Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comment thread for Shivani's novels

Messages
74
Reaction score
72
Points
18
Oh God akka intha sidhu ku avan name vayilaye varatha. Epa parthalum vedhava problem la ilithu vitukitu irukan..enna design avan😤🤣🤣🤣🤣..interesting epi akka 😍😍😍
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63

அத்தியாயம் 5



வருடம் 1977


மழைப்பொழிவை மக்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்திருந்த சமயத்தில் ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது. உணவுக்கு வழியில்லாமல் மக்கள் எலியைப் பிடித்து சுட்டு தின்னும் அளவிற்கு மெலிந்து கிடந்தனர். அச்சமயம் உணவுப் பிரச்சனைக்கு தீர்வு வேண்டி மக்கள் அனைவரும் பஞ்சாயத்து தலைவர் வீட்டு வாசலை முற்றுகையிட்டனர்.

"என்னலேய்! இந்நேரத்துல என் தாலிய வந்து அறுக்குதிய?.." என்று சலித்துக்கொண்டார் பஞ்சாயத்துத் தலைவர்.

பின், திரும்பிச் செல்லக்கூட முடியாமல் சோர்ந்து கிடந்தவர்களை, "இன்னும் ரெண்டு நாள் பொறுங்கடே.. என்னன்னு சர்க்கார் கிட்ட கேட்டு சொல்லுதேன்.. எல்லாரும் நிலத்தை விக்க தயாரா இருக்கிய இல்ல?.. பின்னாடி எல்லாம் தயாரா இருக்கும் போது தகராறு பண்ணுனீயன்னா சரியா இருக்காது சொல்லிப்புட்டேன் ஆமா?.. ம்ம்! ம்ம்! கிளம்புங்கடே!.. மூணாம் நாள் உங்களுக்கு கறிசோறு தான்.." என்று புணத்தின் மீது கிடக்கும் வாய்க்கரிசிக்கு ஆசைப்பட்டார் பஞ்சாயத்துத் தலைவர்.

அனைவரும் அந்த மகிழ்ச்சியான செய்தியுடன் வீடு போய் சேர, சிதம்பரம் மட்டும் தன் வயலுக்குச் சென்றார்.

இவ்வளவு நாள் பொன் முட்டையிடும் வாத்து போல் வயிறு நிரப்பிக் கொண்டிருந்த வயலை ஒரேடியாக அறுத்து பஞ்சாயத்தாருக்கு விருந்து வைப்பதில் உடன்பாடில்லை அவருக்கு.

"ஏ நிலமே! நீ இல்லாம நா இருப்பேன். நா இல்லாம நீ இருப்பியா?" - புத்தி பேதலித்தது போல் நள்ளிரவில் இருட்டில் பழகிய கண்களுடன் நிலத்தை தடவி தடவிப் பேசிக் கொண்டிருந்தார் சிதம்பரம்.

அப்போது வானில் திடீரென தூரத்தில் ஒரு வெளிச்சம் போல் தெரிய தன் முட்டை கண்களை கூர்மையாக்கினார்.

அதேநேரம் அமெரிக்காவின் கொலம்பஸ் மாநகரில் உள்ள பிக் இயர் ரேடியோ டெலஸ்கோப்பிலும் வேற்றுக்கிரக வாசிகள் அனுப்பியதாய் சொல்லப்பட்ட சிக்னல் தொடர்ந்து எழுபத்திரண்டு வினாடிகள் பதிவாகியிருந்தது.

அதை டீகோடிங் செய்த போது '6EQUJ5' என்ற குறியீடும் கிடைக்கப்பெற்றது. வானியல் விஞ்ஞானிகள் அந்த சிக்னலுக்கு 'வாவ் சிக்னல்' என்று பெயரிட்டனர்.

ஆனால், அந்த சிக்னலின் பொருள் மட்டும் புரியவில்லை அவர்களுக்கு.

போகப் போக அந்த வெளிச்சம் தன்னை நோக்கி வருவது போல் தோன்ற, கண்களை தேய்த்துவிட்டுக் கொண்ட சிதம்பரம், ஓடிப்போய் அங்கிருந்த மரத்திற்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டார்.

அந்தப் புள்ளி வெளிச்சம் பெரிதாய் மாறிக்கொண்டே வந்து, சற்று முன் அவர் விழுந்து கிடந்த இடத்தில் வந்து லேண்டாகியது.

v1eGC1rtatvFOAJ_eZoUyVKLEPbq0qJ6pm2p5Gd2P5sVKESui2k3j4Rf3RAk0fipMiuKjZb2M6eYxrKdczeCMKV7jAaLQaUOuj6IJPMqwp0qAmy_ElT6lUYBWfucOvs2o9cvQok_


ஏதோ முட்டை போல் குடுவை வடிவில் இருந்த ஒன்று பிரகாசமாய் மின்னியதைக் கண்டு ஒரே ஆச்சரியம் சிதம்பரத்திற்கு.

திடீரென அந்த முட்டைக் குடுவை பிளவுபட்டு, ஏணி போல் ஒன்று இறங்க, அதிலிருந்து திடகாத்திரமாய் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் இறங்கி நின்றான்.

அவன் முழுவதும் ஸ்பேஸ் சூட்டால் கவராகி இருந்தது கண்டு, பயத்தில் தன் நெஞ்சில் கை வைத்தார் சிதம்பரம்.

இறங்கி நின்றவன் அங்குமிங்குமென நடை பழகிவிட்டு, தன் உடைகள் ஒவ்வொன்றாய் கழற்ற ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்தில் தன் உடைகள் முழுவதுமே களைந்துவிட்டு நிர்வாணமாய் நின்றான். அவன் தலையிலும் முடி இல்லை. ஆனால், கண்கள் மட்டும் பொன் நிறத்தில் மின்னியது.

அது ஏதோ பேயோ என்று பயந்து பார்த்திருந்த சிதம்பரம், தான் காண்பது கனவோ நிஜமோ எனும் குழப்பத்தில் தன்னை கிள்ளிப் பார்த்தார். ரொம்பவே வலித்தது அது.

'அப்போ உண்மை தான்!' என்ற உறுதியில் ஒவ்வொரு கணமும் பகீர் பகீரென்று அவனைப் பார்த்திருக்க, மின்னும் கலத்திலிருந்து இறங்கி நின்றவன் திடீரென தன் காலைப் பிடித்துக் கொண்டான்.

கலத்திலிருந்து வந்த வெளிச்சத்தில் எட்டி என்னவெனப் பார்த்தவருக்கு அழகாய் அவன்முன் படமெடுத்து நின்று கொண்டிருந்த ராஜநாகம் தெரிந்தது.

இவ்வளவு நேரம் அங்கு தான் படுத்துக் கிடந்தார் சிதம்பரம். அப்போதெல்லாம் இந்த ராஜா எங்கு கிடந்தானோ தெரியாது. ஒருவேளை அவன் சிதம்பரத்தை தன் 'நண்பன்' என்று கூட நினைத்திருக்கலாம்.

வேற்று மனிதனைக் கண்டாலே சீறுபவன் வேற்றுக் கிரகவாசியைக் கண்டால் சும்மா இருப்பானா என்ன? அதான் பொட்டென்று ஒரு போடு போட்டுவிட்டான்.

எப்போது பாம்பு கொத்தி வலியில் அவன் காலைப் பிடித்தானோ அப்போதே அவன் மனிதன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது சிதம்பரத்திற்கு.

ஒரு மனிதனுக்கு சக மனிதன் உதவவில்லை என்றால் என்ன பெரிய மனிதன்?

உடனே ஓடிப்போனார் சிதம்பரம். அவர் ஓடிவந்த அதிர்விலோ என்னமோ சட்டென்று மயக்கம் போட்டு விழுந்தது ராஜநாகம்.

ஓடிப்போன சிதம்பரத்திற்கு திடீரென ஒரு குழப்பம்.

இப்போது பாம்பு கொத்திய அவனை காப்பாற்றுவதா? இல்லை அவனை கொத்தியதால் செத்தது போல் விழுந்து கிடக்கும் ராஜநாகத்தை காப்பாற்றுவதா? இல்லை பாம்பே மயக்கம் போட்டு விழும் அளவிற்கு விஷம் பொருந்தியவன் முன் அவசரப்பட்டு வெளிப்பட்டு விட்டோமே நம்மைக் காப்பாற்றுவதா? என ஏகப்பட்ட சந்தேகம்.

துணிந்து வந்துவிட்டதால் முதலில் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து அந்த வேற்று கிரகவாசியின் அரையில் கட்டுவது போலவே ஓடிவந்தார் சிதம்பரம். வந்து கட்டவும் செய்தார். பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை அந்த வேற்றுகிரகவாசி.

"என்னாயிட்டு தம்பி, பாம்பு கடிச்சிட்டோ?.. இருங்க இங்க பக்கத்துல தான் சிறியாநங்கை செடி இருக்கு.. இலைய பறிச்சிட்டு வாரேன்.."

மறுப்பு எதுவும் சொல்லவில்லை அவன். அவர் பேசியது புரிந்தால் தானே மறுப்பு தெரிவிக்க?

கைகளை விரித்துக்கொண்டு காற்றின் அதிர்வலைகளை உணர முயன்றான்.

சிதம்பரத்திற்கு புரிவது போல் சொல்லவேண்டுமானால் அந்த வட்டார மொழியை புரிய முயற்சி செய்தான் அவன்.

காற்றில் கரைந்த வார்த்தைகள் பல அவன் சக்தி எல்லைக்குள் வந்துபோனது.

சிறியாநங்கை பறிக்கச் சென்றவர் வரும் நேரத்திற்குள்ளாகவே மொழியை, அதாவது காற்றில் துகள்கள் அசைவிற்கும் மக்கள் சொல்ல விரும்புவதற்கும் உள்ள தொடர்பை உணரும் திறனை பெற்றான்.

தன் சக்தியின் மூலம் அந்த வட்டாரத்தில் காற்றில் மீயொலியாய் மிதந்து வந்த வார்த்தைகளை கேட்டான் சரி. பொருளை எப்படி அறிந்தான்?

காற்றின் அலைவரிசையை கேட்டுக்கொண்டே தலையாட்டி பதிலளித்துக் கொண்டிருக்கும் மரங்களின் மூலம் தான் பொருள் அறிந்தான் அந்த வேற்றுகிரகவாசி.

இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. மரங்களுக்கு பேசத்தெரியுமா? என்று கேட்டால் அது பேசுவதை நாம் கவனிக்கவில்லை என்று சொல்வதே நியாயமாக இருக்கும்.

ஒரு செடியிடம் அன்பாக ஆறுதலாக தினமும் பேச்சுக்கொடுத்தால், அது ஒரு செடியின் சாதாரண வளர்ச்சியைக் காட்டிலும் அதிக வளர்ச்சியுடன் காணப்படுமாம்.

இந்திய விஞ்ஞானி சந்திரபோஸ் அவர்கள் மயக்க மருந்தை தாவரங்களின் மேல் தெளித்து அவை தொய்ந்து மயங்கி விழுவதைக் காட்டி, தாவரங்களுக்கும் உயிருண்டு என்று நிரூபித்து நோபல் பரிசை தட்டிச் சென்றது போல், தாவரங்களும் பேசும், அந்த அந்த நிலத்தின் வட்டார வழக்கையும் புரிந்து கொள்ளும், மேலுக்கு பதிலும் அளிக்கும் என்பதை நிரூபிக்க நமக்கு இன்னும் இருபது ஆண்டுகாலம் ஆகலாம்.

ஆனால், அறிவியல் துறையில் பெருவளர்ச்சி பெற்றிருந்த அந்த வேற்றுக்கிரக வாசிக்கு தாவரங்களின் மூலம் மொழியறிதல் ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை.

சிறியா நங்கையுடன் ஓடிவந்த சிதம்பரம் தனக்கு கட்டுப்போடுவதைப் பார்த்து, "சிதம்பரம் எனக்கு எதுவும் ஆகாது.. அது எனக்குத் தேவையில்லை" என்று மறுத்தான் அவன்.

"சிதம்பரமா? என் பேர் உனக்கெப்படி தம்பி தெரியும்?"

'இதோ இப்போ தான் இந்த மரம் சொன்னது' என்று எதிரிலிருந்த புளியமரத்தை காண்பித்தான் அவன்.

சிலநேரம் அசதியில் அங்கு தான் துண்டை விரித்துப் படுப்பார் சிதம்பரம். தங்கப்பழம் கஞ்சி ஏதேனும் கொண்டு வந்தாலும் அங்கு அமர்ந்து தான் கதை பேசிக்கொண்டே குடிப்பார்.

"இந்த மரமா சொல்லுச்சி என் பேரை?"

"ம்ம்.. உங்களைப் பத்தியும் சொல்லுச்சி.."

"அது சரி.. புளியமரத்துக்கும் பூதத்துக்கும் சும்மாவா முடிச்சுப் போட்டாங்க.. ஆமா தம்பிக்கு எந்த ஊரு?.. வண்டியப்பாத்தா பட்டணம் மாதிரி தெரியுது.. மெட்ராசுல இருந்தா தம்பி வர்றீய?.. செத்த நேரத்துக்கு முன்னாடி நீங்க கழட்டிப் போட்டியளே அது என்ன உடுப்பு தம்பி?.. ஆமா, என்ன தம்பி இது? குட்டி விமானமா?" என்று பரபரத்தார் சிதம்பரம். அவருக்கு அந்த வண்டி என்னவென்று தெரிந்து கொள்ள ஆவல்.

அந்த குடுவையின் மேல் சிவப்பு வண்ணத்தில் ஏதேதோ குறியீடுகளும் மின்னி அவரது ஆர்வத்தை தூண்டிவிட்டன.

பாவம் சிதம்பரத்திற்கு எங்கே தெரியப்போகிறது? அந்த குடுவையில் எழுதியிருக்கும் குறியீடு '6EQUJ5' க்கு தான் வானியல் ஆய்வாளர்கள் அர்த்தம் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று.

"என் பேரு ப்ரோடோஸ்.. நான் ஆல்பா கிரகத்துல இருந்து வரேன்.."

"அது சரி, அந்த கிராமம் எந்தப் பக்கட்டு தம்பி இருக்கு? வடக்கையா? தெக்கையா?"

"அது கிராமம் இல்ல.. கிரகம்.. சூரிய குடும்பத்துக்கு வடக்குல இருக்கு.. உங்க கிரகத்தை விட ரொம்ப ரொம்ப பழமையானது எங்க கிரகம்.. பெருசும் கூட.. நான் இப்போ எங்க அப்பாவைத் தேடி இங்க வந்திருக்கேன்.."

"தம்பி, நீங்க என்ன சொல்லுதியன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.. எதுவாயிருந்தாலும் நாளைக்கு காலைல பஞ்சாயத்து தலைவர்கிட்ட பேசிக்கிடலாம்.."

"ம்ஹீம், அந்த ஆள் கெட்டவன்னு இப்போ தான் புளியமரம் சொன்னது.. நான் இந்த பூமி கிரகத்துக்கு தலைமை யாரோ அவர்கிட்ட பேசணும்.. எங்கப்பா எங்க இருக்கார்னு அவர்கிட்ட கேட்கணும்"

"என்ன தம்பி யாரோ பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் பார்க்கணும்னு அடம்பிடிக்கிய?.."

"கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க கிரகத்தோட தொடர்பு வச்சிக்கிறதுக்காக எங்கப்பாவை ஆல்பா கிரகத்துலயிருந்து இங்க அனுப்பி வச்சாங்க.. ஆனா, அதுக்கப்புறம் அவரைப் பத்தி எந்தத் தகவலும் எங்களுக்கு கிடைக்கல.. அதான் அவரைத் தேடி நான் இங்க வந்திருக்கேன்.. அதுவும் எங்க கிரகத்துல இருக்கிறவங்க யாருக்கும் தெரியாம இங்க வந்திருக்கேன்.."

"ஏன் தம்பி தனியாவா வந்திருக்கிய?"

"இல்ல இம்வாலா என் கூட இருக்கான்.."

"யாரது காமீங்க?.."

"இல்ல உள்ள இருக்கான்?" என்று தான் வந்த அந்தக் குடுவையை கை நீட்டி காண்பித்தான் ப்ரோடோஸ்.

தன் தந்தை டெத்தீஸ் செய்த அதே தவறை தானும் செய்தான் ப்ரோடோஸ்.

ஒரு வருடத்திற்கு முன்பு பூமி வந்த அவனது தந்தை மட்டும் பத்திரமாக கிரகம் திரும்பியிருந்தால் அவர் சொல்லும் முதல் தகவலே, பூமிவாழ் மனிதர்களுக்கு இன்னும் இம்வாலாவைப் பற்றிய புரிதல் இல்லை என்பது தான்.

இம்வாலா கடலின் அடி ஆழத்தில் வாழும் ஒரு மூன்றறிவு உயிரினம். பார்ப்பதற்கு பச்சையும் நீளமும் கலந்து அசல் பாறை போலவே இறுகி காட்சியளிக்கும்.

ஆனால், மனித ஸ்பரிசம் பட்டால் அவர்களின் உடல் வெப்பத்திற்கு மயங்கி செல்லப் பிராணியாக மாறிவிடும்.

இந்த அதிசய உயிரினத்திற்கு ஒரு குணம் உண்டு. கடலின் அடியில் இருக்கும் போது மட்டும் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் இம்வாலா குட்டி, வெளியே எடுத்து வளர்க்கப்படும் போது பௌர்ணமி நாளில் மட்டும் துளிர்த்தெழுந்துவிடும்.

ஏனெனில் பௌர்ணமி ஒளியே அதன் பிடித்தமான உணவு.

எவ்வளவு ஒளியை சேமிக்கிறதோ அதை நான்மடங்காக்கும் சக்தி உள்ளது இம்வாலாவுக்கு. பின், செரிமானம் அடைந்தது போல் வேறொரு அலைநீளத்தில் கதிர்களை வெளியிடும். அக்கதிரைக் கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர் ஆல்பா கிரகத்து மக்கள்.

இம்வாலாவை சிறிது நேரம் நீரில் போட்டு, பின் அந்தக் கழிவுநீரை குடிக்கும் போது, அவர்களுக்கும் இம்வாலாவின் சக்தி உடலில் வந்துவிடும் என்பது கூடுதல் தகவல்.

இம்வாலாவை ஒரு ஆபத்தாண்டவனாகவே கருதினர் ஆல்பா கிரகத்து மக்கள். அதனால் எங்கு சென்றாலும் அதனை உடன் எடுத்துச் சென்றனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு ப்ரோடோஸின் தந்தை பூமி வந்தபோதும் இப்படி தான் இம்வாலாவை தூக்கிக்கொண்டு வந்திருந்தார்.

அவர் வந்திறங்கிய இடம், தென் அமெரிக்காவில் உள்ள, அந்தீசு மலைத்தொடர். அங்கு பண்டை நாகரிகத்தினரான இன்கா நாகரிகத்தினர் தான் பெரிதும் வாழ்ந்து வந்தனர்.

சூரியனுக்கு கோவில் கட்டி, கடவுளாக வழிபடும் கலாச்சாரம் உடையவர்கள் அம்மக்கள்.

அவர்களைப் பொறுத்தவரை மன்னரே சூரியனின் பிரதிநிதி. அவர் இறந்து விட்டால் அவர் உடல் பதப்படுத்தப்பட்டு, அந்த கோவிலிலேயே புதைக்கப்பட்டுவிடும். அவர் உடைமைகள், அவர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றையும் அவருடன் சேர்த்து புதைத்து விடுவர்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், அரசர் இறந்தவுடன் அவரின் பணியாட்களும் கொல்லப்பட்டு அரசருடன் அடக்கம் செய்யப்படுவது தான்.

இதற்கு காரணம் இன்கா மக்கள் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்ததே.

இறப்பு என்பது பல சிக்கல்களை கொண்ட அடுத்த உலகத்திற்கு ஒரு பாதை என்றே நம்பினர் இன்கா மக்கள். நரபலியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் அவர்கள்.

வருடத்திற்கு ஒருமுறை சூரிய பகவானிற்காக விழாக்கள் எல்லாம் எடுக்கப்படும் அங்கு. கூட்டத்தில் முன்னோர்களில் ஒருவர் சூரியபகவானிடம் பேசுவார். சூரியனாரை பூமி வரச்சொல்வதே அவர்களின் முக்கிய வேண்டுகோளாக இருக்கும்.

யாரேனும் 'சூரியன் கடவுள் இல்லை' என்று கூறி அவரை ஏற்க மறுத்தால், உடனே மரணம் தான்.

இப்படிப்பட்ட ஒரு கூட்டத்திடம் சென்று தான் மாட்டிக்கொண்டார் டெத்தீஸ்.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் அவரை அவர்கள் சூரியபகவானின் சேவகனாக நினைத்தது தான்.

ஆம், உடல் முழுவதும் காயத்தால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவனுக்கு இம்வாலாவை குளிப்பாட்டிய நீரை கொடுத்து காப்பாற்றினார் டெத்தீஸ். அதுவே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாகியது.

அவர் அங்கு இறங்கிய இரண்டாம் நாளே அவரிடமிருந்து இம்வாலாவை கைப்பற்றியவர்கள், அவரை கூட்டாக சேர்ந்து திட்டமிட்டு கொலையும் செய்துவிட்டனர். அது அவர்களுக்கு தவறாக தெரியவில்லை. தங்களின் அச்செயலால் கடவுளை தங்களுடனேயே இருத்தி வைத்து விட்டதாகவே, மகிழ்ச்சியில் திளைத்தனர்.

டெத்தீஸ் வந்த வாகனத்தை குழிதோண்டி புதைத்தவர்கள், பொழிவுடன் தோன்றிய இம்வாலாவை மட்டும் தங்களின் கோவிலுக்கு எடுத்துச்சென்று வழிபாடு நடத்தத் தொடங்கினர்.

இப்போதும் புதிதாக இன்கா மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் காண யாரேனும் சென்றால், இம்வாலாவையும் அவர்களின் வழிபாட்டையும் கண்டு, கல்லை வழிபடும் முட்டாள்கள் என்றே கருதக்கூடும்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இம்வாலா உக்கிரமாகக் காணப்படும் என்று யாரும் தங்கள் குடிலைவிட்டு வெளியே வரமாட்டார்கள். ஆனால், அந்த உக்கிரத்தின் முடிவில் கண்டிப்பாய் மழைவரும் என்று மட்டும் அவர்களுக்குத் தெரியும்.

இம்வாலாவால் மாதம் தவறாமல் மழை பெய்து அப்பகுதியே செழித்துக் காணப்பட்டது. கூடவே நன்னீர் உப்பாக மாறும் அதிசயமும் நிகழ்ந்தது.

ஒரு உயிரின் ரத்தத்தில் ஒரு நாகரீகமே வளத்தில் செழித்துக் கொழித்தது.

இவ்வாறு இன்கா இன மக்களால் தன் தந்தை கொல்லப்பட்டார் என்பதை அறியாத ப்ரோடோஸ், ஒரு பூமி மனிதனை நம்பி தன்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் கூறிக் கொண்டிருந்தான்.

சிதம்பரம் அவனிடம், "சரி தம்பி, நீங்க யாரையோ தேடி வந்திருக்கிய.. நிச்சயம் போலீஸ்கிட்ட சொல்லி காலைல கண்டுபிடிச்சிரலாம்.." எனும்போதே சரியென்று விட்டு குடுவைக்குள் சென்று வந்தான் அவன்.

அவன் வரும்போது அவன் கைகளில் பச்சையும் மஞ்சளுமாய் மின்னிய பாறை ஒன்றையும் எடுத்து வந்தான்.

அந்த அத்துவானக் காட்டிற்குள் யாரும் திருடி விடுவார்களோ எனப்பயந்து அவன் வந்த வாகனத்தை அங்கு கிடந்த காய்ந்த செடிகொடிகளை கொண்டு மறைத்து வைத்தார் சிதம்பரம்.

பின், அவன் கைகளில் பூப்பந்தைப் பிடித்திருப்பது போல் இம்வாலாவை தூக்கிக்கொண்டு அவருடன் நடக்க, தன் ஊரின் அருமை பெருமைகளை எல்லாம் சொல்லிக் கொண்டே உல்லாசமாய் நடந்துவந்தார் சிதம்பரம்.

வழியில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் போதே கரடுமுரடான பாதையில் நடக்க முடியாமல் கால்தட்டி கீழே விழுந்தான் ப்ரோடோஸ்.

அவன் கையிலிருந்த இம்வாலாவும் பொத்தென்று கீழே விழுந்தது.

அவனின் கைகளின் உஷ்ணத்தில் அடங்கி ஒடுங்கி இருந்த இம்வாலா, தரையை நோக்கி விழுந்ததும் தன் உடலில் இருந்த நுண்துளை கண்களால் வானைப் பார்த்தது.

ஒவ்வொரு நட்சத்திரமும் அதனை பார்த்து கண்ணடித்தது அதற்கு சந்தோசத்தைக் கொடுத்தது.

மகிழ்ச்சியுடன் அவற்றிற்கு அருகிலிருந்த நிலவின் ஒளியை தன் நுண் துளை கண்களால் உறிஞ்சி உறிஞ்சி அடங்கியது இம்வாலா.

இடைப்பட்ட இந்த நிகழ்வில் மேகக் கூட்டங்களும் அவ்விடம் நோக்கி விரைந்து வந்து மழைப்பொழிவை உண்டாக்கியது.

இம்வாலாவும் ப்ரோடோஸும் விழுந்த போதே பதறிப்போய் இருவரையும் தூக்கப்போன சிதம்பரம், இம்வாலா செய்த அற்புதத்தில் வாயைப் பிளந்து நின்றார்.

இவ்வளவு நாள் இந்த வறண்ட கானகத்தில் எதற்காக தவமாய் தவமிருந்தாரோ, அதை ஒரே நிமிடத்தில் நிகழ்த்தி விட்டது இம்வாலா.

வாங்கலும் கொடுக்கலும் தொடரும்❣️
twst akka:love: .....vithasama erukku:unsure: ...yenaku entha mari other plant time travell story la romba pudikkum ...athanalaye Ben10 cartoon la papa :D:rolleyes:ana eppatha first time oru story ya padikkara
 

R.Nivetha

Member
Messages
47
Reaction score
35
Points
18

அத்தியாயம் 15​



காமம் குடித்து பித்தேறிக் கிடந்த இருள் தெளிந்த போது, படுக்கையில் இருந்து தன் தலையைப் பிடித்துக்கொண்டே எழுந்த சஞ்சனா, அவ்வறையில் யாருமில்லை எனவும் குளியலறை நுழைந்தாள்.

அங்கு ஓரமாய் இருந்த அறையில் திறந்திருந்த நிலைப்பேழையில் அவளுக்கென்று உடைகள் வைக்கப்பட்டிருக்க, குளித்து முடித்து அதை அணிந்து கொண்டாள்.

கண்ணாடியில் பார்த்தபோது அந்த இளஞ்சிவப்பு நிற அம்ப்ரெல்லா பாவாடையும், வெள்ளை நிற ரவிக்கையும் அவளையே அவளுக்கு வித்தியாசமாய் காட்டின.

தான் இன்னும் கொஞ்சம் அழகாகியது போல உணர்ந்தாள் சஞ்சனா.

பின், தனது முடியை உலற வைத்தபடியே அறையைவிட்டு வெளியே வந்து ஹாலில் நேற்று தான் கழற்றி வைத்த தாலியை எடுத்து டாலரில் முத்தமிட்டு அணிந்து கொண்டாள்.

நேற்று பிடிக்காமல் போன தாலி இன்று அவளுக்குப் புனிதமாய் தோன்றியது.

அவனையும் தன்னையும் பிணைத்து வைத்த அன்புச்சங்கிலியாய் அதனைக் கருதினாள் சஞ்சனா.

பின், அவனைத்தேடி சமையலறைக்குப் போனாள்.

அங்கு அவன் கையில்லாத பனியனில் புடைத்த தன் புஜம் இறுகி வெளியே தெரிய, பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, கண்கள் விரிய ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

அவனை ஒளிந்திருந்து மூன்றுமுறை எட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவள், நான்காம் முறை எட்டிப் பார்த்த போது அவனைக் காணவில்லை.

அவள் நின்றிருந்த சுவருக்கு மறுபுறம் ஒளிந்து நின்றிருந்தவன், ஏமாற்றத்தில் அவள் தேடும்போது சட்டென்று அவள் முன்பு தோன்றி, ஒற்றைப் புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கினான்.

அவள் விக்கித்து நின்றிருக்கும் போது, "என்ன தூக்கம் கலைஞ்சிடுச்சா?" என்றும் கேட்டான்.

அவளால் அவன் முகத்தையேப் பார்க்க முடியவில்லை.

ஜன்னல் வழியே வெளியேப் பார்த்துக்கொண்டே "ம்ம்" என்றாள்.

"நேத்து.. அது நமக்குள்ள.. நேத்து நடந்ததுல உனக்கு பிடிக்காம எதுவும் இல்லையே.."

"இல்ல.. அப்படியெல்லாம் இல்ல.."

இவ்வார்த்தைகளை சொல்லும் முன்னமே செங்கொழுந்தாய் சிவந்து போனது அவளது முகம்.

அவளின் முகச்சிவப்பை பார்த்துக்கொண்டே அருகில் நெருங்கியபடியே "தலை இன்னும் காயலையா?" என்று அவள் முகத்தில் விழுந்திருந்த ஒற்றை முடிக்கற்றையை காதோரமாய் ஒதுக்கியவன், தன் ஏப்ரானை அவிழ்த்தப்படியே.. "ப்ரேக்பாஸ்ட் ரெடி" என்றான்.

'அய்யோ! ஏன்டா இப்படி அழகாத் தெரிஞ்சுத் தொலையுற?' என்று அவனை மனதிற்குள் சபித்தாள் சஞ்சனா.

"கம் கம்" என்றவன், அவளை டைனிங் டேபிளில் உட்கார வைத்து முதலில் கண்ணாடி டம்ளரை நீட்டினான்.

அவனையே கிறக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகுதான் கவனித்தாள் அந்த ஏபிசி ஜூஸை.

தனது வீட்டிலேயே அது அவளுக்குப் பிடிக்காது.

முகத்தை சுளித்துப் பார்த்தவள், அவன் தன்னைப் பார்க்கிறான் எனவும் சிரித்துக்கொண்டே அதனைப் பருகினாள்.

பிறகு, ஜப்பான் ஸ்பெஷல் என்று அவன் மீசோ சூப்பை மூடியை திறந்து காண்பிக்க, அதையும் 'வயித்துக்கு ஒண்ணும் ஆகிடக்கூடாது கடவுளே' என்று பருகினாள்.

அவள் ஒவ்வொரு மிடறாக சூப் பருகுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், "எனக்கு?" என்று வினவவும், சூப்பையும் அவனையும் மாறிமாறி பார்த்தவள் "அய்யோ! உங்களுக்கு சூப் இல்லையா?" எனவும், சேரை இழுத்துப் போட்டு அவளை நெருங்கி அமர்ந்தவன்,

"இருக்கு.. பட், இதுல இருக்க டேஸ்ட் அதுல இருக்குமான்னு தெரியாதுல்ல.. அதான் கேட்கிறேன்" எனவும், தலை குனிந்தபடியே சூப்புக்குள் ஸ்பூனை போட்டு சுழற்றிக் கொண்டிருந்தாள் சஞ்சனா.

அவன் ஏக்கமாக "தரமாட்டியா?" எனக் கேட்கவும், மாட்டேன் என தலையசைத்தவளிடம்,

"சரி, நீ தர வேணாம்.. நானே டேஸ்ட் பண்ணிக்கிறேன்" என, அவள் முகவாயை திருப்பி இதழோடு இதழ் பொருத்தினான் வேதானந்த்.

இக்காட்சியை மட்டும் சித்து பார்த்திருந்தால், "இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருப்பியேடா.. ஆனா, இப்போ சூப்பே குடிக்கிறியேடா.." என்று கவுண்டர் கொடுத்திருப்பான். பாவம் அவன் மருத்துவமனையில் மாட்டிக்கொண்டான்.

jvj5D37EQJKmgm63Wkj-s0-0m04SFKOfagzvOnqKRaeGi5Dh2iJxgF_RxKBff18m28tCUACtDvADHMr2-7getl1clLrvv0ftbpIx84ZDev9ITfS414OE51g494INZ7zbQ71BYlLC


முத்தத் தித்திப்புடனேயே அவன் அவளை படுக்கையறை தூக்கிச்செல்ல, டைனிங் டேபிளிலிருந்த சூப் தன் உஷ்ணத்தை அவர்களுக்குக் கடத்தி குளுமை பூத்திருந்தது.

நேற்று பாதி மதுவே வழி நடத்தியிருந்த சங்கமத்தை, இன்று அவர்கள் ஆர்வம் வழி நடத்தியது.

நாகரீகமின்றி திறந்திருந்த ஜன்னலின் வழியே உட்புகுந்த சூரியனார் அவர்களின் அந்த ஆலிங்கணத்தில் கண்கள் கூசிப்போனார்.

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்த சஞ்சனா தனது கூந்தலை சுருட்டி முடிந்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவளுடைய புறங்கழுத்திலிருந்த டேட்டூவையேப் பார்த்துக் கொண்டிருந்தான். உடன் அவள் வெண்மையான கழுத்தில் தப்பிப் புரண்ட ஓரிரு மயிர் சுருட்களையும்.

"இப்போ மறுபடியும் இன்னொரு ட்ரெஸ் ஆர்டர் பண்ணனும்.."

"தேவையில்ல"

"ஏன்?"

"நான் எதுக்கும் உதவும்னு ஏற்கனவே ரெண்டு ட்ரெஸ்ஸா தான் ஆர்டர் பண்ணியிருந்தேன்.. இங்க இன்னொரு வார்ட்ரோப்ல அது இருக்கும் பாரு.."

அவள் விசுக்கென்று திரும்பிப் பார்த்தாள். அவன் குறும்புப் புன்னகையுடன் தலைக்கு கைவைத்து படுத்திருந்தான்.

தலையாட்டியபடியே படுக்கையை விட்டு எழுந்தவள், "தாத்தாவை ஹாஸ்பிடலுக்குப் பார்க்கப் போகணும் இல்ல?" என்றாள்.

சற்றுமுன்பு படுக்கையில் அவன் சொன்னது தான். மீண்டும் ஞாபகப்படுத்தினாள் அவள்.

"ம்ம்" என்றபடியே அவனும் எழுந்தவன் கையில் போனுடன் பால்கனி சென்றான். ஆம், அவளுக்குக் கொஞ்சம் பெருமூச்சுவிட இடமளித்தான்.

பின், இருவரும் கிளம்பி புக் செய்திருந்த காரில் அந்த விவி மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதிசயமாய் அவனிடம் எந்த அணக்கமும் இல்லை.

சிதம்பரம் இருக்கும் அறைக்குள் நுழைந்தபோது, அவர்கள் வருவதற்கு முன்பு சிதம்பரம் கூறிய உண்மையிலிருந்து வெளிவர முடியாமல் அனைவரும் ஆளுக்கொரு மூலையாக அமர்ந்திருந்தனர்.

வேதானந்த் முன்பே சித்தானந்திற்கு அழைப்பு விடுத்துப் பேசியிருந்ததால் அவனுக்கு அதற்கான காரணம் தெரிந்திருந்தது.

ஆனால், சஞ்சனா தான் 'அது தான் ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சே.. அப்புறம் ஏன் இப்படி மூஞ்சி தொங்கிப்போய் உட்கார்ந்திருக்காங்க இவங்க?..' என்று குழம்பியபடியே சென்று சிதம்பரத்தின் படுக்கையை நெருங்கி நின்றாள்.

வேதானந்த் சிதம்பரத்தின் கையைப் பிடித்துக் கொண்டான்.

அவர், "சத்யன் சொன்னான்.. இந்தப்பொண்ணு தானாடேய்?" என்றார்.

அவன் ஆமாம் என்று தலையசைத்தான்.

திடீரென கனத்த அமைதி நிலவியது அங்கு.

பின், சூழ்நிலையை இயல்பாக்கும் பொருட்டு, சித்தானந்த் தானே பேசினான்.

"வேதா, நாளைக்கே தாத்தாவை நாம டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.."

"ம்ம்ம்.."

"ஒன் வீக்ல நம்ம திருநெல்வேலிக்கே போயிடலாம்.."

"ம்ம்ம்.."

"அப்புறம் சஞ்சனா, உன்னை நாங்க இங்க நல்ல ஹாஸ்டலா பார்த்து சேர்த்து விட்டிடுறோம் என்ன?.. டோன்ட் வொரி.." என சித்தானந்த் சொல்லவும்,

"ஹாஸ்டலா?.. எதுக்கு?.. நான் என் ஹஸ்பண்டை விட்டு எங்கேயும் போகமாட்டேன்.." என்று வேதாவின் இடக்கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் சஞ்சனா.

"நீதானே முன்னாடி உனக்கு கல்யாணமே பிடிக்காதுன்னு சொன்ன?"

"ஆமா, முன்னாடி சொன்னேன்.. ஆனா, இப்ப பிடிச்சிருக்கே.."

"அதெப்படி ஒரே நாள்ல பிடிக்கும்?"

"என்னவோ பிடிச்சிருக்கு.."

"உனக்கு பிடிச்சிருக்குங்கிறதுக்காக என் பிரதர் லைப்ப என்னால பணயம் வைக்க முடியாது.. எங்கப்பா சொன்னாரு, நான் உன்னை காபிஷாப்புல மீட் பண்ணினதால தானே வேதாவுக்கு இவ்ளோ ப்ராபளம்.."

"வேதா, நான் உங்களுக்கு ப்ராபளமா?"

"என்ன அவனை கேட்டுக்கிட்டு இருக்க?.. நீ தானே சொன்ன காதல், கல்யாணம் எல்லாம் டைம் வேஸ்ட் மேட்டர்ஸ்னு"

"பட், நவ் ஐ அம் ரெடி டூ வேஸ்ட் மை டைம் பார் வேதா.."

"என் பிரதருக்குன்னு ஒரு ரேஞ்ச் இருக்கு.. அவனுக்குன்னு ஒரு டேஸ்ட் இருக்கு.. அவனுக்கு அடக்கமான பொண்ணுங்களை தான் பிடிக்கும்.. நீ அடக்கம்னா அரைகிலோ எவ்வளவுனு கேட்கிறவ.. அவனுக்கும் உனக்கும் கண்டிப்பா செட் ஆகாது.."

"ஏன் ஆகாது?.. அதெல்லாம் செட் ஆகும்.. ஏற்கனவே செட் ஆகிடுச்சி.. வேதா நீங்க சொல்லுங்க.."

"இல்ல, உன்னைப்பத்தி எனக்குத் தெரியும்.. கண்டிப்பா இது செட் ஆகாது.. நீ ஒரு குறிக்கோளோட வாழ்றவ.. எங்க வீட்டுக்கு வந்தா அடுத்த வருஷமே எங்கப்பாட்டி பேரன் கேட்பாங்க.. உனக்கு தான் தலைவலி.."

"இதுல என்ன தலைவலி?.. அடுத்த வருசம் என்ன இந்த வருஷமே பத்தாவது மாசம் பெத்துக் குடுத்திட்டா போச்சு.. இல்ல வேதா?"

"அட! எங்கக்கூடலாம் உன்னால இருக்க முடியாது சஞ்சனா.. சொன்னாப் புரிஞ்சிக்கோ ப்ளீஸ்"

"ஏன்?.. ஏன் இருக்க முடியாது?.."

"அது உன் பேமிலி.." என்று ஆரம்பித்தவனை,

"சித்து!" என்று அதட்டிய சத்யமூர்த்தி,

"இங்கப் பாரும்மா! உன்னை எல்லாம் எங்களோட கூட்டிட்டுப் போக முடியாது.. உங்கப் பேமிலிக்கும், எங்கப் பேமிலிக்கும் ஆகாது.. அவ்ளோ தான் எங்களால சொல்ல முடியும்.. " என்றுவிட்டு அமைதியாகிவிட, அவள் நிமிர்ந்து வேதாவைப் பார்த்தாள்.

அவன் பேசாமல் நின்றிருந்தான்.

அவனது முழங்கையைப் பற்றியிருந்த தனது கைகளை விடுவித்தவள், அனைவரையும் சுற்றிப் பார்த்துவிட்டு துப்பட்டாவால் தனது கண்ணீரை துடைத்துக்கொண்டே வெளியேறிவிட்டாள்.


***********************

மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வந்தபோது ஆருத்ராவுடன் பேசிக்கொண்டே நடந்த ஹேர் கலரிங் ஸ்டெல்லா, "எப்படிப்பா நேத்துக்கூட ஐடியாவே கிடைக்கலைன்னு புலம்பிக்கிட்டு இருந்த.. இன்னைக்கு எப்படி உனக்கு புது ஐடியா கிடைச்சது" எனவும், டீ பிரேக்கிற்காக அவளை கேண்டீன் அழைத்துக்கொண்டு வந்த ஆருத்ரா, காலையில் தான் தனது அக்காவை மருத்துவமனைக்கு சேர்க்கச் சென்றபோது எதேர்ச்சையாக பக்கத்து வார்ட் அறையிலிருந்து கேட்க நேர்ந்த கதையைப் பற்றி விவரித்தாள்.

அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்து அக்கதையை ஒற்றுக் கேட்டுக்கொண்டிருந்த தமனன், உடனே அதை ஓடிப்போய் விஷாலிடம் கூறினான்.

விஷால் வெங்கட்ராமன் அவன் கூறியதற்கு சன்மானமாய் வேங்கடத்திடம் கூறி அவனுக்கு பதவி உயர்வு அளித்தான். மேலும் எந்த மருத்துவமனையில் அவளின் அக்கா சேர்க்கப்பட்டுள்ளாள் என்பதை கண்காணிக்கவும் ஆள் ஏற்பாடு செய்தான்.

அப்படிச் செய்தவனுக்கு அதிர்ச்சியாய் அன்றிரவே ஒரு தகவல் வந்து சேர்ந்தது. அது அவளும் அவளின் அக்காவும் தற்போது இருப்பது விவி மருத்துவமனை எனும் அவனது மருத்துவமனையில் தான் என்பது தான்.

உடனே அவ்விரவிலேயே மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டான் விஷால். அவன் அவ்வார்டையும் அறைஎண்ணையும் கேட்டுத் தெரிந்துகொண்டு அவளை சந்திக்கச் சென்றபோது அறையில் தான் மட்டும் தன் அக்கா மகனை கையில் தூக்கிவைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

உள்ளே வந்தவன், "மிஸ். ஆருத்ரா" என்று கம்பீரக்குரலில் அழைக்கவும் திடுக்கிட்டுத் திரும்பினாள் ஆருத்ரா.

இந்நேரத்தில் அவனை தான் எதிர்பார்க்கவில்லை எனும் அதிர்ச்சியானது அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

"சார், நீங்க இங்க?" என்றவள் இழுக்கவும்,

நேராய் விஷயத்திற்கு வருபவன் போல், "இந்த வேற்றுகிரகவாசிகள் பத்தி உங்களுக்கு எப்படி யோசனை வந்ததுன்னு எனக்கு தெரிஞ்சு போயிடுச்சி மிஸ்.ஆருத்ரா.. கேன் ஐ கால் யூ ருத்ரா?.." எனவும்,

"யெஸ் சார்" என அதிர்ந்தபடியே தலையாட்டினாள் ஆருத்ரா.

அச்சமயம் அவளது போன் அடிக்க, மூளை சர்க்யூட் அனைத்தும் ஷார்ட் ஆனது போல் தன் கையிலிருக்கும் குழந்தையையும் போனையுமே மாறிமாறி பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளை நெருங்கி போனை ஆன் செய்து அவள் காதில் வைத்தவன், அவள் பேசிக்கொண்டிருக்கும் போது குழந்தையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.

சுருள்முடி, மூடிய சிப்பி இமைகள், வெள்ளக்கட்டி மூக்கு, குட்டி சிவந்த இதழ்கள், சந்தனமேனி என குழந்தை அவனை ஈர்க்க, ஒரு கையில் போனைப் பிடித்திருந்தவன், மறுகையால் குழந்தையின் இறுக மூடிய கையைப்பிடித்து முத்தமிட்டான்.

அவன் தன்னருகில் நின்றிருப்பதே அவஸ்தையாய் உணர்ந்தவள், குழந்தையை வேறு அவன் கொஞ்ச, நெருக்கடிக்கு ஆளானவள் போலானாள். மிக அவசரமாகவே தன் அன்னைக்கும் பதிலளித்தாள்.

"ம்ம் ம்மா.. ரெண்டுபேரும் நல்லா இருக்காங்க.. பிரச்சினை இல்ல.. அக்கா பாத்ரூம்ல இருக்கா.. குட்டித் தூங்கறான்.. நீங்க நிம்மதியா நைட் டியூட்டிப் பாருங்கோம்மா.." என்றபடியே போனை விட்டு தலையை சாய்த்தாள்.

குழந்தையின் அழகை இன்னும் கண்களால் ஆராதித்துக் கொண்டிருந்தவன், அவளின் தொண்டைச்செருமலில் விலகி நின்று, "சொல்லுங்க ருத்ரா! அந்த ஏலியன் ஃபேமிலி இந்த ஹாஸ்பிடல்ல எங்கயிருக்கு?" என்று கேட்டான்.

"சாரி சார், இன்னைக்கு காலையிலேயே ஏன்டா உங்கக்கிட்ட சொன்னோம்னு இருந்தது சார்.. அவங்க சொன்னதுலயிருந்தே அந்த ஏலியன்ஸ் ரொம்ப டேஞ்சரஸ் ஆனவங்கன்னுப் புரிஞ்சிக்கிட்டேன் சார்.. இப்போ அவங்களை பத்தின உண்மை வெளிய கசிஞ்சா என்ன நடக்கும்னே சொல்ல முடியாது சார்.. நம்ம சேனல் ஆபிஸைக்கூட ஒண்ணுமில்லாமப் பண்ணிருவாங்க சார்.."

"ருத்ரா, இது எங்களோட ஹாஸ்பிடல்.. இங்க எல்லா வார்டுலயும் சிசிடீவி கேமிரா இருக்கு.. அதை வச்சே அஞ்சு நிமிஷத்துல என்னால நேத்து நீங்க எங்கெங்கெல்லாம் போனீங்கன்னு ஈஸியா கண்டுபிடிச்சிற முடியும்.. பட், அவங்கப் பேசினதை உங்க மூலமா தெரிஞ்சிக்கிட்டா இன்னும் கொஞ்சம் யூஸ்புல்லா இருக்குமேன்னு தான் கேட்கிறேன்.." எனவும்,

"சாரி சார், என்னால எதுவும் சொல்ல முடியாது.. நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க" என்று திரும்பி நின்றாள் ஆருத்ரா.

அவளின் அந்தப் பதில் திமிராய் தோன்றியது விஷாலிற்கு.

ஏற்கனவே அவள் தன்னை முட்டாள் என்று கூறிய கோபம் வேறு தணல் போல் கனன்று கொண்டிருக்க, அவளை முறைத்துக்கொண்டே, "ஓகே வெல்.. நானே பார்த்துக்கிறேன்" என்றபடியே தன் கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டே அவ்வறையை விட்டு வெளியேறிவிட்டான் விஷால்.

அவன் வெளியேறிய அறுபது விநாடியில் கழிப்பறையை விட்டு வெளியே வந்த வைஷாலி, "ருத்ரா, இப்போ வந்துட்டுப்போனது யாருடி?" என்று பதற்றமாக வினவினாள்.

"வேற யாரு என் நியூ பாஸ் அந்த சிடுமூஞ்சி தான்.." என்றாள் ஆருத்ரா.

"ஹேய் ருத்ரா, உன் பாஸ் தான்டி இவனோட அப்பா.." என்று அவள் தலையிலொரு குண்டைத் தூக்கிப்போட்டாள் வைஷாலி.

"இல்ல வைஷு.. நீ அவரை யாரோன்னு நினைச்சிக்கிட்டு சொல்ற.. எங்க ஆபிஸ்ல ஒரு பொண்ணைக் கூட அவரு ஏறெடுத்துப் பார்த்தது கிடையாது தெரியுமா?.."

"உன் பாஸோட பேர் என்னடி?.. விஷால் வெங்கட்ராமன் தானே.. சுருக்கி விவி ரைட்?" என்றவள் கேட்டபடியே கட்டிலில் போய் அமர்ந்து குழந்தையை தன் கையில் வாங்கிக்கொள்ள, சேரில் பொத்தென்று உட்கார்ந்தாள் ஆருத்ரா.

"அவரா இப்படி?.. நம்பவே முடியலை வைஷு.. ச்சே! உன்கிட்ட இப்படி நடந்திருக்கிறார்ன்னு கேட்கிறப்போ கேவலமா இருக்கு.."

"அவரைப்பத்தி தப்பா பேசாதடி.."

"என்ன தப்பா பேசாதடி.. நம்ம நிலைமையை யூஸ் பண்ணிண்டு உன்னை மிஸ்யூஸ் பண்ணல அவரு.."

"இல்ல, நான் அவரை லவ் பண்ணினேன்.. எப்படி அவரை நெருங்குறதுன்னு தெரியாம என்னென்னமோ ஆகி இவன் பிறந்துட்டான்.. எல்லாம் விதி.. அம்மாக்கிட்ட சொல்லிடாதடி ப்ளீஸ்.."

"ச்சே! இப்படி ஒரு ஆளை எப்படி நீ லவ் பண்ணின வைஷு?.. நாளைக்கே அவரை ஆபிஸ்ல உண்டுயில்லைன்னு பண்றேனா இல்லையான்னு மட்டும் பாரு.."

"ஹேய் வேண்டாம் ருத்ரா.. ஏதாவது பிரச்சனை ஆகிடப் போகுது.."

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. சும்மா இரு நீ.. உனக்கு இந்த பட்டுக்குட்டியை ஆர்பனேஜ்க்கு தூக்கிக்கொடுக்க சம்மதமா?.."

"இல்லைடி.. ஆனா.."

"ப்ச், சும்மாயிரு" என்று அவளை அதட்டியவள் மறுநாளே அவனுக்காய் ஆபிஸில் காத்திருந்தாள்.

ஆனால், அவனுக்கு பெரிய தொழிலதிபர் ஒருவரின் மகளோடு இன்று நிச்சயம் என்று வேங்கடத்தால் சொல்லப்பட, அவனைத்தேடி கோபத்தோடு அங்கிருந்துப் புறப்பட்டாள்.

ஏற்கனவே அவள் தன்னை தன் பணியாளர்கள் முன்னேயே முட்டாள் என்று சொன்னதற்கு தன் கோபத்தை அடுக்கிக் கொண்டிருந்த விஷால், அவளை நேரம் பார்த்து பழிவாங்கக் காத்திருக்க, மேலும் அவனை எரிமலை ஆக்கவென்றே அவனை சந்திக்கச் சென்றாள் ஆருத்ரா.


கொடுக்கலும் வாங்கலும் தொடரும்❣️
Intha vv nallavana ila kettavana:rolleyes:sanjanaava yen avanga kooda kootitu poga maatigaraaga.sanju paavam sis.ava enna thappu pannuna
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
twst akka:love: .....vithasama erukku:unsure: ...yenaku entha mari other plant time travell story la romba pudikkum ...athanalaye Ben10 cartoon la papa :D:rolleyes:ana eppatha first time oru story ya padikkara
Thank you vaishu maa😘

Full and full science fiction ah indha story pogaadhu da. Adhu koodave family love nu pogum. Apram enakum ben 10 pidikumda. He is my childhood crush😍
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
PVUV story :love: semma interesting ga pokuthu akka🤩.......dheva and sithu ku powers erukkume...avaga amma alian:rolleyes: eppadi erukkuma ...very interesting ....waiting akka seekkaram update poduga.....story ku picture quality semma akka..👌👌...
 
Messages
74
Reaction score
72
Points
18
Nice epi akka..but vedha and family seirathu konjam kooda sari illa family ku set agathunu therinjum yen kalyanam panni vaikanum..ithula vedha vera mudiyathunu solluran😠😠😠😠. sanjana pavam..vv than vaishali da lover a..ivan nallavana illa ketavana🤔🤔🤔
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
PVUV story :love: semma interesting ga pokuthu akka🤩.......dheva and sithu ku powers erukkume...avaga amma alian:rolleyes: eppadi erukkuma ...very interesting ....waiting akka seekkaram update poduga.....story ku picture quality semma akka..👌👌...
Thank you vaishu maa😘😘😘😘😘

Romba romba happy da unga comment paarththu. Ezhuthi kitte iruken da. Seekkiram epiyudan varen da❣️
 
Top Bottom