Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Status
Not open for further replies.

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 9

மகிழ்ச்சியும், துக்கமும் ஒரே நேரத்தில் நம்மை ஆட்கொள்ளும் போது அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்றே நமக்கு தெரியாது.

இரு வேறு கலவையான உணர்வு நம்மை சூழ்ந்து கொள்ளும். அதுபோல் திகழொளியின் வார்த்தைகளைக் கேட்டு மிகன் கற்சிலையாக சில நொடிகள் நின்றான்.

அவளை வேறொருவர் பெண் பார்க்க வருகிறார்கள், என்பது மிகனுக்கு ஒரு புறம் ஆத்திரதைத் கொடுத்தாலும், அவளுக்குள் தான் இன்னும் நிறைந்து இருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்கு நிம்மதியை கொடுத்தது.

இருண்டு கிடந்த அவன் மனதிற்குள் அவளின் வார்த்தைகள் நம்பிக்கை ஒளி ஏற்றிச் சென்றது.

அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று தன் இருக்கைக்கு வந்த திகழொளிக்கு அதன் பின் தான் மூச்சே வந்தது.

மிகனின் நடவடிக்கைகள் அவளுள் மேலும், மேலும் குழப்பத்தையே விதைத்தது.

'ஏன் இவன் இப்படி என்னிடம் நடந்து கொள்கிறான்..? இவனுக்கு தான் திருமணம் ஆகிவிட்டதே ! அப்புறம் நான் யாரை கல்யாணம் செய்தால் இவனுக்கு என்ன..?' என்று விடை தெரியாத கேள்விகளை தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.

தன் தந்தை கூறியது போல் அன்று முன் அனுமதி வாங்கிக் கொண்டு , அமுதனுடன் நேரமாகவே மாலை வீடு சென்றாள்.

மகளின் வரவை எதிர்பார்த்து வழி மீது விழி வைத்து காத்திருந்த பொன்னிக்கு, அமுதனுடன் திகழொளியை கண்ட பின்தான் முகத்தில் மலர்ச்சியே வந்தது.

"வா வா திகழி ..எங்க டா இன்னும் காணோமேன்னு நினைச்சுட்டே இருந்தேன். சரியா வந்துட்டே! நான் போய் உனக்கு காபி கலந்து எடுத்துட்டு வரேன். நீ சீக்கிரம் குளிச்சுட்டு கட்டில் மேல் பட்டுபுடவை எடுத்து வச்சு இருக்கேன், அதை கட்டிட்டு ரெடியாகு மா.. "என்றவர்.. "அம்மு கொஞ்சம் சாமான் வாங்கனும் நீ கடைக்கு போய்ட்டு வா .."என்று மகனையும் வேலைக்கு ஏவினார்.

திகழொளியோ, தாய் கூற்றுக்கு மறுப்பேதும் சொல்லாமல் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

அறவாணனுக்கு மகளை கண்ட பின் தான் உயிரே வந்தது. மகள் எங்கே மறுபடியும் திருமணம் வேண்டாமென்று பின்வாங்கி விடுவாளோ? என்று மனதிற்குள் பயந்து கொண்டே இருந்தவருக்கு, அவளை பார்த்த பின் தான் நிம்மதியே வந்தது.

அமுதனோ, தமக்கையை வீட்டில் விட்டு விட்டு, தாய் சொன்ன பொருட்களை வாங்க கடைக்குச் சென்றான்.

தாய் சொல்லைத் தட்டாமல் திகழொளி எளிமையாகவும் தயாரானாலும், மனதிற்குள் பெரும் போராட்டமே நடந்தது. இந்த மாதிரி ஒரு நிகழ்வை யாருடன் எதிர்பார்த்தாளோ ? அது இனி நடக்கவே போவதில்லை என்று நினைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

முன்பின் தெரியாத யாரோ ஒருவன் முன்னே சந்தையில் மாட்டைப் பார்ப்பது போல் தான் சென்று நிற்கவேண்டுமே என்று நினைக்கையில், ஏன் தான் பெண்ணாக பிறந்தோம்? என்று மனம் துடித்தது.

இந்த கலாச்சாரம் என்று தான் மாறுமோ ?ஒவ்வொரு தனி மனிதனும் மாறாமல் இந்த சமூக கலாச்சாரம் மாறவே மாறது என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்தியவள், மனதார இந்த நிகழ்வை வெறுத்தாள்.

குறித்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் தரகருடன் வந்தார்கள்.

மாப்பிள்ளை கதிரவன் பார்ப்பதற்கு அழகாகவே இருந்தான்.அறவாணணுக்கும் ,பொன்னிக்கும் மாப்பிள்ளையை மிகவும் பிடித்து விட்டது. கதிரவனின் அம்மா , அப்பாவும் தன்மையாகவே பேசினார்கள். மிக இயல்பாக பழகினார்கள்.

அமுதனோ, யோசனையுடன் கதிரவனை ஆராய்ந்தான். தன் தமக்கைக்கு ஏற்றவராக இருப்பாரா? என்ற கேள்வி அவன் மனதைக் குடைந்தது.

பொன்னி காஃபி கலந்து திகழொளி கையில் கொடுத்து எல்லாருக்கும் கொடுக்கச் சொன்னார். அவள் கைகளோ, காஃபித் தட்டை வாங்க முடியாமல் நடுங்கியது.

மகளின் நிலை புரிந்த பொன்னி ,ஆதரவாக அவளின் தோள்களை அழுத்தினார். தாயின் அழுத்தத்தில் இருந்த ஆறுதலை உணர்ந்து கொண்டவள், நகரவே மறுத்த தன் கால்களை வலுகட்டயமாக நகர்த்திச் சென்றாள்.


அவள் மனதிற்குள் சூறாவளி வீச எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் , அடி மேல் அடி வைத்து நடந்து வந்து, மனதிற்குள் சிறு நடுக்கத்துடன் காஃபியை அனைவருக்கும் கொடுத்தாள்.


பட்டுச்சேலை சர சரக்க.. தலை நிறைய மல்லிகை பூவுடன் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல், காஃபி கொடுத்தவளை விழி எடுக்காமல் பார்த்தான் கதிரவன்.

அவள் மனமோ, அவன் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட வேண்டுமென்று தவித்தது.

கதிரவனின் அம்மா திகழொளியை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டு பேச்சுக் கொடுத்தார். அவர் கேட்ட கேள்விக்கு அமைதியாக அவள் பதில் அளித்தாள்.

அவளை பார்த்தவாறு அவள் கொடுத்த காஃபியை குடித்து முடித்த கதிரவன் , அறவணானிடம்" நான் திகழொளி கூட கொஞ்சம் தனியா பேசணும்.." என்றான்.

அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் மகளிடம் "திகழி அவரை உன் அறைக்கு அழைத்து செல்லும்மா.." என்றார்.

அமுதனுக்கோ, கதிரவன் பின் செல்ல துடித்த தன் கால்களை கட்டுபடுத்தி வைக்க முடியாமல் திணறினான். அவன் தன் தமக்கையை சங்கடப்படுத்தாமல் பேச வேண்டுமே என்று கலங்கினான்.

தன் தந்தை தனியாக பேச சம்மதம் சொன்னவுடன் திகழொளி சற்றே திகைத்து தான் போனாள்.ஆனால், வேறு வழி இல்லையே சில விஷயங்களை எதிர் கொண்டு தானே ஆக வேண்டும்.

கதிரவனை தன் அறைக்கு அழைத்து சென்றவள், அவனுக்கு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமரச் சொன்னாள்.

நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அவளையும் அமரச் சொன்னான். அவளோ, அமராமல் தன் சேலை தலைப்பை விரல்களில் சுற்றி, சுற்றி விடுவித்துக் கொண்டிருந்தாள்.

அதை கண்டவனுக்கு அவளின் பதட்டம் புரிந்தது.

பதட்டத்தைப் போக்கும் பொருட்டு தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமைதியாக கதவருகில் நின்றிருந்தவளை "திகழொளி.." என்று அழைத்தான்.

தன்னைப் பெயரிட்டு அழைத்தவுடன் சிறு திடுக்கலுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவனோ, "எதற்கு இவ்வளவு பதட்டம்.. பீ கூல்.." என்று மென்மையாக கூறியவன், அவளின் விழிகளை பார்த்தபடி "உன் பேர் ரொம்ப அழகா இருக்கு திகிழொளி.." என்றான்.

அதற்கும் பதில் பேசாமல் அவள் மெளனத்தையே கடைபிடிக்க , அவளின் மெளனத்தை கலைக்கும் பொருட்டு "என்னை பிடிச்சு இருக்கா..?" என்றான்.


திகழொளிக்கோ, அவன் நேரடியாக தன்னை கேட்டவுடன், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள்.

சில நொடி மெளனத்திற்கு பின் " எனக்கு பிடிப்பதை விட அப்பா, அம்மாவுக்கு பிடித்தால் போதும்.." என்றாள்.

அவனோ, "என் கூட வாழப் போறது அவர்கள் இல்லையே நீ தானே.. ?"என்று எதிர் கேள்வி கேட்டான்.

அவளோ, "அவங்க எனக்கு நல்லது தான் செய்வாங்க . அதனால், அவர்கள் முடிவு தான் என் முடிவு." என்று சுற்றிவளைத்து பதில் கூறினாள்.

"ஓ..!அப்போ அவங்களுக்கு பிடிக்கலைன்னா உனக்கும் பிடிக்காது அப்படித் தானே.."

"அப்படி இல்லே.."

"அப்புறம்..?" என்றவனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறினாள்.

அவனோ, " இங்க பாரு திகழி என்னைப் பொறுத்தவரை வாழப் போறது நாம் தான் . அதனால், நமக்கு தான் ஒருவரை ஒருவர் முதலில் பிடிக்க வேண்டும். எனக்கு உன்னைப் பார்ததுமே ரொம்ப பிடிச்சு போச்சு.இனி நீ தான் பதில் சொல்ல வேண்டும்.." என்றான்.

அவளோ, அவனின் பதிலில் விக்கித்துப் போனாள். 'எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ? அது நடந்து விட்டதே !' என்று மனதிற்குள் கலங்கினாள்.

'ஏன் எனக்கு மட்டும் எல்லாம் தப்பு தப்பாக நடக்குது? மிகனை மனதிற்குள் வைத்துக் கொண்டு, இவனுடன் என்னால் எப்படி வாழ முடியும்..? என்ற கேள்வி அவளை வண்டாக குடைந்தது.

கதிரவனை, அவளின் பதிலுக்காக விழி எடுக்காது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

திகழொளி அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்தாள்.

அவனோ, அவளை மேலும் தவிக்க வைக்கமால் நாற்காலியில் இருந்து எழுந்து நின்றவன், "நீ பதில் சொல்ல மாட்டேன்னு தெரியுது.பரவாயில்லை பட் எனக்கு உன்னை ஏனோ ரொம்ப பிடிச்சு இருக்கு .ஸோ அடுத்த கட்டத்திற்கு நம் உறவை நகர்த்தும் வேலையை பெரியவர்களிடம் விட்டு விடலாம் .."என்றான்.

அவளோ, அவன் கூறியைத் கேட்டு திகைத்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவனோ, அவளின் அதிர்ந்த முக்ததைப் பார்த்துக் கொண்டே "எல்லாத்துக்கும் ஓரே ரியேக்ஷன் கொடுத்தா எப்படி மா..கொஞ்சம் சிரிச்சா.. இன்னும் அழகா இருக்கும்.." என்றவன் வசீகரப் புன்னகையை உதிர்த்தான்.

எதற்குமே பதில் கூறாமல் பேசா மடந்தையாக நின்றாள் அவள்.

அவளிடம் பதில் வாங்க முடியாது என்று புரிந்து கொண்ட கதிரவன். அவளிடம் ஒரு சிறு தலை அசைப்புடன் வெளியில் சென்றான்.

திகழொளியின் மனதிற்குள் பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல், சோர்ந்து போய் அமர்ந்தாள்.மனமோ, அவன் பெரியவர்களிடம் என்ன சொல்லுவானோ? என்று பதை பதைத்தது.

கதிரவனோ, ஒரு முடிவுடன் அறையில் இருந்து வெளியில் வந்தான்.வரவேற்பறையில் அமர்ந்திருந்த தன் பெற்றோர்களிடமும், அறவாணிடமும் "எனக்கு திகழொளியை ரொம்ப பிடிச்சு இருக்கு.. மேற்கொண்டு நீங்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்க.." என்று பட்டென்று போட்டு உடைத்தான்.

பெரியவர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அமுதன் மட்டும் யோசனையுடனேயே நின்றான்.

அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு கதிரவன் வீட்டார் கிளம்பினார்கள்.

அறவாணன் அவர்கள் சென்ற பின் மகளை அழைத்து பேசினார். "பாப்பா உனக்கு மாப்பிள்ளையை பிடித்து இருக்கா.? உனக்கு கல்யாணத்திற்கு சம்மதம் தானே..?" என்று கேட்டார்.

தந்தை தன் பதிலை கேட்டவுடன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் துடித்தாள். அவள் என்ன சொல்லுவாளோ? என்று தந்தையின் கண்களில் தெரிந்த பரிதவிப்பு அவளை ஊமையாக்கியது.அந்த கண்களில் மலர்ச்சியை மட்டுமே காணவேண்டும் என்று எண்ணினாள்.

" அப்பா உங்களுக்கு பிடிச்சு இருந்தா எனக்கு அது போதும் . உங்க விருப்பப்படி செய்யுங்கப்பா.. " என்று தன் மனதை படாத பாடு பட்டு மறைத்து, அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சம்மதம் சொன்னாள்.


அவரோ, மகளின் பதிலில் நிம்மதி அடைந்தார். இந்த வார்த்தைக்காகத் தானே இத்தனை வருடம் அவர் தவம் இருந்தார். பொன்னியும் மகள் சொன்னதை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.

அமுதனுக்கு மட்டும் தன் தமக்கையை நினைத்து மனதிற்குள் சந்தேகம் வலுத்தது. 'நிச்சயமாக அக்கா முழு மனதுடன் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வாய்ப்பே இல்லை.. 'என்று உறுதியாக நினைத்தான்.

தமக்கையுடன் தனிமை கிடைத்தவுடன் தன் சந்தேகத்தை கேட்டே விட்டான். "அக்கா உண்மையைச் சொல் ! உனக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதமா..?" என்று தன் மனதை எப்போதும் போல் புரிந்து கொண்டு கேட்ட தம்பியிடம் மென் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தாள்.

அவனோ, "இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் அக்கா..?

" எனக்கு பிடிச்ச வாழ்க்கை அமையலே..அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை ஏத்துக்கலாம்ன்னு முடிவுக்கு வந்துட்டேன்.."என்று உணர்வே இல்லாமல் சொன்ன தமக்கையிடம்..

" ம்ம்.. நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது எனக்கு சந்தோஷம்.. ஆனால் , அதை அம்மா, அப்பாக்காக இல்லாமல், உனக்காக ஏத்து நீ சந்தோஷமா வாழனும். எனக்கு அப்ப தான் நிம்மதி கா.."என்றவனிடம்..

"என்னால் இப்போது எதுவும் உறுதி சொல்ல முடியலே அம்மு. நடப்பதை அதன் போக்கிலே ஏத்துக்கிறேன்.."

"அக்கா எனக்கு கஷ்டமா இருக்கு. உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியலே..?" என்றவன் தன் தமக்கையை மனம் கலங்க தோளோடு அணைத்துக் கொண்டான்.

திகழொளியோ? எதிர்வினை ஆற்றாமல் சிலையாக நின்றாள்.அவள் மனமோ, தன்னை நினைத்தே கூப்பாடு போட்டது.

அன்றைய இரவு திகழொளியின் பெற்றவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுத்தது. ஆனால் ,திகழொளிக்கும் ,அமுதனுக்கும் உறங்காத இரவாக கழிந்தது.

மிகனோ , திகழொளி திருமணத்திற்கு சம்மதித்து இருப்பாளா ? என்ற சிந்தனையிலேயே தன் உறக்கத்தை தொலைத்தான்.


அடுத்த நாள் எப்போதும் போல் பணிக்கு வந்தவளை, மிகன் மாப்பிள்ளை வீட்டார் பற்றி கேள்வியாய் கேட்டு வதைத்தான்.

அவனிடம் மறைக்க நினைத்தவளை, விடாது குடைந்து ,குடைந்து கேள்வியாய் கேட்டு தனக்கு வேண்டிய பதிலைப் பெற்றுக் கொண்டான். அதை வைத்தே குதற்கமாக பேசி அவளை வதைத்தான்.

மாப்பிள்ளையின் பெயரைக் கேட்டவன். "உன்னை நினைத்தாலே அமரர் ஆகவேண்டியது தான். இதில் அவன் பெயர் என்னவோ கதிரவன் நல்லாத் தான் இருக்கிறது . ஆனால் உன்னைக் கல்யாணம் செய்தால் ? நிச்சயமா அமரர் ஆகிவிட வேண்டியது தான்.."என்று குதர்க்காமாக பேசியவனை சொல்லில் அடங்கா வலியுடன் பார்த்தாள்.

அவனோ, அவளின் வலி நிறைந்த பார்வையை கண்டு கொள்ளாது, "கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் எப்படி டீ கல்யாணத்திற்கு உன்னால் சம்மதம் சொல்ல முடிந்தது.." என்றான் கட்டுக்கடங்காத கோவத்துடன்.

அவளோ , "நான் என்ன தப்பு செய்தேன் குற்றயவுணர்வு இருக்க.. உங்களுக்கு தான் குற்றவுணர்வு இருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து குழந்தையும் பெற்று விட்டு என்னிடம் இப்படி நடந்து கொள்வதற்கு.." என்றாள்.

பொறுத்துப் பொறுத்து போன ரொம்பவும் எல்லை மீறுகிறான் என்ற ஆத்திரத்தில் அவளும் வார்த்தையை விட்டாள்.


அவனோ, அவளின் பதிலில் மேலும் சினம் கொண்டவன். " நான் எதுக்கு குற்றவுணர்வில் இருக்கனும். நீ தான் டீ என் வாழ்க்கையை கெடுத்தவள் . நீ தான் குற்றவுணர்வில் தவிக்கனும் . ஆனால், இங்கே எல்லாம் தலைகீழா இருக்கு.." என்றான்.

அவளோ, "நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது. என்னால் பேசி புரிய வைக்கவும் முடியாது. உங்க இஷ்டத்திற்கு என்னமோ நினைச்சுக்கோங்க.." என்று பேச்சை முடித்தவளிடம்..

"அப்படி எல்லாம் உன்னை சாதரணமா விட்டு விட முடியாது. எனக்கு நீ பதில் சொல்லியே ஆகனும்.."

"என்ன சொல்லனும்.. பைத்தியம் மாதிரி உளருகிற உங்க கிட்ட நான் என்ன தான் சொல்ல முடியும்.."


"ஆமாம் டீ என்ன பார்த்தா உனக்கு பைத்தியம் மாதிரி தான் இருக்கும். அதுவும் இப்போ கதிரவன் நினைவில் மிதக்கிறவளுக்கு அப்படித் தான் இருக்கும்.."

" மிகன் ஏன் இப்படி என்னை சாவடிக்கிறீங்க.. சத்தியமா என்னால் முடியலே.. உங்களுக்கு என்ன தான் வேணும்..?

"நீ தான் டி வேணும்.."

"நீங்க சொல்றதே புரியலே..?"

"உனக்கு எப்படி டீ என் ஃபீலிங் புரியும்.."

"ப்ளீஸ் மிகன் புரியும் படி சொல்லுங்க.."

"உனக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா ? அது எங்கூட மட்டும் தான் நடக்கனும்.." என்றவனை தாளமுடியாத அதிர்
ச்சியுடன் பார்த்தாள்.



தொடரும்..























 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 10

நாம் அறியாத விஷயத்தை நமக்குள் முதல் முதலாக உணரவைத்தவர்களை நம்மால் என்றுமே மறக்க முடியாது.

அந்த உணர்வு விதையாய் நம்முள் முளைத்து, ஆலமரமாய் வேரூன்றி படர்ந்து நம் மனதை ஆட்கொள்ளும்.

அப்பேர்ப்பட்ட காதல் என்னும் உணர்வை ! தன்னுள் விதைத்து, வேரூன்றி வளரச் செய்தவன், இத்தனை வருடங்கள் கழித்து இன்று திருமணம் பற்றி பேசியது அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அதுவும் அவன் இதழ்களில் இப்படி ஒரு வார்த்தைக் கேட்க தவமாய் தவம் கிடந்தவளுக்கு, காலம் கடந்த பின் அவன் இன்று கேட்டது, அவளுள் பிரளயத்தையே கொடுத்தது.


ஒரு நிமிடம் பூமி சுற்றுவதையும், பறவைகள் பறப்பதையும்,மரம் அசைவதையும் நிறுத்தியது போல மிகன் கூறியதை கேட்டு , திகழொளி அதிர்ச்சியில் பனிக்கட்டியாக உறைந்து நின்றாள்.

மிகனோ, அவளின் அதிர்ச்சியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவள் முன் விரல்களால் சொடக்கிட்டு அவளை நிகழ்வுக்கு திருப்பியவன் , "நான் சொன்னது புரிஞ்சுச்சா.." என்றான்.

அவளோ, பதில் உரைக்காமல் பேந்த, பேந்த விழித்தாள். அவளின் அசையாத விழிகளைக் கண்டவனுக்கு அவளை அப்படியே இழுத்து தன்னுள் புதைத்துக் கொள்ள வேண்டுமென்ற பேராவல் எழுந்தது.

இன்னும் சில நிமிடங்கள் அவள் இப்படியே நின்றால், தான் நினைத்ததை செய்தாலும் ,செய்துவிடுவோம். என்று பயந்து "திகழி.." என்று சற்றே குரலை உயர்த்தி அழைத்தான்.

அந்த குரலில் திகைத்து நிகழ்வுக்கு வந்தவள், பதில் ஏதும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

அவனோ ,சட்டென்று அவளின் கை பற்றி நிறுத்தினான்.தன் கை பற்றியவனை கேள்வியாக பார்த்தவளிடம்..

"எனக்கு பதில் சொல்லிட்டுப் போ !" என்று கட்டளை இட்டான்.

"என்ன பதில் சொல்லனும்.."

"என்னை மட்டும் தான் நீ கல்யாணம் செய்துக்கனும்.."

"உங்களுக்கு இப்படி சொல்ல வெட்கமா இல்லை.."

"நான் எதுக்கு டீ வெட்கப் படனும்.."

"கல்யாணமாகி குழந்தையையும் பெற்றுக் கொண்டு, அவளுடன் வாழ்ந்துட்டே, இன்னொரு பெண்ணிடம் கல்யாணத்தை பற்றி பேசுவதற்கு தான்.."

"ஓ..அப்படியா ?மனசுலே என்ன வச்சுட்டு இன்னொருத்தனை கல்யாணம் செய்துக்க போறீயே அதுக்கு முதல்லே நீ தான் டீ வெட்கப் படணும்.."

"இதை பற்றி நாம நிறைய பேசியாச்சு..இனி பேச ஒண்ணும் இல்லை..நான் போகனும் முதலில் என் கையை விடுங்க.."

"முடியாது இன்னைக்கு எனக்கு பதில் தெரிந்து ஆகனும்.."என்றான் வெறி பிடித்தவன் போல..

"ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்.."

"திகழி என் பொறுமையை சோதிக்காதே..என்னால் உன்னை வேறு யாருடனும் பார்க்க முடியாது.."

"ஏன்..?"

"ஏன்னா , நீ எனக்கு உரியவள்.எனக்கு மட்டுமே சொந்தமானவள்.."

"ஓ ! அது இப்ப தான் தெரிஞ்சுச்சா ! ஏன் நீங்க கல்யாணம் செய்துக்கும் போது தெரியலையா..?"

"திகழி.."என்று பேச முடியாமல் பற்களை கடித்தவனிடம்..

" நீங்க மட்டும் கல்யாணம் செய்து குழந்தை, குட்டியுடன் சந்தோஷமா வாழனும். ஆனால், நான் மட்டும் உங்களையே நினைத்து, நினைத்து காலம் பூரா கண்ணீரிலேயே கரையனும் அப்படித் தானே.."

"திகழி நீ ரொம்ப பேசறே.."

"பேச வைப்பதே நீங்க தான்.."

"உண்மை என்னனுன்னு தெரியாமா உளராதே.."

"சொன்னால் தானே தெரியும்.." என்றவளிடம்..

"ஓ! அப்போ சொல்லித் தான் ஆகனும் இல்லே.. அப்ப தான் மேடம் நம்புவீங்க.." என்றவன் வெறி பிடித்தைப் போல் அவளை உலுக்கி எடுத்தான்.

அவளோ, அவனின் செயலில் பயந்து நடுங்கினாள்.

அவளின் பயந்த பாவத்தைக் கண்டும், காணாமலும் அவளை விட்டவன், அறைக்குள் குறுக்கும் ,நெடுக்கும் நடந்து தன் ஆத்திரத்தை சமன்படுத்த முயன்றான்.

அவளுக்கோ ,அவனின் நடவடிக்கைகள் மனதிற்குள் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியது. என்ன செய்தும் அவன் ஆத்திரம் அடங்கவில்லை.. நடந்ததை அவளிடம் சொல்ல நினைத்தவனுக்கு ,அவனுள் பச்சை புண்ணை கிளறி விட்டதை போல் உயிர் வலி கொடுத்தது.

தாங்க முடியாத கோபத்திலும்,ஆத்திரத்திலும் சுவற்றை கைகால் ஓங்கி குத்தினான்.

அவளோ அதைக் கண்டு "அச்சோ மிகன் என்ன இது !" என்று அலறிய படி அருகில் வந்தவளை " பக்கத்தில் வராதே திகழி ! உன்னை கொன்று விடுவேன்.." என்றவனின் வார்த்தையைக் கேட்டு அசையாமல் அப்படியே நின்றாள்.

சில நொடிகளில் பெரும் பாடு பட்டு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், அசையாமல், கண்களில் ஈரப்பசையே இல்லாமல், தன்னையே வெறித்து பார்த்தபடி நின்றவளிடம், அத்தனையையும் ஒன்று விடாமல் கட்டுக்கடங்காத கோபத்துடன் சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டவள் மனமும், உடலும் நடுங்க, அப்படியே சரிந்து மயங்கி கீழே விழுந்தாள்.

மிகனோ , அவள் மயங்கியது கண்டு ஒரு நொடி அதிர்ந்தாலும், அடுத்த விநாடி அவளை தன் மடியில் கிடத்தி "ஒளி..ஒளி.." என்று கன்னம் தட்டி பதறி அழைத்தான்.

அவளோ, விழி திறக்காது அவனை மேலும், மேலும் பதறச் செய்தாள். அவளை கீழே படுக்க வைத்து விட்டு தன் மேஜை மீது இருந்த தண்ணீர் குடுவையில் இருந்து, கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்.

முகத்தில் நீர்த் திவலைகள் விழுந்ததும், மெல்ல கண்களை சுருக்கி, விழித்தவளின் விழித் திரையில் மிகனின் பயந்த முகம் தான் விழுந்தது.

மெல்ல எழுந்து அவனிடமிருந்து விலகி அமர்ந்தவள்..தன்னை சமன்படுத்திக் கொள்ள சில நொடிகள் எடுத்துக் கொண்டாள்.

அவனோ, "திகழி இப்ப ஓகே வா .." என்றவனிடம் தலையை மட்டும் ஆட்டினாள்.

அவளால், அவன் சொன்ன செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை..

விதி எப்படி எல்லாம் ஒருவரின் வாழ்க்கையில் விளையாடுகிறது. தான் கனவிலும் நினைக்காத ஒன்று இன்று மிகனின் வாழ்க்கையில் நிகழ்ந்து உள்ளது.

இங்கு யாரை குறை கூறுவது.. காலம் செய்த கோலத்தால் அழகாக வாழ்ந்து இருக்க வேண்டிய இருவரின் வாழ்க்கையும் கேள்வி குறியாய் அந்தரத்தில் தொங்குகிறது.

அவனின் கோவத்திற்கு காரணம் இப்போது தான் அவளுக்கு புரிந்தது. ஆனால், அவன் நடந்த நிகழ்வுக்கு தன் மீது அர்த்தமே இல்லாமல் கோவப்படுவது தான் அவளை கவலைக்குள்ளாக்கியது.

அன்றிலிருந்து இன்று வரை இவன் மாறவே இல்லை..என்று மனதிற்குள் வருந்தினாள்.

அவள் முகத்தில் தெரிந்த பல்வேறு கலவையான உணர்வை கண்டு "இப்போது புரியுதா?" என்றவனிடம்.. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தாள்.

அவனோ, "திகழி நீ செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்ய இதை தவிர உனக்கு வேறு வழி இல்லை .."என்றவனை உயிர்ப்பே இல்லாமல் பார்த்தாள்.

மனமோ, 'நான் என்னடா பாவம் செய்தேன். எனக்கும் இதுக்கும் ஒரு சதவீதம் கூட சம்பந்தம் இல்லையே.. அது உனக்கு புரியவே புரியாதா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறாயா? என்று தனக்குள் கேள்வி கேட்டு கலங்கி தவித்தாள்.

" பதிலே சொல்லாமல் என்னையே பார்த்தால் என்ன அர்த்தம் .." என்று கேட்டவனிடம்..

"என்னால் எப்படி முடியும்..அப்பா அம்மா வேறு ஒருவருடன் திருமணம் பேசிட்டாங்களே.."

"ஏய் ரொம்ப பண்ணாதே ! பொண்ணு தானே பார்த்துட்டு போய் இருக்காங்க..என்ன உறுதியா செய்து இருக்காங்க.."

"எல்லாம் உறுதியான மாதிரி தான்.."

"ஓ! அப்ப அவனை கல்யாணம் செய்துக்க போறே அப்படி தானே..?"

"மிகன் எதுவும் என் கையில் இல்லை.."

"இங்கே பாரு நீ சொல்ற காரணம் எனக்கு தேவை இல்லை. ஒரே பதில் தான். உன்னால் மகிழிக்கு அம்மாவா இருக்க முடியுமா? முடியாதா?"

"மிகன் நான் சொல்வதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. எங்க வீட்டில் இதற்கு எப்படி ஒத்துக்குவாங்க.."

"அதை பற்றி எனக்கு கவலை இல்லை..எனக்கு தேவை உன் பதில்.."

"உங்களுக்கு எது தான் தேவை.. எதையுமே புரிந்து கொள்ளாமல் பேசினால் நான் என்ன செய்ய..?"

"எனக்கு தேவை நீ மட்டும் தான்.. நான் எல்லா புரிஞ்சு தான் பேசறேன்.."

"ப்ரக்டிக்கலா யோசிங்க மிகன் . நான் எப்படி அப்பா அம்மாவிடம் சொல்வேன்.அவர்கள் உங்க மேலே இன்னும் கோவத்துடன் தான் இருக்காங்க.."

"இருந்தா இருக்கட்டும். அதை பற்றி எனக்கு கவலை இல்லை.அவர்கள் சம்மதித்தால் அவர்கள் சம்மதத்துடன் நம் கல்யாணம் நடக்கும். இல்லையென்றால் அவர்கள் சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தான்.."

"என்னால் அவர்கள் சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள முடியாது.. "

"ஓ.. அப்போ உங்க அப்பா பார்த்த கதிரவனை கல்யாணம் செய்துக்க போறே அப்படித் தானே ? பார்த்துக்கலாம் நீ எப்படி அவனே கல்யாணம் செய்யறனேன்னு.." என்று சவால் விட்டவனை என்ன செய்வது என்று அறியாமல் பார்த்தாள்.

"சரியாக அந்த நேரம் மிகனின் அலைபேசி சினுங்கியது.."

மிகனோ, அப்பா காலிங் என்று ஒளித்திரையில் மின்னிய பெயரை யோசனையுடன் பார்த்தபடியே அழைப்பை ஏற்றான்.

அந்த பக்கம் உலகமாறனோ, "மிகா சாயங்காலம் நேர கம்பெனியிலிருந்து நம் வீட்டருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வந்து விடு..!"என்றார்.

"எதுக்குப்பா..?"

"ம்..பெண் பார்க்கத் தான்.."

"அப்பா.."என்று அதிர்ச்சியாக கத்தியவனிடம்..

"எதுக்குப்பா இத்தனை அதிர்ச்சி.." என்று மகனின் குரலை வைத்தே அவனின் மனநிலையை கண்டு கொண்டார்.

அவனோ "என்னால் வர முடியாதுப்பா.. எனக்கு வேலை இருக்கு.."என்றவனிடம்..

"என்ன வேலையாக இருந்தாலும் ,அதை அப்புறம் பார்த்துக்கலாம்..சரியான நேரத்துக்கு கோவிலுக்கு வந்தது சேர்.."என்றவரிடம்..

"அப்பா எனனால் முடியவே முடியாதுப்பா.."

"இங்க பாரு தம்பி. நான் உன்னிடம் வரமுடியுமா?முடியாதான்னு கேட்கலை..வரச் சொன்னேன்.."

"அப்பா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.."

"நல்லா புரிஞ்சதால் தான் சொல்றேன். கரெக்டா வந்துரு.." என்றவர் மகனின் பதிலை கேட்காமலேயே அழைப்பை துண்டித்தார்.

அவனோ "ச்சே.." என்ற படி கால்களை காற்றில் உதைத்து தன் இயலாமையை போக்கி கொண்டான்.

திகழொளியோ, அதுவரை மிகன் பேசியதை மட்டுமே கேட்டு கொண்டு இருந்தாள்.அந்தபக்கம் அவனின் தந்தை என்று புரிந்தது.

ஆனால், எதற்கு வரச்சொன்னார்? இவன் எதற்கு? அதற்கு இத்தனை கோவப்படுகிறான்?என்று குழம்பியபடியே அவனைப் பார்த்தாள்.

அவனோ, அப்போது தான் அவள் இருந்ததை உணர்ந்தவன், தன் கோவத்தை எல்லாம் சம்மந்தமே இல்லாமல் அவள் புறம் திருப்பினான்.

"என்ன பார்க்கிறே.. எல்லாம் உன்னால் தான். என்னைக்கு நீ என் வாழ்க்கையில் நுழைந்தாயோ? அன்னையில் இருந்து தான் டீ எனக்கு பிரச்சினை.." என்று சீறினான்.

அவளோ, "இதையே நானும் சொல்வேன்.." என்று அப்பாவியாக கூறினாள்.

"சொல்லு டீ சொல்லித் தான் பாரே.." என்றவனிடம்..

"அது தான் சொல்லிட்டேனே.. இனி என்னத்தை சொல்ல.." என்றவள் எழுந்து ஒரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு தப்பித்தால் போதும் என்று ஓடினாள்.


அவள் ஓடுவதை பார்த்தவனுக்கு கோவம் தான் மென் மேலும் அதிகரித்தது. மனதிற்குள் இவளை அப்பறம் பார்த்துக்கலாம். முதலில் அப்பா செய்து வைத்திருக்கும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரனும் என்று நினைத்தவன் , அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.


வீட்டிற்குள் புயல் வேகத்தில் நுழைந்தவன், தன் தந்தையை தேடிக் கொண்டு அவரின் அறைக்குச் சென்றான்.

காலையில் அவர் அலுவலகம் செல்லாமல் இருந்தது இதற்கு தானா ! என்று நினைத்தவனுக்கு கையாலாகாத கோவம் வேறு வந்தது.

உலகமாறனோ, ஓய்வாக படுக்கையில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

அவரின் அருகில் சென்று அமர்ந்தவன் , "அப்பா.." என்று அழைத்தான்.

அவரோ, அருகில் மகனின் குரல் கேட்டதும் தூக்கிவாரிப் போட நிமிர்ந்து பார்த்தார்.

அவனின் வரவை அவர் எதிர்பார்க்கவில்லை என்று அவர் முகம் அப்பட்டமாக பிரதிபலித்தது.

அவனோ, தந்தையின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல், அவரின் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி அவர் படித்துக் கொண்டிருந்த பக்கத்தை மடித்து மூடி அருகில் வைத்தான்.


பதிலே பேசாமல் அவர் மகனின் செய்கைகளைக் கவனித்தார்.

அவரின் பார்வையை உள்வாங்கிய படி "அப்பா உங்க கிட்ட நான் முக்கியமான விஷயம் பேசணும் பா.."

"என்ன விஷயம் பா ..இப்படி அரக்க, பறக்க வந்து இருக்கே.."

"எல்லாம் உங்களால் தான்.என்னைக் கேட்காமல் நீங்க எதுக்கு பொண்ணு பார்க்க ஏற்பாடு செய்தீங்க.."

"நான் தான் நீ கேட்ட மூணு மாசம் டைம் கொடுத்தேன். மூணு மாசம் முடிஞ்சுச்சு ..எனக்கு வாக்கு கொடுத்த படி நான் சொல்ற பெண்ணே நீ கல்யாணம் செய்யனும்..அது தானே சரி.."

"அப்பா விளையாடதீங்க.. இது சாதாரண விஷயம் இல்லே.."

"ஆமாம். அதனால் தான் பெண் வீட்டாரைப் பற்றி தீர விசாரித்த பின்தான் இந்த ஏற்பாடு செய்தேன்.."

"அப்பா நான் அதை சொல்லலே.. வந்து எனக்கு சொல்லத் தெரியலே.."

"உனக்கா சொல்லத் தெரியாது..?"


"அச்சோ அப்பா ! எனக்கு இந்த பெண்ணே பிடிக்கலே.."

"அது எப்படிப்பா பார்க்காமலே பிடிக்கலேன்னு சொல்லுவே .."

"இந்த பெண்ணை மட்டும் இல்லே, எனக்கு எந்த பெண்ணையும் பிடிக்காது.."

"ஏம்ப்பா.." என்று மகனின் வாயிலிருந்தே உண்மை வர வேண்டுமென்று அப்பாவியாக கேட்டார்.

அவனோ "அப்பா என்னால் திகழொளியை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது.." என்று உண்மையை போட்டு உடைத்தான்.

தொடரும்..
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 11

நமக்கு தெரிந்த விஷயத்தை கேட்கும் பொழுது, பெரும்பாலும் பெரிதாக அதிர்ச்சி ஏற்படாது. அதுபோல் மகன் சொன்னதைக் கேட்ட உலகமாறனுக்கு திகைப்பை ஏற்படுத்தவில்லை..


மகன் மனதில் இருப்பதை இன்றாவது சொல்லட்டும் என்று அமைதியாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


தந்தை எதிர்வினை ஆற்றாதைக் கண்டு மிகன் கொஞ்சம் குழம்பித் தான் போனான். தான் சொன்னது சரியாக அவருக்கு கேட்கவில்லையோ? என்று நினைத்து "ப்பா நான் ..நான்..சொன்னதுக்கு நீங்க பதிலே சொல்லலே.." என்ற மகனிடம்..


"என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிறேப்பா..?"


"இப்படி கேட்டா நான் என்னப்பா சொல்ல..?"


"வேறு எப்படி கேட்கச் சொல்றே..நீ செய்து வச்சிருக்க காரியத்திற்கு நான் எந்த முகத்தை வைச்சுட்டு போய் பொண்ணு கேட்க முடியும்.."


"அப்பா அது முடிஞ்சு போன விஷயம். பழைய கதையை இப்ப பேசி என்னாகப் போகுது..?"


"எதுவும் ஆகாது ப்பா..ஆனால், அதோட தாக்கம் இருக்கும் அல்லவா.. ? உன்னால் தான் அவங்க வீட்டை வித்துட்டு ஊரை விட்டே போனாங்க.. அதை மறப்பாங்களா? அப்புறம் அந்த பொண்ணுக்கு கல்யாணம் கூட ஆகி இருக்கலாம்.."


"கல்யாணமெல்லாம் ஒண்ணும் ஆகலே..?"


"அது எப்படிப்பா உனக்கு தெரியும்.."


"தெரியும்ப்பா.."


"அது தான் எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே..?"


"அவ என் கம்பெனியில் தான் வேலை செய்யறா..?"

"ஓ.. அது எப்ப இருந்து .."


"நான் ஜாயின் பண்றதுக்கு முன்னாடி இருந்தே.. அவ அங்க தான் வேலை செய்யறா.." என்ற மகனின் கூற்றைக் கேட்டவருக்கு, மகனின் நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் புரிபட்டது.


தந்தை தான் சொன்னதைக் கேட்டு அமைதியாக சில நிமிடங்கள் இருப்பதைக் கண்டு "அப்பா என்னால் அவளைத் தவிர வேறு யாரையும் உறுதியாக திருமணம் செய்து கொள்ள முடியாது.." என்றான்.


அவனோ, மகனை கூர்ந்து பார்த்துக் கொண்டே "அது தான் மகிழி இடம் அந்த பெண்ணை அம்மான்னு சொல்லி வச்சு இருக்கீயா..?"


" நான் சொல்லலே.. பர்ஸ்லே வச்சு இருந்த போட்டோ பார்த்து , அவளே அம்மான்னு சொன்னா.. நானும் அப்படியே விட்டுட்டேன். அது எப்படி உங்களுக்கு தெரியும்.."


"ஓ ! புரோவில் வச்சு இருப்பது பத்தாதுன்னு பர்ஸ்லேயும் வச்சு இருக்கே.."


"அப்பா ! அது எப்படி உங்களுக்கு தெரியும்.."


" தரகர் பொண்ணுக போட்டோ கொடுத்திருந்தார். அதில் திகழொளி போட்டோ இருந்துச்சு. மகிழி அதைப் பார்த்துட்டு , தாத்தா அம்மா ..அம்மான்னு போட்டோவை காட்டி சொன்னா.. அதன் பிறகு எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு, உடனே உன் ரூம்லே தேடினேன் . உன் புரோவில் போட்டோ அவளோ இருந்துச்சு.." என்ற தந்தையை வியப்பாக பார்த்தான்.


அவரோ ,மகனின் வியந்த பார்வையை அலட்சியம் செய்துவிட்டு , " அந்த பெண் இன்னும் உன்னை விரும்புதா? இந்த கல்யாணத்திற்கு சம்மதிப்பாளா..? "என்றார்.




"அவளை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு.."


"மிக இது விளையாட்டு காரியம் இல்லை. உங்க இரண்டு பேரோட வாழ்க்கை ! நல்லா யோசித்து சொல்லு!"


"ப்பா நான் நல்லா யோசித்து தான் சொல்றேன். எனக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா ! அது கூட மட்டும் தான் நடக்கும். இது என் தீர்மானமான முடிவு.."



மகனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை கண்ட மாறன் ஒரு நெடிய பெருமூச்சைத்து விட்டவர் , "நீ பிடிவாதமாக இருப்பதால் நான் எடுக்க வேண்டியதை பார்க்கிறேன். ஆனால், ஒண்ணு.." என்றவர் மகனை நேர் பார்வை பார்த்தார்.


தந்தையின் கூர் பார்வையைக் கண்டு "என்னப்பா.." என்றவனிடம்.


"இரு கை தட்டினால் தான் ஓசை ! அது போல் கல்யாணம் என்பது இரு மனங்களின் இணைவு. அது முழு மனதுடன் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தியோ, இல்லை பழி வாங்கவோ..உன் கோபத்தை தீர்த்துக் கொள்வதற்காகவோ இந்த கல்யாணம் இருக்க கூடாது.."


" அப்பா இன்னும் நீங்க என்னை நம்பலே அப்படித்தானே..?"



நான் நம்பறேன் ! நம்பலே ? அது இரண்டாவது பிரச்சினை..ஆனால், என் பையன் வாழ்க்கை மட்டுமில்லே, அந்த பொண்ணோட வாழ்க்கையும் இதில் அடங்கியிருக்கு.அதனால் தான் கேட்டேன்.."


"நீங்க நினைப்பது போல் எதுவுமில்லை. அவங்க வீட்டில் அவளுக்கு இப்ப மாப்பிள்ளை பார்க்கிறாங்க.. என்னால் அவளை வேறு யாருடனும் சேர்த்து பார்க்க முடியாது.."என்ற மகனை யோசனையாக பார்த்தவருக்கு, மகனின் இந்த நாலு வருட கால வாழ்க்கை அவன் சொன்னதில் இருந்த உண்மையை உணர்த்தியது.



எப்படியோ இனியாவது மகன் மகிழ்ச்சியோடு வாழ்ந்தால் சரி என்று நினைத்தார்.கடைசியாக அவருக்கு எழுந்த சந்தேகத்தையும் மகனிடம் கேட்டே விட்டார்.


"மிகா மகிழிக்காக இந்த கல்யாணம் இல்லை தானே.." என்றவரிடம்.. "எனக்காகவும் தான், மகிழிக்கவும் தான்.." என்றான் புதிராக .


"மிக நீ பழசை மனதில் வைத்து எதையும் செய்து விடாதே ப்பா.."


"அச்சோ அப்பா நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்லை. கண்டதையும் போட்டு நீங்க குழப்பிக்காம எனக்கு திகழலை கல்யாணம் செய்து வைங்கப்பா ! ப்ளீஸ்.." என்று தந்தையின் கரத்தை பற்றி கேட்கவும் மகனின் செய்கையில் அவரும் உச்சி குளிர்ந்து போனார்.


உலகமாறன் மனதிற்குள் அடுத்து தான் செய்ய வேண்டிய காரியத்தை பற்றி தீவிரமாக சிந்திக்க தொடங்கினார்.


மேலும் இரண்டு தினங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாகவே சென்றது.


மிகனுக்கு அலுவலக வேலை சுழல் போல் இழுத்துக் கொண்டது. அவனால் திகழொளி இடம் வேலையை தவிர வேறு எதுவும் பேச நேரம் கிடைக்காமல், வேலையில் மூழ்கினான்.


திகழொளியோ, மிகனின் பிரச்சினை இல்லையே என்று நிம்மதி அடைய முடியாமல், கதிரவன் அவளை படுத்தி எடுத்தான்.


அமுதனிடம் திகழொளியின் கைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு, கதிரவன் அடிக்கடி அவளை அழைத்து பேச முயற்சி செய்தான்.


திகழொளியோ, முடிந்தவரை ஏதாவது காரணம் சொல்லி அவனிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள்.


அவள் மனமோ செய்வதறியாது தவித்தது.கதிரவனை தன்னால் திருமணம் செய்து வாழ முடியுமா? என்ற கவலை நாளுக்கு நாள் வேரூன்றி அவளை பயமுறுத்தியது.



இதற்கிடையில் மிகனிடமும் அந்த வசமாக சிக்கினாள். ஏதோ சந்தேகம் கேட்க அவன் அறைக்கு வந்தவளை அவன் கடித்து குதறினான்.


தந்தையிடம் நல்லவனாக கல்யாண ஏற்பாட்டைச் சொல்லி விட்டு.. அவளிடம் தன் கோபத்தை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தான்.


"மிஸ்டர் கதிரவன் எப்படி இருக்கார் .போன் பேசுவாரா?"என்று இயல்பாக கேட்பது போல் கேட்டான்.


அவளும் அவனின் சூது அறியாமல் "ம்ம்ம்ம் ! நல்லா இருக்கார் .." என்று எதார்த்தமாக கூறினாள்.


அவனோ , "ஓ..! அப்ப மேடம் தினமும் போன்ல பேசி கொஞ்சி குழவிறீங்க.. நடக்கட்டும், நடக்கட்டும் எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்கிறேன்.."என்றவனிடம்.


"ஏன் இப்படி குதர்க்கமாக பேசறீங்க..? நீங்க ரொம்ப மாறீட்டீங்க..?"


"ஆமாம் மாறிட்டேன் தான்.. நீ தான் டீ அதற்கு காரணம்..?"


"மிகன் நான் பல தடவை சொல்லிட்டேன். டீ போட்டு பேசாதீங்க..நான் இன்னொருவருக்கு மனைவி ஆகப் போறவ..?"


" ஓ!அப்படி வேறு உனக்கு கனவு இருக்கா..?"என்றவன், அவளின் அருகில் வந்து அவள் எதிர்பாராத பொழுது, அவளின் முகத்தைப் பற்றி "அவன் கூட எப்படி கல்யாணம் நடக்கும்ன்னு நானும் பார்க்கிறேன். இந்த ஜென்மத்தில் உனக்கு கல்யாணம்ன்னு நடந்தா ?அது ஏன் கூட மட்டும் தான்.." என்றவனின் கண்களில் சொல்லிடங்கா கோபம் மின்னியது.


அவனின் கோபத்தைக் கண்டவளுக்கு மனதிற்குள் அச்சம் பிறந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல்,தன்னைப் பற்றியிருந்த அவனின் கைகளைத் தட்டி விட்டபடி.. "உங்களால் என்ன முடியுமோ பார்த்துக்கோங்க.."என்றாள்.


அவனோ, "பார்க்கத் தான் போறேன்.." என்றவனை அலட்சியம் செய்த படி அறைவாயில் வரை சென்றவள், ஒரு நொடி அவனை திரும்பி பார்த்தாள். அவனும் அவளையே பார்த்தான்.


அவளோ அவன் அருகில் வந்து" எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.." என்றாள்.


அவனோ, ""என்ன..?" என்றான்.


"மிகன் உங்க மனசுலே நான் இருக்கேனா?வந்து நீங்க என்னை விரும்புகிறீர்களா..?"


"இல்லை.." என்று சட்டென பொய்யுரைத்தான்.


"அப்புறம் எதுக்கு இப்போ என்னை கல்யாணம் செய்ய நினைக்கிறீங்க..?"


"கண்டிப்பா சொல்லனுமா..?"

"ஆமாம்.."


"மகிழிக்காக, நீ செய்த பாவத்திற்காக..அப்புறம் வேறு யாரையோ கல்யாணம் செய்துட்டு, நீ நிம்மதியா வாழக் கூடாது ! அதுக்குத் தான்.."


"நான் எந்த பாவமும் செய்யலே.இதை நான் பல தடவை சொல்லிட்டேன்.என் நிம்மதியே கெடுத்து உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது..?"


"ம்!உன்னால் நான் அனுபவிச்ச நரக வேதனைக்கு பரிகாரம் வேண்டாமா? அதுக்குத் தான்.."


"நான் என்ன சொன்னாலும் நம்பவே மாட்டீங்களா?"


"நீ சொல்றதையெல்லாம் நம்ப முடியாது . உண்மைன்னு ஒண்ணு இருக்கு..?"


"அதே தான் நானும் சொல்றேன். நல்லா பொறுமையா சிந்தித்து பார்த்தால் உண்மை உங்களுக்கே புரியும்.."


"புரிந்தவரை போதும்.."


"என் மேலே இத்தனை வெறுப்பை வைச்சுட்டு , என்னை கல்யாணம் செய்து எப்படி கடைசி வரை வாழ முடியும்..?"


"அதை பற்றி உனக்கு என்ன கவலை.."


"இதிலே என் வாழ்க்கையும் இருக்கே..அது தா கேட்கிறேன்..?"


"ம்ம்ம்ம்! அது கல்யாணத்துக்கு அப்புறம் நீயே தெரிஞ்சுப்பே..?"


"ப்ளீஸ் மிகன் உங்க எண்ணத்தை மாத்துங்க! என்னால உங்க கூட தினம்..தினம் போராட முடியலே. நீங்க என்ன நினைக்கிறீங்க? என்ன செய்யறீங்க? எனக்கு எதுவுமே புரியலே.."


"புரியாத வரைக்கும் நல்லது தான்.."


"நான் எந்த தப்பும் எப்பவுமே செய்யலே மிகன். நான் செய்த ஒரே தப்பு உங்களே மனசார நேசித்து தான்.."


"அது தான் சொல்றேன் என்ன மட்டும் நேசித்து இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே..?"


"நீங்க நம்புனாலும்? நம்பாட்டியும்? நான் உங்கள மட்டும் தான் எப்பவும் நேசித்தேன்.." என்றவள் அந்த பிறகு நிற்காமல் அறையை விட்டு வெளியே வேகமாக வந்தவள், சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள்.


தன் பதட்டத்தையும், இயலாமையும், அழுகையும் கட்டுபடுத்தவே முடியவில்லை.. உடன் பணிபுரிவோரின் கவனத்தை ஈர்க்காமல், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள பெரும் பாடு பட்டாள்.


அவளின் நினைவுகளில் பழைய ஞாபகங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, அவளை சூறாவளியாக சூழ்ந்து கொண்டது.



நினைவுகளின் தாக்கங்களை தாங்க முடியாமல் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, அமுதனை வரவழைத்து வீட்டிற்குச் சென்றாள்.


தமக்கையின் முகத்தைப் பார்த்தே, அமுதன் ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டான்.


ஆனால், இப்போதைக்கு எதையும் கேட்டு அவளை மேலும் தொல்லை செய்ய வேண்டாம் என்று அமைதியாக இருந்தான்.


தன் தாய் , தந்தை இடம் தலைவலி என்று திகழொளி பொய்யுரைத்து விட்டு படுக்கையில் தலை சாய்த்தாள்.


ஆனால் , திகழொளிக்கும் நிம்மதிக்கும் வெகு தூரம் போல்..அந்த நேரத்தில் கதிரவன் அவள் கைபேசிக்கு அழைத்தான்.


இவளோ வழியே இல்லாமல் அழைப்பை ஏற்றாள்.


அந்த பக்கம் கதிரவனோ "திகழி இவீனிங் நீ ப்ரீயா இருந்தா? வெளியில் எங்காவது போலாமா..? கொஞ்சம் உன்னிடம் பேச வேண்டும் .."என்றவனிடம்.


"இல்லை. எனக்கு உடம்பு முடியவில்லை.என்னால் வரமுடியாது .."என்று சொன்னவள், அவனின் பதிலைக் கூட கேட்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.


அந்த பக்கம் கதிரவனோ, இவளின் செய்கையில் குழம்பினான்.. அவன் மனதிற்குள் தன்னை அவளுக்கு பிடிக்கவில்லையோ? என்ற சந்தேகம் வலுப்பெற்றது.


மிகனோ, திகழொளியின் நிழற்படத்தை எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டே, மனதிற்குள் 'ஒளி நீ சொல்வது எல்லாம் உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் , அதற்கு வாய்ப்பே இல்லாமல் நடந்த நிகழ்வுகள் எல்லாம் சாட்சியாக இருக்கே.." என்று மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்தான்.



தொடரும்..
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 12

காலம் தான் தனக்குள் எத்தனை விந்தையை மறைத்து வைத்திருக்கிறது. அதை நாம் அந்த.. அந்த சூழ்நிலையில் தான் உணர்ந்து கொள்ள முடியும்.

அது போல் மிகனின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கேள்விபட்டதிலிருந்து, திகழொளிக்கு மனதிற்குள் கொஞ்சம் நிம்மதியும், கொஞ்சம் துக்கமும் இருவேறு உணர்வுகள் அவளை அலைக்கழித்தது.

என்ன தான் அவன் தன்னை நேசிக்கவில்லை என்று பொய்யுரைத்தாலும், அன்றிலிருந்து இன்று வரை அவன் அவளை நேசிக்கிறான் என்பது அவள் மனம் அறிந்த உண்மை.

அவன் மறைத்தாலும், அவள் உள் உணர்வுக்கு அது நன்றாகவே தெரிந்தது. ஆனால், இந்த உண்மையை என்று தான் அவன் உணர்ந்து கொள்வனோ? என்று எண்ணினாள்.

திகழொளி விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததிலிருந்து, தனக்குள்ளேயே போராடி.. போராடி ஓய்ந்து போனாள்.இரவு உணவையும் வேண்டாமென்று கூறிவிட்டு அறையிலேயே அடைந்து கிடந்தாள்.


அவளால் மிகனுடன் போராட முடியவில்லை.. தினம், தினம் அவனின் குத்தல் பேச்சை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..தப்பே செய்யாமல் எத்தனை நாள் தான் தண்டனை அனுபவிப்பது. வேலையை விட்டு விடலாம் என்று நினைத்தால் அதற்கும் வழி இல்லை.


வீட்டில் உள்ளவர்களிடம் அவள் என்னவென்று சொல்லுவாள்.மிகனைப் பற்றி சொன்னால், ஒத்துக் கொள்வார்கள் தான். ஆனால், மிகனை யாரும் தவறாக எண்ணுவதில் அவளுக்கு விருப்பம் இல்லை.


அவன் எதற்காக திருமணத்திற்கு வற்புறுத்துகிறான் என்றே அவளுக்கு புரியவில்லை.அவனைப் பற்றி எப்படி யோசித்தாலும் குட்டிச் சுவரில் மோதிக் கொள்வதைப் போலவே அவள் நிலைமை இருந்தது.

தன் பெற்றவர்களை எதிர்த்துக் கொண்டு அவனை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள அவளால் முடியவே முடியாது.


அவள் மீது வெறுப்பை மட்டுமே வாரி வழங்கும் அவனை எந்த நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்ள முடியும்? இருவரின் வாழ்க்கையும் இன்னும் மோசம் தான் ஆகும்.அது ஏன் அவனுக்கு புரியவில்லை? என்று பலதையும் யோசித்து.. யோசித்து அவள் சோர்ந்து போனாள்.


விடை தெரியாத கேள்விக்கு என்ன யோசித்தாலும் பதில் கிடைக்கப் போவதில்லை என்று இறுதியாக உணர்ந்தவள் , நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுடன் காலத்தின் கையில் தன் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு உறங்க முற்பட்டாள்.


மிகனோ, மகிழியை தன் நெஞ்சில் படுக்க வைத்துக் கொண்டு, அவளின் தலையை வருடியபடி திகழொளியைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தான்.


அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்ற உண்மை அவனுக்கு ஆணித்தரமாக உரைத்தது. சமீபகாலமாக அது நன்றாகவே புரிந்து.


அவளை வேறு ஒருவருக்கு ஒரு போதும் தன்னால் விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் அவனுக்கு சிறிதும் ஐயமில்லை.


அவள் தானே தன்னுள் நேசம் என்ற உணர்வை முதல் முதலாக விதைத்தவள் .அது இன்று ஆணிவேராக படர்ந்து விட்டது. அவள் மீது இருக்கும் இந்த நேசம் சிறிதளவு கூட குறையாமல் அதிகரித்து மரமாக வளர்ந்து நிற்கிறது.


விதியின் விளையாட்டால் இன்று வரை அவள் மீது அவன் கொண்டுள்ள நேசத்தை அவன் வெளிப்படுத்தியது இல்லை.ஏன் அவன் தந்தையை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

சம்பந்தபட்டவளுக்கே தெரியாத பொழுது வேறு யாருக்கு தெரிந்து தான் என்ன ஆகப்போகிறது என்று சலிப்புடன் நினைத்துக் கொண்டான்.

ஆனால், இப்போது காலம் எப்படியும் அவளை தன் கையில் சேர்க்கும் என்று உறுதியாக நம்பினான்.அவனின் நேசத்தின் மேல் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

அவனின் நம்பிக்கை பொய்க்காமல் மகன் கொடுத்த முகவரியில் உலகமாறன் திகழொளி வீட்டிற்கு சென்று அவளின் பெற்றவர்களை சந்தித்தார்.

மிகன் திகழொளியின் முகவரியை தெரிந்து வைத்திருப்பது உலகமாறனுக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை..மகன் திகழொளியை எந்தளவு விரும்புகிறான் என்பது அவர் நன்றாகவே அறிந்து இருந்தார்.

உலகமாறனை நாலு வருடங்களுக்கு பின்பு கண்ட பொன்னியும், அறவாணனும் மனதில் ஆயிரம் வருத்தம் இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அன்புடனேயே வரவேற்றனர்.

அவரோ அறவாணனின் தற்போதைய நிலையை கண்டு மனம் கலங்கினார். எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்தார். ஏதோ ஒரு வகையில் அவரின் இந்த நிலமைக்கு தன் மகனும் காரணம் என்று மனம் வருந்தினார்.


பொன்னி கொடுத்த காஃபியை மறுக்காமல் வாங்கி குடித்தவரின் மனதிற்குள், பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்ற சிந்தனையே ஓடியது.


நடந்த நிகழ்வுகளை நினைத்து ஒரு புறம் திகழொளியை பெண் கேட்க தயக்கமாக இருந்தாலும்,மறுபுறம் மகனின் ஆசையை நினைத்து தன் தயக்கத்தை தூக்கி போட்டு விட்டு பேச தயாரானார்.


" சார் நான் உங்களை பார்க்க வந்தது ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசத்தான்.என்றோ நடந்து இருக்க வேண்டிய விஷயம் பல குழப்பங்களால் நடக்காமல் போய்விட்டது. இப்போது தான் அதற்கான நல்ல நேரம் வந்து இருக்கு .."என்று புதிர் போட்டபடி பேச்சை ஆரம்பித்தார் உலகமாறன்.

திகழொளியின் பெற்றவர்களுக்கு அவர் பேசியது ஒன்றுமே புரியவில்லை.எதுவாக இருந்தாலும் அவரே சொல்லட்டும் என்று அமைதியாகவே இருந்தனர்.


உலகமாறனோ, அவர்களின் மனநிலையை உணர்ந்து கொண்டு சொல்ல வந்ததை சுற்றி வளைக்காமல் போட்டு உடைத்தார்.


"நான் திகழொளியை மிகனுக்கு பெண் கேட்க வந்து இருக்கேன்.." என்று அவர் கூறியவுடன் பொன்னியும் அறவாணனும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்கள்.

பதிலே பேசாமல் உறைந்து இருந்தவர்களிடம் "உங்களுக்கு இது திகைப்பாகத் தான் இருக்கும். ஆனால், நான் உண்மையாகத் தான் கேட்கிறேன்.நடந்து முடிந்தவற்றை பற்றி பேசி மேலும், மேலும் ஆறி வரும் காயத்தை அதிகப் படுத்திக்க வேண்டாம்.."என்றவர் பேச்சை நிறுத்தி அவர்களை ஏறிட்டுப் பார்த்தார்.


ஆனால் அவர்களிடம் எந்த மாறுதலும் இல்லை. மீண்டும் அவரே தொடர்ந்தார்.

"மிகன் செய்த தவறுக்காக நான் மீண்டும் உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்கிறேன். உண்மையை சொன்னால் அன்று அந்த சூழலில் பிரச்சினையை எப்படி கையாள்வது என்று அப்போது எனக்குமே தெரியவில்லை.." என்றவர் ஒரு நெடிய பெருமூச்சுடன் பேச்சை தொடர்ந்தார்.


"தயவுசெய்து பழசை மறந்து விடலாம்.மிகனுக்கு திகழொளியை கல்யாணம் செய்து கொடுங்க. நாங்க நல்லா அவளைப் பார்த்துப்போம்.இத்தனை வருஷம் இரண்டு பேருக்கு கல்யாணம் நடக்காமல் இருப்பது கூட இவர்கள் இருவரும் சேர வேண்டும் என்று தான் போல்.." என்றவரை உயிர்ப்பே இல்லாமல் பொன்னியும் அறவாணனும் பார்த்தார்கள்.


உலகமாறனுக்கோ, அவர்களின் அமைதி மனதிற்குள் கலக்கத்தைக் கொடுத்தது. இருந்தாலும் மகனுக்காக பேசினார்.

"உண்மையை சொல்லனும்ன்னா என்‌ மகனின் வாழ்க்கை இப்ப உங்க கையில் தான் இருக்கு. இந்த நாலு வருடமாக அவன் அவனாக இல்லை. நடைபிணமாக வாழ்கிறான்.."என்றவர் கண்கலங்க தன் மகன் செய்த காரியத்திற்கான விளக்கத்தையும் அதன் பின் தன் குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளையும் அவர்களிடம் கொட்டித் தீர்த்தார்.

உலகமாறன் சொன்னதைக் கேட்டு திகழொளியின் பெற்றவர்கள் பேச்சற்று சிலையாக அமர்ந்திருந்தனர்.

இப்படி கூட நடக்குமா ? இது எந்த மாதிரி அன்பு என்று சரியாக மிகனின் பக்கம் நின்று யோசித்தார்கள். அவனால் தாங்கள் பட்ட கஷ்டம் அதிகம் என்றாலும், உண்மையை கேட்ட பின் அவன் மீது வருத்தமே மேலோங்கியது .

விதியின் விளையாட்டை என்ன வென்று சொல்வது என்று தங்களுக்குள் நொந்து கொண்டார்கள்.

உலகமாறனோ, அறவாணனின் கைகளை பிடித்துக் கொண்டு "சார் ப்ளீஸ் என் மகன் வாழ்க்கை இப்போது நீங்க சொல்ற பதிலே தான் இருக்கு.".என்றவரிடம்.

அறவாணனும் அவரின் கைகளை பற்றிக் கொண்டு, "நீங்க சொல்வது எல்லாம் புரியுது . ஆனால், திகழிக்கு இப்போது தான் ஒரு சம்பந்தம் கூடி வந்திருக்கு.." என்று கதிரவனை பற்றி சொன்னவரிடம்.

"அது இன்னும் உறுதியாக வில்லை தானே. எத்தனையோ உறுதியான கல்யாணம் கூட கடைசி நொடியில் நின்று இருக்கிறது. பெண் பார்த்துட்டு தானே போய் இருக்காங்க. அதனால் என்ன.?நீங்க சம்மதித்தால் வரும் முகூர்த்தத்திலேயே சிம்பிளா கோவிலில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் .."என்று அவர் பிடியிலேயே நின்றார்.

" நீங்க சொல்வது எல்லாம் சரி தான். ஆனால் ,இன்னும் கூட எங்களால் சில விஷயங்களை நம்ப முடியவில்லை.. "என்றார் அறவாணன்.

"இருங்க நான் மிகனை வரச் சொல்லுகிறேன். அவனே பேசட்டும். அவன் செய்த தப்புக்கு அவன் தான் பதில் சொல்லனும்.." என்றவர் .. அறவாணன் மறுக்க, மறுக்க மிகனை அழைத்து திகழொளி வீட்டிற்கு வரச் சொன்னார்.

தந்தை சொல்லை தட்டாமல் மிகனும் திகழொளி வீட்டிற்கு அடுத்த அரை மணிநேரத்தில் வந்து சேர்ந்தான்.

நான்கு வருடங்கள் கழித்து அவனை பார்த்தவர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. தயக்கத்துடனேயே வரவேற்றனர்.

ஆனால், அவனுக்கு அது போல் எந்த தயக்கமும் இல்லை.. அறவாணனின் நிலையை கண்டு அதிர்ந்தவன் தனக்குள்ளேயே நொந்து கொண்டான்.

அவரின் அருகில் அமர்ந்து அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு " சாரி அங்கிள் நடந்த எல்லா தப்புக்கும் நான் உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்கிறேன்.எனக்கு அன்று வேறு வழி தெரியலை.."என்றவன் அன்றைய தன் மனநிலையை மறைக்காமல் சொன்னான்.

ஏற்கனவே உலகமாறன் எல்லாவற்றையும் சொல்லி இருந்ததால் அதிர்ச்சி ஆகாமல், மிகன் சொன்னதை அமைதியாகவே கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால், மனதிற்குள் மகள் பட்ட கஷ்டங்களையே நினைத்து இருந்தனர். அவர்கள் என்ன தான் மன்னிப்பு கேட்டாளும் அவர் மகள் அடைந்த துன்பத்திற்கு ஈடாகாது.அது மட்டும் இன்றி அவள் மீது தாங்களுமே கோவப்பட்டு பேசாமல் இருந்தோமே ! என்று தங்களை நினைத்தே குற்ற உணர்வில் தவித்தார்கள்.


"அங்கிள் பழசை மறந்துட்டு எனக்கு திகழொளியை கல்யாணம் செய்து கொடுங்க. நான் நிச்சயமாக நல்லா பார்த்துப்பேன்.என்னால் அவளை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. அதுமட்டுமில்லை அவளாலும் என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ முடியாது .."என்று உறுதியாக சொன்னான்.

மிகன் சொன்னதைக் கேட்டவர்கர்களுக்கு தங்களை விட தங்கள் மகளை இவன் நன்றாக புரிந்து வைத்திருக்கிறானோ ? என்ற எண்ணம் வலுத்தது.மனதிற்குள் அதே சிந்தனையுடன் அவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்கள்.

அவர்களின் அமைதி அவனுள் கலக்கத்தை கொடுத்தது. எப்படியாவது அவர்களை சம்மதிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் "அங்கிள் உங்களுக்கு இன்னும் என் மேல் நம்பிக்கை வரவில்லையா ? நான் என்ன செய்தால் நம்புவீர்கள்.."என்றவனிடம்.

"அப்படி எல்லாம் இல்லை தம்பி .இதில் எங்கள் முடிவை விட திகழியின் முடிவு தான் முக்கியம். என் பொண்ணு முகத்தில் சிரிப்பை பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது .அவளோட சந்தோஷம் தான் இப்போது எங்களுக்கு மிக அவசியம். நாங்கள் அவளிடம் கலந்து பேசிட்டு சொல்றோம்.. "என்று பட்டும் படாமலும் சொன்னார்.

ஆனால், அவனோ விடாக் கண்டனாக "திகழி இடம் நான் பேசிக் கொள்கிறேன். தினமும் நான் அவளை பார்க்கிறேன். அதனால் எனக்கு அவளிடம் பேசி சம்மதிக்க வைப்பது எளிது.. "என்றவனை புரியாமல் பார்த்தார்கள் அவளின் பெற்றவர்கள்.

அவர்களின் புரியாத பார்வையை கண்டு குழம்பியபடியே, " திகழி உங்ககிட்ட சொல்லலையா ? நாங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில் தான் வேலை செய்கிறோம்.." என்று உண்மையை போட்டு உடைத்தான்.

அவன் சொன்னதைக் கேட்டவர்கர்களுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.இவ்வளுவு பெரிய விஷயத்தை ஏன் மகள் தங்களிடம் சொல்லவில்லை என்ற எண்ணம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால், அவள் எப்படி சொல்லுவாள். அவள் தங்களுடன் இயல்பாக பேசியே பல வருடங்கள் ஆகிவிட்டதே ! தாங்களும் அவளுக்கு அந்த வாய்ப்பை தரவில்லையே என்று வருந்தினார்கள்.

இன்னும் மகள் மனதளவில் தங்களிடமிருந்து விலகியே இருக்காளோ? இவனை தினமும் பார்த்து பழகிய பின் கூட கதிரவன் உடன் எப்படி திருமணத்திற்கு சம்மதித்தாள் என்ற கேள்வி அவர்களை புழுவாக குடைந்தது.

மகன் இத்தனை சொல்லியும் அவர்கள் பிடி கொடுக்காமல் இருப்பது உலகமாறனுக்கு மிகுந்த சங்கடத்தை கொடுத்தது.

மகனின் வாழ்க்கை என்னாகுமோ? என்ற கவலை அவரின் மனதை அரித்தது.

ஆனால் மிகனுக்கு அந்த மாதிரி எந்த கவலையும் இல்லை போல் திடமாகவே இருந்தான் .அவர்களை எப்படியும் சம்மதிக்க வைத்து விடலாம் என்று ஆணித்தரமாக நம்பினான்.

இங்கே மிகன் செய்து வைத்திருக்கும் குளறுபடி தெரியாமல் திகழொளியோ தன் வேலையில் மூழ்கி இருந்தாள்.


தொடரும்..
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 13

எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்ற பழமொழியை பொய்யாக்குவது போல் உலகமாறனும், மிகனும் என்ன பேசியும் திகழொளியின் பெற்றவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை..

தங்கள் மகளின் முடிவைக் கேட்காமல் தங்களால் சம்மதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.

மகள் இந்த நான்கு வருடம் பட்ட கஷ்டமே வாழ்வு முழுமைக்கும் போதும். இனி ஒரு முறை அவள் கலங்குவதை தங்களால் காணமுடியாது என்று நினைத்தார்கள்.

உலகமாறனும், மிகனும் தாங்கள் நினைத்து வந்தது நடக்காத வேதனையில் முகம் சோர்ந்து விடைபெற்றுச் சென்றனர்.

மகனின் வாழ்க்கை என்ன ஆகுமோ? என்ற பெரும் பயம் உலகமாறன் மனதைக் கவ்வியது.
மிகனுக்கோ, எப்படியும் திகழொளியை சம்மதிக்க வைத்து விடலாம் என்ற பெரும் நம்பிக்கை அவனுக்கு பக்க பலமாக இருந்தது.

அவர்கள் சென்ற பின் மனைவிடம் அறவாணன் "பொன்னி நீ என்ன நினைக்கிறே..உன் மனதுக்கு என்ன தோணுது.." என்று மனைவியிடம் கருத்துக் கேட்டார்.

அவரோ, "எனக்கு என்னவோ திகழி சம்மதிப்பாள் என்று தான் தோணுதுங்கோ.." என்றவரிடம்..

"எப்படி சொல்கிறாய்.."

"இந்த கொஞ்ச நாட்களாக அவள் முகத்தில் சிறு மலர்ச்சி தெரிகிறது. அது மட்டுமில்லை மிகன் கூட வேலை செய்வதை ஏன் நம்மிடம் மறைக்கனும். அவள் மனதில் இன்னும் அந்த பையன் மீது விருப்பம் இருப்பதால் தானே .."என்ற மனைவியிடம்.

"அப்படி எப்படி சொல்றே.. ஒரு வேளை அந்த பையன் செய்த காரியத்தால் சுத்தமாக அவளை வெறுத்து விட்டாளோ !என்னவோ ? அதனால், பத்தோடு ஒன்றாக தன்னுடன் மிகன் வேலை செய்வதை ஒரு பொருட்டாக எண்ணாமல் , சொல்லாமல் கூட இருந்து இருக்கலாம் இல்லையா..?"

"எனக்கு அப்படி தோணலைங்க.ஒரு வேளை சொன்னால் நாம் ஏதாவது தப்பாக நினைத்து, வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிவிடுவோமோன்னு பயம் கூட இருக்கலாம்.."என்று மகளின் செயலை சரியாக கணித்தார்.


"அப்படி அந்த பையன் மீது இன்னும் விருப்பம் இருந்தால் ,எப்படி கதிரவனை கல்யாணம் செய்துக்க சம்மதித்து இருப்பாள்.."என்றார் அறவாணர்.

"அவள் நமக்காக மனதை மறைச்சுட்டு, சம்மதம் சொல்லி இருக்கலாம்.நம்மை கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைச்சு இருக்கலாம்.."என்ற மனைவியை யோசனையாக பார்த்தார்.

ஒரு வேளை அப்படிக் கூட இருக்குமோ..? மகள் தங்களுக்காக சம்மதித்து இருப்பாளா? என்று நினைக்கத் தொடங்கினார்.

மனைவி சொன்னது உண்மையாக இருந்தால், தங்களுக்காக ,தன் சந்தோஷத்தை விட்டு கொடுக்கும் மகளுக்காக ! தாங்கள் என்ன வேணாலும் செய்யலாம் என்று நினைத்தார்.

மிகன் கூறியது போல் அவள் மனதிற்குள் அந்த பையன் இருந்தால் ! அவளால், வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழவே முடியாது.என்று அவரும் உறுதியாக நம்பினார்.

பெற்றவர்களோ, மகளின் மனதை அறிய காத்திருந்தனர்.மகளோ கதிரவனை ஏற்றுக் கொள்ள முடியாமலும் ,மிகன் கேட்டதற்கு சம்மதம் சொல்லவும் முடியாமல் ,தன் மனதுடனும் போராட முடியாமல், திக்கு தெரியாத கானகத்தில் சிக்கியது போல் தவித்துக் கொண்டிருந்தாள்.

கதிரவன் அவளை தேடிக் கொண்டு அன்று கம்பெனிக்கே வந்து விட்டான். முன்தினம் அவள் வெளியில் அழைத்ததற்கு, 'எனக்கு உடம்பு சரியில்லை என்னால் வரமுடியாது' என்று சொன்னதால், அவளைப் பார்க்க வேண்டும் என்று அவளைத் தேடி அவள் வேலை செய்யும் இடத்திற்கே வந்து விட்டான்.

ஆனால் திகழொளியோ, சற்றும் அவன் வரவை எதிர்பார்க்காததால் அவனைக் கண்டு திகைத்துப் போனாள்.

மிகனுக்கு மட்டும் இது தெரிந்தால் என்ன ஆகுமோ? என்று மனதிற்குள் பயந்தாள். சும்மாவே எகிறி குதிப்பான்.இது வேறு தெரிந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவான் என்ற பயம் அவளை சூறாவளியாக சூழ்ந்து கொண்டது.

மிகன் அறியாமல் எப்படியாவது பேசி, கதிரவனை அனுப்பி வைத்து விட வேண்டும். என்று எண்ணியவள், அவனை கேண்டீன் அழைத்துச் சென்றாள்.

இருவரும் காலியான இருக்கை தேடி அமர்ந்தனர்.திகழொளியோ எதுவுமே பேசாமல் படபடப்புடனேயே அமர்ந்திருந்தாள்.

"இப்ப உடம்பு எப்படி இருக்கு திகழி .." என்று கேட்ட கதிரவனிடம்..

"ம் ! நல்லா இருக்கு.." என்று சுரத்தே இல்லாமல் பதில் அளித்தாள்.

"ஏதாவது சாப்பிட்டுகிட்டே பேசலாமா? "

"இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம். உங்களுக்கு ஏதாவது எங்கிட்ட சொல்லனுமா ? எனக்கு போகனும். வேலை இருக்கு.." என்று கேண்டீன் வாசலையே பார்த்துக் கொண்டு பேசினாள்.

அவள் மனமோ, மிகன் வந்து விடக்கூடாது என்று உலகில் இருக்கும் எல்லா தெய்வங்களையும் வேண்டியது.

அவளின் அவசரமான பேச்சும், பரிதவிப்பும், அலைபாயும் விழிகளும் கதிரவனுக்கு குழப்பத்தையே கொடுத்தது.

'இவள் ஏன் இப்படி பதறுகிறாள்? நமக்கு இவளுடன் நேரம் செலவழிக்க வேண்டுமென்று எத்தனை ஆசையாக இருக்கிறது. ஆனால் ,இவளுக்கு அது போல் எந்த ஆசையும் இல்லையா?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.

அவள் காஃபி வேண்டாமென்று சொல்வதை கேட்காமல், இருவருக்கும் காஃபி வாங்கி வந்தான்.

அவளுக்கோ எப்போது இந்த இடத்தை விட்டு போவோம் என்று தவிப்பாக இருந்தது.

அவன் வாங்கி வந்த காபியை வாங்காமல், "நான் தான் எதுவும் வேண்டாம்ன்னு சொன்னேனே.. அப்புறம் எதுக்கு எனக்கு வாங்குனீங்க..?" என்று தன் கோவத்தை மறைக்காமல் அவனிடம் காட்டி விட்டாள்.

"ஏன் திகழி இதற்கு இவ்வளவு டென்ஷன் ஆகறே..? கொஞ்ச நேரம் பேசிட்டே குடிக்கலாமே.. ! மனம் விட்டு பேசினால் தானே, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.." என்றான் கதிரவன்.

மனதிற்குள் அவளோ, 'ஆமாம் இப்போ நான் மனம் விட்டு பேசும் நிலமையிலா இருக்கேன்.? இவன் வேறு நேரம் காலம் தெரியாமல் நம்ம இடத்துக்கே வந்து நம்மளையே உபசரிக்கிறான்..' என்று நொந்து கொண்டாள்.

இவளின் அவசரம் புரியாமல் கதிரவன் காஃபியை ரசித்துக் குடித்துக் கொண்டே, இவளிடம் "காஃபி நல்லா இருக்கு. சூடு ஆறும் முன்னே குடி ! எங்க கம்பெனி கேண்டீனில் கூட காபி இவ்வளவு நல்லா இருக்காது.." என்றான்.

திகழொளி பயந்தது போலவே, அவள் வேண்டிய சாமி அவளை கைவிட்டு விட ,மிகன் கேண்டீன் நுழைவாயிலில் தன் வேக நடையுடன் வந்து கொணடிருந்தான்.

அவனைப் பார்த்தவளின் முகம் பேய் அறைந்தது போல் வெளிறிப் போனது.

கதிரவனோ , அவளின் முகமாறுதலைக் கவனித்து, அவள் பார்வை சென்ற திக்கைக் கவனித்தான்.

அங்கே நெடியவன் ஒருவன் திகழொளியை விழி எடுக்காது பார்த்தபடியே வந்து கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்து ஏன் திகழொளி இப்படி பதறுகிறாள்? என்று கதிரவன் குழம்பினான்.

மிகனுக்கோ , திகழொளி வீட்டிற்கு சென்று வந்த பின் பலதையும் நினைத்து குழம்பியதால், அவனுக்கு தாங்க முடியாத அளவு தலை வலித்தது.

ஒரு காஃபியாவது குடித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கேண்டீன் வந்தான்.

அங்கே திகழொளியை ஒரு ஆடவனுடன் கண்டதும் அவனுக்கு அவள் மீது அளவு கடந்த கோவம் வந்தது. இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காஃபியை வாங்கிக் கொண்டு ஆள் இல்லாத இடம் தேடி அமர்ந்து, இவர்களை பார்த்தபடியே குடித்தான்.

அவனின் விழிகள் திகழொளியை விட்டு அங்கும், இங்கும் அசையவே இல்லை.

திகழொளிக்கோ, அவன் தங்களையே பார்ப்பதைக் கண்டு பயப்பந்து தொண்டையில் அடைத்தது. அவளால், காஃபியை நிம்மதியாக குடிக்க முடியவில்லை.கை ,கால்கள் உதறல் எடுக்க தொடங்கியது.என்ன சொல்லப் போகிறானோ? என்று நினைத்து கலங்கி தவித்தாள்.


திகழொளியின் அருகில் இருந்தவனைக் 'கதிரவன்' என்று மிகன் சரியாக யூகித்தான்.

நெருப்பின் மீது அமர்ந்து இருப்பதைப் போல் திகழொளி அமர்ந்திருந்தாள். சரியாய் பேசவும் இல்லை.அவளின் விழிகள் நிலையற்று அலைபாய்ந்தது.

அவள் பார்வை போன திசையை கண்ட கதிரவனுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது.

மிகனோ, காஃபியை குடித்து முடித்துவிட்டு ஒரு வார்த்தை கூட திகழொளியிடம் பேசாமல் அவளைக் கடந்து சென்றான்.

திகழொளிக்கோ, அவனின் அமைதியே மனதிற்குள் பெரும் புயலை உருவாக்கியது. கதிரவனுக்கோ, திகழொளியின் உடல்மொழியே அவனின் சந்தேகத்திற்கு விடை அளித்தது.
.
கதிரவனிடம் அவள் வார்த்தையால் சொல்லாதை அவள் உடல் மொழி உணர்த்தி விட்டது. அவள் தன்னை தனிமையில் சந்திக்கவும், அலைபேசியில் தன்னிடம் பேச அவள் தவிர்த்தற்கான காரணமும் ,அவள் மனதில் தான் இல்லை என்ற உண்மையும் அவனுக்கு அப்போது நன்றாகவே புரிந்தது.


கதிரவன் மேலும் இருந்து அவளைச் சோதிக்காமல் ,மனம் முழுவதும் வேதனையுடனும் ,வெறுமையுடனும் அவளிடம் விடை பெற்றுச் சென்றான்.

திகழொளியோ , கதிரவன் சென்றவுடன் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தவளுக்கு, வேலையே ஓடவில்லை.மனம் முழுவதும் மிகனின் நினைவே ஆட்கொண்டது.

என்ன சொல்லுவானோ? என்று பயந்தாள்.அவளின் பயத்தை பொய்யாக்காமல் சிறிது நேரத்தில் அவளை அவன் அறைக்கு அழைத்தான்.

தன் தலை எழுத்தை நொந்தபடியே திகழொளி அவன் அறைக்குச் சென்றாள். கதவை தட்டி அனுமதி பெற்று விட்டு உள்ளே சென்றவளிடம், சில நிமிடங்கள் வேலையைப் பற்றி சந்தேகங்களை கேட்டான்.

திகழொளியும் நிம்மதி பெருமூச்சுடன் அவன் கேட்டதற்கு பதில் அளித்தாள். ஆனால், அவள் நிம்மதிக்கு அற்ப ஆயுசு போல் "யார் அவன்..? என்று கேட்டே விட்டான்.

அவளோ, தயங்கியபடியே "கதிரவன்.." என்று சொன்னாள்.

அந்த பேரைக் கேட்டவுடன், "அப்பவே நினைத்தேன். கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ஆஃபிஸ்க்கே அவனை வரவழைத்து கொஞ்சிட்டு இருக்கே.." என்றான் கட்டுக்கடங்காத கோவத்துடன்..

"மிகன் நீங்க தேவை இல்லாமல் பேசறீங்க..நீங்க நினைப்பது போல் எதுவும் இல்லை.."

"என்ன டீ எதுவுமில்லை..நான் தான் பார்த்தேனே.."

"என்னத்தை பார்த்தீங்க.."

"ம்! அவன் கூட நீ ஜோடி போட்டுட்டு வந்ததே. .என்னை அங்கே நீ எதிர்பார்க்கலைங்கிறது நல்லாவே தெரிந்தது. என்னைப் பார்த்ததும் உன் முகம் போனப் போக்கை நான் தான் கண் கூட பார்த்தேனே.."

"மிகன் தப்பு தப்பாவே யோசிக்காதீங்க..நேத்து எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி இருந்தேன் அதனால் பார்க்க வந்தார்.."

"ஓ! மேடம்க்கு கொஞ்சம் உடம்பு முடியலைன்னா கூட கதிரவன் சாருக்கு தாங்க முடியலையோ ? உடனே பார்க்க ஓடி வந்துட்டார் .."என்றவனிடம் என்ன தான் சொல்லுவது என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

அவனோ, " இங்கே நாலு வருசமா உன்னால் மரண வலியை அனுபவிக்கிறேனே, எனக்கு என்னடீ பதில் சொல்லப் போறே.." என்று தன் நெஞ்சை தொட்டு காண்பித்தான்.

அவளோ, பேச்சற்று கற்சிலையாக நின்றாள்.என்ன சொல்லுவாள் அவள் ! வலி அவனுக்கு மட்டுமா? இந்த நொடி வரை அவளும் தான் சொல்லிடங்கா வலியை அனுபவித்துக் கொண்டு தானே இருக்காள் . அதை இவன் உணரவே மாட்டானா? என்று அவள் மனம் அழுதது.

அவள் மெளனமாய் நிற்பதைக் கண்டவனுக்கு மேலும் மேலும் கோவமே அதிகரித்தது.

"செய்வது எல்லாம் செய்துட்டு எப்படித் தான் இப்படி ஒண்ணும் தெரியாத பாப்பாவைப் போல் முகத்தை வைத்துக் கொள்கிறாயோ..?" என்று வெந்த புண்ணில் வேளைப் பாய்ச்சினான்.


அவளோ, என்ன சொல்லி தன் நிலமையை அவனுக்கு புரிய வைப்பாள். எது சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை. அதிலிருந்தும் ஒரு குறை கண்டு பிடிப்பான்! என்று நினைத்தவள் பேசாமலேயே இருந்தாள்.

அவளின் அமைதியை தவறாக புரிந்து கொண்டு "ஓ ! மேடமுக்கு கதிரவன் கூட பேச மட்டும் தான் பிடிக்குமோ ? என் கூட பேசனும்ன்னா அவ்வளவு கஷ்டமா இருக்கா..?" என்று கேட்டான்.

அவளோ , அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள், "ஏன் மிகன் என்னை வார்த்தையால் வதைக்கிறீங்க.. நான் என்ன தான் செய்யனும் ! என்ன செய்தால் உங்களுக்கு என் மீது இருக்கும் கோவமும், வெறுப்பும் தீரும். நான் செத்தால் தான் தீருமா..?" என்று கண்கலங்க தவிப்புடன் கூறியவளை "ஏய் ! "என்று கத்தியபடி அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.

அவளோ, எத்தனையோ நாள்கள் கழித்து கிடைத்த அவனின் அணைப்பில் சுற்றம் மறந்து அழுது கரைந்தாள்.

அவள் சொன்ன சொல் அவனை வாள்கொண்டு அறுத்தது. அவள் அழுது கரைவதை தாங்க முடியாமல், "திகழி ப்ளீஸ் அழுவதை நிறுத்து..!" என்றான்.

அவன் சொல்லியதை அவள் காதில் வாங்கவே இல்லை. தன் நான்கு வருட துக்கத்தையும் அவன் மார்பில் கதறி தீர்த்தாள்.காயத்தை கொடுத்தவனிடமே மருந்து தேடினாள்.

அவனையும் அறியாமல் அவனின் விரல்கள் அவளின் தலையை மென்மையாக வருடிக் கொடுத்து. அவளின் அழுகை மட்டுப் பட்டு விசும்பலுக்கு வந்த பின்பும் அந்த அரவணைப்பு எவ்வளவு நேரம் நீடித்ததோ ! அவர்களே அறியாதது.

சில மணித் துளிகள் கரைந்த பின்னரே அவளைத் தன்னிடமிருந்து பிரித்து, அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தி "திகழி ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோ டீ எல்லா பிரச்சினைகளையும் தீர்ந்துடும்.காலம் பூரா நீ இப்படி என் நெஞ்சில் சாய்ந்து அழலாம் டீ .."என்றவனை தன் விசும்பலைக் கட்டுப்படுத்திக் கொண்டு முறைத்தாள்.

"ஏண்டி இப்படி முறைக்கிறே..? நான் நல்ல வழி தானே சொன்னேன்.."

"அப்ப கூட நான் காலம் பூரா அழனும். அது தான் உங்க ஆசை அப்படித் தானே.."

"ஏய் ! லூசு அதுக்கு அர்த்தம் அது இல்லை. இப்படி என் அணைப்பில் காலம் முழுவதும் இருப்பியே அதை சொன்னேன்.." என்றவனை "பேச்சை மாத்தாதீங்க.." என்றாள் கோவமாக .

அவனோ, "நான் எதுக்கு பேச்சை மாத்தணும் .உன் தப்புக்கு நான் சரியான பிராயச்சித்தம் சொல்றேன். நீ தான் கேட்க மாட்டீறே.."

"ஓ ! இன்னும் கூட நீங்க என்ன நம்பலே .. என் தப்பே சரி செய்யத் தான் கல்யாணம் செய்துக்க கேட்கறீங்க.."

"ஆமாம். அது தானே உண்மை.."

"அப்போ இந்த ஜென்மத்தில் நம் கல்யாணம் நடக்காது.."

"ஓ ! அப்படியா? என்றான் நக்கலாக.. சற்று இளகி இருந்த அவன் மனம் பழைய படி மறுபடியும் மாறியது.

அவளோ, இவனிடம் என்ன பேசினாலும், நமக்கு தான் வேதனை என்று நினைத்து, அமைதியாக வெளியே செல்ல திரும்பியவளை "திகழி உனக்கு ஓரே ஆப்ஷன் தான் . என்னைக் கல்யாணம் செய்துக்கோ ! எல்லா பிரச்சினைகளும் தீரும்.." என்று அசால்ட்டாக சொன்னான்.

அவளோ , அவனிடம் பதில் பேசாமல் தன் அத்தனை வலிகளையும் கண்களில் தேக்கிக் கொண்டு "எனக்காக என்னை கல்யாணம் செய்துக்கறீஙகன்னா நான் இப்போதே ரெடி. ஆனால், நீங்க நான் செய்யாத தப்புக்கு தண்டனையாக கல்யாணத்தை சொல்வது தான் என்னால் தாங்க முடியலை.."என்றாள்.

அவனோ பதிலே சொல்லாமல் நின்றான்.

திகழொளியோ, " மிகன் கல்யாணம் விளையாட்டு காரியம் இல்லை. அது காலம் முழுவதும் வாழக்கூடிய நம் வாழ்வு . அந்த கல்யாணத்தில் காதல் கூட இல்லாமல் இருக்கலாம் . ஆனால், வெறுப்பு இருக்கவே கூடாது .இது என்னைக்கு உங்களுக்கு புரியுமோ? எனக்கு தெரியலை.." என்றவள் அவனை தாண்டி வெளியில் சென்றாள்.

அவனோ, அவள் போவதையே பார்த்துக் கொண்டு சிலையாக நின்றான்.

அவனின் மனமோ, 'நீ சொல்வது எனக்கு புரியாமல் இல்லையே டீ.
. என்ன தான் நீ தப்பு செய்யலேன்னு சொன்னாலும் உண்மை மாறாதே !' என்று எண்ணினான்.


தொடரும்..
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 14


மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல திகழொளிக்கு மிகன் ஒருபுறமுமாகவும் கதிரவன் ஒரு புறமுமாகவும் அவளை வதைத்தனர்.

மிகனின் செயல்களையும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..அவனை ஒதுக்கவும் முடியவில்லை. அதுமட்டுமின்றி கதிரவனின் உரிமையான அணுகுமுறையையும் சுத்தமாக பிடிக்கவில்லை..

ஓவ்வொரு நொடியும் இருவரின் நடவடிக்கையால் நெருப்பின் மீது நிற்பது போல் துவண்டு போனாள்.

அதுவும் கதிரவன் அவளை பார்க்க வந்து போனதிலிருந்து திகழொளிக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.நிச்சயமாக கதிரவனை தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பது.

அவனுடன் சாதாரணமாகக் கூட தன்னால் பேச முடியவில்லையே, எப்படி வாழ்வு முழுவதும் அவனுடன் மனம் ஒத்து வாழ முடியும் என்று தவித்தாள்.

அவள் மனதிற்குள் உறுதியாக அவளுடைய மிகனைத் தவிர வேறு யாரையும் அவளால் திருமணம் செய்து கொள்ள முடியவே முடியாது என்று தன்னை அவன் அணைத்திருந்த அந்த விநாடியே நன்றாக அவளுக்கு புரிந்து விட்டது.

என்னதான் மிகன் அவள் மீது கோவப்பட்டாலும், வெறுத்தாலும் ! அவளால் அவனைத் தவிர வேறு ஒருவரை தன் கணவனாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

'மிகனிடம் வீராப்பாக எனக்காக என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன்' என்று கூறிவிட்டு வந்தாலும் அவனை திருமண செய்து கொள்ள அவள் மனம் ஏங்கியது.

அவன் முகத்தை பார்த்துக் கொண்டே காலம் முழுவதும் வாழ்ந்து விடலாம் என்று நினைத்தாள்.

மிகன் மீது சாய்ந்து தன் துக்கத்தை எல்லாம் கண்ணீராக அவன் நெஞ்சில் இறக்கி வைத்துவிட்டு வந்ததிலிருந்து, அவள் மனம் லேசாக இருப்பது போல் இருந்தது.

மனது கொஞ்சம் தெளிவாக இருந்தது.அந்த தெளிவு அவள் முகத்திலும் சிறு மலர்ச்சியைக் கொடுத்து. மாலை அவளை அழைத்து செல்ல வந்த அமுதன் பார்வையிலும் அது தப்பாமல் பட்டது.


தன் தமக்கையின் மலர்ந்த வதனம் அவனையும் உற்ச்சாகப்படுத்தியது. வீடு வரும் வரை எதுவும் பேசிக் கொள்ளாமல் இருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கினார்கள்.

வேலை முடிந்து வந்த மகளிடம் பெற்றவர்கள் உடனே எதுவும் கேட்கவில்லை.தங்களுக்குள் ஆயிரம் குழப்பங்களும் ,கேள்விகளும் இருந்தாலும், அமைதியாகவே இருந்தார்கள்..அவர்களுக்கும் கேட்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

மகள் என்ன சொல்லப் போகிறாளோ? என்ற தவிப்பே அவர்களை கேட்பதற்கு யோசிக்க வைத்தது.

மகள் இரவு உணவு உண்டு வரும் வரை பொறுமையாக இருந்தார்கள் . அதற்கு மேல் காத்திருக்காமல் மகளிடம் கேட்டார்கள்.

"பாப்பா உங்கிட்ட கொஞ்சம் பேசணும் .."என்று கூறிய அறவாணன் மகளை தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.

"சொல்லுங்கப்பா.." என்று கூறியபடியே திகழொளி தந்தையின் அருகில் அமர்ந்தாள்.

அமுதனும் சிறு யோசனையுடனே வந்து அமர்ந்தான்.பொன்னியோ உண்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு, மகள் சொல்வதைக் கேட்க எதிர்பார்ப்புடன் வந்து அவர்கள் அருகில் அமர்ந்தார்.

சில நிமிடங்கள் அமைதியாகவே அமர்ந்திருந்த தந்தையிடம் "என்னப்பா பேசணும் .."என்றாள்.

"பாப்பா உனக்கு நிஜமாகவே கதிரவனை கல்யாணம் செய்ய சம்மதமா ? என்று கேட்டார்.

அவளோ, பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தாள். 'அவள் என்ன சொல்லுவாள்? தான் நினைப்பதை பெற்றவர்களிடம் சொல்ல முடியுமா.. ?தன் நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது கடவுளே 'என்று மனதிற்குள் மருகினாள்.

மகளின் அமைதியை பொறுக்க முடியாமல் "பதில் சொல்லு பாப்பா.."என்றார்.

என்ன சொல்லுவாள் அவள்? அவள் வாழ்க்கை மீது மட்டும் இந்த காலத்திற்கு ஏன் இத்தனை வெறுப்பு..பெற்றவர்களுக்காக திருமணத்திற்கு சம்மதித்தாலும், காலம் முழுவதும் வேறு ஒருவருடன் தன்னால் வாழவே முடியாது என்று பெற்றவர்களிடம் சொல்ல முடியாதே..? தன் மனதை எப்படி புரிய வைப்பது என்று மனதிற்குள் மருகியவள் பதிலேதும் சொல்லாமல் கண்களில் சொல்லிடங்கா வலியுடன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.

மகளின் மெளனம் அவருக்கு பல கேள்விகளுக்கு மறைமுகமாக பதிலளித்து. இருந்தாலும் மகளின் மனதை முழுதாக அறிந்து கொள்ள வேண்டும் மென்று நினைத்தார்.

திகழொளியோ, தனக்குள்ளேயே போராடி போராடி களைத்துப் போனாள்.குற்றம் புரிந்தது போல் தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

மகளின் அமைதி அவருக்கு ஒன்று மட்டும் உணர்த்தியது. மகள் ஒரு போதும் தன் மனதை சொல்ல மாட்டாள் என்று எண்ணியவர், உண்மையை அறியும்பொருட்டு பேச்சை மாற்றினார்..

"பாப்பா மிகன் உன் கூடத் தான் வேலை செய்கிறாரா..?" என்று அதிரடியாக கேட்டார்.

தந்தையின் கேள்வி தந்த அதிர்ச்சியில் திகழொளி மூச்சு விடவே மறந்தாள்.

அமுதனும் தமக்கை அளவுக்கு அதிர்ந்து தந்தையைப் பார்த்தான்.

ஒரு நொடி உலகமே இருண்டது போல் ஆனது திகழொளிக்கு.. தந்தையின் கோபத்திற்கு மீண்டும் ஆளாகப் போகிறோம் என்று பயந்தாள்.

இந்த விஷயம் தந்தைக்கு எப்படி தெரிந்தது என்று கலங்கியவள், மொழி மறந்த குழந்தை போல் தவித்தாள்.

உண்மையை சொன்னால்.. ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை? என்று கேட்பாரே என்று அஞ்சினாள்.குற்றயுணர்வில் தந்தையை ஏறெடுத்துப் பார்க்க கூசினாள்.

சிலையாக அமர்ந்திருந்த மகளிடம் "பதில் சொல்லுமா.." என்று மீண்டும் கேட்டார்.

குனிந்த தலை நிமிராமல் "ஆமாம் பா ..மூன்று மாதங்களுக்கு முன்பு டிரென்ஸ்பர்ரில் இங்கே வந்தார்.."என்ற மகளிடம்..

"ஏன் மா எங்கிட்ட சொல்லே..?"

"சொல்லக் கூடாதுன்னு இல்லேப்பா.. உங்க கிட்ட சொல்லி உங்களை கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு நினைச்சேன். அது மட்டுமில்லை வேலை செய்யும் இடத்தில் பல பேரை சந்திப்போம் .. அவர்களை எல்லாம் முக்கியமானவராக கருத வேண்டிய அவசியம் இல்லையே..! நாம் நம் வேலையை பார்த்தாலே எந்த பிரச்சினையும் வராதுன்னு நினைச்சேன்.." என்று தன் மனதை மறைத்துக் கொண்டு சொன்னாள்.


அமுதனோ, என்ன நடக்கிறது இங்கே என்று புரியாமல் விழித்தான். தன் உயிர் தமக்கை தன்னிடம் கூட இந்த உண்மையை சொல்லவில்லையே என்று வருந்தினான்.

மகளின் பதிலில் கொஞ்சம் நிம்மதி அடைந்தாலும் ,மிகன் கூறியது போல் மகள் தங்களுக்காகத் தான் கதிரவனை திருமணம் செய்யசம்மதித்து இருப்பாளா? என்ற சந்தேகம் பெற்றவர்களுக்கு வலுத்தது.

அதுமட்டுமின்றி எப்போதும் தன் முகம் பார்த்து ,விழி பார்த்து பேசும் மகள்! இன்று தன்னைப் பார்க்காமல் பதில் சொல்லும் போதே, அவருக்கு மகளின் மனம் புரிந்தது.

மனைவியை அர்த்தத்துடன் பார்த்தவர் , மகளிடம் "திகழி இன்று மிகனும், உலகமாறனும் இங்கே வந்தார்கள்.." என்று தந்தை சொன்னவுடன் சட்டென்று தலை நிமிர்ந்து தந்தையை பயத்துடன் பார்த்தாள்.

மனதிற்குள் இவன் என்னை நிம்மதியாகவே இருக்க விடமாட்டானா ? கடவுளே என்ன சொல்லி வச்சு இருக்கானோ ? என்று திகழொளிக்கு மனம் பதை பதைத்தது .

தந்தை சொன்னதைக் கேட்ட அமுதனுக்கோ, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

தன் மக்கட் செல்வங்களை திகைப்பின் எல்லையில் நிறுத்தி விட்டு, பொறுமையாக அவர்கள் வந்து பெண் கேட்ட விஷயத்தை சொன்னார்.

தந்தை சொன்னதைக் கேட்ட திகழொளி உயிரற்ற சிலையாக சில நொடிகள் அமர்ந்திருந்தாள்.அவள் உலகம் சில நொடிகள் ஸ்தம்பித்து போய் விட்டது.

அதிர்ச்சி, திகைப்பு, வியப்பு என்ற கலவையான உணர்வுகளையும் மீறி.. அவள் உள்ளத்தில் மெல்லிய மழை சாரல் தூவியதைப் போல் ஆனந்தம் குடி கொண்டது.

இந்த மாதிரி தன் தந்தையிடம் அவன் வந்து பெண் கேட்க மாட்டானோ ? என்று எத்தனை நாள் ஏங்கி இருப்பாள். அவளின் தவத்துக்கு வரம் கிடைத்து விட்டது போல் மனம் ஆர்ப்பரித்தது.


ஆனாலும், சில நொடியில் மிகன் சொன்ன வார்த்தைகள் நினைவு வந்து அவளின் ஆனந்தத்தை பறித்தது.

தன்னை விரும்பி அவன் தன்னை மணம் செய்ய கேட்கவில்லை .. பிராயச்சித்தமாக தன்னை திருமணம் செய்ய கேட்டு இருப்பான் என்று தோன்றிய நிமிடம் அவள் மகிழ்ச்சி வெள்ளமாக வடிந்தது.

மகளின் முகமாறுதலைக் கூர்ந்து கவனித்த அறவாணன், "பாப்பா நீ என்ன சொல்றே ? உனக்கு இன்னும் அந்த தம்பியை பிடிச்சு இருக்கா? மிகனைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா..? "என்று கேட்டவரிடம் பதில் சொல்லாமல் மனதிற்குள் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்தாள்.

"இப்படி பார்த்தாள் என்ன அர்த்தம் ? பதில் சொல்லு பாப்பா .."என்றவரிடம்.

"அப்பா எனக்கு கல்யாணமே வேண்டாம்ப்பா.. நான் இப்படியே உங்க கூடவே இருந்துக்கிறேன்.." என்று தன் மனதை மறைத்து பதில் சொன்னாள்.

தந்தையே மிகனை திருமணம் செய்ய சம்மதமா? என்று கேட்ட பின் கூட அவளால் உண்மையை சொல்ல முடியவில்லை.பல குழப்பங்கள் அவள் மனதை ஆட்கொண்டது.

மகிழ்ச்சி, பயம், தயக்கம், சந்தேகம் என்ற கலவையான உணர்ச்சிகள் அவளைச் சூழ்ந்து கொண்டு கலங்கடித்தது.

காலம் முழுவதும் திருமணமே செய்து கொள்ளாமல் அவளுடைய மிகனை நினைத்துக் கொண்டே பெற்றவர்களுடனேயே இருந்து கொள்ளலாம் என்ற எண்ணம் அவளுள் வலுத்தது.

மகளின் பதில்லைக் கேட்டு "ஏம்மா.." என்று தவிப்பாக மகளைப் பார்த்தார்.

" நான் இப்படியே உங்க கூடவே இருந்துக்கிறேனேப்பா.." என்று சொல்லியபடியே தந்தையின் தோளில் ஆதரவாக சாய்ந்தாள்.

அவரும் மகளின் தலைமீது தன் தலையை லேசாக சாய்ந்தவாரு.." இப்படியே நீ காலம் முழுவதும் இருக்க முடியாதே பாப்பா ! எங்க காலத்துக்கு பிறகு உனக்கு ஒரு துணை வேண்டுமே.." என்றார் மனக் குமறலுடன்.

தன் தமக்கையையே விழி எடுக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தான் அமுதன். அவன் மனதிற்குள் பெரும் புயல் அடித்தது. தன்னிடம் கூட அக்கா மிகனைப் பற்றி சொல்லவில்லையே என்ற ஆதங்கம் அவனை வாட்டியது.

திகழொளி அமைதியாகவே இருப்பதைக் கண்டு "பாப்பா இப்படி எதுவுமே பேசாமல் இருந்தால் எப்படிம்மா? உன் முடிவைச் சொல்லு..?"என்று வருத்தத்துடன் கேட்டவரிடம்..

"ப்ளீஸ்ப்பா நான் இப்படியே இருந்துக்கிறேன் ப்பா."

" திரும்ப ..திரும்ப, அதே சொல்லாதே ! காலம் பூரா அப்படி இருக்க முடியாதேம்மா.. உனக்குன்னு வாழ்க்கை வேண்டும்.. நாளைக்கு எங்களுக்கே ஏதாவது ஆகிவிட்டா? நீ தனி மரமாக நிற்பாயேம்மா.." என்று தவிப்புடன் கூறினார்.

தந்தையின் வார்த்தைகளை தாங்க முடியாமல் "ஏம்ப்பா இப்படி எல்லாம் பேசறீங்க .. எனக்கு கஷ்டமா இருக்கு.." என்று இன்னும் அழுத்தமாக தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

"திகழி இப்போது எல்லாம் உன் வாழ்க்கையை நினைச்சா பயமா இருக்குடா.. "என்றவரிடம்..

" அப்பா நான் நல்லாத் தான் இருக்கேன் .நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்கப்பா.."

"பாப்பா உன்னை மணக்கோலத்தில் பார்க்கனும்ன்னு ஆசையா இருக்குடா.. எங்க ஆசையை நிறைவேத்துவீயா ..? "

"அப்பா உங்களுக்கு என்ன தோணுதோ ?அதை செய்யுங்கப்பா..இத்தனை நாள் உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனியாவது உங்களுக்கு சந்தோஷம் தர விஷயம் எதுவாக இருந்தாலும் நான் அதைச் செய்யறேன்.." என்ற மகளை உச்சி முகர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.

பொன்னிக்கும் மகளின் வார்த்தைகள் நிம்மதியைக் கொடுத்தது.

"திகழி எங்களுக்காக பார்க்காமல் உனக்கு மிகனைப் பிடித்து இருந்தால் சரின்னு சொல்லு! நீ ஆசைப்பட்டவனையே கல்யாணம் செய்து கொண்டு நீ நிம்மதியா சந்தோஷமா வாழனும்.அதை நாங்க கண்குளிர பார்க்கனும் .."என்றார்.

தன்னால் தன் பெற்றவர்கள் பட்ட கஷ்டத்திற்கு தன் கல்யாணம் தான் தீர்வு என்று நினைத்தவள் , " உங்களுக்கு எது விருப்பமோ? அதை செய்யுங்கப்பா ! எனக்கு நீங்க என்ன முடிவு எடுத்தாலும், முழு சம்மதம்.." என்றவள் எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.

மகளின் மறைமுக சம்மதம் பெற்றவர்களுக்கு மனநிம்மதியைக் கொடுத்தது.

மிகன் நடந்து கொண்டதற்கு அவனை மன்னிக்க முடியாது தான். ஆனால் ,அவன் சொன்ன காரணமும்..மகளின் ஆசையையும் கருத்தில் கொண்டு மகளுக்காக மிகனை மன்னிக் தயாரானார்கள்.

அவனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு பெரிது தான்.தாங்கள் ஆசையாக வாங்கி குடி இருந்த வீட்டை இழந்து.. படக்கூடாத மனக் கஷ்டங்கள் பட்டு, ஆசை மகளிடம் பேசாமல் இருந்து.. அவர்கள் பட்ட கஷ்டம் அளவிட முடியாதது தான்.

ஆனாலும், நடந்ததையே நினைத்து எத்தனை நாள் வருந்திக் கொண்டே இருப்பது.. தப்பு செய்தவர்கள் தன் தவறை உணர்ந்தால் மன்னிப்பது தானே பெருந்தன்மை.

இன்னும் கோவத்தை பிடித்து இழுத்து வைத்து, யாருக்கு என்ன இலாபம். இனியாவது நடப்பது நல்லதாக நடக்கட்டும். என்று மனதார கடவுளை வேண்டிக் கொண்டார்கள்.

மனம் தாங்காமல் அமுதன் தன் தமக்கையின் அறைக்குச் சென்று தன் ஆதங்கத்தைக் கேட்டு விட்டான்.

தம்பியின் கோவத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து திகழொளி தன் மனநிலையை மறைக்காமல் சொன்னாள்.

" அம்மு உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை டா.. ஆனால், அதை சொல்லி தேவை இல்லாமல் உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு நினைத்தேன்.ப்ளீஸ் அம்மு! அக்காவே மன்னிச்சுடு.." என்று தவிப்புடன் சொன்னாள்.

"மன்னிப்பெல்லாம் எதற்கு கா.. "என்றவனின் வேதனை மாறாத முகத்தைக் கண்டு, அவனைத் தன் அருகில் இழுத்து அமரவைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

"அம்மு உண்மையை சொல்லனும்ன்னா ..எங்கே உங்கிட்ட சொன்னா? நீ வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிடுவீயோன்னு பயமா இருந்துச்சு.." என்ற தமக்கையை வியப்பாக பார்த்தான்.

தம்பியின் வியந்த பார்வையை கண்டு மென் சிரிப்புடன், "அம்மு நான் சொல்வதைக் கேட்டு நீ என்னை என்ன நினைப்பேன்னு தெரியலே.." என்றவள் சற்று பேச்சை நிறுத்தி ஒரு பெருமூச்சுடன் தொடந்தாள்.

"எனக்கு மிகன் மீது ஏனோ கோவமே வர மாட்டேங்குது.."என்றவளை ஆச்சரியமாக பார்த்தான்.

" ஏன்னா நான் இப்ப வரை மிகனை உயிராக நேசிக்கிறேன்.அது ஏன்னு எனக்கே புரியலே.."

"ஏக்கா.. அவன் செய்ததற்கு அவன் மீது உனக்கு கொஞ்சம் கூட வெறுப்பு வரலையா..?"

"நிஜமா வரலை.. எதையோ தப்பா புரிஞ்சுட்டுத் தான் மிகன் எங்கிட்ட அப்படி நடந்து இருபபார்ன்னு, என் உள் உணர்வு சொல்லிட்டே இருக்கே அம்மு.."

"என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியலே.."

"காதலித்து பார்த்தால் தான் அது புரியும்.."

"இவ்வளவு அன்பே மிகன் மீது வச்சுட்டு ! நீ எப்படி கதிரவனை கல்யாணம் செய்ய சம்மதித்தே..?"

"அப்பா, அம்மாவுக்காகத் தான் சம்மதித்தேன் டா.. ஆனால், நேத்து தான் எனக்கு மிகனைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள முடியாதுன்னு நல்லாவே உணர்ந்தேன்.." என்றவள் கதிரவன் தன்னை தேடி வந்ததையும்..தன்னால் அவனுடன் இயல்பாக பேச முடியாததையும் சுருக்கமாக தம்பியிடம் கூறினாள்.

அமுதனோ, தன் தமக்கையையே ஆச்சரியமாக பார்த்தான்.

தம்பியின் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு, அவன் தோள்களில் சாய்ந்தபடி "அம்மு நம்ம ஒருத்தரை மனதார விரும்பினால், அவர்கள் என்ன செய்தாலும் நமக்கு வெறுப்பு வராது டா .."

"கொஞ்சமாவது சுயமரியாதை வேண்டுமே கா.." என்றவனிடம்..

"காதலில் சுயமரியாதை பார்த்தால், அது காதலே இல்லை டா.. காதலில் ஈகோவும் பார்க்க கூடாது. சுயமரியாதையும் பார்க்க கூடாது.. நேசத்தில் அன்பு மட்டுமே நிறைந்து இருக்கனும். என் காதலில் அன்பு மட்டும் தான் இருக்கு .அந்த அன்பு தான் இத்தனை வருடம் கழித்தும் மிகனை என்னுடன் சேர்த்து வைக்கப் போகுது.."

"அன்பு உனக்கு மட்டும் இருந்தால் போதுமா ..? மிகனுக்கு இருக்க வேண்டாமா? நீ தப்பே செய்து இருக்கட்டும். அதை என்னவென்று கேட்கனும். இல்லை தன் சந்தேகத்தை யாவது உங்கிட்ட சொல்லி இருக்கனும்.காதலில் அன்பு மட்டும் இல்லைக்கா.. நம்பிக்கையும் முக்கியம்.." என்றவனை யோசனையாக பார்த்தாள்.

தம்பி சொல்வதும் உண்மை தானே! ஏன் மிகனுக்கு அந்த நம்பிக்கையை என்‌மீது வரலை? என்று யோசித்தாள்.

ஒரு வேளை தான் அந்த நம்பிக்கையை அவனுக்கு கொடுக்கவில்லையா? என்று அப்போது கூட அந்த பாலாய் போன மனம் அவன் புறம் நின்றே யோசித்து.

ஒரு காதல் என்ன செய்யும் என்றால், இப்படி தான் பைத்தியம் ஆக்கும் போல். எல்லா கேள்விகளுக்கும் ஒரு நாள் விடை கிடைத்து தானே ஆகனும்.அந்த நாளுக்காக காத்திருக்க வேண்டியது தான் என்று சலிப்புடன் நினைத்துக் கொண்டாள்.

தொடரும்..






 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 15
இரவும், பகலும் மாறி மாறி வரும் இயற்கையின் நீதியைப் போல் ,வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறித் தான் வரும்.

அது போல் திகழொளிக்கு இப்போது இன்பமான காலம். கடந்த காலத்தில் அவள் பட்ட கஷ்டம் எல்லாம் கற்பூரமாய் கரைந்து காணாமல் போனது.

இரு வீட்டு பெரியவர்களும் மணமக்களின் சம்மதம் கிடைத்தவுடன் , திருமண வேலைகளை தீவிரமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

உலகமாறனோ, மகனின் மனம் மாறுவதற்குள் திருமணத்தை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ? அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமென்று அடுத்து வந்த முதல் நல்ல முகூர்த்ததில் திருமண தேதியை குறித்தார்.

மணமக்கள் இருவருமே திருமணத்தை எளிமையாக நடத்தவேண்டுமென்று வற்புறுத்தியதால் ,வேறு வழி இன்றி பெற்றவர்கள் தம் மக்ககளின் விருப்பத்திற்கு இசைந்தனர்.

அது மட்டுமின்றி திருமணத்தை விமர்ச்சியாக நடத்தினால் மகிழினியைப் பற்றி எல்லாரிடமும் விளக்கம் சொல்ல வேண்டும் என்ற நிதர்சனம் அவர்களை தங்கள் மக்களின் முடிவுக்கு தலை ஆட்ட வைத்தது.

நாம் நினைத்தது எல்லாம் நடக்கும் போது வாழ்க்கையே வண்ணமயமாக தோன்றும்.அது போல் திகழொளிக்கும் அவளுள் வசந்த காலம் பூத்து குலுங்கியது.வாழ்க்கையின் மீது பிடிப்பும், ஆசையும் தோன்றியது.

மிகன் மீது அவள் வைத்திருந்த அன்பே அவளை அவனுடன் சேர்த்து வைக்கப்போகிறது.

இத்தனை நாள்கள் அவளிருந்த தவத்தின் வரமாக ! அவளின் மனம் கவர்ந்தனை வாழ்க்கை துணையாக அடையப் போகிறோம் என்ற எண்ணமே அவளுள் மகிழ்ச்சியை மழைச்சாரலாக தூவியது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப.. அவளின் உள்ளத்து மகிழ்ச்சி அவளின் வதனத்தில் மின்னியது.

பெற்றவர்களுக்கும் ,உடன்பிறந்தவனுக்கும் மிகனை அவள் எந்தளவு நேசித்திருக்கிறாள் என்று அவளின் முகமே உணர்த்தியது.


அவளின் மகிழ்ச்சி அவர்களுள் பெரும் நிம்மதியை கொடுத்தது. அதே நிம்மதியுடனும் ,மகிழ்ச்சியுடனும் திருமண வேலைகளை துரிதப்படுத்தினார்கள்.


திருமண வேலைகள் மிகனுக்குள்ளும் இரு வேறு மனநிலையை உண்டாக்கியது.

அவனின் உயிர் அவன் கை சேரப்போகிறது என்ற ஆனந்தம் ஒரு புறம் என்றாலும், அவளால் ஏற்பட்ட இழப்புகளின் குற்றவுணர்வு ஒரு புறம் அவனை வதைத்தது.

இரு வேறுபட்ட மனநிலையில் தவித்துக் கொண்டிருந்தான். திருமண நாள் நெருங்க நெருங்க அவனுள் சிறு பயம் அவனை குடைந்தது.

மணமக்கள் இருவரும் பணி இடத்தில் சந்தித்தாலும், வேலையைத் தவிர வேறு எதுவும் பேசிக் கொள்வது இல்லை.

திகழொளியின் முகத்தில் மின்னும் மகிழ்ச்சியை கண்டு மிகன்னுக்குள்ளும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது .

அவள் அறியாமல் அவளை அணு, அணுவாக ரசித்தான் .

திகழொளிக்கும் மிகன் வேலையைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாமல் இருப்பது மிகுந்த நிம்மதியைக் கொடுத்தது.

இருவரும் இப்போதாவது மனம் விட்டு பேசி இருந்தால்? திருமணத்திற்கு பின் வரும் கசப்புக்களை தவிர்த்து இருக்கலாம்.

ஆனால் ,இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அளவு கடந்த நேசமும், அன்புமே அவர்களை பேச விடாமல் செய்தது.

அந்த வார இறுதியில் திருமணத்திற்கு பட்டுபுடவை எடுக்க இரு குடும்பமும் பிரபலமான துணிக் கடைக்குச் சென்றனர்.

திகழொளி எளிமையாக பச்சை வண்ண கைத்தறி சேலையில் வந்து இருந்தாள்.அவளின் நிறத்திற்கு அது எடுப்பாக இருந்தது.

மிகனும் சொல்லி வைத்ததைப் போல் ஆலிவ் பச்சையில் சட்டையும் ,ஆஃப் வெண்மை நிறத்தில் கால்சட்டையும் டக் இன் செய்து வந்திருந்தான். அது அவனுக்கு மேலும் கம்பீரத்தையும், வசீகரத்தையும் கூட்டியது.

இருவர் முகத்தில் தெரிந்த கல்யாணக் கலை அவர்கள் தான் மணமக்கள் என்று அனைவருக்கும் சொல்லாமல் சொல்லியது.

கடைக்கு வந்ததிலிருந்து மகிழினி திகழொளியிடம் "அம்மா ,அம்மா.." என்று அட்டையாக ஓட்டிக் கொண்டாள்.

திகழொளியைக் கண்டவுடன் மணியரசி ஆசையாக அவளின் கைகளைப் பற்றி "எனக்கு ரொம்ப சந்தோஷம் திகழிம்மா.. நான் கும்பிட்ட தெய்வம் என்னை கைவிடலே..இடையில் என்ன என்னவோ நடந்து விட்டது. இனியாவது நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்.." என்று மனதார வாழ்த்தினார்.

மிகனின் மாமா காஞ்சித்துரையும் திகழொளியிடம் "நல்லா இருக்கீயாம்மா.." என்று வாஞ்சையுடன் கேட்டார்.

மணியரசியும், காஞ்சித்துரையும் திகழொளியின் பெற்றவர்களிடம் சட்டென்று பேச முடியாமல் முதலில் தயங்கினார்கள்.

நடந்த நிகழ்வுகள் அவர்களிடம் பெரும் தயக்கத்தை உருவாக்கி இருந்தது. ஆனாலும், அவர்கள் கடந்து வந்த கஷ்டமான நிகழ்வுகளின் பக்குவமும் , முதிர்ச்சியும் திகழொளியின் பெற்றவர்களிடம் தயக்கத்தை மீறி பேச வைத்தது.

பொன்னியும் ,அறவாணனும் முதலில் கொஞ்சம் தயக்கம் காட்டினாலும் பின்பு அவர்களும் இயல்பாக பேசினார்கள்.

உலகமாறனோ, மனதிற்குள் அளவிட முடியாத நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்.

கடையில் பட்டுப்புடவையை தேர்வு செய்ய
எல்லாரும் பட்டு சேலைப் பிரிவிற்கு சென்றனர்.
அங்கிருந்த இருக்கையில் திகழொளியின் ஒரு புறம் அமுதனும் ,மறுபுறம் மணியரசியும் அமர்ந்து கொண்டனர் . திகழொளியோ, மகிழினியை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

மிகனோ, திகழொளியின் கண்களில் படும்படி ஓர் ஓரமாக சென்று நின்று கொண்டான்.

கடை சிப்பந்தி பட்டுப்புடவையை எடுத்துக் காட்டும் பொழுது அமுதனும், மணியரசியும் தங்கள் பங்குக்கு, அவர்களுக்கு பிடித்த புடவையை திகழொளியிடம் காட்டி.. காட்டி, எடுக்கச் சொன்னார்கள்.

திகழொளியோ இருவரையும் சமாளிக்க முடியாமல், பேந்த.. பேந்த, விழித்த படி அமர்ந்திருந்தாள்.

மகளின் மனதை உணர்ந்து பெற்றவள் தான் "அம்மு நீ எழுந்து இங்கே வா ! மாமாவும், அக்காவும் செலக்ட் பண்ணட்டும்.." என்று மணமக்கள் இருவரின் மனதிலும் பாலை வார்த்தார்.


மிகனோ, 'ஹப்பா இப்பவாவது என்னைக் கூப்பிடனும்னு தோணுச்சே..' என்று நினைத்தபடி, அமுதன் அமர்ந்திருந்த இருக்கையில் அவன் எழுந்ததும் மிகன் அமர்ந்து கொண்டான்.

மணியரசியும், திகழொளியிடம் இருந்த மகிழினியை தூக்கிக் கொண்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து நகர்ந்தார்.

திகழொளியிடமிருந்து வர மறுத்த மகிழியை கட்டாயப் படுத்தி தூக்கிச் சென்றார்.

"மகிழி எங்கிட்டேயே இருக்கட்டும் அத்தை.." என்ற திகழொளியிடம் "இல்லை மா நீ ப்ரீயா பாரு ! அப்புறம் நான் உனக்கு அத்தை இல்லை. இனிமேல் அம்மான்னு கூப்பிடு.." என்று கூறிவிட்டு மகிழியை தூக்கிச் சென்றார்.

திகழொளிக்கோ, மிக அருகில் மிகனுடன் அமர்ந்து இருப்பது மனதிற்குள் இனம் புரியாத படபடப்பைக் கொடுத்தது.

மிகனோ, தனிமை கிடைத்தவுடன் "ஏண்டி கல்யாணம் நமக்குத் தானே ! கல்யாணப் புடவை நமக்கு பிடிச்ச மாதிரி எடுக்கனும்ன்னு இல்லாம உன் அருமை தம்பி கூட உட்கார்ந்து செலக்ட் பண்றே.. என்னே கூப்பிடனும்ன்னு உனக்கு தோணவே இல்லே..நல்ல வேளை என் மாமியார் தான் என் மனம் அறிந்து நடந்து கொண்டாங்க .."என்றான்‌ அடக்கிய கோவத்துடன்.

"ஏன் நான் தான் கூப்பிடனுமா? உங்க கல்யாணம் தானே ! நீங்களே வர வேண்டியது தானே..?"

"இந்த வக்கனையான பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.."

"பின்ன வேறு எதுக்கு குறைச்சலாமா? என்றாள் அவளும் கோபத்துடன்..

"ம்! அதை கல்யாணத்திற்கு அப்புறம் சொல்றேன்..இப்ப எங்கூட பதிலுக்கு பதில் வாயாடாம புடவையைப் பாரு .."என்றவன் கடை அலமாரியில் அடுக்கி வைத்திருந்த சில புடவைகளை எடுக்கச் சொல்லி கடை சிப்பந்தியிடம் சொன்னான்.

திகழொளியோ, அவனே தேர்வு செய்யட்டும் என்று அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

அவனே, ஒவ்வொரு புடவையை அலசி ஆராய்ந்து தக்காளி சிவப்பில் புடவை முழுதும் தங்க நிறச் ஜரிகையில் மின்னிய காஞ்சிப் பட்டை தேர்வு செய்தான்.

கடைப் பெண் அந்த புடவையை அவள் மேல் வைத்துக் காட்டவும் அது அவளுக்கு அத்தனை பாந்தமாக பொருந்தியது.


மிகனோ, தனது அலைபேசியில் அதை பொக்கிஷமாக சேமித்துக் கொண்டான்.

அமுதனோ, தள்ளி நின்று அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான். பிறந்ததிலிருந்து அவன் அக்காவை அவன் பிரிந்ததே இல்லை.

இப்போது, முதல் முறையாக பிரியப் போகிறோம் என்று நினைக்கையில் அவனால் ,அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் முகத்தில் அப்பட்டமாக சோகம் பொங்கி வழிந்தது.

திகழொளியோ, தன் மீது வைத்துக் காட்டிய பட்டுப் புடவையை பிடித்த படியே தம்பியை தேடினாள்.அவனும் பார்த்துட்டு சொல்லட்டும் மென்று.

ஓர் ஓரமாக நின்று தன்னையே பாவமாக பார்த்ததுக் கொண்டிருந்தவனின் முகத்தில் தெரிந்த சோகம் அவளை புரட்டிப் போட்டது.


தம்பி சொல்லாமலே அவனின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவள், தன் மீது கிடந்த புடவையை எடுத்து கடைப் பெண்ணிடம் கொடுத்து விட்டு தம்பியை நோக்கி ஓடினாள்.

"அம்மு, இங்கே ஏன் தனியா வந்து நிற்கிறே? உனக்கு அந்த புடவை பிடிச்சு இருக்கா ..?" என்ற கன்னம் தொட்டு கேட்ட தமக்கையிடம்.

"அக்கா உனக்கு பிடிச்சு இருந்தா போதும்.." என்று சுரத்தே இல்லாமல் சொன்னவனிடம்.

"அம்மு என் மீது ஏதாவது கோவமா டா.."

"ச்சே அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைக்கா.." என்றான்.

மிகனுக்கோ, திகழொளி தன்னிடம் புடவை பற்றி எதுவும் சொல்லாமல் , தம்பியிடம் சென்று குலாவிக் கொண்டு இருப்பதைக் கண்டு எரிச்சல் வந்தது.

அதே எரிச்சலுடன் அவர்களின் அருகில் சென்று "புடவை பிடிச்சு இருக்கா? இல்லையான்னு சொல்லாமல் இங்கே என்ன செய்யறே ?" என்று கோவமாக கேட்டான்.

திகழொளியோ, பதில் சொல்லாமல் மெளனம் காத்தாள்.

மிகனோ, "வா..!" என்று அவளின் கைகளை உரிமையாக பிடித்து இழுத்துச் சென்றான்.

அமுதனோ, ஒன்றும் செய்ய முடியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

மிகனோ, "ஏண்டி இருபத்தி நாலு மணி நேரமும் அவன் கூடத்தானே பேசிட்டு இருக்கே ? இன்னைக்கு கூட எங்கூட இருக்காமல் அவன் பின்னாடி போறே.. ?"என்று கடிந்து கொண்டான்.அவனையும் மீறி அமுதன் மீது அவனுக்கு பொறாமை பொங்கியது.

திகழொளியோ, பதில் சொல்லாவும் முடியாமல் தம்பியையும் தவிர்க்க முடியாமலும் தவித்தாள்.

அவளோ, 'இது என்ன புது பிரச்சினை ..?'என்று மனம் கலங்கினாள். இதுவரை அமுதனை பிரிவோம் என்ற நிலையில் அவள் யோசிக்கவே இல்லே..

முதன் முதலாக இப்பொழுது தான் அதை உணர்ந்தாள்.

அவளை அதிகம் யோசிக்க விடாமல் அதன் பிறகு அவளின் நேரத்தை மிகனே எடுத்துக் கொண்டான்.

அவனுக்கு திருமணத்திற்கு உடை எடுக்க ..அவனுக்கும் அவளுக்கும் திருமணத்திற்கு தேவையானது வாங்க என அவளை தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்.

திகழொளியோ, எதிலும் முழுமனதுடன் ஈடுபட முடியாமல் மிகன் இழுத்த இழுப்புக்குச் சென்றாள்.

பெரியவர்களோ, சிறியவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு, தங்களுக்கு தேவையானதையும் சீர்வரிசைகள் வாங்குவதிலும் நேரத்தை செலவிட்டனர்.

அமுதனோ, மகிழினியை தூக்கி வைத்துக் கொண்டு ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டான்.

திகழொளிக்கு தம்பியின் அமைதியை பார்க்க பார்க்க மனம் தாளவில்லை.. ஓடிப்போய் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு, அழ வேண்டும் போல் மனம் துடித்தது.

ஒரு வழியாக தேவையானதை வாங்கி முடித்த பின் உணவு உண்ண கடைக்குச் சென்றனர்.

திகழொளியோ, மிகன் அருகில் அமராமல் தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அவர்களின் எதிரில் அமர்ந்த மிகனோ, அவளை கண்களாலேயே முறைத்துக் கொண்டிருந்தான்.

அங்கே ஒரு உரிமை போராட்டம் தொடங்கியது. திகழொளிக்கு திருமணத்திற்கு பிறகு எப்படி மிகனை இந்த விசயத்தில் சமாளிப்போம் என்ற புதுப் பயம் துளிர் விட்டது.

தொடரும்..
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
உயிர் துடிப்பாய் நீ!

அத்தியாயம் 16

வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும், அவற்றை எல்லாம் கடந்து வருவதற்கு யாரோ ஒருவரின் அன்பும், அரவணைப்பும் மிக முக்கிய காரணம்.

அப்படி திகழொளியின் கஷ்ட காலங்களில் பெரும் அரணாக இருந்தது அவளின் ஆரூயிர் தம்பி அமுதன் தான்.

திகழொளிக்கு தான் விரும்பியவனை மணக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், தன் தம்பியைப் பிரியப் போகிறோம் என்ற பெருங்கவலை அவளை புழுவாக அரித்தது.

அமுதனோ, முகத்தில் சிறு மலர்ச்சி கூட இல்லாமல் திருமண வேலையில் பங்கெடுத்தான்.

வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்ததிலிருந்தே திகழொளி தம்பியுடன் தனிமையில் பேசிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தாள்.
ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் அமுதனுக்கு திருமணவேலைகளை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. திகழொளிக்கு அவனுடன் தனியாக பேச வாய்ப்பே இல்லாமல் போனது.

அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு, திகழொளி தன் படுக்கையில் படுத்த படியே தன் தம்பியைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது, அவளின் அருகில் இருந்த அலைபேசியின் அழைப்பு சத்தம் அவளின் சிந்தனையை தடை செய்தது.

இந்த நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? என்று யோசனையுடனே அலைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு ,இன்ப அதிர்ச்சியாக அவளின் தோழி கமலி அழைத்திருந்தாள்.

முகத்தில் சிறுமுறுவலுடன் அழைப்பை ஏற்று "ஹலோ .."என்றவளிடம் அந்தப்பக்கம் கமலியோ பொரிந்து தள்ளினாள்.

"ஏண்டி நான் ஒருத்தி இருக்கேன்னு உனக்கு நினைப்பு இருக்கா ?இல்லையா? எத்தனை நாளாச்சு ஒரு போன் செய்தீயா .."?என்று கடிந்து கொண்டவளிடம்..

" நீ ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவ ஆளையே காணோம்..சரி நீ வந்துட்டு கூப்பிடுவேன்னு இருந்தேன்.."

" ஏண்டி நான் ஊருக்கு தானே போய் இருந்தேன். செவ்வாய் கிரகத்துக்கா போனேன்..?"

" சாரி டீ, கொஞ்சம் வேலை டென்ஷன்.அதுவே சரியா இருந்துச்சு.. "

"வேலை டென்ஷனா? இல்லை மிகன் நினைப்பா ..?"

"ஏய் ஏண்டி இப்படி எல்லாம் பேசறே..?"

"வேறே எப்படி பேசச் சொல்றே? ஒரு வார்த்தை எங்கிட்ட சொன்னீயா டீ.. கல்யாணம் முடிஞ்ச பின் சொல்லனும்ன்னு இருந்தீயா? இல்லே பிள்ளையும் பெத்துட்டு சொல்லாம்ன்னு நினைச்சீயா?"

"ஏய் அப்படி எல்லாம் இல்லை டீ. உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லே டீ.. அந்த நேரத்தில் நான் ரொம்ப குழம்பி இருந்தேன். அதுமட்டுமில்லை இடையில் நீ வேறு அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மெஸேஜ் போட்டு இருந்தீயா? உன்னே தொல்லை செய்ய வேண்டாம்ன்னு பேசலை டீ.."

"சரி போன் தான் பேசலே.. டெய்லியும் மெஸேஜ்லே நலம் விசாரிப்பீயே? அப்பவாவது இதை பற்றி ஒரு வார்த்தை மெஸேஜ் செய்தீயா?"

"கமலி ரியலி சாரி டீ..நிறைய டென்ஷன், குழப்பம் அதை உங்கிட்ட சொல்லி உன்னையும் கஷ்டபடுத்த வேண்டாம்ன்னு தான் பேசாம இருந்தேன்.."

"அமுதன் மட்டும் இப்ப சொல்லலேனா, இன்னும் எனக்கு தெரியாது.சாயங்காலம் எதேச்சையாக அமுதனை பார்த்த பொழுது, அவன் தான் இத்தனை விஷயமும் சொன்னான்.." என்றவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக அலைபேசியை காதில் வைத்திருந்தாள்.

திகழொளிக்கு குற்றயுணர்வாக இருந்தது. நாம் கஷ்டப்பட்ட பொழுதெல்லாம் ஆறுதலாக கூட இருந்தவளிடம் , எதையும் சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று அவள் மனச்சாட்சியே அவளை வதைத்தது.

எதை பற்றியுமே சிந்திக்கவும், யோசிக்கவும் முடியாத அளவு மிகன் தான் அவளை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தானே.

இப்போது தன் தோழியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவள் தவித்துப் போனாள்.

கமலியோ, "எப்படியோ எங்கிட்ட சொல்லாட்டீயும், உன் மனம் விரும்புனவனையே நீ கைபிடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் டீ..இனியாவது நீ சந்தோஷமா வாழனும் .."என்று கமலி சொல்லவும்..அதைக் கேட்ட திகழொளிக்கு தோழியின் வாழ்த்து அவள் தவறை இன்னும் அதிகமாக உணர்த்தியது . கமலியின் தன்னலமற்ற அன்பைத் தாங்க முடியாமல்" கமலி! சாரி டீ .."என்று கதறி அழுதுவிட்டாள்.

அந்தப் பக்கம் கமலியோ, "ஏய் திகழி, எதுக்குடி இப்ப அழறே? இனி உனக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும் .அழாதே டீ.." என்று தோழியின் கண்ணீரை தாங்க முடியாமல் ஆறுதல் சொன்னாள்.

அது தான் கமலி! தன்னிடம் சொல்லவில்லை என்ற கோவம் இருந்தாலும், தன் தோழி எப்படியோ அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே போதும் என்ற நல்ல உள்ளம் கொண்ட பெண்.

ஒருவழியாக திகழி அழுது முடித்து, தோழியை சாமாதானம் செய்துவிட்டு , இத்தனை நாள் பேசாததற்கும் சேர்த்து பேசிவிட்டு படுக்க இரவு நெடு நேரம் ஆகிவிட்டது.

உறக்கம் வராமல் வாட்ஸ் ஆப்பை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு, மிகனிடம் இருந்து அந்த நேரத்தில் குறுஞ்செய்தி வந்தது.

"என்ன டீ இன்னும் தூங்காம என்ன செய்துட்டு இருக்கே..?"என்று கேட்டு இருந்தான். அவள் ஆன்லைன்லே இருப்பதை பார்த்து விட்டு.

அவளோ, 'இவர் ஏன் இன்னும் தூங்கம இருக்கார்?' என்று நினைத்துக் கொண்டு, " நீங்க ஏன் இன்னும் தூங்கலே.." என்று பதில் அனுப்பினாள்.

மிகன் ,உடனே அவளின் செய்தியை படித்தற்கு அடையாளமாக இரண்டு நீளக் கலர் டிக் காட்டியது.ஆனால் , அவன் திருப்பி எந்த பதிலும் சொல்லவில்லை.

திகழொளி சில வினாடிகள் அவனின் பதிலுக்காக காத்திருந்து பார்த்தாள். அவனிடமிருந்து பதில் வராமல் போகவே, இணைய தொடர்பை துண்டித்து விட்டு, அலைபேசியை அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு, படுத்துக் கொண்டே மனதிற்குள் மிகனை வறுத்து கொண்டிருந்தாள்.

'இவன் கேட்டா நான் மட்டும் பதில் சொல்லனும்.ஆனால் ,நான் கேட்டா சார் பதில் சொல்ல மாட்டாராம்.சரியான திமிர் பிடிச்சவன்..' என்று மனதில் திட்டிக் கொண்டிருந்தவளை, அலைபேசியின் அழைப்புச் சத்தம் அவளின் கவனத்தை ஈர்த்தது.

மறுபடியும் யாருடா இந்த நேரத்தில் என்று அலைபேசியை எக்கி எடுத்து, ஒளித்திரையைப் பார்த்தவளுக்கு அதில் மிகனின் பெயரை கண்டதும் மனதிற்குள் ஒரு நொடி இனம் புரியாத பரவசம் ஏற்பட்டது.


மெல்ல அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தவள், குரலுக்கு வலிக்காமல் மிக மென்மையாக "ஹலோ.." என்றாள்.

அந்தப்பக்கம் அவனோ, "மேடம் இன்னும் தூங்காம ஆன்லைன்லே இன்னேரத்துக்கு என்ன செய்யறீங்க.." என்றவனிடம்..

"தூக்கம் வரலே அது தான் சும்மா பார்த்துட்டு இருந்தேன்.."

"ஏன் தூக்கம் வரலே.."

"நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க.."

"கொஞ்சம் ஆபீஸ் வேலை இருந்துச்சு அதை செய்துட்டு இருந்தேன்."

"ம்! .."என்றவளிடம்..

"கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது.." என்று திருமணம் உறுதியான பிறகு முதல் முறையாக அவளிடம் திருமணத்தை பற்றி கேட்டான்.

"ம் ! அப்படியே போய்ட்டு இருக்கு.."

"என்ன டீ சுரத்தே இல்லாம சொல்றே.."

"இங்க பாருங்க டீ போட்டு பேசாதீங்கன்னு நான் பல வாட்டி சொல்லிட்டேன்.இனி டீ போட்டீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்.."

"அப்படி தான் டீ போடுவேன், என்ன டீ செய்வே.."

"நான் போனே வைக்கிறேன்.."

"எங்கே வச்சுத் தான் பாரேன்..அடுத்த நிமிஷம் உங்க வீட்லே இருப்பேன்.."

"சும்மா மிராட்டாதீங்க..வீட்லே அம்மா, அப்பா இருக்காங்க.. ஞாபகம் வச்சுக்கோங்க.."

"இருந்தா எனக்கு என்ன?"

"இன்னேரத்துக்கு வந்தீங்கன்னா, என்ன விஷயம்ன்னு கேட்பாங்க.."

"கேட்டா, நீ தான் வரச்சொன்னேன்னு சொல்லுவேன்.." என்று அசால்ட்டாக சொன்னவனிடம்.

"ஆ!" என்று தன் அதிர்ச்சியை வெளிக்காட்டினாள்.


"என்ன வரமாட்டேன்னு நினைச்சீயா ..?"

"நான் எதுவும் நினைக்கலே சாமி..எனக்கு தூக்கம் வருது நான் தூங்கப் போறேன்.." என்றவளிடம்.

"ஓ! எங்கூட பேசுனா உனக்கு தூக்கம் வருதா? வரும்..வரும்..இன்னும் பத்து நாள் தான் டீ, அப்புறம் இங்கு வந்த பின் எங்கிட்ட பேசித்தானே ஆகனும்.." என்றான் நக்கலாக..

"நான் ஒண்ணு சொன்னா.. நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கிறதே உங்க வேலை .."என்றவளிடம்.

"ஆமாம். நான் உன்னளவு அறிவாளி இல்லையே.." என்றான்.

'என்னத்த பேசுனாலும் குதர்க்காமாகவே பேசறவங்க கிட்ட நாம என்னத்த பேச..'என்று மனதிற்குள் பேசியவள்,சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.

அவனோ, "என்ன பேசா மடந்தை ஆயிட்டே .."என்றவனிடம்..

" நான் எது சொன்னாலும் தப்பாவே எடுத்துக்குவீங்க, அது தான் நீங்களே பேசட்டும்ன்னு அமைதியாக இருந்தேன்.."

"ஓ! "என்றவன் அதற்கு மேல் அவளை வதைக்காமல் , "சரி போனை நோண்டாம ஒழுங்கா போய் தூங்கு.."என்றான்.

"ம் ! "என்றவள், விட்டால் போதுமடா சாமி என்று அழைப்பை துண்டித்தாள்.

அந்த பக்கம் மிகனும் மென்புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தான்.அவனுள்ளும் இனம் புரியாத மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டது.

திருமணத்திற்கு இன்னும் பத்து நாள் இருக்கே என்று சலித்துக் கொண்டே படுத்தான்.

அதன் பின்பு வந்த நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாகவே சென்றது.

ஒரு வழியாக அமுதனுடன் பேசவும் திகழொளிக்கு நேரம் கிடைத்தது.

தம்பியுடன் தனிமை கிடைத்ததும் தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தாள்.

"அம்மு என் மேல் கோவமா?"

"ச்சே! அப்படி எல்லாம் இல்லை..ஏன் இப்படி கேட்கிறே..உன் மேல் என்னால் கோவப்பட முடியுமா கா.."

"அம்மு உன்னை பிரிந்து போவது எனக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கு டா.. கல்யாண நாள் நெருங்க நெருங்க எதையோ இழப்பதைப் போல் இருக்குது .."என்ற தமக்கையின் கைகளை அழுந்த பிடித்துக் கொண்ட அமுதன், தமக்கையே பேசட்டும் என்று அமைதியாக இருந்தான்.


"ஏண்டா பெண் பிள்ளைகளுக்கு மட்டும் இப்படி ஒரு நிலை. நாங்கள் மட்டும் கல்யாணம் ஆனா? பிறந்த வீட்டை விட்டு போகனும். ஆனால், ஆண்களுக்கு எந்த வித மாற்றத்தையும் இந்த கல்யாணம் தருவதில்லை.." என்று சலித்துக் கொண்டாள்.

" என்ன செய்வதுக்கா அது தானே காலம் காலமாக நடக்கிறது.நீ வேணா மாமாவே கூட்டிட்டு இங்கே வந்துரு..நாம் பிரிய வேண்டாம்.."

"அது நடக்கிற காரியமா? வேணா ஒண்ணு செய்யலாம் நீ எங்கூடயே வந்துரு.."

"எதுக்கு என்னை போட்டுத் தள்ளவா .."

"என்னடா இப்படி பேசறே..உன்னே யாருடா அப்படி எல்லாம் செய்வாங்க.."

"ம்! உன் வருங்கால புருசன் செய்வாரு..இப்பவே நான் உன் கூட பேசினால் கண்களாலேயே எரித்து சாம்பல் ஆக்குகிறார். கூட வேறு வந்துட்டேன்னு வச்சுக்கோ அப்புறம் அவ்வளவு தான்.."

"போட அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே ..நீ எதையோ நினைச்சு சும்மா குழப்பிக்காதே.. என்னவோ போட ஒன்னு கிடைச்சா? ஒன்னு இழக்கனும் போல்.. அம்மு நான் போய்ட்டா நீ என்ன மறந்துருவீயா?"

"லூசாக்கா நீ !ஏன் இப்படி உளறறே.. உன்னை எப்படி நான் மறப்பேன்.. நீ எனக்கு இன்னொரு அம்மா .."என்றவனின் தோள்களில் ஆதரவாக சாய்ந்தபடி..

"அம்மு எனக்கு நீ எப்பவுமே வேணும் டா..எனக்கு எல்லாரையும் விட நீ தான் முக்கியம்.என் உயிர் டா நீ.." என்ற தமக்கையிடம்.

"சரி நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தவுடன் இதையே சொல்றீயான்னு பார்ப்போம்.." என்றான் கேலியாக.. தமக்கையின் மனநிலையை மாற்றும் பொருட்டு..

"அதில் என்னடா உனக்கு சந்தேகம்? எனக்கு எப்பவுமே என் அம்மு தான் பர்ஸ்ட். அப்புறம் தான் மத்தது எல்லாம்.."

"ம்! அப்படியா ..பார்ப்போம் பார்ப்போம்.."

"ஏண்டா நான் உன்னை பிரியப் போறேன்னு பீல் பண்ணிட்டு இருந்தா, நீ கிண்டலா பண்றே.. உனக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா..?"என்று கோவமாக தம்பியின் காதுகளை பிடித்து திருகினாள்.

"அச்சோ! அக்கா வலிக்குது விடு..கவலை இல்லாமல் இருக்குமா? பிறந்ததிலிருந்து ஒரு நாள் கூட உன்னை பிரிந்ததும் இல்லே.. பார்க்காமல் இருந்ததும் இல்லே ..ஆனால் இனி அதை எல்லாம் ஏற்றுத் தானே ஆகவேண்டும்.." என்று சொன்னவனின் குரலிருந்த வேதனை அவளையும் தொற்றிக் கொண்டது.

இருவரும் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அப்படியே சிலையாக நின்றனர்.வாய் பேசாட்டியும் அவர்கள் மனது ஆயிரம் கதை பேசியது.

மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

சில வலிகளுக்கு மருந்தே இல்லையே..காலம் மட்டுமே எல்லாவற்றிக்கும் மருந்து.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அன்பு கொண்ட பாசப்பறவைகளுக்கு இடைவெளி இருக்கும். ஆனால், பிரிவு வராது. என்று இருவரும் தங்கள் மனதை தேற்றிக் கொண்டார்கள்.

கால தேவனை யாராலும் தடுக்க முடியாதே. அவனின் ஓட்டத்திற்கு நாம் ஈடு கொடுத்துத் தானே ஆக வேண்டும். பத்து நாளும் பத்து நிமிஷம் போல் விரைவாக கரைந்தது. இரு குடும்பமும் ஆவலுடன் எதிர்பார்த்த திருமண நாளும் அழகாக விடிந்தது.


தொடரும்.
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93

உயிர் துடிப்பாய் நீ!

‌சின்ன முன்னோட்டம்

அரை மணி நேரமாக அவளை நிற்க வைத்துவிட்டு கணினியில் பார்வையை பதித்திருந்த மிகனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள் திகழொளி.

'மூஞ்சியப்பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே எப்ப பாரு வச்சுட்டு இருக்கு..அப்படியே சிலுப்பீட்டு இருக்கிற அந்த முடியை பிடித்து இழுத்து நாலு கொட்டு மண்டையில் நறுக்குன்னு வைக்கனும்..'என்று மனதிற்குள் குமுறிக் கொண்டு இருந்தவளின் எண்ண அலைகள் புரிந்தது போல் கணினியில் இருந்த பார்வையை அவள் புறம் திருப்பினான் மிகன்..

திகழொளியோ ,அவன் பார்வையைக் கண்டதும் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டாள்.

அவனோ, "என்னடி இத்தனை நேரம் என்னை தின்னுடற மாதிரி பார்த்தே..இப்ப நான் பார்த்ததும் நல்ல பிள்ளையாட்டா பார்வையை மாத்திட்டே.."

"நான் நார்மலா தான் பார்த்தேன்.."

"நீ நார்மலா பார்த்ததை நானும் பார்த்தேன்.கேமராவில் .." என்று அவன் சொன்னதும் அவளுக்கு பக்குன்னு மனசு பதறியது.

'தான் இப்போது அவனைப் பற்றி நினைத்து மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் இன்னைக்கு என்னை பிரியாணி ஆக்கிடுவான்' என்று அவள் மனதிற்குள் எண்ணும் போதே..

நாற்காலியில் இருந்து சட்டென்று எழுந்து அவள் அருகில் வந்தவன், அவளின் முகத்தில் தன் ஒற்றை விரலால் கோடு வரைந்த படியே.."நீ என்ன செய்தாலும், என்ன நினைத்தாலும் உன் முகமே காட்டிக் கொடுத்துவிடும்..இப்ப என்னை மனசுக்குள் திட்டிட்டு தானே இருந்தே.."என்றவனை தன் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லாமல் சொல்லியது அவள் வதனம்.

அவனோ, அவளின் முகமாறுதலைக் கண்டு தன் வெண் பற்கள் ஒளிர மென் புன்னகை சிந்திய படியே அவளின் இடையில் கை வைத்து தன் புறம் இழுத்து, "மனதில் நினைப்பதை முகத்தில் காட்டாமல் இருக்க முதலில் பழகிக் கொள் .."என்றான் குரலை உயர்த்தாமல் மென்மையாக.

திகழொளியோ, அவனின் நெருக்கத்தில் விதிர்விதித்து போனாள்.அவனின் பார்வையில் தெரிந்த மாற்றமும்,கிறங்கிய குரலும் ,அவனின் தொடுகையும் நேசம் கொண்ட அவள் மனதை அவன் பால் ஈர்த்தது.

கொஞ்சம் முன்பு அவனை மனதிற்குள் கடிந்து கொண்டவள், இப்போது அதை எல்லாம் மறந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ளச் சொன்ன தன் மனதுடனேயே போராடிக் கொண்டிருந்தாள்.

அவனோ, அவளின் அவஸ்தையை ரசித்துக் கொண்டு இருந்தான்.

விரைவில் யூடி உடன் வருகிறேன்..
நன்றி
இனிதா மோகன்

 
Status
Not open for further replies.
Top Bottom