Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் - Tamil Novel

Status
Not open for further replies.

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
நினைவு - 7

அனன்யா ஆசைப்பட்டபடி ஹாஸ்டலில் சேர்த்து விட்டான் விஸ்வரூபன்.

விஸ்வரூபன் பி.ஜி ஃபைனல் இயரில் இருப்பதால், அவனால் உடனடியாக பிலிப்பைன்ஸ்க்கு திரும்ப செல்ல முடியாமல் போய் விட்டது. அதனால் அவனது நண்பனின் மூலமாகவே ஹாஸ்டலை பற்றி விசாரித்து, அவளை சேர்த்து விட்டான்.

அனன்யா ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஹாஸ்டலுக்கு ஷிப்ட் ஆக… ஆனால் நடந்ததோ வேறு. இருந்தாலும் அதுவும் செம்மையாக தான் இருந்தது. ஹாஸ்டலில் அவளது நட்பு வட்டம் பெருகியது.

ராதிகாவுடன் டைம் ஸ்பென்ட் பண்ணலாம் என்று நினைத்திருந்தாள். அது மட்டும் தான் நடக்கவில்லை.

காலேஜ் டைம் முடிந்த பிறகு ராதிகா பார்ட் டைம் ஜாப்க்கு சென்று விடுவாள்.

பொதுவாக பிலிப்பைன்ஸில் ஸ்டூடண்ட் பார்ட் டைம் ஜாப் செய்ய அலோவுட் கிடையாது. அப்படியே வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான வொர்க் பர்மிட் வாங்க வேண்டும். ராதிகா அதை வாங்கியிருந்தாள்.

அதனால் காலேஜ் முடியவும், வேலைக்கு சென்று விட்டு இரவு தான் திரும்புவாள்.

ஹாஸ்டலில் இருந்த அனன்யாவுக்கு பயங்கரமாக போரடிக்க, அடுத்த அறையில் இருந்தவர்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டாள். நட்போடு சேர்த்து அவர்களது மொழியையும் கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று லூட்டி அடித்தாள். தப்பும், தவறுமாக இவள் பேசும் அழகில் எல்லோரும் தெரித்து ஓட… இவளோ விடாமல் அவர்களைப் படுத்தி எடுத்து, தெலுங்கு, கன்னடம் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டாள்.

தான் கற்றவற்றை இரவு வேலை முடித்து வரும் ராதிகாவிடம் கூறி, அவளது முகத்தில் புன்னகையை வரவழைத்தாள்.

இப்படி அனன்யா, ஹாஸ்டல் வாசம் வந்து ஒரு வாரம் ஆகியிருக்க, நாளை வீக்எண்ட்.

அவள் இந்த வாரம் எப்படியாவது, அவுட்டிங் போகணும் என்று ப்ளான் பண்ணிக் கொண்டு ராதிகாவிற்காக காத்திருந்தாள்.

வேலை முடிந்து களைத்துப் போய் வந்த, ராதிகாவைப் பார்த்தவள்‍, " சாப்பிட்டியா ராது?" என வினவ.

" ம். சாப்பிட்டேன் அனு. நான் போய் ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வரேன்."என்றவள் இரவு உடை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

" என்ன அனு… இன்னைக்கு யாரும் சிக்கலையா? எங்கேயும் போகாமல் இப்படி உட்கார்ந்து இருக்க?"

" அதெல்லாம் எனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. உன் கிட்ட பேசணும் ராது. அதான் உனக்காக வெயிட்டிங்."

" ஏய் அனு. இன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல செம ரஷ். ரொம்ப டயர்டா இருக்கேன். நாளைக்கு பேசலாமா. காலையில் ஃப்ரீயா தான் இருப்பேன். ஈவினிங் தான் வேலை." என்றவள் தன்னுடைய கட்டிலில் சரிய…

"ராது… தூங்கிடாத. ரொம்ப போர்ரிங்கா இருக்கு. நாளைக்கு அவுட்டிங் போகலாம் வர்றீயா. இங்கே சுத்திப் பார்க்க நிறைய ப்ளேஸ் இருக்கு. ப்ளீஸ் ராது."

" ஈவினிங்குள்ள வந்துடுலாமா அனு. நான் ரெஸ்டாரன்ட்டுக்கு போகணும்." என்று யோசனையுடன் வினவ.

" ராது… ஒரு நாள் லீவு போடேன் டி.. ஹாஃப் டேல ஒன்னும் பார்க்க முடியாது. என்ன கிண்டல் பண்றீயா? நான் வேண்டும்னா அன்னைக்குள்ள பணத்தை தரேன்" என எப்போதும் போல எதையும் யோசிக்காமல் வார்த்தைகளை விட்டிருக்க.

நொடிப்பொழுதில் முகம் மாற… படுத்திருந்த ராதிகா எழுந்து, அவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே, " உனக்கு இன்னும் என்னை பற்றி தெரியவில்லை. நான் ஒன்னும் தாங்க முடியாத பணக் கஷ்டத்தில் இல்லை‌. ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றால், சிரமப்படுவதற்கு. என்னுடைய பெற்றோருக்கு சிரமம் கொடுக்க கூடாது என்பதற்காகத் தான் நான் வேலைக்கு போகிறேன். இப்போ எனக்கு பணம் வேண்டும் என்று மேசேஜ் செய்தாக் கூட போதும். என்னுடைய அக்கவுண்ட்ல ஆட்டோமேட்டிக்கா பணம் வந்திருக்கும். இந்த மாதிரி என்னிடம் பேசாதே." என்று விட்டு ராதிகா உறங்க முயல…

அதன் பிறகு அனன்யாவால் உறங்க முடியவில்லை. அவள் வேண்டுமென்று சொல்லவில்லை. அவளை எப்படியாவது வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் வார்த்தைகளை விட்டிருந்தாள்.

விடுமுறை தினத்தன்று தாமதமாக எழும் அனன்யா, அன்று நேரத்தோடு எழுந்து விட்டாள்.

ராதிகாவோ நேற்று நடந்ததை நினைவில் கொள்ளாமல், தன் போக்கில் எழுந்து விடுமுறை நாளில் செய்வதற்கான வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

அனன்யா, தான் அவள் பின்னேயே சென்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். "சாரி… ராது… நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கலை டி. உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும் தான் நினைச்சேன். வேண்டும்னா நானும் உன்னோட வேலைக்கு வரேன்." என்று கண்கள் கலங்கக் கூற…

அவள் கூறியதைக் கேட்ட ராதிகா, அவளைப் பார்த்து முறைத்தாள். உள்ளுக்குள்ளோ, ' என்ன பொண்ணு இவ. என் மேல இப்படி க்ரேஸா இருக்கிறாளே.' என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஒன்றும் பேசாமல் தன்னை முறைக்கும் ராதிகாவைப் பார்த்த அனு, " ஏதாவது பேசு ராது." என.

"என்ன பேச சொல்ற. நீ தெரிஞ்சுதா பேசுறீயா? இல்ல தெரியாம பேசுறீயா? ஒண்ணுமே புரியல. இதுல என்னோட வேலைக்கு வேற வரேன் என்று சொல்ற… இங்கே வேலைக்கு போகணும்னா, நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு. முதல்ல அதெல்லாம் இருக்கட்டும் ஒரு பக்கம்… உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? ஏற்கனவே என்னோட வந்து ஹாஸ்டல்ல தங்குவதற்கு, உன் வீட்டிலுள்ளவர்களுக்கு பிடிக்கலை.இதுல என்னோட வேலைக்கு வரேன் என்று சொன்னா அவ்வளவு தான்." என்று அவளைப் பார்த்துக் கொண்டே வினவ…

அதுவும் சரி தான் என்ற அனன்யா கட்டிலில் படுத்துக் கொண்டு ரூஃபை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பாவனையில் சிரிப்பு வர, " ஏன் அனு அங்கே என்ன பார்க்குற? டாப் ப்ளோர் உள்ளவங்க தெரியராங்களா? ஆனால் என் கண்ணுக்கு தெரியலை."

"ப்ச்… உன்னோட அவுட்டிங் போகலாம் என்று ஆசையா இருந்தேன். இப்ப ரொம்ப டிசஃப்பாயிண்டா இருக்கு." என்ற அனன்யாவைப் பார்த்த ராதிகாவிற்கு வேறோரு உருவம் மனதிற்குள் வந்துப் போனது. உடனே அவளது கவலையைப் போக்க வேண்டும் என்று தோன்ற… ராதிகா அவளை சமாதானம் செய்தாள்.

" ஓகே அனு … பேபியாட்டாம் முகத்தை தூக்கி வச்சிக்காதே. உன்னோட பர்த்டே அன்னைக்கு வேண்டும்னா வரேன். " என.

" ம்கூம். என் பர்த்டேக்கு சிக்ஸ் மன்த்ஸ் இருக்கு. அப்புறம் என்னோட பர்த்டேக்கு எங்க ஹோல் குடும்பமே வந்து இறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை." என்றுக் கூறி உதட்டைப் பிதுக்கியவள், திடீரென முகம் மலர, " ராது இப்படி பண்ணினா என்ன? உன் பிறந்த நாளுக்கு அவுட்டிங் போகலாம்." என.

" அது சரி வராது."

" ஏன் ராது சரி வராது? அப்போ என் மேல உனக்கு இன்னும் கோபம் போகலையா?" என கண்கள் கலங்க வினவ.

" லூசா நீ… உடனே கண்ணுல டேமை திறந்திட்ட… முதல்ல கண்ணைத் துடை. ப்ரேக் பாஸ்ட் டைம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. வா முதல்ல சாப்பிட்டு வந்துடுலாம் அப்புறமா இதைப் பத்தி பேசலாம்." என்று அந்தப் பேச்சிற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தாள்.

கைப்பிடியாக அவளை இழுத்துக் கொண்டு மெஸ்ஸிற்கு சென்றாள். இவர்களுடை அறை தேர்ட் ப்ளோர். மெஸ் இவங்க பில்டிங்குக்கு ஆஃப்போஸிட் பில்டிங்.

ஒரு வழியாக இருவரும் சென்று உணவருந்தி விட்டு வந்தனர்.

அறைக்கு வந்தவுடன் மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள் அனன்யா.

" வொய் ராது?"
" அனு… அது வந்து நம்ம அன்னைக்கு அவுட்டிங் போனா, ஒன்று நம்ம இரண்டு பேரையும், எல்லாரும் சந்தேகமாக பார்ப்பாங்க. இல்லை அங்கே இருக்கவங்களை நம்மலால பார்க்க முடியாது. அதான் சொல்றேன்." என.

" புரியற மாதிரி சொல்லு ராது."

" என்னுடைய பிறந்தநாள் பிப்ரவரி ஃபோர்டின்."

" என்னது பிப்ரவரி ஃபோர்டினா. சூப்பர்… செம்ம போ. இன்னும் நான்கு நாள் தானா இருக்கு உன் பர்த்டேக்கு. சூப்பர். ஆனால் வொர்க்கிங் டேயில் வருது. அவுட்டிங்கெல்லாம் போக முடியாது. நீ சொல்றதும் சரி தான்." என்று அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

அதுக்கு பிறகு, அவள் வேலைக்கு கிளம்பும் வரை, அது இது என்று உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

ராதிகா அந்தப் பக்கம் நகர்ந்ததும், அனு அவளது அடுத்த அறைத் தோழிகளுடன் வெளியே கிளம்பி விட்டாள்.

அவளுக்கு உடனடியாக ஷாப்பிங் செய்வதற்கு அவசியம் இருந்தது. சண்டேவை விட்டால், அப்புறம் ரிலாக்ஸாக ஷாப்பிங் பண்ண முடியாது.

ராதிகாவின் பிறந்தநாளுக்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருந்தது. அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள்.

அதற்கான பர்ச்சேஸிற்கு அருகிலிருக்கும் மாலிருக்கு, தோழிகளுடன் சென்று வேண்டியதெல்லாம் வாங்கி வந்து, பக்கத்து அறைத்தோழியிடமே வைத்திருக்க சொல்லி விட்டாள். கேக் வாங்கும் பொறுப்பையும், அவளிடமே கொடுத்து இருந்தாள்‌.

மூன்று நாட்கள் கழித்து இரவு, ராதிகா நேரத்தோடு தூங்கியதும், பக்கத்து அறையிலிருந்த திங்ஸை எடுத்து வந்து, ஃப்ரெண்ட்ஸோடு சேர்த்து அறையை டெகெரேஷன் செய்தாள் அனன்யா.

அனைவரும் சத்தமிடாமல் சைகையில் பேசிக் கொண்டு பலூனை ஊதி ஆங்காங்கே தொங்க விட்டனர். ரூம் டெக்கரேஷனுக்காக வாங்கியவற்றை வைத்து அறையை அழகுப் படுத்தியவர்கள், கேக்கை எடுத்து வைத்து மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டு லைட் ஆஃப் செய்தனர்.

அனன்யா, ராதிகாவை எழுப்ப... அயர்ந்து உறங்கியிருந்தவள் பதறி எழுந்தாள்.

அவளைப் சுற்றி இருந்தவர்கள், " ஹாப்பி பர்த்டே டூ யூ." என்று பாட்டு பாடியபடியே, அவர்கள் வாங்கி வைத்து இருந்த ஸ்பேரையை அடிக்க… அங்கு அவள் மேல் நுரை பொங்கியது.

இன்ப அதிர்ச்சியில் அவளால் ஒன்றும் பேச முடியவில்லை.

" வா… முதல்ல கேக் கட் பண்ணலாம்." என்று ராதிகாவை அழைத்துக் கொண்டு சென்றாள் அனன்யா.

கேக்கை வெட்டி ராதிகா, அனன்யாவுக்கு ஊட்டினாள்‌. அதற்குப் பிறகு அன்று இரவு யாரும் உறங்கவே இல்லை‌. பர்த்டே பேபிக்கு கிஃப்ட் கொடுத்து விட்டு, அவளுக்கு சில டாஸ்க் கொடுத்தனர்.

அவர்கள் சொன்னதைக் கேட்ட ராதிகாவோ, " ம்கூம்… என்னால டான்ஸ்ஸெல்லாம் ஆட முடியாது. நான் வேண்டும்னா பாடவா." என.

" நீ வேண்டும்ன்னா பாட்டு பாடிக்கிட்டே, டான்ஸ் ஆடு. எங்களுக்கு நோ ப்ராப்ளம். இங்கே இது தான் ரூல்ஸ். பர்த்டே பேபி நாங்க கொடுக்குற டாஸ்க் எல்லாத்தையும் செய்யணும். டாட். " என்று எல்லோரும் ஆர்ப்பாட்டம் செய்…

ராதிகா அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தாள். ராதிகா ஆடும் போதே, எல்லோரும் சேர்ந்து ஆட்டம் போட, நல்ல ஜாலியாக அன்றைய பொழுது போனது.

மறுநாள் கல்லூரிக்கு சென்று, அங்கும் லஞ்ச் ப்ரேக்கில் கேக் வெட்ட, கொண்டாட்டம் தொடர்ந்தது. அனன்யாவின் அன்பைப் பார்த்து, ராதிகாவின் கண்ணில் ஒரு துளி நீர் துளிர்த்தது.

இன்று…

கிருஷ்ணன் வகுப்பு முடிந்து போகும் போதும், இவர்கள் இருவரையும் யோசனையுடனே பார்த்து விட்டு சென்றார்.

அடுத்து, அடுத்து வகுப்புகள் இருக்க… ராதிகாவிற்கு ஆதவனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு வழியாக லஞ்ச் ப்ரேக்கில் கேண்டீனுக்கு அவனை அழைத்துக் கொண்டு சென்றவள், வளவளவென்று பேசினாள்.

திடீரென்று நினைவு வந்தவளாய், " ஆதி… உன்னோட ஃபேஸ்புக் ஐடியை சொல்லு. உனக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் தரேன்." என்றுக் கூற…

அவனும் தனது ஐடி நேமை சொன்னான்.

ராதிகா சாப்பிட்டுக் கொண்டே, அவனுக்கு ரெக்வெஸ்ட் அனுப்ப…

அந்த ஐடி நேமைப் பார்த்தவன் தன்னை மீறி, அடக்கமாட்டாமல் நகைத்தான்.

அவனது சிரிப்பை ரசித்தவள், பொய்யாக முறைத்தாள்.

" ஹலோ… எதுக்கு இப்படி ஒரு சிரிப்பு… அப்படி ஒன்னும் காமெடியான பேரில்லையே. கஷ்டப்பட்டு யோசிச்சு ஒரு ஃபேக் ஐடி ஓபன் பண்ணேன்..." என.

" ஓ… இது தான் உன் ஃபேக் ஐடியா. இது வேறயா. நான் சிரிச்சதுக்கு காரணம். நம்ம ப்ரொபஸர் ஞாபகம் வந்திடுச்சு. அதான் சிரிச்சுட்டேன். பட் கிருஷ்ணனின் காதலி பெயர் சூப்பர். உண்மையா சொல்லு… சார உனக்கு ஏற்கனவே தெரியுமா?"

"இல்லை. ஆனால் எங்கோ பார்த்த மாதிரியே இருக்கு ஆதி… ஏதோ கோ இன்ஸிடென்ட்."

"ஆமாம் உன் பேருல ஏன் ஓபன் பண்ணலை. அப்புறம் இதை பேக் ஐடி சொன்னா யாரும் நம்ப மாட்டார்கள். கிருஷ்ணனின் காதலி, ராதா ஆர் ராதிகா தானே." என்றவன் சிரிக்க.

அவனது கேள்விக்கு இயல்பு போல பதிலளித்தாள்." ஆதி… என் பேருல இருந்த அந்த ஐடியை க்ளோஸ் பண்ணிட்டேன்." என்றவள் யோசனையில் ஆழ்ந்தாள். ' அப்போ அவனுக்கு நான் யாருன்னு தெரிந்திருக்குமோ . ' என்று குழப்பத்தில் இருக்க.

"ராதிகா… ஏன் டல்லாயிட்டா‌?" என ஆதவன் வினவ.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆதி. சின்ன யோசனை. இன்னைக்கு தான் நாம ஃப்ரண்டா ஆனோம். சோ இன்னிக்கு நாம சாப்பிட்டதற்கான பில்லை நீயேப் பே பண்ணிடு." என்று சொல்ல.

அதற்கு மெலிதாக புன்னகைத்தான் ஆதவன். உணவு முன்பே வந்திருக்க… அதை உள்ளே தள்ளிக் கொண்டு, எப்ஃபியில் நுழைந்திருந்தாள்.

அதற்குள் அவனுடைய பழைய மெசேஜ்களுக்கெல்லாம் லைக் போட்டுக் கொண்டிருந்தவள், அப்பொழுது தான் அன்று அவனின் பிறந்தநாள் என்பதை கவனித்தாள்.

" ஹே ஆதி… உனக்கு இன்னைக்கு பிறந்தநாளா ?" என்று வினவ.

"ஆமாம்." என்று தலையசைத்தவன், அவள் இன்னும் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து, " நீ மெதுவா சாப்பிட்டு வா. நான் பில் பே பண்ணிட்டு கிளம்பறேன்." என்று விட்டு கிளம்ப…

" ஆதி‌… வெயிட்… நானும் வரேன்." என்றவள், உணவை அவசர அவசரமாக விழுங்கி விட்டு ஆதவனைத் தொடர்ந்தாள். அதற்குள் அவன் கேண்டீனிலிருந்து வெளியே சென்றுக் கொண்டிருந்தான்.

" ஆதி…"என்று கத்திக் கொண்டே ஓடியவள், க்ரவுண்டில் பிடித்து விட்டாள்.

" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி." என்று மூச்சு வாங்கிக் கொண்டே கூற…

"தேங்க்ஸ் ராதிகா." என்றவனின் குரலில் சுரத்தே இல்லாமல் இருந்தது.

" ஏன் இவ்ளோ டல்லா இருக்க ஆதி. உன்னையப் பார்க்கும் போது, என்னைப் பார்ப்பது போலிருக்கிறது." என்றவள், ஆனால் ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு தேவதை என் வாழ்க்கையில் வந்து வாழ்க்கையை வண்ணமயமாக்கினாத் தெரியுமா? பிறந்தநாளை அப்படிக் கொண்டாடுவா?" என்றவள், ' அதெல்லாம் போனவருடத்திற்கு, முந்தின வருடத்தத்தோடு முடிந்து விட்டது.' என்பதை மட்டும் மனதிற்குள்ளே கூறிக் கொண்டாள்.

" இன்னைக்கு ஈவினிங் என்னோட ஹோட்டலுக்கு வர்ற… என்னோட ட்ரீட்." என்றாள் ராதிகா.

" ப்ச்‌. ராதிகா… இப்போ பர்த்டே செலிபிரேட் பண்ற மூட்ல இல்லை. ப்ளீஸ் லீவ் இட்." என்றான் ஆதவன்.

" வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் ஆதி. உன்னால முடிஞ்சா என் கிட்ட ஷேர் பண்ணு. இல்லன்னா பரவால்ல. நான் சொல்றதை கேளு.ஏழு வருஷத்துக்கு முன்னாடி நானும் இப்படி தான் இருந்தேன். பிறந்தநாள் விழா கொண்டாடுறதெல்லாம் பெரிசா இன்ட்ரெஸ்ட் காட்ட மாட்டேன். ஆனா அதுக்கப்புறம் எனக்கு ஒரு ஃபிரெண்ட் வந்தா தேவதை மாதிரி. எல்லாத்தையும் தலைகீழா மாத்தி அஞ்சு வருஷம் அந்த அளவுக்கு என்ஜாய் பண்ணோம். அதுக்கப்புறம் ஒரு வருஷம் கூட ஒன்னும் தெரியல. இப்போ பழையபடி என் வாழ்க்கை ஆரம்பத்தப் புள்ளிக்கே போய் விட்டது.

நான் அதைப்பற்றி எல்லாம் மறந்துட்டு, இப்போ நான் சிரிச்சிட்டு இல்லையா? கவலைய நினைச்சுக்கிட்டே இருந்தா நமக்கு சரி வராது.

கப்பல் கடலில் போகும் போது, அந்த கடல் இருக்குற தண்ணி எல்லாத்தையும் எடுத்துக் கொண்டால், அந்த கப்பல் மூழ்கிவிடும். அது தனக்குள்ள அந்த தண்ணீரை உள்வாங்காமல் இருக்கிறதால தான் கப்பலால் சமாளிக்க முடியுது. அதே மாதிரி தான் நம்மளோட கவலையெல்லாம் நம்ம மனசுல ஏத்திக்கக் கூடாது. கவலை நம் வாழ்க்கையில் இருந்துக் கொண்டே தான் இருக்கும். நாம் அதை ஒதுக்கிட்டு வாழ்க்கையில் முன்னேறனும்." என.

" நானும் என் கவலைகளை மறக்கணும் என்று தான் நினைக்கிறேன். பட் முடியலை. சின்ன வயசில் இருந்தே பெத்தவங்க இருந்தும், அன்புக்கு ஏங்குவோம். ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு தேவதை வந்து எங்க வாழ்க்கையை நீ சொன்ன மாதிரி மாத்தினா. ஆனால் அது கானல் நீர் ஆகிப் போனது. " என்று சொன்னவனின் கண்கள் கலங்கியது.

இருவரும் தேவதை என பேசியது ஒருவரைத் தான் என்று அப்பொழுது அவர்களுக்குத் தெரியவில்லை.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 8

அன்று..

" ஹேய் பர்த்டே பேபி… எதுக்கு அழற? கண்ணுல தண்ணி நிக்குது பாரு."

" நான் அழல அனு. கண்ணு வேர்த்துருச்சு." என்று கண் சிமிட்டி ராதிகா சிரிக்க…

" இதோடா… என்னோட சேர்ந்த ஒரு வாரத்திலேயே நல்லா பேசக் கத்துக்கிட்ட." என்று அனுவும் சேர்ந்து நகைத்தாள்.

நாட்கள் விரைந்தோட, இருவருடைய நட்பும் இறுகியது.

இன்னும் அனுவின் வீட்டில், யார் யார் இருக்கிறார்கள் என்று ராதிகாவிற்குத் தெரியாது. அனுவின் வீட்டிலிருந்து, ஃபோன் கால் வந்தால், ராதிகா அவளுக்கு தனிமைக் கொடுத்து விட்டு வெளியே சென்று விடுவாள்.

ஆனால் ராதிகாவின் பெற்றோர் அழைக்கும் போது, அனன்யா வெளியே செல்ல மாட்டாள். ஓரிரு வார்த்தை அவர்களிடம் பேசி விட்டு, அங்கேயே அமர்ந்து வேறு வேலை செய்ய ஆரம்பித்து விடுவாள்.

ஏனெனில் அப்படி வெளியே போக வேண்டுமென்றால் அடிக்கடி போற மாதிரி இருக்கும்.

ராதிகாவின் அம்மா, தூங்குவார்களா என்றுக் கூட தெரியாது. ராதிகா வேலையை விட்டு வந்த உடனே ஃபோன் வந்துவிடும். காலையில் எழுந்தவுடன் ஒரு முறை, அப்புறம் இவர்கள் கல்லூரிக்கு கிளம்புவதற்கு முன்பு ஒரு முறை, என்று இதேப் போல் அடிக்கடி ஃபோன் வந்து கொண்டே இருக்கும்.

ராதிகாவும் சலிக்காமல் பேசுவாள். அதைப் பற்றி ராதிகாவிடம் அனன்யா வினவ, அவள் முகம் மாறி விட்டது. அதற்குப் பிறகு அவளும் கேட்பதில்லை.

ஸ்டெடிஸ் ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. ஜாலியாகவே போய்க் கொண்டிருந்தது.

அன்று காலேஜில் இருந்து இருவரும் நடந்து வந்துக் கொண்டிருக்க… அனு தான் ஆரம்பித்தாள். " ஏய் ராது‌. நானும் வெளில போகலாம்னு ஆறு மாசமா சொல்லிட்டு இருக்கேன். இந்த வாரம், அடுத்த வாரம் என்று தள்ளிப்போட்டுட்டே இருக்க." என்று குறைபட…

" அடியே போன வாரம் தானே, உங்க ஃபேமிலியோட போயிட்டு வந்த. அப்புறம் என்னடி."

"அது…" என அனு ஏதோக் கூற வர…

"என்ன அது போன வாரம்… இது இந்த வாரம்… என்று சொல்லப் போறீயா?" என்று ராதிகா கிண்டலடிக்க…

"அது வேறன்னு சொல்ல வந்தேன். உன்னோட போகணும்னு ஆசையா இருக்கு டி. அதுவும் அந்த இடம் செம்ம அழகு. போற வழியெல்லாம் இயற்கை அழகு கொஞ்சுது தெரியுமா. அருவில நல்லா ஆட்டம் போடலாம். போன தடவை சேஞ்ச் பண்ண வேற ட்ரெஸ் எடுத்துட்டு போகாதால குளிக்கலை‌." என பாவமாகக் கூற‌.

" ஓகே… இந்த சண்டே உனக்காக நீ சொன்ன இடத்துக்கு நம்ம போகலாம் சரியா. அதுக்காக இப்படி கேவலமாக ஆக்ட் பண்ணாதே சகிக்கலை." என அனுவை வாரினாள் ராதிகா.

அனு போகணும் என்று ஆசைப்பட்ட இடம் பூடா வாட்டர் ஃபால்ஸ் அண்ட் ரெசார்ட். அது ஹீல்ஸ் ஸ்டேஷன். இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒன்றரை மணி நேர பஸ் பயணம்.

காலையில் நேரத்தோடு எழுந்து ராதிகாவும், அனுவும் அறையில் இருந்த இண்டேக்சன் ஸ்டவில் இலகுவான சமையல் செய்து எடுத்துக் கொண்டனர் அங்கு உணவு அவ்வளவாக இருக்காது.

அங்கு செல்லும் வழியில் நிறைய வ்யூவ்பாய்ன்ட் இருக்க… அங்கெல்லாம் நின்று இருவரும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர். ஹார்ஸ்ரைடிங்கு வர மாட்டேன் என்ற ராதிகாவை வற்புறுத்தி அழைத்துச் சென்றாள் அனன்யா.

இறுதியாக அங்கிருந்த அருவிக்கு செல்ல… ஒத்தையடி பாதையாக வழி இருக்க… ஒருவர் பின் ஒருவராக நடந்துச் சென்றனர். அனு, ராதிகாவின் கையைப் பிடித்துக் கொண்டே சென்றாள்.

ராதிகாவிற்கு இதையெல்லாம் ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை. கரடு முரடான பாதையில் கூட கவனம் வைக்காமல், தோழியின் கைப்பிடி தந்த தைரியத்தில், அருகில் சலசலவென ஓடிக்கொண்டிருந்த ஓடையை ரசித்துக் கொண்டு வந்தாள்.

ஹோ…. என்ற அருவி சத்தத்தில், மனதில் உற்சாக ஊற்று பெருக்கெடுத்தது. இருவரும் நன்றாக ஆட்டம் போட்டனர். ஒரு வழியாக குளித்து முடித்து விட்டு ரெஸ்ட் ரூமிற்குச் சென்று டிரஸ் சேஞ்ச் செய்துக் கொண்டு வந்தவர்கள், எடுத்து வந்திருந்த உணவினை சாப்பிடத் தொடங்கினர்.

இனிய சூழலில் மனம் மயங்கி இருக்க, அதில் அபஸ்சுவரம் போல் ராதிகாவின் ஃபோன் அடித்தது. அதை பார்த்ததும் முகம் இறுக அமைதியாக இருந்தாள் ராதிகா.

தன் அம்மாவிடம் சொல்லாமல் வந்த தன்னுடைய மடத்தனத்தை நினைத்து ராதிகா நொந்துக் கொண்டிருக்க…

மீண்டும், மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. பெருமூச்சு விட்டுக் கொண்டே எடுத்தாள்.

" ஹலோ மா… எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன்." என.

" ஏன் டா… இவ்வளவு நேரமா ஃபோன் எடுக்கலை. இன்னைக்கு லீவாச்சே ஹாஸ்டலில் தானே இருப்ப? என்று ஃபோன் பண்ணேன்." என்றவாறே சுந்தரி சுற்றுப்புறத்தை பார்த்தவள் யோசனையாக ராதிகாவைப் பார்த்து பேச்சை நிறுத்த…

" அதும்மா… அனு ரொம்ப நாளா அவுட்டிங் போகணும்னு சொல்லிக் கிட்டே இருந்தா. அதான் இன்னைக்கு வெளியே வந்து இருக்கோம்." என்றுக் கூற…

" என் கிட்ட சொல்லி இருக்கலாமே. சரி டா… என்ன தலையெல்லாம் விரிச்சுப் போட்டுருக்க. தண்ணீல ஆடுனீயா. ஜாக்கிரதை டா. அனுப் பொண்ணையும் கேட்டேன் சொல்லு."என்று அரை மணி நேரம் அறிவுரை கூறி விட்டு தான் ஃபோனை வைத்தார்.

இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி மறைந்து விட்டது.

அனன்யா தான் அவளை சமாதானப்படுத்த, " ஏன் ராது ஆன்ட்டி இப்படி பிஹேவ் பண்றாங்க? இது அப்நார்மலா தெரியுது. எப்பவுமே இப்படித் தானா… ஐ கான்ட் டைஜஸ்ட். ஆனால் நீ ரொம்ப பொறுமைசாலி." என.

எங்கேயோ பார்வையை பதித்தபடி ராதிகா, " அனு… முன்னெல்லாம் அவங்க இப்படி இல்ல. எல்லோரையும் போலத் தான் இருந்தாங்க. இரண்டு வருஷத்துக்கு முன்பு எங்க வீடு எப்படி இருக்கும் தெரியுமா? கலகலன்னு இருக்கும்.
நானும், எங்க அக்காவும் சேர்ந்துட்டா வீடே ரணகளமாயிடும். "

"என்ன ராது சொல்லுற… உனக்கு அக்கா இருக்காங்களா… எங்க இருக்காங்க? அவங்களைப் பத்தின பேச்சே இது வரைக்கும் வரலையே." என அதிர்ச்சியாக அனு வினவினாள்.

"இருந்தாங்க. பட் நவ் ஷீ இஸ் நோ மோர்."

"ஓ… சாரி டி."

" ப்ச் இப்ப எதுக்கு சாரியெல்லாம். எங்க தலையெழுத்து." என்று சொல்லி விட்டு அமைதியானாள் ராதிகா.

"அக்கா பேரு என்ன ராது? என்னாச்சு அவங்களுக்கு?"

" அவந்திகா… அது தான் அக்கா பேர். நான் டென்த் படிச்சிட்டுருந்தேன். அக்கா காலேஜ் செகண்டியர். எனக்கு லீவ் விட்டுட்டா போதும், அக்காவை கூப்பிட்டுக்கிட்டு பெரிய கோவிலுக்கு போயிடுவேன்.

அந்த கோவிலில் உள்ள இண்டு, இடுக்கு எல்லாமே அத்துப்படி. எப்ப எங்களுக்கு போரடிக்குதோ கோவிலுக்கு போயிடுவோம். அங்க இருக்கவங்களுக்கு எங்களைத் தெரியாமலே இருக்காது‌.

ஐப்பசி சதயத் திருவிழாவுக்கு போகணும்னு ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். ராஜராஜ சோழன்னா எங்களுக்கு அப்படி ஒரு க்ரேஸ். ஸ்கூல், காலேஜ் எல்லாம் லீவ்.

அன்னைக்கு கிளம்பும் போது, திடீரென்று எனக்கு போக முடியாத சூழ்நிலை. அவ மட்டும் கிளம்ப, அவ போகக் கூடாதுன்னு நான் அழுது ரகளைப் பண்ணேன். அக்கா கேட்கலை.

கிளம்பிப் போனவ திரும்ப வரலை. அங்கேப் போனால் நேரங்காலம் பார்க்காமல் நாங்க இருந்துட்டு தான் வருவோம்.

அன்னைக்கு அவ வர நேரம் ஆயிடுச்சு. எப்பயும் போல வந்துடுவா என்று அலட்சியமாக இருந்துட்டோம்.

அப்புறம் பார்த்தா அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருந்திருக்கு. பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல்லுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.

அங்கே ஃபர்ஸ்ட் எய்ட் மட்டும் செய்துட்டு, பணம் கட்டறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருக்காங்க. எங்களுக்கு தகவல் தெரிஞ்சு நாங்க அந்த ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள அக்காவுக்கு கிரிட்டிக்கல் ஆயிடுச்சு. கையில காசும் இல்லை. நாங்க எப்படியும் கட்டிடுவோம் என்று சொன்னதுக்கு அந்த மேனேஜ்மென்ட் ஏத்துக்கலை.

என்ன செய்யறதுன்னு தெரியாமல் அம்மாவும், அப்பாவும் தெகைச்சுப் போய் நின்னாங்க.

அம்மா தான் வீட்டிலிருக்கும் நகையை எடுத்துட்டு வரச் சொன்னாங்க.

உங்க கல்யாணத்துக்காக வாங்குன நகை இப்போ எதுக்கு பயன்படுது என்று அழுதுட்டே சொன்னாங்க…

அப்பா தான் இப்போ வாயை மூடப் போறீயா என்னன்னு திட்டிட்டு, போய் எடுத்து வந்தார்.

பட் கடவுளுக்கு கண்ணில்லை அவளை எடுத்துக்கிட்டு, எங்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கிறாரு.

அன்னைக்கு மட்டும் நான் அக்காக் கூட போயிருந்தா, இல்லை நான் போகக்கூடாது என்று அழுததற்காக அவப் போகாமல் இருந்திருந்தா, இல்லை பொண்ணை காணுமே என்று எங்க அப்பா, அம்மா ஃபோன் பண்ணியிருந்தா, இப்படி எத்தனையோ இருந்திருந்தால், அக்கா உயிரோட இருந்திருப்பான்னு தோணும்.

எனக்கே இப்படி தோணும் போது, எங்க அம்மாவை கேட்கவா வேண்டும்.

அன்னையிலிருந்து நான் ஸ்கூலுக்கு போனாலும் திரும்பி வரும் வரை வாசலிலே நின்னுட்டே இருப்பாங்க. டியூஷன், எக்ஸ்ட்ரா கிளாஸ் எதுக்கு போகணும்னு சொன்னாலும் அப்பாவை தான் தொந்தரவு செய்வார்.

அவரும் அம்மாவுடைய மனநிம்மதிக்காக‍, அவருடைய உடல் நிலையைக் கூட பொருட்படுத்தாமல் எப்போ, எங்க போகணும்னாலும் அழைச்சிட்டு போவார். அதுக்காகவே எந்த ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கும் போக மாட்டேன். அனாவசியமாக எங்கேயும் போகணும் நினைக்க மாட்டேன்.

ரொம்ப நாள் வரை பெரிய கோவிலுக்கு போகவில்லை. அங்கப் போனா அக்கா நியாபகம் வந்துடும். அப்புறம் வீட்டிலேயே இருக்கிறது, ரொம்ப இரிட்டேட்டிங்கா இருக்க, அதுக்கப்புறம் கோவிலுக்கு போக ஆரம்பிச்சேன்.

நானும், எங்கப்பாவும் அம்மா போக்குக்கே போயிட்டு இருப்போம். நான் இரண்டு விஷயத்துக்காக தான் அவங்களை எதிர்த்துப் பேசியிருக்கேன்.

ஒன்னு கோவிலுக்கு போகறது, இன்னொன்னு என்னுடைய கனவை நிறைவேற்றுவதற்காக இங்க வந்தது.

கனவுன்னா சின்ன வயசிலருந்து டாக்டராகணும்னு இல்லை.

எனக்கு அக்காவுக்கு ஆக்சிடென்ட் ஆனதிலிருந்து தான் ஒரு வெறி. எப்படியாவது டாக்டராகணும். நம்மாலான உதவிகளை தேவைப்படுற மக்களுக்கு செய்யணும்‌. அப்படின்னு நினைச்சிட்டு, அந்த உத்வேகத்தில் இவ்வளவு தூரம் வந்துட்டேன்.

ஆனா அங்க இருந்துட்டும் எங்க அம்மா புரோடெக்ட் பண்ணும் போது, என்னுடைய இயல்பு ரொம்ப பாதிக்கப்படுது. ஆனால் அதைத் தடுக்கவும் முடியாது.

எனக்குள்ளே வச்சிக்கிட்டு ஒரே மூச்சு முட்டுது. இப்போ உன் கிட்ட சொன்னதும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. 'என்று அவளது கதையை ராதிகாக் கூறி முடிக்க.

" என்ன சொல்றதுன்னே தெரியலை ராது. அம்மாவ நினைச்சாலும் பாவமா தான் இருக்கு. அவங்க மனசுல குற்ற உணர்ச்சி இருக்கும். அவங்களை நீங்க சரியா கவனிக்கலையோ தோணுது. இப்படியே விட்டா டிஃப்ரஷன்ல கொண்டு போய் விட்டுடும். சைக்யாட்ரிஸ்ட்டுக் கிட்டே கவுன்சிலிங் போனால் ஃபீல் பெட்டர்.

"நான் சொல்லிப் பார்த்துட்டேன் கேட்கலை." என்று ராதிகா பெருமூச்சு விட...

" ஓகே ராது. நீ கவலைப்படாதே. நான் அம்மாக்கிட்ட பேசுறேன். " என்று அனன்யா ஆறுதல் அளிக்க…

அவளது ஆறுதலான பேச்சில் நிம்மதியானாள் ராதிகா.

இன்று…

" சரி விடு ஆதி. ஈவினிங் பேசலாம். வா இப்போ கிளாஸுக்குப் போகலாம்." என்று கூறிய ராதிகா, அவனது தேவதையின் நினைவில் இருந்து தற்காலிகமாக மீட்டெடுத்தாள்.

ஒரு வழியாக அன்றைய வகுப்பு முடிந்ததும்‍, என்னோட ட்ரீட் என்று, பிரபல ஹோட்டலுக்கு ராதிகா அழைக்க.

" அதெல்லாம் வேண்டாம். காஃபி மட்டும் போதும்." என்று ஆதி கூறி விட…

அரை மனதாக, ஆதியுடன் அவர்களது கல்லூரிக்கு பக்கத்தில் இருந்த காஃபி ஷாப்புக்கு சென்றாள்.

பெரிய, பெரிய காலேஜுக்கு பக்கத்தில் அங்கு படிக்கும் மாணவர்களை கவருவதற்காக உருவாக்கிய காஃபி ஷாப். காஃபியில் உள்ள அத்தனை வகைகளும் இருந்தது. ஓப்பன் ப்ளேஸில் குடைக்கு கீழ் சேர் போட்டு இருந்தது. சுற்றிலும் மரம் கொடி இருக்க. காற்று ரம்மியமாக வீசியது.

"ஆதி… ஜூஸ் ஆர்டர் பண்ணவா." என்று ராதிகா வினவ.

" இல்ல எனக்கு வேண்டாம். எனக்கு காஃபி மட்டும் போதும். வித்தவுட் சுகர். நான் இன்னிக்கு எதுவும் இனிப்பு சாப்பிட மாட்டேன்."." என்றுக் கூற…

அவன் சொன்னது போல, அவனுக்கு சொல்லி விட்டு, தனக்கு கூல் காஃபி ஆர்டர் கொடுத்து விட்டு, அவனை ஆழ்த்துப் பார்த்தாள்.

'அவளுக்கு அவனிடம் தெரிந்துக் கொள்வதற்கு நிறைய இருந்தது. முதலாவது, முக்கியமானது இன்று மதியம் லஞ்ச் பிரேக்கில் அவன், நாங்கள் என்று சொன்னது, யார் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.' என்று நினைவுத்தவள், " ஆதி… உன்னைப் பத்தி சொல்லு. உங்க வீட்ல யார், யார் இருக்குறாங்க. "

" இப்போதைக்கு நானும், எங்கப்பா, அம்மா மட்டும் தான். இதுவே போன வருஷம் கேட்டிருந்தீன்னா, எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், என்னுடைய முதல் தோழன் என்று சொல்லிருப்பேன். இன்றைக்கு தான் அவனுக்கு நினைவுநாள்." என்று மரமரத்தக் குரலில் கூறினான்.

" என்ன ஆதி சொல்லுற… இன்னைக்குத் தானா…"என்று தடுமாறியவள், " ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ஆதி. உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா."

" அதெல்லாம் இல்லை ராதிகா. எனக்கு என் மனசுல உள்ளதை, யார் கிட்டயாவது ஷேர் பண்ணிக்கிட்டா, கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு தோணுது.

ஆஸ் யூஸ்வல் பணக்கார பேரன்ட்ஸ் போலத் தான் என்னுடைய பேரன்ட்ஸும்.
இரண்டு பேருமே டாக்டர்ஸ்‌. பணத்துக்குப் பின்னாடி போக, நானும் அண்ணனும் வேலைக்காரர் வசம் தான் வளர்ந்தோம்." என்றவன் சற்று நேரம் அவனது அண்ணனின் நினைவில் இருக்க.

" ஆதி… உன் பேரன்ட்ஸ் டாக்டர்ஸ். சோ அவங்க நேரங்காலம் பார்க்காமல் வேலைப் பார்க்க வேண்டியிருக்கும். விடு ஆதி. உனக்குத் தெரியாததா?

"அது சரி தான் ராதிகா. அவங்களுக்கு ஹாஸ்பிடல் முக்கியமாக இருந்தாலும், வீட்டுக்கும் வரும் போது கூட எங்களை கவனிப்பது கிடையாது. அதனால நானும், எங்க அண்ணனும் எங்களுக்குன்னு தனி உலகம் உருவாக்கிட்டோம். நாங்க இரண்டு பேரும் எதையும் எங்களுக்குள்ள மறைச்சிக்கிட்டதே கிடையாது. எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிப்போம். என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் அவன் தான்.

இப்படியே எங்க வாழ்க்கை போயிட்டு இருக்கும் போது, என் அண்ணன் அவனும் டாக்டர் தான். மேற்படிப்புக்கு வேற காலேஜ் சேர்ந்தான். அவன் வாழ்க்கையில் ஒரு புயல் வந்தது. அந்த இனிய புயல், எங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக சுழற்றி அடித்தது.

காலேஜில் பார்த்தவுடனே லவ் பண்ணான். எப்பவும் போல என் கிட்ட வந்து ஷேர் பண்ணான். எங்க வீட்டுக்கு வருவாங்க. சிரிக்க, சிரிக்க பேசுவாங்க." என்றவன் அவளது நினைவில் முகமெல்லாம் இளகியிருக்க.

" ஆதி அவங்க பேர் என்ன?"

" ஆகாஷ்…"

" நான் அண்ணா பேர் கேட்கலை. அவங்க லவ்வர் பேரைக் கேட்டேன்."

" அவங்க பேர் வேண்டாம் ராதிகா. நான் அவங்களை பேபின்னு தான் கூப்பிடுவேன்."

" ம்… சரி." என்றவள் அமைதியாக இருக்க.

மீண்டும் பேச்சை ஆரம்பித்தான் ஆதவன். " என்னுடைய பிறந்தநாள், அண்ணாவோட பிறந்தநாள் எல்லாம் அப்படி சர்ப்ரைஸ் பண்ணாங்க.

அதெல்லாம் ஒரு வருஷம் தான். அடுத்த வருஷம் பிறந்தநாள் அன்னைக்கு, சர்ப்ரைஸ் பண்ணாலும் ஏதோ மிஸ்ஸிங். எப்பவும் என் கூடவே இருக்குற அண்ணன் கூட, அன்னைக்கு என் கூட இல்லை.

காலையிலேயே பர்த்டே செலப்ரேட் பண்ணிட்டு ,ரெண்டு பேருக்கும் முக்கியமான கிளாஸ் இருக்கு என்று கிளம்பி போயிட்டாங்க. ஆனா அன்னைக்கு அவங்க ரெண்டு பேர் முகமும் சரியில்லை‌. ஏதோ சம்திங் ராங்க் என்று தோணுச்சு.

அப்புறம் பார்த்தா ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணி இருக்காங்க. ஈவினிங் வரை எங்க கெஸ்ட்ஹவுஸ்ல இருந்துட்டு, காலேஜ் முடியற டைம் கிளம்பி வந்திருக்காங்க.

ஆகாஷோட பைக்க லாரி மோதிருச்சு.
ஏதோ டூவிலர் மோதுற மாதிரி வந்துச்சுன்னு, பைக்கை வளைச்சான்னு சொன்னாங்க. அந்த ஏரியால தான் ரேஸ் மாதிரி வண்டியை ஓட்டுவாங்களே அதனால ஆச்சா? இல்லை எங்கண்ணனோட கவனக்குறைவால ஆச்சா? ஏதோ ஒன்னு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. எல்லாம் முடிச்சிருச்சு. எங்களுக்கு அப்புறமாத் தான் தெரியும். இரண்டு பேரும் அன்னைக்கு காலேஜ் போகலை என்று. அண்ணா ஸ்பாட் அவுட். அவங்களுக்கு லேசான அடி தான்." என்று முடித்தவன், பேரர் கொண்டு வந்து வைத்து விட்டு போன காஃபியை குடிக்க ஆரம்பித்தான்.

தன்னுடைய அக்காவின் ஞாபகம் வந்துவிட… கலங்கிய கண்களை சமாளித்து, " ஃபைவ் மினிட்ஸ் ஆதி. " என்று கூறி விட்டு, ரெஸ்ட் ரூம் போய் அழுதவள், முகத்தை நன்கு கழுவி விட்டு வந்தாள்.

திரும்பி வந்தவள் பார்த்தது என்னவோ, ஆதியின் சட்டையைப் பிடித்து அவனை, அடிக்கும் விஸ்வரூபனைத்தான்.

அங்கிருப்பது விஸ்வரூபன் தானா என்று அதிர்ந்து நின்றாள். 'ஆளே மாறிப் போயிருந்தான். தஞ்சாவூர்ல பார்த்ததை விட மெலிந்து, கண்ணெல்லாம் சிவக்க ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான்.'
ஒரு நொடி தான் இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நொடி, அடி வாங்கிக் கொண்டிருந்த ஆதியிடம் வேகமாகச் சென்றாள்.

அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து நின்று ஆதியை தாங்கிப் பிடிக்க…

யாருடா இந்த பொண்ணு என எரிச்சலுடன் பார்த்தவன், அங்கு ராதிகாவைப் பார்த்ததும், அவனது கை, தன்னாலே கீழே இறஙகியது.

கண்கள் கலங்கித் தவித்த ராதிகாவைப் பார்த்தவன், அடிக்க முடியாத ஆத்திரத்தை அருகில் இருந்த கிளாஸில் காண்பித்து விட்டு, அவ்விடத்திலிருந்து வெளியேறினான்.

செல்லும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.வேறு இரு விழிகளும் அங்கு நடந்ததை சிரித்துக் கொண்டே கவனித்தது.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 9

அன்று...

" நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று அனன்யா வாய் வார்த்தையாக சொல்லவில்லை. அவள் சொன்ன மாதிரியே ஹாஸ்டலுக்கு சென்றவுடன், சுந்தரிக்கு அழைத்து விட்டாள்.

" ஆன்ட்டி." என அழைத்தாள்.

இந்த கொஞ்ச நாளில் அனன்யா, சுந்தரியுடன் நன்கு பழகி விட்டிருந்தாள்…

அவரும் ," எப்படிடா இருக்க மா? ஒன்னும் பிரச்சினை இல்லையே. நல்லாதான இருக்கீங்க?" என பதறி விட்டார்.

" நாங்க நல்லா இருக்கோம். வீட்டுக்கு வந்தாச்சு. உங்கக் கிட்ட பேசணும். நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா ஆன்ட்டி."

" சொல்லுமா…" என்றவர் யோசனையோடு தன் மகளை தேட…

" அவ கேண்டீன் போயிருக்கா ஆன்ட்டி."

" சரி சொல்லு மா. எதுக்கு ஃபோன் போட்ட…"

" அது வந்து ஆன்ட்டி. நான் சொல்றதைக் கேட்டு எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க இப்படி ரெஸ்ட்லஸ்ஸா இருக்கிறதைப் பார்த்து, ராதிகாவும், அங்கிளும் கவலைப்படறாங்க. என்ன உங்க பொண்ணா நெனச்சுக்கோங்க. ராதிகா அக்கா, நம்மக் கூட தான் இருக்காங்கன்னு நினைச்சுக்கோங்க. நம்ம கையில எதுவும் கிடையாது. சாவு வரணும் இருந்தா, வீட்ல இருந்தாக் கூட நிகழும். நீங்க வருத்தப்பட்டு, அவங்களையும் ஹர்ட் பண்ணுறீங்க." என.

" நானும் மறக்கணும் தான் நினைக்கிறேன் அனுமா. ஆனால் என்னால முடியல." என்று சுந்தரி அழ.

"ஆன்ட்டி.‌‌.. ப்ளீஸ் அழாதீங்க. நான் சொல்றது உங்க நல்லதுக்காகத் தான் ஆன்ட்டி. எங்க அங்கிள் கிட்ட சொல்லி, தஞ்சாவூர் நல்ல சைக்கியாட்ரிஸ்ட் யாருன்னு விசாரிக்க சொல்லுறேன். நீங்க ஒரு ரெண்டு, மூணு கவுன்சிலிங் மட்டும் போங்க. சீக்கிரம் உங்களுக்கு க்யூர் ஆகிவிடும். நீங்க அதுக்கு அப்புறம் வேற விஷயத்தில் கவனம் செலுத்துங்க. உங்களுக்கு எதுல இன்ட்ரஸ்ட் இருக்கோ, அதுல கான்சென்ட்ரேஷன் செலுத்துங்க. அப்புறம் எல்லாமே சரியாயிடும். இந்த ஒரு முறை எங்களுக்காக ஒத்துழைப்புக் கொடுங்க. என்னை உங்க மகள நினைச்சுக்கோங்க." என.

அனன்யாவின் பேச்சால், அவரது மகள் அவந்திகாவின் முகம் கண்ணுக்குள் வந்து போக… அவர் இதுநாள் வரை ராதிகா சொன்னதற்கெல்லாம், மறுத்தவர் அனன்யாவின் பேச்சைக் கேட்டு தலையசைத்தார்.

அனன்யா இங்கிருந்துக் கொண்டே, அவளது மாமாவின் மூலம் தஞ்சாவூரின் சிறந்த சைக்கியாட்ரிஸ்ட்டுக் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கினாள்.

சுந்தரியும் ஒழுங்காகக் கவுன்சிலிங்குக்குச் சென்றாள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பயம் மறைய ஆரம்பித்தது.

அதே நேரத்தில் அவர்கள் வீட்டு மாடியில் குடியிருந்த ஸ்வேதா, மாசமாக இருக்க… அவளை சுந்தரி தாயாக இருந்து கவனித்துக் கொண்டார்.

அனன்யா, ராதிகாவின் அம்மாவை மட்டும் மாற்றவில்லை. ராதிகாவையும் தான் மாற்றினாள். ராதிகாவும், அவளது தயக்கம், தடுமாற்றம் எல்லாம் மறைய… அவளது இயல்பு அனன்யாவால் மீண்டும், மீட்டெடுக்கப்பட்டது.

காலம் வேகமாக ஓட… அவர்கள் பிலிப்பைன்ஸ் வந்து ஒரு வருடம் முடிந்து இருந்தது.

ஒருமுறை அனன்யா இந்தியாவிற்கு சென்று வந்தாள். அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு, மூன்று முறை எல்லோரும் வந்து, அவள் ஏற்கனவே தங்கியிருந்த அந்த ப்ளாட்டுக்கு அவளை வர வைத்து பார்த்துச் சென்றனர்.

நாளையிலிருந்து அடுத்த வருடம் படிப்பு ஸ்டார்ட்டாகுது. இந்தியாவிலிருந்து அனன்யா ஃபேமிலி வருவதாக சொல்லியிருக்க… இருவரும் இன்று ஷாப்பிங்குக்கு வந்திருந்தனர்.

டேவோ சிட்டி.
பிலிப்பைன்ஸ்
ஜீ மால்… ஃபிப்த் ஃப்ளோர் ரூப் கார்டன்.

அந்த மாலையே ஒரு கலக்கு கலக்கி விட்டு, வந்து அக்கடா என்று அனன்யாவும், ராதிகாவும் அமர்ந்து இருந்தனர்.

" ஏய் அனு… அவ்வளவு தானே . பர்ச்சேஸ் ஓவர் தானே. ஐயம் வெரி டயர்ட் ." என்று கூறியவாறே தனக்கு முன்னால் இருந்த மேங்கோ ஃப்ளோட்டை அருந்தினாள் ராதிகா.

" ராது செல்லோ… இன்னும் கொஞ்சம் பர்சேஸ் பண்ணணும். ஹாஃப்னர்ல கிளம்பிடலாம். உனக்கு நல்ல இந்தியன் ரெஸ்ட்ரான்ட்ல லஞ்ச் வாங்கித் தரேன்" என்று அனன்யா டீல் பேசினாள்.

" ஹேய் அனு… நான் ஹாஸ்டல்லயே பார்த்துக்கிறேன். அங்கேயும் இந்தியன் ஃபுட் தான். அதனால நீ ஒன்னும் வாங்கித் தர தேவையில்லை."

" ப்ளீச் செல்லோ. வேணும்னா நான் உனக்கு ஈவினிங் பானிபூரி வாங்கித் தரேன். "

' ஐ… பானிபூரியா…' என்று மனதிற்குள் சப்புக் கொட்டியவள், வெளியேவோ கெத்தாக, " அது தான் உனக்கு, உங்க வீட்ல உள்ள எல்லோருக்கும் வாங்கிட்டல்ல… அப்புறம் என்ன டி. காலையில் இருந்து ஹாஃப்னவர், என்று எவ்ளோ தடவை சொல்லிட்ட… அங்க இந்தியாவுல இல்லாதது இங்கே என்ன இருக்கு?"என்று ராதிகா முறுக்கிக் கொண்டாள்.


"அதெல்லாம் உனக்கு தெரியாது. என்னை எங்க வீட்ல எல்லோரும் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க. நான் ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுத்தால், நானே அவங்க கூட இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. சோ… அதான் இவ்வளவு மெனக்கெடுறேன். இன்னும் மாமாக்கு மட்டும் வாங்கணும். அதுக்கும் நீ தான் ஹெல்ப் பண்ணனும் டி." என கெஞ்சுதலாக முடித்தாள் அனன்யா.

" ஹேய் என்னால முடியாது. நீ போய் வாங்கு. எனக்கு டயர்டா இருக்கு.என்னை ஆள விடு. நான் இங்கேயே வெயிட் பண்ணுறேன். நீ போய் வாங்கிட்டு எனக்கு ஃபோன் பண்ணு. நான் வரேன்." என ராதிகா கூற.

அவளது முகத்தைப் பார்த்த அனுவும் வற்புறுத்தாமல் கிளம்பி விட்டாள்.

ஒரு வழியாக பர்சேஸ் முடிந்து, மதிய உணவையும் வெளியே முடித்துக் கொண்டு தான் ஹாஸ்டலுக்கு வந்தனர்.

************************

ராதிகா, அழகிய லேவண்டர் நிற குர்தி, சந்தன நிற ஜீன்ஸில் தயாராகி காத்திருக்க… அனன்யாவோ, இன்னும் தயாராகவில்லை.

அவளோ‍, நேற்று பர்சேஸ் செய்து விட்டு வந்தவற்றை களைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவின் பொறுமை, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

தனது கையிலிருந்த செல்ஃபோனில் டைமை பார்த்தவள், " ஏன் டி அனு? உனக்கு என்ன தான் பிரச்சினை? எதுக்கு எல்லா ட்ரெஸையும் களைச்சி போடுற‌."

" ராது… என்ன ட்ரெஸ் போடுறது என்று கொஞ்சம் குழப்பமா இருக்கு. இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ் வேறயா. நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு போகணும். ஃபர்ஸட் இம்ப்ரஷன். பெஸ்ட் இம்ப்ரஷன்ஸ். அதான் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருக்கு."

" ஏன் டி அனு. என் வாயில் நல்லா வந்துரும். நம்ம இங்க வந்து ஒன் இயர் முடிஞ்சிடுச்சு‌. அப்புறம் என்னடி உனக்கு டென்ஷன்."

" அது வேற. இது வேற. அப்ப நம்ம படிக்க போனது சைக்காலஜி. அது வேற காலேஜ். சும்மா கொஞ்ச பேரோட படிச்சோம். அது மாதிரியா. இங்கே நிறைய பேர் இருப்பாங்க. அவங்களோட மிங்கிள் ஆகணும். அது தான் கொஞ்சம் பயமா இருக்கு." என அனன்யா கூற.

" என்னவோ போ அனு. எனக்கு ஒரே எக்ஸைட்டா இருக்கு. எப்பதான் நாம் ஆசைப்பட்ட மெடிசின் படிப்போமோ என்று இந்த ஒன் இயரா காத்துட்டுருந்தேன். இந்தியாவுல படிச்சிருந்தா ஃபர்ஸ்ட் இயர் முடிச்சிட்டு செகண்டியர் போயிருப்போம்.
இங்கே பிலிப்பைன்ஸ்ல சைக்கலாஜி ஒன் இயர் படிச்சா தான், மெடிசின் படிக்க முடியும். இப்ப தான் ஒரு வழியாக அதை முடிச்சிட்டு, நம்ம கனவை நிறைவேற்றப் போற காலேஜ்ஜை பார்க்கலாம் என்று பார்த்தால் வரமாட்டேங்குறீயே" என்று ராதிகா கூற.

" நானும் அதுக்காகத்தான் பரபரப்பா கிளம்புறேன். சரி இதுல நான் எதைப் போடுறது? எனக்கு நல்லா சூட் ஆகுறதை சொல்லுடி." என.

கொலவெறியில் இருந்த ராதிகா, " அனு… இன்னைக்கு காலேஜ் போட்டுக்கிறதுக்காகத் தானே, நேற்று பர்ச்சேஸ் பண்ணோம். எல்லாம் ட்ரையல் பார்த்து உனக்கு சூட்டாகுறதா தானே வாங்குனோம். அதுல எதையாவது போட்டுட்டு இப்போ வர… இல்லை நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்." என்று மிரட்ட.

அந்த மிரட்டல் வேலை செய்தது. அடுத்த ஐந்தாம் நிமிடம் அனன்யா தயாராகி வந்து விட…

இருவரும் ஹாஸ்டலில் இருந்து கிளம்பி, எதிரே இருந்த மெஸ்ஸுக்கு சென்று உணவருந்தி விட்டு, ஒரு வழியாக காலேஜுக்கு கிளம்பினர்.

ஜிப்னிற்காக காத்திருக்க, சரியாக அந்த நேரத்தில் வண்டியும் வந்து விட்டது.

காலேஜில் இருவரும் அடியெடுத்து வைக்க…

அனன்யா, " இரு ராது. இன்னைக்கு மாமா வரேன் என்று சொன்னாங்க. இங்கே வெயிட் பண்ணுவோம்." என்று என்ட்ரன்ஸ் கேட் அருகில் நின்றுக் கொண்டாள்.

ராதிகாவோ, " நீ வெயிட் பண்ணு. நான் உள்ளே போய் வெயிட் பண்ணுறேன். கொஞ்சம் சீக்கிரமா வா அனு." என்றவள் உள்ளே நுழைந்து அந்த காலேஜ்ஜை ஆர்வமாக சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது ஆர்வத்தை தடை செய்வது போல, " ஏ கேர்ள்… " என்ற குரல் ஒலித்தது.

ராதிகாவோ, அந்தக் குரலை லட்சியம் செய்யவில்லை.

மீண்டும் " ஹேய் உன்னைத் தான். கம் ஹியர்." என்ற அலட்டலான குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் ராதிகா.

ஸ்டைலாக தலையைக் கோதிக் கொண்டே, ஒரு கையால் இங்கே வா என்று சைகை செய்தான் ஒருவன்…

இவளோ யோசனையுடனே அவனது அருகில் சென்றாள். முன்பானால் பயந்து நடுங்கியிருப்பாள். இப்போ தான் அனன்யாவின் ட்ரைனிங் இருக்கிறது. ' யாரேனும் ரேகிங் பண்ணனும் என்று நினைத்தாலே அவங்களை தெறிக்க விடணும்.' என்று இருவரும் பேசிக் கொண்டது அவளுக்கு நியாபகம் வரவே புன்னகையுடன் சென்றாள்.

நடந்துக் கொண்டே தன் தோழி வருகிறாளா என்றுப் பார்க்க…

அவளோ இன்னும் உள்ளே வரவில்லை.

அவளது பார்வையை உணர்ந்தவனோ, ' ஒரு வேளை இவளுக்கு நாம் யாரென்று தெரியுமோ.' என்று எண்ணியவன் ' இருக்காது.' என்று தனக்குள் கூறிக் கொண்டு," ஏய் க்வீக் ஃபாஸ்ட்." என்றான்.

அவனது அருகே வந்தவளிடம் முதல் கேள்வியாக ," நீ தமிழா…" என்று வினவியவன்‍, பிறகு வழக்கம் போல சில கேள்விகளை வினவினான். " உன் பேர் என்ன? எந்த ஊர்? " என்று எல்லாம் மொக்கை போட்டான்.

ராதிகாவும் கடனே என்று எல்லாவற்றிற்கும் பதில் கூறினாள்.

" சரி உனக்கு பாடத் தெரியுமா?" என்று அடுத்து வினவ.

" ஹாங்…" என்று முழித்தாள்.

"ஏன் பாடத் தெரியாதா? சரி பரவால்ல விடு. இங்கே கழுதை எதுவும் கிடையாது. அதனால பயப்படாமல் பாடு. அட்லீஸ்ட் நாலு லைன்ஸ் கத்திட்டாவது போ." என்றவன் வெளியே இருந்து யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே வினவினான்.

ராதிகாவோ, ' டேய் எருமை மாடு. நீ என்ன என்னை பொண்ணு பார்க்கவா வந்திருக்க‌… பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா? என்று கேட்டுட்டு இருக்கிற?.' என மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தவள், அவன் தொடர்ந்து கூறியதைக் கேட்டு அவனை பார்த்து முறைத்தாள்.

" ஹலோ… என்ன லுக். சீனியர் கிட்ட கொஞ்சம் கூட பயமே இல்லையா. நான் சொல்றதை செஞ்சுட்டா, நீ போயிட்டே இருக்கலாம். இல்லைன்னா இங்கேயே நிற்க வேண்டியது தான்." என.

கடுப்பான ராதிகா, அவனை வெறுப்பேத்த " போடா போடா புண்ணாக்கு‌. போடாத தப்பு கணக்கு." என பாட.

அவளது குரலின் இனிமையை கூட ரசிக்காமல் வேகமாக அதிர்ந்தவன் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றிப் பார்த்தான். நல்லவேளை அருகில் யாரும் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன், " ஓய்… ஒழுங்கா ஒரு நல்ல பாட்டா பாடு. ஆங்… உன் பேர் என்ன ராதிகா தானே. அதுவும் கண்ணனோட ராதிகா தானே. அந்த கண்ணனை வச்சே ஒரு பாட்டு பாடு." என்று கூற.

அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்றே அரத பழைய பாட்டான " கண்ணன் எந்தன் காதலன்." என்ற பாடலை மெய் மறந்து பாடினாள்.

அவளது குரலில் முகத்தில் வந்து போன பாவத்தில் லயித்து போனான் அவன்.

பாடி முடித்த ராதிகா, " நான் போகட்டா சீனியர்." என்று அவனைப் பார்த்து வினவ.

அவனோ ஒன்றும் கூறாமல் ப்ரீஸ் ஆகி நிற்க.

" ஹாய் மாம்ஸ்.நீங்க இங்கே இருக்கீங்களா? நான் உங்களை வெளியே தேடிட்டு இருந்தேன். எப்போ வந்தீங்க. வந்து ரொம்ப நேரம்ஆகுதோ?" என்று படபடவென அனன்யா வினவ.

ராதிகாவோ, கொலை வெறியில் அருகில் நின்றிருந்த நெடியவனைப் பார்க்க. அந்த மாயக்கண்ணனோ, ராதிகாவைப் பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்தான்.


இன்று…

கோபத்துடன் செல்லும் விஸ்வரூபனைப் பார்த்து மிரண்டவள், அவன் சென்றதும் ஆதியைப் பார்த்தாள் ராதிகா.

விஸ்வரூபன் அடித்ததில் லேசாக ரத்தம் வந்திருந்தது.

அங்கு இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்துத் துடைத்து விட்டவள்," ஏன் ஆதி. என்ன ஆச்சு? உங்களுக்கும், அவருக்கும் என்ன பிரச்சனை." என்றாள் தவிப்பாக.

" ஒன்னும் இல்ல ராதிகா. எங்க ரெண்டு பேருக்கு இடையில ஒரு சின்ன இஷ்யூ தான். அது அப்படி ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. சோ யூ டோன்ட் வொர்ரி. " என்றவாறு, தான் அடிபட்டதாக கவலையுடன் இருக்கும் ராதிகாவை பார்த்து புன்னகைத்தான்.

" சரி வர்றீயா. உனக்கும் வேலைக்கு டைம் ஆயிடுச்சு தானே. உன்னை விட்டுட்டு கிளம்புறேன்." என்று கூறியவன், அவனது காரை நோக்கி சென்றான்.

"இல்லை ஆதி. பக்கத்துல தானே நான் நடந்துப் போய்க்கிறேன். நீ பார்த்து போ. டேக் கேர்." என்று ஆதியை அனுப்பி வைத்தவள், பெருமூச்சு விட்டுக் கொண்டாள். ' விஸ்வா… ஆளே மாறி விட்டார்.' என்று மனதிற்குள் எண்ணியவாறே, வேலைக்குச் சென்றாள்.

அங்கு ஆதியோ, அடி வாங்கியதைக் கூட நினைத்து, கோபப்படாமல் புன்னகையுடன் காரை ஓட்டிக்கொண்டு சென்றான்.

சற்று முன் நடந்ததை நினைத்துப் பார்த்தான். தான் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் போது வந்து பேசிய விஸ்வரூபனின் வார்த்தைகள் காதுக்குள் மீண்டும் ஒலித்தது.

' "ஹலோ மிஸ்டர். ஆதவன். உங்களுக்கு என்ன வேணும்? உங்களுடைய சகவாசமே வேண்டாம் என்று தானே நாங்கள் ஒதுங்கிப் போகிறோம். எதுக்கு எங்களை வந்து தொந்தரவு பண்ணுறீங்க?"

"நானும் அதையேத் தான் சொல்லுறேன் அண்ணா. எங்களுக்கு சொந்தமானதைக் குடுத்துட்டா, நான் ஏன் உங்கக் கிட்ட சகவாசம் வச்சுக்கப் போறேன்." என்று நக்கலாக வினவ.

" ஏய்… தேவையில்லாதத பேசாத?" என அழுத்தமான குரலில் விஸ்வரூபன் கூற.

" நான் மாட்டும் என் கேர்ள் ஃப்ரெண்டோட அவுட்டிங் வந்தேன். நீங்களா தானே அண்ணா வந்து பேசுனீங்க." என ஆதி கூற.

" டேய் அண்ணான்னு கூப்பிடாதே. எரிச்சலா வருது. நீ எதுக்கு எங்க காலேஜ்ல வந்து சேர்ந்த? ஒழுங்கா காலேஜ் விட்டு ஓடிடு."

" அண்ணான்னு சொல்லக் கூடாதா ஓகே. எனக்கும் அதுல விருப்பமில்லை. ஜஸ்ட் மரியாதைக்காகத் தான் சொன்னேன். நான் சும்மா ஒன்னும் அந்த காலேஜ்ல சேரலை. சீட்டுக்காக எவ்வளவு டொனேஷன் குடுத்துருக்கேன் தெரியுமா." என.

" நீ குடுத்ததை விட டபுள் மடங்கு பணம் தரேன். எங்க காலேஜ் விட்டு போயிடு." என்றான் விஸ்வரூபன்‌.

"என்ன சாரே… சும்மா, சும்மா எங்க காலேஜ் என்று சொல்லுறீங்க‌. அது உங்க காலேஜ் மட்டுமில்லை. எங்க அத்தை காலேஜும் கூட…" என்று ஆதி சொல்லிக் கூட முடிக்கவில்லை, "ஏய் அப்படி சொல்லாதே." என்று கர்ஜித்தான் விஸ்வரூபன்.

"ஏன் சொல்லக்கூடாது. எனக்கும் அவங்க அத்தை தான்‌. அந்த உறவை மாத்த முடியாது." என…

அடுத்து விஸ்வரூபன் ஓங்கி ஒரு அறை விட்டான். ' அதை நினைத்தவனின் முகத்தில் ஒரு புன்னகைவந்தமர்ந்தது

விஸ்வரூபனோ டென்ஷனோடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான். ஏற்கனவே ஹாஸ்பிடலில் ஒரு கடினமான ஆஃப்ரேஷன். அதை முடித்து விட்டு வந்தவன், ரிலாக்ஸிற்காக, பக்கத்திலுள்ள காஃபி ஷாப்பிற்கு வந்திருந்தான்.

அங்கு வந்தவனுக்கு இன்னும் பிபி ஏறியது தான் மிச்சம்.வீட்டிற்கு செல்ல வேண்டும் நினைத்தாலே மனம் நிலையில்லாமல் தவித்தது. சரி தான் என்று பீச்சிற்கு சென்றவன் கடலை வெறித்துக் கொண்டு இருந்தான்.

கண்களை மூடினால், ஆதியை தாங்கிப் பிடித்த ராதிகாவே கண்முன்னே வந்து சென்றாள். சும்மாவே பீச்சிற்கு வந்தால் அவளது நியாபகம் தான் அலைமோதும்.
அவளோடு இந்த பீச்சில் டைம் ஸ்பென்ட் பண்ணது தான் ஞாபகத்திற்கு வந்தது.

பழசையெல்லாம் அசைப்போட்டவன், மணியைப் பார்க்க பத்தை தாண்டியிருந்தது‌.

அங்கிருந்து கிளம்பினவன்,வீட்டிற்கு வர… வீட்டில் அனைவரும் அவனுக்காகக் காத்திருந்தனர்.

எல்லோரும் உறங்கி இருப்பார்கள் என்று எண்ணியிருந்தான்.

சோஃபாவில் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து இருந்தனர்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்போக்கில் மாடிக்கு ஏற கிருஷ்ணன் தான் பேச்சை ஆரம்பித்தார்.
" ஏன் தம்பி. நான் தான் இந்த பிரச்சினையைப் பார்த்துக்கிறேன் என்று சொன்னேனே. அப்புறம் ஏன் அவன் கூட பொது இடத்தில் சண்டை போட்டுட்டு இருக்க. இப்ப பாரு உன்னால அந்தப் பொண்ணோட பேரையும் இழுத்து விட்டுருக்காங்க."என.

இதுவரை தந்தை பேசியதைக் கேட்டு, ஒன்னும் கவலைப்படாமல், அலட்சியமாக இருந்தவன், கடைசியாக அவர் கூறியதைக் கேட்டு," என்னப்பா சொல்றீங்க புரியல. ஃபர்ஸ்ட் நான் அவனை அடிச்சது உங்களுக்கு எப்படி தெரியும்." என்று வினவ.

" இங்கே பாரு. நீ அங்க சண்டை போட்டு இருக்கிறது யாரோ வீடியோ எடுத்து, பேஸ்புக்ல, அப்புறம் நம்ம காலேஜ் வாட்ஸ்அப் குரூப்ல எல்லாம் ஷேர் பண்ணியிருக்காங்க‌. அதுவும் சும்மா ஒன்னும் பண்ணலை. ஒரு பொண்ணுக்காக காலேஜ் ஸ்டூடண்டும், ஒரு டாக்டரும் சண்டை என்று காஃப்ஷெனோட ஷேர் பண்ணியிருக்காங்க." என கிருஷ்ணமூர்த்தி கூற…

அந்த வீடியோவைப் பார்த்தவன் திகைத்து நின்றான்.

தொடரும்…
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 10

ஒரு நிமிடம் அவனது மாய சிரிப்பில் மயங்கியிருந்த ராதிகா, பிறகு தன்னை முட்டாளாக்கியதை நினைத்துப் பார்த்தவள், தலையை உலுக்கிக் கொண்டு அனுவையும், விஸ்வரூபனையும் பார்த்து முறைத்து விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள்.

" ராது… வெயிட். ஃபைவ் மினிட்ஸ் நானும் வந்துடறேன்." என்ற அனன்யாவின் குரலை கேட்பதற்கு அவள் அங்கு இல்லை.

விடுவிடுவென உள்ளே சென்றிருந்தாள்.

"விடு அந்துருண்டை. அவ திமிர் பிடிச்சவ. போகட்டும்." என்றான் விஸ்வரூபன்.

" மாம்ஸ்… இதை சொல்லத்தான் இந்தியாவில இருந்து வந்திருக்கீங்களா. அவ என் ஃப்ரண்ட். அவ எப்படி இருந்தா, உங்களுக்கென்ன? அவக் கிட்ட என்ன வம்பு பண்ணீங்க."

" அது வா. நான் எப்படி பார்த்தாலும் அவளுக்கு சீனியர் தானே. அதான் ரேகிங் பண்ணலாம் என்று பார்த்தேன். ஆனால் அவ என்னை கலாய்ச்சிட்டு, என்னமோ, நான் கிண்டல் பண்ண மாதிரி முறைச்சிட்டு வேற போறா பாரேன்." என்றவன், சற்று முன் நடந்ததைக் கூற.

அனன்யாவோ விழுந்து, விழுந்து சிரித்தாள். " ஐயோ! மாமா… செம்ம பல்ப்பா. ஆமாம் அவ என் ஃப்ரண்ட்டுனு தெரியும்ல. அப்புறம் ஏன் வம்புக்கு போறீங்க."

" பெரிய இவளாட்டம் நம்ம பாட்டிக்கிட்டக் கூட வீடியோ கால்ல பேச வர மாட்டேன் என்று சொன்னாளே. அந்த கோபம் தான் சரி விடு."

" அது ஏற்கனவே ஒரு தடவை பேச்சுவாக்கில் நம்ம வீட்ல உள்ளவங்களுக்கு, ஹாஸ்டலுக்கு நான் வருவதில் விருப்பம் இல்லைனு சொல்லியிருந்தேன்‌. அதிலிருந்து அவ நம்ம வீட்டு ஆளுங்க பேச்சு எடுத்தாலே ஒதுங்கி, ஒதுங்கிப் போறா… இதுல நீங்க வேற வம்பு பண்ணி வச்சிருக்கீங்க‌. உங்களை என்ன செய்யறது? நீங்க ஹாஸ்டலுக்கு வர வேண்டியது தானே."

" அதுவா… இங்கே வந்த தானே கலர் கலரா ஃபிகருங்களைப் பார்க்கலாம்." என விஸ்வரூபன் முணுமுணுக்க.

" ஹாங்… என்ன மாமா சொன்னீங்க?" என அனன்யா முறைக்க.

" அது வந்து அனு மா… ஹாஸ்டலுக்கு வந்தா, அங்கே இருக்குற ஃபிகருங்களால் எனக்குத் தொல்லைன்னு சொல்ல வந்தேன். ஆமாம் லக்கேஜெல்லாம் என் ஃபிரண்டு வீட்டுக்கு அனுப்பிட்டியா?"

" ம்… நேத்து ஷாப்பிங் முடிஞ்சு அங்க போய்க் குடுத்துட்டு வந்தோம். இப்படி வந்த கையோட ஓடுறதுக்கு, எதுக்கு வர்றீங்க மாமா."

" உன்னைப் பார்த்து விஷ் பண்ணிட்டு போலாம்னு வந்தேன். ஆல் த பெஸ்ட் அந்துருண்டை. அப்புறம் உங்கத்தை, மாமா, அம்மா, செல்லப் பாட்டி இவங்கள்லாம் எப்படி இருக்காங்க என்று கேட்கவே இல்லையே."

" இந்த ஒரு வார்த்தையைக் கேட்கத்தான் வந்தீங்களா? உங்கக் கூட பேசுற நேரத்தை விட அதிகமா நான் வீடியோ கால்ல பேசிடுவேன். அப்பவே நான் நலன் விசாரிச்சுக்கிறேன். நீங்க உங்க வேலையை பாருங்க. அப்புறம் என்ன மாமா? கிளம்ப வேண்டியது தானே. எப்படியும் வரும் போதே ரிட்டன் டிக்கெட் போட்டு தான வந்துருப்பீங்க."

" ஏய் வாலு… நீ சொல்றது கரெக்ட் தான். எனக்கு ப்ளைட்டுக்கு டைமாயிடுச்சி. நான் கிளம்பிட்டா?" என விஸ்வரூபன் வினவ.

" ம்… சரி மாமா…" என வருத்தத்தோடு தலையாட்ட…

" சிரி அந்துருண்டை… இந்தா உனக்கும், உன் ஃப்ரெண்டுக்கும் என்று இரு கேட்பரீஸ் சில்க்கி சாக்லேட்டை நீட்ட…

அவள் முகம் பூவாக மலர்ந்தது. அதே உற்சாகத்துடன் உள்ளே சென்றவள், ராதிகாவை சமாதானம் செய்து, அவளை மலை இறக்குவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

'அப்பாடா…' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள் அனன்யா. அப்போது அவளுக்கு தெரியவில்லை. இது ஆரம்பம் தான். இனி இவர்கள் பார்க்கும் போதெல்லாம் சண்டை போட்டுக் கொள்ளப் போவதையும், இருவரையும் சமாதானம் செய்வதற்குள், அவள் நொந்து நூடுல்ஸாவதையும் அப்போது அறியவில்லை.

நாட்கள் வேகமாக செல்ல, முதல் செமஸ்டர் முடிந்திருந்தது.

ஒவ்வொரு மாதமும் டெஸ்ட் நடக்கும். எல்லாமே கம்ப்யூட்டரில் அட்டண்ட் செய்வது மாதிரி தான் இருக்கும். அது போக ஃபிராக்டிகல், வைவா என்று அனாடமியில் நடக்கும். எல்லா மார்க்கையும் சேர்த்து தான் செமஸ்டருக்கு எடுத்துப்பாங்க. சோ ஒவ்வொரு மாதப்பரிட்சையும் முக்கியம்.

ராதிகா இரவு தூங்காமல் கண் விழித்துப் படிப்பாள். அனன்யாவையும் படுத்தி தூங்கவிடாமல், படிக்க வைப்பாள்.

இப்படியே ஆரம்பத்திலிருந்து கவனமாக படித்து, வெற்றிகரமாக முதல் செமஸ்டரை முடித்து இருந்தனர்.


அடுத்த செமஸ்டர் ஆரம்பமாகி இருந்தது. ஆனால் இன்னும் டெஸ்ட்டெல்லாம் ஆரம்பிக்கவில்லை.

அனன்யா, " ராது… படிச்சு, படிச்சு மூளையெல்லாம் சூடாயிடுச்சு. இன்னைக்கு அவுட்டிங் போய் ரெஃப்ரெஷ் செஞ்சுட்டு வரலாம். " என்று வினவ‌.

" ஏய் அனு… வீக்கென்ட் போகலாம். ஈவினிங் எனக்கு ஒர்க் இருக்கு. " ராதிகா கூற.

" ஈவினிங் நீ பிசி என்று எனக்குத் தெரியும் ராது. அதனால தான் லாஸ்ட் ஹவர் காலேஜ்ஜை கட் அடிச்சிட்டு கிளம்பி விடலாம்." என்றுக் கூறி விட்டு, ஆர்வமாகப் பார்க்க.

" ஏய் இங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். தெரிஞ்சா ப்ராப்ளம் வரும். "

" ராது அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை வராது. ஃபே வாக் பீச். பக்கத்தில் தான் இருக்கு. ஜஸ்ட் ஃபிப்டீன் மினிட்ஸ் ட்ராவல் தான். ஜிப்னில போயிட்டு வந்துடலாம். " என்றுக் கூற…

இவ்வளவு நேரம் வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவள், பீச் என்றவுடன் யோசிக்கலானாள்.

அவள் யோசனை பார்த்தவுடன் பேசிப்பேசியே அவளை கரெக்ட் செய்தாள் அனன்யா.

இருவரும் பேசியபடியே லாஸ்ட் ஹவர் க்ளாஸைக் கட்டடித்து விட்டு கிளம்பி விட்டனர்.

ராதிகா இதுவரை பீச் பார்த்ததில்லை என்று அறிந்து தான் அவளை எப்படியாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தாள் அனன்யா.

ஆனால் அடுத்து வரும் பின்விளைவுகளைப் பற்றி அவள் நினைக்கவில்லை. இவர்கள் சத்தமில்லாமல் போய் விட்டு வந்து விடலாம் என்று நினைத்து இருக்க…

நடந்ததோ வேறு... அனன்யாவின் வீட்டிற்கு தகவல் போய்விட்டது.

இரண்டொரு நாட்களில் இவர்களது ஹாஸ்டலுக்கு முதல் முறையாக வந்தான் விஸ்வரூபன்.

விஸிட்டர்ஸ் ரூமில் முகம் இறுக காத்திருந்தான்.

அனன்யா, தனியே செல்ல பயந்துக் கொண்டு, " ராது… மாமா எதுக்கு வந்துருக்காங்கன்னு தெரியலை. மாமா வர்றதா வீட்டுலக் கூட யாரும் சொல்லவே இல்லை. எனக்கு பயமா இருக்கு டி. நாம பீச்சுக்கு போனது தெரிஞ்சிருக்குமோ?" என்று ராதிகாவின் கையை பயத்துடன் பிடிக்க.

" ஹேய்… எங்க ஜான்சிராணிக்கே பயம்லாம் வருமா? வார்ரே வா. நானும் வரேன்." என்று கிண்டலடித்தவளின் மனதில் இருந்ததோ வேறு…

விஸ்வரூபன் இது வரைக்கும் ஹாஸ்டல் வந்ததில்லை. அன்று காலேஜ் ஃபர்ஸ்ட் டேக்குப் பிறகு, ராதிகா அவனை சந்திக்கவில்லை.

இன்று இங்கு வந்திருக்கிறான் என்றவுடன், மனதிற்குள் ஒரு இனிய படபடப்பு… அதை மறைத்துக் கொண்டு, அனுவை கேலி செய்ய…

" நீயெல்லாம் ஃப்ரெண்டா? துரோகி டி." என்று திட்டிக் கொண்டே, அவளையும் அழைத்துக் கொண்டே சென்றாள்.

'ஒரு வேளை, தன் தோழி இருப்பதால், மாமா திட்டுவதற்கு சற்று யோசிப்பார்.' என்று நினைத்தாள் அனன்யா.

இருவரும் மனதிற்குள் ஏதேதோ நினைத்துக் கொண்டு செல்ல…
நடந்ததோ வேறு…

இருவரையும் ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன், தனது அத்தை மகளை விட்டுவிட்டு ராதிகாவிடம் திரும்பினான்.

" இங்கே பாரு. உனக்கு உண்மையான நட்புக்கு அர்த்தம் தெரியுமா? ஏதாவது அவங்க தப்பு செஞ்சா அதை தடுக்க பார்க்கணும்‌. சேர்ந்து கிட்டு, அதுக்கு துணை போகக் கூடாது. நீங்க ரெண்டு பேரும் க்ளாஸ் கட் பண்ணிட்டு வெளியே போனது மேனேஜ்மென்டுக்கு தெரிஞ்சா, எவ்ளோ பிரச்சனை வந்து இருக்கும்னு தெரியுமா?" என.

ராதிகாவோ, அவனது ஹார்ஷான பேச்சில் அதிர்ந்து நின்றாள்.

" மாமா… ராதுவை ஒன்னும் சொல்லாதீங்க. நான் தான் அவளை கம்பெல் பண்ணி அழைச்சிட்டு போனேன்."

" ஓஹோ… நீ சொன்னா அந்த அம்மணிக்கு அறிவு எங்கே போச்சு? சேலவர் சாரோட கிளாஸா இருந்ததால பிரச்சனை இல்லை. இல்லைன்னா மூட்டை முடிச்சைக் கட்டிட்டு இந்தியாவுக்கு போக சொல்லிருப்பாங்க. ஏதோ டாட்க்கு தெரிஞ்சவர் என்பதால எனக்கு இன்ஃபார்ம் பண்ணாங்க. தென் இதுவே ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்டா இருக்கட்டும்." என.

' சேலவர்.' என்ற பெயரை கேட்டதும் தலையில் கை வைத்த அனன்யா, "ஐயோ! கெட்டப்பை மாத்தினேன். மண்டையில் உள்ள கொண்டையை மறந்துட்டேனே." என்று உளறியபடியே விஸ்வரூபனைப் பரிதாபமாக பார்க்க‌…

அவளது பாவனையில் அவனுக்கு சிரிப்பு வந்தது.

சிரிக்கும் இருவரையும் முறைத்து, பார்த்த ராதிகா, விடுவிடுவென அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

" மாமா ஏன் அவ கிட்டே வம்புக்கு போறீங்க. திஸ் இஸ் மை மிஸ்டேக். அவளை இனி எதுவும் சொல்லாதீங்க."

" ம்… " என்று அரைகுறையாக பதிலளித்தவன், " பட் நீயும் இனி கொஞ்சம் கரெக்டா இரு அனு. நான் சேலவர் சார பாத்துட்டு கிளம்புறேன்." என்றுக் கூறி விட்டு கிளம்பி விட்டான்.


இன்று…

வீடியோவை பார்து திகைத்து நின்றான் விஸ்வரூபன். அதெல்லாம் ஒரு நிமிடம் தான். பிறகு முகம் இறுக யோசனையில் ஆழ்ந்தவன், கிருஷ்ணனை நிமிர்ந்துப் பார்த்து, " டாட்… என்ன சொன்னீங்க? அந்த பொண்ணு நம்ம காலேஜ்ஜா?" என்று சந்தேகமாக வினவ.

" ஆமாம் ரூபன். நானே உன்கிட்ட சொல்லணும் என்று நினைச்சிட்டே இருந்தேன். பட் வொர்க் ஃப்ரெஷர்ல மறந்துட்டேன். அந்த பொண்ணு தான் நம்ம சேலவர் சொல்லி, ஃப்ரீ கோட்டால சேர்த்தது. நம்ம ஹாஸ்பிடலயும் பார்ட் டைம் ஜாபா ஒர்க் பண்ணுறா."

நம்ம ஹாஸ்பிடலில் தான் வேலைப் பார்க்கிறாள் என்பதைக் கேட்டவுடன் படபடத்த மனதை அடக்கிக் கொண்டு, " ஓ… இரண்டு பேரும் நம்ம காலேஜ்ஜா? அதான் அந்த ஆதவனோட பழக்கமா?" என்று கேள்வி எழுப்பினான் விஸ்வரூபன்.

" மே பி… காலேஜ்லயும் அந்த பையன் கூடத் தான் உட்கார்ந்து இருந்தா... ரெண்டுபேரும் சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க. ஒரு வேளை ஏற்கனவே தெரிஞ்சவங்களாக் கூட இருந்திருக்கலாம். "

" டாட்… நீங்க சேலவர் கிட்ட சொல்லி கண்டிச்சு வைக்க சொல்லுங்க."

" வாட் ரூபன். நீ என்ன சொல்றன்னு தெரிஞ்சு தான் சொல்றீயா? இது அவளுடைய பர்சனல்." என்றுக் கூறிய கிருஷ்ணனனோ அவனை ஆராய்ச்சியாகப் பார்க்க…

" டாட்… அந்த பொண்ணு, நம்ம காலேஜ்ல படிக்குது. அதுவும் இல்லாமல் நம்ம ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணுது என்று வேற சொல்றீங்க. சோ… ஆதவன் கிட்ட இருந்து விலகி இருக்க சொல்லுங்க." என்று ஆழ்ந்துப் பார்த்தான்.

" புரிந்தது." என்பது போல கிருஷ்ணன் தலையசைத்தார்.

வீல்லென்ற குழந்தையின் அழு குரலில் வேகமாக கை கழுவி விட்டு, தன் தாயின் அறைக்கு அருகிலுள்ள குழந்தையின் அறைக்குச் சென்றான்.

அந்த அவசரத்திலும் கதவைத் தட்டிவிட்டு சென்றான்.

குழந்தையைப் பார்த்துக் கொள்ள நர்ஸ் ஒருவரையும், ஆயாம்மா ஒருவரையும் நியமித்திருந்தான். பகல் முழுவதும் அவர்கள் பார்த்துக் கொள்ள… இரவு முழுவதும் இவன் வசம் குழந்தை.

" கங்காம்மா… ஏன் அம்மு குட்டி அழறா?"

"பசியா தான் தம்பி இருக்கும். பாப்பா இவ்வளவு நேரம் தூங்குச்சு. " என்றவரின் கைகளோ, ப்ளாஸ்கில் இருந்த வென்னீரை ஊற்றி பால் பவுடரை விட்டு கலக்கிக் கொண்டிருந்தது.

" ஓ…" என்ற விஸ்வரூபன் நர்ஸின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டான்.

இரண்டு மாத குழந்தையை லாவகமாகத் தூக்கியவன் மென்மையாக தட்டிக் கொடுத்தான். தாயைப் போல பிடிவாதமாக இருந்த குழந்தையோ விடாமல் வீறிட்டு அழுதுக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அவனது ஃபோன் அழைக்க… அந்த சத்தத்தில் குழந்தையின் அழுகுரல் நின்றது. அதை ஆச்சரியமாக பார்த்தான் விஸ்வரூபன்.
யமுனை ஆற்றிலே பாடல் குழந்தைக்கு தாலாட்டாக தெரிந்ததோ என்னவோ? பொக்கை வாய் திறந்து சிரித்தது.

வெளியே கிருஷ்ணனனோ, குழந்தையின் அழுகுரலில் விரைந்தோடிய மகனை ஆதுரமாகப் பார்த்துக் கொண்டே, அவன் சொன்னதை செய்தார்.

பிலிப்பைன்ஸில் இருக்கும் சேலவருக்கு அழைத்தார்.

" ஹாய் சேலவர். ஹவ் ஆர் யூ. " என்று பார்மலாக விசாரித்து விட்டு, " இந்தியாவுக்கு எப்ப மேன் வர்ற?" என.

" வாட்ஸ் ப்ராப்ளம் கிருஷ். நான் தான் மண்டே வரேன் என்று அல்ரெடி சொல்லியிருந்தேனே."

"யா… நான் மறந்துவிட்டேன். ஐயம் சாரி." என்ற கிருஷ்ணன், அடுத்து என்ன சொல்வது என்று தடுமாற…

" வாட்ஸ் ஈட்டிங் யூ. ஸ்பீக் அவுட் கிருஷ்."

" அது… " என்று இழுத்தவர் பிறகு நடந்த அனைத்தையும் கூறிவிட்டார்.

" யூ டோண்ட் வொர்ரி. நான் ராதுக்கிட்ட பேசுறேன்." என்றார் சேலவர்.

சொன்ன மாதிரியே இந்தியா வந்தவர், ராதிகாவை சந்தித்தார்.

" ஹாய் ராது டியர்."

" ஹாய் டாக். ப்ளசன்ட் சர்ப்ரைஸ். ஹொவ் ஆர் யூ அண்ட் மை ஸ்வீட் ஏஞ்சல் எப்படி இருக்காங்க."

" யா போத் ஆர் ஃபைன் டியர். அப்புறம் நீ சொல்லு? நியூ காலேஜ் எப்படி போகுது. ஹாஸ்பிடல்ல வொர்க் எல்லாம் எப்படி போகுது? ஃபிரண்ட்ஸ் எல்லாம் செட் ஆகி விட்டார்களா? காலேஜ் லைஃப் ஜாலியா போகுதா?" என்று கேள்வி மேல் கேள்வியாக வினவ.

"டாக்… ஒரு ரகசியம் சொல்லட்டா? உங்க அளவுக்கு இங்கு யாரும் நல்லா நடத்தல. ஐ மிஸ் யுவர் டீச்சிங்."என்றுக் கூறி கண் சிமிட்டி சிரிக்க.

" யூ நாட்டி. இரு என் ஃப்ரெண்ட் கிருஷ் கிட்ட சொல்றேன்."

" சொல்லுங்க டாக் … அவர் கேட்டா, நீங்க நல்லா தான் சார் நடத்துறீங்க‌. பட் உங்களைப் பார்த்தா, நீங்க மட்டும் தான் கண்ணுக்குத் தெரியுறீங்க. நீங்க நடத்தறது எல்லாம் என் மைண்ட்ல ஏறவே மாட்டேங்குது. யுவார் ச ஹாண்ட்சம் சார்‌" என்று அவர் கிட்டே சொல்லிடுவேன் என்றவள், கலகலவென நகைக்க…

" அதுவும் சரி தான்… அப்புறம் உன் ஃப்ரெண்ட் ஆதவன் எப்படி இருக்கான்? அடிக்கடி அவுட்டிங் போறீங்களா? உனக்கு இந்த ஸ்டடீஸ் எவ்வளவு முக்கியம் எனக்கு தெரியும் ராது. ப்ளீஸ் அவாய்ட் சம் ஃப்ராப்ளம்ஸ்." என்றுக் கூற

" டாக்… ஆதவன் என்னோட ஃப்ரெண்டுனு உங்கக் கிட்ட சொன்னதா ஞாபகம் இல்லையே. அண்ட் அவனோட பேசினா என்ன ஃப்ராப்ளம் வரும் என்று நினைக்கிறீங்க? தென் ஆதவனை உங்களுக்கு தெரியுமா?" எனக் கேட்க...

" இல்லை…" என்று உதட்டைப் பிதுக்கியவர், " நான் ஃபேஸ்புக் அண்ட் வாட்ஸ்அப்ல வந்த வீடியோவைப் பார்த்தேன். உன்னால காலேஜிக்கோ, ஹாஸ்பிடலுக்கோ கெட்ட பெயர் வருவதை நான் விரும்பவில்லை." என்றார் சேலவர்.

" டாக்‌… உங்க கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை. இந்தியாவுல உள்ளவங்க தான் ரொம்ப சென்சிடிவா இருப்பாங்க. நீங்கள் பிலிப்பைன்ஸில் தானே இருக்கீங்க. உங்களுக்கு தெரியாதா? அதுவும் என்னை பற்றி உங்களுக்கு நன்கு தெரியும் தானே? ஜஸ்ட் ஆதவன் என் ஃப்ரெண்ட். அப்புறம் இந்த வீடியோவெல்லாம் ரப்பிஷ். " என்றாள் ராதிகா.

" ஓகே டா ராது. கூல்…" என்று சமாதானம் படுத்திய சேலவர் வேலையைக் கவனிக்க சென்று விட்டார்.

தனது தோளைத் குலுக்கிய ராதிகா, அன்றைய அலுவல் என்ன என்பதை விசாரிக்கச் சென்றாள். அப்போது அவள் அறியவில்லை. இதே போல ஒரு வீடியோ அவளது வாழ்க்கையை மாற்ற போவதையும், அதை ரப்பிஷ் என அவளால் சொல்ல முடியாமல் நிற்க போவதையும் அறியவில்லை.

தொடரும்…
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 11

அன்று...

" ஏய் அனு… அனு… என்ன ட்ரீம்ஸ்ல இருக்கீயா? காலேஜுக்கு அல்ரெடி டைம் ஆயிடுச்சு." என உலுக்க…

" ஹாங்…" என கனவிலிருந்து விழித்தவள், " என்ன ராது? காலேஜுக்கு டைம் ஆகலையா? " என தன்னை பார்த்து முறைக்கும் ராதிகாவைப் பார்த்து வினவ.

அனுவின் தலையில் ஒரு கொட்டு வைத்தவள், " நீ உட்கார்ந்து தூங்கிட்டு, என்ன கேட்குறீயா? அப்படி என்ன யோசனை? கூப்பிட, கூப்பிட திரும்பாமா?" என…

" அது வா ராது டியர்… நாம இங்க வந்து ஒரு ஒன் அண்ட் ஆஃப் இயர் ஆச்சுல. அதைப் பத்தி நினைச்சிட்டு இருந்தேன். இங்கே வந்து நமக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சிருக்குல்ல. " என்று சிரித்தவள்,

" உனக்குத் தெரியுமா ராது? இங்க வரதுக்கு நான் எவ்வளவு அழுது இருக்கிறேன் என்று... எங்க மாமா தான் அதட்டி, உருட்டி என்னை பேக் பண்ணி அனுப்பி வச்சார். அவருக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும். இல்லைன்னா நான் உன்னை மிஸ் பண்ணி இருப்பேன்."

" சரி … சரி… எதுக்கு இப்ப இவ்வளவு பெரிய ஐஸ் பார். எதுக்கு அடிப்போடுற அணுகுண்டு."

" நானே எவ்வளவு எமோஷனலா பேசிட்டு இருக்கேன். உனக்கு கிண்டலா போச்சா ? அதுவும் என்னைப் போய் அணுகுண்டு என்று சொல்லுற… "

" இல்லையா பின்ன, எப்ப பாரு ஏதாவது ஒரு குண்டை தூக்கி போட்டுட்டு இருக்குற. அதான் உனக்கு இந்த பேர். இந்த பேர் உனக்கு ஹன்ட்ரெட் பர்சென்ட் சூட்டாகும். சரி வா… காலேஜுக்கு போய்கிட்டே பேசலாம் என்றுக் கூறியவள், அனுவை இழுத்துக் கொண்டே வெளியேறினாள்.

" அப்புறம் என்ன அணுகுண்டு?" என ராதிகா ராகம் பாட…

" ஏய் ராது… இன்னொரு முறை அணுகுண்டுன்னு சொன்னா, நான் அப்புறம் ஃபோன் போட்டு…" என்று ஏதோ சொல்ல வர, அதற்குள் ராதிகா,

"என்ன உங்க வீட்ல சொல்லப் போறீயா? அம்மா… அம்மா… இவ என்னை திட்டுறா… என்று கண்ணை கசக்கிட்டு சின்னப்புள்ளை மாதிரி சொல்லப்போறீயா. சோ சேட்."

" எதுக்குங்குறேன்? ஏதோ இப்போ தான் கொஞ்சம் பொறுப்பா இருக்கேன் என்று எங்க வீட்ல எல்லோரும்
கொஞ்சம் சந்தோஷமா இருக்காங்க. அதை ஏன் கெடுப்பானேன். நான் ஃபோன் போடப் போறேன் என்று சொன்னது, சுந்தரியம்மாவுக்கு… செய்யட்டா…" என்ற அனு நடந்துக் கொண்டே அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்த…

நடந்து சென்றுக் கொண்டிருந்த ராதிகா நின்று அவளை முறைத்தாள், " பார்த்தீயா இப்போ தான் சொன்னேன். எப்பப் பார்த்தாலும், ஏதாவது குண்டைத் தூக்கிப் போட்டுட்டே இருக்க. இப்ப ஏன் உனக்கு இந்த கொலைவெறி? எங்கம்மாட்ட சொன்ன நான் தொலைஞ்சேன். நீ அவங்களோட சுவீகார புத்திரி. உன்னை ஏதாவது சொன்னது தெரிஞ்சது , அவ்வளவு தான்…"

" தெரியுதுல… ஒழுங்கா மரியாதைக் கொடுத்து அக்கான்னு சொல்லு புரியுதா?" என்று விட்டு அனு ஓட, ராதிகா துரத்த கலாட்டாவாக ஜிப்னி ஏறும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஆம் இப்போதெல்லாம் சுந்தரிக்கு நல்ல முன்னேற்றம். சைக்யாட்ரிஸ்டிடம் காண்பித்து மனமெல்லாம் இலகுவாக இருக்க, ராதிகாவுக்கும் மகிழ்ச்சி. இருவருக்கும் அனு என்றால் உயிர்.

அதுவும் சுந்தரிக்கு தன் மகளே திரும்பி வந்ததாக தோன்றியது. அதனால் அவளை ஒரு வார்த்தை யாரும் சொல்லக் கூடாது. ராதிகா ஏதாவது கிண்டலாக பேசினாலும், காதில் ரத்தம் வரும் வரை, பொறுத்து போ… அவளை ஏன் வம்பிழுக்குற… அனுமா பாவம்… எக்ஸ்ட்ரா… எக்ஸ்ட்ரா… என அட்வைஸ் மழை பொழிவார். அதைத் தெரிந்துக் கொண்டு தான் அனுவும், ராதிகாவிடம் சுந்தரிமாவிடம் சொல்லுவேன் என வம்பு வளர்ப்பாள்.

அப்புறம் என்ன காலேஜ் வரும் வரைக்கும் ஜிப்னியில் பேசிக் கொண்டே வந்தனர்.

"அப்படி என்ன வீட்ல சொன்னாங்க அனு? காலையில ரொம்ப எக்ஸைட்டா இருந்த?"

" அதுவா மேடம்ம ரொம்ப புகழ்ந்து தள்ளிட்டாங்க. " என்று தன்னை காண்பித்துக் கூற.

" யாரு? அம்மாவா சொன்னாங்க?" என்று ஆச்சரியமாக ராதிகா வினவ.

" ம்கூம் சொல்லிட்டாலும்… பூமி சுத்துறதை நிறுத்திடாது. எல்லாம் எங்க ஸ்வீட் அத்தை அவங்க தான் சொன்னாங்க." என்று சொல்லி நிறுத்த…

" அதானே பார்த்தேன்… நம்ம அத்தை தானா பாராட்டினாங்க" என்று ராதிகா கூற…

" என்னது நம்ம அத்தையா? என்னடி கதை புது ரூட்டில் போகுது ? " என்ற அனு தோழியை ஆராய்ச்சியாகப் பார்க்க…

ராதிகாவோ, தனது சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு, " உங்க அத்தை என்று சொல்ல வந்தேன். டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு. சரி சொல்லு… என்ன திடீரென்று பாராட்டு மழை." என்று பேச்சை திசை திருப்பினாள் ராதிகா.

பின்னே இந்த ஒன்றரை வருடத்தில் அனு, அவங்க குடும்பத்தைப்பற்றியும், விஸ்வரூபனைப்பற்றியும் கூறி, கூறியே ராதிகாவின் மனதில் விஸ்வரூபன் மீதான நேசத்தை வளர வைத்திருந்தாள். ராதிகாவோ, தனக்குள்ளே காதலை வளர்த்துக் கொண்டிருந்தாள். அனுவிடம் கூட மனதிலுள்ள ஆசையை தெரிவிக்கவில்லை. அவ்வப்போது பேச்சிணுடே, தெரியாமல் வாயை விடுவதும், பிறகு சமாளிப்பதுமாக நாளை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

இன்றும் அப்படித்தான் நடந்தது. பிறகு ஒரு வழியாக, அனன்யா தான் கூற வந்ததைக் கூறினாள். " அதுவா… இன்னைக்கு ஃபோன் பண்ணுனாங்கள்ல, அப்ப சாப்டியா என்ன டிஃபன் என்று கேட்டாங்க… நான் சாப்பாடு பத்தி சொன்னேன். உனக்கு பொங்கல் பிடிக்காது தானே என்றுக் ஃபீல் பண்ணாங்க. அவங்க தான் எங்க வீட்டு அன்னப்பூரணியாச்சே… யாருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது… எல்லாம் அத்துப்படி… அவங்க கவலை அவங்களுக்கு…

இங்க வந்து எல்லாம் பழகிட்டேன் அத்தை என்று சொன்னேனா… அவங்களுக்கு ஒரே பெருமை. நான் பொறுப்ஸ் ஆகிட்டேன் என்று…"

" அது உண்மை தான அனு. வந்த புதுசுல ஹாஸ்டல் சாப்பாட்டை கஷ்டப்பட்டு தானே சாப்பிட்ட… "

லேசாக சிரித்த அனு," அது… எனக்கு சாப்பாட்டுல நிறைய ரெஸ்ட்ரெக்ஷன் இருக்கு ராது. எல்லாம் நான் சாப்பிட மாட்டேன். அதுவுமில்லாமல் வீட்ல இருக்குற இடத்துலே வந்து கொடுப்பாங்க. இங்கே நாமே போய் சாப்பிடணும். இது பிடிக்காது, வேண்டாம் என்று சொல்லுற சிச்சுவேஷன்ல நான் இல்லை. பசிக்கு புடிக்குதோ, இல்லையோ சாப்பிட்டு தான் ஆகணும். எல்லா நேரமும் ஹோட்டல்ல சாப்பிட முடியாதுல்லையா… அதுவும் இல்லாமல் அப்போ புது இடம் வெளியே போகவும் பயமா இருந்தது. இப்போ இதுவே பழகிடுச்சு. அதைப் பத்தி அத்தைக் கிட்ட பேசும் போது தான், பொறுப்பாயிட்டேன் என்று புகழ்ந்தாங்க…" என்றவள் டீசர்டில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

" சரி வா காலேஜ் வந்துடுச்சு." என்றவாறே ராதிகா இறங்க, அவளைப் பின்பற்றி அனன்யாவும் இறங்கினாள்.

காலேஜ்ஜிற்குள் நுழைந்ததும், " ராது சினாப்ஸிஸ்ல டான்ஸூம் ஆடுறதா தானே கமிட்டி மெம்பர்ஸ் கிட்ட பேர் கொடுத்திருந்த... இப்போ பாட்டு மட்டும் பாடுறதா சொன்னீயாமே. ஏன் இப்படி பண்ணுற. டூ மன்த்ஸ் ப்ராக்டீஸ் பண்ணிட்டு, இப்போ முடியாதுண்ணு சொன்னா, அவங்களும் என்ன பண்ணுவாங்க. நீ பார்ட்டிஸிபேட் பண்றதால தான் நானும் ஆடுறேன் என்று சொன்னேன். இப்போ இப்படி நீ பண்ணுனா, என்னப் பண்றது. நீ ஆடுவ, என்று சொல்லிட்டேன். ஒழுங்கா ப்ராக்டீஸ்க்கு வா…" என்றாள் அனு.

" சரி…" என தலையாட்டுவதைத் தவிர ராதிகாவிற்கு வேறு வழியில்லை.

சினாப்ஸிஸ் என்பது ஃப்ரெஷ்ஷர்ஸ்க்கான பார்ட்டி… ஃபைனல் இயர் ஸ்டுடென்ட்ஸூக்கு ஸ்டடிஸ் ரொம்ப முக்கியம் என்பதால, ஃபோர்த் இயர் ஸ்டூடெண்ட்ஸ் தான் கமிட்டி மெம்பர்ஸா இருந்து, ப்ரோக்ராம ஆர்கனைஸ் பண்ணுவாங்க.

மோஸ்ட்லி நியூ ஸ்டூடெண்டுக்கு தான் இம்பார்ட்டன்ஸ். இருந்தாலும் மத்த ஸ்டுடென்டும் பார்ட்டிஸிபேட் பண்ணுவாங்க.

கமிட்டி மெம்பர்ஸ், ப்ரெஷ்ஷர்ஸோட திறமையை, பார்த்து அவர்களுக்கான ப்ரோக்ராமை அலார்ட் பண்ணுவாங்க. டான்ஸ்… சிங்கிங்… ட்ராமா… ஆங்கரிங் பண்றது என்று நிறைய இருக்கு.

இதுக்காக ஒரு பெரிய ஹோட்டல்ல ஹால் புக் பண்ணிடுவாங்க. சாப்பாடும் அவங்களே புரொவைட் பண்ணிடுவாங்க. ஸ்டூடண்டோட ஃபேமிலியும் இந்த பங்ஷன்ல கலந்துக்கலாம்.

மோஸ்ட்லி யாரும் வர மாட்டாங்க. பட் அனுவோட வீட்லருந்து ஆட்கள் வருவாங்க என்று அவள் சொன்னதிலிருந்து, தான் ராதிகாவிற்கு டான்ஸ் ஆடுவதில் ஒரு தயக்கம்.

அவங்க வீட்டில் இருந்து, எப்படியும் விஸ்வரூபன் தான் வருவான்… அவன் முன் எப்படி ஆடுவது? அதுவும் அவர்கள் செலக்ட் செய்த பாடலை நினைத்தவளின் முகம், செவ்வண்ணத்தை பூசிக் கொண்டது.

இன்று…

வழக்கம்போல கல்லூரிக்குள் நுழைந்த ராதிகா, ஆதவன் அருகே சென்று அமர…

அவன் புருவத்தை உயர்த்தி, அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

வகுப்பு ஆரம்பிப்பதற்கு நேரம் இருக்கவே, நன்கு அவன் பக்கம் திரும்பிய ராதிகா, " ஏன் இவ்வளவு ஆச்சரியம் ஆதி?" என்று வினவ…

" அது… இங்கே வேண்டாம் ராதிகா. கேண்டீனுக்கு வர்றீயா? அங்கே போய் பேசலாம்."

" டபுள் ஓகே." என்ற ராதிகா, ஆதவனைப் பின்பற்றி சென்றாள். வெளியே செல்லும் இருவரையும் பார்த்த அங்கே இருந்த சொற்ப மாணவர்கள், தங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டனர்.

அதைப் பார்த்த ஆதி முகம் இறுக சென்றான். ராதிகாவோ, யோசனையாகச் சென்றாள்.

" ஆதி… என்னாச்சு…" என்று மென்மையாக ராதிகா வினவ.

" உனக்கு டீ ஆர் காஃபி." என்று வினவினான் ஆதவன்.

" காஃபி…" என்று விட்டு அமைதியாக இருந்தாள் ராதிகா.

ஆதவன் சென்று இருவருக்குமான காஃபியை வாங்கி வந்தான்.

அதை எடுத்து அருந்திய ராதிகா, " ம் சொல்லு ஆதி… இப்பவாவது பூனைக்குட்டியை வெளியே விடு." என…

அதைக் கேட்ட ஆதியோ பக்கென சிரிக்க… குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேறியது.

" ஏய் ஆதி பாத்து, பாத்து… " என ராதிகா பதறினாள்.

" ராதிகா… நீ ஒரு மாஸ்டர் பீஸ் என்று சொல்ல மாட்டேன். ஏன்னா என் ஃப்ரண்டை நீ ஞாபகப்படுத்திட்டே இருக்க… அவளும் இப்படி தான்… நீ என் பக்கத்துல இருந்தா, நான் எப்பவும் சிரிச்சிட்டே இருப்பேன். அதுக்கு தான் எனக்கு கொடுத்து வைக்கலை." என்றவன் பெருமூச்சு விட…

" ஏன் ஆதி… என்ன ப்ராப்ளம் சொல்லு. நானும் வந்ததிலிருந்து அதைத் தான் கேட்டுட்டு இருக்கேன். இல்ல ஃப்ரை டே நடந்ததையே நினைச்சுட்டு இருக்கீயா? நான் என்ன நினைச்சேன், வீக்கெண்ட் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வருவேன் என்று நினைச்சேன்." என்றவாறே அவனைப் பார்த்து கள்ளமில்லாமல் புன்னகைக்க…

அவளையே பார்த்த ஆதி, "உனக்கு நம்ம டாக்டர் கிருஷ்ணா சாரைத் தெரியுமா?"

" இது என்ன கேள்வி ஆதி? அவர் நம்ம காலேஜ் டீன். அதுமட்டுமல்லாமல் நான் வொர்க் பண்ணுற ஹாஸ்பிடல்லோட சேர்மன். அவரைத் தெரியாமல் இருக்குமா…" என புருவத்தை உயர்த்தி எதிர் கேள்வி கேட்டாள்.

" ராதிகா… கொஞ்சம் சீரியஸ்ஸா பதில் சொல்லு. பர்சனலா அவரைத் தெரியுமா?"

" எனக்கு அவரை பர்சனலா தெரியாது. பட் அவருக்கு என்னை தெரிஞ்சு இருக்கலாம். நான் இங்கே ஃப்ரீ கோட்டால தான் ஜாயின் ஆகியிருக்கேன். என்னோட வெல்விஷர் டாக்டர் சேலவர். அவர் தான் என்னை ரெக்கமண்ட் செய்தார்."

" ஓ… " என்ற ஆதவன் அமைதியாக இருக்க…

" எதுக்கு ஆதி. இதையெல்லாம் கேட்குற?"

" இந்த வீடியோவை பார்த்தியா…" என்று வெள்ளிக்கிழமை காஃபி ஷாப்பில் நடந்ததை யாரோ எப்ஃ பி, வாட்ஸ்அப்பில் வீடியோ அப்லோடு பண்ணியிருந்தார்கள். அதைத் தான் காண்பித்தான்.

அதைப் பார்த்து ஒரு நிமிடம் மனம் கணக்க இருந்தவள்," சோ வாட்? இதுக்கு தானா இவ்வளவு கவலை. அதான் காலையிலிருந்தே எல்லோரும் ஒரு மாதிரியா நம்மைப் பார்க்கிறார்களா. லீவ் இட். ஜஸ்ட் டூடேஸ் இதைப் பற்றி பேசுவாங்க. அப்புறம் அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டு போயிட்டே இருப்பாங்க." என்றாள்.

இவ்வளவு நேரம் மன பாரத்துடன் இருந்தவன், ராதிகாவின் தெளிவில் முகம் மலர்ந்தான். " அப்போ அந்த வீடியோவை பத்தி நான் பேசலை. பட் மிஸ்டர் விஸ்வரூபனை உனக்கு ஏற்கனவே தெரியுமா?" என்றான் ஆதவன்.

தெரியும், தெரியாது என்று சொல்லாமல், " ஏன் கேட்கிற ஆதி." என்று வினவினாள் ராதிகா.

" நான் கேட்ட கேள்விக்கு இது
பதில் இல்லை. சோ உனக்கு தெரிஞ்சவங்க தான். ரைட் விடு." என்றவன் எழுந்து செல்ல முயல…

" ஹே ஆதி… என்ன அவசரம் உட்கார்." என்றவள், எதை சொல்வது, எதை தவிர்ப்பது என்ற குழப்பத்தில் தவிக்க…

‌" வேண்டாம் ராதிகா… உனக்கு கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம்." என்று இறங்கி வந்தான் ஆதவன்.

" முதல்ல நீ காஃபியை குடி…" என்று, அவன் பாதி குடித்துவிட்டு வைத்து இருந்த காபி கஃப்பை எடுத்து அவனிடம் நீட்ட…

ஆறிப் போயிருந்த காஃபியை மடக் மடக் என்று குடித்து முடித்தான்.

" சரி ஆதி. எப்படி அவர் எனக்கு தெரிந்தவர் என்று நீ கண்டுபிடிச்ச?" என்று ராதிகா வினவ…

" அந்த வீடியோவில் ஒரு பெண்ணிற்காக இருவர் பொது இடம் என்று பார்க்காமல் சண்டை. மருத்துவரும், மருத்துவக் கல்லூரி மாணவரும் சண்டை என்று போட்டு இருந்தது.

அது உண்மை இல்லைனு நமக்குத் தெரியும். என்ன இருந்தாலும் அதை பார்க்கும் போது எனக்கு கஷ்டமா இருந்தது. அந்த வீடியோ அனுப்புனது யாரு? என்ன என்று கண்டு பிடிக்கணும்னு எனக்கு கோவமா வந்தது.

நான் எனக்கு தெரிஞ்ச சைபர் க்ரைம் ஆஃபீஸர் கிட்ட சொன்னேன். ஆனால் நான் சொல்றதுக்கு முன்னாடியே ஏற்கனவே யாரோ கம்ப்ளைன்ட் பண்ணி அந்த வீடியோவை ரிமூவ் பண்ணிட்டாங்க.

நீ பார்த்தியா என்றும் தெரியலை. உனக்கு அந்த அளவுக்கு இன்புளூயன்ஸ் இருக்குமா என்றும் தெரியலை. சோ இந்த வீடியோல சம்பந்தப்பட்ட மூணாவது நபர், அந்த வேலையை செய்து இருக்கணும். சோ அவருக்கு உன்னை முன்பே தெரிந்திருக்கும். உன் பெயர் சோஷியல் மீடியாவுல அடிபடுவதை விரும்பவில்லை என்று நினைத்தேன்.

அதுமட்டுமில்லாமல் அந்த வீடியோவை பாரு. எவ்ளோ கோவம் வெறியோட இருந்த டாக்டர் சார், உன்ன பார்த்த உடனே அதிர்ந்ததும் மட்டும் அல்லாமல் கோபத்தை அடக்கிக்கிட்டு போயிட்டாரு.

அவர் முகத்துல அப்படி ஒரு பொஸஸிவ்னஸ் தெரிந்தது. அதான் உனக்கு தெரிந்தவரா என்று கேட்டேன். ஆனால் நான் கேட்டதுக்கு மட்டும் பதில் இன்னும் வரல. சரி வா கிளாசுக்கு டைமாயிடுச்சு போகலாம்." என்றான்.

" ஆதி அவர், ரொம்ப வேண்டியவர் தான். பட் அதெல்லாம் ஒன்ஸ் அப்பான் ஏ டைம். நவ் அவர் யாரோ… நான் யாரோ. தட்ஸ் இட்."

" ஓ… ஆனால் நீ மட்டும் தான் அப்படி நினைக்கிற போல… ஆனால் அவர் அப்படி விடுகிற ஆள் இல்லை." என்ற ஆதி சிறிது நேரம் யோசனையில் இருந்தான்.

மீண்டும் அவளிடம், " ராதிகா… உன்னோட வெல் விஷர் என்று சொன்னீயே… டாக்டர் சேலவர். அவர் எதுவும் சொன்னாரா? நம்ம இரண்டு பேரும் பேசுறதை தடுக்கப் பார்த்தாரா?" என பரபரப்புடன் வினவ…

அப்போது தான் அவளுக்கும் டாக்டர் வந்து அவளுடன் பேசியது, ஞாபகம் வர, அதிர்ந்தாள்.

ஆதிக் கேட்ட கேள்விக்கு மறுமொழி கூறாமல், " யார் என்ன சொன்னாலும், உன்னோட நட்பை என்னைக்கும் இழக்க மாட்டேன் ஆதி." என்றுக் கூற…

அவளை ஆழ்ந்துப் பார்த்த ஆதி, " ப்ராமிஸ்…" என்று கையை நீட்ட…

அவளும் கைமேல் கை வைத்து உறுதியளித்தாள். இந்த வாக்குறுதியே பின்னாளில் அவள் வாழ்க்கையில் பிரளயத்தை கொண்டு வரப் போகிறது என்பதை அப்போது அவள் அறியவில்லை.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 12

அன்று...

" யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட…………...

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா….." என்ற பாடல் கணீர் குரல் அந்த பெரிய ஹோட்டலின் கான்ப்ரன்ஸ் ஹாலில் வழிந்துக் கொண்டிருந்தது.

அந்த ஹாலில் தன் கண்ணனை காணாமல் ஏக்கம் வழிய பாடிக் கொண்டிருந்தாள் ராதிகா.

அவள் பாடும் பாவத்தில், அந்த ஹால் அவ்வளவு அமைதியாக இருந்தது.

அவளது ஏக்கம் வழியும் குரல், எல்லோரையும் மயக்கி வைத்து இருந்தது.

அவள் விஸ்வரூபன் வருவான் என்று நினைத்து இருக்க. அவனையோ காணவில்லை. பார்வையால் தேட… அந்த பெரிய ஹாலில் அவனை காணவில்லை.

அவனை காணாமல் கண்கள் அலைபாய, தன்னியல்பாக, பாடிக் கொண்டிருந்தாள்.

அவள் மனது செல்லும் திசையைப் பற்றி அவளுக்கே இன்னும் புரியவில்லை. அவன் வரவேண்டும் என்று ஒரு புறம் மனம் அலைப்புற, மறுபுறமோ அவனுக்கு முன்பு எப்படி ஆடுவது என்று படபடப்புடன் இருந்தது.

ஒருவழியாக பாடி முடித்து அவள் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

ஐந்து நிமிடம் வரை இடைவிடாமல் கரகோஷம் எழுந்தது.

கீழே இறங்கி வந்தவளை, அனன்யா அணைத்து விடுவித்தவள், வேகமாக அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

அடுத்ததாக அவர்களது நடனத்திற்கான ப்ரோக்ராம் இருந்தது .அதற்கான மேக்கப் செய்ய வேண்டும்.

மேக்கப் ரூமிற்கு சென்ற ராதிகா, ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தவள், " அனு… உங்க வீட்ல இருந்து இன்னும் யாரும் வரவில்லையா?" என்று வினவ…

"ஹேய் ராது… ஃபர்ஸ்ட் ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா. மேக்கப் போடணும். அப்புறம் பேசலாம்." என்று அவளை ரெஸ்ட் ரூமிற்கு தள்ளி விட்டாள்.

அனுவிற்கு ராதிகாவின் மனது புரிந்து தான் இருந்தது. ' மாமா வரேன் என்று தானே சொல்லியிருந்தாரு. பட் காணோமே… தான் சென்ற வாரம் மாம்ஸ் நீங்கள்லாம் வர்றீங்க என்றதும், ராது டான்ஸ் ஆட முடியாது என்று சொன்னா, என்று கேலி பண்ணோமே… ஒரு வேளை அதான் மாமா வரலையா…' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

இரு பெண்களும் அவன் வரவில்லை என்று நினைத்திருக்க…

விஸ்வரூபனோ, ரீடிங் பெட் வின் லைன்ஸ் என்பது போல் அனன்யாவின் பேச்சிலிருந்து ராதிகாவின் மனதை புரிந்து இருந்தான்.

தன்னோட வருகை, அவளது திறமையை டிஸ்டர்ப் செய்யக்கூடாது என்பதற்காக, அவளது பார்வை படாத இடத்தில் அமர்ந்திருந்தான்.

ராதிகாவின் பாடல் முழுவதையும் கேட்டதோடு மட்டுமல்லாமல், தனது ஃபோனிலும் பதிவு செய்துக் கொண்டான். அப்பொழுது அவனுக்கு தெரியவில்லை. பின்னால் முழுவதும் இந்த பதிவு தான் அவனுக்கு ஆறுதல் அளிக்க போகிறது என்று…


சற்று நேரத்தில், ஸ்டேஜில் ஆஃங்கரிங் பண்ணிக் கொண்டிருந்த மாணவி, அனன்யா, ராதிகாவின் குழுவை நடனம் ஆடுவதற்காக அழைக்க…

முகத்தில் இருந்த வாட்டத்தை, மேக்கப் மறைத்திருக்க… பிங்க் நிற லெஹங்காவில் தேவதையென ஜொலித்தாள் ராதிகா. அனன்யாவும், இவர்களுடன் ஆடும் மற்ற தோழிகள் ஐவரும், லெமென் யெல்லோ லெஹங்கா அணிந்திருந்தனர். அனைவரும் மேடை ஏறினர்.

" கண்ணன் வரும் வேளை…
அந்தி மாலை காத்திருந்தேன்…" என்ற பாடல் ஒலிக்க… அவ்வளவு நளினமாக நடனமாடினார்கள். ராதிகாவின் பர்பாமென்ஸ் அவ்வளவு பொருத்தமாக இருந்தது.

'அவளுக்கு ஆட வரும் என்பதே அவளுக்கே தெரியாமல் இருந்தது.

ஹாஸ்டலில் அவள் பிறந்தநாள் போது ஆடியதைப் பார்த்த அனன்யா தான், சீனியர்களிடம் ராதிகா நன்றாக ஆடுவாள் என்று கூறியிருந்தாள்.

அவர்களும், செலக்ட் செய்யும் போது, அவளை ஆட வைத்து பார்த்தவர்கள், அவளது திறமையைப் பார்த்து வியந்து விட்டு, க்ரூப் டான்ஸில் அவளது பெயரையும் குறித்துக் கொண்டனர்.'

இடைவிடாமல் ஒலித்த கரகோஷத்தில் நினைவுக்கு வந்தான் விஸ்வரூபன்.

வழக்கம் போல அனன்யா தான் இதையெல்லாம் விஸ்வரூபனிடம் கூறியிருந்தாள். அதை நினைத்துப் பார்த்த விஸ்வரூபன் இளம் புன்னகையுடன் அவர்கள் இருவருக்கும் முன்பு சென்று பொக்கேவை நீட்ட…

திகைத்து பார்த்த ராதிகா சற்று நகர்ந்து கொள்ள…

அனன்யா , " ஹேய் ராது… அது உனக்கு தான்… வாங்கிக்கோ… எவ்வளவு நேரமா மாமா நீட்டிட்டு இருக்காங்க." என்றாள்.

அவனை ஒரு முறை நிமிர்ந்துப் பார்த்தவள், பிறகு பார்வையை திருப்பிக் கொண்டு, " அனு… அது உனக்காக வாங்கி வந்துருப்பாங்க. விளையாடத…" என்று கூறியவள், அவ்விடத்தை விட்டு நகர முயன்றாள்.

சட்டென்று கைப் பிடித்த விஸ்வரூபன், அவளது விரிந்த விழி வீச்சில் பட்டென கையை விட்டான். தன் தலையை கோதியவன், " இது உனக்கு தான் ரா.. ராதிகா… அந்துருண்டைக்கு வாங்கிக் கொடுத்தா, அவ உண்டு இல்லை என்று பண்ணிடுவா... " என்று தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு புன்னகைத்தான்.

அனன்யாவும், " நான் தான் சொன்னேனே உனக்கு தான்…" என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

அந்த பொக்கேயை வாங்கியவள், " தேங்க்ஸ்…" என்று புன்னகைக்க முயன்றாள். உள்ளுக்குள்ளோ, 'தான் அவனுக்கு யாரோ தானோ. அதான் ஃபார்மாலிட்டிஸ் பார்க்கிறான்.' என்று வருத்தத்தோடு எண்ணினாள்.

"'சரி வாங்க… ஸ்டேஜ்க்கு முன்னால் போகலாம்… மத்த ப்ரோக்ராம் எல்லாம் பார்க்கணும்." என்ற அனு இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

அதற்கு பிறகு நடந்து முடிந்த கலைநிகழ்ச்சியையோ, விளையாட்டுப் போட்டிக்கு பரிசுகள் கொடுத்ததையோ, எதையும் கவனத்தில் கொள்ளவில்லை ராதிகா.

அவளது பெயர் அழைக்கப்பட்டப் போது அனு தான், " ஹேய் ராது… கூப்பிடுறாங்க…" என்று உலுக்கினாள்.

ராதிகா செஸ் சாம்பியன்… அதற்கான பரிசு வழங்க தான் கூப்பிட்டார்கள்.

ஒரு வழியாக எல்லா செலிபிரேஷனும் முடிந்தது. மதிய உணவு அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பஃபே சிஸ்டம். அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மூவரும் ஒரு டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

"அனு…" என்ற குரலில் திரும்பிப் பார்த்த அனன்யா, அங்கே வேற ஒரு தோழி அழைக்க…

" ஹாய் …" என்று கையசைத்தவள், ராதிகா, விஸ்வரூபன் இருவரையும் பார்த்து "யூ கேரி ஆன்…" என்று விட்டு, அவளை அழைத்த தோழியை நோக்கிச் சென்றாள்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த ராதிகா, அனன்யாவை மனதிற்குள் திட்டிக் கொண்டே , சாப்பாட்டில் கவனத்தை செலுத்தினாள்.

விஸ்வரூபனோ, வந்ததிலிருந்து அவளது உணர்வுகளைத் தான் அவதானித்துக் கொண்டிருந்தான். அவளது கோபத்தையும் உணர்ந்து தான் இருந்தான்.

மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான். ' லூசு… உனக்காக ஸ்பெஷலா ரெட் கலர் பொக்கே வாங்கிட்டு வந்தா, அதைப் பார்த்து சந்தோஷம் படாமல், அனன்யாவோட கம்பேர் பண்ணிட்டு இருக்கீயே… இப்போதைக்கு என்னுடைய காதலை சொல்ல முடியாமல் உன்னுடைய படிப்பும், வயதும் தடை செய்கிறதே… ' என்று நினைத்தவன் பெருமூச்சு விட்டுக் கொண்டு,' சரி தான் இவ்வளவு தூரம் வந்ததற்கு வம்பாவது இழுப்போம்.' என்று நினைத்தவன் மெல்லிய புன்னகையை முகத்தில் படர விட்டான்.

" அப்புறம் ராதிகா… யாரைத் தேடுன?"

" ஹான்…"

" ஸ்டேஜ்ல பாடும் போது யாரையோ ரொம்ப தேடுன மாதிரி இருந்தது. அதான் கேட்டேன்." விஸ்வரூபன் அவளை ஆழ்ந்துப் பார்க்க…

" அதெல்லாம் ஒன்னும் இல்லையே. நான் யாரையும் தேடலை." என படபடப்புடன் பதிலளித்தாள் ராதிகா.

" ஓ… இட்ஸ் ஓகே. தென் டான்ஸ்க்கு பாட்டு செலக்சன் நீ தானே… அனு சொன்னா… யார் இந்த ராதிகாவோட கண்ணன் ?" என்று புருவத்தை உயர்த்தி வினவ.

" அது வெறும் பாட்டு அவ்வளவு தான். எதுக்கு இப்போ தேவையில்லாதது எல்லாம் பேசறீங்க. " என்று கோபமாக வினவியவள், ' இந்த அனு எங்கே போய்ட்டா? வரட்டும் இருக்கு அவளுக்கு… எல்லாத்தையும் அவங்க மாமா கிட்ட ஒப்பிச்சிடணுமா?' என்று மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.


ராதிகாவோ, விஸ்வரூபன் தான் அவளது கண்ணன் என்று வெளிப்படையாகக் கூற முடியாமல், அவர்களுக்கு இடையே இருக்கும் ஸ்டேட்டஸ் தடையாக இருந்ததை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

விஸ்வரூபனோ, இப்போதைக்கு தனது காதலை சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்ததால், அவளைப் பார்க்கும் போதெல்லாம் கேலி செய்தான்.

அதன் விளைவு அடிக்கடி இருவரும் முட்டிக் கொண்டிருந்தனர்.

இன்று…

உன்னுடைய நட்பை என்றும் மறக்கமாட்டேன் என்று ஆதிக்கு உறுதி கொடுத்த ராதிகா, ' தன்னை சுற்றி ஏதோ நடக்கிறது. அது என்ன என்று தான் புரியவில்லை.' என்று எண்ணியவள், அதற்கு பிறகு, சலசலவென ஆதியிடம் பேசிக்கொண்டு வகுப்பறைக்கு சென்றாள்.

ஆதியும், ராதிகாவின் உறுதியில் நிம்மதியாக வகுப்புகளை கவனித்தான்.

அடுத்த வகுப்பு கிருஷ்ணனோடது. கிருஷ்ணனோ, கேஷுவலாக பார்ப்பது போல, ராதிகாவையும், ஆதியையும் மீண்டும், மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதைக் கண்டு கொண்ட ராதிகா, குறும்பாக அவரைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.

அவரோ நெஞ்சில் கை வைத்துக்கொண்டு எதற்கு வம்பு என்று பாடத்தை நடத்தி விட்டு வெளியே சென்று விட்டார்.

அவர் போனதும் சிரித்துக் கொண்டிருந்த ராதிகாவை பார்த்த ஆதி, " ராதிகா… அவர் வயசு என்ன? அவருடைய திறமை என்ன? இந்தியாவுல உள்ள பெஸ்ட் கார்டியாலஜிஸ்ட். அவரைப் போய் ஏன் இவ்வளவு பாடு படுத்துற…"

" சும்மா ஜாலிக்கு ஆதி. நம்ம டீனும் வந்ததிலிருந்து நம்மளையே பார்த்தாரா. அதான் சின்ன ஷாக் ட்ரீட்மெண்ட்." என்ற ராதிகா சிரித்தாள்.

அவளது புன்னகை, அவனையும் தொற்றிக் கொண்டது. " ஹலோ… மேடம்… சார் உங்களைத் தான் குறுகுறுன்னு பார்த்தார். என்ன ஆளை விடு." என்று ஆதி கும்பிடு போட…

" சரி… பொழச்சு போ ஆதி. இனி உன்னை இழுக்கலை. பட் அவர பார்த்தா எனக்கு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு." என்று மீண்டும் கூறினாள்.

ஆதிக்கு தெரியும், விஸ்வரூபனின் தந்தை தான் கிருஷ்ணன் என்பது. ஆனால் அவளிடம் தெரிவிக்கவில்லை. அவளே தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டான். ஆனால் விஸ்வரூபனை மட்டும் எப்படி ராதிகாவிற்குத் தெரியும் என்று தான் அவனுக்கு குழப்பம். எதுவா இருந்தாலும் தெரியும் போது தெரிந்து கொள்வோம் என்று கேஷுவலாக இருந்தான்.

லஞ்ச் ப்ரேக்கில், பியூன் வந்து, " இங்கே ராதிகா யார்? க்ளாஸ் முடியவும்,கிருஷ்ணன் சாரை ஆஃபிஸ் ரூமில் வந்து பார்க்க சொன்னாங்க." என்று கூறினான்.

யார் ராதிகா என்று கேட்கவுமே எழுந்தவள், " நீங்க போங்கண்ணா… நான் பார்த்துக்கிறேன்." என்றுக் கூறி புன்னகைத்தாள்.

பியூன் சென்றதும், உட்கார்ந்தவளைப் பார்த்து முறைத்த ஆதவன், " ஏய்… வாலு… சும்மா இருன்னு சொன்னா கேட்டியா ? இப்ப பாரு உன்ன வர சொல்லி இருக்காரு. திட்ட போறாரு. " என்றுக் கூற…

" எவ்வளவோ பாத்துட்டோம். இதையெல்லாம் சமாளிக்கமாட்டோமா…"என்று அசால்டாக கூறினாள் ராதிகா.

அவள் பேசிய பாங்கு எல்லாமே அவனுக்கு, அவனது பேபியை ஞாபகப்படுத்தியது.

" ம் அதுவும் சரி தான்…" பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

ஒரு வழியாக வகுப்பு எல்லாம் முடிந்தவுடன் துள்ளலுடன் ராதிகா ஆஃபீஸ் ரூமிற்கு சென்றாள்.

" என்ன பெண் இவள்!" என்று எல்லோரும் அதிசயமாக பார்த்தனர்.

" மே ஐ கம் இன் டாக்டர்." என்றாள்.

" யெஸ் கம் இன். " என்ற டாக்டரின் அனுமதிக்கு பிறகு உள்ளே சென்றாள்.

" சிட் டவுன் ராதிகா. உனக்கு இந்தப் படிப்பு எவ்வளவு முக்கியம், என்று எனக்கு தெரியும். பீ சீரியஸ் ராதிகா. உன் விளையாட்டுத்தனத்தை படிப்புல காட்டாத." என்றுக் கூற…

" சார் படிப்புல நான் எந்த காம்ப்ரமைஸும் பண்ண மாட்டேன்‌. அதை நீங்கள் நம்பலாம்." என்றவள் மனதிற்குள், ' ஐயோ! படிப்பு முக்கியமில்லை என்று நான் எப்போ சொன்னேன். ஆளாளுக்கு இதே டயலாக்க சொல்லி கொல்லுறாங்களே.' என்று எண்ணினாள்.

" அதுக்கு சொல்லல ராதிகா. நீ எவ்வளவுக்கு ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணுறீயோ, அவ்வளவும் உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் தான். ப்ரைடே நீ வெளியில் போனதால் தான் இவ்ளோ ப்ராப்ளம்.

உன்னோட பேரு ஸ்பாயில் ஆகுது. அப்புறம் நம்மளுடைய ஹாஸ்பிடல்…" என்று சொல்ல வந்தவர் பிறகு, "உன்னோட நல்லதுக்காக தான சொல்றேன். " என்றார்.

" ஆதி என்னோட ஃப்ரெண்ட்... மத்தபடி இப்படி பின்னால் பேசுற எந்த பேச்சுக்கும் நான் இம்பார்ட்டன்ஸ் கொடுக்க மாட்டேன் சார்.நான் என் வரைக்கும் கரெக்டா இருப்பேன்." என்றுக் கூறியவள், அவரைப் பார்க்க...

" ஓகே உன்னுடைய பர்ஸனல் விஷயத்துல நான் இனி தலையிடல… பட் என்னுடைய எல்லா சர்ஜரியிலும், இனி நீ தான் எனக்கு ஹெல்ஃப்புக்கு வர…"

" டபுள் ஓகே சார். உங்களோட வொர்க் பண்ண காத்திட்டுருக்கேன்‌. அது தான் என்னுடைய விருப்பமும் கூட…" என்றவள், அவரை ஆர்வமாக பார்க்க…

" அப்புறம் ராதிகா… என்னோட வயசுக்கு மரியாதை கொடு மா… நான் உனக்கு அப்பா மாதிரி…" என்று ஆரம்பிக்க…

" ஐயோ! சார்… அப்படி மட்டும் சொல்லி என்னுடைய ஹார்ட்ட உடைக்காதீங்க. பை சார். ஹாஸ்பிடல்ல பார்க்கலாம்." என்றவள் சிட்டாக பறந்து விட…

' அப்படியே அவளுடைய ஃப்ரெண்டு மாதிரியே இருக்கா… வாலு ஒன்னு தான் மிஸ்ஸிங். மத்த எல்லாமே குரங்கு சேட்டை.' என்று எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டவர், ஹாஸ்பிடலுக்கு கிளம்பினார். ராதிகாவிடம் பேச வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தார். இல்லையென்றால் இந்த நேரம் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி இருப்பார்.

ராதிகாவோ ஹாஸ்டலுக்கு சென்றவள், டாக்டர் சேலவருக்கு அழைத்திருந்தாள். "ஹாய் டாக்…" என…

" என்ன ராது டியர். இரண்டு நாள் தானே ஆச்சு… என்னைப் பார்த்து… அதுக்குள்ள என்ன ரொம்ப மிஸ் பண்றியா?" என்று கிண்டல் பண்ண…

" ஐயோ! டாக்… ஏஞ்சல் பக்கத்துல இல்லைன்ற தைரியத்துல பேசுறீங்களா… நான் எல்லாவற்றையும் ஏஞ்சல் கிட்ட சொல்லிடுவேன் டாக்…" என்று அவளும் கிண்டலடிக்க…

" விட்டது தொல்லைன்னு தான் என் டார்லிங் நினைப்பா… சரி ராது எதுக்கு கால் பண்ண?"

" நான் முக்கியமான விஷயத்துக்காகத் தான் கால் பண்ணேன். நானும், ஆதியும் இருக்கிற வீடியோவை பத்தி உங்கக் கிட்ட யார் சொன்னா? பேஸ்புக்ல, வாட்ஸ்அப்ல பார்த்தேன் என்று மட்டும் சொல்லிடாதீங்க. அதுல டெலிட் பண்ணிட்டாங்க. நானே அதைப் பார்க்கலை. நீங்க எவ்வளவு பிஸி என்று எனக்கு தெரியும். " என்று வினவினாள்.

அவள் மனதிற்குள் ஒரு தவிப்பு, 'அனன்யா எதுவும் சொல்லி இருப்பாளோ.' என்று…

அதைத் தெரிந்துக் கொள்வதற்காகத் தான் அவருக்கு அழைத்திருந்தாள்.

டாக்டர் சேலவரும், "என்னுடைய ஃப்ரெண்ட் கிருஷ் தான் சொன்னான்." என்று கூறி அவளது எதிர்பார்ப்பில் வென்னீரை ஊற்றி இருந்தார்.

அவளுக்கு அப்போது தெரியவில்லை.
அவளது உயிர் தோழியின் உடலிருந்து உயிர் பிரிந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது என்று…

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 13

அன்று…

ராதிகாவின் மனதை புரிந்து இருந்த அனன்யா அவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு, தனக்கு ஹாய் சொன்ன தோழியை நோக்கிச் சென்றிருந்தாள்.

திரும்பி வரும்போது ராதிகாவின் முகமும் சிவந்து இருந்தது.

'ஆஹா... நாம போட்ட ப்ளான் வொர்க் அவுட் ஆகிடுச்சு போலயே!' என்று மனதிற்குள் நினைத்த அனன்யா, " அப்புறம் ராது?" என்று வினவ…

அவளைப் பார்த்து முறைத்து விட்டு விடுவிடுவென எழுந்து சென்று விட்டாள் ராதிகா.

'ஐயோ! அப்போ அந்த முகச் சிவப்பு வெட்கத்தால் இல்லையா? கோபத்தாலா… ' என தலையில் கைவைத்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

அனன்யாவை பார்த்து விஸ்வரூபன் வாய்க்குள் சிரித்துக் கொண்டு, வெளியே ஒன்றும் தெரியாதது போல் அமைதியாக இருந்தான்.

" மாமா… ராது ஏன் கோபமாக போறா?"

'"அது எனக்கு எப்படி தெரியும் அந்துருண்டை. "

" நீங்க தான் ஏதாவது வம்பு பண்ணியிருப்பீங்க." என்றுக் கூறிய அனன்யா, அவனைப் பார்த்து முறைக்க…

" நான் ஒன்னும் பண்ணல. ஜஸ்ட் ரெண்டே,ரெண்டு வார்த்தை தான் கேட்டேன். யார் அந்த கண்ணன்? அதுக்கு தான் அவ முறைச்சிட்டு போறா." என்று குறும்புடன் கூற…

"நீங்க இருக்கீங்களே மாம்ஸ்… எப்பப் பாரு அவ கிட்ட வம்பு பண்றதே வேலை." என்று கடிந்துக் கொள்ள.

" சரி விடு… நான் கிளம்பட்டுமா?" என்றான் விஸ்வரூபன்.

" ஏன் மாமா… அதுக்குள்ள கிளம்புறேன் என்று சொல்றீங்க."

" அது தான் நான் வந்த வேலை திவ்யமா முடிஞ்சிருச்சு. அப்புறமென்ன நான் வரேன். அப்படியே அந்த பாப்கார்ன் கிட்டயும் சொல்லிடு." என்றவன், கிளம்பி விட்டான்.

" மாமா……….." என்று பல்லைக் கடித்தவள், பெருமூச்சு விட்டுக் கொண்டே ராதிகாவைத் தேடி சென்றாள்.

அவளை சமாதானம் செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது.

வருடங்கள் வேகமாக ஓட, இவர்களுடைய படிப்பும் சூப்பராக சென்றது.

******************

பிலிப்பைன்ஸ் வந்து நான்கு வருடம் முடிந்துவிட்டது.

இதோ, இன்றைய நாள். மருத்துவம் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் முக்கியமான நாள்.

ஆம் இன்று முதல் ஹாஸ்பிடலில் பேஷண்ட்ஸை நேரடியாக பார்க்க போகிறார்கள்.

அனன்யா வழக்கம் போல பரபரப்பாக இருக்க‌… ராதிகாவோ, அதிசயமாக புடவை கட்டிக்கொண்டு இருந்தாள்.

" ஹே… ராது… என்னை இன்னைக்கு அதிசயமாக சாரி கட்டி இருக்க?" என்று வினவ…

" கோவிலுக்கு போறேன் அனு."

" ஹா… ஹா… என்ன ஹாஸ்பிடல் போறதுக்கு பயம் வந்துருச்சா…" என்று அனு கிண்டலடிக்க.

" ப்ச்… அக்காவுக்கு இன்னைக்கு பிறந்தநாள் அதான் கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன்."

" ஹே… சாரி ராது… மறந்துட்டேன்." என்ற அனு அமைதியாகிவிட.

" அதுக்கு ஏன் டல்லா இருக்க… விடு அனு… இத்தனை வருஷத்துல நானே மறக்க ஆரம்பிச்சுட்டேன். காலம் எல்லாவற்றையும் ஆற்றும் மருந்து என்பது உண்மை தான்.

அக்காவுக்காக ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் அங்க உட்கார்ந்துட்டு வந்தா, கொஞ்சம் மனசு ரிலாக்ஸா இருக்கும் வேணும்னா நீயும் வாயேன். கடவுள் கிட்ட நல்லா வேண்டிக்க… கடவுளே! என்கிட்ட வர பேஷண்டெல்லாம் நீதான் காப்பாத்தணும்." என்று ராதிகா சொல்லி முடிக்கலை.

அனு அவளை துரத்த ஆரம்பித்தாள். " ஏய் ராது... உன்னை சும்மா விட மாட்டேன்." என…

" வேண்டாம் அனு… இந்த புடவையை கட்டிட்டு என்னால ஓட முடியலை."

" அதெல்லாம் முடியாது. உன்னை சும்மா விட மாட்டேன்." என்று அனு துரத்தினாள்.

அந்த சின்ன அறையில் ஒரு வழியாக ராதிகாவை பிடித்தவள், அவளோடு சேர்ந்து கட்டிலில் விழுந்தாள்.

" ஏய் அனு இன்னமும் என்னைப் பிடித்துக் கொண்டு கீழே விழுவதை விடவே இல்லையா?" என்று சொல்ல…

இப்பொழுது அனு, " ஹேய் ராது ‌… அதைப் பத்தி மட்டும் பேசாத." என்று தடுக்க…

" ஏன் பேச கூடாதா? நான் அப்படித்தான் பேசுவேன். எப்ப வேணுமுன்னாலும் பேசுவேன்." என்று சிரித்துக்கொண்டே ராகம் பாடினாள் ராதிகா.

" சிரிக்காதே ராது." என்று அனு கெஞ்சும் குரலில் கூறினாள்.

" ஹா… ஹா… ஆனாலும் உனக்கு இவ்வளவு கான்பிடன்ஸ் இருக்கக் கூடாது அனு." என்றுக் கூறிய ராதிகா, மீண்டும், மீண்டும் பொங்கி சிரித்தாள்.

அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் அனு.

" அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே தோழியே!" என்று ராதிகா பாட.

" உனக்கு கிண்டலா இருக்கா ராது. நான் பாவமில்லையா." என்று வினவிய அனுவும், " இல்லையே." என்ற ராதிகாவும் அன்றைய நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தனர்.

' இவர்கள் பிலிப்பைன்ஸ் வந்து இரண்டு வருடம் ஆகியிருந்தது.
பி.எஸ் ( சைக்காலஜி) ஒரு வருடம் முடித்து விட்டு மெடிக்கலுக்கு வந்த புதிது.

முதல் வருடம் முழுவதும் அனாடமி… பையோ கெமிஸ்ட்ரி… பிஸியாலஜி…
இதைப் பற்றி தான் படிப்பார்கள். வாரத்திற்கு இரண்டு அனாடமி கிளாஸ்.

முதல் அனாடமி வகுப்பிற்கு செல்லும் எல்லா மாணவர்களுக்குமே சற்று படபடப்பாகத் தான் இருக்கும்.

அப்படி இருக்க, அனுவும், ராதிகாவும் அந்த புது அனுபவத்திற்கு கிளம்பினர்.

அனு, " ராது பயப்படாதே… நான் உன் பக்கத்திலேயே இருக்கேன்.பயமா இருந்தா என் கைய புடிச்சுக்கோ…" என்று அவ்வளவு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பத்துப் பத்து பேர் ஒரு குரூப். ஒரு குரூப்பிற்கு ஒரு கேடவர்( இறந்த உடல்) கொடுத்துடுவாங்க.

கேடவரை க்ளீன் பண்றது, அதாவது ஹேரை ரீமுவ் பண்ணுறது, நைல் கட் பண்ணுறது, ஸ்கின்ன எடுக்கறது, அப்புறம் ஒவ்வொரு ஆர்கன்ஸையும் எடுக்கறது எல்லாமே, எக்ஸ்பீரியன்ஸ் டாக்டர்ஸ் மூலமா சொல்லிக் கொடுப்பாங்க. ஒவ்வொரு ஸ்டுடென்ட், ஒவ்வொன்று செய்யணும்.

ஒவ்வொரு மாணவர்களும் தயங்கிக் கொண்டிருக்க, ராதிகா முன் வந்து முதலில் ஆப்ரேட் பண்ணினாள். அடுத்து, அடுத்து ஒவ்வொருவராக செய்ய, திடீரென்று தான் இழுக்கப்படுவதை உணர்ந்த, ராதிகா என்னவென்று திரும்பி பார்க்க, அனன்யா பயந்து, இவளது கையை இறுகப் பற்றியிருந்தாள்.

இவ்வளவு நேரம், டாக்டர் சொல்வதை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த ராதிகா, பயந்துக் கொண்டிருந்த அனுவை கவனிக்கவில்லை. இப்போது அனு மயங்கி விழும் போது, இவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு விழுந்தாள். அதற்குப் பிறகு அவளுக்கு முதலுதவி செய்தனர்.' அதைத் தான் இப்போது சொல்லி ராதிகா கிண்டல் செய்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தார்கள்.

" சரி… சரி… விடுடி… வீராங்கனையின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்." என்றாள் அனு.

" யாருடி வீராங்கனை?" என்ற ராதிகா, அவளை கேலியாக பார்க்க.

" ஐயோ! ராது… என்னால முடியல… விட்டுடு…."

" என்னாது முடி இல்லையா? இதோ இவ்வளவு இருக்கே…" என்று அவள் தோள்பட்டை வரை இருந்த முடியை காண்பித்து கேலி செய்ய…

" ராது… என்னோட சேர்ந்து நீயும் கெட்டு போயிட்ட… டூ பேட். நான் உனக்கு குரு. கொஞ்சமாவது மரியாதைக் கொடுடி." என அழா குறையாகக் அனு கூற…

" சரி பொழைச்சு போ. "என்றாள் ராதிகா.

அவளை பொய்யாக முறைத்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தாள் அனு.

" ஏய் அனு சீக்கிரமா வா. அப்போ தான் குருத்துவார்க்கு போயிட்டு, காலேஜுக்கு போக சரியா இருக்கும்." என்று ராதிகா குரல் கொடுக்க...

" சரி." என்ற அனுவும் ஐந்து நிமிடங்களில் ரெடியாகி விட… இருவருமாக கிளம்பிச் சென்றனர்

அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று அவுட்டோரில் இருந்தது. குருத்துவார்.


இங்கே வட இந்தியாவில் இருப்பது போல இங்கு இருக்காது. கோபுரம் அமைப்பு இல்லாமல், வீடு போலவே இருக்கும். அங்கு போய் சாமி கும்பிட்டு விட்டு, சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்து விட்டு வருவார்கள்.

அதேபோல் இன்றும் அவர்கள் இருவரும் சென்று விட்டு, காலேஜிற்கு திரும்பியிருந்தனர். இப்போது ராதிகாவின் மனம் இலகுவாக இருந்தது‌.

இன்று முதல் ஹாஸ்பிடலுக்கு சென்று ரியல் பேஷண்டை நேரடியாக பார்க்க போகிறார்கள்.

ஒவ்வொரு பேஷண்டையும் பார்த்து அவர்களுக்கு என்ன பிராப்ளம் என்று டையக்னஸ் செய்து, அதற்கு சரியான மருந்தை கூறி அவர்களை க்யூர் செய்வது, அவர்களால் தான் சரியானது என்று பேஷண்ட் கூறும் போது இத்தனை வருஷமாக அவர்கள் படிப்பதற்காக பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாம் மாயமாக மறைந்து, ஒரு பெரும் நிம்மதி கிடைக்கும். அதை ராதிகாவும், அனுவும் அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்தனர்.

அப்படியே அவர்கள் மருத்துவப் படிப்பில் ஒவ்வொன்றையும் கத்துக்கொண்டு, இந்தியாவை நோக்கிச் செல்லும் நாளும் வந்தது.

வழக்கம் போல விஸ்வரூபன், அனுவை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தான்.

வந்தவன், இந்தியா செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு, ஒரு நாள் சுற்றிப் பார்த்துவிட்டு செல்லலாம் என்று கூறியவன், ராதிகாவையும் அவர்களுடன் வருமாறு அழைத்தான்.

ராதிகாவும் ஒரு முடிவுடன் இருந்ததால், அவன் கூறியதற்கு சரி என்று தலையாட்டினாள்‌.

' இந்தியாவிற்கு சென்று விட்டால், மீண்டும் அவனிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமோ, இல்லையோ இந்த சான்ஸை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.' என்று நினைத்தாள்.

விஸ்வரூபனோ, பக்காவாக ப்ளான் செய்திருந்தான்.


இன்று..

ராதிகா சென்னையில் வந்து மேற்படிப்பு படிக்க தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவை நோக்கி சென்றது.

இந்த ஒரு வருட காலத்தில், ஆதியுடனான நட்பு இறுகியது.

காலேஜில் கலாட்டாவும் துள்ளலுடன் இருந்தாள் ராதிகா.

அவளது சேட்டையை டாக்டர் கிருஷ்ணனால் சமாளிக்க முடியவில்லை.

எந்த அளவுக்கு அவள் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாளோ, அதே அளவுக்கு பொறுப்பாக மருத்துவமனையில் இருப்பாள்.

கிருஷ்ணனுக்கு வலது கையாக இருந்தாள்.

ஹாஸ்பிடலில் உள்ள எல்லா டாக்டர்ஸ் அண்ட் வொர்க்கர்ஸெல்லாம் பயந்து, மரியாதையுடன் பார்க்கும் கிருஷ்ணனை, ஈஸியா அப்ரோச் செய்வாள் ராதிகா.

அதைப் பார்த்து எல்லோரும் வியந்து தான் போவார்கள்.

கிருஷ்ணனும் ராதிகாவிற்கு நிறைய சலுகைகள் கொடுத்து இருக்கிறார். அது அவளுக்கு தெரியவில்லை, மற்றவர்களுக்கு நன்கு புலப்பட்டது

ராதிகா மேல் உள்ள அன்பு எப்படிப்பட்டது என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். அவருக்குள்ளே சில ரகசியங்கள் இருக்கிறது.

அவருக்கு ராதிகாவிடம் ஒரே ஒரு குறை தான்.

ஆதவனுடன் ராதிகா பேசுவது தான். அதை அவரால் தடுக்க முடியவில்லை.

ஏற்கனவே தனக்கு பிடிக்கவில்லை என்பது ராதிகாவிற்கு தெரியும், இருந்தாலும் அவள் பேசுவதை நிறுத்தவில்லை.

அதனால் அவர் அவரோட எல்லைக்குள்ளே நின்றுக் கொண்டார்.

தான் அவளிடம், ஆதவனிடம் பேச வேண்டாம் என்று தடுக்க, தடுக்க அவளுக்கு மீறிக்கொண்டு செய்யத் தோன்றும். அதனால் அவர் விட்டுப் பிடிப்போம் என்று நினைத்தார்.

ஆனால் இது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட அன்பு என்பது அவருக்கு தெரியவில்லை.

அடுத்த வாரம் அவரது செல்ல பேத்திக்கு பிறந்தநாள். தனது மருமகள் இறந்த நிலையில் சிம்பிளாக செய்வோம் என்று நினைத்தால், அவரது மனைவியும் தங்கையும் ஒத்துக் கொள்ளவில்லை.

சரி தான் அவர்களுடைய ஆசையை பூர்த்தி செய்ய, பிறந்தநாளை கிராண்டாக செய்ய முடிவெடுத்து விட்டார்.

சென்னையில் அவர்களது மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அனைவரையும் அழைத்து பெரிதாக ஹோட்டலில் பார்ட்டி அரேஞ்ச் செய்து இருந்தார். அது ஈவினிங் பார்ட்டி.


முக்கியமானவர்களை வீட்டிற்கு அழைத்து மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

ராதிகா இன்னும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பார்க்கவில்லை‌.இந்த சந்தர்ப்பத்தில் அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்த, ஒரு எண்ணம்.

என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என்று கிருஷ்ணன் நினைத்திருக்க.

விதியானது அவளை, அந்த வீட்டு மருமகளா தான் அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. இதையெல்லாம் அறிந்திராத கிருஷ்ணன், அன்று மாலை காஞ்சிபுரம் வந்தவர் தனது அறைக்கு சென்றார்.

அவர் வந்த தகவல் எப்படித்தான் தெரியுமோ அடுத்த நொடியே அவர் முன் வந்து நின்றாள் ராதிகா.

அதை பார்த்த கிருஷ்ணன் முகம் மலர, புன்னகைத்தவர், " வந்துட்டியா ராதிகா. உட்கார்." என்று கூற…

" சார் இன்னைக்கு ஏதும் ஆஃப்ரேஷன் இல்லையே?" என்று வினவ.

" ம் தெரியும். உன்னை பார்க்கத்தான் வந்தேன்."

" ஓ…" என்ற ராதிகா அதற்குப் பிறகு தான் அமர்ந்தாள்.

" சொல்லுங்க டாக்டர். ஏதாவது முக்கியமான விஷயமா?"

" யெஸ் ராதிகா. நெக்ஸ்ட் வீக் என்னோட பேத்தியோட பர்த்டே பங்க்ஷன். தெரியும் தானே."

" யா டாக்டர்… ஹாஸ்பிடலில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டாச்சு. பட் எனக்கு மட்டும் இன்னும் அழைப்பு இல்லையே டாக்டர்… நான் யாரோ தானா…" என்றுக் கூறி புன்னகைக்க.

" யூவார் மை ஸ்பெஷல் கெஸ்ட். சோ உனக்கு ஸ்பெஷல் அழைப்பு." என்ற கிருஷ்ணன், அவளுக்கான இன்விடேஷேனை நீட்டியபடியே, " ராதிகா… இந்த இன்விடேஷன் ஈவினிங் பார்ட்டிக்கானது. கிண்டியில் உள்ள ஹோட்டல் பார்க் ஹையட்.

மதியம் லஞ்ச்க்கு எங்க வீட்டுக்கு வா. எங்க வீட்ல உள்ளவங்க எல்லாரையும் உனக்கு அறிமுகப்படுத்துறேன். நானே ஃப்ரைடை மார்னிங் வந்து உன்னை அழைச்சிட்டு போறேன்." என…

" டாக்டர்… நெக்ஸ்ட் ஃப்ரைடேயிலிருந்து, த்ரீ டேஸ்க்கு லீவ் அப்ளை பண்ணியிருக்கேன் சார்." என்று மெல்லிய குரலில் கூற.

ஒரு நிமிடம் அதிர்ந்த கிருஷ்ணன்," ஏன் ராதிகா அவசியம் போகணுமா? லீவை கேன்சல் பண்ணலாமே."

ராதிகாவோ வார்த்தைகள் தடுமாற, "டாக்டர்… எங்க அக்காவோட பிறந்தநாள். அன்னைக்கு பெரிய கோவிலுக்கு போவேன். அது மட்டும் இல்லாமல் அன்னதானத்துக்கு சொல்லியிருக்கோம். என்னால அதை மாற்ற முடியாது டாக்டர். ஏன்னா எங்க அக்கா இப்போ உயிரோட இல்லை. அவளோட நினைவுகள் அந்த கோவிலில் தான் இருக்கு. அதான் டாக்டர் என்னால வர முடியாது." என்று தயங்கித் தயங்கி கூறினாள்.

" இட்ஸ் ஓகே ராதிகா. நோ ப்ராப்ளம் அம்முகுட்டியே பாக்கணும்னு ரொம்ப நாளாக சொல்லிட்டுருந்தியேனு நினைச்சேன். இட்ஸ் ஓகே மா. இன்னொரு நாள் உன்னை நான் வீட்டுக்கு இன்வைட் பண்றேன். அப்போ நீ வா… " என்று அவளை சமாதானம் செய்தார் கிருஷ்ணன். இருந்தாலும் அவருக்கும் சற்று ஏமாற்றம்தான். அதை அவளுக்காக மறைத்துக் கொண்டார்.

கிருஷ்ணன் கூறியதைக் கேட்ட ராதிகா, முகம் மலர்ந்தாள். " அம்முக் குட்டியோட பெயர் என்ன டாக்டர்? நானும் கேட்கணும் நினைப்பேன், அப்புறம் மறந்துடுவேன்." என்று கூறியவாறே, இன்விடேஷனைப் பிரித்து பார்த்தாள். பேபி அவந்திகாவின் ஃபர்ஸ்ட் பர்த்டே என்று இருக்க‌… அதில் இருந்த பெயரைப் பார்த்த ராதிகா அதிர்ந்தாள்.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 14

அன்று…

ஹாஸ்டலே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது.

ஒவ்வொருவரும், அவரவருடைய தாய்நாட்டிற்கு கிளம்புவதற்காக பரபரப்புடன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

தாய் நாட்டிற்கு திரும்பும் ஆர்வம் ஒருபுறம் இருக்க, இவ்வளவு நாள் தாயாய், சகோதரியாய் எல்லாவுமாக இருந்த தோழிகளை விட்டு பிரிந்து செல்வது மனதை வருத்த, கலங்கிய கண்களுடன் இருந்தனர்.

இந்த ஐந்தரை வருடங்களாக வெளிநாட்டில் குடும்பத்தைவிட்டு இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்த நட்பை பிரியும் போது உள்ள வலியை எழுத்தில் சொல்ல முடியாது‌‌.

அந்த வலிக்கு விதிவிலக்கு அல்ல ராதிகாவும், அனன்யாவும்…

அவர்களும் கவலையோடு இருந்தனர். ஒரு வழியாக, கண்ணீரோடு பக்கத்து அறைத்தோழிகளுக்கு விடைக்கொடுக்க…

எஞ்சியிருந்தது அந்த ஃப்ளோரில் இவர்கள் இருவர் மட்டுமே‌…

கொஞ்ச நேரம் இருவரும் சுருண்டு படுத்திருக்க…

அதற்குள் விஸ்வரூபன் அழைத்திருந்தான். " ஹேய் அந்துருண்டை… ஃபோனை எடுக்க இவ்வளவு நேரம்? "

" ஒன்னுமில்லை மாமா… கொஞ்சம் படுத்திருந்தோம்.அதான்…" என்று டல்லாகக் கூற…

அவளது மனநிலைப் புரிந்த விஸ்வரூபன், "ஹேய்… நீயும், உன் ஃப்ரெண்டும் இன்னும் கிளம்பலையா? நான் உங்களுக்காக ஜீ மால்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஓ காட்… டைம் மேனேஜ்மென்ட கீப் அப் பண்ண மாட்டீங்களா? எல்லாம் சகவாசதோஷம்…" என்று வேண்டுமென்று ராதிகாவை இழுத்து வைத்துப் பேசினான்.

அவன் நினைத்ததுப் போலவே வரிந்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தாள். " மாமா… அவளை ஏதாவது சொன்னீங்கன்னா பாருங்க." என்று மிரட்டினாள்.

" சரி… சரி… சீக்கிரமா வாங்க. நான் ஃபிப்த்ப்ளோர்ல வெயிட் பண்ணுறேன்." என.

" நீங்க எதுக்கு இப்போ ஃபிப்த் ப்ளோர்ல இருக்கீங்க மாம்ஸ்… நாங்க வர்றதுக்குள்ள சாப்பிடலாம் என்று ப்ளான்ல இருக்கீங்களா? " என்று வினவ.

" அட லூஸே… இங்கே வ்யூ பாய்ண்ட் நல்லா இருக்கும். ஹோல் சிட்டியும் தெரியும். நான் இங்கே வேடிக்கைப் பார்த்துட்டு தான் இருக்கேன். உன்னை விட்டுட்டு சாப்பிடமாட்டேன். அப்புறம் நீ வந்தது, இந்த புட் கோர்ட்ல இருக்குற எல்லா ஐட்டத்தையும் வாங்கித் தரேன் போதுமா" என.

" ஹி… ஹி… வச்சிடுறேன் மாம்ஸ்." என்று அசடு வழிந்தாள் அனன்யா.

இளம் புன்னகையுடன் அவர்களுக்காக காத்திருக்கத் தொடங்கினான் விஸ்வரூபன்.

அனன்யா பேசியதைக் கேட்ட ராதிகா முகம் கழுவி விட்டு, வெளியே செல்வதற்கு கிளம்பி வந்தாள்.

ஏற்கனவே எல்லோரையும் பிரியும் வருத்தத்தில் இருந்த ராதிகா ஏனோதானோவென்று ஒரு ஜீன்ஸ் பேண்டும் டீ ஷர்ட்டும் எடுத்துப்போட்டிருக்க, அப்போதுதான் ஃபோனை வைத்து இருந்த அனன்யா, ராதிகாவின் தலையில் ஒரு குட்டு வைத்து, " ஏய் ராது… இன்னைக்கு ஒழுங்கா ட்ரெஸ் பண்ணு. நாம ஃபர்ஸ்ட் ஷாப்பிங் போறோம். அப்புறம் பீச்சுக்கு போறோம். அங்க நீ மாம்ஸ் கிட்ட மனசுல உள்ளதை சொல்லுற புரியுதா?

இப்போ விட்டால் அப்புறம் சான்ஸ் கிடைக்காது. நீ அப்புறம் தஞ்சாவூர் போயிடுவ… என்னோடவே சென்னைல மேற்படிப்பு படின்னு சொன்னால் கேட்க மாட்டேங்குற‌… நீ சரினு சொன்னால் எங்க மாமா காலேஜ்லேயே நானும், உன் கூடவே சேருவேன். இல்லைன்னா வேற காலேஜ் தான்."

" ப்ச்… அதெல்லாம் சரி வராது அனு… "

"உடனே இதை மட்டும் சொல்லிடு. அட்லீஸ்ட் எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரம் இருந்துட்டு போயேன் டி. அம்மாவும், அத்தையும் உன்ன பாக்கணும்னு சொல்லிகிட்டே இருக்காங்க. வீடியோ கால்ல பேசு என்று சொன்னால், நீ தான் வரமாட்டேங்குற."

" அது… ஃபோன்ல பார்த்து என்ன பிடிக்காமல் போயிடுச்சுனா… அதான் பேசலை விடு அனு. அதுவுமில்லாமல் உங்க பாட்டியை நினைச்சாலே பயமா இருக்கு."

" ஹே எங்க பாட்டி ரொம்ப நல்லவங்க. பார்க்க தான் ரஃப் அண்ட் டஃபா தெரிவாங்க. பட் உண்மையிலே ரொம்ப நல்லவங்க. கூடிய சீக்கிரம் எங்க வீட்டு மருமகளா வீட்டுக்கு வா, அப்போ புரிஞ்சுப்ப." என்று சொல்லி அனு புன்னகைக்க.

"சரி" என தலையாட்டியவள், மீண்டும் அனுவைப் பார்த்து, " அனு… இன்னைக்கு நான் அவசியம் சொல்லித்தான் ஆகணுமா?"

" யெஸ் கண்டிப்பா இன்னைக்கு உன் மனசுல உள்ளதை எங்க மாமாக் கிட்ட சொல்லுற…"

" எனக்கு பயமா இருக்கு அனு. ஒரு வேளை உங்க மாமாக்கு என்னைப் பிடிக்கலைன்னா?" என்று ராதிகா எதிர் கேள்வி கேட்க.

" ராது டியர். ஃபர்ஸ்ட் நீ சொன்னா தான் அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். இப்படியே பேசிட்டு இருந்தா சரி வராது. இந்தா இதைப் போட்டுட்டு வா." என்று மிரட்டிய அனு, ராதிகாவின் கையில் ஒரு அழகிய பிராக் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.

விஸ்வரூபன் காத்திருந்த ஷாப்பிங் மாலுக்கு சென்றார்கள்.

விஸ்வரூபனின் கண்களோ, ராதிகாவை மட்டுமே பார்த்தவாறு இருந்தது. லேசான முகச் சிவப்போடு,கொள்ளை அழகாக காட்சியளித்தாள்.

நல்லவேளை கூலிங் கிளாஸ் போட்டு இருந்தான். அதனால் அவனது ஆளை விழுங்கும் பார்வையை அவர்கள் இருவரும் அறியவில்லை.

" ஹாய் மாம்ஸ். என்ன யோசனை?" என்று அனன்யா தோளைத் தட்ட…

" நத்திங் அந்துருண்டை. வாங்க முதல்ல சாப்பிடலாம்" என்றவன் அனன்யா கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தான். ராதிகாவிற்கு பிடித்த உணவை கேளாமலே ஆர்டர் செய்து இருந்தான்.

ஆனால் ராதிகாவிற்கோ உணவு உள்ளே செல்லவில்லை.

வழக்கம் போல விஸ்வரூபன் ராதிகாவை கேலி செய்ய ஆரம்பித்தான்.

" என்ன அனு… உன் ஃப்ரெண்டுக்கு ஊட்டி விடணுமா? " என்று கேட்க.

இருவரும் சேர்ந்து அவனை முறைக்க, " இல்லை ஆர்டர் பண்ணியது அப்படியே இருக்கே…" என்று அப்பாவியாக சொல்ல…

அப்போது தான், தன் தோழியை கவனித்த அனு, " ஏன் டி சாப்பிடாமல் இருக்க. சீக்கிரம் சாப்பிடு." என்று மிரட்டினாள்.

ஒருவழியாக சாப்பிட்டு முடித்தவர்கள், தங்களது பர்சேஸை ஆரம்பித்தனர்.

மாலை வரைக்கும் ஒவ்வொரு ப்ளோராக ஏறி இறங்கி, வீட்டிலுள்ளவர்கள் அனைவருக்கும் வாங்கிக் குவித்தாள்.

சற்று நேரம் பொறுமையாக இருந்த விஸ்வரூபன், " அனு… நீ பார்த்துட்டு இரு எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வந்தடுறேன்." என…

" மாம்ஸ்… நீங்கதான் பில் பே பண்ணனும். சீக்கிரம் வந்துடுங்க."

" நீ செலக்ட் பண்ணிட்டே இரு. நான் வந்து விடுவேன்." என்ற விஸ்வரூபன், சொன்ன மாதிரியே சீக்கிரம் திரும்பி வந்துவிட்டான்.

ராதிகாவும் தன்னுடைய அப்பா, அம்மாவிற்கும், அவளுடைய ஸ்வீட்டிக்கும், விக்ரம், ஸ்வேதாவிற்கும் வாங்கி முடித்து விட்டு அமர்ந்திருந்தாள்.

விஸ்வரூபனோ, அனு வாங்குவதற்கு பில் பே பண்ணி விட்டு, அதைத் தூக்கிக் கொண்டு, அவள் பின்னே அலைவதற்கே அவனுக்கு சரியாக இருந்தது.

அப்போதைக்கு அவனால் முடிந்தது, அவ்வப்போது ராதிகாவை சைட் அடிப்பது மட்டுமே.

ஒரு வழியாக ஷாப்பிங் முடிந்து, பீச்சுக்கு செல்லும் போது, மாலை மயங்கி, இரவு கவிழத் தொடங்கியது.

பே வாக் பீச்… நிலவு வெளிச்சத்தில் அந்த இடமே ரம்மியமாக இருந்தது‌.

சற்று நேரம் நின்று வேடிக்கை பார்த்தனர். ராதிகா சோர்ந்து தெரிய, அவளது முகத்தைப் பார்த்த விஸ்வரூபன், " அந்துருண்டை… வர்றீயா, அங்கே இருக்கிற ஹட்டில் உட்கார்ந்து பேசலாம்." என்றுக் கூற…

" மாமா எனக்கு ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் வேணும். நான் வாங்கி சாப்பிட போறேன். உங்களுக்கு வேணுமா?" என்று விஸ்வரூபனிடம் வினவியவள், அவன் வேண்டாம் என்று கூறவும், ராதிகாவை பார்க்க.

" ஐயோ! ஆளை விடு. எனக்கு எதுவும் வேண்டாம்." என்று விட…

" சரி‌… அப்போ நீங்க போய் அங்க உட்கார்ந்து பேசிட்டு இருங்க, நான் வந்து விடுகிறேன்." என்றுசொன்னாள்.

விஸ்வரூபன், "சரி ." என தலையாட்டி விட்டு வேகமாக எட்டு எடுத்து வைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

ராதிகாவிடம் கண்களாலே, அவளது காதலைச் சொல்லுமாறு மிரட்டி விட்டுச் சென்றாள் அனன்யா.

அவர்களுக்கு தனிமை கொடுப்பதற்காக அங்கிருந்த இரு கடைகளில் உள்ளவற்றை காலி பண்ணிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரம் நிமிர்வதும் பிறகு தலைகுனிவதுமாக இருந்தாள் ராதிகா.

தன் செல்ஃபோனில் கவனத்தை வைத்து இருப்பதுப் போல், அவளையே புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன்.

அவளது அவஸ்தையைப் பார்த்தவன் சிரித்துக் கொண்டே, " ம்… இது சரி வராது." என்று அலுத்தவாறே, அவளதுக் கையைப் பற்றி, சற்றுமுன்பு அவளுக்காக வாங்கி வந்திருந்த மோதிரத்தை, தனது பாக்கெட்டில் இருந்து எடுத்தவன், அவளது கை விரலில் மாட்டி விட்டு, "ஐ லவ் யூ ராதா… என்னை உன் கண்ணனாக ஏற்றுக் கொள்வாயா?" என்றுக் கேட்க…

ராதிகாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென பெருகியது.

" ஹேய் ராதா… ஏன் என்னைப் பிடிக்கலையா? எதுக்கு இப்படி அழற?" என அவன் பதறித்துடிக்க.

அவளோ, அவசர, அவசரமாக கண்களைத் துடைத்து விட்டு, " இல்லை." என தலையசைத்தாள்.

" ஓ… அப்போ உனக்கும் என்னைப் பிடிக்குமா? பிடிக்கும்னா இந்தா இதை எனக்குப் போட்டு விடு." என்றவாறே இன்னொரு மோதிரத்தை அவள் கையில் கொடுத்தான்.

ராதிகாவோ, அதிர்ச்சியில் இருக்க." ம்‌… சீக்கிரம் போடு. இது நமக்கு நிச்சயதார்த்தம். சீக்கிரமா நம்ம கல்யாணம் பண்ணிக்கணும் என்று கடவுள் கிட்ட மனுக் கொடுத்துக் கொண்டே போட்டு விடு. இதோ இந்த நிலவு தான் நமக்கு சாட்சி." என்றுக் கூற

ராதிகாவும், வெட்கத்துடன் மோதிரத்தை போட்டுவிட்டாள்.

பிறகு தனது தயக்கத்தை யெல்லாம் தூக்கி போட்டு விட்டு,தனது ஹேண்ட் பேகிலிருந்து, அழகிய இளஞ்சிவப்பு நிற ரோஜாவை எடுத்து நீட்டினாள். அதை பத்திரமாக வாங்கியவன், " அடிப்பாவி… அப்போ நீதான் நாலு வருஷமா சீக்ரெட்டா ரோஸ் கொடுத்ததா…" என்று அதிர்ந்துக் கூறினான்.

இன்று…

இன்றைக்கு குழந்தை அவந்திகாவின் முதல் பிறந்தநாள். அந்த வீட்டின் முதல் வாரிசு. பிறகென்ன காலையிலிருந்தே அந்த மாளிகை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காலையில் கோவிலில் அபிஷேகத்திற்கு கொடுத்து இருந்தார்கள். அதற்கு சென்று விட்டு வந்ததும், மதிய உணவு ஏற்பாட்டை கவனிக்க ரஞ்சிதமும், கௌரியும் சென்றனர்.

எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் இருந்தாலும், மேற்பார்வை நாம் தான் பார்க்க வேண்டும். அதனால் தான் கௌரி, மனதிற்குள் அவ்வளவு கவலை இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, தன் அண்ணியுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.

கௌரியின் முகத்தையே அவ்வப்ப்போது பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதம், " கௌரி… நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. " என்று ஆறுதலாக கூற…

" இல்ல அண்ணி… தனியா இருந்தா அனுவோட ஞாபகம் தான் வருது. அவ உயிரோட இருந்திருந்தாலே எனக்கு போதுமே. நான் மிகவும் சந்தோசமாக இருந்திருப்பேனே. எந்த ஜென்மத்திலோ நான் பாவம் பண்ணியிருக்கேன் போல, அதான் இன்னமும் என்னை தொடர்ந்து வந்துட்டே இருக்கு…" என்று கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.

" கௌரி… என்ன பேச்சு பேசுற ?உதை வாங்கப் போற… அம்முக் குட்டியோட பிறந்தநாள். அதை மட்டும் நினை. முடிஞ்சது பற்றி பேசாத… சரி ஸ்வீட் மட்டும் வீட்ல செய்யலாம்னு இருக்கேன். நம்ம அனுவுக்கு பிடிச்ச குலோப்ஜாமூன் தான் செய்யப் போறேன். வா… நீயும் வந்து ஹெல்ப் பண்ணு…" என்றுக் கூறி அவளது மனதை மாற்றினார் ரஞ்சிதம்.


மதிய விருந்திற்கு முக்கிய விருந்தாளிகளை மட்டும் அழைத்திருந்தனர். அவர்களை எல்லாம் நன்றாக கவனித்து அனுப்பி விட்டு வீட்டில் உள்ளவர்கள் சற்று நேரம் ஆற அமர்ந்தனர்.

கிருஷ்ணனின் சகதர்மினி தனது கேள்வியை ஆரம்பித்தார். " ஏங்க… உங்களோட ஸ்பெஷல் கெஸ்ட்ட இன்னைக்கு அறிமுகப்படுத்துறதா சொன்னீங்களே… எங்க அவங்களைக் காணோம்."

" அது… ரஞ்சி… அவங்களுக்கு ஒரு முக்கியமான வொர்க். அதனால் வர முடியலைன்னு சொன்னாங்க." என்றுக் கிருஷ்ணன் கூற…

" யாரு பா அது? உங்க ஸ்பெஷல் கெஸ்ட். நீங்க இன்வைட் பண்ணியும் வராமல் இருக்கிறாங்க?" என்றுக் வினவிய விஸ்வரூபன், கிருஷ்ணனை ஆழ்ந்துப் பார்க்க…

" அது… " என்று கிருஷ்ணன் தயங்கினார்.

" டாட்…" என்று ஆச்சரியமாக விஸ்வரூபன் வினவ.

ரஞ்சிதம் வந்து, கிருஷ்ணனின் வேலையை குறைத்தார். " அது தான் பா… நம்ம காஞ்சிபுரம் பிரான்ச்ல பார்ட் டைமா வொர்க் பண்ணுற பொண்ணு. நம்ம காலேஜ்ல தான் படிக்குது. பேரு என்னங்க… ஹாங்... ராதிகா… எப்ப பார்த்தாலும் என் டார்லிங், என்று உங்க அப்பா சொல்லிக்கிட்டே இருப்பார். இன்னைக்கு என் கிட்ட அறிமுகப்படுத்துறேன் என்று சொன்னார். ஆனா அவ வரலை…" என்றார்.

அதைக் கேட்ட விஸ்வரூபனின் முகம் இறுகியது. ' தன் தந்தை யாரை அழைத்திருக்கிறார், அவள் ஏன் இங்கு வரவில்லை? எங்கு சென்றிருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரிந்து விட்டது.

காலையில் அபிஷேகம் முடியவும், காஞ்சிபுரம் ஹாஸ்பிடல் வரை சென்று இருந்தவன், திரும்பி வரும் போது பேருந்து நிலையத்தில் அந்த ஆதவனோடு அவளைப் பார்த்தான்.

பஸ்ஸில் ஏறிச் சென்று கொண்டிருந்தனர். இங்கு வருவதை விட அவளுக்கு, அந்த ஆதவனுடன் செல்லுவது முக்கியமாக போய்விட்டதா?' என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வேளை அவளுக்கு, என்னுடைய தந்தை தான் அவளுடைய கிருஷ்ணன் டாக்டர் என்பது தெரியாதோ… ' ஆமாம் இன்விடேஷனில் கூட என் பெயர் கிடையாதே. நம்ம அம்முக்குட்டி பேரும், அப்பா, அம்மா, அத்தை இன்வைட் பண்ணுற மாதிரி தானே அடித்திருந்தோம். ' என்று எண்ணியவன், அமைதியாக அவனது அறைக்குச் சென்று விட்டான்.

ஈவினிங் பார்ட்டியும் கோலாகலமாக முடிந்து விட…

இரவு எல்லோரும் அமர்ந்து இருக்க, கௌரி தான் பேச்சை ஆரம்பித்தார். " ரூபன் எவ்வளவு நாள் இப்படியே இருக்கப் போற? உனக்கு பொண்ணு பார்க்க சொல்லுறேன்." என்றுக் கூற…

" நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இல்லை. எனக்கு அம்முக் குட்டி மட்டும் போதும். அதனால் இந்தப் பேச்சை இத்தோட நிறுத்துங்க." என்றான் விஸ்வரூபன்.

அவனது இறுக்கமான முகத்தை பார்த்து, ஒரு நிமிடம் அமைதியாக இருந்த கிருஷ்ணன், " என்னவோ அனுவை மறக்க முடியாத மாதிரி பேசாத… இந்த கல்யாணம் ஏன் நடந்தது? எப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்தது என்று எங்க எல்லாருக்கும் தெரியும்." என்றுக் கூற…

ஏங்க‌… அப்பா… என்ற குரல்கள் ஒலித்தது.

கௌரியோ ஒரு நிமிடம் அதிர்ந்து தன் அண்ணனைப் பார்த்தவள், கண்கலங்க அந்த இடத்தை விட்டு நகர்ந்துச் சென்றார்.

தன் கணவரை முறைத்தப்படியே, கௌரியின் பின்னால் சென்றார் ரஞ்சிதம்.

" டாட்… நீங்க எதையோ நினைச்சு இப்படி எல்லாம் பேசுறீங்க. உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு எனக்கு தெரியலை. பட் என் வாழ்க்கையில ராதிகாவிற்கு மீண்டும் இடமில்லை. அது சரி வராது." என்று தன் தந்தையைப் பார்த்து பேச…

" எனக்கு உன் வாழ்க்கை முக்கியம். அப்போ நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ…" என்றார் கிருஷ்ணன்.

" சாரி டாடி… இன்னைக்கு எதுவும் பேச வேண்டாம். நீங்களும் டயர்டா இருப்பீங்க. இன்னொரு நாள் இதைப் பற்றி பேசலாம்." என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

ஆனால், ஒரு வாரத்திலே மீண்டும் அந்தப் பேச்சை ஆரம்பித்தார். பேச்சு சுமூகமாக முடியாமல் வாக்குவாதம் வளர்ந்தது.

விஸ்வரூபன், " என் வாழ்க்கையை என் இஷ்டப்படி நடக்க விடுங்க." என்று கோபத்தில் கத்தி விட்டு வெளியே சென்று விட‌…

கிருஷ்ணனும் அதற்குக் குறையாத கோபத்தோடு கிளம்பி காஞ்சிபுரம் ஹாஸ்பிடலுக்கு சென்றார். மதிய உணவின் போது தான் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு சென்றனர்.

ஹாஸ்பிடலில் ஓய்வு அறையில், அதை நினைத்து மனதை உளப்பிக் கொண்டிருக்க, சற்று நேரத்திலேயே நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்.

சரியாக அந்த நேரத்தில், அவர் வந்ததை அறிந்து பார்ப்பதற்காக வந்த ராதிகா, அவர் கிடந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்தாள், பிறகு அந்த சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

உடனடியாக டூட்டி டாக்டருக்கு இன்டர்காமில் அழைத்து தகவல் சொன்னவள், முதலுதவியையும் ஆரம்பித்து இருந்தாள்.


விரைவாக ஐசியூவில் சேர்க்கப்பட்டார். இவ்வளவு நாள் அவரிடம் கற்றவற்றை, அவருக்கே செய்து அவரது உயிரைக் காப்பாற்றினாள் ராதிகா.

அங்கிருந்தவர்கள் விஸ்வரூபனுக்கு தகவல் சொல்லிவிட, அவனும் ஓடி வந்தான்.

வந்தவன், ஐசியுவிலிருந்து வெளியே வந்த ராதிகாவிடம் விரைந்து சென்றவன், " அப்பாவுக்கு என்ன ஆச்சு?" என்று பதறி வினவினான்.

ராதிகாவோ திக்பிரமை பிடித்தாற் போல் நின்றவள், " யாரு அப்பா? என்னாச்சு?" திக்கித் திணறி வினவினாள்.

ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்த விஸ்வரூபன், " உன்னோட கிருஷ்ணன் சார் தான் என்னோட அப்பா." என்றவன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

ராதிகாவின் மூளைக்குள்ளோ, தான் இங்கு வேலைக்கு வந்தப்போது சேலவர் டாக் கூறியது காதில் ஒலித்தது. ' அவங்க மருமகள் டெலிவரியில் இறந்துட்டாங்க….'

தலைசுற்ற… மயங்கிச் சரிந்தாள் ராதிகா.

அவளைத் தாங்கிப் பிடித்த விஸ்வரூபன், " ராதா… ராதா…" என பதறினான்.

டூட்டியில் இருந்த நர்ஸ் ஓடி வந்து, அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து,
தண்ணீர் எடுத்துத் தெளித்தாள்.

விஸ்வரூபன் பதறித் துடித்ததை, கோணல் சிரிப்புடன் ஒருவன் வீடியோ எடுத்து, "எப்பப் பார்த்தாலும் என் கிட்டயே மாட்டிங்கிறீங்களே சார்." என்று முணுமுணுத்தவாறே, வழக்கம் போல காலேஜ் வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் போட்டவன், இந்த முறை ராதிகாவின் பெற்றோருக்கும் அனுப்பி வைத்தான்.


ராதிகா மெல்ல கண் விழித்தாள்.
இப்போ அவளுக்கு எல்லா புதிருக்குமான விடை தெரிந்து விட்டது.

' உள்ளே படுத்திருக்கும் கிருஷ்ணன் சாருடைய மகன் தான் விஸ்வரூபன்.
அப்போ, என்னுடைய அனன்யா இந்த உலகத்தில் இல்லை.' என்று புரிந்துக் கொண்ட ராதிகாவிற்கு அதிர்ச்சியில் கண்ணீர் கூட வரவில்லை.


இவ்வளவு நேரம் கவலையாக அவளது அருகில் அமர்ந்து இருந்த விஸ்வரூபன், இப்போது தன் தந்தையைக் காண உள்ளே சென்று விட்டான்.

ராதிகாவிற்கும் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. அவளுக்கு தனிமைத் தேவைப்பட்டது, ஆனால் இன்னும் டாக்டர் கண் விழிக்கவில்லை. அதனால் அவளால் ஹாஸ்டலுக்கு செல்ல முடியவில்லை.

அதற்குள் அந்த கயவன் அனுப்பிய வீடியோ தீயாய் வேலை செய்தது. அதுமட்டுமல்லாமல் ஹாஸ்பிடலில் இருந்தவர்கள் தான், விஸ்வரூபனின் பதற்றத்தை தான் நேரிலே பார்த்து இருந்தனரே…

எல்லோரும் ராதிகாவைப் பார்த்து முணுமுணுக்க… அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

இந்த முறை ஆதவன், அவளுக்கு ஃபோனில் அழைத்து வாட்ஸ்அப்பில் வந்த வீடியோவைப் பற்றிக் கூற...

வேகமாக அதை ஓபன் செய்துப் பார்த்தவள், அதை ரஃப்பிஷ் எனக் கூற முடியாமல் அழுதாள்.

ஐசியுவிலிருந்து வெளியே வந்த விஸ்வரூபன், ராதிகா அழுவதைப் பார்த்து, அவளருகே சென்றவன், " விதி… அவப் போயிட்டா… இப்போ எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்குற?' என்று வினவினான்.

அவளோ, எதுவும் கூறாமல் அந்த வீடியோவைக் காண்பித்தாள்.

அதிலோ, " படிக்க வந்த இடத்தில் அப்பாவையும், மகனையும் கரெக்ட் பண்ணிய மாணவி." என்று இருக்க.

முகம் இறுக நின்ற விஸ்வரூன், அங்கு நின்றுக் கொண்டிருந்த ட்ரைனிங் டாக்டரை வரச் சொன்னான்.

அவரோ பயந்துக் கொண்டே செல்ல… "இப்போ நான் சொல்றதை வீடியோ எடு…" என்றவன் அவனது ஃபோனை அன்லாக் செய்துக் கொடுத்தான்.

அமர்ந்து இருந்த ராதிகாவை எழுப்பி லேசாக அணைத்தபடி, " ஹாய்… எவ்ரிபடி. ஷீ இஸ் மை பியான்ஸி. எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்த முடிஞ்சிருச்சு. கூடிய சீக்கிரம் கல்யாணம்." என்றுக் கூறியவன், தங்கள் இருவரது கைகளையும் காட்டினான் ஒன்று போல் உள்ள கப்புள் ரிங் ஜொலித்தது.

வீடியோ எடுத்து முடித்தவுடன், தனது கையை நீட்டி ஃபோனை கேட்க…

அந்த டாக்டரோ, விஸ்வரூபனின் கோபத்தை பார்த்து, வியர்வை நெற்றியில் துளிர்க்க, படபடப்புடனே ஃபோனைக் கொடுத்தார்.

தனது ஃபோனை வாங்கியவன், இப்போது எடுத்திருந்த வீடியோவை,, காலேஜ்ஜோட வாட்ஸ் அப் க்ரூப்லையும், எப்ஃபியில் உள்ள ஹாஸ்பிடல் பேஜ்லையும் ஷேர் செய்தான்.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 15

அன்று…

" அடிப்பாவி… அப்ப நாலு வருஷமா நீதான் எனக்கு சீக்ரெட்டா ரெட் ரோஸ் கொடுத்ததா… " என்று விஸ்வரூபன் வினவ…

முகம் சிவக்க தலைக் குனிந்து இருந்தவள், மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து சிரித்தாள்.

" ப்ச்‌… நான் தான் உன் கிட்ட ஃபர்ஸ்ட் லவ் சொன்னேன் என்று நினைச்சு சந்தோஷப்பட்டேன். பட் நீ எனக்கு முன்னாடியே ரெட் ரோஸ் கொடுத்து, சொல்லாமல் சொல்லிட்டியா காதலை. நான் தான் புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறேன்‌. " என்று அவள் கை விரல்களை வருடியபடியே கூறியவன், அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தான்.

' வழக்கம்போல பிலிப்பைன்ஸில் இருந்து அனன்யா கால் செய்து குடும்பத்திலுள்ள எல்லோரிடம் பேசி முடித்து விட்டு, இறுதியாக விஸ்வரூபனுக்கு அழைத்திருந்தாள்.

" ஹாய் மாம்ஸ்… எப்படி இருக்கீங்க?"

" ம்… இது வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். இப்ப என்ன குண்டைத் தூக்கிப் போட போற அந்துருண்டை?"

" மாமா… " என்று சிணுங்க…

" சரி… சரி… அழாத… இப்போ எதுக்கு ஃபோன் பண்ண? காரணமில்லாமல் எனக்கு ஃபோன் பண்ண மாட்டியே?"

" நான் ஒன்னும் அழல. " என்று முதலில் கூறி விட்டு தான், தான் ஃபோன் செய்ததற்கான காரணத்தையேக் கூறினாள் அனன்யா.

" அது வந்து மாமா… எங்க காலேஜ்ல ஐ எம் டி டே கொண்டாடுறாங்க. " என…

" அப்படின்னா என்ன அனு?" என்று இடையிட்டான் விஸ்வரூபன்.

" இந்தியன் மெடிக்கல் ஸ்டூடெண்டுக்கான ஒரு பங்க்ஷன். காலேஜ்ல ஒவ்வொரு ஸ்டுடென்ட்ஸுக்கும் தவுசண்ட் பெசோஸ் ( பிலிப்பைன்ஸ் கரன்சி) அவங்களே கொடுத்துருவாங்க. அத வச்சு அங்க நாம ஸ்டால் போடலாம். நான் ரோஸ் ஸ்டால் போடுறேன்."

" வேற என்ன ஸ்டால் போடலாம் அனு?"

" புட் ஸ்டால், ஜுஸ் ஸ்டால், பானிப்பூரி ஸ்டால், கேம்ஸ் ஸ்டால்னு நிறைய இருக்கு மாமா ."

" வெரிகுட்… ஆனால் நீ புட் ஸ்டால் தான் போடுவேன் நினைச்சேன்." என்று கிண்டலாக சிரிக்க…

" அது சரி தான். நானும் அப்படித்தான் நினைத்தேன். பட் சரி வராதுன்னு விட்டுட்டேன்."

" வொய் அந்துருண்டை?"

" அதுவா மாமா… புட் ஸ்டால் போட்டால், நான் அதை சாப்பிட்டுகிட்டே இருப்பேன். அப்புறம் ஃப்ராஃபிட் குறையும். அப்புறம் அது வேலையும் அதிகம். இதுவே ரோஸ் ஸ்டால் போட்டால் ஜாலியா இருக்கலாம்.

ஒரு ரோஸ் தெர்டி பெசோஸ். மோஸ்ட்லி நிறைய ஸ்டூடண்ட்ஸ், அவங்க சீக்ரெட் க்ரெஷ்ஷுக்கு கொடுக்கிறதுக்கு ரோஸ் வாங்குவாங்க. அவங்க யார் கிட்ட கொடுக்க சொல்றாங்களோ, அவங்கக்கிட்ட சீக்ரெட்டா நாங்க போய் கொடுத்துருவோம். கான்ஃபிடன்ஸியாலிட்டியை மெயின்டைன் பண்ணுவோம். இது ஜாலியாக இருக்கும்.

அதுவுமில்லாமல் என்னோட ராது செல்லம், பானிப்பூரி ஸ்டால் போடப்போறா, அவளுக்கு அதுல எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு.

என்னோட ஸ்டால்ல சீக்கிரம் வித்துடுவேன். அப்புறம் அதில் வேலை இருக்காது. தென் ஜாலியா என் ஃப்ரண்ட்ஸோட உட்கார்ந்து, அரட்டை அடிச்சிக்கிட்டே, வேணுன்றதை சாப்பிட்டுக்குவேன். எப்படி என்னுடைய இராஜதந்திரம்?" என்றுக் கூறி அனு புன்னகைக்க…

" அதுக்கு பேரு ராஜத்தந்திரமில்லை.
சோம்பேறித்தனம். சரி அதெல்லாம் எனக்கு எதற்கு? உன் ஃப்ரெண்ட் தான் பாவம். உனக்கு செஞ்சுக்கொடுத்தே டயர்டாயிடுவா."

" மாமா… என் ஃப்ரெண்டைப் பத்தி எதுவும் பேசாதீங்க. நீங்க மண்டே இங்கே வருவீங்களா? இல்லையா?"

" ஹேய் அந்துருண்டை நான் எதுக்கு அங்கே வரணும்?"

" மாமா… நான் முதன் முதலா ஸ்டால் போட்டு மணி ஏர்ன் பண்ண போறேன். நீங்க வர மாட்டீங்களா?" என்று பாவமாக அனன்யா வினவ?

" ஏய் லூசு… இங்கே இருக்குற எல்லா ஹாஸ்பிடல்லையும் உனக்கும் ஷேர்ஸ் இருக்கு. உன்னோட அக்கௌண்ட்ல மணி ஆட்டோமேடிக்கா வரும். இதுக்கு போய் இவ்வளவு அலப்பறை பண்ணுற…"

" அதெல்லாம் எனக்கு தெரியாது மாமா. நீங்க வந்து தான் ஆகணும். என்ன செலவாகும்னு பார்க்கிறீங்களா?" என்று அனு கோபப்பட…

" சரி சரி கோபப்படாதே… நான் வரேன்." என்றவன் சொன்னபடியே வந்தான்.

" ஹாய் மாம்ஸ்… வந்தது தான் வந்தீங்க. ஒரு ரோஸ் வாங்கிக்கோங்க." என்று அனு சொல்ல…

" அந்துருண்டை… உதை வாங்கப் போற…" என்றவனின் பார்வையோ, சுற்றிலும் பாய்ந்தது.

சற்றுத் தள்ளி வேறோரு ஸ்டாலில் பிஸியாக இருந்த ராதிகாவை கண்டுக்கொண்டது.

அவளும், அவனை ஒரு பார்வை பார்த்தவள், பிறகு திரும்பிக் கொண்டாள்.

அவளது இன்னொரு தோழியிடம் ஸ்டாலை கொஞ்ச நேரம் பார்த்துக்க சொல்லி விட்டு அங்கிருந்துச் சென்றாள்.

தன் மாமா வந்ததும், ராதிகாவைப் பார்த்த அனன்யா, அவள் அங்கே இல்லை. எங்கே போயிருப்பாள் என்ற யோசனையுடன் சென்றவள், சற்றுப் தள்ளியிருந்த ரோஸ் ஸ்டாலிலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்தாள்.


அவளுக்கு முன்பு நின்ற அனன்யா, அவளைப் பார்த்து முறைத்தாள்.

ராதிகாவோ சற்று அதிர்ந்து, " அது …. அனு…" என்று இழுக்க…

" ரகசியமா இருக்கணும்னு என்னோட ஸ்டாலை விட்டுட்டு வேற இடத்துக்கு போயிருக்க ரைட்…" என்று கோவமாகக் கூற…

" அப்படியெல்லாம் இல்லை அனு…"

" சரி… அப்போ யாருக்கு கொடுக்க சொன்ன…" என்று அனு கேட்க…

" ம்கூம்…" என்று முகம் சிவக்க தலையசைத்தாள் ராதிகா.

" நீ சொல்லலைன்னா என்ன? எனக்கு தெரியாதா? எங்க மாமாவுக்கு தானே கொடுக்க சொன்ன?" என்றாள் அனன்யா.

அவள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ராதிகா உறைந்து நிற்க…

" அடிப்பாவி… அப்போ உண்மையா எங்க மாமாவுக்கு தான் கொடுக்க சொன்னீயா‌…. ஐயோ! எனக்கு போட்டியா வர்றீயா" என்று அனு கிண்டல் செய்ய…

கண்கள் கலங்க ராதிகா, "அனு அப்படி எல்லாம் சொல்லாத… நீ உங்க மாமாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா, நான் உங்களுக்கு நடுவே வர மாட்டேன்." என்றாள்.

" அட லூசு… சும்மா கேலி தான் பண்ணேன். நீ எங்க மாமாவை கல்யாணம் பண்ணிட்டு வந்தா, எனக்கு தான் ரொம்ப சந்தோஷம். நாம என்னைக்கும் பிரிய வேண்டாம். சரிடி இனிமே ரோஸ் என்கிட்ட தான் வாங்கணும்." என்றுக் கூறி சிரிக்க…

ராதிகாவும் சிரித்தபடியே, " அனு… உங்க மாமாக்கிட்ட சொல்லக்கூடாது." என்றாள்.

" ஓகே ராது செல்லம்." என்றாள் அனன்யா.

ஆனால் விஸ்வரூபனோ, அடுத்த வருடத்திலே யாரிடமிருந்து வருகிறது என்று தெரிந்துக் கொண்டான்.

அனன்யா தான் ராதிகாவுக்கான ரோஸை கொடுக்க…

" ஹேய் அந்துருண்டை… யாருடா ரோஸ் கொடுக்க சொன்னா?" என்று விஸ்வரூபன் கேட்டான்.

" சாரி மாம்ஸ். திஸ் இஸ் சீக்ரெட்." என்று சொல்ல மறுத்தாலும், அவனுக்கு அது ராதிகாவாகத்தான் இருக்க கூடும் என்று மனதிற்குள் ஒரு யுகம் இருந்தாலும், தெரிந்த மாதிரி காண்பித்துக் கொள்ளாமல் இருந்தான்.'

இன்று அதைத்தான் கிண்டல் செய்துக் கொண்டிருந்தான்.

விஸ்வரூபன், ராதிகாவின் கைப்பிடித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அனன்யா, ஒருவழியாக ராதிகா தன் காதலை கூறி விட்டாள் போல என்று எண்ணி சிரிப்புடனே அவர்களுக்கு அருகே வந்து அமர்ந்தாள்.

" சாரி ராது… இங்கே ஸ்வீட் எதுவும் கிடைக்கலை. இந்தா இந்த சாஸ் தான் இப்போதைக்கு ஸ்வீட்." என்ற அனு, சாஸில் நனைத்த பிரஞ்ச் ஃபிரஸை அவளுக்கு ஊட்டி விட்டு, தன்னுடைய மாமனுக்கு ஊட்டி விட்டாள்.

" ஆனாலும் உன் ஃப்ரெண்ட் இப்படி பண்ணி இருக்க கூடாது அனு." என்று விஸ்வரூபன் கூற‌…

அதிர்ந்து விழித்தபடியே, " என்ன மாமா?" என்றாள் அனன்யா.

" பின்னே என்ன நாலு வருஷமா லவ் பண்ணுறா, இவ்வளவு நாள் சொல்லாமல், இப்போ இந்தியாவுக்கு திரும்பும் போது சொல்லுறா! இங்கே இருக்கும் போது சொல்லியிருந்தா, அடிக்கடி வந்துப் பார்த்திருப்பேன். ஜாலியா வெளியில் போய்ட்டு வந்திருக்கலாம். இப்பப் பாரு ஊருக்கு போகும்போது வந்து சொல்றா. அங்க எப்படி அவளை என்னால மீட் பண்ண முடியும்." என்று குறை கூறுவது போல் கூறியவன், ராதிகாவைப் பார்த்து கண்ணடித்தான்‌

ராதாகாவோ, அவனை முறைக்க முயன்று, அது முடியாமல் முகம் சிவக்க தலை குனிந்து கொண்டாள்.

இந்த விளையாட்டையெல்லாம் கவனிக்காத அனன்யா தன் தோழிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தாள்.

" ராது எது செய்தாலும் ஏதாவது சொல்லிட்டே இருங்க மாமா. காதலைக்கூட அவ தான் முதல்ல சொன்னா… நீங்க ஒன்னும் இல்லை. எப்படியும் இந்தியா போன உடனே எக்ஸாம் எழுதுவதற்காக சென்னைக்கு வருவா… அப்ப பார்த்து பேசி உங்க காதலை டெவலப் பண்ணிக்கோங்க. இப்போ எனக்கு இன்னொரு பிளேட் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் வேணும். உங்களுக்குக் கொடுத்ததால எனக்கு பத்தலை. நான் வாங்கிட்டு வரேன்." என்றவள் சென்று இருக்க.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.

" ராதா டியர். நீ தான் ஃபர்ஸ்ட் காதலை சொன்னீயா? என்ன? நான் தானே முதல்ல சொன்னேன். அது அனுவுக்கு தெரியவில்லையே. நீ நாலு வருஷமா ரோஸ் மட்டும் கொடுத்திருக்க. காதலை வாய் வார்த்தையா சொல்லவே இல்லையே." என்று கண் சிமிட்டிக் கூறினான்.

" நான் ஏற்கனவே வாய் வார்த்தையா என் காதலை சொல்லி இருக்கேனே…" என்று மர்ம புன்னகை பூத்தாள் விஸ்வரூபனின் ராதா…

இன்று…

விஸ்வரூபன், இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்தது, என்று வீடியோ எடுத்து போட்டவன்,

அதற்குப் பிறகே வீட்டிலிருப்பவர்களுக்கு தகவல் சொன்னான்.

அவன் செய்தவற்றையெல்லாம் அருகிலிருந்துப் பார்த்தவள், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், ஹாஸ்டலுக்கு கிளம்பிச் சென்றாள்.

தன்னிடம் சொல்லாமலே செல்லும் ராதிகாவை பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன்.

அதற்குள் வீட்டிலிருந்தும் வந்துவிட்டார்கள்.

சற்றுநேரத்தில் கிருஷ்ணன் கண் விழித்து விட…

ரஞ்சிதம், கௌரி, விஸ்வரூபன் மூவரும் உள்ளே சென்றனர்.

கலங்கிய கண்களுடன் வந்த பெண்கள் இருவரையும் பார்த்து, லேசாக புன்னகைத்து தனக்கு ஒன்றும் இல்லை என்றார். விஸ்வரூபனை நிமிர்ந்துக் கூடப் பார்க்கவில்லை.

மெல்ல தந்தையின் கைகளைப் பற்றிய விஸ்வரூபன், " பா… ரிலாக்ஸா இருங்க. உங்க இஷ்டப்படியே கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று சம்மதம் சொல்ல…

" என்னப்பா… அப்பா செத்துடுவேனு பயந்துட்டீயா? இல்லை நம்ம ஹாஸ்பிடலில்ல ஏதும் போதி மரம் இருக்கா…" என்று கிண்டல் பண்ண…

" அப்பா…" என்று தயங்கிய விஸ்வரூபன், ' எப்படி இருந்தாலும் அவருக்கும் எல்லாம் தெரிய வரும்.' என்று எண்ணியவன், சற்று முன் நடந்ததை அவரிடம் மெல்லிய குரலில் கூறினான்.

அதற்குப் பிறகு என்ன... அது ஹாஸ்பிட்டல் என்பதையும் மறந்து கிருஷ்ணன் வேகமாக திருமணத்தை நடத்த திட்டம் தீட்டினார்.

" டாட்… முதல்ல வீட்டுக்கு வாங்க… அப்புறம் ராதிகாவின் பெற்றோரிடம் பேசணும். அவங்க சம்மதம் முக்கியம். நெக்ஸ்ட் கல்யாணத்தைப் பத்தி ப்ளான் பண்ணுங்க. பட் எதுவா இருந்தாலும் சிம்பிளாக கல்யாணத்தை செய்யுங்க." என்றான்.

" சரிப்பா… அப்போ டிஸ்சார்ஜ் ரெடி பண்ண சொல்லு. வீட்டுக்கு போவோம்."

" டாட்… கிண்டல் பண்றீங்களா? இன்னைக்கு ஃபுல்லா அப்சர்வேஷன்ல இருக்கணும். நீங்களே ஒரு டாக்டர். உங்களுக்கத் தெரியாததா? இரண்டு நாளாவது ஃபுல் ரெஸ்ட்ல இருக்கணும்." என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, சீஃப் டாக்டர் வந்தார்.

" ‌ஹலோ… டாக்டர்… ஹவ் ஆர் யூ ஃபீலிங் நவ்." என்றார் சீஃப் டாக்டர்.

" நவ் ஐயம் ஆல்ரைட்." என்று கம்பீரமாகக் கூறினார்.

" இன்னைக்கு ஈவினிங் எப்படி இருந்தீங்க தெரியுமா? தேங்க் காட். அந்த நேரத்துல கரெக்டா ராதிகா வந்தாங்க. உங்க ட்ரைனிங் ஆச்சே. சூப்பரா ஹாண்டில் பண்ணாங்க. ஃபர்ஸ்ட் எய்ட் செஞ்சு, ஆஞ்சியோ ப்ளாஸ்ட்க்கு ரெடி பண்ணி… செம ப்ரில்லியண்ட்.

அடைப்பும் இரண்டு எடத்துல தான் இருந்தது. இதுலே சரியாயிடும். கொஞ்சம் ஃபுட் டயட் ஃபாலோ பண்ணனும் டாக்டர். டூடேஸ் இருந்து ஹெல்த் கண்டீஷனை இம்ப்ரூவ் பண்ணிட்டு போங்க டாக்டர்." என

" ஓகே." என்ற கிருஷ்ணன், ராதாவை நினைத்து பெருமிதம் கொண்டார்.


சீஃப் டாக்டர் சொன்னதை கண்டுக்கொள்ளாமல், கௌரியிடம் திரும்பிய விஸ்வரூபன், " அத்தை… நீங்க அம்மாவோட வீட்டுக்கு கிளம்புங்க. அப்பாவை நான் பாத்துக்குறேன்." என்று அவர்கள் இருவரையும் படாதபாடு பட்டு அனுப்பி வைத்தான்.

அவர்களை வீட்டுக்கு அனுப்பியதே நல்லதாக இருந்தது. ஏனென்றால் விடியற்காலையில் புயல் போல் ராதிகாவின் வீட்டிலிருந்து அவளது பெற்றோர் வந்திருந்தனர்.

அவர்கள் காண வந்தது விஸ்வரூபனைத்தான்…

வாட்ஸ்அப்பில் வந்ததைப் பார்த்த ராதிகாவின் பெற்றோர், கலங்கித் தவித்தனர்.

ச நிச்சயத்தார்த்தம் முடிந்து விட்டது. சீக்கிரமே கல்யாணம் என்று விஸ்வரூபன் கூறிய வீடியோவை அனுப்பியதோடு மட்டுமல்லாமல் கூடவே,‌ " முதல் மனைவி இறந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குள் அடுத்த திருமணத்திற்கு அடி போட்டாயிற்று. கேட்டால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள என்று விடுவார்கள். பணம் இருந்தால் வந்து விழ பெண்களா இல்லை இந்த நாட்டில்… " என்று கேவலமாக எழுதியும் அனுப்பி இருந்தான்

அதைப் பார்த்ததும், இரவே தஞ்சாவூரில் இருந்து கிளம்பியவர்கள், ராதிகாவை கூட சந்திக்காமல் நேராக அங்கு வந்து விட்டனர்…

துணைக்கு விக்ரம் கூட வந்திருந்தான். வந்தவன், சுந்தரிக்கு தெரியாமல், ராதிகாவுக்கு பலமுறை முயற்சி செய்து, இப்போ தான் அவளை காண்டாக்ட் செய்ய முடிந்தது.

அதற்குள் சுந்தரி பேசாக் கூடாததை பேசி விட்டாள்.

ஹாஸ்பிடலுக்கு வந்ததும் ரிசப்ஷனில் கிருஷ்ணனை பற்றி விசாரித்துக் கொண்டிருக்க…

அப்போது தான் கேண்டீனுக்கு சென்று காஃபி அருந்தலாம் என்று நினைத்த விஸ்வரூபன், கிருஷ்ணனை பார்த்துக்கொள்ள நர்ஸை இருக்க சொல்லி விட்டு, வெளியே வந்து இருந்தான்.

தன் தந்தையைப் பற்றி விசாரிப்பதை, கவனித்து அவர்கள் அருகே சென்றான்.
' யார்? இவர்கள்? ' என்று மனதிற்குள் நினைத்தவன், அவர்களைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான்.

" அப்பாவை பார்க்க வந்தீங்களா? வாங்க…" என்று கிருஷ்ணன் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்றவர்களை அறியாத பார்வைப் பார்த்தார் கிருஷ்ணன்.

'அப்பாவுக்கும் இவங்க யாரென்று தெரியாதா ' என்று யோசனையுடன் அவர்களை ஆராய்ந்தான் விஸ்வரூபன்.

" நான் ராதிகாவோட அம்மா." என்றாள் சுந்தரி.

"வாங்க சம்பந்தி அம்மா… நானே உங்களைப் பார்க்க வரலாம் என்று இருந்தேன்." என்றுக் கூறி கிருஷ்ணன் புன்னகைக்க.

" மன்னிச்சுக்கங்க… இதுக்கு நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். நீங்க உங்க ஸ்டேட்டஸுக்கு தகுந்த மாதிரி பாருங்க. எங்களை விட்டுருங்க." என்று சுந்தரி கூற…

கிருஷ்ணன் அதிர்ந்து தன் மகனைப் பார்க்க… அவனோ தனக்கும் அங்கு நடக்கும் பேச்சு வார்த்தைக்கும் யாதொரும் சம்பந்தமில்லை என்பது போல் இருந்தான்.

" அது…" என்று கிருஷ்ணன் ஏதோ கூற வருவதற்குள், புயல் போல் ராதிகா நுழைந்தாள். ஒரே நாளில் ஆளே மாறியிருந்தாள்.

இரவு முழுவதும் அனுவை நினைத்து அழுதுக் கரைந்தவள், தூங்கவில்லை.

காலையிலே விக்ரம் அழைத்து தாங்கள் இங்கே வந்திருக்கும் விவரத்தைக் கூற… பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

" மா… என்ன மா இதெல்லாம்… " என்று ராதிகா தடுக்க…

" நீ சும்மா இரு ராது… என்ன நினைச்சுட்டு இருக்காங்க? அவங்க ஹாஸ்பிடல்ல வேலைப் பார்த்தா என்ன வேண்டுமானாலும் பேசுவாங்களா? உன்னை இரண்டாம் தாரமா கட்டி குடுக்கணும் எந்த அவசியமில்லை. அவங்க புள்ளைக்கு ஆயா வேலைப் பார்க்க நீ வேணுமா?" என்று சுந்தரி பொரிய…

" ஏம்மா இப்படி பேசுறீங்க. நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சினு அவங்களே சொல்லுவாங்களே. இனி கல்யாணம் நடத்தி வைக்கலைனா நமக்குத் தான் சங்கடம்." என்று கிருஷ்ணன் கூற…

அவருக்கு எதுவும் பதிலளிக்காமல் தன் மகளைத் தான் பார்த்தார் சுந்தரி. சண்முகமோ‍, மகள் எது செய்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று திடமாக நம்பினார்.

" ராது… நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா?" என்று சுந்தரி கேட்டார். அவர் இன்னமுமே தன் மகளை நம்பினார். 'பேசியது எல்லாம் விஸ்வரூபன் தானே. ஒரு வேளை தன் மகளை மிரட்டிருப்பானோ.' என்று எண்ணியே இரவோடு இரவாக கிளம்பி வந்திருந்தவர், அந்தக் கேள்வியைக் கேட்டார்.

அந்த கேள்வியில் தன் மகள் தன் அனுமதி இல்லாமல் செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை வீற்றிருந்தது.

அவள் என்ன பதில் கூறப் போகிறாள் என்று தெரிந்துக் கொள்ள, அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன். உள்ளுக்குள்ளோ, ' ராதிகாவின் அழுதழுது சிவந்து வீங்கியிருந்த முகத்தைப் பார்த்து வருந்தினான்.'

தலை குனிந்து இருந்த ராதிகா "உண்மை தான் எங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் நடந்து விட்டது." என்றுக் கூறினாள்.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 16

அன்று...

"நான் தான் முதன்முதலாக உங்களிடம் என் காதலைக் கூறியிருக்கிறேன்." என்ற ராதிகாவைப் பார்த்த விஸ்வரூபன், " எப்ப சொன்ன ராதா? " என்று யோசனையுடன் வினவ.

" நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடிங்க…" என்ற ராதிகா, அங்கிருந்து எழுந்து செல்ல முயல...

ஆனால் அவளால் முடியவில்லை, ஏனென்றால் அவளது கைகள் அவனது கையில் அல்லவா சிக்கிக் கொண்டது.

" பதில் சொன்னால் தான் போகலாம். அதுவரைக்கும் இப்படியே இருக்கலாம். எனக்கு நோ அப்ஜெக்ஷன்." என்றவன், அவளைப் பார்த்து கண் சிமிட்ட…

முகம் செவ்வானமாக சிவக்க, " முதன் முதலாக காலேஜ் பங்ஷன்ல நான் பாடினப் பாட்டு ஞாபகம் இருக்கா?" என்று அவனை நிமிர்ந்துப் பார்த்து வினவ.

" ப்ச்…" என்று உதட்டைப் பிதுக்கி கூற...

விஸ்வரூபனைப் பார்த்து முறைத்தாள் ராதிகா.

இப்போது விஸ்வரூபனின் முகத்தில், புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

" உங்களை நினைத்து தான் அந்த பாட்டு பாடினேன் தெரியுமா? " என்று ராதிகா வினவ…

" அது தான் எனக்கு ஞாபகம் இல்லைனு சொல்லிட்டேனே மை டியர் ராதா."

" சரி விஷ்வா… உங்க பேருக்கு அர்த்தம் தெரியுமா?"

" அதெல்லாம் எனக்கு தெரியாது ராதா மா… எனக்கு தெரிந்ததெல்லாம் அது எங்க தாத்தா பேரு… அப்புறம் யாரும் என்னை விஷ்வானு கூப்பிட்டதில்லை. நான் எல்லோருக்கும் ரூபன்." என்றுக் கூறி புன்னகைக்க…

" அப்போ நான் அப்படிக் கூப்பிடக் கூடாதா?" என குரல் குழைய ராதிகா வினவ‌…

" நீ கூப்பிடுடணும்னு தானே, இவ்வளவு நாள் யாரையும் அப்படி அழைக்க விடாமல், காத்திருந்தேன். " என்றவன் அவளை ஆழ்ந்துப் பார்க்க…

முகம் சிவந்தவள், பேச்சு எங்கேங்கோ திசை மாறுவதை உணர்ந்து, " வேணும்னே பேச்சை டைவர்ட் பண்ணுறீங்க விஷ்வா…" என சிணுங்கினாள்.

இதுக்கு மேல் தனியாக இருந்தால் சரி வராது என்பதை உணர்ந்த விஸ்வரூபன், " சரி சொல்லு ராதா… என் பெயருக்கு அர்த்தம் என்ன?" என்று நேரிடையாக விஷயத்திற்கு வந்தான்.

" விஸ்வரூபன் அந்த மாயக்கண்ணனோட இன்னொரு பெயர்." என்றாள் ராதிகா.

" ஓஹோ… எனக்கு இவ்வளவு நாளாக தெரியாதே… அப்ப இந்த கண்ணனோட ராதிகா நீ தானா… இல்லை இல்லை… இந்த ராதிகாவோட கண்ணன் நான் தானா… " என்றவன் அந்த மாயக்கண்ணனைப் போல் குறும்பாக சிரித்தான்.

அவன் கிண்டல் செய்வதுக் கூட தெரியாமல் அப்பாவியாக இருந்தாள் ராதிகா.

அவளது தோழி அனன்யா, வழக்கம் போல உதவிக்கு வந்திருந்தாள். சரியாக அந்த நேரம் விஸ்வரூபனுக்கு அழைத்திருந்தாள்.

" யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே…" என்று ராதிகாவின் குரலில் பாடல் ஒலித்தது.

இவ்வளவு நேரமாக என்ன பாட்டு பாடுன எனக்குத் தெரியாது என்றுக் கூறிக் கொண்டிருந்த விஸ்வரூபன் வெண்ணைத் திருடி மாட்டிக் கொண்ட கண்ணனென விழித்தான்.

தன்னை முட்டாளாக்கிய விஸ்வரூபனைப் பார்த்து முறைத்துக் கொண்டே, எழுந்தாள் ராதிகா.

" ஹேய் ராதா… என்ன இப்படி டக்குன்னு கோபப்பட்டால், என்பாடு தான் திண்டாட்டம். என்ன சொல்ல வர்றேன்னு முதல்ல கேளு." என்று மீண்டும் அவளைக் கைப்பிடித்து அமர வைத்தான்.

"எனக்கு உன்னோட மனது புரிந்து தான் இருந்தது ராதா… உன் ஸ்டடீஸை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தான் இவ்வளவு நாள் நான் அமைதியா இருந்தேன்." என்றவன், தன் முதல் முத்திரையை அவளது கையில் பதித்தான்.

உடல் முழுவதும் மின்சாரம் பாய வேகமாக கையை உருவிக் கொண்டாள் ராதிகா.

" என்ன ராதா…" விஸ்வரூபன் கண்ணை சிமிட்ட…

" ஹாங்… அனு வேற ஃபோன் பண்ணியிருந்தா, நீங்க அட்டெண்ட் பண்ணவே இல்லை. வாங்க போகலாம்." என்று படபடப்புடன் கூற…

அவளது சிவந்த கன்னத்தை வருடியவாறே, " சரி வா போகலாம்." என்றவன் வாய்விட்டு நகைத்தான்.


இருவரின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்த அனுவும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

ஒருவழியாக இரவு ஃப்ளைட்டை பிடித்தனர். இந்தியா செல்லும் வரையான பயணம், ஸ்வீட் நத்திங்ஸாக இருவருக்கும் இருந்தது. மலேஷியாவில் காத்திருந்த பத்துமணி நேரமும், நிமிடங்களாக பறந்தது.

அடுத்த நாள் எட்டு மணிக்கு இந்தியாவிற்கு சென்று கால் பதித்தனர். ராதிகாவின் மனமோ சிறகடித்ததது.

கிட்டத்தட்ட ஐந்தரை வருடங்களுக்குப் பிறகு தாய் மண்ணை மிதிக்கிறாள்.

ஏர்போர்டிற்கு வரேன் என்று சொன்ன விக்ரமிடம், நானே வந்துடுறேன்ணா என்று சொல்லியிருந்தாள் ராதிகா.

ராதிகாவின் முகத்தில் வந்து போகும் வர்ணஜாலத்தை விஸ்வரூபனும், அனன்யாவும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

அவள் தன் குடும்பத்தைப் பார்க்கப் போகிற ஆர்வத்தில் இருக்க, அதை உணர்ந்த விஸ்வரூபன் அமைதியாக இருந்தான்.

அனுவோ, " ராது… எங்க வீட்டுக்கு வாயேன். எங்கம்மா, அத்தை, பாட்டி எல்லோரையும் பார்த்துட்டு நாளைக்கு தஞ்சாவூர் போகலாம்ல." என்று கெஞ்ச…

"அது நைட் பஸ் ஏறுன காலைல தஞ்சாவூர் போயிடுவேன். நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்… இங்கே நாளைக்கு இருந்தாலும் ஜெட்லாக்கா தான் இருக்கும். அதான் கிளம்புறேன் டி. எப்.எம்.ஜி எக்ஸாம் எழுத வருவேன்ல அப்ப வரேன் ப்ளீஸ்டா." என்றாள் ராதிகா.

" ப்ச் போடி… எங்க பாட்டியை கரெக்ட் பண்ணிட்டா, உங்க ரூட் கிளியர் ஆகும்னு பார்த்தால், ஏதாவது சொல்லிட்டே இருக்க… எக்ஸாம் எழுதும் போதாவது எங்க வீட்டுக்கு வருவியா? இல்லை… அப்போதும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லுவியா."

" அதெல்லாம் கரெக்டா வந்துடுவேன் அனு செல்லம்." என்று அவளது தாடையைப் பிடித்து சமாதானம் செய்த ராதிகாவிற்கு அப்போது தெரியவில்லை. தான் சொன்ன வாக்கை காப்பாற்ற போவது இல்லை என்றும், அவ்வாறு போயிருந்தால் கூட இவர்களுடைய வாழ்க்கை மாறாமல் இருந்து இருக்கும் என்றும் அப்போது தெரியவில்லை. விதி அவளை செல்ல விடவில்லை.

இவர்கள் இந்தியா வந்தவுடன் எப்.எம்.ஜி.எக்ஸாம் எழுத வேண்டும். அது இந்திய மெடிக்கல் கவுன்சிலில் வைக்கும் தேர்வு. எந்த நாட்டில் மெடிக்கல் படித்து வந்தாலும், இங்கு வந்தவுடன் அந்த தேர்வு எழுதி விட்டால் இந்தியாவில் டாக்டராக ப்ராக்டிஸ் செய்வதோ, அல்லது மேற்படிப்பு படிப்பதோ செய்யலாம்.

வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும். தேர்வுகள் எழுத தமிழ் நாட்டில் சென்னை, வேலூரில் சென்டர் இருக்கிறது. இவர்கள் ஏற்கனவே சென்னையில் வந்து எழுவதுதாக ப்ளான் செய்திருந்தனர்.

ஜூன் மாதம் தான் எக்ஸாம். அதுவரை இவர்களது காதல் ஃபோனிலேயே வளர்ந்தது. விஸ்வரூபன் அவனது அன்பால் ராதிகாவை திகைக்க வைத்துக் கொண்டிருந்தான். அவள் எதிர்பார்த்தது இதைத்தான். தன் அன்பாலே சுழற்றியடிக்கணும் என்று எதிர்பார்க்க… அதே போல் வாழ்க்கை அமைய போவதை நினைத்தவள், துள்ளலாக தஞ்சாவூரில் சுற்றினாள்.

அது மட்டும் இல்லாமல், சுந்தரியின் மனமும் மாறியிருந்தது. பிறகென்ன வால் இல்லாத ஒன்று மட்டும்தான் குறை. மத்தபடி எல்லா சேட்டையும் செய்துக் கொண்டு சுற்றினாள் ராதிகா.

அதோ, இதோ என்று இவர்கள் தேர்வு எழுதும் நாளும் வந்தது. அன்று தான் நீண்ட நாட்களுக்கு பிறகு விஸ்வரூபனை சந்தித்தாள்.

காலையில் வந்தவள், தேர்வு எழுதி விட்டு அனுவுடன் வெளியே வர… வழக்கம்போல் அனு அவர்கள் வீட்டிற்கு கூப்பிட்டாள்.

' போகலாமா…' என்று ராதிகா யோசிப்பதற்குள் விஸ்வரூபன் இடையிட்டான்.

" ஏய் நந்தி… நீ வீட்டுக்கு கிளம்பு. எனக்கே அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ண ஒரு சான்ஸ் கிடைக்காதானு காத்திட்டுருக்கேன். நீ என்னடான்னா வீட்டுக்கு கூப்பிட்டு இருக்க… இன்னைக்கு நைட் வரைக்கும் அவ என்னோட தான் இருப்பா நீ கிளம்பு." என்றுக் கூற…

" மாமா… நான் என்ன நந்தியா இப்படி சொல்றீங்க." என அனன்யா பாவமாக வினவ.

" சும்மா சொன்னேன் டா. நீ இப்போ ட்ரைவரோட கிளம்பு. ப்ளீஸ் அனு…" என்று விஸ்வரூபன் கெஞ்ச…

"சரி.." என தலையசைத்து சென்றவளின், மனசு சற்று காயம் தான் பட்டது.

' தனக்கும், ராதிகாவிற்கும் நடுவில் மாமா வருகிறாரோ…' என்று நினைத்த அனன்யா, அவர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து விலகிச் சென்றாள்.

இதுதான் ஆரம்பம். இதுவே அவளது வாழ்க்கையை வேறு திசைக்கு இழுத்துச் சென்று, சூறாவளியில் சிக்க வைத்தது.


இன்று…

தங்கள் மகளின் வாயில் இருந்து உதிர்த்த வார்த்தைகளை கேட்ட சுந்தரி அதிர்ந்து இருந்தாள். சண்முகம் தான் அவளை ஆதரவாக பிடித்துக் கொண்டிருந்தார்.

ராதிகாவோ, விஸ்வரூபனை நொடிக்கு ஒருமுறை பார்வையிட்டுக் கொண்டே, அயர்வாக அமர்ந்து இருந்த கிருஷ்ணனிடம், " சாரி சார்… நீங்க எதையும் நினைச்சுக்காதீங்க. " என்று அழு குரலில் மன்னிப்புக் கேட்டாள்.

அவளது அழுகைக் குரலை கேட்டதும், இன்னும் இறுகிப் போயிருந்தான் விஸ்வரூபன்.

அந்த சூழ்நிலையை தன் கையில் எடுத்துக்கொண்டார் சண்முகம். " சார்… இது என்னுடைய நம்பர்… நீங்க வீட்டுக்கு போயிட்டு ஃப்ரீயா இருக்கும் போது கால் பண்ணுங்க… மேற்கொண்டு கல்யாணத்தை பத்தி பேசலாம். நாங்க இன்னைக்கு தஞ்சாவூர் கிளம்பிடுவோம்." என்றார்.

" சரிங்க சம்பந்தி‌… நான் வீட்ல கலந்துப் பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன்." என்றார் கிருஷ்ணன். இவ்வளவு நேரம் இருந்த கலக்கம் மறைந்து மீண்டும் உற்சாகமாக இருந்தார்.

சுந்தரி ஒன்றும் கூறாமல் வெளியே சென்று விட, ராதிகாவும் மீண்டும் ஒருமுறை விஸ்வரூபனை பார்த்துவிட்டு கிருஷ்ணனிடம் வந்தவள், " வரேன் சார்…" என்று கிளம்பி விட்டாள்.

கிருஷ்ணன் தன் மகனிடம் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் பெருகிய மகிழ்ச்சி முகத்தில் மின்னி மறைந்தது.

" டாட்… இப்பவும் ஒன்னும் பிரச்சினை இல்லை. இந்த கல்யாணத்தை ட்ராப் பண்ணிடலாம்." என்றான் விஸ்வரூபன்.

" அது அவ்வளவு ஈஸி கிடையாது ரூபன். உங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆனதா சோஷியல் மீடியாவுல அனோன்ஸ்மெண்ட் பண்ணிட்ட. இனி இதிலிருந்து நீ பின் வாங்க முடியாது. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.முதல்ல எந்த மண்டபம் ப்ரீயா இருக்குன்னு கேட்கணும். நல்லா கிராண்டா செய்யணும்." என்று ஏகப்பட்ட கற்பனைகளைக் கூற…

" ப்ச்‌…" என்று தலையசைத்த விஸ்வரூபன், " டேட் நல்லா புரிஞ்சுக்கோங்க. என்னோட கல்யாணம் ஏதாவது ஒரு கோவிலில் செய்யுங்க. அப்படியே ரிஜிஸ்டர் பண்ணிடலாம் என்று. அப்புறமா ப்ரெஸ்ஸுக்கு ஒரு அறிவிப்புக் கொடுத்துடுங்க." என்ற விஸ்வரூபன் வேறு எதையும் பேச விடாமல் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

அவன் செவிக்குள்ளோ, " விஷ்வா… நம்ம கல்யாணம் எப்படி நடக்கணும் தெரியுமா?" என்றுக் கூறிய ராதிகாவின் வார்த்தைகள் வந்து மோதியது. தலையை உதறி அதை அலட்சியம் செய்தவன் தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தான்.


வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் அதற்குப்பிறகு அமைதியாக இருக்கவில்லை.

எல்லோரையும் அழைத்து விஸ்வரூபன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதைக் கூறியவர், விஸ்வரூபனின் விருப்பத்தையும் கூறினார்.

அவனது அம்மாவிற்கும், அத்தைக்கும் நல்லபடியாக திருமணம் செய்தாலே போதும் என்றிருக்க, அவனது விருப்பத்திற்கு சரியென தலையசைத்தனர்.

அடுத்த முகூர்த்தத்திலே, அவர்கள் வடபழனி முருகன் கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சண்முகத்திற்கு அழைத்து அடுத்த முகூர்த்தத்திலேயே இருவருக்கும் திருமணம் செய்வதைப் பற்றியும், கோயிலில் ஏற்பாடு செய்ததைப் பற்றியும் கூறினார்.

அவரும் சரியென தலையாட்டி விட்டு சுந்தரியை சமாதானம் படுத்துவதற்குள், போதும் போதுமென்று ஆகிவிட்டது‌.

" ஏங்க இப்போ நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணுங்க… அவளுக்கு என்னென்ன செய்யணும்னு ஆசை இருக்குத் தெரியுமா? அவளுக்கு என்ன தலையெழுத்தா, இரண்டாம் தரமாக போறதுக்கு?" என்று புலம்ப…

" ப்ச்… சுந்தரி… இரண்டாம் தாரம் என்று சொன்னதையே சொல்லாத… உன் பொண்ணு அவரைத் தான் விரும்புறா... ரெண்டு பேரும் நமக்குத் தெரியாமலே மோதிரம் மாத்திக்கிட்டாங்க… நாமளே கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் நமக்கு கவுரவம். புரிஞ்சுக்கோ…" என…

விக்ரமும், ஸ்வேதாவும் சேர்ந்துக் கொண்டு, " அம்மா… நீங்கள் எங்களுக்கு எப்படி ஆதரவாக இருந்தீங்க? இப்போ ராதிகாவுக்கு என்ற உடனே காதலை எதிர்க்கலாமா?" என்று வினவ.

சுந்தரியோ, " நான் காதலுக்கு ஒன்றும் எதிரி இல்லையே… என் கிட்ட முன்பே சொல்லி இருக்கலாமே…" என்று புதுசாக ஒரு காரணத்தை கண்டுபிடித்தார்.

அவர்களுடன் கல்லூரிக்கும், ஹாஸ்பிடலுக்கும் லீவு போட்டுவிட்டு, ஊருக்கு வந்திருந்த ராதிகா, சுந்தரி பேசுவதைக் கேட்டுக் கொண்டு, ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

அவளுக்கு வேண்டியது விஸ்வரூபனோட அவளது திருமணம். அவளுடைய அனுவுடைய குழந்தை, தாய் இல்லாமல் தவிக்கிறது. அதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை. அவள் தோழியின் குழந்தை, அவளது குழந்தையும் அல்லவா… எவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டிற்கு செல்கிறோமோ, அவ்வளவுக்கு சந்தோஷம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய அமைதியைப் பார்த்தே அவளது எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட சுந்தரியும் ஒரு வழியாக சமாதானமாகி அவர்கள் போக்கிற்கு தலையாட்டினாள்.


பத்தே நாட்களில் திருமணம், அதுவரை ராதிகாவை தஞ்சாவூரிலே இருக்க சொல்லி விட்டார் சுந்தரி.

" புடவை, நகை வாங்க வேண்டும்." என்று ரஞ்சிதம் சுந்தரிக்கு அழைத்துச் சொல்ல…

" நாள் இல்லைங்க‌‌, அங்கே வந்துட்டு போறதுக்கு… நீங்களே பார்த்து எடுத்திருங்க."

" ஓ… சரிங்க சம்பந்தி… அப்போ புடவை நகை வாங்கிட்டு, ஒரு நாள் நாங்க அங்க வரோம். இன்னும் பொண்ணை பார்க்கலையே நாங்க." என்று வருத்தத்தை மறைத்துக் கொண்டு, அழகாக சமாளித்துக் கொண்டார்.

அவர்கள் இவ்வளவு தூரம் இறங்கி வந்த பிறகு சுந்தரியாலும் அதற்கு பிறகு கோபத்தை காண்பிக்க முடியவில்லை. தயங்கிக்கொண்டே, "சரிங்க சம்பந்தி… என்னைக்கு வர்றீங்க என்று போன் பண்ணுங்க… " என்றாள்.

கௌரிக்கு ஹாஸ்பிடலில் ஒரு முக்கியமான ஆஃப்ரேஷன் இருக்க, அவளால் வர முடியவில்லை.

உடல்நிலை சரியில்லாத கிருஷ்ணனை அலைய விட வேண்டாம் என்று ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, வரமாட்டேன் என்று சொன்ன விஸ்வரூபனை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு புடவை வாங்கப் சென்றாள் ரஞ்சிதம்.

முகூர்த்த புடவையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த ரஞ்சிதம், விஸ்வரூபனிடம் அபிப்பிராயம் கேட்க, அவனோ ஃபோனிலே கவனம் செலுத்திக் கொண்டிருந்தான்‌‌.

ஒன்றிரண்டு முறை கூப்பிட்டு பார்த்த ரஞ்சிதம், பிறகு அவளுக்கு பிடித்த மாதிரி ஒரு புடவையை தேர்ந்தெடுத்தாள்.

" சரி வா பா… அடுத்த செக்ஷனுக்கு போகலாம்." என்றுக் கூற…

" முகூர்த்த புடவை எடுத்தாச்சா?" என்று கேட்க…

அவனது கேள்வியில் ஆச்சரியமான ரஞ்சிதம், எடுத்து வைத்த புடவையைக் காட்டினாள்.

இளம் சிவப்பு நிறத்தில் இருந்த புடவையை பார்வையிட்டவன், " இது வேண்டாம் மா…" என்றவன், பிறகு என்ன நினைத்தானோ, அவனே தேர்ந்தெடுத்தான் அவளுக்கு மிகவும் பிடித்த பேபி பிங்க் கலர் புடவை எடுத்தான்.

" சூப்பரா இருக்கு பா. " என்ற ரஞ்சிதம், அவனை வைத்துக் கொண்டே ராதிகாவிற்கு இன்னும் சில சாப்ட் சில்க் சாரிகளையும் வாங்கிக் குவித்தார். பிறகு நகைகளையும் வாங்கிக்கொண்டு, அடுத்த நாளே நல்ல நாளாக இருக்க, தஞ்சாவூர் சென்று வந்தனர்.


இதோ திருமண நாள்… வடபழனி முருகன் கோவிலில், எந்த வித ஆர்ப்பாட்டம் இல்லாமல், விஸ்வரூபன் ராதிகாவின் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது

கோவிலில் தான் திருமணம் என்ற போதும் ராதிகாவுக்கு வருத்தம் ஒன்றுமில்லை.

ஆனால் அங்கு கோவிலில் அவள் எதிர்பார்த்த எந்த சடங்கு, சம்பிரதாயம் எதுவும் இல்லாமல் இருவீட்டாரின் ஆட்களுக்கு முன்பு அந்த தெய்வ சன்னிதானத்தில் முன்பு மாலை மட்டும் மாற்றி தாலி கட்டினான் விஸ்வரூபன்.

கண்கள் கலங்க கண்ணீர் துளி கீழே விழக் காத்திருக்க, அழக் கூடாது என்ற வைராக்கியத்தில், அதை உள்ளிழுத்துக் கொண்டாள் ராதிகா.

தொடரும்...
 
Status
Not open for further replies.
Top Bottom