எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 24
பார்கவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தான் பரத்.தன்னுடைய மருமகளை பரத் அழைத்து வருவதை பார்த்ததும் பங்கஜம் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
தன் தாயை பார்த்ததும் துள்ளி திரிந்து ஓடி ஒட்டிக் கொள்ளும் கன்றுக்குட்டி போல பார்கவியை பார்த்ததும், அம்மா! என்று ஓடிப் போய் பார்கவியைக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டாள் சிவானி.தன் குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுத்தாள் பார்கவி.
என்ன மன்னிச்சிரு பானு! நான் வரம்பு மீறி உன்ன ரொம்ப பேசிட்டேன்.ஒரு குடும்பத்துல உள்ள நாத்தானருக்கு அவளுடைய அம்மா ஸ்தானத்துல இருந்து பார்க்க வேண்டியது அந்த வீட்டோட மூத்த மருமகள் தான்.அப்படி இருக்க வேண்டிய நான் உன் நல்ல மனசை புஞ்சுக்காம்ம உனக்கு நிறையா துரோகம் பண்ணிட்டேன் பானு என்று கூறினாள் பார்கவி.
நான் எப்பவும் உங்கள என்னுடைய இரண்டாவது அம்மாவதான் நினைக்கிறேன் அண்ணி என்றதும் பானுவையும் கட்டிப்பிடித்து அழுதாள் பார்கவி.
சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டு திண்ணையில் பார்கவியும் பானுவும் நக்கலடித்து சிரித்துக் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த கனகராஜூம் பங்கஜமும் இன்னைக்கு மாதிரி எப்போதும் இவுங்க இரண்டு பேரும் இப்படி சந்தோஷமாக இருக்கனுங்க என்று பங்கஜம் தன் கணவரிடத்தில் கூறினார்.
சாயங்காலமாக பானுவின் ரூமிற்கு சென்றார் பங்கஜம்.என்னம்மா! சத்தமா கூப்பிட்டிருந்த நானே
வந்திருப்பேன்லம்மா.எதுவும் கடையில வாங்கிட்டு வரனுமாம்மா? என்று கேட்டாள் பானு.
சாருட்ட கொஞ்சம் பேசனும்மா பானு.நீ சாருவுக்கு போன் போட்டு கொடு என்று பானுவிடம் கேட்டார்.
எதுக்கும்மா? என்று கேட்டாள் பானு.சீக்கிரமா சாருக்கு முதல்ல போன் போட்டு தான்ம்மா பானு.அதுக்கு பிறகு உனக்கு எல்லா தெளிவாக சொல்லுறேன் என்று கூறினார் பங்கஜம்.
பானு சாருவிற்கு கால் செய்தாள்.
சாருவின் போன் ரிங் அடித்தது.ஆனால் சாரு போனை தன்னுடைய அறையில வைத்து விட்டு கீழே சென்றிருந்தாள்.
சந்துரு மட்டும் தான் ரூமில் இருந்தான்.
ரிங் அடிப்பது கேட்டும் சாருவின் மொபைலை கையில் எடுக்காமல் யார் அழைப்பது என்று போனின் டிஸ்ப்ளேவை பார்த்தான்.பானுவின் நம்பரிலிருந்து அழைப்பு வந்தது.
சாருவின் போனை எடுக்கலாமா? வேண்டாமா? என்று அவன் யோசிப்பதற்குள் போன் கால் கட்டாகி விட்டது.
அம்மா! சாரு போன் காலை அட்டன் செய்யலம்மா என்று கூறினாள் பானு.
சரிம்மா பத்து நிமிஷம் கழிச்சு மறுபடியும் போட்டு பாரும்மா பானு என்று கூறினார் பங்கஜம்.
என்ன நினைத்தானோ தெரியவில்லை சாருவின் போனை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றான் சந்துரு.
ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஜானகி அம்மாவிடம் சென்று, சாரு எங்கம்மா? என்று சந்துரு கேட்டதும், பேசுறது நம்ம பையன் தானா? என்று ஆச்சரியப்பட்டார் ஜானகி அம்மா.
என்னடா அதிசயமா இருக்கு! சாருவல தேடி வந்திருக்க என்று கேட்டதும், சாரு போன் அடிச்சுக்கிட்டே இருந்துச்சு.பானு தான் கால் பண்ணிருக்காங்க.
நிச்சயதார்த்தம் சம்பந்தமா எதுவும் கேட்க வேண்டியது இருந்தாலும் இருக்கும்ல.அதனால தான் சாருக்கிட்ட போனை கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன் என்று பதில் கூறனான சந்துரு.
அதான பார்த்தேன்.எங்க நம்ம பிள்ளைக்கு எதுவும் திடீர்னு ஞான உதயம் பிறந்திருச்சோனு என்று கூறிக் கொண்டிருக்கும் போதே சாரு சமையலறையிலிருந்து ஹாலிற்கு வந்தாள்.
இந்தாங்கங்க... உங்க போன்! என்று சாருவிடம் கொடுத்தான்.உங்களுக்கு பானு கால் பண்ணாங்க என்று சந்துரு சொன்னதும், தாங்ஸ்ங்க என்று சந்துருவிடம் கூறினாள் சாரு.
சந்துருவிடமிருந்து தன்னுடைய போனை வாங்கியவள் வீட்டிற்கு வெளியே உள்ள தோட்டத்திற்கு சென்று பானுவிற்கு போன் பண்ணினாள் சாரு.
ஒரு நிமிஷம் சாரு! உங்கிட்ட அம்மா ஏதோ பேசனும்மா.லைன்லையே இரு சாரு! என்று கூறிவிட்டு பானு மற்ற எதுவும் சாருவிடம் பேசாமல் தன்னுடைய அம்மாவிடம் போனை கொடுப்பதற்காக, பானு வேகமாக சமையலறைக்கு சென்று அம்மா! சாரு லைன்ல இருக்கா பேசுங்க என்று சொல்லி போனை பங்கஜம் அம்மாவிடம் கொடுத்தாள் பானு.
ஹலோ சாரு! என்று பானுவின் அம்மா பேசியதும் வணக்கம்மா...
சொல்லுங்கம்மா... என்று கூறினாள் சாரு.
உனக்கு எப்படி நன்றி சொல்வதுனே எனக்கு தெரியலம்மா சாரு என்று கூறினார் பங்கஜம்.
ஏன்ம்மா பெரிய பெரிய வார்த்தையெல்லலாம் பேசி என்னை மூனாவது மனுஷியாக்குறீங்க.நான் அப்படி ஒன்னும்மே உங்களுக்கு பண்ணலையேம்மா! என்று சாரு கூறியதும், அன்னைக்கு நீ மட்டும் எங்க வீட்டுக்கு வந்து பரத்க்கிட்ட பேசாமல் இருந்திருந்தால், இன்னைக்கு பரத்தோட வாழ்க்கையே கேள்வி குறியாகி இருக்கும்மா சாரு.
நாங்க எல்லாரும் பார்வியை கூட்டிட்டு வாப்பானு எவ்வளவோ சொல்லிப் பார்த்தோமா.ஆனால் நாங்க சொன்ன எதையுமே அவன் காதில் வாங்கிக் கொள்ளலமா சாரு.எந்த கடவுள் புண்ணியமோ தெரியலம்மா.நீ வந்து பேசுனதும் அவன் மனசுல ஏதோ பெரிய மாற்றம் வந்திருச்சு சாரு.
எங்க யாருக்கிட்டையுமே சொல்லாமல் பார்கவி வீட்டுக்கு போய் எல்லாருக்கிட்டையும் மரியாதை குறைவா நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டதோடு மட்டுமில்லாமல் பார்கவிட்டையும் மன்னிப்பு கேட்டுட்டு அவளை திரும்பவும் எங்க வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டான்ம்மா சாரு.
நான் காபி போட்டுக் கொண்டு வரும்போது நீ பரத்க்கிட்ட பேசிக்கிட்டு இருந்ததை யெல்லாம் நான் கேட்டுக்கிட்டு தான்ம்மா இருந்தேன்.
நான் வந்துட்டா, எங்க நீ எதுவும் பேசாமல் அமைதியாகி விடுவியோனு நினைச்சு தான்ம்மா நீ பேசி முடிச்ச பிறகு வந்தேன்.
என் பிள்ளையோட எதிர்காலத்தையே காப்பாத்தி கொடுத்துட்டம்மா சாரு.
உன் நல்ல மனசுக்கு எப்போதும் உனக்கு நல்லதே நடக்கும்மா.உன் எண்ணத்துக்கு ஏத்தாப்பல உன் வாழ்க்கை முழுவதும் நீ நல்லா இருக்கனும்மா என்று சாருவை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தார் பங்கஜம்.
என் மேல நீங்க காட்டும் அன்பிற்கு மிக்க நன்றி அம்மா.நான் எதுவும் பெருசா பண்ணலம்மா.எனக்கு தோணுனதை மட்டும் தான் சொன்னேன்.பரத் அண்ணா மாற்றத்திற்கு காரணம் உங்களுடைய வளர்ப்பு தான்ம்மா என்றாள் சாரு.
அண்ணி திரும்ப வந்ததுல ரொம்ப சந்தோஷம்மா.இனி நம்ம பானுவோட நிச்சயதார்த்தத்தை நீங்க நினைச்ச மாதிரி 'சாம் சாம்னு' நடத்திடலாம்மா என்று கூறினாள் சாரு.
ஆமாம் சாரு என்றார் பங்கஜம்.சரிம்மா சாரு...கிச்சன்ல கொஞ்சம் வேலை இருக்கு நாளைக்கு பங்சன்ல பார்க்கலாம்மா என்று கூறிவிட்டு போனை கட் செய்தார் பங்கஜம்.
பானுவின் அம்மாவோடு பேசிச முடித்ததும் தோட்டத்தில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டு சந்துருவின் லேப்டாப்பின் ஸ்கிரீனில் இருந்த அந்த வால்பேப்பரையே நினைத்து யோசித்து கொண்டிருந்தாள்.
இந்த சவிதாவும் சஞ்சுளாவும் யாரு? நம்மக்கிட்ட அப்படி எந்த உண்மையை மறைக்க நினைக்கிறாங்க? மனோஜ் அண்ணா நிச்சயதார்த்தம் முடிந்ததும் அத்தைட்டையே போய் நேரடியாக கேட்டு பார்ப்போம்.கண்டிப்பா அவுங்களுக்கு தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை என்று மனதில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள் சாரு.
பால்கனியில் நின்று கொண்டிருந்த சந்துரு சாருவையே பார்த்துக் கொண்டிருந்தான்.என்ன சாரு ஏதோ பெருசா ப்ளான் போடுறங்க போல.தனியா உட்கார்ந்து அப்படி என்ன தீவிரமாக யோசிக்கிறாங்கனு தெரியலையே! என்று அவளையே கவனித்துக் கொண்டிருந்தான்.
உங்கக்கிட்ட நான் சரியா முகம் கொடுத்து பேசாததுக்கு நிச்சயமா உங்களுக்கு என் மேல மிகப்பெரிய வருத்தம் இருக்கும் சாரு.நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணுறேனு எனக்கு நல்லாவே தெரியும் சாரு.ஆனால் நான் என்ன செய்ய முடியும்.என் சூழ்நிலை அப்படி இருக்கே.உங்கக்கிட்ட எல்லா உண்மையையும் ஒரு நாள் கண்டிப்பா சொல்லியே தீருவேன்.என்னை பத்தி முழுசா தெரிஞ்சதுக்கு பிறகும் நீங்க என்னை மனசார ஏத்துக்குவீங்களானு பார்ப்போம் என்று சாருவை பார்த்துக் கொண்டே கூறினான்.
திடீரென சாரு திரும்பி பால்கனியில் நின்று கொண்டிருக்கும் சந்துருவை பார்த்தாள்.நாம்ம பால்கனியிலிருந்து பேசுவது எதுவும் சாருவின் காதில் கேட்டுருச்சோ! இங்கேயே பாக்குறாங்கலே என்று யோசித்தான்.
ஆமாம்.காற்றே தூது வந்து சாருவிடம் சொல்லியிருக்கும் போல.சந்துரு உன்னிடம் தான் பேசிக்
கொண்டிருக்கிறான் சாரு என்று.
சந்துருவின் மீது இவள் கொண்ட காதல் அவன் எங்கிருந்தாலும் அவளுக்கு காட்டிக் கொடுத்துவிடுகிறது.
சைகையிலே சந்துருவிடம் என்ன எதுவும் கூப்பிட்டீங்களாங்க? என்று கேட்டாள் சாரு.
ஐயையோ! நம்ம மனசுகுள்ள நினைச்சு பேசுறது எப்படி இவுங்களுக்கு வெளியே கேட்டுச்சு? என்று திகைத்து போனான்.
இல்லங்க...என்று கையை அசைத்து சைகையில் பதில் கூறினான் சந்துரு.
என்னம்மா சொல்லுறீங்க.அண்ணா அண்ணியோட சேர்ந்து வாழ காரணம் சாருவாம்மா? என்று தன்னுடைய அம்மாவிடம் கேட்டாள் பானு.
ஆமாம் பானு.இப்படி ஒரு அன்பான பண்பான பொண்ண இதுவரைக்கும் நான் எங்கேயுமே பார்த்ததே இல்லை பானு.நம்மளும் நம்ம குடும்பமும் நல்லா இருந்தா போதும்னு நினைக்கிறவுங்க மத்தியில், நம்ம சுத்தியிருக்கவுங்களும் நல்லா இருக்கனும் என்று நினைக்கும் சாருவ மாதிரி நல்ல எண்ணம் கொண்ட பொண்ண இந்த காலத்துல பார்ப்பது ரொம்ப கஷ்டம்மா.
பரத்திடம் சாரு பேசிய அனைத்தையும் பானுவிடம் கூறினார் பங்கஜம்.
இவ்வளவு பெரிய உதவியை நமக்கு செஞ்சிட்டு கடைசியா சாரு என்ன சொன்னா தெரியுமா பானு?
பரத் அண்ணா மாற்றத்திற்கு காரணம் உங்களுடைய வளர்ப்பு தான்ம்மா.நான் ஒன்னுமே பண்ணலனு சொல்லுறா பானு.சின்ன உதவி செஞ்சாலும் சிலர் எங்க போனாலும் சொல்லி காட்டுவாங்க.ஆனால் சாருவுக்கு எவ்வளவு பெருந்தன்மையான மனசுனு பாரும்மா பானு என்று தான் போனில் சாருவிடம் பேசிய அனைத்தையும் மகளிடம் சொல்லி முடித்தார் பங்கஜம்.
சரிம்மா பானு...ரொம்ப நேரமாச்சு! நீ போய் சீக்கிரமா தூங்கும்மா என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார் பங்கஜம்.
தன்னுடைய ரூமிற்கு வந்தவள் வேகமாக மொபைலை எடுத்து மனோஜிற்கு கால் பண்ணினாள்.
போனை அட்டன் செய்ததும் என்ன மேடம் ரொம்ப பிஸியா? மாமா உனக்காக காத்திருப்பேனு தெரியாதாம்மா? என்று காதல் மோகத்தில் பானுவிடம் பேசிக் கொண்டிருந்தான் மனோஜ்.
நீ நினைச்ச மாதிரி அண்ணா அண்ணி ஒன்னு சேர்ந்துட்டாங்க.அவுங்க முன்னிலையில் தான் நம்ம நிச்சயதார்த்தம் நடக்க போகுது பானு.இப்போ நீ ஹேப்பி தான பானு? என்று மனோஜ் கேட்டான்.
எத்தனை அவமானம் பட்டாலும், துன்பங்கள் வந்தாலும் உங்க கரம் பற்றும் அந்த நொடி எல்லாம் மயமா மறஞ்சிரும் சார் என்று கூறினாள் பானு.
நான் ரொம்ப ரொம்ப ஹேப்பி சார். சந்தோஷத்தில் என்ன பேசிகிறோம் என்பதையே மறந்து முதன் முறையாக 'ஐ லவ் யூ சோ மச் சார்' என்று மனோஜிடம் கூறினாள் பானு.
இந்த வார்த்தைய கேட்க மாமா எத்தனை நாள் காத்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா பானு. 'மீ டூ லவ் யூ டி' என்று மனோஜ் கூறியதும் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றவள் போதும்! போதும்! சார்...மிச்ச மீதி வச்சுருங்க கல்யாணத்து பிறகு எல்லாம் பேசிக்கலாம் என்று கண்டிப்பாக பேசுவது போல் அவனிடம் நடித்தாள்.
சரிங்க சார்.நாளைக்கு மண்டபத்துல மீட் பண்ணலாம் சார் என்று பானு கூறும் போது, ஹேய் பானு! ஒரே ஒரு தடவை மட்டும் ஐ லவ் யூ மாமானு சொல்லு பானு என்று கெஞ்சி கேட்டான்.
போய் தூங்குற வேளைய பாருங்க சார்.'குட் நைட்' என்று கூறிவிட்டு போன் காலை கட் செய்துவிட்டாள் பானு.
கட்டில் ஒன்றாக இருந்தாலும், தினமும் சந்துருவும் சாருவும் தூங்க போகும் போது இருவருக்கிடையே தலையனைகளை கொண்டு பெரிய தடுப்பு சுவர் கட்டி விடுவான் சந்துரு.
இதுவரை எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்த சாரு, இன்று மட்டும் ஏனோ தன்னுடைய தலையனையை தூக்கிக்கொண்டு கீழே பாய் விரித்து படுத்தாள்.
அதைப் பார்த்ததும் ஏங்க கீழ படுத்துட்டீங்க? மேல வந்து படுங்க என்று சாருவை அழைத்தான் சந்துரு.பரவாயில்லங்க நீங்க நல்லா உருண்டு பிரண்டு படுத்துக்கோங்க.
நான் கீழேயே படுத்துக்கிறேன் என்று கூறியதும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.
சாரு உதடளவில் பேசினாலும் உள்ளத்தால் மிகவும் நொந்து போகிவிட்டாள்.இன்னும் இரண்டே நாளுதாங்க இருக்கு சந்துரு.எப்படி உங்க முகத்த பார்க்காமல் நான் இங்க இருந்து சமாளிக்க போகிறேனு தெரியலங்க சந்துரு என்று அவன் வெளிநாட்டிற்கு திரும்ப செல்ல வேண்டிய நாள் நெருங்கி வந்து விட்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டாள்.
மனதில் சாருவின் மீது அன்பை வைத்திருக்கும் சந்துரு அவளைக் கண்டதும் விலகி செல்வதற்கான காரணம் என்ன? சாரு உண்மையை எப்படி கண்டுபிடிக்க போகிறாள்? என்பதை அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏