Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Nee en devadhai

NYD-63
அடுத்த இரண்டு நாட்களில் அந்த உயில் பணத்திற்கு என்ன பதில் சொல்லுவது என்று அனைவருமே யோசித்து கொண்டிருந்தனர். இதை பற்றி சிவாவிடம் கூறிய போது அவனும் முதலில் வேண்டாம் என்றே கூறினான். இதனால் அனைவருக்குமே குழப்பமாகவே இருந்தது.
அதனால் இன்னும் சிறிது காலம் யோசிக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் கௌசிக் எத்தனை நாள் இங்கு காத்திருக்க முடியும்? அதுவும் இல்லாமல் அங்கே மருத்துவமனையை , சித்தியை பார்த்தாகவேண்டுமே ?
சத்யா கௌசிக்கிடம் , அவனுக்கும் இவளுக்கும் மாலை தேநீர் கொண்டுவந்தபோது பேசினாள் .
கௌசிக்,
எஸ் சத்யா , டீ குடிக்கிறியா ?
ம்ம்.,
நல்லாருக்கியா .
அதான் பாக்கறியே ? என்ன திடீர்னு?
திடீர்னு இல்ல கௌசிக் , நீ இங்க வந்ததுலேர்ந்து, எங்களுக்கு எல்லாருக்குமே இந்த கேள்வி இருக்கு. அதுவும் அப்பாக்கு. தம்பி பையனை பத்தி ரொம்ப கவலை. நேத்து ராத்திரியெல்லாம் தூங்கவே இல்ல.
அங்க என்னப்பா பிரச்னை? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. யாராவது ஒருத்தர்கிட்ட நம்மளோட கவலைய ஷேர் செஞ்சுக்கணும். அதுக்குதானே நாம எல்லாரும் குடும்பமா இருக்கறது. நாங்களும் உன்னோட குடும்பம்தான் கௌசிக். என்னால எந்த அளவுக்கு உனக்கு உதவ முடியும்ன்னு தெரியல. ஆனா என்னால முடிஞ்சதை நான் செய்வேன்.
சத்யா இப்படி நேரடியாகவே கேட்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அதற்கான பதிலுக்கு அவன் தன்னை தயார்படுத்திக்கொள்ளவும் இல்லை .
அங்கே ஒரு சிறு மௌனம் நிலவியது.
ஓகே! கௌசிக், நீ எதுவும் இப்போ சொல்ல வேண்டாம். உனக்கு எப்போ எங்க மேல நம்பிக்கை வருதோ அப்போ சொல்லு. ஆனா நீ சித்திய இப்படி தனியா விட்டுட்டு வந்துருக்கே. நீ இங்க வந்தது அவங்களுக்கு தெரியுமா ?
பதில் சொல்லாமல் வெளியில் வெறித்தான் .
சரி, அங்க ஆஸ்பத்திரியை அவங்களால தனியா பார்த்துக்க முடியுமா ?
அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டுதான் வந்துருக்கேன்.
சரி,டீ குடி .
மெதுவாக மிடறு விழுங்கினான். அவனுக்கும் தனது மன பாரங்களை இறக்கி வைக்க வேண்டும் என்று தோன்றியது. இவளும் மெதுவாக தேனீரை சுவைத்தாள் .
அவனுக்கு அந்த சுவையும் சூடும் மனதிற்கு தெம்பை தந்தது. தொண்டையை சரிபடுத்திக் கொண்டான்.
மெதுவாக அங்கே நடந்த விஷயங்களை அவளுக்கு விளக்கினான். இந்த விஷயம் சத்யாவுக்குமே பேரதிர்ச்சிதான். இருப்பினும் இது அவர்கள் இருவருக்குமான சொந்த விஷயம். இதில் மற்றவர் யாரும் தலையிட முடியாது என்று அவளுக்கு தோன்றியது. அதே சமயம் இத்தகைய பேரிடி இவனுக்கு வந்திருக்க வேண்டாம் என்றும் தோன்றியது. பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
இது ரொம்ப சிக்கலான விஷயம்தான் கௌசிக். உனக்கு இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்க வேண்டாம். ஆனா ஒரு விஷயம்., சித்தப்பா உன்ன எப்பையுமே வேற ஆளா பார்த்ததே இல்ல. சித்தி என்னதான் சூடு சொல் சொன்னாலும், அவருக்கு நீதான் உலகம். அவர் தன்னோட பொறுப்புலேர்ந்து என்னிக்குமே விலகினதே இல்ல.
தெரியும் சத்யா. எனக்கு அம்மாமேலே அடங்காத கோபம் வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம். என்னென்ன வார்த்தைகள் சொன்னாங்க தெரியுமா? ஏதோ ஒரு இனிஷியல் , அதுக்கென்னன்னு கேட்டாங்க ? நான் என்ன அவ்ளோ ... சொல்லமுடியாமல் கண்களில் குளம் கட்டியது .
அவன் கையை பிடித்து கொண்டாள் , முதுகை நீவினாள். அவனுக்கு அப்போது அந்த அருகாமையும் ஆறுதலும் தேவைப்பட்டது.

தேங்க்ஸ் சத்யா, அன்னிக்கு இந்த மாதிரி யாருமே கைய புடிக்க கூட ஆளில்லாமல் ரொம்ப தவிச்சு போய்ட்டேன். ஏன், எதுக்கு, எப்படி, மதராஸ் வந்தேன், எனக்கே தெரியல.
ஆபிசுக்கு என்ன பண்ண ?
அது எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு இல்ல மாசத்துக்கு பாத்துக்கறதுக்கு ஆள் இருக்கு. நான் இல்லனாலும் மத்தவங்க பார்த்துப்பாங்க. அத பத்தி கவலை படவேண்டாம்.
ஒகே , யோசனையுடன் தலை ஆட்டினாள் .
என்னதான் இருந்தாலும் இந்த நிலமைல நீ சித்திய தனியா விட்டுட்டு வந்தது தப்புடா.
எனக்கும் அது மனஸ உறுத்திட்டே இருக்கு. அதுக்கும் நா ஏதாவது வழி பண்ணறேன்.
ம்ம்! யூ ஷுட் ...
எஸ்.
சத்யா உனக்கு ஏதாவது வேல இருக்கா ?
பரவால்ல சொல்லு.
எனக்கு ஒரு ஆசை.
ம்ம் சொல்லு.
நான் கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கவா ?
சீ. இதென்னடா.
ப்ளீஸ்
வா வந்து படு.
இது என்னடா புது ஆச ?
அது ரிஷி நம்ம ஆஸ்பிடல்லே அட்மிட் ஆகி இருந்தான் இல்ல. அப்போ நீ அவன்கிட்ட ரொம்ப ஓவரா அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்ட மாதிரி இருந்தது. அப்போ நீங்க லவர்ஸ்னு நினைச்சேன் . சாரி, சாரி அவளின் முறைப்பில் பல முறை சாரி சொன்னான். ஆனா அதுக்கப்புறம்தான் நீங்க கசின்ஸ்னு தெரிஞ்சது. அப்பவே எனக்கு ஒரு சிஸ்டரா உன்கிட்ட பழகனுன்னு ஆச இருந்தது. ஆனா ஏனோ எனக்கு அந்த சூழ்நிலையா இல்ல என்னோட ஈகோவா தெரியல., உன்கிட்ட வரவிடாம தடுத்துடுச்சு.
அம்மா, என்ன ஆசையாதான் பார்த்துக்கிட்டாங்க. பட் ஏனோ என்ன சுத்தி நல்ல நட்புகளும் அமையல, சொந்தங்களும் அமையல. ஹாஸ்பிடல், வீடு. அப்பாவையும் ரொம்ப மிஸ் பண்ணறேன். நிறைய தப்பு பண்ணிருக்கேன். அதுக்கு மன்னிப்பே இல்லை.அவன் சொல்ல சொல்ல இவள் மெதுவாக அவன் தலை கோதிக் கொண்டிருந்தாள். பேசினான். நிறைய பேசினான். அவன் பேசியதில் நிறைய அர்த்தமில்லாததாக இருந்தது. தனக்கு(ம்) புது அல்லது பழைய உறவு கிடைத்ததில் தன்னையும் அறியாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு உறங்கிப்போனான் அந்த பெரிய சிறுவன்.
சத்யாவின் நினைப்பிலேயே இருந்தவனுக்கு தன் ஆச்சி தன்னை கவனித்து கொண்டிருந்ததை கவனிக்க தவறினான்.
மறுநாள், சரவணனின் தங்கை மதராஸில் வாழ்பவள், அவளின் நாத்தனார் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க அவர்கள் எல்லாரும் சரவணனை பார்க்க வந்தனர். அவர்களுக்கு முத்துவும் சரவணனும் நெருங்கிய நண்பர்கள் என்று நன்றாகவே தெரியும்.அதுவும் இல்லாது சரவணனை எப்படி அவன் தங்கை அண்ணா என்று அழைப்பாளோ அதே போலத்தான் முத்துவும் . அவனும் அண்ணனாகவே இருந்தான். அதனால் அவனுக்கும் பத்திரிக்கை வைத்து விட்டு,
இங்க பாருங்கண்ணா நீங்க எங்களுக்கு அண்ணிய காட்டவே இல்ல. நிச்சயமா கல்யாணத்துக்கு அவங்கள கூட்டிட்டுதான் வரணும். இந்தாங்க இது அண்ணிக்கு புடவை. அவன் கையை பிடித்து புடவையை காலையில் வைத்து அழுத்தினாள் . ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனுக்கு இந்த திருமணம் இன்னும் தன் மனையாளை பார்க்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.
அவளை பார்க்க ஏதோ ஒரு சாக்கு தேடியவனுக்கு, இது ஒரு காரணமாக போனது. அவன் தோட்டத்தில் நிறைய விளைச்சல் வந்த விஷயத்தையும் அவளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமாக இருந்தது.
தோட்டத்தில் இருந்த சில காய் கறியையும் , விளைந்திருந்த மாம்பழங்களையும் கூடையில் அள்ளி போட்டுக் கொண்டவன் கிளம்புவதற்கே அன்று மாலை ஆகி விட்டது.
தேநீர் எடுத்துக் கொண்டு போனவள் இன்னும் காணவில்லையே என்று அவள் அன்னை வந்து பார்த்த போது அவள் மடியில் கொண்டிருந்தான் கௌசிக். அவனை எடுத்து ஒரு தலையணை முண்டுகொடுத்து விட்டு சத்யாவை எழுப்பி விட்டாள் அன்னை. சத்யாவுக்கு காலெல்லாம் மறத்து போனது.
என்னடி இது? மெதுவா கைபுடிச்சுக்கிட்டு வா.
பாவம்மா அவன். இத்தனை வருசமா தனியாவே இருந்துட்டான் இல்ல அதான் பாசத்துக்கு ரொம்ப ஏங்கி கிடக்கறான்.
அதுக்கு நாம என்ன பண்ண முடியும். அவன் அம்மாதான் யாரோடையும் சேர விடாம பண்ணிட்டா . ஏதோ இப்பவாவது நம்மளோட சேர ஒத்துக்கிட்டாளே ? அதுவே ஆச்சர்யம்தான் ,
இல்லமா அவன் அம்மா சம்மதத்தோட இங்க வரல. சண்டைலேதான் வந்துருக்கான்.
அதிர்ச்சியில் உறைந்தாள் சிமி.....
முத்து சத்யாவை நோக்கி வைத்துக் கொண்டிருக்கிறான்.
மீண்டும் வருவாள் தேவதை.....

BaraniUsha
 
NYD-64

கிளம்பும்போது மனதில் ஏதோ தோன்ற அவளுக்கு பிடித்த இன்னொரு பொருளையும் அவன் தனியாக எடுத்து வைத்துக் கொண்டான். அது என்னனு யோசிச்சுகிட்டே இருங்க. நான் மதராசுக்கு போயிட்டு வந்துடறேன்.

....................................................................................

என்னம்மா சொல்லற?

ஆமாம்! அவனுக்கும் சித்திக்கும் கொஞ்சம் மனத்தாங்கல். என்ன விஷயம்?

பதிலேதும் வரவில்லை.

பதிலாக சத்யா தலையை குனிந்து கொண்டாள் .

சரி விடு, அவனுக்கு எத்தனை நாள் இங்க இருக்கணுமோ இருக்கட்டும்.

அம்மா ,

உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.

சொல்லு சத்யா

அம்மா தயவுசெஞ்சு இவனையும் ரிஷி மாதிரியே நடத்தணும். அவனுக்கு எந்த குறையும் இல்லாம நீங்கதான் பார்த்துக்கணும்.

என்ன சத்யா இதெல்லாம் நீ சொல்லணுமா?.

சாரி மா நீங்க நல்லாவே பார்த்துப்பீங்கனு இருந்தாலும் ... ஏதோ சாரி சாரிமா...

சொல்லி விட்டு வேகமாக நகர்ந்ததில் இருந்து அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் அல்லது ஏதோ கவலையில் இருக்கிறாள் என்பதை அன்னை புரிந்து கொண்டாள் .

எல்லாருக்கும் பாக்கறா , இவளோட பிரச்சனை எப்பதான் தீருமோ, நினைத்த மாத்திரத்தில் சரவணனிடமிருந்து போன் வந்தது.

முதலில் சரவணன்தான் பேசினான்.

இது டாக்டர் சத்யா அவங்க நம்பர் தானே?

ஆமாப்பா , இது அவங்க நம்பர்தான். அவங்க அம்மா பேசறேன் .

அம்மா நான் இங்க காஞ்சிபுரத்துலேர்ந்து சரவணன் பேசறேன். சும்மாதான் அவங்க எப்படி இருக்காங்கன்னு கேட்கலானு,

நல்லா இருக்காப்பா …

கொஞ்சம் இரு அவள கூப்புடுறேன்.

அம்மா, அவங்க வேணாம், ஆச்சிதான் உங்ககிட்ட பேசணுமாம்.

ஓ! அப்படியா…குடுப்பா…

வணக்கம் ஆச்சி, நல்லா இருக்கீங்களா ?

எனக்கென்னமா வீடு போ போங்குது காடு வா வாங்குது. இந்த பயல வச்சுக்கிட்டு என்னாலதான் போய் சேர முடியல.

ஏங்க இப்படியெல்லாம் பேசறீங்க. நீங்கதானே எங்களுக்கு எல்லாம். வீட்டுல பெரியவங்க. நீங்க இருந்தாத்தானே எங்களுக்கு மனசுக்கு தெம்பு?

அதுசரி ,எல்லாம் நல்லாத்தான் பேசறீங்க? .கெழவி எப்படி இருக்கான்னு உங்க பொண்ணுகூட கவலை படலியே …இங்க இருக்கும்போது உசுராத்தான் இருந்தா…ஆனா பொறவு… போனவ போனவதான் ., இந்த பக்கம் திரும்பிக்கூட பாக்கலியே ?

உங்க மனவருத்தம் எனக்கும் புரியுது ஆச்சி. ஆனா உங்ககிட்டகூட சொல்ல முடியாம ஒரு திருடி மாதிரி ஓடி வந்துட்டோமே, எப்படி அவங்ககிட்ட பேசறதுன்னு அவளுக்கு ரொம்பவே தயக்கமா இருக்கு .

அது சரி சம்மந்தி , அவங்களுக்குள்ள சண்டையினா நாம் பெரியவங்க அப்படியே விட்டுட முடியுமா? உங்க பொண்ணுக்கு இங்க வர எண்ணம் இருக்க இல்லையா ?

அவரின் வார்த்தைகள் ஊசியாக பாய்ந்தது.

இருக்குங்க ஆச்சி...

சரி , அப்ப நீங்க வீட்டு பெரியவங்கதான் நல்ல விதமா பேசி அவளை இங்க கொண்டாந்து விடணும் ?

அது எப்படிங்க ? உங்க வீட்டு பையன்தான் எங்க பொண்ண வேண்டான்னது . என்னவோ எங்கமேல தப்பு மாதிரி பேசறீங்களே?

என்ன ஆத்தா! நான் தப்பா ஏதும் சொல்லல. கண்டிக்கறதுக்கு பெத்தவங்க இல்ல. இந்த கெழவி சொல்லும் அம்பலமேற மாட்டேங்குது… . நீங்கதானே வந்து நல்ல விதமா எடுத்து சொல்லோணும்?

இல்லம்மா ., இந்த விஷயத்துல அவருதான் வந்து எங்க பொண்ண கூட்டிட்டு போகணும்.

உங்க பொண்ணு அவனை விரும்பறாளா ?

மௌனம்.,

வந்து வாழுவாளா ?

மௌனம்.,

சரி நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். சத்யா இருக்கறாளா .

நான் அவகிட்ட தரேன். ஆனா நீங்க அவகிட்ட பொறுமையாதான் பேசணும்.

சரி.,

முதலில் படபடப்பாக பேசியவர் சத்யாவின் ஆச்சி என்ற வார்த்தையில் உருகினார்.

அதற்குள் போனை தேடி சத்யாவே வந்து அன்னையிடமிருந்து

ஹலோ , ஆச்சி , என்ன மறந்துடீங்களா ?

அந்த குரலில் இருந்தது குற்றமா சலுகையா இரண்டையுமே அவர் ரசித்தார்.

தன் மகளை அவர் எப்படியெல்லாம் வாயால் குத்த போகிறாரோ என்று சிமி பயந்துகொண்டே இருந்தார். போக போக அவர்கள் இருவரும் காதலர்கள் செல்ல சண்டையிடுவது போல பேசிக் கொள்ளவும் சிரித்துக் கொண்டே இரவு உணவை பார்க்க போனார்.

இங்க பாரு சத்யா, அவனுக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு. இல்லாட்டி அவன் ஒரு நாள் கூட உன்ன வீட்டுல வச்சுருக்க மாட்டான். அவன் மனசுல வேற எதையோ வச்சிருக்கான். அதுதான் என்னனு என்னால கண்டுபுடிக்க முடியல.

அவர் மனசுல அந்த ருக்குதான் இருக்க ஆச்சி., அதனாலதான் அவரு என்ன வீட்டை விட்டு வெளில போக சொல்லிட்டாரு.

அந்த ருக்கு இன்னிக்கு நேத்து அவன் பின்னாடி சுத்தலை. அவளை புடிக்குன்னா எதுக்கு உனக்கு தாலி கட்டினான்?

அவங்க., அந்த ஆச்சி சொன்னதுனாலதான்…

அட சீ அப்படியெல்லாம் மத்தவங்க சொன்னதுக்கெல்லாம் அவன் எதையுமே செய்ய மாட்டான்.

ஆச்சி சொன்னதை காது கேட்டுக் கொண்டது., ஆனால் மூளையும் மனதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் எந்த நிலையில் விரட்டப்பட்டாள் என்பது அவளுக்குத்தான் நன்றாகவே தெரியுமே. இருப்பினும், ஆச்சியிடம் எதுவும் சொல்லாமல் வாய் மூடி இருந்தாள். ஆனால் ஆச்சி விடவில்லை.

என்ன நான் சொன்னத உன்னால நம்ப முடியலீல்ல? சரி., இப்ப அவன் ஏதோ அவன் பிரண்ட பாக்க மதராசுக்கு வந்துருக்கான். அவன் உன்னையும் பாக்க வருவான் பாரு.

இருக்குமோ? கேட்ட போதே மனதில் பூ மலர்ந்தது. அந்த மணம் அவளுக்கே நாசியை துளைப்பது போல இருந்தது.

இந்த கட்ட வேகறதுக்குள்ள உங்களோட குழந்தையை நான் கொஞ்சணும்.

ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? இப்படியெல்லாம் பேசினீங்கன்னா நான் இனிமே எப்பையுமே பேசமாட்டேன் , அதிகாரமாக மிரட்டினாள் .

சரி, சரி, நான் உங்கிட்ட பொறவு பேசறேன்.

ஆச்சி ., உங்களுக்கு ஏன் மேல கோபம் எதுவுமில்லையே ?

எதுக்கு ?

அன்னிக்கு நான் உங்ககிட்ட சொல்ல கூட இல்ல. எனக்கு மனசெல்லாம் வேதனை.என் மேல கோவிச்சுக்காதீங்க ? ப்ளீஸ் !

அட தங்கமே! எனக்கு அவன்கிட்ட கூட கோபம் வரும். உன்கிட்ட வராதுடி . நீ என்னோட பேரம் பொண்டாட்டி இல்ல. என்னோட பொண்ணு. இல்லனா அவனை அம்மா மாதிரி நீ கவனிச்சுக்குவியா ?

அது என்னோட கடமை ஆச்சி,

சரிடா ,பொறவு பேசுவோம் …

சரிங்க ஆச்சி,நீங்க உடம்ப பார்த்துக்கோங்க.

சரிடி, என் ராசாத்தி.

அவரிடம் பேசியது மனதிற்கு இதமாக இருந்தது . அதற்குள் கௌசிக் மாடியில் இருந்து இறங்கி வந்தான்.

ஹாய் கௌசிக், நல்ல தூக்கமா? எஸ் சத்யா, தேங்க்ஸ் .

சொல்லிக்கொண்டே சோபாவில் அமர்ந்திருந்தவளில் மடியில் வந்து மீண்டும் படுத்துக் கொண்டான்.

இப்ப இல்ல எழுந்துரு . போய் பேஸ் வாஷ் பஞ்சிட்டு டிபன் சாப்பிடு. இல்லாட்டி நீ மறுபடியும் தூங்கிடுவ. அவனை கட்டாயமாக எழுப்பி அனுப்பினாள் .

என்னங்க மேடம், என்னோட சலுகையெல்லம் புது தம்பிக்கு போய்டுச்சா? இதெல்லாம் நல்லாவே இல்ல.

நான்தான் பழைய தம்பி நீதான் புதுசு சொல்லிக்கொண்டே வந்தான் கௌசிக்.

என்ன இது எதுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை ?

நீ ஒருபக்கம் படுத்துக்கோ அவன் இன்னொரு பக்கம்?

அது சரி, உங்க வீட்டுக்காரர் வந்து என்ன அடிக்கவா ? டக்கென்று உதட்டை கடித்துக் கொண்டான் ரிஷி.

நீ எங்க அவரை பார்த்த? அவரு இங்கையா இருக்கறார்?

இவ வேற பயங்கர ஷார்ப்பா இருக்காளே ! சமாளி ரிஷி சமாளி, சீக்கிரம் ஏதாவது யோசி. இல்ல ....அவர் பார்த்தா ரெண்டுபேரையும் வெளுத்துருவாரு ன்னு சொன்னேன்.

சரிடா ரம்யா எங்க ?

அவ வரல,பேசிக் கொண்டே அனைவரும் சேர்ந்து உண்டனர்.

சிவா எப்ப வரான்? .

இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்.

பெரிப்பா எங்க ?

அவரோட பிரண்டு வீட்டுக்கு போயிருக்கார்.

ரிஷியும் கிளம்பி விட்டான். கௌசிக்கும் ரூமுக்கு சென்று விட்டான்.

சத்யா கங்காவுக்கும், சிமிக்கும் உணவு பரிமாறினாள்.

ஆச்சி சொன்னது மனதில் முணுமுணுவென்று அரிக்க ஆரம்பித்தது.

அவர் வருவாரா ? இங்க சென்னைக்கு வந்துருக்காரா ? இங்க வந்தாலும் எதுக்கு என்ன பாக்க வரணும்?

ஒவ்வொரு கேள்வியாக மனதில் தோன்ற ஆரம்பித்தது . அவள் தன்னை வெளிக்காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள். சிறிது நேரத்தில் அவளுக்கே மூச்சு முட்ட ஆரம்பித்தது.

நீ வேணா போய் படும்மா ,அப்பா, சிவாவை நான் பாத்துக்கறேன்.

சரிம்மா .

வழக்கம்போல இரவு குளித்துவிட்டு, அடர் நீலத்தில் இருந்த இரவு உடையை மாட்டிக் கொண்டாள். அவனை பற்றியே நினைத்து கொண்டிருந்தவளுக்கு கன்னத்தில் செம்மை பூத்தது... அவளின் வெட்க சிவப்பை அவளே கண்ணாடியில் பார்த்து பூரித்து போனாள், தன்னை வெறுப்பவன் மீது தனக்கு ஏன் இத்தனை காதல்? அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது

காலிங் பெல் சத்தம் கேட்டதும் மனம் பரபரத்தது.

காதலனாக மாறிய கணவனுக்காய் ஏங்கி கிடக்கும் தேவதை

மீண்டும் வருவாள்............
​
 
Last edited by a moderator:

Waiting for your next ud sis.come soon sis
 
New Threads

Top Bottom