- Messages
- 264
- Reaction score
- 406
- Points
- 63
மிக்க நன்றி அக்கா🙏😍விரைவில் பதிவு செய்ய முயற்சி செய்கின்றேன்....அருமையான கதை ராஜி. நல்ல விறுவிறுப்பாக செல்கிறது.அடுத்த அத்தியாயம் சீக்கிரம் போடு மா
Last edited:

Thank you Sis....🙏😍😍😍wow semma sis.....fb la yenna irunthu irukkum and yeppatha saaruva intha sandru meet panna porane therila ye paatha marriage mudinju annaiku tha pesave start pannuva polaye🤩🤩🤩........spr epi sis
potruvoam sis.....😄😍😍😍😍😉next epi seekkaram poduga sis appadiye perusaa podugga...........🤩
![]()
அருமை...அழகான நீரோடையாக செல்கிறது..திலகம் உங்களது கதை...எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 7
சாருவை அவளது வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, நான் சொன்னதை மறந்துவிடாதே! நாளைக்கு பார்க்கலாம் சாரு என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் பானு.
சாரு வீட்டிற்குள் நுழைந்ததும்,
என்ன அக்கா மாமா உங்களை பார்த்ததும் உங்க அழகுல மயங்கி விழுந்துட்டாரா? காதல் கவிதையை அப்படியே கொட்டி தீர்த்துருப்பாரே! என்று மதி சிரித்துக்கொண்டே கூறினாள்.
ஏய் சும்மாயிருடி மதி! என்று அவளை அதட்டினார் சாருவின் அம்மா.
என்னடா ஆச்சு சாரு! உன் முகத்தில மாப்பிள்ளையை பார்த்த சந்தோஷமே தெரியவில்லை? என்று கேட்டார் சாருவின் அம்மா சிவகாமி.
ஆமாம் அம்மா... மாப்பிள்ளை வரும் வழியில் ஒரு சின்ன விபத்தாகிவிட்டது.
ஐயோ! என்னமா சாரு சொல்லுகிறாய் ? பயப்படாதீங்க அம்மா! அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அவுங்க காரில் வரும் போது எதிரில் வேகமாக பைக் ஓட்டிட்டு வந்த இரண்டு வாலிப வயது பசங்க சாலையின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த நிறைமாதமான அலமுவின் மீது ஏத்திவிட்டு நிற்காமல் சென்று விட்டார்களாம்.
காரில் வரும் போது இந்த சம்பவங்களை பார்த்த உங்க
மாப்பிள்ளை, உடனே காரை நிறுத்தி அலமுவை தூக்கி கொண்டு டவுன்ல இருக்கின்ற மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றிருக்கிறார்.
கையில் பைக் கிடைத்தால் போதும் சில பசங்க கண்ணுமுன்னு தெரியாமல் கண்டபடி ஓட்டிக்கொண்டு போகிறாங்க.
பிள்ளைகளின் பிடிவாத்தால் பைக் கொடுத்துவிட்டு பெத்த மனசுக்கு பிள்ளை வீட்டுக்கு வரும் வரை நிம்மதியாகவே இருக்க முடியாது என்று ஒவ்வொரு தாய் படும் மனக்குமறலை கூறினார் சிவகாமி அம்மா.
பாவம் அந்த வாயில்லா ஜீவன் அடிபட்டதும் வலியால் எவ்வளவு துடிதுடித்தோ?
சரி, மாப்பிள்ளை உனக்கு போன் போட்டு இந்த தகவலை சொன்னாங்களா? என்று கேட்டார் சிவகாமி அம்மா.
அவுங்க நண்பர் மனோஜ் நேரில் வந்து தகவல் சொன்னார்.
மாப்பிள்ளைக்கு எவ்வளவு தங்கமான மனசு பாரு என்று சிவகாமி அம்மா கூறியதும் சாருவின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது.
சரிம்மா... முதலில் நீ சென்று முகத்தை கழுவிட்டு வந்து சாப்பிடு என்றார் சிவகாமி அம்மா.
என்னப்பா சந்துரு சொல்லுகிறாய்?உண்மையாவே இது தான் நடந்ததா?என்று கேட்டார் ஜானகி அம்மா.
ஆமாம் அம்மா...நான் சொல்வது எல்லாம் உண்மை தான்.என்னை நம்புங்கள் என்றான் சந்துரு.
வாயில்லா ஜீவன் கூட பார்க்காமல் ஆடு மேல ஏத்திட்டாங்கமா என்றான் மனோஜ்.
உடனே மருத்துவமனைக்கு மட்டும் அழைத்து கொண்டு போகாமல் இருந்திருந்தால், அலமுவோட சேர்ந்து அது வயிற்றில் இருந்த குட்டியும் செத்து போயிருக்கும்மா.
அலமுவோட காலில் தான் கொஞ்சம் பெரிய அடி.உயிருக்கு எந்த வித ஆபத்துமில்லமால் காப்பாத்தியச்சும்மா.
இப்போது தாயும் சேயும் பத்திரமாக இருக்காங்க என்று சந்துரு சொன்னதும், சந்துருவை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார் ஜானகி அம்மா.
இந்த முறையும் சாருவை
சந்துருவினால் பார்க்க முடியாமல் ஆகிவிட்டது என்றான் மனோஜ்.
என்ன நீ மட்டும் பார்த்த மாதிரி சொல்கிறாய் மனோஜ் ? என்று கேட்டார் ஜானகி அம்மா.
ஆமாம் அம்மா.நான் தான் அவனை சென்று தகவல் சொல்லிவிட்டு வர சொன்னேன் என்றான் சந்துரு.
ஒரு போன் போட்டு நீயே சொல்லிருக்கலாமே சந்துரு? என்றார் ஜானகி அம்மா.
நேரில் சென்று சொல்வது தான் சரி என்று தோணுச்சுமா.அதுதான் மனோஜை அனுப்பி வைத்தேன்.
அம்மா! பொண்ணு மகாலெஷ்மி அம்சமாக இருக்காங்கமா.நம்ம சந்துருவிற்கு பொருத்தமான பொண்ணுமா.நல்லா மரியாதை தெரிந்த பொறுமைசாலியான பொண்ணுமா சாரு என்றான் மனோஜ்.
பத்து நிமிஷம் பார்த்து பேசியதை வைத்து எப்படி மனோஜ் தம்பி அவுங்க குணத்தை பற்றியெல்லாம் சொல்லுகிறீர்கள்? என்று கேட்டார் கண்ணம்மா.
"எவ்வளவு நிமிஷம் பேசினாங்க என்பது முக்கியமில்லை அம்மா, எப்படி மரியாதை கொடுத்து பேசினாங்க தான் முக்கியம்" என்றான் மனோஜ்.
மனோஜ் சாருவை பற்றி சொல்லியதை கேட்ட சந்துரு கொஞ்சம் கூட அவன் சொல்லுவதை கண்டு கொள்ளாமல், அம்மா! நீங்க சாப்பாடு ரெடியாக எடுத்து வையுங்கள்.
நான் சென்று சட்டையை மாற்றிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்றான் சந்துரு.
சாரு சாப்பிட்டு முடித்ததும், தாத்தவை பார்க்க அவரது அறைக்கு சென்றாள்.
வாடா சாரு! மதி கோவிலில் நடந்ததை எல்லாம் சொன்னாள் என்றார் தாத்தா.
அந்த காலத்தில் எல்லாம் இப்போது மாதாி கல்யாணத்திற்கு முன்பே மாப்பிள்ளையை நேரில் பார்த்து பேச அனுமதிக்க மாட்டங்கமா சாரு.
உங்க தாத்தா என் கழுத்தில் மூன்றுமுடிச்சு போட்ட பிறகு தான், உங்க தாத்தாவோட முகத்தையே நான் பார்த்தேன் என்று சாருவின் பாட்டி அவுங்க கல்யாண கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
உன் பாட்டி நேரம் காலம் தெரியாமல் போன கதை வந்த கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பாம்மா.
நீ சொல்ல வந்ததை சொல்லுடா சாரு என்றார் தாத்தா.பரவாயில்லை இருக்கட்டும் தாத்தா! பாட்டி உங்க கல்யாண கதையை சொல்லி முடித்ததும் நான் சொல்லுகிறேன் தாத்தா என்றாள் சாரு.
உன் பாட்டி சொல்ல ஆரம்பித்துவிட்டால் இன்றைக்கு இராத்திரி முழுக்க விடிய விடிய கதையை சொல்லிக்கொண்டே இருப்பாள்.நீ முதலில் சொல்லுடா சாரு என்றார் தாத்தா.
சாரு கோவிலில் யாசகம் பெற்ற பெண்ணின் வாழ்க்கை கதையையும் அங்கு நடந்ததையும் கூறினாள்.
தாத்தா மன்னிக்கனும்.உங்களிடம் அனுமதி கேட்காமல் அந்த பெண்ணிற்கு வாக்கு கொடுத்து விட்டேன் என்றாள் சாரு.
நீ அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுக்காமல் வந்திருந்தால் தான் உன்னை நான் மன்னித்திருக்க மாட்டேன் சாரு! என்று பதிலளித்தார்.
நீ என் பேத்தினு நிரூபித்துவிட்டாய் சாரு என்று தன் பேத்தியின் தோளைத்தட்டி கொடுத்து பாராட்டினார்.
நாளைக்கு காலையிலே அந்த பெண்ணை அழைத்து வர சொல்லி காரையும் கந்தசாமியையும் அனுப்பி வைக்கிறேன்டா சாரு.
இப்போது நீ சென்று நிம்மதியாக தூங்குடா சாரு என்றார் தாத்தா.
தாத்தா சம்மதம் தெரிவித்ததை எண்ணி மிகுந்த சந்தோஷத்துடன் தன் அறைக்கு சென்றாள் சாரு.
தனது அறைக்குள் சென்ற சாருவிற்கு வீட்டிற்கு புறப்படும் போது பானு சொன்னது நியாபகம் வந்தது.
உடனே வேகமாக கம்ப்யூட்டரை ஆன் செய்தாள்.தனது முகநூல் பக்கத்தை திறந்து சந்துருவின் பெயரை டைப் செய்து தேடி பார்த்தாள்.
பல்லாயிரம் பேர் சந்துருவின் பெயரில் இருந்தனர்.இருப்பினும் சந்துருவின் முகநூல் பக்கத்தை ஒரு வழியாக தேடி கண்டுபிடித்து விட்டாள்.
ஆனால் திடீரென்று சாரு என்ன நினைத்தாலோ தெரியவில்லை? முகநூல் பக்கத்தை மூடிவிட்டு கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு படுத்து உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலையில் சாருவிற்கு போன் செய்தாள் பானு.மாப்பிள்ளை எதுவும் போன் போட்டு பேசினாரா சாரு?
மாப்பிள்ளை சாரோடு பேஸ்புக்கில் ப்ரண்டாகிட்டியா சாரு? என்று கேட்டாள் பானு.
அதற்கு சாரு கூறிய பதிலை கேட்டு ஆச்சரியம் அடைந்து அடேங்கப்பா! தாங்க முடியவில்லை என்றாள் பானு.
அப்படி என்ன பதில் கூறியிருப்பாள் சாரு?என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
தங்களின் அன்பிற்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி அம்மா🙏😍அருமை...அழகான நீரோடையாக செல்கிறது..திலகம் உங்களது கதை...
ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்டாக வெகு அருமையாக ஆர்வத்தை தூண்டும் விதமாக போய்க்கொண்டுள்ளதும்மா. வெகு சிறப்புஎண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 6
கண்ணம்மா! சந்துருவும், மனோஜூம் சாப்பிட்டாங்களா? என்று கேட்டார் ஜானகி அம்மா.
சின்ன ஐயாவும், மனோஜ் தம்பியும் இன்னும் வீட்டுக்கு வரவில்லை அம்மா! என்றார் கண்ணம்மா.
மணி ஐந்து ஆகிடுச்சு, இன்னும் இரண்டு பேரையும் ஆளையே காணோம்.என்னாச்சுனு தெரியவில்லையே?
போன் போட்டாலும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்று வருகிறதே? என்று கண்ணம்மாடவிம் கூறிக்கொண்டிருந்தார் ஜானகி அம்மா.
சின்னம்மாவை முதல் முதலாக இன்றைக்கு தான் சின்ன ஐயா பார்க்க போயிருக்காங்க.இத்தனை நாட்களாக பேசாதது எல்லாம் சேர்த்து வைத்து மொத்தமாக பேசுவதால நேரமாகும் பெரியம்மா.
மலைக்கு மேலே கோவிலில் இருப்பதால் சிக்னல் கிடைக்காதுல அம்மா.அதுதான் போன் போக மாட்டிங்கிறது.
நீங்கள் கவலைப்படாமல் இருங்கம்மா! கொஞ்சம் நேரத்துல வந்திருவாங்க என்றார் கண்ணம்மா.
மதி! சாரு வந்தாச்சா? என்று கேட்டார் தாத்தா.அக்கா இன்னும் வரவில்லை தாத்தா என்றாள் மதி.
பொழுது சாயப்போது இன்னும் வரவில்லையா? என்றார் தாத்தா.
அக்காவிடம் பத்து நிமிஷத்திற்கு முன்பு தான் போன் பேசினேன் தாத்தா.
கோவிலிருந்து புறப்பட போகிறோம் என்று சொன்னாங்க.
தாத்தா ஆர்வமுடன், என் பேராண்டி என்ன சொன்னாருனு கேட்டாயா மதி?
அட போங்க தாத்தா! நான் கேட்டதுக்கு அதைப்பற்றி வீட்டில் வந்து சொல்லுகிறேனு சொல்லி போனை வச்சுட்டாங்க...
"மனோஜ் நடந்த அனைத்து சம்பவங்களையும் சொல்லி முடித்ததும், மன்னித்து விடுங்கள் சார்! உங்களது சூழ்நிலை தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு வேகமாக பேசிவிட்டேன் சார்" என்றாள் பானு.
அட என்னாங்க நீங்க? இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கீங்க...
நீங்க பேசியதில் எந்தவொரு தவறுமே இல்லை.உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் இதற்கு மேல் திட்டி தீர்த்திருப்பேன்.நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறினான் மனோஜ்.
நீங்களும் சாருவும் எவ்வளவு நெருக்கமான தோழிகள் என்பது உங்களது கோபத்திலே நன்றாக தெரிந்தது பானு! என்றான் மனோஜ்.
சரிங்க அண்ணா நேரமாச்சு! நாங்கள் வீட்டுக்கு கிளம்பிகிறோம்.நீங்களும் கவனமாக சென்று வாங்க என்று கூறினாள் சாரு.
சரிமா சாரு.சந்துருவும் எனக்காக மருத்துவமனையில் காத்துக்கொண்டிருப்பான்.
நானும் புறப்படுகிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து விடைப்பெற்றான் மனோஜ்.
நடந்த சம்பவங்களை கேட்டு கொண்டிருந்ததில் பலகார பையை மனோஜிடம் கொடுக்க மறந்துவிட்டாள் சாரு.
திடீரென ஒரு பெண் கையில் குழந்தையுடன் சாருவிடம் வந்து அம்மா பசிக்குது ஏதாவது இருந்தால் தாருங்கள்? என்றார்.
உடனே சாரு தன் கையில் இருந்த பலகார பையுடன் சேர்த்து நூறு ரூபாயை கொடுத்தாள்.
ஏன் அம்மா! இப்படி குழந்தையை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்? என்று யாசகம் பெற்ற பெண்ணிடம் கேட்டாள் சாரு.
அம்மா! என் கணவர் என் வயிற்றில் ஒரு குழந்தையை மட்டும் கொடுத்து விட்டு வேறொரு பெண்ணுடன் இரவோடு இரவாக ஓடி விட்டார்.வாழ வழி தெரியாமல் நானும் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வேலை கேட்டுப்பார்த்தேன்.
என்னை நம்பியாரும் வேலை தருவதற்கு முன் வரவில்லை.
குழந்தையின் பசியை போக்க வேறு வழி தெரியாமல் தான் யாசகம் எடுக்கின்றேன் அம்மா என்றார்.
இனிமேல் நீங்கள் கவலைப்படாதீங்க...
இருக்க இருப்பிடமும்,மூன்று வேளை சாப்பாட்டுடன் சேர்த்து மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தாள், வேலை செய்ய வருவீர்களா? என்றாள் சாரு.
நிஜமாகவாமா சொல்லுறீங்க...
இந்த காலத்தில் இவ்வளவு சலுகைகளுடன் ஊரு பேரு தெரியாத என்னை மாதிரி ஆளுக்கு யாருமா வேலை தருவாங்க? என்றார் அந்த பெண்.
உங்களுக்கு வீட்டு வேலை செய்ய சம்மதமா என்று மட்டும் பதில் சொல்லுங்கமா? என்றாள் சாரு.
"ஒரு வேளை சாப்பாட்டிற்க்கே திண்டாடும் எனக்கு இவ்வளவு வசதியுடன் வேலை கிடைத்தால் வேண்டாம்னு எப்படிமா சொல்லுவேன்? எனக்கு வீட்டு வேலை செய்ய சம்மதம் தான் அம்மா!" என்றார் அந்த பெண்.
ரொம்ப சந்தோஷம்மா.வேலை வேறெங்கும் இல்லை.எங்க வீட்டில் தான் என்றாள் சாரு.
நீங்கள் நல்லா இருக்கனும் அம்மா! என்று கையெடுத்து கும்பிட்டு, கதறி அழுது சாருவின் காலில் விழுந்தார் அந்த பெண்.
ஐயோ! அம்மா எழுந்திருங்கள்!
அழாதீங்க...ஏன்ம்மா இப்படி என் காலில் எல்லாம் விழுகிறீங்க? மனதிற்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது.நான் உங்களைவிட வயதில் இளையவள் அம்மா.இனி இப்படி செய்யாதீங்கம்மா.
அப்படி இல்லம்மா.தாலிக்கட்டின புருஷன் வயித்துல பிள்ளையை கொடுத்துவிட்டு என்னையும் குழந்தையும் பற்றி யோிக்காமல் அனாதையாக பறிதவிக்க விட்டு சென்றுவிட்டான்.
சொந்தபந்தங்கள் எல்லாம் கைவிட்டுவிட்டார்கள்.என் குழந்தை மட்டும் இல்லையென்றால் என்றைக்கோ நான் தற்கொலை செய்திருப்பேன் அம்மா.
பாவி மனுஷன் செஞ்ச தப்புக்கு பாவம் இந்த பச்சக்குழந்தை என்ன பண்ணும்? என்று நினைத்து ஒவ்வொரு நாளும் எப்படியாவது கஷ்டப்பட்டு குழந்தையை நல்ல படியாக வளர்க்கனும்னு தினமும் போராடி கொண்டு இருக்கின்றேன்மா.
தெருவில் பரதேசியாக திரிந்த எனக்கு யாருமே வேலையும் கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்க.
தினமும் இந்த கோவில் வாசலில் வந்து நான் அழுத புலம்பியது, மலையில் இருக்கிற அந்த சாமிக்கு கேட்டுருச்சோ? என்னமோமா?
உங்க ரூபத்தில வந்து எனக்கு உதவி செய்கிறார் என்று சொல்லி பல நாட்களாக தன் மனதில் இருந்த வேதனை அனைத்தையும் கொட்டி தீர்த்து கதறி அழுதாள் அந்த பெண்.
அப்பெண்ணை சமாதனப்படுத்தி, அவளது கண்ணீரை துடைத்து கட்டி அணைத்து தட்டிக்கொடுத்தாள் சாரு.
அந்த பெண்ணின் வாழ்க்கை கதையை கேட்ட பானுவின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
உங்களது கஷ்ட காலம் எல்லாம் முடிந்துவிட்டது.உங்களுக்கு உறவு என்று உரிமை கொண்டாட நாங்கள் இருக்கிறோம்.
இன்று ஒரு நாள் இரவு மட்டும் எதைப்பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக போய் தூங்குங்கமா என்றாள் சாரு.நீங்கள் இப்போது வசிக்கும் இடத்தை மட்டும் சொல்லுங்கள் அம்மா.
எனக்குனு வீடோ? முகவரியோ? எதுவும் கிடையாது அம்மா.ரொம்ப நாட்களாவே இந்த கோவிலுக்கு பின்புறம் தான் குடில் போட்டு வசித்து வருகிறேன் அம்மா என்றார்.
நாளைக்கு காலையில் உங்களின் துணியெல்லாம் எடுத்து வைத்து தயாராக இருங்கள்.காலை எட்டு மணிக்கு உங்களை அழைத்துவர ஆள் அனுப்பி வைக்கின்றேன் என்று கூறிவிட்டு சாருவும்,பானுவும் வீட்டிற்கு புறப்பட்டனர்.
என்னடா சந்துரு! டாக்டர் என்ன சொல்லுறாங்க? என்றான் மனோஜ்.
இனி எதுவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லையாம்.ஒரு நாள் எங்கும் அலையாமல் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்னு டாக்டர் சொன்னார்.
ஒரு வாரத்திற்கு மாத்திரை மருந்து கொடுத்திருக்காங்க மனோஜ் என்றான் சந்துரு.
உங்கள் நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க தம்பி! என்று முத்து சந்துருவிடம் கூறிவிட்டு அவரது வீட்டிற்கு கிளம்பினார்.
சந்துருவும் மனோஜூம் மருத்துவமனையிலிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
சந்துருவின் சட்டையில் இரத்தக்கறையை பார்த்ததும் ஜானகி அம்மா, பதறி அடித்து ஓடி வந்து அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
சந்துரு வேகமாக ஓடி சென்று ஜானகி அம்மாவை தாங்கி பிடித்து தன் மடியில் வைத்து அம்மா! அம்மா! என்று உரக்க கத்தி அழைத்தான்.
சந்துருவின் சத்தம் கேட்டு கண்ணம்மா வேகமாக தண்ணீர் கொண்டு வந்து சந்துருவிடம் கொடுத்து, அம்மாவின் முகத்தில் தண்ணீர் தெளியுங்கள் சின்ன ஐயா! என்று சந்துருவிடம் கூறினார்.
தண்ணீரை தெளித்ததும் மயக்கம் தெளிந்தது.இந்தாங்க பெரியம்மா கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள் என்று டம்பளரில் தண்ணீர் கொடுத்தார் கண்ணம்மா.
சந்துரு! உனக்கு என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி சட்டையெல்லாம் இரத்தமாக இருக்கிறது? என்று அழுது கொண்டே கேட்டார் ஜானகி அம்மா.
அம்மா! நீங்க பதறுகிற அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை.முதலில் அழுவதை நிறுத்துங்கள்.சாருவை பார்க்க போகும் வழியில் ஒரு சின்ன விபத்து? என்றான் சந்துரு.
எப்படி விபத்து நடந்தது? சாருவை பார்க்க சென்ற வழியில் அப்படி என்ன விபத்து நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
சாரு போன்ற நல்ல பெண்ணுககு ஏற்றவன்தானா கதையின் நாயகன் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது.எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 7
சாருவை அவளது வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, நான் சொன்னதை மறந்துவிடாதே! நாளைக்கு பார்க்கலாம் சாரு என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் பானு.
சாரு வீட்டிற்குள் நுழைந்ததும்,
என்ன அக்கா மாமா உங்களை பார்த்ததும் உங்க அழகுல மயங்கி விழுந்துட்டாரா? காதல் கவிதையை அப்படியே கொட்டி தீர்த்துருப்பாரே! என்று மதி சிரித்துக்கொண்டே கூறினாள்.
ஏய் சும்மாயிருடி மதி! என்று அவளை அதட்டினார் சாருவின் அம்மா.
என்னடா ஆச்சு சாரு! உன் முகத்தில மாப்பிள்ளையை பார்த்த சந்தோஷமே தெரியவில்லை? என்று கேட்டார் சாருவின் அம்மா சிவகாமி.
ஆமாம் அம்மா... மாப்பிள்ளை வரும் வழியில் ஒரு சின்ன விபத்தாகிவிட்டது.
ஐயோ! என்னமா சாரு சொல்லுகிறாய் ? பயப்படாதீங்க அம்மா! அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அவுங்க காரில் வரும் போது எதிரில் வேகமாக பைக் ஓட்டிட்டு வந்த இரண்டு வாலிப வயது பசங்க சாலையின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த நிறைமாதமான அலமுவின் மீது ஏத்திவிட்டு நிற்காமல் சென்று விட்டார்களாம்.
காரில் வரும் போது இந்த சம்பவங்களை பார்த்த உங்க
மாப்பிள்ளை, உடனே காரை நிறுத்தி அலமுவை தூக்கி கொண்டு டவுன்ல இருக்கின்ற மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றிருக்கிறார்.
கையில் பைக் கிடைத்தால் போதும் சில பசங்க கண்ணுமுன்னு தெரியாமல் கண்டபடி ஓட்டிக்கொண்டு போகிறாங்க.
பிள்ளைகளின் பிடிவாத்தால் பைக் கொடுத்துவிட்டு பெத்த மனசுக்கு பிள்ளை வீட்டுக்கு வரும் வரை நிம்மதியாகவே இருக்க முடியாது என்று ஒவ்வொரு தாய் படும் மனக்குமறலை கூறினார் சிவகாமி அம்மா.
பாவம் அந்த வாயில்லா ஜீவன் அடிபட்டதும் வலியால் எவ்வளவு துடிதுடித்தோ?
சரி, மாப்பிள்ளை உனக்கு போன் போட்டு இந்த தகவலை சொன்னாங்களா? என்று கேட்டார் சிவகாமி அம்மா.
அவுங்க நண்பர் மனோஜ் நேரில் வந்து தகவல் சொன்னார்.
மாப்பிள்ளைக்கு எவ்வளவு தங்கமான மனசு பாரு என்று சிவகாமி அம்மா கூறியதும் சாருவின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது.
சரிம்மா... முதலில் நீ சென்று முகத்தை கழுவிட்டு வந்து சாப்பிடு என்றார் சிவகாமி அம்மா.
என்னப்பா சந்துரு சொல்லுகிறாய்?உண்மையாவே இது தான் நடந்ததா?என்று கேட்டார் ஜானகி அம்மா.
ஆமாம் அம்மா...நான் சொல்வது எல்லாம் உண்மை தான்.என்னை நம்புங்கள் என்றான் சந்துரு.
வாயில்லா ஜீவன் கூட பார்க்காமல் ஆடு மேல ஏத்திட்டாங்கமா என்றான் மனோஜ்.
உடனே மருத்துவமனைக்கு மட்டும் அழைத்து கொண்டு போகாமல் இருந்திருந்தால், அலமுவோட சேர்ந்து அது வயிற்றில் இருந்த குட்டியும் செத்து போயிருக்கும்மா.
அலமுவோட காலில் தான் கொஞ்சம் பெரிய அடி.உயிருக்கு எந்த வித ஆபத்துமில்லமால் காப்பாத்தியச்சும்மா.
இப்போது தாயும் சேயும் பத்திரமாக இருக்காங்க என்று சந்துரு சொன்னதும், சந்துருவை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார் ஜானகி அம்மா.
இந்த முறையும் சாருவை
சந்துருவினால் பார்க்க முடியாமல் ஆகிவிட்டது என்றான் மனோஜ்.
என்ன நீ மட்டும் பார்த்த மாதிரி சொல்கிறாய் மனோஜ் ? என்று கேட்டார் ஜானகி அம்மா.
ஆமாம் அம்மா.நான் தான் அவனை சென்று தகவல் சொல்லிவிட்டு வர சொன்னேன் என்றான் சந்துரு.
ஒரு போன் போட்டு நீயே சொல்லிருக்கலாமே சந்துரு? என்றார் ஜானகி அம்மா.
நேரில் சென்று சொல்வது தான் சரி என்று தோணுச்சுமா.அதுதான் மனோஜை அனுப்பி வைத்தேன்.
அம்மா! பொண்ணு மகாலெஷ்மி அம்சமாக இருக்காங்கமா.நம்ம சந்துருவிற்கு பொருத்தமான பொண்ணுமா.நல்லா மரியாதை தெரிந்த பொறுமைசாலியான பொண்ணுமா சாரு என்றான் மனோஜ்.
பத்து நிமிஷம் பார்த்து பேசியதை வைத்து எப்படி மனோஜ் தம்பி அவுங்க குணத்தை பற்றியெல்லாம் சொல்லுகிறீர்கள்? என்று கேட்டார் கண்ணம்மா.
"எவ்வளவு நிமிஷம் பேசினாங்க என்பது முக்கியமில்லை அம்மா, எப்படி மரியாதை கொடுத்து பேசினாங்க தான் முக்கியம்" என்றான் மனோஜ்.
மனோஜ் சாருவை பற்றி சொல்லியதை கேட்ட சந்துரு கொஞ்சம் கூட அவன் சொல்லுவதை கண்டு கொள்ளாமல், அம்மா! நீங்க சாப்பாடு ரெடியாக எடுத்து வையுங்கள்.
நான் சென்று சட்டையை மாற்றிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்றான் சந்துரு.
சாரு சாப்பிட்டு முடித்ததும், தாத்தவை பார்க்க அவரது அறைக்கு சென்றாள்.
வாடா சாரு! மதி கோவிலில் நடந்ததை எல்லாம் சொன்னாள் என்றார் தாத்தா.
அந்த காலத்தில் எல்லாம் இப்போது மாதாி கல்யாணத்திற்கு முன்பே மாப்பிள்ளையை நேரில் பார்த்து பேச அனுமதிக்க மாட்டங்கமா சாரு.
உங்க தாத்தா என் கழுத்தில் மூன்றுமுடிச்சு போட்ட பிறகு தான், உங்க தாத்தாவோட முகத்தையே நான் பார்த்தேன் என்று சாருவின் பாட்டி அவுங்க கல்யாண கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
உன் பாட்டி நேரம் காலம் தெரியாமல் போன கதை வந்த கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பாம்மா.
நீ சொல்ல வந்ததை சொல்லுடா சாரு என்றார் தாத்தா.பரவாயில்லை இருக்கட்டும் தாத்தா! பாட்டி உங்க கல்யாண கதையை சொல்லி முடித்ததும் நான் சொல்லுகிறேன் தாத்தா என்றாள் சாரு.
உன் பாட்டி சொல்ல ஆரம்பித்துவிட்டால் இன்றைக்கு இராத்திரி முழுக்க விடிய விடிய கதையை சொல்லிக்கொண்டே இருப்பாள்.நீ முதலில் சொல்லுடா சாரு என்றார் தாத்தா.
சாரு கோவிலில் யாசகம் பெற்ற பெண்ணின் வாழ்க்கை கதையையும் அங்கு நடந்ததையும் கூறினாள்.
தாத்தா மன்னிக்கனும்.உங்களிடம் அனுமதி கேட்காமல் அந்த பெண்ணிற்கு வாக்கு கொடுத்து விட்டேன் என்றாள் சாரு.
நீ அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுக்காமல் வந்திருந்தால் தான் உன்னை நான் மன்னித்திருக்க மாட்டேன் சாரு! என்று பதிலளித்தார்.
நீ என் பேத்தினு நிரூபித்துவிட்டாய் சாரு என்று தன் பேத்தியின் தோளைத்தட்டி கொடுத்து பாராட்டினார்.
நாளைக்கு காலையிலே அந்த பெண்ணை அழைத்து வர சொல்லி காரையும் கந்தசாமியையும் அனுப்பி வைக்கிறேன்டா சாரு.
இப்போது நீ சென்று நிம்மதியாக தூங்குடா சாரு என்றார் தாத்தா.
தாத்தா சம்மதம் தெரிவித்ததை எண்ணி மிகுந்த சந்தோஷத்துடன் தன் அறைக்கு சென்றாள் சாரு.
தனது அறைக்குள் சென்ற சாருவிற்கு வீட்டிற்கு புறப்படும் போது பானு சொன்னது நியாபகம் வந்தது.
உடனே வேகமாக கம்ப்யூட்டரை ஆன் செய்தாள்.தனது முகநூல் பக்கத்தை திறந்து சந்துருவின் பெயரை டைப் செய்து தேடி பார்த்தாள்.
பல்லாயிரம் பேர் சந்துருவின் பெயரில் இருந்தனர்.இருப்பினும் சந்துருவின் முகநூல் பக்கத்தை ஒரு வழியாக தேடி கண்டுபிடித்து விட்டாள்.
ஆனால் திடீரென்று சாரு என்ன நினைத்தாலோ தெரியவில்லை? முகநூல் பக்கத்தை மூடிவிட்டு கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு படுத்து உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலையில் சாருவிற்கு போன் செய்தாள் பானு.மாப்பிள்ளை எதுவும் போன் போட்டு பேசினாரா சாரு?
மாப்பிள்ளை சாரோடு பேஸ்புக்கில் ப்ரண்டாகிட்டியா சாரு? என்று கேட்டாள் பானு.
அதற்கு சாரு கூறிய பதிலை கேட்டு ஆச்சரியம் அடைந்து அடேங்கப்பா! தாங்க முடியவில்லை என்றாள் பானு.
அப்படி என்ன பதில் கூறியிருப்பாள் சாரு?என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
தங்களது அன்பிற்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி அம்மா🙏😍ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்டாக வெகு அருமையாக ஆர்வத்தை தூண்டும் விதமாக போய்க்கொண்டுள்ளதும்மா. வெகு சிறப்பு