அத்தியாயம் - 15
அந்த நேரத்தில் ஆட்டோவில் வந்து இறங்கிய மகளை பார்த்த சாருமதியின் தாய்க்கு 'ஏதோ சரியில்லை...' என்று மனதில் பட்டது. வாசலில் வைத்தே எதுவும் கேட்க பிரியப்படாமல் உள்ளே அழைத்து சென்றாள்.
மகளின் கழுத்தில் தாலிக்கொடியை காணாமல் தாய் மனம் பதறியது. ஆனால் அழுது வீங்கியிருந்த அவள் கண்கள் எதையும் உடனே கேட்கவிடாமல் தடுத்தது.
"என்ன குட்டிமா... இந்த மாதிரி நேரத்துல ஏன் தனியா வந்த... மாப்பிள்ளையை கொண்டுவந்து விட சொல்லியிருக்கலாமே..." என்று நாசுக்காக நூல் விட்டு பார்த்தார்.
"இப்ச்..." என்றதோடு எதுவும் பேசாமல் அந்த வீட்டில் முன்பு அவள் பயன்படுத்திக் கொண்டிருந்த அறையில் போடப்பட்டிருந்த பழைய மரக்கட்டிலில் போய் முடங்கிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த அவளுடைய அன்னை அவளுக்கு சுண்ட காய்ச்சிய பால் ஒரு டம்ளர் கொடுத்தார். மனதின் பாரத்தால் வயிற்று பசி தெரியவில்லை என்றாலும் அன்னையின் வர்ப்புறுத்தலில் அந்த பாலை குடித்துவிட்டு படுத்தாள். மனது அமைதியை இழந்து தவித்தது. 'ஏன் எனக்கு இவ்வளவு கோவம் வந்தது...? எப்படி அந்த காரியத்தை செய்தேன்...? இனி எப்படி என் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது...?' எதுவுமே புரியாத புதிராக இருந்தது சாருமதிக்கு.
தாலியை கழட்டி அவன் முகத்தில் வீசியடித்த பிறகுதான் அவள் உடலில் பிடித்திருந்த பேய் வெளியேறியது போல் தான் என்ன செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தாள்.
இதைவிட வேறு என்ன அவமானம் இருக்க முடியும் ஒரு ஆணுக்கு. 'நீயும் வேண்டாம்... நீ கட்டிய தாலியும் வேண்டாம்....' என்று அவனுடைய மனைவி அவன் கட்டிய தாலியை கழட்டி முகத்தில் எறிந்துவிட்டாள்... விவாகரத்து செய்து கொண்ட பெண்கள் கூட தாலியை கழட்ட யோசிக்கும் போது சாருமதி அதை சாதாரணமாக செய்துவிட்டாள்.
அவள் வீசிய தாலி அவன் முகத்தில் பட்டவுடன்... சிவந்துவிட்ட அவன் கண்களும் தீயாக தகித்த அவனுடைய முகமும் பார்க்கவே பயங்கரமாக இருந்தது சாருமதிக்கு... அவள் உடனே அந்த அறையிலிருந்து வெளியேறிவிட்டாள். கழுத்தில் அவன் கட்டிய தாலி இல்லை... இனி எந்த உரிமையில் அந்த வீட்டில் இருக்க முடியும்...? அறையை விட்டு வெளியேறியவளின் கால்கள் தானாக வாசலை நோக்கி நடந்தன...
---------------------------------------------------------------------------------------------
சாருமதிக்கு அவளது துன்பத்திற்கு வடிகாலாக அழுகையும்... மருந்தாக தலை சாய்க்க தாய்மடியும் இருந்தது. ஆனால் ஜெயச்சந்திரனுக்கு எதுவும்... யாரும்... இல்லை. சிறிது நேரத்திற்கு முன் அவன் இருந்த மனநிலை என்ன... இப்போது இருக்கும் மனநிலை என்ன..?
ஒருசில நிமிடங்களுக்கு முன் அவனுக்கு தேவதையாக தெரிந்து சொர்கத்தை காட்டியவள் இப்போது அதை பிடிங்கிக் கொண்ட ராட்சசியாக மாறிப்போனாள். துன்பத்தை வெளியே தள்ளிவிட்டு மனதை லேசாக்கிக் கொள்ள தெரியாத(முடியாத) ஜெயச்சந்திரன் அவனுக்கு தெரிந்த வழியில் அதை உள்ளே போட்டு அடைத்து அழுத்தி மனதை மேலும் கடினமான இரும்பாக்கிக் கொண்டான்.
சாருமதி செய்துவிட்டு சென்ற காரியம் அவனை வேதனைப் படுத்தியது. 'ஒரு நாள் மருத்துவமனைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராததற்கு இப்படியும் ஒரு பெண் செய்வாளா...? ஏன் செய்யமாட்டாள். அவள் தான் கருவுற்றதையே சொல்லாமல் மறைத்தவளாயிற்றே....! '
திருமணம் ஆனதிலிருந்து அவளுக்கு ஏமாற்றங்களை மட்டுமே கொடுத்துவந்த ஜெயச்சந்திரன் அவளுடைய மன வலியை புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக யோசித்தான். அவன் மனம் சாருமதியின் செயலை வெறுத்தது.... ஆனால் அவன் சாருமதியையே வெறுத்துவிட்டதாக நினைத்துக் கொண்டான். பாவம் அவனுக்குள் முழுமையாக நிறைந்துவிட்ட சாருமதியை அவனால் வெறுக்க முடியாது என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.
----------------------------------------------------------------------------------------------
"குட்டிமா... என்னடீ ஆச்சு... நேத்து ஏன் அந்த நேரத்துல தனியா வந்த... உன்னோட தாலிக் கொடி எங்க...?" சாருமதியின் தாய் அவளிடம் மெதுவாக விசாரணையை ஆரம்பித்தாள்.
"எந்த நேரத்துக்கும்மா வந்தேன்.. எட்டு மணியெல்லாம் ஒரு நேரமா...?" அவள் சமாதானமாக பேசினாள்.
காய் வெட்டிக் கொண்டிருந்த சாருமதியின் தாய் எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த மகளை நிமிர்ந்து பார்த்தாள்.
"பேச்சை மாற்றாத குட்டிமா... உனக்கும் உன் புருஷனுக்கும் என்ன பிரச்சனை... உன்னோட தாலிக்கொடி எங்க...?" என்று அழுத்தமாக கேட்ட தாய்க்கு பதிலாக எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லிவிட்டாள்.
"என்னடி இப்படி செஞ்சுட்ட... அவர் என்ன உன்னை குடிச்சுட்டு அடிச்சாரா... புடிச்சாரா...? எப்படி நீ இப்படி செய்யலாம்...?" என்று சாருமதியின் தாய் மருமகனுக்காக வரிந்துகட்டிக் கொண்டு மகளிடம் பாய்ந்தார்.
"என்னம்மா நீ... அப்பா குடிச்சுட்டு உன்னை கஷ்ட்டப் படுத்தினா... அது மட்டும் தான் இந்த உலகத்திலேயே கொடுமைன்னு சொல்லுவியா...? உன் மருமகன் செய்தது அதைவிட கொடுமை... என்னை ஒரு மனைவியா அவர் எந்தவிதத்திலேயும் மதிக்கவே இல்லை... அந்த வீட்டில் இருக்கும் மற்ற பொருட்கள் போல் நானும் ஒரு ஜடப்பொருள் தான். அவருடைய தேவைக்கு மட்டும் என்னை பயன்படுத்திக்குவார்." என்று சொல்லிவிட்டு அடக்க முடியாமல் அழுதுவிட்டாள்.
"இல்லடி குட்டிமா... அவர் பெத்தவங்க இல்லாமல் தனியா வளர்ந்தவர். அன்புகாட்ட தெரியல. நீதானே அவருக்கு புரியவச்சிருக்கணும்.. அதைவிட்டுவிட்டு இப்படி சட்டு சட்டுன்னு கோவப்பட்டா எல்லாம் சரியா போய்டுமா...?"
"அப்போ அவர் செஞ்சது தப்பே இல்லைன்னு ஆயிடுமா...?"
"அதுக்காக நீ தாலியை கழட்டி வீசிடுவியா...?"
"அது என்ன பெரிய விஷயமாம்மா... இப்போ எத்தனை பொண்ணுங்க ஜீன்ஸ்க்கு தாலிக்கொடி சூட்டாகலைன்னு கழட்டி வீட்டுல வச்சுட்டு போறாங்க தெரியுமா...? சும்மா அதையே பேசி என் உயிரை வாங்காதம்மா..." அவள் அவளுடைய மனசாட்ச்சிக்கும் சேர்த்து தன் செயலை ஞாயப்படுத்தி விளக்க முயன்றாள்.
ஆனால் அவளுடைய தாயோ அதை ஏற்க மறுத்துவிட்டாள்.
"அது அவங்க கணவன் மனைவி ரெண்டு பேரும் சம்மதப்பட்டு செஞ்சுக்குறாங்க... அதை பத்தி இப்போ நீ ஏன் பேசுற...? நீ உன் புருஷன் வேண்டாம் என்று தானே அப்படி பண்ணிவிட்டு வந்த...?"
சாருமதி விழித்தாள்.... 'அது எப்படி முடியும்... அவன் என் மனசு முழுக்க இருக்கான்... அவனுடைய பிள்ளை என் வயிற்றில் இருக்கு... அவன் இல்லாமல் நான் எப்படி வாழ முடியும்...?' அவளுக்கு அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது.
இதுவரை நடந்தது எல்லாம் அவளுடைய கோபம் என்னும் உந்து சக்தி அவளை செய்ய வைத்தது. கோவம் குறைந்தவுடன் தெளிவான மனநிலையில் யோசிக்கும் போது 'கொஞ்சம் அதிகமாக கோவப்பட்டு விட்டோம்...' என்று அவளுக்கே தெரிந்தது. ஆனால் நடந்ததை மாற்ற முடியாது. என்ன செய்வது...?

சாருமதி தாய் வீட்டிற்கு போய் இரண்டு வாரம் முடிந்துவிட்டது. ஆனால் ஒரு நிமிடம் கூட ஜெயச்சந்திரனால் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்தால் எல்லா இடங்களிலும்... அவனுடைய எல்லா செயல்களிலும் அவள் இருக்கிறாள். அவனுக்கே அவனை நினைத்தால் ஆச்சர்யமாக இருந்தது.
சாருமதியின் சிரிப்பு... பேச்சு... குறும்பு... செல்ல கோபம்... சின்ன சண்டை... முறைப்பு... அன்பு... காதல்... பணிவிடை... என்று எதெதற்கோ ஏங்கினான். 'இதெல்லாம் இல்லாமல் இந்த 33 வருடங்கள் எப்படி வாழ்ந்தோம்...' என்று நினைத்தான். சிறுவயதில் தாய் தந்தை இழப்பை ஒருவிதமாக தாங்கி கொண்டவனுக்கு சாருமதியின் பிரிவை உண்மையில் சகிக்க முடியவில்லை. முழுமையாக மனதை கட்டுப்படுத்த முடியாமல் உருமாரிக் கொண்டிருந்தான்.
'எப்படி இப்படி நான் மாறிப் போனேன்... பைத்தியக்காரனா மாற்றிவிட்டாளே...! திமிர் பிடித்தவள்..." அவள் ஞாபகத்தில் பற்களை 'நறநற'வென கடித்தான். எப்பொழுதும் இருப்பதைவிட அவன் முகம் இப்போதெல்லாம் மிகவும் கடுமையாக இருந்தது. அலுவலகத்தில் யாரும் அவனை அணுகவே பயந்தார்கள்.
அவளையே நினைத்துக் கொண்டு வேறு எதையும் பற்றி சிந்திக்க முடியாமல் போனதில் அவனுடைய வேளையில் கூட கொஞ்சம் வேகம் குறைந்துவிட்டது. ஆனால் அதை மற்றவர்கள் கவனிக்கும் முன்பே ஓரளவு முயன்று மாற்றிக்கொண்டான். அலுவலகத்தில் மூட்டை கட்டி வைத்திருந்த அவளது ஞாபகங்கள் வீட்டிற்கு வந்ததும் பேயாட்டம் போடும். அதை தாங்க முடியாமல் இரவில் தூக்கத்தை துறந்தான்.
இந்த வேதனையை தாங்க முடியாமல் 'வெட்கத்தை விட்டு போய் அவளை அழைத்துக் கொண்டு வந்துவிடலாமா...' என்று கூட ஒருமுறை நினைத்துவிட்டான். ஆனால் அவனுடைய பிடிவாதமும் தன்மானமும் அவனை விடவில்லை...
'அது எப்படி நான் போய் கூப்பிடுவேன்... அவள் தானே போனால்... அவளே வரட்டும்...' என்று நினைத்தான்.
அவளை சுத்தமாக வெறுத்துவிட்டதாக நினைத்தவன், அவனை அறியாமலே அவளாக திரும்ப வந்தால் அவளை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டான்.
நாட்கள் இதே போல் நகர்ந்து கொண்டிருந்தன. அங்கே சாருமதியும் நிமதியாக இல்லை. ஜெயச்சந்திரனுக்கு கொஞ்சமும் குறையாமல் அவனுடைய நினைவுகளால் அவளும் வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் 'அவனாக வந்து தன்னை அழைத்து செல்லா மாட்டானா....' என்ற எதிர்பார்ப்போடுதான் இப்போதும் இருந்தாள்.
இருவரும் தங்களுக்குள் ஒவ்வொரு எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். இதில் யார் யாரை வெல்வார்கள்...?