அத்தியாயம் - 11
அதிகாலை 6.30... கையில் காப்பி ட்ரேயுடன் அந்த அறையினுள் நுழைந்தாள் மலர்மதி. அங்கே கிங்சைஸ் கட்டிலில் தலை முதல் கால் வரை போர்த்திய படி மூவர் படுத்திருப்பது தெரிந்தது. இன்னமும் எழவில்லை போல, சரி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வெளியேற எத்தனித்தவள், வேகமான மூச்சு சத்தத்தில் சற்று நிதானித்தாள். எங்கிருந்து இந்த ஒலி வருகிறதென்று உற்று கவனித்தாள். கண்டிப்பாக படுக்கையிலிருந்து வரவில்லை. பின்னே... சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு போர்ட்டிகோவில் அரவம் தெரிந்தது. மெல்ல நடந்து எட்டிப் பார்த்தாள் அங்கே... தன்யன் தண்டால் எடுத்துக் கொண்டிருந்தான்.
முழங்கால் தெரிய பர்முடாவும், வேர்வையில் நனைந்த பனியனுமாக அவன் தண்டால் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மலர்மதிக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று புகுந்து நாணத்தை ஏற்படுத்தியது. இதுவரை அவள் ஆண்களை இப்படிப் பார்த்தது இல்லை. சட்டென தலை கவிழ்ந்தவள், முகச் சிவப்பு அடங்குவதற்கு சில நொடி அவகாசம் எடுத்துக் கொண்டு, “வ....வந்து... காப்பி.’’ என்றாள் குரலே எழும்பாமல்.
ஆனால் அதனைத் தெளிவாக உள்வாங்கியது போல் எழுந்து நின்றான் தன்யன். ஊஞ்சலில் கிடந்த டவலை எடுத்து தன் வேர்வைத் துளிகளின் மேல் ஒற்றி எடுத்தவன்.
“குட்மார்னிங் மலர்மதி.” என்றான் உற்சாகத்தோடு.
“குட்மார்னிங்.”
பதிலுக்குச் சொன்னவளின் குரலில் சுரத்தேயில்லை. ஏதோ கடமைக்குக் கூறுவதுபோல் கூறிவிட்டு, காப்பி டிரேயை அவன் புரம் நீட்டினாள். ஒரு கப்பை அவன் எடுத்துக் கொள்ளவும், “இவங்களெல்லாம் எப்போது எழுவார்கள்?” என்றாள் இழுத்து மூடப்பட்ட போர்வைகளைப் பார்த்து,
“அண்ணி நம்மைத்தாண்டா கேக்கராங்க, எழுந்து ஒரு அட்டென்டன்று போடுவோமா.” போர்வைக்குள் ஸ்ரீகாந்திடம் கிசுகிசுத்தான் அர்ஜுன்.
“ஸ்... ஸ்... மெதுவா பேசு... அண்ணனும் அண்ணியும் பேசும் போது நாம் தொந்தரவு செய்யக் கூடாது பேசாமல் படு.” உத்தரவிட்டான் ஸ்ரீகாந்த்.
“ஆமாம்... ஆமாம். இங்க என்ன கௌதம் பட சீனா நடக்கப் போகுது... உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு நான் ஏன் காப்பியை மிஸ் பண்ணனும்.” அர்ஜுன்.
“உஸ்... அண்ணா ஏதோ பேசறாங்க அமைதியா இரு.” கோவமாக கிசுகிசுத்தான் ஸ்ரீகாந்த்.
“எனக்கு எப்படித் தெரியும். இந்த தடிமாடுகள் விடுமுறை நாட்களில், சூரியன் உச்சிக்கு வந்த பிறகுதான் எழுவார்களாம்.
இவர்களைப் பெற்ற அன்னைமார்கள் கூறக் கேட்டிருக்கிறேன். இன்று எப்படியோ?” அவளுடன் ஸ்னேகமான ஒரு உறவினை ஏற்படுத்திக் கொள்ள முயன்றான்.
“என்ன கொடுமைடா இது, இந்த அண்ணன் சைக்கிள் ஓட்ட நாம காத்தடிக்கனுமா.” அங்கலாய்த்தான் அர்ஜுன்.
“உஸ்...” ஸ்ரீகாந்த்.
“அப்படியானால் இவர்களுக்கு காப்பி தேவைப்படாது என்று நினைக்கிறேன். நான் போகிறேன்.” என்றவள் கதவினை நோக்கி விரைந்தாள்.
“இப்பவும் எழலைன்னா காப்பி போயிடும்டா?” அர்ஜுன்.
“உஸ்...” ஸ்ரீகாந்த்.
“அட, நீ வேற பாம்பு சவுண்டெல்லாம் கொடுத்துக்கிட்டு மனுஷன் கடுப்பு தெரியாமல்.” சட்டென அர்ஜுனின் வாயைப் பொத்தினான் ஸ்ரீகாந்த்.
“ஒரு நிமிஷம் மலர்மதி...” என்ற தன்யனின் குரல் அவளை நிறுத்தியது. ஆனால் அவன் புறம் திரும்பினாள் இல்லை.
“வ...ந்...வந்து... சாரி.” என்றான் இறுகிய குரலில். அவனது குரலே முன் பின் அவன் சாரி என்கின்ற வார்த்தையை உச்சரித்திராதது போல் இருந்தது. முகத்தை மட்டும் அவன் புறம் திருப்பி ஆச்சர்யமாக புருவம் உயர்த்தினாள்.
“நீ நினைப்பது சரிதான் மலர்மதி...இதுவரை நான் யாரிடமும் மன்னிப்பை கோரியதில்லை... அதுவும் மனமார்ந்த மன்னிப்பு.... முதன் முதலில் உன்னிடம்தான் மன்னிப்பைக் கோர வேண்டியதாய் போயிற்று.” என்றான் எங்கோ பார்த்தபடி, அவளது கொலுசுச் சத்தம் கேட்டதும்தான் அவனது மன்னிப்பிற்கு அவள் பதிலளிக்காமல் சென்று கொண்டிருக்கிறாள் என்பதே அவனுக்கு விளங்கியது.
“ப...பதில்... எதுவும் சொல்லலையே.” என்றான் உரக்க...
சட்டென நின்றவள், “மன்னிக்கும் தவறை நீங்கள் செய்யவில்லை என்று பொருள்.” என்று முடித்தவள் மறைந்தே போனாள்.
பால்கனியில் கிடந்த ஊஞ்சலில் அமர்ந்தவன் கையில் இருந்த காப்பியையும் மறந்து, இலக்கின்றி வெறிக்கலானான்.
“அடடா... அண்ணன் கிட்டகிட்ட வந்தும், அண்ணி விலகி ஓடறாங்களேடா!!?” அங்கலாய்த்தான் ஸ்ரீகாந்த்.
“காப்பி போச்சே.” வடபோச்சே வடிவேலு பாணியில் அர்ஜுன் சொல்ல, இருவரும் அடிதடியில் இறங்கிவிட்டார்கள். (செல்லச் சண்டை). அப்போதுதான் துயில் கலைந்த மதுசூதனன் கண்களை தேய்த்துக் கொண்டே,
“காப்பி வந்ததா?” என்றான் சோம்பலாய்.
“ம்... மாடுகளெல்லாம் இன்னிக்கு ஸ்டிரைக்காம். அதனால் காப்பியும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.” அர்ஜுன்.
“போ... போய் குளிடா.” ஸ்ரீகாந்த்.
“நீங்க ஏண்டா அடிச்சிக்கிறீங்க?” புரியாமல் விழித்தான் மதுசூதனன்.
“ம்... ஒரே பொண்ணுக்கு ரெண்டு பேரும்ரூட்டு போடறோம் அதுதான்.” ஸ்ரீகாந்த்.
“என்ன!!!” மதுசூதனன்.
“நீ கவலைப்படாதே பா. அந்த பொண்ணு கண்டிப்பா அந்த வீணாப்போன வீணா இல்லை.” அர்ஜுன்.
உடனே மதுசூதனன் கை ஓங்க, மூவருமே செல்லச் கண்டையில் குத்தினர்.... இது எதுவுமே கவனத்தில் பதியவில்லை தன்யனுக்கு. அவன் மனதில் ஓடியதெல்லாம், மலர்மதி ஏன் மன்னிக்கவில்லை? என்பது மட்டும்தான்.