனக்கும் சாருக்கும் ஏதோ கனெக்சன் இருக்காமே...! அவர் கூட, விழும் போது இந்தப் பக்கம் என் மேல வந்து விழுந்து இருக்கலாம். அந்த பக்கம் கீழே விழுந்து இருக்கலாம். ஆனால், உன் மேல ஏன் விழுந்தார்.” என்று நக்கலாய் கேட்கவும்,

ஐஸ்வர்யா தியாவிடம், “எதுக்கு இவளிடம் எல்லாம் பேசிக்கிட்டு...? இவளும், இவங்க அக்கா வாங்குவது போல், ஒரு நாள் கன்னத்தில் வாங்கினால் அடங்கிடுவா. திரும்பு!” என்றாள்.

“ஹோ உனக்கும் தெரியுமா...?”

ஐஸ்வர்யா முறைத்துவிட்டு திரும்பிக்கொள்ள, தியா, “நீ இன்னும் அனுபவிப்ப…!” என்று சொல்லி விட்டு, திரும்பிக் கொண்டாள்...!

மதுராவின் மனமெல்லாம் கோபம். எப்படி பழி வாங்கலாம் என்று தோன்ற, அந்த நேரம் பக்கத்து டேபிளில் ரெக்கார்டு நோட் இருக்கவும், எடுத்து ஓப்பன் பண்ணிப் பார்த்தாள். பெயர் கிரண்குமார். நாளைக்கு ப்ராக்டிக்கல் க்ளாஸ். ரெக்கார்டு நோட் கொடுத்த ப்ரோகிராமிங்கை இரவிற்குள் எழுதி முடித்து, நாளை சேனாவிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கனும். ரெக்கார்டு நோட் இல்லாவிட்டால், லேப்பிற்குள் போக முடியாது. கிரண் சரியான சிடுமூஞ்சி. வகுப்பில் அனைவரிடமும் தியாவிற்கு கெட்ட பெய்ர் வாங்கிக் கொடுக்கனுமென்று நினைத்த மதுரா, அந்த நோட் எடுத்து தியாழினி இல்லாதப்போ, அவளின் பைக்குள் வைத்துவிட்டாள். இதையறியாத தியாழினியோ, எப்பவும் போல தனது பையை தூக்கிக்கொண்டு, வீட்டுக்கு வந்து விட்டாள்.

அன்று மாலை குடும்பத்துடன் தனது தம்பியைப் பார்த்து விட்டு வரலாமென்று விது கிளம்பினார். அந்த வாரம் ஞாயிறன்று ஊருக்குப் போவதாய் பிளான் என்பதால் வினோதினியை மட்டும் விட்டு விட்டு, மருத்துவமனைக்குக் கிளம்பலாம் என்று முடிவு பண்ணினர்.

……………..

மிதுனாவின் மனம் முழுவதும் வலி. சரியாக தூங்கவேயிலை. தூங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆனதால், பெண்ணவளின் கண்கள் சிவந்து காய்ச்சலில் கொண்டு வந்து விட்டது.

மூவருமே அவரவர் ரூமில் இருந்ததால், புகழேந்தியின் வீட்டு வேலையாள், மூன்று முறை வந்து, மேடம் தூங்குறாங்க என்றதும், அவளை தொல்லை பண்ணாமல் விட்டு விட்டான். மாலையிலும் அவள் வராததால், அவளைத் தேடி அவளின் அறைக்குள் சென்றான்.

பெண்ணவளோ சுருண்டு படுத்திருந்தாள். முனங்கல் வேறு. புகழ் சட்டென்று தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் கொதித்தது. “மிதுனா எழுந்திரு!” என்று அழைக்க, அவளால் முடியவில்லை.

அவளை உடனே கிளம்பி வா என்று வற்புறுத்தி, மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்.

வரும் வழியில் நல்ல ட்ராபிக். புகழ் வெளியே எட்டிப் பார்க்க, கூட்டம் கூடியிருந்தது. ரிஷி வெளியே போய் பார்க்க, அங்கே ஒருவர் கீழே வண்டியோடு விழுந்து, நெஞ்சில் கைவைத்து துடித்துக் கொண்டிருக்க, சுற்றி இருப்பவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ரிஷி வந்து “புகழ் சார்! இந்தப் பக்கம் போக முடியாது. யாரோ ஒருத்தங்க நெஞ்சுவலியால் துடிக்கிறாங்க.”

மிதுனா சன்னல் வழியே எட்டிப் பார்க்க, யாருமே அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக முயல வில்லை. பெண்ணவளோ, “புகழ் சீக்கிரம் போங்க. சட்டுன்னு போய், அவரை தூக்கிட்டு வாங்க. நம்ம ஹாஸ்பிட்டலில் சேர்க்கலாம்.”

“நானும் அந்த யோசனையில் தான் இருக்கேன். ஆனால், நான் இறங்கினால் கூட்டம் கூடிவிடும்.”

“ரிஷி, நீயும் அவர் கூடப் போ...! யாரும் புகழை நெருங்க விடாமல் பார்த்துக் கொள். அவரை வேகமாய் போய் கூட்டிட்டு வாங்க. தாமதித்தா அவர் உயிருக்கு ஆபத்து!” என்றதும்,

புகழ் மிதுனாவின் துப்பட்டாவை வாங்கி முகத்தில் சுற்றிக் கொண்ட பின், தனது கைபேசியின் மூலம் நண்பரின் மருத்துவமனைக்கு தகவல் தந்த பின், இருவரும் கீழே இறங்கினார்கள்.

இருவரும் கூட்டத்தைக் கலைத்து விட்டு, அவரைத் தூக்கும் போது, அங்கே இருந்தவர்களோ யாரு இவனுங்க என்று பார்த்தனர். சிலரோ, “யார் நீங்க?” என்றதும்,

புகழ் தன் முகத்திலிருந்த துணியைக் கழட்டி, “புகழேந்தி” என்றதும், கூட்டத்தில் இருந்தவர்கள் தனது செல்ஃபோன் மூலம் செல்பி எடுக்கவும், ஆடவனுக்குள் அவ்வளவு கோபம்.

ஒருவர் உயிருக்கு போராடி துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரம் இப்படி மக்கள் பண்றாங்களே என்று கோபம். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ப்ளீஸ்… இவரை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும். இங்கே என் ரசிகர்கள் யாராவது இருந்தால், சாலையில் கொஞ்சம் போக்குவரத்து நெரிசலை சரி பண்ணுங்க!” என்றதும், அடுத்தடுத்து ரசிகர்கள் துரிதமாய் செயல்பட, சாலையில் நெரிசல் சரியாகி, புகழேந்தியின் வாகனம் பிரபல மருத்துவமனையை நோக்கிச் சீறிப் பாய்ந்தது.

மருத்துவமனைக்கு சென்று அவரை அனுமதித்து விட்டனர். அவருக்கு துரிதமாய் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிகிச்சைக்கான பணத்தை புகழேந்தி கட்டிவிட்டு, பின் “மிதுனா, நீ அதற்குள் மருத்துவரைப் பார்த்து விடு.”

அவளோ “இவர் சரி ஆகட்டும், புகழ். அவரை பார்த்து விட்டு, நான் மருத்துவரைப் பார்க்கிறேன்.” என்றாள்.

அவர் கண்விழித்ததும், மருத்துவர் புகழேந்தியிடம் சொல்ல மூவரும் போய்ப்பார்த்தனர். அவர் கையெடுத்து 3 பேருக்கும் நன்றி சொன்னார். ஆனால், அவரால் பேச முடியவில்லை. கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது.

புகழ் “சார் அழ வேண்டாம். உங்க வீட்டில் தொடர்பு கொள்ளனும். காண்டாக்ட் நம்பர் வேணுமே...!”

அந்த நேரம் செவிலியர், “சார்! உங்களுக்கு கிரண் என்பரிடமிருந்து அழைப்பு வருது.” என்றதும்,

புகழ் அதை வாங்கி அவரிடம் நீட்ட, அவரின் இடது கையில் ட்ரிப்ஸ். அவரால் பேசமுடியாது என்பதால், புகழ் அட்டெண்ட் பண்ணி “ஹலோ!” என்றான்.

“தாத்தா எங்கே போனீங்க...? உங்களைக் காணாமல், நானும் அம்மாவும் பயந்து போய் இருக்கோம்...!”

புகழ், ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “உங்கள் தாத்தா கீழே விழுந்திட்டாங்க.”

“அவருக்கு என்னாச்சு...? தாத்தா இப்ப நல்லா இருக்காரா...?” என்று பதறும் அவனிடம்,

“அவருக்கு டிரிப்ஸ் ஏறிட்டு இருக்கு. நீங்க வரும் போது அவர் நல்லா ஆகி விடுவார்.” என்று மருத்துவமனையைச் சொல்லவும்,

“இன்னும் கால்மணி நேரத்தில் வந்திடுவோம். அதுவரை பார்த்துக்கோங்க...!” என்றான்.

புகழ் மிதுனாவின் புறம் திரும்பி, அவர் நன்றாக ஆகி விட்டார். வா! உன்னை மருத்துவரிடம் காண்பிக்கலாம்.” என்று அழைத்துச் சென்று பரிசோதிக்க, அவளுக்கு காய்ச்சலுக்கான ஊசி போட்டு, நல்லா உறங்கினால் சரியாகி விடும் என்று அனுப்பி வைத்தார்.

மிதுனா தன் பரிசோதனை எல்லாம் முடித்து, ஊசி போட்டு முடித்து வெளியே வந்ததும், அந்தப் பெரியவரை பார்க்கும் போது, அங்கே ஒரு இளம் வயதுப் பையனும், அவனுடன் ஒரு பெண்ணும், அவரின் கையைப் பிடித்து அழுது கொண்டிருந்தனர்.

செவிலியர் அவர்களிடம், “இவங்கதான் உங்க தாத்தாவை காப்பாற்றினார்கள்.” என்றதும்,

இருவரும் திரும்பி, “மிக்க நன்றி!” என்ற போது, அங்கு நின்றிருந்தவளைக் கண்டதும், மிதுனாவிற்கு மயக்கம் வராத குறைதான்.

அவனோ புகழைப் பார்த்து, “சார்! நீங்கள் உண்மையாவே சூப்பர் ஸ்டார் தான். என் தாத்தாவின் உயிரை காப்பாற்றி இருக்கீங்க!” என்று அவன் கையைப் பிடித்து நன்றி சொன்னான்.

மிதுனா கண்ணீரோடு, “விசித்ரா…” என்றதும்

அவளும் புரியாமல் “யார் நீங்க...?”

“வித்யா பாரதி!” என்றதும் நம்ப முடியாத பார்வையோடு “நிஜமா...!”

“நிஜம் தான்டி.” என்றதும்,

“அக்கா, நீ செத்துப் போய் விட்டதாகப் பேப்பரில் போட்டு இருந்தாங்க...!”

“நான் தான்டி அப்படி சொல்லச் சொன்னேன்.” என்றதுமே, விசித்ரா ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.

புகழுக்கு ஆச்சரியம். ‘சசிக்கு ஒரு நல்லது செய்யப் போய், வந்த இடத்தில் தொலைத்த வாழ்க்கையை கண்டு பிடித்திருக்கிறாள்.’ என்றதும் மகிழ்ச்சி.

அந்த நேரம் உள்ளே வந்த மருத்துவர், “ஒரு அறையில் இத்தனை பேர் இருக்கக் கூடாது, சார்.” என்று புகழேந்தியைப் பார்த்துச் சொல்லவும்,

கிரண் அவரின் கையைப் பிடித்து கொண்டே, “சித்தி, நான் பார்த்துக்குறேன் நீங்க போய் பேசுங்க.” என்றான். கிரண் தவிர, அனைவரும் வெளியே வந்தனர்.

கிரண் தன் தாத்தாவிடம், “நீங்க உங்களுக்கு ஒரு பொண்ணுன்னு தானே சொன்னீங்க.”

செவிலியர் “தம்பி, எதுவாயிருந்தாலும் நாளைக்கு உங்க வீட்டில் போய் கேட்டுக்கோங்க...!” அவனும் தலையசைத்தான்.

அனைவரும் வெளியே வரும்போது மிதுனா தங்கையிடம், “கொஞ்சம் பேசணும்டி. கீழே போய் பேசலாமா...?”

அனைவரும் கீழே நடந்து வெளியே வர, எதிரே விதுபாரதி தன் அம்மா மற்றும் மகளுடன் வந்து கொண்டிருந்தார்.

தன் மகளுடன் பேசிக்கொண்டே வந்த விது, தன் முன் நின்ற மிதுனாவைக் கண்டு, அப்படியே நின்று விட்டார்.

தன் அக்கா யாரைப் பார்க்கிறார் என்று நிமிர்ந்த விசித்ரா, அங்கே தன் இரண்டாவது அக்கா விது, தன் அம்மா...!

தன் வாழ்க்கையில் தொலைந்து போன உறவுகள் அத்தனையும் கண்முன்னே...!

மிதுனாவிற்கு வெகு நாள் கழித்து, தன் அம்மாவை பார்த்த சந்தோசமும். நீ என் கண் முன்னே வந்து விடாதே என்று தன் தங்கை சொல்லிப்போன வார்த்தைகளும், ஒரு சேர மூளையில் உதித்தபடியே சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

பதிமூன்று வயதில் தன் அம்மாவை விட்டுப் போன விசித்ராவிற்கு, எந்தத் தயக்கமும் இல்லை. ஓடிப் போய் “அக்கா!” என்று கட்டிக்கொண்டாள்.

விதுபாரதி அதிர்ச்சியில் நிற்கும்போதே, விசித்ரா அவளை விட்டு விலகி, அருகில் இருந்த தன் அம்மாவைக் கட்டிக் கொள்ள, பெற்றவரோ அழுகை. கோபம். சந்தோஷம் என பலவகை உணர்ச்சியின் பிடியில் இருந்தார்.

தியாழியோ, ‘யார் இவங்க? தன் பாட்டியையும் அம்மாவையும் மாற்றி மாற்றி கட்டிப் பிடிக்கிறாங்க.’ என்று பார்த்தாள்.

“அந்த நேரம் வந்த மருத்துவமனை அலுவலர், இங்கே கூட்டமாய் நிற்காதீர்கள்! பக்கத்துல போய் பேசுங்க!” என்றதும், அனைவரும் மரத்தடிக்கு வந்தனர்.

‘தியாழினியும் அவங்க அம்மாவும் எங்கே போறாங்க?’ என்று ஸ்ரீதர் சேனாவும் பின்னாடியே வந்தான்.

வந்ததும் சுமித்திரை, தன் மகளின் கன்னத்தில் பளாரென்று அறைந்து,

“எங்கடி போய்த் தொலைஞ்ச...? செத்துட்டியா...! உயிரோட இருக்கியான்னு தெரியாமல், தினம் தினம் துடிச்சேன். ஒருத்தி உயிரோட இருந்துட்டு, நான் செத்துட்டேன்ன்னு சொல்லிடுன்னு சொல்லிட்டு போயிட்டாள். ஒருத்தி ஜெயிலுக்குப் போய் விட்டாள். நீ தொலைஞ்சு போயிட்ட. கைக்குழந்தையை வைத்துக் கொண்டு, நானும் உன் தம்பியும் தினமும் தேடினோம்.”

விசித்ரா தனது மொபைலில் கிரணுக்கு அழைத்து, “தாத்தா எப்படி இருக்கார்.”

“நல்லாயிருக்கார்மா. தூங்குறார். நான் உங்களைத் தேடித்தான் கீழே வந்தேன்.”

“வெளியே மரத்தடியில் இருக்கோம், வா!” என்றார்.

கிரண் வெளியே வந்ததும், விசித்ரா அவனைப் போய் அழைத்துக்கொண்டு வந்து, சுமித்திரையின் முன்னே நிறுத்தி,

“இவன் தான்மா உன் பேரன் கிரண். அப்படியே தான் இருக்கான். அவனைக் காப்பாற்றத்தான் நான் ஓடிப் போனேன்.”

பெற்றவருக்குப் பூரிப்பு. பேரனை தன் முன்னே நிறுத்தி தொட்டு தொட்டுப் பார்த்தார்.

கிரணுக்கும் தியாழினிக்கும், இது அதிர்ச்சியான செய்தி.

விதுபாரதிக்கும் வித்யாபாரதிக்கும் குழப்பம்...! ‘யார் பையன் இவன்?’ என்று...!

தியாழினியும் ஸ்ரீதர் சேனாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சுமித்திரை, தன் மகளின் கழுத்தில் தாலி எதுவும் இல்லாமல் இருக்கவும், "நீ கல்யாணம் பண்ணிக்கலையாடி...?"

“இல்லம்மா…!” என்றதும், மகளைக் கட்டிக் கொண்டார்.

அதுவரை அழுது முடித்த விசித்திரா, ‘ஏன் வித்யா அக்கா வந்து அம்மாவிடம் பேசாமல் இருக்காங்க?’ என்று நினைத்தவள்,

“அம்மா, வித்யா அக்காம்மா!” என்றதும்,

பெற்றவரின் கண்கள் “எங்கே? எங்கேடி?”

சட்டென்று அடையாளம் காண முடியாமல் வித்யாவைப் பார்க்க, வந்தவள் “பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி இருக்குமா...!”

“ஏண்டி வந்து அம்மா கிட்ட பேச மாட்டியா...?”

அந்த வார்த்தையைக் கேட்டதும், ஓடி வந்து தன் அம்மாவின் காலில் விழுந்து விட்டாள்.

பெற்றவர் கண்ணீருடன், “வாழ வேண்டிய என் பிள்ளைங்க யாருமே... வாழவே இல்லையே...!”

ஏனோ அந்த நேரம், பெற்றவரின் அழுகை மிதுனாவைப் புரட்டிப் போட்டது.

“ஏன்மா...? விது வாழலையா...?”

“உன் புருசனின் தம்பியும், அவனின் மாமனாரும் கொல்லாமல் கொன்னுட்டாங்கடி.”

மிதுனா தலையில் கை வைத்து கதறினாள். தன்னால் தான், தன் தங்கையின் வாழ்க்கைகள் அனைத்தும் நாசமாய்ப் போனதோ என்று...!

அழும் மிதுனாவின் அருகே வந்த புகழேந்தி, “ஏற்கனவே பயங்கர காய்ச்சல். இதோடு அழுதால் இன்னும் முடியாமல் போயிடும்.”

அவளோ “இல்லை புகழ், நான் அழனும். என் குடும்பமே, என் காதலால் சிதைந்து போச்சு.!”

“அப்படி என்னதான் உங்க வாழ்க்கையில் நடந்தது. சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன் அல்லவா...?”

ஸ்ரீதர்சேனா சுற்றி விழியால் நோட்டமிட்டு, அங்கு பல பேர் கூடி வருவதைக் கண்டான். அதில் ஓருவன் யாரிடமோ பேசினான். பின் அருகே வந்தான். அவன் நடவடிக்கையே மோசமாய் இருந்தது.

பின் சேனா “மேடம், நீங்க எதுவாய் இருந்தாலும் உங்கள் வீட்டில் போய் பேசிக் கொள்ளுங்கள். சில பேர் உங்களையே பார்க்கிறார்கள்.” என்றதும் தான் சுற்றம் நினைவு வந்தது.

சுமித்திரையோ “ஹாஸ்பிட்டலில் தான் தம்பி இருக்கான். அவனைப் பார்த்துட்டு, நம்ம எல்லாம் போய் வீட்டில் பேசிக்கலாம்.”

அந்த நேரம் ஒருவன் கத்தியை எடுத்து மறைத்து வைத்து, மிதுனாவையே நோக்கி வர, ஸ்ரீதர்சேனா நொடி நேரத்திற்குள் சுதாரித்து, அவளைத் தள்ளி விட்டு கத்தி கொண்டு வந்தவனின் கையைப் பிடித்து உடைத்தான். அதற்குள் அவன் சேனாவைத் தட்டி விட்டு ஓடிவிட்டான்.

புகழேந்தி நொடிக்குள் நடந்த விபரீதத்தை உணர்ந்து, "வித்யா உனக்கு இங்கு சேஃப் இல்லை! வா நம் வீட்டுக்கு போலாம்.” என்று சொல்ல, வித்யா பாரதி தன் அம்மாவைப் பார்க்க,

அவரும் தலையாட்டிவிட்டு, “நீ போ. நான் தம்பியைப் பார்த்துவிட்டு, அங்கே வர்றேன்.” என்றார்.



சுடும்...!


nice semma
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சூப்பர் சிஸ்..மிதுனா வாழ்வில் என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கேன் சிஸ்.மிதுனாவின் காதல்,தங்கைகளின் வாழ்க்கையில் என்ன நடந்தது எனப் பல கேள்விகளுக்கு விடை வேண்டி ஆவலுடன்......கதையை நல்லா கொண்டு போறீங்க..நெக்ஸ்ட் எபி எப்போ சிஸ்
 
Top Bottom