கவிதை 11
பூஞ்சிட்டுவிற்கு பெரிதாய் ஏதுமில்லை என்று மருத்துவர் கூற எல்லோருக்கும் நிம்மதியாய் போயிற்று.
சரண்யா எடுத்து வந்திருந்த ஆடைகளில் அவளுடைய பேண்ட்டை மட்டும் அலென்னா அணிவிக்க அவர்கள் கொண்டு வந்திருந்த ஜெர்கினை நிரஞ்சன் அணிந்துகொண்டான். சிறிது நேரத்தில் முனகியபடியே எழுந்தாள் சிட்டு.
கண்விழித்த பின்பு தான் உயிரோடு இருக்கிறோம் என்று உணர்ந்தாள் சிட்டு.
"உசுரோட தான் இருக்கேனா..." என்று மலங்க மலங்க விழிக்க
"சிட்டு ஆர் யூ ஆல்ரைட்.." என்ற அலென்னாவை பார்த்தாள். சுற்றும் முற்றும் பார்த்து
"ஆஸ்பிடலா இது.." என்றவாரே படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
அதே நேரம் உள்ளே வந்த மருத்துவர் மீண்டும் சிட்டு வை பரிசோதித்து விட்டு "ஷீ இஸ் ஆல்ரைட்... அட்டை கடிச்சா சிலருக்கு தடிப்பு அலர்ஜி ஆகும். அதுக்கு மட்டும் இஞ்செக்சன் போடறேன். சிராய்ப்பு காயத்துக்கெல்லாம் ஆயின்மென்ட் தர்றேன் வேற ஒன்னும் தேவைப்படாது.." என்று கூற
"அய்யோ..." என்று அலறினாள் சிட்டு. அவள் அலறலில் என்னவோ ஏதோவென்று பாண்டி, நிரஞ்சன், ரியாஸ் மூவரும் மருத்துவரின் அறைக்குள் ஓடி வந்தனர்.
"என்னாச்சு.." என்று பாண்டி பதட்டத்துடன் கேட்க
"ஊசி போடறேன்னு டாக்டர் சொன்னாரு அதுக்கு தான் கத்தறா.." என்று விளக்கினாள் அலென்னா.
"டாக்டர் ப்ளீஸ் டாக்டர் ஊசி மட்டும் வேணா... மாத்திரை குடுங்க டாக்டர் போதும்.." என்று சிட்டு அலற
மருத்துவருக்கே சிரிப்பு வந்துவிட்டது. "ம்மா அட்டை நிறைய கடிச்சிருக்கு அலர்ஜி ஆச்சுன்னா வருசமானாகூட அந்த புண் சரியாகாது.." என்றவாறே மருந்தை சிரிஞ்சில் ஏற்ற
படுக்கையில் இருந்து இறங்க முடியாமல் இறங்க போனவளை ஓடிவந்து பிடித்துக்கொண்டான் பாண்டி.
"டேய் வந்து இவளை பிடிங்கடா இல்லேனா இன்ஜக்சன் போட்டுக்க மாட்டா.." என்று நண்பர்களையும் அழைக்க
"டேய் விட்றா எரும மாடே எனக்கு ஊசி வேண்டாம். அய்யோ என்னை சாகடிக்கறாங்களே.." என்று கத்தினாள் சிட்டு.
"இவ என்ன ஊசிக்கு இந்த கத்து கத்தறா.. ஏய் சிட்டு ஒன்னும் செய்யாது மா போட்டுக்க.." என்று ரியாஸ் கூற
"எனக்கு தானே போடறாங்க உனக்கா போடறாங்க போடா.." என்று அவள் கத்தினாள். எல்லாரும் சேர்ந்து சமாதானம் செய்து அவள் பிடித்த பிடிவாதத்தில் நிற்க
"ஏய் ஸ்ஸ்ஸூஊஊஊ சத்தமில்லாமல் படுக்க போறியா இல்லையா..? ஆழாக்கு மாதிரி இருந்துட்டு எல்லாரையும் டென்ஷன் பண்ணிட்டு இருக்க... ஓங்கி ஒன்னு வெச்சேன்னு வை.. பேசாம படு.." என்று ஒரே அதட்டாய் சப்தமாய் நிரஞ்சன் அதட்ட
"வலிக்கும்.." என்று கண்களில் நீர் கோர்த்தாள்.
"அதெல்லாம் லேசா தா வலிக்கும் பேசாம படு.. எழுந்த கொன்றுவேன் பார்த்துக்கோ.." என்று அதட்டி மிரட்ட கப் சிப்பென அடங்கினாள்
"வலிக்கறது எனக்கு தானே... உனக்கா வலிக்குது.." என்று முனங்கியபடுயே படுத்துக்கொண்டவள் "இங்கேயே இருடா.." என்று பாண்டியின் கைகளை இறுக பிடித்துக்கொண்டாள்.
"எதுக்கும் நீங்க இங்கேயே இருங்க சார். இன்ஜெக்ஷன் போடும் போது இவங்க எழுந்து ஓடினா நீடில் உடைந்து உள்ளே நின்று போய்டும் அப்புறம் அவங்களுக்கு தான் ரிஸ்க்.." என்று மருத்துவர் கூற
"அவ என்னை மீறி ஓடமுடியாது டாக்டர். நீங்க போடுங்க..." என்று அவள் அருகிலேயே திரும்பி நின்றான் நிரஞ்சன்.
மருத்துவர் இரண்டு ஊசிகளை இருபக்க பிட்டத்திலும் போட "அய்யோ... அம்மா.." என்ற அவள் அலறிய அலறில் அந்த பிரதேசமே அதிர்ந்தது. குழந்தை போல் அழுது தேம்பியவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் பாண்டி.
"ஆமா பச்சை குழந்தை இவ... பல்லை தட்டி தொட்டில்ல போட்டு தாலாட்டு. ஏய் முதல்ல அழுகையை நிறுத்து.." என்று அவளை மீண்டும் நிரஞ்சன் அதட்ட
"போடா கொரில்லா கொரங்கே... என்னை தள்ளியும் விட்டுட்டு, ஊசியும் போட வெச்சுட்டு.. திட்றியா..." என்று அழுதவாறே கேவியவளை பார்த்து அந்த சூழ்நிலையையும் மீறி அனைவருக்குமே சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
"இனி பயப்பட தேவையில்ல நல்லா தூங்குவாங்க.. ரெஸ்ட் எடுக்கட்டும் எல்லாம் சரியாயிடும் காயத்துக்கு மட்டும் மருந்து போடுங்க ஒரு ரெண்டு நாள் மெடிசன் கொடுத்து இருக்கேன் சாப்பிடட்டும்.." என்று மருத்துவர் கூறியதும் அவருக்கான பணத்தை கொடுத்துவிட்டு எல்லாரும் வெளியேற அவளை மெதுவாய் படுக்கையில் இருந்து இறக்கி அலென்னா ஒரு புறமும் பாண்டி ஒருபுறமமாய் பிடித்து அழைத்து வர இறங்கி நடந்து வந்தவளை பார்த்து ரியாசுக்கும், அருணுக்கும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
நிரஞ்சன் ஜெர்க்கினை அவள் போட்டிருக்க அவள் உருவத்திற்கும் உடலுக்கும் பொருந்தாமல் சோளக்கொள்ளை பொம்மை போல் அது முழங்கால் வரை நீண்டு கை பகுதிகள் இரண்டும் கையை தாண்டி தொங்கிக் கொண்டிருந்தது.
அவளை கவனிக்காத நிரஞ்சன் "இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க அவளை உயிர் பிழைச்சு வந்திருக்கா.. இந்த நேரத்தில் சிரிக்கிறதா.." என்று நண்பர்களை கடிந்து கொண்டான்.
"கொஞ்சம் நீயே திரும்பி அவளை பாரேன்.." என்று அருண் கூற திரும்பி அவளைப் பார்த்தான் நிரஞ்சன். ஒரு சிறிய குழந்தை தன் தகப்பனின் பெரிய சட்டையை போட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் தெரிந்தாள் சிட்டு. அவள் மெல்லிய உடல்வாகிற்கு நிரஞ்சனின் ஜெர்கின் அத்தனை பெரிதாக இருந்தது. அவளை பார்த்ததும் தானாய் நிரஞ்சனுக்கு புன்னகை பூத்தது.
எல்லாரும் சிரிப்பதை கண்டு தன்னை குனிந்து பார்த்தவள் "யார்டா இதை மாட்டினா எனக்கு.." என்று தன் கை இரண்டையும் உயர்த்த
"அசல் சோளக்கொல்ல பொம்ம தான். ஏன் டாக்டர் உங்க ஆஸ்பிடலுக்கு திருஷ்டி பொம்மை ஏதும் வேணும்னா இந்தா இதை தூக்கி மாட்டி விடுங்க.." என்று கூறி அருண் சிரிக்க
"இருடீ உனக்கு இருக்கு.." என்றவாறே
அவனை முறைத்தாள்.
ஒருவாறு களேபரம் அடங்கி அவளை அழைத்துக்கொண்டு ரிசார்ட் வந்து சேர்ந்தனர்.
இறங்கி ரியாஸூம் பாண்டியும் ஆளுக்கொரு புறமாய் பிடிக்க போக "எனக்கு ஒன்னும் இல்ல என்னை விடுங்கடா.." என்று தடுத்துவிட்டு இரண்டெட்டு நடக்க லேசாய் தடுமாறினாள்.
"ஏய்.." என்றபடி சட்டென்று தாங்கி பிடித்தான் நிரஞ்சன்.
"என்னடா காலு ப்ரேக் டான்ஸ் ஆடுது..." என்றாவாறே அவன் கைகளை இறுக பற்றிக்கொண்டாள்.
"டேய் பாண்டி முதல்ல இந்த குட்டி பிசாசை தூக்கிட்டு போய் அவ ரூம்ல கடாசிட்டு வாடா..." என்றான் நிரஞ்சன்.
அவளை பார்த்த பாண்டி "உனக்கே முடியலேல்ல அப்புறம் எதுக்கு இந்த வேலை உனக்கு.." என்றவாறே அவளை தூக்க வந்தான்.
"இல்ல நானே நடக்கிறேன் நீ கையை மட்டும் பிடிச்சிக்கோ.." என்று அவன் கை பற்றியபடி அவர்களின் அறைக்கு சென்றாள்.
இப்பொழுது தான் எல்லோருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது. நிரஞ்சனுக்கோ உயிரே போய் வந்தது போல் உணர்ந்தான். அவள் உயிருக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் அவன் தன்னையே மன்னித்திருக்க மாட்டான். இரண்டு உயிர்களை பறிகொடுத்தவன் ஆயிற்றே தளர்வாய் அவன் அறை சென்று அவன் படுக்கையில் விழ
"ரொம்ப பயந்துட்டயா.." என்றான் செல்வா அவன் நிலை உணர்ந்து.
மௌனமாய் தலையசைத்தான் நிரஞ்சன்.
"ரிலாக்ஸா இரு நிரஞ்சா. அவளுக்கு தான் ஒன்னும் இல்லேல்ல.." என்றான் அருண்.
பாண்டியும் வந்து ஆசுவாசமாய் படுக்க "ஏன்டா பாண்டி சிட்டுன்னா உனக்கு அவ்ளோ புடிக்குமாடா அப்படி பதறி உடைஞ்சு போய்ட்ட..." என்று ரியாஸ் கேட்க
"என்னோட எட்டு வயசுல வள்ளியத்த சிட்டுவை என் கைல கொடுத்தாங்க. அப்போருந்து இப்ப வரை அவ என்னோட உசிரு. சென்னைக்கு நான் வேலைக்கு வரும் வரை ஒரு நாள் கூட அவளை விட்டு பிரிஞ்சதில்ல..."
"அவளை நீ லவ் பண்றியா.." என்று திரும்பவும் பாண்டியை பார்த்து கேட்டான் ரியாஸ்.
"ஏய் ச்சீ அவ எனக்கு குழந்தை மாதிரி. எனக்கு கூட பிறந்த தங்கச்சி கிடையாது. ஒரு தங்கையா, ஒரு தோழியா குழந்தையா பழகுன ஒருத்திட்ட எப்படிடா.. எங்களை பார்த்தா உனக்கு அப்படியா தெரியுது.." என்று பாண்டி கோபத்தோடு கேட்க.
"இல்லடா.. நீ ரொம்ப எமோஷனல் ஆன அதான் அப்படி கேட்டேன். சாரி.." என்றான் ரியாஸ்.
"ஏன்டா.. நீ லவ் பண்ணலாம்னு இருக்கியா.." என்று அருண் ரியாஸை பார்த்து கேட்க.
"ஏய் ச்சீ.... எனக்கும் பாண்டி சொன்ன மாதிரி எண்ணம் தான் அவ மேல் வந்தது. அப்படில்லா தோணவேல்ல .."என்றான்.
"அவ்ளோ நல்லவனா டா நீ.." என்று செல்வா கலாய்க்க
"டேய் அமைதியா படுங்க டா..." கொஞ்ச நேரமாவது தூங்கலாம் என்று நிரஞ்சன் அதட்ட எல்லோரும் படுக்கைக்கு சென்றனர். அமைதியாய் படுங்க என்று சொன்ன நிரஞ்சன் தான் அமைதியை இழந்து தவித்தான்.
அவன் கடந்த கால வாழ்க்கை கண்முன்னே வந்து போனது. என்ன முயன்றும் அவனால் உறங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்தவனால் படுக்கவே முடியாமல் எழுந்து ஜெர்கினை அணிந்து கொண்டு வெளியே வந்தான். இலக்கற்று இருளை வெறித்தபடி நின்றபடி கடந்த காலத்தை அசைபோட்டான்.
எத்தனை ஒற்றுமையான தம்பதிகள் தன் பெற்றோர். அவர்களை போல் தானும் ஒரு பெண்ணை நேசித்து கை பிடிக்கவேண்டும் என்று எண்ணும் அளவிற்கு அல்லவா அவர்கள் காதல் இருந்தது.
அவர்கள் சண்டையிட்டு ஒரு நாள் கூட பார்த்ததில்லையே அவன். எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும் அவன் தாய். எப்போதும் அவளை அனுசரனையாய் காதலோடு கவனித்துக்கொள்ளும் தந்தை. அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் பொறாமையோடு ஏன் நிரஞ்சனப்பா எப்பவுமே உங்களுக்கு சண்டையே வராதா என்று கேட்கக்கூடிய அளவில் அல்லவா அவர்கள் வாழ்க்கை இருந்தது.
ஒரு நாள் கூட அவனை அடித்திருக்கமாட்டார்கள். செல்லமாய் அவர் அழைத்து கொஞ்சும் போது அவன் உள்ளம் அத்தனை மகிழ்ந்து போகுமே.. இனிமேல் அப்படி அழைக்க யாருமில்லையே.. ஏன் என் வாழ்க்கை இப்படி திசை மாறிப் போனது. எல்லோரையும் போல் என் வாழ்க்கை ஏனில்லை. இப்படி எல்லாம் நடக்கும் என்றுதான் அத்தனை பாசத்தை கொட்டி இத்தனை தைரியமாய் வளர்த்தீர்களா என மானசீகமாய் தன் தாய் தந்தையை கேட்டான்.
அவனால் சகஜமாய் சுவாசிக்க கூட முடியவில்லை. அத்தனை அழுத்தமாய் இருந்தது மனது. நினைக்கவே கூடாதென்று ஒதுக்கி வைத்த யாவும் பூதாகரமாய் அவன் முன் தோன்றி மிரட்டியது. அய்யோ என்று தலையை பிடித்துக்கொண்டு மண்டியிட்டு அமர்ந்தான். ப்பா... ம்மா... ஏம்மா.. ஏம்மா என்னை விட்டு போனீங்க... அன்னைக்கு மட்டும் நான் இருந்திருந்தா உங்களை விட்டிருக்கமாட்டேனே என்று அதையே
பிதற்றிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
உண்மை தான் அந்த ஓர் நாள் மட்டும் வாராமல் போயிருந்தால் நிரஞ்சனும் தன் பெற்றோர்களோடு இன்பமாய் இருந்திருக்கலாம் தான். ஆனால் இயற்கையின் சீற்றத்தின் முன்னே யார் தான் என்ன செய்யமுடியும்.
ஆனால் அவனால் தான் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நடந்ததை நினைத்து மருகிப் போனான் நிரஞ்சன்.
வருவாள்....