நாவலின் இறுதி வரை என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ். என்னையே அறியாமல் தைப்பூசத்தில் துவங்கி மகளிர் தினத்தில் நாவலை நிறைவு செய்திருக்கிறேன்.
பெண்களாகிய நாம் எப்போதும் நமது உடல்நலத்தில், மனநலத்தில் அக்கறைகொள்ள வேண்டும் ப்ரெண்ட்ஸ். நமக்கான 'மீ டைம்'முக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்களை மட்டும் நம்மைச் சுற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கான பிரச்சனையெல்லாம் வெளியிலிருந்து தான். நமக்கு தான் மாதா மாதம் ஹார்மோன் இம்பேலன்ஸுகளால் உடலிலிருந்தே பல பிரச்சினை.
யாரும் வீட்டிலில்லையா நமக்கு பிடித்த உணவுவகைகளை சமைத்து சாப்பிடவேண்டும். தயங்காமல் நம்மால் முடியாத விசயங்களுக்கு நோ சொல்லிவிட வேண்டும். அடிக்கடி கண்ணாடி பார்த்து நம்மை நாமே பாராட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் கிடப்பதால் சோம்பிக்கிடக்காமல் நம்மை நாமே அலங்கரித்துக்கொண்டு செல்ஃபி எடுத்து லயிக்கலாம். இவையெல்லாம் என்னை பூஸ்ட்டப் பண்ணிக்கொள்ள நான் பின்பற்றுபவை ப்ரெண்ட்ஸ்.
உங்களுக்கு ஒத்து வருமானால் நீங்களும் பின்பற்றலாம்.
நான் முதலில் இந்நாவலுக்கு மூன்று அம்மாக்கள் என்று தான் தலைப்பு வைக்கலாம் என நினைத்தேன். வேணி, கங்கா, பானுமதி இம்மூவரைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று மறக்காமல் கருத்துப்பெட்டியில் சொல்லுங்கள் ப்ரெண்ட்ஸ்.
எனக்கு பிளாக், கூகுள் டாக் போஸ்ட்டில் எல்லாம் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. சகாப்தம் என் மனதிற்கு நெருக்கமான தளங்களில் ஒன்று. இங்கு நான் எழுதக் கேட்டதும் திரியமைத்துக்கொடுத்த நித்யா கார்த்திகன் அக்காவிற்கு என் அன்புகள்❤️
மீண்டும் ஒரு புதிய கதைக்களத்துடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் ஷிவானி செல்வம்❤️
கருத்துத்திரி,
கண்மணிநீ வரக் காத்திருந்தேன் ஜன்னலைப் பாத்திருந்தேன்!