ஹீரோவை பத்துவருஷம் கழிச்சிம் மறக்கமாட்டீங்கனு சொன்னாங்க உண்மைதான் சோ ஸ்வீட்.
ப்ர்த்வி பேரை சொன்னாலே சோ ஸ்வீட்னு சொல்லாம இருக்க முடியாது அவ்வளவு பிடிக்குது. அவனோட குணத்தை ஒவ்வொரு எபியிலும் ஒவ்வொரு விஷயத்திலும் அழகா சொல்லியிருக்காங்க. கோழிகுஞ்சு அதுவும் ரோஸ் கோழிகுஞ்சு தான் எனக்கு பேவர் இது எதுக்கு சொல்றாங்கனு தான் பஸ்ட் நினைச்சேன் அதோட அவனோட வாழ்வியல் கருத்தை அழகா மேட்ச் பண்ணாங்க ரொம்ப ரொம்ப ஹப்பியா இருந்தது. பிரசன்னா மாதிரி ஒரு நண்பன் இருந்தா எந்த பிரச்சினையும் அசால்ட்தான்.
சுசீ பேராசிரியர். ப்ர்த்வி சுசீக்கு மேரஜ் பிக்ஸ் பண்றாங்க. ரெண்டு பேரும் ஷை டைப். போன்ல பேசும் போது 12 மணிவரை கம்ப்யூட்டர் லாங்குவேஜ் பத்தி சொல்லி தரானு ப்ர்த்வி சொல்லும் போது ரொம்ப சிரிச்சேன். அதுவும் ப்ரெண்ட்ஸ் கலாய்க்கும் போது
திருமணம் முடிந்து பஸ்ட்நைட்ல ஒரு பிரச்சினை வருது அதிலிருந்து தான் கதை ஆரம்பிக்குது.
ப்ர்த்வி அம்மாவோட தவிப்பு கவிதா அக்காவோட அன்பு புவனா அக்காவோட கோவம் எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருந்தது. சரளா பெரியம்மான்ற கேரக்டர் ஏன்தான் என் வாழ்க்கையில் வந்ததோனு சொல்லுவான் அதுமாதிரி கேரக்டர் நம்ம லைப்லயும் கண்டிப்பாக இருக்கும். கதையில வந்த எல்லா கேரக்டரும் ரொம்ப எதார்த்தமா இருந்தது எங்கும் மிகையில்லை.
ரொம்ப பிடிச்ச கேரக்டர் ப்ர்த்வி தான் அதுவும் அவன் சொல்லும் வார்த்தை நமக்கு வர ஒய்ப் 50% பிடிச்சாலே கடைசிவரை பாத்துக்கனும் எனக்கு 100% பிடிச்சிருக்குனு சொல்றது லவ்லி. அவரவர் உருப்படியை அவரவர் துவைக்கனும்னு சொன்ன விஷயமும் லவ்லி. ப்ர்த்விய ஏதாவது சொன்னா சுசீ கன்னம் புஸூபுஸூஆகுறதும் சுசீய ஏதாவது சொன்னா ப்ர்த்வி கோவபடுவதும் லவ்லி. மகனுக்காக தன்னை மாற்றிய தேவியும் லவ்லி. கட்டகடைசியில் சரளா பெரியம்மா என்ற கேரக்டர் ஏன்தான் என் வாழ்க்கையில் வந்ததோனு நினைக்காம இருந்த ப்ர்த்வியும் லவ்லிதான். ப்ர்த்வி மாதிரியான ஆட்கள நேரில் பார்ப்பது அபூர்வம். என்ன தவம் செய்தனை யசோதானு சுசீ பாடுவதும் லவ்லி. ப்ர்த்விய மிஸ் பண்வோம் சிஸ். ப்ர்த்வி சோ ஸ்வீட் ப்ர்த்வி சோ ஸ்வீட். நல்ல கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா. ப்ர்த்வி வெற்றி பெறுவான்.