அத்தியாயம் 3
சென்னை நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு ஃப்ளாட் நிரஞ்சனுடையது. நிரஞ்சன் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு வருடமாய் பாண்டி அவனோடு தான் தங்கியிருக்கிறான். கல்லூரி காலம் தொட்டு நிரஞ்சனின் நெருங்கிய நண்பன் அழகர் பாண்டி மட்டுமே. நிரஞ்னின் தாய் தந்தையரின் மறைவிற்கு பின் இங்கே இருக்க முடியாமல் தவித்த நிரஞ்சன் அதற்கு முன்பே வந்த வெளிநாட்டு வாய்ப்பை ஏற்றுக்கொண்டு வெளிநாடு சென்று விட பாண்டி மட்டும் இங்கேயே தொடர்ந்தான். ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் இருந்த போதும் தினமும் பாண்டி மட்டுமே அவன் தொடர்பில் இருந்தான் நிரஞ்சனின் அத்தனை விஷயங்களும் பாண்டிக்கு மட்டுமே தெரியும். நண்பனின் கோபம், ஆற்றாமை, சோகம், விருப்பு,வெறுப்பு என அத்தனையிலும் பாண்டி உடன் இருந்தான். பாண்டியை போல் எப்பொழுதுமே உடன் இருக்கவில்லை என்றாலும் கூட நிரஞ்சனின் நலம் விரும்பியாய் அவனுக்கு சில நண்பர்களும் இருந்தார்கள்.
அருண், தீப்தி, சரண்யா, அலென்னா, ரியாஸ், செல்வகுமரன் இவர்கள் மட்டுமே நிரஞ்சனின் நட்பு வட்டம். பாண்டிக்கு நன்றாகவே தெரியும் வேறு யாரோடும் நண்பனுக்கு ஒத்து போகாது என்று. அப்படியிருக்க இவளை எப்படி அவனுக்கு அறிமுகபடுத்துவதென்று அரண்டு போய் அமர்ந்திருக்க "ஹாய் பாண்டி.." என்று கோரஸாய் அந்த நட்பு வட்டம் வந்து சேர்ந்தது.
பர்முடாஸ் டீசர்டில் ஆண்களும், பெண்களுமாய் பாண்டிக்கு ஹாய் சொன்னதிலேயே அது பாண்டியின் நண்பர்கள் என்று முடிவெடுத்த சிட்டு "ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ஐம் பூஞ்சிட்டு.." என்று அவளாகவே அவளை அறிமுகம் செய்து கொண்டாள்.
"பூஞ்சிட்டு.." என்று கோரஸ்ஸாய் ஆச்சர்யபட்டவர்களை
"எஸ்..." என்று தன் பேன்டை இருகைகலாலும் விரித்து பிடித்து ஸ்டைலாய் அவள் பாவனை செய்ய அனைவர் முகத்திலும் சிரிப்பு.
"ஹே சோ க்யூட்... ஹாய் பூஞ்சிட்டு.." என்று எல்லோரும் அவளுடன் ஐக்கியமாக
'எல்லாரையும் ஒரே பேச்சில கவுத்திடுவா... ஆனா அவன் கிட்ட வேலைக்கு ஆகாதே..' என்று எண்ணியவன்
"ஹே ஃப்ரெண்ட்ஸ் இவதான் என் ப்ரெண்ட் சிட்டு நான் சொல்லிருக்கேனே..." என்று பாண்டி நினைவூட்ட
"எது அந்த உண்டிவில்லா..." என்று ரியாஸ் குரல் கொடுக்க
"அவளே தான்.." என்றான் பாண்டி.
"ஹேய் சூப்பர்டா.." என்று பெண்கள் கூட்டம் அவளை சூழ்ந்து கொள்ள ஆண்கள் கூட்டத்தை தனியாக தள்ளிக் கொண்டு வந்த பாண்டி
"சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்துட்டா இங்கதான் இருப்பேன்னு வேற சொல்றா இப்ப நம்ம கிளம்புற நேரத்துல இவளை என்னடா செய்யறது இந்நேரத்துக்கு எங்க அனுப்புறது இதுல நம்ம கூட ட்ரிப் வரேன்னு வேற ரெடி ஆகுறா..." இன்று புலம்ப
"நம்ம கூட ட்ரிப்பா ஏய் செம டா.." என கண்களை விரித்தான் அருண்.
"கூட்டிட்டு போலாம் டா அதனால என்ன அவ ஒருத்தி தானே.." என்றான் செல்வகுமாரன் என்ற செல்வா
"டேய் நிரஞ்சனை மறந்துட்டு பேசுறீங்க.."என்று பாண்டி கூற
"ஆமாடா இவளை பத்தி பாண்டி ஏற்கனவே நம்ம கிட்ட சொல்லி இருக்கான்ல இவ ஏதாவது செய்ய போக நிரஞ்சன் டென்ஷன் ஆயிடுவான் அப்புறம் அவன யார் சமாளிக்கிறது. ஆனா இப்ப இவளை எங்கே அனுப்ப முடியும்.." என்றான் வருத்தத்தோடு ரியாஸ்
"கொஞ்சம் சீக்கிரமா வந்திருந்தா கூட நம்ம ஆபீஸ் கேர்ள்ஸ் பிஜியில தங்க வச்சிருக்கலாம் ஆல்மோஸ்ட் மணி பத்தாக போகுது இதுக்கு மேல அதுவும் பண்ண மாட்டாங்க இப்ப என்ன செய்யறது..." என்று கேள்வி எழுப்பினான் அருண்.
"அதான் எனக்கு ஒன்னும் புரியல.." என்ற குழம்பி போய் நின்றான் பாண்டி.
அதற்குள் பெண்கள் பக்கம் இருந்து ஒரே
சிரிப்பும் கும்மாளமுமாய் சத்தம் கேட்க "ஆரம்பிச்சுட்டாடா எப்படிடா இவளை சமாளிக்கிறது..." என்று பாண்டி திருதிருவெனம விழிக்க
"ஆனாலும் நீ ரொம்ப பாவம்டா பாண்டி.." என்று நமட்டு சிரிப்போடு ரியாஸ் கூறினான்.
"நீ சொன்னப்ப எல்லாம் இப்படி ஒரு ஆளு இருக்குமான்னு யோசிச்சேன் டா இப்ப நேர்ல பார்த்ததுமே தெரிஞ்சு போச்சு. அதுவும் இவளை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போனோம் நிரஞ்சன் கிட்ட நீ என்ன ஆவேன்னு யோசிச்சா தான் பயமா இருக்கு.." என்று அவுட்டு சிரிப்பு சிரித்தான் செல்வா.
"டேய் அவனே என்ன செய்யறதுன்னு தெரியாம முழிக்கிறான் நீங்க வேற ஏண்டா அவனை இன்னும் பயமுறுத்துறீங்க.." என்ற அருண்
"பாண்டி பேசாம நிரஞ்சன் கிட்ட சொல்லிட்டு அவளையும் நம்ம கூட கூட்டிட்டு போலாம் இந்த நேரத்துல அதுவும் அவளுக்கு ஆள் தெரியாத புது ஊர்ல அவள விட்டுட்டு போறது அத்தனை சரியா எனக்கு படல. நாம யாராவது இங்க இருந்தா கூட அவளை இங்க விட்டுட்டு போறது நல்லது ஆள் தெரியாத ஊர்ல அவ தனியா என்ன செய்வா..? அவளும் நம்ம பிரண்டு தானே கூட்டு போலாம்டா.."
"டேய் எனக்கு மட்டும் என்ன ஆசையா.. நிரஞ்சனை எப்படிடா சமாளிக்கிறது."
"நாம பேசலாம் டா.." என்றான் செல்வா.
"ஹேய்..." என்று பெண்கள் புறம் இருந்து கூச்சல் கேட்க
"பாரு பார்த்து அஞ்சு நிமிசத்துல அவ கூட்ற அலப்பறைல இவங்களும் கத்துறதை..."என்று பாண்டி சலித்துக்கொள்ள
"டேய் ஜாலியா என்ஜாய் பண்ணா தானே ட்ரிப் எப்பவும் இப்படி ஒரு ஆள் கூட இருந்தா அது இன்னும் செமையா இருக்கும் டா.." என்றான் ரியாஸ்
"என்னடா சிட்ட பார்த்ததுல இருந்து உன் கண்ணுல ஒரு பல்பு எரியுது.." என்று அவனை கலாய் தான் செல்வா
"அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்ல அவ நல்ல ஜாலி டைப் பாண்டி சொல்லி கேட்டு இருக்கோம்ல அவ வந்தா இந்த ட்ரிப் இன்னும் ஜாலியா இருக்கும்னு நினைக்கிறேன் அவ்வளவுதான்.." என்றான்
"சரி நிரஞ்சன் கிட்ட பேசுவோம்.." என்றான் அருண்.
நால்வரும் விவாதித்துக் கொண்டே கலகலத்து கொண்டிருந்த பெண்களின் புறம் வந்தனர்.
"அலென்னா இவளை உன் ப்ளாட் கூட்டிட்டு போய் ரெப்ரெஷ் ஆக வெச்சிட்டு அவ லக்கேஜ் வைங்க நாங்க நிரஞ்சன்ட்ட பேசிட்டு கால் பண்றோம்..." என்று அருண் கூற
"ஏன்டா உன் ரூம் என்னாச்சு. வாடா அங்கேயே ரெப்ரெஷ் ஆகிக்கறேன்.." என்று சிட்டு அவனை இழுக்க
"அது சரி... பாண்டி நீ தொலஞ்சடா .."என்றான் செல்வா.
"சிட்டு இப்போ நீ இவங்களோட போயி ரெஃப்ரெஷ் ஆகு. நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன்..' என்றபடி அவளை அவர்களோடு அனுப்பி வைத்துவிட்டு இவர்கள் நால்வரும் நிரஞ்சனிடம் வந்தனர்.
அருண் மெல்ல விசயத்தை கூற லேசாய் புருவமுயர்த்தி பாண்டியை பார்த்தான் நிரஞ்சன்.
"ஏன்டா உன்னோட பிரண்ட் தானே அதை நீயே நேரடியா என்கிட்ட சொல்றதுக்கு என்ன..? அது என்ன உனக்கு தூதுக்கு ஒரு ஆளா.." என நிரஞ்சன் கடிந்து கொள்ள
"அவளைப் பற்றி அவனுக்கு தானே தெரியும் அதனால தானே பயபுள்ள பம்முது..." என்று முனுமுனுப்பாய் செல்வாவின் காதை கடித்தான் ரியாஸ்.
"சும்மா இர்றா அவனுக்கு கேட்ற போகுது.." என்று எச்சரித்தான் செல்வா.
"ஆனா ஒன்னு டா இந்த ட்ரீப் செம்மயா போக போவுது அது மட்டும் தெரியுது.." என்றான் ரியாஸ் வாய்க்குள்ளேயே சிரிப்பை அடக்கிக் கொண்டு
"இல்லடா உனக்கு பிடிக்காதே அதனாலதான்.." இன்று பாண்டி வார்த்தைகளை மென்று முழுங்க
"இந்நேரத்தில் ஒரு பெண்ணை தனியே விட்டுட்டு வா என்று சொல்லும் அளவுக்கு நிரஞ்சன் கொடூரன் இல்ல... பரவால்ல கூட்டு வாங்க..." என்று விட்டு அவன் போக்கில் லக்கேஜை எடுத்துக் கொண்டு
"சரி கிளம்புங்க.." என்று கூற அத்தனை பேரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு அவனை நோக்கினர்.
அதே அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு பிளாட்டில் அலென்னாவும் தீப்தியும் இருந்தனர். இருவரும் வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்தவர்கள். ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் உள்ளே ஒரு இதமான நட்பு உருவாக இருவரும் சேர்ந்து அந்த பிளாட்டில் தங்கி இருந்தனர் சரண்யா சென்னையை சேர்ந்தவள் என்பதால் அவள் வீட்டில் இருந்து அலுவலகம் வருவாள். விடுமுறை நாட்களில் எல்லாம் இவர்கள் இருவரோடு சேர்ந்து கொள்வாள்.
சொன்னபடி பத்தே நிமிடத்தில் பூஞ்சிட்டு தயாராகி வர அனைவரும் ஆச்சரியத்தோடு அவளை நோக்கினர். எழுமிச்சை மஞ்சள் நிறத்தில் டி சர்ட் அதில் கறுப்பு பச்சை வண்ணத்தில் you go man y me என்ற ஆங்கில எழுத்துக்களோடு வடிவேலு படமிருந்தது. கறுப்பு வண்ண பேண்ட் பேகி ஜீன். சுருண்ட அவள் கூந்தலில் ஈரம் சொட்ட எந்தவித ஒப்பனையுமின்றி அவள் அழகாயிருக்க
அவளை பார்த்த பெண்கள் எவ்வித பொறாமையுமின்றி "ஹேய் அழகாருக்க சிட்டு.." என்றனர் அவளை பார்த்து
"ச்சீ போங்கள்..." என்று வெட்கப்படுவதை போன்று இருகைகளாலும் முகத்தை மறைத்து கொள்ள
"அடடா வெட்கமா மேகல..." என்றாள் சரண்யா
"அது யாரு மேகல... நான் சிட்டு பூஞ்சிட்டு.." என்றாள் இல்லாத காலரை தூக்கி விட்டபடி.
அவள் டீ சர்டின் வாசகத்தை பார்த்துவிட்டு சிரித்த தீப்தி
"ஹேய் நிஜம்மாவே இவ யுனிக் பீஸ்டி.." என்றாள்.
"இதெல்லாம் சாம்பிள் கண்ணா.... நம்ம ரேஞ்சே வேற.." என்று ரஜினி ஸ்டைல் காட்டியபடியே அவள் தலையை துவட்டி ஒரு க்ளிப்பை மாட்ட அந்த க்ளிப்பிற்குள் அவள் கூந்தல் அடங்க மறுத்தது அவளைப் போலவே.
அதற்குள் பாண்டி அலென்னாவின் அலைபேசிக்கு அழைத்தான்
"ஓகே பாண்டி வந்துடறோம்.." என்று கூறி வைத்தாள் அலென்னா.
மளமளவென அவள் உடைகளை சிலதை எடுத்து வேறு பைகளுக்குள் திணித்துக் கொண்டு சிட்டுவும் கிளம்பி வீட்டை பூட்டிவிட்டு அவர்கள் லிஃப்ட் ஐ நோக்கி செல்ல
"ஹேய் நான் படியில் வர்றேன் நீங்க வாங்க..." என்றபடியே படியை நோக்கி ஓடினாள் பூஞ்சிட்டு.
அவளை வித்தியாசமாய் பார்த்தபடியே இவர்கள் லிப்டினுள் நுழைய அங்கே படியின் கம்பிகளில் சறுக்கியபடி இறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
வில்லங்கத்தை நாமே விலைக்கு வாங்கியிருக்கிறோம் என்று அறியாமலேயே கிழே வந்திருந்தான் நிரஞ்சன்.
படிகள் முடியும் இடத்திற்கு சற்று தள்ளிதான் லிப்ட்ன் வாயில் இருந்தது.
வெளியே வந்து நின்று அவன் டிராலி பேக்கை நகர்த்திக்கொண்டிருக்க
"ஹேய்.." என்ற உற்சாக கூச்சலோடு கடைசி படிகட்டுகளில் இறங்கிவள் லிப்டில் இருந்து வெளியே வந்து நின்று ஏதோ சத்தம் கேட்கிறதே என்று திரும்பிய நிரஞ்சனின் மீது மோதி நின்றாள்.
அப்படி ஒரு காட்சியை எதிர்பார்த்திராத நிரஞ்சன் அதிர்ந்து நோக்க அவன் மேல் மோதி நின்றவள்
"யார்ரா அது குறுக்க வந்துட்டு..." என்று அவனை நிமிர்ந்து நோக்கினாள்.
வருவாள்....