Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
Deiii:mad:.............sandru nee saaru kitta pesa kudathunu hospital la admit aagi irukkiya.... illa unmaiyalu yethacha aagiduchu 🤔........sandruku yenna nadanthathu yethuku saaruva kasta pada vaikkura intha sandru frad du payale ithuku mela saaru feel pannaana na poggiduva banu maari .....spr epi sis ....... 🤩 😍😍😍
ரொம்ப ஆர்வமாக ரசித்து விமர்சனம் தருவதற்கு மிக்க நன்றி சிஸ்.உங்களின் ஆவலுக்காகவே விரைவில் அடுத்த அத்தியாயம் வெளிவரும்....
 

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.. திலகம். அழகான எழுத்து நடை...ரசித்தேன்..மா
நேரம் ஒதுக்கி படித்து விமர்சனம் செய்ததற்கு மிக்க நன்றி அம்மா....
 

vaishnaviselva@

Well-known member
Messages
312
Reaction score
248
Points
63
Semma epi sis :love::love::love:......rentu perukkum ore same wavelength first meeting la pesalanaalu rentuperu yetho oru help panni irukkaaga so sprb sisy ........ Ivaga meet panni pesarathuku kulla marriage aagitume.....yeppa meet panni pesuvaga semma spr epi sis🤩🤩.....next epi seekkaram poduga sissy.....😍❤️
 

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
Semma epi sis :love::love::love:......rentu perukkum ore same wavelength first meeting la pesalanaalu rentuperu yetho oru help panni irukkaaga so sprb sisy ........ Ivaga meet panni pesarathuku kulla marriage aagitume.....yeppa meet panni pesuvaga semma spr epi sis🤩🤩.....next epi seekkaram poduga sissy.....😍❤️
ரொம்ப நன்றி சிஸ்🙏😍...விரைவில் அடுத்த அத்தியாயம் பதிவு செய்ய முயற்சிக்கிறேன் சிஸ்...
 

Neha

New member
Messages
9
Reaction score
12
Points
3
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 6


கண்ணம்மா! சந்துருவும், மனோஜூம் சாப்பிட்டாங்களா? என்று கேட்டார் ஜானகி அம்மா.


சின்ன ஐயாவும், மனோஜ் தம்பியும் இன்னும் வீட்டுக்கு வரவில்லை அம்மா! என்றார் கண்ணம்மா.


மணி ஐந்து ஆகிடுச்சு, இன்னும் இரண்டு பேரையும் ஆளையே காணோம்.என்னாச்சுனு தெரியவில்லையே?


போன் போட்டாலும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்று வருகிறதே? என்று கண்ணம்மாடவிம் கூறிக்கொண்டிருந்தார் ஜானகி அம்மா.


சின்னம்மாவை முதல் முதலாக இன்றைக்கு தான் சின்ன ஐயா பார்க்க போயிருக்காங்க.இத்தனை நாட்களாக பேசாதது எல்லாம் சேர்த்து வைத்து மொத்தமாக பேசுவதால நேரமாகும் பெரியம்மா.


மலைக்கு மேலே கோவிலில் இருப்பதால் சிக்னல் கிடைக்காதுல அம்மா.அதுதான் போன் போக மாட்டிங்கிறது.


நீங்கள் கவலைப்படாமல் இருங்கம்மா! கொஞ்சம் நேரத்துல வந்திருவாங்க என்றார் கண்ணம்மா.


மதி! சாரு வந்தாச்சா? என்று கேட்டார் தாத்தா.அக்கா இன்னும் வரவில்லை தாத்தா என்றாள் மதி.


பொழுது சாயப்போது இன்னும் வரவில்லையா? என்றார் தாத்தா.


அக்காவிடம் பத்து நிமிஷத்திற்கு முன்பு தான் போன் பேசினேன் தாத்தா.


கோவிலிருந்து புறப்பட போகிறோம் என்று சொன்னாங்க.


தாத்தா ஆர்வமுடன், என் பேராண்டி என்ன சொன்னாருனு கேட்டாயா மதி?


அட போங்க தாத்தா! நான் கேட்டதுக்கு அதைப்பற்றி வீட்டில் வந்து சொல்லுகிறேனு சொல்லி போனை வச்சுட்டாங்க...


"மனோஜ் நடந்த அனைத்து சம்பவங்களையும் சொல்லி முடித்ததும், மன்னித்து விடுங்கள் சார்! உங்களது சூழ்நிலை தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு வேகமாக பேசிவிட்டேன் சார்" என்றாள் பானு.


அட என்னாங்க நீங்க? இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கீங்க...


நீங்க பேசியதில் எந்தவொரு தவறுமே இல்லை.உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் இதற்கு மேல் திட்டி தீர்த்திருப்பேன்.நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறினான் மனோஜ்.


நீங்களும் சாருவும் எவ்வளவு நெருக்கமான தோழிகள் என்பது உங்களது கோபத்திலே நன்றாக தெரிந்தது பானு! என்றான் மனோஜ்.


சரிங்க அண்ணா நேரமாச்சு! நாங்கள் வீட்டுக்கு கிளம்பிகிறோம்.நீங்களும் கவனமாக சென்று வாங்க என்று கூறினாள் சாரு.


சரிமா சாரு.சந்துருவும் எனக்காக மருத்துவமனையில் காத்துக்கொண்டிருப்பான்.
நானும் புறப்படுகிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து விடைப்பெற்றான் மனோஜ்.


நடந்த சம்பவங்களை கேட்டு கொண்டிருந்ததில் பலகார பையை மனோஜிடம் கொடுக்க மறந்துவிட்டாள் சாரு.


திடீரென ஒரு பெண் கையில் குழந்தையுடன் சாருவிடம் வந்து அம்மா பசிக்குது ஏதாவது இருந்தால் தாருங்கள்? என்றார்.


உடனே சாரு தன் கையில் இருந்த பலகார பையுடன் சேர்த்து நூறு ரூபாயை கொடுத்தாள்.


ஏன் அம்மா! இப்படி குழந்தையை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்? என்று யாசகம் பெற்ற பெண்ணிடம் கேட்டாள் சாரு.


அம்மா! என் கணவர் என் வயிற்றில் ஒரு குழந்தையை மட்டும் கொடுத்து விட்டு வேறொரு பெண்ணுடன் இரவோடு இரவாக ஓடி விட்டார்.வாழ வழி தெரியாமல் நானும் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வேலை கேட்டுப்பார்த்தேன்.


என்னை நம்பியாரும் வேலை தருவதற்கு முன் வரவில்லை.
குழந்தையின் பசியை போக்க வேறு வழி தெரியாமல் தான் யாசகம் எடுக்கின்றேன் அம்மா என்றார்.


இனிமேல் நீங்கள் கவலைப்படாதீங்க...
இருக்க இருப்பிடமும்,மூன்று வேளை சாப்பாட்டுடன் சேர்த்து மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தாள், வேலை செய்ய வருவீர்களா? என்றாள் சாரு.


நிஜமாகவாமா சொல்லுறீங்க...


இந்த காலத்தில் இவ்வளவு சலுகைகளுடன் ஊரு பேரு தெரியாத என்னை மாதிரி ஆளுக்கு யாருமா வேலை தருவாங்க? என்றார் அந்த பெண்.


உங்களுக்கு வீட்டு வேலை செய்ய சம்மதமா என்று மட்டும் பதில் சொல்லுங்கமா? என்றாள் சாரு.


"ஒரு வேளை சாப்பாட்டிற்க்கே திண்டாடும் எனக்கு இவ்வளவு வசதியுடன் வேலை கிடைத்தால் வேண்டாம்னு எப்படிமா சொல்லுவேன்? எனக்கு வீட்டு வேலை செய்ய சம்மதம் தான் அம்மா!" என்றார் அந்த பெண்.


ரொம்ப சந்தோஷம்மா.வேலை வேறெங்கும் இல்லை.எங்க வீட்டில் தான் என்றாள் சாரு.


நீங்கள் நல்லா இருக்கனும் அம்மா! என்று கையெடுத்து கும்பிட்டு, கதறி அழுது சாருவின் காலில் விழுந்தார் அந்த பெண்.


ஐயோ! அம்மா எழுந்திருங்கள்!
அழாதீங்க...ஏன்ம்மா இப்படி என் காலில் எல்லாம் விழுகிறீங்க? மனதிற்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது.நான் உங்களைவிட வயதில் இளையவள் அம்மா.இனி இப்படி செய்யாதீங்கம்மா.


அப்படி இல்லம்மா.தாலிக்கட்டின புருஷன் வயித்துல பிள்ளையை கொடுத்துவிட்டு என்னையும் குழந்தையும் பற்றி யோிக்காமல் அனாதையாக பறிதவிக்க விட்டு சென்றுவிட்டான்.


சொந்தபந்தங்கள் எல்லாம் கைவிட்டுவிட்டார்கள்.என் குழந்தை மட்டும் இல்லையென்றால் என்றைக்கோ நான் தற்கொலை செய்திருப்பேன் அம்மா.


பாவி மனுஷன் செஞ்ச தப்புக்கு பாவம் இந்த பச்சக்குழந்தை என்ன பண்ணும்? என்று நினைத்து ஒவ்வொரு நாளும் எப்படியாவது கஷ்டப்பட்டு குழந்தையை நல்ல படியாக வளர்க்கனும்னு தினமும் போராடி கொண்டு இருக்கின்றேன்மா.


தெருவில் பரதேசியாக திரிந்த எனக்கு யாருமே வேலையும் கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்க.


தினமும் இந்த கோவில் வாசலில் வந்து நான் அழுத புலம்பியது, மலையில் இருக்கிற அந்த சாமிக்கு கேட்டுருச்சோ? என்னமோமா?


உங்க ரூபத்தில வந்து எனக்கு உதவி செய்கிறார் என்று சொல்லி பல நாட்களாக தன் மனதில் இருந்த வேதனை அனைத்தையும் கொட்டி தீர்த்து கதறி அழுதாள் அந்த பெண்.


அப்பெண்ணை சமாதனப்படுத்தி, அவளது கண்ணீரை துடைத்து கட்டி அணைத்து தட்டிக்கொடுத்தாள் சாரு.


அந்த பெண்ணின் வாழ்க்கை கதையை கேட்ட பானுவின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


உங்களது கஷ்ட காலம் எல்லாம் முடிந்துவிட்டது.உங்களுக்கு உறவு என்று உரிமை கொண்டாட நாங்கள் இருக்கிறோம்.


இன்று ஒரு நாள் இரவு மட்டும் எதைப்பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக போய் தூங்குங்கமா என்றாள் சாரு.நீங்கள் இப்போது வசிக்கும் இடத்தை மட்டும் சொல்லுங்கள் அம்மா.


எனக்குனு வீடோ? முகவரியோ? எதுவும் கிடையாது அம்மா.ரொம்ப நாட்களாவே இந்த கோவிலுக்கு பின்புறம் தான் குடில் போட்டு வசித்து வருகிறேன் அம்மா என்றார்.


நாளைக்கு காலையில் உங்களின் துணியெல்லாம் எடுத்து வைத்து தயாராக இருங்கள்.காலை எட்டு மணிக்கு உங்களை அழைத்துவர ஆள் அனுப்பி வைக்கின்றேன் என்று கூறிவிட்டு சாருவும்,பானுவும் வீட்டிற்கு புறப்பட்டனர்.


என்னடா சந்துரு! டாக்டர் என்ன சொல்லுறாங்க? என்றான் மனோஜ்.


இனி எதுவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லையாம்.ஒரு நாள் எங்கும் அலையாமல் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்னு டாக்டர் சொன்னார்.


ஒரு வாரத்திற்கு மாத்திரை மருந்து கொடுத்திருக்காங்க மனோஜ் என்றான் சந்துரு.


உங்கள் நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க தம்பி! என்று முத்து சந்துருவிடம் கூறிவிட்டு அவரது வீட்டிற்கு கிளம்பினார்.


சந்துருவும் மனோஜூம் மருத்துவமனையிலிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.


சந்துருவின் சட்டையில் இரத்தக்கறையை பார்த்ததும் ஜானகி அம்மா, பதறி அடித்து ஓடி வந்து அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.


சந்துரு வேகமாக ஓடி சென்று ஜானகி அம்மாவை தாங்கி பிடித்து தன் மடியில் வைத்து அம்மா! அம்மா! என்று உரக்க கத்தி அழைத்தான்.


சந்துருவின் சத்தம் கேட்டு கண்ணம்மா வேகமாக தண்ணீர் கொண்டு வந்து சந்துருவிடம் கொடுத்து, அம்மாவின் முகத்தில் தண்ணீர் தெளியுங்கள் சின்ன ஐயா! என்று சந்துருவிடம் கூறினார்.


தண்ணீரை தெளித்ததும் மயக்கம் தெளிந்தது.இந்தாங்க பெரியம்மா கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள் என்று டம்பளரில் தண்ணீர் கொடுத்தார் கண்ணம்மா.


சந்துரு! உனக்கு என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி சட்டையெல்லாம் இரத்தமாக இருக்கிறது? என்று அழுது கொண்டே கேட்டார் ஜானகி அம்மா.


அம்மா! நீங்க பதறுகிற அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை.முதலில் அழுவதை நிறுத்துங்கள்.சாருவை பார்க்க போகும் வழியில் ஒரு சின்ன விபத்து? என்றான் சந்துரு.


எப்படி விபத்து நடந்தது? சாருவை பார்க்க சென்ற வழியில் அப்படி என்ன விபத்து நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
ஆர்வம்..அதிகரிக்கிறது...திலகம்
 

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
ஆர்வம்..அதிகரிக்கிறது...திலகம்
உங்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் அம்மா.....மிக்க நன்றி அம்மா🙏😍
 

Latest posts

New Threads

Top Bottom