Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

Status
Not open for further replies.

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 8:

கோயிலுக்கு நல்லபடியாகவே போய்ச் சேர்ந்தார்கள். ஒரே கூட்டம். குட முழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே பந்தல்கள் போட்டு பலர் அதில் அமர்ந்திருந்தனர். பக்கத்தில் இருந்த டீக்கடைகளில் டீ, காப்பி வியாபாரம் வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தது. மதிய உணவுக்கான பந்தல்கள் அங்காங்கே காணப்பட்டன. வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் போலத் தெரிந்தது. அந்த இடமே தெய்வீகமான அதிர்வுகளோடு காணப்பட்டது.

"இந்தக் கூட்டத்துல கரிய மாணிக்கத்தை எங்கே தேடுறது?' என்றான் பாலா.

மிகச் சரியாக அந்த நேரம் ஃபோன் வரவே எடுத்தான்.

"தம்பி! நாங்க உங்களைப் பார்த்துட்டோம். நீங்க அப்படியே இடது பக்கம் திரும்பி ஒரு மண்டபம் இருக்கு இல்ல? அங்க வாங்க" என்றார் கரிய மாணிக்கம்.

"அதோ அங்க இருக்காரு" என்றான் பாலாவும்.

இருவரும் சென்றனர். அங்கே நீண்ட ஜடாமுடியோடு ஒரு மனிதர் இவர்களை விழித்துப் பார்த்தபடி இருந்தார். கண்கள் இரண்டும் செக்கச் செவேலெனத் தெரிந்தன. நெற்றியில் பட்டையாகக் குங்குமம். அதுவும் ரத்தச் சிவப்பு நிறத்தில். ஒரே ஒரு வேட்டி மட்டும் அணிந்திருந்தார். அதுவும் காவி நிறம் தான். மேலே ஏதோ ஒரு துண்டைப் போர்த்தியிருந்தார்.

"சார்! இவரு ஏன் எங்களை இப்படிப் பார்க்குறாரு?' என்றான் வெங்கி.

"என்ன தம்பி நீங்க? இவரு தான் சாமிக்கண்ணு சித்தர். உங்களை இங்கே வர வெச்சதே இவரு தான்." என்றார்.

இந்த மனிதரை எவ்வளவு தூரம் நம்ப முடியும்? இவரும் ஏன் நித்யமல்லியின் ஆளாக இருக்கக் கூடாது? என எண்ணினான்.

"கும்பிடுறேன் சாமி" என்றான் பாலா.

"நல்லா இருப்பா தம்பி! உன் மேலயும் நித்யமல்லியோட ஆதிக்கம் இருக்குப்பா" என்றார்.

"சாமி! நாங்க வந்து...." என்று இழுத்தான் வெங்கி.

"தம்பி! இது உங்களுக்கு ரொம்ப சோதனையான கால கட்டம். உங்க முன்னால ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு ரொம்ப சுலபம் ஆனா தவறு. இன்னொண்ணு ரொம்ப ரொம்பக் கடினம் ஆனா அது தான் நல்லது" என்றார்.

அவரது குரல் ஏனோ வெங்கியைக் கவர்ந்தது.

"சாமி! எங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னே தெரியல்ல சாமி! கொஞ்ச நாள் முன்னால வரையில நாங்க சாதாரண இளைஞர்கள். எங்களுக்கு காதல், கல்யாணம் இதெல்லாம் தான் கனவா இருந்தது. ஆனா ஒரே நாள்ல எங்க வாழ்க்கையே மாறிடிச்சு சாமி! உயிர் வாழுறதே கனவா இருக்கு" என்றான் வெங்கி.

"எல்லாத்துக்கும் விளக்கம் மே நான் சொல்றேன்ப்பா! ஆனா முதல்ல நீங்க வனப்பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தரிசியுங்க. அப்ப எனக்கு சில நிமித்தங்கள் கிடைக்கும். அதை வெச்சு உன் பாதை எது? நீ எந்தப் பாதையில போவேன்னு நான் முடிவு செஞ்சிருவேன். பிறகு தான் நான் பேசுறதும் பேசாததும்." என்றார்.

"நீங்க பேசுறது எதுவுமே எனக்குப் புரியல்ல சாமி" என்றான் வெங்கி.

"அப்படித்தான் இருக்கும். கரிய மாணிக்கம். நீ இவங்களைக் கூட்டிக்கிட்டு கோயிலுக்குள்ள போ! முக்கியமா கும்பாஷிகேத்தின் போது மந்திர நீர் தெளிப்பாங்க. அது இவங்க மேல படுறா மாதிரி நிக்க வையி" என்றார்.

"நீங்க வரலியா சாமி?" என்றான் பாலா.

"கட்டாயம் வருவேன். முதல்ல நீங்க போங்க" என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

மூவரும் கூட்டத்தில் கலந்தனர். கோயில் சிறியது தான் ஆனால் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. விலக்கிக் கொண்டு நடந்தனர். கர்ப்பகிரகம் எதிரே வந்த போது வெங்கியின் உடல் குலுங்கியது. குமட்டல் வேறு எடுத்தது.

"என்னப்பா?"

"என்னன்னு தெரியல்ல! என்னவோ பண்ணுது. வாந்தி வரா மாதிரி இருக்கு" என்றான்.

கவலையுடன் அவனைப் பார்த்தார் கரியமாணிக்கம்.

"தயவு செஞ்சு கொஞ்சம் பொறுத்துக்கோப்பா! உன்னால எவ்வளவு சமாளிக்க முடியுமோ சமாளி." என்றார்.

பாவம் வெங்கி அவன் தலை சுற்றியது. இருந்தும் பாலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கர்ப்பகிரகத்துக்கு நேரே வந்தான். அம்மனின் நெற்றியில் இருந்த பொட்டு ஒளி வீசியது. அடி வயிற்றில் என்னென்னவோ உணர்வுகள். வலி வேறு.

"வெங்கி! கண்ணை நல்லா மூடிக்கிட்டு என் கையைப் பிடிச்சுக்கோ. வனப்பேச்சி இது வரைக்கும் நமக்கு நல்லது தான் செஞ்சிருக்கா. மனசார கும்பிட்டுக்கோடா! நம்ம கஷ்டமெல்லாம் பறந்து போயிரும்" என்றான் பாலா.

நண்பனது குரல் மிகவும் ஆறுதலாக இருக்க கண்களை இறுக மூடினான். அவனால் பிரார்த்தனை செய்யவே முடியவில்லை. தேவையில்லாத பல உணர்வுகள், காட்சிகள் வந்து போயின. மனதை ஒருமுகப்படுத்தினான். தலை விண் விண் எனத் தெறித்தது. தலையே இரண்டாகப் பிளந்து விடும் போன்ற வலி. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை வெங்கிக்கு.

கஷ்டப்பட்டு மீண்டும் மனதை ஒரு முகப்படுத்தினான்.

"தாயே! வனப்பேச்சியம்மா! நான் என்ன தவறு செஞ்சிருந்தாலும் என்னை மன்னிச்சுக் காப்பாத்தும்மா! என்னைச் சுற்றி ஏதோ தீய சக்திகள் இருக்கா மாதிரி தெரியுது. ஆனா நான் உங்கிட்ட வந்துட்டேன். என்னை நல்ல வழியில நடத்த வேண்டியது உன் பொறுப்பும்மா" என்றான்.

சில நொடிகள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஒரே இருட்டு. பிறகு மெல்ல மெல்ல வெளிச்சம் வந்தது. பட்டுப் போன்ற இதமளிக்கும் தங்க வெளிச்சம். மெல்லக் கண்களைப் பிரித்தான்.

"இப்ப எப்படி இருக்கு வெங்கி?"

பாலாவின் குரல் தான் நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது அவனை.

"என்ன? எனக்கு என்ன ஆச்சு?" என்றான் வெங்கி. அவன் குரலில் கவலை.

"இப்ப உனக்கு தலை சுத்தல், வாந்தி ஏதாவது இருக்கா?" என்றார் கரியமாணிக்கம்.

அப்போது தான் உணர்ந்தான். உடலில் எங்கும் வலியே இல்லை. இன்னும் சொல்லப் போனால் புத்துணர்ச்சியாக இருந்தது. புதிய வலுவும் தெம்பும் பிறந்தது.

"இல்ல சார்! எதுவும் இல்ல! சொல்லப் போனா ரொம்ப தெம்பா இருக்கு" என்றான்.

முகம் மலர்ந்தது கரியமாணிக்கத்துக்கு.

"முதல்ல வா! வெளிய கும்பாபிஷேகம் நடக்குது. அந்த மந்திர நீரை இப்ப தெளிப்பாங்க. அது உன்மேல பட்டாகணும்" என்று அவனை அழைத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தார் கரியமாணிக்கம்.

அவரை விட வேகமாக நடந்தான் வெங்கி. பின் தொடர்ந்தான் பாலா. அவர்கள் வெளியே செல்லவும் மந்திர நீர் தெளிக்கப்படவும் சரியாக இருந்தது. அந்த நீர்த்துளிகள் மேலே விழ விழ மனம் நிம்மதியானது. அம்மனின் அருள் நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.

"இது போதும்! வாங்க! உங்க கூடப் பேசணும்" என்ற குரலில் திரும்பினான்.

சாமிக்கண்ணு சித்தர் சிரித்தபடி நின்றிருந்தார். மூவரும் அவரைத் தொடர்ந்தனர். இப்போது நேரே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றான். அது ஒரு அரச மரம். குளுமையான நிழலை பரப்பியபடி நின்றிருந்தது. அதன் கீழே வட்டமான திட்டு போல அமைக்கப்பட்டிருந்தது. யாரோ ஒரு புண்ணியவான் நிழலுக்கு ஒதுங்கும் மக்கள் அமர வசதியாகக் கட்டி வைத்திருந்தார். கூட்டம் அத்தனையும் கோயிலுக்குள்ளேயும் வெளியேயும் இருக்க அங்கே ஆள் நடமாட்டமே இல்லை.

மூவரும் அமர்ந்தனர்.

"தம்பி! நீ நல்ல பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கே! ஆனா அதுல பயணம் செய்யுறது அத்தனை சுலபம் இல்ல! நிறைய சோதனைகளை சந்திக்க வேண்டி வரலாம். தெரியும் இல்ல?" என்றார் சித்தர் சாமிக்கண்ணு வெங்கியை நோக்கி.

"நீங்க பேசுறது எனக்கு இன்னமும் புரியல்ல. நான் நல்ல பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கேன்னா, தவறான பாதையை நான் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருந்ததா? அது என்ன நல்ல பாதை? தவறான பாதை? என்னன்னே தெரியாம நான் எப்படி நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்தேன்னு சொல்றீங்க?" என்று அடுக்கினான் வெங்கி.

"சபாஷ் தம்பி! இதைத்தான் நான் உங்கிட்ட எதிர்பார்த்தேன். எல்லாமே உங்களுக்கு விளக்கமா சொல்ல நான் கடமைப்பட்டிருக்கேன். கரியமாணிக்கம் நீங்க நித்யமல்லியை விடுவிச்சதா சொன்னான். அதை உங்க வாயால கேக்க நான் விரும்புறேன். சொல்றீங்களா?" என்றார்.

வெங்கி கொஞ்சமும் பாலா கொஞ்சமுமாக சொல்லி முடித்தனர். அவர்கள் பேசப் பேசவே "தாயே! வனப்பேச்சி" என்று அவ்வப்போது சொல்லி வந்தார் சாமிக்கண்ணு சித்தர்.

"இப்ப சொல்லுங்க சாமி! நாங்க என்ன தப்பு செஞ்சோம்?" என்றான் பாலா.

சற்று நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தார் சித்தர். காலை வித்தியாசமாக சம்மணமிட்டு கைகளை உயரத்தூக்கி வணங்கினார்.

"தம்பிங்களா! நீங்க இப்ப வரைக்கும் உயிரோட இருக்கீங்கன்னா அதுக்கு வனப்பேச்சி தான் காரணம். அது மட்டுமில்ல, நித்யமல்லி ஆதித்தனை அடையாளம் கண்டுக்கிட்டா, அதனால அவ வேலை முடியுற வரைக்கும் அவ உங்களை விட்டு வெச்சிருப்பா." என்றார்.

"நாங்க ஆதித்தன்னு யாரையும் கூட்டிக்கிட்டுப் போகலையே சாமி? பாலாவும் நானும் மட்டும் தான் போனோம். மைக்கேலும், இன்னொருத்தனும் வரல்ல" என்றான்.

"உம்! சரி! உன் கண்ணுக்குத் தட்டுப்பட்ட குடிசை புகை இதெல்லாம் மைக்கேலுக்கும் தெரியல்ல, பாலாவுக்கும் தெரியல்ல இல்லியா?"

"ஆமா"

"அதைப் பத்தி நீ யோசிச்சிருக்கியா?"

"என் கண்ணு ரொம்ப கூர்மையானது. அவ்வளவு தானே?"

"சரி! அப்படியே வெச்சுப்போம். ஆனா நீங்க தேக்கு மர எல்லையைக் கடந்ததும் அந்த பங்களாவும், மதில் சுவரும் பாலா கண்ணுக்கும் தெரிஞ்சது இல்ல?"

"என்ன சாமி நீங்க? அங்க இருக்குறது பக்கத்துல வந்து கூடத் தெரியல்லேன்னா எப்படி?" என்றான் பாலா.

"நீ நினைக்குறது தப்பு பாலா. தேக்கு மர எல்லையோட வெளிப்பக்கம் இருந்து நீ பார்த்திருந்தா அது உனக்குத் தெரிஞ்சிருக்காது."

"என்ன சாமி சொல்றீங்க?"

"ஆதித்தன் பாவநாச மலைக்காட்டுக்குள்ள நுழைஞ்சதுமே நித்யமல்லி அவனை கட்டுக்குள்ள கொண்டு வந்துட்டாப்பா! அதனால தான் அவன் கண்ணுக்கு குடிசை, அதுல வர புகை எல்லாமே தெரிஞ்சது. அவனும் விதி வசத்தால தேக்கு எல்லையைத் தாண்டிப் போயிட்டான். நல்ல நேரத்துல அம்மா வந்து உன்னைக் காப்பாத்தினாங்க" என்றார் சித்தர்.

"நீங்க சொல்றது எங்களுக்கு தலையும் புரியல்ல! வாலும் புரியல்ல! ஆதித்தன் யாரு? அவனை ஏன் நித்யமல்லி கட்டுக்குள்ள கொண்டு வரணும்? அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? விளக்கமா சொல்லுங்க சாமி ப்ளீஸ்" என்றான் வெங்கி.

"நீ நினைக்குறா மாதிரி மறு ஜென்மம் தான் இது. ஆனா சில தொடர்புகள் இருக்கு."

என்று சொல்லி விட்டு மரத்தின் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

"இது நடந்து கிட்டத்தட்ட ஐநூறு வருசம் இருக்கும். அப்ப பாவநாச மலைப்பக்கம் எல்லாம் ஒரே காடு" என்று ஆரம்பித்துச் சொல்லத் தொடங்கினார்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 9:

பாவநாச மலைக் காடுகள் மிகவும் அடர்த்தியாக அதிகமான மனித நடமாட்டம் இல்லாமல் இருந்த கால கட்டம். அந்த மலையை இருப்பிடமாகக் கொண்ட காணிகள் தான் அங்கே வசித்தனர். அம்பாசமுத்திரம் தான் பக்கத்தில் இருந்தன் பெரிய ஊர். பாவநாசம் கோயிலுக்கும், மலைக்கு சற்று மேலே இருக்கும் சொரி முத்தையனார் கோயிலுக்கும் பங்குனி உத்திரம் அல்லது வேறு ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் ஊரிலிருந்து வண்டி கட்டிக் கொண்டு கூட்டமாக வந்து விட்டு சமைத்து சாமிக்கும் படையல் போட்டு விட்டு சாப்பிட்டு விட்டுப் போய் விடுவார்கள்.

அந்த மலைக் காட்டில் காணிகள் அல்லாத ஒரு சிலர் வாழ்ந்தனர். அவர்கள் மொத்தமே 8 வீடுகள் தான். தேன் எடுப்பது, சிறு அளவில் காய்கறிகள் பயிரிட்டு அதனை அம்பாசமுத்திரம் சந்தையில் விற்று வாழ்ந்தனர் அந்த மக்கள். சிக்கலில்லாத நிம்மதியான வாழ்க்கை. அது போன்ற ஒரு வீட்டில் தான் நித்யமல்லி பிறந்தாள். அவள் பிறக்கும் போதே பல விதமான நிமித்தங்கள் தோன்றின. அவைகள் நல்ல நிமித்தங்களா? இல்லையா? என்பதை மந்திரங்களில் கை தேர்ந்த காணிகளாலேயே கண்டு பிடிக்க முடியவில்லை.

நித்யமல்லி மெல்ல மெல்ல வளர்ந்து பெண்ணானாள். அவளது சுபாவம் மிகவும் வித்தியாசமாகவும் விபரீதமாகவும் இருந்தது. ஒருவரைப் பிடித்துப் போய் விட்டது என்றால் அவர்களுக்காக உயிரை கொடுக்க மட்டுமல்ல எடுக்கவும் அவள் தயாராக இருந்தாள். அதே நேரம் தனக்குப் பிடித்தவர்கள் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் எனத் தெரிந்தால் அவர்களை சித்திரவதை செய்து கொல்லவும் தயங்க மாட்டாள். இந்த அவளது சுபாவம் அவள் வளர்த்து வந்த நாய் மூலமாக வெளியில் வந்தது.

மணி என்ற நாயை சிறு குட்டியாக இருக்கும் போது அவள் காட்டில் அனாதையாகக் கண்டெடுத்தாள். அதற்கு பாலூட்டி, குளிப்பாட்டி அத்தனை அன்பாகப் பார்த்துக்கொண்டாள். நித்யமல்லி வளர வளர நாயும் வளர்ந்தது. அந்த எட்டு வீடுகளில் அவள் வயதையோத்த பெண்களே இல்லை என்பதால் நாய் மணி தான் அவளுக்கு உற்ற துணையானது. நித்யமல்லியைப் போலவே மணியும் யாரோடும் பழகாது. யாராவது கிட்ட வந்தால் பயங்கரமாக உறுமும்.

அப்படி ஒரு நாளில் தான் பங்குனி உத்திரத்துக்காக அம்பாசமுத்திரத்திலிருந்து சில குடும்பங்கள் வந்திருந்தன. வந்தவர்களில் ஒரு குடும்பம் நித்யமல்லியின் வீட்டுக்கு தூரத்து உறவு என்பதால் அவர்கள் வீட்டில் சற்று நேரம் இளைப்பாறினர். அந்தக் குடும்பத்தில் சுமார் இரண்டே வயதில் ஒரு அழகான பெண் குழந்தை இருந்தது. அது தளர் நடையிட்டு வாசலுக்கு வந்தது. நாய் மணியைப் பார்த்ததும் அதற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை! அதன் அருகே சென்று தலையைத் தடவிக் கொடுத்தது. மணியும் வாலாட்டி அதன் கையை நக்கிக் கொடுத்தது. அப்போது ஆற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த நித்யமல்லி இந்தக் காட்சியைப் பார்த்தாள். எதுவும் பேசாமல் போய் விட்டாள். வந்தவர்கள் அனைவரும் போன பிறகு நாயை அடித்துத் துவைத்து விட்டாள். ஏன் என்று கேட்டதற்கு என்னைத் தவிர யாருடனும் பழகக் கூடாது எனச் சொல்லி வைத்திருந்தும் அந்தக் குழந்தையிடம் விளையாடி இருக்கிறான் இவன். அதற்கு இந்த தண்டனை போதாது. என்றவள் எரியும் கொள்ளியைக் கொண்டு அதன் கண்களைப் பொசுக்கி விட்டாள். மணியும் சில நாட்கள் உடல் நலமில்லாமல் இருந்து இறந்தே போய் விட்டது.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நித்யமல்லி இன்னமும் கொடூரமானவளாக மாறி விட்டாள். யாருடனும் பேசுவதில்லை. எந்நேரமும் கோபமே உருவாக இருந்தாள். அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என காணிகள் சொன்னதில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார் அவள் அப்பா. அப்போது தான் ஆதித்தன் அந்த ஊருக்கு வந்தான். அவன் சிங்கம்பட்டி ராஜாவின் அரண்மனையில் ஒரு அதிகாரி. காட்டின் வெளிப்புறங்கள் வழியாக சில கொள்ளையர்கள் ஊருக்குள் வருகிறார்கள் என சிங்கப்பட்டி ராஜா அவன் தலைமையில் சிறு படை ஒன்றை அனுப்பியிருந்தார். மொத்தம் இருபதே பேர் தான். அனைவரும் வாள் வீச்சிலும், வில் அம்பிலும் கை தேர்ந்தவர்கள்.

எட்டு வீடுகளின் அருகில் கூடாரங்கள் அமைத்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்தனர். அப்போது தான் ஆதித்தன் நித்யமல்லியைப் பார்த்தான். அவள் ஆற்றுக்கு தண்ணீர் எடுக்கப் போகும் போது அவளை வழி மறித்தான்.

"இந்தாம்மா பொண்ணு! இப்படிக் காட்டுல தனியா தண்ணி எடுக்க வராதே! அது பாதுகாப்பானது இல்ல" என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தாள் நித்யமல்லி. அவளது உள்ளத்தில் இனம் புரியாத மாற்றம். மெல்ல மனம் இளகியது.

"இத்தனை வருஷமா இப்படித்தானே வரேன்? எனக்கென்ன பயம்?" என்றாள்.

"இந்தப் பக்கம் கொள்ளைக்காரங்க நடமாட்டம் இருக்கு! அவங்களைப் பிடிக்கத்தான் ராஜா எங்களை அனுப்பியிருக்காரு. கொள்ளைக் காரங்க ரொம்ப மோசமானவங்க. அதான் சொன்னேன்.:" என்றான்.

"என்னை யாராலயும் எதுவும் செய்ய முடியாது." என்றாள்.

"ஏயப்பா! அத்தனை பலமா உனக்கு? இப்ப நான் உன்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டா என்ன செய்வே?" என்றான் சிரித்தபடி.

"இதோ! இது விஷம் தடவுன கத்தி! அப்படியே சொருகிருவேன்." என்றாள் சாதாரணமாக.

அவளது முகத்தைப் பார்த்த ஆதித்தன் என்ன நினைத்தானோ தள்ளிப் போய் விட்டான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நித்யமல்லி அடிக்கடி ஆற்றுப்பக்கம் செல்லலானாள். ஆனால் ஆதித்தன் அவள் வருவதைப் பார்த்து விட்டு வேறு வழியில் போய் விடுவான். ஆனால் நித்யமல்லியோ கனவில் அவனோடு குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டாள்.

"என்ன? என்னைப் பார்த்ததும் வேற வழியில போறீங்க?" என்றாள்.

"பின்ன? நான் ஏதாவது கேக்கப் போயி, உனக்குக் கோபம் வந்து, கத்தியை சொருகிட்டா என் கதி என்ன ஆகுறது?" என்றான் ஆதித்தன்.

"அப்படியெல்லாம் எதுவுமே ந்டக்காது" என்றாள்.

"நான் கேக்கணும்னு நெனச்சேன்! நீ ஏன் சிரிக்கவே மாட்டேங்குற? உனக்கு ஏதவது கஷ்டமா? அப்படீன்னா சொல்லு. என்னால முடிஞ்ச உதவி செய்யறேன்"

கேட்ட ஆதித்தனை ஏற இறங்கப் பார்த்தாள்.

"இங்க எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை! எதைன்னு தீர்ப்பீங்க?" என்றாள்.

"ஏயப்பா! உனக்கு வயசு 18 இருக்குமா? அதுக்குள்ள இத்தனை பிரச்சனைகளா? யாரால? உங்க குடும்பதாராலயா? இல்லை உன்னோட தோழிகள்னாலயா?"

"எனக்குத் தோழிகளே கிடையாது! குடும்பத்தார் அப்புறம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க. இவங்களால தான் எனக்குப் பிரச்சனை."

"உம்! அப்படி என்ன செய்யறாங்க? முதல்ல உங்க குடும்பத்தார் உன்னைக் கொடுமைப் படுத்துனா ராஜா கிட்ட சொல்லி அவங்களுக்குத் தண்டனை வாங்கித்தர முடியும் என்னால. தைரியமா சொல்லு!"

"முதல்ல என்னோட அண்ணனும், தம்பியும் எங்க அம்மா, அப்பாவோட அன்பை முழுசா எடுத்துக்கிட்டாங்க. எனக்குன்னு யாருமே இல்ல. என்னையே உசுரா நெனச்சுக்கிட்டு இருந்த மணியும் செத்துட்டான்."

"மணி யாரு? உன் முறைப்பையனா?"

"இல்ல! நான் வளர்த்த நாய்."

"அடப்பாவமே? சரி சொல்லு"

"என் அண்ணனையும், தம்பியையும் எப்படியாவது ஒழிக்கணும். அப்பத்தான் எங்க அம்மா, அப்பா என்னையே நம்பி இருப்பாங்க" என்றாள்.

திடுக்கிட்ட மனதை சமாளித்துக்கொண்டான் ஆதித்தன்.

"இப்படி எல்லாம் விளையாடக் கூடாதும்மா!"

"நான் எதுக்கும் எப்பவுமே விளையாட்டுக்குப் பேசினதே இல்ல! நிஜமாத்தான் சொல்றேன்." என்றாள்.

முதல் முறையாக இந்தப் பெண்ணிடம் ஏதேனும் தவறு இருக்குமோ? என யோசித்தான். இவளைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. மூளை கலங்கியவளாகக் காணப் படுகிறாள். ஒரு வேளை நாய் இறந்து போன துயரம் இவளை இப்படியாக்கி இருக்கலாம். எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்தப் பெண் என்ன பேசினாலும் அதை ஒட்டியே பேசுவது நல்லது என முடிவு செய்து கொண்டான் ஆதித்தன், வரவிருக்கும் விபரீதங்கள் தெரியாமல்.

"உம்! நான் இன்னொரு யோசனை சொல்லட்டுமா?"

"சொல்லுங்க"

"பேசாம நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் புருசன் வீட்டுக்குப் போயிட்டா, உனக்குன்னு ஒருத்தன் இருப்பான் இல்ல? எதுக்குத் தேவையில்லாம ரெண்டு உசுரைக் கொல்லணும்?" என்றான்.

"நீங்க ராணுவ தளபதி தானே?"

"ஆமா"

"உசுரை எடுக்க இப்படி பயப்படுறீங்க?" என்றாள் நித்யமல்லி கிண்டலாக.

திடுக்கிட்ட இதயத்தை கட்டுப்படுத்திக்கொண்டான்.

"பகைவர்களையும், நாட்டு மக்களுக்கு கெடுதல் செய்யுறவங்களையும் தான் நாங்க கொல்லுவோம். அதுவும் எப்படி? போர் நடக்கும் போது தான். இப்படி எந்தத் தப்புமே செய்யாதவங்களை கொல்லுறது வீரமில்ல. அது கொலை பாதகம்" என்றான் ஆதித்தன்.

"இருக்கலாம்! ஆனா என்னைப் பொறுத்தவரை நான் தான் நீதிமன்றம், நான் விதிக்குறது தான் தண்டனை."

"தாயே! நீ ராணியானா ஊர் என்ன ஆகும்?" என்று சொல்லிக் கஷ்டப்பட்டு சிரித்து சூழ்நிலையை இலகுவாக்கினான் ஆதித்தன்.

"ஊருக்கு ராணியாக வேண்டாம். ஒருத்தனுக்கு மட்டும் ராணியானாப் போதும்" என்றாள் நித்யமல்லி.

"அப்ப! நல்ல மாப்பிள்ளையா பார்க்க வேண்டியது தானே? என் படையிலயே நல்ல வாலிபர்கள் இருக்காங்க. அதுல யாரையாவது உனக்குப் பிடிச்சிருந்தாச் சொல்லு." என்றான் ஆதித்தன்.

"கட்டாயம் சொல்றேன். ஆனா இப்ப இல்ல! நேரம் வரும் போது. ஆனா அதுக்கு முன்னால தினமும் என்னைப் பார்த்து நீங்க பேசணும். சரியா?" என்றாள்.

தலையை ஆட்டினான் ஆதித்தன். நித்யமல்லி போன பிறகு நண்பன் அருகே வந்தான் வேங்கையன்.

"ஆதித்தா! என்ன? எப்பப் பார்த்தாலும் அந்தப் பெண்ணோட பேசிக்கிட்டே இருக்கே?" என்றான்.

"ம்ச்! பாவம்டா அந்தப் பொண்ணு! ஆசையா வளர்த்த நாய் செத்துப் போனதால கொஞ்சம் மூளை கலங்கிரிச்சு போல. எங்கிட்டப் பேசுனா ஆறுதலா இருக்கோ என்னவோ?" என்றான் ஆதித்தன்.

பேசிய நண்பனை ஊன்றிப் பார்த்தான் வேங்கையன்.

"ஆதித்தா! வேண்டாம்டா! அந்தப் பொண்ணு கொஞ்சம் ஒரு மாதிரின்னு ஊருக்குள்ள பேசிக்குறாங்க"

"ஒரு மாதிரின்னா? ஒழுக்கம்...?"

"சேச்சே! அது இல்ல! ஆனா இரக்கமோ, கருணையோ மன்னிக்குற குணமோ இல்லியாம் அந்தப் பெண்ணுக்கு."

"இது என்னடா நீ சொல்றது புதுசா இருக்கே? வளர்த்த நாய் செத்ததையே தாங்க முடியல்ல அவளால. அவளுக்கா இரக்கம் இல்ல?" என்றான் ஆதித்தன்.

"அந்த நாயைக் கொன்னதே அந்தப் பொண்ணு தானாம் ஆதித்தா. ஏதோ ஒரு சின்னக் குழந்தை கிட்ட விளையாடிச்சாம் அது. அதுக்காக ரொம்பக் கொடூரமா கொன்னிருக்கா." என்றான் வேங்கையன்.

நண்பன் சொன்னதை நம்பவே முடியாமல் பார்த்தான். தொடர்ந்தான் வேங்கையன்.

"சொல்ல வேண்டாம்னு பார்த்தேன். ஆனா சொல்ல வெச்சிட்ட ஆதித்தா! நாம கொள்ளைக்காரங்களைத் தேடி காட்டுக்குள்ள போனோம் இல்ல? அங்க சில காணிங்களைப் பார்த்தேன். அவங்க எனக்கு தேன் கொடுத்தாங்க. சில கிழங்குகள் கொடுத்தாங்க."

"தெரியுமே? அவங்க அப்பப்ப நம்ம கூடாரத்துக்கும் வருவாங்க. அதுக்கும் இதுக்கும்..."

"இரு அவசரப்படாதே! அந்த காணிங்க அகத்தியர் கிட்ட சீடர்களா இருந்தவங்க. அவங்களுக்கு மந்திரம் மாயம் எல்லாமே தெரியும். நித்யமல்லி மனிதப் பிறவியே இல்லைன்னு சொல்றாங்க அவங்க" என்றான் வேங்கையன்.

"என்னடா உளறுற? அவ மனுசி இல்லேன்னா யாராம்? பேயா?"

"அதெல்லாம் எனக்குத் தெரியல்ல! ஆனா அவ கிட்டப் பேசாம இருக்குறது தன் நல்லதுன்னு தலைவர் சொன்னாரு. உனக்குன்னு ஒருத்தி ஊருல காத்துக்கிட்டு இருக்கா. அதை மறந்துடாதே" என்றான்.

"என்னையே நான் மறந்தாக் கூட, உன் தங்கச்சியை நான் மறக்க மாட்டேன் வேங்கையா! கொள்ளையர்களைப் பிடிச்சு ராஜா கிட்ட பரிசு வாங்கினதும் உடனே கல்யாணம் தான். இப்பவே ஊருக்கு சொல்லி அனுப்பிரு" என்றான் ஆதித்தன்.

மகிழ்ச்சியில் நண்பனைக் கட்டியணைத்துக்கொண்டான் வேங்கையன்.

"ரொம்ப சந்தோஷம் ஆதித்தா! ஆனா நான் சொன்னதை நல்லா நினைவு வெச்சுக்கோ! அந்தப் பொண்ணு கிட்ட இருந்து விலகியே இரு" என்றான்.

"எனக்கு ஒரு சந்தேகம் வேங்கையா! அவ மனுசியே இல்லேன்னா அப்ப அவ யாரு? ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கறா? இதுக்கெல்லாம் விடை கிடைக்கணுமே?"

"உனக்கு அத்தனை ஆர்வம் இருந்தா நாளைக்கு மாலை நாம கொள்ளையர்களை தேடிக்கிட்டு காட்டுக்குள்ள போவோம் இல்ல? அப்ப காணிகளோட தலைவர் கிட்டக் கேப்போம். அதோட அவங்க ஜோசியத்துலயும் பெரிய ஆளுங்களாம். நம்ம எதிர்காலம் எப்படி இருக்கும்னும் கேப்போம்" என்றான் வேங்கையன்.

"அப்படியே செய்வோம். இன்னும் ரெண்டு நாள்ல அமாவாசை வருது. அன்னைக்கு கொள்ளைக்கூட்டம் காட்டுல ஒரு இடத்துல கூடப் போறதாத் தகவல் வந்திருக்கு. அந்த இடத்துக்கு நாம போனோம்னா அவங்களைப் பிடிச்சிரலாம்." என்றான்.

இரு நண்பர்களும் கொள்ளையர்களைப் பிடிப்பது பற்றி திட்டம் தீட்ட ஆரம்பித்தனர்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 10.

காட்டில் கொள்ளையர்களை வளைத்துப் பிடித்து விட்டார்கள் ஆதித்தனும், வேங்கையனும். ஆனாலும் அதன் தலைவன் தப்பி விட்டான். இரு நண்பர்களும் கடுமையாகப் போரிடும் நேரம் கண்களில் ஏதோ ஒரு வகைப் பச்சிலைப் பொடியைத் தூவி விட்டு பறந்து விட்டான். அந்தப் பொடி கண்களில் பட்டு ஒரே எரிச்சல். அதோடு கண் பார்வையும் தெரியவில்லை இரு நண்பர்களுக்கும்.

உடன் இருந்த மற்ற வீரர்கள் அவர்களை மீண்டும் நாட்டுக்கே அழைத்துச் செல்ல முயன்றார்கள். ஆனால் அதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை ஆதித்தனுக்கும் வேங்கையனுக்கும். காரணம் மிகவும் புகழ் மிக்க உப தளபதியாக, மன்னரின் அன்புக்கு உரியவராக வாழ்ந்து விட்டு இப்போது இப்படிக் கண்ணிழந்த குருடர்களாக மீண்டும் நாட்டுக்குச் செல்ல ஆதித்தனுக்கு விருப்பம் இல்லை. அவனை எப்போதும் தாங்கிப் பேசும் வேங்கையனுக்கும் அப்படியே தான். அப்போது காணிகளின் தலைவரான வேம்பு சாமி தலையிட்டார்.

"இவங்களுக்கு பார்வை பறி போயிருக்கிறது தற்காலிகமாத்தான். அந்தக் கொள்ளைக் கூட்டத்தலைவன் சந்திர வள்ளிச் செடியோட இலையைக் காய வெச்சுத் தூவி இருக்கான். அதுக்கு எங்கிட்ட மாத்து மருந்து இருக்கு." என்றார்.

"அப்படீன்னா அதை உடனே குடுங்க பெரியவரே! எங்க தளபதியை நாங்க ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போறோம்." என்றார்கள் வீரர்கள்.

"அது அவ்வளவு சுலபம் இல்லப்பா! ஒரே நாள்ல சரி பண்ண முடியாது. குறைஞ்சது பதினஞ்சு நாள் எங்க குடுயிருப்புல தங்கணும். அப்பத்தான் சிகிச்சை குடுக்க முடியும்." என்றார். இது போன்ற சந்தர்ப்பத்தைத் தானே இரு நண்பர்களும் எதிர்பார்த்தார்கள்?

"வீராசாமி! நீங்களும் மற்ற வீரர்களும் உடனே நாடு திரும்புங்கள். மன்னருக்கு ஒரு ஓலை தருகிறேன். அதை எடுத்துச் சென்று அவரிடம் கொடுங்கள். அந்தக் கொள்ளைக் கூட்டத்தலைவனைப் பிடிக்காமல் ஆதித்தனும், வேங்கையனும் நாடு திரும்ப மாட்டார்கள் என அரசரிடம் சொல்லுங்கள். நாங்கள் சிகிச்சை முடிந்து கண் பார்வை மீண்டதும் அந்தக் கொள்ளையர் தலைவனைப் பிடித்து விடுவோம் எனச் சொல்லுங்கள்." என்றான் ஆதித்தன்.

"நீங்க சொல்றது சரி தான். ஆனா அந்தக் கொள்ளைக்கூட்டத் தலைவனால உங்க உயிருக்கு ஆபத்து ஏதேனும் வருமோன்னு தான் தயக்கமா இருக்கு." என்றான் வீராசாமி.

"அப்படி எதுவும் நடக்காது வீரா! எங்க குடியிருப்புக்குள்ள எதிரிங்களால வர முடியாது. ஏன்னா எங்களுக்கு வனப்பேச்சி காவல்." என்றார்.

அரை மனதாக வீரர்கள் நாடு திரும்பி விட்டனர். வேம்பு சாமி இருவரையும் தங்கள் குடியிருப்புக்கு அழைத்துப் போனார். ஆட்களுக்கு சொல்லி அனுப்பி வேங்கையனின் தங்கை செம்மலரையும் அழைத்து வந்து விட்டார். செம்மலர் அண்ணனின் நிலை கண்டும், காதலனின் நிலை கண்டும் கண்ணீர் விட்டாள்.

"கவலைப் படாதே அம்மா! இருவருக்கும் கண் பார்வை கிடைத்து விடும்." என்று ஆறுதல் கூறினார் வேம்புசாமி.

பத்து நாட்கள் ஓடின. தலைவரின் சிகிச்சை பலனளிக்கும் போலத்தான் தெரிந்தது. அந்த பத்து நாட்களிலேயே ஓரளவு நிழலுருவமாக தெரிய ஆரம்பித்தது இரு நண்பர்களுக்கும். செம்மலர் தான் இருவருக்கும் வேண்டிய பணிவிடைகளைச் செய்தாள். உணவு தயாரிப்பது அதனை ஊட்டுவது என செம்மலரும், ஆதித்தனும் மேலும் நெருக்கமானார்கள்.

இந்த நிலையில் ஒரு நாள் காலைப் பொழுதில் தலைவர் அவர்களைக் காண வந்தார்.

"இன்னியோட உங்களுக்கு சிகிச்சை முடியுது. இப்ப உங்க கண்ணைக் கட்டிருவேன். இன்னும் மூணு நாள் கழிச்சுத்தான் அதைப் பிரிக்கணும். நடுவுல எக்காரணம் கொண்டும் பிரிக்காதீங்க. அப்படி செஞ்சா கண் பார்வை திரும்ப வரவே வாராது." என்றார்.

"அவங்க கண் கட்டைப் பிடிக்காம நான் பார்த்துக்கறேன் ஐயா" என்றாள் செம்மலர்.

"அந்தக் கண் கட்டைப் போடுறதுக்கு முன்னால உங்க சாதகத்தை நான் பார்க்கணுமே?" என்றார் வேம்புசாமி.

"ஏன் ஐயா? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் ஆதித்தன்.

"சம்பந்தம் ஒண்ணும் இல்ல தான். ஆனா எனக்கு சில கெட்ட நிமித்தங்கள் தோணுது. அது எதுக்கு? அதுக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? இதையெல்லாம் நான் தெரிஞ்சுக்கணும்." என்றார்.

"எங்களுக்கு சாதகம் குறிக்கல்ல ஐயா! ஆனா பிறந்த தேதி, மாசம், ஆண்டு தெரியும்." என்றான் வேங்கையன்.

அவற்றை வாங்கிக்கொண்டு சென்றவர் அரை நாள் பொறுத்துத் திரும்பி வந்தார். அவர் முகத்தில் கலவரம், வருத்தம் ஆச்சரியம் என எல்லாமே கலந்து இருந்தது.

"ஐயா? எங்க சாதகங்கள் என்ன சொல்லுது? ஆதித்தனுக்கும் செம்மலருக்கும் எப்ப கல்யாணம் நடக்கும்?" என்றான் வேங்கையன்.

அதற்கு பதில் சொல்லாமல் மௌனமாக அமர்ந்தார் வேம்புசாமி.

"சொல்லுங்க ஐயா! எங்க சாதகம் என்ன சொல்லுது?" என்றான் ஆதித்தன்.

நீண்ட பெருமூச்சு ஒன்றை விடுவித்தார் வேம்புசாமி.

"என்ன சொல்ல? நீங்க நித்ய மல்லியைப் பார்த்துட்டீங்களா?" என்றார் திடும்மென.

"ஆமா ஐயா! ஆத்துல அவ தண்ணி எடுக்கப் போகும் போது எங்கிட்டப் பேசுவா. ரொம்ப விசித்திரமான பொண்ணு. ஆனா அவ மனுசப் பிறவியே இல்லேன்னு சொல்றாங்க. அப்படீன்னா அவ யாரு? இதைப் பத்தி நாங்களே உங்க கிட்டக் கேக்கணும்னு நெனச்சோம்." என்றான் ஆதித்தன்.

"தம்பி! ஆதித்தா! அவ கூட உன் பழக்கம் எந்த வரையில இருக்கு? உடல் ரீதியா...எதுவும்...?"

"சேச்சே! என்ன ஐயா நீங்க? நான் என்ன கயவனா? கல்யாணமாகாத கன்னியைத் தொடுவேனா?" என்றான் ஆதித்தன் அவசரமாக.

"தப்பிச்சேப்பா! அவ உன்னைக் கண்ணு வெச்சுட்டா. எப்படி உன்னைக் காப்பாத்தப் போறேன்னு தெரியலியே?" என்றார் கவலையுடன்.

"யாரு ஐயா அந்த நித்யமல்லி? அவளைக் கண்டு நீங்க கூட பயப்படுறீங்க? ஆதித்தனை அவளால என்ன செய்ய முடியும்? இவர் எவ்வளவு பெரிய வீரர்? ஒரு பெண்ணிடமா பயம்?" என்றாள் செம்மலர்.

"அம்மா! நித்யமல்லியைப் பத்தித் தெரியாமல் பேசுற. அவ மனுச உருவத்துல இருக்க்குற ஒரு கெட்ட சக்தி. அவளை அழிக்கவே முடியாது." என்றார் வேம்பு சாமி.

"கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்க ஐயா." என்றான் வேங்கையன்.

சம்மணிமிட்டுத் தரையில் அமர்ந்து வனப்பேச்சியை தியானித்தார் தலைவர்.

"சொல்றேன்ப்பா! கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கு ஒரு தடவை எட்டு கிரகங்கள் ஒரே நேர்கோட்டுல வரும். இதை அஷ்டகிரக சேர்க்கைன்னு சொல்லுவோம். அப்படி நிகழும் போது அந்த ஆண்டு முழுக்க பிறக்கும் குழந்தைகள் எல்லாமே கொஞ்சம் கெட்ட நோக்கம், கெட்ட சிந்தனை உள்ளவங்களாத்தான் இருப்பாங்க. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாள்ல அந்த கிரகங்கள் வெளியிடுற சக்தி எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய கெட்ட சக்தியா உருவெடுக்கும். அந்த நேரத்துல ஏதாவது ஆண் பெண் கூடுனாங்கன்னா, அந்தப் பெண்ணோட கர்ப்பத்துல அந்த சக்தி பெண் வடிவமெடுத்துடும்." என்றார்.

சற்று நேரம் அங்கே சப்தமே இல்லை. தலைவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது மூவராலும். இருந்தாலும் அவர் வாயாலேயே சொல்லட்டும் எனக் காத்திருந்தனர்.

"அப்படிப் பிறந்தவ தான் நித்யமல்லி. அவ பெண் உருவத்துல இருக்குற கெட்ட சக்தி. அவளை பகைச்சுக்கவும் முடியாது அதே நேரம் நட்போடவும் இருக்கக் கூடாது. ஆனா நீ அவளோட நட்பு கொண்டது தான் பிரச்சனை ஆதித்தா" என்றார் வேம்புசாமி.

"ஐயா! நீங்க சொல்லுறதைக் கேக்க எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு. அவளால ஆதித்தனுக்கு எதுவும் கெடுதல் வருமா ஐயா?" என்றாள் செம்மலர்.

"நித்யமல்லியோட அன்புக்கு பாத்திராமாயிட்டா அவ கெடுதல் பண்ணவே மாட்டா. ஆனா அவளுக்குப் பிடிக்காத மாதிரி நடந்துக்கிட்டப் போதும். அவங்களை ரொம்பக் கொடூரமா தண்டிப்பா. இது தான் அவ இயல்பு." என்றார்.

"அவளுக்கு ஆதித்தன் மேல மட்டும் ஏன் இத்தனை இரக்கம்?" என்றான் வேங்கையன்.

"வேங்கையா! அது இரக்கமே இல்ல. காதல். அவ ஆதித்தனைக் காதலிக்குறாப்பா" என்றார்.

எள் விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியானது அந்த இடம். செம்மலர் மெலிதாக விம்மினாள்.

"மலர்! நான் சத்தியமா உன்னை மட்டும் தான் காதலிக்கறேன். அவ மேல எனக்கு கொஞ்சம் கூட காதல் இல்ல. என்னை நம்பு." என்றான் ஆதித்தன்.

"எனக்கு உங்களைப் பத்தித் தெரியும் அத்தான். ஆனா நித்யமல்லிக்கு நம்ம காதல் தெரிய வந்தா என்ன செய்வாளோன்னு தான் நான் பயப்படுறேன்." என்றாள்.

"இன்னொரு விஷயத்தையும் நீங்க நல்லாப் புரிஞ்சுக்கணும். இப்ப நித்யமல்லி மனித வடிவத்துல தான் இருக்கா. ஆனா அவளுக்கு அழிவே இல்ல. இந்த மனித உடல் மறைஞ்சாலும் அவ சக்தி மறையாது."

"ஐயையோ! என்ன ஐயா சொல்றீங்க? ஏன் எங்களை இப்படி பயமுறுத்துறீங்க?" என்றாள் செம்மலர்.

"தயவு செஞ்சு தவறா நினைக்காதே செம்மலர். என் நோக்கம் அது இல்ல. ஆனா அவளைப் பத்தி நீங்க முழுசாப் புரிஞ்சுக்கிட்டா தான் அவளை எதிர்க்க முடியும். அதுக்குத்தான் சொன்னேன்." என்றார்.

"அழிக்கவே முடியாதுன்னு சொல்ற ஒரு சக்தியை எப்படி எதிர்க்குறது? பேசாம இவங்களுக்குக் கண் பார்வை வந்த உடனே நாங்க நாட்டுக்குப் போயிடறோம். அப்ப அவளால என்ன செய்ய முடியும்?" என்றாள் செம்மலர்.

அவளைப் பார்த்து சிரித்தார் தலைவர்.

"உன் அறியாமையை என்னன்னு சொல்ல? இந்த பூமிப்பந்துல எந்த எடத்துக்கு வேணும்னாலும் அவளால போக முடியும்மா. அப்படி இருக்க அவளுக்கு சிங்கம்பட்டி வரது தானா கஷ்டம்?" என்றார்.

"அப்படீன்னா நாங்க என்ன தான் செய்ய?" என்றான் ஆதித்தன்.

"சொல்றேன் ஆதித்தா. ஆனா அதுக்கு முன்னால உங்க ரெண்டு பேருக்கும் கண் பார்வை வரணும். அப்பத்தான் என்னால சில விஷயங்களைக் காட்டவும் விளக்கவும் முடியும். இன்னைக்கு ஒரு சில பச்சிலைகள், மூலிகைகள் வெச்சு உங்க ரெண்டு பேருக்கும் கட்டுப் போடுறேன். அதை நானே வந்து பிரிக்கறேன்." என்றார்.

"ஐயா! இவங்களுக்குக் கண் பார்வை வரக் கூடாதுன்னு நித்யமல்லி ஏதாவது செஞ்சா? நான் எப்படிய்யா தடுக்க முடியும்?" என்றாள் செம்மலர்.

"உம்! நீ கேக்குறது சரி தான். ஆனா அவளுக்கு இப்ப ஆதித்தன் மேல காதல். அவனுக்குக் கண்பார்வை வரணும்னு நினைப்பாளே தவிர, கெடுக்கணும்னு நினைக்க மாட்டா" என்றார்.

சற்றே நிம்மதியானது மூவருக்கும். ஏதேதோ மூலிகைகளை வைத்துக் கட்டுப் போட்டு விட்டுச் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களில் கண்களின் உள்ளில் நமைச்சல் எடுக்க ஆரம்பித்தது இருவருக்கும். கைகளால் கட்டைக் கசக்க முயன்றனர்.

பாய்ந்து வந்து தடுத்தாள் செம்மலர்.

"என்ன செய்யறீங்க? கண் கட்டை அவுக்கக் கூடாதுன்னு இப்பத்தானே ஐயா சொல்லிட்டுப் போனாரு? அதுக்குள்ள இப்படிப் பண்றீங்களே?" என்றாள் அவள்.

"ஐயோ! மலர்! நமைச்சல் தாங்க முடியல்லம்மா! தயவு செஞ்சு பேசாம போ" என்று கத்தினான் ஆதித்தன்.

"இல்லங்க! என்ன ஆனாலும் பரவாயில்ல. நான் உங்களை கண்ணை கசக்க விட மாட்டேன். அண்ணே! உனக்கும் தான்." என்றவள் எழுந்து போய் வலுவான கயிறுகளைக் கொண்டு வந்து இருவரின் கரனக்ளையும் சேர்த்து முதுகுகுக்குப் பின்னால் கட்டினாள்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 11:

மலரின் அன்பு கலந்த கண்டிப்பான கவனிப்பால் ஆதித்தனுக்கும் வேங்கையனுக்கும் கண் பார்வை திருபி விட்டது. அந்த மூன்று நாட்களும் செம்மலர் ஒரு விநாடி கூடக் கண்களை மூடாமல் இருவரையும் கண்காணித்தாள். உணவு ஊட்டி விட்டாள். நல்ல வேளை இரண்டாம் நாளுக்குப் பிறகு நமைச்சல் நின்று விட்டது. மூன்றாம் நாள் வேம்புசாமி ஐயா வந்தார்.

"நீ ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டே மலர்." என்று அவளைப் பாராட்டினார்.

"ஐயா! இன்னைக்கு எங்களுக்கு கண் கட்டை அவுத்துருவீங்க தானே?" என்றான் ஆதித்தன்.

"ஆமாம்ப்பா! மதியம் அவுத்துருவேன். ஆனா இன்னமும் ரெண்டு நாளைக்கு உச்சி வெயில்ல சூரியன் ரொம்பப் பிரகாசமா இருக்கும் போது வெளிய போகக் கூடாது. அதுக்கப்புறம் எல்லாமே சரியாயிரும்." என்றார்.

அவர் சொன்ன மதிய வேளை வந்தது. மனம் திக் திக் என அடித்துக்கொள்ள காத்திருந்தாள் செம்மலர். வெம்புசாமி ஐயா மெதுவாக முதலில் ஆதித்தன் கண்களின் கட்டை அவிழ்த்தார். முழுக்க முழுக்க இருட்டையே பார்த்துப் பழகி விட்ட அவனுக்கு அந்தக் குடிலின் சிறு வெளிச்சம் போதுமா? என ஐயுற்றாள் மலர்.

மெல்லக் கண்களைத் திறந்தான்.

"மலர்!" என்றான் குரலில் காதல் பொங்க.

"அத்தான்! உங்களுக்கு நான் தெரியுறேனா? உங்களுக்குக் கண்ணு வந்திருச்சா?" என்று ஆனந்தக் கூச்சலிட்டாள் செம்மலர்.

"ஆமா மலர்! ஆனா கொஞ்சம் கலங்கலாத் தெரியுது. அதாவது புகை மூட்டம் மாதிரி" என்றான் ஆதித்தான்.

"ஐயா?" என்று வேம்புசாமியின் பக்கம் திரும்பினாள் மலர்.

"கவலைப் பட ஒண்ணுமில்லம்மா! இப்படித்தான் இருக்கும் ஆரம்பத்துல. கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாம் தெளிவாத் தெரியும். இன்னும் சொல்லப் போனா, முன்னை விட கூர்மையான பார்வை கிடைக்கும்." என்றார் ஐயா.

"ஐயா! உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியல்ல! எங்க குலம் காக்க வந்த சாமியாத்தான் உங்களை நினைக்கிறேன். எங்க அண்ணன் கட்டையும் அவுத்து விடுங்க. அவனுக்கும் கண் பார்க்கட்டும்" என்றாள் மலர்.

வேங்கயனுக்கும் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. அவனும் முதலில் தங்கையான செம்மலரைத்தான் பார்த்தான். குதூகலத்தில் அழுதே விட்டாள் அவள்.

தனது பையைத் திறந்து சில பொற்காசுகளை எடுத்துக் கொடுத்தான் ஆதித்தன்.

"கேவலம்! இந்தக் காசுக்காகவா நான் உங்களுக்கு வைத்தியம் பார்த்தேன்?" என்றார் வேம்புசாமி. அவரது குரலில் கோபம்.

"ஐயா! மன்னிச்சுக்குங்க! எங்களால முடிஞ்சது கொடுக்கிறோம். தவறா நினைக்க வேண்டாம்" என்றான் ஆதித்தன்.

"இல்லப்பா! நான் தவறா நினைக்கல்ல! நான் உங்க கிட்ட இதைவிட அதிகமா எதிர்பார்த்தேன்" என்றார் வேம்புசாமி.

"ஐயா! எனக்கு ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க. நான் எங்க வீட்டுக்குப் போயி எவ்வளவு பொற்காசுகள் இருக்கோ? அத்தனையும் கொண்டு வந்து உங்க காலடியில வெக்கிறேன்." என்றான் ஆதித்தன் உணர்ச்சியோடு.

"நல்ல பிள்ளைங்க போங்க! காசை விட பெருசு இருக்குப்பா! அதைத்தான் நான் உங்க கிட்ட எதிர்பார்க்கிறேன்"

"சொல்லுங்க சாமி! நாங்க என்ன செய்யணும்? எங்களால உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடிஞ்சா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான்." என்றான் வேங்கையன்.

சற்று நேரம் மௌனம் காத்தார் வேன்புசாமி.

"சொல்லு ஐயா! நாங்க என்ன செய்யணும்?" என்றான் வேங்கையன் மீண்டும்.

"யார் சொல்லணுமோ? அவங்க சொல்லலியே இன்னும்?" என்றார். அவரது பார்வை ஆதித்தன் பக்கம் சென்றது.

"ஐயா! நீங்க என்னைத் தப்பா நெனச்சுட்டீங்க. என் நண்பன் வேங்கையன் சொன்னாலும் நான் சொன்னாலும் ஒண்ணு தான். சொல்லுங்க. நாங்க என்ன செய்யணும்?" என்றான் ஆதித்தன்.

"உங்க நட்புக்கு நான் தலை வணங்குறேன் வீரர்களே! இது எப்போதுமே இப்படி இருக்க நான் வாழ்த்துறேன்." என்றார். இரு ஆண்களும் அவரது காலில் பணிந்தார்கள். நன்றாக இருங்கள் என ஆசீர்வதித்தார் அந்தப் பெரியவர்.

"ஐயா! இன்னமும் இவர்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லவில்லையே?" என்றாள் செம்மலர்.

"சொல்கிறேன் அம்மா! கட்டாயம் சொல்றேனம்மா! நீயும் இவங்க கூட இணைஞ்சு தான் இதை முடிக்கணும்." என்றார். மூவரும் விழித்தனர்.

"நீங்க மூணு பேரும் தான் நித்யமல்லியைக் கட்டணும்" என்றார்.

புரியாமல் விழித்தனர் இளைஞர்கள் மூவரும்.

"தெளிவா சொல்றேன் ஆதித்தா! இது நான் உங்களுக்கு இடுற கட்டளை இல்ல. வேன்டுகோள். புரிஞ்சதா? முழுசா தெரிஞ்சுக்கிட்டு நீங்க செய்யுறதும் செய்யாமப் போறதும் உங்க இஷ்டம்." என்றார்.

"ஐயா! வாக்குக் குடுத்துட்டு பின் வாங்குற ஆட்கள் நாங்க இல்ல. சொல்லுங்க. இதுல செம்மலர் எந்த மாதிரி உதவி செய்யணும்? முதல்ல நித்யமல்லியை ஏன் கட்டணும். அவ பாவம் பெண் இல்லியா?" என்றான் ஆதித்தன்.

"நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் ஆதித்தா! அவ சாதாரணப் பெண் இல்ல. அந்த உருவத்துல இருக்குற ஒரு கெட்ட சக்தி. அவளுக்கு மனித இனத்து மேல எப்பவுமே ஒரு கண்ணு. இந்த பூவுலகத்துல நிரந்தரமா வாழணும்னு ஆசைப்படுறா. அதுக்கு தான் உன் உதவியை அவ எதிர்பார்க்குறா" என்றார் வேம்புசாமி.

"இந்தப் பூமிய்ல பிறந்த யாரானாலும் ஒரு கட்டத்துல இறந்து போய்த்தானே ஆகணும். இவ மட்டும் என்ன விதிவிலக்கு?"

"அங்க தான் நீ அவளைப் புரிஞ்சுக்கணும். அவ உடம்பு தான் இந்த பூவுலகத்துச் சொந்தம். ஆனா அவளோட கெட்ட சக்தி முழுக்க முழுக்க அப்படியே தான் இருக்கும். அதுக்கு அழிவே இல்ல. அதாவது இப்போதைக்கு இல்ல" என்றார் வேம்புசாமி.

"புரிஞ்சா மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு ஐயா" என்றாள் செம்மலர். மற்ற இருவரும் தலை அசைத்தனர்.

"சொல்றேன், சொல்றேன். எல்லாத்தையும் நீங்க தெளிவா தெரிஞ்சுக்கணும்னு பாணினி சித்தரமா சொல்லியிருக்காங்க. அவங்களை நீங்க சந்திக்கிறதுக்கு முன்னால நித்யமல்லி பத்தித் தெரிஞ்சுக்கிட்டுப் பொனா நல்லது தான்." என்றார்.

"ஐயா! யாரு பாணினி சித்தரம்மா? நாங்க அவங்களைப் பார்த்ததே இல்லையே?"

"நானே அவங்க கிட்ட உங்களைக் கூட்டிக்கிட்டுப் போறேன். அவங்க இங்க தான் காட்டுக்குள்ள வாழுறாங்க. பெரிய சித்தர் அவங்க. மூலிகை மருத்துவத்துல இருந்து, எல்லாமே அவங்களுக்குத் தெரியும். நித்யமல்லியைப் பத்தி எங்களுக்குச் சொன்னதும் அவங்க தான்." என்றார் வேம்புசாமி. குரலில் அத்தனை பக்தி, மரியாதை.

"உம் சொல்லுங்க ஐயா" என்று ஊக்கினான் ஆதித்தன்.

"முதல்ல நித்யமல்லியைப் பத்தி முழுக்க நான் சொல்லிடறேன். அதுக்குப்பிறகு நீங்க யார் பக்கம்னு முடிவு செஞ்சாப் போதும்" என்றார் வேம்புசாமி. குரலில் சற்றே கலக்கம்.

"ஐயா! எங்களுக்கு கண்பார்வை குடுத்தவரு நீங்க. உங்களுக்கு நாங்க துரோகம் செய்வோமா? நிச்சயம் நாங்க உங்க பக்கம் தான்" என்றான் ஆதித்தன்.

"இப்போதைக்கு இது உண்மை தான். ஆனா இது மாறலாம். அதுவும் நித்யமல்லி உங்க மனசை எப்படி மாத்துவான்னு தெரியாது. அதனால அவசரப்பட்டு வாக்குக் கொடுக்க வேன்டாம்." என்றார்.

அமைதியாயினர் மூவரும். ஆதித்தனுக்கு மனதில் பல எண்ணங்கள். இத்தனை சக்தி வாய்ந்தவளா அந்த நித்யமல்லி? அவளைக் கண்டு இது போன்ற பெரியவரே அஞ்சுகிறார் என்றால் அப்படி என்ன சக்தி அவளிடம்?" என எண்ணினான்.

வாகாகத் தரையில் அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினர் வேம்புசாமி.

"கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னாலலேயே இன்னும் கொஞ்ச வருசத்துல அஷ்ட கிரக சேர்க்கை வரப் போகுதுன்னு சித்தரமாவுக்குத் தெரிஞ்சு போச்சு. அப்ப அவங்க என்னைக் கூப்பிட்டு இந்தப் பகுதியில தான் அந்த கிரகங்களோட தாக்கம் மிக அதிகமா இருக்கும். அதனால இங்க வாழுறவங்க அந்த ஆண்டு குழந்தை பெத்துக்காம இருக்குறது நல்லதுன்னு சொல்லச் சொன்னாங்க."

"உம்"

"நானும் எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். அதுக்கேத்த மாதிரி அவங்களும் கட்டுப்பாடா இருக்குறதா வாக்குக் கொடுத்தாங்க. அப்பத்தான் நித்யமல்லியோட அம்மாவும் அப்பாவும் இங்க வந்து சேர்ந்தாங்க. அவங்க ஆரம்பத்துல இருந்தே எங்களை ரொம்ப இளக்காரமாப் பார்ப்பாங்க. காட்டுவாசிங்களுக்கு என்ன தெரியும்னு பேசுவாங்க. எங்க கட்டுப்பாட்டை அவங்க மதிக்கவே இல்ல."

"ஐயையோ" என்றாள் செம்மலர்.

"கேளும்மா! இதை நாங்க சித்தரம்மா கிட்டச் சொன்னோம். அவங்க விதியை வெல்ல முடியாது போல இருக்கே வேம்பு? இந்த மலைப் பகுதியில அந்த கிரகச் சேர்க்கை போது ஏதோ ஒரு கெட்ட சக்தி பிறக்கப் போவுது போல இருக்கேன்னு ரொம்பக் கவலையோட சொன்னாங்க. நாங்களும் எதுவும் செய்ய முடியாத நிலை. அப்பத்தான் அந்த நாள் நெருங்குச்சு. நித்யமல்லியோட அம்மா நிறை மாத கர்ப்பம். சித்தரம்மா அவங்களை எப்படியாவது மலையுல இருந்து அப்புறப்படுத்திக் கீழே கூட்டிக்கிட்டுப் போயிடணும்னு நெனச்சாங்க. ஆனா அவங்களாலேயே அது முடியல்ல" என்று நிறுத்தினார்.

"ஏன் ஐயா?"

"மலை முழுக்க அப்படி ஒரு மழையும் காத்தும். தாமிரபரணி தாயே தறி கெட்டு ஓடிக்கிட்டு இருந்தா. எங்க குடியிருப்புக்குள்ள எல்லாம் ஒரே தண்ணி. அது வரைக்கும் எங்களைக் காப்பாத்திக்கிட்டு வந்த தாமிரபரணி தாயே எங்களை கை விட்டுட்டா மாதிரி தோணுச்சு. குழந்தை குட்டிங்க எல்லாம் திண்டாடுது. இது மாதிரி கிட்டதட்ட ஆறு நாட்கள் விடாம மழையும் காத்தும் அடிச்சது. பாதையில பெரிய பெரிய மரங்கள் முறிஞ்சு விழுந்தது. நாங்க சித்தரம்மா கிட்டப் போய் கதறுனோம்."

"அவங்க என்ன செஞ்சாங்க?"

"கண்களை மூடி தியானிச்சவங்க, குழந்தை பொறக்கவர வரைக்கும் இப்படித்தான் இருக்கும் வேம்பு. உங்களுக்காக, உங்க காணிகளோட நல்லதுக்காக நான் இப்பவே என்னோட முயற்சியைக் கை விட்டுடறேன். அந்தக் குழந்தை இங்க தான் பிறக்கணும்னு விதி போல அப்படீன்னு ரொம்ப வருத்தத்தோட சொன்னாங்க. அவங்க சொன்னது மாதிர்யே பெண் குழந்தையான நித்யமல்லி பிறந்த பிறகு மழை, காத்து எல்லாமே நின்னிருச்சு. தெருக்களே சுத்தமா காஞ்சு போச்சு. நேத்து வரைக்கும் வெள்ளக்காடா இருந்த எங்க தெருக்கள் அப்படியே காஞ்சு போயிரிச்சு."

"இது என்ன அற்புதமா இருக்கே?" என்றாள் செம்மலர்.

"அங்க தான்மா நாங்களும் தப்பு செஞ்சோம். முதல்ல நித்யமல்லியை எங்களைக் காக்க வந்த தேவதையா நெனச்சுட்டோம். அவ பிறந்ததால தான் மழை நின்னது, வெள்ளம் வடிஞ்சதுன்னு நாங்க அவளைக் கொண்டாட ஆரம்பிச்சுட்டோம். சித்தரம்மா எவ்வளவோ தடுத்தும் கேக்காம அவளை இங்க வளர விட்டோம். ஆனா அதுக்கான பலனை நாங்க அனுபவிக்கவும் செய்தோம்." என்றார் பெருமூச்சுடன்.

"என்ன நடந்தது ஐயா?" என்றான் வேங்கையன்.

"நித்யமல்லி வளர வளர எங்களுக்கு செல்வமும் வளர்ந்தது. நாங்க கொண்டு பொற கிழங்குகளுக்கும், தேனுக்கும் அம்பாசமுத்திரம் சந்தையில நிறைய விலை கெடச்சது. நாங்க ரொம்ப சந்தோசப்பட்டு அவளுக்கு சந்தையில இருந்து வரும் போதெல்லாம் ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுப்போம். அப்பத்தான் ஒரு நாள் சாயங்கால நேரத்துல காணிங்கள்ல ஒருத்தியான பொன்வண்டு தனியா வந்துக்கிட்டு இருந்தா. அப்பத்தான் அவ நித்யமல்லி ஒரு ஆட்டை உயிரோட கடிச்சு ரத்தம் குடிக்குறதைப் பார்த்துட்டா. அப்ப நித்யமல்லி பாக்கவே வேற மாதிரி இருந்ததாச் சொன்னா."

அமைதியாக இருந்தது அந்த இடம். மூவருக்குள்ளும் பல விதமான எண்ணங்கள் குழப்பங்கள்.

"அவளைப் அப்படிப் பார்த்த நாள்ல இருந்து பொன்வண்டுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாமப் போயிரிச்சு. பயந்து பயந்து இருந்தா. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பயந்தா. சித்தரம்மா கிட்ட சொன்னோம். அதுக்கு அவங்க நித்யமல்லி முதல் பலி வாங்கிட்டான்னு சொன்னாங்க. நாங்க ரொம்ப பயந்து போயிட்டோம். அவளைக் கண்காணிக்க ஆரம்பிச்சோம். அப்பத்தான் அவ எவ்வளவு கொடூரமானவன்னு எங்களுக்குத் தெரிஞ்சது. இது நடந்த மூணாம் நாளே பொன்வண்டு இறந்து போயிட்டா."

"ஐயையோ"

"என்ன செய்ய? சித்தரம்மா சொன்னபடி அவளை புதைக்காம எரிச்சுட்டோம். ஆனா அந்த சிதைக்குப் பக்கத்துலயே ரொம்ப நேரம் உர்ருனு உக்காந்திருந்தா நித்யமல்லி. சித்தரமா சொல்லியிருந்தபடி முழுக்க உடம்பு எரிஞ்சு சாம்பலாப் போற வரைக்கும் நாங்க காத்திருந்தோம். ஆனா பல விதமான சத்தங்கள் கேட்கவே பயத்துல ஓட நெனச்சோம். நான் தான் கடைசியா ஓடினேன். அப்பத்தான் எரியுற நெருப்புல இருந்து பொன்வண்டு பயங்கரமன உருவத்தோட எழுந்து போயி நித்யமல்லியோட கையைக் கோத்துக்கிட்டா. இதைப் பார்த்த எனக்கு வலிப்பே வந்திரிச்சு." என்று நிறுத்தினார்.

கேட்டுக்கொண்டிருந்த மூவருக்குமே வலிப்பு வரும் போல ஆகி விட்டது. மேலும் தொடர்ந்தார் வேம்புசாமி.

"இனிமே அவளை அடக்கவே முடியாதுன்னும், வளர வளர அவ இன்னமும் கொடுமைக்கரியாத்தான் மாறுவான்னும் தெரிஞ்சுக்கிட்டோம். ஆனா அவளையும் அடக்குற சக்தி எங்க வனப்பேச்சி கிட்ட இருந்தது. எங்க எல்லையில வனப் பேச்சி கோயில் இருந்ததால நித்யமல்லியால அதிகம் கெடுதல் எதுவும் செய்ய முடியல்ல. அவளை அழிக்கணும்னு போயி சித்தரம்மா கிட்டக் கேட்டோம். அதுக்கு அவங்க இவ சக்தி இன்னமும் அறுநூறு வருசத்துக்கு அழியாதேப்பா! ஒண்ணு வேணும்னா செய்யலாம். இவ சக்தியைக் கட்டலாம்னு சொன்னாங்க. அதை யாரால செய்ய முடியும்னு சில நிமித்தங்கள் சொன்னாங்க. அது படி பார்த்தா, உங்களால தான் அவளைக் கட்ட முடியும்னு தோணுது." என்று முடித்தார்.

அதிர்ந்து போய் அவரையே பார்த்திருந்தனர் மூவரும்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 12:

"ஐயா! நாங்களா? நாங்களா நித்யமல்லியைக் கட்டணும்? எப்படிச் சொல்றீங்க?" என்றான் ஆதித்தன்.

"நீங்களே தான். நான் முன்ன சொன்னது மாதிரி சில நிமித்தங்கள் தோணுச்சுப்பா. அதை வெச்சுத்தான் சொல்றேன்." என்றார்.

"புரியலீங்க" என்றான் வேங்கையன்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல சித்தரம்மாவே இங்க வரேன்னு சொல்லியிருக்காங்க. உங்க கேல்விகளை அவங்க கிட்டக் கேளுங்க. விவரமா சொல்லுவாங்க" என்றார்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே காற்று தீவிரமாக அடிக்கத் தொடங்கியது. அதோடு சற்றே இருள் சூழ்ந்தார் போலிருக்க பயந்து போனாள் மலர். சற்று நேரத்தில் வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க வேம்புசாமி போய்த் திறந்தார். அங்கே வெறித்த பார்வையோடு நித்யமல்லி நின்றிருந்தாள்.

"யாருங்க?" என்றாள் செம்மலர்.

"நீ யாரு? ஆதித்தனோட குடில்ல என்ன பண்ற?" என்ற குரல் கொடூரமாக ஒலித்தது.

"நித்யமல்லி! நீ எதுக்கு இங்க வந்த? இன்னமும் ஆதித்தனுக்கு பூரணமா கண்ணு வரல்ல. பிறகு அவனே வந்து உன்னைப் பார்ப்பான்" என்றார் வேம்புசாமி.

"யாரு இந்தப் பொண்ணு?" என்றாள் நித்யமல்லி மீண்டும்.

"வேங்கையனோட தங்கச்சிம்மா! இவங்களுக்கு கூடமாட ஒத்தாசைக்கு வந்திருக்கா"

"வேற எதுவும் இல்லியயே?" என்றாள்.

"அப்படீன்னு தான் நினைக்குறேன்" என்றார் வேம்புசாமி.

"ஹூம்! ஒரு காலத்துல உங்களுக்கு நான் தெய்வமா தெரிஞ்சேன். ஆனா இப்ப மனுஷியாக் கூட மதிக்க மாட்டேங்குறீங்க. உங்க மூட நம்பிக்கைக்கு அளவே இல்லியா?" என்றாள். அவள் குரல் கம்மியிருந்தது.

"நித்யமல்லி! என்னைப் பார்க்கவா வந்தீங்க?" என்று கேட்டபடியே ஆதித்தன் எழுந்து வந்தான். அவனைத் தொடர்ந்து செம்மலரும் வந்தாள் நித்யமல்லியைப் பார்க்கும் ஆவலோடு.

"ஆதித்தா! நல்லா இருக்கீங்களா? ஒத்தாசைக்கு என்னைக் கூப்பிட்டிருக்கக் கூடாதா? எதுக்குக் கண்டவங்களையும் கூப்பிடுறீங்க?" என்றாள்.

இப்படி சரளமாக பேசக் கூடியவள் அல்லவே நித்யமல்லி! என ஆதித்ததுனுக்கு வியப்பாக இருந்தது.

"என் தங்கச்சி ஒண்ணும் கண்டவ கிடையாது. உனக்குத் தெரியுமா? அவ தான்..." என ஆரம்பித்தவனை முடிக்க விடாமல் கத்தினார் வேம்புசாமி.

"வேங்கையா! கத்தாதே! அது உன் கண் நரம்புகளுக்கு ஆகாது" என்றார்.

"நான் எங்கே கத்தினேன்? நீங்க தான்..."

மீண்டும் குறுக்கிட்டார் அவர்.

"பேசாம போ! போயி ஓய்வெடு. நித்யமல்லி கிட்ட அவமாரியாதையாப் பேசுறதை நான் அனுமதிக்க முடியாது." என்றார்.

கோபமாக உள்ளே போய் விட்டான் வேங்கையன். என்னவோ இருக்கிறது என மௌனமாக காத்திருந்தான் ஆதித்தன். செம்மலர் வாயே திறக்கவில்லை.

"உம்! ஆதித்தா! எப்ப உங்களை நான் தனியாப் பார்க்கலாம்?" என்றாள் நித்யமல்லி.

"இன்னும் மூணு நாள் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கக் கூடாதுன்னு ஐயா சொல்லியிருக்காங்க. அதுக்குப் பிறகு முழு மூச்சா அந்த கொள்ளைக் கூட்டத் தலைவனைப் பிடிக்கப் போராடுவது தான் எனக்கு வேலை. அதுக்கு முன்ன உன்னைப் பார்க்க வரேன் நித்யமல்லி" என்றான்.

சட்டெனத் திரும்பிச் என்று விட்டாள் அவள். அவளது பேச்சு, நடத்தை எல்லாமே புதிராக இருக்க அவள் போவதையே பார்த்திருந்தான் ஆதித்தன். அவனுக்கு மனதில் லேசாக ஏதோ ஒன்று அசைவது போலிருந்தது. சிந்தனையில் ஆழ்ந்தான்.

"ஏதோ மூட நம்பிக்கை என்றாளே? ஒருவேளை இவை அனைத்துமே அதன் விளைவாகத்தான் இருக்குமோ? ஒரு பெண்ணால் இத்தனைக் கொடூரமாக இருக்க முடியுமா? அத்தனை சக்தியும் இருக்குமா? மற்றவர்களின் பேச்சால் அவள் மனது புண்பட்டிருக்கிறது போல. அதனால் தான் யாரிடமும் பேசத் தயங்குகிறாள். இத்தனை அழகும் அறிவும் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கையில் என்னென்ன சோதனை?" என எண்ணிக் கொண்டான்.

சட்டென சூரிய வெளிச்சம் வந்தாற்போலிருக்க ஏறிட்டு நோக்கினான். வயதான ஆனால் மிகவும் ஒல்லியான ஒரு பெண்மணி வெளியில் நின்றிருந்தார். தோற்றமே மரியாதை தருவதாக இருந்தது. தலையில் ஜடாமுடி , கையில் ருத்திராக்ஷ மாலை, மிகவும் பழசான நிறமே தெரியாத புடவை.

"அம்மா! நீங்க யாரு?" என்றான் ஆதித்தன்.

குரல் கேட்டு ஓடி வந்தார் வேம்புசாமி.

"சித்தரம்மா வாங்க! உள்ள வாங்க" என்று மிகவும் மரியாதையாக அழைத்தார்.

"ஆதித்தா! இவங்க தான் சித்தரம்மா! கும்பிட்டுக்கோப்பா" என்றார் மேலும். வணங்கினான் ஆதித்தன். அவனைக் கூர்ந்து பார்த்தாள் அந்தப் பெண்மணி.

"கட்டிப் போடுவேன்னு பார்த்தா நீயே கட்டுக்குள்ள அகப்பட்டுப்பே போலிருக்கே" என்றாள்.

"அம்மா?"

"உம்! நித்யமல்லி வந்திருந்தாளா?"

"ஆமா தாயே"

"அதான்! துர்நாற்றம் வீசுது. சரி முதல்ல இந்த ருத்திராட்சத்தை வேப்பிலையோட தண்ணியில போடு. அரை நாழிகை ஊறட்டும். அப்புறமா அந்தத் தண்ணியை குடில் முழுக்கத் தெளிச்சிரு. என்ன?" என்றாள் வேம்புசாமியை நோக்கி. பயபக்தியோடு அந்த ருத்திராட்சத்தைக் கையில் வாங்கினார் வேம்புசாமி. கண்களில் ஒற்றிக் கொண்டு உள்ளே விரைந்தார்.

"இப்படி உக்காருப்பா! உன்னோட கண்களை பரிசோதிக்குறேன். எங்கே உன் நண்பன்? அவனையும் கூப்பிடு" என்றாள் அந்த அம்மாள்.

"என் நண்பனுக்கும் கண் பார்வை போச்சுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் அம்மா?" என்றான் ஆதித்தன். அவனுக்கு அடங்காத ஆச்சரியம்.

"அந்த கொள்ளைக் கூட்டக் காரன் உங்க கண்ணுல சந்திரவள்ளிப் பொடியைத் தூவிட்டான்னு கண்டு பிடிச்சதே நான் தானே? உங்களுக்கு சிகிச்சையும் நான் தானே குடுக்கச் சொன்னேன்." என்றாள் அமைதியாக.

செம்மலரும், வேங்கையனும் உள்ளிருந்து வந்து வணங்கினார்கள்.

"நன்றாக வாழுங்கள்" என்று ஆசி கூறி விட்டு செம்மலரை கூர்ந்து பார்த்தாள் அந்த அம்மாள்.

"அம்மா! உன் காதல் தான் இவனைக் காப்பாற்ற வேண்டும்" என்றார் ஆதித்தன் பக்கம் கையைக் காட்டி. முகம் சிவந்தது செம்மலருக்கு. இப்போது அவள் பெயருக்கேற்ற செம்மலராக விளங்கினாள். ஆனால் வேங்கையனின் கவலை வேறு மாதிரியாக இருந்தது.

"அம்மா! காப்பாற்றுவது என்றால்? ஆதித்தனுக்கு ஏதாவது ஆபத்தா?" என்றான்.

"உங்கள் நட்புக்கு நான் தலை வணங்குகுறேனப்பா! நீயும் சேர்ந்து தான் நித்யமல்லியைக் கட்டணும்." என்றாள்.

"அம்மா! நீங்க வந்ததுல இருந்து எங்களுக்குப் புரியாத மாதிரியே பேசுறீங்க. நீங்க தான் ஐயா சொன்ன சித்தரம்மா, அப்படீன்னா நீங்க தான் எங்க சந்தேகங்களை தீர்க்கணும்" என்றான் ஆதித்தன்.

வசதியாக ஒரு மரப்பலகையின் மேல் பத்மாசமிட்டு அமர்ந்து கொண்டார் அந்தப் பெண்மணி. அவரது கண்கள் ஆதித்தன் மேல் நிலைத்தன.

"உன் சந்தேகங்கள் என்ன? கேளு?" என்றார் தோரணையாக.

"முதல்ல நித்யமல்லியைப் பத்தி நீங்க ஏன் தவறா சொல்றீங்க? அவ சாதாரணப் பெண் தானே? அவளுக்கு எப்படி நீங்க சொல்றா மாதிரி சக்தி இருக்க முடியும்?" என்றான். தூக்கிவாரிப் போட அவனைப் பார்த்தார்கள் வேங்கையனும் செம்மலரும்.

"அவ சாதாரணப் பெண்ணா இருந்தா நான் ஏன்ப்பா அவளைக் கட்டச் சொல்லப் போறேன்?" என்றார் சித்தரம்மா.

"அதான் எனக்கும் புரியல்ல. உங்களுக்கு அவளுக்கும் ஏதாவது விரோதம் இருக்கலாமே?" என்றான்.

"சிவ சிவா! நான் ஒரு சித்தராகி பல வருடங்களாச்சு. எனக்கு நட்போ பகையோ கிடையாது. மானுடம் வாழணும், அதான் என் லட்சியம்."

"அப்படீன்னா ஏன் நீங்க நித்யமல்லியைப் பத்தித் தப்பாப் பேசுறீங்க?"

"இப்ப நீ பேசலைப்பா! நித்யமல்லி உன்னைப் பேச வைக்கிறா. அவ பொண்ணே இல்லப்பா! கெட்ட சக்தி. அவ சக்தி அழிய இன்னும் 600 வருஷம் ஆகும். அதுக்குத்தான் கட்டச் சொல்றேன்" என்றாள்.

"அப்படி அவளைக் கட்ட முடியாட்டா என்ன ஆகும்?" என்றான் வேங்கையன்.

"விபரீதம் ஆகும் தம்பி! நித்யமல்லியோட லட்சியமே இந்தப் பூமியில பெண்ணினத்தை அழிக்குறது தான். அதுக்காக அவ என்ன வேணும்னாலும் செய்வா. அதுவும் இப்ப தம்பி ஆதித்தன் வந்த நிலையில அவளோட ஆத்திரம் இன்னமும் அதிகமாயிட்டுது."

"ஏன் பெண்ணினத்தை அழிக்கணும்னு நினக்குறா அவ?" என்றாள் செம்மலர் சின்னக் குரலில்.

"அவ இந்தப் பூமியில வந்த நோக்கமே அது தான். அஷ்ட கிரக சேர்க்கையின் போது ஏதாவது ஒரு உலகம் அழியும்மப்பா! நம்ம பூவுலகத்தைப் போல இன்னமும் 14 உலகம் இந்த அண்டவெளியில இருக்கு. அதுலயும் நம்மைப் போல உயிரினங்கள் இருக்கு. கடவுள் சக்தி அவங்களைக் காப்பாதுத்துன்னா அதுக்கு எதிரான சக்தியான தீய சக்தி இந்த உலகங்களை அழிக்கணும்னு தீவிரமா இருக்கு."

"சிவபெருமானே அழிக்குற கடவுள் தானே? அப்ப அவரும்...?."கேள்வியோடு நிறுத்தினான் ஆதித்தன். செம்மலரும் வேங்கையனும் பதறினார்கள்.

"இல்லப்பா! சிவபெருமான் தீய சக்தியே இல்ல. அவரு தீய சக்திகளை அழிக்கும் கடவுள். அதைத்தான் நீ தவறாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கே நீ!"

"அம்மா! நித்யமல்லி எப்படி பூமிக்கு வந்தா?"

"அதான் சொன்னேனேப்பா! அஷ்ட கிரக சேர்க்கைன்றது பல நூறாண்டுகளுக்கு ஒரு தடவை நடக்குற விஷயம். அப்ப தெய்வ சக்தியோட பலம் கொஞ்சம் குறையும், அதனால தீய சக்திகள் ஆர்ப்பாட்டமா இருக்கும். அப்படி ஒரு அஷ்ட கிரக சேர்க்கையின் போது பல தீய சக்திகள் சேர்ந்து ஒரு சக்தியை உருவாக்கி அதுக்கு வடிவம் கொடுக்க கர்ப்பப்பையை தேடுச்சுங்க. அப்பத்தான் நித்யமல்லியோட அம்மாவும் அப்பாவும் சேர்ந்தாங்க. அதுவும் பகல் வேளையில. அதுனால அந்த அம்மாவோட கர்ரப்பையில அந்த சக்தி சேர்க்கப்பட்டது."

"நீங்க சொல்றது எல்லாமே மாயாஜாலக் கதைகள் மாதிரி இருக்கு. இதை எப்படி நம்ப?" என்றான் ஆதித்தன்.

"நீங்க நம்பறதும் நம்பாம இருக்குறதும் உங்க இஷ்டம். நம்பினா வேலை சுலபம். இல்லைன்னா கடினம் அவ்வளவு தான்?" என்றார் அந்த அம்மாள்.

"நாங்க என்ன செய்யணும் தாயே?" என்றான் வேங்கையன்.

அப்போது கையில் குடத்தோடு உள்ளே வந்தார் வேம்புசாமி.

"இன்னும் அரை நாழிகை போகட்டும் வேம்பு. தாக்கம் ரொம்ப பலமா இருக்கு" என்றாள் சித்தரம்மா. குடத்தைக் கீழே வைத்து விட்டு வேங்கையனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார் அவர்.

"ஆதித்தா! உனக்கு இன்னும் கடமை ஒண்ணு பாக்கி இருக்கே?"

"ஆமா அம்மா! அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவனை எப்படியாவது கண்டு பிடிச்சு உயிரோடவோ இல்லை பிணமாகவோ அரசர் கிட்ட ஒப்படைக்கணும்."

"ஆமா! அதுவும் உன் கடமை தான். ஆனா அதை விட இந்த நித்யமல்லியைக் கட்டணும்னு சொன்னேனே?"

"அம்மா! தவறா நினைக்க வேன்டாம். எப்படி ஒரு பெண்ணால இந்த பூவுலகத்துல இருக்குற பெண்ணினத்தை அழிக்க முடியும்னு எனக்குத் தெரியல்ல. நீங்க தேவையில்லாமக் கவலைப் படுறீங்களோன்னு தோணுது" என்றான் ஆதித்தான்.

சித்தரம்மாவும் வேம்புசாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"அவ தீய சக்தின்னு நாங்க நிரூபிச்சா அவளைக் கட்டுவியா?" என்றார் வேம்புசாமி.

திகைத்துப் போய்ப் பார்த்தான் ஆதித்தன்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 13:

எப்படி ஒரு பெண்ணை தீய சக்தி என நிரூபிப்பார்கள்? ஏதேனும் மாய மந்திரம் வைத்திருப்பார்களோ? பாவம் அவள். இவர்களால் எத்தனை துன்பம் அவளுக்கு? அவன் நினைக்க நினைக்க மனதில் நித்யமல்லி மேல் அன்பு பெருகுவது போலிருந்தது. சட்டென கலைந்தான். அவனைத் தொட்டுக்கொண்டிருந்தாள் செம்மலர்.

"என்ன யோசனை அத்தான்? பெரியவுங்க சொல்றா மாதிரி அவளை தீய சக்தின்னு நிரூபிச்சுட்டா அவளைக் கட்டுவீங்களா?" என்றாள்.

"உம்! சரி! ஆனா இவங்க எந்த மாய மந்திரமும் பிரயோகிக்கக் கூடாது. அப்பத்தான் நம்புவேன். ஆனா அதுக்கு முன்னாடி கட்டு கட்டுன்னு சொல்றாங்களே? அப்படீன்னா என்னன்னு எனக்கு அவங்க விவரமாச் சொல்லணும்." என்றான்.

மூன்று ஜோடி விழிகள் சித்தரம்மாவை ஏறிட்டன.

"கட்டாயம் சொல்வோம்ப்பா! உனக்குச் சொல்லாம எப்படி உன்னால அந்தக் காரியத்தை சாதிக்க முடியும்? ஆனா நீ முழுமையா நம்பணும். அப்பத்தான் சொல்ல முடியும். இன்னமும் உன் மனசுக்குள்ள நாங்க நல்லவங்களா? இல்லை அவளான்னு ஒரு குழப்பம் இருக்கு. முதல்ல அதை நீக்கணும். அப்புறமா தான் மத்தது." என்றாள் சித்தரம்மாள்.

தன் மனதில் உள்ளதை எப்படி இந்த அம்மாள் அப்படியே படிக்கிறாள் என ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. அதோடு எப்படி இவர்கள் ஒரு மனிதப்பெண்ணை தீய சக்தி என நிரூபிக்கப் போகிறார்கள்? எனக் காண ஆவலாக இருந்தான்.

"சரி தாயே! நீங்க சொன்னபடியே நான் கேக்குறேன். இப்ப நான் என்ன செய்யணும் சொல்லுங்க" என்றான் பணிவாக.

அவனது அந்தப் பணிவான பேச்சு சித்தரம்மவுக்குப் பிடித்துப் போனது.

"நல்லது! முதல்ல நீங்க மூணு பேரும் பின்னடி இருக்குற கிணத்துல குளிச்சிட்டு அந்த ஈரத் துணியோட எங்க கூட வனப்பேச்சியம்மன் கோயிலுக்கு வரணும். அங்க வெச்சு நான் நித்யமல்லி யாருன்னு உங்களுக்குக் காட்டுவேன்." என்றாள்.

அதன்படியே செய்து விட்டு ஈர உடை சரசரக்க ஐந்து பேரும் அந்த வனப்பேச்சியின் கோயிலுக்குள் நுழைந்தார்கள். முதலில் செம்மலர், அவளைத் தொடர்ந்து வேங்கையன் அவனுக்குப் பின்னால் ஆதித்தன் என வரிசையாகச் சென்றார்கள். கடைசியாக சித்தரம்மாவும் வேம்புசாமியும் நுழைந்தார்கள். ஆதித்தன் நுழையும் போது ஏகப்பட்ட வவ்வால்கள் வந்து அவனை உள்ளே செல்ல விடாமல் சுற்றிச் சுற்றி வந்தன. எல்லாவற்றையும் தனது கைகளாலேயே விரட்டினான் ஆதித்தன். வேம்புசாமியும், சித்தரம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

உள்ளே நுழைந்த உடன் மூவரின் மேலும் அம்மனின் குங்குமத்தை தாராளமாகத் தெளித்தாள் சித்தரம்மாள். ஈர உடையில் குங்குமம் ஒட்டிக்கொண்டு பார்க்கவே அவர்கள் ஒரு மாதிரி காட்சியளித்தார்கள். மூவரையும் வெளிப்புறம் நோக்கி இருக்கும்படி அமர வைத்து விட்டு தான் அம்மனை நோக்கி அமர்ந்து கொண்டாள் சித்தரம்மாள். வேம்பு சாமி பக்கவாட்டில் அமர்ந்து கொண்டார்.

"செம்மலர்! இப்ப உன் அன்புக்கு உண்மையான சோதனையம்மா. நீ ஆதித்தனை எந்த அளவு நேசிக்குறேன்னு காமிக்க வேண்டிய நேரம். அவனை நீ எவ்வளவு காதலிக்குறேன்னு சொல்லு." என்றாள் சித்தரம்மாள்.

ஒரு வயதான பெண்மணி பேசும் பேச்சா இது? ஆண்கள் முன்னிலையில் அதுவும் அண்ணன் இருக்கும் போது ஒரு பெண் எப்படி தன் காதலைச் சொல்ல முடியும்? என எண்ணிப் பேசாமல் இருந்தாள்.

"செம்மலர்! வெக்கப்படவோ, யோசனை செய்யவோ நேரம் இல்ல. நீ அதைச் சொன்னாத்தான் நித்யமல்லிக்கு ஆங்காரம் வரும். அப்பத்தான் அவ இங்க வருவா." என்றார் வேம்புசாமி.

"ஐயா! மலர் இங்க சொல்லுறது நித்யமல்லிக்குக் கேக்குமா?"

"நீயே பார்த்துக்கோயேன்" என்று அவனிடம் சொல்லி விட்டு பேசுமாறு செம்மலரை ஊக்கினாள்.

மெதுவான குரல் தலை கவிழ்ந்தபடி பேசினாள் செம்மலர்.

"அத்தான்! நான் உங்களை எந்த அளவு காதலிக்கறேன்னு எனக்கு சொல்லத் தெரியல்ல. ஆனா ஒண்ணே ஒண்ணு சொல்றேன். உங்களுக்காக நான் உயிரையும் குடுப்பேன். உங்களைக் காப்பாத்த என்னால நெருப்புலயும் இறங்க முடியும். உங்களுக்குக் கெடுதல் செய்யணும்னு யாராவது நெனச்சாங்கன்னா அவங்களுக்கு முதல் எதிரி நான் தான். இதுக்கு மேல எனக்கு எதுவும் சொல்லத் தெரியல்ல அத்தான்." என்றாள். அவள் கண்களில் மெல்லிய நீர்.

அவளைத் தட்டிக்கொடுத்தாள் சித்தரம்மாள்.

"இனிமே வர ஒவ்வொரு நொடியும் ரொம்ப முக்கியம். செம்மலர். உண்மையிலேயே நீ சொன்னதை செஞ்சு காட்டுற நேரம் வந்தாச்சுன்னு வெச்சுக்கோ. எக்காரணம் கொண்டும் உன் அத்தானை விட்டுப் பார்வையை விலக்காதே! வேங்கையா நீ உன் தங்கச்சிக்குக் காவல்." என அவசரமாகப் பேசினாள் சித்தரம்மாள்.

அவள் பேசி முடிக்கு முன் வெளியில் பெரும் சுழற்காற்று வீசினாற் போல இருந்தது. ஆனால் கோயிலின் உள்ளே ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கின் சுடர் ஆடக் கூட இல்லை. சூறைக் காற்றின் நடுவே கறுப்பாக ஏதோ தெரிந்தது. சிறிது நேரத்தில் நித்யமல்லியின் முகம் அதில் தெரிந்தது. கண்ணீர் தோய்ந்த முகம்.

"ஆதித்தா! என்னைக் காப்பாத்து! இவங்க ஏதோ மந்திரம் போட்டு என்னை உங்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்குறாங்க. அப்பாவிப் பெண்ணை இப்படித் துன்புறுத்துறாங்களே! அதைப் பார்த்துக்கிட்டே இருக்கியே ஆதித்தா! வா! வந்து என்னைக் காப்பாத்து" என்று கதறியது.

வசியத்திற்கு ஆட்பட்டவன் போல எழுந்து நடக்க ஆரம்பித்தான் ஆதித்தன். ஓடிப் போய் அவனுக்குக் குறுக்கே நின்றாள் செம்மலர்.

"விலகு! விலகு! அந்தப் பொண்ணை நான் காப்பாத்தணும்" என்றான் ஆதித்தன்.

"அத்தான்! அவ பெண்ணே இல்ல! மாயப் பிசாசு. தயவு செஞ்சு அம்மன் சன்னதியை விட்டு வெளியே போகாதீங்க" என்று தடுத்தாள்.

"வழி விடு மலர்! அவளும் உன்னை மாதிரிப் பொண்ணு தானே? உனக்கு இரக்கமே இல்லியா?" என்று கத்தியபடி வெளியில் செல்ல முயன்றான். அவனது கரங்களைப் பிடித்து இழுத்தாள் செம்மலர்.

அந்த நிமிடம் அந்த மாய வசியம் ஆதித்தனிடமிருந்து விலகியது போலத் தோன்றியது. ஆனால் மீண்டும் பேசியது நித்யமல்லியின் அழுகை தோய்ந்த முகம்.

"ஆதித்தா! என் மேல உனக்கு இரக்கமே இல்லியா? அவ தான் உனக்கு உசத்தியா? கருணையும் இரக்கமும் இல்லாம இருக்கா அவ. பெண்மையே இல்ல அவ கிட்ட. தயவு செஞ்சு என்னைக் காப்பாத்து. எனக்கு உடம்பெல்லாம் எரியுது. நீ வந்தாத்தான் நான் உயிர் பிழைப்பேன். வா ஆதித்தா! தயவு செஞ்சு வா! வந்து எனக்கு உயிர் கொடு" என்று மெல்லப் பேசியது.

இப்போது ஆதித்தனின் மன நிலை முற்றிலும் பைத்தியம் பிடித்தவன் போல மாறியது. ஓடத் தொடங்கினான். அவனை இறுகப் பிடித்துக்கொண்டாள் செம்மலர். அவளுக்குத் துணையாக வேங்கையனும் வரவே திமிறினான் ஆதித்தன்.

"அவனை விட்டுடாதே செம்மலர். உனக்கு அவன் மேல உள்ள அன்பு அத்தனையும் சேர்த்து அவனைக் காப்பாத்து. எக்காரணம் கொண்டும் பிடியை விட்டுடாதே" என்று கத்தினாள் சித்தரம்மாள்.

"அம்மா! என்னால முடியல்ல! ரொம்ப திமிறுறாரு. தயவு செஞ்சு ஏதாவது செய்ங்க" என்று பதிலுக்குக் கத்தினாள் செம்மலர்.

அம்மனை நோக்கி தியானத்தில் அமர்ந்தாள் சித்தரம்மாள்.

"தாயே! இந்தக் குழந்தைகளை இக்கட்டிலிருந்து காப்பாற்று! இவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள். நித்யமல்லி என்ற கெட்ட சக்தி ஜெயிக்க விட்டு விடாதே" என பிரார்த்தித்தாள்.

இங்கேயோ நிமிடத்துக்கு நிமிடம் ஆதித்தனின் பலம் அதிகரித்தது. அதோடு நித்யமல்லியின் கதறலும் அதிகரித்தது. வேம்புசாமியும் சேர்ந்து பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார் ஆதித்தனை. மூவரின் பலமும் சேர்ந்தும் கூட அவனை தடுக்க முடியாது என்ற நிலை வந்தது. ஒரு நொடியில் இவர்கள் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளியில் பாய்ந்தன் ஆதித்தன். ஓவெனக் கூச்சலிட்டாள் செம்மலர். அவனது கால்கள் கோயிலுக்கு வெளியில் செல்ல இருந்த நேரம் ஒரு அதிசயம் நடந்தது. எங்கிருந்தோ வந்த சூலம் ஒன்று நித்யமல்லியின் முகத்தை குத்தியது. அதுவரையில் கண்ணீரோடு காட்சியளித்த அந்த முகம் ஒரு வினாடி சாதாரணமாகி பின்னர் பயங்கரமானது. ஆதித்தனை சட்டென உள்ளே இழுத்து விட்டாள் செம்மலர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த சூலம் நித்யமல்லியின் உருவத்தை விரட்டியது. பெரும் சூறைக் காற்று வீசி சற்று நேரம் இலைகள் செடிகள் எல்லாம் பறந்தன. பின்னர் எங்கும் அமைதி. நித்யமல்லியைக் காணவே இல்லை.

நடந்து முடிந்த சம்பவத்தின் கனம் தாங்காமல் சட்டென அமர்ந்து கொண்டாள் செம்மலர். அவள் கண்களில் இருந்து நீர் பெருகியது. கரங்கள் அம்மனை நோக்கிக் குவிந்தன. சித்தரம்மாள் மெல்லக் கண் விழித்தாள். தூண் ஒன்றின் ஓரமாக சாய்ந்து கிடந்தான் ஆதித்தன். அவன் மிகவும் சோர்வாக இருக்கிறான் என்பதை முகம் உணர்த்தியது. அம்மன் பாதத்தில் இருந்த சங்கிலிருந்து நீரை எடுத்து அவனுக்குப் புகட்டினார் வேம்புசாமி. வேங்கையனுக்கு இன்னமும் பயம் தெளியவில்லை.

அம்மனின் அபிஷேக நீர் உள்ளே போனதும் சற்றே எழுந்து அமர்ந்தான் ஆதித்தன்.

"அம்மா! இப்ப இங்க என்ன நடந்தது? நித்யமல்லி அவ்வளவு மாய சக்தி உள்ளவளா? என்னால நம்பவே முடியலியே?" என்றான் மிகுந்த சிரமப்பட்டு.

"ஆமா தாயே! என் தங்கை இங்கே பேசினது அவளுக்கு எப்படித் தெரிஞ்சது? எனக்கு ரொம்பக் கவலையாவும் பயமாவும் இருக்கும்மா! என் தங்கை வாழ்க்கை என்ன ஆகும்னே தெரியல்யே?" என்றான் குரலில் அத்தனை கவலை.

"முதல்ல நீங்க ரெண்டு பேரும் ஆசுவாசப்படுத்திக்கோங்க! அப்புறமாப் பேசலாம். உங்களால குடிலுக்கு நடக்க முடியுமா?" என்றார் வேம்புசாமி.

"முடியும் ஐயா!" என இருவருமே எழுந்து நின்றார்கள். நடக்கும் வழியெல்லாம் பயமாகத்தான் இருந்தது செம்மலருக்கு. எப்போது நித்யமல்லி வந்து தாக்குவாளோ என எண்ணி சுற்று முற்றும் பார்த்தபடி நடந்தாள்.

"இப்போதைக்கு அவ வர மாட்டா செம்மலர். ஆனா இனிமே நமக்கு அதிகம் சமயம் இல்ல. உடனடியா வேலையை ஆரம்பிக்கணும்" என்றாள் சித்தரம்மாள். மௌனமாக குடிலை அடைந்தனர் இளைஞர்கள் மூவரும். எலுமிச்சையும் தேனும் கலந்த பானத்தைக் கொடுத்தார் வேம்புசாமி மூவருக்கும். உடம்பில் தெம்பில் மனதில் சற்றே தெளிவும் வந்தார் போல இருந்தது அவர்களுக்கு.

"தாயே! நான் முதல்ல உங்களை தவறா நெனச்சதுக்கு என்னை மன்னிக்கணும். நித்யமல்லி சாதாரணப் பெண் இல்ல. இன்னும் சொல்லப் போனா அவ பெண்ணே இல்லேன்னு புரிஞ்சிக்கிட்டேன். " என்றான் ஆதித்தன்.

"செம்மலர்! உன்னோட அன்பு தான் அவனைக் காப்பாத்தினது. உன் தளராத மன உறுதிதான் காரணம்" என்றாள் சித்தரம்மாள். அவளை விழுந்து வணங்கினாள் செம்மலர். "மனம் போல மாங்கல்யம் அணிந்து பல்லாண்டு வாழம்மா" என்று மனதார வாயாற வாழ்த்தினாள் அம்மூதாட்டி. மனதில் நிம்மதி வந்தது மூவருக்கும்.

"அம்மா! இப்ப சொல்லுங்க! நித்யமல்லியை கட்டுறதுன்னா என்ன?" என்றான் வேங்கையன்.

"நான் முன்னயே சொன்னா மாதிரி வானத்துல இருக்குற சில கெட்ட கிரகங்களோட சேர்க்கையால உருவான சக்தி தான் நித்யமல்லி. அவ மனித கர்ப்பத்துல நுழைஞ்சதால அவளுக்கு சக்தி இன்னமும் அதிகமாயிடிச்சு. மனித உருவத்துல இருக்குற அவளை வெளியே நடமாட முடியாதபடி அதாவது அவ மீண்டும் புகை உருவமா மாற முடியாதபடிக்கு கட்டணும். "

"ஆமா! அதோட அவளால வெளியவே வர முடியாத மாதிரியும் செய்யணும். அவளுக்கு இன்னமும் குறைஞ்சது நாநூறு ஆண்டுகள் சக்தி இருக்கலாம்ன்றது என்னோட கணிப்பு. அதனால அத்தனை ஆண்டுகளும் அவ வெளியே வந்து தன் வேலையைக் காட்டாத மாதிரி செய்யணும்." என்றாள் சித்தரம்மாள்.

"எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு தாயே! நித்யமல்லி ஏன் எல்லாரையும் விட்டுட்டு ஆதித்தனை பிடிச்சுக்கிட்டா?" என்றான் வேங்கையன்.

"நல்ல கேள்வி வேங்கையா! இவனோட சாதக அமைப்பு அப்படி. இவன் பிறந்த நேரம் ரொம்பவே விசேஷமான நேரம். இவனோட ஆத்மாவுக்கு அபரிமிதமான சக்திகள் உண்டு. ஆனா இவன் நல்லவங்க கூட சேர்ந்தா எப்படி நிறைய நல்லது செய்ய முடியுமோ? அதே மாதிரி கெட்ட சக்திகளோட சேர்ந்தா அதை விட அதிகமா கெடுதல் செய்ய முடியும். அதனால தான் நித்யமல்லி இவனை கூட்டு சேர்த்துக்க விரும்பினா." என்றாள் சித்தரம்மாள்.

உடல் நடுங்கியது செம்மலருக்கு.

"ஆனா நீங்க ஏன் செம்மலர் தான் என்னை மீட்க முடியும்னு நெனச்சீங்க?" என்றான் ஆதித்தன்.

"உலகத்துல எல்லா சக்திகளையும் விட மிகப்பெரிய சக்தி அன்புக்கு உண்டு. தாயன்பு, காதலி காதலன் மேல வெக்கிற அன்பு இவைகளுக்கு காப்பாத்தற சக்தி உண்டு. அவளோட உடல் பலத்தால அவ உன்னைப் பிடிச்சு இழுக்கல்ல. அன்போட சக்தி. அது தான் உங்க மூணு பேருக்கும் பலத்தைக் கொடுத்தது." என்றாள்.

"தாயே! எனக்கு இன்னொரு சந்தேகம். அந்த கெட்ட சக்தியை இப்பவே அழிச்சா என்ன? நானூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அவ தன் தீய வேலையைச் செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்?" என்றாள்.

பதில் சொல்ல சித்தரம்மாள் வாயைத் திறக்கு முன்னர் பேசினான் ஆதித்தன்.

"அதுக்கு முன்னாடி எனக்கு ஒண்ணு தெரியணும் தாயே! அவளுக்கு என்ன வேணும்? எதுக்காக இந்த பூமிக்கு வந்திருக்கா?" என்றான்.

"இதை முன்னாடியே நீங்க கேப்பீங்கன்னு எதிர்பார்த்தேன். நம்ம பூமி இப்ப நல்ல சக்திகள் அதாவது கடவுட் சக்திகளால இயங்கிக்கிட்டு இருக்கு. எல்லாமே அதோட இடத்துல இருந்து தன் வேலையைச் செய்யுது. ஆனாலும் சில சமயம் வெள்ளம் வருது, கடல் பொங்குது இது மாதிரி இயற்கை உற்பாதங்கள் நடக்குது இல்லியா? இதுக்கெல்லாம் காரணம் கெட்ட சக்திகள் தான்."

"புரியல்ல"

"வானத்துல கெட்ட சக்திகளும் இருக்கத்தான் செய்யுது. இந்த மாதிரி அஷ்டகிரக சேர்க்கை அல்லது வால் நட்சத்திரம் விழும் போது அந்த சக்திகள் பூமியில நாசத்தை விளைவிக்குது. அதுலயும் நித்யமல்லி பூமியில பெண்களே இல்லாம செய்யணும்னு நினைக்குற சக்தி. பெண்கள் இல்லாம, இனப்பெருக்கம் இல்லாம, குடும்பம், அன்பு பாசம் இதெல்லாம் இல்லாம எல்லா மக்களும் பைத்தியம் பிடிச்சி ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டு சாகணும், அப்பத்தான் அவங்களை மாதிரி இருக்குற கெட்ட சக்திங்க பூமியை ஆக்கிரமிச்சு ஆட்டம் போட முடியும். இது தான் அவன் நோக்கம்." என்றாள் சித்தரம்மாள்.

உடலெங்கும் நடுக்கம் தோன்ற மௌனமாக அமர்ந்திருந்தனர் அனைவரும். தொடர்ந்தாள் சித்தரம்மாள்.

"அது மட்டும் இல்ல! அந்த கெட்ட சக்தி மனித உருவத்துல இருக்கு. அது ஆதித்தனோட உறவு கொண்டு கர்ப்பமாக நினைக்குது."

"ஹக்" என்ற ஒலி வந்தது செம்மலரிடமிருந்து.

"ஆமா செம்மலர்! அப்படி மட்டும் நடந்துட்டா இந்த உலகம் இன்னும் நூறு வருசத்துக்குள்ள அழிஞ்சிரும். ஏன்னா நித்யமல்லிக்குப் பொறக்கப் போற குழந்தை ஆண் பெண் சங்கமமா இருக்கும். அது தான் நடக்கக் கூடவே கூடாது" என்றாள்.

"ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத பிறவிங்களைச் சொல்றீங்களாம்மா?" என்றான் வேங்கையன்.

"இல்லப்பா! அவங்க தெய்வப்பிறவிங்க. கெட்ட சக்திங்க இல்ல. ஆனா நான் சொல்லுறது அந்த குழந்தை தனக்கு வேணும்ன்ற போது ஆணாகவும், தேவையான போது பெண்ணாகவும் மாறக் கூடிய சக்தியோட இருக்கும். இதனால என்ன ஆகும்னா, வம்சத்தை வளரவே விடாதுங்க இந்த சக்திங்க. தங்களைப் பெண்ணா ஆக்கிக்கிட்டு பிறக்குற குழந்தைகளை எல்லாம் ஆணாகவே பெற்றெடுப்பாங்க. இது இன்னும் பயங்கரம். யோசிச்சுப் பாருங்க" என்றாள் அம்மாள்.

செய்தியின் தாக்கம் பலமாக இருக்க அப்படியே அமர்ந்திருந்தனர் மூவரும்.

"இப்படி எதுவும் விபரீதம் நடக்காம இருக்குறது உங்க கையில தான் இருக்கு" என்றாள் அம்மாள்.

"சொல்லுங்க! நாங்க என்ன செய்யணும்?" என்றான் ஆதித்தன்.

"அவளைக் கட்டணும். அதாவது எப்படியிருந்தாலும் அவளுக்கு அழிவு இன்னும் நானூறு ஆண்டுகளுக்கு இல்லை. அதனால அவளை ஒரு இடத்துல கட்டி வெக்கணும். அதுக்கு நீங்க வனப்பேச்சியம்மன் கிட்ட கடுமையா விரதம் இருந்து அவளோட அருளைப் பெறணும். அப்புறம் என்ன செய்யணும்னு நான் சொல்றேன்." என்றாள் சித்தரம்மாள்.

"அம்மா! நானூறு வருசத்துக்குப் பிறகு என்ன ஆகும்?"

"அப்பவும் நீங்களே தான் வருவீங்க. வந்து இவளை அழிப்பீங்க. நானும் இருப்பேன். அதுக்குண்டான ஏற்பாடுகளை நான் செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன். ஆனா அதெல்லாம் இப்ப எதுக்கு? முதல்ல இப்ப நீங்க செய்ய வேண்டியது என்னன்னு சொல்றேன்."

"சொல்லுங்கம்மா" என்று பய பக்தியுடன் கை கூப்பினர்.

சொல்ல ஆரம்பித்தாள் சித்தரம்மாள்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 13:

சித்தர்மாள் சொன்னது மிக எளிமையான விஷயமாக இருந்தது.

"நித்யமல்லியோட சக்தி நாளாக ஆக அதிகரிக்குமே தவிர குறையாது. அவளால மனித குலத்துக்கு மட்டும் தான் ஆபத்துன்றதால மனிதர்களால மட்டும் தான் அவளைக் கட்ட முடியும்." என்றாள் சித்தரம்மாள்.

"அப்படீன்னா எதுக்கு நீங்க எங்களைத் தெர்ந்தெடுத்தீங்க?" என்றான் ஆதித்தன்.

"நல்ல கேள்வியப்பா! உன்னோட சாதக அமைப்பு எனக்குத் தெரியும். உங்கிட்ட தெய்வ பலமும் அதீத துணிச்சலும் இருக்கு. இது எல்லாத்துக்கும் மேலே எப்படி அஷ்ட கிரக சேர்க்கையின் போது தீய சக்திகள் தங்களோட சக்தியை திரட்டி பூமிக்கு அனுப்புமோ, அதே போல அதுக்கு முன்னாலயே அதை அழிக்கக் கூடிய ஒரு சக்தியை நல்ல சக்திகள் உருவாக்கிடும். அப்படி உருவாக்கிய நல்ல சக்தி தான் நீ" என்றாள்.

கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது ஆதித்தனுக்கு.

"என்ன சொல்கிறாள் இந்த அம்மாள். நான் மனிதன் அல்லவா? நித்யமல்லியைப் போல ஒரு சக்தி ஆனால் நல்ல சக்தி. வெறும் சக்தியா நான்? எனக்கென உருவம் இருக்கிறதே? மனம் இருக்கிறதே?" என யோசித்தான்.

"நீ யோசிக்குறது எனக்குப் புரியுதுப்பா! நீ வெறும் சக்தி இல்ல. நீ முழுமையான ஒரு மனிதன். ஆனாலும் உனக்குள்ள அந்த திவ்ய சக்திகள் இருக்கு. அதனால தான் உன்னை நான் தேர்ந்தெடுத்தேன்."

"சொல்லுங்க அம்மா! கேக்கக் கேக்க, அற்புதமா இருக்கு"

"இல்லாம இருக்குமா? எல்லாமே கடவுளோட அற்புதம் தானே?" என்றார் வேம்புசாமி.

"தாயே! நாங்க என்ன செய்யணும்?" என்றான் வேங்கையன்.

"சொல்றேன் வேங்கையா! நீயும் உன் தங்கையும் தான் ஆதித்தனுக்கு துணையா இருக்கணும். "

"கண்டிப்பா இருப்போங்க"

"சரி! இனியாவது குறுக்க பேசாமக் கேளுங்க. நித்யமல்லிக்கு இன்னும் 400 ஆண்டுகள் அழிவே இல்ல. ஆனா அவளை செயல்பட விடாம நாம கட்ட முடியும். அதை ஆதித்தன் தான் செய்யணும். கட்டுறதுன்னா என்னவோ கயத்தால கட்டிப்போடுறது இல்ல. பல வகையான மந்திரங்கள் சொல்லி, அவளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு வரவே முடியாத மாதிரி செய்யணும். அவளோட சக்தி அந்த எல்லையைத் தாண்டி வர முடியாதபடி செய்யணும். அதான் கட்டுறது."

"புரியுதுங்கம்மா! ஆனா அதை நாங்க எப்படிச் செய்யணும்? எங்கே செய்யணும்?"

"சொல்றேன். பாவநாசக் காட்டுக்குள்ள கன்னிமார் துறையில இருந்து தள்ளிப்போனா பயங்கரமான காட்டுப்பகுதி. அங்க நம்ம ராசாவுக்கு சொந்தமான மாளிகை இருக்கு. அந்த மாளிகைக்குள்ள ஒரு அறையில தான் நித்யமல்லியை நீங்க கட்டி வெக்கணும். இதை ரொம்ப கவனமா, கொஞ்சம் கூட அலட்சியம் இல்லாம செய்யணும். ஏன்னா சின்னத் தவறு நேர்ந்தாக்கூட ஆதித்தன் உயிருக்கு ஆபத்து. அவனுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா அப்புறம் அவளைக் கட்டவே முடியாது."

உடல் நடுங்க அமர்ந்திருந்தனர் மூவரும்.

"நித்யமல்லியை எப்படியாவது அந்த மாளிகைக்குள்ள அழைச்சுக்கிட்டுப் போயிரணும். அங்க வெச்சு நான் பல பூஜைகள் செய்வேன். அதுல சில மலர்கள் வரும், சில மூலிகைகள் வரும். அதை வெச்சு தான் பந்தனக் கட்டு போடணும். அதை ஆதித்தனும், செம்மலரும் சேர்ந்து தான் செய்யணும். அதுக்குக் காவலா வேங்கையன் இருக்கணும்."

"எல்லாம் சரி தாயே! ஆனா நித்யமல்லியை எப்படி அங்க கூட்டிக்கிட்டுப் போறது?"

"இங்க தான் நீங்க உங்க புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தணும். அவளை நம்ப வைக்கணும்." என்றாள் சித்தரம்மாள்.

குழப்பமாக இருந்தது ஆதித்தனுக்கு. ஆனால் சட்டெனப் பேசினாள் செம்மலர்.

"தாயே! எனக்கு ஒரு யோசனை தோணுது. நித்யமல்லிக்கு ஆதித்தன் மேல ஒரு அபிப்பிராயம் இருக்குன்னு நெனக்கிறேன், அதனால அவரு அந்தப் பொண்ணு கூட நல்லாப் பேசிப் பழகினா அவளுக்கு நம்பிக்கை வராதா?" என்றாள் செம்மலர்.

"சே! ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன் நான் மலர்" என்றான் ஆதித்தன்.

"இதை விட்டா வேற நல்ல யோசனை இருந்தா சொல்லுங்க. ஏன்னா நித்யமல்லி சுய விருப்பத்தோட வந்தா தான் அவளைக் கட்டுறது சுலபம். இல்லேன்னா நாம நிறையக் கஷ்டப்படணும்." என்றாள் சித்தரம்மாள்.

"வேற யோசனை எதுவும் வராட்டாலும் கூட இதை நான் செய்ய மாட்டேன். இது ரொம்பக் கேவலம்." என்றான் ஆதித்தன் தீர்மானமாக.

சற்று நேரம் மௌனம் நிலவியது அங்கு.

"வேறு வழி இல்ல. அப்ப நாம கடுமையான வழியில போராட வேண்டியது தான்." என்றான் வேம்புசாமி.

"ஹூம்! கடவுளோட சித்தத்தை யாரால மாத்த முடியும்?" என்றாள் சித்தரம்மாள்.

"ஆதித்தா! நீ முழுக்க முழுக்க சம்மதிச்சு தான் இந்த ஆபத்தான பணியில இறங்குற. அதை நல்லா நெனவு வெச்சுக்கோ."

"முழு சம்மதம் தாயே! யாரையும் ஏமாத்தாம செய்ய முடியும்னா, அது எத்தனை ஆபத்தானதா இருந்தாலும் நான் தயார். அதுல என் உசுரே போனாலும் சரி."

"உன் உசிர் இப்ப இந்த மனித குலத்துக்கே ரொம்ப முக்கியம்ப்பா! சரி! நீ அவளை அங்க கூட்டிக்கிட்டு வர மாட்டேன்னு சொன்னதால நாம நித்யமல்லியை அங்க வர வெக்கிற சாங்கியத்தைச் செய்யணும்."

"என்ன சாங்கியம்?"

"ரத்த பலி குடுக்கணும்."

"அம்மா" என்று அலறி விட்டாள் செம்மலர்.

"இல்ல செம்மலர். நீ நினைக்குறா மாதிரி உசிரை எடுக்குற பலி இல்லை இது. ஆதித்தனோட ரத்தம் தான் அவளை அங்க வர வெக்கும். நமக்கு எந்த அளவு ஆதித்தன் உசிர் முக்கியமோ அதை விட நித்யமல்லிக்கு முக்கியம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில். வர அமாவாசைக்குள்ள நாம நித்யமல்லியைக் கட்டணும். இல்லேன்னா ஆதித்தனை அவ வசியக்கட்டுக்குள்ள கொண்டு வந்து அவனோட சேர்ந்து கர்ப்பமாயிருவா. அது மட்டும் நடந்திருச்சுன்னா நம்மால அவளைக் கட்டவே முடியாது, அதோட இந்த உலகம் இன விருத்தி இல்லாம அழிஞ்சும் போயிரும்." என்றாள்.

"தாயே! தயவு செஞ்சு நீங்க தவறா நினைக்கல்லேன்னா, நாம இப்ப என்ன செய்யணும்னு தெளிவா சொல்லுங்களேன்."

"மன்னிக்கணும். எனக்கு இருக்குற ஆர்வத்துல சில விஷயங்கள் உங்களுக்குப் புரியாதுன்ற நினைப்பே இல்ல. முதல்லயே சொன்னா மாதிரி நித்யமல்லியோட நோக்கமே இந்தப் பூமி முழுக்க தீய சக்திகள் நிறைஞ்சிருக்கணும்றது தான். அதுக்கு அவ ஆணாகவும், பெண்ணாகவும் மாறக் கூடிய குழந்தைகளைப் பெறணும். அதை எந்த மனிதனோடும் சேர்ந்து பெற முடியாது. திவ்ய சக்திகள் நெறஞ்ச ஒரு ஆண்மகன் கூடத்தான் அவ உறவு கொள்ளணும். அது தான் ஆதித்தன். அதுவும் எந்த நாளுல வேணும்னாலும் உறவு கொள்ளலாம்ன்றதும் கிடையாது. ஆடி மாத அமாவாசை முடிஞ்ச மூணாம் நாள் தான் அதுக்கான நாள். நாம அதுக்குள்ள அவளைக் கட்டிரணும். இல்லேன்னா அமாவாசை அன்னைக்கு அவ ஆதித்தனை முழுசுமா வசியம் செஞ்சிருவா. அதுக்குப்பிறகு நாம என்ன செஞ்சாலும் பிரயோசனம் இல்ல." என்றாள்.

அந்த இடமே பயங்கரமான அமைதியில் மூழ்கியது. அவரவர் மனதில் பல விதமான எண்ணங்கள்.

"ஆடி அமாவாசை என்னைக்கு வருது?" என்றான் வேங்கையன். அவன் குரலில் நடுக்கம்.

"இன்னும் பத்து நாள்ல வருதுப்பா." என்றார் வேம்பு சாமி.

"நமக்கு நேரம் ரொம்பக் குறைவா இருக்கு. அதனால நாம வேலையை உடனடியா ஆரம்பிக்கணும். முதல்ல ஆதித்தன் செம்மலர் ரெண்டு பேரும் கடுமையான விரதம் இருக்கணும். அதுக்கே மூணு நாள் போயிரும். அதன் பிறகு தான் சாங்கியங்கள் ஆரம்பமாகும்." என்றாள் சித்தரம்மாள்.

"சாங்கியங்களை அந்தந்த நேரம் வரும் போது அம்மா சொல்லுவாங்க. இப்ப முதல்ல விரதம் எப்படி இருக்கணும்னு மட்டும் கேட்டுக்குங்க." என்றார் வேம்புசாமி.

"சொல்லுங்கம்மா" என்றனர் செம்மலர், ஆதித்தன் இருவரும்.

"விரதம் இருக்கப் போற அன்னைக்குக் காலையில மூணு மணிக்கு எந்திரிச்சு தாமிரபரணியில் முழுக்குப் போடணும். அப்படி முழுக்குப் போடும் போது நான் ஒரு மந்திரம் சொல்லித்தருவேன், அதை சொல்லிக்கிட்டே முழுகணும். சத்தமா சொல்லக் கூடாது, வாய்க்குள்ள சொல்லணும்."

"சரி தாயே"

"பிறகு நேரா வனப்பேச்சியம்மன் கோயிலுக்குப் போயி விளக்கேத்தி பூஜை செய்யணும். முதல் நாள் செண்பக மலர்களைக் கொண்டும், இரண்டாம் நாள் செம்பருத்தி மலர்களைக் கொண்டும், மூணாம் நாள் செவ்வரளி மலர்களைக் கொண்டும் பூஜை செய்யணும். பூஜை செய்த மலர்களை பத்திரமா மறு நாள் சுத்தமான ஒரு துணியில முடிஞ்சு வெச்சுக்கணும். எக்காரணம் கொண்டும் தூக்கிப் போடக் கூடாது."

"சரி தாயே"

"முதல் நாள் பூஜையின் போது பிரச்சனை எதுவும் வராது. பூஜை முடிஞ்சதுமே நீங்க அவளை அழிக்க விரதம் இருக்கீங்கன்னு தெரிஞ்சிரும். அதனால இரண்டாம் நாள், மூணாம் நாள் பூஜையைச் செய்ய விடாமல் தடுக்கப் பார்ப்பா. அப்பத்தான் வேங்கையன் உதவி தேவை."

"சொல்லுங்க தாயே" என்றான் வேங்கையன் பணிவாக.

"அவ ஆதித்தனையோ, செம்மலரையோ பார்த்துடக் கூடாது. பார்த்துட்டா பரிகார பூஜை அதுக்கான சாங்கியம்னு நாள் அதிகமாயிரும்,அமாவாசை வந்திரும். அதனால நீ எக்காரணம் கொண்டும் ஆதித்தனையோ செம்மலரையோ நித்யமல்லி கண்ணுல படாமக் காப்பாத்தணும்." என்றாள் சித்தரம்மாள்.

"அதை நான் எப்படிச் செய்யணும் அம்மா?"

"உனக்கும் சில பூஜைகள் இருக்கு. நீ வனப்பேச்சியோட தளபதியான சங்கிலி கருப்பனையும், சொரி முத்தையனையும் நெனச்சு அவங்க கோயில்ல நாளையில இருந்து விரதம் இருக்கணும். மூணு நாளு நீ கோயிலை விட்டு வெளிய வரவே கூடாது. வெறும் பழங்கள் மட்டும் தான் ஆகாரம். மூணாம் நாளு வேம்பு சாமியும் நானும் வந்து உனக்கு புனித நீராட்டுவோம். அப்ப சொரிமுத்தையனார் காலடியில வெச்சு பூஜிச்சா வாளை நீ எடுத்துக்கணும். அந்த வாள் உன் கையில இருக்குற வரை நித்யமல்லியால உன்னை எதுவும் செய்ய முடியாது." என்றாள் சித்தரம்மாள்.

பயபக்தியோடு கேட்டுக்கொண்டிருந்தார்கள் மூவரும்.

"உன்னோட சாங்கியம் முடிஞ்சு நீ வாளை எடுத்தப் பிறகு தான் செம்மலரும், ஆதித்தனும் வனப்பேச்சி கோயில்ல விரதம் இருப்பாங்க. அதனால உன்னோட பூஜைக்கும் விரதத்துக்கும் பங்கம் வராம பார்த்துக்கணும். இந்தப் பொறுப்பை செம்மலர் தான் எடுத்துக்கணும்." என்றார் வேம்புசாமி.

"ஐயா! செம்மலர் பாவம் சிறு பெண். நானிருக்கும் போது அவ எதுக்கு இந்த வேலையைச் செய்யணும்? இந்தப் பொறுப்பை எங்கிட்ட கொடுங்களேன்" என்றான் ஆதித்தன்.

"உன் வீரத்து மேல நம்பிக்கை இல்லாம இல்ல. இன்னில இருந்து நீ நித்யமல்லி கண்ணுல படவே கூடாது. அதனால தான் செம்மலரைச் சொன்னேன். கவனமாக் கேளு செம்மலர். உங்கண்ணன் சொரி முத்தையனார் கோயில்ல பூஜை செய்யுற மூணு நாளும் நீ கோயில் வாசல்ல காவல் இருக்கணும். அதுவும் 24 மணி நேரமும் இருக்கணும். "

"சரிங்க"

"நல்லது! இப்ப என்ன செய்யணும்னு நீங்க தெளிவா இருக்கீங்களா?"

"இருக்கோம் தாயே! ஆனாலும் பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யுது."

"இருக்கும் இருக்கும். ஆனா அதை இப்ப விளக்க நேரமில்ல. நாங்க எப்பவும் உங்க கூடத்தானே இருப்போம். அதனால உங்க சந்தேகங்கள் எல்லாத்துக்கும் அப்பப்ப விளக்கம் சொல்றேன்." என்றாள் சித்தரம்மாள்.

பணிவோடு கேட்டுக்கொண்டனர் மூவரும்.

"வேங்கையா நாளைக்கு அதிகாலை மூணு மணிக்கு நீ முதல்ல சொரி முத்தையனார் கோயிலுக்குப் போ. அதுக்குப் பின்னால இருக்குற தாமிரபரணியில முழுகிட்டு ஈரத்துணியோட சங்கிலி கருப்பு அப்புறம் சொரி முத்தையன் இவங்க ரெண் டு சன்னதியும் தெரியுறா மாதிரி ஒரு இடம் இருக்கு. அங்க உக்காந்து நான் சொல்லித்தர மந்திரத்தை சொல்லு."

"அப்படியே செய்யுறேன் தாயே"

"நல்லது! உண்மையான பக்தியோட நீ சொன்னா, உனக்குக் கட்டாயம் சொரி முத்தையன் இல்லைன்னா சங்கிலி கருப்பன் தரிசனம் கிடைக்கும். கனவுலயாவது வருவாங்க. அப்ப அவங்க என்ன சொல்றாங்கன்னு கவனமாக் கேட்டுக்கோ. அது தன் நமக்கு வழி காட்டி. என்ன?" என்றான்.

பயமும் பதட்டமும் வந்து சூழ்ந்து கொண்டது வேங்கையனை.

"அம்மா! நான் சாதாரண மனிதன். உங்களை மாதிரி சித்தரோ இல்லை சாமி மாதிரி பக்திமானோ இல்ல. ஒரு வேளை என் கனவுல சாமிங்க வராமலே போயிடிச்சின்னா?" என்றான் கலவரத்தோடு.

சித்தரம்மாளும் வேம்பு சாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"கவலைப்படாதேப்பா! நீ ஒரு நல்ல காரியத்துக்காகத்தானே சாமியைக் கும்புடப் போற? உன்னோட சுயநலம் இதுல இல்ல. அதனால கட்டாயம் சொரி முத்தையன் மனம் இரங்குவான். நீ மட்டும் நம்பிக்கையோட இரு. இந்தா இந்த தாயத்தை வாங்கிக்கோ. இதை உன் கழுத்துல கட்டிக்கோ. மனசு சஞ்சலப்படாது" என்றார் வேம்புசாமி.

இரு கரங்களையும் நீட்டி அதை வாங்கிக்கொண்டு உடனே கழுத்தில் கட்டிக்கொண்டான்.

"தாயே! எங்கண்ணனை நான் எப்படிக் காவல் காக்கணும்னு சொல்லலியே?" என்றாள் செம்மலர்.

"சொல்றேன் செம்மலர்! உனக்கும் உன் அண்ணனுக்கும் தொப்புள் கொடி உறவு. அது மத்த உறவுகளை விட பலமானது. அதனால தான் நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்."

"சொல்லுங்க அம்மா"

"இப்ப முதல்ல நான் உனக்கு ஒரு மந்திரம் உபதேசிப்பேன். இன்னைக்கு சாயங்காலம் குளிச்சிட்டு விளக்கேத்தி வணங்கு. விளக்கு முன்னால நான் சொல்ற மந்திரத்தைச் சொல்லி தியானம் பண்ணு. நல்ல நினைவு வெச்சுக்கோ உங்கண்ணன் உயிர், உன் அத்தான் உயிர் எல்லாமே உன் கையில தான் இருக்கு. அதனால வனப்பேச்சி கிட்ட உனக்கு சக்தி கொடுக்கச் சொல்லி மன்றாடு. அவ உனக்கு சில நிமித்தங்கள் தருவா. அதை வெச்சு உன்னோட ஆயுதம் எதுன்னு உனக்குத் தெரியும். " என்றாள்.

வேம்புசாமி பேசினார்.

"மூணு பேரும் இப்ப நல்லா ஓய்வு எடுத்துக்குங்க. வரப்போற ஒரு வாரமும் நமக்கு ரொம்ப சவாலான வாரம். நமக்கு உடல் பலம், மன பலம் ரெண்டும் தேவைப்படும். தேவையான ஓய்வை இப்பவே எடுத்துக்குங்க" என்று சொல்லிக் கிளம்பினார்.

"செம்மலர்! மாலை பொழுது சாயும் நேரம் நான் வந்து உன்னை அழைச்சுக்கிட்டுப் போய் சாங்கியங்களை ஆரம்பிச்சுருவேன். சாங்கியம் ஆரம்பிச்சாசுன்னா நீங்க மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கக் கூடாது. செம்மலர் என் கூட இருப்பா. வேங்கையனை வேம்புசாமி தங்க வெச்சுப்பான். நீ மட்டும் தனியா இருப்பியா ஆதித்தா? இல்லை உன் கூடத் தங்குறதுக்கு யாரையாவது ஏற்பாடு செய்யட்டுமா?" என்றாள் சித்தரம்மாள்.

"இல்லம்மா! எனக்கு பயமில்ல. நான் தனியா வாழ்ந்து பழகுனவன் தான்." என்றான் ஆதித்தன்.

"உம்! நல்லது! மாலை பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டனர் சித்தரம்மாளும் வேம்புசாமியும். அவர்கள் போனதும் ஆதித்தன் பேச ஆரம்பித்தான்.

"வேங்கையா! இவங்க எதையுமே தெளிவா சொல்ல மாட்டேங்குறாங்க. இவங்க உண்மையிலேயே நல்லவங்க தானா? இல்லை நம்மைப் பயன்படுத்தி ஏதாவது கெடுதல் செய்ய நினைக்கிறாங்களா?" என்றான்.

செம்மலர் பதறிப் போனாள்.

"அத்தான்! விளையாட்டுக்குக் கூட அப்படிப் பேசாதீங்க. சித்தரம்மா கடவுள் நம்பிக்கை உள்ளவங்க. கோயில்ல தானே நம்மை கும்பிடச் சொல்றாங்க? இதுல என்ன கெடுதல் வர முடியும்?" என்றாள்.

"உம்! நீ சொல்றதும் சரி தான். பார்ப்போம். ஏதாவது விபரீதமா நடக்கப் போகுதுன்னு தோணுச்சுன்னா உங்களைப் பாதுகாக்குறது என் கடமை." என்றான் ஆதித்தன்.

மதிய உணவு அருந்தி விட்டு தென்றல் தாலாட்ட மெல்ல உறங்கிப் போனார்கள் மூவரும்.

அங்கே நித்யமல்லியின் அருகே ஒரு சிறு பெண் அமர்ந்திருந்தாள். இங்கே நடந்தது அத்தனையும் அவள் சொல்லச் சொல்ல கண்கள் சிவப்பேறின முகம் பயங்கரமாக மாறியது அவளுக்கு.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 14:

கண்கள் சிவப்பேறிய நிலையில் நித்யமல்லியைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவள் அருகில் பொன்வண்டு , ஆம்! இறந்து போன பொன்வண்டே தான் அமர்ந்திருந்தாள்.

"ஓஹோ! என்னைக் கட்டப் போறாங்களா? அதுவும் ஆதித்தன் மூலமாவா? எப்படி முடியும்னு நான் பார்க்கறேன். பொன் வண்டு. நீ எப்பவும் கவனத்தோட இரு. அங்க செம்மலர்னு ஒரு பொண்ணு இருக்கா. அவளை எப்படியாவது தீர்த்துக் கட்டிடு. அப்படி செஞ்சா வேங்கையனால சாங்கியம் செய்ய முடியாது. " என்றாள்.

பொன்வண்டு ரத்த வெறியோடு சிரித்தாள்.

"அவளைப் போயா? அவ வெறும் பூச்சி. என் விரலால நசுக்கித் தூக்கிப் போட்டுருவேன்." என்றாள்.

"அப்படி சுலபமா நினைக்காதே! அவ கிட்ட அன்பு, காதல் இதெல்லாம் தான் நிறைய இருக்கு. அவைகள் எல்லாமே நமக்கு எதிரான ஆயுதங்கள் தான். அன்புக்கு நிறைய சக்தி உண்டு. அதனால அவளை எப்படியாவது ஆதித்தன் மேல வெறுப்பு வரா மாதிரி செஞ்சுரு. அப்ப அவ வெளிய வருவா. அதுக்குப்பிறகு நான் சொல்லவே தேவையில்ல." என்றாள்.

பொன்வண்டு காற்றில் பறந்தாள்.

அங்கே வேங்கையன் குளித்து சொரிமுத்தையன் சன்னதியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். பொன் வண்டு நேரே செம்மலரைக் குறி வைத்தாள். அவள் அப்போது தான் சித்தரம்மாளின் குடிலில் இருந்து வெளியில் வந்து வனப்பேச்சிக்குப் பூக்கள் பறிக்கப் போனாள்.

"ஏய்! பொண்ணே" என்ற குரல் மட்டும் கேட்க திடுக்கிட்டுப் பார்த்தாள் செம்மலர்.

"ஏய்! எங்கே பார்க்குற? நான் தான் உன் பக்கதுலயே இருக்கேனே?" என்ற குரல் மீண்டும் வர சுற்று முற்றும் பார்த்தாள்.

செம்மல்ர் நின்றிருந்த மரத்தின் மேலிருந்து குரல் வரவே பயந்து போனாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பார்த்த போது யாரோ ஒரு சிறு பெண் அமர்ந்திருப்பது பட்டது. சிரிப்பு வந்து விட்டது செம்மலருக்கு. இந்தப் பெண்ணுக்குப் போயா பயந்தோம்? என எண்ணிக் கொண்டாள்.

"உனக்கு என்ன வேணும்? மரத்துல இருந்து எறங்கத் தெரியலியா?" என்றாள் செம்மலர்.

"ஹ! எனக்கா தெரியாது?" என்று சொல்லி அடுத்த கணம் தரையில் செம்மலரின் அருகில் வந்து நின்றது அந்த உருவம்.

இம்முறை நிஜமாகவே பயந்து போனாள் செம்மலர். ஓட முயன்றாள் கால்கள் ஒத்துழைக்கவில்லை.

"பயப்படாதே! உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன். ஏன்னா நீ இந்தப் பகுதிக்கே ராணியாகப் போற" என்றது அந்த உருவம்.

வாயே திறக்க இயலாமல் கலக்கத்தில் இருந்தாள் செம்மலர்.

"பேச மாட்டியா? பேசாட்டிப் போ! நான் ஒரு சின்னப் பொண்ணு. எங்கிட்டப் போயி பயப்படுறியே? நீ எப்படி ராணியாவே?" என்றது மீண்டும்.

எதிரில் நிற்கும் உருவத்தைப் பார்த்தாள் செம்மலர். சிறு பெண். வயது பத்துக்குள் தான் இருக்கும். அவளும் சாதாரணமாகப் பேசவே பயம் தெளிந்தது.

"நீ யாரு? எதுக்கு என்னைப் போயி ராணீன்னு சொல்ற?" என்றாள் மெல்ல.

"என்னைத் தெரியலையா? எனக்கும் சிங்கப்பட்டி தான் ஊரு. பேரு பொன்வண்டு. உன்னை நம்ம ராசாவுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. உன்னையே கல்யாணம் கட்டிக்கணும்னு நினைக்கிறாரு. உனக்கு சம்மதமான்னு கேட்டுட்டு வரச் சொன்னாரு." என்றாள் அந்தப் பெண்.

குதூகலமாக இருப்பதற்கு பதில் கோபம் வந்தது செம்மலருக்கு.

"நம்ம ராசா அப்படிப்பட்டவரு இல்ல. அப்படியே இருந்தாலும் இந்த விஷயத்தைப் போயி ஒரு சின்னப் பொண்ணு கிட்ட சொல்லுவாரா?" என்றாள் செம்மலர்.

"நீ என்னைத் தவறாவே புரிஞ்சுக்கிட்டு இருக்கே மலர்! நம்ம ராசாவுக்கு வயசு 28 தான் ஆகுது. கல்யாணம் பண்ண வேண்டிய வயசு தானே? அதை அவர் எங்கிட்ட ஏன் சொன்னாருன்னா எங்கம்மா அவருக்கு சித்தி. நான் தங்கச்சி. அதான் ரகசியமா என்னை அனுப்பியிருக்காரு" என்றாள் அந்தப் பெண்.

"இதைப் பாரு. நீ சொல்றது உண்மையாவே இருந்தாலும் எனக்கு இதுல இஷ்டமில்ல. நான் ஆதித்தனைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்." என்றாள் திடமாக.

"ஆதித்தன் சாதாரண உப தளபதி. ஆனா நீ ராசாவைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா எல்லாரும் உன் காலடியில கெடப்பாங்க. புடவைங்க, நகைங்க, தினமும் விதம் விதமான சாப்பாடு, கூப்பிட்ட குரலுக்கு வேலலையாட்கள்னு உன் வாழ்க்கையே மறிடும். நல்லா யோசிச்சுப் பாரு." என்றாள் அந்தப் பெண் மீண்டும்.

"நீ என்ன சொன்னாலும் என்னால என் மனசை மாத்திக்க முடியாது. நான் ஆதித்தனைத்தான் கட்டுவேன்." என்றாள் செம்மலர்.

பொன்வண்டின் முகம் பயங்கரமாக மாறியது.

"நீ இப்படிப் பேசப் பேச உன் அத்தான் ஆதித்தனோட உசிருக்கு ஆபத்து. உன் அண்ணன் வேற கோயிலுக்கு உள்ள போயிட்டான். எப்படி அவனைக் காப்பாத்துவ? நீ ஆதித்தனைப் பார்ப்பியா? இல்லை உன் அண்ணனைப் பார்ப்பியா?" என்றாள் பயங்கரமாக.

உடல் நடுங்கியது செம்மலருக்கு.

"ஐயையோ! அவங்க ரெண்டு பேரையும் எதுவும் செஞ்சிடாதே! நீ சொன்னபடி நான் கேக்குறேன்."

"நான் என்ன செய்யப் போறேன் மலர்? நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா ராஜாவே அவங்களைக் கொலை செஞ்சிருவாரு." என்றாள்.

"இப்ப நான் என்ன செய்யணும்?"

"முதல்ல நீ இந்தக் காட்டுப்பகுதியை விட்டு வெளிய வரணும். சிங்கம்பட்டியில ஒளி மயமான வாழ்க்கை உனக்குக் காத்துக்கிட்டு இருக்கு. இப்பவே நீ என் கூட வா" என்றாள் பொன்வண்டு.

"வந்து...அந்தப் பூஜை....வந்து.....நித்யமல்லி..."

"நித்யமல்லியைப் பத்தி நீ ஏன் கவலைப்படுற? பாவம் அவ சாதாரணப் பெண். ஆனா அவளை என்னவோ பேய் பிசாசு மாதிரி நடத்துறாங்க. அவ உன்னை என்ன செய்யப் போறா?"

"வந்து.." தயங்கினாள் செம்மலர்.

"இன்னமும் என்ன தயக்கம்? நான் உனக்கு நல்லது தான் சொல்வேன்" என்றாள்.

செம்மலரின் மனம் மயங்கியது. பொன் வண்டு சொல்வது போல நான் போகவில்லையென்றால் ராஜா, வேங்கையனையும், ஆதித்தனையும் ஏதாவது செய்து விடுவாரோ? என்னால் ஆதித்தனுக்கு ஆபத்து என்றால் அதைத் தாங்க என்னால் முடியாது. பொன்வண்டு என்ற இந்தப் பெண் சொல்வதைப் போல அவளுடன் போய் விட வேண்டியது தான். ஆனால்? அதன் பிறகு? ராஜாவைத் திருமணம் செய்து கொள்ள என் மனம் இடம் தருமா? அவ்வளவு தூரத்துக்கு நான் ஏன் யோசிக்க வேண்டும். இப்போது முதல் தேவை ஆதித்தனும் என் அண்ணனும் நலமாக இருக்க வேண்டும் என்பது தான். ஆகையால் நான் காட்டை விட்டு வெளியேறி விடுகிறேன். பிறகு என் பெண்மைக்குக் களங்கம் வரும் எனத் தோன்றினால் என்னால் உயிர்த்தியாகம் செய்ய முடியாதா என்ன?" என முடிவெடுத்துக்கொண்டாள்.

"நான் உன் கூட வரேன். ஆனா நீ அரசர் கிட்ட சொல்லி, ஆதித்தனையும், வேங்கையனையும் எதுவும் செய்யாமப் பார்த்துக்கணும் என்ன?" என்றாள்.

இரு பெண்களும் நடக்கத் தொடங்கினர். அதிகாலை போலவே இல்லை அந்த நேரம். கடுமையான இருளும், ஒரு விதமான நாற்றமும் வந்தது. அவர்கள் நடக்க நடக்க எதிரே யாரோ வருவது போலத் தெரிந்தது. பொன்வண்டு பதட்டம் ஆகி விட்டாள்.

"நீ இந்த மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சிக்கோ. அவங்க என்ன கூப்பிட்டாலும் வராதே" என்றாள்.

குழப்பம் தோன்ற மறைந்து கொண்டாள் செம்மலர். வந்தது வேம்புசாமியும், சித்தரம்மாளும் தான். அவர்களைப் பார்த்ததும் இனம் புரியாத நிம்மதி நெஞ்சில் பிறந்தது. அவர்களை நோக்கி ஓட முயன்றாள். ஆனால் அவளது கரங்களை இறுகப்பற்றிக்கொண்டிருந்தாள் பொன்வண்டு. இப்போது அவள் முகம் மிகவும் கொடூரமாக இருந்தது. வாயைத் திறக்கவும் முடியவில்லை.

"நாம பொன்வண்டைப் பத்தி யோசிக்கவே இல்ல வேம்பு. நித்யமல்லி அவளை ஏவி விடுவான்னு நாம நினைக்கல்ல" என்றாள் சித்தரம்மாள்.

"என் மேலயும் தவறு இருக்கும்மா! பொன்வண்டோட உடம்பை நாங்க எரிக்கும் போது அவ எழுந்து போய் நித்யமல்லி கிட்ட சேர்ந்ததை நானே என் கண்ணால பார்த்தேன். ஆனா அதை உங்க கிட்டச் சொல்லல்ல. அப்படிச் சொல்லியிருந்தா இதை நீங்க எதிர்பார்த்திருப்பீங்க" என்றார் வேம்பு சாமி.

இந்த உரையாடல்கள் காதில் விழ விழ செம்மலருக்கு என்னவோ மயக்கம் தெளிந்தாற் போல இருந்தது. தன்னுடன் நிற்கும் இவள் பெண்னே அல்ல. இறந்து போய் மீண்டும் வந்திருக்கும் பிசாசு. அதுவும் நித்யமல்லிக்குத் துணையாக வந்திருக்கிறது. என யோசித்தாள்.

"சித்தரம்மா! நான் இங்கே மரத்துக்குப் பின்னாடி இருக்கேன். காப்பாத்துங்க" என்று கத்தத் துடித்தாள். ஆனால் வாயை அசைக்கக் கூட முடியவில்லை. நாக்கு வேலையே செய்யவில்லை. சட்டென தனது காலால் மண்ணைக் கிளறினாள் செம்மலர்.

"தாயே வனப்பேச்சி! நீ தான் காவல்! இந்தச் சத்தம் சித்தரம்மாவுக்குக் கேக்கண்ணும். அருள் செய் தாயே" என மனமுருகிப் பிராத்தித்தாள்.

நடந்து கொண்டே வந்த சித்தரம்மாள் சட்டென நின்றாள்.

"என்ன? என்ன ஆச்சு அம்மா?" என்றார் வேம்புசாமி.

அதற்கு சித்தரம்மாள் என்ன சொன்னாள் என்பது கேட்கவில்லை செம்மலருக்கு. ஆனால் பொன்வண்டின் பிடி தன் மீது இறுகுவது தெரிந்தது. தைரியம் அவளைக் கை விட்டுப் போனது. ஆனால் ஆழ் மனம் வனபேச்சியை தியானித்தது.

அப்போது பொன்வண்டிடமிருந்து ஓவென்ற அலறல் கேட்க அடுத்த நிமிடம் செம்மலர் தூரப் போய் விழுந்தாள். நல்ல அடி. அவளை நோக்கி வேம்பு சாமி ஓடி வந்தார். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்டு எழுந்து விட்டாள் செம்மலர். பொன்வண்டைக் காணவேயில்லை.

"மெல்ல எழுந்திரும்மா! " என்றார் வேம்புசாமி.

"எனக்கு லேசாத்தான் அடிப்பட்டிருக்கு ஐயா! நல்லவேளை நீங்களும் சித்தரம்மாவும் சரியான நேரத்துல வந்தீங்க. இல்லேன்னா என் நிலை என்ன ஆகியிருக்குமோ?" என்றாள் செம்மலர். அவள் உடல் நடுங்கியது.

"செம்மலர்! இப்போதைக்கு நான் பொன்வண்டை விரட்டிட்டேன். ஆனா அவ திரும்பவும் வருவா! முதல்ல நீ போய்க் குளிச்சிட்டு வனப்பேச்சியை பூஜை செஞ்சுட்டு வா. அப்புறம் சொரிமுத்தையனார் கோயிலுக்குப் போகலாம்" என்றாள்.

சித்தரம்மாள் உத்தரவிட்டபடியே எல்லாம் செய்தாள் செம்மலர். வாழைப் பழம், கொய்யாப்பழம் இவை தவிர வேறு எதையும் உண்ணாமல், எந்த விதமான கெட்ட சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்காமல் தன் அண்ணன் சாங்கியத்துக்கு உதவி செய்தாள் செம்மலர். மூன்று நாட்களும் நல்லபடியாகவே கழிந்தன. சில சமயம் நித்யமல்லியின் தொந்தரவு இருந்தாலும் அவற்றை சித்தரம்மாள் சமாளித்தாள்.

கோயிலின் உள்ளே தியானத்தில் அமர்ந்திருந்தான் வேங்கையன். அன்று மூன்றாவது நாள். இது வரையிலும் அவன் அன்ன ஆகாரம் எதுவும் எடுத்துக்கொள்ளவே இல்லை. சங்கிலி கருப்பன், சொரி முத்தையனார் சன்னதி இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்குமாறு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தான் அவன்.

"சங்கிலி கருப்பா! சொரிமுத்தையனாரே! இது எனக்காகவோ என் தங்கச்சிக்காகவோ நான் செய்யுற சங்கியம் இல்ல. நித்யமல்லின்னு ஒரு தீய சக்தி வந்திருக்கிறதா சித்தரம்மா சொல்றாங்க. எந்தத் தீய சக்தியும் உன் முன்னாடி எதுவும் செய்ய முடியாது. நீ காவல் தெய்வம். உன் காட்டுக்குள்ள இருக்குற அந்த தீய சக்தியை அழிச்சு மக்களுக்கு நன்மை செய்யுறதுக்காகத்தான் நான் இந்த சங்கியம் செய்யுறேன். எனக்கு வழி காட்ட வா" என்று மனமுருகி வேண்டினான்.

மாலை சுமார் ஐந்து மணி இருக்கலாம். ஏதோ புகை மண்டலம் சூழ்வது போலிருக்க கண் மயங்கியது வேங்கையனுக்கு. சன்னதிக்கு எதிரே ஆஜானுபாகுவாக இரு ஆட்கள் நின்றிருந்தார்கள். குதிரை ஒரு ஓரமாக நின்றிருந்தது. நெற்றியில் பட்டையாக விபூதி, கழுத்தில் கனமான தங்க சங்கிலி, திறந்த மார்பு, முறுக்கிய மீசை என இருவரும் வீரத்தில் மறு உருவமாக நின்றிருந்தனர். சிவப்பு ஆடை அணிந்து பெரிய நாமம் தரித்திருவர் கைகளில் ஒரு குத்தீட்டி.

"வேங்கையா! உனக்கு அருள் செய்யத் தீர்மானிச்சுட்டோம். இந்த இந்த குத்தீட்டி நித்யமல்லியை கட்டிட்டும். அவளை பாணினி சொன்ன அந்த பெரிய அரண்மனைக்குள்ள வெச்சு கட்டிடுங்க. என் கோயில்ல பூஜை செஞ்ச மலரையும், வனப்பேச்சிக்கு பூஜை செஞ்ச மலர்க:ளையும் காவலா வைங்க. எத்தனை வருசம் ஆனாலும் இந்தப் பூக்களுக்கு சக்தி குறைவே குறையாது. " என்றார்.

"சாமி!" என உணர்ச்சிவசப்பட்டவன் விழுந்து கும்பிட்டான்.

"நல்ல கவனமா கேட்டுக்கோ! இன்னும் 500 ஆண்டுகள் கழிச்சு நீயும் உன் நண்பனும் திரும்ப வரணும். அப்ப உங்க கையாலேயே நித்யமல்லியை அழிக்குற வழியை நானே சொல்லித்தரேன். இப்போதைக்கு அவளைக் கட்டுங்க." என்றார் கறுப்பு ஆடை அணிந்த நபர்.

குத்தீட்டியை பயபக்தியோடு இரு கரங்களாலும் நீட்டி வாங்கிக்கொண்டான் வேங்கையன். சட்டென மின்னல் தீண்டியது போலிருக்க மயங்கினான். மீண்டும் கண் விழித்த போது அவனருகே இருந்த குத்தீட்டி எதுவும் கனவில்லை எனச் சொன்னது.


அதனை எடுத்துக்கொண்டு சங்கிலி கருப்பனையும், சொரிமுத்தையனாரையும் வணங்கி விட்டு சித்தரமமாளைப் பார்க்க ஓடினான். குடிலில் செம்மலர், ஆதித்தன் இவர்களுடன் அமர்ந்திருந்தாள் சித்தரம்மாள். குத்தீட்டியுடன் வரும் வேங்கையனைக் கண்டக்தும் கன்னத்தில் போட்டுக்கொண்டார் வேம்புசாமி.

"ஐயாமார் ரெண்டு பேரும் தரிசனம் தந்தாங்களா?" என்றாள் சித்தரம்மாள். அவள் முகம் முழுவதும் மகிழ்ச்சி.

"ஆமா அம்மா" என்றான். விவரமாக எல்லாவற்ரையும் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல அழுதே விட்டாள் செம்மலர்.

"எல்லாம் நல்லபடியாவே முடிஞ்சிருச்சு. எல்லாம் வனப்பேச்சியோட அருள்" என்றாள் சித்தரம்மாள்.

"ஆனா அம்மா! ஐயன் யாரோ பாணினின்னு ஒரு ஆளைப் பத்திச் சொன்னாரு. அது யாருன்னு தெரியலையே?" என்றான் வேங்கையன்.

"அது நான் தான்ப்பா! என் பேரு தான் பாணினி. சித்தரம்மான்னு கூப்புடுறதால என் பேர் உனக்குத் தெரியல்ல. சரி! இனிமே ஆதித்தன் சாங்கியம் செய்யணும். கால தாமதம் வேண்டாம்." என்றாள்.

மறு நாளிலிருந்து ஆதித்தன் வனப்பேச்சியம்மன் கோயிலில் சாங்கியத்தையும் பூஜையையும் தொடங்கினான். அவனுக்குக் காவலாக செம்மலரும் வேங்கையனும் நின்றிருந்தார்கள். பல விதமான மாயத் தோற்றங்களைக் காட்டினாள் நித்யமல்லி. எதற்கும் மயங்கவில்லை அண்ணனும் தங்கையும். பெரும் சூறைக் காற்று, கடுமையான மழைப்பொழிவு என ஏவினாள். ஐயனின் குத்தீட்டியால் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கினான் வேங்கையன்.

கோயிலின் உள்ளே ஆதித்தன் கடுமையான சாங்கியங்கள் செய்தான். உணவு, தண்ணீர் என எதுவும் இல்லை. எந்நேரமும் வனப்பேச்சியையே தியானித்தான். வெளியில் ஏற்பட்ட பல பயங்கரங்களைப் பற்றி அவன் கவலைப்படவே இல்லை. ஐந்தாவது நாள் காலையில் அவனுக்கு தெய்வ தரிசனம் கிடைத்தது. அழகே உருவான இளம் பெண் ஒருத்தி கையில் ஒரு வாளை ஏந்தியபடி வந்தாள். அவளது காலடியில் விழுந்து வணங்கினான் ஆதித்தன்.

"ஆதித்தா! நீ ஒரு பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறாய். இப்போது உன்னால் நித்யமல்லியை வெறுமே கட்ட முடியுமே அன்றி அழிக்க முடியாது. அதற்காக நீங்கள் மூவரும் திரும்ப வருவீர்கள். அப்போது சொரிமுத்தையனும், சங்கிலி கருப்பனும் உங்களுக்கு உதவுவார்கள். இதோ இந்த வாள் தான் உன் ஆயுதம். இதனை நீ பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நித்யமல்லியைக் கட்டிய பிறகு இதனை நீ எங்காவது மறைத்து வைத்து விடு. மீண்டும் நீயே வந்து தான் இதனை எடுக்க வேண்டும். " என்றாள் அந்த அன்னை.

"தாயே! நான் சாதாரணமான மனிதன். பல ஆண்டுகள் கழித்து நான் வருவேனா? அப்படியே உன் அருளால் வந்தாலும் எனக்கு இவை அனைத்தும் நினைவிருக்குமா? இந்த வாளை எடுக்க முடியவில்லை என்றால் நான் என்ன செய்ய தாயே? வழி காட்டியருள வேண்டும் அம்மா" என்றான் நெஞ்சுருக.

"கவலைப் பாடாதே ஆதித்தா! இப்போது உனக்கு வழி காட்டும் பாணினியும், வேம்புசாமியும் அப்போதும் வழி காட்ட வருவார்கள். நீ மனதைத் தடுமாற விடாமல் இருத்தல் முக்கியம். இந்த வாள் உன்னை எல்லா இடரிலிருந்தும் காப்பாற்றும்" என்று சொல்லி மறைந்து விட்டாள் அன்னை வனப்பேச்சி.

சாமிக்கண்ணு சித்தர் சொன்னதை எல்லாம் வாயைத் திறந்தபடி கேட்டுக்கொண்டிருந்தனர் வெங்கியும், பாலாவும்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 15.

சாமிக்கண்ணு சித்தர் பேசி முடித்த பிறகு அங்கே மௌனம் நிலவியது. நால்வருமே பழங்காலத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்பதை அவர்களது மௌனம் சொல்லியது. இன்னமும் சொல்வார் சித்தர் என்பதைப் போல பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.

"என்ன? நான் சொன்னதை எல்லாம் மனசுல வாங்கிக்கிட்டீங்களா?" என்றார் சாமிக்கண்ணு சித்தர்,

"சாமி! நீங்க சொன்னதை நாங்க வெறுமே கேக்கல்ல சாமி. நாங்களே அந்தக் காலத்துக்குப் போனா மாதிரி இருந்தது. ஆனா நிறைய கேள்விகள் இருக்கே?" என்றான் வெங்கி.

அவனைப் பார்த்து புன்னகைத்தார் சாமிக்கண்ணு.

"கேள்விகள் கேட்டாத்தான் மனுஷன். என்ன கேக்கணுமோ கேளு" என்றார்.

"சாமி! அவங்க நித்யமல்லியைக் கட்டிட்டாங்கன்னு புரிஞ்சது. ஆனா அதை எப்படி செஞ்சாங்கன்னு சொல்ல்லலியே? அந்த குத்தீட்டி அப்புறம் வாள் இது ரெண்டும் என்ன ஆச்சு? ஏன்னா அந்த மாளிகையில பூக்கள் தான் இருந்ததே தவிர வாளோ, குத்தீட்டியோ இருந்தா மாதிரி தெரியலியே?" என்றான் வெங்கி.

"எல்லாமே அத்தனை எளிதா கெடச்சிருமாப்பா? உங்களோட கர்ம யோகம் அது. நீங்க தான் தேடிக் கண்டு பிடிக்கணும்."

" நீங்க சொன்ன சம்பவங்கள்ல இருந்து நீங்க தான் அந்த வேம்புசாமின்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆனா மத்தவங்க யா யார்னு தெரியலியே? இதுல நான் எப்படி வந்தேன்? அதுவும் புரியல்ல" என்றார் கரியமாணிக்கம்.

"எல்லாத்துக்கும் காரணம் இருக்கு மாணிக்கம். நீ அந்த காலகட்டத்துல வாழ்ந்த ஒரு போர் வீரன். நித்யல்லியால நாசமான குடும்பத்துல உன் குடும்பமும் ஒண்ணு. அதனால அவளை அழிக்குறவங்களுக்கு உதவி செஞ்சே ஆகணும்னு நீ ஆசைப்பட்ட. அதனால தான் இந்தப் பிறவியில வெங்கிக்கும், பாலவுக்கும் உதவி செய்யுற சந்தர்ப்பம் உனக்குக் கெடச்சது." என்றார்.

கடவுளர்களின் விளையாட்டு, கணக்கு இவைகளை நினைத்து சற்று நேரம் நால்வரும் அமைதியாக இருந்தனர்.

"என்னப்பா? எல்லாமே அதிசயமா இருக்கா?" என்றான் சாமிக்கண்ணு சித்தர்.

"ஆமா சாமி! என்னால நம்பவும் முடியல்ல. நம்பாம இருக்கவும் முடியல்ல" என்றான் வெங்கி.

"ஆனா என்னால நம்ப முடியுது சாமி. சின்ன வயசுல எனக்கு பலவிதமான பயங்கரக் கனவுகள் வரும். அப்ப அதுக்கு எனக்கு அர்த்தம் புரியல்ல. ஆனா இப்பப் புரியுது."

"சாமி! பாலாவுக்கு நம்ப முடியுது, மாணிக்கம் ஐயாவுக்கு நம்ப முடியுது. ஆனா எனக்கு மட்டும் சட்டுனு ஏன் நம்பிக்கை வர மாட்டேங்குது? பாலாவுக்கு வந்தா மாதிரி எனக்குக் கனவுகளும் கூட வரலியே?" என்றான் வெங்கி.

"அது தான்ப்பா கர்மான்றது. நீ ஆதித்தனா இருந்தப்ப, நித்யமல்லியை ஒரு பாவம் பொண்ணு! எல்லாரும் சேர்ந்து அவளை அழிக்குறாங்கன்னு நெனச்சே. அதனால தான் அவளால உன் மேல அதிகமா ஆதிக்கம் செலுத்த முடிஞ்சது . இல்லைன்னா நீ அவ கட்டை அவுத்து விட்டிருப்பியா?" என்றார் சாமிக்கண்ணு.

பக்கென்றது மூவருக்கும்.

"சாமி! நாங்களா அவ கட்டை அவுத்து விட்டோம்? ஆதித்தனா நானே கட்டுனதை நானே எதுக்கு அவுக்கணும்? புரியலியே?"

"தீய சக்தியோட மாய விளையாட்டுக்கு நீ ஆட்பட்டுட்டேப்பா! உன்னையே அறியாம அவளோட வசியத்துல ஆட்பட்டு கட்டை அவுத்து விட்டுட்டே. அவ உன்னைக் கொல்லாம விட்டதே பெரிய விஷயம்."

"இதைத்தான் எங்களைக் கப்பாத்துன அம்மாவும் சொன்னாங்க."

"சொல்லியிருப்பாங்க. ஏன்னா நீ சொல்ற நாச்சியாரம்மா தான் சித்தரம்மா. இப்ப சொல்றேன் நல்லாக் கேட்டுக்குங்க. உங்க ஆபீசுக்கு வந்தாங்க இல்ல ரெண்டு பெண்கள்? அவங்க வேற யாரும் இல்ல. நித்யமல்லியும், பொன்வண்டும் தான்." என்றார் சாமிக்கண்ணு.

திகைத்துப் போய்ப்பார்த்தான் வெங்கி.

"ஆமாப்பா! நீங்களே ஓரளவு ஊகிச்சிருப்பீங்க. இல்லியா?"

"உம்! நித்யமல்லின்னு ஊகிச்சோம். ஆனா ரக்ஷிதா தான் பொன்வண்டுன்னு தெரியல்ல."

மீண்டும் மௌனம் சூழ்ந்தது அந்த இடத்தை.

"என்ன? இங்க உக்காந்துருக்கீங்க? போங்க! போயி சாப்பிடுங்க. அம்மன் பிரசாதம். அருமையா இருக்கு" என்று ஒருவர் அவர்களை அவசரப்படுத்தினார்.

"ஆமாப்பா! அவர் சொல்றதும் சரி. முதல்ல சாமி பிரசாதம் சாப்பிடுங்க." என்றார் சாமிக்கண்ணு.

"சாமி நீங்க?"

"நான் இன்னைக்கு பழங்களைத் தவிர எதுவும் சாப்பிட மாட்டேன்பா. வாரத்துல ஒரு நாள் தான் சமைச்ச சாப்பாடு. மத்த நாள் எல்லாமே பழங்கள் மட்டும் தான்." என்றார்.

மூவரும் உணவுக்கூடத்தை அடைந்து அமர்ந்தனர். சாம்பார் சாதம், லெமன் ரைஸ், நிறைய காய்கள் போட்ட பொரியல், தயிர் சாதம் எனப் பரிமாறினார்கள். திருப்தியாக உண்டு விட்டு மீண்டும் அந்த மண்டபத்துக்கே வந்தனர். ஆனால் சித்தரை அங்கே காணவில்லை. கோயிலில் சென்று பார்க்கலாம் எனப் போன போது அவர் அம்மன் எதிரே பத்மாசனமிட்டு அமர்ந்திருந்தார். தியானத்தைக் கலைக்க வேன்டாம் என மூவரும் அமர்ந்தனர். உண்ட களைப்பு, இரவு சரியாகத் தூங்காத களைப்பு என எல்லாம் சேர்ந்து கொள்ள உறக்கம் கரும்பைப் போல தழுவியது வெங்கியையும் பாலாவையும். சிந்தனை, கவலை என எதுவும் இல்லாமல் தன்னை அறியாமல் கண்ணயர்ந்தனர்.

மீண்டு கண் விழித்த போது தெளிவாக இருந்தது. எதிரே சாமிக்கண்ணு சித்தர் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அருகில் கரியமாணிக்கம்.

"சாரி சாமி! எங்களை அறியாம தூங்கிட்டோம்" என்றபடியே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான் வெங்கியும் பாலாவும்.

"பரவாயில்ல. தாயோட சன்னதியில உங்களை எதுவும் அண்டாது. அதனால தான் தூங்க முடிஞ்சது."

"எல்லாம் உங்க தயவு சாமி" என்றான் பாலா. சிரித்து விட்டுத் தொடர்ந்தார் சாமி.

"அப்பா! இதுவரைக்கும் பல நூற்றாண்டுகள் முன்னால என்ன நடந்ததுன்னு சொல்லிட்டேன். இப்ப உங்க கடமை என்ன? அது உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே?"

"நல்லாப் புரிஞ்சது சாமி. எங்க கடமை நித்யமல்லியைக் அழிக்குறது தான். ஆனா..."

"உம்! உங்க ஆனாவுக்கு அர்த்தம் புரியுது. என்ன இன்னமும் செம்மலர் வரலியேன்னு பார்க்கறீங்க. அதானே?"

மௌனமானார்கள்.

"வர நேரம் வந்தாச்சு. இன்னைக்கு அவ இங்க வரணும்னு இருக்கு. சாயங்காலம் வரை நான் அவளை எதிர்பார்க்குறேன்." என்றார் சாமிக்கண்ணு.

மனதில் இனம் புரியாத உணர்வு ஒன்று எழுந்தது வெங்கிக்கு.

"செம்மலர் என்றால்? அவள் போன ஜென்மத்தில் என் காதலி. இப்போது எப்படி இருப்பாளோ? அழகும் குணமும் ஒருங்கே படைத்தவளாக இருப்பாளா? படித்திருப்பாளா? அமைதியான சுபாவமா? இல்லை காட்டாறு போலப் பேசுவாளா? என யோசித்தான் வெங்கி.

"காலம் உனக்கு பல அதிர்ச்சிகளை தர காத்திருக்கு !" என்றார் சாமிக்கண்ணு சித்தர். திடுக்கிட்டு மனதை அம்மனிடம் இருப்பினான்.

"இனி நாங்க என்ன செய்யணும் சாமி?" என்றான் பாலா.

"இப்போதைக்கு ஒண்ணுமில்ல. இனிமே செம்மலர் வந்தாத்தான். இப்ப அம்மன் கோயிலைச் சுத்திப் பாருங்க. மக்கள் சாப்பிட்டு குப்பை போடுறாங்க இல்ல? அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில போடுங்க. இதெல்லாம் தான் நீங்க செய்யுற சேவை." என்றார்.

"சாமி! இவங்க ரெண்டு பேரும் ஐடி கம்பெனியில வேலை செய்யுறவங்க. மாசம் ஒரு லட்சத்துக்கு மேல சம்பளம். இவங்களைப் போயி...." என இழுத்தார் கரிய மாணிக்கம்.

"ஹாஹா! அதெல்லாம் ஆத்தாளுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லப்பா! நாட்டுக்கே ராஜான்னாலும் அம்மனுக்கு குழந்தைங்க தானே?" என்றார் சாமிக்கண்ணு சித்தர். எதுவும் பேசாமல் வெங்கியும், பாலாவும் கோயிலை விட்டு வெளியே வந்தார்கள். கடந்த சில நாட்களாக தங்கள் வாழ்க்கையில் என்னென்னவோ நடந்து விட்டது. கொஞ்சம் இறைச் சேவை செய்தால் மனதுக்கு அமைதி கிடைக்கும். என எண்ணினார்கள். குப்பைகளால் நிறைந்திருந்தது அந்த இடம். பிளாஸ்டிக் கவர்கள், உடைந்த பொம்மைகள், சிறு சிறு கட்டைகள் என ஒரே குப்பை கூளம். மெதுவாக எல்லாவற்றையும் எடுத்து பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் போட்டார்கள் நண்பர்கள் இருவரும்.

திடீரன ஒரே சத்தம். யாரோ ஒரு பெண் கத்துவது போலக் கேட்டது. திரும்பிப் பார்த்தான் வெங்கி. யாரோ ஒரு பெண்ணை இரு வயதான பெண்மணிகள் அடக்கிப் பிடித்திருந்தார்கள். அவள் திமிறினாள். தலை முடி முகத்தை மூடிக் கிடந்தது. உடையெல்லாம் ஒரே அழுக்கு அதோடு அங்கங்கே கிழிந்திருந்தது. பாவம் யாரோ மன நோயாளி போலிருக்கிறது. கோயிலுக்கு வந்தால் சரியாகி விடும் என நம்பி அழைத்து வந்திருக்கிறார்கள் போல என எண்ணிக் கொண்டு தன் வேலையில் ஆழ்ந்தான் வெங்கி.

"ஐயையோ! அவளைப் பிடிங்க! பிடிங்க! என் கையைக் கடிச்சுட்டு ஓடுறா" என்ற குரல் கேட்க திகைத்துத் திரும்பினான். அந்த மன நோயாளிப் பெண் நேரே இவனைப் பார்த்து தான் ஓடி வந்து கொண்டிருந்தாள்.

"அத்தான்! என்னைக் காப்பாத்துங்க. இவங்க எனக்குப் பைத்தியம்னு சொல்றாங்க. என்னைக் காப்பாத்துங்க" என்று இவனது கரங்களைப் பிடித்துக்கொண்டாள் அந்தப் பெண்.

அழுக்கும் கிழிசலுமாக இருக்கும் ஒரு பெண் தன்னைத் தொடுவதை வெங்கி விரும்பவில்லை. ஆகையால் தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றான். ஆனால் அந்தப் பெண்ணோ விடவே இல்லை. அவளைத் தொடர்ந்து ஒரு பெண்மணி வந்தாள்.

"தம்பி! தயவு செஞ்சு தப்பா நினைச்சுக்காதீங்க. இவ என் மக. மன நிலை சரியில்லை" என்றாள்.

"பரவாயில்லங்க! நான் தப்பா நினைக்கல்ல. நீங்க கூட்டிக்கிட்டுப் போங்க" என்றான். ஆனால் அந்தப் பெண் போக மறுத்தாள்.

"விடுடி என்னை! அத்தான் இப்பத்தான் கெடச்சிருக்காரு. அவரை விட்டுட்டு நான் வர மாட்டேன். நீ போ!" என்று கத்தினாள்.

"தங்கச்சி! நீ நல்ல பொண்ணு இல்ல?" என்றபடியே வந்தான் பாலா.

"அண்ணே! நீயாவது என்னைப் புரிஞ்சுக்கிட்டியே? இவங்க எல்லாம்...என்னை...என்னை பைத்தியமுன்னு சொல்றாங்கண்ணே" என்று ஆதித்தனை விட்டு விட்டு பாலாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

"அம்மா! நான் உங்க மகளை ஒண்ணும் செய்ய மாட்டேன். என்னை நம்புங்க. இவளை என் தங்கச்சியா மதிக்குறேன். கோயிலுக்குள்ள சித்தர் ஒருத்தர் இருக்காருங்க. அவரு கிட்டக் கூட்டிக்கிட்டுப் போங்க. எல்லாம் சரியாயிரும்." என்றான் பாலா.

"தம்பி! நீங்க யாரோ எவரோ தெரியல்ல. தெய்வம் மாதிரி வழி காட்டுறீங்க. நாங்களும் அதுக்குத்தான் வந்தோம். நாச்சியாரம்மான்னு ஒரு அம்மா வந்து எங்களை இங்கே போகச் சொன்னாங்க." என்றாள் அந்தப் பெண்மணி.

இப்போது வெங்கிக்கு நிலைமை புரிந்து விட்டது. பாலாவின் பின்னால் நின்றிருந்த பெண்ணை ஏற இறங்கப் பார்த்தான்.

"இவளா? இவளா செம்மலர்? அழகு, பண்பு, படிப்பு என எதுவுமே இல்லையே? இவளையா நான் காதலித்தேன்? மன நிலை சரியில்லாதவள் வேறு. இவளால் நித்யமல்லியை அழிக்க எப்படி உதவ முடியும்? ஆனால் இந்த பாலா எந்த விதமான தயக்கமுமே இல்லாமல் தங்கச்சி என்கிறானே? அந்தப் பெண் வேறு அவனை அண்ணன் என்கிறாள் அதோடு என்னை அத்தான் என்று வேறு சொல்கிறாள். சாமிக்கண்ணு சித்தரால் இவளை சரி செய்ய முடியுமா? என பல எண்ணகள் மின்னல் வேகத்தில் ஓடின.

"என்ன நிக்குற வெங்கி வாடா! இவங்களை கோயிலுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போவோம்" என்றான் பாலா.

அவனைத் தனியாக அழைத்தான் வெங்கி. கூடவே வந்தாள் அந்தப் பெண்.

"அம்மா! உங்க மகளைக் கொஞ்சம் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க. நாங்க பின்னாலயே வரோம்." என்றான் வெங்கி. புரிந்து கொண்ட அந்த அம்மாள் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்தாள், ஆனால் ஓவெனக் கத்தினாள் அந்தப் பெண்.

"தங்கச்சி! நீ இப்ப இவங்க கூட கோயிலுக்குப் போ! நான் அத்தானைக் கூட்டிக்கிட்டு பின்னால வரேன்" என்றான் பாலா. மறு பேச்சுப் பேசாமல் போனாள் அந்தப் பெண்.

பாலாவைத் தனியாக இழுத்தான் வெங்கி.

"பாலா! என்னடா நடக்குது இங்க? யாரோ ஒரு பைத்தியக்காரப் பொண்ணை தங்கச்சிங்குற, அவளும் என்னை அத்தான்ன்னு சொல்லுறா. என்னடா இதெல்லாம்?

"உனக்குப் புரியலையா வெங்கி! இவ தாண்டா செம்மலர். கரெக்டா உன்னைப் பார்த்து அத்தான்னு சொன்னாளே? சாமிக்கண்ணு சித்தர் சொல்லல்ல? இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள செம்மலர் வருவான்னு?" என்றான் அவசரமாக.

"அது எப்படி இவ தான் செம்மலர்னு அவ்வளவு உறுதியாச் சொல்லுற? இது ஏன் நித்யமல்லியோட சூழ்ச்சியா இருக்கக் கூடாது? யோசிச்சியா நீ?"

"இருக்க வாய்ப்பே இல்லடா! நீ தான் யோசிக்கணும் வெங்கி. அந்தம்மா என்ன சொன்னாங்க? இவங்களை கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லி நாச்சியாரம்மா சொன்னாங்கன்னு சொல்லல்ல? நாச்சியாரம்மா தாண்டா சித்தரம்மா."

சற்று நேரம் மௌனமானான் வெங்கி. அந்தப் பெண்ணை தனது காதலியாக ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது.

"இதைப் பாரு வெங்கி! நீ என்ன வேணும்னாலும் நெனச்சுக்கோ. முதல்ல இப்ப நீ என் கூட கோயிலுக்குள்ள வா! அங்க போனாத்தான் உனக்கு எல்லாமே புரியும். சாமிக்கண்ணு சித்தர் சொல்லுவாரு. பேசாம வா" என்று அழைத்துப் போனான்.

கொஞ்சமும் விருப்பம் இல்லாமல் பாலாவைத் தொடர்ந்து நடந்தான் வெங்கி.

இரு நண்பர்களும் கோயிலின் உள்ளே நுழைந்த போது அங்கே ஒரே சத்தமாக இருந்தது. அந்தப் பெண்ணை அவளது தாயார் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தாள். அதை மீறி சாமிக்கண்ணு சித்தரை நோக்கிக் கத்திக் கொண்டிருந்தாள்.

"ஐயா! என்னைத் தெரியலியா? நான் தான் செம்மலர். நித்யமல்லி கட்டுல இருந்து விடுபட்டுட்டா ஐயா! அவ எந்த நேரமும் ஆதித்தனைத் தேடி வரலாம். காப்பாத்துங்க!" என்று அலறினாள்.

அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்த்தது. அழுகை அழுகை அப்படி ஒரு அழுகை. அவள் குரலில் ஆற்றாமை, அவலம் என எல்லாம் உடன் இருப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது.

சாமிக்கண்ணு சித்தர் பேசினார்.

"செம்மலர்! கொஞ்சம் பதட்டப் படாம நான் சொல்றதைக் கேளும்மா. உனக்கு முன்னாடியே ஆதித்தனும் உங்க அண்ணனும் வந்துட்டாங்க. அவங்களுக்கு நித்யமல்லி வந்தது தெரியும். சித்தரம்மா அவங்களைக் காப்பாத்திட்டாங்க." என்றார் இதமான குரலில்.

சற்றே அமைதியானாள் அந்தப் பெண். அவளை அம்மன் சன்னதியின் முன் அமர வைத்து விட்டு மற்றவர்களிடம் மெதுவாகப் பேசினார் சாமிக்கண்ணு சித்தர்.

"அம்மா! உங்க பொண்ணுக்கு பயப்படும் படியா மனநோய் எதுவும் இல்ல. அவளுக்கு பூர்வ ஜென்ம நினைவு வந்திருக்கு அவ்வளவு தான். இவ சாதாரணமான பொண்ணு இல்ல. ஒரு மிகப் பெரிய செயலைச் செய்ய வந்திருக்கா." என்றார்.

"ஐயா! நீங்க என் மகளுக்குப் பைத்தியம் இல்லேன்னு சொன்னதே எனக்கு வயத்துல பால் வார்த்தா மாதிரி இருக்கு. எப்ப இவ சரியாவா?" என்றாள் அந்தப் பெண்ணின் தாய்.

"இன்னைக்கே அவளை சரி பண்ணிரலாம்மா! நீங்க வனபேச்சியம்மாவோட சன்னதிக்கு வந்துட்டீங்க இல்ல? எல்லாம் நல்லதாவே நடக்கும்." என்று சொல்லி விட்டு அந்தப் பெண்ணை நோக்கினார்.

"செம்மலர்! உனக்கு சில வழிபாடுகள் சொல்லப்போறேன் அதை தட்டாம செய்வியா?" என்றார் சாமிக்கண்ணு சித்தர்.

"நீங்க சொல்லி நான் கேக்காம இருப்பேனா? சொல்லுங்க என்ன செய்யணும்?"

"இதோ நிக்கறாங்களே ஒரு அம்மா, அவங்க உன் தலையிலயும், இடுப்புலயும் நான் குடுக்குற மருந்தை தேய்ப்பாங்க, அப்புறமா அவங்களே உன்னை குளிக்க வெப்பாங்க. அதுக்கு நீ மறுப்பு சொல்லக் கூடாது."

"அப்படியே செய்யறேன் ஐயா" என்றாள் அமைதியாக.

சாமிக்கண்ணு சித்தர் அந்தப் பெண்ணின் தாயின் பக்கம் திரும்பினார்.

"அம்மா! நல்ல கவனமாக் கேட்டுக்குங்க! நான் குடுக்குற மருந்தை தலையில இடுப்புல நல்லா தேயுங்க. குளிப்பாட்டினதுக்கு அப்புறமா அவ சாதாரணமா ஆகிடுவா. அதுக்காக உடனே அப்படியே அவளை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடாதீங்க. இங்க கூட்டிக்கிட்டு வாங்க. எல்லாத்தையும் விவரமா சொல்றேன்." என்றார்.

அப்படியே அவளை அழைத்துச் சென்றாள் அந்தப் பெண்மணி. அவர்கள் போனதும் வெங்கி, பாலா பக்கம் திரும்பினார் சாமிக்கண்ணு சித்தர். கரிய மாணிக்கத்தையும் அழைத்தார்.

"நாம வேலையை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துட்டுது. இப்ப செம்மலர் குளிச்சுட்டு வருவா. அவளை நீ பார்க்கக் கூடாது. நான் சில பூஜைகள் செஞ்சு முடிச்ச பிறகு உன்னைக் கூப்பிடுவேன். அப்பத்தான் நீ அவளைப் பார்க்கணும். என்ன?" என்றார்.

தலையாட்டினான் வெங்கி.

"கரிய மாணிக்கம். நீ தான் போயி அந்தப் பொண்ணை கூட்டிக்கிட்டு வரணும். இதோ இந்த கோலத்து மேல உக்கார வைக்கணும். அந்த கணம் உனக்கு நீ யாருன்ற நினைவும், செம்மலருக்கு நீ எப்படி உதவியா இருக்கலாம்னும் உனக்கு தெரிய வரும். அதை வனப்பேச்சியாத்தா கருணையினால உனக்குத் தெரிய வரும். "

இரு கரங்களையும் குவித்து வணங்கினார் கரியமாணிக்கம்.

"பாலா! நீயும் வெங்கியும் இங்கருந்து போங்க. கரியமாணிக்கம் வந்து உங்களைக் கூப்பிடுவாரு. அப்ப நீ வந்தாப் போதும். அதோ தெரியுதே? அந்த கட்டிடத்துக்குள்ள போயி இருங்க" என்றார் அவசரமாக.

இரு நண்பர்களும் எழுந்து சென்றனர். சாமிக்கண்ணு சித்தர் காட்டிய கட்டிடம் வனப்பேச்சியம்மன் கோயில் ஆபீஸ் கட்டிடம். கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிக்காக அதைத் திறந்தே வைத்திருந்தார்கள். வெங்கிக்குள் பல கேள்விகள். ஆனால் பாலா நிச்சலனமாக அமர்ந்திருந்தான்.

"பாலா! அந்தப் பொண்ணு தான் செம்மலர்னா, அவளை நான் இப்பவும் காதலிக்கணுமா என்ன?" என்றான் கேள்வியாக.

"தெரியல்ல வெங்கி! ஆனா அவளைப் பார்த்ததுக்கப்புறம் அவ என் தங்கச்சின்ற நெனப்பு எனக்கு மாறவேயில்லடா. நீ அவளை காதலிச்சாலும் சரி இல்லைன்னாலும் சரி, அவ என் தங்கச்சி தான்."

இரு நண்பர்களுக்கும் இடையே மௌனம் நிலவியது. எத்தனை நேரம் இப்படியே உட்கார்ந்திருப்பது? வீட்டுக்கு எப்போது போகலாம்? அப்படியே போனாலும் நித்யமல்லியும் அவளது துணை பொன்வண்டும் வந்தால் என்ன செய்ய? எதிர் வீட்டு மனிதர் வேறு ஏதோ தாயத்து கயிறு என்று பயமுறுத்துகிறார். என் வாழ்க்கை எப்போது சாதாரணமாக மாறும்? இன்னும் எத்தனை நாள் அலைந்து திரிய வேண்டும்?" யோசித்தபடி அமர்ந்திருந்தான் வெங்கி. அரை மணி நேரம் சென்ற பிறகு கரிய மாணிக்கம் வந்து அழைத்தார். அவரது முகம் மலர்ந்து காணப்பட்டது.

"என்ன சார்? அம்மன் அருளால உங்களுக்கு எல்லாமே நெனவு வந்திடுச்சா?" என்றான் பாலா.

"ஆமாப்பா! நான் யாரு தெரியுமா? உங்களோட படையில இருந்த ஒரு வீரன். என் தங்கச்சியும் செம்மலரும் தோழிகள். என் அத்தை மக தாமரையை நான் கல்யாணம் பண்ணிக்க இருந்தப்ப நித்யமல்லி, என் தங்கச்சியையும் தாமரையையும் ரெண்டு பேரையுமே கொன்னுட்டா. அந்த துக்கம் தாங்காம எனக்கு பைத்தியம் பிடிச்சுடிச்சு. அப்ப என்னை நீயும் செம்மலரும் தான் காப்பாத்துனீங்க வெங்கி." என்றார்.

அவர் பேசியதைக் கேட்டு அழுவதா சிரிப்பதா? எனத் தெரியவில்லை வெங்கின்னு. எதுவும் பேசாமல் நடந்தான். கோயிலை நெருங்க நெருங்க ஏதோ ஒரு அதிர்வு அவனைத் தாக்கியது போல இருந்தது. முன்பு எப்போதோ பார்த்துப் பழகிய உறவு ஒன்று அவனுக்காகக் காத்திருப்பதாகப் பட்டது. கை கால்கள் லேசாக நடுங்கின. இதயம் படபடத்தது. கண்களில் பனி மூட்டம் போலத் தென்பட பாலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான் வெங்கி.

"என்ன ஆச்சு வெங்கி? ஏன் முகம் வெளிறியிருக்கு? முகமெல்லாம் வேர்த்திருக்கு?" என்று பதறினான். மெல்ல நண்பனின் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் பாலா. முதலில் வெங்கியின் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது அம்மனின் திருமுகம் தான். அதில் இருந்த ஒளி, கருணை எல்லாம் வெங்கியிய என்னவோ செய்ய மயங்கிச் சரிந்தான் அவன்.

"வெங்கி! என்னடா ஆச்சு?" என்று பதறினான் பாலா. அவனை அமைதியாக இருக்குமாறு சொன்னார் சாமிக்கண்ணு.

"பயப்பட ஒண்ணுமில்ல. வெங்கிக்கு தான் யாருன்னு தெரியப் போற நேரம் நெருங்கிட்டுது. அதுவும் செம்மலர் மூலமாத்தான் தெரியப் போகுது. என்ன பார்க்குற பாலா? இவ தான் நீ செம்மலர் உன் தங்கச்சி, போன ஜென்மத்துல. இப்ப பேரு திவ்யா." என்றார்.

திவ்யா என அழைக்கப்பட்ட பெண்ணை ஏற இறங்கப் பார்த்தான் பாலா. முடியெல்லாம் அலங்கோலமாக, ஆடை கலைந்து காணப்பட்ட அந்தப் பெண் இப்போது அழகாக பட்டுப்புடவை அணிந்து தலை நிறையப் பூ வைத்து, மஞ்சள் பூசி அழகே உருவாகக் காணப்பட்டாள்.

"அம்மா! திவ்யா! இங்க வா! உன் கையால இந்த அபிஷேக தீர்த்தத்தை வெங்கிக்கு குடு" என்றார் சாமிக்கண்ணு. அப்படியே செய்தாள் திவ்யா. மெல்லக் கண்களைத் திறந்தான் வெங்கி. அவனுக்கு தன் கண் முன்னால் தெரிந்த முகம் உண்மையா பொய்யா? எனத் தெரியவில்லை.

"செம்மலர்! நீ வந்துட்டியா? இத்தனை நாள் எங்கே போயிருந்தே?" என்றான் குழறலாக.

கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் தோன்றியது. அவனது வாயில் மந்திரித்த விபூதியைப் போட்டார் கரியமாணிக்கம். மெல்ல எழுந்து அமர்ந்தான் வெங்கி. அவனுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. தான் யார்? ஆதித்தனா? இல்லை வெங்கியா? இப்போது எங்கே இருக்கிறோம்? பாலா தானே என் பக்கத்தில் நிற்பது? அப்படியானால் நான் வெங்கி தான். ஆதித்தன் இல்லை." என குழம்பியது மனது.

"வெங்கி! உனக்கு அந்த ஆத்தா கருணை செஞ்சிட்டாப்பா. உனக்கு எல்லா உண்மையைப் பத்தியும் தெரிய வெச்சுட்டா" என்றார் கரியமாணிக்கம். அதைக் கேட்டு நண்பனை கட்டியணைத்துக்கொண்டான் பாலா.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 16:

நடப்பது எல்லாம் கனவா? இல்லை நனவா? என்று குழப்பமாக இருந்தது வெங்கிக்கு. அழகான பெண் அவன் வாயில் ஏதோ ஊற்றினாள். அவள் எனக்கு மிகவும் நெருங்கியவள் போலத் தோன்றியது. செம்மலர் என்பது அவள் பெயர் எனவும் தெரிந்தது. ஆனால் நான் யார்?

"எனக்கு ஒரே குழப்பமா இருக்கே? நான் ஆதித்தன் மாதிரியும் தோணுது, வெங்கி மாதிரியும் இருக்கு. தலையே வெடிச்சிரும் போல இருக்கே? ஆனா பாலாவைப் பார்த்தால் வேங்கையன் என்று தோன்றுகிறதே? இது என்ன? நானே வெங்கி இல்லை போலவும் ஆதித்தன் போலவும் தோன்றுகிறது. இதெற்கெல்லாம் என்ன காரணம்? ஒரு வேளை இந்த சாமிக்கண்ணு சித்தர் ஏதாவது மந்திரம் மாயம் செய்திருப்பாரோ?" என்று எண்ணினான்." என்று தலையைக் கைகளால் பிடித்துக்கொண்டான்.

"வெங்கி! என்னத் தெரியுதா? நான் யாரு சொல்லு?" என்றான் பாலா.

"டேய்! நீ வேற குழப்பாதடா! நீ பாலாவா? வேங்கையனா? ஒண்ணுமே புரியல்லியே? இந்த அழகான பொண்ணு யாரு? இவ பேரு செம்மலரா?" என்றான் வெங்கி குழப்பமாக.

"நீ சொல்றது எல்லாமே உண்மை. நீ வெங்கி தான். ஆனா போன ஜென்மத்துல தான் நீ ஆதித்தன். நான் சொன்னேனே நித்யமல்லியைக் கட்டிய ஆதித்தன், அது நீயே தான். அதான் நித்யமல்லி திரும்பவும் உன்னைத் தேடியே வந்துட்டா."நீ இப்ப வெங்கி தான். ஆதித்தன்றது உன்னோட கடந்த காலம். அது முடிஞ்சு போச்சு." என்றார் சித்தர்.

தலையை திருப்பி நாற்புறமும் பார்த்தான் வெங்கி. மெல்ல மெல்ல அவனுக்கு எல்லாமே நினைவுக்கு வந்தது. காலையில் கும்பாபிஷேகம் பார்க்க கோயிலுக்கு வந்தது, அங்கே கரியமாணிக்கம் மற்றும் சாமிக்கண்ணு சித்தரை சந்தித்தது. அவர் நித்யமல்லியைப் பற்றிச் சொன்னவைகள் என ஒவ்வொன்றாக நினவுக்கு வர ஆரம்பித்தன. அதே நேரம் தான் ஆதித்தன். இந்தப் பிறவியில் வெங்கியாகப் பிறந்திருக்கிறோம் என்பதையும் புரிந்து கொண்டான். இவைகளை நம்புவதே கடினமாக இருந்தது அவனுக்கு.

"பாலா! ஒரு பைத்தியம் நம்மைப் பார்த்து கத்துச்சே? அவ தானே செம்மலர்? அப்ப இவங்க யாரு?" என்றான் திவயாவைக் காட்டி.

"பொண்ணுன்னா மட்டும் மறக்கவே மாட்டியே? இவ தான் நீ சொல்ற அந்தப் பைத்தியக்காரப் பொண்ணு. பேரு திவ்யா." என்றான். வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்திருந்தான். இருவரும் சேர்ந்து பேசியது, சிரித்தது பிறகு நித்யமல்லியைக் கட்டுவதற்காக விரதம் இருந்தது என எல்லாம் வந்து போனது.

"ஆமா இவ ஏன் பைத்தியமா இருந்தா?" என்றான் வெங்கி.

"அதுக்குக் காரணம் இருக்குப்பா! இவளுக்கு போன ஜென்ம நினைவு ரொம்ப அதிகமா வந்துட்டுது. அவளால போன ஜென்மம் எது? இந்த ஜென்மம் எதுக்குன்னு பகுத்துச் சொல்ல முடியல்ல. அதோட நித்யமல்லி மீண்டும் வந்துட்டான்ற விஷயமும் உள்ளுணர்வு மூலமாத் தெரிஞ்சு போச்சு. உங்களைத் தேடி அலைஞ்சா. ஆனா விஷயம் தெரியாத அவங்க அம்மா அதைப் பைத்தியம்னு முடிவு செஞ்சுட்டங்க. நல்லவேளை சித்தரம்மா போயி வழிப்படுத்துனாங்க. இல்லைன்னா இந்தப் பொண்ணு பாவம் தான்." என்றார் கரியமாணிக்கம்.

சாமிக்கண்ணு சித்தரை பார்த்தான் வெங்கி. அவரது பார்வை கரியமாணிக்கம் சொன்னது உண்மை எனச் சொல்லவே மீண்டும் திவ்யாவைப் பார்த்தான். அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

"உங்களை நான் வெங்கின்னே கூப்பிடட்டுமா?" என்றாள்.

"உம்! கூப்பிடு! உன்னைப் பார்த்ததும் தான் எனக்கு எல்லாமே புரிஞ்சது. அது வரையில நான் எதையுமே நம்பல்ல. இப்பத்தான் நம்ப முடியுது." என்றான். அவள் அருகில் அமர்ந்து கொண்டாள்.

தொண்டையைக் கனைத்துக்கொண்டார் கரியமாணிக்கம். சட்டென விலகி அமர்ந்தாள் திவ்யா.

"சாமி! இப்ப வெங்கிக்கும் எல்லா நினைவும் வந்தாச்சு. இப்ப நாங்க என்ன செய்யணும்? சொல்லுங்க" என்றான் பாலா.

"அதுக்காகத்தானே நான் காத்துக்கிட்டு இருக்கேன். அதுக்கு முன்னாடி திவ்யாவோட அம்மா கிட்டயும் நாம சில விஷயங்கள் பேசணும்." என்றார் சாமிக்கண்ணு.

"திவ்யா அவங்க அம்மா தவிர மத்தவங்க எல்லாரும் வெளிய போங்க" என்றார் கரியமாணிக்கம். நின்றிருந்த மற்றவர்கள் அனைவரும் போய் விட இப்போது கோயிலில் கூட்டம் இல்லை. கரியமாணிக்கம், சாமிக்கண்ணு சித்தர், வெங்கி, பாலா, திவ்யா அவள் தாய். இவ்வளாவு தான்.

"அம்மா! இப்ப நடந்ததை வெச்சு ஓரளவு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கிட்டு இருப்பீங்க இல்லியா?" என்றார் சித்தர்.

"ஐயா! நீங்க என் மகளைக் காப்பாத்துன தெய்வம். ஆனா நீங்க பேசுன, போன ஜென்மம், செம்மலர், இந்தத் தம்பி சொன்னது, எதுவுமே எனக்குப் புரியல்லய்யா! திவ்யா யாரு? என் மகளா? இல்லையா?" என்றாள் அந்தத்தாய் கண்ணீரோடு.

"இந்த ஜென்மத்துல அவ உங்க மக தான். அதுல மாற்றமே இல்ல. ஆனா அவளுக்குன்னு சில பொறுப்புக்கள் இருக்கு. அதை அவ முடிச்சே ஆகணும். அதுக்காகத்தான் வனப்பேச்சி திரும்பவும் செம்மலரை உங்க வயத்துல பிறக்க வெச்சிருக்கா. சரியான நேரத்துல ஒண்ணாவும் சேர்த்துட்டா." என்றார்.

"சாமி! என் மக வயசுப்பொண்ணு. அவளுக்கு நான் கல்யாணம் காட்சின்னு செய்யணுமே? இப்ப வந்து அவளுக்கு பொறுப்பு இருக்குன்னா எப்படி சாமி?" என்றாள் அந்த அம்மாள்.

"அம்மா! உங்க மகளுக்கு எந்த ஆபத்தும் வராம பார்த்துக்க வேண்டியது இவங்க பொறுப்பு. ஏன்னா இதோ நிக்குறானே பாலா அவன் போன ஜென்மத்துல திவ்யாவோட அண்ணன். இவன் திவ்யாவோட காதலன். போன ஜென்மத்துல சேர முடியாம போனவங்க. இப்ப வந்திருக்காங்க. இவங்களால உங்க மகளுக்கு எந்த ஆபத்தும் வராமப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு போதுமா?"

"எனக்குத் தயக்கமா தான் இருக்கு. ஏன் சாமி! அந்தப் பொறுப்பு ஒரு நாள்ல முடிஞ்சிரும்மா? நான் வேணும்னா இங்கேயே தங்கியிருந்து அவளை வீட்டுக்குக் கூட்டிக்கிடுப் போகட்டுமா?" என்றாள்.

தாயின் அறியாமையையும் பாசத்தையும் புரிந்து கொண்டார் கரியமாணிக்கம்.

"அம்மா! என் பேரு கரியமாணிக்கம். சாமிக்கண்ணு சித்தரோட சீடன். திவ்யாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு ரொம்ப பெரிசு, ரொம்ப முக்கியமானதும் கூட. இந்த உலத்துக்கே நல்லது நடக்கும்னா பார்த்துக்கோங்களேன். அந்த மாதிரி வேலை ஒரு நாள்ல எப்படியம்மா முடியும்? கொஞ்சம் யோசிச்சுப் பருங்க." என்றார் பொறுமையாக.

சொல்லத்தெரியாமல் தவித்தாள் திவ்யாவின் தாய். அவளை நெருங்கி வந்து கட்டிக்கொண்டாள் திவ்யா.

"அம்மா! நீ ஏன் கவலைப் படுறேன்னு எனக்குப் புரியுது. என்னைத் தனியா விட உனக்கு மனசில்ல. எனக்கும் உன்னை விட்டுட்டுப் போக இஷ்டமில்ல. ஏன் சாமி! இந்தக் காரியத்துக்கு எங்கம்மாவும் உதவட்டுமே? இல்லைன்னா கூடவாவது இருக்கட்டுமே? அப்படி செஞ்சா அவங்களுக்கும் நிம்மதி, உங்களுக்கும் வேலை நடக்கும்." என்றாள் திவ்யா.

சற்று நேரம் யோசித்தார் சித்தர். பிறகு அம்மனை நோக்கி கை கூப்பினார்.

"உலகத்துக்கே தாயான நீ என்ன மனசுல நெனச்சிருக்கேன்னு யாருக்கு தெரியும்? சரிம்மா! உன் இஷ்டப்படியே எல்லாம் நடக்கும்." என்றார்.

புரியாமல் விழித்து நின்ற இளைஞர்களிடம் விளக்கினார் கரியமாணிக்கம்.

"தம்பி! நீங்க ஈடுபடப்போறது ரொம்பவும் ஆபத்தான வேலையில. ஒரு தாயோட பாதுகாப்பும் அரவணைப்பும் உங்களுக்கு வேணும்னு வனப்பேச்சி முடிவு செஞ்சுட்டா. அதனால தான் சாமி அப்படி சொன்னாரு." என்றார்.

உணர்ச்சிவசப்பட்டாள் திவ்யாவின் தாய்.

"சாமி! என்னையும் இந்த முக்கியமான வேலையில் ஈடுபடுத்தணுமுன்னு அம்மன் நெனச்சாளா? நான் பண்ணுன பூஜைக்கு பலன் கெடச்சது சாமி! இனிமே திவ்யா மட்டும் என் மக இல்ல. பாலாவும் வெங்கியும் என் மகனுங்க." என்றாள்.

"ஐயையோ" என்று ஒரு சேரக் கத்தினார்கள் வெங்கியும் திவ்யாவும்.

சிரித்து விட்டார்கள் சாமிக்கண்ணு சித்தரும், கரியமாணிக்கமும்.

"ஒரு பேச்சுக்கு சொல்றாங்கப்பா. இந்த காரியம் நல்லபடியா முடியட்டும். நாங்களே இந்தம்மா கிட்டப் பேசி நல்லபடியா உங்க கல்யாணத்தை முடிச்சு வெக்கறோம்." என்றார் கரியமாணிக்கம். சிரித்தார்கள் அனைவரும்.

முகம் சீரியசானது சாமிக்கண்ணு சித்தருக்கு.

"என்ன சாமி?"

"நமக்கு முன்னால பெரிய பெரிய தடைகள் எல்லாம் இருக்குப்பா! அதை நாம தாண்டணும். அப்பத்தான் நித்யமல்லியை ஒரேயடியா அழிக்க முடியும். நாட்களும் அதிகம் இல்ல அதான் யோசிச்சேன்."

மற்றவர்கள் முகமும் சீரியசானது.

"சாமி! நித்யமல்லி தான் நம்ம எதிரின்னு தெரியும். அவளை எப்படி அழிக்குறதுன்னும் தெரியும். பிறகென்ன தடை?" என்றான் வெங்கி.

"சாமி" என்று ஏதோ ஆரம்பித்தாள் திவ்யாவின் தாய். இடைமறித்தார் கரியமாணிக்கம்.

"அம்மா! உங்களுக்கு எதுவும் புரியாது. ஆனா பேச்சுக்கு நடுவுல பேசி இடைஞ்சல் செய்யாதீங்க. திவ்யா எல்லாத்தையும் விளக்கமா உங்க கிட்ட சொல்லுவா. அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க. இப்ப எங்களைப் பேச விடுங்க" என்றார். வாயை மூடிக்கொண்டாள் அந்த அம்மாள்.

"வெங்கி! என்ன இப்படிக் கேக்குற? நித்யமல்லியை சொரிமுத்தையன்னும் சங்கிலி கருப்பனும் கொடுத்த வாள் மற்றும் குத்தீட்டியால தானே தாக்கி அழிக்கணும். அது இப்ப எங்கே இருக்குன்னு தெரியல்லியே?" என்றான் பாலா.

"அது மட்டுமில்ல பாலா! உங்களுக்கு நித்யமல்லியை எப்படிக் கட்டுனாங்கன்ற விவரமும் இன்னமும் நினைவுக்கு வரல்ல. நித்யமல்லியைக் கட்டும் போது ஆதித்தனுக்கு, வேங்கையனுக்கு செம்மலருக்கு என்ன ஆச்சு? அதுக்கப்புறம் அவங்க எங்கே போனாங்க? இது எதுவும் நமக்குத் தெரியலியே?" என்றார் சாமிக்கண்ணு.

யோசனையில் ஆழ்ந்தனர் அனைவரும்.

"சித்தர் சாமி சொல்வது உண்மை. நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு வேளை குத்தீட்டியும், வாளும் கிடைக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும் அதைக் கொண்டு எப்படி நித்யமல்லியை அழிப்பது எனத் தெரிய வேண்டும். நாங்கள் கடவுள் கொடுத்த ஆயுதங்களோடு போய் நின்றால் அப்படியே சரண்டைந்து விடுவாளா நித்யமல்லி? அதுவும் பல மாயங்களும் செய்ய முடியும் அவளால். அவற்றை எப்படி சமாளிப்பது? இதுவும் தெரிய வேண்டும். எங்கே எப்போது அவளை அழிப்பது எளிது? இது போன்ற விவரங்கள் வேண்டுமே? அவைகளை எப்படி பெறுவது?" என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

"சாமி! என்ன செய்யறதுன்னு புரியலியே?" என்றார் கரியமாணிக்கம்.

"உம்! வனப்பேச்சி நம்மை இவ்வளவு தூரம் எல்லாத்தையும் உணர வெச்சிருக்கா. இனியும் அவ உதவுவா. ஆனா நாமளும் முயற்சி செய்யணும். எல்லாமே தெய்வச் செயல்னு உக்காரக் கூடாது இல்லியா?" என்றார் சாமிக்கண்ணு.

"சொல்லுங்க சாமி. நாங்க என்ன செய்யணும்?" என்றான் பாலா.

"நான் கொஞ்ச நேரம் தியானத்துல உக்காருறேன் வனப்பேச்சியம்மன் சந்த்தியில. ஏதாவது தோணுதா எனக்கு பார்ப்போம். நீங்களும் கொஞ்சம் வெளிய நின்னு யோசிங்க. முதல்ல இந்தம்மாவுக்கு நடந்ததையெல்லாம் சொல்லுங்க." என்றார் சாமிக்கண்ணு சித்தர்.

"சரி சாமி! ஆனா ஒரு சந்தேகம்?"

"என்ன? சொல்லு வெங்கி?"

"என்னை, பாலாவை அப்புறம் திவ்யா சரியான பாதையில கூட்டிக்கிட்டு வந்தது சித்தரம்மா தானே? அவங்களை கூப்பிட்டுக் கேட்டா அவங்க என்ன செய்யணும்ன் சொல்ல மாட்டாங்களா?" என்றான் வெங்கி.

"நல்ல யோசனை தான் வெங்கி. ஆனா அவங்க எப்ப வரணுமோ அப்பத்தான் வருவாங்க. நாம கூப்பிட முடியது. ஆனா நிச்சயம் அவங்க அருள் நமக்கு எப்பவும் உண்டு." என்றார். பேசாமல் ஐவரும் வெளியில் வந்தனர். மண்டபத்தில் போய் அமர்ந்து கொண்டானர். கூட்டம் இப்போது அவ்வளவாக இல்லை. அன்னதான பந்தல்களில் ஆங்காங்கே சிலர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். டீக்கடைகளில் கொஞ்சம் கூட்டம் இருந்தது.

"திவ்யா! இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாது. சாமியே சொல்லிட்டாரு. அதனால எனக்கு எல்லா விஷயத்தையும் இப்பவே சொல்லு" என்றாள் சிவகாமியம்மாள்.

"திவ்யா! நீயும் கரியமாணிக்கம் சாரும் சொல்லுங்க. நானும் பாலாவும் போய் ஏதாவது சோடா வாங்கிட்டு வந்திடுறோம். " என்று சொல்லி விட்டு நடந்தனர்.

"பாலா! என்னால இன்னமும் நம்பவே முடியலடா! நீயும் நானும் போன ஜென்மத்துல இருந்தே ஃபிரெண்ட்சா?"

"ஆமாடா வெங்கி! என்னாலயும் தான் நம்ப முடியல்ல. ஆனா நடக்குற விஷயங்களைப் பார்க்கும் போது நம்பும்படியாத்தானே இருக்கு." என்றான் பாலா.

"பல கேள்விகள் மனசுல இருக்கு பாலா!"

"என்ன கேள்விகள்?"

"சாமிக்கண்ணு சித்தர் கேட்ட அதே கேள்விகள் தான். நாம எப்படி நித்யமல்லியைக் கட்டினோம்? மறு ஜென்மத்துல நாம ஏன் பாவநாசம் போனோம்? அவ எப்படி நம்மை அவளை திறந்து விட வெச்சா? இப்ப அவளோட பலம் இன்னும் அதிகம் தானே ஆகியிருக்கு? அப்படி இருக்கும் போது நம்மால அவளை அழிக்க முடியுமா? முடியும்னாலும் எப்படி? எல்லாத்துக்கும் மேலா, ஒரு வேளை நம்மால அவளை அழிக்க முடியல்லேன்னா என்ன ஆகும்?" என்றான் வெங்கி.

"நம்மால நிச்சயம் முடியும் வெங்கி. நமக்கு தெய்வத்தோட அருள் இருக்கு. பாதை கஷ்டமானது தான். ஆனா நாம ஜெயிப்போம் வெங்கி. " என்றான் பாலா. பேசிய நண்பனை யோசனையோடு பார்த்தான் வெங்கி.

"இவன் எல்லாமே எளிது என நினைக்கிறான். தெய்வ அருள் இருக்கிறது என்றால் ஏன் தெய்வம் இத்தனை தடைகள் வைத்திருக்கிறது? அதில் ஒரு விஷயத்தைக் கூட நமக்குச் சொல்லவில்லை? சித்தரம்மா உதவுவார்கள் என்றால் அவர்களை நாம் கூப்பிட முடியாதாம். இது என்ன விளையாட்டு? நாங்கள் என்ன எங்களுக்காகவா இதில் ஈடுபடுகிறோம்? மனித குலத்துக்கே நன்மை அல்லவா? அதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இவர்களுக்கென்ன? நித்யமல்லி எங்களைக் கொன்று விட்டால் வேறு ஆட்களை தேடிப்பிடிப்பார்கள். ஆனால் எங்கள் உயிர்? போனால் வருமா?" என்று யோசித்துக்கொண்டே நடந்தான்.

சட்டென பார்க்கும் போது, தான் மட்டும் தனியாக ஒரு இடத்தில் நிற்பது போலத் தோன்றியது. சுற்று முற்றும் பார்த்தான். பாலாவைக் காணவில்லை. அது மட்டுமா? பக்கத்தில் கடைகள் கூட இல்லை. வெட்ட வெளியாக இருந்தது. திவ்யாவும் கரியமாணிக்கமும் அமர்ந்திருந்த மண்டபத்தையும் காணவில்லை.

"பாலா" என்று குரல் கொடுத்தான். பதிலில்லை.

"ஹலோ! யாராவது இருக்கீங்களா?" என்றான்.

அப்போது தூரத்தில் ஒரு சிறு புள்ளியாக ஏதோ தெரிந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டுன் பார்க்க அந்தப் புள்ளி நெருங்கி வருகிறாற் போலத் தோன்ற கண்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தான் வெங்கி.
 
Status
Not open for further replies.

Latest Episodes

New Threads

Top Bottom