- Messages
- 44
- Reaction score
- 18
- Points
- 8
அத்தியாயம் -1
சுபாஷினியின் ஒரே செல்ல மகளுக்கு இன்று திருமணம்...ஆம் ஆடம்பரமான திருமணம். சுபாஷினியும் அவளது கணவர் குருமூர்த்தியும் தனது ஒரே செல்ல மகளான "நந்தினி"க்கு அதே ஊரில் செல்வந்தராக இருக்கும் ஞானசேகரின் மகன் "பிரஹலாத்"டன் சம்மந்தம் பேசி இன்று கோலாகலமாக சென்னையில் உள்ள பிரபலமான மண்டபத்தில் திருமணம் நடத்த உள்ளனர்...
கல்யாண மண்டபத்திற்கு கார் புரப்பட இருந்த சில நொடிகளில் தன் தாய் சுபாஷினியின் தோளில் சாய்ந்து "மா....நான்.... என்று ஏதோ சொல்ல துவங்கி நிறுத்திவிட
தாயின் ஏக்க பார்வையில் மீண்டும் பேச்சை துவங்கினாள் "மா....நான் இன்னைக்கு தான் இந்த வீட்டு வாசலில் நிற்கும் கடைசி நாள் இல்ல??...நாளைல இருந்து பிரஹலாத் வீட்டில் தானே இருக்க போறேன்....மா..உங்களையும் அப்பாவையும் விட்டு எப்படி இருக்க போறேனு தெரியல...மனசு வலிக்குது..
"ந...நந்தினி.... பிரஹலாத் எங்களை விட உன்னை நல்லா பாத்துப்பான் டா தங்கம், அவன் ரொம்ப நல்ல பையன் என்று ஆறுதல் கூறினாலும் மகளை விட்டு பிரியும் சோகம் கண்ணில் தெரிந்தது."
நந்தினி குட்டிமா எதுக்கும் கவலை படாத எதுவாக இருந்தாலும் அப்பாவுக்கு போன் பன்னு உடனே வருவேன் என்று குருமூர்த்தியும் ஆறுதல் கூற....ஒருமுறை அவள் இவ்வளவு நாள் பிறந்து தவழ்ந்து ஆடிப்பாடி சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு வலம் வந்த அந்த அழகான இல்லத்தை பார்த்தபடி...காரில் ஏறினாள் நந்தினி.
காரில் பயணம் செய்யும் நேரத்தில் அவளது தாயின் மடியில் தலைவைத்து வந்தாள்..."மா....நீங்க வாழ்க்கை ல பல கஷ்டங்கள் பார்த்துட்டு தான் வந்துருக்கீங்க ....நான் உங்க வாழ்க்கை க்கு வந்த பிறகு தான் சந்தோஷமே வந்துச்சு னு சொல்லுவீங்களே...இன்னைக்கு அந்த சந்தோஷம் எல்லாம்.........
செல்லம்...நீ எங்க இருந்தாலும் அம்மாவுக்கு நீ குழந்தை தான் டா.....பீல் பன்னாத குட்டிமா...கல்யாண பொன்னு இப்படி அழழாமா ????அப்புறம் மாப்பிள்ளை உன்னை அழுமூஞ்சி னு சொல்லுவாரு செல்லம்
ஹாஹா போங்க மா....என்று சினுங்கியவள் மண்டபம் நெருங்கியது என்று கண்ட அடுத்த நொடி தைரியத்தை வரவழைத்து கொண்டு உள்ளே நுழைந்தாள்....
சுற்றி இருந்த உறவினர்கள் "பொன்னு வந்தாச்சு ....நல்ல அழகா இருக்கா என்று அவளை பற்றின பேச்சுக்கள் சலசலத்து.... அதை காதில் வாங்கியபடி மணப்பெண் அறைக்கு சென்றாள்.
மணப்பெண் அறையில் அவளை அமர செய்து விட்டு சுபாஷினி சொந்தங்களை வரவேற்க வெளியே செல்ல.... சற்றும் எதிர்பாராமல் பிரஹலாதிடம் இருந்து கைப்பேசி அழைப்பு நந்தினி க்கு வர அவள் அதை எடுத்து பேசினாள்.
"நான் பிரஹலாத் பேசுறேன்.....ம்ம்ம் என்று அவன் ஆரம்பிக்க முதன் முதலில் அவனது குரலை போனில் கேட்க மெய்யசந்து போனாள்....இவ்வளவு நாள் அவனது அழைப்பிற்கு காத்திருந்தவள்...
சொல்லுங்க ....என்று ஆவலுடன் கேட்க....அவனோ பட்டென்று தனது கடந்த கால நிகழ்வை பேச துவங்கினான்...
"நந்தினி.... அது வந்து.... எனக்கு பாஸ்ட் லவ் ஒன்னு இருந்துது...நானும் அவளும் உயிருக்கு உயிரா காதலிச்சோம் ...அவளுக்கு வசதி கம்மி என்ற காரணத்தால் பிரிந்து விட்டோம் அதன் விளைவு அவள் உயிரை மாய்த்து விட்டாள். அன்று என் காதலியை இழக்க காரணம் என்னுடைய ஆடம்பர வாழ்க்கை.... ஆனால் இப்ப அவ எனக்கு திரும்ப கிடைச்ச மாதிரி ஒரு உணர்வு ...ஆமா அவ பேரும் நந்தினி தான்.... அந்த ஒரே காரணம் தான் உன்னை கல்யாணம் பன்னிக்க காரணம். ஸோ....
ம்ம்ம் எனக்கு புரியுதுங்க....நான்.. நான் உங்களை மனைவிங்கற பேருல தொந்தரவு பன்னமாட்டேன் ...
ஹலோ ஹலோ .....நீங்க எனக்கு தொந்தரவு னு சொல்ல வரல...அது வந்து உடனே உங்களை உடல்ரீதியாவோ மனரீதியாவோ மனைவியா ஏத்துக்க முடியாது னு சொல்ல வந்தேன் மத்தபடி நீங்களும் நானும் ப்ரண்டுஸ் ஓகே
ஓகே...டன்...நான் கூட ரொம்ப பயந்துட்டே இருந்தன் புது வாழ்க்கை புது குடும்பம் எப்படி வாழ போறோம்..னு இப்ப தாங்க எனக்கு கம்பர்ட் டா இருக்கு
ஹாஹா.... சரிங்க நந்தினி போன் வைக்கிறேன் மேக்கப் மேன் வந்தாச்சு .
ஹாய் ப்ரண்டுஸ்.... நந்தினி யை பிரஹலாத் முழுசா ஏத்துப்பானா மாட்டானா????
ஏத்துக்குறதுக்கு முன்னாடி என்ன என்ன ப்ராப்லம்ஸ் வருது....
அப்புறம் சுபாஷினி குருமூர்த்தி சந்திச்ச கஷ்டங்கள் என்ன??
நந்தினி வீட்டில் மாமியார் மாமனார் எப்படி?ம்ம்ம்...... இதெல்லாம் தான் ஒரு ஸ்டோரி யா எழுத போறேன்....
பார்க்கலாம்.....(தொடரும்)