Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

Lammu

New member
Messages
21
Reaction score
16
Points
3
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 10


முகூர்த்த நேரம் நெருங்கும் சமயம் பார்த்து மாப்பிள்ளை சார் எதுவும் சொல்லாமல் எழுந்து போய்ட்டாரு.
இங்கே என்ன நடக்குது சாரு? திடீரென்று போலீஸ் வேற வந்திருக்காங்க...


நீ என்னடானா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருக்க? போதாத குறைக்கு உன் மாமா பையன் வேற நேரம் காலம் தெரியாமல் இப்படி பிடிவாதம் பிடிக்கிறான் என்று
சாருவின் காதருகே சென்று சொல்லிக்கொண்டிருந்தாள் பானு.


சாரு எந்தவொரு பதிலும் சொல்லாமல் மௌனமாக சங்கரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.


நாங்கள் எல்லோரும் அடுத்து என்ன நடக்க போகுதோனு தெரியாமல் பீதியில் இருக்கிறோம்.பயப்பட வேண்டிய நீ கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் கூலா எப்படி இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்கிற சாரு ?என்று கேட்டாள் பானு.


அடுத்து என்ன நடக்க போகுதுனு இன்னுமா உனக்கு தெரியல?
நீ ஒன்றும் பதறாமல் அமைதியாக இருந்து அடுத்து நடக்க போவதை மட்டும் பொறுத்திருந்து பார்.
நீ போனை கையில் வைத்துக்கொண்டு தயாராகயிரு.
நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கிறதா? என்று பானுவிடம் கேட்டாள் சாரு.


அதைப்பற்றி நீ எதுவும் கவைப்படாதே!
கல்யாண் முடிந்ததும், உன் கைக்கு கரெக்ட்டா வந்து சேர்ந்துவிடும் என்றாள் பானு.


வாங்க சார்...வாங்க...உங்களை தான் இவ்வளவு நேரமாக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன்.முகூர்த்த நேரத்திற்கு சரியாக வந்துடீங்க சார்.இங்கே வந்து உட்காருங்க என்று வந்த காவல்துறை அதிகாரியை வரவேற்றார் சாருவின் தாத்தா.


என்னங்க ஐயா! நீங்கள் போய் என்னை சார்னு கூப்பிடுறீங்க.சும்மா என் பெயரை சொல்லி கூப்பிடுங்கள்.
அன்றைக்கு நீங்கள் மட்டும் எனக்காக பேசாமல் இருந்திருந்தால், இன்றைக்கு இந்த பதவியே எனக்கு கிடைத்திருக்காது ஐயா! என்றார் அந்த காவல்துறை அதிகாரி.


ஒவ்வொரு பதவிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுக்கனும் சார் என்று தாத்தா அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே மணமேடையிலிருந்து வந்த சந்துரு எதுவும் முக்கியமான தகவலாக இருந்திருந்தால் ஒரு வார்த்தை போன் செய்து சொல்லிருக்கலாமே சார்? என்று வந்த காவல்துறை அதிகாரியிடம் கேட்டான்.


அந்த விபத்து குறித்த தகவல் எதுவும் கிடைத்ததா சார்? என்று கேட்டான் சந்துரு.தம்பி! நான் உங்களது கல்யாணத்திற்கு தான் விருந்தினராக வந்திருக்கிறேன்.முகூர்த்த நேரம் நெருங்கிருச்சு, நீங்க மணமேடைக்கு போங்க.அதைப்பற்றி பிறகு பேசிக்கலாம் என்று கூறினார் காவல்துறை அதிகாரி.


முகூர்த்ததிற்கு நாளிகை ஆகிடுத்து!மாப்பிள்ளை சீக்கிரம் வாங்கோ! என்று சந்துருவை அழைத்தார் புரோகிதர்.
சந்துருவை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு சென்றார் தாத்தா.


டேய்! அமுல் பேபி எழுந்திருடா! பார்க்க கால் படி உலக்கு உயரம் இருந்துகிட்டு என்னமா வாய் பேசிகிறான் பாருங்க! என்றான் மனோஜ்.


மனோஜை பார்த்து முரைத்து முகம் சுழித்தான் சங்கர்.


எழுந்திருடா கண்ணா! மாப்பிள்ளை உட்காரட்டும் என்றார் தாத்தா.


எழுந்திருக்க மாட்டேன்! என்று பிடிவாதம் செய்தவனின் கையை பிடித்து இழுத்து தூக்கிக்கொண்டு சென்றார் சங்கரின் அப்பா பசுபதி.


ஐந்து வயதாகும் சங்கர் செய்யும் குறும்புதனம் கண்டு அனைவரும் சிரித்தனர்.


சாருவின் அருகில் வந்து அமர்ந்த சந்துரு சாருவின் முகத்தை பார்த்தான்.
சாரு எந்தவொரு பதற்றமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.


சந்துருவின் கையில் திருமாங்கல்யத்தை கொடுத்தார் புரோகிதர்.


கெட்டி மேளம்... கெட்டி மேளம்... என்று கூறிவிட்டு "மாங்கல்யம் தந்துனானே..." மந்திரத்தை புரோகிதர் சொல்ல அனைவரும் அட்சதை அரிசியை மணமக்களின் மேலே தூவ சாருவின் கழுத்தில் இறைவனை சாட்சியாக கொண்டு முதல் முடிச்சையும், முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சையும், பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக மூன்றாவது முடிச்சையும் போட்டு, சாருவின் நெற்றியில் திலகமிட்டு தன் மனைவியாக்கி கொண்டான் சந்துரு.


சந்துருவின் அப்பா இல்லாமல் இத்தனை நாட்கள் தன் மகனின் கல்யாணத்தை முடிக்க பாடுப்பட்ட ஜானகி அம்மாவின் போராட்டமும் மனகவலையும் இன்றோடு தீர்ந்தது.
தனது மகனின் கல்யாணத்தை நல்ல படியாக முடிந்ததை கண்டு சந்துருவின் அம்மாவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.


மறுபக்கம் சாருவின் வீட்டார் அனைவரும் ஆனந்த கண்ணீருடன் அவர்கள் மேல் அட்சதை அரிசியை தூவி வாழ்த்தினர்.


மனோஜ் மட்டும் அட்சதை அரிசியை மணமக்களின் மேல் தூவாமல், பானுவின் மேல் போட்டுக்கொண்டிருந்தான்.
பானுவிடம் கை சைகையிலே இப்போதே உன் கழுத்தில் தாலிக்கட்டட்டுமா? நான் ரெடி...நீங்க ரெடியா? என்று கேட்டான்.


நான் என் அப்பாவை கூப்பிடட்டுமா? என்று கண் ஜாடையிலே மனோஜிடம் சிரித்துக்கொண்டே கேட்டாள் பானு.மனோஜ் சிரித்துக்கொண்டே அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு சந்துருவின் பக்கம் திரும்பிக்கொண்டான்.


சந்துரு, சாருவின் கையை பிடித்து அக்னியை சாட்சியாக வைத்து ஏழு முறை வலம் வந்தான்.அவளது கையை தொட்ட அந்த நிமிடம் சந்துருவினால் தாக்கு பிடிக்க முடியவில்லை.கண்கள் கலங்க ஆரம்பித்தது.சாருவின் கை விரல்கள் தீண்டியதும் சஞ்சுளாவின் நினைவுகள் அனைத்தையும் அவன் கண் முன்னே கொண்டு வந்தது.


சந்துரு! ஏன் உன் கண்ணுலாம் இப்படி சிவந்து போய் இருக்குது? என்று அவனது சித்தி கேட்டார்.


அதிகாலையில் வேகமாக எழுந்ததால் இருக்கும் சித்தி என்று கூறி சமாளித்து விட்டான்.


வேகமாக சந்துருவின் கண்களை பார்த்தாள் சாரு.சந்துருவின் கண்களை வைத்தே அவன் ஆழ் மனதில் ஏதோ நினைத்து கலங்குகிறான் என்பதை தெரிந்து கொண்டாள் சாரு.ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.


பெற்றோர்களிடத்தில் ஆசிர்வாதம் வாங்குமாறு புரோகிதர் கூறினார்.


சந்துருவின் அம்மா முதலில் ஆசிர்வாதம் செய்ய மறுத்தார்.தான் சுமங்கலியாக இல்லாததால் சாருவின் பெற்றோரிடத்தில் முதலில் ஆசிர்வாதம் வாங்குமாறு சொன்னார்.


ஜானகி அம்மாவின் அருகில் சென்ற சாரு, உங்களது மகனை நல்ல படியாக பெற்று வளர்த்து ஆளாக்கி தினமும் கடவுளிடம் உங்களுக்காக வேண்டாமல் உங்கள் பிள்ளைகள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்யும் உங்களின் ஆசிர்வாதம் தான் எங்களை பல்லாண்டு காலம் நன்றாக வாழ வைக்கும்.


வேறு எதை பற்றியும் யோசித்து மனதை குழப்பாமல், எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அத்தை என்று சாரு கூறியதை கேட்டதும் ஜானகி அம்மாவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.சாரு பேசும் விதம் கண்டு ஆச்சரியப்பட்டு போனான் சந்துரு.


பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று ஆசிர்வாதம் தனது மகனையும் மருமகளாய் வந்த மகளையும் வாழ்த்தி, சாருவை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.


அதற்கு பின்னர் சாருவின் தாத்தா, பாட்டி அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.சாருவின் குணம் கண்டு உள்ளம் பூரித்து போனார்கள் சாருவின் குடும்பத்தினர்.


அதையடுத்து மற்ற திருமண சடங்குகளும் நடைபெற தொடங்கியது.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மெட்டியை மிருதுவான பாதமலர்கள் கொண்ட சாருவின் விரல்களை பிடித்து போட்டுவிட்டான் சந்துரு.


ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி அதனுள் மோதிரத்தை போட்டு வைத்திருந்தனர்.யார் முதலில் எடுப்பது என்று பார்க்கலாம்? என்று சந்துருவையும் சாருவையும் பார்த்து சுற்றியிருந்த அனைவரும் உற்சாகப்படுத்தி கரகோஷம் எழுப்பினார்கள்.


சாரு விடாதடி... எப்படியாவது அந்த மோதிரத்தை எடுத்துவிடு! என்றாள் பானு.அதையும் பார்த்திடலாம் என்று சந்துருவிற்கு ஆதரவாக பதில் கூறினான் மனோஜ்.


டேய் சந்துரு! ஒழுங்கா மோதிரத்தை எடுத்து மானத்தை காப்பாற்றி விடுடா மச்சான் என்றான்.


வேண்டா வெறுப்பாக பானையினுள் கையை விட்டான் சந்துரு.ஆனால் சாருவோ மிகவும் ஆர்வத்துடன் தனது கையை விட்டாள்.


பத்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது.
இப்போதைக்குள் இரண்டு பேரும் பானையிலிருந்து கையை எடுப்பது போல தெரியவே இல்லை.


ஆரவாமாக கத்திக்கொண்டிருந்த அனைவரும் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அமைதியாக அவர்களையும் பானையையும் மாத்தி மாத்தி பார்த்துக்கொண்டிருந்தனர்.


சீக்கிரமாக மோதிரத்தை எடு சாரு! என்று கத்திக்கொண்டே இருந்தாள் பானு.


அவள் சொல்லி முடித்த மறுகணமே பானையிலிருந்து கையை எடுத்தாள் சாரு.


சந்தோஷம் தாங்க முடியாமல் சாருவை கட்டிப்பபிடித்து அவளது கையை திறந்து பார்த்த பானு குரலின் ஓசை சட்டென்று குன்றியது.


எதிர்ப்புறத்திலிருந்து மனோஜின் குரல் ஓங்கி ஒலித்தது.சந்துருவின் கையில் தான் மோதிரம் இருந்தது.


பானையினுள் என்ன நிகழ்ந்தது? என்று சந்துரு, சாருவிற்கு மட்டும் தான் தெரியும்.


பானையினுள் வேகமாக தேடுவது போல நடித்து கொண்டிருந்தான் சந்துரு.ஆனால் பானையினுள்ளே பார்த்தால் சுவற்றில் பல்லி ஒட்டிக்கொண்டிருப்பது போல அவனது கை சாருவின் கையை தொடாதவாறு பானையின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.


சாருவும் பொறுத்து பொறுத்து பார்த்தாள்.பிறகு மோதிரத்தை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு மறுகணம் தனது கையை பானையிலிருந்து வெளியே எடுத்துவிட்டாள்.


தன் கணவன் தான் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றெண்ணி வெற்றியை சந்துருவிற்காக விட்டு கொடுத்துவிட்டாள் சாரு.


திருமண பந்தத்தில் ஒன்றிணையும் மணமக்கள் இருவருக்கும் இருக்க வேண்டிய பண்புகளில் மிகவும் முக்கியான ஒன்று, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து அன்புடன் புரிந்து கொண்டு நடப்பது தான்.அதை தான் சாருவும் செய்தாள்.


வெளியே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால், சந்துரு வென்றுவிட்டதாக தெரியலாம்.
உண்மையிலேயே அந்த போட்டியில் வென்றது சாரு தான்.போட்டி முடிந்த பின்னர் அனைவரும் சாப்பிட சென்றனர்.


அசோகா, பொங்கல், போண்டா, மனோகர பருப்பு தேங்காய், ரவா கிச்சடி, கீரை வடை, பூந்தி, தயிர்வடை, பிஸிபேளாபாத், மிக்ஸ்டு சேவை, சேப்பங்கிழங்கு ரோஸ்ட், பீன்ஸ் பருப்பு உசிலி, கோஸ் பட்டாணி பொரியல்,
வெண்டைக்காய் மோர்க்குழம்பு,
வெஜிடபிள் புலாவ், காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை, கதம்ப சாம்பார், மணத்தக்காளி வற்றல் குழம்பு, சேனை வறுவல், அவியல், ரசம், அப்பளம், பால் பாயசம், பழப்பச்சடி, ஃப்ரூட் தயிர்சாதம், முந்திரி கேக் என்று பல வகையான செட்டிநாட்டு சமையல் வகைகள் பந்தியில் பரிமாறப்பட்டது.


அதோடு மட்டுமில்லாமல் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் தாம்பூல பையுடன் சேர்த்து மரக்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.


திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரின் வயிறும் மனதும் சந்தோஷத்தில் நிறைந்து மணமக்களை மனதார வாழ்த்திவிட்டு சென்றனர்.


பக்கத்திலிருந்த உறவினர்கள் சந்துரு சாருவிற்கும், சாரு சந்துருவிற்கும் மாறி மாறி உணவை ஊட்டுமாறு கூறினார்கள்.


முதலில் இருவரும் தயங்கினார்கள்.
பின்னர் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.


காவல்துறை அதிகாரி வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர்களுக்கு திருமண பரிசை அளித்தார்.


அங்கு வந்த கணக்குப்பிள்ளை தனது மகனை சந்துருவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.


அன்றைக்கு எனது மகனை போலீஸ் ட்ரைனிங்கு அனுப்புவதற்கு மறுப்பு தெரிவித்தேன்.பிள்ளைகளின் விருப்பத்திற்கு வேலி போட்டு உனது விருப்பத்தை அவர்கள் மீது திணிக்க நினைக்காதே! என்று ஐயா தான் எனக்கு பாடம் புகட்டினார் என்று சந்துருவிடம் பழைய கதையை எல்லாம் கூறினார் கணக்குப்பிள்ளை.


சந்துருவிற்கு காவல்துறை அதிகாரி வந்ததிற்கான விவரம் அப்போது தான் தெரிய வந்தது.


அந்த வண்டியை கண்டுபிடித்து விட்டீர்களா சார்? என்று கேட்டான் சந்துரு.


பிடித்தாச்சு தம்பி! லாக்கப்ல தான் அந்த பசங்க இருக்காங்க.நாளைக்கு கோர்ட்ல ஆஜர் செய்ய போகிறோம் என்றார்.


சரிங்க சார்...ரொம்ப நன்றி என்று கூறினான் சந்துரு.


இது என்னுடைய கடமை தம்பி என்றார் அந்த காவல்துறை அதிகாரி.எனக்கு நேரமாகிடுச்சு தம்பி.நான் ஐயாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.


மண்டபத்திலிருந்து மணமக்களை சந்துருவின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.வீட்டிற்கு வந்த மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.வலது காலை எடுத்து வைத்து தன் புகுந்த வீட்டிற்குள் நுழைந்தாள் சாரு.


பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டதும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்தனர்.


சந்துரு, சாருவிடம் எதுவும் சொல்லாமல் அவளை ஹாலிலேயே விட்டுவிட்டு அவனது அறைக்கு சென்றான்.


தனது அறைக்குள் நுழைந்தவன், அம்மா! என்று திடீரென அலறி கத்தினான்.சந்துருவின் அலறல் சத்தம் கேட்ட சாரு, வேகமாக பதறி அடித்துக்கொண்டு சந்துருவின் சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினாள்.


ஜானகி அம்மாவும் மனோஜூம் சந்துருவின் அறைக்கு விரைந்து சென்று சந்துரு! சந்துரு! என்னாச்சுடா? என்று அறையின் கதவை வேகமாக தட்டினார்கள்.


சந்துருவிற்கு என்ன நிகழ்ந்தது?சந்துருவின் அலறலுக்கு காரணம் என்ன?அறைக்குள் அப்படி என்ன நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
Excellent
 

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
Nice epi sis...sankar:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:saaru voda puridhal,vittukodukradhellam super sis...epavum pola last la oru twist ah sis..super
Thank you sis🙏😍....unkalin aarvathai athigapaduthalam nu konjam episode interestah kondu pogataan twist vachen sister😂😂😉😉
 

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
ஆவலைத்தூண்டும் விதமாக அழகாக நகர்த்திக்கொண்டு செல்கிறீர்கள். மிகச்சிறப்பாக போய்க்கொண்டு உள்ளது, அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் வெகு ஆவலுடன்.
தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அம்மா🙏😍
 

vaishnaviselva@

Well-known member
Messages
312
Reaction score
248
Points
63
wow :love:wow🤩wow........semma epi police ivaga marriage ku vanthu irukkaaga:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:........naa bayanthuta but naa periya bulb tha vaagita parava:LOL::LOL:........... semma spr ra irunthathu epi sis:love::love::love: saaru so good sandru paya yethuku kathuraa :unsure:..........yaaru maatta poraganu therila saaru va yethuku kathuraaa ........very interesting sis waiting for next epi sis:love::love::love::love::love::love:
 

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
wow :love:wow🤩wow........semma epi police ivaga marriage ku vanthu irukkaaga:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:........naa bayanthuta but naa periya bulb tha vaagita parava:LOL::LOL:........... semma spr ra irunthathu epi sis:love::love::love: saaru so good sandru paya yethuku kathuraa :unsure:..........yaaru maatta poraganu therila saaru va yethuku kathuraaa ........very interesting sis waiting for next epi sis:love::love::love::love::love::love:
Thank you sis...saruva sandru satham podala sis😍....Saru enaachu nu payanthu poirukaa........Alaga padithu comments nenka kudukuratha paath next epi seekram post pana motivation ah iruku sis....thankyou so much for ur love and supports 🙏😍😍😍😍😍👏
 

Kalijana

Member
Messages
31
Reaction score
32
Points
18
Wow Ulitmete What a Episode sis outstanding👌👌👌👌👌scene by scene twist unexpected 😍 சங்கர் தான் 😄 சூப்பர் no words to say sis love it ❤
 

New Threads

Top Bottom