Rajathilagam Balaji
Well-known member
- Messages
- 264
- Reaction score
- 406
- Points
- 63
மிக்க நன்றிற சகோதரி🙏😍மிக விறுவிறுப்பாக செல்கிறது.. வாழ்த்துக்கள்..மிக சிறப்பு
மிக்க நன்றிற சகோதரி🙏😍மிக விறுவிறுப்பாக செல்கிறது.. வாழ்த்துக்கள்..மிக சிறப்பு
உங்களது விமர்சனம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது சகோ....என்னம்மா ரசித்து ஆர்வமாக படிச்சிருக்கீங்க...உங்களின் எதிர்ப்பார்ப்பு எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது டியர்.தங்களது விமர்சனத்திற்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் சகோதரி🙏😍😍😍.....kalyaana veedu la romba aazhaga irunthuthu🤩 🤩 sago and kalyana saappaadum nallatha irunthathu😋😛😍😍😍 but intha ending tha police vanthutaaga naakuda oo innaiku saaru sandru kalyanam spr ra mudium mu paatha kadaiseela ippadi oru sivan poojayala karadi maari intha police yethuku vanthaaga author ji..............😍❤️❤️saaru feelings la unmaiyaalu marriage pandravaga feelings sa soldra mari spr ra yeluthi irunthiga so spr ...........intha sandru payan yenna ippadi oru Angel la pakkathula vachu kittu vera ponna soldra
..........
Horse la varathu velli thattula aarathi and pathatha clean pandra samprathaayam la marriage la naa pathaathu illa but ippadi marriage veetu unmaiyaalu paakka romba alaga irunthu irukkum 🤩...........ithukkaagavathu saaru sandru marriage mudinju police vanthu irukkala..........
mukkiyamaana onnu intha epi perusa podu irukkiga sissy ithey maari continue pannuga❤️❤️😍
spr epi sissy...........😍😍👌👌👌👌
Thank you so much dear....🙏😍Aaaathadi bayangaramana twista iruke 👌👌👌👌👌👌 Awsome Movie pakkura feel than sis kalakitinga ❤😊👌
எங்கே ஒளிந்திருந்தது இத்தனை திறமையும். மிக அழகாக நகர்கிறது நாவல். நாளைய பதிவிற்காக மனதில் பொங்குது ஆவல்.எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 9
மாப்பிள்ளை அழைப்பின் போது செண்டா மேளம் வாத்தியத்துடனும், நடன கலைஞர்களின் நடனத்தடனும், மறுபக்கம் பட்டாசு வெடிகளின் சத்தத்தோடும் சிவப்பு கம்பளத்தில் ராஜ மரியாதையுடன் மாப்பிள்ளைக்கு மலர்கள் தூவி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜா மாதிரி உடை அணிந்து கம்பீரமான தோற்றத்துடன் குதிரையில் வந்து இறங்கினார் மாப்பிள்ளை சந்துரு.உடைக்கேற்ப உருவமும் ஒத்து போயிருந்தது.
மண்டபத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த யானை,
மாப்பிள்ளைக்கு மாலைப்போட்டு ஆசிர்வாதம் செய்து வரவேற்றது.
மண்டபத்தின் அலங்காரங்கள் அனைத்தும் காண்போரின் மனதை கவரும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பல வண்ண மலர்கள் மற்றும் பழங்களை கொண்டு பறவைகளின் உருவத்தை தத்தரூபமாக வடிவமைத்து வைத்திருந்தனர்.
அதோடு மட்டுமல்லாமல் தாமரை, செவ்வந்தி, அல்லி, மல்லி, செம்பருத்தி மற்றும் பல வண்ண நிற ரோஜாக்கள் என அனைத்து வகையான மலர்களால் மண்டபத்தின் வாசலில் மிகப்பெரிய ரங்கோலி கோலம் மலர்களை கொண்டு வரைந்திருந்தனர்.
மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியும் பல வண்ண மலர்களாலும், சீரியல் பல்புகளாலும், மாவிலை தோரணங்களாலும் மிகவும் அற்புதமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.மண்டபம் பார்ப்பதற்கு அப்படியே பூலோக சொர்க்கம் போல காட்சியளித்தது.
மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க பதினாறு வகையான வெள்ளி தட்டுகளில் பல வகையான பொருட்களை கொண்டு வித விதமாக அலங்காரம் செய்து ஆரத்தி தட்டை தயார் செய்து வைத்திருந்தனர்.
சந்துருவிற்கு மச்சினிச்சி என்ற முறையில் முதல் ஆரத்தியை மதி எடுத்தாள்.ஆரத்தி எடுத்ததிற்கு பரிசாக நூறு ரூபாயை மதியின் ஆரத்தி தட்டில் வைத்தான் சந்துரு.
மாமா! நூறு ரூபாய் வேண்டாம்.
அமெரிக்கா டாலர் இருந்தால் தாருங்கள் என்றாள் மதி.
அதற்கென்ன கொடுத்துட்டா போச்சு என்றார் ஜானகி அம்மா.
ஏய் மதி! எந்த நேரத்தில் விளையாடனும் உனக்கு தெரியாதாடி? என்று மதியின் அம்மா சரோஜா அவளை சத்தமிட்டார்.
அதனால் என்ன சம்மந்திம்மா...மதி அவள் மாமாவிடம் உரிமையாக கேட்கிறாள்.இதுல சத்தம் போடுவதற்கு என்ன இருக்கிறது? அவளை சத்தம் போடாதீங்க! என்றார் ஜானகி அம்மா.
அமெரிக்கா டாலரை தனது பர்ஸிலிருந்து எடுத்து மதியிடம் கொடுத்தான் சந்துரு.
அடுத்ததாக சாருவின் தம்பி பாபு, சந்துருவிற்கு பாத பூஜை செய்தான். அதற்கு பரிசாக பாபுவின் கழுத்தில் தங்க சங்கிலியை போட்டு விட்டான் சந்துரு.இறுதியாக தனது மாமாவாகிய சந்துருவை மண்டபத்திற்குள் கைப்பிடித்து அழைத்து சென்றான் பாபு.
சாருவிற்கு அலங்காரம் செய்து முடித்ததும், வீட்டில் உள்ள அனைத்து பெரியோர்களிடமும் ஆசிர்வாதம் பெற்றாள் சாரு.நல்ல நேரம் முடிவதற்குள் வண்டியில் வந்து ஏறுமா சாரு! என்றார் சாருவின் அப்பா சுப்ரமணியன்.
நாங்கள் அனைவரும் சாருவை அழைத்துக்கொண்டு முன்னால் செல்கிறோம் ராஜூ.
நீ வீட்டில் உள்ள மற்ற எல்லோரையும் அழைத்து கொண்டு பின்னால் வரும் வண்டியில் சீக்கிரமாக மண்டபத்திற்கு வந்துவிடு! என்று சாருவின் சித்தாப்பா ராஜூவிடம் கூறினார் சுப்ரமணியன்.
சாரு வண்டியில் ஏறியதும் அவளது எண்ணமெல்லாம் சந்துருவை பற்றி சிந்திக்க தொடங்கியது.
வண்டியின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தாள் சாரு.சாருவை அடுத்து பானு உட்கார்ந்திருந்தாள்.
சாருவின் மனம் இருக்கும் இடத்தை அறியாமல், தானாக கதை பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வந்தாள் பானு.
வண்டி வேக தடையை தாண்டி செல்லும் போது திடீரென்று போட்ட ப்ரேக்கில், வண்டி குலுங்கிய போது தான் சுயநினைவுக்கு வந்தாள் சாரு.
வண்டியின் ஜன்னல் வழியாக வானத்தையே பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் சாரு.
ஏய் சாரு! வானத்தில் அப்படி என்னடி தெரிகிறது? என்று வண்டியின் ஜன்னல் வழியாக எட்டிக்கொண்டு வானத்தை பார்த்தாள் பானு.
வானத்துல எதுவும் வித்தியாசமாக தெரியவில்லையே! என்றாள் பானு.
மீண்டும் பதில் ஏதும் சொல்லாமல் சிரிக்க தொடங்கினாள் சாரு.
அது சரிதான்... நான் ஒரு மடச்சி...நீ கற்பனை உலகத்தில் உலாவுவது தெரியாமல் நான் சொல்லுவதை கேட்குறயா? இல்லையானு? கூட தெரியாமல் லூசு மாதிரி தனியாக புலம்பிட்டு வந்திருக்கேன் பாரு.நீ இப்போது எதை நினைத்து சிரிக்கிறனு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு.
நீ மாப்பிள்ளை சாரோடு சேர்ந்து டூயட் பாட்டுக்கு வானத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறது போல கற்பனை செய்து பார்த்து தான சாரு சிரிக்கிற என்று கேட்டாள் பானு.
உனக்கு எப்போது பார்த்தாலும் டூயட் பாட்டு நினைப்பு தான் வருமாடி பானு.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...
பிறகு மேடம் எதை நினைத்து சிரிக்கிறீங்களாம்? என்று கேட்டாள் பானு.
ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். இன்றைக்கு அதை நினைத்து பார்த்தேன்.அதுதான் சிரிப்பு வந்தது.
அப்படி என்ன கனவு சாரு அது? என்று பானு கேட்டதும், கனவின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அனைத்தையும் சொன்னாள் சாரு.
இதில் சிரிப்பதற்கு என்ன சாரு இருக்கிறது? என்றாள் பானு.
கனவில் காரில் வந்து இறங்கியது மனோஜ் அண்ணானு தெரியாமல் போச்சு.
இப்போது பாரு நீங்கள் ப்ரெண்ட்ஸ் ஆகியாச்சு.அடுத்த கட்ட நடவடிக்கையாக இரண்டு வீட்டு பக்கமும் பேசி சம்மதம் வாங்கிட வேண்டியது தான் பாக்கி என்று கூறியதும் சிரிக்க தொடங்கினாள் சாரு.
நாணத்தில் குனிந்து கொண்டு சும்மாயிரு சாரு என்றாள் பானு.
வண்டி மண்டபத்தை நெருங்கியதும் சாருவின் மனம் பட படத்தது.அவளது கண்கள் தேனீக்கள் பூவை தேடுவது போல சந்துருவை தேடி ரிங்காரமிட்டது.
சாருவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்று மணமகள் அறைக்கு அழைத்து சென்றனர்.
மணமகள் அறையின் எதிர்ப்புறத்தில் தான் மணமகனின் அறையும் இருந்தது.
சாருவின் உடல் மட்டும் தான் அறையில் இருந்தது.மனமும் கண்களும் அலைபாய்ந்து சந்துருவை தேடி சுற்றித்திரிந்தது.
அவளை சுற்றியிருந்த உறவுகளின் சத்தம் எதுவும் அவளது காதில் விழவில்லை.
திடீரென ஜில்லுனுெ ஒரு காற்று அவளை கடந்து செல்வது போல உணர்ந்தாள்.
சந்துரு மணமகள் அறையை கடந்து சென்றான்.அவன் மீது கொண்ட ஆழமான காதல் தான் சாருவிற்கு அவனது வருகையை முன்பே உணர செய்தது போலும்!
முதலில் மணமகனை அழைத்து வருமாறு புரோகிதர் கூறினார்.
மணமகன் சந்துரு மேடைக்கு வந்தார். பார்த்தவுடன் ஈர்க்கும் அளவிற்கு மாய கண்ணனை போல அவ்வளவு அழகாக இருந்தான் சந்துரு.
அதன் பின்னர் மணமகளின் நிச்சயதார்த்த புடவையை கொடுத்து விட்டு மணமகளை அழைத்து வருமாறு கூறினார்.
நாளிகை ஆகுது! மணப்பெண்ணை சீக்கிரம் அழைச்சிட்டு வாங்கோ! என்றார் புரோகிதர்.
அழகுனா அழகு! அப்படி ஒரு அழகுடா சாமி! பௌர்ணமி நிலவு போன்று பிரகாசமான முகமும், மீன்களை போன்று விழிகளும், செக்க சிவந்த செவ்விதழும், கட்டுக்கோப்பான உடலமைப்பும் கொண்டு நீல வண்ண சேலை அணிந்து பூமாதேவிக்கு வலிக்காதவாறு மெதுவாக அடி எடுத்து வைத்து நடந்து வந்தாள் சாரு.
சாரு உடுத்தியிருந்த நீல வண்ண சேலையில் ஆங்காங்கே வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்டிருந்தது.அது பார்ப்பதற்கு வானத்தில் நட்சத்திரங்கள் ஜொலிப்பது போல காட்சியளித்தது.
மணமகள் அறையிலிருந்து மணமேடைக்கு செல்லும் ஒவ்வொரு நொடியும் சாருவின் மனதில்,
சந்துருவை பார்க்க போகும் அந்த தருணத்தை நினைத்து மிகுந்த சந்தோஷத்துடன் ஆவலாக இருந்தாள்.
மணமேடையில் ஏறினாள் சாரு.அவளது கண்களோ! சந்துருவை உடனே பார்க்க வேண்டும் என்று கண் இமைகள் வேகமாக துடித்தது.
உதடுகளோ! அவனோடு பேச வேண்டும் என்று முணுமுணுத்தது.
ஆனால் சந்துருவிற்கோ, தன் எதிர்கால துனைவியை பார்க்க போகின்றோம் என்ற எந்தவித உணர்வும் எதிர்ப்பார்ப்பும் சிறுதுளி அளவு கூட இல்லாமல் எங்கேயோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
சந்துருவின் அருகில் சென்று நிற்பதற்காக அடியின் மேல் அடி வைத்து நடந்து சென்ற போது சாருவின் மனதில் காதல் கீதம் அரங்கேற துவங்கியது.
சந்துருவின் அருகே சென்று நின்றவள் அவனை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் மனதில் பரிதவித்து கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளையும் பொண்ணும் மாலையை மாத்திக்கோங்கோ! என்று சொன்னார் புரோகிதர்.
சாருவின் கழுத்தில் மாலையை போட போகும் பொழுது முதன் முறையாக சாருவை பார்த்த சந்துரு, கண் இமைக்காமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.
பக்கத்திலிருந்த பானு மாப்பிள்ளை சார் உன் அழகில் மயங்கி சிலையாகிட்டாரு போல சாரு.தட்டி எழுப்பிவிடு! என்று சொல்லிக்கொண்டு சிரித்தாள்.
சந்துருவை நேருக்கு நேராக பார்த்த சாருவும் அவனது கண்களால் கவர்ந்திழுக்கப்பட்டு சந்துருவின் இதய சிறையில் கைதியாகி விட்டாள்.
டேய் சந்துரு! மாலையை சாருவின் கழுத்தில் போடுடா என்று அவனது தோள் பட்டையை தட்டினான் மனோஜ்.
தோள் பட்டையை தட்டியதும் சுயநினைவுக்கு வந்த சந்துரு டக்குனு மாலையை சாருவின் கழுத்தில் போட்டு விட்டு திரும்பிக்கொண்டான்.
சந்துருவின் கழுத்தில் மாலையை போடும் போது, சாருவின் மனதில்
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன்
இவன் தானா?
என்ற பாடல் வரிகள்
ஓடிக்கொண்டிருந்தது.
சாருவிற்கு நிச்சயதார்த்த மோதிரம் போட அவளது கையை சந்துரு பிடித்த போது, இருவரும் பூர்வ ஜென்ம உறவு போல இருவரின் மனதிற்குள்ளும் ஏதோ ஒரு உணர்வு வந்து போனது.
உறவினர்கள் ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக மேடையில் வந்து வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்ததால், சந்துருவுடன் தனியாக பேசுவதற்கு சாரு எவ்வளவோ முயற்சி செய்தும் பேச முடியாமல் போனது.
சாப்பிடுவதற்கு மாப்பிள்ளையும் பெண்ணையும் அழைத்து கொண்டு சென்றனர்.
சாப்பிடும் போதாவது பேசிவிடலாம் என்று நினைத்த சாருவிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.சந்துரு மற்றும் சாருவின் நடுவில் வந்து அமர்ந்தான் சங்கர்.
சாப்பிட்டு முடித்ததும் எதுவுமே பேசாமல் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.
சாருவின் கண்கள் சந்துருவையே நோக்கி கொண்டிருந்தது.ஆனால் சந்துருவோ, சாருவிடம் எதுவும் சொல்லாமல் போனில் ஏதோ பார்த்துக்கொண்டே அவனது அறைக்கு சென்று விட்டான்.
அறைக்குள் வந்தவனால் நிதானமாக இருக்க முடியவில்லை.சாருவை பற்றி சிந்திக்க தொடங்கினான்.
என்னடா சந்துரு! சாருவை பார்த்ததும் காதல் போதை தலைக்கேறிருச்சாடா? மாலையை போட சொன்னால் ஆடாமல் அசையாமல் அப்படியே சாருவை பார்த்துக்கொண்டே இருந்த என்று கேட்டான் மனோஜ்.
டேய்! சும்மாயிருடா.நானே ரொம்ப குழப்பத்தில் இருக்கிறேன் என்றான் சந்துரு.
அப்படி சார்க்கு என்ன குழப்பம்னு தெருஞ்சுக்கலாமா?
சாருவை தொட்டதும் எனக்கு அப்படியே சஞ்சுளா கையை தொட்டது போலவே இருந்ததுடா மனோஜ்.
அப்படியே கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேனா...நீ சுயநினைவுக்கு வந்திருவனு நினைக்கிறேன்.
விடிந்ததும் கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்போது பேசுகின்ற பேச்சைப்பாரு.
நீ இன்னுமாடா சஞ்சுளாவை மறக்காமல் இருக்கிறாய்? என்று கேட்டான் மனோஜ்.
மனோஜ் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் உறங்க சென்று விட்டான் சந்துரு.
பாட்டு பாடிக்கொண்டே சாருவின் அறைக்குள் வந்தாள் பானு.
மேடம் ரொம்ப குஷியாக இருக்கீங்க போல...ரொம்ப நேரமாக ஆளையே காணோம்? என்று பானுவை பார்த்து கேட்டாள் சாரு.
அவுங்க கிட்ட கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்தேன் என்றாள் பானு.
அவுங்கனா... எவுங்க மேடம்? என்று கேட்டாள் சாரு.
மனோஜ் சார்...என்றாள் பானு.
நடக்கட்டும்... நடக்கட்டும்...என் கல்யாணத்துக்கு வந்துவிட்டு உன் கல்யாணத்துக்கு ப்ளான் போடுகிறாயா? என்று பானுவை கிண்டலடித்தாள் சாரு.
இன்னும் தூங்கவில்லையா சாரு? கதையெல்லாம் இன்னொரு நாள் பேசிக்கலாம்.அதிகாலையில் எழுந்து தயாராகனும்.சீக்கிரம் தூங்குங்கடா சாரு! என்று கூறிவிட்டு அவரது அறைக்கு சென்றார் சிவகாமி அம்மா.
பொழுது விடிந்தது...மேள தாளங்களும் நாதஸ்வரமும் வாசிக்க தொடங்கிய சத்தம் கேட்டது.
புரோகிதர் மந்திரம் ஓத ஆரம்பித்தார்...
இளவரசியை அழைத்து வருவது போல சாருவை பல்லக்கில் தூக்கி கொண்டு வந்தனர்.சிவப்பு வண்ண நிற சேலை உடுத்தி பார்ப்பதற்கு சாட்சாத் மகாலெஷ்மி போலவே இருந்தாள் சாரு.
பல்லக்கில் இருந்து இறங்கியதும், சாருவை மணமேடைக்கு அழைத்து சென்றார் சாருவின் முறைமாமன் பசுபதி.
தூரத்தில் அவள் வருவதை பார்த்தவன்.சாரு அருகில் வந்ததும் பார்த்தும் பார்க்காதது போல அமர்ந்திருந்தான் சந்துரு.
சந்துரு, சாரு இருவரும் புரோகிதர் சொல்ல சொல்ல மந்திரம் சொல்ல ஆரம்பித்தனர்.
அனைத்து சாஸ்திர சம்பிரதாய சடங்குகள் முடிந்ததும், தட்டில் வைத்திருந்த திருமாங்கல்யத்தையும், அட்சதை அரிசியையும் சாருவின் அத்தை சரளாவின் கையில் கொடுத்தார் புரோகிதர்.
அனைவரிடமும் சென்று மாங்கல்யத்தை தொட்டு ஆசிர்வாதம் பெற்று அட்சதை அரிசியை கொடுத்து விட்டு சீக்கிரம் வாங்கோ! என்றார் புரோகிதர்.
புரோகிதர் மாங்கலயத்தை எடுத்து சந்துருவின் கையில் கொடுக்க போகும் பத்து நிமிடத்திற்கு முன்னர் காவல்துறை அதிகாரி சந்துருவை தேடி மண்டபத்திற்கு வந்தார்.
அவரை பார்த்த சந்துருவும் உடனே மணமேடையை விட்டு கீழே இறங்கி சென்றான்.
டேய் சந்துரு! முகூர்த்த நேரத்தில் எங்கடா சந்துரு எழுந்து போற? என்று கேட்டார் ஜானகி அம்மா.
பதில் ஏதுவும் கூறாமல் வேகமாக இறங்கி சென்றான் சந்துரு.
திடீரென போலீஸ் அதிகாரியை பார்த்த அனைவருக்கும் ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் இருந்தனர்.
மணமேடையின் கீழே அமர்ந்திருந்த சங்கர் வேகமாக எழுந்து மணமேடைக்கு வந்தான்.
சாருவின் அருகே சென்ற சங்கர், நீ எதுவும் கவலைப்படாதே சாரு! சந்துரு போனால் போகட்டும்.உன்னை கல்யாணம் செய்து கொள்ள நான் இருக்கின்றேன் என்றான்.புரோகிதரே! அந்த தாலியை எடுத்து என் கையில் கொடுங்கள் என்றான் சங்கர்.
திடீரென போலீஸ் வந்ததற்கு காரணம் என்ன? யார் அந்த சஞ்சுளா? சாருவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டது யார்? என்று இனி வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
seekram podren sis...today ud illa ya sissy........yeppo ud poduviga 🤩![]()
மிக்க நன்றி அம்மா🙏😍விரைவில் பதிவு செய்கிறேன்....எங்கே ஒளிந்திருந்தது இத்தனை திறமையும். மிக அழகாக நகர்கிறது நாவல். நாளைய பதிவிற்காக மனதில் பொங்குது ஆவல்.
ஆவலைத்தூண்டும் விதமாக அழகாக நகர்த்திக்கொண்டு செல்கிறீர்கள். மிகச்சிறப்பாக போய்க்கொண்டு உள்ளது, அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் வெகு ஆவலுடன்.எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 10
முகூர்த்த நேரம் நெருங்கும் சமயம் பார்த்து மாப்பிள்ளை சார் எதுவும் சொல்லாமல் எழுந்து போய்ட்டாரு.
இங்கே என்ன நடக்குது சாரு? திடீரென்று போலீஸ் வேற வந்திருக்காங்க...
நீ என்னடானா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருக்க? போதாத குறைக்கு உன் மாமா பையன் வேற நேரம் காலம் தெரியாமல் இப்படி பிடிவாதம் பிடிக்கிறான் என்று
சாருவின் காதருகே சென்று சொல்லிக்கொண்டிருந்தாள் பானு.
சாரு எந்தவொரு பதிலும் சொல்லாமல் மௌனமாக சங்கரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
நாங்கள் எல்லோரும் அடுத்து என்ன நடக்க போகுதோனு தெரியாமல் பீதியில் இருக்கிறோம்.பயப்பட வேண்டிய நீ கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் கூலா எப்படி இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்கிற சாரு ?என்று கேட்டாள் பானு.
அடுத்து என்ன நடக்க போகுதுனு இன்னுமா உனக்கு தெரியல?
நீ ஒன்றும் பதறாமல் அமைதியாக இருந்து அடுத்து நடக்க போவதை மட்டும் பொறுத்திருந்து பார்.
நீ போனை கையில் வைத்துக்கொண்டு தயாராகயிரு.
நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கிறதா? என்று பானுவிடம் கேட்டாள் சாரு.
அதைப்பற்றி நீ எதுவும் கவைப்படாதே!
கல்யாண் முடிந்ததும், உன் கைக்கு கரெக்ட்டா வந்து சேர்ந்துவிடும் என்றாள் பானு.
வாங்க சார்...வாங்க...உங்களை தான் இவ்வளவு நேரமாக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன்.முகூர்த்த நேரத்திற்கு சரியாக வந்துடீங்க சார்.இங்கே வந்து உட்காருங்க என்று வந்த காவல்துறை அதிகாரியை வரவேற்றார் சாருவின் தாத்தா.
என்னங்க ஐயா! நீங்கள் போய் என்னை சார்னு கூப்பிடுறீங்க.சும்மா என் பெயரை சொல்லி கூப்பிடுங்கள்.
அன்றைக்கு நீங்கள் மட்டும் எனக்காக பேசாமல் இருந்திருந்தால், இன்றைக்கு இந்த பதவியே எனக்கு கிடைத்திருக்காது ஐயா! என்றார் அந்த காவல்துறை அதிகாரி.
ஒவ்வொரு பதவிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுக்கனும் சார் என்று தாத்தா அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே மணமேடையிலிருந்து வந்த சந்துரு எதுவும் முக்கியமான தகவலாக இருந்திருந்தால் ஒரு வார்த்தை போன் செய்து சொல்லிருக்கலாமே சார்? என்று வந்த காவல்துறை அதிகாரியிடம் கேட்டான்.
அந்த விபத்து குறித்த தகவல் எதுவும் கிடைத்ததா சார்? என்று கேட்டான் சந்துரு.தம்பி! நான் உங்களது கல்யாணத்திற்கு தான் விருந்தினராக வந்திருக்கிறேன்.முகூர்த்த நேரம் நெருங்கிருச்சு, நீங்க மணமேடைக்கு போங்க.அதைப்பற்றி பிறகு பேசிக்கலாம் என்று கூறினார் காவல்துறை அதிகாரி.
முகூர்த்ததிற்கு நாளிகை ஆகிடுத்து!மாப்பிள்ளை சீக்கிரம் வாங்கோ! என்று சந்துருவை அழைத்தார் புரோகிதர்.
சந்துருவை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு சென்றார் தாத்தா.
டேய்! அமுல் பேபி எழுந்திருடா! பார்க்க கால் படி உலக்கு உயரம் இருந்துகிட்டு என்னமா வாய் பேசிகிறான் பாருங்க! என்றான் மனோஜ்.
மனோஜை பார்த்து முரைத்து முகம் சுழித்தான் சங்கர்.
எழுந்திருடா கண்ணா! மாப்பிள்ளை உட்காரட்டும் என்றார் தாத்தா.
எழுந்திருக்க மாட்டேன்! என்று பிடிவாதம் செய்தவனின் கையை பிடித்து இழுத்து தூக்கிக்கொண்டு சென்றார் சங்கரின் அப்பா பசுபதி.
ஐந்து வயதாகும் சங்கர் செய்யும் குறும்புதனம் கண்டு அனைவரும் சிரித்தனர்.
சாருவின் அருகில் வந்து அமர்ந்த சந்துரு சாருவின் முகத்தை பார்த்தான்.
சாரு எந்தவொரு பதற்றமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
சந்துருவின் கையில் திருமாங்கல்யத்தை கொடுத்தார் புரோகிதர்.
கெட்டி மேளம்... கெட்டி மேளம்... என்று கூறிவிட்டு "மாங்கல்யம் தந்துனானே..." மந்திரத்தை புரோகிதர் சொல்ல அனைவரும் அட்சதை அரிசியை மணமக்களின் மேலே தூவ சாருவின் கழுத்தில் இறைவனை சாட்சியாக கொண்டு முதல் முடிச்சையும், முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சையும், பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக மூன்றாவது முடிச்சையும் போட்டு, சாருவின் நெற்றியில் திலகமிட்டு தன் மனைவியாக்கி கொண்டான் சந்துரு.
சந்துருவின் அப்பா இல்லாமல் இத்தனை நாட்கள் தன் மகனின் கல்யாணத்தை முடிக்க பாடுப்பட்ட ஜானகி அம்மாவின் போராட்டமும் மனகவலையும் இன்றோடு தீர்ந்தது.
தனது மகனின் கல்யாணத்தை நல்ல படியாக முடிந்ததை கண்டு சந்துருவின் அம்மாவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.
மறுபக்கம் சாருவின் வீட்டார் அனைவரும் ஆனந்த கண்ணீருடன் அவர்கள் மேல் அட்சதை அரிசியை தூவி வாழ்த்தினர்.
மனோஜ் மட்டும் அட்சதை அரிசியை மணமக்களின் மேல் தூவாமல், பானுவின் மேல் போட்டுக்கொண்டிருந்தான்.
பானுவிடம் கை சைகையிலே இப்போதே உன் கழுத்தில் தாலிக்கட்டட்டுமா? நான் ரெடி...நீங்க ரெடியா? என்று கேட்டான்.
நான் என் அப்பாவை கூப்பிடட்டுமா? என்று கண் ஜாடையிலே மனோஜிடம் சிரித்துக்கொண்டே கேட்டாள் பானு.மனோஜ் சிரித்துக்கொண்டே அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு சந்துருவின் பக்கம் திரும்பிக்கொண்டான்.
சந்துரு, சாருவின் கையை பிடித்து அக்னியை சாட்சியாக வைத்து ஏழு முறை வலம் வந்தான்.அவளது கையை தொட்ட அந்த நிமிடம் சந்துருவினால் தாக்கு பிடிக்க முடியவில்லை.கண்கள் கலங்க ஆரம்பித்தது.சாருவின் கை விரல்கள் தீண்டியதும் சஞ்சுளாவின் நினைவுகள் அனைத்தையும் அவன் கண் முன்னே கொண்டு வந்தது.
சந்துரு! ஏன் உன் கண்ணுலாம் இப்படி சிவந்து போய் இருக்குது? என்று அவனது சித்தி கேட்டார்.
அதிகாலையில் வேகமாக எழுந்ததால் இருக்கும் சித்தி என்று கூறி சமாளித்து விட்டான்.
வேகமாக சந்துருவின் கண்களை பார்த்தாள் சாரு.சந்துருவின் கண்களை வைத்தே அவன் ஆழ் மனதில் ஏதோ நினைத்து கலங்குகிறான் என்பதை தெரிந்து கொண்டாள் சாரு.ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.
பெற்றோர்களிடத்தில் ஆசிர்வாதம் வாங்குமாறு புரோகிதர் கூறினார்.
சந்துருவின் அம்மா முதலில் ஆசிர்வாதம் செய்ய மறுத்தார்.தான் சுமங்கலியாக இல்லாததால் சாருவின் பெற்றோரிடத்தில் முதலில் ஆசிர்வாதம் வாங்குமாறு சொன்னார்.
ஜானகி அம்மாவின் அருகில் சென்ற சாரு, உங்களது மகனை நல்ல படியாக பெற்று வளர்த்து ஆளாக்கி தினமும் கடவுளிடம் உங்களுக்காக வேண்டாமல் உங்கள் பிள்ளைகள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்யும் உங்களின் ஆசிர்வாதம் தான் எங்களை பல்லாண்டு காலம் நன்றாக வாழ வைக்கும்.
வேறு எதை பற்றியும் யோசித்து மனதை குழப்பாமல், எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அத்தை என்று சாரு கூறியதை கேட்டதும் ஜானகி அம்மாவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.சாரு பேசும் விதம் கண்டு ஆச்சரியப்பட்டு போனான் சந்துரு.
பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று ஆசிர்வாதம் தனது மகனையும் மருமகளாய் வந்த மகளையும் வாழ்த்தி, சாருவை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
அதற்கு பின்னர் சாருவின் தாத்தா, பாட்டி அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.சாருவின் குணம் கண்டு உள்ளம் பூரித்து போனார்கள் சாருவின் குடும்பத்தினர்.
அதையடுத்து மற்ற திருமண சடங்குகளும் நடைபெற தொடங்கியது.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மெட்டியை மிருதுவான பாதமலர்கள் கொண்ட சாருவின் விரல்களை பிடித்து போட்டுவிட்டான் சந்துரு.
ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி அதனுள் மோதிரத்தை போட்டு வைத்திருந்தனர்.யார் முதலில் எடுப்பது என்று பார்க்கலாம்? என்று சந்துருவையும் சாருவையும் பார்த்து சுற்றியிருந்த அனைவரும் உற்சாகப்படுத்தி கரகோஷம் எழுப்பினார்கள்.
சாரு விடாதடி... எப்படியாவது அந்த மோதிரத்தை எடுத்துவிடு! என்றாள் பானு.அதையும் பார்த்திடலாம் என்று சந்துருவிற்கு ஆதரவாக பதில் கூறினான் மனோஜ்.
டேய் சந்துரு! ஒழுங்கா மோதிரத்தை எடுத்து மானத்தை காப்பாற்றி விடுடா மச்சான் என்றான்.
வேண்டா வெறுப்பாக பானையினுள் கையை விட்டான் சந்துரு.ஆனால் சாருவோ மிகவும் ஆர்வத்துடன் தனது கையை விட்டாள்.
பத்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது.
இப்போதைக்குள் இரண்டு பேரும் பானையிலிருந்து கையை எடுப்பது போல தெரியவே இல்லை.
ஆரவாமாக கத்திக்கொண்டிருந்த அனைவரும் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அமைதியாக அவர்களையும் பானையையும் மாத்தி மாத்தி பார்த்துக்கொண்டிருந்தனர்.
சீக்கிரமாக மோதிரத்தை எடு சாரு! என்று கத்திக்கொண்டே இருந்தாள் பானு.
அவள் சொல்லி முடித்த மறுகணமே பானையிலிருந்து கையை எடுத்தாள் சாரு.
சந்தோஷம் தாங்க முடியாமல் சாருவை கட்டிப்பபிடித்து அவளது கையை திறந்து பார்த்த பானு குரலின் ஓசை சட்டென்று குன்றியது.
எதிர்ப்புறத்திலிருந்து மனோஜின் குரல் ஓங்கி ஒலித்தது.சந்துருவின் கையில் தான் மோதிரம் இருந்தது.
பானையினுள் என்ன நிகழ்ந்தது? என்று சந்துரு, சாருவிற்கு மட்டும் தான் தெரியும்.
பானையினுள் வேகமாக தேடுவது போல நடித்து கொண்டிருந்தான் சந்துரு.ஆனால் பானையினுள்ளே பார்த்தால் சுவற்றில் பல்லி ஒட்டிக்கொண்டிருப்பது போல அவனது கை சாருவின் கையை தொடாதவாறு பானையின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.
சாருவும் பொறுத்து பொறுத்து பார்த்தாள்.பிறகு மோதிரத்தை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு மறுகணம் தனது கையை பானையிலிருந்து வெளியே எடுத்துவிட்டாள்.
தன் கணவன் தான் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றெண்ணி வெற்றியை சந்துருவிற்காக விட்டு கொடுத்துவிட்டாள் சாரு.
திருமண பந்தத்தில் ஒன்றிணையும் மணமக்கள் இருவருக்கும் இருக்க வேண்டிய பண்புகளில் மிகவும் முக்கியான ஒன்று, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து அன்புடன் புரிந்து கொண்டு நடப்பது தான்.அதை தான் சாருவும் செய்தாள்.
வெளியே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால், சந்துரு வென்றுவிட்டதாக தெரியலாம்.
உண்மையிலேயே அந்த போட்டியில் வென்றது சாரு தான்.போட்டி முடிந்த பின்னர் அனைவரும் சாப்பிட சென்றனர்.
அசோகா, பொங்கல், போண்டா, மனோகர பருப்பு தேங்காய், ரவா கிச்சடி, கீரை வடை, பூந்தி, தயிர்வடை, பிஸிபேளாபாத், மிக்ஸ்டு சேவை, சேப்பங்கிழங்கு ரோஸ்ட், பீன்ஸ் பருப்பு உசிலி, கோஸ் பட்டாணி பொரியல்,
வெண்டைக்காய் மோர்க்குழம்பு,
வெஜிடபிள் புலாவ், காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை, கதம்ப சாம்பார், மணத்தக்காளி வற்றல் குழம்பு, சேனை வறுவல், அவியல், ரசம், அப்பளம், பால் பாயசம், பழப்பச்சடி, ஃப்ரூட் தயிர்சாதம், முந்திரி கேக் என்று பல வகையான செட்டிநாட்டு சமையல் வகைகள் பந்தியில் பரிமாறப்பட்டது.
அதோடு மட்டுமில்லாமல் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் தாம்பூல பையுடன் சேர்த்து மரக்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரின் வயிறும் மனதும் சந்தோஷத்தில் நிறைந்து மணமக்களை மனதார வாழ்த்திவிட்டு சென்றனர்.
பக்கத்திலிருந்த உறவினர்கள் சந்துரு சாருவிற்கும், சாரு சந்துருவிற்கும் மாறி மாறி உணவை ஊட்டுமாறு கூறினார்கள்.
முதலில் இருவரும் தயங்கினார்கள்.
பின்னர் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.
காவல்துறை அதிகாரி வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர்களுக்கு திருமண பரிசை அளித்தார்.
அங்கு வந்த கணக்குப்பிள்ளை தனது மகனை சந்துருவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அன்றைக்கு எனது மகனை போலீஸ் ட்ரைனிங்கு அனுப்புவதற்கு மறுப்பு தெரிவித்தேன்.பிள்ளைகளின் விருப்பத்திற்கு வேலி போட்டு உனது விருப்பத்தை அவர்கள் மீது திணிக்க நினைக்காதே! என்று ஐயா தான் எனக்கு பாடம் புகட்டினார் என்று சந்துருவிடம் பழைய கதையை எல்லாம் கூறினார் கணக்குப்பிள்ளை.
சந்துருவிற்கு காவல்துறை அதிகாரி வந்ததிற்கான விவரம் அப்போது தான் தெரிய வந்தது.
அந்த வண்டியை கண்டுபிடித்து விட்டீர்களா சார்? என்று கேட்டான் சந்துரு.
பிடித்தாச்சு தம்பி! லாக்கப்ல தான் அந்த பசங்க இருக்காங்க.நாளைக்கு கோர்ட்ல ஆஜர் செய்ய போகிறோம் என்றார்.
சரிங்க சார்...ரொம்ப நன்றி என்று கூறினான் சந்துரு.
இது என்னுடைய கடமை தம்பி என்றார் அந்த காவல்துறை அதிகாரி.எனக்கு நேரமாகிடுச்சு தம்பி.நான் ஐயாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
மண்டபத்திலிருந்து மணமக்களை சந்துருவின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.வீட்டிற்கு வந்த மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.வலது காலை எடுத்து வைத்து தன் புகுந்த வீட்டிற்குள் நுழைந்தாள் சாரு.
பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டதும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்தனர்.
சந்துரு, சாருவிடம் எதுவும் சொல்லாமல் அவளை ஹாலிலேயே விட்டுவிட்டு அவனது அறைக்கு சென்றான்.
தனது அறைக்குள் நுழைந்தவன், அம்மா! என்று திடீரென அலறி கத்தினான்.சந்துருவின் அலறல் சத்தம் கேட்ட சாரு, வேகமாக பதறி அடித்துக்கொண்டு சந்துருவின் சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினாள்.
ஜானகி அம்மாவும் மனோஜூம் சந்துருவின் அறைக்கு விரைந்து சென்று சந்துரு! சந்துரு! என்னாச்சுடா? என்று அறையின் கதவை வேகமாக தட்டினார்கள்.
சந்துருவிற்கு என்ன நிகழ்ந்தது?சந்துருவின் அலறலுக்கு காரணம் என்ன?அறைக்குள் அப்படி என்ன நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏