மாறாத நேசம்!
அத்தியாயம் 17
தண்மதி சீர்மதியன் பதிலில் ரொம்பவே காயப்பட்டாள்.
'தூய முல்லை கூறியது போல் அவன் தன்னை உண்மையாகவே நேசித்து இருந்தால் இப்படி உதாசீனமாக 'உன் விருப்பம்' என்று கூறுவானா?
என்னைப் பழி வாங்கத் தான் கல்யாணம் செய்திருக்கிறான். இப்படி தனிமையில் கிடந்து நான் மனநோயாளியாக மாற வேண்டுமென்று நினைத்து இருக்கிறான்.
ஆனால், நான் அதுக்கு ஒரு போதும் இடம் தரமாட்டேன். நான் அவனைப் பழி வாங்கிறேனா! அவன் என்னைப் பழி வாங்குவானான்னு பார்த்துக்கலாம்..' என்று மனதிற்குள் சூழ் உரைத்துக் கொண்டாள்.
'எப்போதும் மாடுகளுடனே இருந்திருந்து யாரைப் பற்றியும் சிந்திக்கும் அறிவே அவனுக்கு இல்லை.
தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்பவனுக்கு கல்யாணம் எதுக்கு? எந்த கவலையுமின்றி நான் என் வீட்டில் இருந்தேனே என்னை இப்படி கூண்டுக்குள் அடைத்து சிறை வைத்து இருக்கிறானே!
அத்தை ,மாமா மட்டும் இல்லை என்றால்? தன் நிலை என்னவாகும்' என்று நினைத்து தன் மீதே கழிவிரக்கம் கொண்டாள்.
அடுத்த நாள் எப்போதும் போல் விடிந்தது. வழக்கம் போல் தண்மதி கண்விழிக்கும் போது சீர்மதியன் இல்லை.
ஒரு பெருமூச்சுடன் எழுந்து குளித்து தன் பிறந்த வீட்டுக்கு போக தயாராகினாள்.
பொன்மணியிடமும், கோவழகனிடமும் ," ஒரு வாரம் நான் அம்மா வீட்டுக்கு போய் இருந்துட்டு வரட்டுமா..?" என்று தயங்கியபடியே கேட்டாள்.
அவர்களோ, " போய்ட்டு வாம்மா..உன் புருஷன் கிட்ட கேட்டீயா..?" என்றனர்.
"கேட்டேன் உன் விருப்பம் என்று சொன்னார் .."என்றவளுக்கு, கண்களில் நீர் தேங்கியது. உதட்டை கடித்து அழுகையை அடிக்கியவள் தன் மனதின் பலகீனத்திற்கு தன்னையே கடிந்து கொண்டாள்.
பொன்மணிக்கும் ,கோவழகனுக்கும் அவளின் நிலை புரிந்தது. அவர்களுக்கும் மனம் வலித்தது. இந்தப் பெண் திருமணம் ஆகி வந்ததிலிருந்து, எங்கே போச்சு? மகன் தான் எங்கே கூட்டிட்டு போனான். வீடே கதியென்று அடைந்து கிடக்கு .. அவள் அம்மா வீட்டிலாவது போய் இருந்துட்டு வரட்டும் என்று நினைத்தனர்.
தண்மதியோ, தனக்கு தேவையான துணிமணிகளை பையில் எடுத்து வைத்தாள்.
அப்போது கணவன் வாங்கி கொடுத்த புடவை கண்ணில் பட்டது.
மெல்ல அதை தடவிப் பார்த்தவள் ,அடுத்த நொடி பழையபடி எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு 'இவன் வாங்கி கொடுத்தால் நான் கட்டிக்கணுமா..?இவன் இஷ்டத்திற்கு என்னால் ஆட முடியாது..' என்று மனதிற்குள் கணவனை வசவு பாடினாள்.
சிறிது நேரத்தில் தண்மதி தன் அண்ணனை வரச் சொல்லி தன் தாய் வீட்டுக்குச் சென்றாள்.
கோவழகனுக்கும், பொன்மணிக்கும் தண்மதி தன் அண்ணணுடன் போவது மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.
ஆனால், என்னசெய்ய மகன் இப்படி தொழிலே கதி என்று கிடக்கிறானே! என்று வருந்தினார்கள்.
தண்மதி தன் பிறந்த வீட்டிற்கு சென்றவுடன்,தன் கவலைகளை மனதிற்குள் புதைத்துக் கொண்டு , தாய் தகப்பனுடன் இயல்பாக பேசினாள்.
பெற்றவர்களுக்கு மகளின் வருகை மகிழ்ச்சியை கொடுத்தாலும்.. மாப்பிள்ளை வரவில்லையே என்ற மனவருத்தம் இருக்கத் தான் செய்தது.
"ஏம்மா மாப்பிள்ளை வரலையா..?" என்று கேட்ட தந்தையிடம்.."உங்க மாப்பிள்ளைக்கு ஐந்தறிவு ஜீவன்கள் கூடவே குடும்பம் நடத்த சரியா இருக்கு..இதுலே எங்கூட எங்க வரப்போறார் .." என்று நக்கல் பேசிய மகளிடம்..
"தணு மாப்பிள்ளை நல்ல உழைப்பாளிம்மா இப்படி பேசாதே..! நான் கேள்விப்பட்டேன்..இப்ப புதுசா கோழிப்பண்ணையும் வாங்கி இருக்காறாம்.." என்றவரிடம்,
"ம்..!" என்றவள் தந்தையிடம் வேறு எதுவும் அதன்பிறகு பேசவில்லை..
மகளின் முகமே சரியில்லை என்று நினைத்த செந்தாழை மகளுடன் தனிமை கிடைத்தவுடன்..
"தணு உனக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டையெல்லாம் இல்லை தானே! நீ மட்டும் தனியா வந்திருக்கீயே அது தான் கேட்டேன்.."
"ஏம்மா கல்யாணமாகி இத்தனை நாள் கழிச்சு வந்துருக்கேன் சந்தோஷப்பட்டாம உங்க அருமை மாப்பிள்ளை பற்றியே கேட்கிறீங்க..என்னை விட அந்த மாட்டுக்கார மாப்பிள்ளையத் தா பிடிச்சு இருக்கா?"
" ஏய் தணு! லூசு மாதிரி பேசாதே! கல்யாணமாகிப் போன பெண்..!தாய்வீடு தனியா வந்தா ? என்ன பிரச்சினையோன்னு பெத்த மனசு பதறத்தான் செய்யும் அதுக்கு கேட்டா..?"
" ஒரு பிரச்சினையும் இல்லே..உங்க எல்லோருக்கும் என் நினைப்பே இல்லே..ஆனால் எனக்கு உங்க ஞாபகமாகவே இருந்துச்சு அது தான் வந்தேன்.."
"ஓ..!உன் ஞாபகம் இல்லாமல் இருக்குமா..?போன வாரம் தானே வந்து பார்த்துட்டு வந்தோம்.."
" ஆமாம்! வந்தீங்க..வந்தீங்க.. அந்த வழியாக எங்கேயோ போய்ட்டு வந்தீங்க அதனால் அப்படியே என்னை பார்க்க வந்தீங்க..எனக்காகவா வந்தீங்க..?"
" ஏன் டீ இப்படி வந்ததும் வராததுமா என் கிட்ட சண்டைக்கு வரே.."
" சண்டைக்கு வரேனா? நான் உண்மையை சொன்னா உங்களுக்கு சண்டை பிடிக்கிறேனா.."
" சரி தாயி! நான் ஒண்ணும் சொல்லலே! உட்காரு நான் மோர் கலக்கி எடுத்துட்டு வரேன்.."
" ஆமாம் ! பாட்டி எங்கேம்மா ? காணோம்..?"
" இன்னைக்கு சனிக்கிழமையில்ல! அது தான் பெருமாள் கோவிலுக்கு போய் இருக்காங்க.."
" ஓ..!" என்றவள் தன் அண்ணன் வருவதை பார்த்து ,"அம்மா அண்ணாவுக்கும் சேர்த்து மோர் கலக்குங்க .."என்றாள்.
தங்கையின் அருகில் வந்து அமர்ந்த வழுதி
" தணு சீர்மதியன் உன்னை நல்லா வச்சு இருக்கானா? நீ சந்தோஷமாக இருக்கீயா?"என்று அண்ணனாக தங்கையிடம் கேட்டான்.
அவளோ, "எனக்கு என்ன அண்ணா! ரொம்ப நல்லா இருக்கேன்.."
"ஏம்மா, அவன் எப்ப பாரு பால் பண்ணையிலேயே குடி இருக்கிறான், உன்னை எங்காவது அழைத்து போவானா?"என்று கேட்டவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல்..
"ம் !"மட்டும் கொட்டியவள், "அண்ணா என்ன தான் இருந்தாலும், அவர் உனக்கு மாப்பிள்ளை..!இனி நீ அவரை, அவன் இவன் என்று பேசாதே.." என்று கூறிய தங்கையை வியந்து பார்த்தபடி பேச்சற்று நின்றான் முறை வழுதி.
சரியாக அப்பொழுது செந்தாழை மோர் கலக்கி எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்தார்.
வழுதி தங்கையை யோசனையாக பார்த்தபடியே தாய் கொடுத்த மோரை குடித்தான்.
தண்மதியும் மோரை வாங்கி குடித்தபடியே மனதிற்குள் நாம் ஏன் அண்ணனிடம் அப்படிச் சொன்னோம்! என்று புரியாமல் குழம்பினாள்.
சீர்மதியன் எப்போதும் போல் தன் வேலைகளை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்தான். அன்று அறையின் வெறுமை தான் அவனை வரவேற்றது.
தண்மதியைக் காணாமல் எங்கே சென்றாள் என்று சில நிமிடங்கள் குழம்பினான்.
சீர்மதியனுக்கு, அவள் நேற்று தன் தாய் வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறியது சுத்தமாக ஞாபகம் இல்லை.
மனசு அவளைக் காணாமல் தவித்தது. தன் பெற்றோரின் அறைக்குச் சென்று அவர்களை எழுப்பி தண்மதி பற்றி விசாரித்தான்.
அவர்களோ, அவள் தன் தாய் வீடு சென்றதை சொன்னதும் அவன் மனம் காற்றுப் போன பலூனாக சுருங்கியது.
"உன்னிடம் சொன்னேன் என்று தணு சொன்னாலே.." என்று பொன்மணி கேட்டதற்கு, " ஆமாம் சொன்னாள் நான் தான் மறந்துட்டேன்.." என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தங்கள் அறைக்கு சென்றான்.
மனைவி படுக்கும் கட்டிலில் சென்று படுத்தவனுக்கு, அவள் வீட்டில் இல்லாத வெறுமை மிகவும் பாதித்தது.
அவளுடன் பேசவில்லை என்றாலும் அவளை பார்த்துக் கொண்டாவது இருந்தான். ஆனால் ,இப்போது அதற்கும் வழி இல்லையே? என்று அவன் மனம் ஊமையாக அழுதது.
அவளுக்கு தன் மீது ஒரு சதவீதம் கூட விருப்பம் இல்லையா ?அது தான் தன்னை பற்றி நினைக்காமல் போய்விட்டாள். என்று கலங்கினான்.
அவள் வீட்டில் இருக்கும் போது பாராமுகமாக இருந்து கொண்டு இப்போது அவளை நினைத்து வருந்துபவனுக்கு, தானே தங்களுக்குள் விரிசலை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறோமென்று அப்போதும் தெரியவில்லை.
இரண்டு நாட்கள் நத்தையாக ஊர்ந்தது.
தண்மதி மனதிற்குள் 'தான் இங்கு வந்தது அவனுக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா..?ஒரு போன் பண்ணிக் கூட விசாரிக்கலையே.. தன்னை உண்மையாக நேசித்து இருந்தால் அவனால் இப்படி இருக்க முடியுமா? எல்லாம் பொய்! தன்னை பழி வாங்கவே கல்யாணம் செய்திருக்கான்' என்று அப்போதும் தவறாக நினைத்தாள்.
சீர்மதியனோ 'போய் இரண்டு நாளாச்சு ஒரு போன் பண்ணி பேசி இருக்காளா..? தன்னை பற்றி எண்ணமே இல்லை' என்று மனதிற்குள் புலம்பினான்.
அவனால் எந்த வேலையும் ஈடுபாட்டுடன் செய்யவே முடியலை.. மனம் அவளையே சுற்றி வந்தது.இப்படியே இருந்தால் தான்
பைத்தியம் ஆகிவிடுவோம் என்று எண்ணியவன்
தன்னவளின் நினைவில் இருந்து தப்பிக்க கஷ்டப்பட்டு வேலையில் தன் கவனத்தை திருப்பினான்.
தண்மதி தூய முல்லை கூறியதை தன் பாட்டியிடம் கேட்கலாமா ?வேண்டாமா என்று யோசனையிலேயே இருந்தாள்.
பேத்தி வந்த நாளிலிருந்து எதோ யோசனையிலேயே இருப்பதைப் பார்த்து தூய நாச்சி பேத்தியிடம் பேச்சுக் கொடுத்தாள்..
தண்மதி தன் பாட்டி கேட்டதும் தன் மனதிலிருந்த கேள்வியை கேட்டே விட்டாள்.
"பாட்டி நீங்க சொல்லித் தான் அவர் காளையை அடக்கி போட்டியில் ஜெயித்து என்னைக் கல்யாணம் செய்து கொடுக்கச் சொல்லி கேட்டாரா..?"
"ஆமாம் ,நான் தான் சொன்னேன். எனக்கு உன்னை சீர்மதியனுக்கு கல்யாணம் செய்து கொடுக்க தான் ஆசை!அப்புறம் ஒரு கல்யாணத்தில் பிரிந்த நம் குடும்பம் இன்னொரு கல்யாணத்தில் சேரனும்ன்னு ஆசைப்பட்டேன்.."
"ஏன் பாட்டி ? பிரிந்த குடும்பத்தைச் சேர்க்க எங்களை ஒண்ணு சேர்த்தீங்களே!என்னை மாட்டுக்கு ஈடாக நீங்க தான் கேட்கச் சொன்னீங்களா?என் மனசை பத்தியோ, என் தன்மானத்தைப் பத்தியோ ,நீங்க நினைக்கவே இல்லையா? என் சுய கெளரவத்தை பாட்டியும், பேரனும் காலில் போட்டு மிதித்து விட்டீங்களே.." என்றவளிடம்.
"தணு உன் தன்மானத்திற்கு என்ன வந்து விட்டது.யாரும் உன் கெளரவத்தை மிதிக்கவில்லை. நீ ஒரு வீரனை மணந்து இருக்கிறாய்.சீர்மதியனுக்கு நீ என்றால் கொள்ளை ஆசை.. அதனால் தான் போட்டியில் உயிரை துச்சமாக மதித்து காளையை அடக்கினான். உனக்கும் போகப் போக அவனைப் பற்றித் தெரியும்.நீயும் புரிந்து கொள்வாய்."
"எனக்கு யாரைப் பற்றியும் தெரியவும் வேண்டாம்.எனக்கு எதுவும் புரியவும் வேண்டாம். என் வாழ்க்கையே போச்சு! மனமெல்லாம் ரணமா இருக்கு பாட்டி.. என் வேதனை யாருக்குமே புரியலே.." என்றவள், அதற்கு மேல் அடக்க முடியாமல் பாட்டியின் தோள்களில் சாய்ந்து தேற்றுவாரற்று கதறி அழுதாள்.
தூயநாச்சி எப்படித் தான் இவளுக்கு புரிய வைப்பது என்று நினைத்தார். தன் மீது சாய்ந்து அழுதவளின் தலையை தடவியபடியே யோசித்தவர் , இப்போதைக்கு அவள் போக்கிலே விடலாம்.காலம் தான் எல்லாவற்றிக்கும் சிறந்த மருந்து! என் பேரனின் அன்பு கண்டிப்பாக ஒரு நாள் இவளை மாற்றும் என்று எண்ணினார்.
அவரின் எண்ணம் ஈடேறுமா? எல்லாம் காலத்தின் கைகளில் தான்.
நேசம் தொடரும்..