Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

vaishnaviselva@

Well-known member
Messages
312
Reaction score
248
Points
63
semma interesting sis :love::love::love::love::love:...............sandhru yetha maraikkuraan onnu ku rendu ponnugalaa🤪😲😄😄😄 flash back yennanu seekkaram solluga sis🤩🤩🤩🤩🤩..........pavam saaru gift te sandhru kudukkalanu romba feel pannittaa.........:(:(

crt kannamma sonnathu nallathuke kaalam illa saaru tha example :ROFLMAO: :ROFLMAO:
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
semma interesting sis :love::love::love::love::love:...............sandhru yetha maraikkuraan onnu ku rendu ponnugalaa🤪😲😄😄😄 flash back yennanu seekkaram solluga sis🤩🤩🤩🤩🤩..........pavam saaru gift te sandhru kudukkalanu romba feel pannittaa.........:(:(

crt kannamma sonnathu nallathuke kaalam illa saaru tha example :ROFLMAO: :ROFLMAO:
Thank you for sharing ur comments and support dear😍😍🙏🙏
 
Messages
30
Reaction score
29
Points
18
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 23


பானுவின் வீட்டிலிருந்து புறப்பட்டு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் சாரு.
வீட்டிற்கு வந்ததும் தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்கு செல்லும் போது, ஜானகி அம்மாவும் கண்ணம்மாவும் சமையலறையில் பேசிக் கொண்டிருந்தது சாருவின் காதில் விழுந்தது.


இந்த சந்துரு என்னைக்கு தான் மாறப்போறானோ தெரியல கண்ணம்மா? பானுக்கு நிச்சயதார்த்த சேலை எடுக்க ஜவுளிக்கடைக்கு போனப்போ தான், சாருக்கே தெரியாம அவளுடைய பிறந்தநாளுக்கு நீ சர்ப் ரைஸ் கிப்ட் கொடுடா சந்துருனு சொல்லிருந்தேன்.சாரு சேலையை செலக்ட் செஞ்சதும், சாருக்கு தெரியாம சேலையை வாங்கச் சொன்னதும் நான் தான் கண்ணம்மா என்று கூறினார் ஜானகி அம்மா.


என்னம்மா சொல்லுறீங்க? அப்போ சாரும்மா சேலையை சின்ன ஐயா செலக்ட் பண்ணலையா? என்று கேட்டார் கண்ணம்மா.


இல்ல கண்ணம்மா.நான் தான் சாருக்கு தெரியாம செலக்ட் பண்ணுனேன்.புதுசா கல்யாணம் முடிந்ததும் எல்லா பொண்ணுங்களுக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பு மாதிரி தான சாருக்கும் இருக்கும்.


சந்துரு சும்மாவே சாருக்கிட்ட சரியா முகம் கொடுத்து பேச மாட்டீங்கிறா.இன்னும் அவன் சவிதாவுக்கு நடந்ததையே நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கான் கண்ணம்மா.இன்னொரு பக்கம் சஞ்சுளா.இந்த மாதிரி சூழ்நிலையில் அவன் இருக்கும் போது இவன் எப்படி சாருக்கு பேர்த் டே கிப்ட் வாங்குவான் சொல்லு என்று கேட்டார் ஜானகி அம்மா.


சாரு பிறந்தநாள் அதுவுமா சங்கடப்படக் கூடாதுனு நினைச்சு, நான் தான் இப்படி ப்ளான் பண்ணுனேன் என்று தனது மாமியார் கூறிக் கொண்டிருந்ததை கேட்டதும் சாருவின் கண்கள் இரண்டும் கலங்கிவிட்டது.


தண்ணீர் குடிக்க சென்றவள் தண்ணீர் குடிக்காமலேயே தன்னுடைய ரூமிற்கு செல்லும் போது சந்துரு பூட்டியிருந்த அறைக்கு செல்வதையும் பார்த்தாள்.


நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நாட்குறிப்பு டைரியை எடுத்து எழுதத் தொடங்கினாள் சாரு.


டியர் சந்துரு,


என் பிறந்த நாளைக்காக நீங்க சேலை கிப்ட் கொடுத்ததை பார்த்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
பரவாயில்லை நம்மக்கிட்ட நேர்ல முகம் கொடுத்து சரியா பேசாட்டிலும் மனசுல நம்ம மேல எவ்வளவு அன்பு இருந்தால் தேடிப்பிடித்து இப்படி சேலைலாம் வாங்கித் தர்றாங்கனு.


ஆனால் என் பிறந்தநாளே அத்தை சொல்லி தான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு.எனக்காக கிப்ட்டும் நீங்க வாங்களனு தெரிஞ்சதும் என் உள்ளம் அப்படியே நொருங்கிருச்சு சந்துரு.


உங்க மனசுக்குள்ள அப்படி என்ன ரகசியம் மறைச்சு வச்சுருக்கீங்க?எதுனாலும் நீங்க ஏங்கிட்ட வெளிப்படையாக சொன்னால் தானங்க சந்துரு எனக்கு தெரியும்.


ஆனால் அத்தை சொன்னதை வைத்து பார்த்தால் ஏதோ உங்க மனசுக்குள்ள பெரிய ஆறாத காயம் இருக்குனு மட்டும் புரியுது.கண்டிப்பா அந்த ரகியத்தை என்னனு தெரிஞ்சுக்காமல் விட மாட்டேங்க சந்துரு.

"உங்க மனதில் ஏற்பட்ட காயத்தைப் போக்கும் மருந்தாக நான் இருப்பேன் சந்துரு"


இப்படிக்கு,
உங்கள் இதயத்தோடு இணைய காத்திருக்கும் ஆருயிர் காதலி

சாரு.


சாரு டைரி எழுதி முடித்ததும் சந்துரு அறைக்குள் வந்தான்.சந்துரு ரூமிற்குள் வந்ததும் வேகமாக தன்னுடைய டைரியை மூடினாள் சாரு.


சந்துரு எதுவும் கண்டு கொள்ளாமல்
தன்னுடைய லேப்டாப்பை ஓபன் செய்து வழக்கம் போல காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டான்.


சந்துருவிடம் எதைப் பற்றியும் கேட்காமல் கீழே இறங்கி சமையலறைக்கு சென்று விட்டாள் சாரு.


சமையலை முடித்துவிட்டு கண்ணம்மா கையில் ஏதோ ஒரு போட்டோவை பார்த்து அழுதுக் கொண்டிருந்ததை கவனித்தாள் சாரு.


கண்ணம்மா கண்களிலிருந்து கண்ணீர் சிந்துவதைப் பார்த்த சாரு, என்ன போட்டோம்மா அது? ஏன்ம்மா அழுறீங்க? என்று கண்ணம்மாவிடம் கேட்டாள் சாரு.


தன் கையில் வைத்திருந்த பாஸ்போட் சைஸ் போட்டோவை சாருவிடம் காட்டினார் கண்ணம்மா.


வாவ்! பையன் ரொம்ப கியூட்டா இருக்கான்ம்மா என்று கூறினாள் சாரு.


சாரு கூறியதும் தேம்பி அழுகத் தொடங்கினார் கண்ணம்மா.ஏன்ம்மா இப்படி அழுறீங்க? நான் எதுவும் தப்பா சொல்லலம்மா என்று கூறினாள் சாரு.


நீங்க சொன்னதுக்காக நான் அழல சாரும்மா.என் பிள்ளை இப்போ எங்க? எப்படி இருக்கானோ? என்னலாம் கஷ்டப்படுறானோ தெரியலம்மா? என்றார் கண்ணம்மா.


என்னம்மா சொல்லூறீங்க? எனக்கு ஒன்றும் புரியலையேம்மா! என்று கூறினாள் சாரு.


இந்த குழந்தை வேற யாருமில்ல சாரும்மா. என்னுடைய மகன் மதன் சாரும்மா.அவன் பிறந்த இரண்டாவது மாசம் எடுத்த போட்டோ தாம்மா இது என்று கூறினார் கண்ணம்மா.


சரிம்மா...அதுக்கு ஏன் அழுறீங்க? உங்க பையன் உங்களோட இல்லையாம்மா?
என்று கேட்டாள் சாரும்மா.


பச்சக்குழந்தையை பறிகொடுத்துட்டு நிக்கிற பாவிம்மா நான் என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் கண்ணம்மா.


அம்மா! அம்மா! ப்ளீஸ்ம்மா அழாதீங்க.என்ன நடந்ததுனு தெளிவாக சொல்லுங்கம்மா என்று கண்ணம்மாவிடம் கேட்டாள் சாரு.


முப்பது வருஷத்துக்கு முன்னாடி என் கணவரோட தங்கச்சி கல்யாணத்துக்காக என் வீட்டுக்காரரோடு சேர்ந்து நானும் மதனும் ட்ரையின்ல சென்னைக்கு போயிக்கிட்டு இருந்தோம்மா என்று கதையை சொல்ல ஆரம்பித்தார்.


மதன் அப்போ இரண்டு மாத கைக்குழந்தை சாரும்மா.ட்ரைன்ல போயிக்கிட்டு இருக்கும் போது ஒரு பொம்பள பழம் வித்துட்டு வந்தாங்க.


கொஞ்ச மயக்கமா வருதும்மா.குடிக்க கொஞ்சம் தண்ணீர் இருந்தா தாங்களே என்று கூறினார்.அலைஞ்சு திரிஞ்சு வித்ததுல டயர்டாகிட்டாங்க போல, பாவம்னு நினைச்சு தண்ணீர் கொடுத்தோம்.


அடுத்த ஸ்டேஷன்ல வண்டி நின்னதும், எங்க முகத்துல டக்னு ஸ்ப்ரே அடுச்சுட்டு என் குழந்தையை தூக்கிட்டு ஓடிட்டாம்மா அந்த படுபாவி.நல்லதுக்கே காலம் இல்லம்மா.


எங்களுக்கு பதினைந்து நிமிஷம் கழுச்சு தாமா மயக்கம் தெளிஞ்சது.அதுக்கு பிறகு அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி கம்ப்ளைன்ட் கொடுத்தோம்.


ஆனால் அது எதுவுமே கதைக்கு ஆகலம்மா.நாங்க சுத்தி திரிந்து தேடதா இடமில்லம்மா.ஆனாலும் எங்க பையன் எங்களுக்கு கிடைக்கவே இல்லைம்மா என்று அழுதுக் கொண்டே கூறினார் கண்ணம்மா.


நீங்கள் எதுவும் கவலைப்படாதீங்கம்மா! உங்க பையன் கண்டிப்பாக ஒரு நாள் உங்கக்கிட்ட வந்து சேருவாங்க என்று ஆறுதல் வார்த்தை கூறினாள் சாரு.


பரத் தன்னுடைய ரூமில் அமர்ந்து ஜன்னல் வழியாக வானத்தை பார்த்து ஏதோ யோசித்து கொண்டிருந்தான்.


திடீரென வானத்தில் ஒரு உருவம் தோன்றியது.அந்த உருவம் பரத்தை பார்த்து என்ன பரத் யோசிக்கிற? என்று கேட்டது.


ஹேய்! நீ யாரு? என்னைய மாதிரியே இருக்க என்று பதற்றத்தோடு அந்த உருவத்திடம் கேட்டான் பரத்.


பயப்படாதே பரத்! நான் தான் உன் மனசாட்சி என்று அந்த உருவம் கூறியது.


ஐந்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த பரத் எங்கே சென்றுவிட்டான்? என்று அந்த உருவம் பரத்திடம் கேட்டது.


சாரு சொன்னதை நன்றாக சிந்தித்து பார் பரத்.அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலையும் நியாயம் இருக்குல.நீ செஞ்சா மட்டும் தப்பு இல்ல.பார்கவி செஞ்ச மட்டும் தப்பு.உன்னை மட்டும் மன்னிக்கலாம்.ஆனால் அவள மட்டும் மன்னிக்கக்கூடாதுல.


இது எந்த வகையில நியாயம் பரத்? என்று கேட்டதும், இப்போ என்னதான் நான் பண்ணனும் சொல்லுற என்று அந்த உருவத்திடம் திருப்பி கேட்டான் பரத்.


உன் முரட்டு பிடிவாதத்தை தூக்கி எறிஞ்சுட்டு பார்கவியை கூட்டிட்டு வந்து சந்தோஷமாக வாழுற வழியைப்பாரு என்று சொல்லிவிட்டு மறைந்து சென்றது.


தன்னிடம் பேசிய உருவத்தை கத்தி கத்தி கூப்பிட்டு பார்த்தான் பரத்.


பரத்தின் அறையில் திடீரென பயங்கரமாக சத்தம் கேட்டதும், பங்கஜம் வேகமாக ஓடி வந்து பரத்! பரத்! கதவைத் திறப்பா என்று பரத்துடைய ரூமின் கதவை தட்டிக் கொண்டிருந்தார்.


கதவை தட்டிய மறுகணம் என்னம்மா? யாருக்கு என்னாச்சு? என்று கேட்டான் பரத்.


உனக்கு என்னாச்சுடா பரத்? உன் ரூம்ல தான் நீ யாருகிட்டயோ கத்தி கத்தி பேசுற மாதிரி இருந்தது.யாரோட பேசிக்கிட்டு இருந்த பரத்? என்று கேட்டதும், மனசாட்சியோடு பேசிக்கிட்டு இருந்தேனு சொன்னா கண்டிப்பா அம்மா நமக்கு லூசு பிடிச்சு போச்சுனு நினைச்சு பயந்துருவாங்க.வேற ஏதாவது சொல்லி சமாளிப்போம் என்று மனதிற்குள் நினைத்து சிவானிக்கு அவுங்க ஸ்கூல்ல அடுத்த மாசம் ஒரு நாடகப்போட்டி இருக்கும்மா.அவளுக்கு சொல்லிக் கொடுக்கனும்ல அதான் ப்ராக்ட்டீஸ் பண்ணுறேன் என்றான்.விளையாடிக் கொண்டிருந்த சிவானி பரத் கூறியதைக் கேட்டதும் மிஸ் அப்படிலாம் எதுவுமே ஏங்கிட்ட சொல்லலையேப்பா என்று கூறிவிட்டாள்.


என்னடா குழந்தை அப்படி சொல்லுறா என்று பங்கஜம் கேட்டார்.அம்மா! நேத்து நைட் தான் மெயில் அனுப்பி இருந்தாங்க என்று கூறியதும், சரி சரி என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்றுவிட்டார் பங்கஜம்.


நல்ல வேளை அம்மா மெயிலை காட்டுனு சொல்லல.இல்லாட்டி மாட்டிருப்போம்.அப்பாடா! எப்படியோ சொல்லி சமாளுச்சாச்சு என்று பெருமூச்சு விட்டான் பரத்.


அப்பா! இப்போவே ட்ராமா ப்ராக்ட்டீஸ் ஸ்டார்ட் பண்ணலாமா? என்று கொஞ்சும் மழலை பேச்சில் பரத்திடம் கேட்டாள் சிவானி.


சிவானி செல்லம் அப்பா நைட் உங்களுக்கு சொல்லித் தர்றேன்டா.
நீங்க சமத்துக்குட்டியா விளையாண்டு கிட்டு இருப்பீங்களாம்.அப்பா போய் உங்களுக்கு கடையில சாக்லேட் வாங்கிட்டு வந்திர்றேன் என்று தனது மகளிடம் கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.


பார்கவியின் வீடு வரை சென்றவன் வீட்டிற்குள் நுழையாமல் வாசலிலே நின்று கொண்டிருந்தான்.வீட்டின் கதவை திறந்து வெளியே வந்த ருத்ரா, ஏன்னா வாசல்லையே நிக்கிறீங்க? உள்ள வாங்க என்று பரத்தை வீட்டிற்குள் அழைத்ததும் ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த சோமசுந்தரம் எழுந்து வந்து வாங்க மாப்பிள... என்று பரத்தை கூப்பிட்டு ஷோபாவில் உட்கார வைத்தார்.


மாடியிலிருந்து தன்னுடைய மருமகன் வீட்டிற்கு வந்திருப்பதை பார்த்த சரோஜா சந்தோஷப்பட்டு வேகமாக பார்கவியின் அறைக்கு சென்றார்.


பார்கவி! பார்கவி! மாப்பிள வந்திருக்காருடி என்று கூறியதும் அழுது கொண்டே பரத்தை காண ஓடிச் சென்றாள்.


நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்த போது உங்கக்கிட்ட நான் மரியாதைக் குறைவாக நடந்ததுகிட்டதுக்கு என்னை நீங்களும் அத்தையும் மன்னிச்சிருங்க என்று தன்னுடைய மாமானார் மாமியாரிடம் மன்னிப்பு கேட்டான் பரத்.


நீயும் என்னை மன்னிச்சுரு பார்கவி! என்று பரத் சொன்னதும, ஐயையோ! நீங்க எதுக்குங்க ஏங்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க? எல்லாத் தப்பையும் பண்ணதே நான் தான்.நான் எத்தனை தடவை உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டாலும் நான் செஞ்சதை மன்னிக்கவே முடியாது என்று தான் செய்த தவறை நினைந்து வருந்தி கூறினாள் பார்கவி.


என்னதான் இருந்தாலும் கட்டுன மனைவியை கை நீட்டி அடிப்பது ஆண்களுக்கு அழகு இல்ல.எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பேசி சமாளிக்கும் வழியைத் தான் பார்த்திருக்கனுமே தவிர உன்னை நான் அறைஞ்சிருக்க கூடாது பார்கவி என்று பரத் கூறியதும், பரத்தை கட்டிப்பிடித்து 'ஐ ஆம் ரியலி ஸாரி பரத்'.ஐ மிஸ் யூங்க என்று கூறினாள் பார்கவி.


ஸாரி கேட்டா ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்தி மாத்தி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியது தான் மாப்பிள.
விடுங்க...நடந்து முடிந்தது ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்திருவோம். முடிந்ததை எண்ணி கவலைப்படாதீங்க! இனி நடப்பது எல்லாம் நன்மையாக இருக்கும்னு நம்புவோம் என்று கூறினார் சோமசுந்தரம்.


சரிங்க மாமா...அப்போ நான் பார்கவியை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு கிளம்புறேன் என்று பரத் சொன்னதும், இருந்து சாப்பிட்டு சாயங்காலம் பொறுமையாக கிளம்பலாம் மாப்பிள என்று சோமசுந்தரம் கூறினார்.


இல்ல மாமா...சிவானிட்ட சாக்லேட் வாங்கிட்டு வந்திர்றேனு சொல்லிட்டு வந்திருக்கேன் மாமா.அவள் எனக்காக காத்திருப்பா என்று சொன்னதும் சரிங்க மாப்பிள என்று கூறினார் சோமசுந்தரம்.


பார்கவி தன்னுடைய அறைக்கு சென்று அவளுடைய துணிகளையெல்லாம் வேகமாக சூட்கேஸில் எடுத்துக்
கொண்டு அப்பா அம்மாவிடம் போய்ட்டு வருகிறேன் என்று கூறினாள் பார்கவி.


உனக்கு அருமையான குடும்பம் கிடைச்சிருக்கும்மா பார்கவி.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தக்கோ பார்கவி.எல்லாருக்கும் இப்படி இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது.
பார்த்து அனுசரிச்சு புத்தியா மதியா புரிஞ்சு நடந்துக்கோம்மா என்று தன்னுடைய மகளுக்கு அறிவுரை கூறினார் சோமசுந்தரம்.தன் மகளை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு மருமகனுடன் வழி அனுப்பி வைத்தார் சரோஜா.


சந்துரு மனதில் மறைக்கும் ரகசியத்தை பற்றி அறிய, சந்துரு ரூமில் இல்லாத நேரம் பார்த்து அவனுடைய கப்போர்டில் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று கப்போர்டு முழுவதையும் தேடிப்
பார்த்தாள் சாரு.ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை.


சந்துரு எப்போது பார்த்தாலும் லேப்டாப்பை தான் ஆன் செய்து பார்த்துக் கொண்டிருப்பது நியாபகம் வந்த சாரு, லேப்டாப்பை ஓபன் செய்து பார்க்கலாம்.கண்டிப்பா ஏதாவது அதுல இருக்கும்.ஆனால் லேப்டாப்
பாஸ்வேர்டு தெரியனுமே.சரி முதல்ல லேப்டாப் பேக்க எடுப்போம் என்று சொல்லிக் கொண்டே, சந்துருவின் லேப்டாப்பை எடுத்து முதலில் சந்துரு என்று பாஸ்வேர்டு போட்டு பார்த்தாள்.
ராங்க் பாஸ்வேர்டு என்று வந்தது.
எல்லா பசங்களும் தனக்கு ரொம்ப பிடிச்சவுங்க பெயரை தான் பாஸ்வேர்டு செட் பண்ணுவாங்க என்று நினைத்து ஜானகி அம்மாவின் பெயரை டைப் செய்தாள் மீண்டும் ராங்க் பாஸ்வேர்டுனு வந்தது.


ஜன்னல் வழியாக சந்துரு வருகிறானா? என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவை எட்டி எட்டிப்பார்த்து கொண்டே இருந்தாள் சாரு.


வேற யாரு பெயரை பாஸ்வேர்டா செட் பண்ணியிருப்பாரு என்று யோசித்து கொண்டிருந்தாள் சாரு.


தண்ணீர் குடிக்க போகும் போது அத்தை ஏதோ இரண்டு பொண்ணுடைய பெயர் சொன்னாங்களே என்று யோசித்தாள்.
கண்ணை மூடிக்கொண்டு ஒரு நிமிஷம் அமர்ந்து ஆழமாக சிந்தித்து ஹான் நியாபகம் வந்திருச்சு.அவுங்க சொன்ன பெயர் சவிதா அன்ட் சஞ்சுளா.

இந்த இரண்டு பெயரில் ஏதாவது ஒன்னுதான் இருக்கனும் என்று லேப்டாப்பை எடுத்து வேகமாக சவிதா என்று பாஸ்வேர்டு டைப் செய்ததும் லேப்டாப் ஓபன் ஆகிவிட்டது.
லேப்டாப்பின் டெஸ்க்டாப் ஸ்கிரீனை பார்த்ததும் சாருவிற்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.


லேப்டாப் ஸ்கிரீனையே ரொம்ப நேரமாக உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் போது மாடி படியில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு வேகமாக லேப்டாப்பை ஆப் செய்து பேக்கில் வைத்துவிட்டு பால்கனிக்கு சென்றுவிட்டாள் சாரு.


யார் தான் அந்த சவிதாவும், சஞ்சுளாவும்? லேப்டாப் ஸ்கிரீனில் அப்படி எதைப்பார்த்தாள் சாரு? சந்துருவின் மனதில் புதைந்து கிடக்கும் ரகசியம்தான் என்ன? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
தாங்கமுடியல சஸ்பென்ஸ் அடுத்து என்ன என்ன பரபரப்போடு காத்திருக்க வைக்கிறீர்கள். வெகு அருமைம்மா
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
தாங்கமுடியல சஸ்பென்ஸ் அடுத்து என்ன என்ன பரபரப்போடு காத்திருக்க வைக்கிறீர்கள். வெகு அருமைம்மா
தங்களின் விமர்சனம் நெஞ்சை நெகிழ வைக்கிறது அம்மா🙏😍மிக்க நன்றி
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சாரு பேசுனதைக் கேட்டு பரத் மனசு மாறி பார்கவியை அழைச்சிட்டு வந்துட்டான்..மதனு இன்னொரு பையனா ஜானகிக்கு :rolleyes: ..சாரு லேப்டாப்ல யாரப் பார்த்து ஆச்சர்யப்பட்டானு தெரிலையே..நைஸ் சிஸ்
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
சாரு பேசுனதைக் கேட்டு பரத் மனசு மாறி பார்கவியை அழைச்சிட்டு வந்துட்டான்..மதனு இன்னொரு பையனா ஜானகிக்கு :rolleyes: ..சாரு லேப்டாப்ல யாரப் பார்த்து ஆச்சர்யப்பட்டானு தெரிலையே..நைஸ் சிஸ்
hi sis மதன் கண்ணம்மா பையன்....
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
சாரு பேசுனதைக் கேட்டு பரத் மனசு மாறி பார்கவியை அழைச்சிட்டு வந்துட்டான்..மதனு இன்னொரு பையனா ஜானகிக்கு :rolleyes: ..சாரு லேப்டாப்ல யாரப் பார்த்து ஆச்சர்யப்பட்டானு தெரிலையே..நைஸ் சிஸ்
Thank you so much for sharing ur comments sister😍🙏
 

New Threads

Top Bottom