Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Kaadhalin Litmus paritchai - Story

யாரை பைக்கின் பின் டயர் என்று பாவித்து புத்திக்குள் ஏற்றாமல் இருந்தானோ அவள் தான் அவனது புத்தியின் அனைத்து செல்களையும் தன் வசமாக்கியிருந்தாள்.

நிழலான கனவுகளில் ஆட்டம் கண்டது அவனது மனஉறுதி. ஆனால் நிஜமான பகலில் அசோகா பில்லரைப்போல ஓங்கி ஒய்யாரமாய் உறுதியாய் நின்றது அதே மனஉறுதி. கொத்தாய் அவனது கனவுகளை அவள் சூரையாடியிருந்தாலும் கெத்தாய் வலம் வந்தான் மது முன்னே.

அவளுடன் இருக்கும் போதெல்லாம் அவளின் செல்களின் கதிர்வீச்சு அவனுக்குள் ஊடுருவிக் கொண்டே இருந்தது. இன்ப வயாகரா... தப்பு தப்பு சாமி சரணம்... இன்ப நயாகரா அவனை நனைத்துக்கொண்டே இருந்தது.

இத்தனை நாளும் மது என்னும் பவித்திர பார்கடலில் விழாமல் தப்பித்துக்கொண்டே இருந்தவன் எப்போது எக்கணம் விழுந்து நீச்சல் அடிக்க ஆரம்பித்தான் என்பது அவனுக்கே இக்கணம் வரை புரியாத புதிராகத் தான் இருக்கின்றது.

அவளுடன் கழித்த தொண்ணூறு நாட்களில் இருந்த 5000 நிமிடங்களில் ஏதோ ஒரு நிமிடம் தான் அவன் மதுவின் பவித்திர பார்கடலுக்குள் விழுந்திருக்க வேண்டும் என்று சரியாக கணித்தவன் மதுவுடன் தனிமையில் இருப்பதை தவிர்த்துக்கொண்டே வந்தான். இத்தனை நாளும் அவளது முகத்தைப் பார்த்துப் பேசியவனால் தனிமையில் அவளது முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.

முகத்துக்குள் அழகாய் ஜொலிக்கும் உதடுகளை 30 டிகிரி, 40 டிகிரி, 60 டிகிரி என அத்தனை கோணத்திலும் பார்க்க பரபரத்தது அவனது ஆண்மை.

உதடுகளை மட்டுமா அவனது ஜாமென்டிரி கண்கண் நோட்டம்விட்டன?? இல்லை.

அவளது பொன்மேனியை வைத்து அங்குலம் அங்குலமாக பயாலஜி படித்துக்கொண்டிந்த தனது ஜாமென்டிரி கண்களுக்கு தனிமையில் மதுவை நோட்டம்விட அனுமதிக்கக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தான் அந்த பைக் பயணத்திற்குப் பிறகு.

அவர்களின் பைக் பயணத்தை பெங்களூர் சாலையில் பானி பூரி விற்றுக்கொண்டிருந்தவன், கோன் ஐஸ் விற்றுக்கொண்டிருந்தவன், கம்பிளிப் போர்வை விற்றுக் கொண்டிருந்தவன் என அனைவரும் ஏக்கமாகப் பார்க்க... ஒரே ஒரு ஜோடிக் கண்கள் மட்டும் கோபமாகப் பார்த்தது.

அந்த ஒரு ஜோடிக் கண்களின் சொந்தக்காரர் மிஸ்டர்... மிஸ்டர்...



* * *

15

அந்த பைக் பயணத்திற்குப் பிறகு மதுவும் ஆர்யாவும் நேரில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஆர்யா சென்னை சென்றிருந்தான்.

மது அந்த பைக் பயணத்தை மறந்துவிட இந்த இடைப்பட்ட ஒரு வார கால அவகாசம் போதுமானதாக இருந்தது. அந்த முதல் நான்கு நிமிடங்கள் முழுதாக மனதைவிட்டு அகலாவிட்டாலும் அதன் தாக்கம் பெருமளவில் குறைந்து போனது. சகஜமாய் தனது வேலைகளை அந்த கருப்பு பைக்கை நினைக்காமல் அவளால் செய்ய முடிந்தது.

ஒரு அலுவலக விழாவில் பஃபேயில் இருந்த புஃல்காவோடு பன்னீர் பட்டர் மசாலாவையும் எடுத்துக்கொண்டு, வெள்ளை சாட்டின் ஆடை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கபட்ட நாற்காலியில் அமர்ந்துகொண்டாள் மது. அப்போது தான் பத்து நாட்களுக்குப் பிறகு அந்த அரங்கத்தில் ஆர்யாவைப் பார்த்தாள் மது. ஆர்யா தனியாக அந்த அரங்கத்திற்குள் சுற்றி வருவதைப் பார்த்தாள்.

தனதருகே அதேபோல உடையணிந்திருந்த நாற்காலியை பக்கத்தில் இழுத்து வைத்துக்கொண்டு சாலட்டை தனது தட்டில் அடுக்கிக்கொண்டிருந்த ஆர்யாவை, 'ஏய் ஆர்யா' எனச் சத்தமாக அழைத்தாள். தான் சிறை பிடித்து வைத்திருந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டி, “உனக்கு தான் ரிசர்வ் பண்ணிருக்கேன். கம் ஃபாஸ்ட்.” என்றாள்.

ஆர்யா அருகே வந்ததும், “என்ன ஊருக்குப்போய் பத்து நாள் டேரா போட்டுட்ட?” என்று கேலியாய் வினவினாள் மது.

“சித்தப்பா பையன் கல்யாணம் மது. டெல்லியில் நடந்தது. அதான் பத்து நாள் லீவு தேவையாகிடுச்சு.”

“
ஓ...”

“
இன்னும் நாலு மசாத்துல அமெரிக்கா போறேன் ஆர்யா. விசா வந்திடுச்சு.”

“
ஓ...”

“
ஆர்யா உனக்கு அமெரிக்கா லைஃப் பற்றி ஏதாவது தெரிஞ்சா சொல்லு... என்னோட ஃப்ரண்ட்ஸ் அமெரிக்கா பற்றி நிறைய சொல்றாங்க... அந்த நாட்டுக்குள்ள கால் எடுத்து வைச்சதும் முதல் நாலு நாள்ல நமக்கு கழுத்து சுழுக்கிடுமாம். மேலே நிமிர்ந்து நிமிர்ந்து எல்லா கட்டிடத்தின் உயரத்தையும் பார்த்து கழுத்து வலியே வந்திடுமாம் ஆர்யா. பத்து மாடி பில்டிங்ல 150 அப்பார்ட்மென்ட் வீடுகள் வரை இருக்குமாம் ஆர்யா. ஒரு முறை 2003 ஆம் வருஷம் நான்கு நாட்கள் கரன்ட் கட் ஆச்சாம். அப்போ யாரும் வீட்டுக்குப் போக முடியாம தெருவில் படுத்துக் கிட்டாங்களாம். பத்தாவது மாடியில குடியிருந்தவர்கள் எல்லோரும் கரன்ட் இல்லாமல் லிஃப்ட்ல போக முடியாதுன்னு தெருவிலேயே படுத்துக் கிட்டாங்களாம் ஆர்யா.”

“ஓ... மது அவன்ஜர்ஸ் படம் பார்க்கணும்னு சொன்னீல? இந்தா பென் டிரைவ்..” என்று தனது பென் டிரைவ் கொடுத்து அவளது பேச்சை திசை திருப்பப் பார்த்தான் ஆர்யா.

ஆனால் ஆர்யாவின் பென்டிரைவ்வை வாங்கி தனது பேக்கில் போட்டுக்கொண்டவள் மீண்டும் அமெரிக்காவைப் பற்றியே புரளி பேசினாள்.

'நான் பத்து நாள் முன்னே இவளைத்தான் என்னோட பைக்ல கூட்டிட்டுப் போனேனா, இல்ல... வேற பொண்ணை பைக்ல கூட்டிட்டுப் போனேனா? இவ பேசுறதைப் பார்த்தா என் கூட பைக்ல வந்த மாதிரி சிம்டம்ஸே காட்டலயே... ஆம்பளப் பிள்ளை எனக்கே பல சமாச்சாரங்கள் தோணும்போது இந்தப்பிள்ளைக்கு ஏன் எதுவுமே தோணல? யாக்கர் பவுள் பண்ணாக்கூட உன்னோட ஸ்டெம்ப் மண்ணைக் கவ்விட்டு ஸ்டெடியா நிற்குதே மது. நீ உண்மையிலேயே கிரேட்தான். பசங்களோட கரிஷ்மா, தேஜஸ் தாக்காம இருக்க ஏதாவது ஸ்ஹஸ்ரீஸ்ரீண்ய்ங் போடுறாளோ? அமெரிக்காகாரன் கரண்ட் இல்லாம ரோட்டுல படுத்தா எனக்கென்ன? அவன் பெட்டுல படுத்தா எனக்கென்ன?' என்று தீவிரமான யோசனையில் இருந்தவனிடம்,

'கால் வலிச்சா கால்ல ஜன்டூ பாம் போட்டுக்கலாம். காது வலிச்சா... காதுல ஜன்டூ பாம்மா போட்டுக்க முடியும்? மதுவை நிறுத்துச்சொல்லு ஆர்யா. ஒரு ஓரத்துல உட்கார்ந்து இந்த சாலட்ல இருக்கிற நாலு காரெட், நாலு வெள்ளிரிப்பிஞ்சை சத்தமில்லாம சாப்பிட்டுட்டுப் போயிடலாம் வாடா ஆர்யா.' என்று மேலும் இம்சித்தது அவனின் மனது.

மனதையும் சமாளித்து தன்னையும் சமாளித்து தேவையானபோது ஒரு “ஓ” மட்டும் மதுவிடம் பதிலாகச் சொல்லிக்கொண்டே இருந்தான் ஆர்யா.

“ஓ...”- ஆர்யா.

“அமெரிக்காவின் அந்த நியு யியர் பால், அந்த கவுன்ட் டவுன் எல்லாம் நான் இந்த வருஷம் பார்க்கப்போறேன்னு நினைச்சா எனக்கு நம்பவே முடியல ஆர்யா.” என்று விழாவில் இருந்து கிளம்பும் போதும் மது மட்டுமே பேசிக் கொண்டே இருக்க... ஆர்யாவும் மதுவும் லிஃப்ட் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் கிளம்பிய நேரம் இரவு எட்டு மணி.

இப்போது இருவரும் அலுவலகத்திற்கு நைட் ஷிஃப்ட் வேலைக்குச் செல்ல வேண்டும். கீழ் தளத்தில் விழா நடந்தது, மற்றவர்கள் இன்னும் ஜுஸ் டான்ஸ் என்று லயித்து இருந்தபோது மதுவும் ஆர்யாவும் மேல் தளத்தில் இருக்கும் அலுவலகம் செல்ல லிஃப்ட் நோக்கி நடந்தனர்.

லிஃப்ட்டை நெருங்க நெருங்க பதட்டம் அடைந்தான் ஆர்யா. அவனது விழிகள் தான் அவளுடன் பேச ஆரம்பித்த கணத்தில் இருந்து அவளிடம் பயாலஜி பாடத்தை படிக்க ஆரம்பித்து விட்டதே... அதனால் வந்த பதட்டம். விழிகளில் ஆரம்பித்த பாடம் உதடு, கன்னம், தாடை என்று படிபடிப்பாக கீழ்நோக்கி நகர ஆரம்பிக்க ஜன்னியே வந்துவிட்டது அவனுக்கு. பதட்டம் கூடியது...

அவனது கெட்ட நேரம் லிஃப்ட்டின் எதிரே அவர்கள் இருவரும் சென்று நின்ற நொடி அது உடனே திறந்து கொண்டது.

அவனது கெட்ட நேரத்தின் கெட்ட நேரம் லிஃப்டிற்குள் யாருமே இல்லை.

அவனது கெட்ட நேரத்தின் கெட்ட நேரத்தின் கெட்ட நேரம் லிஃப்ட்டிற்குள் நுழைந்ததும் மது அவனது உதடுகளுக்கு வெகு அருகில் இருந்தாள்.

* * *

“
லிஃப்ட்டின் கதவுகளை மூடும் பொத்தானை மது தொட்டுவிட்டு நான் 4வது மாடி... நீ மீட்டிங் ஹால் தான போற? அது ஆறாவது மாடி...” என்று அவனுடன் பேசியபோது தான் அவனது உதடும் அவளது கன்னமும் அருகருகே இருந்தன.

அடுத்த நொடி அவள் அவனது உதடுகளிமிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்து விட்டாள். லிஃப்ட் நகர ஆரம்பித்ததும் அமைதியாக தனது கைபேசியில் மூழ்கிய மதுவின் உதடுகளைப் பார்த்து தடைபட்ட பயாலஜி பாடத்தை மீண்டும் படிக்கும் தீர்மானத்துடன், “என்ன பண்ற மது? அமிஞ்சிக்கரை பற்றி கூகுள் பண்றியா?” என்று வம்பு வளர்த்தான் ஆர்யா.

“வாட்?”

“
அமெரிக்கா பற்றி கூகுள் பண்றியான்னு கேட்டேன்...”

“
ஏய் என்னைக் கிண்டல் பண்றியா? என்று மது கேட்டதற்கு பதிலே தராமல் சிரித்தவனிடம், நீங்க கூகிள் பண்ணவே மாட்டீங்களோ?? கடைசியா நீங்க எதை கூகுள் பண்ணீங்க சார்?” என்று எடக்காகக் கேட்டாள்.

“ரீசென்ட்டா திருமலைநாயக்கர் மஹால் பற்றி பார்த்துட்டு இருக்கேன்... உன்னோட அமெரிக்கா இது பக்கத்துலயே வர முடியாது தெரியுமா?” என்றவன் மஹாலின் புகைப்படத்தை அவளுக்கு தனது கைபேசியில் காட்டினான்.

“இந்த பில்டிங் எனக்குத் தெரியும் ஆர்யா... ஐஸ்வர்யா ராயும் அபிஷேக்கும் குரு படத்துல இந்த பில்டிங்ல டான்ஸ் ஆடிருப்பாங்க...”

“
என்னது பில்டிங்கா? சத்தமா சொல்லாத மது... திருமலைநாயக்கர் மன்னர் நைட் கனவுல வந்து உன்னைக் கசமுசா பண்ணிடுவார்.”

“
வாட்??” என்று அதிர்ச்சியாய் விழித்தவளிடம்,

“இது ஒரு அரண்மனை மது. அரண்மனையை பில்டிங்ன்னு சொன்னா மன்னர் கோச்சிக்க மாட்டாரா?”

“
ஹா... ஹா... உன்னோட அம்மிஞ்சிக்கரை உண்மையிலேயே அமெரிக்காவை விட நல்லாதான் இருக்கு.” என்று அவனிடம் தனது விரல்களில் தம்ப்ஸ் அப் காட்டியபடியே சொன்னாள் மது.

“தம்ப்ஸ் அப்” என்று காட்டிய விரல்களை விடுத்து “தம்ப்ஸ் அப்” என்று சொன்ன உதடுகளைப் படித்தான் ஆர்யா. எத்தனை முறை அதைப் படித்தாலும் அதைப்பற்றி... அவளது உதடுகளைப் பற்றிக் கண்ணா பிண்ணாவென்று சந்தேகம் எழுந்துகொண்டே தான் இருந்தது அவனுக்கு.

“உதடுகள் பற்றிய சப்ஜெக்டில் நீயும் அவளும் குரூப் ஸ்டடி பண்ணா டவுட் வராதுன்னு நினைக்கிறேன்...” என்று அவனிடம் எடுக்கு பேசியது அவனது ஆண்மை.

“பிடிச்ச பொண்ணா இருந்தாலும் அவ பெர்மிஷன் இல்லாம அவ உதடு, கண்ணு அப்புறம் Etc, Etc எல்லாம் பார்க்கிறது தப்புப்பா ஆர்யா.” என்று நல்லவிதமாய் புத்திமதி சொன்ன மனதிடம், “மண்ணாங்கட்டி” என்று திமிராய் பதில் தந்தான் ஆர்யா.

லிஃப்ட் நின்றது. மது நான்காம் தளத்தில் இறங்கிக்கொண்டாள். ஆர்யா ஆறாவது பொத்தானை அழுத்தினான்.

“அப்பாடா... இன்னும் ரெண்டு ஃப்ளோர் இருந்தது... இந்நேரம் பெரிய கசமுசாவே இந்த லிஃப்டில் நடந்திருக்கும்ல ஆர்யா? உலக மகா லவ் சீன் இப்ப இந்த லிஃப்டல தான் நடந்திருக்கும் இல்ல ஆர்யா?” என்று அவள் சென்ற பிறகு அவனது மனது அவனிடமே சந்தேகம் கேட்க, “ஆம்” என்று சொல்லி ஆமோதிப்பதா, இல்லை... “நான் மதுவைவிட ஸ்டாராங் மச்சி.” என்று சொல்லி மறுப்பதா என்று தெரியாமல் லிஃப்டிற்குள் குழம்பி நின்றான் ஆர்யா.

“யெஸ் ஆர் நோ...(yes or no)” - மீன்டும் நச்சரித்தது ஆர்யாவின் மனது.

லிஃப்ட்டிற்குள் இருந்த சில்வர் நிறத்தில் ஜொலித்த ஸ்டீல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ஆர்யா அமைதியாக நின்றான்.

“யெஸ் ஆர் நோ...(yes or no)” - மீன்டும் நச்சரித்தது ஆர்யாவின் மனது.

ஆர்யா மனதிடம் பிடிவாதமாய் பதில் பேசாமல் அமைதி காத்தான்.

“இன்னும் இரண்டு மாடி இருந்திருந்தா, இப்ப இந்த லிஃப்டுக்குள்ள தப்பு நடந்திருக்குமா இல்லையா? யெஸ் ஆர் நோ... (yes or no)”- மீன்டும் மீன்டும் நச்சரித்தது ஆர்யாவின் மனது.

“யெஸ் யெஸ் யெஸ்.” என்று கண்மூடித்தனமாய் தனது பதிலை மனதிடம் கத்தினான் ஆர்யா. அதே நேரம் ஐந்தாம் தளத்தில் லிஃப்ட் கதவுகள் திறந்தன. அவன் எதிரே மது நின்று கொண்டிருந்தாள்.

“எனக்கும் மீட்டிங் ஹால்தானாம்... நானும் ஆறாவது ஃப்ளோர் ஆர்யா.” என்று கூறிச் சிரித்தாள் மது.

உடலின் ஹார்மோன்களின் கஷ்டம் புரியாத ஈவுஇரக்கமற்ற மனது, “இன்னும் ஒரு மாடி அவகூட லிஃப்ட்ல தனியாகப் போகப் போற... இப்ப யெஸ் ஆர் நோ சொல்லு ஆர்யா. கசமுசா நடக்குமா நடக்காதா? யெஸ் ஆர் நோ?” என்று சற்றுமுன் தன்னிடம் கோபப்பட்டவனிடம் படு கெத்தாய்க் கேட்டது.

சற்று முன் தன்னிடம் மண்ணாங்கட்டி என்று கூறி எறிச்சல் அடைந்தவனிடம் நக்கலாய் அக் கேள்வியைக் கேட்டது அவனது மனது.



* * *

“ஏய் நான் பெங்களூர் வந்து பத்து நாளாச்சு. இன்னும் இங்க வானிலை எப்படின்னு நீ ரிப்போர்ட்டே வாசிக்கலையே மச்சி?”- விவேக்.

“டேய்... ஒரு மேட்டரும் இல்ல டா. நம்பு.”

“
ஒண்ணுமில்ல?”

“
ஒண்ணுமில்லயே...”

“
டேய், புழுகாதடா. கடைசி காலத்துல பிட்ஸா கிடைக்காம அலைவ. மது உன்னோட பிரான்ச் தான?”

“
ஆமா. நாங்க ஒரே ஃப்ளோர்தான். இரண்டு கேபினுக்கு தள்ளிதான் இருக்கா. இப்ப அதுக்கு என்ன?”

“
எப்படி பேசுறா? உன்கூட எப்படி பேசுறா?”

“
ப்ச். அடிச்சிடுவேன்டா... மது பத்திக் கேட்காத...”

“
என்ன மச்சி ரொம்ப டென்ஷனாகுற? வானிலை அவ்வளவு மோசமாவா இருக்கு?”

“
மச்சி... நமக்குத் தெரிஞ்ச பொண்ணை நாலு பேர் ஸைட் அடிக்கிறதைப் பார்க்கும்போது எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியுமாடா விவேக்?”

“
என்னடா இப்படி சட்டுன்னு கேட்டுட்ட? என்கிட்ட கேட்காமலே எனக்கு அதுல நிறைய அனுபவம் இருக்குன்னு உனக்கும் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் சம்பிரதாயமா கேட்டிருக்க. அப்படித்தான?”

“
டேய்...”

“
சரி... பேச்சை கொறச்சிக்கிறேன். அதுல எனக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு மச்சி. 100 டிகிரியில ஒரு மூனு மணி நேரம் டைம் செட் பண்ணி நம்ம ஹார்ட்டை மைக்கிரோவேவ் ஓவன்ல வச்ச மாதிரி இருக்கும் அந்த ஃபீல். நீ மேல சொல்லு.”

“
எதிர்த்த கேபின், பக்கத்து கேபின்னு எல்லா கேபின்ல இருப்பவனும் மதுவை ஸைட் அடிக்கிறானுங்க மச்சி.”

“
பயப்படாத. மது எல்லோருக்கும் டாட்டா காட்டிடுவா.”

“
ஒருத்தனும் உருப்படியில்ல மச்சி. இங்கயிருக்கிற பசங்க எல்லோரும் பீரையும் ரம்மையும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் மாதிரி குடிக்கிறாங்க டா. ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவேன்கிற மாதிரி அப்படியே ராவாக ரம்மை அடிக்கிறானுங்க மச்சி. பார்க்கப் பார்க்க உமட்டுது. மது மாதிரி பவித்ரமான பொண்ணு இந்த மாதிரி கேஸுங்ககிட்ட மாட்டிக்குமோன்னு பயம் வருது மச்சி. அவ டேஸ்ட் எனக்குத் தெரியாதுல... “

“
பயப்படவே பயப்படாத. அதுக்கு வாய்ப்பே இல்ல.”

“
நிஜமாகவா டா விவேக்?”

“
ஆர்யா நீ அக்மார்க் கன்னிப்பையன் டா...”

“
என்னது??”

“
சரி கன்னிப் பையன் இல்லதான் ஒத்துக்குறேன், ஆனா நீ ஒரு அக்மார்க் தமிழ்ப் பையன் டா.”

“
டேய் துணி துவைக்கிற அக்கா வாஷிங்மிஷின்ல துணியைப் போட்டுட்டு இருக்காங்க டா, மானத்தை வாங்காதடா விவேக். சத்தமா பேசாத... என்ன டா சொல்ல வர்ற?”

“
நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நீ ஒரு அக்மார்க் தமிழ்ப்பையன். உனக்கே டாட்டா காட்டினவடா அவ. மத்தவங்களுக்கு காட்ட மாட்டாளா? நீ பயப்படவே பயப்படாத. மது நோ என்று சொன்னால் நோ தான் டா. அது எப்பவுமே யெஸ்ஸாக மாறாது. மது அவுங்க அப்பா அம்மா சொன்ன பையனைத்தான் கட்டிக்கும் மச்சி. ஆமா எனக்கு ஒரு டவுட் மச்சி...”

“
என்னடா?”

“
நீ மதுவை லவ் பண்ண ஆசைப்படுற மாதிரி இருக்கே... போர் அடிக்கிதேன்னு “கார்ஸ்” படம் பார்க்க உன்னோட ரெட் கலர் பென் டிரைவ் கேட்டா... மதுகிட்டக் கொடுத்திருக்கேன்னு சொல்ற. லாப்டாப் குடுன்னு கேட்டா... அதுவும் மதுகிட்ட இருக்குன்னு சொல்ற... பென்டிரைவ், லாப்டாப் என்று பண்டம் மாற்றம் எல்லாம் பலமா இருக்கே...”

“
நான் மதுவை லவ் பண்றேன் மச்சி.”
 
“நான் மதுவை லவ் பண்றேன் மச்சி.”

“
ஓ... இதுதான் மேட்டரா? அர்ஜுன் சார் நம்பர் வாங்கித்தரவா? மதுகிட்டப் உன் லவ் பற்றிப் பேசாத. அவர்கிட்ட நேராப் பேசு, அப்பா யெஸ் சொன்னா மதுவும் யெஸ் சொல்லிடுவா... முக்கியமா மதுகிட்ட ஃபோன்ல இதைப்பற்றி பேசவே பேசாத... இன்னும் எல்லா ஃபோன்லயும் ப்ளாக் பண்ற ஆப்ஷன் இருக்கு மச்சி. சாம்சங்காரன் கடைசியா லான்ச் பண்ண ஃபோன்லக்கூட ப்ளாக் ஆப்ஷன் இருக்கு.”

“
ப்ளாக் பண்ணி விளையாட நாங்க இன்னும் சின்னப் பசங்களாடா? மனசுல இருக்கிறதை பளிச்சுன்னு முகத்துக்கு நேரா சொல்ற வயசு வந்திருச்சு ரெண்டு பேருக்கும். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, ஐ லவ் யூன்னு சொல்றது சப்ப மேட்டர். 'Hello Good Morning, I am fine, How Are You?' என்று கேட்குறது மாதிரிதான் 'I Love You' சொல்றதும் விவேக். சப்ப மேட்டர்.”

“
ஓ... நீ சொல்லிட்டியா? நீ மதுகிட்ட “அந்த” குட்மார்னிங் சொல்லிட்டியா?” என்று விவேக் கேட்டபோது ஆர்யா முகத்தை திருப்பிக்கொண்டான்.

“என்னடா? பதிலே சொல்ல மாட்டிக்குற? நீ தானப்பா சொன்ன அந்த குட் மார்னிங் சொல்றது சப்ப மேட்டர்னு... அந்த சப்பை மேட்டரைச் சொன்னியா இல்லையா?”

“
ப்ச்...”

“
என்னடா?”

“
சொதப்பிட்டேன் மச்சி.”

“
அது தெரியும்.”

“
??”

“
அதான் உன் மூஞ்சிலயே எழுதி ஒட்டியிருக்கே. சொதப்பிட்டன்னு புரியிது. எங்க எப்படின்னு சொல்லு. ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுதான்னு பார்க்குறேன்.” என்று நண்பனாய் பொறுப்பாய் விவேக் கேட்டபோது அவனது கைபேசி அவனை அழைத்தது.

மதர் காலிங் என்று திரையில் தோன்றியதும் அழைப்பை ஏற்று,

“அம்மா சொல்லுங்க.” என்றான் விவேக்.

மறுமுனையில் விவேக்கின் அன்னை அவனிடம் ஏதோ பேசினார்.

“இன்னும் ஒரு வருஷம் போகட்டும்மா. 24 தான ஆகுது...”

“
நம்ம ஜோசியர் சொன்னார்ப்பா. 25க்குள்ள முடிக்கணுமாம். இப்ப இருந்து பார்க்க ஆரம்பிச்சா சரியா இருக்கும்ல?”- வவிவேக்கின் அன்னை.

“என்ன? 25க்குள்ள கல்யாணம் முடிக்கணுமா? அது சைல்டு மேரேஜ்மா. கவர்மென்ட்டே 25ல கல்யாணம் செய்தா ரேஷன் கார்ட்கூடக் கொடுக்காது. ஆதார் கார்ட்டே கேன்சல் ஆகிடும்.” - விவேக்.

“அப்படியா டா?”- விவேக்கின் அப்பாவி அன்னை.

“இதைப்பற்றி அப்புறம் பேசலாம்மா. இனி பொண்ணு பார்க்கிற வேலையை மறந்திடுங்க. சரியா?” என்று அம்மாவிடம் பேசிவிட்டு கைபேசியை அணைத்தான் விவேக்.

மீண்டும் ஆர்யாவிடம் பேச்சைத் தொடர்ந்தான் விவேக்.

“பொண்ணு பார்க்கப்போறாங்களாம் டா. 25 வயசுக்குள்ள கல்யாணம் முடிக்கணுமாம். அது சைல்டு மேரேஜ்னு என் அம்மாவுக்கு புரிய வைக்கணும். 25 வயசுல கல்யாணம் பண்ணி உடனே ஃப்ர்ஸ்ட் நைட் கொண்டாடி என்ன பண்ணப்போறேன் சொல்லு?” என்றான் சலிப்பாக ஆர்யாவிடம்.

“இங்க ஒருத்தன் ஒரு கிஸ் பண்ணிட்டு மது என்னைப் பற்றி தப்பா நினைச்சுடுவாளோன்னு பயந்துட்டு இருக்கேன். நீ ஃப்ர்ஸ்ட் நைட் பத்திப் பேசுற?” - கோபமாக ஆர்யா.

“ஏஏப்” என்று சட்டென்று புரையேறியது விவேக்கிற்கு.

தண்ணீரைக் குடித்து தொண்டையை சரிசெய்தவன், “எப்படா? எப்படா மேட்டர் முடிச்ச?”

“
நீ வேற... மேட்டர்னு சொல்லி வெறுப்பேத்தாத. சின்ன கிஸ்தான் பண்னேன்... நேத்து ஃப்ங்ஷன் முடிந்தபோது... நைட் ஷிஃப்ட்க்கு போன போதுதான் சொன்னேன்.”

“
நேற்று நீயும் மதுவும் நைட் ஷிஃப்ட் போனப்பயா?”

“
ம்.”

“
நைட்டையே அசிங்கப்படுத்திட்ட மச்சி. நைட்ல என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா? “

“
டேய் டேய்...”

“
சரி டென்ஷன் ஆகாத. ஆஃப்பீஸுல வச்சா கிஸ் பண்ண?”

“
லிஃப்டல வச்சி. கைக்கெட்டுற தூரத்துல மதுவோட கை இருந்ததா... அவ கையைப் பிடிச்சி ஹான்ட்ஷேக் பண்ணி ஐ லவ் யூ சொன்னேன் டா. அப்புறம் என்னோட உதட்டுக்கு எட்டுற தூரத்துல அவ உதடும் இருந்ததா...”

“
உடனே உதட்டால அவ உதடுகூட ஹான்ட்ஷேக் பண்ணிட்ட? அப்படித்தான?”

“
ம்...”

“
சரி, கொடுக்கிறது கொடுத்த, நாலு மூலையிலும் நாலு கேமரா இருக்கும் லிஃப்ட்டுக்குள்ளயா வச்சிக் கொடுப்ப? அதான் பொண்ணு கோச்சிக்கிச்சு. அதான் பெங்களூரில தடுக்கி விழுந்தா ஃப்ளேம் ஆஃப் த பாரஸ்ட் மரம் இருக்குல? அந்த மரத்துக்கடியில வச்சிக் கொடுத்திருக்கலாம்ல? சரி இப்ப என்ன தான் சொல்றா மது?”

“
கிஸ் பண்ணதும் ஒரே அழுகை மச்சி... அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சிதான் சமாதானம் ஆனா... இப்ப ஒரு மாசம் டைம் கேட்குறா மச்சி.”

“
எதுக்கு ஒரு மாசம் கேட்குறா? அநியாயமாத் தெரியல...”

“
அதான மச்சி. எவ்வளவு பெரிய அநியாயம்... இதுலாம் டூ மச்சா இல்ல?”

“
ஒரு மாசம் கழிச்சி நோன்னு சொல்றதை ஒரு நிமிஷத்துல சொல்லலாம்ல... இதுலாம் டூ மச் தான் டா.”

“
என்னது? நோ சொல்வாளா?”

“
200 பெர்சென்ட். நோ தான் டா சொல்வா. ஸ்கூல்ல அம்மா வேணாம்னு சொன்னாங்க, காலேஜ்ல அப்பா வேணாம்னு சொன்னாங்க, இப்ப அமெரிக்கா உன்னை வேணாம்னு சொல்லப்போகுது... ஹா... ஹா...”

“
போடா அங்குட்டு. நீ ஒண்ணும் அட்வைஸ் பண்ண வேண்டாம். நானே பார்த்துக்குறேன்.”

“
சரி... சரி கோவிக்காத மச்சி. பொண்ணுங்க குறைஞ்சது பத்து நாள் டைம் கேட்குறாங்க டா. நானும் நிறைய பசங்க சொல்லி கேள்விபட்டிருக்கேன். மதுவுக்கு எதுக்காம் ஒரு மாசம் டைம் வேணும்? எனக்கும் இந்த லாஜிக் புரியல மச்சி... ஏன் பொண்ணுங்க எல்லாரும் லவ் பண்றதுக்கு ஓகே சொல்லவே இத்தனை நாள் டைம் எடுத்துக்கிறாங்க?”

“
நானும் இதையே தான் கேட்டேன் டா, 'அது பொண்ணுங்க சமாச்சாரம் ஆர்யா உனக்குப் புரியாது' ன்னு சொல்றா டா.”

“
ஹி... ஹி... காமெடியா இல்ல... நமக்குத் தெரியாத பொண்ணுங்க சமாச்சாரமா? எத்தனை படத்துல எத்தனை பொண்ணுங்க பார்த்திருப்போம்...”

“
எனக்கு எதிரியே வேணாம்டா... இப்படி நீ அவகிட்டப் பேசினாப் போதும். ஒரே நாள்ல பதிலைச் சொல்லிடுவா... நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க சார். நான் என்னோட வேலையை பார்த்துக்குறேன்...”

“
கோசிக்காத மச்சி... மது சும்மா சொல்றா டா. பொண்ணுங்களுக்கு பசங்களை பயமுறுத்துறதுல பயங்கர கிக் மச்சி. They play games with our hearts machi... பசங்களை நாள் கணக்கா சுத்தவிடுறதுல அவுங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷம்.” - நகத்தைக் கடித்துக்கொண்டே படுதீவிரமாக விவேக்.

“இல்லப்பா... பொண்ணுங்க மனசுக்குள்ள சில டெஸ்ட் வச்சிப்பார்ப்பாங்களாம் டா. இந்த பையன் நல்லவனா, இவன் நம்மள நல்லா வச்சிப்பானா, இவன் கேரக்டர் என்ன? அப்படின்னு...”

“
ஓ... “

“
மதுவும் நாங்க ஸ்கூல்ல மீட் பண்ணதுல இருந்து காலேஜ் வரை என்னைப் பத்தின விஷயங்களை யோசிச்சிப் பார்த்து டெஸ்ட் வச்சிட்டுத்தான் சொல்வாளாம் டா. எல்லாத்துலயும் நான் பாஸ்ஸாகணுமாம் டா.”

“
ஓ...”

“
கண்ணும் கண்ணும் காதலிச்சா பத்தாது, மூளையும் காதலிக்கணும். 8 கிராம் கண்ணை நம்புற மாதிரி 3000 கிராம் மூளையையும் நம்பணும். கண்ணால ஸைட் அடிச்சா பத்தாது. மூளையாலும் ஸைட் அடிக்கணும்னு மது சொல்றா டா. அவ அதுக்கு ஒரு நல்ல பேர் சொன்னாளே... ம்... ஞாபகம் வந்திடுச்சு... “லிட்மஸ் டெஸ்ட்”, இது தான் மது அந்த டெஸ்ட்டுக்கு வச்சிருக்கும் பேரு மச்சி. லிட்மஸ் பேப்பரின் சாயம் வெளுப்பதுபோல மனுஷங்க குணம் வெளுக்குதா இல்லையான்னு அவ சோதிச்சிப் பார்க்கணுமாம்.”

விவேக் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

“விவேக்... என்னடா தலையில கைவச்சி ஏதோ கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்திருக்க?”- ஆர்யா.

“நீ சொன்ன விஷயம் அப்படி மச்சி.”

“
நான் என்ன சொன்னேன்? பொண்ணுங்க எல்லாரும் லவ் பண்றதுக்கு முன்னே பசங்க கேரக்டர் பத்தி மனசுக்குள்ள டெஸ்ட் வப்பாங்கன்னு மது சொன்னா. அதைத்தானடா நான் உன்கிட்ட சொன்னேன்? எனக்கு நீ உதவி செய்வன்னு பார்த்தா... நீயே இப்படி உட்கார்ந்திருக்க...”

“
அங்கதான மச்சி இடிக்குது? இரு வர்றேன்.” என்றவன் வேகமாக தனது கைபேசியை எடுத்து தனது அன்னைக்கு அழைத்தான்.

“அம்மா, விவேக் பேசுறேன். 25க்குள்ள கல்யாணம் முடிக்கணும்னு சொன்னீங்கல?”- விவேக் தனது அன்னையிடம் கைபேசியில்.

“ஆமா. நீ அதை சைல்டு மேரேஜ்னு சொன்னியே விவேக்? கவர்மென்ட்டே ஒத்துக்காதுன்னு சொன்னியே டா?”- விவேக்கின் அப்பாவி அன்னை.

“அப்படியா சொன்னேன்? ஞாபகம் இல்லையே... தப்பா உங்க காதுல விழுந்திருக்கும்.”

“
25 வயசுல்ல கல்யாணம் பண்ணா ஆதார் கார்ட் கேன்சல் பண்ணிடுவாங்கன்னு சொன்னியேப்பா...”

“
ஐயோ... நேரம் காலம் தெரியாம இவுங்கவேற சாவடிக்கிறாங்களே?” என்று மனதுக்குள் வெதும்பினாலும் மிகவும் அமைதியாய் பேசினான் விவேக்.

“ஆமால... சாரிம்மா தப்பா சொல்லிட்டேன். கவர்மென்ட் 25ல கல்யாணம் பண்ணா ஒத்துக்குமாம். ஆதார் கார்ட் கேன்சல் ஆகாதாம். வாட்ஸ் ஆப் பார்க்கல நீங்க? நேத்து தலைப்புச் செய்தியே இதுதான்.”- விவேக் தனது அன்னையிடம்.

“என்னமோ சொல்ற... சரிடா, ஜாதகம் பார்த்ததும் ஃபோட்டோ அனுப்புறேன்.”- விவேக்கின் அன்னை.

“சரிம்மா. வச்சிடவா?”

“
ம்.”

அன்னையுடன் பேசிவிட்டு வந்தவன் அவன் பேசியதைக் கேட்டுக்கொண்டேயிருந்த ஆர்யாவிடம்,

“பொண்ணு பார்க்கச் சொல்லிட்டேன் மச்சி, இத்தனை நாள் என்னை ஏன் எந்தப் பொண்ணும் லவ் பண்ணலங்கிற விஷயம் கிரிஸ்டல் கிளியரா தெரிஞ்ச பிறகும் வெயிட் பண்றது பெரிய மிஸ்டேக் மச்சி. எந்தப் பொண்ணும் எவ்வளவு ஈசியா டெஸ்ட் வச்சாலும் நான் பாஸ் பண்ணப் போறது இல்ல.”

“
டேய்...” என்று குபீர்ரென்று சிரித்துக்கொண்டே சொன்ன ஆர்யாவிடம்,

“நிஜமா டா ஆர்யா. எந்த ஒரு பொண்ணும் எவ்வளவு ஈசியா குவஸ்டின் பேப்பர் செட் பண்ணாலும் நான் அதை பாஸ் பண்ணப்போறதில்ல... பொண்ணுங்க என்னோட கேரக்டருக்கு லிட்மஸ் டெஸ்ட் வச்சா... லிட்மஸ் பேபர்ரே கிழிஞ்சிடும் மச்சி...”

“
விவேக்... என்னால முடியல டா...” என்று சிரித்துக்கொண்டே இருந்த ஆர்யாவிடம்,

“நீ வேற மூளையால ஸைட் அடிக்கணும்னு மது சொன்னான்னு சொல்ற... அதெல்லாம் என் விஷயத்துல நடக்கிற காரியமாடா? நாம் இருவர் நமக்கு ஒருவர்ங்கிற இல்லற வாழ்க்கைய எதுக்கு மச்சி சிக்கலாக்கணும்? மூளை, லிட்மஸ் டெஸ்ட் அது இதுன்னு சொல்லி எதுக்கு இல்லற வாழ்க்கையை சிக்கலாக்கணும்?” என்றான் விவேக்.

“ஹா...ஹா...”

“
நான் பேசப் பேச நிறுத்தாம சிரிக்கிற? அப்பவே உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன்... ஆனா பாவம் போனா போகுதுன்னு சொல்லாம விடலாம்னு நினைச்சா... நீ என்னை வம்பிழுத்திழுத்துட்டே இருக்க??”

“
ஹா... ஹா... என்கிட்ட நீ என்ன விஷயம் மச்சி சொல்லணும்?”

“
ஆர்யா வேணா... நீ தாங்க மாட்ட... உன்னை மன்னிச்சி விட்டுருறேன்... பொழச்சிப்போ... சிரிக்க மட்டும் செய்யாத.”

“
ஹா... ஹா... கோழி மிதிச்சி குஞ்சு சாகுமா? பராவாயில்ல சொல்லு மச்சி...” என்றவன் அடக்க மாட்டாமல் சிரித்தான்.

“திரும்பத் திரும்ப சிரிக்கிற? இருடா இரு...” என்ற விவேக் உள்ளறைக்குள் வேகமாக நுழைந்து ஆர்யாவின் கப்போர்ட்களை உருட்டினான். வெளியே வந்தவன், “மச்சி உன்னோட ரெட் கலர் பென் டிரைவ் தான இது?”

“
ஆமா டா.”- விவேக் கையில் இருந்த சிகப்பு நிற பென் டிரைவ்வைப் பார்த்து அலறலாய் ஆர்யா.

“ரெட் கலர் பென் டிரைவ் என் கையில இருக்கு... ப்ளூ கலர் பென்டிரைவ் எங்க?” - நக்கலாய் விவேக்.

“ஓ... மை கடவுளே...”

“
ஹா... ஹா... மதுகிட்ட எந்தக் கலர் பென் டிரைவ் கொடுத்த மச்சி?”

“
ஓ மை காட்... ஓமை காட்...”

“
இப்ப நான் சிரிப்பேனே... ஹா.. ஹா... ஹா...”
 
ஒரு மாதம் கழித்து...

மது கேட்டிருந்த இந்த ஒரு மாத கால அவகாசத்தில் ஆர்யா மதுவினுடன் பேசுவதை முற்றிலும் குறைத்திருந்தான். அவள் இருக்கும் திசைப்பக்கமாகத் திரும்பியும் பார்க்கவில்லை அவன். பென் டிரைவ்வைப் பற்றி ஏதும் கேட்டு விடுவாளோ என்று பயம்... (பலான படங்கள் அடங்கிய ப்ளூ கலர் பென்டிரைவ்) அதனால் நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தபடியே இருந்தான்.

முக்கியமாக லிஃப்ட்டிற்குள் அவன் அவளுடன் தனிமையில் இருப்பதை அரவே தவிர்த்தான். அன்றைய லிஃப்ட்டின் தனிமையில் முத்தம் வரை சென்றவன் அடுத்த தனிமை லிஃப்ட்டில் கிடைத்தால் அது முத்தத்தோடு நிற்காது என்பதை உறுதியாகத் தெரிந்து வைத்திருந்த காரணத்தால் அந்தத் தனிமையைத் தவிர்த்தான்.

தனது அழகு முதலிரவை அவன் லிஃப்ட்டிற்குள் கொண்டாடவும் விரும்பவில்லை.

சரியாக முப்பது நாட்கள் முடிந்தபோது... அந்த முபத்தியோராம் நாள் வந்தபோது...

“மது உனக்கு நான் நாலு ப்ளான்க் மெயில் அனுப்பிருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்துல அதுக்கு எல்லாம் எனக்கு வார்த்தைகள் வேணும்.” என்று மதுவிற்கு வாட்ஸ் ஆப் செய்தான்.

ஆர்யா சொன்ன பத்து நிமிடம் கடந்து போன பிறகுகூட மதுவின் மின்னஞ்சல் வரவில்லை. பற்களைக் கடித்துக்கொண்டு “குண்டம்மா... குண்டு கத்திரிக்கா... அலைய விடுறா பாரு. நாலே நாலு ப்ளான்க் மெயில்... அதுக்கு ரிப்ளை பண்ண முடியில அவளுக்கு...” என்று அவளைத் திட்டியபடியே கோபத்தை அடக்கவே முடியாமல் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்தான்.

மதுவின் கைபேசிக்கு அழைத்தான். நேரில் வரச்சொன்னான். மது நேரில் அவனது கேபினுக்கு ஸ்வீட்டியுடன் வந்தாள். ஆர்யாவுடன் பத்து நிமிடங்கள் பேசினாள். அவனது ரெட் கலர் பென்டிரைவ்வை அவனது கையில் கோபமாகத் திணித்தாள். பிறகு சென்றுவிட்டாள்.

பிறகு விவேக்கிற்கு அழைத்து, “டேய் மச்சான். வாழ்க்கையில முதல் தடவையா தண்ணியடிக்கப் போறேன். பப்புக்கு வர்றியா?” என்று கோபமாகக் கேட்டான் ஆர்யா.

இருவரும் பப்புக்குச் சென்றனர். தண்ணியடித்தனர். வீட்டிற்கு வந்ததும் மௌனராகம் படம் பார்த்துவிட்டு உறங்கினர். மறுநாள் விடிந்து பல மணி நேரம் கழித்து விவேக் எழுந்தபோது ஆர்யாவைக் காணவில்லை.



பெங்களூர் டோல் கேட்...

விவேக் மற்றும் குருவின் உரையாடல்...




“ஹா... ஹா... அந்த ப்ளூ கலர் பென் டிரைவ்வில் என்ன படமெல்லாம் ஆர்யா வச்சிருந்தானாம்? அதைப் பார்த்திட்டுதான் மது கோபமா பேசிருப்பா... அந்தப் படங்கள் பெயர் சொல்லு விவேக்.”

'ரொம்ப முக்கியம்...' என்று வாய்க்குள் புலம்பிய விவேக், “சார்... அதுலாம் எங்கள மாதிரி வயசுப் பசங்க பார்க்கிற இங்கிலிஷ் படம் தான் சார்... வேற எதுவும் தப்பா இல்ல சார். நாங்கலாம் ரொம்ப ரொம்ப நல்ல பசங்க சார்.”

“
உங்கள மாதிரி வயசுப் பசங்கள நம்ப முடியாது. படத்தோட பெயரைச் சொல்லு... அப்பதான் நான் நம்புவேன்.”

விவேக் தலையில் அடிக்காத குறையாக புலம்பியபடி அவர் காதுருகே சென்று அனைத்து படங்களின் பெயரையும் சொன்னான்.

“இந்த படமெல்லாம் ரொம்ப மோசம் இல்லயே... இதுலாம் பார்க்கிறதுல தப்பு இல்லதான்... ஆனா பொண்ணுங்க ஒத்துக்க மாட்டாங்கப்பா. ஆம்பள எனக்குப் புரியிது, ஆனா பொண்ணுங்க ஒத்துக்க மாட்டாங்கப்பா... ஒரு வழியா என்னோட டவுட் தீர்ந்திடுச்சு... மது ஸ்வீட்டிகூட பென்டிரைவ் கொடுக்க அவன் கேபினுக்கு வந்தப்ப தான் அவ அவனோட மூக்குமேல கைவச்சி பேசிருக்கணும்.”- காவல்துறை அதிகாரி சங்கர்.

“சார்... அது அப்படி இல்ல... இது எல்லாம் ஒரு கெட்ட கனவா...”

“
ஆர்யாவை இதையெல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறக்க சொல்றியா? ஆர்யா மதுவை மறக்கவே மாட்டான்... இரு நானே மதுக்கு கால் பண்றேன். பிரச்சனையை எப்படி நல்லபடியா முடிக்கிறேன்னு பாரு...” என்றவர் விவேக்கின் மறுப்பை மீறி மதுவிற்கு அழைத்திருந்தார்.

ஆர்யா மதுவின் சந்திப்பிற்கு நான்கு மணி நேரத்தில் ஏற்பாடும் செய்திருந்தார்.

* * *

மது, ஆர்யா, விவேக், சங்கர் மூவரின் முன்னேயும் இரண்டு மினரல் வாட்டர் பாட்டிலும், ஆளுக்கு ஒரு ஆரன்ஞ் ஜுஸ்ஸும் இருந்தது. அனைவரும் அதை முன்னே வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபோது காவல் துறை அதிகாரி தனது ஜுஸை எடுத்து ஒரு மிடறுகுடித்தபடி பேச்சை மதுவிடமிருந்து ஆரம்பித்தார்.

“ஏம்மா ஆர்யா மூக்கு மேல கையை வச்சி அவனை வேணாம்னு சொன்ன?”- மதுவிடம் காவல்துறை அதிகாரி சங்கர்.

“சார்... அப்படி எல்லாம் மது சொல்லலை சார். மௌனராகம் படம் பார்த்துட்டு படுத்தேனா... அதனால் கனவுல தான் சார் அப்படி ஒரு சீன் வந்தது. அந்தப் படத்துல வரும் ரேவதி-கார்த்திக் சீன் மனசுல அப்படியே பதிஞ்சி, கனவா வந்திடுச்சு...” என்று போதை தெளிந்த ஆர்யா அசால்ட்டாய் சொல்லவும்,

“என்னது கனவா? பின்ன எதுக்கு தண்ணியடிச்ச?”- காவல் துறை அதிகாரி சங்கர்.

“முப்பது நாள் முடிந்தபிறகும் மது மெயில் அனுப்பல உடனே நேர்ல வரச்சொன்னேன்... ஆனா அவ ஸ்வீட்டியோட என் கேபினுக்கு வந்தா. ஸ்வீட்டி முன்னாடி நான் என்னோட லவ்வைப் பற்றி பேச முடியுமா சார்? மெயிலும் அனுப்பல, தனியா வான்னு கூப்பிட்டா ஸ்வீட்டியோட வந்து நிற்குறா... பென் டிரைவ்வைக் கையில கோபமா திணிச்சிட்டு இன்னும் ரெண்டு நாள் டைம் வேணும்னு கேட்டா... அதான் கோபத்துல விவேக்கை பப்புக்கு கூப்பிட்டேன்.”- இப்போதும் கோபமாய் ஆர்யா.

“ஷ்...” என்று பெருமூச்செறிந்துவிட்டு ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை மொத்தமாக தலையில் ஊற்றிக்கொண்டார் சங்கர்.

அப்படியே அவர் கோபமாக விவேக்கைப் பார்க்கவும்,

“சார் நான் தான் ஆரம்பத்துல இருந்து அது ஒரு கனவு, கெட்ட கனவுன்னு சொன்னேன்ல சார்? நீங்க தான் என்னை அதுக்கு மேல பேசவே விடல.”- பயந்தபடியே விவேக்.

“ஷ்...” என்றவர் இன்னொரு மினரல் வாட்டர் பாட்டில் வாங்கி தண்ணீரை முகத்தில் ஊற்றிக்கொண்டார்.

“நீ என்னம்மா வந்த நேரத்துல இருந்து பேசாம இருக்க? ஏதாவது பேசு.”- சங்கர் மதுவிடம்.

“சார்... ஒரு பையனைப் பார்த்ததும் வர்றதுக்கு பேரு லவ் இல்ல சார்... யோசிக்க டைம் வேணும்ல? அந்தப் பையன் நல்லவனா? கெட்டவனான்னு யோசிக்க டைம் வேணும்ல?”

“
ஆமா... ஆமா... நீ சொல்றது ரொம்ப சரி.”

“
அதான் சார்... நான் ஒரு மாசம் டைம் கேட்டேன். அது தப்பா? ஒரு மாசம் டைம் பத்தலை... அதான் ரெண்டு நாள்... ரெண்டே ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா கேட்டேன்... அது தப்பா சார்??” என்று கோபமாகக் கேட்க, அவளைப் பார்த்து பயந்தேபோன சங்கர்,

“தப்பே இல்ல மா... நீ பத்து நாள் எக்ஸ்ட்ரா கேட்டாக்கூட தப்பில்ல...” - சங்கர்.

“தாராளப் பிரபுதான் டா இவரு... நம்மகிட்ட பத்து பத்தா ரெண்டு பத்தாயிரம் வாங்கிட்டு மதுவுக்கு சார் எக்ஸ்ட்ராவாக பத்து நாள் அள்ளிக்கொடுக்கிறார் பாரேன்.”- ஆர்யாவிடம் கிசுகிசுத்தான் விவேக்.

ஆர்யாவும் விவேக்கும் கோபத்தில் வெந்துகொண்டிருக்க சங்கர் அவர்களைக் கண்டு கொள்ளாமல் மேலும் தொடர்ந்தார்,

“நீ ரொம்ப பிரிலியன்ட். நீ என்ன முடிவு எடுத்தாலும் இந்த அங்கிள்கிட்ட சொல்லுமா. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். எனக்கும் இரண்டு பொண்ணுங்க இருக்கு. நீங்க பேசிட்டுக் கிளம்புங்க... வீட்டுக்குப் போனதும் உனக்கு கால் பண்ணி உன்னோட முடிவை கேட்குறேன்.” என்று மதுவிடம் சொன்ன சங்கர், ஆர்யாவிடம் திரும்பி இதற்குதான்... இந்தப் பொம்பள ஹிட்லர் ஃபிகருக்குத்தான் ஆசைபட்டாயா பாலகுமாரா? என்பது போல ஒரு லுக்விட்டுக்கொண்டு, “இந்தப் பொண்ணு என்ன சொல்லுதோ அது தான் முடிவு.” என்று கூறிவிட்டு தனது ஜீப்பில் பறந்துவிட்டார்.

“டேய்... இந்த ஆளை ஆரம்பத்துல இருந்து நம்பக்கூடாதுன்னு என் உள் மனசு சொல்லிட்டே இருந்திச்சு டா. அது சரியாப் போச்சு. ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்பாவாம் டா. மனுஷன் அந்தர் பல்டி அடிச்சிட்டாரே...” என்று ஆர்யாவின் காதில் சொன்ன விவேக், “மச்சி இந்தா உன் ஃபோன், இன்னிக்கு தான் அந்த போலிஸ்காரர் கொடுத்தார். நான் கிளம்புறேன்பா, நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க.” என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான்.

ஆர்யாவைப் பார்த்து, “தண்ணியடிச்சிருக்க நீ?” என்று கோபமாகப் பேசிவிட்டு மதுவும் நகரப்போன போது,

“மது அப்படின்னா என்னோட நாலு மெயில்ல ஒன்றுக்குகூட நீ பதில் அனுப்ப மாட்டியா?” என்று அமைதியாகக் கேட்டான் ஆர்யா.

“உன்னோட மெயிலைப் பாரு ஆர்யா.” என்ற மது ஆர்யாவிடம் முகத்தைக் காட்டாமல் கோபமாகச் சொன்னாள்.

ஆர்யா வேகமாக தனது கைபேசியை உயிர்ப்பித்தான். அதில் தனது மின்னஞ்சல்களைத் திறந்து பார்த்தான்.

முதல் மின்னஞ்சல் சொன்னது,

“ஆர்யா நீ நல்ல பையன். L.K.G யில இருந்து ஒரே ஃப்ரண்ட்டை வச்சிருக்கும் பையன், அம்மாவுக்காக கோயிலுக்கு போகும் பையன், ஒரு மாசம் ஒரு பொண்ணோட பதிலுக்காக அமைதியா வெயிட் பண்ண பையன் ரொம்ப ரொம்ப நல்ல பையன் தான்.”

இரண்டாவது மின்னஞ்சல் சொன்னது,

“உன்னோட பென்டிரைவ்ல நீ இருபது ப்ளூ கலர் படம் வச்சிருந்தாலும் அதில் ஆஸ்கார் அவார்ட்டு வாங்குன பத்து படம் இருந்ததைப் பார்த்தபோது... முக்கியமா Shawshank Redemption, Titanic, The Notebook, a moment to remember, Slum dog millionaire படங்கள் இருந்ததைப் பார்த்தபோது நான் ப்ளாட் ஆகிட்டேன் ஆர்யா... உன்னை மிஸ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு.”

மூன்றாவது மின்னஞ்சல் சொன்னது,

“ஆர்யா ஐ டூ லவ் யூ.”

நான்காவது மின்னஞ்சல் சொன்னது,

“மிச்சத்தை நேர்ல பேசலாமா?”

ஆர்யா மின்னஞ்சல்களைப் படித்ததும் “மது” என்று ஆசையாய் அழைத்தான்.

“ஹா ஹா...” என்று ஆர்யாவின் முகம் பார்த்து வெட்கமாய் அளவாய் சிரித்தாள் மதுமிதா.

சட்டென ஆர்யா மதுவை இறுகக்கட்டிக்கொண்டு சிரித்தான்.

அதைப்பார்த்து “ஹா... ஹா...” என்று அட்டகாசமாய் சிரித்தார் லவ் குரு.

எதுக்கு லவ் குரு சிரிச்சார்?

“சார், எதுக்கு சிரிச்சீங்க?”- நான்.

“....”- லவ் குரு.

“சார், உங்களைத்தான்... எதுக்கு சிரிச்சீங்க? இப்பவும் அவுங்களை பிரிக்கப் போறீங்களா? நீங்க மோசமான வில்லன் சார்.”- நான்.

“அவுங்க சரியாதான் லவ் பண்றாங்க. இப்ப எதுக்கு அவுங்களை நான் பிரிக்கணும்?”- லவ் குரு.

“என்ன சார் சொல்றீங்க? புரியல.”- நான்.

“என் பேரு குரு. செல்லமா எல்லாரும் லவ் குருன்னு கூப்பிடுவாங்க. யாராவது தப்புத் தப்பா லவ் பண்ணா அந்த லவ்வை பிரிச்சிடுவேன். எனக்கு அது பிடிக்காது. அதே மாதிரி பசங்க பொண்ணுங்களை டிஸ்டர்ப் பண்ணாலும் ஏதாவது பண்ணி...”- லவ் குரு.

“ஆட்டத்தைக் கலச்சி விட்டுருவீங்க.”- நான்.

“ம்... சரியாச் சொன்னீங்க. ஆட்டத்தைக் கலச்சி விட்டுருவேன். மது விஷயத்துல மதுவை ஒரு மாசம் யோசிக்க விட்டது மட்டும் தான் என்னோட வேலை. மற்றபடி மதுவே சரியா யோசிச்சி சரியான வயசுல சரியான முடிவு எடுத்திருக்கா. மனசுக்குள்ள ஆர்யாவுக்கு ஒரு பெரிய டெஸ்டே வச்சி தான் அவனை செலக்ட் பண்ணிருக்கா...”- லவ் குரு.

லவ் குருவுடன் நான் பேசிக் கொண்டிருக்கும் போதே நான்கு விடலைப் பையன்களும் மூன்று பெண்களும் அவரைக் கடந்து நடந்து சென்றனர்.

“ஏங்க இப்ப நான் போலாமா?” - லவ் குரு.

“எங்க போறீங்க?”- நான்.

“இப்ப ஒரு நாலு பசங்க போனாங்களே... அங்கதான் போறேங்க. அந்தப் பசங்கள்ல ஒருத்தன் ஒரு பொண்ணை லவ் பண்றான். அந்தப் பையன் உண்மையா லவ் பண்றானா, இல்ல தப்பான எண்ணத்தோடு இருக்கானான்னு நான் தெரிஞ்சிக்கணும். அந்தப் பொண்ணு ரொம்ப ரொம்ப நல்ல ஆத்மாங்க. அந்தப் பொண்ணுக்கு இப்ப என்னோட உதவி தேவைங்க. நான் வர்றட்டா?”

“
சார்...”- அவரை விட மனமில்லாமல் நான்.

“இப்ப என்னங்க?”- அவரசமாய் பேசியபடி மிஸ்டர் லவ் குரு.

“சார்... நீங்க சொல்றது லேசா புரியிது...”

“
தெளிவா சொல்றேன் கவனமா கேட்டுக்கோங்க. தப்பான எண்ணத்தோடு தெளிவில்லாத புத்தியோடு பசங்க நல்ல பொண்ணுங்களைத் தொந்தரவு பண்ணா... ரெண்டு பேரோட நன்மைக்காக...”

“
ஆட்டத்தை கலச்சி விட்டுருவீங்க. அப்படித்தான?”- நான்.

“ஹா... ஹா... ஹா... எனக்கு அடுத்த வேலை காத்துட்டு இருக்குங்க. டாட்டா...” என்று கூறியபடியே பேய் அலறலாய் சிரித்துக்கொண்டே மாயமாய் மறைந்து போனார் மிஸ்டர் லவ் குரு.

* * *



அழகிய முதலிரவில்...

“
கிட்டவா... மது... முதல் பட்டனையே எவ்வளவு நேரம் திருகிட்டே இருப்ப? இரண்டாவது மூனாவது எல்லாம் ரொம்ப நேரமா வெயிட் பண்ணுதுல? நீ அடுத்த மாசம் அமெரிக்கா போயிடுவ... இன்னும் ஒரு வருஷம் கடல் தாண்டி பறந்து பறந்து வந்து கிடைச்ச நேரத்துல குடித்தனம் பண்ணணும்... எவ்வளவு நேரம் பேசிட்டே இருப்ப?” - ஆர்யா.

“அதான் ஆறுமணிக்கே தூக்கம் வருதுன்னு சொல்லி ரூமுக்குள்ள என்னையும் இழுத்துட்டு வந்திட்டீல? இது ஃப்ர்ஸ்ட் நைட் இல்ல... ஃப்ர்ஸ்ட் ஈவினிங். என் மானமே போச்சு, ஜானு எப்படி சிரிச்சா தெரியுமா? இன்னும் கொஞ்ச நேரம் பேசலாம். பதில் சொல்லுப்பா. உனக்கு எத்தனை கிரஷ் வந்திருக்கு? எவ்வளவு நேரமா கேட்குறேன்... எனக்கு தொண தொணன்னு புருஷன் சட்டையப் பிடிச்சி கேள்வி கேட்குறதுலாம் பிடிக்கவே பிடிக்காது. I dont like nagging wives you know...”

“மூனு கிரஷ் வந்திருக்கு. என்னோட மூனு கிரஷ்ஷும் ஒரே பொண்ணுதான். முதல் நாளே யாருடா அந்த கிரஷ்னு என் சட்டையைப்பிடிச்சி கேட்காத குறையா கேட்டீல? அப்பவே You have started to nag madhu... and you know wife always nags...'

“ஏய் பேச்சை மாற்றி சமாளிக்காதப்பா... பாதி பதில் தான் சொல்வியா? மூனு கிரஷ்ஷும் ஒரே பொண்ணா? அப்படின்னா அந்தப் பொண்ணு பேரு என்ன?”

“
என்னோட 1st , 2nd மற்றும் 3rd கிரஷ்ஷா? என்னோட மூனு கிரஷ்ஷும் யாருன்னா...” என்று மீண்டும் மீண்டும் சொன்ன ஆர்யா அவளது இதழ்களை மீண்டும் மீண்டும் முத்தமிட்டுச் சிரித்தான்.

அவனது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கிரஷ்ஷின் மொத்தமும் சகலமும் அவனது இதழ்களால் கசங்கிக் கிரஷ்ஷாகிக் கொண்டிருந்தது அந்த இரவு முழுவதும்.

* * *



சுபம்

ஆறடி உயரமும் யவன அழகும் என்றும் இல்லறத்திற்கு உதவாது. இதுபோன்ற லிட்மஸ் பரீட்சைகளே உதவும்...

இந்தக் காதலின் லிட்மஸ் பரீட்சையை ரசித்ததற்கு நன்றி.



எனது பிற நூல்கள்: ( all available in kindle )

1) சிற்பமும் அவள் சிற்பியும் அவள். (this is not yet uploaded)

2) ஷ்... இது வேடந்தாங்கல்.

3) காஜலிட்ட விழிகளே...

4) டைட்டானிக் கனவுகள்...

5) லட்சம் காதலால் காதல் செய்.

6) ஆயூத எழுத்தில் காதல்.
 

New Threads

Top Bottom