அத்தியாயம் - 4
"சார்... காந்தி நகர் பார்க்ல சந்தேகப் படும்படியா ரெண்டு பேர் சுத்திக்கிட்டுருக்காங்க சார்... மூன்று நாட்களா கண்காணிச்சுட்டு இருக்கோம். கூப்பிட்டு விசாரிச்சிடலாமா?"
ஜெயச்சந்திரன் அறிவழகன் சொல்வதை கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தான்.
"வேண்டாம் அறிவழகன்.... விட்டு புடிங்க... அவன் எங்க தங்குறான்... யார் யாரோட பேசுறான்? என்ன வேலை பார்க்குறான்? குடும்பம், சொந்த ஊர்... எல்லாத்தையும் விசாரிங்க... அவன் பிறந்ததிலிருந்து இன்னிக்கு வரைக்குமான details எனக்கு கலெக்ட் பண்ணி கொடுங்க... "
"ஓகே சார்..."
"எப்போ கிடைக்கும்? "
"டூ டேஸ் டைம் கொடுங்க சார்..."
"ஓகே... முடிச்சுட்டு வந்து என்னை பாருங்க..."
அறிவழகன் ஜெயச்சந்திரனின் அலுவலக அறையை விட்டு வெளியே வந்தார்.
_____________________________________________________________
"இந்தா கவி...."
"என்னடி இது...? கல்யாண பத்திரிகை மாதிரி இருக்கு? யாருக்கு கல்யாணம்?"
"பிரிச்சு பார் தெரியும்..."
பத்திரிக்கையை பிரித்துபடித்த கவிதா விழிவிரித்தாள்.
"ஏய்... என்னடி இது... அடிப்பாவி... நேத்து கூட பஸ் ஸ்டாப் வரைக்கும் கூடவே வந்தேனேடி... ஒரு வார்த்த சொல்லவே இல்லையே.... அய்யய்யோ.... மாப்பிள்ளை IPS -ஆ.... இதை கூட சொல்லவே இல்லையேடி... "
"ஏய்... நா சொல்லனுன்னு தான் நெனச்சேன்டி...."
"என்னடி நெனச்சேன்.... காயபோட்டேன்னு... பேசாத நீ..."
"ஏய் சிந்து, ஜெயபாரதி, கௌரி, சிவா, ரம்யா... எல்லாரும் இங்க வாங்கடி ..."
"ஐயோ... ஏண்டி எல்லாரையும் கூப்பிடுற...?"
"ம்ம்ம்... உன் வண்டவாளத்த தண்டவாளத்துல ஏதத்தான்."
"கவி... ப்ளீஸ்...டி"
அதற்குள் "என்னடி..." "என்ன சொல்லு..." "என்ன கவி..." என்று ஒவ்வொருவராக வந்துவிட கவிதா தன் உரையை ஆரம்பித்தாள்.
"அன்பார்ந்த தோழிகளே... மற்றும் என்னோடு எப்போதும் குடுமிபிடி சண்டைக்கு தயாராக இருக்கும் எதிரி கூட்டத்தை சேர்ந்த சதிகாரிகளே.... உங்கள் அனைவருக்கும் நம் வகுப்பில் வெடித்துள்ள தங்கமலை ரகசியத்தை பற்றி சொல்ல விரும்புகிறேன்...."
'ஐயோ மானத்த வாங்குறாளே...' சாரு முனுமுனுத்தாள்.
"என்ன சொல்லு... சொல்லு..." தோழிகள் ஆர்ப்பரித்தார்கள்.
"நம் கல்லூரியின் அழகு ராணி... அமைதியின் சிகரம்... வீம்பின் மறுவுருவம் ஒரு போலீஸ்கார மாமாவை கல்யாணம் செய்துகொள்ள போகிறது.... டும் டும் டும்...." பறை அறிவிப்பதுபோல் சொல்லிமுடித்தாள்.
மறுநொடி "ஏ....ய்... என்னடி குண்ட தூக்கி போடுற?" என்றாள் ஒருத்தி
"அவ கல்யாணம் பண்ணினா அது ஏன் உனக்கு குண்டா மாறுது" சந்தேகம் கேட்டாள் மற்றொருத்தி.
"அவள நம்பி தானே என்னோட பரிட்சைகள் இருக்கு. இவபாட்டுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டா அதை யார் கவனிக்கிறது?" என்றாள் முன்னவள்
"சரியான கேள்வி... ஆனா இந்த பஞ்சாயத்துக்கு அப்புறம் வருவோம்... இப்போ இவ கல்யாண பத்திரிக்கையோட வந்து நமக்கு செய்தி சொல்றா.... முன்னாடியே ஏன் சொல்லல... அந்த பஞ்சாயத்துக்கு இப்போ வருவோம்..." கவிதா
"ஏய்... கல்யாணம் நடக்குமா இல்லையான்னே எனக்கு சந்தேகமா இருந்ததுப்பா... அதுதான் சொல்லலை..." என்றாள் சாரு.
"ஏய்... அப்போ காதல் கல்யாணமா ?" என்றாள் ஒருத்தி
"இல்லை... இல்லை..."என்று மறுத்தாள் சாரு.
"ஏன்... ஏன்... ஏன் இந்த பதட்டம்... இப்போ இல்லைன்னாலும் கல்யாணத்துக்கு அப்புறம் காதல் பண்ணுவீங்க தானே.... அப்புறம் ஏன் இந்த படபடப்பு.... மாப்பிள்ளை பக்கத்தில் இல்லதப்போவே இப்படியா...? அப்போ அவர் பக்கத்தில் இருந்தால்... ஹா..ஹா... பாவம் மாப்பிள்ளை" அவளை சீண்டி விளையாடினாள் ஒருத்தி.
"அவர் ஏண்டி பாவம்... ஊரே அவரை பார்த்து பயப்படுது? அவரை ஏன் பாவம்ன்னு சொல்ற? "
"ஊர் ஏண்டி அவரை பார்த்து பயப்படுது?"
"உனக்கு தெரியாதுல்ல... மாப்பிள்ளை ASP ... Additional Superintendent Of Police " கெத்தாக சொன்னாள் கவிதா
"அடிபாவி... அவரைத்தான் போலீஸ்கார மாமான்னு சொன்னியா? ஹா..ஹா... சுப்பர்..."
"ஊரே பார்த்து பயப்படுற போலீஸ்கார மாமா இனி நம்ம சாருவ பார்த்து பயப்பட போறாருன்னு சொல்லு..."
"ஏய் அவர் சாருக்கு மட்டும்தான்டி மாமா உனக்கு இல்லை...."
"நம்ம சாருக்கு மாமான்னா எனக்கும் மாமாதான்... என்ன சாரு நான் சொல்றது சரிதானே..." சாருமதியை வம்பிழுத்தாள் ஒருத்தி.
சாருமதிக்கு சங்கடமாக இருந்தது... இருந்தாலும் தோழிகளின் கேலியை ரசித்தாள்.
"ஏய்... லவ் இல்லைன்னு சொல்ற... அப்புறம் எப்படி அவர் உன்னை...?" ஒருத்தி சந்தேகம் கேட்டாள்.
இந்த கேள்வியில் சாருமதியின் உற்சாகம் வடிந்துவிட்டது. அவளுக்கே அந்த சந்தேகம் உண்டே...
"ஏய்... கௌரி... அவளை என்ன உன்னை மாதிரி வத்தல் மூஞ்சின்னு நினைச்சியா? அவ அழகுக்கு இவர் என்ன இவரைவிட மேலான மாப்பிள்ளை எத்தனையோ பேர் வரிசையில் நிற்பாங்க. நீ லூசு மாதிரி பேசாம வேலையை பார்த்துகிட்டு போ..." என்றாள் கவி.
"ஏய்... நா சும்மாதாம்பா கேட்டேன்... சரிவிடு... சொல்லு எப்போ கல்யாணம் " என்று பேச்சை மாற்றினாள்.
ஆனால் அந்த கேள்வி சாருமதியின் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அதை அவள் அம்மாவிடமும் கேட்டாள்.
"ஏம்மா அவர் நம்பள மாதிரி ஏழ்மையான குடும்பத்துல பெண் எடுக்கணும்? "
"அது அவர் நல்ல குணம்டி... அவர் அப்பா சம்பாதிச்ச பணத்தையெல்லாம் ஏழை பிள்ளைகளுக்கு படிக்க குடுத்துட்டாராம். லஞ்சம் கிஞ்சம் எல்லாம் வாங்க மாட்டாராம். அதேபோல வரதட்ச்சனையும் வேண்டாமுன்னு நெனச்சிருப்பாரு..."
இப்போது சாருமதிக்கு நிம்மதியாக இருந்தது. "ஏழை பிள்ளைகளுக்கு உதவினாராமே.... நல்லவர்தான் போல... யாருக்கோ இரக்கப்பட்டு உதவியெல்லாம் செய்றாரு... கட்டின மனைவியை சந்தோஷமா வச்சுக்க் மாட்டாரா...?"
"நல்லவர்... இரக்க சுபாவம் உள்ளவர்... படித்தவர்... நல்ல வேளையில் இருப்பவர்... தேவைக்கு பணமும் இருக்கும்.... இதைவிட வேறு என்ன வேண்டும்? உடுத்தியிருக்கும் துணிக்கு மாற்றுதுணிக்கு வழியில்லாமல் இருப்பவளுக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்க போகிறது என்றால் சொர்கமாகத்தானே தோன்றும்?"
தோழிகளின் கேலியும், சிலரின் பொறாமை பேச்சும் அவளை குளிர்வித்தது...சாருமதி தன் மணவாழ்க்கை பற்றி ஆகாயத்தில் கோட்டை கட்டினாள்.... பாவம் அது சுக்கு நூறாக போகப்போவது தெரியாமல்.