மாறாத நேசம்!
அத்தியாயம் 19
சீர்மதியனுக்கு வீட்டில் தான் மனைவியால் பிரச்சினை என்றால் தொழிலிலும் மந்திரியால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனாலும் அத்தனையும் முடிந்தவரை சமாளித்தான்.'கொக்குக்கு ஒன்றே மதி!' என்பதைப் போல தன் தொழிலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில் தன் முழு நேரத்தையும் செலவிட்டான்.
செம்பியன் அன்று தன் மகன் வழுதியுடன் ஒரு திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது சீர்மதியனின் பால் பண்ணை வழியாக தான் வந்தார்கள்.
மருமகனின் பால் பண்ணையைக் கண்ட செம்பியனுக்கு உள்ளே சென்று பார்க்க வேண்டுமென்ற ஆசை தோன்றியது.
உடனே தன் மகனிடம் "வழுதி வண்டியை நிறுத்துப்பா! மாப்பிள்ளையின் பண்ணையை ஓர் எட்டுப் போய் பார்த்துட்டு வரலாம்.." என்று அழைத்தார்.
"பால் பண்ணையை பார்க்க என்ன இருக்குப்பா.?" .என்றவனிடம்,
"என்ன இருக்குன்னு போய் பார்த்தா தானே தெரியும்!" என்றவரிடம் மறுபேச்சு பேசமால் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான் வழுதி.
இருவரும் பண்ணைக்குள் செல்லும் போதே சீர்மதியன் இவர்களை கண்டுவிட்டான்.
ஓடோடி வந்து இன்முகத்துடன் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றான்.
மாட்டுப்பண்ணை தானே என்று நினைத்து உள்ளே வந்தவர்கள் அசந்து தான் போனார்கள்.
மிக நவீன வசதிகளுடன் இருந்தது. மாடுகளை மிக சுத்தமாக பராமரித்து இருந்தான்.
பால் பதப்படுத்தும் இடம் , பால் பொருட்கள் உற்பத்தி என அனைத்துப் பகுதிகளையும் சுற்றி பார்த்தவர்களுக்கு வியப்பாக இருந்தது.
அவனின் உழைப்பை உணர்ந்தனர். மாடு தானே என்று நினைத்தவர்களுக்கு அதன் மதிப்பும் தரமும் தெரிந்தது.
சீர்மதியன் மீது மரியாதை கூடியது.
சுற்றுவட்டாரம் முழுவதும் அவன் உற்பத்தி பொருட்களுக்கு இருக்கும் மவுசும் புரிந்தது.
சீர்மதியன் பண்ணையை சுற்றிக் காட்டிவிட்டு தன் அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே இருந்த இருக்கையில் அமரச் சொல்லி விட்டு வேலையாட்களை அழைத்து அவர்கள் அருந்துவதற்கு மோர் எடுத்துவரச் சொல்லி அவர்களுக்கு கொடுத்தான்.
மோரை குடித்துக் கொண்டே அறையை நோட்டமிட்ட வர்களுக்கு அறையின் ஒரு பகுதியில் இருந்த புத்தக அலமாரி அவர்களின் கவனத்தை ஈர்த்தது.
அங்கிருந்த புத்தகங்கள் எல்லாம் சமத்துவம் சமூகநீதியை பற்றி நூல்கள் தான் அதிகமாக இருந்தது.
வியப்பாக நூல்களைப் பார்த்தவர்களிடம் "சும்மா இருக்கும் போது கொஞ்சம் படிப்பேன்..!" என்று பதிலுரைத்தான்.
அப்போது பால்பண்ணையில் வேலை பார்க்கும் பெண்மணி "தம்பி வரச்சொல்லி இருந்தீங்களா?" என்று கேட்டபடி வந்து நின்றார்.
"ஆமாம் கா, பாப்பாவுக்கு பீஸ் கட்டணும்ன்னு சொல்லி இருந்தீங்களே! இந்தாங்க பணம் .!"என்று தன் மேஜையை திறந்து கட்டாக பணத்தை எடுத்துக் கொடுத்தான்.
அதை பெற்றுக் கொண்ட அந்த பெண்மணி "ரொம்ப நன்றிப்பா ! நீங்க செய்யற இந்த உதவிக்கு நான் என்ன திருப்பி செய்யப் போறேனேன்னு தெரியலை.." என்று கண்கலங்கி கூறியவரிடம்,
"எதுவும் செய்ய வேண்டாம்! பாப்பாவை நல்லா படிக்கச் சொல்லுங்க! அதுவே போதும்.." என்று மென்புன்னகையுடன் கூறினான்.
இதை பார்த்துக் கொண்டிருந்த மாமனாருக்கும் மச்சுனனுக்கும் சீர்மதியன் மீது மேலும் மேலும் மரியாதை கூடியது.
அந்த நேரம் சீர்மதியனுக்கு ஒரு தொழில்முறை அழைப்பு வரவும் ஒரு நிமிடம் என்று அவர்களிடம் கூறிவிட்டு தன் அலைபேசியை உயிர்ப்பித்து பேசியபடியே வெளியில் சென்றான்.
மோர் குடித்த காலி கோப்பையை எடுக்கு வந்த வேலையாளிடம் செம்பியன் சும்மா பேச்சுக் கொடுத்தார்.
அப்போது தான் சீர்மதியனைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டார்.
தன் பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களின் குழந்தைகளை அவன் தான் படிக்க வைக்கிறான் என்ற செய்தி அவர்களை வியக்கச் செய்தது.
மடை திறந்த வெள்ளமாக வேலையாள் சீர்மதியனைப் பற்றி அத்தனை நல்ல விஷயங்களை தன்னையறியாமல் அவனின் மாமனார் குடும்பத்துக்கு கூறினார்.
அதுவரை தெரியாத தன் மாப்பிள்ளையின் நற்குணங்கள் அவரிடம் பிரமிப்பைக் கொடுத்தது.
தானத்திலே சிறந்த தானம் கல்வி தானம்! அப்படிப் பட்ட நல்ல விஷயத்தை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்ய நல்ல மனசு வேணும் என்று வியப்பாக எண்ணினார்.
சீர்மதியனை கோபக்காரன் !விளையாட்டுப் பிள்ளை! துடுக்குதனம் மிகுந்தவன் ! என்று தன் மனதிற்குள் அவர் கட்டி வைத்திருந்த பிம்பம் அன்று சுக்குநூறாக உடைந்தது.
கடுமையான உழைப்பாளி! பொறுப்பானவன்! கருணை நிறைந்தவன் ! என்று அன்று அறிந்து கொண்டார்.
சீர்மதியன் அலைபேசியில் பேசி முடித்து வந்த பின்
சிறிது நேரம் பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு,"பத்து நாளில் தீபாவளி வருது ! உங்களுக்கும் தணுவுக்கும் இது தலை தீபாவளி ! நாங்க முறைப்படி வீட்டில் வந்து அழைக்கிறோம்! கண்டிப்பாக நீங்க பண்டிகைக்கு வர வேண்டும் !" என்று வலியுறுத்தியபடி செம்பியனும், வழுதியும் கிளம்பினார்கள்.
வீடு திரும்பும் வழி எல்லாம் வழுதி தன் தந்தையிடம் "நான் மாட்டுப்பண்ணை தானே என்று சாதரணமாக நினைத்துவிட்டேன்.ஆனால் அதில் இத்தனை விஷயம் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்குப்பா!
என்றவனிடம் ,
" ஆமாம்!" என்றார் செம்பியனும் அதே யோசனையில்.
" ஏம்ப்பா எத்தனை வேலை செய்து வைத்திருக்கிறான்.
நான் நினைத்து போல் சீர்மதியன் இல்லைப்பா! வேறு மாதிரி ! நான் முதலில் பார்த்தற்கும் இப்ப இங்கே பார்த்தற்கும் நிறைய வித்தியாசம் பா..!" என்று வியந்து கூறியவனிடம்,
" ஆமாம் பா! நானுமே இந்தளவு எதிர்பார்க்கவில்லை.. உண்மையாளுமே மாப்பிள்ளை நல்ல உழைப்பாளிப்பா.. ! எத்தனை பிள்ளைகளை படிக்க வைக்கிறார்!யாரையும் குறைத்து எடை போடக்கூடாது என்று நானே இன்று புரிந்துகொண்டேன்!"
"ஆமாம் பா..! " என்று வழுதியும் ஒத்துக் கொண்டான்.
அவன் மனதில் சீர்மதியன் மீது புதிதாக மரியாதை முளைத்திருந்தது.
எந்த வித பின்புலமும் இல்லாமல் ஒருவன் தன் சொந்த காலில் நின்று இந்தளவு வளர்ச்சி பெறுவது பெரிய விஷயம் என்று எண்ணினான்.
ஆனால் கணவனைப் பற்றி அறிந்தும், புரிந்தும் கொள்ள வேண்டியவள் மட்டும் அவன் மீது அளவுகடந்த வெறுப்புடன் வளைய வந்தாள்.
அன்று இரவு வேலை முடிந்து வந்த சீர்மதியன் உணவு எடுத்து வைத்த மனைவியிடம் " தணு இன்று பண்ணைக்கு உன் அப்பாவும் ,அண்ணாவும் வந்தார்கள்.." என்றவனிடம்,
" எதற்கு?" என்று கேட்டாள் தண்மதி.
" சும்மா பண்ணையைப் பார்க்க வந்தார்கள்..அதோடு தலை தீபாவளிக்கும் அழைத்தார்கள்.."
"ஆமாம், பெரிய பேலஸ் ! அதை சுத்திப் பார்க்க வந்திருக்காங்க..! தலை தீபாவளி ஒன்று தான் இப்ப எனக்கு குறைச்சல்..!" என்றவளின் பதிலில் மிகவும் காயப்பட்டவன் பாதி சாப்பாட்டில் எழுந்து சென்று விட்டான்.
அப்போதும் அவனின் மனையாளுக்கு தான் பேசியது தவறு என்று புரியவில்லை.. மாறாக ரோசத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை! உண்மையை சொன்னால் உடம்பு எரியத் தான் செய்யும் ! என்று மனதிற்குள் முனங்கிக் கொண்டாள்.
மனைவியிடம் எதுவுமே பேசாமல் வந்து பாயை விரித்து படுத்தவனுக்கு மனம் ஊமையாக அழுதது.
'எப்படி பேசுகிறாள்,இவள் மனசு நோகக்கூடாதுன்னு நான் பார்த்து..பார்த்து பேசினாலும் என்னை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவே மாட்டீங்கிறாளே!
தன் மாமா கனியமுதன் சொன்னது எத்தனை உண்மை! விருப்பம் இல்லாதவளை மணந்தால் இருவர் வாழ்க்கையும் வீணாகும் என்பது சரிதான்!'என்று நினைத்து வருந்தினான்.
'நான் எவ்வளவு இறங்கிப் போனாலும் அவள் மாறாவே போறதில்லை ..என்னை நேசிக்கவும் போறதில்லை ..நானே என் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டேன்!' என்று தன் மீதே கோபம் கொண்டான்.
தண்மதி தன்னையும் வருத்திக் கொண்டு தன்னை உயிராக நேசித்தவனையும் காயப்படுத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவன் அகவாழ்க்கையில் எந்த மாற்றம் வரவில்லை என்றாலும், அதன்பின் வந்த நாள்களில் மாமனார் வீட்டில் சீர்மதியனின் உழைப்பும், வளர்ச்சியும் அவன் மீது மிகுந்த மரியாததையை ஈட்டிக் கொடுத்தது.
தாங்களே தேடிப் பிடித்திருந்தால் கூட இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளையை கண்டிருக்க முடியாது என்று மாமனார் குடும்பத்தை எண்ண வைத்திருந்தான்.
அருமை நாயகம் கூட சீர்மதியனைப் பற்றி மகனும் ,பேரனும் கூறியதைக் கேட்டதலிருந்து நல்லபடியாகவே அவனைப் பற்றி எண்ணினார்.
காலத்திற்கு எல்லாவற்றையும் மாற்றும் சக்தி உண்டு என்னும் கூற்று சரிதான்!
சீர்மதியனையும், தண்மதியையும் தூயமுல்லை தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்.
கனியமுதனும் கணவன் மனைவி இருவரையும் அலைபேசியில் அழைத்து "நான் வீட்டுக்கு கூப்பிட்டே இருக்கேன்..எப்ப தான் வருவீங்க ! எப்ப கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்றீங்க..நாளைக்கு கண்டிப்பா வரீங்க! " என்று சற்று அழுத்தமாகவே பேசினான்.
தன் மாமனுக்கு கோபம் வந்துவிட்டது இனி தாமதிக்க வேண்டாம் என்று நினைத்தவன் தன் தாயிடம் "அம்மா மாமா போன் செய்திருந்தார் . நாளைக்கு வீட்டுக்கு கண்டிப்பா வரச் சொல்லி இருக்கார்.." என்றவனிடம்,
"நானே சொல்லனும்ன்னு இருந்தேன் சீரா ,தண்மதியை கூட்டிட்டு போய்ட்டு வா! அவங்களும் எத்தனை முறை சொல்லிட்டாங்க.." என்றார்.
அடுத்த நாள் பொன்மணி மகனையும் ,மருமகளையும் மகள் வீட்டிற்கு சென்று வரச் சொன்னவர் தீபாவளிக்கு அவர்களை வரச் சொல்லி அழைத்து விட்டு வருமாறும் கூறினார்.
சீர்மதியன் தாய் சொல்லைத் தட்டாமல் அன்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு தமக்கை வீட்டிற்கு சென்றான்.
தண்மதி திருமணம் முடிந்து இத்தனை நாள்களில் அன்று தான் முதல் முதலாக கணவனுடன் வண்டியில் பயணம் செய்தாள்.
மாமியார் சொன்னதும் வேறு வழி இல்லாமலும், விருப்பமே இல்லாமல் தான் சென்றாள்.
சீர்மதியனுக்கு முதன் முதலாக தன்னவளுடன் தன் வண்டியில் செல்வது அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது. தன் பின்னால் அமர்ந்திருந்தவளை அடிக்கடி வண்டியின் பக்கவாட்டு கண்ணாடி வழியாக பார்த்தபடியே வண்டியை இயக்கினான்.
சிறிது தூரம் சென்றதும் தன் பால் பண்ணையின் அருகில் வண்டியை நிறுத்தினான்.
கேள்வியாக பார்த்த மனைவியிடம், " தணு ஒரு பத்து நிமிடம்! ஒரு வேலை இருக்கு. நீ உள்ளே வந்து உட்கார் !முடித்துவிட்டு போலாம் .." என்றவனிடம் பதிலே சொல்லாமல் வண்டியிலிருந்து இறங்கி அவன் பின்னே வந்தாள்.
மனதிற்குள் 'என்ன பெரிய கலெக்ட்டர் வேலையா இருக்கப் போகுது?' என்று ஏளனமாக நினைத்தபடி வந்தாள்.
பண்ணையில் சில மாடுகளுக்கு உடல்நிலை சரியில்லை அதைக் காண மருத்துவரை அழைத்து இருந்தான்.மருத்துவர் வந்து இருக்கார் என்று அவன் கிளம்பும் போது வேலையாள் அலைபேசியில் அழைத்து கூறி இருந்தான்.
அது தான் செல்லும் வழியில் அப்படியே பார்த்துச் செல்லாம் என்று வந்தான்.
தண்மதி கடனே என்று அவன் பின்னோடு சென்றவள் முதல் முறையாக கணவனின் பால்பண்ணையை கண்டாள்.
இது நாள் வரை மாட்டுக்காரன் என்று ஏளனமாக பேசியவளின் விழிகள் வியப்பில் விரிந்தது.
சீர்மதியன் மருத்துவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது தண்மதி பண்ணையை சும்மா சுற்றிப் பார்த்தாள்.
அப்போது தான் அவள் கணவன் ஏன் பண்ணையே கதி என்று இருக்கிறான்! என்றும் எத்தனை வேலை செய்திருக்கிறான் என்றும் புரிந்தது.
அதுவும் அவன் அலுவலக அறையில் இருந்த சீர்திருத்தவாதிகளின் புத்தகம் அவளை யோசிக்க வைத்தது.
இந்த மாதிரி புத்தகங்களைப் படிப்பவன் எப்படி தன்னை ஒரு இக்கட்டான நிலையில் நிறுத்தி திருமணம் புரிந்தான் என்று எண்ணினாள்.
அன்று கூட பெரியார் புத்தகம் வாசித்தானே! அப்ப கூட பெண்ணை மதிக்க தெரியலையே என்றும் நினைத்தாள்.
படிப்புக்கும்! அறிவுக்கும்! செயலுக்கும்! சம்மந்தமே இல்லை போல் என்று அவளே ஒரு முடிவுக்கு வந்தாள்.
நேசம் தொடரும்..