Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Maane! Maane! - RC

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
ஆசிரியர்: ரமணிசந்திரன்
நாவல்: மானே! மானே!
நாயகன் : கௌதம்
நாயகி : உதயா



சுருக்கம்:
திருச்சியில் குறைந்த சம்பளத்திற்கு ஒரு கம்பெனியில் ஸ்டேனோவாக வேலை செய்கிறாள் உதயா. அவளுடைய குழந்தை பருவத்தின் போது, அவள் தந்தை தன் சகோதரி மகனுக்கு அவளை திருமணம் செய்து கொடுக்க ஒப்புக்கொள்கிறார. உதயாவின் அத்தான் மிகவும் குறுகிய மனநிலையில் இருப்பதால் உதயாவிற்கு அவன் மீது விருப்பம் இல்ல. அதோடு அவள் சொந்த காலில் நிற்க விரும்புகிறாள். இந்த நேரத்தில் சென்னையில் வசிக்கும் அவளுடைய தோழி அனிதாவின் மூலம் ஒரு புகழ்பெற்ற கட்டுமான கம்பெனியில் பணியிடம் காலியாக உள்ளதை அறிந்து கொண்டு அந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறாள்.



அந்த கம்பெனியின் எம்டி கௌதம் என்பவரால் பேட்டி எடுக்கப்பட்டு, தேர்வு செய்யப்படுகிறாள்.



கெளதம் ஒரு தனிமனிதன்... நவநாகரீகமானவன்... வெளிநாட்டு பழக்கவழக்கங்களுக்கு பழகியவன். உதயா மிகவும் கட்டுப்பாடானவள்... வரைமுறைகளை உட்பட்டவள்... நெறிமுறைகளுடன் வாழ்பவள்.



சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் "எப்படி வேண்டுமானாலும் வாழலாம்" என்பது கௌதமனின் கோட்பாடு. "இப்படித்தான் வாழ வேண்டும்" என்பது உதயாவின் கோட்பாடு.



இருவருடைய வாழ்க்கை முறையும் முற்றலும் மாறுபட்டிருக்கிறது... கெளதம் அவளுடைய வழக்கங்கள் தவறு என்றும் அதை அவள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறான். உதயாவும் தன இடத்திலிருந்து அதையே செய்கிறாள். இருவரும் மற்ற கொள்கைகளை மாற்ற விரும்புகிறார்கள். தங்களுடைய வழியில் மற்றவரை இழுக்கப் பார்க்கிறார்கள்.



நாட்கள் நகர்கிறது... ஆனால் இருவரும் தங்கள் கொள்கைகளில் மிகவும் வலுவாக உள்ளனர். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் (இந்த இடம் தான் கதையின் திருப்பு முனை) கௌதம் உதயாவின் வழிக்கு வருகிறான்... உதயாவும் கௌதம் வழிக்கு வருகிறாள். இறுதியாக மகிழ்ச்சியான முடிவு.​
 
Last edited:
Top Bottom