Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
Main கதைக்குள் நட்பின் காதல் கதையும் அதுவும் அருமை ட்விஸ்ட் ட்விஸ்ட் ஒவ்வொரு அத்தியாயமும் ட்விஸ்டோதுதான் முடிகின்றது எதிர்பார்ப்புகள் ஏராளம் உங்கள் கதைக்கு வருமே லைக்ஸ் தாராளம் 👌👌👌👌👌👌
தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி🙏😍
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
காட்சிகளை அருமையாக வரிசை படுத்துகிறீர்கள்...திருப்புமுனைகள் அனைத்தும் விறுவிறுப்பாக கதையை எடுத்து செல்கின்றது...
தொடர்ந்து எனது தொடரை படித்து விமர்சனம் பகிர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி சகோதரி🙏😍
 
Messages
30
Reaction score
29
Points
18
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 18

போன காரியம் என்னடி ஆச்சு பார்கவி? என்று கேட்டார் பார்கவியின் அம்மா.


இனி அந்த பக்கமே போகாத அளவுக்கு பிரச்சனையை பெருசாக்கியாச்சுமா என்று சொல்லி சிரித்து கொண்டிருந்ததை பார்த்த பார்கவியின் அப்பா, நீயெல்லாம் பெத்த தாயாடி? நீ செய்றதுலாம் சரியில்ல சரோஜா.பொண்ண சந்தோஷமா அவள் குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி சொல்வதை விட்டுட்டு இப்படி சண்டையை மூட்டிவிட்டு குருவிக்கூடு மாதிரி ஒன்னா சேர்ந்து வாழ்ந்த குடும்பத்தை அம்மாவும் பொண்ணும் சேர்ந்து திட்டம் போட்டு இப்படி கலச்சுவிட்டுடீங்களே!


அவள் செஞ்சுட்டு வந்த காரியத்துக்கு கண்டிக்காமல் நீயும் சேர்ந்து உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு இருக்க.இவள் பண்ணுற வேலையில்லாம் மாப்பிள்ளைக்கு தெரிய வந்துச்சுனா எப்படி இவளை ஏத்துக்குவாறு? அவள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படனும் நினைக்கிறியா?


அப்போ அவுங்க எல்லாருக்கும் சோறாக்கி போட்டுக்கிட்டு பண்ட பாத்திரம் தேச்சுக்கிட்டு கஷ்டப்பட சொல்லுறீங்களா? அதுக்குத்தான் இவளை பெத்து வச்சுருக்கனா? என் பொன்னு அந்த வீட்டுல கஷ்டப்பட கூடாதுனு தான் நம்ம வீட்டோட இருக்க வச்சுருக்கேன்.


வேகமாக வந்துட்டாரு... கருத்து சொல்ல...போங்க போய் உங்க வேலையை பாருங்கள் என்று கூறினார் சரோஜா.


உன்னெல்லாம் இந்த ஜென்மத்தில திருத்த முடியாது! என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் பார்கவியின் அப்பா சோமசுந்தரம்.


சோமசுந்தரம் ரொம்ப சாதுவான மனிதர்.யாரிடமும் அதிகமாக பேசமாட்டார்.ரிடைர்டு மெரைன் இன்ஜினியர்.இவருக்கு எதிர்மறையான குணம் கொண்டவர் சரோஜா.வாயை திறந்தால் மூடவே மாட்டார்.


அம்மா ருத்ரா! அந்த கம்பு பையை எடுத்துக்குடுமா? கொஞ்சம் மளிகை கடை வரைக்கும் போய்ட்டு வந்துர்றேன் என்று தனது மருமகளிடம் கூறிவிட்டு சென்றார்.


சந்துரு ரூமிற்கு வந்ததும் சாரு அவனிடம் பேச வாயைத்திறந்தாள்.


என்னங்க...என்று சாரு ஆரம்பிக்கும் முன் சந்துரு பேசத் தொடங்கினான்.


நீங்க எதுவும் சொல்ல வந்தீங்களா ? என்று கேட்டான் சந்துரு.


இல்லங்க... நீங்கள் முதலில் சொல்ல வந்ததை சொல்லுங்க என்று கூறினாள் சாரு.


நாளைக்கு விசா அபாய்ன்மென்ட் கேன்சல் பண்ணலாம்னு இருக்கேன்.
உங்களுக்கு உடம்பு சரியில்லாததோட போக முடியாதுல என்று கூறினான்.


எனக்கு அதுலாம் ஒன்றுமில்லங்க.
நான் இப்போ நார்மல் ஆகிட்டேன்.
அபாய்ன்மென்ட் டிலே ஆச்சுனா விசா ப்ராஸஸிங்கும் டிலே ஆகும் என்பதை மனதில் நினைத்தவள், அதெல்லாம் அபாய்ன்மென்ட் கேன்சல் பண்ண வேண்டாங்க என்று கூறிய விதத்தை வைத்தே அவளது மனதின் எண்ணத்தை கணித்துவிட்டான் சந்துரு.


ஓகேங்க! அப்போ ட்ரஸ்லாம் பேக் பண்ணி ரெடியா இருங்க.நான் போய் மனோஜையும் கிளம்ப சொல்லுறேன் என்று கூறிவிட்டு சென்றான்.


மனோஜ் பேக்கிங் ஓவராடா? என்று கேட்டான்.ஏன்டா நீயே சாருவை கூட்டிட்டு போகலாம்ல? புதுசா கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் ஹனிமூன் ப்ளான் பண்ணுவாங்க.நீ பக்கத்துல இருக்க கோவிலுக்கு கூட இன்னும் சாருவை அழைச்சிட்டு போகல என்று சொன்னான்.


சரி சரி... க்ளாஸ் எடுக்க ஆரம்பிக்காமல் சீக்கிரம் கிளம்புற வழியைப்பாரு என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி ஜானகி அம்மாவின் அறைக்கு சென்றான் சந்துரு.


அம்மா! நாளைக்கு காலையில எட்டு மணிக்கு கிளம்பி ரெடியா இருங்க.
ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்துட்டு வந்துருவோம் என்றான்.


இப்போவாது சாருகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருப்பா சந்துரு என்றார் ஜானகி அம்மா.


இப்போ சொன்னால் அவள் என்னை எப்படி நினைப்பானு தெரியலம்மா? நான் மெதுவாக சொல்லிக்கிறேன் என்றான் சந்துரு.


மனோஜூக்கும் சாருவுக்கும் நைட் டின்னர்க்கு சப்பாத்தி ரெடி பண்ணி பேக் பண்ண சொல்லிருங்கம்மா என்று கூறிவிட்டு அவனது அறைக்கு சென்றான் சந்துரு.


பால்கனியில் நின்று பானுவிடம் போன் பேசிக் கொண்டிருந்தாள் சாரு.


ஒரு வாரமா போன், மெஸேஜ் எதுவும் காணோம்.மேடம் ரொம்ப பிஸியா? என்று கேட்டதும் பானு அழத் தொடங்கிவிட்டாள்.


ஏய் பானு! என்னாச்சு? எதுக்கு இப்படி அழுகுற? என்று கேட்டாள் சாரு.


போன ஞாயித்துக்கிழமை அண்ணாவும் அண்ணியும் வீட்டு வந்திருந்தாங்க.வழக்கம் போல வந்து சண்டை போட்டுட்டு போய்ட்டாங்க.


காலம் மாறும் போது எல்லாம் மாறும் பானு.இதுக்கு ஏன் நீ அழுகுற? என்று கேட்டாள் சாரு.


அவுங்க என்ன பேசுனத்துக்கு அழல சாரு.மனோஜ் சார்ற போய் ஊரு பேரு தெரியாத அனாதைனு சொல்லிட்டாங்க.அதுதான் என்னால தாங்க முடியல என்றாள் பானு.


சரி விடு...நீ அழாதே பானு! இன்னைக்கு சாயங்காலம் நானும் மனோஜ் அண்ணாவும் சென்னைக்கு எனக்கு விசா அப்ளை பண்ண கிளம்புறோம்.நான் சென்னைக்கு போய்ட்டு வந்த பிறகு இதைப்பற்றி பேசுறேன் என்றாள் சாரு.


உன் கூட மாப்பிள்ளை சார் வரலையா சாரு? என்று கேட்டாள் பானு.


அவுங்களுக்கு நாளைக்கு ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டியது இருக்குதாம் என்று சாரு சொல்லியதும், உன்னை கூட்டிட்டு போறத விட அப்படி என்னடி அவருக்கு முக்கியமான வேலை? என்று கேட்டாள்.


உனக்கு தெரியுது.அவருக்கு தெரியலையே என்று நினைத்தவள் பானுவிடம் கூறாமல் சந்தருவை பானுவிடம் விட்டுக்கொடுக்காமல் பேசி சமாளித்தாள் சாரு.


சரி பத்தரமாக போய்ட்டு வாங்க என்று கூறிய மறுகணம் மனோஜிற்கு போன் செய்தாள் பானு.


இன்னைக்கு ஈவினிங் சென்னைக்கு போறீங்களா? ஏங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல சார் என்று கேட்டாள் பானு.


உங்க மொபைல்ல எத்தனை மிஸ்டு கால் வந்திருக்குனு செக் பண்ணீங்களா மேடம்? என்று கேட்டான் மனோஜ்.ஒரு நிமிஷம் அப்படியே லைன்ல இருங்க சார் என்று சொல்லி விட்டு கால் லிஸ்ட்டை எடுத்து பார்த்தாள்.நாற்பத்திரண்டு மிஸ்டு கால் மனோஜிடமிருந்து வந்திருப்பதை பார்த்த பானு மன்னிச்சிடுங்க சார் என்று மனோஜிடம் கேட்டாள்.


போனும் அட்டன் பண்ணல.
பேஸ்புக்லையும் ஆன்லைன் வரல.நீங்க பேஸ்புக்க ஓபன் பண்ணி கொஞ்சம் மெஸேஜ் பாக்ஸ் செக் பண்ணி பாருங்க என்றான்.


சாருட்ட சொல்லி உனக்கு போன் பேச சொல்லலாம் பார்த்தால் அவளுக்கும் உடம்பு சரியில்லை.


என்ன சார் சொல்லுறீங்க? சாருக்கு என்ன ஆச்சு? இப்போ தான் சாருக்கிட்ட போன் பேசுனே.அவளுக்கு உடம்பு சரியில்லாததை பத்தி எதுவுமே ஏங்கிட்ட சொல்லல.


அது பெரிய கதை பானு.நான் ரயில்வே ஸ்டேஷன் போய்ட்டு கால் பண்ணி எல்லாம் டீடைலா சொல்லுறேன்.
இன்னைக்கு மட்டும் நீ போன் பண்ணாமல் இருந்திருந்தா சாருட்ட சொல்லித்தான் கால் பண்ண சொல்லலாம்னு இருந்தேன்.
சரி...நீ ஏன் போனே அட்டண் பண்ணல? என்று கேட்டான் மனோஜ்.


நீங்கள் இப்போ கிளம்புங்க சார்.
ட்ரைன்ல ஏறி உட்கார்ந்து செட்டில் ஆனதும் கால் பண்ணுங்க.என்ன நடந்ததுனு? பொறுமையாக சொல்லுறேன் என்று கூறி போனை வைத்து விட்டாள் பானு.


மனோஜூம் சாருவும் கிளம்பி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தனர்.


சாரு பூஜை அறைக்கு சென்று மாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கியதும், பார்த்து கவனமாக போய்ட்டு வாங்கம்மா என்று கூறினார் ஜானகி அம்மா.


வெளியூருக்கு போகும் முன்பு வீட்டின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது சாருவின் குடும்ப வழக்கம்.


வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறிவிட்டு இரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டனர்.


மூன்று பேரும் ட்ரைன் வருவதற்கு இருபது நிமிடங்கள் முன்னரே இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து காத்துக்கொண்டிருந்தனர்.


மனோஜ் ஒரு நிமிஷம் இருடா இதோ வந்துர்றேன் என்று கூறிவிட்டு சென்றவன் வாட்டர் பாட்டில், வாழைப்பழம் அதோடு சேர்த்து சில புத்தகங்களையும் வாங்கி வந்து சாருவிடம் கொடுத்தான் சந்துரு.


சந்துருவிற்கு ஜானகி அம்மாவிடமிருந்து போன் கால் வந்தது.


சாருவோட போன் இங்க வீட்டில இருக்குதுப்பா சந்துரு என்றார்.வீட்டுக்கு போய் உங்க போனை எடுத்துட்டு வந்திர்றேன்.
ட்ரைன் வந்தால் ஏறுங்க.
மனோஜ்கிட்ட சொல்லிருங்க என்று கூறிவிட்டு வேகமாக ஓடினான் சந்துரு.


மனோஜ் பானுவிடம் போன் பேசிக் கொண்டிருந்தான்.சந்துரு சென்ற ஐந்து நிமிடத்தில் ட்ரைன் வந்துவிட்டது.


சாப்பிடும் போது தாத்தா கால் பண்ணங்கா அண்ணா.பேசிட்டு அப்படியே மறந்து டைனிங் டேபிள்லையே வச்சுட்டு வந்துட்டேன் அண்ணா.


அவுங்க என் மொபைல் எடுக்க வீட்டுக்கு போயிருக்காங்க அண்ணா.நீங்க போன் பேசிக்கிட்டு இருந்தனால உங்கக்கிட்ட சொல்ல சொன்னாங்க என்று கொஞ்சம் பதற்றதுடன் சொன்னாள் சாரு.


சரிம்மா...நீ பதற்றப்படாத! அவன் சீக்கிரமா வந்துருவான்.நீ வந்து ட்ரைன்ல ஏறுமா என்று சாருவை அழைத்தான் மனோஜ்.சாருவும் மனோஜூம் ட்ரைனில் ஏறி அவர்களது இருக்கையை கண்டறிந்து அமர்ந்தனர்.


நீ சரியான மடச்சி சாரு.இப்படி மறந்து வச்சுட்டு வந்துட்டியே! பாவம் அவுங்களுக்க தேவையில்லாத அலைச்சல் என்று மனதில் அவளையே திட்டிக் கொண்டாள் சாரு.


ட்ரைன் கிளம்ப ஐந்து நிமிஷம் தான் இருக்கு.இன்னும் அவுங்கள காணோமே? என்று சாருவின் கண்கள் சந்துரு வரும் வழியையும் கையில் அணிந்திருந்த கைக் கடிகாரத்தின் முள் நகர்வதையும் மாத்தி மாத்தி பார்த்து கொண்டிருந்தாள்.


ஒவ்வொரு நொடியும் கடிகார முள் நகர நகர அவளது இதயத்துடிப்பு வேகமாக துடிக்க தொடங்கியது.


இன்னும் இரண்டு நிமிடத்தில் இரயில் புறப்பட இருக்கிறது என்று அனோன்ஸ் செய்ய தொடங்கிவிட்டனர்.சந்துருவை பார்க்காமல் சென்றுவிடுமோ என்று
பதற்றமும் பரிதவிப்பும் அதிகரிக்க தொடங்கியது.


சாருவின் கலங்கிய கண்கள் பாதையை விழித்து பார்த்தபோது தூரத்தில் வேகமாக மூச்சு இழைக்க ஓடி சந்துரு வருவதை பார்த்ததும் சாருவின் முகம் மலர்ந்தது.


ஆனால் ட்ரைன் மெதுவாக நகரத்தொடங்கியது.சந்துரு தேடி ஓடி வருவதை பார்த்த சாரு இரயிலின் ஜன்னல் கம்பி வழியாக கை அசைத்து இருக்கும் இடத்தை சைகை காட்டினாள்.ஜன்னலின் வழியாக மொபலை சாருவிடம் கொடுத்து விட்டு பார்த்து கவனமாக போய்ட்டு வாங்க என்று கூறினான் சந்துரு.


அவளிடம் மொபைலை கொடுத்த மறு நிமிஷத்திலே வண்டி வேகமாக நகர்ந்து செல்லத் தொடங்கியது.


சந்துருவின் முகம் மறையும் வரை ஜன்னல் கம்பி வழியாக அவனையே உற்று நோக்கி பார்த்து கொண்டிருந்தாள் சாரு.


சாருவின் கண்கள் கலங்கி மனம் வேதனையில் துடித்தது.நான் செஞ்ச ஒரு தவறால் அவுங்கள இவ்வளவு சங்கடப்படுத்திட்டோமே! என்று தான் செய்த தவறை நினைத்து மனம் உருத்தியது.


மெஸேஜ் செய்து ஒரு ஸாரி கேட்டிருவோம் என்று மொபைலை ஆன் செய்தாள்.


முதல் முறையாக தனது கணவருக்கு மெஸேஜ் டைப் செய்து அனுப்பினாள்.


ஹாய்ங்க.. ஐ ஆம் ரியலி ஸாரிங்க...என்று சந்துருவிற்கு மெஸேஜ் செய்தாள் சாரு.


உடனே சந்துருவிடமிருந்து பதில் வந்ததை பார்த்து வேதனையில் தவித்த சாருவின் உள்ளம் சந்தோஷம் அடைந்தது.நோ ஒரிஸ்...டேக் கேர்...குட் நைட் மெஸேஜூடன் ஒரு ஸ்மைலி ஸ்டிக்கரும் சேர்த்து அனுப்பி இருந்தான் சந்துரு.


மறுநாள் காலையில் சந்துருவும் ஜானகி அம்மாவும் மருத்துவமனைக்கு கிளம்பி சென்றனர்.


இரயில் பயணத்தின் போது சாருவும் மனோஜூம் பானுவை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.


அண்ணா! பானு உங்கக்கிட்ட அவுங்க வீட்டில நடந்தது எல்லாம் சொல்லிருப்பானு நினைக்கிறேன் என்று கூறினாள் சாரு.


ஆமாம் சாரு.பானு நடந்த எல்லாம் பிரச்சனையையும் சொன்னாள்.அவள் சொன்னதும் மனசுக்கு ரொம்ப சங்கடமாக போச்சு என்று பதில் கூறினான் மனோஜ்.


நீங்க அதெல்லாம் நினைச்சு தேவையில்லாமல் வருத்தப்படாதீங்க அண்ணா!


அப்படி இல்லம்மா சாரு.சும்மா இருந்த பொண்ணு மனசுல ஆசையை வளர்த்ததே நான் தான்.பாவம் இன்னைக்கு அவள் தேவையில்லாமல் எல்லாருடைய ஏளனமான பேச்சுக்கு ஆளாகிட்டாள் என்று கூறினான் மனோஜ்.


அண்ணா! இது மாதிரி பேசுறது ஒன்றும் புதுசு இல்லையே! காதல் செய்வது ஒன்றும் தவறில்லை அண்ணா.ஆனால் பெத்தவுங்க சம்மதம் இல்லமால் ஓடி போய் கல்யாணம் பண்ணுறது தான் தப்பு.பெத்தவுங்க மனசு நோகடிச்சு நம்ம நல்லா வாழ்ந்திட முடியாதுல அண்ணா.
பார்த்து பார்த்து வளர்த்து
பிடிச்சதெல்லாம் வாங்கி கொடுத்து ஆளாக்கி சீராட்டி பல ஆசையோடும் கனவோடும் வளர்த்த அப்பா அம்மாக்கிட்ட தனக்கு பிடிச்ச பையனை பத்தி சொல்லும் தைரியம் பலருக்கு இல்லாமல் போயிடுச்சு.


அதுதான் இன்னைக்கு நிறைய காதல் ஜோடிகள் கல்யாணம் முடித்தவுடனே ஒன்னு டைவர்ஸ் இல்லாட்டி தற்கொலைனு முடிவு எடுக்குறதுக்கு காரணம்.


தன் பிள்ளை சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்காமல் வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையையும் தொலைச்சு தற்கொலை செய்து கொண்டாங்கனு செய்தி கேட்ட பிள்ளையை பத்து மாசம் சுமந்து பெத்த தாயின் வயிறும் மனசும் என்னம்மா பாடுபடும்.காதலிக்கிரவுங்க கொஞ்சம் பெத்தவுங்கல பத்தியும் யோசிக்கனும்.


ஒரு குடும்பத்தில அம்மா அல்லது அப்பா இரண்டு பேருல யாராவது ஒருத்தராவது பிள்ளைங்க கிட்ட ஜோவியலா ஓபனா பேசுற டைப் இருப்பாங்க.அவுங்கக்கிட்ட தைரியமாக சொன்னால் இந்த மாதிரி பிரச்சனை எந்தவொரு குடும்பத்துலையும் வராமல் இருக்கும் என்று சாரு சொன்னதும், நீ சொல்லுவது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மைம்மா சாரு என்று கூறினான் மனோஜ்.


அப்பா, அம்மா இல்லாமல் வளர்ந்த எனக்கு பெத்தவுங்க பாசம் சப்போர்ட் இல்லாமல் இந்த உலகத்துல வளருவது எவ்வளவு கஷ்டம்னு நல்லவே தெரியுமா.


நான் பானுவை விரும்புவது ஜானகி அம்மாவுக்கும் சந்துருக்கும் ஏற்கனவே தெரியும் சாரு.உங்க கல்யாணம் குடும்ப சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்சதும் ஒரு நாள் பானு வீட்டுக்கு குடும்பத்தோட சென்று பானு அப்பா அம்மாகிட்ட உங்க கல்யாணத்தை பத்தி பேசுவோம்னு ஜானகி அம்மா ஏங்கிட்ட சொல்லிருந்தாங்கமா சாரு.


அதுக்குள்ள பானு வீட்டுல பிரச்சனை வந்திடுச்சு என்றான் மனோஜ்.


சூப்பர் அண்ணா! எனக்கு உங்க குணத்தை பத்தி நல்லாவே தெரியும்.
பானுவோட அப்பா, அம்மா சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்ய ஒத்துக்க மாட்டீங்கனு.நாம்ம சென்னை போய்ட்டு வந்த மறுநாளே பானு வீட்டுக்கு போகலாம் அண்ணா என்று கூறினாள் சாரு.


சரிம்மா... அம்மாக்கிட்ட கலந்து பேசிட்டு முடிவு எடுப்போம் என்று கூறினான் மனோஜ்.


இருவரும் மறுநாள் அதிகாலையில் சென்னை வந்து இறங்கினர்.அமெரிக்க தூதரத்திற்கு சென்று விசா அப்ளிகேஷன் சப்மிட் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர்.


வீட்டிற்கு வந்ததும் சந்துரு தூதரகத்தில் நடந்ததை பற்றி சாருவிடம் விசாரித்து கொண்டிருந்தான்.


என்னங்க உங்களிடம் இரண்டு நிமிஷம் பேசலாமா? என்று சந்துருவிடம் முதல் முறையாக வாயை திறந்து கேட்டாள் சாரு.


ம்ம்..கேளுங்க என்றான் சந்துரு.


இந்த விஷயத்தை ஏன் எங்கிட்ட சொல்லாமல் மறைச்சீங்க? என்று சாரு கூறியதை கேட்ட சந்துருவிற்கு தூக்கி வாரிப்போட்டது.


நேத்து ஆஸ்பத்திரிக்கு போன விஷயம் சாருக்கு தெரிஞ்சு போச்சோ! என்று பதில் கூற முடியாமல் பதற்றத்தில் முகம் வேர்த்து விறுவிறுத்து போனான்.


சாருவிற்கு தெரியாமல் சந்துருவும் ஜானகி அம்மாவும் எதற்கு ஆஸ்பத்திரி சென்றார்கள்? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
மிக நல்ல திருப்பங்களுடனும் புதுப்புது அறிமுகங்களுடனும் நாளுக்கு நாள் சுவை கூடிக் கொண்டே போகிறது. வெகு அருமைம்மா
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
Super sis.சரோஜா பொண்ணுக்கு நல்லா சொல்லி கொடுக்கறாங்க:(:(:(..மனோஜ் கேரக்டர் நைஸ்...
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
Super sis.சரோஜா பொண்ணுக்கு நல்லா சொல்லி கொடுக்கறாங்க:(:(:(..மனோஜ் கேரக்டர் நைஸ்...
Thank you sister😍🙏
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
மிக நல்ல திருப்பங்களுடனும் புதுப்புது அறிமுகங்களுடனும் நாளுக்கு நாள் சுவை கூடிக் கொண்டே போகிறது. வெகு அருமைம்மா
தங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அம்மா🙏😍
 

New Threads

Top Bottom