எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 19
என்ன மாலதி பேக்லாம் தூக்கிட்டு எங்க கிளம்பிட்டீங்க? என்று கேட்டார் ஜானகி அம்மா.
ஊருக்கு கிளம்புறோம் அக்கா.இங்கே வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.
ஷ்யாம் அப்பா உடல்நிலை பத்தி உங்களுக்கு நல்லவே தெரியும்ல அக்கா.அவர் சுகர் பேஷனட் வேற.நான் இல்லாமல் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படுவாங்க அக்கா.பத்து நாளைக்கு மேல் ஹோட்டல தான் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு.
நாங்க ஊருக்கு போய்ட்டு வர்றோம் அக்கா என்று கூறினார் மாலதி.
அடுத்தவாரம் வரை இருந்து சந்துருவை வழியனுப்பி வச்சுட்டு போவனு நினைச்சேன் மாலதி.நீ சொல்வது சரிதான் மாலதி.தம்பியும் நீயில்லாமல் ரொம்ப கஷ்டப்படுவாங்க.அடிக்கடி வரப்போக இருங்க மாலதி என்று கூறினார் ஜானகி அம்மா.
சரிங்க அக்கா...சாருவை கூட்டிட்டு ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வாங்க அக்கா என்றார் மாலதி.
கண்டிப்பா ஒரு நாள் அழைச்சிட்டு வர்றேன் மாலதி.கொஞ்சம் இரு! சாருவை கூப்பிடுறேன் என்றார் ஜானகி அம்மா.
இருக்கட்டும் அக்கா.சாரு சென்னைக்கு போய்ட்டு வந்த கலைப்பில் இருப்பாக்கா.சாரு ரெஸ்ட் எடுக்கட்டும்.நீங்க சந்துருட்டையும் சாருட்டையும் சொல்லிருங்க அக்கா என்று கூறிவிட்டு மாலதியும் ஷ்யாமும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
பதில் பேசாமல் அமைதியாக இருந்த சந்துருவிடம், மனோஜ் அண்ணா பானுவை காதலிக்கிற விஷயம் உங்களுக்கு முன்னாடியே தெரியும்னு ஏங்கிட்ட சொல்லாமல் மறைச்சுட்டீங்களே! என்று கூறினாள் சாரு.
நல்ல வேளை அவசரப்பட்டு உண்மையை சொல்லல.இல்லைனா "தவளை தன் வாயலே கெடுங்கிற மாதிரி தான் நமக்கும் நடந்திருக்கும்" என்று மனதில் நினைத்து கொண்டு பெருமூச்சு விட்டான் சந்துரு.
என்னங்க...என்னங்க.... என்று சாரு சந்துருவை மூன்றாவது முறை அழைத்த போது தான் சுயநினைவுக்கு வந்தான்.
இல்லங்க...மனோஜ் விஷயத்தை பத்தி உங்கக்கிட்ட பேசுலாம்னு நானும் அம்மாவும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த போது தான் திடீரென்று உங்க சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தோம்.அதுக்கு பிறகு தான் என்ன நடந்துச்சுனு உங்களுக்கு தெரியும்ல என்றான் சந்துரு.
ஓ அப்படியாங்க! ஸாரிங்க... என்றாள் சாரு.
இதுக்கு எதுக்குங்க ஸாரி? என்று கேட்டான் சந்துரு.
இதுக்கு மட்டுமில்லங்க... உங்களை அன்னைக்கு மொபைலை எடுக்க அலையவிட்டதுக்கும் சேர்த்து தான் என்று மெல்லிய குரலில் தயக்கத்துடன் கூறினாள் சாரு.
மறதி எல்லாருக்கும் வருவது இயல்பு தாங்க.முடிஞ்சு போனதை விட்டு தள்ளுங்க.இனி கவனமாக இருங்கள்! என்று கூறினான் சந்துரு.
மனோஜ் அண்ணாவும் பானுவும் காதலிக்கிறது அவுங்க வீட்டுக்கு தெரிஞ்சு கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சுங்க.அத்தைக்கிட்ட பேசி சீக்கிரம் ஒரு முடிவு எடுக்கனுங்க என்று சந்துருவிடம் கூறினாள் சாரு.
ஐயையோ! என்ன சொல்லுறீங்க? என்று கேட்டான்.
ஆமாங்க என்று நடந்த கதையெல்லாம் அவனிடம்டம கூறினாள் சாரு.சரி வாங்க... அம்மாக்கிட்ட போய் இதை பத்தி சொல்லலாம் என்று சாருவிடம் கூறினான்.
மனோஜின் அறைக்கு சென்று அவனையும் அழைத்து கொண்டு மாடியிலிருந்து மூன்று பேரும் கீழே இறங்கி வந்தனர்.
ஷோபாவில் அமர்ந்திருந்த ஜானகி அம்மா என்னடா சந்துரு? மூன்று பேரும் ஒரே நேரத்தில் ஒன்னாக இறங்கி வர்றீங்கனா ஏதோ காரணத்தோட தான் வந்திருப்பீங்க.
என்ன விஷயம்னு சொல்லுங்க? என்று கேட்டார் ஜானகி அம்மா.
பானுவின் வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் தனது மாமியாரிடம் கூறினாள் சாரு.
பிரச்சனை இவ்வளவு தூரத்துக்கு வந்துருச்சாமா சாரு.சரிம்மா... நாம்ம எல்லாரும் நாளைக்கு பானு வீட்டுக்கு போய் அவுங்க அப்பா அம்மாக்கிட்ட பேசலாம் என்று கூறியதும் மனோஜின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது.
தனது அறைக்கு வேகமாக சென்றவன் பானுவிற்கு போன் செய்து நாளைக்கு கிளம்பி தயாராகயிரு பானு.மாமா உன்னை பொன்னு கேட்க வர்றேன்! என்றதும் பானுவிற்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், அண்ணாவை மீறி அப்பா கல்யாணத்து சம்மதிப்பாரா? என்ற பயமும் இருந்தது.
சந்துரு வெளியே கிளம்பும் அவசரத்தில் கையில் மொபைலை பார்த்து கொண்டே பர்ஸை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தான்.அவனுடைய பர்ஸிலிருந்து ஒரு போட்டோ கட்டிலின் கீழே விழுந்ததை அவன் கவனிக்கவில்லை.
கீழே டைனிங் டேபிளில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக்கொண்டு மாமியருடன் பேசிக்கொண்டிருந்தாள் சாரு.சந்துரு எங்கேயோ வேகமாக கிளம்பி செல்வதை பார்த்த ஜானகி அம்மா, டேய் சந்துரு! கொஞ்சம் சாப்பிட்டு போடா சந்துரு என்று கூறினார்.அர்ஜெண்டா ஒரு ஒர்க் முடிக்க வேண்டியது இருக்கும்மா.
போய்ட்டு வந்து சாப்பிட்டுக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றான் சந்துரு.
சந்துரு சென்றதும் தனது அறைக்கு சென்ற சாரு கட்டிலில் படுத்து கொண்டே புத்தகம் படிக்க தொடங்கினாள்.கையில் குறிப்பு எழுதுவதற்காக வைத்திருந்த பேனா தவறி கட்டிலின் அடியில் விழுந்தது.
காரில் ஏறியவுடன் பர்ஸை திறந்து பார்த்ததும் போட்டோ இல்லாததை கண்ட சந்துரு வேகமாக தனது அறைக்கு ஓடி சென்றான்.
கட்டிலின் கீழே குனிந்து பேனாவை எடுக்க போகும் போது பேனாவின் அருகில் ஒரு போட்டோ இருப்பதை பார்த்தாள் சாரு.
எட்டிப்பிடித்து பேனாவையும் போட்டாவையும் எடுக்க முயற்சிக்கும் சமயம் பார்த்து சந்துரு அறைக்குள் வந்துவிட்டான்.
கட்டிலின் மறுபுறம் சந்துருவின் கால் தெரிவதை பார்த்த சாரு போட்டாவையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு வேகமாக எழுந்தாள்.
அறைக்கு வந்த சந்துரு தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருப்பதை பார்த்த சாரு, எதையும் மறந்து வச்சுட்டு போய்ட்டீங்களா? என்று சந்துருவிடம் கேட்டாள்.
ஆமாங்க...என்று சொல்லும் போது சாருவின் கையிலிருந்த போட்டோவை பார்த்தான்.
சரி.. நீங்கள் கட்டுலுக்கு கீழே என்ன செஞ்சுக்கிட்டு இருந்தீங்க? என்று நேரடியாக போட்டாவை கேட்காமல் மறைமுகமாக கேட்டான்.
என் பேனா கீழே விழுந்திருச்சுனு எடுக்கப்போனேங்க.அதோடு சேர்த்து இந்த போட்டாவும் கீழ விழுந்து கிடந்தது என்றாள்.எங்க அந்த போட்டாவை கொஞ்சம் கொடுங்கள் என்று சந்துரு கேட்டதும் சாரு கொடுத்துவிட்டாள்.
போட்டோ கீழே கவிழ்ந்து விழுந்திருந்ததால் அது யாருடைய புகைப்படம் என்பதை பார்க்காமலே சந்துருவிடம் கொடுத்துவிட்டாள்.
சந்துரு எதையும் வெளியே காட்டி கொள்ளாமல் அலமாரியில் ஏதோ ஒரு பைலை எடுத்துவிட்டு தான் தேடிய பொருள் கிடைத்து விட்டது என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
எப்படியோ ஒரு வழியாக சமாளுச்சு போட்டோவை வாங்கிட்டோம்.நல்ல வேளை ஒரு நிமிஷம் லேட்டா போயிருந்தாலும் போட்டோவை பாத்திருப்பாங்க என்று மனதில் சொல்லிக்கொண்டு கீழே இறங்கி சென்றான்.
பொய் சொன்னாலும் பொருந்துர மாதிரி சொல்லனும்.எல்லா விஷயத்துலையும் பெர்பெக்ட்டா இருக்கும் இவர் எப்படி முக்கியமான பைலை வச்சிட்டு போயிருப்பாரு?
இவர் வந்த வேகத்தை பார்த்தால் பைல எடுக்க வந்தது மாதிரியே தெரியலையே?என்று சந்துருவின் மேல் சிறிது சந்தேகம் வர தொடங்கியது.
மறுநாள் காலையில் ஜானகி அம்மா, மனோஜ், சந்துரு, சாரு எல்லோரும் பானுவின் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு பானுவின் அப்பா கனகராஜ் வீட்டின் வெளியே வந்து பார்த்தார்.
சாரு சந்துருவுடன் வந்திருப்பதை பார்த்து வாமா சாரு! என்று அவளையும் வந்த அனைவரையும் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றார்.
பங்கஜம் சீக்கிரம் வாமா! யாரு வந்திருக்காங்கனு பாரு என்று தனது மனைவியை அழைத்தார் கனகராஜ்.
அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து வரவேற்றார் பங்கஜம்.நீங்க எல்லாரும் கொஞ்சம் பேசிக்கிட்டு இருங்க நான் போய் ஐந்து நிமிஷத்தில காபி போட்டு எடுத்துட்டு வந்திர்றேன் என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்று விட்டார்.
பானு! அம்மா பானு! என்று தனது மகளை அழைத்தார் கனகராஜ்.
ஒன்றும் தெரியாதது போல வந்து நின்றாள் பானு.
பானுவின் அம்மா அனைவருக்கும் காபி கொடுத்த பின்னர் பானுவின் அப்பா அம்மாவை பார்த்து உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேச வந்திருக்கிறோம் என்று கூறினார் ஜானகி அம்மா.
ம்ம்...சொல்லுங்கம்மா என்றார் கனகராஜ்.மனோஜூம் பானுவும் விரும்பும் விஷயம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.
பானுவை மனோஜ்க்கு கல்யாணம் செய்து தர உங்களுக்கு சம்மதா? என்று பானுவின் அப்பா அம்மாவிடம் கேட்டார் ஜானகி அம்மா.
பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததை பார்த்த மனோஜ், இந்த அனாதை பையனை நம்பி எப்படி பொன்னு கொடுக்குறதுனு யோசிக்கிறீங்களாங்க என்று கேட்டதும், ஐயையோ தம்பி! ஏன் இப்படியெல்லாம் பேசிறீங்க என்று கேட்டார் கனகராஜ்.
மனோஜ் ஒன்னும் அனாதை கிடையாது சார்.நான் வயித்துல சுமந்து பெறாத பிள்ளை அவன்.சந்துருவும் மனோஜூம் எனக்கு ஒன்று தான்.அதை பத்திய கவலை உங்களுக்கு வேண்டாங்க என்று கூறினார் ஜானகி அம்மா.
இந்த மாதிரி பண்பாடும் மரியாதையும் தெரிந்த அன்பான குணம் கொண்ட பையன் மருமகனாக வருவதற்கு நாங்க தாங்க கொடுத்து வச்சுருக்கனும்.
என் பொண்ண பத்தி எனக்கு நல்லா தெரியும்.அவளுக்கும் எங்க குடும்பத்ததிற்கும் ஏற்ற மாதிரி பையனை தான் தேர்ந்தெடுப்பானு.
அப்புறம் எதுக்குங்க யோசிக்கிறீங்க.
சீக்கிரமாக நல்ல நாளை பார்த்து தாம்பூலத்தட்டை மாத்தி கல்யாண தேதியை உறுதி பண்ணிருவோம் என்று கூறினார் ஜானகி அம்மா.
என் பையனுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லங்க.எங்களுக்குள்ள சரியாக பேச்சு வார்த்தையும் கிடையாது என்று கூறினார் கனகராஜ்.
அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.நாங்க பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்கிறோம்.கண்டிப்பாக கல்யாணத்துக்கு மச்சான் வருவாங்க மாமா என்று மனோஜ் உரிமையுடன் கூறியதை பார்த்து பானுவின் அப்பா அம்மா சந்தோஷம் அடைந்தார்கள்.
சரிங்க.. அப்போ நாங்க கிளம்புறோம் என்றதும் கொஞ்ச நேரம் இருங்க! எல்லாரும் சாப்பிட்டு போகலாம் என்று கூறினார் பங்கஜம்.
இல்லங்க நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஒரு நாள் நாங்க எல்லாரும் வந்து கண்டிப்பாக கறி விருந்தே சாப்பிடுகிறோம் என்றார் ஜானகி அம்மா.
அடுத்த வாரம் மனோஜூம் சந்துருவும் அமெரிக்கா கிளம்பிருவாங்க.
அதுக்குள்ள நிச்சயதார்த்தம் முடிச்சாகனும்.இன்னைக்கே போய் ஜோசியரை பார்த்து நாள் குறிச்சுட்டு வந்திருவோம் என்று பானுவின் அப்பா அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் பானுவுடன் கண் ஜாடையில் பேசிக்கொண்டிருந்தான் மனோஜ்.
சாரு மெதுவாக எழுந்து பானுவின் அருகே சென்றாள்.மேடம் இப்போ ஹேபி தானே? என்று கேட்டாள்.தங்க் யூ சாரு என்று அவளை கட்டிப்பிடித்து அழுதாள்.
ஏய் பானு! எதுக்கெடுத்தாலும் திறந்த பைப் அழுகுறதே உன் வேலையா போச்சு.பெண்களின் கண்ணீருக்கு மதிப்பு அதிகம்.அதை தேவையில்லாமல் கொட்டி தீர்த்து விடாத பானு என்றாள் சாரு.
அப்படியில்ல சாரு.அண்ணாவை மீறி கல்யாணத்துக்கு அப்பா சம்பதிப்பாங்கனு நான் எதிர்ப்பார்க்கவே இல்ல என்றாள் பானு.
சரி.. சரி.. மேடம் மத்ததை பத்திலாம் யோசிக்காம நிச்சயதார்த்தத்திற்கு தயாராகும் வழியை பாருங்கள்.சரி நாங்க கிளம்புறோம் என்றாள் சாரு.
அனைவரும் பானுவின் அப்பா அம்மாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து அவர்களது வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
உங்களுக்கு விஷயம் தெரியுமாங்க?என்று பார்கவி பரத்திடம் கேட்டாள்.சொல்ல வந்ததை ஒழுங்க புரியுற மாதிரி சொல்லு என்றான் பரத்.
அந்த அனாதை பையனுக்கும் உங்க தங்கச்சிக்கும் அடுத்தவாரம் நிச்சயதார்த்தமாம் என்று பார்கவி கூறியதை கேட்டதும், நிஜமாகவா சொல்லுறடி? என்று கேட்டான்.
எனக்கு வேற வேலையில்ல பாருங்க.
உங்க குடும்பத்தை பத்தி இல்லாத பொல்லாத சொல்லி உங்களை உங்க குடும்பத்தை விட்டு பிரிக்கிறது தான் என் வேலை மாதிரி பேசுறீங்க.
அம்மா தாயே! தெரியாமல் சொல்லிட்டேன்.மன்னிச்சிரும்மா! என்றான் பரத்.
சரி..சரி.. இதையெல்லாம் விடுங்க.அடுத்து என்ன செய்ய போறீங்க? என்று கேட்டாள் பார்கவி.
நான் என்ன செய்ய முடியும்? என்று பரத் கூறியதும் வீட்டுக்கு மூத்தப்பிள்ளை ஒருத்தரு நீங்க இருக்குறதையே மறந்துட்டு அவுங்க இஷ்டத்து ஆடுறாங்க.
அப்போ உங்களுக்கு அந்த குடும்பத்துல மரியாதை அவ்வளவு தானா? என்று இல்லாத பொல்லாததை சொல்லி பரத்தின் மனதில் பானுவின் அப்பா அம்மா மீது மேலும் கோபம் வரும் அளவுக்கு அவனை தூண்டிவிட்டாள் பார்கவி.
வீட்டிற்கு வந்ததும் மனோஜ் ஜானகி அம்மாவின் காலில் விழுந்து கதறி அழுதான்.ஏய் மனோஜ்! என்னடா இது? எழுந்திரு முதல்ல என்று அவனை கைப்பிடித்து தூக்கி கட்டி அணைத்து தட்டிக் கொடுத்தார்.
எதற்கு இப்போது தேவையில்லாமல் சின்னப்பிள்ளை மாதிரி அழுகுற மனோஜ்? என்று கேட்டார்.
யாருமே இல்லாத எனக்கு ஆதரவு கொடுத்ததும் மட்டும் இல்லாமல், உங்க பையனு நீங்கள் என்ன சொன்னதும் என்னால கண்ணீரை அடக்க முடியலமா என்று கூறிவிட்டு அழத்தொடங்கினான்.
மறுபடி மறுபடி நீ அனாதை சொல்லுறத நிறுத்து மனோஜ்! நாங்களெல்லாம் உயிரோட இருக்கும் போது நீ எப்படி உன்னை அனாதைனு சொல்லலாம்? என்று கேட்டார் ஜானகி அம்மா.
சரிங்கம்மா...இனி சொல்ல மாட்டேன் என்று பதில் கூறினான் மனோஜ்.
எல்லாரும் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.நாளைக்கு பானுவோட அண்ணன் வீடு வரைக்கு போய்ட்டு வந்துருவோம் என்று கூறினார் ஜானகி அம்மா.
சந்துரு தலைத்தெறிக்க ஓடி வந்து போட்டவை தேடுவதற்கான காரணம் என்ன? அந்த புகைப்படத்தை சாருவிடமிருந்து மறைப்பதற்கு காரணம் தான் என்ன? பரத்தை பார்க்க போகும் இவர்களுக்கு பார்கவி வீட்டில் என்ன நடக்க போகிறது? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏