அவன் தேர்வு செய்யவில்லை என்றாலும் மூன்று நடுவர்களின் இருவர் தேர்வு செய்துவிட்டதால் அவள் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகிவிட்டாள். ஆனாலும் அவள் மனதிற்குள் தோன்றிய அந்த விஷயத்தை அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
"அந்த விடியோவை பார்க்கலன்னா நீங்களும் என்னை செலெக்ட் பண்ணியிருப்பீங்க" என்றாள். அந்த எண்ணம் அங்கிருந்த அனைவருக்கும் இருந்தது என்பது ஒருபுறம் இருக்க,
"நோ நோ நோ..." என்று அவளுடைய குற்றச்சாட்டை அவசரமாக மறுத்தான் கார்த்திக்.
"ஐ டூ மை ஜாப் ஹானஸ்டலி... நீ கண்டிப்பா இன்னும் இம்ப்ரூவ் ஆகணும்" என்றான். அவனுடைய குரலில் உண்மை இருந்தது.
அந்த ஆண்டு அடுத்த இரண்டு கட்டங்கள் தப்பித்து மூன்றாவது ரௌண்டில் அடிபட்டாள் ஸ்ருதி. அந்த இரண்டு ரௌண்டிலும் கூட கார்த்திக்கின் குட் லிஸ்டில் அவளால் வர முடியவில்லை.
மீண்டும் 2015 -லிருந்து 2018 -ம் ஆண்டு வரை தொடர்ந்து அந்த போட்டியில் பங்கெடுத்தாள். கார்த்திக் அவளுடைய குறைகளை குறிப்பிட்டு சொல்லிக் கொண்டே இருந்தான். அவளை கடுமையாக கையாண்டான். ஸ்ருதி அவனிடம் அடங்க மறுத்தாள். அவன் சுட்டிக்காட்டும் விஷயங்கள் அவளுடைய மனதிற்கு ஏற்புடையதாக இல்லை என்றால் எதிர்த்து வாதாடினாள். இருவருக்கும் வாக்குவாதம் வந்து கொண்டே இருந்தது. அது டிஆர்பி - யை எகிற செய்தது... அதனால் முடிந்த அளவிற்கு அவளை தக்க வைத்துக்கொள்ள சேனல் போராடியது. ஒவ்வொரு ஆண்டும் அவளிடமும் நல்ல முன்னேற்றம் இருந்தது என்றாலும் கால் இறுதிப் போட்டியைக் கூட அவளால் எட்ட முடியவில்லை.
ஆனால் அவள் மனம் தளரவில்லை. முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடினாள். தினமும் பாட்டு கற்றுக் கொண்டாள். தேர்ந்த குரல் வள பயிற்சசியாளரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டாள். தன்னுடைய குரலுக்கு என்ன மாதிரியான பாடல்கள் நன்றாக இருக்குமோ அத்தகைய பாடல்களை தேர்வு செய்து பயிற்சி செய்தாள்.
அடுத்த ஆண்டிற்கான போட்டி அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல ஸ்ருதி அந்த போட்டியில் கலந்துகொள்ள தயாரானாள். ஊரில் உள்ள கடவுளையெல்லாம் வேண்டிக் கொண்டு ஆடிட்டோரியத்திற்கு வந்தாள்.
அவளை பார்த்ததுமே புருவம் உயர்த்தினான் கார்த்திக். 'இந்த வருஷமுமா!' என்றது அவன் பார்வை.
"இது ஆறாவது வருஷம்... தொடர்ந்து இந்த போட்டியில கலந்துக்கற. ஏன்? வாட்ஸ் யுவர் கோல்?" - உண்மையிலேயே அவனுக்கு புதிராக இருந்தது. தனக்கு வராத விஷயத்தை எதற்கு இப்படி போட்டு இழுத்து அடுத்தவர்களுடைய நேரத்தையும் வீணடித்து தன்னையும் சர்ச்சைக்குள் இழுத்துவிடுகிறாள் என்றிருந்தது அவனுக்கு.
நீ என்ன நினைத்தால் எனக்கென்ன என்பது போல், "கோல்... ஆம்பிஷன் எல்லாம் எதுவும் இல்ல... கலந்துக்கணும்னு தோணுது... கலந்துக்கறேன். அவ்வளவுதான்" என்று அலட்சியமாக பதிலளித்தாள் ஸ்ருதி.
அவளுடைய பதில் அவனை வெறுப்பேற்றியது. "என்ன இந்த வருஷமும் தில்ருப்பா தானா?" என்றான் எரிச்சலை மறைக்க முயன்றபடி.
இல்லை என்று தலையசைத்த ஸ்ருதி, "இந்த தடவ வேற சாங்..." என்றாள். அவளை பற்றி கேட்பதற்கு வேறு ஒன்றும் இல்லை என்பது போல், "கோ ஆன்..." என்றான். 'இவள் குரலும்... மொக்கை பாடல்களும்... சரியான போர்...' - - அலுப்புடன் இயர் ஃபோனை காதில் செருகினான்.
ஷர்மிலியும் பிரபனும் கூட வேறு எதுவும் அவளிடம் கேட்க ஆர்வம் காட்டாததால், அவள் பாட இருக்கும் பாட்டிற்கான ஸ்ருதி கொடுக்கப்பட்டு மியூசிக் ஆரம்பமானது... அதை கேட்டதுமே அரங்கத்தில் சந்தோஷ சலசலப்பு...
"ஹம் தேரே பினு அபு ரஹ நஹீ க்தே
தேரே பிநா க்யா வஜூது மேரா..." என்று இந்தியில் ஆரம்பித்த அந்த இனிய கீதம்,
"என் அன்பே...!
என் அன்பே...!
உன் பாடலில் என்னை மறந்தேன்
அன்பே உந்தன் வழி நடந்தேன்
வீணையின் நாதம் போல் நானும் உனக்கு
சங்கதி இல்லாத சங்கீதம் எதற்கு
இனி உனது விழி அது எனது வழி
நாம் இருவரும் ஒருவர் அன்றோ....!
விழி மூடினால் நீயும் வருகிறாய்
விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்!
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்..." என்று தமிழில் வந்து முடிந்தது.
அரங்கமே எழுந்து நின்று ஐந்து நிமிடம் விடாமல் கைதட்டியது... அத்தனை ஜீவன்... உயிர்ப்பு இருந்தது அந்த பாடலில். ஒவ்வொரு வார்த்தையும் அவள் வாயிலிருந்து வரவில்லை... நேரடியாக இதயத்திலிருந்து வந்து விழுந்தது போலிருந்தது. பிரம்மித்துப் போய்விட்டான் கார்த்திக். அவனால் நம்ப முடியவில்லை... கடந்த ஐந்து ஆண்டுகளாக அவன் பார்த்துக் கொண்டிருக்கும் அதே ஸ்ருதிதானா இவள்! காட்!
கைதட்டல் ஓய்ந்து முடித்தப் பிறகு, "அமேஸிங்... ஐ ஜஸ்ட் காண்ட் பிலீவ் இட்..." என்றான் உணர்ச்சிவசத்துடன் பிரபன்.
"சேம் ஹியர்... வார்த்தைகளே இல்ல... வேற லெவல்" - ஷர்மிலி சிலாகித்தாள். அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் பார்வையாளர்களின் கைதட்டல் அரங்கத்தை அதிர செய்தது.
அடுத்து கார்த்திக்கின் முறை... இந்த முறை அவன் என்ன சொல்லப் போகிறான்... அனைவரும் அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய பார்வை அவள் முகத்திலேயே படிந்திருந்தது. பிறகு அவனுடைய கை கோல்டன் பசரை நோக்கிச் சென்றது... சில நொடிகளில் பெரும் ராக் மியூஸிக்குடன் ஸ்டேஜ் முழுக்க தங்கமழை பொழிந்தது... அவள் அரையிறுதிக்கு நேரடியாக தேர்வாகிவிட்டாள்... அதைவிட முக்கியம்... அவளை தேர்வு செய்தது கார்த்திக்... வாவ்!!!
பார்வையாளர்களின் ஆரவாரம் அரங்கம் முழுக்க எதிரொலித்தது. தரையில் சரிந்து மண்டியிட்டு... கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டாள் ஸ்ருதி. 'இந்த தருணம்...!! இதற்காகத்தானே அவளுடைய போராட்டம்...!!!' - அவள் உடல் குலுங்கியது.
சட்டென்று ஸ்டேஜிற்கு விரைந்தான் கார்த்திக். ரசிகர்களின் ஆரவாரம் இன்னும் அதிகமானது.
கீழே குனிந்து அவள் தோள்களை பிடித்து தூக்கி நிறுத்தினான். கரைபுரண்டோடும் கண்ணீருடன் அவனை நோக்கினாள் ஸ்ருதி... "ஐம் வெரி ஹேப்பி... ஃபைனலி நீ உன்ன கண்டு பிடிச்சுட்ட... உன்னோட குரலை கண்டு பிடிச்சுட்ட... இதுதான் நீ... இதுதான் உன்னோட வாய்ஸ்... மியூசிக்ல உனக்கு எதிர்காலம் இருக்கு" என்றான் நெகிழ்ச்சியுடன்.
ஸ்ருதியின் முகம் உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தது... கண்களில் வடியும் கண்ணீர் அதிகமானது. வாய் திறந்து எதையும் பேச முடியாதவளாக 'இல்லை...' என்பது போல் மறுப்பாக தலையசைத்தாள்.
அவள் எதை மறுக்கிறாள் என்று புரியாமல் அவள் முகத்தையே பார்த்தபடி விளக்கத்திற்காக காத்திருந்தான் கார்த்திக்.
"மியூ...சிக்... இஸ்... நா...ட்... ம்..மை... கெ...ரியர்..." - தேம்பியபடி, 'இசையை தான் தொழிலாகக்கொள்ளப் போவதில்லை' என்றாள்.
சட்டென்று அவன் முகத்தில் குற்றவுணர்ச்சி ஃபிளாஷ் ஆனது... முதல் முறை அவள் இந்தப் போட்டிக்கு வந்த போது தான் கூறிய வார்த்தை அவளை மிகவும் காயப்படுத்தியிருக்கிறது என்கிற எண்ணம் அவனை வருத்தியது.
"பிலீவ் மீ... யு ஆர் எ குட் சிங்கர்... நீ போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு..." என்றான். அவள் புன்னகைக்க முயன்றபடி, "மெடிக்கல் ஃபீல்டுல..." என்றாள்.
அவளுடைய பிடிவாதத்தை உடைக்க முடியாதோ என்கிற கவலையுடன் அவளை ஓரிரு நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவன், "உன்கிட்ட பல தரம் சொல்லணும்னு நெனச்சு என்னோட ஈகோ சொல்ல விடாம தடுத்த விஷயத்தை இப்போ சொல்லப் போறேன்" என்றான்.
அவள் கண்களில் ஒருவித எதிர்பார்ப்புடன் மெளனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.
"ஐ அட்மையர் யுவர் ஃபைட்டிங் ஸ்பிரிட்... உன்னோட விடாமுயற்சியை பார்த்து நா வியக்கிறேன்... டோன்ட் கிவ் அப் ஃபார் எனிதிங்... நா உன்கூட இருக்கேன்... உன்னை ட்ரெயின் பண்ணறேன்" என்றான்.
இந்த சலுகையை அவளால் மறுக்கவே முடியாது என்கிற நம்பிக்கையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். ஸ்ருதியும் அவன் முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஓரிரு நிமிடங்கள் அவள் எதுவுமே பேசவில்லை. பிறகு வழக்கம் போல அவன் சொன்னதையே அவனுக்கு திரும்பிச் சொன்னாள்.
"உங்ககிட்ட ரொம்பநாளா சொல்லணும்னு நெனச்சு என்னோட ஈகோ சொல்ல விடாம தடுத்த விஷயத்தை இப்போ நான் சொல்லப் போறேன்"
அவளுடைய பழைய பேச்சுக்களெல்லாம் நொடியில் பொழுதில் நினைவலையில் வந்து போக, கார்த்திக்கின் முகத்தில் புன்னகை தோன்றியது. 'என்ன சொல்லப்போகிறாள்!' என்கிற ஆர்வம் அவன் கண்களில் தெரிந்தது.
அவள் எதுவும் சொல்லவில்லை... தன்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து, பழைய கசங்கிய காகிதம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அதை பிரித்துப் பார்த்த கார்த்திக்கின் புருவம் உயர்ந்தது. "மை பிக்ச்சர்..." - அந்த படத்தை பார்த்தபடியே முணுமுணுத்தான்.
"பத்து வருஷமா என்னோட பாக்கெட்லேயே இருக்கு..." - ஸ்ருதி.
சட்டென்று நிமிர்ந்து அவளுடைய பார்வையை சந்தித்தான் கார்த்திக்.
"ஐ லைக் யு..." - மெல்லிய குரலில் கூறினாள். சாதாரண வார்த்தை தான். ஆனால் அந்த வார்த்தையில் இருந்த கனம் அவனுக்குள் ஏதோ செய்தது.
எத்தனையோ ரசிகைகளை அவன் பார்த்திருக்கிறான்... எதிர்கொண்டிருக்கிறான்... ஆனால் இவள்! இவளுமா அவனை ரசித்தாள்! அதுவும் இவ்வளவு தீவிரமாக!நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
"வா....வ்!!!! ஐ நெவர் எக்ஸ்பெக்ட் திஸ்... ஷி வான்டட் திஸ் மொமண்ட்...! ஷி கிரியேட்டட் திஸ்... டாம்... மொமண்ட்...! ஆறு வருஷமா இதுக்காகத்தான் ஃபைட் பண்ணியிருக்கா!!! மை காட்!!!" - புல்லரித்துப் போய் எழுந்து நின்று வாய் பிளந்தாள் ஷர்மிலி.
உண்மைதான்... இந்த ஒரு தருணத்திற்காக... அதை உருவாக்குவதற்காகத்தான் அவள் போராடினாள்... அவனிடமிருந்து ஒரு பாராட்டு... மனதிலிருந்து ஒரு சிரிப்பு... அதற்காகத்தானே ஏங்கினாள். கிடைத்துவிட்டது... இனி என்ன வேண்டும்...!
"ஹி இஸ் லக்கி!" - கார்த்திக்கை பார்க்கையில் பிரபனுக்கு சற்று பொறாமையாகக் கூட இருந்தது.
கார்த்திக் உறைந்து போய் நின்றான். அவள் செய்த அனைத்துமே அவனுக்காகத்தான்... அவனுக்காக மட்டும் தான் என்கிற உண்மையை கிரகித்துக்கொள்ள முடியாமல் தடுமாறினான். உணர்ச்சி மிகுதியில் அவன் உடல் லேசாக நடுங்கியது. தன்னை சுற்றி பெரிய கூட்டம் இருக்கிறது... பல கேமிராக்கள் இருக்கிறது என்பதெல்லாம் அவன் நினைவில் இல்லவே இல்லை...
"உனக்கு... மியூசிக்... பிடிக்கும் தானே?" - அதை கேட்கும் போது ஏனோ அவனுக்கு பயமாக இருந்தது. அவள் 'ஆம்' என்று சொல்லிவிட வேண்டும் என்று மனம் ஏங்கியது.
அவளுடைய அதீத அன்பை தன்னந்தனியாக சுமக்க முடியாமல் இசையை துணைக்கு அழைக்கிறானோ!
"பிடிக்கும்... உங்களோட குரலை முதல் தரம் கேட்டதிலிருந்து..." - அவளுடைய பதில் அவனை விழத்தட்டிவிட்டது.
"ஐ தாட் யு ஹேட் மீ..." - 'நீ என்னை வெறுக்கறேன்னு நெனச்சேன்'
"தட்ஸ் ட்ரு... ஐ ஹேட் யு... பிகாஸ் லைக் யு மோர் தேன் மீ..." - 'உண்மைதான்... நா உங்கள வெறுக்கிறேன்... ஏன்னா என்னைவிட அதிகமா உங்களை ரசிக்கிறேன்...' - அவள் குரல் தடுமாறியது... கண்கள் கலங்கின.
கார்த்திக்கின் இதழ்களில் புன்னகை விரிந்தது. "கேன் வி ஹேவ் எ காஃபி?" என்றான். ஸ்ருதியின் விழிகள் வியப்பில் விரிந்தன. உற்சாகக் கூச்சலில் ஆடிட்டோரியம் ஆர்ப்பரித்தது.
🎻🎻🎻