Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93
Hi friends,
வணக்கம்..நான் இனிதா மோகன்..என் அடுத்த கதையான உயிர் துடிப்பாய் நீ! கதையின் முன்னோட்டம் இங்கு பதிந்துள்ளேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
நன்றி
இனிதா மோகன்..
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93


முன்னோட்டம்



‌உயிர் துடிப்பாய் நீ !



நாயகன்: மிகன்( பெருமைமிக்கவன்)

நாயகி: திகழொளி ( பிரகாசமானவள்)

சென்னை நகரத்தின் மிக பிரபலமான டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ரில் தனக்கு தேவையானதை டிராலியில் எடுத்துக் கொண்டு இருந்த

திகழொளியின் புடவையை பிடித்து இழுத்தது மூன்று வயது மதிக்க தக்க பெண் குழந்தை..



அவளோ ‌யார் தன் புடவையை பிடித்து இழுப்பது என்று நினைத்து திரும்பினாள்.

அங்கே நின்றிருந்த பெண் குழந்தையை கண்டு அதன் அழகில் மயங்கியவள், அதன் முன் மண்டியிட்டு அமர்ந்து "அதன் கன்னத்தை மென்மையாக பற்றி என்னடா தங்கம் வேண்டும்..."என்று கேட்டாள்..



அதுவோ, அங்கு மேல் அடுக்கில் வைக்க பட்டு இருந்த சாக்லேட் ஃபாக்ஸ்ஸை கை காட்டியது.



சட்டென்று எழுந்து அதை எடுத்து குழந்தையின் கையில் கொடுத்தவள் "உன் அம்மா, அப்பா வரலையா, அவர்கள் எங்கே.." என்று கேட்ட பொழுது..



"மகிழி .."என்று அழைத்துக் கொண்டு வந்தவனை பார்த்தவள் சிலையாக உறைந்து நின்றாள்.



யாரை இனி தன் வாழ்வில் பார்க்கவே கூடாது என்று எண்ணி இருந்தாளோ அவனை மீண்டும் பார்க்க வைத்தது விதியின் விளையாட்டா..?



அவனோ ,இவளை பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்தாளும், அதை காட்டிக் கொள்ளாமல் அவளை கல்லையும், மண்ணையும் பார்ப்பதை போல் பார்த்துவிட்டு தன்னிடம் "அப்பா .."என்று அழைத்துக்கொண்டு ஒடி வந்த குழந்தையை ஆசையாக தூக்கிக் கொண்டவன் அவளை சிறிதும் சட்டை செய்யாமல் திரும்பி நடந்தான்..



தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தோழியை தேடிக்கொண்டு வந்த கமலி தான் அழைத்ததை கூட கவனிக்காமல் யாரையோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கும் திகழொளியைப் பார்த்தவள், தானும் தோழியின் பார்வை சென்ற திசையை திரும்பி பார்க்க .. அங்கே சென்றவனைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவள் தன் தோழியிடம் "திகழி இது ..இது.. மிகன்னா..?அந்த குழந்தை அவருடையதா..? என்று கேட்டாள்..



திகழொளியோ எதுவும்‌ பேசாமல் நின்றாள் . அவள் மனதில் ‌சூரவாளியே வீசிக் கொண்டு இருந்தது.



ஏன்!ஏன்! தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைத்தவளுக்கு, கண்களில் நீர்

வெளியே வர இப்பவா,அப்பவா என்று துடித்துக் கொண்டு இருந்தது.



கமலியோ, தோழியின் நிலமையை நினைத்து கவலை அடைந்தாள்.



இப்பொழுது தான் கொஞ்சம் தேறி வந்தாள். அது அந்த விதிக்கு பிடிக்கவில்லையா? மறுபடியும் அந்த திமிர்பிடித்தவனை எதற்கு இவள் கண்களில் காட்டி இவளை உயிரோடு கொல்லுகிறது என்று நினைத்தாள்.



சிலையாக நின்ற திகழொளியை அழைத்துக் கொண்டு, அவள் வாங்கியதையும் எடுத்துக் கொண்டு பில் போடும் இடம் நோக்கிச் சென்றாள்.



*************************************

தனக்கு புதியதாக தோன்றிய சிறார்களுக்கான ஆடை வடிவமைப்புக்கான டிசைனை வெகு தீவிரமாக வரைந்து கொண்டு இருந்த திகழொளியின் காதருகில் ..



"பரவாயில்லை உனக்குள் இவ்வளவு ரசனையா.." என்று கூறியவனின் குரலில் தூக்கி வாரிப் போட திரும்பியவள் அங்கு மிகன் இரு கைகளையும் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கண்களில் ஆராய்ச்சி பார்வையுடன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.



திகழொளியோ எதுவும் பேசாமல் தனது வேலையை மீண்டும் தொடர ..



அவனுக்கு அவள் தன்னை‌ கண்டு கொள்ளாமல் ‌ இருந்தது கோபத்தை கொடுக்கச் சட்டென்று அவளிடம்‌ "நடிப்பு பிரமாதம் ! நீ என்ன நடித்தாலும் உன்னிடம் நான் மயங்க மாட்டேன்.."

என்றான்.



அவளோ அவன் சொன்னதை கேட்டு துடித்து போனவள்,"உங்களை மயக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..எனக்கு நிறைய வேலை இருக்கிறது. என்னை கொஞ்சம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் நான் உங்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன்.."



"ஏய் !அப்போ உனக்கு‌‌ மட்டும் தான் வேலை இருக்கா? எங்களுக்கு இல்லையா ? உன்‌ நன்றி யாருக்கு வேண்டும்.. "என்றவனிடம்..



"உங்களுக்கு வேலை இருக்கா,இல்லையா வென்று எனக்கு எப்படி தெரியும் !..அப்படி இருந்தால் அதை போய் பார்ப்பது தானே...

ஏன்! என்னிடம் பேசி உங்கள் நேரத்தை வீணாக்குறீங்க.."



"ம்ம்ம் ..வேண்டுதல்.." என்றவன் கோபமாக அந்த இடத்தை விட்டு சென்றான்.




அவன் போவதையே பார்த்தவள் மனதிற்குள் 'எத்தனை நாள் தான் குட்ட குட்ட குனிவது என்று நினைத்தாலும் எவ்வளவு நாட்கள் தான் இப்படி நெருப்பின் மீது நிற்பது போல் சகிப்பது இதற்கு விடிவில்லையா! என்று மனதிற்குள் மருகினாள்..'
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 1
வான்வெளியில் நிலவும்,விண்மீன்களும் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்த நள்ளிரவில் , மணி பன்னிரெண்டைக் கடக்க சில நொடிகளே இருந்த வேளையில், ஊரே புத்தாண்டு கொண்டாட்டங்களின் எதிரொலியாய், ஆங்காங்கே இளவட்டங்களின் கூக்குரலும்,கைதட்டல் ஒலியும் செவியை பிளக்க புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
ஆகாயத்தில் வானவேடிக்கையின் வர்ணஜாலங்கள் கண்களுக்கு விருந்தானது.

திகழொளிக்கு மட்டும் மனம் இதிலெல்லாம் நிலைக்கவில்லை..மார்கழி மாதக் குளிருக்கு இதமாக , இரு கைகளையும் அணைவாக மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு, பரந்து விரிந்து கிடந்த ஆகாயத்தை பார்த்துக் கொண்டு நின்றாள்.


ஆகாயம் தான் தனக்குள் எத்தனை,எத்தனை விந்தைகளையும் ,மாயா ஜாலங்களையும் வைத்திருக்கிறது.

ஒரு பகுதிக்கு வெளிச்சத்தையும்,ஒரு பகுதிக்கு இருட்டையும் மாறி..மாறி வழங்குகிறது. இருட்டினால் கூட எப்பிடி வெளிச்சம் வந்துவிடும் என்ற நம்பிக்கையை தன்னை நம்பி இருக்கும் ஜீவராசிகளுக்கு தருவது போல். மக்களும் கடந்த வந்த கசப்புகளை மறந்தோ,ஒதுக்கியோ புது வருடத்தை ஆவலுடனும் ,நம்பிக்கையுடனும் எதிர் கொள்ள தயாராகிறார்கள்.

ஆனால், அவள் மட்டும் இந்த நான்கு வருடங்களாக கசப்பையும் , துக்கத்தையும் மட்டுமே சுமந்து கொண்டு இருக்கிறாள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு புத்தாண்டு என்றால், அவர்கள் வீட்டிலும் எவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

அவளின் அப்பா அறவாணனுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் துளி கூட விருப்பம் இல்லாவிட்டாலும், மகளுக்காக நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடுவார். பள்ளிப்பருவத்திலிருந்தே மகள் விரும்பினால் என்ற ஒரே காரணத்திற்காக செய்து வந்தார்.

தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று வைத்திருப்பவர். அதனால் தான், தன் குழந்தைகளுக்கு தேடிப்பிடித்து அர்த்தம் உள்ள அழகான தமிழ் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார் .

மகளின் முகம் சிறிதும் வாடவிடமாட்டார்.. அவளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார்.



'பாப்பா உன் பெயருக்கு ஏற்றாப் போல் எப்போதும் உன் முகமும் ,வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கனும் டா..' என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஆனால், இப்போது என்று நினைத்தவளுக்கு கண்களில் நீர் குளம் கட்டியது.

எத்தனை உயிராக இருந்தவர். இன்று எப்படி தன்னை வெறுத்து இருக்கிறார் என்று நினைக்கும்போது அவளால் தாங்க முடியவில்லை..

தினம் , தினம் அதை நினைத்தே, மனதிற்குள் மருகிக் கொண்டு இருக்கிறாள்.

அவளின் மனம் புரிந்தோ என்னவோ, அவளின் அருமை தம்பி அமுதன் அவளை தேடி வந்து, "அக்கா தூக்கம் வரலையா? குளிரில் இங்கே நின்னு என்ன யோசனை? காலையில் வேலைக்கு போகனுமே, வாக்கா அம்மா தேடுவாங்க.." என்றவனிடம் மென்புன்னகையை சிந்தினாள்.

அமுதன் இளங்கலை இயந்திர பொறியியல் நான்காம் வருடம் படித்து கொண்டு இருக்கிறான்..( B.E mechanical engineering )

இந்த வீட்டை பொறுத்தவரை இந்த நாலு வருடமாக அவன் மட்டுமே அவளிடம் பேசும் ஒரே ஜீவன். அவள் தோள் சாயும் தோழன்.அவளை விட நான்கு வயது இளையவனாக இருந்தாலும், பல சமயங்களில் அவளுக்கு தமையனாக வழி நடத்துபவன்.

அமுதனோ, எதுவும் பேசாமல் சிரித்தவளிடம் "என்னக்கா கேட்டதற்கு பதில் சொல்லாமல் சிரிக்கிறே.."

"ஒண்ணுமில்லை அம்மு சும்மா தான் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். முதலெல்லாம் நம்ம வீட்டிலும் நீயூ இயர்ன்னா எவ்வளவு ஜாலியா இருக்கும்.ஆனால், இப்போ? எல்லாம் என்னால் போச்சு.."என்று கண்ணீரை அடக்கி கொண்டு கூறிய தமக்கையின் தோள்களை ஆதரவாக அணைத்து படி.

"அக்கா பழசெல்லாம் இப்ப எதுக்கு? கண்டிப்பா இந்த வருசம் நமக்கு நல்ல வருசமா அமையும் பாரு.."

"என்னமோ போ அம்மு எனக்கு நம்பிக்கையே இல்லை.."

"நம்பிக்கை தானே வாழ்க்கை. இப்படி எல்லாம் நெகட்டீவ்வா பேசாம ஒழுங்கா கீழே வந்து தூங்கிற வழியைப் பாரு.. அப்புறம் வீட்டுக்காரம்மா இத்தனை நேரம் மாடியில் நின்னு இலவசமாக வேடிக்கை பார்த்ததுற்கு வாடகையில் ஐநூறு ரூபா கூட்டினாலும் கூட்டிடுவாங்க.." என்று கேலி பேசியவனிடம்..

"போக்ரி .. உனக்கு இந்த வாய் இருக்கே வாய். அது போதும் நீ பிளைச்சுக்குவே டா .."என்று தம்பியிடம் வம்பு பேசினாள்.

"என் காலை வாரலைன்னா உனக்கு தூக்கமே வராதேக்கா.."

"ஹோய் அப்படி எல்லாம் இல்லை அம்மு. உண்மையை சொல்லனும்னா நான் உயிர்ப்போடு இருப்பதற்கு நீ தான்டா காரணம். நீ மட்டும் இல்லை என்றால் நான் என்றோ உயிரை விட்டு இருப்பேன்.."

"அக்கா என்ன இது! இப்படி எல்லாம் பேசாதே எனக்கு கெட்ட கோவம் வரும்.."

"உண்மை தான் அம்மு. நீ எனக்கு கிடைத்த பொக்கிஷம்.எனக்கு அமிர்தமாக கிடைத்த அமுதன்.." என்று தம்பியின் கன்னம் கிள்ளி கொஞ்சியவளிடம்..


"போதும் ..போதும், ஏற்கனவே மார்கழி மாசக் குளிர் தாங்க முடியலை.நீ வேறு ஐஸ் வைக்காதே.." என்று தமக்கையின் மனநிலையை மாற்றும் பொருட்டு பேசினான்.

"ஏண்டா நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருந்தா.. நீ கிண்டலா பண்றே போடா.." என்று முகத்தை திருப்பிக் கொண்டு நின்றவளை தன் புறம் திருப்பி..

"நான் போய் என் செல்ல திகழி குட்டியே கிண்டல் பண்ணுவேனா..? இந்த உலகத்திலேயே பெஸ்ட் அக்கா யாருன்னு கேட்டா..? அது என் அக்கா தான்னு சொல்லுவேன். யூ ஆர் மை ரோல் மாடல் .. யூ ஆர் மை செக்கண்ட் மதர்..யூ ஆர் மை ஆல்.. இப்படி சொல்லிட்டே போகலாம் லவ் யூ அக்கா.." என்று தமக்கையை அன்பொழுக அணைத்துக் கொண்டான்.

அவன் எப்போதும்அப்படித் தான்! அவனின் உலகம் திகழொளி தான்..சின்ன வயதிலிருந்தே திகழொளி முகம் வாடினாள் தாங்க மாட்டான்.
அவளை யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் போதும், வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு போய் விடுவான்.

இந்த நான்கு வருடங்களில் காவலனாக, தந்தையாக தோழனாக அவளுக்கு அவன் தான் இருந்து வருகிறான்.


வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை அவள் கடந்து வர பக்க பலமாக இருந்தது அமுதன் மட்டும் தான்.

இருவரும் பழையதை மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டு ஆகாயத்தை வெறித்தபடி நின்றிருந்தவர்களின் செவிகளில் பொன்னியின் அழைப்பு பாதரசமாக கேட்டது.

"அம்மு அம்மா கூப்பிடுறாங்க போல் ..வா போலாம்.."

"ஆமாம் நாம ரெண்டு பேரும் நின்னு பேசுனாலே அந்த இடியமீனுக்கு பிடிக்காதே.."

"டேய் அம்மா மட்டும் நீ சொன்னதை கேட்கட்டும்.. படவா அப்புறம் இருக்கு உனக்கு.."

"பெரிசா என்ன செய்வாங்க கைக்கு கிடைப்பதை எடுத்துட்டு வந்து இரண்டு போடுவாங்க.."

"தெரியுதுல்லா வா போலாம்..அப்பாவுக்கு ஏதாவது தேவையான்னு பாரு வா.."என்றவள் தம்பியை இழுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

பொன்னியோ, இவர்கள் வருவதை பார்த்த உடனே "இத்தனை நேரம் இந்த பனியில் மேலே நின்னு என்ன பண்ணுனீங்க.. உடம்புக்கு ஏதாவது வந்துடப் போகுது..என்று கடிந்து கொண்டார்.

அமுதனோ "அதெல்லாம் ஒண்ணும் வாரது..நீங்க இன்னும் தூங்கலையா.. ?என்று தன் அன்னையிடம் கேள்வி கேட்டான்.

"அப்பா இன்னும் படுக்கலை..ஏனோ இன்னைக்கு இவ்வளவு நேரம் டீவி பார்த்துட்டே உட்கார்ந்துட்டார். நான் படுக்கச் சொன்னா..?நீ வரட்டும்னார்.. அது தான் கூப்பிட்டேன்.."

"சரி..சரி வாங்க .."என்றவன்.. உள்ளே வரவேற்பறையில் அமர்ந்திருந்த அறவாணன் இடம் சென்று "வாங்கப்பா போய் படுக்கலாம்.." என்றபடி அவர் நாற்காலியிலிருந்து எழுவதற்கு உதவியவன், கை தாங்கலாக அவரை அழைத்து சென்று படுக்கையில் படுக்க வைத்தான்.

திகழொளியோ, பெற்றவர்களை ஏக்கமாக பார்த்தபடியே தன் அறைக்குள் சென்றாள்.

கடந்த இரண்டு வருடமாக அறவாணனுக்கு தன்னுடைய எல்லா வேலைகளுக்கும் யாராவது உதவி இல்லாமல் தனியாக செய்ய முடிவதில்லை.

இரண்டு வருடத்திற்கு முன்பு வந்த பக்கவாதம் அவரை புரட்டி போட்டுவிட்டது. அதற்கு முன்பு வரை கம்பீரமாக இருந்தவர் தான்..மகளின் கவலை அவரை புழுவாக அரிக்க அதுவே அவரை படுக்கையில் தள்ளியது.

தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்தவர் . உடல்நிலை சரியில்லாமல் ஆன பிறகு, விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.

அவருக்கு வந்த பணத்தை வங்கியில் வைப்பு நிதியில் போட்டு விட்டு, அதன் மூலம் வரும் வட்டியிலும், தங்கள் சொந்த வீட்டை விற்ற வந்த பணத்தையும் வைத்து தான் ஓரளவு குடும்ப செலவை சமாளிக்கிறார்கள்.

என்ன தான் மகள் சம்பாதித்தாலும், அதை அவர் தொடுவதில்லை. மகளின் மேல் இருந்த வருத்தம் ஒரு புறம் என்றால், சுயகெளரவம் ஒரு புறம் அவருக்கு.

திகழொளி ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷனில் இளங்கலை முடித்து இருக்கிறாள். பிரபலமான டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் சிறார்களுக்கான ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறாள்.


திகழொளிக்கு நல்ல வருமானம் தான். ஆனால், அவள் வருமானத்தை தாயும், தந்தையும் தொட்டுக் கூட பார்ப்பதில்லை. என்பது அவளுக்கு மிகப் பெரிய வருத்தம். தம்பி மட்டுமே தேவைப்படும் போது பெற்றவர்கள் தடுத்தாலும், கேட்க மாட்டான்.அவளிடம் உரிமையுடன் வாங்கி கொள்வான்.

அறவாணனுக்கு மகள் என்றால் உயிர். அப்படி இருந்தவர், மகளிடம் பேசி நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த கசப்பான நிகழ்வுக்கு பின் திகழொளியிடம் பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டார்.

பொன்னியும் கூட மகளிடம் நேரடியாக பேசி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.

ஒரு காலத்தில் பெற்றவர்களுக்கு உயிராக இருந்தவள் தான் , இன்று வேற்று மனசி ஆகிவிட்டாள். எல்லாவற்றிக்கும் காரணம் திகழொளி மீது வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கை.

மகள் அந்த நம்பிக்கையை உடைத்து விட்டாள் என்று பெற்றவர்களுக்கு கோவம். மகளுக்கோ, பெற்றவர்கள் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம்.

அமுதன் தான் இவர்கள் மூவருக்கும் மத்தியஸ்தரன். அவன் மட்டுமே இவர்களுக்கு ஒரு பாலமாக இருந்து வருகிறான்.

திகழொளி உடைந்து போய் கதறும் பொழுதெல்லாம் அமுதனும், அவளின் தோழி கமலியும் தான் அவளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

தன்னுள் ஒடுங்கிப் போய் கிடந்தவளை தேற்றி அவளை வேலைக்கும் செல்ல வைத்தார்கள்.

ஓய்ந்து இருக்கும் போதெல்லாம், தேவை இல்லாததை நினைத்து வருந்துகிறாள் என்று நினைத்து, அவள் படிப்புக்கும், மூளைக்கும் வேலை கொடுக்கும் இந்த வேலையை தேர்ந்தெடுத்து கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.

இந்த வேலையை கூட அமுதன் தான் விண்ணப்பித்தான். நல்ல வேளை திகழொளி தம்பிக்காக நேர்முகத் தேர்வில் ஏதோ கொஞ்சம் நல்ல விதமாக செய்ததால் இந்த வேலை கிடைத்தது.

திகழொளி தன் தந்தை நோய்யுற்ற பொழுது தான் மிகவும் மனம் உடைந்து போனாள். தன்னால் வந்த மனம் வருத்தம் தான்.. தன் தந்தையை படுக்கையில் படுக்க வைத்து விட்டது என்ற குற்றயுணர்வில் தவித்தாள்.

சோறு தண்ணி இல்லாமல் அழுது.. அழுது, கரைந்தவளை அமுதனும், கமலியும் தான் ஆறுதல் படுத்தி தேற்றினார்கள்.

கடந்த இரண்டு வருடமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வேலைக்கு சென்று வந்தாலும்,தந்தையின் இந்த நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்ற வலி அனுதினமும் அவளை கொல்லாமல் கொல்லுகிறது.

ஒரு கட்டத்தில் வாழ்வையே வெறுத்தவளை உயிர்ப்போடு வைத்திருப்பது அமுதனின் அன்பு மட்டுமே.

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் திகழொளியும் வீட்டு சூழலுக்கு நன்கு பழகி கொண்டாள். தன் பெற்றவர்கள் தன்னை புரிந்து கொண்டு தன்னுடன் பழைய படி பேசுவார்கள் என்று தவமாய் தவம் கிடக்கிறாள்.
பழையதை எல்லாம் நினைத்தபடியே படுக்கையில் புரண்டு படுத்தவளுக்கு உறக்கம் தான் எட்டா கனியாக இருந்தது.

ஆனால், அவளின் துன்பத்திற்கு காரணமானவனோ நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தான்.

தொடரும்..
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 2

இளங்காலைப் பொழுது ! கிழக்கு வானம் சிவந்து பகலவன் கீழ் வானில் பவனி வந்து கொண்டிருந்தான்.ஆதவனைக் கண்ட மகிழ்ச்சியில் பறவைகள் தங்களது கூட்டை விட்டுப் பறந்து இரை தேடச் சென்றது.

சூரியனின் செங்கதிர்கள் சாளரத்தின் வழி சென்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மிகனின் கன்னம் தொட்டு எழுப்பியது.

மிகனோ, மெல்ல கண்களை சுருக்கி விழித்தவன், தன் கழுத்தை கட்டிக் கொண்டு, பிஞ்சு பாதங்களை தன் வயிற்றின் மீது சுகமாக போட்டுக் கொண்டு, பூங்குவியலாக உறங்கிக் கொண்டிருந்த 'மகிழியின்' உறக்கம் கலையாமல் , மெல்ல அவளை நகர்த்தி படுக்க வைத்து விட்டு, எழுந்து சென்று சாளரத்தின் வழியே எதிர்வீட்டை பார்த்துக் கொண்டு நின்றான்.

கடந்த நான்கு வருடங்களாக ஊருக்கு வந்தாலே, எழுந்தவுடன் முதலில் சென்று எதிர்வீட்டை பார்ப்பது தான் அவன் வழக்கம். அதற்கு முன்பும் பார்ப்பான் .

ஆனால், அப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அவளையும், அவள் கைவண்ணத்தில் அழகாய் மின்னும் கோலத்தையும் பார்ப்பதற்காகவே நேரமாக எழுந்து விடுவான்.

காலைப் பொழுதில் அவளையும், அவள் கோலத்தையும் ரசித்தால் தான் அவனுக்கு அன்றைய நாள் அழகாக இருக்கும்.

ஒரு நாள் அவளை பார்க்கவில்லை என்றால் கூட அன்று முழுவதும் எதையோ இழந்ததை போல் சுற்றுவான்.

அது எல்லாம் ஒரு காலம். ஆனால், இப்பொழுது பழைய நினைவுகளை அசைபோட்டபடி சில நிமிடங்கள் நிற்பது அவன் வாடிக்கை.

நான்கு வருடங்களாக அவளின் நினைவுகளை மனதிற்குள் பிடித்து நிறுத்தி இருப்பது இது போல் சின்ன..சின்ன விஷயங்கள் தான்.


அவள் மேல் தீராத கோவமோ?வன்மமோ? எது என்று அவனுக்கே தெளிவு இல்லை. இருந்தாலும், அவளை நினைக்காமல் அவனுக்கு ஒரு விடியலும் விடிந்தது இல்லை.

அவர்கள் சொந்த வீட்டை விற்று விட்டு, போன பின்பு அவனும் அதிகமாக இங்கே இருந்தது இல்லை. வெளியூர் வாசம் தான் அவன் வாழ்க்கை.

மிகன் , இளங்கலை டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியரிங் படித்து இருக்கிறான்.(ஜவுளி துறையில் பொறியியல் ) அது சம்பந்தமான வேலையில் இரண்டு வருடம் புனேவிலும், இரண்டு வருடம் மும்பையிலும் வேலை பார்த்தான்.

தன் தந்தை உலகமாறன், சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வரச்சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருந்ததால் , தன் மும்பை கார்மண்ட் கம்பெனியின் சென்னை கிளைக்கு மாற்றல் வாங்கி கொண்டு இப்போது சென்னை வந்து இருக்கான்.அடுத்த வாரம் புது வேலையில் சேர வேண்டும்.

சின்ன வயதிலேயே தன் தாயை இழந்தவனுக்கு அவனின் தந்தை தான் எல்லாம்.

உலகமாறன் மோட்டார் வாகன உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கணக்கராக பணிபுரிகிறார் .தன் மனைவியை இழந்தும், வேறு மணம் புரியாமல் மகனுக்காகவே வாழ்கிறார். மனைவி இறப்புக்கு பிறகு தன் மகன் தாய் பாசத்திற்கு ஏங்க கூடாது என்று, தன் தங்கை மணியரசியை குடும்பத்துடன் அழைத்து வந்து தன்னுடனே வைத்துக் கொண்டார்.

உலகமாறனின் தங்கை கணவர் காஞ்சித்துரை சொந்தமாக மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார் . மிக நல்ல விதமான குணம். மாறன் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அதனாலேயே, மனைவியின் அண்ணன் வீட்டில் வந்து மகிழ்ச்சியாகவே தங்கிக் கொண்டார்.

தங்கை மகன் நீரனும்,மிகனும் கிட்டதட்ட ஒரே வயது என்பதால் இருவரும் இரட்டையர்கள் போலவே பாசமாக வளர்ந்தார்கள்.

மணியரசி தன் அண்ணன் மகனை தன் குழந்தை போலவே பாசத்துடன் வளர்த்தார். மிகனும் , நீரனும் ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார்கள்.

உறவை தாண்டி உயிர் நண்பர்களாக இருந்தார்கள். கடந்த நான்கு வருடம் முன்பு வரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாமே தலைகீழ்.

மிகன் பழைய நினைவுகளை அசைபோட்ட படி, தன்னை மறந்து சாளரத்தின் பக்கம் நின்றிருந்தவனின் அருகில் வந்து , அவனின் தோள்களில் ஆதரவாக கை போட்ட மாறன், " தம்பி எழுந்துட்டீயா? என்னப்பா இங்கே நின்னு யோசனை? போய் குளிச்சுட்டு வா ! இன்னைக்கு நீயூ இயர் ! கோயிலுக்குப் போய்ட்டு வரலாம்.." என்றவரிடம்..

" அப்பா அவசியம் கோவிலுக்கு போகனுமா? எனக்கு கடவுள் நம்பிக்கை போய் இரண்டு வருசத்துக்கு மேல்லாச்சு.."

மகன் எதை நினைத்து இப்படி பேசுகிறான் என்று புரிந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல்.."தம்பி நல்ல நாளும் அதுவா இப்படி எல்லாம் பேசாதே.. அப்பா சொல்றேன் இல்லே, போய் குளிச்சுட்டு வா ! பாப்பாவையும் கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு , நீ ஏதோ வாங்கனும்ன்னு சொன்னீயே அப்படியே கடைக்கும் போய்ட்டு வரலாம்.." என்றவரிடம் மறுப்பேதும் சொல்லாமல் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.

உலகமாறனோ, மகன் போவதையே பார்த்துக் கொண்டு அசையாமல் சில நொடிகள் நின்றார்.

அவர் மனதிற்குள் எப்படியாவது இவன் மனதை மாற்றி விரைவாக திருமணம் செய்து வைக்கனும்.இப்படியே அவன் போக்கில் இனியும் விட்டால் சரிப்படமாட்டன் என்று நினைத்தபடியே தானும் குளிக்கச் சென்றார்.

மிகன் குளித்து வந்து உடை மாற்றி தயாரான பின்பு, தூக்கம் கலையாமல் உறங்கி கொண்டிருந்த மகிழியை மெல்ல எழுப்பி, அவளுடன் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து மகிழியை தூக்கி சென்று பல் துலக்கி விட்டுக் கொண்டிருந்தவனிடம் "மிகா அண்ணா கோவிலுக்கு போகனும்ன்னு சொன்னார். நான் பாப்பாவை குளிக்க வைத்து, ரெடி பண்றேன். நீ போய் சாப்பிடுப்பா.." என்று அவன் அத்தை மணியரசி சொல்லவும், இவனும் குழந்தையை அத்தையிடம் கொடுத்து விட்டு சாப்பிடச் சென்றான்.


மாமா காஞ்சித்துரை பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார் . இவனைப் பார்த்ததும் "வா மிகா , அப்பாவும் வரட்டும் எல்லாரும் சேர்ந்தே இன்னைக்கு சாப்பிடலாம்.." என்றவரிடம், அவர் படித்து முடித்திருந்த பேப்பரை வாங்கிக் கொண்டு, பேப்பரை படிக்க அவர் அருகில் அமர்ந்தான்.

சற்றுநேரத்தில் உலகமாறன் வரவும், டைனிங் டேப்பில் மீது மணியரசி சமைத்து வைத்திருந்த உணவு பதார்த்தங்களை எடுத்து மூவரும் தட்டில் வைத்துக் கொண்டு அமர்ந்து உண்டனர்.

மணியரசியும் மகிழியை கிளப்பி, அவளுக்கும் உணவு கொடுத்து, அவளை மட்டும் கோவிலுக்கு அனுப்பினார்.

தந்தை ,மகன் இருவரும் வற்புறுத்தி கோவிலுக்கு அழைத்தும், கணவன், மனைவி இருவருமே தாங்கள் கோவிலுக்கு வரவில்லை என்று பிடிவாதமாக மறுத்து விட்டனர்.உலகமாறனும் அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டார்.



அன்று புத்தாண்டு என்பதால் , கோவிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மகிழி கொஞ்சம் கூட நடக்காமல், " அப்பா தூக்கு, தாத்தா தூக்கு.." என்று இவர்களை மாற்றி, மாற்றி தூக்க வைத்துக் கொண்டிருந்தாள்.

கூட்டமும் அதிகமாக இருந்தால் , இருவரும் குழந்தையை கீழே விடாமல் தூக்கிக் கொண்டே சுற்றினார்கள்.

உலகமாறன் தன் மகனுக்கு இந்த வருடமாவது நல்லது நடக்கனும் என்று மனம் உருகி மனதார கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

மிகனோ, கடமைக்கு கடவுளை வணங்கிவிட்டு , மகிழியை மடியில் வைத்துக் கொண்டு, கிடைத்த இடத்தில் அமர்ந்து வருவோர், போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

உலகமாறனுக்கு மகனின் செயல் வருத்தம் கொடுத்தாலும் , காட்டிக் கொள்ளாமல் அவனிடம் வந்து அமர்ந்துகொண்டார்.

எப்படி மகனிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் , ஒரு வழியாக தைரியத்தை கூட்டிக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார்.

"மிகா உனக்கும் வயசு ஏறிட்டே போகுது .. எப்ப தான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கே.."

" அப்பா ப்ளீஸ் ! எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பற்றிய எண்ணமே இல்லை.."

"அப்ப எப்ப தான் எண்ணம் வரும்.."

"அது வரும் போது சொல்றேன் .. எனக்கு இப்போதைக்கு மகிழி போதும். நான் கொஞ்ச நாளைக்கு இப்படியே இருந்துக்கிறேன்.."

" என்ன விளையாடுறீயா? தம்பி இத்தனை நாள் பழசை மறந்து நீ மாறி வருவேன்னு நான் வெய்ட் பண்ணுனேன்.. ஆனால் , உனக்கும் வயசாகிட்டே போகுது.எனக்கும் வயசாகிட்டே போகுது . நானும் இன்னும் இரண்டு வருடத்தில் ரிட்டெயர்டு ஆகப்போறேன்.அதுக்குள்ளே உன் திருமணத்தை முடிக்கனும் என்றவரை அமைதியாக பார்த்தான்.

அவரோ தொடர்ந்து "மிகா உங்க அம்மா போனபின் நான் வாழ்வதே உனக்காக தான்.இத்தனை நாள் உன் இஷ்டப்படி விட்டுட்டேன் .இனி என்னால் அப்படி முடியாது.சீக்கிரம் ஒரு நல்ல முடிவு எடு! என் கடமையை முடிக்கனும்.." என்று அழுத்தமாக சொன்ன தந்தையை மிகனோ திகைப்புடன் பார்த்தான்.

'இத்தனை நாள் அவர் சொல்வது போல் அவன் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்தது இல்லை தான்‌.ஆனால், இந்த ஒரு மாதமாக சுற்றி வளைத்து தன்னிடம் திருமணத்தை பற்றி பேசியவர் , இன்று நேரடியாகவே கேட்டு விட்டார். தந்தையை இனி எப்படி சமாளிப்பது என்று அவனுக்கு கவலையாக இருந்தது.'

இப்போதைக்கு சமாளிப்போம் என்று நினைத்தவன், "அப்பா எனக்கு இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடுங்க ப்ளீஸ்.." என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன மகனிடம் கொஞ்சம் கூட இளகாமல்..

"மிகா, இதுக்கு மேலேயும் என்னால் பொறுக்க முடியாது.உன்னை விட்டா நீ இப்படியே காலம் கடத்துவே.. என்னால் இனி காத்திருக்க முடியாது. நீ மனசு மாறும் வழியே பாரு.. நானும் தரகரை வரச் சொல்றேன்.." என்று கண்டிப்பாக சொன்னார்.

அவனோ , "அப்பா ப்ளீஸ்ப்பா ஒரு மூணு மாசம் வெய்ட் பண்ணுங்க.அதுக்கப்றம் நீங்க சொன்னபடி கேட்கிறேன்.." என்று தந்தையை அப்போதைக்கு சாமதானப்படுத்தினான்.

அவனின் மனக் காயத்தின் வலிக்கு மருந்தாக அவளைத் தவிர யாராலும் முடியாது. உயிர் வலி கொடுத்தவளும் அவளே ! அந்த வலிக்கு மருந்தும் அவளே! ஆனால், அவன் வலிக்கு மருந்து கிடைக்கவே கிடைக்காதே ! அப்படி கிடைத்தாலும், அவனால் ஏற்றுக்கொள்ள முடியாதே.. அவள் எங்கே இருக்கிறாளோ ? என்ன செய்கிறாளோ? அவளுக்கு திருமணம் நடந்து இருக்குமோ? அவளை நாம் மீண்டும் பார்ப்போமா ..?என்று அவனின் மனம் தவியாய் தவித்தது.

தன் சிந்தனையிலேயே மூழ்கிகிடந்தவனை மாறன் " சரி மூணு மாசம் தான் உனக்கு டைம் .அதன் பிறகு நான் எந்த பெண்ணக் காட்டறேனோ! அவளை கல்யாணம் பண்ணிக்கனும்.." என்று கட்டளையாக சொன்னார்.

மிகனோ, தந்தை சொன்னதை கேட்டு அந்த நொடி அதிர்ந்தாலும், மனதிற்குள் அதை அப்போ பார்ப்போம் என்று நினைத்து தந்தையிடம் தலையை ஆட்டினான்.

உலகமாறன் மகன் தன் பேச்சுக்கு தலை ஆட்டியதும் நிம்மதி பெரு மூச்சு விட்டவர், "மிகா உனக்கு ஏதோ வாங்கனும்ன்னு சொன்னீயே வா போலாம்.." என்று எழுந்தார்.

அவனோ, " அப்பா அத்தையும் சில சாமான்கள் வாங்கச் சொன்னாங்க, எல்லாம் ஓரே இடத்தில் வாங்கிற மாதிரி டிபார்ட்மென்ட் ஸ்டோர் பக்கத்தில் எங்கே இருக்கு.." என்று தானும் எழுந்த படியே கேட்டவனிடம்..

மகனுடன் பேத்தியை தூக்கிக் கொண்டு நடந்தபடியே, சென்னையின் மிக பிரபலமான கடையின் பெயரைச் சொல்லி அங்கு போகலாம் என்றார்.

மிகன் சென்று தன் மகிழுந்தை எடுத்து வந்ததும், பேத்தியை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு மகனின் அருகில் அமர்ந்து கொண்டார்.

கடைக்கு செல்லும் வழி எல்லாம், மகிழியோ பாதையில் செல்லும் வாகனங்களை காட்டி, காட்டி "அப்பா ஆட்டோ, தாத்தா பஸ் .."என்று மழலை மொழியில் பேசிய படியே வந்தாள்.

மிகனோ, மகிழியிடம் பேசினாலும், மனம் மட்டும் தந்தை சொன்னதை அசைபோட்டபடியே வந்தது. பாதையில் கவனம் இருந்தாலும், அவளை இந்த சென்னை மாநகரில் எங்கு தேடுவோம்.. அவள் இங்கு தான் இருக்காளா.?.இல்லை வேறு ஊர் எங்காவது போய்விட்டாளா..? என்ற கேள்வியே அவன் மனதை குடைந்தது.

அவனின் குழப்பத்திற்கெல்லாம் இன்று விடை கிடைக்கப் போவதை அப்போது அவன் அறியவில்லை..

தொடரும்..


(அடுத்த யூடி சனிக்கிழமை)
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 3

அனுதினமும் வாழ்க்கை நமக்கு புதிர் வைத்து காத்திருக்கிறது. அந்த புதிருக்கான விடை நமக்குள் தான் இருக்கும்.ஆனால் அதை நாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை.

வாழ்க்கை பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் ஏராளம். இன்பம், துன்பம் இரண்டுமே மாறி,மாறி வருவது தானே இயற்கை.

அதை உணர்ந்து ஏற்றுக் கொண்டாலே நம் வாழ்க்கை பயணம் வெற்றியில முடியும். ஆனால், அதற்கான காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும். எந்த ஒரு காத்திருப்பிற்கும் நிச்சயமான பலன் உண்டு.

அப்படி தான் நான்கு வருடமாக தனக்கானவளை காணமுடியுமா? என்று ஒரு புறம் மிகன் காத்திருந்தாலும், அவளை நினைக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் நாள் தோறும் அலை தேடிய கரையாய் துடித்துக் கொண்டிருந்தான்.
என்ன தான் அவள் மேல் கட்டுக்கடங்காத கோவம் இருந்தாலும் , அவளை ஒரு முறையாவது காண வேண்டும் என்று வானம் பார்த்த பூமியாய் ஏங்கி தவித்தவனுக்கு ,காலம் அழகான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

வாய்ப்பை மட்டும் தான் காலம் வழங்கும்.அதை இறுகப் பற்றிக் கொண்டு நாம் தான் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். இனி நிகழும் சந்திப்பு இருவருக்கும் வரமா? சாபமா? என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

தன்நினைவுகளிலே மிகன் சூழன்றுகொண்டிருந்தாலும், தந்தை சொன்ன டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ருக்கு மகிழுந்தை சரியாக ஓட்டி வந்து விட்டான்.

வண்டியை உரிய பகுதியில் நிறுத்தி விட்டு மூவரும் கடையினுள் சென்றனர்.

மிகனோ, மகிழியை தோள்களில் சுமந்து கொண்டு மளிகை சாமான்கள் இருக்கும் பிரிவுக்கு சென்றான். உலகமாறன் தனக்கு தேவையான சில பொருட்கள் வாங்க அவர் வேறு பிரிவுக்குச் சென்றார்.

கடையில் பொருட்களை பார்த்ததும் மகிழி மிகனிடமிருந்து கீழே இறங்க துடித்தாள்.மிகனும் அவளை கட்டுப்படுத்த முடியாமல் கீழே இறக்கி விட்டான்.

மகிழியோ, வேடிக்கை பார்த்தபடி மிகன் பின்னே தளிர் நடை நடந்து வந்தாள். அவனோ, தன் அத்தை மணியரசி சொன்ன சாமான்களை தேடி எடுத்து கொண்டிருந்தான்.

சாக்லேட் ஃபாக்ஸ் வைக்கப்பட்டிருந்த மேல் அடுக்கை மகிழி பார்த்தவுடன் ,மிகன் பின் செல்லாமல் அப்படியே நின்று விட்டாள்.

சாமான் எடுக்கும் மும்மரத்தில் மிகனோ, மகிழி கூட வராததை கவனிக்கவில்லை.

திகழொளிக்கு புத்தாண்டுக்கு விடுமுறை என்பதால் கமலி அவளை அன்று எங்காவது போகலாம் என்று கட்டாயப்படுத்தி வெளியில் அழைத்து வந்தாள்.

அமுதனுக்கு ப்ராஜெக்ட் வேலை இருப்பதால், தான் வரவில்லை என்று கூறி விட்டான். அதனால், தோழிகள் இருவரும் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தால் , அதை வாங்கிவிட்டு வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து நகரத்தின் பிரபளமான டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ருக்கு வந்தனர்.

உள்ளே வந்தவர்கள் அவரவர்களுக்கு தேவையான பொருட்கள் இருக்கும் பிரிவை தேடிச் சென்றனர்.
கருமமே கண்ணாக தனக்கான பொருட்களை டிராலியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த திகழொளியின் புடவையை பிடித்து இழுத்தது மூன்று வயது மதிக்க தக்க பெண் குழந்தை.

அவளோ, ‌யார் தன் புடவையை பிடித்து இழுப்பது என்று நினைத்து திரும்பினாள்.

அங்கே நின்றிருந்த பெண் குழந்தையை கண்டு அதன் அழகில் மயங்கியவள், அதன் முன் மண்டியிட்டு அமர்ந்து "அதன் கன்னத்தை மென்மையாக பற்றி என்னடா தங்கம் வேண்டும்..."என்று கேட்டாள்.

அதுவோ, அங்கு மேல் அடுக்கில் வைக்க பட்டு இருந்த சாக்லேட் ஃபாக்ஸ்ஸை கை காட்டியது.

சட்டென்று எழுந்து அதை எடுத்து குழந்தையின் கையில் கொடுத்தவள் "உன் அம்மா, அப்பா வரலையா?அவர்கள் எங்கே.." என்று கேட்ட பொழுது.

"மகிழி .."என்று அழைத்துக் கொண்டு வந்தவனை பார்த்தவள் சிலையாக உறைந்து நின்றாள்.

யாரை இனி தன் வாழ்வில் பார்க்கவே கூடாது என்று எண்ணி இருந்தாளோ! அவனை மீண்டும் பார்க்க வைத்தது விதியின் விளையாட்டா..?

அவனோ ,இவளை பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்தாளும், அதை காட்டிக் கொள்ளாமல் அவளை கல்லையும், மண்ணையும் பார்ப்பதை போல் பார்த்துவிட்டு தன்னிடம் "அப்பா .."என்று அழைத்துக்கொண்டு ஒடி வந்த குழந்தையை ஆசையாக தூக்கிக் கொண்டவன் அவளை சிறிதும் சட்டை செய்யாமல் திரும்பி நடந்தான்.

தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தோழியை தேடிக்கொண்டு வந்த கமலி தான் அழைத்ததை கூட கவனிக்காமல்,யாரையோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கும் திகழொளியைப் பார்த்தவள், தானும் தோழியின் பார்வை சென்ற திசையை திரும்பி பார்க்க .. அங்கே சென்றவனைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவள் தன் தோழியிடம் "திகழி இது ..இது.. மிகன்னா..?அந்த குழந்தை அவருடையதா..? என்று கேட்டாள்.

திகழொளியோ , எதுவும்‌ பேசாமல் நின்றாள் . அவள் மனதில் ‌சூரவாளியே வீசிக் கொண்டு இருந்தது.

ஏன்!ஏன்! தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைத்தவளுக்கு, கண்களில் நீர் வெளியே வர இப்பவா,அப்பவா என்று துடித்துக் கொண்டு இருந்தது.

கமலியோ, தோழியின் நிலமையை நினைத்து கவலை அடைந்தாள்.

இப்பொழுது தான் கொஞ்சம் தேறி வந்தாள். அது அந்த விதிக்கு பிடிக்கவில்லையா? மறுபடியும் அந்த திமிர்பிடித்தவனை எதற்கு இவள் கண்களில் காட்டி இவளை உயிரோடு கொல்லுகிறது என்று நினைத்தாள்.

சிலையாக நின்ற திகழொளியை அழைத்துக் கொண்டு, அவள் வாங்கியதையும் எடுத்துக் கொண்டு பில் போடும் இடம் நோக்கிச் சென்றாள்.

மிகனோ உள்ளமும்,உடலும் நடுங்க தன் கையிலிருந்த மகிழியை இறுக பற்றிக் கொண்டு தன் தந்தை இருந்த இடம் தேடிச் சென்றான்.

அவன் மனம் கண்ணாடித் துண்டுகள் போல் சுக்கு நூறாக உடைந்து விட்டது. யாரை இத்தனை நாள் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தானோ ? அவளை பார்த்தும் வலி தான் அதிகரித்தது.எப்படித் தான் அவள் முன் எதையும் முகத்தில் காட்டாமல் வந்தானோ? அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

உலகமாறனோ, மிகனின் முகத்தைக் கண்டதும் ஒரு நொடி திகைத்து போய்விட்டார். அவன் முகத்தில் சொல்ல முடியாத வலி தெரிந்தது.

மகனிடமிருந்த மகிழியை வாங்கிக் கொண்டு " என்னப்பா ஆச்சு.. ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?" என்றவரிடம்.

"ஏனோ பயங்கர தலைவலி.." என்று பேசவே முடியாமல் சொன்னான்.

"அச்சோ திடீர்னு என்னாச்சுப்பா.. "

"தெரியல .. நீங்க வாங்க வேண்டியது வாங்கியாச்சுன்னா பில் போட்டுட்டு போகலாம் .. "என்றவனிடம்

"எனக்கு எல்லாம் வாங்கியாச்சு போலாம், நீ வாங்கியது எங்கேப்பா.."

" பில் கவுண்டரில் இருக்குப்பா.." என்றபடி நடந்தவனிடம்.

" பாப்பாவுக்கு எதுக்குப்பா இவ்வளவு பெரிய சாக்லேட் ஃபாக்ஸ்.." என்று தந்தை கேட்ட பின்பு தான் மகிழியின் கையில் இருந்த மிட்டாய் டப்பாவை பார்த்தான்.

'தான் மகிழியை தேடி போன போது, இதை தான் அவள் பாப்பாவுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாளா?' என்று நினைத்தவன் தந்தையிடம் பதில் பேசாமல் அதற்கும் சேர்த்தே பில் போட்டான்.

ஏனோ அதை வேண்டாமென்று அவனால் சொல்ல முடியவில்லை.

திகழொளியோ, தன் நிலை மறந்து கமலி இழுத்த இழுப்புக்கு சென்றாள்.அவள் அவளாக இல்லை. அவள் மனதிற்குள் ஆயிரம் சம்மட்டிகள் ஒரு சேர அடிக்கும் வலியை அனுபவித்துக் கொண்டு இருந்தாள்.

கமலியோ பில் போடும் இடத்தில் மிகன் இருப்பதை தொலைவில் இருந்தே கண்டவள், அங்கே செல்லாமல் திகழொளியை வேறு புறம் இழுத்துச் சென்றாள்.

தன் தோழி மீண்டும் அவனைப் பாரத்தாள் தாங்க மாட்டாள். இப்போதே, அவள் உடைந்து அழுகும் நிலையில் இருக்கிறாள். என்று நினைத்தவள் வேறு புறம் அழைத்து சென்றாள்.

மிகனோ, எப்போது கடையை விட்டு வெளியில் போவோம் என்ற நிலையில் இருந்தான்.

திகழொளியை தன் தந்தை பார்த்துவிடக் கூடாதே என்று கலங்கியவன், பில் பணத்தை கொடுத்து விட்டு, வாங்கிய சாமான்களை எடுத்துக் கொண்டு,மகிழியையும் தூக்கிக் கொண்டு ,மெதுவாக வந்த தந்தையை அவசரப் படுத்தி அழைத்துக் கொண்டு, கடையை விட்டு வெளியில் சென்றான்.

மிகன் கடையை விட்டு சென்றவுடன் கமலியோ, தாங்கள் இருவரும் வாங்கி பொருட்களுக்கு பில் போட்டு வாங்கிக் கொண்டு திகழொளியையும் அழைத்து கொண்டு வெளியில் வந்தாள்.

திகழொளியே அவள் இழுத்த இழுப்புக்கு வந்தாளே தவிர, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.கமலிக்கு அதுவே மனதிற்குள் பயத்தை உண்டு பண்ணியது.

திகழொளி இருக்கும் நிலைக்கு வேறு எங்கும் இனி செல்ல முடியாது. என்று நினைத்த கமலி, அவளை தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றாள்.

கமலியின் பெற்றோர் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருப்பதால், திகழொளிக்கு தனிமை கிடைக்கும் என்று நினைத்து அழைத்து வந்தாள்.

அவளோ ,தன்நிலையிலேயே இல்லை.. ஒரு வார்த்தை பேசாமல் தொய்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

கமலிக்கோ, அவளின் மெளனம் பீதியை கொடுக்க அவளை தொட்டு" திகழி ஏதாவது பேசு டீ .."என்று அவளை உலுக்கினாள்.

திகழொளியோ ,மொழியே மறந்தது போல் அவளை பார்த்து வைத்தாள்.

கமலியோ, தன் தோழிக்கு மிகனைப் பார்த்தது பேரதிர்ச்சி. இவள் இப்படியே இருந்தால், இவள் உடம்புக்கு எதையாவது இழுத்துக் கொள்வாள் என்று நினைத்து, அவளின் கன்னத்தில் பளார் என்று ஒரு அடி வைதாள்.

திகழொளிக்கு அப்போது தான் உணர்வே வந்தது.அவள் தோழியை அதிர்ந்து பார்க்கவும்..கமலியோ, " திகழி பேசு டீ எனக்கு உன்னை இப்படி பார்க்க பயமா இருக்கு.." என்றவுடன்.

"கமலி.." என்றவளுக்கு வேறு வார்த்தை வரவில்லை..நான்கு வருடமாக அடக்கி வைத்திருந்த துக்கத்தை எல்லாம் கதறி தீர்த்தாள்.

கமலியால் அவளை தேற்றுவே முடியவில்லை.. அவளை கடந்த நான்கு வருடம் கூடவே இருந்து பார்த்தவள். அவளின் மனக்கவலை எல்லாம் இப்படி அழுதாவது கரையட்டும் என்று அவளை மடியில் போட்டுக் கொண்டு, முதுகை தடவி கொடுத்து படி இருந்தாள்.

தன் தோழி ஒரு சதவீதம் கூட மிகனை மறக்கவே இல்லையே , இத்தனை நாள் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு மறைத்து கொண்டு இருந்திருக்கிறாள். என்று கமலிக்கு அப்பொழுது தான் நன்றாக புரிந்தது.

'இவளோ, அவனை நினைத்துக் கொண்டு நடைபிணமாக வாழ்கிறாள்.அவனோ, இவள் நினைவு சிறிதும் கூட இல்லாமல் கல்யாணமும் பண்ணி ஒரு குழந்தையையும் பெற்று வைத்திருக்கிறான். ' என்று மிகனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டு இருந்தாள்.
.
திகழொளியோ, அழுது, அழுது ஓய்ந்து போய்விட்டாள்.நெருப்பில் சுட்ட கொடியாய் வாடி வதங்கி கிடந்தவளை காணச் சகிக்காமல், அமுதனுக்கு அழைத்து நடத்தை சுருக்கமாக சொல்லி வீட்டுக்கு உடனே வரச் சொன்னாள்.

மிகனோ எப்படி வீடு வரை வாகனத்தை ஓடினான் என்று அவனுக்கே தெரியாது.வீடு வந்ததும் தன் அறையில் சென்று அடைந்தவன் இரவு வரை வெளியே வரவே இல்லை.

வீட்டில் இருப்பவர்களும் , அவனுக்கு தலைவலி என்பதால் ஓய்வு எடுக்கட்டும் என்று தொந்தரவு செய்யாமல் இருந்தார்கள்.

மிகனோ, பைத்தியம் பிடித்தவன் போல் தன் அறையில் குறுக்கும், நெடுக்கும் நடந்தான்.

அவன் மனம் முழுவதும் திகழொளியின் நினைவே ஆக்கிரமித்திருந்தது.அவள் மீதிருந்த கோவத்தையும் தாண்டி, ' எப்படி இளைத்துவிட்டாள். இதுவரை திருமணமும் ஆகவில்லை போல் . கண்களிலும் ஒளியே இல்லை' என்று அவளைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்.

அவளை பார்த்த சில நொடிதுளிகளிலியே அவளை கூர்ந்து கவனித்திருந்தான்.

எல்லாம் தன்னால் தான் என்று ஒரு புறம் வருந்தினாலும்,இன்னொரு புறம் சொல்வதை கேட்காமல் இந்தளவிற்கு இழுத்து கொண்டாளே சண்டாளி என்றும் நினைத்துக் கோவப்பட்டான்.

அவள் வாழ்க்கையும் கெடுத்துக் கொண்டு, தன் வாழ்க்கையையும் கெடுத்து யாருக்கு என்ன பிரயோஜனம்.

"ஏண்டி என்னை இப்படி உயிரோடு கொல்கிறாய்.." என்று வாய்விட்டு புலம்பி தவித்தான்.

அமுதன் அடித்து பிடித்து கமலி வீட்டுக்கு வந்தவன் தன் தமக்கையின் நிலை கண்டு உடைந்து போய் விட்டான்.

தாங்கள் இத்தனை நாள் கஷ்டப்பட்டு தேற்றி இருந்தவளை, வந்து ஒரே நொடியில் அத்தனையும் கெடுத்து விட்டானே என்று மிகனை மனதிற்குள் வறுத்து எடுத்தான்.

பித்து பிடித்தவள் போல் இருந்த தமக்கையை அழைத்துக் கொண்டு வீடு வந்தான்.எத்தனை சமாதானம் சொல்லியும் அவனால் திகழொளியை தேற்ற முடியவில்லை.

வீடு வந்த மகளின் தோற்றத்தைக் கண்டு பயந்து போய் கேள்வி கேட்ட பெற்றவர்களிடம் அமுதனோ ,நடந்ததை சொல்லாமல் அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி சமாளித்தான்.

திகழொளியோ இரவு சாப்பிடவும் இல்லை..தன்னையே சுற்றி சுற்றி வந்த தம்பியிடம் "தலைவலிக்குது அம்மு கொஞ்ச நேரம் தூங்கிறேன் .." என்று கூறி கதவை அடைத்து விட்டு சாளரத்தின் வழி ஆகாயத்தில் தெரிந்த நிலவை பார்த்தபடி நின்றாள்.


மனதிற்குள் ' ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு சாபம்..நான் என்ன தவறு செயதேன்..அவனை உயிராக நேசித்தது குற்றமா?என் மனம் அவனுக்கு என்றுமே புரியாதா? அந்த குழந்தை அவன் குழந்தையா ? அவனுக்கு கல்யாணமாகிவிட்டதா ? அச்சோ என்னால் தாங்க முடியவில்லையே ? இத்தனை நாள் கழித்து இப்படி ஒரு நிலையிலா அவனை சந்திக்கனும்..' என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டு மருகினாள் .

மனதின் வலியை பொறுக்க முடியாமல் சுவற்றில் சாய்ந்து தொய்ந்து போய் அமர்ந்தவள் மெளனமாக கண்ணீர் வடித்தாள்.

மிகனோ, நடந்ததை எல்லாம் எண்ணி..எண்ணி தன் காயத்தை, அதிகப்படுத்திக் கொண்டான்.

அறையில் மூச்சு முட்டுவது போல் இருக்க சாளரத்தை நன்றாக திறந்து வைத்துக் கொண்டு, வான் நிலவை வெறித்த படி உயிரற்ற சிலையாக நின்றான்.

வெண்ணிலவு மட்டுமே இருவரின் நிலை அறியும். இருவருக்கும் அழகாக தொடங்கிய நாள் தாள முடியாத துக்கத்துடன் முடிந்தது.

தொடரும்



(அடுத்த எபி செவ்வாய் கிழமை)








 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 4

வாழ்க்கையில் எல்லா பிரச்சனைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு .அதை நோக்கி நாம் நகர்வது தான் புத்திசாலி தனம்.

இயற்கை தான் நமக்கு சிறந்த ஆசான்.இரவும், பகலும் , காலநிலையும் எப்படி மாறி..மாறி வருகிறதோ, அது போல் இன்பமும்,துன்பமும் கலந்து தான் வரும். அதை புரிந்து ஏற்றுக் கொண்டாலே எதையும் எதிர்கொள்ளும் திடம் நம்மிடம் வந்து விடும்.

நடந்ததை எண்ணி வருந்தி எதுவும் ஆகப் போவது இல்லை.எதையும் துணிந்து எதிர்கொள்ளும் திறமை தான் நம்மை அடுத்த கட்ட நகர்வுக்கான சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவும்.

தேவை இல்லாத எண்ணங்களும், சிந்தனைகளும் எப்போதும் நமக்கு நம்மையே சுமையாக்கும்.

மிகனும் அப்படி தான் கடந்து வந்த நிகழ்வுகளை எண்ணி,எண்ணி தன் நிலை இழந்து தன்னையே வருத்திக் கொண்டான்.

திகழொளியோ, ஒருபடி மேல் சென்று உடல் நோவை இழுத்துக் கொண்டாள். பத்து நாள் காய்ச்சலில் படுத்து துவண்டு போனாள்.

கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல்.. மகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கும்மளவு உடல் நிலை சரியில்லாமல் ஆனதும், பெற்றவர்கள் தங்கள் கோவத்திலிருந்து கொஞ்சம் இறங்கி வந்து நேரடியாக பேசாவிட்டாலும் மகளிடம் ஜடையாக பேச ஆரம்பித்தார்கள்.

கண்ணும், கருத்துமாக 'பொன்னி' மகளை பார்த்துக் கொண்டார்.நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த தாயின் அரவணைப்பு திகழொளிக்கு மிகுந்த பலத்தை கொடுத்தது.

திகழொளி பத்து நாட்கள் வேலைக்கும் விடுமுறை எடுத்திருந்தாள்.என்ன தான் உடல் தேறி வந்தாலும், மனதிற்குள் மட்டும் ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது.

அமுதனும்,கமலியும் தான் அவளை தேற்றினார்கள்.

" திகழி நீ தான் இப்படி தேவை இல்லாமல் பழசையே நினைத்து உடம்பை கெடுத்துக்கிட்டே.. டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நீ மிகனை பார்த்தாய் தானே.. கல்யாணமும் பண்ணி ஒரு குழந்தையையும் பெற்று சந்தோஷமா தானே வாழ்கிறான்.. "என்று கடிந்து கொண்டாள் கமலி.

" அது தான் கமலி என்னால் தாங்க முடியலை. எந்த விதத்திலும் நான் அவரை பாதிக்கவே இல்லையா..?"என்றவளுக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை.

"திகழி இனி நீ அவனை நினைத்து கண்ணீர் விட்டால் எனக்கு பயங்கர கோவம் வரும். உன் கண்ணீருக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாத ஆள் டீ அவன் .. "என்று கோவமாக கூறியவளிடம்..

"என்னால் முடியலையே கமலி.. "என்று அப்பாவியாக திகழொளி சொன்னாள்.

"திகழி கொஞ்சமாவது உனக்கு ரோசம் இருக்கா ..? உன்னை வேண்டாமென்று தூக்கி எறிந்தவனை, நீ மட்டும் எதுக்குடி இன்னும் நினைச்சு ,நினைச்சு உன் உடம்பை கெடுத்துகிறே.. "என்று கோவமாக பேசிய தோழியை பாவமாக பார்த்தாள்.

கமலியோ, "திகழி நீ செய்த முதல் தப்பு உன் அன்புக்கு தகுதியே இல்லாத ஒருவனை உயிராக நேசித்தது. போனது போகட்டும் இனி எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா வாழ்க்கையை தொடங்கு .."என்று அழுத்தமாக சொன்னாள்.

" கமலி நீ சொல்வது எல்லாம் மூளைக்கு புரியுது..ஆனால் மனசுக்கு சுத்தமா புரியலே.."

"திகழி எதார்த்தத்தை ஏற்று தான் ஆகனும்.மிகன் இன்னொருத்தியோட கணவன் என்று முதலில் நினை ! தானாக உன் மனது மாறும் .."என்று கூறிய தோழியிடம் பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

அவள் மனமோ , அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவனை வேறு ஒருவருக்கும் சொந்தாமனவன் என்று நினைக்கவே அவளால் முடியவில்லை. அந்த நினைப்பே அவளுக்கு உயிர் போகும் வலியை கொடுத்தது.

அமுதனும், கமலி சொன்னதையே வற்புறுத்தி வந்தான். "அக்கா மிகனை பற்றி நினைக்காதே ,உன்னை மணந்து கொள்ள அவனுக்கு தான் கொடுத்து வைக்கவில்லை.."என்ற தம்பியிடம் பதில் சொல்லாமல் மின்விசிறியை வெறித்து பார்த்தபடி படுத்து இருந்தாள் .

அமுதனோ , "ப்ளீஸ் கா நான் சொல்வதை கொஞ்சமாவது யோசி ..இந்த காதலால் நீ இழந்தது எவ்வளவு ? நம் குடும்பத்தின் மொத்த சந்தோஷமும் போச்சு.."என்றவனிடம்.

"அது தான் அம்மு எனக்கு கஷ்டமாக இருக்கு.என்னால் எல்லாருக்கும் எத்தனை சிரமம். என்னை விட நீ சின்னவன் . உனக்கு இருக்கும் அறிவு கூட எனக்கு இல்லாமல் போச்சே என்று நினைக்கும்போது என்னை நினைத்து எனக்கே கோவம் வருது.."

" அக்கா போனது போகட்டும். இனியாவது உன் வாழ்க்கையை நீ வாழனும். எல்லாத்தையும் ஒரே நாள்லே தூக்கி போடச் சொல்லலே ஆனால், கொஞ்சம், கொஞ்சமாக மறந்து என் பழைய அக்காவ புது பொலிவுடன் நீ மாறி வரனும்.."

" அம்மு எனக்கு இப்போது குற்றயுணர்வு தான் அதிகமாக இருக்கு.என் மேல் உயிரையே வைத்து இருந்த அப்பாவுக்கு என்னால் தான் இப்படி ஒரு நிலை.அதை நினைக்கும் போது என்னால் தாங்கவே முடியலே.."

" அக்கா ப்ளீஸ் நடந்தது நடந்து விட்டது.இனி அதை பற்றி பேசி எதுவும் ஆகப்போறது இல்லை.இப்ப தான் கொஞ்சம் உடம்பு தேறி வருகிறது.மறுமடியும் கண்டதையும் நினைத்து உடம்பை கெடுத்துக்காதே.. "என்ற தம்பியிடம்.

"அம்மு நான் உனக்கு என்ன செய்தேன் எதுக்குடா என் மீது உனக்கு இத்தனை அன்பு.."

"பைத்தியம் மாதிரி பேசாம ஒழுங்கா நான் சொன்ன மாதிரி மாறு. எனக்கு இந்த அழு மூஞ்சி அக்கா வேண்டாவே வேண்டாம். நாலு வருசத்துக்கு முன்பு சிரித்த முகமாக இருந்த அந்த அக்கா தான் வேணும்.."

"அவள் என்றோ செத்துட்டாளே.."

" என்னை கோவப்படுத்தாதே.. உன் மீது துளியும் அன்பு இல்லாத ஒருவனுக்காக நீ உன்னையே இப்படி உருக்குலைச்சுக்குவே ! ஆனால், உன் மீது உயிரையே வைத்து இருக்கிற எங்களை பற்றி கொஞ்சம் கூட நினைக்க மாட்டே அப்படித்தானே.."

"அச்சோ , அம்மு அப்படி எல்லாம் இல்லை டா..அப்பா என் கூட பேசறதை நிறுத்திய அன்றே, நான் மனசளவில் செத்துட்டேன் டா.."

" ஒரு முறை அப்பா இடத்திலிருந்து நீ நினைச்சு பாரு ..தான் உயிரையே வச்சிருந்த பெண் ! தன் பேச்சை கேட்கலையேன்னு அவருக்கு எத்தனை வேதனையாக இருந்து இருக்கும். அப்பக் கூட உன்னை வேறு யாரும் ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதேன்னு தான், அவர் ஆசையாக கட்டி அத்தனை வருடம் வாழ்ந்த வீட்டைக் கூட வித்துட்டு வந்தார்.."


" அது தான்டா என்னால் தாங்க முடியலை.என்னால் எத்தனை கஷ்டம் ! இந்தப் பாழாப் போன காதல் ஏன் டா எனக்கு வந்து தொலைச்சுச்சு அம்மு.." என்றவவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் போகவும், எழுந்து தன் தம்பியின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

தமக்கையை குழந்தை போல் அரவணைத்துக் கொண்டே " போதும் கா நீ பட்ட கஷ்டம். உன்னோட கெட்ட காலம் முடிஞ்சுச்சு கா. எப்போது நீ மிகனை குழந்தையோடு பார்த்தாயோ, அப்பவே எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு வந்துருச்சு. ."என்றான்.

அவளோ, தம்பியின் தோள் மீது சாய்ந்த படியே அமைதியாக இருந்தாள்.

" அக்கா எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுப்பீயா..?" என்ற தம்பியை கேள்வியாய் நிமிர்ந்து பார்த்தாள்.

அமுதனோ, தமக்கையின் கண்களை ஆழ்ந்து பார்ததபடி.. "உன்னை அவ்வளவு அசிங்கபடுத்தியவனை பற்றி இனி கனவிலும் நினைக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு.." என்று தமக்கையின் புறம் தன் கைகளை நீட்டினான்.

அவளோ ஒரு நொடி தயங்கினாலும் , அடுத்த நொடி தன் மீது அளவில்லாத அன்பு வைத்திருக்கும் தன் தம்பிக்காக எதையும் செய்யலாம் என்று நினைத்து, தன் கையை தம்பியின் கை மீது வைத்து சத்தியம் செய்தவள், கண்களால் உறுதியும் கொடுத்தாள்.

அமுதனோ, தன் தமக்கையின் கைகள் மீது தன் மறு கையையும் வைத்து மென்மையாக பற்றிக் கொண்டு "அக்கா ,அவனே கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழும் போது, ஒரு தப்பும் செய்யாத நீ இனி எதற்காகவும், யாருக்காகவும் ஒரு சொட்டு கண்ணீரை வீணாக்க கூடாது.அவனை இனி நீ நேரில் பார்த்தால் கூட தைரியமா இருக்க வேண்டும்.."என்றான்.

திகழொளியோ, தலையை மெல்ல ஆட்டினாள்.

அவனோ, " என் செல்ல அக்கா முகத்தில் இனி வரும் நாட்களில் நான் சிரிப்பை மட்டும் தான் பாரக்க வேண்டும்.."என்று கன்னம் பிடித்து கொஞ்சினான்.

அவளோ, " அம்மு இனி அப்பா அம்மா எங்கிட்ட பழைய மாதிரி பேசுவாங்களா..? என்று ஏக்கமாக கேட்டாள்.

"கண்டிப்பா பேசுவாங்க.. இந்த ஒரு வாரமாகவே அவர்களிடம் எத்தனை மாற்றம். உனக்கு உடம்பு முடியலையேன்னு உடனே எப்படி ஆடிப்போய்ட்டாங்க தெரியுமா..?அவர்கள் கோவம் நீ எல்லாத்தையும் மறந்து சீக்கிரம் கல்யாணத்துக்கு சம்மதித்தகனும்ன்னு தான்.."

"கல்யாணமா?அது எப்படி முடியும்.." என்று தயக்கமாக கேட்டாள்.

"ஏன் முடியாது.. ஒளவையார் ஆகலாம்ன்னு நினைப்பா? ஏன் நானும் கட்ட பிரம்மச்சாரியாகவே வாழனுமா..?"

"ஏண்டா இப்படி பேசறே ? நீ ஏன் பிரம்மச்சாரி ஆகனும்..?"

" ம்! நீ கல்யாணம் பண்ணிக்காம நான் எப்படி பண்ண முடியும். இங்க பாருக்கா.. உனக்கு மூணு மாசம் தான் டைம். அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்து புது வாழ்க்கைக்கு தயாராகு.நீ மட்டும் கல்யாணத்திற்கு சம்மதித்துட்டே அப்பா, அம்மா உங்க கூட பழைய படி பேசிடுவாங்க.."

"அம்மு என்ன டா. இப்படி சொல்றே.."

"பின்னே எப்படி சொல்றது .போதும் உன் இஷ்டத்துக்கு இத்தனை நாள் விட்டது. இனி நான் சொல்றதை தான் நீ கேட்கனும் புரிஞ்சுச்சா..!" என்று பெரிய மனுஷன் தோரணையில் சொன்னான்.

அவளோ, தன் சகோதரனை பாவமாக பார்த்தாள்.


" இப்படி அப்பாவியாக மூஞ்சியை வச்சுட்டா , உன் இஷ்டப்படி விட்டுடுவேன்னு நினைச்சீயா.. வாய்ப்பில்லை ராசாத்தி. நேரமாவது தூங்கு நாளைக்கு வேலைக்கு போகனும்.." என்ற படி தமக்கையை படுக்கச்சொல்லி போர்வையை மூடிவிட்டு, விளக்கை அணைத்து விட்டுச் சென்றான்.


திகழொளியோ, தம்பி கொடுத்த அதிர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாமல் படுத்து இருந்தாள். தன்னால் திருமண செய்து கொள்ள முடியுமா? என்று மனதில் தோன்றிய கேள்விக்கு அவளிடத்திலேயே பதில் இல்லை.

இவளோ, தம்பி சொன்னதை நினைத்து கலங்கிக் கொண்டு இருந்தாள்.அங்கே இவளையே நினைத்து ஒருவன் துடித்துக் கொண்டு இருந்தான்.

மிகன் தன் புதிய வேலையில் சேர்ந்து இன்றுடன் பத்து நாட்கள் முடிந்துவிட்டது. அவனுக்கு பிடித்த வேலை என்பதால் வேலையில் எந்த பிரச்சினையும் இல்லை.ஆனால் , மனம் தான் அவளை மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமா ?என்று புழுவாக அரித்துக் கொண்டே இருந்தது.

தன்னை நினைத்தே அவனுக்கு வெறுப்பாக இருந்தது.கையில் கிடைக்க இருந்த சொர்க்கத்தை நழுவ விட்டான்.பின் அதே சொர்க்கம் வேண்டுமென்று இன்று வரை ஏங்குகிறான்.

ஒருவேளை அந்த சொர்க்கம் மீண்டும் கிடைத்தாலும், அதை ஏற்பானா? என்று கேட்டால் அதுவும் மாட்டான்.

அவனின் நிலை விவரிக்க முடியாத வித்தியாசமான நிலை..நெருப்பில் நிற்பது போல் அனுதினமும் சொல்ல முடியாத வலியை அனுபவித்துக் கொண்டு இருந்தான்.

அதுவும் திகழொளியை பார்த்து வந்த நாளிலிருந்து அவன் அவனாக இல்லை..வீட்டில் உள்ளவர்கள் அவனை நெருங்கவே முடியவில்லை.

எப்போதும் இறுகிப் போய் இருந்தான். மகனின் நிலை கண்டு கலங்கிய உலகமாறனோ , பொறுக்க முடியாமல் அன்று காலை அவனிடம் " மிகா என்னப்பா ஆச்சு அன்னைக்கு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போய்ட்டு வந்ததிலிருந்தே, நீ நீயாக இல்லை. என்னாச்சுப்பா அப்பாவிடம் சொல்லுப்பா.மனசுக்குள்ளேயே வைத்து உன்னை வருத்திக்காதே.. "என்று கேட்டே விட்டார்.

அவனோ , " ஒண்ணுமில்லை பா புது வேலை அது தான் கொஞ்சம் டென்ஷன்.."

" பொய் சொல்லாதே ! நீ வேலைக்கெல்லாம் டென்ஷன் ஆகிற ஆளே இல்லை. எதையோ எங்கிட்ட மறைக்கிறே.."

"அப்படி எல்லாம் இல்லைப்பா.."

" மிகா அப்பாவுக்கு உன்னைப் பற்றி தெரியும் பா.. பாப்பா கிட்ட கூட நீ சரியா பேசறது இல்லை. எல்லாரையும் விட்டு விலகியே இருக்கே.. எதுவா இருந்தாலும் மனசு விட்டு பேசுப்பா , நீ இப்படி இருப்பதை பார்கக முடியலே.. "என்று புலம்பினார்.

அவனோ, " அப்பா நீங்க நினைக்கிற அளவுக்கு எதுவும் இல்லை. அப்படி இருந்தா ? உங்க கிட்ட சொல்லாமல் நான் யார்கிட்ட சொல்லுவேன். நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க.." என்று தன் தந்தையை சமாதானப்படுத்தினான்.

ஆனால், இனி வரும் நாட்களில் தன் தந்தையை மட்டும் இல்லை. தான் பார்க்க தவித்ததவளையும் சேர்த்து கலங்கடிக்க போ
கிறோம் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை.

தொடரும்..


(அடுத்த யூடி வியாழன் மாலை)







 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 5

எறும்பு ஊர,ஊர கல்லும் தேயும், என்ற பழமொழிக்கு ஏற்ப அமுதனும் ,கமலியும் திகழொளியிடம் பேசி பேசியே அவளை தங்கள் வழிக்கு கொண்டு வந்து இருந்தார்கள்.

திகழொளியும் மிகனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக தன் மனதில் நிறுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.

ஓரளவுக்கு அதில் வெற்றியும் கண்டாள்.அதற்கு அமுதனின் பங்கு பெரும் பங்கு.அவளை அதட்டி மிரட்டி வழிக்கு கொண்டு வந்திருந்தான்.

அமுதனின் முயற்சியால் பத்து நாள் கழித்து உற்ச்சாகமாகவே வேலைக்கு கிளம்பினாள்.

பத்து நாள் காய்ச்சலில் படுத்து எழுந்ததில் பாதியாக இளைத்து, எலும்பும் ,தோலுமாக இருந்தவளை, அவள் அணிந்திருந்த சுடிதார் தான் ஓர் உருவமாக காட்டியது.

அன்று அமுதனே அவளை கார்மெண்ட்ஸ்சில் விட்டு விட்டு அவன் கல்லூரிக்குச் சென்றான்.

திகழொளி உள்ளே சென்றதும் சக பணியாளர்களின் நலம் விசாரிப்புக்கு பின், அவள் உதவியாளர் பனிமலர் "மேம் நீங்க வந்த உடன் புது மேனேஜர் உங்களை வந்து பார்க்கச் சொன்னார்.." என்றாள்.

திகழொளிக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. பழைய மேலாளர் வேறு கிளைக்கு மாற்றலாகி போனது.


புது மேலாளர் எதற்காக தன்னை வரச் சொல்லி இருப்பார் என்று யோசனையுடன் அவர் அறைக்குச் சென்றாள்.

மெல்ல அறை வாசலை தட்டி அனுமதி கேட்டவளின் செவிகளில் "கம் இன்.." என்ற குரல் வரவேற்றது. 'இந்த குரல் மிக பரசித்தமான குரலாச்சே' என்ற சிந்தனையுடனேயே உள்ளே சென்றாள்.

ஆனால் அந்த அறையின் வெற்று இருக்கை தான் அவளை முதலில் வரவேற்றது.

திகழொளியோ, மேலாளர் எங்கே என்று அறையை பார்வையால் வலம் வந்தவளின் முன், அந்த குரலுக்கு சொந்தக்காரன் வந்து நின்றான்.

அவளோ, அவனைக் கண்டதும் திகைப்புடன் விழித்தாள்.

அவனுக்கோ , அவளைப் பார்த்ததில் எந்த வித அதிர்ச்சியும் இல்லை போல் .. மிக சாதாரணமாக "வெல்கம் பேக் மிஸ் திகழொளி..மிஸ்தானே..?" என்று ஐயத்துடன் கேட்டான்.

அவளோ, பேசும் மொழி மறந்து கற்சிலையாக நின்றாள்.

தன் முன் உயிரற்ற சிலை போல் அசையாமல் நின்றவளிடம், "ஹலோ மிஸ் திகழொளி.." என்று அழைத்து அவள் விழிகள் முன் சொடக்கிட்டு அவளை நடப்புக்கு வர வைத்தான்.

அவளோ , பேந்த விழித்தபடி அவனையே பார்த்தாள்.அவளுக்கு இந்த அதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை.

அவனோ, அவளின் திகைப்பை சட்டை செய்யாமல்.. "மிஸ் திகழொளி நான் தான் புதிதாக வந்து இருக்கும் மேனேஜர். இனி நீங்க என்னிடம் தான் ரிப்போர்ட் செய்யனும்.."என்று வார்த்தைக்கு, வார்த்தை மிஸ் திகழொளி என்று அழுத்திச் சொன்னான்.


தனக்கே அவள் இன்னும் 'மிஸ் திகழொளி 'தான் என்று ஞாபகபடுத்திக் கொள்ள சொன்னானோ? இல்லை நீ இன்னும் 'மிஸ் திகழொளி' தான் என்று நினைவு வைத்துக் கொள்! என்று அவளுக்கு உணர்த்த அப்படி அழைத்தானோ ? அவனே அறியாத புதிர்.


திகழொளியோ, மேஜை மீது பொன்னிற எழுத்தில் 'மிஸ்டர் மிகன்' மேனேஜர் என்று இருந்த பெயர் பலகையை வெறித்துப் பார்த்தாள்.

அவனோ, அவள் பார்வை சென்ற திசையை பார்த்தபடி "என்னை நீ இங்கே எதிர்பார்த்திருக்க மாட்டே இல்லையா ? ஆனால், விதியின் விளையாட்டை பார்த்தாயா? முழுதாக நான்கு வருடங்கள் கழித்து நம்மை மீண்டும் சந்திக்க வைத்திருக்கிறது.."என்றவனை அமைதியாக பார்த்தாள்.

அவனோ , "எதற்கு இந்த சந்திப்புன்னு நினைக்கிறாய்? என் நிம்மதியை கெடுத்த உன்னை.. ஏண்டா மீண்டும் இவனை சந்தித்தோம் என்று அணு, அணுவாக நீ சித்ரவதை அனுபவிக்கக் தான் .."என்றவனின் விழிகளில் மனதிற்குள் ஓரமாக மறைந்திருந்த வன்மத்தின் நிழல் பளபளத்தது.


திகழொளிக்கோ , அவனின் வார்த்தைகள் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.. ஏற்கெனவே செத்த பாம்பை மீண்டும் , மீண்டும் எத்தனை முறை தான் அடிப்பான்.கடைசி வரை தன்னை ஒரு போதும் அவன் புரிந்து கொள்ளவே மாட்டான் என்று சலிப்புடன் நினைத்தாள்.

அவனோ அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டே நின்றான்.அவள் இங்கு தான் வேலை செய்கிறாள் என்று அவன் பணியில் சேர்ந்தவுடன் தெரிந்து விட்டது.
பணியாளர்களின் சுயவிவரம்( ப்ரபைல்)பார்த்த பொழுது அவளை பற்றி அறிந்து கொண்டான். அங்கு தான் அவள் டிசைனராக வேலை செய்கிறாள் என்றும் அவள் விடுமுறையில் இருப்பதும் தெரிந்தது.

திரும்ப எப்போது அவள் வேலைக்கு வருவாள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருந்தான்.

அவளை மீண்டும் கண்டால் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்றும்,அவள் முன்னே தன் பலகீனத்தை காட்டிக் கொள்ளக் கூடாதென்றும் இந்த பத்து நாளாக தன்னை பெரு முயற்சி செய்து தயார்படுத்திக் கொண்டான்.

அதேபோல் இன்று அவளை மீண்டும் நேரில் காணும் போது என்ன தான் மனதிற்குள் படபடப்பு இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவள் மீது இருந்த கோவத்தை மட்டும் கொட்டி தீர்த்தான்.



அவளோ, மனதிற்குள் ஒரு முடிவுடன், "ஆல் தி பெஸ்ட் மிகன் சார். இனி நான் போய் என் வேலையை பார்க்கலாமா சார் .." என்று திடமாக கேட்டாள்.

அவனோ, அவளின் முகத்தையே பார்த்தானே தவிர எந்த பதிலும் சொல்லவில்லை.

அவளோ, வெளியில் செல்ல கதவின் கைப்பிடியில் கை வைத்து திறக்கும் பொழுது, "ஒரு நிமிஷம் .." என்றவன். அவளின் அருகில் வந்து "என்ன தான் நீ அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டாலும், நான் உன்னை ஒரு போதும் நம்ப மாட்டேன்.."என்றான் .

அவளோ, உங்களை நான் நம்பச் சொல்லவே இல்லையே.. ? என்னைப் பொறுத்த வரை இங்கே நீங்க மேனேஜர். நான் டிசைனர் . அவ்வளவு தான் நமக்குள்ளே இருக்கும் உறவு. நீங்க என்னை பற்றி அதற்கு மேல் என்ன நினைத்தாலும், எனக்கு கவலை இல்லை.." என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றாள்.

அவனோ, போகும் அவளையே வெறித்த பார்த்தபடி நின்றான்.அவனுக்கே அவனை புரிந்து கொள்ள முடியவில்லை.அவளை காணாது போது பார்க்க துடிக்கிறான். ஆனால், கண்டால் தீயாய் காய்கிறான். நேசத்திற்கும் கோவத்திற்கும் நடுவில் துடிக்கிறான்.

திகழொளியோ , எப்படி தான் தன் இருக்கைக்கு வந்தாள் என்று கேட்டால் தெரியாது.மனதில் அத்தனை துயரம் வழிந்தாலும், அவனிடம் துளியும் காட்டிக் கொள்ளாமல் நிமிர்வுடன் வந்தாள்.

கனவிலும் அவனை அங்கே காண்போம் என்று அவள் நினைக்கவில்லை. அவனை அங்கு கண்டதும் அவள் உலகமே அவளுக்கு தட்டாமாலையாக சுற்றியது.

ஆனால், அமுதனின் பயிற்சி தான் நிச்சயமாக அவளை எளிதாக அவனை எதிர் கொள்ள வைத்தது. தன் இடத்திற்கு வந்த பின்பு தான் அவளுக்கு இயல்பான மூச்சே வந்தது.

வாழ்க்கை ஒரு வட்டம் என்பது எத்தனை உண்மை.இங்கே சுற்றி அங்கே சுற்றி மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றது.

விதியின் விளையாட்டோ? இல்லை காலம் செய்த சதியோ? நன்றாக வாழ வேண்டிய இருவரும் பிரிந்து அனுதினமும் ஒருவரை நினைத்து ஒருவர் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

திகழொளி அன்று வேலை முடித்து வீடு போகும் வரை நெருப்பில் நிற்பது போலவே ஒவ்வொரு நொடியையும் கடத்திக் கொண்டு இருந்தாள்.

மிகனோ, அவள் அறியாமல் அவளை கண்டு, கண்டு தன் மனப் பெட்டகத்தில் சேமித்துக் கொண்டான்.அவளை நேரில் கண்டால் மட்டும் வார்த்தையால் வதைப்பதை நிறுத்தவில்லை.

மாலை தமக்கையை அழைத்து செல்ல வந்த அமுதன் கண்டது மிகுந்த சோர்வுடன் வந்த தமக்கையை தான். "அக்கா ஏன் உன் முகம் இவ்வளவு களைப்பாக இருக்கு.மறுபடியும் உடம்பு முடியலையா..?" என்று கவலையாக கேட்டான்.

"உடம்புக்கு ஒண்ணும்மில்லை அம்மு..பத்து நாள் லீவு போட்டுட்டு இன்னைக்குத் தானே வந்தேன். அதனால், கொஞ்சம் வேலை ஜாஸ்தி. இரண்டு நாள் போனால் பழகிடும்.." என்று மிகனைப் பற்றி எதையும் கூறாமல் மறைத்தாள்.

அதன் பின் வந்த நாட்களில் மிகனின் குத்தல் பேச்சுக்கு பழகிக் கொண்டாள். தன் மனதிற்குள் அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை ஆழமாக பதியவைத்தாள். அதன் பிறகு அவனை பார்க்கும் போது கல்லையும் ,மண்ணையும் பார்ப்பதை போல் பார்க்க பழகிக் கொண்டாள்.


மிகனோ, ஒவ்வொரு விடியலையும் இப்பொழுது எல்லாம் ஆவலாக எதிர் கொண்டான்.தன் தோற்றத்தில் கூட பிரத்யோக கவனம் கொண்டான்.

நேர்த்தியாக உடை அணிந்தான்.எப்போதும் அவன் அப்படி தான் என்றாலும், இப்போது இன்னும் சிரத்தை எடுத்துக் கொண்டான்.

கம்பெனிக்கு வந்த உடனே முதல் வேலை அவளை காண்பது தான்.ஆனால் , இவன் செய்கைகளுக்கு அவளிடம் எந்த வித எதிர்வினையும் இல்லாதது தான், அவனுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது.


'அவள் வேண்டுமென்றே தன்னை ஒதுக்குகிறாள்.அப்பொழுது தான், நான் அவள் பின் போவேன் என்று நினைத்து, இப்படி தன்னை கண்டும் காணாமல் இருப்பது போல் நடிக்கிறாள்..' என்று சிறுபிள்ளை தனமாக எண்ணினான்.

எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு.அதனாலேயே அவளை காணும் போதெல்லாம் அவளை வார்த்தைகளால் கடித்து குதறினான்.


திகழொளியோ, மரத்து போன மனதுடன் வலம் வந்தாள். அளவுக்கு மிறீய துன்பம் அவளை இறுகிக் போகச் செய்தது. இதற்கு மேல் என்ன துன்பம் வந்து விடப் போகிறது என்ற மனநிலையில் இருந்தாள் . அதனால், அவன் என்ன சொன்னாலும் அமைதியாகவே இருந்தாள்.

அவனோ, சில நேரம் வார்த்தையால் குதறுவான்.சில நேரம் வேண்டுமென்றே அதிக வேலையை கொடுத்து அவளை உட்கார விடாமல் விரட்டுவான்.

அன்றும் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக தனக்கு புதியதாக தோன்றிய சிறார்களுக்கான ஆடை வடிவமைப்புக்கான டிசைனை, வெகு தீவிரமாக வரைந்து கொண்டு இருந்த திகழொளியின் காதருகில் ..

"பரவாயில்லை உனக்குள் இவ்வளவு ரசனையா.." என்று கூறியவனின் குரலில் தூக்கி வாரிப் போட திரும்பியவள், அங்கு மிகன் இரு கைகளையும் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கண்களில் ஆராய்ச்சி பார்வையுடன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

திகழொளியோ எதுவும் பேசாமல் தனது வேலையை மீண்டும் தொடந்தாள்.

அவனுக்கு அவள் தன்னை‌ கண்டு கொள்ளாமல் ‌ இருந்தது கோபத்தை கொடுக்கச் சட்டென்று அவளிடம்‌ "நடிப்பு பிரமாதம் ! நீ என்ன தான் நடித்தாலும் உன்னிடம் நான் மயங்க மாட்டேன்.." என்றான்.

அவளோ, அவன் சொன்னதை கேட்டு துடித்து போனவள்,"உங்களை மயக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..எனக்கு நிறைய வேலை இருக்கிறது. என்னை கொஞ்சம் தொந்தரவு செய்யாமல் இருந்தால், நான் உங்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன்.."

"ஏய் !அப்போ உனக்கு‌‌ மட்டும் தான் வேலை இருக்கா? எங்களுக்கு இல்லையா ? உன்‌ நன்றி யாருக்கு வேண்டும்.. "என்றவனிடம்..

"உங்களுக்கு வேலை இருக்கா?இல்லையா ?வென்று எனக்கு எப்படி தெரியும் !..அப்படி இருந்தால், அதை போய் பார்ப்பது தானே..ஏன்! என்னிடம் பேசி உங்கள் நேரத்தை வீணாக்குறீங்க.."

"ம்ம்ம் ..வேண்டுதல்.." என்றவன் கோபமாக அந்த இடத்தை விட்டு சென்றான்.

அவன் போவதையே பார்த்தவள் மனதிற்குள் 'எத்தனை நாள் தான் குட்ட குட்ட குனிவது என்று நினைத்தாலும் , எவ்வளவு நாட்கள் தான் இப்படி நெருப்பின் மீது நிற்பது போல் சகிப்பது இதற்கு விடிவில்லையா! என்று மனதிற்குள் மருகினாள்..'

தன்னை எவ்வளவு இழிவாக நினைக்கிறான்.அவனுக்கு திருமணம் முடிந்தது தெரிந்த பின் கூட நான் எப்படி அவனை நினைப்பேன் .இன்னொருத்தியின் கணவனை மயக்கும் அளவு நான் மோசமானவளா? என்னை எவ்வளவு கேவலாக நினைத்து இருக்கிறான். என்று மனதிற்குள் கலங்கினாள்.

திகழொளி தினமும் அவனிடம் போராடி ,போராடி ஓய்ந்து போய்விட்டாள்.பிடிக்காத மருமகள் நின்றாலும் குற்றம்! உட்கார்ந்தாலும் குற்றம்! என்பதைப் போல் அவள் எது செய்தாலும், தவறாகவே நினைத்தான்.


அவனே அறியாமல் அவளை அனுதினமும் சிறுக ,சிறுக கொன்று கொண்டிருந்தான்.

கொலை குற்றத்தை விட ஒருவரின் மனதினை நோக அடிப்பது மன்னிக்க முடியாத பாவம் என்று அவனுக்கு எப்போது புரியும்.

அதை அவன் புரிந்து கொள்ளும் போது, எல்லாமே

அவன் கை மீறி போகப் போகுது என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை.


தொடரும்

(அடுத்த யூடி சனிக்கிழமை மாலை)

தொடுக்காத பூச்சரமே! கதை புத்தகமாக வெளிவந்து உள்ளது .புத்தக கண்காட்சியில் கிடைக்கும்..

இனிதா மோகன் தொடுக்காத பூச்சரமே! விலை 230/-

கிடைக்கும் இடம்



ப்ரியா நிலையம்

கடைஎண் 251,252

சுபம் பப்ளிகேஷன்ஸ்

கடை எண் 250
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93
உயிர் துடிப்பாய் நீ!

அத்தியாயம் 6

நாம் நினைப்பது போல் எல்லாம் நடந்து விட்டால் ,வாழ்க்கை மிக அழகாக தான் இருக்கும்.ஆனால் அப்படி யாருக்கும் இங்கே நடப்பதில்லை.

இன்பமோ, துன்பமோ யாருக்கும் தொடர்ந்து வருவதில்லை.. இரண்டும் கலந்து வருவது தான் வாழ்க்கை.


நடக்கும் நிகழ்வுகள் மிகனுக்கு இன்பமாகவும், .திகழொளிக்கு துன்பமாகவும் இருந்தது.மிகனுக்கு திகழொளியை அனுதினமும் காண்பதும், தான் நினைத்தபடி அவளை ஆட்டி வைப்பதும் அவனுக்கு இன்பத்தை கொடுத்தது.

திகழொளிக்கோ, தான் உயிராக நேசித்தவனை இன்னொருத்தியின் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள். அதுமட்டுமன்றி தன்னைக் கண்டாலே தீயாக காயும் அவனின் இந்த பரிணாமத்தை அவளால் தாங்கவே முடியவில்லை.

ஒவ்வொரு நொடியும் நெருப்பின் மீது நிற்பதைப் போல் உணர்ந்தாள்.யாரிடமும் தன் மனக்கவலையை பகிரவும் முடியாமல் தனக்குள்ளேயே மருகினாள்.

உலகமாறனோ, மகனின் நடவடிக்கைகளில் குழம்பிப் போனார்.அவனின் இயல்பு வெகுவாக மாறி இருந்தது.

தன் தோற்றத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டான்.எப்போதும் ஏதோ யோசனையுடனேயே வலம் வந்தான்.குழந்தையிடம் நேரம் செலவழிப்பதும் குறைந்தது.யாரிடமும் சரியாக பேசுவதும் இல்லை.

மிகனின் மாற்றம் பெற்றவரை மிகுந்த கலக்கமடையச் செய்தது. அந்த கலக்கமே விரைவில் அவனுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை வலுக்கச் செய்தது . அவர் அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கினார்.


அறவாணனும்,பொன்னியும் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதிலிருந்தே, தங்கள் கோவத்தை எல்லாம் மறந்து மகளிடம் கொஞ்சம் ,கொஞ்சமாக பேச ஆரம்பித்து இருந்தார்கள்.

இனியும் மகளை அவள் போக்கில் விடக் கூடாதென்று நினைத்தவர்கள், விரைவில் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்று எண்ணினார்கள்.

மகளுக்கு திருமணம் முடிந்தால் , தங்கள் குடும்பம் தொலைத்த மகிழ்ச்சி எல்லாம் திரும்ப கிடைக்கும் என்று நம்பினார்கள்.

மகளிடம் நேரடியாக திருமணத்தை பற்றி பேசாமல், அமுதனிடம் விஷயத்தை சொல்லி மகளிடம் பேச சொன்னார்கள்.

அமுதனோ, அக்காவிடம் எப்படி சொல்வது என்று இரண்டு நாட்களாக அதே யோசனையுடனேயே சுற்றிக் கொண்டு இருந்தான்.

திகழொளிக்கோ, தம்பியின் யோசனையான முகம் பயத்தை கொடுத்தது.அவனுக்கு ஏதாவது பிரச்சினையா என்று மனம் கலங்கினாள்.

அன்று இரவு உணவு உண்டு முடித்ததும் , தம்பியை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றவள், "அம்மு இரண்டு நாளாக நீ சரியே இல்லை. ஏதாவது பிரச்சனையா..? என்று கேட்டவளிடம்.

" பிரச்சினை எல்லாம் ஒண்ணும் இல்லை கா.."

"அப்புறம் ஏண்டா உன் முகமே சரியில்லை.."

"அக்கா நான் ஒண்ணு சொல்லுவேன் நீ கோவப்படாமே கேட்கனும்.."

"என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு. என்ன விஷயம்.."

"ம்ம்..எப்படி கேட்கறதுன்னு தெரியலை.."

"என் அம்முக்கா கேட்கத் தெரியலை..இது நம்பற மாதிரி இல்லையே.."

"அக்கா.. நான் கேட்ட பின் நீ என் மீது கோவப்படக்கூடாது.."

"ஓகே. கோவப்படலே முதல்லே என்னன்னு சொல்லு.."

"அக்கா.. அம்மாவும் ,அப்பாவும் உனக்கு கல்யாணம் பண்ணும்ன்னு நினைக்கிறாங்க. உன்கிட்ட சம்மதம் கேட்கச் சொன்னாங்க.."என்று தயங்கிய படியே கூறிவிட்டான்.

திகழொளியோ, தம்பி சொன்னதைக் கேட்டவள்,ஒரு நிமிடம் உயிரற்ற சிலையாக நின்றாள்.

அமுதனோ , உறைந்து நின்ற தமக்கையை மெல்ல கன்னம் தட்டி, ..அக்கா ..அக்கா.." என்று பதட்டமாக அழைத்தான்.

தம்பியின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தாள். ஆனால், மொழி தெரியாத குழந்தை போல் தம்பியை விழி விரிய பார்த்தாள்.

அமுதனோ, அக்காவின் அதிர்ச்சியை புரிந்து கொண்டு "ப்ளீஸ் கா ஏதாவது பேசு .."என்றவுடன்.

ஒரு நிமிடம் கண்களை இறுக மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு? "எனக்கு சம்மதம் அம்மு.." என்று தம்பியின் முகம் பார்க்காமல் பரந்து கிடந்த ஆகாயத்தை வெறித்து பார்த்தபடி சொன்னாள்.

அமுதனுக்கோ, அக்காவின் பதிலை நம்ப முடியலை. அதிர்ச்சியோ! மகிழ்ச்சியோ! அது அவனுக்கே புரியாமல், திரும்ப, திரும்ப தன் தமக்கையிடம் "நிஜமா உனக்கு சம்மதமா?" என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.

தம்பியின் நிலை புரிந்து, "அம்மு எனக்கு முழு சம்மதம்.போதும், இத்தனை நாள் நான் அவர்களை கஷ்டபடுத்தியது.இனியாவது அவர்கள் ஆசைப்படி நடக்கட்டும் .என்னால் முடிந்த இந்த சந்தோஷத்தையாவது அவர்களுக்கு தரேன்.."

" அக்கா, நீ இதை முழுமனதுடன் தானே சொல்றே.."என்று நம்பாமல் கேட்டவனிடம்..

" ஆமா , முழு மனதுடன் உணர்ந்து தான் சொல்றேன். அவர்கள் பழசை மறந்து இப்போது தான் என்னுடன் பேச ஆரம்பிச்சு இருகாங்க.. அதே கெடுக்க விரும்பலே.."

"அக்கா, உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை.கல்யாணமங்கிறது விளையாட்டு காரியம் இல்லை. எல்லாவற்றையும் மறந்து நீ புது வாழ்க்கையை தொடங்கனும்.."

" அம்மு எனக்கு எல்லாம் புரியுது. கஷ்டம் தான். ஆனால், எனக்கு வேறு வழி இல்லை..நான் கொஞ்சம், கொஞ்சமாக என்னை மாற்றிக்கிறேன்.."என்றாள்.

"தேங்க்ஸ் கா.. இந்த வார்த்தைக்காகத் தான் நான் காத்திருந்தேன். இனி என் அக்கா வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கனும்.." என்று தமக்கையின் முகத்தை கையில் ஏந்தி சொன்னான்.

திகழொளியோ, தன் மனக்குமுறலை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தன் உயிர் தம்பியிடம் சிரித்தபடியே தலையை ஆட்டினாள்.

தமக்கையின் மகிழ்ச்சியை தன்னுள் பொக்கிஷமாக சேமித்துக் கொண்டவன். "அக்கா நான்‌ அப்பா அம்மாவிடம் உன் சம்மதத்தை சொல்லிடவா..?"

"ம்ம் ..! "என்று தலையை ஆட்டினாள்.

அமுதனோ, எல்லையில்லாத ஆனந்தத்துடன் தன் தமக்கையை அணைத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவன், பெற்றவர்களிடம் தன் தமக்கையின் சம்மதத்தை கூற ஓடினான்.


திகழொளியோ, மனதிற்குள் சொல்ல முடியாத துக்கத்துடன் நின்றிருந்தாள். அத்தனை நேரம் தம்பிக்காக கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் அவன் சென்ற பின் அருவியாக கொட்டியது.

தன் பெற்றவர்களுக்கு இதற்கு மேல் எந்த துன்பத்தையும் கொடுக்க வேண்டாம், என்று எண்ணித்தான் தம்பியிடம் சம்மதம் சொனனாள். ஏற்கனவே நடந்த திருமண பேச்சால் பெற்றவர்களுக்கு கொடுத்த துன்பத்தை இந்த திருமணத்தால் இன்பமாக்க நினைத்தாள்.

போதும் அவர்கள் தன்னால் பெற்ற வேதனை.இனியாவது அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்.

அவள் ஆசைப்பட்டது தான் கிடைக்கவில்லை.அவர்கள் ஆசையாவது நிறைவேறட்டும் . என்று எண்ணினாள்.

அது மட்டுமின்றி தனக்கு திருமணமாகாத காரணத்தால் தான்‌, மிகன்‌ இன்னும் தன்னை பார்க்கும் போது எல்லாம் குத்தி குதறுகிறான். நாம் இன்னொருவருடைய மனைவி என்றனால் தன்னிடம் இப்படி நடந்து கொள்ள மாட்டான் என்று நினைத்தாள்.


தன்னால் எல்லாவற்றையும் மறந்து புது வாழ்க்கையை தொடங்க முடியுமா? என்று அவளுக்கே தெரியாது. ஆனால், இதுவரை நமக்காக வாழ்ந்து விட்டோம் .இனியாவது பெற்றவர்களுக்காக வாழலாம் என்ற எண்ணமே அவளின் மன மாற்றத்திற்கு காரணமானது.

தன் அழுகை, கவலை, குழப்பம் எல்லாவற்றையும் தனக்குள் புதைத்துக் கொண்டு, வீட்டிற்குள் வந்து மகளை பொன்னி ஆரத்தழுவிக் கொண்டு, "என் தங்கமே அம்மாவுக்கு இப்ப தான் நிம்மதியாக இருக்கு.." என்றார்.

மகளோ, தாயின் அரவணைப்பில் ஆசையாக ஒன்றிக் கொண்டாள்.

அறவாணனோ, " திகழி இங்கே வாடா ..!"என்று பல வருடம் கழித்து மகளை அன்போடு அழைத்தார்.

தந்தையின் அழைப்பை கேட்டவுடன், அளவுகடந்த மகிழ்ச்சியுடன் தந்தையிடம் ஒடிச் சென்று அவர் காலடியில் அமர்ந்து, மடியில் தலை சாய்த்தாள்.

அவரோ, தன் மடியின் மீதிருந்த மகளின் தலையை மென்மையாக தடவியபடி, " பாப்பா அமுதன் சொன்னது உண்மையா? உனக்கு சம்மதமா டா.." என்றார்.

அவளோ, பல வருடங்கள் கழித்து தன் தந்தையின் 'பாப்பா 'என்ற விழிப்பில் உருகி கரைந்தவள் , நிமிர்ந்து தந்தையை விழி எடுக்காது பார்த்தபடி ,பேச்சற்று விழிகளில் நீர் அருவியாக கொட்ட தலை ஆட்டினாள்.

மகளின் கண்ணீரை மென்மையாக துடைத்த படியே, "என் பாப்பா இனி எதுக்கும் கலங்க கூடாது. போதும் நீ பட்டது எல்லாம்.இனியாவது உனக்கு சந்தோஷம் கிடைக்கட்டும் .."என்றார்.

அவளோ, தன் கண்ணீரை துடைத்த தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டு, "அப்பா சாரிப்பா..சாரிப்பா உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் .என்னே மன்னிச்சுடுங்கப்பா.." என்று அவர் கைகளில் முகம் புதைத்து கதறினாள்.

அவரோ, " நீ தான் டா எங்களை மன்னிக்கனும். என்ன தான் உன் மீது கோவமாக இருந்தாலும், உங்கிட்ட பேசாம இருந்திருக்க கூடாது.உன் மனசு என்ன பாடுபட்டிருக்கும்..சாரிடா .."என்றார் வருத்தத்துடன்.

அமுதனோ, தந்தை மகளின் பாசப்போரட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன், அவர்களிடம் வந்து "போதும்..போதும் சாரி கேட்டது. போனது போகட்டும், இனி நடப்பதை பார்ப்போம் . நம்ம கஷ்டகாலம் இன்னையோட முடிஞ்சுச்சு.." என்றவன், தம்கையையும் தந்தையையும் தோள் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

பொன்னியோ விழிகள் ஆனந்த கண்ணீர் மின்ன அந்த காட்சியை நிம்மதியுடன் கண்டார்.

அடுத்து வந்த நாட்களில் அறவாணன் தரகரிடம் மகளின் ஜாதகத்தையும், நிழற்படத்தையும் கொடுத்து நல்ல வரனாக பார்க்கச் சொன்னார்.

திகழொளியோ, பெற்றவர்களின் அன்பு திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சியுடனேயே வலம் வந்தாள்.

மிகனின் கடுமையை கூட பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

திகழொளி திருமணத்திற்கு சம்மதித்த மகிழ்ச்சியை கொண்டாட விரும்பிய கமலியும், அமுதனும் ,அவளை அழைத்துக் கொண்டு மாலுக்கு சென்றார்கள்.


மூவரும் பழைய படி மகிழ்ச்சியாகவே சுற்றி திரிந்தனர். கமலி ஐஸ்கிரீம் கேட்டாள் என்று மூவரும் அவரருக்கு பிடித்த (ஃப்ளேவர்)சுவைக்கு, கோன் ஐஸ் வாங்கிக் கொண்டு, சுற்றுப்புறம் மறந்து பேசியபடியே ருசித்து உண்டு கொண்டு இருந்தார்கள்.

அப்போது திகழொளியின் சுடிதார் துப்பட்டாவை, யாரோ இழுப்பது போல் இருக்கவும் சட்டென்று திரும்பி பார்த்தாள்.

அங்கே நின்ற குழந்தையை பார்தவள் குழப்பத்துடன் "என்னடா குட்டி.." என்று கன்னம் தொட்டு கேட்டாள்.

அதுவோ, இவள் கையிலிருந்த ஜஸ்கிரீமை காட்டியது
.
"ஐஸ்கிரீம் வேணுமா..?" என்று கேட்டவளிடம் குழந்தை தலையை ஆட்டியது. குழந்தையுடன் யாராவது வந்து இருக்காங்களா? என்று சுற்றும், முற்றும் பார்த்தபடியே நின்றாள்.

கமலியும்,அமுதனும் "யார் குழந்தை இது..?" என்று கேட்டபடி குழந்தையின் அருகில் வந்தவர்களிடம். "அம்மு யாருன்னு தெரியலே, ஐஸ்கிரீம் கேட்கிறா.. இதே ஃப்ளேவர் ஐஸ்கிரீம் ஒண்ணு வாங்கி கொடுடா .."என்றாள்.

அமுதனோ, தமக்கையின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல், அருகில் இருந்த கடையில் ஐஸ்கிரீம் வாங்கி வந்து தமக்கையிடம் கொடுத்தான்.

திகழொளியோ, அதை வாங்கி கொண்டு குழந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

அதுவோ, அவளிடம் ஆசையாக ஐஸ்கிரீம் வாங்க தன் பிஞ்சு கைகளை நீட்டியது.

திகழொளியோ, ஐஸ்கிரீமை கொடுக்காமல், தன் கன்னத்தைக் காட்டி , "முத்தம் கொடுத்தால் தான் ஐஸ்க்ரீம்.."என்று குழந்தையிடம் பேரம் பேசினாள்.

குழந்தையும் தன் பட்டு இதழ்களால் அவளின் கன்னத்தில் மென் முத்தத்தை பதித்தது. உடனே குழந்தையிடம் ஐஸ்கிரீமை கொடுத்து விட்டு, குழந்தையை தூக்கி அதன் பட்டு கன்னங்களில் மென்மையாக முத்தமிட்டாள்.

அப்போது, " வெரிகுட்.. சூப்பர்!" என்ற குரலில் தூக்கி வாரிப் போட திரும்பினாள்.அங்கே மிகனோ, கைகளை கட்டிக் கொண்டு இவளையே பார்த்தவாறு அருகில் வந்தான்.

மூவரும் அவனை பார்த்து திகைத்து நின்றனர்.

மிகனோ, அவளிடமிருந்த குழந்தையை வேகமாக பிடிங்கியவன்,அதே வேகத்துடன் குழந்தையின் கையிலிருந்த ஐஸ்கிரீமை பிடிங்கி அருகில் இருந்த குப்பை தொட்டியில் வீசி எறிந்தான்.

குழந்தையோ ஐஸ்க்ரீம் பிடிங்கியதில் உதடு பிதுக்கி அழுக தொடங்கியது.

அவனோ, குழந்தையின் அழுகையை சட்டை செய்யாமல் , "மகிழி யார் எது வாங்கிக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வாயா? அப்பா அடிக்க போறேன் பாரு.." என்று தன் கோவத்தை குழந்தையிடம் காட்டினான்.

மகிழியோ, "அப்பா, அம்மா.. அம்மா ஐஸ்கிரீம்.." என்று திகழொளியை காட்டிய படியே, அம்மா தான் வாங்கி கொடுத்தாங்க என்று சொல்லத் தெரியாமல் சொன்னது.

மிகன், மகிழியை அழைத்துக் கொண்டு அன்று விடுமுறை என்பதால் மாலுக்கு வந்திருந்தான்.

அங்கிருந்த துணிக்கடையில் அவன் மகிழியை இறக்கி விட்டுவிட்டு துணிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

மகிழியோ, கடையிலிருந்த கண்ணாடி வழியாக வெளியில் ஐஸ்கிரீம் உண்டு கொண்டிருந்த திகழொளியை பார்த்ததும் ,அவளிடம் மிகனுக்கு தெரியாமல் ஓடி வந்து விட்டாள்.

மிகன் சிறிது நேரம் கழித்து, மகிழியை காணோம் என்று தேடும் பொழுது தான், அவள் திகழொளியிடம் சென்று நிற்பது தெரிந்தது.

திகழொளி, அமுதன் , கமலியுடன் அங்கு வந்திருப்பதை கண்டவனுக்கும், சிறு அதிர்ச்சி தான்.அவளை இங்கு அவன் எதிர்பார்க்கவில்லை.

மகிழி வேறு அவளைக் கண்டால், அவள் பின்னாடியே போகிறாள் என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான்.அதனால் எல்லா கோவத்தையும் குழந்தையிடம் காட்டினான்.

திகழொளியோ அவனின் செயலில் உறைந்து போய் சிலையாக நின்றாள். அவளுக்கு மகிழியை ஓரே ஒரு முறை பார்த்திருந்தால், இன்று சரியாக அடையாளம் தெரியவில்லை.அதுவும் அன்று பல வருடங்கள் கழித்து மிகனை பார்த்த அதிர்ச்சியில் அவள் நினைவில் எதுவுமே நிற்கவிலலை.
.
கமலிக்கோ, அன்று மிகனின் தோளிலிருந்த குழந்தையை அரைகுறையாக பார்த்தால், இன்று பார்க்கும் போது சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.

அமுதனோ, கை மூஷ்டி இறுக, பற்களை கடித்த படி அடங்கா சினத்துடன் மிகனை நோக்கி நகர்ந்தவனை கமலி தடுத்து நிறுத்தினாள்.

கமலிக்கோ, மனதிற்குள் பெரும் குழப்பம் ஆட்கொண்டது.தன் தோழியின் வாழ்க்கையில் என்ன தான் நடக்கிறது.


பார்த்த இரண்டு முறையும் அந்த குழந்தை திகழியிடமே வருகிறது. இப்போது வேறு திகழியைப் பார்த்து 'அம்மா..அம்மா 'என்று அழுகிறதே என்று குழம்பினாள்.

திகழொளியோ, தன்நிலை மறந்து தொய்ந்து போய் அமர்ந்தாள்.

அமுதனுக்கும்,கமலிக்கும் திகழொளி இப்போது தான் அனைத்தையும் மறந்து நிம்மதியாக இருந்தாள் .பாவி அவள் நிம்மதியை கொடுப்பதற்கே வருகிறான் என்று அவனை திட்டி தீர்த்தனர்.

விதியின் விளையாட்டை யார் அறிவார்..?

தொடரும்..


(அடுத்த யூடி வியாழக் கிழமை மாலை)
என்னுடைய தொடுக்காத பூச்சரமே ! நாவல் புத்தகமாக வெளிவந்துள்ளது.இப்போது புத்தக கண்காட்சியில் கிடைக்கும் விலை 230/-


Priyanilayam stall number 251,252 -
Fourth row.
YMCA Nandanam

Subam Publications
Stall no 250
YMCA Nandanam
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93
உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 7
அழகாக தொடங்கிய நாட்கள் எல்லாம் அழகாக முடிவதில்லை ! திகழொளிக்கும் அன்று அப்படித் தான் முடிந்தது.

எல்லாவற்றையும் மறந்து, புது வாழ்க்கைக்கு தயாரானாள்.ஆனால், அது விதிக்கு பிடிக்கவில்லை போல், மீண்டும் மிகனின் செயல்களால் காயப்பட்டாள்.

அமுதனும்,கமலியும் தொய்ந்து போய் அமர்ந்திருந்தவளை, ஆறுதலாக அரவணைத்து அவளை தேற்ற முயற்சித்தார்கள்.

திகழொளியிடம் அவர்களின் முயற்சி செல்லுபடியாகவில்லை. சில சமயம் ஆறுதலையும், அரவணைப்பையும் விட அதட்டலும், மிரட்டலும் தான் சரியாக வேலை செய்யும்.

அமுதனும், கமலியும் அதை தான் செய்து அவளை வழிக்கு கொண்டு வந்தார்கள். ஒருவழியாக அவளை உருட்டி, மிரட்டி வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

திகழொளியும் வேறு வழி இல்லாமல் சூழ்நிலை புரிந்து, பெற்றவர்களுக்காக தன்னை இயல்பாக காட்டிக் கொண்டாள்.தன் காயத்திற்கு தானே கொஞ்சம் கொஞ்சமாக மருந்திட்டுக் கொண்டாள்.


இனிமேல் மிகனின் எந்த வித செயல்களும் தன்னை பாதிக்க கூடாதென்றும் ,அவன் யாரோ ! நான் யாரோ ! என்று தன் மனதிற்குள் உருவேத்திக் கொண்டாள்.


மிகனோ, வீட்டிற்கு வந்ததில் இருந்தே நிலை இல்லாமல் தவித்தான்.அதுவும் மகிழியை அவள் தூக்கி வைத்திருந்ததை பார்த்ததும், அவனால் அவனை கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை.


ஏதேதோ பழைய ஞாபகங்கள் வந்து அவனை கொல்லாமல் கொன்றது.

ஒரு மனம் அவள் வேண்டுமென்று தவித்தது.ஒரு மனமோ குற்றவுணர்வில் துடித்தது.இரண்டுக்கும் நடுவில் அவன் வெந்து கருகினான்.
அவனின் இந்த மனப்போராட்டமே ! அதற்கு காரணமானவளின் மேல், மேலும் வன்மத்தை தூண்டியது.

அதுக்கு தூபம் போடுவது போல், அவளை தினமும் சந்திப்பது அவனுக்கு வசதியாக போனது.

நெருப்பாக அவளை விழுங்க அவன் காத்திருக்க..அவளோ, சுனாமியாக அவனை சுழற்றிக் கொள்ள காத்திருந்தாள்.

நீருக்குள் நெருப்பு அடங்கிப் போவது தான் இயற்கையின் நீதி ! அது போல் அவனும் அவளுள் அடங்குவானா? யாவும் காலத்தின் கையில் தான் இருக்கிறது.

திகழொளி, தன் மனதிற்குள் முடிவு எடுத்ததைப் போல் மிகனை எதிர்கொள்ள திடமான மனதுடனேயே அன்று வேலைக்கு வந்தாள்.

மிகனோ, அவளை கடித்துக் குதறும் வெறியில் வந்தான். அவளை பார்த்த நொடியிலிருந்து தீயாக காய்ந்தான்.

அவள் என்ன தான் தன் வேலையை நேர்த்தியாக செய்தாலும் ,அதில் குறை கண்டுபிடித்தான்.மதியம் உணவு இடைவெளிக்கு கூட செல்ல விடாமல் வேலையை திணித்தான்.

திகழொளியோ, அவனிடம் எவ்வளவு அமைதியாக போக முடியுமோ? அவ்வளவு அமைதியாகவே போனாள்.

அவனுக்கு அவள் அமைதியும், மேலும் சினத்தை கொடுத்தது .உணவு இடைவெளியில் யாரும் இல்லாத தனிமை கிடைத்தவுடன், அவளை வார்த்தையால் வருத்தெடுத்தான்.

திகழொளியோ, காலையிலிருந்து அவள் வரைந்த சிறார்களுக்கான ஆடை வடிமைப்பின் படங்களை எல்லாமே, சரியில்லை என்று நிராகரித்தவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே, வேறு வரைந்து கொண்டிருந்தாள்.


அவனோ, அவளின் பின்னால் சத்தமில்லாமல் வந்து நின்று ,அவள் வரைவதை சில நொடிகள் பார்த்துக் கொண்டே, "ம்ம்..இது கொஞ்சம் பெட்டர் .. "என்றான்.

அவளோ, மிக அருகில் அவனின் குரலைக் கேட்டு, தூக்கி வாரிப்போடத் திரும்பி அவனை திகைப்புடன் பார்த்தாள்.

அவனோ , அவளின் திகைத்த பார்வையை கண்டுகொள்ளாமல், "பரவாயில்லை கொஞ்சம் வேலையிலும் பொறுப்பும்,கவனமும் இருக்கு. நான் கூட ஆளை மயக்குவதில் தான் கவனம் இருக்கும் என்று நினைத்தேன்.." என்றவனின் வார்த்தை அவளை வலிக்கச் செய்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல்..

"சார் பார்த்து பேசுங்க ! தேவையில்லாமல் வார்த்தையை விட்டீங்க அப்புறம் நல்லா இருக்காது.."என்றாள்.


அவனோ , ஏய் என்ன என்னையே மிரட்டுறீயா? உண்மையை சொன்னால் உடம்பு எரியத் தான் செய்யும்.."என்றவனிடம் அடங்கா வோவத்துடன்.

"மைண்ட் இட் யுவர் வேர்ட் மிஸ்டர் மிகன் ! நீங்க இங்க மேனேஜர். நான் டிசைனர். அவ்வளவு தான் நமக்குள்ளே இருக்கும் உறவு.வேலையை தவிர வேறே பேச நமக்குள்ள ஒண்ணும் இல்லை.."

"ஓ! அப்படியா..நீ சொல்றதை கேட்க நல்லாத் தான் இருக்கு .ஆனால், நடத்தை அப்படி இல்லையே.."

"என் நடத்தையில் அப்படி என்ன குறை கண்டுபிடித்தீங்க.."என்றவளிடம்..

"என்கிட்ட உன் திட்டம் செல்லுபடியாகிவில்லைன்னு, இப்ப என் பிள்ளையை பிடித்து விட்டாயே அதை சொன்னேன்.."

"மிகன் தேவை இல்லாமல் வாய்க்கு வந்ததை பேசாதீங்க..பின்னாடி வருதப்படுவீங்க.."

"என்ன தேவை இல்லாததை பேசறேன்.உண்மையை தான் சொல்றேன்.பார்த்த இரண்டே சந்திப்பில் , 'மகிழி' உன் பின்னே வந்து உன்னை அம்மாங்கிறா அதுக்கு என்ன அர்த்தம்.."

"என்ன உளறீங்க.."

"செய்வதெல்லாம் செய்துட்டு என் பேச்சு உளறல்லா..?"

"சத்தியமா நீங்க சொல்றது எதுவுமே எனக்கு புரியலே ! நான் பாப்பாவே நேத்து தான் சரியாக பார்த்தேன். அப்படி இருக்க, அது எப்படி என்னை தெரிந்த மாதிரி அம்மான்னு சொல்லும்.."

"அதை தான் நான் உன்னை கேட்டால், நீ திருப்பி என்னையே கேளு.."

" இங்க பாருங்க ! எத்தனை தடவை தான் திருப்பி, திருப்பி சொல்றது.எனக்கு உங்களையோ, உங்க குழந்தையையோ மயக்க வேண்டிய அவசியமில்லை.."

"நம்பிட்டேன்.."

"நீங்க நம்பினாலும், நம்பாட்டியும் அது தான் உண்மை. இன்னொருத்தியின் கணவனையும் ,குழந்தையையும் நான் எதற்கு மயக்கனும்.."

"அது எனக்கு எப்படி தெரியும் . நாம் விரும்பினது நமக்கு மட்டும் வேணும்ங்கிற பேராசையா கூட இருக்கலாம்.."

" ச்சீ ! வாயை மூடுங்க.. வாய் இருக்குன்னு என்ன வேணா பேசுவீங்களா? ஒரு காலத்தில் உங்களை விரும்பினது உண்மை தான்.அதுக்ககாக நான் இந்த நாலு வருசமா பட்ட கஷ்டம் கொஞ்சம், நஞ்சம் இல்லே.. ஆனால், இப்போது எனக்கு உங்க மேலே எந்த எண்ணமும் இல்லை.."

" பொய் சொன்னாலும், பொறுந்த சொல்லனும் .இப்பவும் உன் கண்ணில் என் மீது காதல் இருக்கு.."

"போதும் நிறுத்துங்க !உங்களே மட்டும் எப்போதும் காதலிக்க.. நீங்க மட்டுமே உலகத்தில் ஆண் இல்லை.."

"ஓ! அப்படியா? அப்புறம் ஏண்டி நாலு வருசமா கல்யாணம் பண்ணிக்காம இருக்கே.."

"இந்த டீ போட்டு பேசற வேலை எல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க.."

"அப்படி தான் பேசுவேன் என்னடீ செய்வே..?"

"அப்புறம் நானும் பேசுவேன்.."

"ஓஹோ பேசு பார்கலாம்.."
"உங்க கூட மனுசன் பேச முடியுமா..?"
"ஓ! அப்ப நான் மனுஷன் இல்லாமல் யாரு டீ..?"

"அதை என் வாயால் சொல்ல வேண்டாம்ன்னு பார்க்கிறேன்.."

"திகழொளி என் கோவத்தை அளவுக்கு மீறி சோதிக்கிறே.."

"நீங்களும் என் பொறுமையை அளவுக்கு மீறித் தான் சோதிக்கிறீங்க .."

" என்ன சோதிக்க வைக்கிறதே நீ தான் டீ.. இந்த நாலு வருசமா எங்கேயோ தொலைஞ்சு போனீயே ! அப்படியே போய் தொலைஞ்சு இருக்க வேண்டியது தானே..ஏண்டி திரும்ப வந்து, என் உயிரை வாங்குறே.." என்றவனின் வார்த்தை அவளை வாள் கொண்டு அறுத்தது.

அவளிடம் இத்தனை நேரமிருந்த திடம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்தது.

கண்களிலிருந்து வெளியே வரத் துடித்த நீரை, கஷ்டப்பட்டு உள்ளே இழுத்துக் கொண்டு " நான் என்ன தான் செய்யனும்ன்னு சொல்றீங்க.. "என்றவளிடம்..

" என் கண்ணில் படாமல் எங்காவது ஒளிந்து போ ! நான் நிம்மதியாக இருப்பேன்.." என்றவன் அடுத்த நொடி அவளிடமிருந்து விலகி வேகமாக தன் அறைக்குச் சென்றான்.

திகழொளியோ, அவனின் வார்த்தைகளை கேட்டு துடித்துப் போனாள். உயிரற்ற சிலையாக நின்றாள்.

உணவு இடைவெளி முடித்து மற்றவர்கள் வரும் வரை அப்படியே அசையாது கற்சிலையாக நின்றாள்.

மனமோ, அவன் சொன்ன வார்த்தைகளை அசைபோட்டு, அசைபோட்டு ஓய்ந்தது. 'என்ன வார்த்தை சொல்லிவிட்டான். இத்தனை நாள் இந்த வார்த்தையை கேட்கத் தான் நான் உயிரோடு இருந்தேனா?'

'நான் என்ன தவறு செய்தேன். உங்களை மனதார விரும்பியதை தவிர நான் வேறு எந்த தவறும் செய்யலையே.. அப்புறம் ஏன் என்மேல் உங்களுக்கு இத்தனை வெறுப்பு..'என்று கலங்கி தவித்தவள்,

ஒரு முடிவுடன் தன்‌ இருக்கைக்கு சென்று, தன் ராஜீனாமா கடிதத்தை டைப் செய்து அவனுக்கு மெயில் செய்தாள்.

உடன் பணிபுரிவோரிடம் கொஞ்சம் உடம்பு சரியில்லை. வீட்டுக்கு அரை நாள் விடுப்பில் போறேன் என்று சொல்லிவிட்டு, தன் பொருட்களை எடுத்துக் கொண்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.

பொன்னியோ, வாடி வதங்கி வந்த மகளை பார்த்து "திகழி, என்ன டா உடம்பு முடியலையா? முகம் இப்படி வாடி இருக்கே.." என்று கேட்டார்.

"ம்ம்! தலைவலி தாங்க முடியலேம்மா.. அது தான் வந்துட்டேன்.."

"ஓ! என்ன ஆச்சு திடீர்னு.. சாப்ட்டீயா..?" என்றவரிடம்.

"பசிக்கலேம்மா நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.."

"கொஞ்சமாவது சாப்பிட்டுட்டு தூங்கு!"


"இல்லம்மா, வேண்டாம் ! கொஞ்ச நேரம் நல்லா தூங்குனா சரியாய்டும். அமுதன் கிட்ட நான் வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லிடுங்கம்மா.." என்றவள் ,தன் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

மிகனோ, தன் அறைக்குள் வந்து அமர்ந்தவனுக்கு, வேலையே ஓடவில்லை.. அவனும் அறை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு சென்றான்.

மணியரசியோ ,சோர்ந்து வந்த மிகனைப் பார்த்து "மிகா , உடம்பு சரியில்லையா? முகம் களையிழந்து இருக்கே .."என்றவரிடம்.

"ஆமா அத்தை ,பயங்கர தலைவலி அது தான் வந்துட்டேன். நீங்க அப்பாகிட்ட ஒண்ணும் சொல்லாதீங்க! அவர் பயந்துக்குவார்.கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரி ஆகிடும்..மகிழி எங்கே..?"

"அவ தூங்கறாப்பா.. நீ சாப்ட்டீயா? சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?"

"வேணாம் அத்தே , அங்கேயே சாப்பிட்டுட்டேன்.." என்று பொய் உரைத்தான்.

"சரி நீ போய் ரெஸ்ட் எடுப்பா.." என்றவரிடம், தலையாட்டிவிட்டு தன் அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தான்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த எல்லையில்லாத அன்பே அவர்களை காயப்படுத்தியது. அளவுக்கு மீறிய அன்பு கூட சில சமயம் வலியைத் தான் கொடுக்கிறது.

திகழொளியோ, தனது படுக்கையில் படுத்து அழுது கரைந்தாள். அவள் மனம் வெட்கமே இல்லாமல் , அவனையே சுற்றி சுற்றி வந்தது.

'தன்னிடம் அவன் கேட்ட எதையுமே இதுவரை தான் செய்ததில்லை..இப்போது கேட்ட இதையாவது செய்யலாம் .இனி வேலைக்கு போக வேண்டாம் .அவன் கண்ணில் படவே வேண்டாம்' என்று எண்ணினாள்.

எங்கேயோ அவன் குடும்பத்துடன் நல்லா இருந்தால், அவளுக்கு அதுவே போதும்.என்று நினைத்தாள்.

அவனோ, தன்னை உயிராக நேசித்தவளை, உயிரோடு கொன்று வந்ததை நினையாமல் உறங்கி கொண்டு இருந்தான்.

மாலை இருட்டத் தொடங்கிய பின் தான் மிகனுக்கு விழிப்பு வந்தது.

மெல்ல எழுந்து சென்று கை கால் முகம் கழுவி வந்தவன், மகிழியை தூக்கி வைத்து சிறிது நேரம் விளையாடிவிட்டு, மதியம் விட்டுப் போன வேலைகளை செய்ய, தன் மடிக்கணினியை எடுத்து கடவுச் சொல்லிட்டு திறந்தான்.

அவன் திறந்தவுடன் முதல் மெயிலாக திகழொளியின் மெயில் தான் வந்தது.உடனே அதை திறந்து பார்த்தவனுக்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது.

கோவத்தின் எல்லைக்கே சென்றவன் தன் அலைபேசியை தேடி எடுத்து திகழொளிக்கு அழைத்தான்.

திகழொளியோ, அழுது, அழுது ஓய்ந்து போய் உறங்கிக் கொண்டு இருந்தாள். விடாது அழைத்த கைபேசி சத்தத்தில் விழித்தவள், கைபேசியைத் தேடி எடுத்து, அழைத்து யார்? என்று பார்த்தாள்.

அழைப்பில் மிகன் பெயரைப் பார்த்தும், எடுக்கலாமா? வேண்டாமா? என்று சில வினாடி மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தினாள்.

அவனோ, தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கவும்.. வழி இல்லாமல்' கைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்து "ஹலோ.." என்றவளிடம்..

" ஏய் போனை எடுக்க இத்தனை நேரமா? "என்றவனிடம்,

"தூங்கிட்டேன் என்ன வேணும் சொல்லுங்க.."

"கம்பெனி என்ன உன் மாமனார் கம்பெனியா ? உன் இஷ்டத்திற்கு ராஜினாமா செய்ய ! மரியாதையா நாளைக்கு வேலைக்கு வந்து சேர் இல்லே நடப்பதே வேறு.."

"நீங்க தானே என் முகத்தில் முழிக்காதேன்னு சொன்னீங்க.."

"ஆமாம் அப்படியே நான் சொன்னது எல்லாம் கேட்டுட்டே பாரு.."

"அது தான் இதையாவது கேட்கலாம்ன்னு.."

"ஓஹோ.. போதும் உன் டிராமா! ஒழுங்கா நாளைக்கு வேலைக்கு வந்து சேரு.. "என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான்.

அவளுக்கோ, புயலடித்து ஓய்ந்தது போல் இருந்துச்சு.கைபேசியையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

மனமோ, 'இவன் என்னை உயிரோடு கொல்லாமல் விடமாட்டான் போல..'என்று கூப்பாடு போட்டது.

மிகனுக்கோ, அவளிடம் பேசிய பின்பு தான் கோபம் கொஞ்சம் கட்டுப்பட்டது.என்ன தான் அவளை வார்த்தைகளால் வறுத்தெடுத்தாலும், அவளை அனுதினமும் பார்க்க இது ஒன்று தான் வழி ! அதுவும் தானாக அமைந்த வழி ! அதை எப்படி அவனால் விட முடியும்.

அன்று உலகமாறனோ வேலை முடிந்ததும், தரகரை பார்த்துவிட்டு ,அவர் கொடுத்த பெண் ஜாதகங்களையும் , நிழற்படங்களையும் வாங்கிக் கொண்டு வீடு வந்தார்.

மகிழியோ, உலகமாறனைப் பார்த்ததும் "தாத்தா.." என்று அழைத்த படி ஓடி வந்தாள்.

உலகமாறனோ, ஓடிவந்த பேத்தியை ஆசையாக தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தவர், மணியரசி கொடுத்த காஃபியை வாங்கி குடித்த படியே, தரகர் கொடுத்த ஜாதகத்தை பிரித்து ஒவ்வொன்றாக பார்த்தார்.
மகிழியோ, தாத்தா கையிலிருந்த போட்டோவை தானும் பார்ப்பேன் என்று அடம்பிடித்து வாங்கி பார்த்தவள் ,ஒரு போட்டாவை உலகமாறனிடம் காட்டி "தாத்தா அம்மா..அம்மா.." என்றாள்.

உலகமாறனோ, மகிழி சொன்னதை கேட்டு திகைத்தவர், அவள் கையிலிருந்த போட்டாவை சட்டென்று வாங்கிப் பார்த்தார்.

அதில் திகழொளியின் படத்தை பார்த்தவருக்கு, தூக்
கி வாரிப் போட்டது. அப்போதுதான் அவருக்கு மகன் செய்து வைத்து இருக்கும் செயலும் ,மகனின் நடவடிக்கைகான காரணமும் புரிந்தது.


தொடரும்..


அடுத்த யூடி சனிக்கிழமை



என்னுடைய தொடுக்காத பூச்சரமே! நாவல் புத்தக கண்காட்சியில் கிடைக்கும் இடங்கள்

Priyanillayam stall number 251,252
Fourth row
YMCA nandanam

Subam publication
STALL NO 250
YMCA NANDANAM
புத்தக கண்காட்சிக்கு போக முடியாதவர்கள் சகாப்தம் வாட்ஸ் அப் நம்பருக்கு மெஸேஜ் பண்ணலாம்.. வாட்ஸ் அப் நம்பர் வேண்டுவோர் இங்கே கருத்து திரியில் கேளுங்கள்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்


 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 8

ஆதவனை மேகம் எத்தனை நாள் தான் மறைத்து வைத்து விட முடியும். காற்று வேகமாக வீசினால் மேகங்கள் கலைந்து,கரைந்து மறைந்து தானே போகும்.

அதுபோல் மிகன் தனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த விஷயங்கள் எல்லாம், 'மகிழி' மூலம் இன்று உலகமாறனுக்கு தெரிய வந்தது.

திகழொளியின் நிழற்படத்தை பார்த்து, ' மகிழி' "அம்மா" என்று கூறியதிலேயே, உலகமாறனுக்கு இதில் ஏதோ விஷயம் இருப்பதாக தோன்றியது. அதை என்னவென்று அறிந்து கொள்ள வேண்டுமென்று எண்ணினார்.

மிகன் அறியாமல் அவன் இல்லாத பொழுது, அவன் அறையையும் , அவன் பொருட்களையும் சோதித்தவருக்கு எல்லா விஷயமும் தெள்ளத் தெளிவாக புரிந்தது.

கொஞ்ச நாட்களாக மகனிடம் தெரிந்த மாற்றத்திற்கான காரணமும் , என்னவென்றும் தெரிந்தது.

வாழ்ககை ஒரு வட்டம் என்பது எவ்வளவு உண்மை.எங்கே தொடங்குகிறதோ அங்கேயே முடியும்.

அதுபோல் மகன் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்பதை அறிந்து கொண்டவர் அதை முடித்து வைக்க , தான் என்ன செய்ய வேண்டுமென்றும், மனதிற்குள் முடிவு செய்து கொண்டு தரகரை அழைத்து பேசினார்.

மிகனோ , தந்தையின் முடிவை பற்றி அறியாமல் , தன் நினைவுகளிலேயே சூழன்று கொண்டிருந்தான்.

திகழொளியோ, நிமிடத்திற்கு, நிமிடம் மாறும் மிகனின் புதிய அவதாரத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

ஆயிரம் குழப்பத்துடனேயே திகழொளி அன்று வேலைக்கு சென்றாள்.

மிகனோ, முந்தைய நாள் எதுவும் நடக்காது போல், இயல்பாக அவளிடம் வேலையை பற்றி மட்டும் பேசினான்.

அவளோ, அவனின் செயல்களில் குழம்பி தவித்தாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல் தானும் இயல்பாக இருப்பது போலவே நடந்து கொண்டாள்.

சிறியவர்கள் தங்கள் சிந்தனையிலேயே மூழ்கி கிடந்தனர். பெரியவர்களோ, சிறியவர்களுக்கு தெரியாமல் அடுத்து தாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலையில் தீவிரமாக இருந்தார்கள்.

ஒரு வாரம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நாட்கள் நன்றாகத் தான் நகர்ந்தது.

அன்று காலையில் திகழொளி வேலைக்கு கிளம்பி வரும் போதே , அறவாணன் மகளை அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டு பேசினார்.

"பாப்பா இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்து விடு ! சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து உன்னே பொண்ணு பார்க்க வராங்க .."என்று தந்தை சொன்னதை கேட்டவுடன், அவளுக்கு தலை கிறுகிறுவென சுத்த ஆரம்பித்தது.

தந்தையிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறினாள்.

தந்தையோ, தான் விசயத்தை சொன்னதும், மகளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை மனதிற்குள் குறித்துக் கொண்டவர் , மகளின் தலையை மென்மையாக வருடியபடியே, " பாப்பா அப்பா உனக்கு நல்லது தான் டா செய்வேன்.நீ எதையும் போட்டு குழப்பிக்காம சாயங்காலம் சீக்கிரம் வாடா.." என்றவரிடம் தலையை மட்டும் ஆட்டினாள்.

மனதிற்குள் மிகுந்த கலக்கத்துடனேயே அன்று அவள் வேலைக்கு கிளம்பினாள்.

அப்பாவிடம் மறுத்து அவளால் எதுவும் சொல்ல முடியாது.இப்போது தான் அவளிடம் அவர் பழைய படி பேச ஆரம்பித்து இருக்கார். கல்யாணம் வேண்டாம் என்றால், அவரால் நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது.


அது மட்டுமின்றி, அவள் தான் அவரிடம் திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள். இப்போது பின் வாங்கினால், அது எல்லாருக்குமே கஷ்டம். தன் தலையில் என்ன எழுதி இருக்கோ? அது நடக்கட்டும் என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அமுதனோ, அன்று வண்டியில் அமைதியாக அமர்ந்து வரும் அக்காவை பார்த்து, "அக்கா என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கே..? அப்பா சொன்னதையே நினைச்சுட்டு இருக்கீயா..?"

"அப்படி எல்லாம் இல்லே அம்மு.. கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு .அப்பா, அம்மாக்கு சந்தோஷம் தர கூடிய எந்த விஷயத்திற்கும், இனி நான் எப்போதும் தடையா இருக்க மாட்டேன்.."

"அப்ப உனக்கு இந்த கல்யாண விஷயம் சந்தோஷம் இல்லையா..?

"அம்மு எல்லாம் தெரிஞ்சே நீ இப்படி கேட்கிறே.?. என்னால் சட்டுன்னு மாற முடியலே..மனசு வலிக்குது டா.."

"அக்கா, எனக்கு புரியுது. ஆனால், எதார்த்தத்தை ஏத்துகிட்டு தானே ஆகனும்.."

"ம்ம்..!"

"உன் அருமை தெரியாதவங்களே நினைச்சு, நினைச்சு நீ உன் வாழ்க்கையை கெடுத்துக்கப் போறீயா..?"

" இல்லே அம்மு..அப்படி இல்லே..அந்த இடத்தில் என்னால் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியலே .."

"அக்கா , எனக்கு இதுக்கு பதில் சொல்லத் தெரிலே..இது மனசு சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் எனக்கு ஒண்ணு தோணுது.."

"என்ன அம்மு..?"

" சில நேரங்களில் கசப்பு மருந்து தான் நோய் தீர்க்கும். அது போல், இந்த கல்யாணம் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்னு என் உள் மனசு சொல்லுது.."

"என்னமோ போடா, என்னால் எதையும் யோசிக்கவும் முடியலே..நடப்பது நடக்கட்டும்.."என்று சலித்துக் கொண்டு, பேசிய தமக்கையை நினைத்து அமுதனுக்கும் வருத்தமாகவே இருந்தது.

திகழொளியோ, கம்பெனி வந்தவுடன் வண்டியிலிருந்து இறங்கியவள், தம்பியிடம் "அம்மு நீ எதையும் போட்டு குழப்பிக்காதே..எல்லாம் சரியாகிடும் . நீ போ ! நான் சாயங்காலம் பர்மிஷன் போட்டுக்கிறேன்.."

"நீ கால் பண்ணு நானே வந்து கூட்டிட்டு போறேன்.."

"வேண்டாம் அம்மு.. நான் ஆட்டோ பிடித்து போய்க்கிறேன். நீ கிளாஸ்சை கட் பண்ணாதே.."

"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை..என் அக்காவுக்கு வர மாமாவே நான் பார்க்க வேண்டாமா?"

"என்னமோ செய் ! நான் சொன்னால் நீ கேட்கவா போறே..? சரி டைம் ஆகுது நான் உள்ளே போறேன். நீ பார்த்து பத்திரமா போ!வேகமா போகாதே.."

"சரி, சரி நீ ஆட்டோவிலெல்லாம் போக வேண்டாம். கிளம்பிட்டு கால் பண்ணு ! நான் வந்துடறேன்.. "

"ம்! பாய் அம்மு.. "என்றபடி யோசனையுடனேயே உள்ளே வந்தவளுக்கு தெரியவில்லை. அக்கா, தம்பியின் சம்பாஷனைகளை ஒருவன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.

கம்பெனிக்குள் உள்ளே வந்தவள், தன் மனக்குழப்பத்தை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, வழக்கமான தன் வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

மிகனுக்கு அன்று வேலைப்பளு அதிகமாக இருந்ததால், அவன் வேலையில் மூழ்கி விட்டதால் மதியம் வரை திகழொளிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றது.


மதியம் உணவு இடைவெளியில் விரைவாக உணவை உண்டு முடித்துவிட்டு மிகனிடம் வீட்டிற்கு செல்ல பர்மிஷன் கேட்க அவன் அறைக்குச் சென்றாள்.

கதவை தட்டி அவனிடம் அனுமதி வாங்கிவிட்டு அறைக்குள் சென்றவள், கண்டது என்னமோ ! மிகுந்த கோவத்துடன் , யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த மிகனைத் தான்.

அவன் கோபத்தைக் கண்டவளுக்கு , மனதிற்குள் லேசாக திகில் படர்ந்தது. 'நல்ல மனநிலையில் இருந்தாலே தன்னை காய்ச்சி எடுப்பான்.இப்ப வேறு கோபமாக இருப்பான் போல என்ன சொல்லுவானோ?' என்று கலங்கினாள்.

அவனோ, அவளை பார்த்தபடியே அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தான்.வேறு வழியில்லாமல் திகழொளியோ, நெருப்பின் மீது நிற்பது போல் காத்திருந்தாள்.

ஒரு வழியாக பேசி முடித்து அழைப்பை துண்டித்தவன், அவளை யோசனையாக பார்தபடி, " என்ன விஷயம் ?மேடம் என்னை பார்க்க வந்து இருக்கீங்க .." என்று நக்கலாக கேட்டான்.

திகழொளியோ, அவனின் நக்கலை புறந்தள்ளிவிட்டு "எனக்கு ஓன் ஹவர் பர்மிஷன் வேண்டும்.."

"எதுக்கு பர்மிஷன்..?"

"அது என் பர்சனல்.."

"ஓ! காரணம் சொல்லாமல் பர்மிஷன் தரமுடியாது.." என்று வேண்டுமென்றே சொன்னான்.

அவளோ, பற்களை கடித்து தன் கோவத்தை விழுங்கினாள்.

அவளின் அமைதி அவனுக்கு மேலும் கோபத்தை கூட்டியது. அவளை விழி எடுக்காது பார்த்தபடியே, " பதில் சொல்லாமல் பர்மிஷன் தரமுடியாது.." என்றான்.

அவளோ , அவனை தீயாக முறைத்துபடி பதில் சொல்லாமலேயே நின்றாள்.

அவனோ, அவளின் முறைப்பை சட்டை செய்யாமல், "சரியான காரணம் தெரியாமல், என்னால் பர்மிஷன் தரமுடியாது . அப்புறம் உன் இஷ்டம்.." என்றான் விடக் கொண்டானாக, அவள் எதற்காக முன்னாடியே செல்ல வேண்டுமென்று அறிந்து கொள்ளவதற்காக அவளை வதைத்தான்.

அவளோ, "அவரவருக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதை எல்லாரிடமும் சொல்ல முடியுமா..?"என்றாள்.

அவனோ , "இங்க பாரு நீ வேலை நேரத்தில் தேவை இல்லாமல் பர்மிஷன் போட்டுட்டு, எங்காவது வெளியில் ஊர் சுத்தினா ? அது தான் கேட்கிறேன்.." என்று சலிக்காமல் சொன்னவனிடம்..

"அப்படியே ஊர் சுத்தினாலும், அது என் இஷ்டம் தானே.. அதை கேட்க உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு..?"

" ஓஹோ.. அப்படியா ? நீ வேலை செய்யாமல் ஊர் சுத்தறதுக்கு, இங்கே உனக்கு சம்பளம் கொடுக்கலைன்னு நினைக்கிறேன்.."

" சார் தேவை இல்லாத பேச்சு வேண்டாம் .உங்களால் பர்மிஷன் கொடுக்க முடியுமா ?முடியாது..?"

"நீ காரணம் ஒழுங்கா சொன்னா ? பர்மிஷன் கொடுப்பதை பற்றி யோசிக்கலாம்..?

" பர்மிஷன் கேட்டா கொடுக்க வேண்டியது தானே .. அதை தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க..?"

" அது உனக்கு எதுக்கு ..? நியாயமான காரணமாக இருந்தா? உண்மையை சொல்ல என்ன தயக்கம்.."

"ஓகே, சொல்றேன் கேட்டுக்கோங்க.. சாய்ங்காலம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்க.. அதுக்குத் தான் முன்னாடியே போகனும் ..போதுமா.."என்று திகழொளி சொன்னதை கேட்டவுடன் மிகன் ஆடிப் போய்விட்டான்.

அவனால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. கட்டுக்கடங்காத பதற்றம் அவனை ஆட்கொண்டது. ஆனாலும், அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடு பட்டான்.

தன் கோபம், பதட்டம் அத்தனையும் வார்த்தையால் வடித்து அவளை சித்ரவதை செய்தான்.


"ஓ! அப்படியா..நீ ஏமாத்தியவர்களில் இவன் எத்தனாவது..?"


"சார் தேவை இல்லாமல் பேசறீங்க..இது நல்லா இல்லே.."

"என்ன டீ தேவை இல்லாமல் பேசறேன்.உண்மையை சொன்னால் உனக்கு கோவம் வேறு வருதோ..?"

"எது உண்மை என்று உங்களுக்கே நல்லாத் தெரியும்.."

"நல்லா தெரிஞ்சதாலே தான் சொல்றேன்.ஏமாத்துக்காரி.."

"மிகன் இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசுனீங்க ! அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.."

"என்ன டீ செய்வே..அப்படித் தான்‌ டீ சொல்வேன்.உன் மனசாட்சியை தொட்டு சொல்லு ! நீ எத்தனை பேரை ஏமாத்தி இருக்கேன்னு அது சொல்லும்.."

"வாய் இருக்குன்னு இப்படி அநியாயமாக பேசாதீங்க. நீங்க முதல்லே உங்க மனசாட்சியை கேளுங்க அது சொல்லும் உண்மையை.."

"ஓ! நான் அநியாகமா பேசறேனா..? சரி, அப்படியே இருக்கட்டும். உனக்கு பர்மிஷன் கொடுக்க முடியாது போய் வேலையை பாரு.."

"நீங்க என்ன பர்மிஷன் கொடுப்பது? நானே எடுத்துக்குறேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ? செய்யுங்க.." என்று அடங்கா கோவத்துடன் சொன்னவளின், குரல்வளையை பிடித்து அவளை சுவற்றுடன் அழுத்தினான்.

திகழொளியின் பேச்சு அவனுக்கு கட்டுக்கடங்காத கோபத்தைக் கொடுத்தது.அளவுக்கு மீறிய கோபம் அவனை மிருகமாகவே மாற்றியது.

பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டு, அவளின் கண்களை பார்த்து "ஏண்டி எல்லார் வாழ்க்கையும் சீரழிச்சுட்டு, நீ மட்டும் யாரையோ கல்யாணம் பண்ணி நிம்மதியா வாழத் தாயராகிட்டே அப்படித்தானே..?"என்றவனிடம்..

தன் குரல்வளையை பிடிந்திருந்தவனின் கைகளை தட்டிவிட்டுவிட்டு , "மிருகம் மாதிரி நடந்துக்குறீங்க..நான் யார் வாழ்க்கையும் கொடுக்கலே.. அதை நான் எத்தனை தடவை சொன்னாலும், உங்க மண்டைக்கு ஏறாது. என்னமோ நினைச்சுக்கோங்க.. இப்ப வழி விடறீங்களா.. "என்றாள் அத்திரத்தை அடக்க முடியாமல்.

"ஆமாண்டி நான் மிருகம் தான். நீ கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வாழ்ந்துடலாமன்னு மட்டும் கனவு காணதே.. உன்னை வாழ விடமாட்டேன்.."

"உங்களால் முடிஞ்சதே செய்துக்கோங்க.." என்றவள், அவனிடம் இருந்து சற்று நகர்ந்தவளை, ஒரே எட்டில் தடுத்து அவள் கைகளை பற்றியவன் " நான் இன்னும் பேசி முடிக்கலே.." என்றான்.

"உங்க உளறலை கேட்க நான் தயாராக இல்லை.." என்றபடி அவனிடமிருந்து தன் கையை உதற முயன்றாள்.

அவனோ, இன்னும் இறுக்கமாக அவள் மணிக்டடை பிடித்தவன், " நான் மனசு வைக்காமல் நீ இந்த இடத்தை விட்டு போக முடியாது.." என்றான்.

அவளோ , "ப்ளீஸ் விடுங்க ! நீங்க இப்படி எல்லாம் நடந்து கொள்வது உங்க மனைவிக்கு தெரிந்தால்? எத்தனை வேதனை படுவாங்க .."என்றவளிடம்..

"அதை பற்றி உனக்கு என்ன டீ கவலை..அது என் பாடு.." என்றான்.

திகழொளியோ, 'அய்யோ ! இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது. உணவு இடைவெளி முடிந்து எல்லாரும் வந்து விடுவார்கள். யாராவது தங்களை இந்த நிலையில் பார்த்தால்? என்ன சொல்லுவார்கள்..' என்று மனதிற்குள் பயந்தாள்.

அவனுக்கோ, அந்த மாதிரி எந்த பயமும் இல்லை.. அவளை வார்த்தையாலும்,செயலாலும் குத்தி கிழிப்பதிலேயே குறியாக இருந்தான்.

வேறு வழி இல்லாமல் கடைசியாக அவளே இறங்கி வந்து, "இப்ப உங்களுக்கு என்ன தான் வேண்டும்.."

"நான் வேண்டுவதை கேட்டால் உன்னால் செய்யமுடியுமா?"

"என்னால் முடிந்ததை தான் செய்ய முடியும்.."

"நீ கல்யாணம் பண்ணிக்க கூடாது. அதுக்கு ஓகேன்னா ? இப்ப உன்னை விடறேன்.."

"அது என் கையில் இல்லை..இது அப்பா ,அம்மாவின் முடிவு. அப்புறம் நான் கல்யாணம் பண்ணுனா உங்களுக்கு என்ன..?"

"எனக்கு பிடிக்கலே.."

"ஏன்..?"

"அதையெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது.." என்றவனை என்ன தான் செய்யறதுன்னு பார்த்தவள் ,"சரியான காரணத்தை நீங்க சொன்னால் தானே என்னால் முடிவெடுக்க முடியும்.."

"ஓ உனக்கு காரணம் தெரியனுமா..? என் வாழ்க்கையை கெடுத்துட்டு நீ மட்டும் சந்தோஷமா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வாழ்வே !அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமா?

"எதுவும் புரியாமல் கண்டபடி உளறாதீங்க.."

"கல்யாண மயக்கத்தில் இருப்பவளுக்கு என் பேச்சு உளறலாத் தான் தெரியும்.."

"நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கிற மனநிலையில் நீங்க இல்லே.."

"நல்லா புரிஞ்சதால் தான் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்றேன்.."என்றான் நக்கலாக..

அவளுக்கோ , அவனுடன் போராட முடியவில்லை..குட்டிச் சுவரில் திரும்பத் திரும்ப முட்டிக் கொள்வதை போல் இருந்தது.

அவனின் செயல்களும் ,வார்த்தையும் அவளை வாள் கொண்டு அறுத்தது. அவளால் தாங்க முடியாமல் , " ஏற்கனவே நான் நொந்து கிடக்கிறேன்.மீண்டும் , மீண்டும் என்னை சித்ரவதை செய்யாதீங்க.. இந்த திருமணத்திற்கு நான் ஒத்துக்கிட்டதே என்னை பெற்வர்களுக்காகத் தான்.. இப்போதைய என் மனநிலைக்கு இன்னொருவரை கல்யாணம் செய்துட்டு என்னால் வாழ முடியுமான்னு எனக்கே தெரியலே.. சாகவும் முடியாமல் ! வாழ்வும் முடியாமல்! தினம், தினம் புழுவாக துடிச்சிட்டு இருக்கேன்.." என்று கண்களில் நீர் மல்க அவள் கூறியவுடன் .. அவனின் கை பிடி தானாக மெல்ல விலகியது..

அவன் கைபிடி விலகியதும் கண்ணீரை அடக்கிய படி அறையை
விட்டு வெளியில் ஓடினாள்.

அவனோ, உயிரற்ற சிலையாக உறைந்து நின்றான்.

தொடரும்..











 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom