அத்தியாயம் -1
அதிகாலை பொழுது. சாலையில் ஜனநடமாட்டம் மிக குறைவாக இருந்தது. அங்கொருவர் இங்கொருவராக போய் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவனாக கைகளை வீசி வேகமாக சாலையோரம் தன் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான் ஜெய்ச்சந்திரன்.
பெயர் : ஜெய்ச்சந்திரன்
வயது : 33
படிப்பு : Bsc ., IPS ,.
வேலை : போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் (Additional Superintendent Of Police ( Crime ) )
சட்டத்தின் கீழ் பதவி (Designation Under the Act ) :பொது தகவல் அதிகாரி (Public information Officer )
அலுவலகம் : District Police Office , Trichy -20
ஜெய்ச்சந்திரனுக்கு தெரிந்த மூன்று விஷயங்கள் "கடமை... கண்ணியம்... கட்டுப்பாடு..."
அவன் சுய ஒழுக்கம் கொண்ட கண்ணியமான மனிதன். மது அருந்தமாட்டான். புகைபிடிக்கமாட்டான். அது தனக்கு மட்டும் அல்லாமல் அருகில் இருப்பவர்களுக்கும் கேடு என்று உணர்ந்து அதை செய்ய மாட்டான். நேரம் தவறாமை, தன்னையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், பயம் தவிர்த்தல், சரி என்று நினைத்ததை யார் தடுத்தாலும் செய்வது, சரியென்று படாததை யார் சொன்னாலும் கேட்க்காதது போன்ற கொள்கைகளை உடையவன்.
உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்த திறமைசாலி. கோபத்தை கூட மருந்தைப்போல், 'யாரிடம் எந்த அளவு பயன்படுத்த வேண்டும்' என்று உணர்ந்து செயல்படுவான். அவனை மீறி எந்த உணர்வுகளும் அவனிடமிருந்து வெளிப்பட்டுவிடாது.
தன்னுடைய வேளையில் மட்டும் கடமையை கடைபிடிக்காமல், ஒரு இந்திய குடிமகனாக, ஒரு மனிதனாக தன்னுடைய கடமையை உணர்ந்து செயல்படுபவன்.
அவனுடைய தந்தை முருகையன் ஒரு ராணுவ வீரன். அவர் எல்லை பாதுகாப்பு பணியில் இருக்கும் போது வீர மரணம் அடைந்தார். அடுத்து சில நாட்களிலேயே அவனுடைய தாயும் இறந்துவிட்டார். தந்தையின் மரணத்தின் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். அப்போது ஜெய்ச்சந்திரனுக்கு எட்டு வயது. அவர்கள் குடும்பத்திற்கு அரசாங்கத்திலிருந்து கிடைத்த பணம் இருபத்தி இரண்டு லட்சம் அவனுடைய கணக்கில் சேர்க்கப்பட்டது.
அந்த பணத்தில் நான்கு லட்சம் அவனுடைய படிப்பிற்கு உதவியது. படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பதற்கு முன்பே மீதி பணத்தை எடுத்து பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் படிப்பிற்கு உதவும் பொருட்டு தந்தையின் பெயரிலேயே நன்கொடையாக ஒரு அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டான்.
அது அந்த குழந்தைகளின் மேல் அவனுக்கு இருக்கும் இரக்கத்தினால் அல்ல. தன் உழைப்பில் வராத, தன் தந்தையின் பணம் தன்னிடம் இருப்பதைவிட அவர் பெயரிலேயே இயலாதவர்களுக்கு உதவுவதே முறை என்று நினைத்தான். அதை செய்வது ஒரு மனிதனாக தன்னுடைய கடமை என்று நினைத்தான்.
அவனுடைய தந்தை இருக்கும் போதே அவனை இராணுவ பள்ளியில் சேர்த்திருந்ததால் அவன் அதே பள்ளியிலேயே தொடர்ந்து படித்தான். முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு செல்வான். ஆனால் பெற்றோரின் மரணத்திற்கு பிறகு விடுமுறையையும் விடுதியிலேயே கழித்தான். ஆரம்பத்தில் தாய் பாசத்திற்கு ஏங்கினான். ஏங்கி ஏங்கி மரத்துப் போய் நாளடைவில் அது கிடைக்காது என்று தெரிந்துகொண்டு பாசம், கவலை, இரக்கம் போன்ற உணர்வுகளை எட்டு வயதிலேயே கட்டுப்படுத்திவிட்ட ஒரு இரும்புக் குழந்தையாகிவிட்டான்.
இப்போதெல்லாம் அவனுக்கு இளக்கமான உணர்வுகளே மறந்துவிட்டது. எட்டு வயதுவரை அனுபவித்த உணர்வுகளை அவன் நினைப்பதே இல்லை. இரும்பு குழந்தையாக இருந்தவன் முழுமையான இரும்பு மனிதனாக மாறிவிட்டான்.
"அய்யா... கஞ்சி எடுத்துக்குங்கையா..." வாக்கிங் மற்றும் காலை உடற்பயிற்ச்சியை முடித்துவிட்டு சரியாக ஆறு முப்பதுக்கு வந்து தோட்டத்தில் அமர்ந்த ஜெய்ச்சந்திரனிடம் சமையல்காரர் கந்தசாமி சத்துமாவு கஞ்சியை கொடுத்தார்.
"பெரியப்பா காபி சாப்ட்டாச்சா?"
"இல்லைங்கையா... உங்களுக்காக காத்துகிட்டு இருக்கார். அதோ வந்திட்டு இருக்காரே..." வீட்டுக்குள்ளேயிருந்து தோட்டத்தை நோக்கி வரும் திருமுருகனை பார்த்து சமையல்காரன் கந்தசாமி சொன்னான்.
திருமுருகன் முருகையனின் சொந்த அண்ணன். குடும்ப சூழ்நிலை காரணமாக ஜெய்ச்சந்திரனை தன்னோடு வைத்து பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவன் மீது தனி பாசம் உடையவர். அவனை பள்ளி மற்றும் கல்லூரி விடுதியில் பார்க்க வரும் ஒரே சொந்தம் அவர்தான்.
"சரி நீ வச்சுட்டு போ... அப்படியே ஒரு காஃபி எடுத்துட்டு வா..."
"சரிங்கையா..." அவன் மரியாதையாக அங்கிருந்து அகன்றான்.
"வாங்க பெரியப்பா... உக்காருங்க..." எதிரில் இருந்த நாற்காலியை சுட்டிக்காட்டி சொன்னான்.
"என்னப்பா நான் நேத்து பேசின விஷயத்தை பற்றி யோசிச்சியா?" சமையல்காரர் கொண்டுவந்து கொடுத்த காஃபியை சுவைத்துக்கொண்டே கேட்டார்.
"யோசிச்சேன் பெரியப்பா... எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை... பெண் பாருங்க"
"எனக்கு தெரிஞ்சு நாலு பொண்ணுங்க நம்ப ஊர் பக்கம் இருக்காங்கப்பா... நல்ல குடும்பம். நீ வந்து பார்த்து யாரை புடிச்சிருக்குன்னு சொன்னியன்னா முடிச்சிடலாம்..."
"நாலு பொண்ணுங்களா... பெரியப்பா, எந்த பொண்ணு நமக்கு சரியா இருக்கும் என்று முடிவு செய்துவிட்டு பார்க்க போகலாம். எந்த பெண்ணை பார்க்கிறீங்களோ அந்த பெண்ணையே முடிப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள். "
"என்னப்பா நீ இப்படி சொல்ற? நாலு பொண்ண பார்த்தாதானே, நமக்கு எது சரியா வரும்ன்னு தெரியும்?"
"இல்லை பெரியப்பா... நீங்க ஒரு பெண்ணைதான் பார்க்க போறீங்க அந்த பெண்ணை தான் முடிக்கிறீங்க. அது எந்த பொண்ணுன்னு முடிவு பண்ணிவிட்டு பெண் வீட்டிற்கு போங்க"
"சரி உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்? சொல்லு..."
"என்னோட வேலையை சுதந்திரமா நான் செய்ய தடை செய்யாமல் இருக்கும் பெண்ணாக இருக்க வேண்டும். அவள் வீட்டிலிருந்து எதையும்... எதையுமே கொண்டுவரக் கூடாது..." அவனுக்கு இன்னும் ஏதோ ஒன்று தேவைப்பட்டது. ஆனால் அது என்னவென்று அவனுக்கே புரியவில்லை.
"மொதல்ல சொன்னது சரிதான். அது என்னது ரெண்டாவது சொன்னது? நம்பளா எதுவும் கேட்கவேண்டாம். ஆனால் அவங்களா அவங்க பொண்ணுக்கு செய்றதை ஏன் வேண்டாம்ன்னு சொல்லணும்?"
"அப்படி பிடிவாதமா பெண்ணுக்கு செய்தே தீருவேன்னு இருந்தா அந்த பெண்ணை விட்டுவிட்டு வேற பாருங்க"
"அதுதான் ஏன்னு கேக்குறேன்?"
"என் வீட்டில் இருக்கும் பொருட்களும், சொத்தும் என்னுடைய உழைப்பிலோ அல்லது என்னுடைய மனைவியின் உழைப்பிலோ சம்பாதித்ததாக தான் இருக்கவேண்டும். என் அப்பாவின் சொத்தோ அல்லது என் மனைவியின் அப்பாவின் சொத்தோ எங்களுக்கு வேண்டாம்."
"என்னடா சொல்ற? அப்போ உங்க அப்பாவுக்கு வந்த பணத்தையெல்லாம் என்ன செஞ்ச?"
"என்னோட பதினெட்டு வயது வரை என்னை வளர்க்க வேண்டியது என் அப்பாவின் கடமை. அதற்க்கு மேலும் நான் படித்து முடிக்கும் வரை அவருடைய பணம் என்னை பாதுகாத்தது. அது போதும். அதற்க்கு மேல் அவருடைய பணத்தை நான் பயபடுத்தக் கூடாது. அதனால் இப்போது அந்த பணம் என்னிடம் இல்லை."
"அடப்பாவி... என்ன பித்துகுளித் தனம் இது...?"
"பித்துக்குளி தனம் இல்லை பெரியப்பா... விதை... இது ஒரு விதை... அப்பன் பணத்தை பயன்படுத்துபவன் ஆண்பிள்ளை இல்லை என்ற எண்ணம் அடுத்த தலைமுறைக்கு வரவேண்டும். அப்படி வந்தாலாவது பத்து தலைமுறைக்கு தவறான வழியில் சொத்து சேர்க்கும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மாறுவார்களா பார்க்கலாம்."
"நீ ஒருத்தன் அப்பன் சொத்து வேண்டாமுன்னு சொன்னா நாடு தேறிடுமா?"
"என்னை பார்த்து பத்து பேர் கெளரவம் பார்த்தால் அதுவே அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்துக்கு முதல் படி. இன்று விதை விதைத்து நாளைக்கே நான் பழம் சாப்பிட ஆசைப்பட்டால் முடியுமா?
நம்மால் முடிந்ததை செய்து பலனை காலத்தின் கையில் கொடுத்துவிட்டால் நடப்பது நல்லதாகவே நடக்கும்."
"என்னமோ போ... நான் நாளைக்கு ஊருக்கு போறேன். உனக்கு தகுந்த பொண்ணா பார்த்து சொல்றேன். வந்து பார்த்துட்டு கட்டிக்கோ"
"நான் வந்து பார்ப்பதா... அதெல்லாம் வேண்டாம். போலீஸ் செலக்ஷன்னா நான் வரலாம். வாழ்க்கையை பற்றி எனக்கு என்ன தெரியும்... நீங்களே பார்த்து முடிங்க..." பெரியப்பாவின் மீது முழு நம்பிக்கை வைத்து சொன்னான்.
அவர் தன் தம்பி மகன் தனக்கு கொடுக்கும் மரியாதையையும், முக்கியத்துவத்தையும் எண்ணி பூரித்துப் போனார். அதற்காகவே அவனுக்கு தேவலோகத்து கன்னிகை மாதிரி பெண் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார்.