மனம் முழுக்க அவருடைய நினைவு மட்டுமே நிறைந்திருந்தது. 'நா அவரோட சேரலைன்னாலும் பரவாயில்லை... அவருக்கு எந்த நோயும் இருக்கக் கூடாது... அவரு தீர்க்காயுசா ரொம்ப நாளைக்கு வாழணும்' என்று சாமிக்கு விளக்கு போட்டு தினமும் வேண்டிக் கொண்டேன்.
அவரை மறக்க முடியவில்லை. ஆனால் ஒரு வாரத்தில் மனம் சற்று திடப்பட்டது. வழக்கம் போல கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். ஒருநாள் ஹெச்ஓடி என்னை வர சொன்னதாக பியூன் அண்ணா வந்து வகுப்பில் சொன்னார்கள்.
மேம்-மிடம் பர்மிஷன் சொல்லிட்டு சாரை பார்க்க அவருடைய அறைக்குச் சென்ற நான் ஷாக் அடித்தது போல் நின்றுவிட்டேன்.
அவர்... அஷ்வின் அங்கே இருந்தார்... சாருக்கு முன் உட்கார்ந்து மிகவும் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் தலையை ஆட்டி சிரித்தார்.
எனக்கு என் கண்ணையே நம்ப முடியவில்லை... 'இது நிஜம் தானா...! இல்ல பிரம்மையா!' என்று கண்ணை முடித்திறந்து நன்றாகக் பார்த்தேன்.
'உண்மைதான்... அவருதான்... நிஜத்துல என்னைய பார்க்க வந்திருக்காரு...!!!' - வார்த்தையால் சொல்லிவிட முடியாத அளவிற்கு அவ்வளவு சந்தோஷம் எனக்குள்... கண்ணெல்லாம் கலங்கிவிட்டது...
"சார் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்... பேசிட்டு வா..." - ஹெச் ஓ டி சார் சாதாரணமாக பர்மிஷன் கொடுத்தார்.
'எப்படி இது நடந்துச்சு. பேரன்ட்ஸ் பார்க்க வந்தாலே ஆயிரத்தியெட்டு கண்டிஷன் இருக்கும். இவரை எப்படி உள்ள விட்டாங்க... எப்படி இந்த அளவுக்கு இவர்கிட்ட ஃபிரீயா இருக்காங்க...!' - என்னுடைய யோசனைக்கு பதில் சொல்வது போல் அஷ்வின் எங்கள் சாரிடம் சூப்பராக இங்கிலீஷ் பேசினார். எங்கள் சாருக்கு அவர் அளவுக்கெல்லாம் பேசத்தெரியாது. அவர் பேசுற இங்கிலிஷ் தமிழ் மாதிரியே தான் இருக்கும். ஆனா அஷ்வின் பேசுற தமிழ் கூட இங்கிலிஷ் மாதிரி ஸ்டைலா இருக்கும்.
அஷ்வினோட ஈடு கொடுத்து சாருக்கு பேச முடியவில்லை... அதனால்தான் அஞ்சு நிமிஷம் பேசினால் பேசிவிட்டு போகட்டும் என்று விட்டுட்டார் என்று எனக்கு தோன்றியது.
சார்கிட்ட சொல்லிவிட்டு அவர் என்னை கேன்டீனுக்கு அழைத்து வந்தார்.
"எப்படி இருக்க?" - சாதாரணமாக பேசினார்.
"நீங்க நல்லா இருக்கீங்களா?" - நல்லா இருக்கேன் என்று சொல்ல வாய் வாராமல், அவருடைய நலனை விசாரித்தேன்.
அவரும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லை. "என்ன சாப்பிடற?" என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
"இங்க இந்த நேரத்துல டீ மட்டும் தான் கிடைக்கும்" என்று சொன்னேன்.
அவர் சிரித்தார். அந்த சிரிப்பு பழைய மாதிரி சந்தோஷமான சிரிப்பாக இல்லை.
அவர் முகத்தில் வருத்தத்தை பார்க்க எனக்கு கஷ்டமாக இருந்தது. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு டீ டம்ளரோட டேபிளில் வந்து அமர்ந்தோம். அவர் என்னை பார்த்துக் கொண்டே இருந்தார். நான் கீழே குனிந்தபடியே அமர்ந்திருந்தேன். இருவருமே சற்றுநேரம் எதுவும் பேசவில்லை. பிறகு அவர்தான் கேட்டார்...
"என்ன ஆச்சு? ஏன் திடீர்ன்னு உங்க வீட்ல இப்படி சொல்லிட்டாங்க?" - அவர் குரலில் எதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வருத்தத்தை குரலில் காட்டிக்கொள்ளாமலே பேசினார். ஆனால் அவருக்குள் கோபம் இருப்பதை நான் உணர்ந்தேன்.
'அதுல ஒன்னும் தப்பு இல்ல... அப்பா இப்படி பண்ணியிருக்கக் கூடாது...' - வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்பாவை குற்றம்சாட்டினேன்.
"ரோஜா..." - அவர் என்னை பெயர் சொல்லி அழைத்தார். மெல்லிய இசை என் செவியில் இழைவது போல் உணர்ந்தேன் நான்... ஆசையோடு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன்.
"வீட்ல என்ன நடந்துச்சு?" - திரும்பவும் கேட்டார்.
சொல்வோமா வேண்டாமா என்று சற்று நேரம் யோசித்தேன். ஆனால் சொன்னால்தான் அவரோடு சேர்வதற்கு வழி கிடைக்கும் என்று மனம் அறிவுறுத்தியதால், சிறு தயக்கத்திற்குப் பிறகு, "உங்களுக்கு உடம்புக்கு என்ன?" என்றேன்.
அவருடைய முகம் இறுகி போய்விட்டது. சற்று நேரம் என்னோடு பேசாமல் அமர்ந்திருந்தார். பிறகு ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, வேகமாக இங்கிலிஷில் பேசினார். எனக்கு இங்கிலிஷ் புரியும்தான்... ஆனால் இப்படி இங்கிலிஷ் படத்தில்வருவது போல் பேசினால் புரியாது... தமிழ்காரங்க இங்கிலிஷ் பேசுவார்களே... அப்படி பேசினால் தான் புரியும். என்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டு பேசுவதை நிறுத்திட்டு, திரும்பவும் என்னை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். பிறகு, "டூ யூ பிலீவ் மீ?" என்று கேட்டார். நான் தலையை மேலும் கீழும் ஆட்டினேன்.
"எனக்கு ஒன்னும் இல்ல.... ஐம் கம்ப்ளீட்ல்லி ஆல்ரைட்" என்றார்.
எனக்கு ஒரே சந்தோஷம்... தலையில கூடை பூவை கொட்டியது போல் இருந்தது.
"நிஜமாவா! நிஜமாவா சொல்றீங்க?" என்றேன் உற்சாகத்துடன். எனக்கு தெரிந்து அப்போதுதான் நான் அவரிடம் அவ்வளவு சத்தமாக பேசியது.
அவர் என்னை ஒருமாதிரி ரசனையோடு பார்த்துக் கொண்டே ஆமாம் என்று தலையாட்டினார்.
"எனக்கு அப்போவே தெரியும்... என் மேல யாருக்கோ பொறாமை. அதான் இப்படி இல்லாததை எல்லாம் சொல்லி எங்க அப்பா மனசை கலைச்சுட்டாங்க..." - நான் படபடத்துக் கொண்டிருந்தபோது, "உங்க அப்பா கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான் ரோஜா. எதுவும் பொய் இல்ல" என்று குறுக்கிட்டார் அவர்.
என்னுடைய உற்சாகமெல்லாம் வடிந்துவிட்டது. குழப்பத்துடன் அவரைப் பார்த்தேன்.
"சின்ன வயசுல எனக்கு ஹார்ட் ப்ராப்லம் இருந்தது உண்மைதான். அப்போவே சர்ஜரி பண்ணி சரி பண்ணியாச்சு. இருபது வருஷம் ஆயிடிச்சு... நல்லாதானே இருக்கேன்... இனியும் நல்லாத்தான் இருப்பேன். எனக்கு ஒன்னும் இல்ல ரோஜா... நீ என்னை நம்பனும்" - முதல் முறையாக அவர் குரல்ல ஒரு எமோஷன் தெரிஞ்சுது.
நான் அப்படியே இறுகிப்போய் அமர்ந்துவிட்டேன். 'அம்மா சொன்னது உண்மைதானா! கிராமத்துப் பொண்ணுங்கிறதுனால ஏமாத்த நெனச்சசுட்டாரா! ஏன் இதை முதல்லயே சொல்லாம விட்டுட்டாரு...!' - எனக்குள் என்னென்னவோ கேள்விகள் எழுந்தன. எதையும் நான் அவரிடம் கேட்கவில்லை. கேட்டு அவர் மனதை புண்படுத்தும் தைரியம் எனக்கு இல்லை. அமைதியாக அமர்ந்திருந்தேன். என்னுடைய அமைதியே அவரை பதட்டப்பட வைத்தது.
"என்ன நினைக்கற? வெளிப்படையா பேசு" - டென்ஷன் தெரிந்தது அவர் முகத்தில்.
"முதல்லயே சொல்லியிருக்கலாமே..." - மெல்ல சொன்னேன்.
"சொல்லியிருக்கணும்" - அவரும் ஒத்துக்கொண்டார்.
"என்னைய ஏன்? உங்க ஊரிலேயே நிறைய பொண்ணுங்க... உங்க லெவலுக்கு..." முடிக்க முடியாமல் திணறினேன். அவர் என்னை குழப்பத்துடன் பார்த்தார். "க்ளீயரா கேளு" - ஒருவித இறுக்கத்துடன் சொன்னார்.
"இல்ல... உங்களுக்கு உடம்பு சரியில்லைங்கிறதுனால தான் என்னைய ச்சூஸ் பண்ணுனீங்களா?" - கேட்டுட்டேன்.
அவர் முகத்துல ஒரு நொடி, அடிபட்டது போல் ஒரு உணர்வு தோன்றி மறைந்தது. எனக்கு பாவமாக இருந்தது. ஏன்டா கேட்டோம் என்று நினைத்தேன்.
"எனக்கு உடம்பு சரியாதான் இருக்கு ரோஜா... இன்னும் எத்தனை தரம் நான் அதை சொல்லணும்?" - சிறு கோபம் வெளிப்பட்டது அவரிடம்.
எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துக்கொண்டே இருந்தது. இப்போது அவருடைய உடல்நிலைப் பற்றி தெரிந்ததும் அந்த தாழ்வுமனப்பான்மை அதிகமாகிவிட்டதை போல் உணர்ந்தேன். அதை தெளிவுபடுத்திக்கொள்ள எண்ணி "அப்புறம் ஏன் நான்?" என்றேன்.
"எனக்கு உன்ன பிடிச்சிருக்கு... ஐ லைக் யு" - தெளிவாக சொன்னார். எனக்கு நம்ப முடியல... ஆனால் சந்தோஷப்பட்டேன்.
என்னைய மாதிரி ஒரு சாதாரண லோயர் மிடில்கிளாஸ் பெண்ணை ராஜகுமாரன் மாதிரி ஒரு பையன் வந்து பிடித்திருக்கிறது என்று சொன்னால் யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது. எதுவுமே பேச தோன்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டேன்.
அதற்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் அவர் என்னுடைய ஊருக்கு வருவார். ஊருக்கு என்றால் கிராமத்திற்கு அல்ல... என்னுடைய கல்லூரி இருக்கும் டவுனுக்கு வருவார். ஒவ்வொரு வெள்ளி இரவும் பெங்களூரில் புறப்பட்டு சனிக்கிழமை காலை இங்கு வந்துவிடுவார். சனி ஞாயிறு இரண்டு நாள் இங்கு இருப்பார். கம்ப்யூட்டர் கிளாஸ், லைப்ரரி, ஃபிரண்ட் வீடு என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு நானும் அவரை பார்க்க வந்துவிடுவேன். எங்காவது ஒதுக்குப்புறமாக அவருடைய காரில் அமர்ந்து ஒரு மணி நேரம் பேசுவோம். பிறகு வீட்டுக்கு ஓடி வந்துவிடுவேன். அந்த ஒரு மணி நேரத்திற்காக அவர் வாராவாரம் மாநிலம் விட்டு மாநிலம் காரில் பயணம் செய்வது எனக்கு பயமாக இருந்தது. வர வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கவில்லை.
அதன் பிறகு எனக்கு மெயில் ஐடி கிரியேட் செய்து கொடுத்தார். எப்படி மெசஞ்சரில் சாட் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். தினமும் கல்லூரி முடிந்து பிரவுசிங் சென்டர் சென்று அவரோடு சாட் செய்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்.
சில நாள் வீட்டுக்கு போன் செய்துவிடுவார். தோழி என்று சொல்லிவிட்டு ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்துவிடுவேன். இப்போதெல்லாம் வீட்டில் போனை நான்தான் அட்டென்ட் செய்வது. எங்கிருந்தாலும் ஓடிவந்து எடுப்பேன். என்னை யாரும் சந்தேகப்படுவதில்லை. அவ்வளவு தூரம் சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்ட பிள்ளையாக வளர்ந்திருந்தேன். ஆனால் இன்று நானே என்னுடைய பெற்றோருக்கு துரோகம் செய்கிறேன். குற்றவுணர்வு குத்தும். ஆனால் அவரை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவர் எனக்குள் கலந்துவிட்டார்.
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது. அவர் என்னை பேபி... ஹனி... என்றெல்லாம் கொஞ்சி அழைப்பார். அது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வாரமும் பெங்களூரிலிருந்து என்னை பார்க்க வரும் பொழுது ஏதாவது வாங்கிக்கொண்டு வருவார். அதையெல்லாம் பெற்றுக்கொள்ள எனக்கு பயமாக இருக்கும். வீட்டுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்! அப்பா என்ன நினைப்பாங்க! - நினைக்கும் போதே நெஞ்செல்லாம் பதறும். ஆனாலும் அவருடைய முகத்தில் ஏமாற்றத்தை பார்க்கப் பிடிக்காமல் பரிசுகளை பெற்றுக் கொள்வேன். அதை வீட்டில் மறைத்துவைக்க பெரும்பாடுபடுவேன். என்னை சங்கடப்படுத்த விரும்பாமல் அவர் பரிசுகளை குறைத்துக் கொண்டார்.
நான் கவலையோடு இருந்தால் அவர் எனக்கு ஆறுதல் சொல்வார். தைரியம் கொடுப்பார். என்னிடம் ஒரு வார்த்தைக் கூட தவறாக பேச மாட்டார். கண்ணியம் குறைவாக நடந்துகொள்ள மாட்டார். என்னை மரியாதையாக நடத்துவார். எனக்கு முக்கியத்துவம் கொடுப்பார். என்னை மதிப்பார். நாளுக்கு நாள் அவர் மீதான பைத்தியம் எனக்கு அதிகமாகிக் கொண்டே சென்றது.
அவர்தான் என்னுடைய வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். அவரோடு சேர்ந்து நிறைய புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்த புகைப்படங்களையெல்லாம் என்னுடைய மெயிலில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அவர் அருகில் இல்லாத சமயங்களில் அவரைப் பார்க்காத தோன்றினால் பிரவுசிங் சென்டர் சென்று அந்த படங்களை ஓபன் செய்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
எனக்கு கல்லூரி முடியும் காலம் வந்தது. இப்போது ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு இருவரும் வந்தோம்.
“வீட்ல எப்படி பேசுறது?” - நான் பயத்துடன் சொன்னேன்.
நீ இதை பற்றி எதையும் யோசிக்காதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் எனக்கு உறுதி கொடுத்தார்.
“என்ன செய்யப் போறீங்க” என்று நான் கேட்டேன்.
“மெடிக்கல் டெஸ்ட் எடுத்துட்டு ரிசல்ட்டுடன் வந்து அங்கிள்கிட்ட பேசறேன்” என்றார். எனக்கு அவர் சொல்வது சரியென்று தோன்றியது. அவருடைய ஆரோக்கியம் தானே பிரச்சனை. மெடிக்கல் டெஸ்ட் ரிப்போர்ட் சரியாக இருந்தால் அப்பா சந்தோஷமாக சம்மதித்துவிடுவார். எல்லாம் சுபமாக முடியும் என்கிற நம்பிக்கையுடன் அடுத்த வாரம் அவருடைய வரவுக்காக காத்திருந்தேன்.
என்னவோ தெரியவில்லை அந்த வாரம் அவர் என்னை பார்க்க வரவில்லை. அவருக்கு நான் மெயில் அனுப்பினேன். அவர் எனக்கு ரிப்ளை செய்யவில்லை. நான் தொடர்ந்து சாட்டிலும் மெயிலிலும் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அவருடன் பேசாமல் அவரை பார்க்காமல் அவரிடம் இருந்து எந்த தகவலும் தெரியாமல் எனக்குப் பைத்தியம் பிடித்தது. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. 24 மணி நேரமும் அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். காரில் செல்லும் பொழுது அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்று அஞ்சி நடுங்கினேன்.
என்னுடைய பயத்தையும் பதற்றத்தையும் என்னால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய எல்லாமுமாக இருந்தவர் திடீரென்று மாயமாகிவிட்டார். என்னை துயரம் ஆக்கிரமித்திருந்தது. இரவெல்லாம் அழுதேன். பகலெல்லாம் அவருக்காகக் காத்திருந்தேன். பைத்தியம் பிடித்தவள் போல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரவுசிங் சென்டருக்கு ஓடினேன். அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாமல் அழுதுகொண்டே திரும்பினேன். என்னுடைய விசித்திர நடவடிக்கை எல்லோர் கண்ணிலும் பட துவங்கியது. அப்போதுதான் அவரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. அடுத்த வாரம் அவர் என்னை பார்க்க வருவதாக எழுதியிருந்தார். போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது எனக்கு. ஏன் இப்படி செய்து விட்டார். ஒரு மாதம் என்னை உயிரோடு கொன்று விட்டாரே! அவர் மீது கோபம் பொங்கியது. ஆனால் அதைவிட அவரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல்தான் அதிகமாக இருந்தது.
சொன்னது போலவே அஸ்வின் என்னை பார்க்க வந்தார். நூலகத்திற்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு அவரைப் பார்க்க ஓடோடி வந்தேன். வழக்கமான இடத்தில் அவருடைய கார் எனக்காக காத்துக் கொண்டிருந்தது. யாரும் இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சட்டென்று அவருடைய காரில் ஏறி அமர்ந்தேன். டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த அஸ்வின் வேறு யாரோ போல் இருந்தார். அவர் அவராகவே இல்லை. அவரிடம் பழைய சிரிப்பும் உற்சாகமும் இல்லை. சோர்ந்து தெரிந்தார். எனக்கு வயிறெல்லாம் என்னவோ செய்தது... அவரை பார்த்ததுமே ஏதோ சரியில்லை என்று எனக்கு தோன்றிவிட்டது. அது என்ன என்று கேட்க பயந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். அவரும் எதுவும் சொல்லாமல் காரை ஸ்டார்ட் செய்தார்.
வழக்கமாக நாங்கள் ஊரைவிட்டு வெளியே செல்லமாட்டோம். ஆனால் இன்று அவர் என்னை ஊருக்கு வெளியே ஒரு சிறு நகரத்திற்கு அழைத்துச் சென்றார். எனக்கு அவரோடு செல்வதற்கு எந்த பயமும் இல்லை. அதனால் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
கார் வந்து நின்ற இடம் மிகவும் பணக்காரர்கள் வந்து செல்லும் இடமாக எனக்குத் தோன்றியது. இது போன்ற இடத்திற்கெல்லாம் நான் வந்ததே இல்லை. என்னை சேர்ந்தவர்களும் இங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த தைரியத்தில் காரில் இருந்து இறங்கினேன். அதற்குப் பிறகுதான் தெரிந்தது அது ஒரு ஸ்டார் ஹோட்டல். எதற்காக இங்கு அழைத்து வந்திருக்கிறார். யோசனையுடன் செல்ல நாய்க்குட்டி போல் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.
அறைக்குள் நுழைந்ததும் கையிலிருந்த எதையோ தூக்கியெறிந்துவிட்டு என் கையைப் பிடித்தார். நான் அவரை படபடப்புடன் பார்த்தேன். வேகமாக இழுத்து என்னை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவர் உடல் நடுங்குவதை நான் உணர்ந்தேன். பிறகு அவர் உடல் குலுங்கியது... அவர் அழுதார்... ஓவென்று சத்தமாக அழுதார்.
அவருடைய கண்ணீரை என்னுடைய கழுத்து தோள்பட்டை முதுகு எங்கும் உணர்ந்தேன் நான். என்னால் தாங்கமுடியவில்லை... என்னுடைய 'அவர்' அழுகிறார்... நானும் வெடித்து அழுதேன்...
என் மனம் ஏதேதோ எண்ணி பயந்தது. எனக்கு நன்றாக தெரிந்து விட்டது. என்னை நிலைகுலைய வைக்கும் ஏதோ ஒன்றை தான் சொல்லப் போகிறார். அதை தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை.
அவருடைய அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. என்னிடமிருந்து மெல்ல விலகினார். என் தோள்கள் இரண்டையும் பற்றியபடி என் முகத்தை பார்த்தார்.
“ப்ளீஸ் வேண்டாம்... எதுவும் சொல்லாதீங்க…. எனக்கு எதையும் தெரிஞ்சுக்க வேண்டாம். என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க…. என்னையும் கூட்டிட்டு போயிடுங்க. என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க. ப்ளீஸ்… என்னை கூட்டிட்டு போயிடுங்க...” - மீண்டும் கதறி அழுதேன்.
அவர் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது. “எனக்கு நீங்க இல்லாம இருக்க முடியாது. ப்ளீஸ்... என்ன விட்டுடாதீங்க” - கெஞ்சினேன். அவர் முகத்தில் துக்கம் குடிகொண்டது. என்னை இழுத்து முத்தமிட்டார். எங்கள் உதடுகள் நான்கும் சேர்ந்திருந்த தருணம் அப்படியே உறைந்து விடாதா என்று நான் ஏங்கினேன். ஆனால் விலகும் நேரம் வந்தது. அவர் என்னை விலக்கி நிறுத்தினார்.
“நா சொல்றத கேட்பல்ல?” - அவருடைய அமைதியான குரல் என்னை பயங்கரமாய் அச்சுறுத்தியது. உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“இனி எனக்காக நீ வெயிட் பண்ணக்கூடாது. என்னை மறந்துவிட்டு உன்னுடைய வாழ்க்கையை நீ வாழனும்” என்றார்.
எனக்கு அவருடைய பேச்சு பிடிக்கவில்லை... அவருடைய குரல் பிடிக்கவில்லை.... அவரையும் பிடிக்கவில்லை.... எப்படி இப்படி எல்லாம் பேசுகிறார்! எப்படி மனம் வருகிறது இவருக்கு! மனசாட்சியே இல்லையா…!! அவரை மறக்க வேண்டுமா! என்னால் எப்படி முடியும்…? அழுதேன்… கண்ணீர் வற்றும் வரை அழுதேன். என் உடம்பில் உள்ள சக்தி எல்லாம் ஆவியாகும் வரை அழுதேன். அவர் என்னை அழுக விட்டுவிட்டு ஒதுங்கி நின்றார். ஒருவழியாக நான் ஓய்ந்த பிறகு எனக்கு பழச்சாறு ஆர்டர் செய்து கொடுத்தார்.
நான் கோபத்துடன் மறுத்தேன். அவர் என் கையை பிடித்துக்கொண்டு, "ஐம் சாரி..." என்றார். அதை சொல்லும் பொழுது அவர் மனம் உள்ளுக்குள் அழுததை நான் உணர்ந்தேன்.
அவர் முகத்தை அப்படி என்னால் பார்க்க முடியவில்லை. இயலாமையுடன் குனிந்துக் கொண்டேன். அவர் எனக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி அந்த பழச்சாறை குடிக்கச் செய்தார். என்னுடைய உடைந்து போன மனதை தேற்ற ஏதேதோ பேசினார். எனக்கு எதுவும் காதில் ஏறவில்லை.
“உங்ககூட ஒருநாள் வாழ்ந்தாலும் போதும்” என்றேன் கண்ணீருடன். அவர் என்னை பார்த்து சோகமாக புன்னகைத்துவிட்டு, என் தலையில் கைவைத்து ஆட்டி “எனக்கு ஒன்னும் இல்ல. ஐம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” என்றார். அன்றுதான் நான் அவரை கடைசியாகப் பார்த்தது.
அதன்பிறகு அவரிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. நான் தினமும் அவருக்கு மெயில் அனுப்பி கொண்டே இருந்தேன். வெவ்வேறு டெலிபோன் பூத்தில் இருந்து அவருடைய அலைபேசிக்கு அழைத்துக் கொண்டே இருந்தேன். அந்த அலைபேசி எப்பொழுதுமே அணைத்து வைக்கப்பட்டிருந்தது. போன் நம்பரை மாற்றிவிட்டார் என்று தோன்றியது. ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்துடனேயே கழிந்தது. இந்த முறை அவருடைய பிரிவை தாங்குவதற்கு எனக்கு சக்தி போதவில்லை. உடல் சோர்ந்து அடிக்கடி காய்ச்சலில் விழுந்தேன். என் மனதிற்குள் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தை எனது குடும்பத்தினரோ தோழிகளோ சிறிதும் அறிந்திருக்கவில்லை. நடைபிணமாகவே சுற்றிக்கொண்டிருந்தேன். என்ன உண்டேன்… என்ன உடுத்தினேன்… எப்போது உறங்கினேன்… எப்போது சிரித்தேன்… எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால் உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். என்னை நான் மீட்டுக்கொள்ள முழுதாக ஒரு வருடம் ஆனது.
ஓராண்டிற்குப் பிறகு எனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தார்கள். அந்த திருமணத்திற்கு பயந்துகொண்டு நான் மேல்படிப்பிற்கு விண்ணப்பித்தேன். இரண்டு ஆண்டுகள் அதில் கழிந்தது. அடுத்து மீண்டும் வீட்டில் திருமண பேச்சு ஆரம்பமானது. அவருடைய நினைவுகள் என்னை சிதைத்து கொண்டிருந்தன. அது போதாதென்று இந்த திருமணப் பேச்சு வேறு... ஒரேடியாக செத்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்கும் ஒரு தைரியம் வேண்டும் அல்லவா. நான்தான் கோழை ஆயிற்றே… எதையும் சாதிக்க முடியாத கோழை… அழுதேன்… இரவெல்லாம் அழுது விட்டு மறுநாள் எழுந்து MPhil படிக்கப் போவதாக கூறினேன். வீட்டில் எல்லோரும் அதிர்ந்தார்கள். ஆனால் நான் எனது முடிவில் பிடிவாதமாக இருந்தேன்.
நான் ஏன் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறேன் என்று எல்லோரும் யோசித்தார்கள். திருமண உறவிற்கு நான் பயப்படுகிறேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். நான் வேறு ஒருவரை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று ஒருவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதனால் இன்னும் சற்று காலம் போகட்டும் என்று எனக்காக விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் எவ்வளவு காலம் விட்டுக்கொடுப்பார்கள். MPhil முடிந்ததும் மீண்டும் திருமண பேச்சு வீட்டில் ஆரம்பமானது. அப்போதும் நான் மறுத்தேன். ஆனால் இந்த முறை யாரும் என்னுடைய மறுப்பிற்கு செவிசாய்க்கவில்லை.
எனக்குப் பின் ஒரு தங்கையும் தம்பியும் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைக்கு நான் தடையாக இருக்கிறேன் என்பதை எனக்கு நாசுக்காக உணர்த்தினார்கள்.
திருமணத்திற்கு சம்மதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லாமல் போனது. அவரை மறக்க வேண்டும் என்றால் அவரைவிட எல்லாவிதத்திலும் உயர்ந்தவராக ஒருவர் வந்தால் ஒருவேளை என்னால் அவரை மறக்க முடியுமோ என்று எண்ணினேன். அதனால் அதற்கு தகுந்தாற்போல் மாப்பிள்ளை பார்க்கும் படி என்னுடைய பெற்றோரை மறைமுகமாக நிர்பந்தப்படுத்தினேன். அதில் ஒரு நல்ல விஷயம் நடந்தது. மாப்பிள்ளை அமையாமல் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் எனது தந்தை பிடிவாதமாக ஒரு வரனை எனக்கு முடிவு செய்துவிட்டார். அன்று இரவு என் மனம் பட்ட வேதனைக்கு அளவே இல்லை. அவரை (அஸ்வினை) திட்டித் தீர்த்தேன். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சாமியிடம் ஓடிப்போய் வேண்டினேன். என்னுடைய திட்டுகள் எதுவும் பலித்து விட கூடாது என்று மன்றாடினேன். இந்த துன்பம் எப்போது எனக்கு தீரும்? தெரியவில்லை…
திருமணம் முடிவானதிலிருந்து அவரைப்பற்றிய சிந்தனைகள் அதிகமாகிவிட்டது. வேண்டாம் வேண்டாம் என்று நினைக்க நினைக்க தான் நினைவுகள் என்னை துரத்திக் கொண்டே இருந்தன. அவர் ஏன் என்னை பார்க்க வந்தார்… ஏன் என்னோடு பேசினார்… ஏன் பழகினார்… பிறகு ஏன் என்னை விட்டுச் சென்றார்… நான் தவியாய் தவித்தேன். என்னை தாங்கி ஆறுதல் சொல்ல அவர் அருகில் இல்லை... தலையணையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இரவெல்லாம் அழுதேன்.
மீண்டும் ஒருமுறை என்னை பெண் பார்க்க வந்தார்கள். அவர் வந்த நாளன்று என் மனதிற்குள் தோன்றிய எந்த உணர்வும் இன்று எனக்கு தோன்றவில்லை. இந்த மாப்பிள்ளை என்னிடம் சகஜமாகப் பேசினார். நானும் அவரிடம் சகஜமாக பேசினேன். ஏதோ ஒரு கல்லூரி தோழனிடம் பேசுவது போல்தான் இருந்தது. அவருடன் பேசியபோது ஒருவித மெல்லிய உணர்வு என்னை ஆக்கிரமித்திருந்ததே... அது போன்ற எந்த உணர்வும் இப்போது என்னிடம் இல்லை. அவர் என்னை விட்டு செல்லும் பொழுது என்னுடைய இளமை உணர்வுகளையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டார். நான் இப்போது ஒரு மொட்டை மரம். எனக்கு பூச்சூட்டி அலங்காரம் செய்கிறார்கள். நானே பூத்துக் குலுங்குவது போல ஆகுமா இந்த பூ அலங்காரம்! - என்னை நானே கேட்டு கொண்டேன். என்னுடைய மனம் இங்கு யாருக்குமே புரியவில்லை.
புரிய வேண்டாம்... விட்டுத்தள்ளுங்கள்… காலம் அடித்துச் செல்லும் திசையில் எங்கோ சென்று தொலைகிறேன். வெறுப்புடன் மணவறையில் அமர்ந்தேன். தாலி கட்டிக் கொண்டேன். என் கணவரோடு வாழ்ந்தேன். இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தேன். அதில் மூத்தவன் பெயர் அஸ்வின். அவனுக்கு நான்தான் பெயர் வைத்தேன். அவன் அவரைப் போலவே இருப்பதாக எனக்குத் தோன்றும். அவனை ஒரு நல்ல ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தேன். அவன் ஆங்கிலத்தில் பேசும் பொழுது அவரைப்போலவே பேசுகிறான் என்று எண்ணுவேன். அவன் சிரிக்கும் பொழுது பளிச்சென்று தெரியும் அவனுடைய பற்கள் எனக்கு அவரை நியாபகப்படுத்தும்.
நான் ஒரு அஸ்வினை வளர்க்கிறேன். எனக்கு கொடுப்பினை இருந்தால் அவரிடமும் ஒரு ரோஜா வளர்வாள். அந்த ரோஜாவை தேடி கண்டுபிடித்து இந்த அஸ்வினுடன் சேர்ப்பேன். வழக்கம் போல இந்த எண்ணம் என் மனதிற்குள் உருண்டு கொண்டிருக்க மடிக்கணினியை திறந்து பேஸ்புக்கை ஓபன் செய்தேன். சர்ச் பாக்ஸில் நான் கர்சரை வைத்தவுடன் ஆட்டோ சஜஷனில் முதல் பெயராக "அஸ்வின் ராகவேந்திரா" வந்தது. 15 வருடங்களாக நான் தேடிக் கொண்டிருக்கும் பெயர். இன்றாவது நான் தேடும் நபர் எனக்கு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.
- நான் ரோஜா…!!!