Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

Sitthuammasi

Member
Messages
27
Reaction score
26
Points
13
சிறப்பு நான் இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை...மிகச் சிறப்பு
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
சிறப்பு நான் இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை...மிகச் சிறப்பு
மிக்க நன்றி சகோதரி🙏😍
 

Kalijana

Member
Messages
31
Reaction score
32
Points
18
நிச்சியதார்தம் கலை கட்டின மாறி ஸ்டோரி also கலை கட்டுது sis 👌👌👌👌 surprise பண்ண சாருவ கூப்பிடுவாரு எப்போ சேர்ந்து வாழ கூப்பிடுவாரோ? Nice going sis 👌
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 25


அதிகாலை பொழுது விடிந்தது.
சந்துருவின் நிச்சயதார்த்ததிற்கு எப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோ அதற்கு ஒரு படி மேலாகவே மனோஜின் நிச்சயதார்த்ததிற்கு மண்டபம் முழுவதும் வண்ண நிற விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


மண்டபத்திற்கு போகும் வழியெல்லாம் விளக்குகள் அனைத்தையும் கண்ணாடி குடுவைக்குள் வைத்து கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.


மண்டபத்தின் வாசலில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைத்து அதில் பல வண்ண மலர்களாலும் செடிகளாலும் ஜோடித்து வைத்திருந்தனர்.


மலையிலிருந்து நீர்வீழ்ச்சி கொட்டுவது போல தண்ணீர் கொட்டி ஓடும் இடத்தில் படகு ஒன்று இருக்குமாறு வடிவமைத்திருந்தனர்.
கரையோரத்தில் மான்கள் தண்ணீர் அருந்துவது போலவும் மறுபக்கம் முயல்கள் துள்ளி குதித்து ஓடுவது போலவும் ஒரு பெண் குடத்தில் தண்ணீரை தூக்கிக் கொண்டு நடந்து செல்வது போலவும் வடிவமைத்து வைத்திருந்தனர்.


மண்டபத்தின் நுழைவாயிலில் வாழை மரத்திற்கு பதிலாக ஐந்தடி உயரம் கொண்ட பல மூங்கில் மரங்களைக் கட்டி வைத்திருந்தனர்.அத்துடன் மண்டபத்திற்குள் நுழைந்ததும் ஒரு புத்தர் சிலையும் இருந்தது.புத்தருக்கு முன்பு கண்ணாடி கோப்பைக்குள் ஒரு மெழுவர்த்தி எறிந்து கொண்டிருந்தது.
அது மிகவும் மருத்துவ குணம் கொண்ட நறுமண பொருட்களால் தயாரிக்கப்பட்ட மெழுவர்த்தியாக இருந்தது.


மண்டபத்தின் தரை முழுவதும் புற்களால் தளம் அமைத்திருந்தனர்.
பார்பதற்தறகே பச்சை பசேல் என்று காட்சியளித்து கண்ணிற்கு குழுமையாகவும் மனதிற்கு அமைதியை தரும் வகையிலும் ஏற்பாடு செய்திருந்தனர்.


பெண் அழைப்பிற்காக சாருவும் அவளது உறவினர்களும் பானுவை அழைப்பதற்கு அவளது வீட்டிற்கு காரில் புறப்பிட்டுச் சென்றனர்.


என்ன மேடம் தயாராகிட்டீங்களா? மனோஜ் அண்ணவா பார்க்க போலாமா? என்று சிரித்ததுக் கொண்டே பானுவிடம் கேட்டாள் சாரு.


பானுவிற்கு வெட்கம் வந்துவிட்டது.நீ செஞ்ச உதவியை நான் எக்காலத்துக்கும் மறக்க மாட்டேன் சாரு.அம்மா ஏங்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னாங்க.ஒரு வார்த்தைல தாங்க்ஸ்னு சொல்லுறதுலாம் நீ செய்த உதவிக்கு ஈடாகாது.


அம்மா பெரிய மனுஷி! சும்மாவே நீ ஓவரா டயலாக் பேசுவனு எனக்கு தெரியும்.கிழவி மாதிரி பேசாமல் பொண்ணா லக்ஷனமா சீக்கிரம் மேக்கப் முடிச்சிட்டு கிளம்புற வழியைப் பாரு என்று கூறினாள் சாரு.


நான் ரெடி தான் சாரு.வா! இப்போவே கிளம்பலாம் என்று பானு கூறியதும், உன் அவசரம் புரியுது என்று கூறினாள் சாரு.


மனோஜ் பானுவிற்கு மெஸேஜ் செய்து கொண்டிருந்தான்.அவள் பதில் ஏதும் அனுப்பாததால் போன் பண்ணினான்.


மொபைல் ரிங் அடித்ததும் வேகமாக அட்டன் செய்தாள் பானு.பானு பேசுவதற்குள் அவளிடமிருந்து போனை வாங்கி பானுவின் அண்ணி பார்கவி மனோஜிடம் பேசினாள்.


ஹலோ! நான் பானுவோட அண்ணி பேசுறேங்க.இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டில இருந்து கிளம்பிடுவோம்.பொண்ண நேர்ல வந்ததும் பாரத்து பேசிக்கோங்க என்று கூறியதும், பதில் ஒன்றும் பேச முடியாமல் வெட்கத்தில் போனை வைத்துவிட்டான் மனோஜ்.


மனோஜின் அருகிலிருந்த சந்துரு, நல்லா பல்ப் வாங்குனுயா? என்று கூறிக் கொண்டே சிரித்தான்.


விட்டா மாப்பிள இப்போவே மோதிரம் மாட்டி விடுறதுக்கு பதிலா, பானு கழுத்துல டேரக்ட்டா தாலியை கட்டிருவாரு போல இருக்குடி என்று பானுவின் உறவினர்கள் அனைவரும் நக்கலடித்து சிரித்துக்
கொண்டிருந்தனர்.


மனோஜூம் சந்துருவும் பேசிக் கொண்டிருக்கும் போது ட்ரம்ஸ் சத்தம் கேட்டது.


மாப்பிள்ளையை மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்காக பரத்துடன் சேர்ந்து உறவினர்கள் சிலர் ஜானகி அம்மாவின் வீட்டிற்கு வந்தனர்.


சம்பிரதாய முறைப்படி சில சடங்குகளை முடித்துவிட்டு மேள தாள வாத்தியங்களுடன் மாப்பிள்ளையை மண்டபத்திற்கு குதிரையில் அழைத்துச் சென்றனர்.


மண்டபத்தின் அலங்காரத்தையும் ஏற்பாடுகளையும் பார்த்த மனோஜ் மெய்சிலிர்த்து போனான்.முக்கியமாக புத்தர் சிலையையும் மூங்கில் மரங்களையும் பார்த்ததும் எல்லாம் சந்துருவின் ஏற்பாடாக இருக்கும் என்று உணர்ந்தான்.


மாப்பிள்ளையை மண்டபத்திற்குள் அழைத்து சென்ற பத்து நிமிடத்தில் காரில் வந்து இறங்கினாள் பானு.


மணமேடையில் பானுவை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான் மனோஜ்.



நிச்சயதார்த்த வேலையில் பிஸியாக இருந்ததால் காலையிலிருந்து சந்துருவை பார்க்கவே இல்லை சாரு.மண்டப்பதிற்குள் நுழைந்ததும் கண்களிரண்டும் கடலில் வலை வீசி மீனைத் தேடுவதை போல சந்துருவை தேடிக் கொண்டிருந்தாள் சாரு.ஆனால் அவள் வலையில் சிக்கவே இல்லை சந்துரு.


சிறிது நேரத்தில் சாருவின் மொபைல் ரிங் அடித்தது.வேற யாருமில்லை சந்துரு தான்.சந்துருவை சாரு தேடுவது தெரிந்து விட்டதோ என்னமோ? சந்துருவின் நம்பரை பார்த்ததும் ரிங் அடித்த அடுத்த நொடியே அட்டன் செய்து பேசினாள் சாரு.


ஹலோ! சொல்லுங்கங்க என்று கேட்டாள்.மண்டபத்துக்கு கீழ உள்ள சாப்பாட்டு ஹாலுக்கு சீக்கிரம் வாங்கங்க என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டான் சந்துரு.


மேடையிலிருந்த மனோஜ், சந்துரு எங்கம்மா? ரொம்ப நேரமா ஆளையே காணோம் என்று ஜானகி அம்மாவிடம் கேட்டான்.


இங்க தான் எங்கேயாவது இருப்பான் மனோஜ்.இப்போ வந்துருவான் என்று பதில் கூறினார் ஜானகி அம்மா.


சந்துரு என்ன? ஏது? என்று எதுவும் கூறாமல் வேகமாக போன் காலை கட் செய்து விட்டதும் சந்துரு எதற்காக நம்மள கூப்பிடுறாங்க? ஒன்றுமே புரியவில்லையே என்று சிந்தித்து கொண்டே மண்டபத்தின் சாப்பாட்டு ஹாலுக்கு சென்றாள்.


சாரு வருவதை பார்த்ததும் சந்துரு அவளை நோக்கி வேகமாக சென்றான்.


என்னங்க! எதுவும் முக்ககியமான விஷயமா? என்று கேட்டாள் சாரு.ஆமாங்க என்று சாருவிடம் சொல்ல வந்ததைக் கூறிவிட்டு வேகமாக மனமேடைக்கு சென்றான்.


பரத்தும் பார்கவியும் நிச்சயதார்த்திற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று கவனித்து கொண்டிருந்ததை பார்த்த பானுவின் அப்பா அம்மாவின் நெஞ்சம் அவர்களைக் கண்டு நெகிழ்ந்தது.


ஆசைக் காதலனின் கரம் பற்றிக்
கொள்ள நீல வண்ணப்பட்டுத்தி மேடையில் ஏறி மனோஜின் அருகில் வந்து நின்றாள் பானு.


பானுவை பார்த்து தேவதை மாதிரி இருக்க பானு என்று கூறினான் மனோஜ்.பானு வெட்கப்பட்டு சிரித்தாள்.


நாழிகை ஆகிடுச்சு! பொண்ணும் மாப்பிள்ளையும் மாலையை மாத்திக்கோங்க என்று கூறினார் புரோகிதர்..


மனோஜ் பானுவின் கரங்களைப் பிடித்து மோதிரம் போட்டு விட்டான்.
அதற்கு பிறகு பானு மனோஜிற்கு நிச்சயதார்த்த மோதிரத்தை போட்டு விட்டாள்.


அப்பா அம்மாக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க என்று சொன்னதும் முதலில் மனோஜூம் பானுவும் ஜானகி அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றனர்.


அதற்கு பிறகு பானுவின் அப்பா அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றனர்.பங்கஜம் அம்மாவின் கண்கள் கலங்கியது.நீடுழி வாழ்க! வாழ்க வளமுடன்! என்று கூறி ஆசிர்வாதம் செய்தார் பங்கஜம்.


பரத் பார்கவியிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்கு காலில் விழப்போகும் முன்பே அவர்கள் அதெல்லாம் வேண்டாங்க மாப்பிள.நாங்களும் வயசுல சின்னவுங்கதான் என்று கூறினான் பரத்.


அவன் என்னதான் கூறினாலும் மனோஜூம் பானுவும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.


நிச்சயதார்த்திற்கு வந்தவர்கள் அனைவரும் மனோஜ் மற்றும் பானுவிற்கு பரிசைக் கொடுத்துவிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.


பானுவோடு பணிபுரியும் சக ஆசிரியர்கள் அனைவரும் வந்து வாழ்த்து தெரிவித்து விட்டு, சொன்ன மாதிரியே காதலிச்ச பையனையே நிச்சயம் பண்ணிட்ட பானு.வாழ்க வளமுடன் என்று கூறிவிட்டு சென்றனர்.


என்னங்க சார்... மண்டபத்தோட அலங்காரம்லா பலமா இருக்கு சார்.
உங்களுக்கு பிடித்த மூங்கில் மரத்தோடு புத்தர் சிலையும் புல்லாங்குழல் இசையும் பயங்கரமா இருக்கு என்று மனோஜிடம் மெதுவாக காதின் அருகில் சென்று கூறிக்கொண்டிருந்தாள் பானு.


எனக்கே பார்த்ததும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது பானு.எல்லாம் சந்துருவோட ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று கூறினான் மனோஜ்.


அங்க பாருங்க டீச்சர்! சாருவையும் அவளோட மாப்பிள்ளையும் பார்க்க அப்படியே ஹீரோ ஹீரோயின் மாதிரி இருக்காங்கள என்று சாருவோடு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களில் ஒருவர் கூறினார்.இரண்டு பேரும் செம ஜோடில என்று ஜானகி அம்மாவிற்கு பின் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


அதைக்கேட்டதும் ஜானகி அம்மாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.


சந்துருவும் சாருவும் ஒன்றாக சேர்ந்து மேடைக்கு சென்று மனோஜிற்கும் பானுவிற்கும் வாழ்த்து தெரிவித்தனர்.


சாருவை பார்த்து கண்ணால் சைகை கொடுத்தான் சந்துரு.அவளும் கண் இமைகளை அசைத்து ஓகே! என்று கூறினாள்.


நான் வந்தவுங்கள போய் கவனிக்கிறேன் மனோஜ் என்று கூறிவிட்டு சந்துரு மட்டும் மேடையிலிருந்து கீழே இறங்கி சென்றான்.


மனோஜ்க்கு புல்லாங்குழல் வாசிக்க ரொம்ப பிடிக்கும் என்பதால் புல்லாங்குழலில் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.


இசைக் கச்சேரி முடிந்த பிறகு போட்டோ சூட் நடந்தது.பானுவும் மனோஜூம் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுப்பதை ரசித்துக் கொண்டிருந்த சாரு, தன் ஆசை நாயகனோடு கடற்கரையில் இருவரும் போட்டோ சூட் எடுப்பது போல கற்பனை செய்து பார்த்தாள்.


நீல நிற கவுன் அணிந்து, காதில் பூ மாடல் உள்ள வைரக் கம்மல் அணிந்து, கழுத்தில் கயிறு போன்ற மெல்லிய செயினும் அதில் இரு இதயங்கள் சேர்ந்து இருப்பது போல டாலரும் அணிந்து கடற்கரையில் சாரு ஓடுவது போலவும் சந்துரு அவளைப் பிடிப்பது போலவும் அந்த காட்சியை போட்டோகிராப்பர் போட்டோ எடுப்பது போன்று கற்பனையில் நினைத்து மிதந்து கொண்டிருந்தாள் சாரு.


ஏங்க! ஏங்க! என்று ஒரு குரல் கேட்டதும் கற்பனை உலகிலிருந்து நிஜ உலகிற்கு வந்தாள் சாரு.


போங்கங்க! டைம் ஆச்சு! என்று சாருவிடம் கூறினான் சந்துரு.
போட்டோகிராப்பரிடம் சென்று சந்துரு சொன்ன விஷயத்தை கூறினாள் சாரு.


சரிங்க மேடம்.நான் பார்த்துக்கிறேன் என்று பதில் கூறினார் போட்டோகிராப்பர்.


மனோஜூம் பானுவும் சாப்பிட்டு முடித்ததும், மண்டபத்தின் வாசலில் சீனரிஸ் நல்லா இருக்கு சார்.ஒரு பத்து நிமிஷம் வெளியே வந்தீங்கனா அங்க வச்சு கொஞ்சம் போட்டோஸ் எடுத்திடலாம் சார் என்று மனோஜிடம் கூறினார் போட்டோகிராப்பர்.


மனோஜூம் பானுவும் மண்டபத்திற்கு வெளியே வந்ததும், சாரு குக்கூ குக்கூ என்று சந்துருவிற்கு சைகையில் கூவினாள்.


சாரு சைகை கொடுத்த மறுநொடி மண்டபத்தின் மேலிருந்து கொட்டும் அருவி போல துலீப் மலர்கள் பத்து நிமிடங்கள் விடாமல் மனோஜ் மற்றும் பானுவின் மீது விழுந்து கொண்டிருந்தது.


இந்த ப்ளானுக்காக தான் சாருவை அழைத்திருந்தான் சந்துரு.சந்துரு மாடியிலிருந்து கீழறங்கி வந்ததும்
'தாங்க் யூ சோ மச்டா மச்சான்' என்று கூறினான் மனோஜ்.


நீங்க மட்டும் ஹெல்ப் பண்ணாட்டீ இந்த சர்ப்ரைஸே மனோஜ்க்கு கொடுத்திருக்க முடியாதுங்க.'தாங்க் யூங்க' என்று சாருவிடம் கூறிக் கொண்டிருக்கும் போது சந்துருவிற்கு திடீரென ஒரு போன் கால் வந்ததால், அவள் திருப்பி பதில் சொல்வதற்குள் மொபைலில் பேசிக் கொண்டே சென்றுவிட்டான் சந்துரு.


சந்துரு மொபைலில் பேசும் போது அப்படியா டாக்டர்! இதோ இப்போ வந்திர்றேன் என்று அவன் பேசியது சாருவின் காதில் விழுந்தது.


கொஞ்சம் அர்ஜெண்ட் ஒர்க்குங்க.நான் ஒரு ஹாப் அன் ஆர்ல வந்திர்றேன்.
அம்மா கேட்டா சொல்லிருங்க என்று கூறிவிட்டு காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றான் சந்துரு.


இந்த நேரத்துல போய் அப்படி என்ன அர்ஜெண்ட் ஒர்க் இவுங்களுக்கு? எத்தனை நாளுக்குத்தான் உண்மை சொல்லாமல் மூடி மறைக்கிறாங்கனு பார்ப்போம் என்று கூறிவிட்டு மண்டபத்திற்குள் சென்றாள் சாரு.


நிச்சயதார்த்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் விதைப்பந்துடன் புத்தர் சிலையையும் பழங்களையும் வைத்து தாம்பூலப்பை வழங்கினார்கள்.
நிச்சயதார்த்திற்கு வந்தவர்கள் அனைவரின் வயிறும், மனமும் நிறைந்தது.


நிச்சயதார்த்த ஏற்பாடுலாம் அட்டகாசமாக செஞ்சு வந்த எல்லாரையும் ஆச்சிரியப்பட வச்சுட்டீங்க சம்பந்தி அம்மா என்று ஜானகி அம்மாவிடம் கூறினார் கனகராஜ்.


எல்லாமே பார்த்து பார்த்து ப்ளான் பண்ணது சந்துரு தாங்க சம்பந்தி என்று கூறினார் ஜானகி அம்மா.


சொன்னது போல அரைமணி நேரத்தில் திரும்பி வந்தான் சந்துரு.சந்துருவின் முகம் சற்று வாட்டமாக இருந்ததை சாரு கவனித்தாள்.


பானுவும் மனோஜூம் கையைப் பிடித்து பேசிக் கொண்டிருந்தனர்.பானு வாமா! கிளம்பலாம் என்று பார்கவி அழைத்தாள்.கண்டிப்பா போகனுமா பானு? இன்னும் கொஞ்சம் நேரம் என் கூட இருந்து பேசிட்டு போகலாம் பானு என்றான் மனோஜ்.


சார்...அண்ணி இருக்காங்க கையை விடுங்க.நாளைக்கு பார்க்கலாம் என்று கூறிவிட்டு சென்றாள் பானு.


சரிங்க சம்பந்திம்மா... அப்போ நாங்க கிளம்புறோம் என்று கூறிவிட்டு பானுவின் குடும்பத்தினர் புறப்பட்டனர்.
அவர்கள் புறப்படும் சமயம், பானுவை பார்த்து கண்ணடித்து டாட்டா என்று கூறினான் மனோஜ்.


ஜானகி அம்மா குடும்பத்தினரும் மண்டபத்திலிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.


வீட்டிற்கு வந்ததும் சந்துரு வேகமாக தன்னுடைய அறைக்கு சென்று பைலை எடுத்து பார்த்துக்
கொண்டிருந்தான்.சாரு வரும் சத்தம் கேட்டதும் பைலை அலமாரியில் வைத்துவிட்டு மேலிருந்து ட்ராலியை கீழே இறக்கினான்.


மண்டபத்திலிருந்து வந்ததும் ட்ரஸ் கூட சேஞ் பண்ணாம இப்போ எதுக்கு ட்ராலியை எடுக்குறாங்க? எதையோ சமாளிக்க ட்ரைப் பண்ணுறாங்க என்று யூகித்தாள்.சாருவின் சந்தேகம் மேலும் அதிகரித்து விட்டது.


சந்துருவிடம் எதுவும் கேட்காமல் ட்ரஸ் சேஞ் செய்துவிட்டு பங்ஷனில் அலைந்து திரிந்ததில் உடல் அசதியில் படுத்து உறங்கிவிட்டாள் சாரு.



நிச்சயதார்த்தத்தின் போது எங்கே சென்றான் சந்துரு? சாருவிடமிருந்து மறைக்கும் பைலில் இருக்கும் ரகசியம்தான் என்ன? என்று இனி வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...


- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 

Kalijana

Member
Messages
31
Reaction score
32
Points
18
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 26


மறுநாள் அதிகாலையிலே சாரு எழுந்து கட்டிலில் நல்லா கொறட்டை விட்டு அசந்து படுத்து தூங்கிக் கொண்டிருந்த சந்துருவையே நீண்ட நேரமாக கண்களை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் சாரு.


தினமும் காலையில் சந்துரு எழுவதற்கு முன்பு அவனை பார்த்து ரசித்து மகிழ்ச்சியடைவது சாருவின் வழக்கம் தான்.ஆனால் இன்று மட்டும் ஏனோ தெரியவில்லை அவள் அவனை நோக்கும் போது சாருவின் கண்களில் அவளை அறியாமலே கண்ணீர் வழிந்தது.


நாளைக்கு காலையில் யார் முகத்தை பார்த்து ரசிப்பேன்ங்க சந்துரு? என்னை தனியாக தவிக்க விட்டுட்டு நீங்க மட்டும் அமெரிக்காவுக்கு கிளம்ப போறீங்களா? என்று தன்னுடைய மன குமுறலை அவனிடம் நேரில் சொல்ல முடியாமல் அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள் சாரு.


சாரு பேசி முடித்ததும் சந்துரு முழித்துவிட்டான்.சாருவிற்கு பக்குனு ஆகிடுச்சு.சந்துருவின் கண்கள் திறக்கும்போது சாரு வேகமாக எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.சந்துரு எழுந்து ப்ரஸ்அப் ஆகினதும் சாரு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.காபி கப்பை கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி சென்றான்.


அம்மா! பேக்கிங் பண்ண வேண்டிய திங்க்ஸ்லாம் ரெடியாம்மா? என்று ஜானகி அம்மாவிடம் கேட்டான் சந்துரு.


இரண்டு நாளைக்கு முன்னாடியே சாரு எல்லாத்தையும் கவர்ல போட்டு பேக் பண்ணிட்டா சந்துரு.


ஏம்மா சாரு! நீ சந்துருட்ட
சொல்லலையாம்மா? என்று கேட்டார் ஜானகி அம்மா.


நிச்சயதார்த்த ஒர்க் இருந்ததால சொல்ல மறந்துட்டேன் அத்தை என்று கூறினாள் சாரு.


ஓகேம்மா! அப்போ நான் போய் ட்ராலில எல்லாத்தையும் வச்சு பேக் பண்ணுறேன்.ஈவினிங் ஆறு மணிக்கு ட்ரைன்.நைட் டின்னர்க்கு சப்பாத்தி பேக் பண்ண சொல்லிருங்கம்மா என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றான் சந்துரு.


சாருவும் அவன் பின்னே சென்றாள்.சந்துருவிற்கு பேக்கிங் தேவையான அனைத்தையும் சந்துருவிடம் எடுத்துக் கொடுத்தாள்.சந்துரு வேக வேகமாக ட்ராலியில் அவனுடைய திங்க்ஸையெல்லாம் அடுக்கி வைத்து பேக் பண்ணிக் கொண்டிருந்தான்.


அவன் செக் லிஸ்ட்டை கையில் வைத்துக் கொண்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரிப்பார்த்துக்
கொண்டிருந்தான்.அதற்கு பிறகு வெயிட் செக் செய்தான்.எடை துல்லியமாக முப்பது கிலோ இருந்தது.


பேக்கிங் வேலை முடிந்ததும் சந்துரு எதுவும் சொல்லாமல் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.


சந்துரு சென்றதும் சாருவின் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவரும் சந்துருவை வழி அனுப்பி வைப்பதற்காக வந்திருந்தார்கள்.அவர்களை வரவேற்று உபசரித்து பேசிக் கொண்டிருந்தார் ஜானகி அம்மா.


பானுவும் மனோஜூம் போனில் இரண்டு மணி நேரமாக பேசிக் கொண்டிருந்தனர்.


பேக்கிங்லா ஓவராங்க சார்? என்று பானு கேட்டதும், மாமா போன வாரமே ப்ளான் பண்ணி பேக்கிங் ஒர்க் முடுச்சுட்டேன் செல்லம் என்று கூறினான் மனோஜ்.


இங்கு சாருவோ சந்துருவை எதிர்ப்பார்த்து காத்திருந்தாள்.
இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு இவுங்கள ஆளக்காணமே என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் வேகமாக நுழைந்தான் சந்துரு.


ரூமிற்கு வேகமாக சென்று பத்தே நிமிஷத்துல கிளம்பி தயாராகி கீழே இறங்கி வந்த சந்துரு, நேராக ஜானகி அம்மாவின் அறைக்கு சென்றான்.


பதினைந்து நிமிடங்கள் அம்மாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.வேலை வேலைக்கு கரெக்டா சாப்பிடுங்கம்மா.நேரத்துக்கு தூங்குங்க.சாருக்கு நம்ம வீட்டுல இருக்க ஒரு மாதிரி இருந்தா அவளோட வீட்டுக்கு வேணா அனுப்பி வையுங்கம்மா என்று கூறினான்.விசா வர்றதுக்கு எப்படியும் இரண்டு மாசம் ஆகும்னு நினைக்கிறேன் என்று கூறிக் கொண்டிருந்தான் சந்துரு.


சரிம்மா டைம் ஆச்சு.நாம்ம ஸ்டேஷனுக்கு கிளம்பலாம் என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு லக்கேஜ் எடுக்க சென்றான்.


குட்டிப் போட்ட பூனைப் போல சாரு சந்துருவையே சுத்தி சுத்தி வலம் வந்துக் கொண்டிருந்தாள்.


ஆனால் சந்துரு கிளம்பும் அவசரத்தில் சாருவை கண்டு கொள்ளவே இல்லை.சந்துரு லக்கேஜ் எடுத்துக்கொண்டு ரூமை விட்டு கிளம்பும் நேரத்தில் ஏங்க என்று சாருவை அழைத்ததும், ஆசையோடு அவனருகில் வந்தவளிடம் அந்த மொபைல் ஜார்ஜரை மட்டும் எடுத்து தர்றீங்களா? என்று கேட்டான்.


ஜார்ஜரை எடுத்து கொடுத்ததும் வேற ஏதும் பேசாமல் கீழே இறங்கி சென்றான் சந்துரு.மனோஜூம் லக்கேஜை எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.


இருவரும் ஜானகி அம்மாவிடமும் சாருவின் குடும்பத்தாரிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ட்ராலியை இழுத்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டனர்.
சாருவின் கண்கள் கலங்கியது.


சந்துருவையும் மனோஜையும் வழி அனுப்பி வைப்பதற்காக,
குடும்பத்தில் உள்ள அனைவரும் ரயில்வே ஸ்டேஷன் வரை சென்றனர்.


சந்துரு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தான்.சாருவின் தாத்தா பாட்டி சாரு எல்லோரும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.சாரு சந்துருவையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த தாத்தா, பேராண்டி கொஞ்சம் பின்னாடி வந்து உக்காருறீயாப்பா? எனக்கு கொஞ்சம் இடம் பத்தாமா இடுச்சுக்கிட்டு உட்கார்ற மாதிரி இருக்குப்பா என்று சந்துருவிடம் கூறினார்.


சரிங்க தாத்தா என்று கூறிவிட்டு பின் சீட்டிற்கு வந்து சாருவின் பக்கத்தில் அமர்ந்தான் சந்துரு.
திடீரென ஒரு மாடு குறுக்கே சென்றதால் டக்குனு வண்டியை பிரேக் போட்டான் மனோஜ்.
பிரேக் போட்டதும் நடுவில் அமர்ந்திருந்த சாரு சந்துருவின் கையை இறுக்க பிடித்துக்
கொண்டாள்.


பார்த்து கவனமா ஓட்டு மனோஜ்! என்று சந்துரு கூறினான்.


சந்துருவின் கையை பிடித்துக் கொள்ள சாருவிற்கு இது சரியான வாய்ப்பாக அமைந்துவிட்டது.


போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே

மாற்றங்கள் அதையும்
தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுதடி
நீ அற்ற இரவு
வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி

இது நிலை இல்லை
வெறும் மழை என்றோ
இது மழை இல்லை
சிறு மழை என்றோ

இந்த நொடிகள் கனவே எனவே உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு

போ உறவே…



என்ற பாட்டு வேற எப் எம்மில் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி பாடிக் கொண்டிருந்தது.


அது மேலும் சாருவின் மனதில் வேதனையை அதிகப்படுத்தியது.
ரயில்வே ஸ்டேஷன் வரும் வரை சந்துருவின் கையை விடவே இல்லை சாரு.


ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் சாருவின் கையை எடுத்துவிட்டு கீழே இறங்கினான் சந்துரு.மனோஜ் காரை விட்டு இறங்கியதும் ஸ்டேஷன் வாசலில் பார்த்தால், பானுவும் அவளது குடும்பத்தினரும் மனோஜை வழி அனுப்பி வைப்பதற்காக வந்திருந்தனர்.


பானுவை பார்த்ததும் மனோஜிற்கு சந்தோஷத்தில் கையும் காலும் ஓடவில்லை.காரிலிருந்து லக்கேஜை எடுத்துக் கொண்டு வேகமாக அவளருகில் சென்றான்.


ஹாய் டார்லிங்! நேத்து நைட் அவ்வளவு கெஞ்சியும் சென்ட் ஆஃப் பண்ண வர்ற மாட்டீங்கனு சிட்ரிக்ட்டா சொல்லிட்டு, இங்க வந்து பார்த்தா எனக்கு முன்னாடியே வந்து நிக்கிறீங்க மேடம் என்று பானுவிடம் சிரித்துக் கொண்டே கேட்டான் மனோஜ்.


உங்களுக்கு கொஞ்சம் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் முன்னாடியே இன்பார்ம் பண்ணல சார் என்று கூறினாள் பானு.


நீங்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் இன்னும் ஐந்து நிமிடத்தில் மூன்றாவது தளத்திற்கு வந்து சேர்ந்துவிடும் என்று அறிவித்துக் கொண்டிருந்தனர்.


சந்துரு தன்னிடம் ஏதாவது வாய் திறந்து பேச மாட்டானா? என்று சாருவின் மனது பரிதவித்துக் கொண்டிருந்தது.


சாருவைப் பார்த்த ஜானகி அம்மா சந்துருவிடம் சென்று சாருக்கிட்ட போய் ஏதாவது பேசுடா என்று கூறினார்.


சந்துரு சாருவினருகில் சென்று பேசத் தொடங்கும் சமயம் பார்த்து 'கூ' என்ற சத்ததுடன் ட்ரைன் வந்துவிட்டது.


ட்ரைன் வருவதைப்ப பார்த்ததும் சாருவிடம் எதுவும் பேசாமலேயே ட்ரைனில் ஏறி அவனுடைய இடத்தின் நம்பரைத் தேடிப்பார்த்து அமர்ந்துவிட்டான்.


ஓகே! 'சி யூ டியர்' என்று பானுவிடம் கைக் குலுக்கி இனி டேரக்ட்டா கல்யாணத்துல மீட் பண்ணலாம் என்று மனோஜ் கூறியதும் பானுவின் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது.


ஹேய் பானு! இது என்ன சின்னப் பிள்ளை தனமா அழுதுக்கிட்டு இருக்க.ஓகே பானு! டேக் கேர்.ட்ரைன் அஞ்சு நிமிஷத்தில் கிளம்பிரும் என்று சொல்லிவிட்டு ட்ரைனில் ஏறி அமர்ந்து ஜன்னல் வழியாக பானுவை பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.


மற்றொரு ஜன்னலின் வழியாக சந்துரு சாருவை பார்த்தான்.
ஜன்னல் கம்பியைப் பிடித்திருந்த சாருவின் கையின் மீது தன்னுடைய கைகளை வைத்து 'டேக் கேர்ங்க' , 'ஸி யூ ஸூன்' என்று சந்துரு கூறினான்.சந்துரு அக்கறையுடன் கூறியதை எண்ணி சந்தோஷப்படுவதா? இல்லை தன்னை விட்டு செல்வதை நினைத்து வருத்ததப்படுவதா? என்று புரியாமல் மனதில் நினைப்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் முக மலர்ச்சியுடன் சரிங்கங்க… 'யூ டூ டேக் கேர்' என்று சாரு சொல்லியதும் ட்ரைன் கிளம்பியது.


ட்ரைன் கிளம்பியதும் எல்லோரும் வீட்டிற்கு கிளம்பிச் செல்லும் வழியில் திடீரென்று ஏய்! ஏய்! நில்லுடி என்று கத்திக் கொண்டே ஒரு பொம்பளயை துரத்திக் கொண்டு ஓடினார் கண்ணம்மா.


கண்ணம்மா துரத்திக் கொண்டு செல்வதைப் பார்த்ததும், சாரு வேகமாக மற்றொரு வழியாக சென்று அந்த பொம்பளை ஓடும் திசைக்கு எதிர்த்திசையில் ஓடிச் சென்று அந்த பொம்பளையைப் பிடித்துவிட்டாள் சாரு.


மூச்சிழைக்க ஓடி வந்த கண்ணம்மா அந்த பொம்பளையின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
என்னுடைய குழந்தை எங்கடி? என்று அழுதுக் கொண்டே அவளிடம் கேட்டார் கண்ணம்மா.


என்னம்மா சொல்லுறீங்க? உங்க பையனை தூக்கிட்டு போனது இவுங்களாம்மா? நல்லா பார்த்து சொல்லுங்கம்மா என்று கேட்டாள் சாரு.


நான் எப்படி சாரும்மா இந்த ராட்சசி முகத்தை மறக்க முடியும்? என் பையனை தூக்கிட்டு போன படுபாவி இவதான் சாரும்மா என்று கூறினார் கண்ணம்மா.


நீங்களும் ஒரு பெண்ணா இருந்துக்கிட்டு எப்படிங்க இந்த மாதிரி காரியம்ல செய்ய உங்களுக்கு மனசு வந்தது? என்று கேட்டாள் சாரு.


பதில் ஏதும் பேசாமல் அழுதுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.


பண்ணுறதுலாம் பண்ணிட்டு இப்போ அழுது நாடகம் போடுறியாடி? அன்னைக்கு பாவம் பாத்து உனக்கு இரக்கப்பட்டதுக்கு எனக்கு நல்லா நன்றிக்கடன் செஞ்சுட்ட என்று கோபத்துடனும் கண்ணீருடனும் கத்தி கத்தி பேசினார் கண்ணம்மா.


என் குழந்தையை என்னடி பண்ணுன? ஒழுங்கு மரியாதையா இப்போ சொல்லுறியா? இல்ல போலீஸ்க்கு கால் பண்ணட்டும்மா? அவுங்க வந்து முட்டிக்கு முட்டி தட்டுனா தான் நீ வாய துறந்து பதில் சொல்லுவ என்று கூறினார் கண்ணம்மா.


இருந்த இடம் தெரியாமல் எல்லோரிடமும் மெதுவாக பேசும் நம்ம கண்ணம்மவா இவ்வுளவு ஆக்ரோசமா பேசுறது என்று ஆச்சரியத்துடன் பார்த்தார் ஜானகி அம்மா.சாருவின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி வந்தனர்.


அந்தப் பெண் வேகமாக கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள்.அம்மா! என்ன மன்னிச்சுருங்கம்மா.என் பிள்ளை உயிரைக் காப்பாத்த எனக்கு வேற வழித் தெரியாமதான் அப்படி பண்ணிட்டேன்ம்மா என்று கூறினாள்.


என்னடி அடுத்த ட்ராம போட்டு எங்கள ஏமாத்திட்டு தப்புச்சிரலாம்னு பாக்குறீயா என்று கேட்டார் கண்ணம்மா.


என் பிள்ளை மேல் சத்தியமா நான் பொய் சொல்லலமா.என்னை நம்புங்க.நான் உண்மையை சொன்ன பிறகு நானே போலீஸ் ஸ்டேஷன்ல சரன்டர் ஆகிர்றேன்ம்மா என்று கூறினாள்.


கண்ணம்மாவும் சாருவும் எதுவும் பேசாமல் அவள் சொல்வதைக் கேட்க தொடங்கினர்.


தினமும் நானும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து ரயில்வே ஸ்டேஷன்ல தான் கூடையில பழங்களை வச்சு பழ வியாபாரம் பார்த்துக்கிட்டு இருந்தோம்.


நாங்க டெய்லியும் பழம் விக்கிறத பொருத்து தான் எங்க வயித்து பிழைப்பே ஓடும்.எங்களுக்கு ஒரே ஒரு பையன் இருந்தான்.ஒரு நாள் நாங்க வியாபாரம் பார்த்ததுக்கிட்டு இருந்த போது ஸ்கூல்ல இருந்து திடீருனு போன் வந்தது.உங்க பையன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்.ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்.சீக்கிரமா வாங்கனு சொல்லி கூப்பிட்டாங்க.


நாங்க பதறி அடிச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போனோம்.டாக்டர் ஸ்கேன் எடுத்துட்டு வாங்கனு சொன்னாங்க.ஸ்கேன் ரிப்போர்ட்ட பார்த்துட்டு உங்க பையனுக்கு தலையில கட்டி இருக்கு.உடனே ஆப்ரேஷன் செய்யனும்.அஞ்சு லட்சம் வரை செலவாகும்னு டாக்டர் சொல்லிட்டாங்கம்மா.


நாங்க ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறதே பெருசு.நாங்க எங்கிட்டு போய் அஞ்சுலட்சம் சேர்க்க முடியும்.தெருஞ்சவுங்க சொந்த காரங்எல்லாருக்கிட்டையும் கேட்டுப் பார்த்து பணம் பிரட்டுனதுல எங்கனால ஒரு லட்சம் ரூபாய் கூட சேர்க்க முடியல.


நான் என் பையனை நினைச்சசு ரயில்வே ஸ்டேஷன்ல அழுது புலம்பிக்கிட்டு இருந்ததைப் பார்த்த ஒரு அம்மா, எங்கிட்ட வந்து விசாரிச்சாங்க.நான் சொல்லுறத மட்டும் நீ செஞ்சுட்டனா அஞ்சு லட்ச ரூபாய் நான் உனக்கு தர்றேன் என்று சொல்லி ஒரு குழந்தையை கடத்தி தரச்சொன்னாங்க.


ஆரம்பத்துல நான் சம்மதிக்கவே இல்லம்மா.நாளாக நாளாக என் பையன் அடிக்கடி மயக்கம் போட்டு விழத் தொடங்கிட்டான்.பிள்ளையை காப்பாத்த வேற வழி தெரியாமல் நான் சரினு சொல்லி சம்மதிச்சேன்.


ஆனால் இன்னைக்கு என் பையன் உயிரோடையே இல்லம்மா.உங்க பிள்ளையை உங்கக்கிட்ட இருந்து பிரிச்ச பாவத்துக்கு தான் கடவுள் என் பிள்ளையை ஏங்கிட்ட இருந்து நிரந்தரமா பிரிச்சுட்டாரும்மா என்று அழுதாள் அந்தப் பெண்.


என் பையன யாருக்கிட்ட கொடுத்தீங்க அப்போ? என்று கேட்டார்.நான் குழந்தையை வாங்குனதும் கொஞ்ச நேரத்துல போலீஸ் என்ன துரத்த ஆரம்புச்சுட்டாங்க.பயத்துல நான் போற வழியிலிருந்த குப்பைத் தொட்டில போட்டுட்டு ஓடிட்டேன்ம்மா என்று அந்தப் பெண் சொன்னதும், ஐயோ மதன்! நீ எங்கடா இருக்க? என்று கண்ணம்மா தேம்பி அழுகத் தொடங்கிவிட்டார்.


அம்மா அழாதீங்கம்மா!
கண்டிப்பா உங்க பையனை கண்டுப்பிடிச்சிடலாம் என்று ஆறுதல் வார்த்தை கூறினாள் சாரு.


நீங்க எந்த இடத்துல போட்டீங்கனு இப்போ எனக்கு சொல்ல முடியுமா? என்று கேட்டாள் சாரு.


நீங்க எல்லோரும் வீட்டுக்கு போய்க்கிட்டு இருங்க அத்தை.
நாங்க சீக்கிரம் வந்திர்றோம் என்று கூறினாள் சாரு.


நான் கூட துணைக்கு வர்றேன்ம்மா என்றார் சாருவின் அப்பா.நான் பரத்தை சாருக்கூட அனுப்பி வைக்கிறேன்.பரத் ப்ரெண்ட் தான் நம்ம ஏரியா இன்ஸ்பெக்ட்டர்.
அதனால ஏதாவது ஒன்னுனா அவன் பார்த்துக்குவான்.நீங்க தைரியாம வீட்டுக்கு போங்க என்று கனகராஜ் கூறியதும் அனைவரும் புறப்பட்டு வீட்டுக்கு சென்றனர்.


இவர்கள் நான்கு பேரும் டாக்ஸியை பிடித்து அந்தப் பெண் காட்டும் வழியில் சென்று குப்பை தொட்டி இருந்த இடத்தைப் பார்த்தனர்.


குப்பைத்தொட்டி உடைந்து போய் கிடந்தது.அதைப் பார்த்ததும் குப்பை தொட்டியின் பக்கத்திலே மண்டி போட்டு அழுதுக்கொண்டு இருந்தார் கண்ணம்மா.


அந்த பக்கம் சென்று கொண்டிருந்த வயசான தாத்தா ஒருவர் அங்கு வந்து எதுக்கும்மா அழுறீங்க என்று கேட்டார்.


முப்பது வருஷத்துக்கு முன்னாடி இவுங்க குழந்தையை கடத்திட்டு வந்து இந்த குப்பைத் தொட்டியில போட்டு போயிருக்காங்க சார் என்று சாரு கூறியதும், அந்த குழந்தை ஆண் குழந்தையம்மா? என்று கேட்டார் தாத்தா.


ஆமாங்க ஐயா.நீங்க என் குழந்தையை பார்த்தீங்களா? என்று கேட்டார் கண்ணம்மா.


நான் தான்ம்மா அந்த குழந்தையை கொண்டு போய் பக்கத்துல இருக்கிற ஆசிரம்த்துல சேர்த்தேன் என்று கூறினார்.


வாங்க நான் உங்கள அங்க கூட்டிட்டு போறேன் என்று சொல்லி அவரும் அவர்களுடன் சென்றார்.


ஆசிரமத்திற்குக சென்று விசாரித்து பார்த்ததில், அங்கு பணிபுரிந்த முன்னாள் சிஸ்டர் காலமாகி விட்டதாக தகவல் கூறினார்கள்.


ஆனால் எல்லாருடைய ரெக்கார்டும் எங்கக்கிட்ட இருக்கு.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.நான் செக் பண்ணி சொல்லுறேனு கூறினார் அங்கு பணிபுரியும் மற்றொரு சிஸ்டர்.


அரைமணி நேரத்திற்கு பிறகு ஒரு பெரிய நோட்டு புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்த சிஸ்டர், நீங்க சொன்ன நாள், கிழமை வச்சுப்பார்த்தால் அந்த தேதியில் வந்த ஆண் குழந்தையை பாரதிங்கிறவரு கொண்டு வந்து சேர்த்ததா ரெக்கார்டுல இருக்கு சார் என்று கூறினார்.


ஆமாம்மா..நான் தான் அந்த பாரதி என்று கூறினார் அந்த தாத்தா.


சிஸ்டர் ரெக்கார்டை தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில், சாரு வெளியே வந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆயாம்மாவிடம் சென்று விசாரித்தாள்.எனக்கு நல்லா அந்த பையனை பற்றி தெரியும்மா என்று கூறினார் ஆயம்மா.ரொம்ப நல்ல பையன்ம்மா.எனக்கு மாசத்துக்கு ஒரு முறை கால் பண்ணி பேசிருவான் என்று கூறினார்.


அவுங்க இப்போ எங்க இருக்காங்கம்மா? அவுங்க போன் நம்பர் தர முடியுமா என்று கேட்டாள் சாரு.


இப்போ அந்த பையன் வளர்ந்து பெரியாளாகி இன்ஞ்னியரா அமெரிக்காவுல வேலை பார்க்குறான்ம்மா என்று கூறினார்.


தன்னுடைய மொபைலை எடுத்து ஆயாம்மா போன் நம்பரை பார்த்து சொன்னார்.சாரு அவளுடைய மொபைலில் போன் நம்பரை சேவ் செய்தாள்.அது அமெரிக்கா நம்பராக இருந்தது.


மனோஜ் எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும்மா என்று சொன்னதும், அந்த பையன் பெயர் என்னதும்மா சொன்னீங்க என்று கேட்டாள் சாரு.


அந்த பையன் பேரு மனோஜ் என்று சொன்னதும், நம்ம மனோஜ் அண்ணவா இருந்தாலும் இருக்குமோ என்று யோசித்தவள், இப்போ உள்ள போட்டோவை காட்டுனா அடையாளம் சொல்லுவீங்களாம்மா? என்று கேட்டாள்.


ம்ம்...காட்டுங்ஙகம்மா என்று கூறினார்.


சாரு வேகமாக மனோஜின் நிச்சயதார்த்த போட்டோவை எடுத்துக் காட்டினாள்.


இதுதான்ம்மா அந்த பையன் என்று ஆயாம்மா சொன்னதும், தாங்க் யூ சோ மச்ம்மா என்று கூறிவிட்டு கண்ணம்மாவிடம் வேகமாக ஓடிச் சென்றாள் சாரு.


அம்மா! உங்க பையன் கிடச்சுட்டாங்கம்மா என்று வேகமாக ஓடி வந்து கண்ணம்மாவை கட்டி அணைத்து கூறினாள் சாரு.


எங்க இருக்கான் சாரும்மா? வாம்மா இப்போவே அங்க போய் பார்க்கலாம் என்று கூறினார் கண்ணம்மா.


இத்தனை நாளா நீங்க உங்க பையன் கூட தான்ம்மா இருந்திருக்கீங்க என்று சாரு கூறியதும், கண்ணம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை.


மதன் அண்ணா வேற யாருமில்லம்மா. நம்ம மனோஜ் அண்ணாதான் என்று கூறியதும் என்ன சாரும்மா சொல்லுறீங்க? நீங்க சொல்லுறது உண்மையாம்மா? என்று கேட்டார் கண்ணம்மா.


ஆமாம்மா… இங்க வேலை பாக்குற ஆயம்மா தான்ம்மா சொன்னாங்க என்று கூறினாள்.


சாரும்மா நீங்க உடனே மனோஜ்க்கு கால் பண்ணுங்கம்ம என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார் கண்ணம்மா.


சரிங்கம்மா... என்று சொல்லிவிட்டு வேகமாக மனோஜிற்கு கால் செய்தாள்.ஆனால் மொபைல் சுவிட்ச் ஆப் என்று வந்தது.


உடனே சந்துருவிற்கு கால் செய்து தகவல் சொல்லலாம் என்று பார்த்தால், நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று சொல்லியது.


தாத்தாவிற்கும், ஆயா அம்மாவிற்கும் நன்றி கூறிவிட்டு ஆசிரமத்திலிருந்து கிளம்பினார்கள்.


இந்த பொம்பளயை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போய் கம்ப்ளைன்ட் கொடுத்திருவோம் சாரு என்று பரத் கூறியதும், வேண்டாம்ப்பா என்று கண்ணம்மா கூறினார்.


எனக்கு தான் என் பிள்ளை கிடைச்சுட்டானே.அதுபோதும் என்று கூறினார் கண்ணம்மா.


சூழ்நிலை எப்படிப்பட்ட மனுஷனையும் மாத்திரும் போல.
தெரிஞ்சோ தெரியமலோ தப்பு செஞ்சாலும் அது தப்பு தான்ங்க.
என்ன தான் நீங்க விளக்கம் கொடுத்தாலும், தப்பு
சரியாகிடாதுங்க.இனி இந்த மாதிரி குறுக்கு வழியில யோசிக்கிறதை நிறுத்திடுங்க என்று அந்த பொம்பளையிடம் கூறிவிட்டு மூன்று பேரும் வீட்டிற்கு கிளம்பிச் சென்றனர்.


வீட்டிற்குள் நுழைந்ததும் பெரியம்மா என் மதன் கிடைச்சுட்டான் என்று கண்ணம்மா ஓடி வந்து சொன்னதும், ஒரு தாயின் மனவேதனை ஒரு தாய்க்கு தானே புரியும், கடவுள் நம்மள கைவிடல கண்ணம்மா என்று கூறி அவளை கட்டி அணைத்து அழுதார் ஜானகி அம்மா.


சாரு வீட்டிற்கு வரும் வழியிலே எல்லா விஷயத்தையும் எங்கிட்ட சொல்லிட்டா கண்ணம்மா.


காலையில மனோஜ்க்கு கால் பண்ணி பார்ப்போம் கண்ணம்மா.
இப்போ போய் நீ ரெஸ்ட் எடு என்று கூறினார் ஜானகி அம்மா.


அப்போ நான் கிளம்புறேன் அத்தை என்று கூறினான் பரத்.


இன்னைக்கு நைட் இங்க தங்கிட்டு காலையில கிளம்பி வீட்டுக்கு போலாம்ப்பா பரத்.ரொம்ப லேட் ஆகிருச்சுப்பா என்று கூறினார் ஜானகி அம்மா.


பரவாயில்லை அத்தை.டாக்ஸி வெயிட்டிங்க்ல இருக்கு.நான் கிளம்புறேன் என்று கூறிவிட்டுச் சென்றான் பரத்.


நீயும் போய் ரெஸ்ட் எடும்மா சாரு என்று கூறியதும், சரிங்க அத்தை என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றாள் சாரு.


ரூமிற்குள் நுழைந்ததும் சந்துருவின் நினைவுகள் சாருவை வாட்டி வைத்தது.


சாரு ட்ரஸ் சேஞ் பண்ணிய பிறகு சந்துரு உட்காரும் இடத்தில் எல்லாம் உட்கார்ந்தும், கட்டிலில் அவன் படுக்கும் இடத்தில் படுத்தும் பார்த்தாள் சாரு.


வேகமாக டைரியை எடுத்து தன்னுடைய மனவேதனையை எல்லாம் எழுதி கொட்டித் தீர்த்தாள்.


டைரி எழுதி முடித்துவிட்டு மேஜையில் வைக்கும்போது சாருவின் கண்ணில் ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் தென்பட்டது.
அதை எடுத்துப் பார்த்தாள் சாரு.


ப்ளைட்டில் ஏறும் முன் மனோஜிற்கு உண்மை தெரிந்துவிடுமா? அந்த மெடிக்கல் ரிப்போர்ட் யாருடையது? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
Wow 👌Wow👌 Wow 👌What a twist Superb அடேய் கல் நெஞ்சக்காரன் சந்துரு கொஞ்சம் பேசினால் என்னவாம்? Bt ஸ்டோரி செம்மையா போகுது sis 👌
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
நிச்சியதார்தம் கலை கட்டின மாறி ஸ்டோரி also கலை கட்டுது sis 👌👌👌👌 surprise பண்ண சாருவ கூப்பிடுவாரு எப்போ சேர்ந்து வாழ கூப்பிடுவாரோ? Nice going sis 👌
Thank you so much dear🙏😍😄
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
நிச்சியதார்தம் கலை கட்டின மாறி ஸ்டோரி also கலை கட்டுது sis 👌👌👌👌 surprise பண்ண சாருவ கூப்பிடுவாரு எப்போ சேர்ந்து வாழ கூப்பிடுவாரோ? Nice going sis 👌
Thank you so much for your support and love dear🙏🙏🙏😍😍😍
 

Latest Episodes

New Threads

Top Bottom