Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
479
Reaction score
452
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்


 
Last edited:

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
உன் மூச்சுக்காற்றாய்.....

அத்தியாயம் 1.

நல்ல வெயில் காயும் மதிய நேரம். டிசம்பர் மாதம் என்பதால் சூரியனின் சீற்றம் சற்றே குறைவாக இருந்தது. பாவநாச மலைப் பகுதியின் அந்தக் காட்டின் மையப்பகுதியில் நால்வர் இளைஞர் குழாம் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அவர்கள் வந்த ஜீப் சற்றே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் என்றாலும் பொறுப்பும், திறமையும் உள்ளவர்கள் நால்வரும். அதோ அந்தப் பாறை மேல் அமர்ந்து குளிர் பானத்தைச் சுவைத்துக்கொண்டிருக்கிறானே அவன் தான் வெங்கடேஷ். வெங்கி என்று அழைப்பார்கள் நண்பர்கள், ரீல் மன்னன் என்று அழைப்பார்கள் ஒரு சிலர். அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்து பிரியாணியை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்கிறானே அவன் தான் பாலா என்கிற பாலகிருஷ்ணன். வெங்கியின் உயிர் நண்பன். இருவரும் 5ஆம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்தார்கள். பின்னர் வேலையும் ஒரே அலுவலகத்தில் கிடைக்கவே இணை பிரியவேயில்லை இருவரும்.

"டேய்! வினோ! குப்பையை அப்படிப் போடாதே! நம்ம காடுகளை நாமளே காப்பாத்தலைன்னா எப்படி? இதோ இந்த பிளாஸ்டிக் கவர்ல போடு! போற வழியில தூக்கிப் போட்டுட்டுப் போயிடலாம்" என்றான் வெங்கி.

"சாரிடா!" என்று சொல்லி விட்டு நண்பன் சொன்னதைப் போலவே செய்தான் வினோ என்கிற வினோதன். அவன் ராணுவத்தில் சேர இருக்கிறான். அவனும் அவன் நண்பன் மிக்கேலும் நல்ல கேடரில் ராணுவத்தில் சேர அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு தான் இந்த பார்ட்டி.

"என்னடா இது? கொண்டு வந்த சாப்பாடு எல்லாமே தீர்ந்திருச்சே?" என்றான் மிக்கேல். அவனுக்கு அவன் கவலை. பாவம் ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிடுபவனை கொஞ்சம் போல பிரியாணி சாப்பிடு என்றால் என்ன செய்வான்?

"இதுக்குத்தான் சொன்னேன்! நிறைய வாங்கிக்கலாம்னு! கேட்டியா நீ?" என்றான் பாலா.

"எதுக்கு இப்ப டென்ஷனாகுறீங்க? நல்ல ஹோட்டலாப் பார்த்து சிக்கன் ஃபிரை, மட்டன் சாப்ஸ் இப்படி வாங்கிக்கிட்டா போச்சு" என்றான் வெங்கி. அவன் எதற்குமே அசருபவன் அல்ல.

"ஆமா! பக்கத்துல தான் தாஜ் ஹோட்டல் இருக்கு. போயி வாங்கிட்டு வா" என்றான் வினோ.

சற்று நேரம் அமைதியாக நின்றிருந்தார்கள். பக்கத்தில் இருந்த ஒரு பாறை மேல் ஏறி நின்று பார்த்தான் வெங்கி. தூரத்தில் எங்கிருந்தோ புகை வருவது போலத் தெரிந்தது.

"கொஞ்சம் தள்ளி ஏதோ வீடு இருக்கு போல. அவங்க கிட்ட காசு குடுத்து சமைச்சுத் தரச் சொல்லுவோமா?" என்றான் வெங்கி ஆர்வமாக. அவனுக்கு இது போலச் செய்வதென்றால் விருப்பம் அதிகம்.

"இங்கே ஏதுடா வீடு? இது காட்டுப்பகுதியாச்சே?" என்றபடி தானும் அந்தப் பாறையில் ஏறிபார்த்தான் மிக்கேல். அவன் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை.

"என்னடா கதை விடுற? மனுஷன் பசியோட இருக்கும் போது கூடவா நீ கதை விடுவ?" என்றான் எரிச்சலோடு.

"மிக்கேல்! எப்படி உன்னை ராணுவத்துல் எடுத்தாங்க. அதோ பாரு! கொஞ்சம் தள்ளி நிறைய தேக்கு மரம் தெரியுதா?"

"ஆமா தெரியுது"

"அதுக்கு நடுவுல ஒரு சின்ன கட்டிடம் மாதிரி...கட்டிடம்னு கூடச் சொல்ல முடியாது, குடிசை மாதிரி தெரியுதா? அதுல இருந்து தாண்டா புகை வருது" என்றான் உறுதியாக.

மூவரும் ஏறிப்பார்த்தனர். தேக்கு மரம் தெரிந்தது ஆனால் வெங்கி சொன்ன குடிசையும் புகையும் மட்டும் தென்படவே இல்லை.

"டேய்! இவன் தன் வேலையை ஆரம்பிச்சுட்டாண்டா! இப்படித்தான் போன மாசம் சினிமா பார்த்துட்டு வரும் போது பேயைப் பார்த்தேன். அது எங்கிட்ட டயம் கேட்டுதுன்னு சொன்னான்." என்றான் வினோ.

"ஹூம்! இதை விட்டுட்டியே? நாம காலேஜ்ல படிக்கும் போது பேய்க்கதையெல்லாம் சொல்லி ஆட்களை ஏற்பாடு பண்ணி நடிக்க வெச்சு ஒரு ரூமையே யாரும் போக முடியாதபடி செஞ்சானே? நினைவு இருக்கா?" என்றான் மிக்கேல் தன் பங்குக்கு.

"எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு டெல்லிக்குப் போய்த் துப்பாக்கி வாங்கிட்டு வந்து உன்னை சுட்டுருவேன். விளையாடாதே வெங்கி" என்றான் வினோ கோபமாக.

திகைத்துப் போனான் வெங்கி. உண்மை தான். அவன் நிறையக்கட்டுக் கதைகள் கட்டுவான் தான். ஆனால் இம்முறை அப்படி இல்லையே? அதோ நிஜமாகவே குடிசை தெரிகிறதே? அதிலிருந்து புகையும் வருகிறதே? இவர்கள் மூவரும் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? அவர்கள் கண்ணில் தான் கோளாறு. என எண்ணிக் கொண்டான்.

"சத்தியமாச் சொல்றேண்டா! அதோ அங்க குடிசை இருக்கு. உங்க கண்ணுக்கு என்ன ஆச்சு?" என்றான் அழுத்தமாக.

"உனக்கு சத்தியம் செய்யுறது என்ன பெரிய காரியாமா? நம்ம ஸ்கூல் வேப்ப மரத்துல முனி இருக்குன்னு வாத்தியார் சுந்தரம் மேல சத்தியம் செஞ்ச. என்ன ஆச்சு? அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து எப்படியோ கடவுள் கிருபையில பொழைச்சுக்கிட்டாரு." என்றான் மிக்கேல்.

சிரித்தனர் மூவரும்.

"சே! இந்த தடவை அப்படி இல்லடா! உண்மையாத்தன் சொல்றேன். வேணும்னா எங்க அம்மா மேல சத்தியம் பண்ணட்டுமா?"

அவசரமாகத் தடுத்தான் பாலா.

"வேண்டாண்டா! உங்க அம்மா மேல மட்டும் வேண்டாம். அவங்க தான் நமக்கு அப்பப்ப வாய்க்கு ருசியா செஞ்சு குடுக்கறாங்க. அதையும் கெடுத்துராதே" என மற்றவர்கள் இன்னும் பலமாகச் சிரித்தனர்.

அந்தச் சிரிப்பு சத்தத்தில் பறவைகள் சிறகடித்துப் பறந்தன.

"சரி! நாம நாலு பேரும் சேர்ந்து போவோம். அந்தக் குடிசை இருக்குன்னு கிட்டப் பார்த்தாலாவது நம்புவீங்க இல்ல?" என்றான். அவனது குரல் சீரியசாக இருந்தது.

"என்னால முடியாது மச்சான்! பசியில காது ஞொய்னு சொல்லுது. நீங்க போயிட்டு வாங்க" என்று என்று நீட்டி அமர்ந்து விட்டான் மிக்கேல். அவனுக்குத் துணையாகத் தான் இருக்கப் போவதாகச் சொன்னான் வினோ. வாக்குவாதங்களுக்குப் பிறகு பாலாவும், வெங்கியும் போய்ப் பார்ப்பது. அப்படிக் குடிசை வீடும் ஆட்களும் இருந்தால் உணவு வாங்கி வருவது. இல்லையென்றால் வெங்கி அம்பாசமுத்திரத்தில் அனைவருக்கும் பிரியாணி வாங்கித்தர வேண்டும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.

பாலாவும், வெங்கியும் புறப்பட்டனர். சற்று தூரம் நடந்திருப்பார்கள் கறுப்பாக ஏதோ ஒன்று குறுக்கே போனது போலத் தோன்ற அப்படியே நின்றான் வெங்க்கி. பாலாவும் தான்.

"என்னடா அது?" என்றான் பாலா குரல் நடுங்க.

"பயப்படாதே! ஏதாவது காட்டுப்பன்னியா இருக்கும்" என்று சமாதானம் சொல்லியவன் மேலும் நடந்தான். சற்றே பயத்தோடு அவனைத் தொடர்ந்தான் பாலா.

"வெங்கி! நீ சொன்ன குடிசை, புகை எல்லாம் சும்மா வினோவையும், மிக்கேலையும் பயமுறுத்தத்தானே? என்றான்.

பேசியவனைத் திரும்ப்ப் பார்த்தான் வெங்க்கி.

"இல்லடா! நிஜமாவே நான் பார்த்தேன். உன் கண்ணுக்குத் தெரியல்ல?" என்றான்.

பாலாவுக்கு உடல் நடுங்கியது. அது காட்டின் குளிர்காற்றிலா? இல்லை பயத்தாலா எனச் சொல்வது கடினம்.

"எனக்கு என்னவோ பிடிக்கல்ல! பேசாமத் திரும்பிப் போயிருவோமா? வர வர சூரிய வெளிச்சமே இல்லாத மாதிரி இருக்கு" என்றான் பாலா மெல்லிய குரலில்.

"சே! கோழை மாதிரிப் பேசாத! பட்டப்பகல்ல என்ன ஆயிரும்? பேசாம வா" என்றான் வெங்க்கி.

மௌனமாக மேலும் நடந்தார்கள். நடக்க நடக்க காடு வளர்ந்து கொண்டே போவது போலத் தோன்றியது. சட்டெனத் திரும்பிப் பார்த்தான் பாலா. பகீரென்றது. காரணம் அவர்கள் வந்த பாதை மூடியிருந்தது. அது மட்டுமல்ல வினோவும், மிக்கேலும் தெரியவே இல்லை. அவ்வளவு தூரமா வந்து விட்டோம்? என நடுக்கமாக இருந்தது பாலாவுக்கு. ஆனால் வெங்கியோ செலுத்தப்பட்டவன் போல நிற்காமல் போய்க் கொண்டிருந்தான்.

"வெங்கி! தயவு செஞ்சு நில்லுடா! எனக்கென்னவோ பயம்மா இருக்கு! திரும்பிப் போயிரலாம்டா! பாரு! நாம வந்த பாதை கூடத் தெரியல்ல! இப்ப நிக்கப் போறியா இல்லியா நீ?" என்று கத்தினான். அந்த அமைதியான சூழலில் அவன் குரல் அவனுக்கே பயங்கரமாகக் கேட்டது. இல்லியா நீ...இல்லியா நீ...இல்லியா நீ...என எதிரொலித்தது. நின்று விட்டான் வெங்கி.

சுற்று முற்றும் பார்த்தான். மாலை 7 மணி போலக் காட்சியளித்தது அந்தப் பகுதி. செல்ஃபோனை எடுத்தான். சுத்தமாக சிக்னலே இல்லை. நேரம் 2 மணி எனக் காட்டியது அது. மதியம் இரண்டு மணிக்கு இப்படி இருட்டுமா? பாலா வேறு பாதை மூடுகிறது..இப்படி என்னென்னவோ சொல்கிறானே? என எண்ணித் திரும்பிப் பார்த்தான்.

நண்பன் சொன்னது உண்மை தன். அவர்கள் வந்த பாதை சுமார் பத்தடி தான் தெரிந்தது. பிறகு மரங்கள் தன் தெரிந்தன. முதல் முதலாக பயம் வந்து அமர்ந்து கொண்டது வெங்கியின் நெஞ்சுக்குழியில்.

"என்ன பாலா இது? எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. பேசாம திரும்பிருவோமா?" என்றான் மிக மெல்லிய குரலில்.

அதற்காகவே காத்திருந்தது போல நண்பனின் கைகளைப் பிடித்து திருப்பி வந்த பாதையிலேயே செல்ல ஆரம்பித்தான் பாலா. சுமார் பத்து நிமிடம் நடந்திருப்பார்கள். முன்னிலும் இருட்டாகவே இருந்தது அந்த இடம்.

"என்ன இது? கா மணி நேரமா நடக்குறோம்? இன்னமும் கன்னி மார்துறை வரலியே?" என்றான் பாலா. குரலில் அச்சம். குளிர் காற்றில் கூட அவன் முகத்தில் வியர்வை வழிந்தது.

"இன்னொண்ணு கவனிச்சியா? காட்டுல சில் வண்டு சத்தம், பறவைகள் சத்தம் இதெல்லாம் இருக்கும். ஆனா இங்கே ஒரு நிசப்தமா இருக்கே?" என்றான் வெங்கி முனகலாக.

நெஞ்சை அடைப்பது போல உணர்ந்தான் பாலா. நண்பன் சொல்வது உண்மை தான். இலை ஆடும் சத்தம் கூட இல்லை. அவ்வளவு ஏன்? ஏதேனும் உயிரினங்களோ, ஆறோ இருக்கும் எந்த ஓசையுமே இல்லை. முன்னிலும் வேகமாக நடந்தனர். இன்னமும் அவர்கள் கேம்ப் செய்த இடமான கன்னிமார் துறை வரவில்லை.

"வழி மாறி வந்துட்டோமோ? எங்கே பார்த்தாலும் காடாத்தானே இருக்கு? ஃபோன்ல கொஞ்சம் மிக்கைலைக் கூப்பிடு! அவங்க ஜீப்பை எடுத்துக்கிட்டு வரட்டும்" என்றான் பாலா.

மீண்டும் ஃபோனைப் பார்த்தான். ம்ஹூம்! சிக்னல் ஒரு கோடு கூட இல்லை. அதோடு செல்லின் சார்ஜ் வேறு மிகவும் கம்மியாக இருந்தது.

"பாலா! காலையில தான் ஃபுல் சார்ஜ் போட்டேன். இப்ப இப்படி இருக்கே?" என்றான் வெங்கி. அவன் குரலில் சற்றே கவலை, கலவரம் எல்லாம் இருந்தது.

"இரு என் ஃபோனைப் பார்க்குறேன்" என எடுத்தான் பாலா. அவனது ஃபோனில் லைட்டே வரவில்லை. சுத்தமாக செத்துக் கிடந்தது அது. வியர்வை பொங்க நிமிர்ந்து பார்த்தான் அவன்.

"என்ன செய்ய? எப்படித் திரும்பிப் போக?" என்றான் வெங்க்கி.

மௌனமாக சில நிமிடங்கள் கழிந்தன.

"இதுக்கு மேலயும் நாம நடக்க வேண்டாம். காட்டுக்குள்ளேயே தான் நாம போயிக்கிட்டு இருக்கா மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்து யோசிப்போம். என்ன?" என்றான் வெங்கி. வெறுமே தலையசைத்தான் பாலா.

"இந்நேரம் மிக்கேலும், வினோவும் நம்மைக் காணலைன்னு தேடி வருவாங்க இல்ல?" என்றான் பாலா நம்பிக்கையாக.

ஏனோ அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை வெங்கிக்கு. தேடி வருவார்கள் தான். ஆனால் அவர்களால் இந்த இடத்தைக் கண்டு பிடிக்க இயலுமா? தெரியவில்லை. குரல் கொடுத்துப் பார்க்கலாமா? என எண்ணினான்.

"மிக்கேல்! வினோ! நாங்க இங்கே இருக்கோம்" எனக் குரல் கொடுத்தான் வெங்க்கி. எதிரொலி கூட இல்லாமல் அசாதாரண அமைதி நிலவியது அந்த இடத்தில். அழுகையே வந்து விட்டது இருவருக்கும்.

"உன்னால தாண்டா நாம இப்படி மாட்டிக்கிட்டோம். குடிசையாம், புகையாம். எல்லாமே பொய் தானே? எதுக்குடா என்னையும் சேர்த்துக் கூட்டிக்கிட்டு வந்த? நாம காட்டுல இப்படியே கத்திக் கத்தி தொண்டை வறண்டு சாகப் போறோம். இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும். அப்புறம் புலிக்கு நாம தான் டின்னர்." என அழுதான் பாலா.

"நமக்குள்ள சண்டை போட்டுக்குற நேரம் இது இல்ல! வழி தவறி வந்துட்டோம். திக்கு திசை தெரியல்ல. அமைதியா இருப்போம். எப்படியும் வினோவும், மிக்கேலும் ஆட்களைக் கூட்டிக்கிட்டு வருவாங்க. அது வரைக்கும் பொறுமையா இருப்போம்" என்றான்.

சொல்லிய நண்பனைப் பிடித்துத் தள்ளினான் பாலா.

"பொறுமையாவா இருக்கணும்? நீ ஏன் சொல்ல மாட்ட? உனக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது.ஆனா என்னை நம்பி எங்கம்மா இருக்காங்க, என் தங்கச்சிக்குக் கல்யாணம் பேசியிருக்கேன். எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா உன்னை நான் சும்மா விட மாட்டேன்" என்றான் கோபமாக.

"தயவு செஞ்சு பொறுமையா இருடா..." என ஆரம்பித்தவன் சட்டென நிறுத்தினான்.

"யாரோ பாடுற சத்தம் கேக்கல்ல?" என்றான் வெங்கி. அவன் குரலில் மகிழ்ச்சி. ஊன்றிக் கவனித்தான் பாலா. ஆம் யாரோ பாடும் சத்தம் கேட்கத்தான் செய்தது. பெண் குரல். கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? என ஒலித்தது.

"டேய்! பாட்டுச் சத்தம் கேக்குது. அப்போ யாரோ ஒரு பொண்ணு இருக்காங்க! வயசானவங்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றான் வெங்கி.

"உம்! எனக்கும் கேக்குது. ஆனா குரல் இளமையா இருக்கே?"

"நல்லா யோசி பாலா! நம்மை மாதிரி யூத், இந்தப் பழைய பாட்டைப் பாடுவாங்களா?" என்றான். வெறுமே தலையாட்டினான் பாலா. அவனுக்கு இன்னமும் தயக்கமாகவே இருந்தது.

"என்னடா யோசிக்குற? ஒரு பொண்ணே இங்க தனியா இருக்காங்க! நாம ரெண்டு ஆம்பிளைங்க! நாம பயந்தோம்னா வெக்கக் கேடு" என்றான் வெங்கி.

எதுவும் பேசாமல் குரல் வ ந்த திசையை நோக்கி நடந்தனர். பத்தடி கூட சென்றிருக்க மாட்டார்கள் சட்டென அந்தக் காட்சி அவர்கள் கண் முன்னே விரிந்தது. ஒரு பழைமையான வீடு. அதை வீடு என்று சொல்வதை விட பங்களா என்றே சொல்லலாம். சுற்றிலும் ஆளுயரத்திற்கு காம்பவுண்ட் சுவர் இருந்தது. ஆனால் அவைகள் பல இடங்களில் உடைந்தும், இடிந்தும் காணப்பட்டன. சுற்றிலும் பல விதமான மரங்கள் இருந்தன. வீட்டில் வாயிலை நோக்கிச் செல்லும் பாதை அழகாக செம்மண்ணில் போடப்பட்டு விளங்கியது. சிறு குப்பை கூட இல்லை. அந்த செம்மண் சாலையில் இரு மருங்கிலும் விசிறி வாழைகள் ஒரே சீராக நடப்பட்டு அழகாகக் காட்சியளித்தன. வண்டிகள் நிற்கவென ஒரு போர்ட்டிகோ. அதிலும் பல விதமான வேலைப்பாடுகள்.

"வா! போகலாம்" என கையைப் பிடித்து இழுத்தான் வெங்க்கி. அவனது கைகளை பிடித்துத் தன் பக்கம் இழுத்தான் பாலா.

"என்னடா?"

"நல்லா யோசி வெங்க்கி! இவ்வளவு பெரிய வீடு. இதுல இந்த வாச போர்டிக்கோவில இருந்து பாடினாக் கூட பத்தடி தள்ளிக் கேக்காது. ஆனா நமக்குக் கேட்டது. இதுக்கு என்ன அர்த்தம்?" என்றான் திக்கியபடி.

"உனக்கு பயம்னு அர்த்தம். இத்தனை பெரிய வீட்டுல ஒரு மைக் இருக்காதா? என்னடா நீ?" என்றான் வெங்கி. இருந்தாலும் அடுத்த அடி எடுத்து வைக்கவில்லை.

"இப்ப நீ என்ன யோசிக்குற?" என்றான் பாலா.

"இல்ல...இந்த மதில் சுவர்களைப் பாரேன். பாழடஞ்சு இருக்கு. ஆனா பங்களா சும்மா புதுசா ஜொலிக்குது. எங்கேயோ இடிக்கல்ல?"

"யப்பா! வெங்கி! தெய்வமே! இது ஒண்ணு தானா இடிக்குது? நாம காட்டுக்குள்ள வந்ததுல இருந்து நடக்குறது எதுவும் சரியாவே இல்ல. பேசாமத் திரும்பிருவோமா? போயி மிக்கேல் கிட்டயும் வினோ கிட்டயும் நீ என்ன வேணா ரீல் விட்டுக்க. நான் கண்டுக்க மாட்டேன். உசுரோட வெளிய போவோம்டா" என்றான் பாலா. விட்டால் அழுது விடுவான் போலத் தோன்றியது.

தைரியசாலியான வெங்கிக்கே கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது. அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று எங்கோ எதிலோ படித்ததாக நினைவு. பாலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு அப்படியே திரும்பி மீண்டும் கன்னிமார் துறையை நோக்கி நடந்தான். பாலா வேகமாக முன்னல் சென்றான். ஏறத்தாழ அரை கி மீ சென்றிருப்பார்கள். இப்போதும் அதே போல காட்சி கண்களில் அறைந்தது. அதே பங்களா. ஆனால் இம்முறை மதில் சுவர்கள் கூட பளிங்கு போலக் காட்சியளித்தன. யானையின் தந்த நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு பளபளவெனக் காட்சியளித்தது. திகைத்து நின்றார்கள் நண்பர்கள் இருவரும்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 2.

இத்தனை நேரம் சுற்றியும் மீண்டும் வந்த இடத்துக்கே வந்து விட்டோமே? என்ற திகைப்பு ஒரு புறம். சற்று முன்னால் இடிந்து கிடந்த மதி சுவர்கள் அரை மணிக்குள் புதிதாகக் கட்டப்பட்டு, பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறதே என்ற பயம் ஒருபுறம் எனத் தவித்தார்கள் நண்பர்கள். அந்தக் குளிரிலும் வியர்வை வழிந்தது.

"இப்ப என்ன செய்ய?" என்றான் பாலா கிசுகிசுப்பாக.

இதைத்தான் வெங்கியும் யோசித்துக்கொண்டிருந்தான். வெகுவாக இருட்டி விட்டது. சூரியன் மறையும் திசையை வைத்து கணக்கிடலாம் என்றால் சூரியனே கண்ணுக்குத் தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் மரங்கள், கொடிகள் அந்தக் கட்டிடம் அவ்வளவு தான். இன்னும் சற்று நேரத்தில் முழுவதுமாக இருட்டி விடும். அப்போது என்ன செய்ய? என்ற பயம் வேறு சேர்ந்து கொள்ள மூளையே வேலை செய்யவில்லை.

"என்னடா மரம் மாதிரி நிக்குற? என்னை எப்படியாவது வெளிய கூட்டிக்கிட்டுப் போடா! இல்லன்னா நான் உன்னைக் கொன்னிருவேன்" என்றான் பாலா. மெலிதாக யாரோ சிரிக்கும் சத்தம் கேட்க உறைந்தார்கள்.

பயத்தை உதறினான் வெங்க்கி.

"யாரு? யாரு இருக்கீங்க உள்ள? நீங்க தான் பாடுனீங்களா?" என்றான் சற்றே உரத்த குரலில்.

அவன் பேசவும் பல ஆயிரம் விளக்குகள் உயிர் பெற்றதைப் போல அந்த இடமே வெளிச்சமாக ஆனது. பல வண்ண பல்புகளால் அந்த இடம் அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. மிகப்பெரிய ஹால் இருந்தது. அதன் ஒரு ஓரத்தில் தான் வெங்கியும் பாலாவும் நின்றிருந்தார்கள். அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தான் வெங்கி. பழைய கால மாளிகை போல இல்லை. இன்றைய மாடர்ன் வீடுகள் போலத்தான் இருந்தது. ஆனால் மிகவும் பெரிது. ஹாலை ஒட்டி ஒரு மாடிப்படி ஏறியது. முற்றிலும் மரத்தால் ஆன படிகள். கைப்பிடிகளில் தேக்கு பளபளத்தது. ஆனால் படிகளில் சற்றே தூசி படிந்திருந்தது. யாரும் மாடிக்குச் சென்றதன் அடையளமாக காலடித்தடங்களையே காணோம். மாடிப்படிகளை அடுத்து மூன்று அறைகளின் வாயில் தெரிந்தது. எல்லாவற்றிலுமே திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டு அழகாக் காட்சியளித்தது. ஒவ்வொரு வாயிலின் இரு புறத்திலும் பூ ஜாடிகள் வைக்கப்பட்டு அதில் பேயர் தெரியாத காய்ந்த மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. குரல் மறு ஓரத்தில் இருந்து வந்தது.

வெளிச்சம் வந்ததாலோ என்னவோ பயம் குறைந்தது.

"இது என்ன மாய வேலை? நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?" என்றான் வெங்கி. இருந்த இடத்தை விட்டு அசையாமல். அந்த நேரத்திலும் நண்பனின் தைரியத்தைப் பாராட்டினான் பாலா.

"தயவு செஞ்சு உள்ளே வாங்க! அப்பத்தான் உங்களால என்னைப் பார்க்க முடியும்" என்றது ஒரு இனிமையான பெண் குரல். பாட்டுப் பாடிய அதே குரல்.

"நாங்க ஏன் உள்ள வரணும்? நீங்க வெளிய வாங்க! இங்க எல்லாமே மர்மமா இருக்கே?" என்றான் வெங்கி பிடித்த பிடியை விடாமல்.

"ரெண்டு பேரும் ஆம்பிளை சிங்கங்க தான். ஒரு பொண்ணு கிட்டப் போயி இப்படி பயப்படுறீங்களே?" என்றது குரல் மீண்டும்.

அதற்கு மேலும் போகாமல் இருந்தால் ஆண்மைக்கே இழுக்கு என எண்ணிய வெங்கி எட்டு வைத்தான். நல்லவேளையாக எதுவும் நடக்கவில்லை. துணிந்து ஹாலில் எல்லையில் இருந்த குரல் வந்த அறையை நோக்கி நடந்தான். விருப்பமே இல்லாமல் பாலா பின் தொடர்ந்தான். அவனுக்கு அங்கே தனியாக நிற்க அச்சம். ஹாலில் மறு ஓரத்தில் இருந்த அறையிலிருந்து தான் குரல் வருகிறது எனக் கணித்துக்கொண்டு அதை நோக்கி நடந்தான். காலடிகள் பெரிதாக கேட்டன. பயத்தில் சட்டென நின்று விட்டான். இப்போது ஓரத்தில் இருந்த அறையின் வாயிலில் அழகே உருவான சுடிதார் அணிந்த பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

"வாங்க! பயப்படாதீங்க. இது எங்க பாட்டி வீடு தான்" என்றாள்.

"பாட்டி வீடா? இல்லை மர்ம வீடா?" என்றான் பாலா.

"சும்மா சும்மா மர்மம்னு பேசாதீங்க! நான் ரொம்ப பயந்த சுபாவம்" என்றாள் அந்தப் பெண்.

மேலும் அவளை நோக்கி முன்னேறினார்கள். வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். அதுவே என்னவோ போலிருந்தது. அவசரமாக அவளது காலைப் பார்த்தான் பாலா. தரையில் தான் இருந்தது. இப்போது அவர்கள் அந்தப் பெண்ணின் முன்னால் நின்றிருந்தார்கள்.

"இப்ப சொல்லு! நீ யாரு? எதுக்கு எங்களை இங்கே வரவெச்சே?" என்றான் வெங்க்கி.

"என்னது? நான் உங்களை வர வெச்சேனா? நீங்களா தானே வந்தீங்க?" என்றாள் எகத்தாளமாக.

"இல்ல! தள்ளி இருந்து பார்க்கும் போது இங்க குடிசை தெரிஞ்சது. ஆனா அது என் கண்ணுக்கு மட்டும் தான் தெரிஞ்சது. கிட்ட வந்தா பெரிய பங்களா, அடுத்த நிமிஷமே பாழடஞ்ச மதில் சுவர் தானா சரியாகுது. எந்தப் பக்கம் திரும்பினாலும் இங்க தான் வந்து சேருரோம். உண்மையைச் சொல்லு! நீ யாரு? பேயா? இல்லை மந்திரவாதியா?" என்றான் வெங்க்கி.

கலகலவெனச் சிரித்தாள் அந்தப் பெண்.

"படிச்ச உங்களை நான் என்னன்னு சொல்றது? குடிசையாம், கிட்ட வந்த மாளிகை ஆயிருச்சாம்" என்று சொல்லி மீண்டும் சிரித்தாள்.

"சிரிக்காதே! இது தான் நடந்தது. இதுக்கு உன்னால விளக்கம் சொல்ல முடியுமா?" என்றான் பாலா.

"ஏன் முடியாது? உங்க நாலு பேர்ல உங்களுக்குக் கண் பார்வை ரொம்ப ஷர்ப்பா இருக்கு. அதனால குடிசை உங்க கண்ணுக்குத் தெரிஞ்சது."

"சரி! அப்படியே வெச்சுப்போம்! ஆனா கிட்ட வர வர குடிசை மாளிகை ஆச்சே?" என்றான் வெங்க்கி.

"ஹையோ! ஹையோ! பாருங்க! நீங்க வந்ததுக்கு எதிர் திசையில ஒரு குடிசை இருக்கு. அதுல இந்த வீட்டுல வேலை செய்யுற ரெண்டு பேர் இருக்காங்க. அதைத்தான் பார்த்துருக்கீங்க" என்றாள் புன்னகைத்தபடி.

கேவலமாக உணர்ந்தார்கள் நண்பர்கள் இருவரும். ஆனாலும் சந்தேகம் போகவில்லை.

"ஓகே! அதையும் உண்மைன்னே வெச்சுக்குவோம். ஆனா எங்க திரும்புனாலும் இந்த வீடு வந்தது, மதில் சுவர் புதுசானது...?" என்றான் வெங்கி விடாமல்.

"என்ன நீங்க இப்படி இருக்கீங்க? இந்த பங்களாவோட சுற்றுச் சுவர் ரொம்பப் பெரிசு. காட்டுல திக்கு திசை தெரியாம எங்கியோ சுத்தி இருக்கீங்க. பங்களாவோட முன் பக்கத்துக்கு வந்துட்டீங்க. நீங்க சொன்ன இடிஞ்ச மதில் சுவர் பின் பக்கம் இருக்கு. வேணும்னாப் போய்ப் பாருங்க" என்றாள்.

"இவ்வளவு தானா? நான் கூட என்னவோன்னு நெனச்சேன்." என்றான் வெங்கி.

"பொண்ணைப் பார்த்தாப் போதுமே! உடனே நம்பிடுவியே? ஏங்க? வெங்கி பேசின உடனே லைட் எரிஞ்சதே எப்படி?" என்றான் பாலா விடாமல்.

"சரியாப் போச்சு! அவரு பேசவும் கரண்டு வரவும் சரியா இருந்தது சார்!" என்றாள் சிறு எரிச்சலுடன்.

இதற்கு மேலும் சந்தேகப்பட்டால் நாம் கோழைகள் ஆகிவிடுவோம் என நினைத்தான் வெங்கி. ஆனாலும் எங்கேயோ என்னவோ இடறுகிறதே என்று யோசித்தான்.

"சரி! உள்ள வாங்க" என்றாள் அந்தப் பெண் மீண்டும்.

"இல்லங்க! நாங்க வரல்ல! உங்களுக்கு கன்னிமார் துறைக்கு வழி தெரியும்னா சொல்லுங்க. போயிட்டே இருக்கோம். அங்க எங்க நண்பர்கள் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க! கவலை வேற படுவாங்க. ஏன்னா செல் எடுக்கவே இல்ல" என்றான் வெங்க்கி.

"அவங்க ரெண்டு பேரும் அப்பவே போயிட்டாங்க. கவலைப் படாதீங்க" என்றாள் அமைதியாக.

தூக்கி வாரிப் போட்டது இருவருக்கும்.

"என்ன? என்ன? ரெண்டு பேரா? போயிட்டாங்களா? உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றான் பாலா. பயத்தில் இருவர் முகங்களும் வெளிறிக் கிடந்தது.

"அட! உத்தேசமா சொன்னேன். இப்ப என்ன? நீங்க கன்னிமார் துறைக்குப் போகணும். அவ்ள தனே? நானே கொண்டு போய் விடறேன். ஆனா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்." என்றாள்.

"என்ன உதவின்னு தெரியாம செய்யறேன்னு சொல்ல முடியாதுங்க" என்றான் பாலா. அவனை முறைத்தான் வெங்க்கி. "போடா லூசு" என்றான் பாலா வெறும் வாயசைப்பில்.

"என் பேரு நித்யா! பக்கத்துல இருக்குற கிராமம் தான் என் ஊரு. இதோ தெரியுதே காஞ்ச பூ! அதை எரிக்கணும். அது தான் நீங்க எனக்கு செய்யுற உதவி." என்றாள்.

"ஏன்? அதை நீங்க செய்ய முடியாதா? நாங்க ஏன் செய்யணும்?" என்றான் வெங்கி. அவனுக்கும் ஏதோ சந்தேகம்.

"நான் அதைச் செய்யக் கூடாது! உங்களால முடியுமா முடியாதா?" என்றாள் நித்யா. அவளது முகம் கோபத்தில் சற்றே பயங்கரமாகக் காட்சியளித்தது.

"தாயே! நீ யாரு? என்ன? எதுவும் தெரியல்ல! நீ சொல்றபடியே செய்யுறோம்! எங்களை வெளிய விட்டாப் போதும்" என்றான் வெங்கி. இப்போது பாலாவுக்கு உடல் தந்தியடிக்கத் தொடங்கி விட்டது. வியர்வையில் நைனைந்து தொப்பலாக இருந்தது உடை. நித்யாவின் முகம் சாதாரணமானது.

"நானே கூட வரேன்னு சொன்னேனே?" என்றாள்.

பூ ஜாடிகளில் இருந்த காய்ந்த பூக்களை கீழே தட்டினான். பூக்கள் தட்டென்ற பெரும் ஓசையோடு கீழே விழுந்தன. பூக்கள் இத்தனை சத்தம் போடுமா? என அவர்கள் திகைத்து நிற்கும் போதே அந்தப் பெண் கத்தினாள்.

"எல்லா ஜாடியிலயும் இருக்குற பூவைப் போடுங்க. சீக்கிரம் எரிங்க" என்றாள். அவளது கண்கள் ஹாலில் எதிர்ப்புறமிருந்த ஒரு வாளில் நிலைத்திருந்தது. அந்த வாள் வெள்ளியால் செய்யப்பட்டது போல பளபளப்பாக இருந்தது.

"அதை எடுக்கணுமா?" என்றான் வெங்கி. அவனை முறைத்தாள் நித்யா.

"சொன்னதை மட்டும் செய்ங்க" என்ற அவளது குரலில் அதிகாரம் இருந்தது.

ஆத்திரம் வந்தாலும் வேறு வழி இல்லாத நிலையில் அத்தனை ஜாடியிலும் இருந்த பூக்களை கீழே கொட்டினான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஓசையோடு கீழே விழுந்தன. இதெல்லாம் என்ன? என்று கூட யோசிக்க முடியாமல் மூளை மரத்துப் போயிருந்தது இருவருக்கும்.

ஹாலின் நடுவே காய்ந்த பூக்கள் அம்பாரமாகக் குவித்து வைக்கப்பட்டிருக்க அவற்றை பற்ற வைக்க லைட்டரை எடுத்தான் பாலா.

"இவரு தான் செய்யணும் அதை" என்றாள் நித்யா. அவள் கண்களில் நெருப்பு தெரிந்ததோ என ஒரு வினாடி ஐயப்பட்டான் பாலா.

மௌனமாக லைட்டரை வெங்கியின் கையில் கொடுத்தான் அவன். பற்ற வைக்க சற்றே தயங்கினான் வெங்கி.

"உம்! சீக்கிரம்!" என்றாள் நித்யா. இம்முறை அவள் குரலில் கட்டளை.

நடுங்கும் கைகளோடு பற்றவைத்தான் வெங்கி. காய்ந்த பூவாக இருந்தாலும் சட்டென பற்றிக்கொள்ளவில்லை அவைகள். பக்கெட்டுகளில் இருந்த காகித பில்களை வைத்து எரித்தான். காகிதம் பற்றிக்கொள்ள அதன் அருகில் இருந்த பூ எரிய ஆரம்பித்தது.

வினாடிக்கும் குறைவான நேரம் ஓவென பெரும் சத்ததோடு காற்றடித்து சட்டென எல்லாம் நின்றது. நெருப்பு பூக்களைப் பற்றிக்கொண்டு நின்று எரிய ஆரம்பித்தது. மெல்லிய துர்னாற்றம் பரவ ஆரம்பித்தது. நித்யாவின் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல். பட்டென வெடித்துச் சிதறியது ஒரு பூ. அதிலிருந்து நீல நிற திரவம் வடிந்து மேலும் எரிய ஆரம்பித்தது. மூக்கை மூடிக் கொண்டார்கள் இரு நண்பர்களும். கண்கள் பளபளக்க பூக்கள் எரிவதை குரூர சந்தோசத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் நித்யா.

"போகலாமா?" என்றான் வெங்கி. சட்டெனத் திரும்பினாள் அவள். ஒரு வினாடி அவள் கண்கள் நீலமாகத் தெரிந்தது. நாக்கு இழுத்துக்கொள்ள கால்கள் தொய்ந்தன.

"முழுசா எரிஞ்சு முடியட்டும். அப்புறம் போகலாம்" என்றாள் நித்யா. இப்போது அவள் குரல் சாதாரணமாக இருந்தது.

கிட்டத்தட்ட பத்து நிமிடம் பூக்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகின. அவற்றை கவனமாக ஒரு கவரில் சேகரித்துக்கொண்டு எழுந்து நின்றாள்.

"ரொம்ப நன்றி! உங்களுக்கு" என்றாள்.

"உங்க நன்றியெல்லாம் இருக்கட்டும். நீங்க சொன்னபடி நாங்க செஞ்சோம் இல்ல? இப்ப எங்களை கொண்டு போய் விடுங்க" என்றான் பாலா.

சிரித்தபடியே இருவரையும் நெருங்கி வந்தாள் நித்யா. அவளது கரங்களில் சாம்பல் அடங்கிய பொட்டலம். கண்ணிமைக்கும் நேரத்தில் தலையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல இருக்க வலி தாங்காமல் இருவரும் ஆ என அலறியபடி சாய்ந்தார்கள். மெல்ல நினைவு தப்பியது இருவருக்கும்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 3:

கண் விழித்தபோது ஒரே வெளிச்சமாக இருந்தது வெங்கிக்கு. அந்த மாயப் பெண் நம்மைக் கொன்று விட்டாள். இதோ சொர்க்கத்தில் இருக்கிறோம் போல என நினைத்துக்கொண்டான். ஆனால் சற்று நேரம் பொறுத்து பறவையின் ஒலிகள், காற்றுச் சத்தம் இவை கேட்டன. அதோடு நண்பர்கள் மிக்கேல் மற்றும் வினோவின் குரல் கேட்டது. என்னவோ கவலையோடு பேசிக்கொள்வது போல இருந்தது. ஆனால்...பாலா எங்கே? அவன் இருக்கிறானா இல்லையா? சட்டென முழு உணர்வும் வர எழுந்து அமர்ந்தான்.

"டேய்! பாலாவுக்கு என்ன ஆச்சுடா? அவன் எங்கே?" என்று கத்தினான்.

மிக்கேல் அருகில் வந்தான்.

"அப்பா! நீ முழுச்சுக்கிட்டியா? பயந்தே போயிட்டோம்." என்றான்.

"என்னடா உளறுற? நான் எப்படி இங்கே வந்தேன்? பாலா எங்கே?" என்றான் மீண்டும்.

"உன் பக்கத்துல தானே இருக்கான். ஏன் இப்படிக் கத்துற?" என்றான் வினோ.

அருகில் ஒரு மாதிரியான கோணத்தில் படுத்திருந்தான் பாலா. மூச்சு வந்து கொண்டிருந்தது. சற்றே நிம்மதியானது வெங்கிக்கு. ஆனால் அவர்கள் காட்டு பங்களாவில் அல்லவா இருந்தார்கள்? எங்களை இங்கே பத்திரமாகக் கொண்டு சேர்ந்த அந்தப் பெண் எங்கே?

"அந்தப் பொண்ணு எங்கே?" என்றான் அவசரமாக.

"எந்தப் பொண்ணு? இங்கே ஏதுடா பொண்ணு?" என்றான் வினோ. அவனது பார்வையே துளைத்தது.

"எங்களை இங்க யாரு கொண்டு வந்து சேர்ந்தாங்க?" என்றான் வெங்கி. இப்போது பாலாவிடமும் மெல்ல அசைவு தெரிந்தது. அவனும் எழுந்து அமர்ந்து கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். விழிகளில் குழப்பம்.

"நாம இங்கே எப்படி வந்தோம் வெங்கி?" என்றான்.

"அதாண்டா எனக்கும் புரியல்ல. இவங்களைக் கேட்டுக்கிட்டு இருந்தேன்." என்று வினோவையும், மிக்கேலையும் கை காட்டினான்.

"நித்யா?" என்றான் பாலா.

"தெரியல்ல"

"டேய்! என்னடா? ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு டிராமா போடுறீங்களா? யாரு நித்யா? என்ன விஷயம்?" என்றான் மிக்கேல் எரிச்சலாக.

"நித்யாவை விடு. முதல்ல நாங்க இங்கே எப்படி வந்தோம்? எங்களை கூட்டிக்கிட்டு வந்தது யாரு?" என்றான் பாலா.

மிக்கேலும் வினோவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"உங்களை நாங்க தானே கூட்டிக்கிட்டு வந்தோம். அதோ நிக்குதே அந்த வண்டியில தானே நாம பிக்னிக் வந்தோம் . மறந்து போயிரிச்சா உங்களுக்கு?" என்றான் வினோ பரிகாசமாக.

"ம்ச்! நாம பாவநாசம் கன்னிமார் துறைக்கு எப்படி வந்தோம்னு கேக்கல்ல. கன்னிமார் துறைக்கு எப்படி வந்தோம்னு தன் கேக்கறேன்" என்றான் பாலா.

"உனக்கு என்ன லூசாடா? கன்னிமார் துறைக்கு எப்படி வந்தோம்னு கேக்கல்ல, கன்னிமார்துறைக்கு எப்படி வந்தோம்னு கேட்டா என்னடா அர்த்தம்? என்றான் மிக்கேல் கோபமாக.

சற்று நேரம் அமைதியாக இருந்தான் வெங்கி. எங்கோ குழப்பம் இருக்கிறது. ஒரு கண்ணி விடுபட்டிருக்கிறது. நாங்கள் இப்போது பத்திரமாக கன்னிமார் துறையில் தான் இருக்கிறோம். ஆனால்? காட்டு பங்களாவில் நடந்தது? எங்களைக் காப்பாறிய பெண் நித்யா? முதலிலிருந்து தான் கேட்க வேண்டும்.

"வினோ! நான் விளக்கமாச் சொல்றேன். நாம இங்க வந்தோமா? சாப்பாடு பத்தல்லன்னு மிக்கேலும் நீயும் சொன்னீங்களா? நாங்க தள்ளித் தெரியுற ஒரு குடிசையை நோக்கிப் போனோமா?"

"ஆங்! இங்க தான் குழப்பம் ஆரம்பிக்குது. தலையில அடிபட்டதுல உங்களுக்கு கொஞ்சம் சரியா நினைவு இல்லேன்னு நினைக்கிறேன்" என்றான் மிக்கேல்.

தலையில் அடிபட்டதா? இது என்ன புது குண்டு?

"தயவு செஞ்சு என்ன நடந்ததுன்னு சொல்லேன்" என்றான் பாலா கெஞ்சலாக.

"சரி சொல்றேன். நீயும் வெங்கியும் தூரத்துல இருக்குற குடிசையை நோக்கிப் போறேன்னு சொல்லிட்டு போனீங்க. நானும் மிக்கேலும் தாமிரபரணியில மீன் பிடிக்கலாம்னு தூண்டிலை எடுக்க கார் கிட்டப் போனோம். அப்ப திடீர்னு பெரிய சத்தம் தொம்முன்னு யாரோ கீழே விழுறா மாதிரி கேட்டது. ஓடி வந்து பார்த்தோம். நீயும், வெங்கியும் மயக்கமா இருந்தீங்க. கல்லுல அடி பட்டு காயம் வேற. நாங்க பயந்து போயிட்டோம். " வினோ நிறுத்த மிக்கேல் தொடர்ந்தான்.

"ஆனா நல்லவேளை மூச்சு வந்துக்கிட்டு இருந்தது. தண்ணி தெளிச்சுப் பார்த்தோம். ம்ஹூம் பிரயோஜனமில்லை. அப்ப அந்த வழியா ஒரு வயசான அம்மா வந்தாங்க. இது வெறும் மயக்கம் தான் தம்பி. கவலைப் பட ஒண்ணுமில்ல. அவங்களே கொஞ்ச நேரத்துல எழுந்துருவாங்கன்னு சொன்னாங்க"

"யாரு அந்த அம்மா?" என்றான் வெங்க்கி ஆர்வமாக.

"தெரியல்ல! இங்க இருக்குற காணிங்கள்ல ஒருத்தங்களா இருக்கலாம். நாடி பிடிச்சுப் பார்த்துட்டு தான் சொன்னாங்க. உங்க தலையில சில பச்சிலையை கூட வெச்சாங்க." என்றான்.

"அப்படீன்னா? நாங்க இங்க இருந்து போகவே இல்லியா?" என்றான் வெங்கி. அவனுக்கு குழப்பம், வியப்பு என எல்லாம் கலந்திருந்தது.

"ஆமாடா! கடந்த மூணு மணி நேரமா நீங்க மயக்கமா இருந்தீங்க. இப்ப மணி அஞ்சு. முதல்ல வீட்டுக்குக் கிளம்பலாம்" என்றான் மிக்கேல்.

மனதுக்குள் பயம் தோன்றியது வெங்கிக்கு. இவர்கள் என்ன சொல்கிறர்கள்? நாங்கள் மூன்று மணி நேரமாக மயங்கிக் கிடந்தோமா? அப்படியானால் நான் அங்கே பார்த்தது? பேசியது? எல்லாமே கனவா? மயக்கத்தில் தோன்றிய மாயமா?

"என்ன யோசிக்குற வெங்கி? இந்த மலையே சரியில்ல. வந்ததுல இருந்து என்னவோ மாதிரி இருக்கு. அந்த வயசான அம்மா சொன்னா மாதிரி கீழே இறங்கிருவோம். இனிமே இந்தப்பக்கமே வரக் கூடாது" என்றான் வினோ.

"இன்னும் அந்த அம்மா என்னென்ன சொன்னாங்கடா?" என்றான் வெங்கி. அவனுக்கு எப்படியாவது தனது மர்மத்துக்கு விடை தெரிய வராதா என்ற வேகம்.

"வேற ஒண்ணும் சொல்லல்ல! அவங்க இங்க எதைச்சையா வந்தா மாதிரி தெரியல்லடா! எங்களைப் பார்த்து தான் வந்தாங்க. அதுவும் நீயும் பாலாவும் மயக்கமா இருக்குறதை எதிர்பார்த்தது போலவே தான் பேசினாங்க" என்றான் மிக்கேல்.

எழுந்து நண்பர்கள் அருகே சென்றான் வெங்க்கி. இன்னமும் எழுந்திருக்கும் தெம்பு இல்லாதவனைப் போல அப்படியே அமர்ந்திருந்தான் பாலா.

"மிக்கேல்! தயவு செஞ்சு முழுசாச் சொல்லு! அந்த அம்மா எப்போ? எப்படி? எந்த வழியா வந்தாங்க? என்ன சொன்னாங்க? ஒரு வார்த்தை விடாமச் சொல்லுடா" என்றான் வெங்க்கி. அவன் குரலில் ஆர்வம்.

"சொல்றோம்டா! ஆனா நீங்க சொல்லி முடிச்சதும் அவங்களைத் தேடிக்கிட்டுக் கிளம்பக் கூடாது. எங்க கூட கீழே இறங்கிரணும். சம்மதமா?" என்றான் மிக்கேல்.

பாலாவைப் பார்க்க அவன் தலையாட்டினான். அப்படியே செய்வதாக வெங்க்கியும் ஒப்புக்கொண்டான்.

"நாங்க தூண்டிலை எடுக்க கார் கிட்டப் போனோம்னு சொன்னேன் இல்ல? அப்பத்தான் ஏதோ சத்தம் கேட்டது. நாங்க பயந்து போயி நீங்க போன வழியில ஓடினோம். அப்ப நீயும் பாலாவும் பைத்தியம் பிடிச்சவங்க மாதிரி எங்கேயோ பார்த்துக்கிட்டு எதையோ பேசிக்கிட்டு உக்காந்திருந்தீங்க. எனக்கு ரொம்ப பயமாப் போச்சிடா" என்று கண்களில் நீரோடு பேசினான் மிக்கேல்.

தொடர்ந்தான் வினோ.

"உங்களை அந்த நிலையில பார்த்ததும் எங்களுக்கு என்ன செய்யன்னு தெரியல்ல. கூப்பிட்டுப் பார்த்தோம், தட்டிப் பார்த்தோம். ஏன் மிக்கேல் உன்னை முதுகுல அடிக்கக் கூடச் செய்தான். ஆனா நீங்க எங்களைப் பார்க்கவும் இல்ல, பேசவும் இல்ல. எதையோ பார்த்து பேசிக்கிட்டு இருந்தீங்க" என்றான். அவனது குரலிலிருந்து எவ்வளவு பயந்திருக்கிறார்கள் எனப் புரிந்தது.

"ஒரு நிமிஷம் வினோ. நாங்க பேசினதுல ஏதாவது உங்களுக்குப் புரிஞ்சதா?"

"ம்ஹூம்! வார்த்தைகளே குழறலாத்தான் இருந்தது. ஆனால் ஒரு சில வார்த்தைகள் மட்டும் ஓரளவு தெளிவா இருந்தது. காஞ்ச பூ, மதில் சுவர், எரிக்கணும்னு இப்படி ஒரு சில வார்த்தைகள் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாம இருந்தது.

"உம்! அப்புறம்?"

"மிக்கேல் சொன்னபடி பேசாம உங்களை வண்டியில ஏத்தி ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போயிரலாம்னு தான் நெனச்சோம். ஆனா உங்களை அசைக்கக் கூட முடியல்ல. நீங்க ஒத்துழைக்கவும் இல்ல. அப்பத்தான் அந்த அம்மா வந்தாங்க." என்றான் வினோ.

"அவங்க பார்க்குறதுக்கு எப்படி இருந்தாங்க?"

"சாதாரணமாத்தான் இருந்தாங்க. புடவை மட்டும் கொஞ்சம் பழங்கால டைப்புல கட்டியிருந்தாங்க. நெத்தியில பொட்டு, கழுத்துல கருப்பா ஏதோ செயின். அவ்வளவு தான். மத்தபடி குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. இந்த மலையில இருக்குற சாதாரணக் கிழவியைப் போலத்தன் இருந்தாங்க. ஆனா அவங்க கிட்ட இருக்கும் போது மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருந்தது. அவங்களைப் பார்த்ததுமே இவங்க உங்களை சரி பண்ணிருவாங்கன்னு நம்பிக்கை வந்தது" என்றான் மிக்கேல்.

"உம் அப்புறம் அவங்க என்ன செஞ்சாங்க?" என்றான் பாலா. அவனும் எழுந்து இப்போது அருகில் வந்து விட்டான்.

"உங்களைக் கூப்பிட்டாங்க. உன்னைக் குறிப்பா கூப்பிட்டாங்க. வெங்கடேசான்னாங்க. எங்களுக்கு ஒரே ஆச்சரியம். உன் பேர் இவங்களுக்கு எப்படித் தெரியும்னு. அதை வினோ கேட்டான். ஆனா அவங்க ஒண்ணும் பதில் சொல்லல்ல."

திகைப்புக்கு மேல் திகைப்பு வெங்க்கிக்கும் பாலாவுக்கு. எங்கோ காட்டில் இருக்கும் ஒரு வயோதிகப் பெண்மணிக்கு என் பெயர் எப்படித் தெரியும்? என.

"உம்" என்றான் பாலா. ஏனோ அவனுக்கு இப்போது பயம் போய் விட்டது.

"அவங்க வாய்க்குள்ள பேசினது எங்களுக்குக் கொஞ்சம் கேட்டது. நித்யமல்லி முந்திக்கிட்டா. இவங்கள்ல ஒருத்தனை பிடிச்சிருவா. எப்படியாவது மீட்கணும். அப்புறமா நித்தியமல்லியைப் பார்த்துக்கலாம்னு சொன்னாங்க. எங்களுக்கு எதுவும் புரியல்லன்னாலும் சரின்னு தலையாட்டினோம். உங்க தலையில ஏதோ ஒரு மூலிகை வெச்சு மந்திரம் சொன்னாங்க. அப்பத்தான் திரும்பவும் பயங்கரமான சத்தம் கேட்டுது. கறுப்பா ஏதோ ஒண்ணு புகை மாதிரிப் போச்சு. அந்த அம்மாவே கொஞ்சம் ஆடிப் போயிட்டாங்க. கீழே விழப்பார்த்தவங்களை மிக்கேல் தான் பிடிச்சுக்கிட்டான்.

"ஆமாண்டா! அப்ப அந்தம்மா என்னை ஆசீர்வதிச்சாங்க. சரியான நேரத்துல எனக்கு உதவுனப்பா. உன்னை நான் ஆசீர்வதிக்கிறேன்னு சொல்லி என் தலையில கை வெச்சாங்க. அப்படியே மனசுக்குள்ள உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்குச்சு எனக்கு." என்றான் மிக்கேல். அவன் குரலில் இன்னமும் பரவசம்.

"அப்புறம் தன் நாங்க சத்தம் வந்த திசையை பார்த்தோம். நீயும் பாலாவும் ஒரு மரத்தடியில மயங்கிக் கிடந்தீங்க. உங்க கிட்ட ஒரே புகை வாடை. கிட்ட வந்தா நீங்க உயிரோட இருக்கீங்களா? இல்லையா? எதுவும் தெரியல்ல. நாங்க அந்த அம்மா கிட்ட என்னம்மா செய்யன்னு கேட்டோம். அதுக்கு அந்தம்மா, கவலைப் படாதீங்க தம்பிங்களா! உங்க நண்பர்கள் பிழைச்சுட்டாங்க. ஆனா இனிமே அவங்களை இங்க வர விடாதீங்க. மயக்கம் தெளிஞ்சதும் கீழே கூட்டிக்கிட்டுப் போயிருங்க. கவனமாப் பார்த்துக்குங்கன்னு சொன்னாங்க"

பேச்சே வரவில்லை இரு நண்பர்களுக்கும். இது என்ன அதிசயம்? நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களைப் போல இருந்தோமா? மிக்கேல் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது நாங்கள் செய்ததற்கும் உளறியதற்கும் கட்டாயம் சம்பந்தம் இருக்கிறது. ஆனால் நாங்கள் பங்களாவுக்குள் இல்லையா? அங்கே தான் இருந்தோம் என்றால், இங்கயும் எப்படி எங்களால் இருக்க முடியும்? எல்லாம் ஒரே மாயமாக இருக்கிறதே?

"ரொம்ப யோசிக்காதீங்கடா! முதல்ல மலை இறங்கிருவோம். அப்புறம் எவ்வளவு வேணும்னாலும் பேசுவோம்" என்று அவசரப்பட்டான் வினோ. சூரியன் வேறு இறங்கிக் கொண்டே இருக்க நண்பன் சொல்வது தான் சரி என்று முடிவு செய்து தலையாட்டினான் வெங்கி. பொருட்களை ஒவ்வொன்றாக காரில் எடுத்து வைத்தனர். அப்போது மீண்டும் புகை நாற்றம் வருவதைப் போலிருக்க சற்றே நிதானித்தான் வெங்கி.

"டேய்! எல்லாரும் கொஞ்சம் கவனிங்க. திடீர்னு புகை நாத்தம் வரா மாதிரி இல்ல?" என்றான் வெங்கி. அதைக் கேட்டதும் மிக்கேலும் வினோவும் அதிர்வது வெளிப்படையாகத் தெரிந்தது.

"ஆமாடா! அந்தம்மா சொன்னபடியே தான் நடக்குது. முதல்ல உன் கையில இருக்குற அந்த பாட்டிலைத் தூக்கிப் போடு. தயவு செஞ்சு கேள்வி கேக்காம தூக்கிப் போடுடா" என்று கத்தினான் மிக்கேல்.

கல்லாய் நின்றிருந்த வெங்கியின் கரங்களிலிருந்து பாட்டிலைப் பிடுங்கி தூர எறிந்தான் பாலா. பக்கத்தில் ஒரு பாறையில் மோதியது அது. ஆனால் கண்னாடி சிதறாமல் ரப்பர் பந்தைப் போல துள்ளி ஒரு புதரின் மேல் விழுந்தது. ஏதோ ஒரு பெரிய மிருகம் கீழே விழுவதைப் போன்ற சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் மிக்கேலும், வினோவும் மின்னல் வேகத்தில் செயல் பட்டு வெங்கியை அப்படியே தூக்கி குண்டுக்கட்டாக வண்டியில் ஏற்றினர். பாலா சொல்லவே தேவையில்லாதபடி பின்னால் தாவி அமர்ந்து கொண்டான். டிரைவர் சீட்டில் அமர்ந்த வினோ கை நடுக்கத்தையும் பொருட்படுத்தாமல் வண்டியை ஓட்டினான். ரிவர்ஸ் எடுத்து பாதையில் வண்டி வருவதற்குள் ஏதோ ஒரு பயங்கர மிருகம் வண்டியைத் துரத்துவது போலிருக்க பின்னால் பார்த்தான் வெங்க்கி. கணக்ளுக்கு எதுவும் தெரியவில்லை என்றாலும் ஏதோ ஒன்று ஓடி வரும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. வேகத்தை அதிகப்படுத்தினான் வினோ. யாரோ பலமாக பின்னால் இருந்து இழுப்பதைப் போல வண்டி மிகவும் கஷ்டப்பட்டுத்தான் ஓடியது. வனப்பேச்சி அம்மன் கோயில் பகுதிக்கு வந்த உடன் எல்லாம் நிசப்தமானது.

கோயிலைக் கடக்கும் போது தன்னையும் அறியாமல் கை கூப்பி வணங்கினான் வெங்க்கி. அவனைத் தொடர்ந்து பாலாவும் வணங்கினான். கோயிலில் இருந்த தூண்டா மணி விளக்கு எரிந்து அவர்களுக்கு வழி காட்டியது. ஆனாலும் ஆபத்து வர இருக்குறது என்பதாலோ என்னவோ காற்றே இல்லாத நேரத்தில் கூட தீபத்தின் சுடர் ஆடிக் கொண்டிருந்தது.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 4.

வெங்கியும் பாலாவும் வழக்கம் போல அலுவலகத்துக்கு செல்வதும், மாலை நேரங்களில் பேசிக்கொண்டும் இருந்தார்கள். கவனமாக காட்டில் நடந்த அந்த சம்பவத்தை மறக்க விரும்பினார்கள் இருவரும். வினோவும், மிக்கேலும் டெல்லிக்குப் பயணப்பட்டு விட்டார்கள். போய் சேர்ந்து ஃபோனும் வந்து விட்டது. வாரம் ஒன்று ஓடியதே தெரியவில்லை.வெங்கி பயந்ததைப் போல எந்த எதிர்பாராத நிகழ்ச்சியும் நடக்கவில்லை. ஒருவாறு மனம் இயல்பு நிலைக்கு வந்து நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கினர் நண்பர்கள் இருவரும்.

அன்று அலுவலகத்தில் யாரோ புதிதாக வந்து சேரப் போகிறாகள், அதிலும் இரு பெண்கள் என வெங்கியும் பாலாவும் வேலை பார்த்த அலுவலகத்தில் இருந்த இளைஞர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தனர். அதிலும் ராகேஷ், வருபவர்களில் ஒருத்தி தான் என் வருங்கால மனைவி, அதற்காகத்தான் கடவுள் அந்தப் பெண்களை இங்கே அனுப்புகிறார் என்ற லெவலுக்குப் போய் விட்டான். வெங்கிக்குமே கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது. அவனுக்கும் காதலிக்க, ஊர் சுற்ற பிறகு கல்யாணம் செய்து கொள்ள ஆசை உண்டு. பாலாவுக்கும் அதே நிலை தான்.

"அப்படி யாருடா வரப் போறாங்க? எல்லாப் பசங்களும் இப்படி ஈன்னு இளிச்சுக்கிட்டு இருக்காங்களே?" என்றான் வெங்க்கி.

"ரெண்டு பேராம் வெங்க்கி. அழகுன்னா அழகாம் அப்படி ஒரு அழகாம். ரெண்டு பேருக்குமே இன்னமும் கல்யாணம் ஆகலையாம். வயசு 22க்குள்ள தானாம்" என்றான் பாலா. முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

"இத்தனை விவரம் உனக்கு எப்படிடா தெரியும்?" என்றான் வெங்க்கி.

"நம்ப மாட்டியா நீ? நம்ம ராகேஷ் தான் அவங்களை இண்டெர்வியூவுல வெச்சுப் பார்த்தானாம். அப்படியே மயங்கிட்டான்னா பார்த்துக்கயேன். அவன் தான் சொன்னான்" என்றான் பாலா பதிலுக்கு.

"சரி வரட்டும் பார்ப்போம்" என வேலையில் ஆழ்ந்து விட்டான். வெங்கியின் காதருகே ஏதோ குரல் கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்தான். யாருமே இல்லை. சரி ஏதோ வண்டோ கொசுவோ ரீங்காரம் செய்திருக்கும் என மீண்டும் வேலையில் ஆழ்ந்தான்.

"நித்ய மல்லி வர்ரா! எச்சரிக்கையா இரு! மயங்கிடாதே" என்றொரு குரல் தெளிவாகக் கேட்டது.

திடுக்கிட்டுப் போய் சுற்றுமுற்றும் பார்த்தான். பக்கத்து இருக்கையில் பாலா நிச்சலனமாக வேலை செய்து கொண்டிருந்தான்.

"பாலா! டேய் பாலா"

"என்ன?"

"இப்ப என் காதுக்கிட்ட யாரோ பேசுனாங்கடா" என்றான் பயந்த குரலில்.

"அந்தப் பொண்ணுங்களைப் பார்க்கக் கூட இல்லை! உளற ஆரம்பிச்சுட்டியா?" என்றான் பாலா கிண்டலாக.

"பாலா ப்ளீஸ்! நான் சீரியசாச் சொல்றேண்டா! என் காதுகிட்ட நித்யமல்லி வரா! மயங்கிடாதேன்னு சொன்னாங்கடா" என்றான்.

நித்யமல்லி என்ற பெயரைக் கேட்டதும் முகம் சீரியசானது பாலாவுக்கு.

"வெங்கி! இந்தப் பேரைத்தானே அன்னைக்கு அந்த அம்மா சொன்னாதா மிக்கேல் சொன்னான்?" என்றான் அவசரமாக. மெல்ல வியர்க்கத் தொடங்கியது அவனுக்கு.

"உம்! அதான் எனக்கும் கொஞ்சம் குழப்பமா இருக்கு"

"இப்ப என்னடா செய்ய?" என்றான் பாலா.

"எனக்கும் தெரியல்ல! இதுல யாரு நல்லவங்க? யாரு கெட்டவங்கன்னே தெரியலியேடா?" என்றான் பயந்த குரலில்.

"இதுல என்ன குழப்பம்? கண்டிப்பா அந்த அம்மா தான் நல்லவங்க. அவங்க தானே நம்மைக் காப்பாத்தினாங்க?" என்றான் பாலா.

"உம்! இருக்கலாம்! ஆனா நம்மை அந்த பங்களாவுல இருந்து உயிரோட வெளிய கொண்டு வந்தது நித்யா தானே? அதை யோசிச்சாத்தான் குழப்பமா இருக்கு. நம்மைச் சுத்தி என்னவோ நடக்குது. ஆனா நமக்கு எதுவுமே தெரியலையேன்னு இருக்குடா" என்றான் வெங்க்கி.

அவன் சொல்வது முற்றிலும் உண்மை எனப்பட்டது பாலாவுக்கு. காட்டுக்குப் போனோம். அங்கே ஒரு பெண்ணைப் பார்த்தோம். அவள் எதையோ எரிக்கச் சொன்னாள். திடீரெனப் பார்த்தால் நாங்கள் மீண்டும் நண்பர்களிடம் வந்து விட்டோம். இவையெல்லாம் எதற்காக? ஏன்? நடக்கின்றன? யாராவது விளக்கமாகச் சொன்னான் எவ்வளவு நன்றாக இருக்கும்? என நினைத்துக்கொண்டான் பாலா.

"ஏண்டா! நீயும் தானே எங்கூட வந்த? உன் காதுல மட்டும் குரல் கேக்கலையா?" என்றான் வெங்கி.

உதட்டைப் பிதுக்கினான் பாலா.

"அப்ப! இது எல்லாமே என்னைக் குறி வெச்சு தான் நடக்குதா? எனக்கு ஒண்ணுமே புரியலையே? தலையைப் பிய்ச்சுக்கலாம் போலிருக்கே" என்றான் வெங்கி. மேனேஜர் வரவே பேச்சு அத்தோடு நின்றது. சற்று நேரத்தில் குளிர் காற்று வந்து தன் மீது மோதுவது போல உணர்ந்தான். அலுவலகம் முழுக்க ஏசி தான் என்றாலும் இந்தக் காற்று முற்றிலும் வேறாக இருந்தது. கடுமையான குளிர் அதோடு விரும்பத்தகாதாகவும் இல்லை. ஏதோ முடை நாற்றம் வருவதாக உணர்ந்தான். நிமிர்ந்து பர்த்த போது ஒரு இளம் பெண் இவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

அவளது பார்வை முதுகுத்தண்டில் ஜிவீரென்றது.

"யார் நீங்க?" என்றான் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு.

"உங்களைத் தேடித்தான் வந்தேன். நீங்க தானே வெங்கடேஷ்?"

"ஆமா!"

"என் பேரு மல்லிகா! இன்னைக்குத்தான் புதுசா சேர்ந்திருக்கேன். உங்க கிட்ட வேலை கத்துக்கச் சொல்லி மேனேஜர் அனுப்புனாரு" என்றாள்.

சுற்று முற்றும் பார்த்தான். ராகேஷ், சரவணன் என எல்லாரும் இவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். அடிப்படையாக ஒரு சந்தேகம் வந்தது வெங்கிக்கு. இந்தப் பெண் தன் கண்களுக்கு மட்டும் தான் தெரிகிறாளா? இல்லை மற்றவர்களும் பார்க்கிறார்களா? என்பதே அது.

"என்னடா பர்க்கறீங்க?" என்றான் சரவணனிடம்.

"ஊம்! உனக்கு எங்கியோ மச்சம்டா! இந்தப் பொண்ணு உங்கிட்டத்தான் கத்துப்பேன்னு சொல்லிடிச்சே? உம்! நடத்து! நடத்து" என்றான் சரவணன்.

அப்போது தான் மூச்சே வந்தது வெங்கிக்கு. "அப்படா! அனைவருக்கும் இவள் தெரிகிறாள்! சாதாரணப் பெண் தான்" என ஆசுவாசம் அடைந்தான்.

"ஹலோ! வெங்கி! நான் உக்காரலாமா?" என்றாள் அந்தப் பெண் உரிமையாக.

விழித்தான் வெங்க்கி.

"உங்களை வெங்கின்னு தானே உங்க ஃபிரெண்ட்ஸ் கூப்பிடுவாங்க? அதான் நானும் அப்படிக் கூப்பிட்டேன்" என்றாள் அசராமல்.

"இதைப் பாருங்க மேடம்! நீங்க என்னை வெங்கடேஷ் சார்னு கூப்பிடுங்க. அது தான் நல்லது." என்றான்.

சிரித்தாள் அந்தப் பெண். சங்கீதம் போல ஒலித்தது அது. அவளது அழகு கோடி முறை பெருகியது போல இருக்க ஆவெனப் பார்த்தான் வெங்கடேஷ்.

"என்ன அப்படிப் பார்க்கறீங்க சார்! வெக்கமா இருக்கு" என்றாள்.

ஆனால் அவளைப் பார்த்தால் வெட்கப்படும் பெண்ணாகத் தெரியவில்லை.

வேறு எதுவும் பேசாமல் அவளுக்கு அடிப்படை வேலைகளைச் சொல்லிக் கொடுத்தான். சட்டெனப் பிடித்துக்கொண்டாள். எதையும் ஒரு முறை சொன்னாலே போதும். ஒரு வேளை அவளுக்கு எல்லாமே முதலிலேயே தெரியுமோ என சந்தேகப்பட்டான்.

"நீங்க இதுக்கு முன்னாடி எங்கே வேலை பார்த்தீங்க?" என்றான் வெங்க்கி.

"எங்கேயுமே இல்ல! இதான் என் முதல் ஜாப்" என்றாள். அதன் பிறகு அவளும் எதுவும் அதிகமாகப் பேசவில்லை. மாலை அலுவலகம் முடிந்து பாலாவிடம் நிறையப் பேச வேண்டும் என நினைத்தவாறே பார்க்கிங்கில் நின்றிருந்தான் வெங்கடேஷ். தூரத்தில் பாலா யாரோ ஒரு பெண்ணுடன் நடந்து வருவது தெரிந்தது. எப்போதும் இருவரும் சேர்ந்து தான் வீட்டுக்குச் செல்வார்கள். ஒரு நாள் பாலா வண்டி கொண்டு வந்தால் மறு நாள் வெங்கி பைக்கை எடுத்து வருவான். இது அவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம். நிறையப் பணமும் சேமிக்க முடியும் அதோடு பேசுவதற்கும் நேரம் கிடைக்கும் என அவர்கள் பேசி முடிவெடுத்திருந்தார்கள். ஆனால் இன்று ஒரு பெண்ணுடன் வருகிறானே? ஒரு வேளை மல்லிகாவாக இருக்குமோ? என அஞ்சினான்.

நெருங்கி வரும் போது தான் தெரிந்தது அது மல்லிகா இல்லை என. நிம்மதிப் பெருமூச்சு விடுமுன் மல்லிகா தெரிந்தாள்.

"என்ன பாலா? யார் இவங்க?" என்றான் வெங்கி நண்பனிடம். அந்தப் பெண் நேராக வெங்கடேஷைப் பார்த்தது. அவளது கண்கள் வயலட் நிறமாக இருக்க அதிந்து போனான் வெங்கடேஷ். ஆனால் அடுத்த கணம் சாதாரணமாக மாறியதோ எனத் தோன்றியது.

"வெங்கி! இவங்க பேரு ரக்ஷிதா! புதுசா இன்னிக்குத்தான் ஜாயின் பண்ணினாங்க." என்றான் இளித்தபடி.

"ஹலோ! நீங்களும் பாலாவும் ரொம்ப ஃபிரெண்ட்ஸ் இல்ல?" என்றாள் ரக்ஷிதா. இப்போது எதற்கு இந்தக் கேள்வி எனத் தோன்றியதை மறைத்துக்கொண்டு வெறுமே தலையாட்டினான்.

நடந்து வந்து கொண்டிருந்த மல்லிகா இப்போது இவர்களை நெருங்கி விட்டாள். இரு பெண்களும் சிரித்துக்கொண்டனர். அதில் ஏனோ விஷம் இருப்பதாகப் பட்டது வெங்கிக்கு.

"சரி! நாங்க கிளம்புறோம். நாளைக்குப் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு பைக்கை உதைத்தான் வெங்க்கி. ஆனால் பாலா பின்னால் உட்கார முயற்சி கூடச் செய்யவில்லை.

"இல்லடா வெங்கி! நான் வந்து....ரக்ஷிதாவோட ..." என இழுத்தான்.

"பரவாயில்ல பாலா! நீங்க என் ஃபிரெண்டைக் கூட்டிக்கிட்டுப் போங்க! நான் உங்க ஃபிரெண்டைக் கூட்டிக்குப் போறேன். என்ன சரிதானே வெங்கி?" என்றாள். அவளை வெறுப்புடன் பார்த்தான் வெங்கடேஷ்.

"எப்பவுமே நீயும் நானும் சேர்ந்து தானே போவோம்? இன்னிக்கு என்ன புதுசா?" என்றான் பாலாவிடம் சண்டைக்குப் போவது போல.

நண்பனைத் தனியே அழைத்தான் பாலா.

"புரிஞ்சுக்கோ வெங்கி! ரக்ஷிதா வலிய வந்து எங்கிட்டப் பேசுறாடா மச்சான். இந்த சான்சை நான் விட்டுட்டேன்னா எனக்கு அப்புறம் பொண்ணே கிடைக்காது. நமக்கும் வயசாகுது இல்ல? காலாகாலத்துல கல்யாணம் செஞ்சாத்தானே நல்லது?" என்றான்.

"அதுக்கு உங்கம்மா கிட்ட பொண்ணு பார்க்கச் சொல்லுடா! இல்லை வேற நல்ல பொண்ணாப்பாரேன். இவளைப் பார்த்தாலே நல்லா இல்லையே?" என்றான் வெங்கி அவசரமாக.

"வாயை மூடு! ஒரு பொண்ணே வலிய வந்து பேசுனா நீங்கள்லாம் தப்பாத்தாண்டா நினைப்பீங்க. அந்தப் பொண்ணோட அழகுக்கும், அந்தஸ்துக்கும் என்னை அவ பார்க்கணும்னே அவசியம் இல்ல. ஆனா அவளே வரும் போது நீ ஏன் கெடுக்கப் பார்க்குற?" என்றான் கோபமாக.

எதுவும் செய்ய இலயால நிலையில் வெறுமே மௌனமானான் வெங்கடேஷ்.

"ஓகே! வா ரக்ஷிதா! நான் மாலுக்குப் போயிட்டு அப்புறமா நான் உன்னை வீட்டுல விட்டுடறேன். இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் செஞ்சுக்க. நாளையில இருந்து நான் பைக்கை எடுத்துட்டு வந்துடறேன்" என்றான்.

பேசியபடியே நடந்து செல்லும் நண்பனை வருத்ததோடு பார்த்திருந்தான் வெங்கடேஷ்.

"அவரு போனா என்ன? உங்களுக்கு நான் இருக்கேனே?" என்றபடி வந்தாள் மல்லிகா.

"சொல்லுங்க மல்லிகா" என்றான் வெங்கி மரியாதை கருதி.

"சொல்லுறதுக்கு ஒண்ணுமில்ல! உங்களுக்கு என்னை ஏன் பிடிக்கல்லன்னு புரியல்ல. என்னடா? ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு இப்படி வலிய வலிய வர்ராளேன்னு நீங்க நினைக்கறீங்களோ என்னவோ?" என்றாள்.

"சேசே! அப்படி நினைக்கல்ல! உங்களை நான் ஏன் வெறுக்கணும். இன்னுக்குத்தானே பார்த்தோம்? உங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாத போது, உங்க மேல வெறுப்போ, விருப்பமோ வரதுக்கு வாய்ப்பே இல்லியயே?" என்றான். பைக்கின் கைப்பிடியில் கை வைத்தாள்.

"அப்பப் பழகுனா என்னைப் பிடிக்குமா?" என்றாள்.

"இது என்னங்க தொல்லையா இருக்கு? எனக்கு ஏற்கனவே கேர்ள்ஃபிரெண்டு இருக்காங்க. அவங்களைப் பார்க்கத்தான் நான் போயிட்டு இருக்கேன். போதுமா? வழியை விடுங்க" என்றான்.

மீண்டும் சிரித்தாள். அதே சிரிப்பு.

"உங்களைப் பத்தி எல்லாமே தெரிஞ்சுக்கிட்டு தான் வந்திருக்கேன். உங்க அம்மா அப்பாவொட மூத்த மகன் நீங்க! உங்களுக்கு ஒரு தம்பி இருக்காரு. அவரு இப்பப் படிச்சுக்கிட்டு இருக்காரு. உங்க அப்பா அரசு வேலையில இருக்காரு. அம்மா இல்லத்தரசி. இன்னும் ஒரு வருஷம் கழிச்சுத்தான் உங்களுக்கு வீட்டுல பொண்ணு பார்க்கப் போறாங்க. முறைப்பொண்ணு யாரும் இல்ல! நீங்களும் யாரையும் காதலிக்கல்ல! இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் வந்தேன். பொய் சொல்லித் தப்பிக்கப் பார்க்காதீங்க" என்றாள்.

மீண்டும் முதுகுத்தண்டு ஜிலீரென்றது.

"இவ்வளவு விவரம் சேகரிச்சீங்களே? நான் முன்ன பின்ன தெரியாதவங்களோட வெளிய போக மாட்டேன்னு தெரியாதா?" என்று சொல்லி விட்டு பைக்கை உதைத்துப் பறந்து விட்டான். மீண்டும் யாரோ பின்னாலிருந்து வண்டியை இழுக்க முயற்சி செய்வது போல இருக்க, வனப்பேச்சியை நினைத்துக்கொண்டான் வண்டி சிட்டாகப் பறந்தது.

"எங்கே போயிருவே? இந்த மல்லிகாவைத் தேடி நீ வந்து தானே ஆகணும்" என எக்காளச் சிரிப்புடன் நின்றிருந்தாள் மல்லிகா. அவளது கைகளில் ஏதோ சாம்பல்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 5:

பார்க்கிங் இடத்தில் நடந்த அந்த நிகழ்ச்சி வெங்கியை பயத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. அவன் பயந்தாங்கொள்ளி இல்லை என்றாலும் கடந்த சில நாட்களாக அவனது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் அவனைக் குழப்பின. இதை எப்படி எடுத்துக்கொள்வது? அன்று பாவநாசத்தில் பார்த்த அந்தப் பெண்ணுக்கும் மல்லிகாவுக்கும் தொடர்பு இருக்குமா? ஆனால் அவள் முற்றிலும் வேறு மாதிரி இருந்தாளே? நித்யமல்லியிடம் நெருங்கும் போது ஏற்பட்ட அதே பயம் மல்லிகா நெருங்கும் போதும் ஏற்படுகிறது. ஆனால் பாலா இதனால் பாதிக்கபட்டிருப்பது போலத் தெரியவில்லை. அவள் ஏன் என்னை மட்டும் நெருங்கி வருகிறாள்? இப்படிப் பலப்பல சிந்தனைகளால் அலைக்கழிக்கப்பட்டான்.

பாலாவுக்கு இப்போதெல்லாம் வெங்கியோடு பேச நேரமே கிடைப்பதில்லை. எந்நேரமும் ரக்ஷிதா தான். வெங்கியும் அதை கவனிக்கும் மன நிலையில் இல்லை. இனம் புரியாத பயம் அவ்வப்போது எட்டிப் பார்த்தது.

அந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்தான் வெங்கி. அம்மாவும் அப்பாவும் திருப்பதி போயிருந்தார்கள். இது போன்ற சமயங்களில் பாலா எப்போதும் உடன் இருப்பான். ஆனால் அன்று ரக்ஷிதாவோடு எங்கோ போய் விட்டான். தனியாக இருந்த வெங்கி அம்மா வைத்து விட்டுப் போயிருந்த இட்லியை சாப்பிட்டு விட்டுக் கையில் டீக்கோப்பையோடு டீவி பார்த்தபடி இருந்தான். வாசற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

யாரது? காலிங்க் பெல் இருக்கும் போது அனாவசியமாக கதவை தட்டுறாங்க?" என்று என்ணியவன் போய்க் கதவைத் திறந்தான்.

வயதான பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். கதவைத் திறந்ததும் சுதந்திரமாக உள்ளே வந்து அமர்ந்து கொண்டாள்.

"வாப்பா! இப்படி வந்து உக்காரு" என்றாள் உரிமையாக.

"யார் நீங்க? எங்க வீட்டுக்கு வந்து என்னை உக்காரச் சொல்றீங்க?" என்றான் கோபமாக.

"நான் யாருன்னு உனக்கு நேரம் வரும் போது தெரிய வரும். முதல்ல நீ இதை வாங்கிக்கோ" என்றபடி ஏதோ ஒரு சிறு துணிப் பொட்டலத்தைக் கொடுத்தாள். கறுப்பு நிறத்துணி சிறு பை போல தைக்கப்பட்டியோருந்தது. அதன் வாய் நூலால் கட்டப்பட்டிருந்தது. தானாக நீண்ட கையை கட்டுப்படுத்திக்கொண்டான்.

"முதல்ல நீங்க யரு? உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க! எனக்கு இந்த மாதிரி மந்திரம் தந்திரம் இதெல்லாம் பிடிக்காது" என்றான் கண்டிப்பாக.

"தெரியும்ப்பா! ஆனா உன் விதி வேற மதிரி இருக்கே? உன் மூலமாத்தான் சில விஷயங்கள் நடக்கணும்னு இருக்கேப்பா! அதை மாத்த முடியுமா?" என்றாள் அந்தப் பெண்மணி.

"இதைப் பாருங்கம்மா! உங்களுக்குக் காசு வேணும்னா கேட்டு வாங்கிக்கங்க! அதை விட்டுட்டு இப்படி மந்திரிச்ச தாயத்து தரேன், தகடு தரேன்னு பொய் சொல்லி ஏமாத்தாதீங்க! உங்கள மாதிரி ஆட்களால தான் மூட நம்பிக்கை வளருது" என்றான்.

"எனக்கு எதுக்குப்பா உங்க காசு? நான் நெனச்சா என்னால கோடி கோடியா பணம் பண்ண முடியும். ஆனா என் நோக்கம் அது இல்ல" என்றாள்.

"அதெல்லாம் சும்மா! உங்களை மாதிரி இருக்குறவங்க மக்கள் குடுக்குற பணத்தில தான் வாழுறீங்க. ஆனா பேச்சு மட்டும் வேற மாதிரி இருக்கும்" என்றான் கிண்டலாக.

"உண்மை தான்ப்பா! சில பேரு மக்களை ஏமாத்துறாங்க தான். ஆனா நான் அந்த ரகத்தைச் சேர்ந்தவ இல்ல. என்னை நம்புனா உனக்குத்தான் நல்லது. இந்தா இந்த பொதியை எப்பவும் கூடவே வெச்சுக்கோ. நித்யமல்லியால எந்தப் பிரச்சனையும் வராது" என்றாள் அந்தப் பெண்மணி.

நரம்பில் ஊசி போட்டது போல அதிர்ந்தான் வெங்க்கி. நித்ய மல்லியைப் பற்றி இந்தக் கிழவிக்கு எப்படித் தெரியும்?

"எனக்கு எப்படி அவளைப் பத்தித் தெரியும்னு யோசிக்குறியா? அன்னைக்கு உன்னையும் உன் நண்பனையும் காப்பாத்தினதே நான் தானே?" என்றாள் அதிரடியாக.

என்ன சொல்வது என்றே தெரியாமல் விழித்தான் வெங்க்கி. அவனுக்கு நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

"என்னப்பா நம்ப முடியலையா?" என்றாள்.

மிடறு விழுங்கினான். மனதில் நினைப்பதையெல்லாம் சொல்கிறாளே? பெரும் மாயக்காரியாக இருப்பாளோ? என யோசித்தான்.

"இதைப் பாருப்பா! உனக்கும் உன் நண்பனுக்கு மிகப்பெரிய ஆபத்து வர இருக்கு. அதுல் இருந்து நீங்க தப்பிச்சே ஆகணும். அது தான் எல்லாருக்கும் நல்லது. இல்லேன்னா மிகப்பெரிய அனர்த்தங்கள் விளையும்." என்றாள் அந்தப் பெண்மணி.

"என்ன ஆபத்து?"

"அதைச் சொல்ல எனக்கு அதிகாரம் இல்லையப்பா! ஆனா நீ எப்பவும் ஜாக்கிரதையா இருக்கணும். யாரையும் நம்பிடாதே! இந்தப் பொதியை எப்பவும் கூடவே வெச்சுக்கோ என்ன?" என்றாள் மீண்டும்.

அப்போது காலிங்க் பெல் அடிக்கும் சத்தம் கேட்க வெளிறியது கிழவியின் முகம்.

"முதல்ல இதை வாங்கிக்கிட்டுப் போய்க் கதவைத் திற" என்றாள் அதிகாரமான குரலில். வாங்கக் கை நீட்டிய அதே நேரம் எங்கிருந்தோ வந்த வண்டு அந்தக் கிழவியின் கைகளைக் கொட்ட அந்தப் பொதியை கீழே போட்டு விட்டாள். கீழே விழுந்ததும் அந்தப் பை பச்சை நிறமாக எரிய ஆரம்பித்தது. கால்கள் வேரோடியது போல உணர்ந்தான் வெங்க்கி. காலின் பெல்லோ விடாமல் அலறியது.

சட்டென அந்த நெருப்பைச் சுற்றிக்கொண்டு போய்க் கதவைத் திறந்தான். திறந்தவனுக்கு மூச்சே நின்று விடும் போலாகி விட்டது. அச்சு அசல் உள்ளிருக்கும் கிழவியைப் போலவே ஒருத்தி நின்றிருந்தாள். நாக்கு இழுத்துக்கொண்டு விட்டது வெங்கிக்கு. இதெல்லாம் நிஜமாக நடக்கிறதா? இல்லை கெட்ட கனவு காண்கிறோமா? என்ற சந்தேகம் வந்து விட்டது அவனுக்கு. அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கரும்புகை ஒன்று வெளியேறியது. ஆனால் அது கடக்கும் போது ஜிலீரென உணர்ந்தான்.

"உன் பேரு வெங்கடேசன் தானே?" என்றாள் வெளியில் நின்றிருந்த பெண்மணி.

"ஆ...ஆமா...இல்லை வெங்கடேஷ்"

"பாவநாசத்துல நித்ய மல்லிகிட்ட இருந்து உன்னையும் உன் நண்பனையும் காப்பாத்தினது நான் தான். என் பேரு வள்ளி நாச்சியார். நாச்சியாரம்மான்னு கூப்பிடுவாங்க. உள்ளே வரலாமா தம்பி?" என்றாள்.

தலை சுற்றியது வெங்கிக்கு. இப்போது தான் ஒரு கிழவி வந்து நான் தான் உன்னைக் காப்பாற்றினேன் என்கிறாள். அவளைப் போலவே இன்னொருத்தி வந்து நான் தான் காப்பாற்றினேன் என்கிறாள். இதில் யார் சொல்வது உண்மை?" என யோசித்தான்.

"தம்பி! உள்ளே போனா உங்க குழப்பம் தீர்ந்துடும். வீட்டுக்குள்ள போங்க" என்றாள் அந்தப் பெண்மணி.

அது தான் சரி! இருவரையும் நேருக்கு நேராக நிற்க வைத்து யார் அசல்? யார் போலி? என முடிவு செய்து விடுவோம் என எண்ணிக் கொண்டு நாச்சியாரம்மாவை உள்ளே அழைத்துச் சென்றான்.

ஹால் காலியாக இருந்தது.

"பாட்டி! எங்கே போயிட்டீங்க?" என்று குரல் கொடுத்தான். குரலே எழும்பவில்லை.

"அவ போயிட்டாப்பா! நீ எனக்காக கதவைத் திறக்கும் போதே அவ போயிட்டா" என்றாள் நாச்சியாரம்மா.

தலையைக் கையில் பிடித்தபடி அமர்ந்து விட்டான் வெங்க்கி.

"அம்மா! என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியல்ல! யாரை நம்புறது? யாரை நம்பக் கூடாது ஒண்ணும் புரியல்ல. நீங்க யாரு? உங்களுக்கு என்னை எப்படித் தெரியும்? கொஞ்சம் முன்னாடி வந்தாங்களே? அவங்க யாரு? அவங்க ஏன் உங்களை மாதிரியே இருக்காங்க? ரெண்டு பேரும் ரெட்டைப் பிறவிங்களா?" என்றான்.

"நீ யாரையும் நம்பாதே வெங்கடேசா! உன்னோட உள்ளுணர்வை நம்பு! கடவுளை நம்பு!" என்றாள் அந்த அம்மாள்.

"நான் என்ன தப்பு செஞ்சேன்? சாதாரணமாப் போயிட்டிருந்த என் வாழ்க்கையில ஏன் இத்தனை குழப்பம்? என்னைச் சுத்தி என்ன நடக்குது? ஒண்ணுமே புரியல்லம்மா" என்றான் மெல்லிய குரலில்.

"தெரியும்பா! உன்னோட குழப்பத்தை என்னால புரிஞ்சிக்க முடியுது. நித்ய மல்லி உன்னைக் கண்டுக்கிட்டா. இனிமே விட மாட்டா! அதனால ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் நீ" என்றாள் நாச்சியாரம்மா.

"யாரும்மா நித்ய மல்லி?"

"நல்ல கேள்வி தான்! ஆனா அதுக்கு பதில் நான் சொல்லக் கூடாது. நான் சொல்ற இடத்துக்குப் போ! அங்க போனா உனக்கு நித்ய மல்லி யாரு? அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அவ உன்னைத் தேடுறா? இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும். அது தெரிஞ்ச பிறகு நீ யாரு பக்கம்ன்றதை முடிவு செஞ்சிக்கோ. ஆனா அது வரைக்கும் ரொம்ப எச்சரிக்கைய இருக்கணும். யாரு என்ன பொருள் குடுத்தாலும் வாங்காதே" என்றாள்.

மூச்சு முட்டி வாந்தி வரும் போல ஆகிவிட்டது வெங்கிக்கு.

"நான் இப்ப என்ன செய்யணும்?" என்றான் கஷ்டப்பட்டு.

"முதல்ல நீ களக்காடு மலை மேல இருக்குற பெருமாள் கோயிலுக்குப் போ! அங்க உனக்கு அடுத்து என்னன்னு தெரிய வரும். தனியாப் போகாதே! உன் நண்பன் பாலகிருஷ்ணனையும் கூட்டிக்கிட்டுப் போ" என்றாள் வயதான அம்மாள்.

"இல்லம்மா! நான் தனியாத்தான் போவேன். அங்க எனக்கு என்ன நடக்கும்னு தெரியாது. என்ன ஆபத்து வேணும்னாலும் வரலாம். அவனைக் கூட்டிக்கிட்டுப் ப்போய் அவன் வாழ்க்கையையும் நான் பாழடிக்கவா செய்வேன்? மாட்டேன்மா! அவனாவது நிம்மதியா இருக்கட்டும்" என்றான்.

"நீ ரொம்ப நல்லவன் தம்பி! எப்போதும் வனப் பேச்சியை நினைச்சுக்கோ. உனக்கு எந்த ஆபத்தும் வராது" என்றாள் மென்மையாக.

"அப்ப நான் தனியாப் போகலாம் தானே?"

"இல்லப்பா! தெரிஞ்சோ தெரியாமலோ நீ உன் நண்பனை நித்ய மல்லி கண்ணுல காட்டிட்ட. எப்படின்னாலும் அவனுக்கும் ஆபத்து இருக்கு. அதனால எப்போதும் அவன் உன் கூட வரது நல்லது."

"உம்! சரி ! நாளைக்கே ஆபீசுக்கு ஒரு மாசம் லீவு போட்டுட்டு என்னோட குழப்பத்துக்கு விடை தேடப் போறேன்." என்றான் வெங்கி முடிவாக.

"ரொம்ப நல்லதுப்பா! சிவனை சித்தத்தில் வை! வனப்பேச்சியை மனதில் வை! மனதைத் தடுமாற விடாதே! எல்லாமே நல்லபடியா நடக்கும்" என்று சொல்லிவிட்டு அந்த அம்மாள் போய் விட்டாள்.

இனி என்ன செய்ய? எப்படி களக்காடு மலை மேல் இருக்கும் பெருமாள் கோயிலைக் கண்டு பிடிப்பது? பாலாவை என்ன சொல்லி அழைப்பது? அம்மா அப்பாவிடம் என்ன சொல்வது? என யோசித்தபடி அமர்ந்திருந்தான் வெங்கி.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 5:

வெங்கியின் குழப்பம் அதிகமானதே தவிர குறையவில்லை. பாலாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என நினைத்தான். ஆனால் அவனைப் பிடிக்கவே முடியவில்லை. எப்போதும் அந்தப் பெண் கூடவே இருந்தாள். அன்று இரவு எப்படியாவது அவனிடம் பேசி விட வேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டு பதினொரு மணிக்கு ஃபோன் செய்தான் வெங்கி.

"என்னடா?" தூக்கக் கலக்கத்தில் பாலாவின் குரல் கேட்டது.

"பாலா! நீ செய்யுறது உனக்கே நல்லா இருக்காடா? எப்பப் பார்த்தாலும் அந்தப் பொண்ணு கூடவே சுத்திக்கிட்டு இருக்கியே? நீயும் நானும் பேசியே நிறைய நாளாச்சு தெரியுமா?" என்றான் வெங்க்கி.

ஓவென அழுது விட்டான் பாலா.

"நானே சொல்லணும்னு நெனச்சேன் மச்சான். அவ தொல்லை தாங்க முடியல்ல. என்னால அவளை விடவும் முடியல்ல. அவளை விடணும்னு நெனச்சாலே எனக்கு ஏதாவது ஆகுது. என்னைச் சுத்தி என்னென்னவோ நடக்குதுடா மச்சான். " என்றான். அவன் குரலில் பயம் கலக்கம் இரண்டும் இருந்தது.

அப்போது தான் முதல் முதலாக பாலாவின் காதலியும் ஒரு வேளை நித்யமல்லியின் ஆளாக இருக்கலாமோ என்ற சந்தேகம் உதித்தது வெங்கிக்கு. இதை நிதானமாக அணுக வேண்டும். அவசரப்பட்டால் எங்கள் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். முதலில் பாலாவை அந்தப் பெண்ணின் பிடியிருந்து மீட்க வேண்டும். சரியான நேரத்தில் அந்த வயதான அம்மாள் வந்து எச்சரித்தாள். ஆனால் அவள் நல்லதுக்குச் சொன்னாளா? இல்லை அவளும் சதிகாரியா?" எண்ணங்கள் அலைக்கழித்தன.

"என்னடா ஒண்ணுமே பேச மாட்டேங்குற?" என்றான் பாலா.

"மச்சான்! ஃபோன்ல எதுவும் பேச வேண்டாம். வர ஞாயிற்றுக் கிழமை நேரா சிவன் கோயிலுக்கு வந்துரு. அங்க வெச்சு எல்லாத்தையும் விவரமா பேசுவோம். அது வரையிலும் எதுவ்மே நடக்காத மாதிரி இருடா!"

"நமக்கு என்ன ஆச்சு மச்சான்?"

"பயப்படாத ஒண்ணும் இல்ல! பார்த்துக்கலாம். தெய்வம் இருக்கு" என்றான்.

"நீ பேசுறதே எனக்கு பயமா இருக்குடா! நாளைக்கு ஆபீஸ்ல அவளைத் திரும்பப் பார்க்கணும்னு நெனச்சாலே பதறுது எனக்கு." என்றான் பாலா.

"நீ ஒண்ணு செய்யி பாலா! நாளைக்கு முழுக்க என் கூடவே இரு. அவ எங்கே கூப்பிட்டாலும் போகாதே! நான் பார்த்துக்கறேன்" என நண்பனுக்கு தைரியம் சொல்லி விட்டு ஃபோனை வைத்தான் வெங்கி.

மறு நாள் வழக்கம் போல அலுவலகம் இயங்கியது. பாலாவோடு பசை போட்டு ஒட்டிக்கொண்டாற் போல இருந்தாள் ரக்ஷிதா. மல்லிகா வழக்கம் போல வந்தாள். இப்போது பாலாவும் வெங்கியும் சேர்ந்து இருக்கவே எரிச்சல் பட்டாள் ரக்ஷிதா.

"என்ன? எப்பப் பார்த்தாலும் உங்க ஃபிரெண்டு கூடவே இருக்கீங்க? என்னை மறந்து போயிட்டீங்களா?" என்றாள் பாலாவிடம் கொஞ்சலாக. அதற்கு வெங்கி தான் பதில் சொன்னான்.

"நீங்க வரதுக்கு முன்னாடி நாங்க இப்படித்தான் இருந்தோம். அது எப்பவுமே மாறாது" என்றான்.

அவனை லட்சியம் செய்து பாலாவின் பக்கம் திரும்பினாள்.

"பாலா! வர ஞயிற்றுக்கிழமை நீங்க ஃப்ரீயா?" என்றாள்.

தூக்கி வாரிப்போட நிமிர்ந்தான் வெங்கி. பாலா திரு திருவென விழித்தன்.

"ஏன் கேக்கற?"

"அன்னைக்கு எங்க அஸோசியேஷன்ல நிறைய புரோகிராம் இருக்கு. ஃபன் கேம்ஸ், டிரஷர் ஹண்ட் இப்படி. டிரஷர் ஹண்டுல ஜெயிச்சவங்களுக்கு ரெண்டு டிக்கெட் ஆஸ்திரேலியா போறதுக்கு தராங்க. தங்குறது, சாப்பாடு எல்லாமே அவங்களே தராங்க. வரீங்களா பாலா? நாம கலந்துக்கிட்ட நம்மால நிச்சயமா ஜெயிக்க முடியும்" என்றாள்.

கண்களில் பேராசை வந்தது பாலாவுக்கு. ஏதோ சொல்ல வந்த நண்பனை அடக்கினான் வெங்கி.

"இல்லை ரக்ஷிதா! அன்னைக்கு நானும் அவனும் சிவன் கோயிலுக்குப் போறோம். அன்னைக்கு அதை நாங்க கிளீன் செஞ்சு குடுக்குறதா முதல்லயே சொல்லிட்டோம்" என்றான் வெங்கி.

முறைத்துப் பார்த்தாள் அவனை.

"என்ன? கோயில்னா என்னால வர முடியாதுன்னா நெனச்சே?" என்ற குரல் காதில் ஒலிக்கத் திடுக்கிட்டான் வெங்கி. ரக்ஷிதாவையே கூர்ந்து பார்த்தான். அவள் உதடுகள் அசையக் கூட இல்லை.

"வெங்கி! என்ன ஆச்சு? உனக்கு ஏன் இப்படி வேர்க்குது? உடம்பு சரியில்லையாடா?" என்று பதறினான் பாலா.

அப்போது தான் தன்னையே பார்த்துக்கொண்டான் வெங்கி. நீளமாக வந்த மூச்சுகள். காதில் சற்றே வலி அதோடு முகம் முழுக்க வியர்வை. மனதில் வனப்பேச்சியை தியானித்தான். சட்டென தெளிவு பிறந்தது.

"பாலா! ஞாயிற்றுக்கிழமை காலையில நான் வந்து உன்னை வீட்டுல பிக்கப் பண்ணிக்கறேன்." என்றான்.

"ஏன் பாலா? உங்களுக்கு சொந்தமா விருப்பு வெறுப்பே இல்லையா? எப்பவுமே வெங்கி சொல்றதைத்தான் செய்வீங்களோ? இப்படியும் ஒரு ஆம்பிளையா?" என்றாள் ரக்ஷிதா கேவலமாக.

"அதானே? வெங்கி எப்பப் பார்த்தாலும் நீயே தான் என்னை டாமினேட் பண்ற! சிவன் கோயிலுக்கு அடுத்த வாரம் கூடப் போகலாம். ஆனா ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் கிடக்குமா? நான் ரக்ஷிதா கூடத்தான் போவேன்" என்றான் பாலா அழுத்தமாக.

கண்களேயே ஜாடை காட்ட முயன்றான் வெங்கி. யாரோ ஒரு பெண் காதருகில் கேலியாக சிரிப்பது போலத் தோன்ற நிமிர்ந்தான். ரக்ஷிதா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். முதுகுத் தண்டில் ஜிலீரென்றது. பாலாவைப் பார்த்தான். அவனும் வெங்கியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் கண்கள் வேறு எதையோ சொல்ல முயன்றன.

"வனப்பேச்சி அம்மா! இங்க என்ன நடக்குது? ஒண்ணும் புரியல! உன் காட்டுல வந்து நாங்க ஏதாவது தப்பு செஞ்சிருந்தா எங்களை மன்னிச்சிரும்மா" என்று மனதார வேண்டிக் கொண்டான் வெங்கி. சட்டென ஏதோ நறுமணம் வருவது போலிருக்க ரக்ஷிதா போய் விட்டாள்.

அன்று முழுவதும் கொஞ்சம் உற்சாகமாக வேலை செய்தான். அதோடு மேனேஜரிடம் போய் தனக்கு ஒரு மாதம் விடுப்பு வேண்டும் எனக் கேட்டான். அந்த ஒரு மாதமும் சம்பளம் கிடைக்காது என உறுதியாகச் சொல்லி விட்டார் அவர். ஒப்புக்கொண்டு கடிதத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வெளியே வந்தான். மல்லிகா வழியை மறித்தாற் போல நின்றிருந்தாள்.

"என்ன? காட்டுக்குப் போறதுன்னு முடிவு செஞ்சாச்சா?" என்றாள்.

"என்ன? என்ன?"

"அதான்! லீவு கேட்டிருக்கியே? ஒரு வேளை காடுகளுக்குப் போய்ப் பார்க்குற ஆசை வந்திருச்சோன்னு கேட்டேன். நானும் வரலாமா?" என்றாள் மெல்லிய சிரிப்போடு. அந்தச் சிரிப்பே பயமூட்டியது அவனுக்கு.

"நான் புதுசா பிசினஸ் ஆரம்பிக்கப் போறேன். அதுக்குத்தான் லீவு" என்றான்.

இப்போது ரக்ஷிதாவும் சேர்ந்து கொண்டாள்.

"என்ன சொல்றாரு ஹீரோ?" என்றாள் கிண்டலாக.

"எதுக்கு இப்படி என் பின்னால வந்து தொல்லை பண்றீங்க? உங்களுக்கு வேற வேலையே இல்லியா? நான் எங்கே போனா உங்களுக்கென்ன?" என்றான் வெங்கி கோபமாக.

"தப்பு வெங்கி! எங்க மேல கோபப்பட்டா உங்களுக்குத்தான் ஆபத்து. நீங்க ஏன் எங்களை பகையாளி மாதிரியே பார்க்கறீங்க? நாங்க உங்க தோழிகள். உங்களுக்கு நன்மை தான் செய்வோம்னு ஏன் நம்ப மாட்டேங்கறீங்க?" என்றாள் மல்லிகா.

அவளது பேச்சு வெங்கியையே மயக்கி விடும் போலிருந்தது.

"நான் உங்களை எதுவும் சொல்லலியே?" என்று சொல்லி விட்டு நகரப் போனான்.

"எங்களை நம்புங்க வெங்கி! நாங்களும் கூட வரோம். இல்லைன்னா நாச்சியாரம்மாவோட மாயத்தை உங்களால ஜெயிக்கவே முடியாது" என்றாள் மல்லிகா.

தலை குழம்பி கிறுகிறுத்தது.

"யார் சொல்வதை நம்புவது? மல்லிகா நல்லவள் தானோ? அந்தக் கிழவி தான் கொடுமைக்காரியோ? அந்தக் கிழவி சொற்படி ஏன் செயல்பட வேண்டும்? இவர்கள் சொல்வதைக் கேட்டால் என்ன?" என எண்ணங்கள் ஓடின.

மனதுக்குள் வனப்பேச்சியை நினைத்துக்கொண்டான்.

"தாயே! நீ தெய்வம்! எப்போதும் நல்லதை மட்டுமே செய்வாய்! நான் யாரை நம்ப வேண்டும்? யார் சொன்னபடி செய்ய வேண்டும்? வழி காட்டு அம்மா" எனு உருகி வேண்டினான்.

மல்லிகாவின் முகம் பயங்கரமாக மாறியது. ரக்ஷிதா அங்கிருந்து சென்றே விட்டாள்.

"ஆபத்தை விலைக்கு வாங்கியிருக்க வெங்கி! நல்லா யோசிச்சு எதையும் செய்யி! அவசரப்படாதே" என்று சொல்லி விட்டு மல்லிகாவும் போய் விட்டாள். மாலை பாலாவை ரக்ஷிதாவின் பிடியிருந்து மீட்டு பக்கத்தில் இருந்த கோயிலுக்கு கூட்டிச் சென்றான். அவனுக்கென்னவோ அது தான் பாதுகாப்பான இடம் எனத் தோன்றியது. அது பெருமாள் கோயில். பெரிய பெரிய பிராகாரங்கள் இருக்கவே வசதியாக அமர்ந்து பேசினார்கள்.

பாலா வெங்கியின் கைகளைப் ப்டித்து அழுதே விட்டான்.

"வெங்கி! ரக்ஷிதா என்னை ரொம்ப பாதிச்சுட்டாடா! அவ சொன்னபடி செய்யலைன்னா உடனே என்னைப் பார்த்து விழிக்குறா அந்த நிமிசமே என் தலைக்குள்ள பல சத்தம் கேக்குது, வலிக்குது. கண்ணே திறக்க முடியாதபடி ஆயிருது. இதெல்லாம் என்னடா?" என்றான்.

"இதுக்கெல்லாம் தான் நாம விடை கண்டுபிடிக்கணும் பாலா. அதுக்குத்தான் உன்னைப் பார்த்துப் பேசணும்னு சொன்னேன்" என்றான் வெங்கி நண்பனின் கைகளைத் தட்டியபடி.

"நமக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்கணும்? நாம என்ன தப்பு செஞ்சோம்?" என்றான் பாலா பரிதாபமாக.

"எனக்கும் அதிகமா எதுவும் தெரியாது பாலா. ஆனா நாம ஏதோ ஒரு சிக்கல்ல மாட்டியிருக்கோம்னு மட்டும் புரியுது. ரெண்டு நாளைக்கு முன்னால நான் உனக்கு ஃபோன் பண்ணினேனே நினவிருக்கா?"

"எப்படிடா மறக்க முடியும்? உன் ஃபோன் வந்ததும் தானே என் தலைவலியும் உடம்பு வலியும் கொஞ்சம் குறைஞ்சது?"

பேசிய நண்பனைப் பார்த்து விழித்தான் வெங்கி. அப்படியானால் இவன் ரக்ஷிதாவோடு இல்லையா?

"நீ ஞாயிற்றுக்கிழமை ரக்ஷிதாவோட இல்லையா?"

"இல்லடா! அவ என்னை லீவு நாள்ல பார்க்கக் கூட மாட்டா. ஆனா நான் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது. ஏன்னா தலைவலியும், உடம்பு வலியும் அப்படி இருக்கும்" என்றான் பாவமாக.

தன்னால் தன் நண்பனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு வருத்தமாக இருந்தது வெங்கிக்கு.

"பாலா! எனக்கும் சில அனுபவங்கள் ஏற்பட்டது" என்று சொல்லி ஞாயிற்றுக்கிழமை நாச்சியாரம்மாள் என்ற பெண்மணி வந்ததையும் அவளைப் போலவே உருவம் திரும்பி வந்ததையும் கூறினான். வெங்கி சொல்லி முடித்ததும் அமைதியாக இருந்தது அந்த இடம்.

"வெங்கி! எனக்கு ரொம்ப பயமா இருக்குடா! நம்ம உயிருக்கு ஆபத்தா? பேசாம வேலைய ராஜினாமா பண்ணிட்டு எங்க வீட்டுக்குப் போயிரலாமா?" என்றான் நடுங்கியபடி.

"பயந்து பயந்து நம்மால எதுவும் சாதிக்க முடியாதுடா! துணிஞ்சு எறங்கிடணும். நான் ஏற்கனவே ஒரு மாசம் லீவு போட்டுட்டேன். நீயும் போடு. நாம களக்காடு பெருமாள் கோயிலைத் தேடுவோம். " என்றான்.

"வேற வழியே இல்லையே? அப்படித்தான் செய்யணும். எங்க வீட்டுல கேட்டா ஆபீசுல இருந்து ஒரு மாசம் என்னை டெல்லிக்கு அனுப்பியிருக்காங்கன்னு சொல்லிருவேன்" என்றான் பாலா.

"என்ன தம்பிகளா? களக்காடு கோயிலைப் பத்திப் பேசிண்டு இருந்தேள் போல இருக்கே?" என்று கேட்டபடி நடுத்தர வயது குடுமி வைத்த ஐயர் வந்தார். அவரது நெற்றியில் பட்டையாக நாமம்.

"நாங்க பேசினதைக் கேட்டீங்களா சார்?" என்றான் பாலா.

"இல்லேப்பா! களக்காடு பெருமாள் கோயில்ங்குற வார்த்தை மட்டும் தான் கேட்டது."

"உங்களுக்கு அந்தக் கோயிலைத் தெரியுமா சார்?" என்றான் வெங்கி.

"அப்படி ஒரு கோயில் இருக்குன்னு தெரியும். ஆனா களக்காடு மலையில அது எங்கே இருக்குன்னு தெரியாது. இன்னைக்கு இந்தக் கோயிலுக்குப் போன்னு பெருமாள் உத்தரவு குடுத்தார், நான் வந்தேன். பார்த்தா நீங்க பேசிண்டு இருக்கேள்" என்றார்.

"சாமி! எங்களுக்கு அந்தக் கோயிலைக் கண்டு பிடிக்கணும்னு உத்தரவு வந்திருக்கு சாமி" என்றான் வெங்கி.

"ரொம்ப நல்லதுப்பா! அந்தக் கோயிலைக் கண்டு பிடிக்கறதுக்கு முன்னால பெருமாளோட தங்கையான வனதுர்க்கையை அதாவது வனப்பேச்சியைசேவிக்கணுமே? அது பத்தி ஏதாவது தெரியுமா உங்களுக்கு?" என்றார் அந்த ஐயர்.

திகைத்துப் போய் அவரையே பார்த்தார்கள் வெங்கியும் பாலாவும்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 6.

பேசிய அந்த மனிதரை உற்றுப் பார்த்தான் வெங்கி.

"என்ன ப்படிப் பாக்கறேள்?" என்றார்.

“எனக்கு என்ன சொல்றது? எப்படிச் சொல்றதுன்னே தெரியல்ல! வனப்பேச்சியைக் கும்பிடச் சொல்லி ஒரு வயசான அம்மா சொன்னாங்க. பார்த்தா நீங்களும் அதையே தான் சொல்றீங்க? உங்களுக்கு அந்த அம்மாவைத் தெரியுமா?” என்றான்.

“தெரியாதுப்பா! ஆனா தீய சக்தியை அழிக்க, நல்லது நடக்க வனப்பேச்சியைத்தானே எல்லாரும் கும்பிடுவாங்க? அதான் சொன்னேன். எனக்கு ஏதோ சில நிமித்தங்கள் தெரியறது. அது படி பார்த்தா உங்களைச் சுத்தி இப்ப தீய சக்திகள் இருக்குன்னு நெனக்கறேன். ஆனா அதையும் மீறி நீங்க கோயிலுக்கு வந்திருக்கேள்னா தெய்வ சக்தியோயோட துணையும் இருக்கு” என்றார் அமைதியாக.

அவர் நின்றிருந்த பாணி, அவரது நெற்றி நாமம் இவற்றையெல்லாம் பார்த்தால் நம்பிக்கை வந்தது.

“சாமி! உங்களுக்கு இப்ப நேரம் இருக்கா? நிறையப் பேசணும்” என்றான் பாலா.

அவனை முறைத்தான் வெங்கி. நண்பனை தனியாக அழைத்துப் போய்ப் பேசினான் பாலா.

“என்னைத் தப்பா நினைக்காதே வெங்கி. நாம பயங்கர குழப்பத்துல இருக்கோம். இவர் நல்லவர் மாதிரி தான் தெரியுது. அதுவும் போக நிமித்தம் அப்படீன்னு ஏதோ சொல்றாரு. நம்மைச் சுத்தி தீய சக்தி இருக்கலாம்ன்றாரு. இவர் கிட்ட எல்லாத்தையும் சொல்லி உதவி கேட்டா என்ன?” என்றான்.

வெங்கிக்கு யோசனையாக இருந்தது. யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்றே தெரியவில்லை. இந்த ஐயர் ஒரு வேளை நல்லவராக இல்லையென்றால் என்ன செய்ய? நித்யமல்லியின் ஆளாகக் கூட இருக்கலாம். ஒரு வேளை நாச்சியாரம்மா நமக்கு உதவி செய்ய அனுப்பிய நபரா இவர்? எப்படித் தெரிந்து கொள்வது? இவரிடம் விஷயத்தைச் சொல்லிப் பார்ப்போம். என்ன பதில் வருகிறது என்பதைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம். எனத் தீர்மானித்துக்கொண்டான்.

இவர்கள் பேசிய இடைவெளியில் அந்த மனிதர் கோயில் பிரசாதம் ஆளுக்கொரு கிண்ணம் வாங்கி வந்தார். மணக்க மணக்க புளி சாதமும் இன்னொரு கிண்ணத்தில் தயிர் சாதமும் இருந்தன. நல்ல இடம் தேடி அமர்ந்தார்கள். வாயில் பிரசாதத்தைப் போட்டபடியே பேசினான் வெங்கி.

“சார்! நாங்க சொல்லப் போறதை நீங்க நம்புவீங்களா? இல்லியான்னு தெரியல்ல! ஆனா சொல்லப் பொறது அத்தனையும் உண்மை தான் சார்” என்றான்.

“நான் ஏன் நம்பாம இருக்கப் போறேன்? இந்த உலகத்துல எதுவும் நடக்கலாம். சொல்லுங்கோ” என்றார்.

பாவநாசக் காட்டில் நடந்த்து முதல் ரக்ஷிதா வரை சொல்லி முடித்தான். அந்த மனிதர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சற்று நேரம் கண்களை மூடி ஏதோ முணுமுணுத்தார்.

“தம்பி! நீங்க உண்மையிலேயே பெரிய ஆபத்துல தான் இருக்கேள்” என்றார்.

“நாங்களே பயந்து போய் இருக்கோம். நீங்க வேற ஏன் சார்?” என்றான் வெங்கி.

“இல்லப்பா! உங்களை பயமுறுத்தணும்னு சொல்லல்ல. ஆனா கடவுளோட கணக்குகள் எனக்கு ரொம்பவே ஆச்சரியமாவும் இருக்கு.” என்றார்.

“என்ன சாமி சொல்றீங்க?” என்றான் பாலா.

“முதல்ல என்னை சாமின்னு கூப்பிடாதீங்க. சார் சொல்லுங்க இல்லேன்னா அண்ணேன்னு சொல்லுங்க. சாமி வேண்டாம்” என்றார்.

“சரி சார்! சொல்லுங்க” என்றான் வெங்கி.

“என்னோட குரு அப்பவே பாவநாசக் கட்டுக்குள்ள ஒரு கன்னி சக்தி இருக்கு! அது தப்பிக்க நேரம் பார்த்துக்கிட்டு இருக்குன்னு சொன்னாரு. நீங்க சொல்றதைப் பார்த்தா அது தான் நித்ய மல்லி போல இருக்கே?” என்றார்.

வாயைப் பிளந்து விட்டனர் இரு நண்பர்களும்.

“சார்...?”

“முதல்ல இருந்து சொல்றேன் அப்பத்தான் உங்களுக்குப் புரியும். என் பேரு கரியமாணிக்கம். சொந்த ஊரு திருநெல்வேலி தான். நான் ஜோசியம் படிக்கறதுக்காக நெல்லையில இருக்குற மிகப்பெரிய ஜோசியர், சித்தர் ஜம்புசாமி கிட்டப் போய்ச் சேர்ந்தேன். அவர் தான் எனக்கு நிமித்தங்கள் பத்தி, மனுஷாளோட சக்கரங்களைப் பத்தி எல்லாமே சொல்லிக் கொடுத்தார். என்னோட பயிற்சி முடியற சமயத்துல, கிட்டத்தட்ட 5 வருசம் இருக்கும். அப்ப மாணிக்கம்! நீ இந்த ஜென்மத்துல மிகப்பெரிய நல்ல காரியம் ஒண்ணு செய்யப் போற! அது தானா உன்னைத் தேடி வரும்னார்”

“உண்மையா சார்?”

“ஆமா தம்பி! கேளுங்க! நானும் அது என்ன காரியனு கேட்டேன். அதைச் சொல்ல எனக்கு அதிகாரம் இல்லைடா! ஆனா உரிய நேரத்துல நீ ரெண்டு இளம் காளைகளை பார்ப்பே! அவங்க மூலமா உன்னோட பணி என்னன்னு உனக்குத் தெரிய வரும்னாரு. அதுக்குப்பிறகு அவர் சமாதியாயிட்டாரு. ஆனாலும் அப்பப்ப என் உள் மனசுல சில கட்டளைகள் இடுவாரு. அதுல ஒண்ணு தான் நான் இன்னைக்கு இந்தக் கோயிலுக்கு வந்தது.” என்றார்.

வியப்புக்கு மேல் வியப்பு இருவருக்கும்.

“அப்படீன்னா சார்! எங்களுக்கும் முக்கியமான பணி இருக்குன்னு சொல்லுங்க” என்றான் வெங்கி.

“நிச்சயம் இருக்குப்பா! அதை நான் சொல்லல்ல. என் குரு தான் சொல்றார். அந்தப் பெரியம்மா உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்றார் கரிய மாணிக்கம்.

“அப்ப அவங்க தான் நல்லவங்களா சார்? நித்யமல்லி கெட்ட பொண்ணா?” என்றான் பாலா.

“இதுல ரக்ஷிதாவும், மல்லிகாவும் வேற நடுவுல வந்து பயமுறுத்துறாங்க. தலையே வெடிச்சிரும் போல இருக்கு சார்! கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன். நாங்க இப்ப என்ன செய்யணும்?” என்றான் வெங்கி.

“உங்களுக்கான கர்மாவை அதாவது பணியை நான் சொல்லக் கூடாதுப்பா. ஆனா வழிப்படுத்தலாம். இப்போதைக்கு நித்யமல்லி நல்ல சக்தியா? இல்லை அந்தப் பெரியம்மா நல்ல சக்தியாங்குற கேள்வியை விட்டிருவோம் என்ன? முதல்ல நீங்க யாரு? ஏன் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டீங்க? அதை நாம தெரிஞ்சுக்கணும். அப்பத்தான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்” என்றார்.

“பெரிய விஷயமா சார் இது? அன்னைக்கு எதைச்சைய நாங்க அங்க போனோம். அவ்ள தான். எங்களுக்குப் பதிலா யாரு போயிருந்தாலும் அவங்க மாட்டியிருப்பாங்க. எங்க விதி நாங்க மாட்டுனோம்” என்றான் வெங்கி எரிச்சலாக.

அவனைப் பார்த்து சிரித்தார் கரியமாணிக்கம்.

“அப்படி இல்லப்பா! அன்னைக்கு நீங்க அங்க போயிருக்காட்டாக் கூட இன்னொரு நாள், உங்களை அங்க போக வெச்சிருக்கும். அது தான் கர்மா. இந்தப் பணியை நீங்க தான் முடிக்கணும்னு இருக்கும் போது வேற யாரும் போக மாட்டாங்க.”

நம்ப முடியாமல் சிரித்தான் வெங்கி.

“தம்பி! நீ நம்பல்லேன்னு தெரியுது. அன்னைக்கு உங்க கூட மத்த ரெண்டு பேர் வந்தாங்க. ஆனா அவங்க கண்ணுக்கு எதுவும் தெரியல்ல. அவங்க அந்த பங்களாவுக்குள்ள வரவும் இல்லே! அது ஏன்? யோசிச்சியா?”

“ஹூம்! அவங்க புத்திசாலிங்க! தப்பிச்சுட்டாங்க. நான் மாட்டிக்கேட்டேன்,” என்றான் வெங்கி.

“எல்லாமே நம்ம புத்திசாலித்தனத்தால தான் நடக்குதுன்னு நினைக்காதேப்பா. நம்ம கர்மா சில சமயம் நம்மை வழி நடத்தும். அது தான் அன்னைக்கு நடந்திருக்கு. உங்க பணி என்னன்னு இன்னமும் தெளிவாத் தெரியல்ல தான். ஆனாலும் கண்டு பிடிக்க முடியாமப் போயிராது. இவ்வளவுக்கும் வழி காட்டுன தெய்வம் இதுக்கு வழி காட்டாமலா போயிரும்?” என்றார்.

அவரது பேச்சில் சற்றே நம்பிக்கையும் உற்சாகமும் பிறந்தது இளைஞர்கள் இருவருக்கும்.

“நீங்க சொல்றதும் சரி தான் சார்! ஆனா எங்களுக்கு இடப்பட்ட பணி என்னன்னு முதல்ல கண்டு பிடிக்கணும்னா அதுக்கு என்ன வழி?” என்றான் வெங்கி.

“அது தான் எனக்கும் சரியாப் புரியல்ல! பெருமாளும் வனப்பேச்சியும் கட்டாயம் வழி காட்டுவா”

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு காகிதம் பறந்து காற்றில் வந்தது. அது கரியமணிக்கத்தின் வேட்டியில் ஒட்டிக்கொண்டு அப்படியே நின்றது. என்னடா இது? என்று சொல்லியபடியே அதை எடுத்துப்பார்த்தவரின் கண்கள் விரிந்தன.

“என்ன சார்?” என்றனர் நண்பர்கள் இருவரும்.

“நீங்களே பாருங்கோ” எனச் சொல்லிக் கொடுத்தார்.

அது ஒரு நோட்டீஸ்.

“வனப்பேச்சியம்மன் திருவிழா! நெல்லைச் சீமையில் பாவநாசத்தில் குடி கொண்டிருக்கும் வனப்பேச்சியம்மன் கோயிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து கட்டப்பட்ட கோயில். 12.12.2021 அன்று குடமுழுக்கு விழா. அனைவரும் வருக! அன்னையின் அருள் பெறுக! என எழுதப்பட்டிருந்தது.

“சார்”

“ஆமா தம்பிங்களா! அந்த அம்மனே வழி கட்டியிருக்கா. நாளைக்குத்தான் குடமுழுக்கு. நாம கட்டாயம் போகணும். அங்க போனாத்தான் தெரியும் அம்பாள் நமக்கு என்ன உத்தரவு கொடுக்குறான்னு” என்றார்.

நடப்பது எல்லாமே பிரமிப்பாகவும் மாயமாகவும் இருந்தது வெங்கிக்கு. இதெல்லாம் சாத்தியம் தானா? டிஜிட்டல் யுகத்தில் கடவுளால் இது போன்ற அற்புதங்களை நடத்திக் காட்ட முடியுமா? இல்லை எல்லாமே தற்செயலாக நடந்து நான் தான் அதற்குக் காரணம் கற்பிக்கிறேனா? இந்த ஐயரை எவ்வளவு தூரம் நம்பலாம்? எங்களை ஏமாற்றி காசுப் பறிக்கும் நாடகமாக ஏன் இது இருக்கக் கூடாது? எல்லாமே திட்டமிட்ட நாடகமாக இருந்தால் என்ன செய்ய?

உள்ளுக்குள் யோசனை ஓடியபடியே இருந்தது. பாலாவுக்கு இது போன்ற எண்ணங்களே இல்லை போல. அவனும் கரியமாணிக்கமும் மும்முரமாக பேசி கொண்டிருந்தனர். எளிய நல்ல மனது இருந்தால் எல்லாமே சாத்தியம் தான் போலும் என எண்ணிக் கொண்டான் வெங்கி.

“சார் சொல்றது தான் சரியான வழி! நீ என்ன சொல்ற வெங்கி?” என்றான் பாலா.

எதையுமே காதில் வாங்காத வெங்கி என்ன? என்ன? என அசடு வழிந்தான்.

“என்னப்பா நீ? கவனம் எங்கே இருக்கு? பாலா பேசினதை நீ கேக்கவே இல்லியா?” என்றார் கரியமாணிக்கம் சற்றே கோபமான குரலில்.

“வந்து நான் ஏதோ யோசனையில இருந்துட்டேன்...என்ன பாலா சொன்ன?”

“வெங்கி! இந்த கவனக் குறைவு இருக்கவே கூடாதுப்பா. ஏன்னா நாம இப்ப இறங்கப் போறது ஆபத்தான வேலை. புரிஞ்சுதா இல்லியா?”

கொஞ்சம் கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டான்.

“புரிஞ்சது சார்”

“நாளைக்கு நாம அந்தக் கோயிலுக்குப் போகணும். காலையில கிளம்பி வந்துடுங்கோ! ஏதாவது தடங்கல் வரலாம்னு நினைக்கிறேன். ஆனா அதை முறியடிக்குறது உங்க மனோதிடத்துல தான் இருக்கு.” என்றார்.

“என்ன சார் பயமுறுத்துறீங்க? என்ன மாதிரியான தடங்கல் வரலாம்னு எதிர்பார்க்கறீங்க?” என்றான் வெங்கி.

“தெரியல்ல! நாம அடுத்த அடி எடுத்து வெச்சுட்டோம்னு நித்யமல்லிக்குத் தெரியாம இருக்காது. அவளுக்கு என்ன தேவைன்னு நமக்கு இன்னமும் தெரியல்ல. நாம கோயிலுக்குப் போறது தான் அவளுக்கும் நல்லதுன்னா கண்டிப்பா தடங்கல் பண்ண மாட்டா. ஆனா அப்படி இல்லைன்னு வெச்சுக்குங்கோ ஏதையாவது செஞ்சு நம்மை அங்க போக விடாம செய்யப் பார்ப்பா!” என்றார்.

வெங்கிக்கு வயிற்றில் அமிலம் பாய்ந்தாற் போலிருந்தது. பாலாவின் முகமும் வெளிறிக் கிடந்தது.

“அதைப் பத்தி தான் பேசிண்டு இருந்தோம்! நீயும் பாலாவும் இன்னைக்கு ஒரே இடத்துல படுத்துக்குங்கோ! நித்யமல்லி வேலையைக் காட்டினா ஒருத்தருக்கு ரெண்டு பேர் துணை தானே?” என்றார் கரியமாணிக்கம்.

“சார்! அந்தப் பொண்ணு எங்களை கொன்னு போட்டிருச்சுன்னா?” என்றான் பாலா நடுங்கியபடி.

சற்று நேரம் யோசித்தார் அந்த ஐயர்.

“ஊம்! எனக்குத் தெரிஞ்சு அப்படி செய்யாது. உங்களைச் சாகடிக்கணும்னு அவ நெனச்சிருந்தா அந்த பங்களாவுல வெச்சே செஞ்சிருக்கலாமே? ஏன் செய்யல்ல?”

“ஏன் செய்யல்ல?” என்றான் வெங்கி மீண்டும்.

“இது எல்லாமே என்னோட ஊகம் தான் தம்பிங்களா!”

“பரவாயில்லை சொல்லுங்க”

“உங்க மூலமா ஏதோ ஒரு காரியத்தை சாதிச்சுக்கப் பார்க்குறா அந்த நித்யமல்லி. அதனால தான் உங்களை விட்டு வெச்சிருக்கான்னு நினைக்கிறேன். அவ யாரு? அவ ஏன் இப்படி ஆனா? என்ன காரியத்தை சாதிக்க நினைக்குறா? இதென்னால் தெரிஞ்சா நல்லா இருக்கும்.” என்றார் கரியமாணிக்கம்.

“அப்ப? அந்தக் கரியம் முடிஞ்சிருச்சுன்னா எங்க கதி என்ன?” என்றான் பாலா. அவன் குரலில் ஏகத்துக்கும் கலவரம்.

“பாருப்பா பாலா. கண்டதையும் நெனச்சுக் குழப்பிக்காதே! நமக்கு தெய்வ அருள் இருக்கு. நாளைக்கு வனப்பேச்சியம்மன் கோயிலுக்குப் போனா எல்லாமே தெரிஞ்சு போயிரும்னு நம்புறேன்.” என்றார்.

அத்தோடு பேச்சு முடிந்து விட்டது என்பதன் அடையாளமாக எழுந்து நின்றார். மறுநாள் அதிகாலை மூவரும் குடமுழுக்கு நடக்கும் கோயிலுக்கு நேரே சென்று விட வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். மூவரும் விடை பெற்றுப் புறப்பட்டனர். “நன்னா நினைவு வெச்சுக்குங்கோ! ராத்திரி ரெண்டு பேரும் ஒண்ணாவே இருங்கோ! என்ன ஆனாலும் சரி” என்று எச்சரித்து விட்டுத் தன் வழியில் சென்றார் ஐயர்.

அன்று மாலை வரை பாலா வெங்கியோடே தான் இருந்தான். கைக்குக் கிடைத்ததை எல்லாம் போட்டு கூட்டாஞ்சோறு போல சமைத்து சாப்பிட்டார்கள். ருசியாகவே இருந்தது. மல்லிகாவிடமிருந்தும், ரக்ஷிதாவிடமிருந்தும் ஃபோனே வரவில்லை.

“ஒரு நாளைக்கு 25 தடவை கால் பண்ணுவா! இன்னைக்கு ஏன் பண்ணவே இல்ல?” என்று ஆச்சரியப்பட்டான் பாலா.

“பண்ணாதவரைக்கும் நல்லதுன்னு நெனச்சுக்கோ.”

“அந்த நித்ய மல்லிக்கும் மல்லிகாவுக்கும் என்ன சம்பந்தம்? ரக்ஷிதா யாரு? எல்லாமே ஒரே குழப்பமா இருக்கே வெங்கி?” என்றான் பாலா.

சட்டென பொறி தட்டியது வெங்கிக்கு.

“டேய்! நீ கேக்குறதுலயே விடை இருக்குடா! மல்லிகா ஏன் நித்யமல்லியா இருக்கக் கூடாது? பேரை மாத்திக் கூடச் சொல்லலாம் இல்ல?” என்றான் வெங்கி.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தடேரென ஒரு பெரும் சத்தம் கேட்க தூக்கிவாரிப் போட்டது இருவருக்கும்.

“என்னடா சத்தம்?” என்றான் பாலா. அவன் குரலில் பயம் நன்றாகத் தெரிந்தது. வெங்கிக்கும் பயம் தான். ஆனால் தானும் பயந்தது தெரிந்து விட்டால் பாலாவைத் தேற்றவே முடியாது என எண்ணிக் கொண்டான்.

“பக்கத்துல கட்டிடம் கட்டுறாங்க இல்ல? அதுல ஏதாவது கட்டை விழுந்திருக்கும். அவ்வளவு தான் பாலா. பயப்படாதே” என்றான்.

கொஞ்சம் பயம் தெளிந்தாலும் சுற்றுமுற்றும் பார்த்தான். எதுவும் இல்லை.

“உம்! நான் என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்? ஆங்க்! மல்லிகா ஏன் நித்ய மல்லியா இருக்கக் கூடாது?” என்றான் மீண்டும்.

“சரி நீ சொன்னபடியே வெச்சுப்போம். ஆனா ரக்ஷிதா? அவ யாரு? நாம பங்களாவுல் வெச்சு ஒரு பொண்ணைத்தானே பார்த்தோம்?” என்றான் பாலா.

அவன் சொல்வதும் சரியெனப் பட்டது வெங்கிக்கு.

“நேரமாயிடிச்சு! பேசாம படுப்போம். காலையில சீக்கிரம் எழுந்து கோயிலுக்குப் போவோம். அங்க நம்ம கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்” என்றான் வெங்கி.

“எனக்கு ரொம்ப பயமா இருக்குடா” என்றான் பாலா.

“இப்போதைக்கு நமக்கு அவங்களால ஆபத்து இல்ல. அதனால கவலைப் படாம தூங்கு” என்று சொல்லி விட்டு அறையின் விளக்கை அணைத்தான் வெங்கி.

மிகச் சரியாக அந்த நேரம் காலிங் பெல் சத்தம் கேட்க முகம் வெளிறியது இரு நண்பர்களுக்கும்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 7:

இரவு நேரம் மணி ஒன்பது தான் ஆகியிருந்தது ஆனாலும் காலிங்க் பெல் சத்தம் கேட்டதும் இரு நண்பர்களும் பயந்து தான் போனார்கள்.

“யாருடா இந்த நேரத்துல?” என்றான் பாலா.

“தெரியலையே?”

“கதவைத் திறக்காதே! யாருமே இல்லைன்னு போயிருவாங்க” என்றான் பாலா.

அப்போது ஃபோன் வர எடுத்துப் பார்த்தான். கரிய மாணிக்கம். அதே நேரம் பாலாவின் ஃபோனுக்கும் கால் வந்தது. பார்த்தால் அதுவும் கரிய மாணிக்கம் என்றது.

“என்னடா இது? ஒரே ஆளு எப்படி ஒரே நேரத்துல ரெண்டு ஃபோன்ல கூப்பிட முடியும்?”

“எல்லாமே புதிரா இருக்கு! தனித்தனியாப் பேசுவோம். அவங்க பேசுறதை வெச்சு யாரு ஒரிஜினல்னு கண்டு பிடிப்போம்” என்றான் வெங்கி.

“சரி! ஆனா கதவை மட்டும் திறக்காதே” என்றான் பாலா. தலையாட்டினான் வெங்கி. காலிக் பெல் சத்தம் நின்று போயிருந்தது.

“ஹலோ?” என்றான் வெங்கி.

“தம்பி! நான் கரிய மாணிக்கம் பேசுறேன்பா! நான் சாயங்காலமே கோயிலுக்கு வந்துட்டேன். இங்க எனக்கு ஒரு அபூர்வமான மனிதர் அறிமுகம் கெடச்சது. அவர் தான் பல விஷயங்களைப் புரிய வெச்சார்.”

“அதுக்கா ஃபோன் செஞ்சீங்க?” என்றான் வெங்கி. குரலில் எரிச்சல்.

“அதுக்கு மட்டும் இல்லேப்பா! இன்னக்கு ராத்திரி உங்களுக்கு ரொம்ப சோதனையான ராத்திரியாம். நித்ய மல்லி எந்த வடிவத்துலயும் உங்களைத் தேடி வரலாமாம். ஏன் என் மாதிரியே கூட வரலாமாம். அதனால யார் வந்தாலும் என்ன பேசினாலும் கதவை மட்டும் திறக்க வேண்டாம்னு சாமி சொல்லச் சொன்னாரு. அதுக்குத்தான் ஃபோன் பண்ணினேன்” என்றார்.

துணுக்குற்றது மனம்.

“அப்படியானால் இவர் தான் உண்மையான கரியமாணிக்கமாக இருக்க வேண்டும். பாலாவிடம் பேசுவது யார்? கிச்சனிலிருந்து ஹாலுக்கு ஓடி வந்தன். கையில் ஃபோனோடு கதவைத் திறக்க முயன்று கொண்டிருந்தான் பாலா. ஓடிச் சென்று நண்பனைக் கீழே தள்ளினான். அந்த நேரத்தில் வேறு எதுவும் தோன்றவில்லை வெங்கிக்கு.

"என்னடா?"

"முதல்ல ஃபோனைக் கட் பண்ணு. விவரமாச் சொல்றேன்" என்றான் வெங்கி.

வெங்கியின் உடல் நடுங்கியபடியே இருந்தது. அப்படி தன் நண்பனைப் பார்த்ததே இல்லையென்பதால் கவலை வந்தது பாலாவுக்கு. ஃபோனைக் கட் செய்து விட்டு சோஃபாவில் அமர வைத்தான்.

"என்னடா? என்ன ஆச்சு? ஃபோன்ல யாரு பேசுனாங்க? எதுக்கு என்னைத் தள்ளி விட்ட?" என்றான் பாலா.

"முதல்ல நான் கேக்குறதுக்கு நீ பதில் சொல்லு! உன் கூட ஃபோன்ல யாரு பேசுனாங்க? என்ன சொன்னாங்க?" என்றான் வெங்கி.

"கரியமாணிக்கம் தான் பேசினாரு. நான் தான் வெளிய நிக்கிறேன். கதவைத் திற அப்படீன்னாரு. அதான் திறக்க டிரை பண்ணினேன்." என்றான் பாலா. அவனுக்கு எதுவுமே புரியவில்லை.

"பாலா! நாம ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்டா! அந்த நித்யமல்லி லேசுப்பட்டவ இல்ல."

"கொஞ்சம் புரியும்படியேத்தான் பேசேன் வெங்கி"

"எங்கிட்டப் பேசுனது தன் உண்மையான கரியமாணிக்கம் பாலா! உங்கிட்டப் பேசுனது நித்யமல்லின்னு நினைக்கிறேன்."

பாலாவின் உடல் நடுங்கியது.

"எப்படி நீ உங்கிட்டப் பேசுனது தான் உண்மையான கரியமாணிக்கம்னு சொல்ற? ஏன் அது நித்யமல்லியா இருக்கக் கூடாது?"

"மடத்தனமாப் பேசாதே பாலா! நல்லா யோசி! அவரு கதவைத் திறக்காதே பாதுகாப்பா இருந்துக்கோங்கன்னு சொன்னாரு. அதோட நாம போட்ட புரோகிராம் அவருக்குத் தெரிஞ்சிருந்தது. இப்பக் கூட அவரு கோயில்ல இருந்து தான் பேசினாரு." என்றான்.

மீண்டும் உடல் நடுங்கியது பாலாவுக்கு.

"அப்ப? எங்கிட்டப் பேசுனது நித்யமல்லியா? ரொம்ப நம்பிக்கையாப் பேசுனாங்கடா."

"என்ன தான் சொன்னா?"

"உனக்கும் எனக்கும் ஆபத்து வர இருக்குன்னும், அதைத் தடுக்கணும்னா மந்திரிச்ச கயிறு ஒண்ணை நம்ம கையில கட்டணும்னும் சொன்னா. இப்பக் கையோட கொண்டு வந்திருக்குறதாகவும் உடனே கதவைத் திறன்னு சொன்னாடா."

"உடனே நீயும் கதவைத் திறக்கப் போனியாக்கும்?"

"கரியமாணிக்கம் மாதிரிப் பேசுனா எனக்கு எப்படிடா தெரியும்?" என்றான்.

"பாலா! நாளைக் காலையில நமக்கு ஏதோ ரொம்ப முக்கியமான விஷயம் தெரிய வரும்னு நினைக்கிறேன். அதைத் தெரிஞ்சுக்காமத் தடுக்கத்தான் நித்ய மல்லி இவ்வளாவு சதி செய்யுறா. நாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்டா!"

"உங்கிட்ட கரியமாணிக்கம் என்ன தான் சொன்னாரு?"

"அவரு அப்பவே கோயிலுக்குப் போயிட்டாராம். அங்க ஒரு அபூர்வ மனிதரை சந்திச்சாராம். அவர் தான் ஃபோன் செய்யச் சொல்லி சொல்லியிருக்காரு. அதனால தான் நாம தப்பிச்சோம்."

"என்னன்னமோ நடக்குது இல்ல?"

"உம்! எனக்கு வனப்பேச்சியம்மன் மேல நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம்." என்றான் வெங்கி.

அன்றைய இரவு இருவருக்கும் கண்களை மூடவே முடியவில்லை. வனப்பேச்சியை தியானித்தபடி படுத்திருந்தார்கள். அதிகாலை மூன்று மணி வாக்கில் கண் அயர்ந்த போது ஏதேதோ குழப்பமான கனவுகள் வந்தன வெங்கிக்கு. யாரோ ஒரு பெண் அவனை தரதரவென இழுத்தபடி எங்கோ போய்க்கொண்டே இருந்தாள். அவளுடன் இருந்த பெண், முதலிலேயே நான் சொன்னபடி செய்திருந்தா
ல் உனக்கு இந்த நிலை வருமா? எனக் கேட்டுக்கொண்டு வந்தாள். அவன் உடலெல்லாம் ஒரே ரத்தம்.

திடுக்கிட்டுக் கண் விழித்தான் வெங்கி. மணி காலை 7 என்றது ஃபோன்.

"பாலா! எழுந்திரு! விடிஞ்சிருச்சு! இப்பக் கிளம்புனாத்தான் வனப்பேச்சியம்மன் கோயிலுக்குப் போறதுக்கு சரியா இருக்கும்." என்றான். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான் பாலா. இருவரும் குளித்து காப்பி குடுத்து விட்டுக் கிளம்பினார்கள். எந்த நேரமும் நித்யமல்லி எந்த உருவத்திலும் வரலாம் என உள்ளூர பயம் தான் வெங்கிக்கு. அப்படி எதுவும் நடக்கவில்லை.

கதவைத் திறந்து கொண்டு வந்தார்கள். எதிர் அப்பார்ட்மெண்ட் மனிதர் இவர்களை ஒரு விதமாகப் பார்த்தார்.

"குட் மார்னிங்க் சார்!"

"குட் மார்னிங்க் குட் மார்னிங்க்! என்ன சார் அப்படி செஞ்சுட்டீங்க? பெண்களை இப்படி கேவலப்படுத்தக் கூடாது சார்" என்றார்.

விழித்தனர் இருவரும்.

"நாங்க என்ன சார் செஞ்சோம்? இப்பத்தானே வீட்டுக்கு வெளியவே வரோம்?" என்றான் வெங்கி.

"உங்க லவ்வர்ஸ்! ரெண்டு பொண்ணுங்க ரொம்ப நேரம் காலிங்க் பெல் அடிச்சுக்கிட்டே இருந்தாங்க. என்ன தான் கோவம்னாலும் கதவைக் கூடத் திறக்காம இருக்கக் கூடாது. ராத்திரி நேரத்துல இப்படி செய்யலாமா?" என்றார்.

பயத்தில் வியர்த்து விட்டது நண்பர்கள் இருவருக்கும். வந்தது மல்லிகாவும், ரக்ஷிதாவுமாகத்தான் இருக்க வேண்டும். என்ன சொல்லி இருக்கிறார்களோ தெரியவில்லையே? என நினைத்துக்கொண்டான் வெங்கி.

"வந்து...சார்..." இழுத்தான் பாலா.

"எனக்குப் புரியுது நீங்க ஏன் திறக்கல்லேன்னு. தப்பு எதுவும் நடந்துடக் கூடாதுன்னு எச்சரிக்கையா இருந்திருக்கீங்க? அப்படித்தானே?"

"ஆமா ஆமா சார்! அப்படித்தான்" என்றான் வெங்கி.

"வெரி குட்! அப்படித்தான் இருக்கணும். அவங்களும் அதைப் புரிஞ்சுக்கிட்டாங்க. உங்க கிட்டக் கொடுக்கச் சொல்லி ஒரு பையைக் கொடுத்துட்டுப் போனாங்க. இருங்க கொண்டு வரேன்." என்று சொல்லி விட்டு உள்ளே போனார்.

"பாலா! எக்காரணம் கொண்டும் அந்தப் பையை நாம வாங்கிக்கக் கூடாது. அவ்வளவு தான். நான் பேசிக்கறேன். என்ன?" என்றான். தலையை வெறுமே ஆட்டினான் பாலா. அவனுக்கி பயம் இன்னமும் போகவில்லை.

சிறிய பிளாஸ்டிக் பவுச் போன்ற ஒன்றை எடுத்து வந்தார் எதிர் வீட்டு மனிதர். அதன் உள்ளே தாயத்து போல ஏதோ காணப்பட்டது. தலைக்கு ரத்தம் பாய்வது போலிருக்க கண்கள் இருட்டியது. சமாளித்துக்கொண்டான் வெங்கி.

"இது ஏதோ மந்திர தாயத்தாம். இதைக் கட்டிக்கிட்டா உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதாம். இப்பவே கட்டிக்குங்கப்பா!" என்றார் பவுச்சை நீட்டியபடி.

"சரி சார்" என்றான் வெங்கி அதை வாங்காமல்.

"என்னப்பா? வாங்கவே மாட்டேங்குற? வாங்கிக் கட்டிக்குங்க! நான் வேற அந்தப் பொண்ணுங்களுக்கு உங்களை கட்ட வெக்கிறேன்னு வாக்குக் கொடுத்திருக்கேன்." என்றார் பிடிவாதமாக.

"நீங்க ஏன் சார் வாக்குக் குடுத்தீங்க?" என்றான் வெங்கி.

"அழகான பொண்ணுங்களைப் பார்த்தா போதுமே?" என்றான் வாய்க்குள்ளே பாலா.

"நீங்க என்னப்பா? இந்தக் காலத்துல இவ்வளவு ஆசையும் பாசமும் வெச்சுஇருக்குற காதலி கிடைக்கவா செய்யிறாங்க? அவங்க என்ன தங்கம் வைரமா கேட்டாங்க? ஒரு கயிறு? அதைக் கட்ட முடியாதா உங்களால?" என்றார் அந்த மனிதர்.

விட்டால் அவரே கட்டி விட்டு விடுவார் போல இருந்தது.

" சார்! நாங்க இப்ப கோயிலுக்குப் போறோம். போயிட்டு வந்து கட்டிக்கறோம். நீங்களே வேணும்னாலும் கட்டி விடுங்க என்ன?" என்றான் வெங்கி சாமர்த்தியமாக.

"உம் சரி! அப்ப இதை வாங்கி உங்க வீட்டுல வெச்சுக்குங்க" என்றார்.

ஆத்திரத்தில் அந்த மனிதரை அடித்தால் என்ன? என்று தோன்றியதை சமாளித்துக்கொண்டான் வெங்கி.

"சார்! நீங்க ரொம்ப பக்தி உள்ளவரு. இதை உங்க வீட்டு பூஜை அறையில வெச்சு எங்களுக்கு எடுத்து உங்க கையால கட்டி விடுங்க. அப்பத்தான் நாங்க நல்லா இருப்போம்" என்றான் வெங்கி.

"அடேடே! இதுவும் நல்ல யோசனை தான். சரி அப்படியே செய்யுறேன். நீங்க கோயிலுக்குப் போயிட்டு வந்து கூப்பிடுங்க" என்று சொல்லி விட்டுக் கதவை சாத்திக்கொண்டு போய் விட்டார்.

"வெங்கி! இது என்னடா? அந்தப் பொண்ணுங்க நம்மை விட மாட்டாங்க போல இருக்கே? இவரு பாட்டுக்கு அந்த தாயத்தை பூஜை அறையில வெச்சு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடிச்குன்னா? அந்தப் பாவம் நமக்குத்தானே?" என்றான்.

"நீ சொல்றது கரெக்டு தான் பாலா. ஆனா இதை விட்டா நமக்கு வேற வழி என்ன இருக்கு? அந்த ஆளு ரொம்பவே பக்தியா சாமி கும்பிடுவாருடா. அவரு வீட்டுல சிவ லிங்கம்லாம் இருக்கு. அதனால ஒண்ணும் ஆகாதுன்னு நம்புவோம்" என்றான் வெங்கி.

இருவரும் பைக்கை நெருங்கி உதைத்துக் கிளம்பினார்கள்.
 
Status
Not open for further replies.

Latest Episodes

New Threads

Top Bottom