Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL ஏ.எஸ் வைரஸ் - Tamil Novel

Status
Not open for further replies.

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

20

“ஒரு குடும்பப் பொம்பள பண்ணுற காரியமா இது?? நான் இருக்கிறேன், பிள்ளைங்க இருக்கிறாங்க.. குடும்பச் சூழல் இப்படி இருக்குது... நீ பாட்டுக்கு என்னவோ பண்ணிட்டு இருக்கிற?? போன்ல முன்னபின்ன தெரியாத ஆம்பளை கூடப் பேசுறதே தப்பு?? அதிலேயும் வீடியோ கால் வேறயா?? யாருடி அவன்??” எனக் கோபத்துடன் வினவ, எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள் அவள்.

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??” எனக் கர்ஜித்தவன்; கையிலிருந்த அலைபேசியைப் பிடுங்குவதற்குள் அழைப்பைத் துண்டித்துவிட்டுச் சென்றிருந்தான் மூர்த்தி.

கோபத்துடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன்; அலைபேசியின் தொடுதிரையைத் தொட, அது கிங்காங் செயலியைக்குள் இட்டுச் சென்றது.

“கிங்காங் யாரு உன்னை இன்ஸ்டால் பண்ண சொன்னது??” எனத் திட்டியவாறே அவன் பார்க்க, அவளது காணொளிகள் அடங்கிய பட்டியல் திறந்து கொண்டது.

“என்னடி பண்ணி வச்சிருக்கிற?? என்ன கருமம் இது?? இதை இன்ஸ்டால் பண்ணவே கூடாதுன்னு சொல்லியிருக்கிறேன்.. நீ இத்தனை வீடியோ பண்ணி வச்சிருக்கிற??” எனப் பல்லைக் கடித்தவாறே ஒவ்வொரு மெனுவிற்குள்ளும் சென்று பார்வையிட, பல விஷயங்கள் சிக்கின.

அவள் அடித்திருந்த கூத்துகளை மொத்தமாக ஒரே இடத்தில் பார்த்துவிட்டவன்; “சத்யா... ஏன்டி இப்படிப் பண்ணி வச்சிருக்கிற?? உனக்கு நான் என்ன குறை வச்சேன்?? எதாவது தேவைன்னா என்கிட்டே கேட்டிருக்கலாமே... கடனை வாங்கியாவது உனக்கு வாங்கித் தந்திருப்பேனே... எப்பவும் அன்பாதானே பேசினேன்.. சத்யாங்கற சொல்லுக்கு மறுசொல் சொன்னது இல்லையே.. அப்படி இருக்கிறப்போ நீ ஏன்டி இப்படிப் பண்ணிட்டு இருக்கிற?” என நொந்து போய் நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.

அவன் தனக்குள் மனம் நொந்து, மருகி, வேதனையில் துடித்துக் கொண்டிருக்க, சத்யாவோ எவ்வித சலனமுமில்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

சில நிமிடங்கள் கடந்த பின்னர், “சரி சத்யா.. நடந்ததெல்லாம் நடந்து போச்சு... எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடலாம்... நமக்குப் பிடிச்ச எல்லா விஷயமும் இந்தப் போனோட போகட்டும்... இப்பவே இதை இங்கேயே உடைச்சிடலாம்.. இதுக்கு மேல நமக்கு இந்தப் போன், ஆப் எதுவும் வேணாம்.. இங்கே இருக்கிறதாலதான் உனக்கு அந்த மாதிரி எண்ணங்கள் தோணுதுன்னா நாம வேற வீட்டுக்குப் போயிடலாம்.. உன்னோட இஷ்டப்படி பெரிய வீடா கூட வாடகைக்கு எடுத்துக்குவோம்... நான் ஓவர்டைம் பார்த்து சமாளிச்சிடுவேன்... தயவுசெய்து எந்தத் தப்பான வழியையையும் தேர்ந்தெடுத்துடாத சத்யா... பசங்க இப்பதான் வளர்ற ஸ்டேஜ்ல இருக்கிறாங்க... நல்லது கெட்டது சொல்லித் தர்றதுக்கு ஒரு அம்மாவா நீ இருக்கணும், உன்னோட அன்பு மட்டும்தான் அவங்களை நல்லபடியா வாழ வழிசெய்யும்..” எனப் பிரபு அவளது கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச, “இல்ல... முடியாது... நீங்க சொல்ற மாதிரி எங்கே வேணா போகலாம்... ஆனா இந்தப் போன், ஆப் எல்லாத்தையும் விட முடியாது..” என உறுதியாகக் கூறிவிட்டாள்.

“சத்யா... இதெல்லாம் நம்ம குடும்பத்துக்குச் சரிப்பட்டு வராதும்மா... இப்போ பிரச்னை இந்த ஆப் இல்ல... உன்னோட வீடியோஸ்... சும்மா பாடி, நடிச்சுப் போட்டிருந்தா பிரச்சனை இல்ல... நீ கொஞ்சம் அடுத்தகட்டத்துக்கே போயிருக்கிற...”

“இப்போ அதுக்கு என்ன!? அந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு போடுற வீடியோஸ்க்கு தான் வியூஸ் அதிகமா இருக்குது.. நல்லா பாருங்க..”

“ம்மா... வியூஸ் வச்சிட்டு என்ன பண்ணப் போறம்மா? அதை வச்சு சாப்பிடவா முடியும்??”

“ம்ம்ம்.. முடியும்... என் அக்கவுன்ட் வெரிபை ஆகிருச்சு... காசு வருது..”

“சரிம்மா.. அதுக்காகச் சுயத்தை இழந்துட்டு சவுகரியமா வாழ முடியுமா?? அது வேஸ்ட் தானே...”

“சும்மா எதையாவது உளறிட்டு இருக்காதீங்க... கஷ்டப்பட்டு இவ்ளோ பாலோவர்ஸ், ஹார்ட்டு வாங்கியிருக்கிறேன்.. எவ்ளோ கஷ்டம் தெரியுமா??”

“புரியுது சத்யா... ஆனா அவங்க எல்லாரும் உன்னோட வீடியோவைப் பார்த்துட்டு, ஒரு லைக்கோ கமெண்டோ தட்டிட்டு போயிடுவாங்க... அவங்களுக்குன்னு தனியா ஒரு வேலை, குடும்பம்னு இருக்குது.. உனக்கு ஒரு குடும்பம் இருக்குதுதானே.. அவங்க யாரும் இங்கே உன்னோட வந்து நிக்கப் போறதில்லை.. நானும் நம்ம பசங்களும்தான் நிரந்தரம்..”

“இப்போ நான் ஒண்ணும் உங்களைவிட்டுட்டு போறேன்னு சொல்லலை... நான் பாட்டுக்கு என் வழியில போறேன்... நீங்க பாட்டுக்கு உன் வேலையைப் பாருங்க... என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க... அவ்ளோதான்..”

“சத்யா... என் பொறுமையை ரொம்பச் சோதிக்கிற... எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு...” எனப் பிரபு கர்ஜிக்கத் தொடங்க, “என்ன முட்டாள்தனமா பேசிட்டு இருக்கிறீங்க?! நான் எவ்ளோ ஹார்ட் ஒர்க் பண்ணி இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்... எனக்கு எவ்ளோ பேன்ஸ் இருக்கிறாங்க தெரியுமா?” எனப் பதிலுக்கு வாதம் செய்தாள் சத்யா.

அதற்குமேல் அவளிடம் பேசி புரிய வைக்க இயலாது என உணர்ந்து கொண்ட பிரபு, “என்னவோ பண்ணித் தொலை... இதுக்கு மேல உன்னோட இஷ்டம்... ஆனா ஒரு விஷயம்... என்னைக்கும் எதாவது பிரச்சனைன்னு வந்தா நான் வந்து நிக்க மாட்டேன்.. அவ்ளோதான் சொல்லிட்டேன்..” எனக் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

குடும்பத்தைப் பிரிந்து, வீட்டைவிட்டு வெளியேறி வந்த சத்யாவிற்குத் துணையாக நின்றான் அவளது நண்பன் டிக்கா. கிங்காங் செயலியில் அவளைத் தீவிரமாகப் பின்தொடர்பவர்களில் அவனும் ஒருவன். கணவனை விட்டு வெளியேறி வந்த சமயத்தில் அவளுக்கு ஆதரவாக நின்றவன் அவனே. அவனுக்குத் திருமணமாகி, ஒரு பெண் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சத்யாவிற்கு ஆதரவாக அவன் குரல் கொடுக்கவும் அவனது மனைவிக்கும் அவனுக்கும் சண்டையாகிப் போனது. எனவே, வீட்டைவிட்டு வெளியேறிய டிக்கா, சத்யாவை அழைத்துக் கொண்டுபோய்த் தனியே ஒரு வீட்டில் குடியேறி விட்டான்.

இது சட்டத்திற்குப் புறம்பானது எனினும் இருவரும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குடும்பத்திற்கு அசிங்கம் என்பதால் சத்யாவின் குடும்பத்தினரோ டிக்காவின் குடும்பத்தினரோ எந்தப் புகாரும் அளிக்காமல் அமைதியாக இருந்துவிட்டனர்

எப்போதும் நேர்மறை விஷயங்களைத் தாண்டி எதிர்மறைகள் தான் விரைவில் அடுத்தவர்களைச் சென்றடையும்; அந்த வகையில் நாம் செய்யும் தவறான செயல்கள் விரைவில் அடுத்தவரை சென்று சேர்ந்துவிடும்.

இங்கே ‘பாடி ஷேமிங்’ என்றொரு வார்த்தை உண்டு. உடல் அமைப்பை வைத்து கேலி செய்தல் எனப் பொருள்படும். அதாவது நாம் சிவப்போ, கருப்போ, உயரமோ, குட்டையோ, ஒல்லியோ, பருமனான உடலமைப்போ எதுவாயினும் நமது வெளித்தோற்றத்தைக் கொண்டு இகழ்ந்து உரைப்பதை அல்லது விமர்சிப்பதை “பாடி ஷேமிங்’ என்பர்.

இந்த ‘பாடி ஷேமிங்’ மூன்று வகையிலான எதிர் விளைவுகளை ஏற்படுத்தவல்லது. முதல்வகை – வெறியைத் தூண்டும். அதாவது நம்மை இழிந்துரைத்தவரின் வார்த்தைகள் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தவாறே இருந்து வெற்றிக்கான வெறியைத் தூண்டும். எப்படியேனும் சாதித்தேயாக வேண்டும் என்னும் உத்வேகத்தைத் தரும்.

இரண்டாம் வகை – தாழ்வு மனப்பான்மை. இதில் மனதிற்குள்ளேயே அவர்களது வார்த்தைகள் தேங்கிக் கிடக்கும். உதாரணமாக அணைநீர் ஆவியாகாமல் இருப்பதற்கு மேற்பரப்பில் தெர்மாக்கூல் போடுவது போல, அந்த வார்த்தைப் படலம் மேலே பரம்பிக் கொண்டு, உள்ளே இருக்கும் நீர் ஆவியாகாதது போல நம்மின் வளர்ச்சியைத் தடுக்கும்.

மூன்றாம் வகை – எருமை மாட்டின் மீது மழை. அதாவது அதெல்லாம் இவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது.. எவர் எண்ணக் கூறினாலும் தங்கள் போக்கில் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துவிடுவர். பல விஷயங்களில் இது ஏற்புடையதாக இருந்தாலும் பல இடங்களில் மந்தத் தன்மைக்கு வழிவகுக்கும்.

இவ்வாறாக உடல்தோற்றத்தைக் கொண்டு கேலிசெய்தல் என்பது பலருக்கு ஒருவகையில் மன சிதைவு தரக்கூடியது; பலருக்கு எழுந்து செயலாற்ற வேண்டும், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு உயர வேண்டும் எனும் உத்வேகத்தைத் தரவல்லது.

ஆனால் சிலர் அதையும் காட்சிப் பொருளாக்கி, விளம்பரப் பொருளாக்கிக் கொண்டிருந்தனர். சற்றே உடல் பருமனுடன் இருக்கும் பெண் காணொளியில் தோன்றினால், அனைவரும், “நீ எல்லாம் எதுக்கு வீடியோ போடுற??” என்பதாகக் கமெண்டில் கழுவி ஊற்றுவது வழக்கம்.

முன்னர்க் கூறியது போலச் சமூக வலைத்தளங்களும் ஒருவகையில் குப்பைகளைக் கொட்டும் குப்பைத் தொட்டி தானே. எவரேனும் உடல் தோற்றத்தைக் குறித்து எதாவது தரக்குறைவாகப் பேசியிருந்தால், அதற்குப் பதிலடி கொடுக்கிறேன் என்கிற ரீதியில் பல வீடியோக்களைப் பதிவேற்றிக் கொண்டிருப்பர்.

சிலர் “குண்டச்சி, சப்பை மூக்கு, கோணவாய், ஊத்த வாய்” எனத் தரக்குறைவான வார்த்தைகளை உதிர்த்தாலும் பல வசவுமொழிகளில் ஏசினாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது லட்சியத்தின் பாதையில் ஓடி, அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் உலகம் போற்றும் ஒரு தன்னம்பிக்கையை ‘ஐகானாக’ உயர்ந்து நின்றவர்கள் பலர்.

ஆனால் இவர்கள் அதைப் பார்வைகளைப் பெரும் நோக்கில் காணொளியாகப் பதிவிட்டுக் கொண்டிருந்தனர். தன்னைப் பற்றியும் தனது நடவடிக்கைகளைப் பற்றியும் எவரேனும் தவறான கருத்துகளையோ விமர்சனங்களையோ பதிவிட்டிருந்தால் அதற்குப் பதிலடி தரும் வகையில் க்ளோசப்பில் பல்லை மட்டும் காணொளியாகப் பதிவு செய்து பதிவேற்றிவிடுவர்.

ஒருவர் இதைச் செய்ய, அதைப்பற்றி இன்னொருவர் அந்தச் செயலை வறுக்கும் (Roast) வகையில் இன்னொரு காணொளியைப் பதிவிடுவார். அந்தக் காணொளி வலைத்தளத்தில் சிலரால் பகிரப்படும்.

தங்களுக்குப் புகழ் கிட்டினால் போதுமானது எனும் நோக்கில் பலரும் இதைச் செய்யத் தொடங்கிவிட்டனர் எப்போதாவது எதேச்சையாக அறியாமல் இந்தக் காணொளிகளைக் காணக் கிட்டினால் ‘குக்கீஸ்’ மூலமாக அடுத்தடுத்து இதுபோன்ற காணொளிகள் நமக்கு வருவது சாதாரணம்.

அவற்றை எல்லாம் திறந்து பார்த்தால் காண சகியாது. வாயில் உணவை மெல்வது, வாய்க் கொப்பளிப்பது இதுபோன்ற பல முகம் கூசும், முகம் சுளிக்க வைக்கும் காணொளிகளையும் சற்றும் தயங்காமல் பதிவேற்றி இருப்பர்.

இதில் சிறப்பம்சமாகச் சிலரெல்லாம் எவருக்குப் பதில் தருகிறேன் என்பதே தெரியாமல் இஷ்டம் போல வார்த்தைகளால் வறுத்து எடுத்து பதிவிட்டு இருப்பர். பக்கத்து வீட்டில் வரிசைக்குச் சரிவர இரண்டு குடம் தண்ணீர் கிடைக்காவிட்டால் கூடக் காணொளியில் பக்கத்து வீட்டுப் பெண்ணைத் திட்டி பதிவேற்றுதல் வழக்கமாகிப் போனது.

பதிவிடுபவர்கள் தான் இப்படி என்றால் அதை ஊக்குவிப்பவர்கள் ஏராளம். “அப்படித்தான்... சூப்பர்... சூப்பர்..” எனக் கைதட்டி, ஆரவாரித்து, ஊக்குவிப்புச் செய்பவர்கள் பலர். இவர்களால் அந்த அஷ்டகோணலான முகம் சுளிப்புதரும் காரியங்களையே தங்களின் விசித்திரமான செய்கையே தங்களுக்கான சிக்னேச்சர் அடையாளமாக மாற்றிக் கொண்டவர்கள் பலர்.

“நமஸ்தேவுங்கோ...” எனக் கூறிக்கொண்டு காணொளி பதிவேற்றுபவருக்கு எதிராக அவரைத் திட்டி பதிவிடுபவர்கள் ஒரு கும்பல் என்றால் அவரை ஆதரித்துக் காணொளி பதிவேற்றுபவர்கள் இன்னொரு கும்பல்.

முதலில் பொழுதுபோக்குக்காகக் காணொளியில் ஏதோவொரு குரலுக்கு வாயசைத்து பதிவேற்ற உள்நுழைந்த பலர், இப்போது தங்களின் சொந்த குரலிலேயே தங்களது மனதின் வக்கிரங்களையும் குரூரத்தையும் பதிவு செய்து தங்களுக்குள் உறங்கிக் கிடந்த கவனயீர்ப்பு செய்யும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ளத் தொடங்கினர்.

இதுவரை எந்த அங்கீகாரமும், எந்தப் பாராட்டும் கிடைக்கப் பெற்றிராத அவர்களுக்கு இது ஒரு புத்துணர்ச்சி தரும் விஷயமாகிப்போனது.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

21

சற்றே நாகரீகமான பணியிலிருக்கும் இளைஞர்கள் தங்களது சோர்வைப் போக்கிக் கொள்ள, அவ்வப்போது காணொளிகளைப் பதிவிட்டால் அவர்களைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.

அது பொழுதுபோக்கு என்பதான கான்சியஸ் இருக்குமாதலால் பொழுதுபோக்கிற்காகப் பதிவேற்றி விட்டு கடந்து விடுவார். ஆனால் இதையே உலகம் என்று எண்ணி கருதிக்கொண்டு உள்ளேயே ஊறிக் கொண்டிருக்கும் சிலருக்கு வெளி உலகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

எவரேனும் தங்களை ட்ரோல் செய்கிறேன் எனச் சில காணொளிகளைப் பதிவேற்றினால் அது தங்களுக்கான ‘அங்கீகாரம்’, தாங்கள் பிரபலமாகி விட்டோம் எனத் தவறாக எண்ணிக் கொண்டனர். தங்களைக் கலாய்க்கின்றனர் என்பது கூட அவர்களுக்கு உரைக்கவில்லை.

பல நாட்களாகத் தாழ்வு மனப்பான்மையில் முடங்கிக் கிடந்த கண்ணம்மா என்ற பெண் இந்தச் செயலியின் மூலம் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்று தனக்குள்ளாகவே எண்ணிக்கொண்டு, ‘பாரதி என்பவன் என் காதலன்; என்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான்’ எனக் கூறிக்கொண்டு நடைபயணத்தைக் கிளப்பி விட்டார்.

ஒவ்வொரு ஊராக ‘பாரதியை தேடுகிறேன்’ என ஒவ்வொரு ஊராகச் சென்று, ‘பாரதி’ எனும் பெயரில் இருக்கும் அனைவரையும் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என இருந்து அனைத்தையும் காணொளியாகப் பதிவேற்றிக் கொண்டிருந்தார்.

சற்றே உடல் பருமன் அதிகமாக இருக்கும் அவரை எவரேனும் கேலி செய்து வலையொளி தளத்தில் காணொளியை பதிவேற்றியிருந்தால் அதற்கும் ‘பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி’ என்று எதாவது ஒரு சர்ச்சைக்குரிய காணொளியை பதிவிட்டு இருப்பார்.

அவர் ஒவ்வொரு ஊராகச் சென்று “நீ என் பாரதியா?? நீ என் பாரதியா??” என ஒவ்வொரு ஆண்களையும் விரட்டுவதே அவருக்கு வேலை. இது அனைத்தும் இந்தக் கிங்காங் செயலி காணொளிகள் வாயிலாகக் கிடைத்த தன்னம்பிக்கைதான். அவரைக் கண்டாலே தெறித்து ஓடுவர் பலர். அதைப் படம்பிடித்துச் செயலியில் பதிவேற்றுவார்.

இவரைப் போன்றே கிரின்ஜ் வீடியோக்கள் பதிவேற்றிக் கொண்டிருக்கும் சிலர் தங்களது லாபத்திற்காக இவரை அழைத்து, ஏதேனும் ஒன்றை பேசக் கூறி, காணொளியாகப் பதிவு செய்து கொண்டு செல்வர்.

இந்தப் பெண் செய்த காரியங்கள் எல்லாம் கணக்கிலடங்காதவை. தன்னைப் பிரபலம் என எண்ணிக்கொண்டு அவர் செய்த காரியங்களின் சாராம்சம் பின்வருமாறு :

• முதலில் தன் பெயரின் பின்னே தனது சாதியின் அடையாளத்தை இணைத்துக்கொண்டார். மற்ற மாநிலங்களில் எல்லாம் தங்கள் பெயருக்குப் பின்னே ஜாதியின் பெயரை இணைத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலோ அது இல்லை. இங்கே அனைத்து சாதிகளும் ஒன்றுதான். ஆனால் அவரோ தன் சாதியின் பெயரை பின்னால் இணைத்துக் கொண்டதற்குக் காரணம் தன்னைப் பலரிடம் கொண்டு சேர்ப்பதற்காக.

• அதன் பின்னர்த் தன் காதலனை தேடிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றார். அங்கே செல்கையிலும் காணொளியில் அந்தக் குறிப்பிட்ட நபரின் பெயரை கூறி, அவரது பெயரைத் தொடர்ந்து நான்கைந்து கெட்ட வார்த்தைகளைக் கூறி அவரை அர்ச்சித்து “எங்கேடா இருக்கிறாய்??” எனக் கூறுவார்.

• நடுரோட்டில் அமர்ந்து கொண்டு தர்ணா செய்வார். ஏதாவது ஒரு டீக்கடைக்கு (அ) ஹோட்டலுக்குச் சென்று அமர்ந்துகொண்டு, தனக்கு உணவு இலவசமாகத் தரவேண்டும், தான் செயலியில் புகழ் பெற்றவர் எனக் கூறி, சட்டமாக அமர்ந்துகொண்டு விதண்டாவாதம் செய்வார்.

• “மனநோயாளி” எனக் கண்ணம்மாவிற்குப் பலர் பட்டம் சூட்டி இருந்தாலும் அவளது பிரச்சனை என்ன எனத் தெரிந்து, அதைத் தீர்த்துவைக்க முன்வந்தது ஒரு தனியார் நிறுவனம். “செப்புவதெல்லாம் மெய்” போன்றதொரு நிகழ்ச்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, என்ன பிரச்சனை என விசாரிக்க, அவள் “ஆர்த்தி” என இன்னொரு பெண்ணைக் குற்றம் சாட்டினார். அதாவது தானும் பாரதியும் காதலித்ததாகவும் அதற்கு ஆர்த்தி என்ற பெண் தடையாக இருந்ததாகவும் பாரதியை அவர் தான் கடத்தி வைத்துக்கொண்டு தன்னுடன் சேரவிடாமல் தடுப்பதாகவும் தனக்கு நீதி வழங்குமாறு கோரிக்கை வைக்க வைத்தாள். மேலும் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணைப் பல ஆண்களுடன் தொடர்பு இருக்கிறது எனப் பலவாறாகக் குற்றம்சாட்டினார்.

• இவ்வாறாகப் பல பல நாடகங்களை அரங்கேற்றி, ஒருகட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் சர்ச்சையான காரியங்களைப் பேசி பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட அவர்கள் வீடு தேடி வந்து, அவளை எச்சரித்து விட்டு செல்ல, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காகக் கைது செய்திருந்தது தமிழகக் காவல்துறை.

இப்போது கண்ணம்மா சிறையில் இருக்கிறாள். அந்தச் சுவற்றை வெறித்துப் பார்த்து, தனக்குள்ளாகவே ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே இருப்பாள்.

இப்போது கழிவுநீரில் கூத்தடிக்கும் உயிரினங்களாக மூர்த்தி, ‘ரவுடி பேபி’ சத்யா, கண்ணம்மா, ‘நமஸ்தேவுங்க’ கலா என இன்னும் பலர் மாறிவிட்டனர் இவர்கள் அனைவரையும் குறித்து ஒரு சமூக ஆர்வலர் காவல் துறையில் புகார் அளித்திருக்க, அவரது புகாரின் பேரில் அனைவரையும் கைது செய்துவிட்டனர் காவல்துறையினர்.

வெண்ணிலாவையும் சாரதாவையும் காவலர்கள் கைது செய்ய நினைத்தாலும் அவர்கள் அளவில் பெரிதாக எந்தப் பாதிப்பும் நேரவில்லை என்பதால் அவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. அர்ஜுன்-ரோஜா கைது செய்ய வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டுதான் இருந்தது எனலாம்.

ஆனால் இதை எதையும் அறியாமல் அவர்கள் தொடர்ந்து தங்களது காணொளிகளைப் பதிவேற்றியவாறு இருந்தனர். அவர்களது ஒட்டுமொத்த சாம்ராஜ்யமும் சரியும் வேளையும் வந்தது.

அது எவ்வாறு என்றால் குட்டி விவேக் என்னும் ஒரு 16 வயது சிறுவன் 13 வயது சிறுமியுடன் இணைந்து இவர்களைப் போன்றே செயலியில் வீடியோக்களைப் பதிவேற்றிக் கொண்டிருந்தான். அது சமுதாயச் சீர்கேட்டை ஏற்படுத்தும், பலருக்கு ஒரு தவறான உதாரணமாகச் சென்று சேரும் எனச் சமூக ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்ததால் அவர்கள் இருவரையும் கைதுசெய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர் காவல்துறையினர்.

அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த அர்ஜூன் மற்றும் ரோஜாவை கைது செய்யுமாறு உத்தரவிட்டார் மாநகரக் காவல் ஆணையர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சிலரை நகரின் வெளியே உள்ள ஒரு திடலில் தனித்தனியே அறைகள் அமைக்கப்பட்டுக் காவலில் வைத்தனர்.

அங்கே கப்பிள் வீடியோக்கள் செய்பவர்கள், அஷ்ட கோணலாக முகத்தைப் பதிவிட்டுத் தங்களைப் பாடி ஷேமீங் செய்வதற்கு வழி வகுப்பவர்கள், குழந்தைகளை வயதுக்கு மீறிய வீடியோக்களைப் பதிவிட வற்புறுத்துபவர்கள் என இவ்வாறாகப் பல பிரிவுகளைச் சேர்ந்த பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்குத் தாங்கள் கொண்ட நோயின் வீரியம் புரியாது; தங்கள் மீது பொறாமை கொண்ட யாரோ ஒருவர்தான் தங்களை அவ்விடம் அடைத்து வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, அறைக்குள்ளேயே கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் முழுவதும் அவர்களது கையில் அலைபேசியோ கிங்காங் செயலியை கொடுக்கப்படவில்லை; அனைவரும் தங்களது கூச்சலில் ஓய்ந்து போயினர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவைக்கூட உண்ணாமல் தர்ணா செய்யத் தொடங்கினர். தங்களுக்கு அலைபேசி தந்தால் மட்டுமே உணவை எடுத்துக் கொள்வோம் உறுதியாகக் கூறிவிட, “அப்படியா?! அப்படியானால் தாங்கள் அவ்வளவு சிரமத்துடன் உண்ண வேண்டாம்... இவ்வாறே கூச்சலிட்டுக் கொண்டு இருங்கள்...” என வற்புறுத்தாமல் அவ்விடமிருந்து புறப்பட்டு விட்டார் காவல் துறை ஆய்வாளர்.

இப்படியாகப் பல மணிநேரமாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டது. இவ்வளவு நேரம் ஆர்வமாகத் திரைப்படத்தைக் கண்டுகளித்து, அதனுள்ளே சென்று விடுவதைப் போன்ற திறத்தில் இருந்தவர்களுக்குப் போக்கு தடைபடவும் வெகுண்டெழுந்து விட்டனர்.

சற்று நேரத்திற்கு முன்னர்த் திரைப்படத்தைத் தொடர்ந்து ஒளிபரப்புமாறு பிடிவாதமாகக் கோரிக்கை விடுத்த பெரியவர், “ஏன்டா உங்களுக்குக் கொஞ்சமாச்சு மனசாட்சி இருக்குதா?? படம் எவ்ளோ ஆர்வமா ஓடிட்டு இருந்துது?? எங்க எல்லாரையும் ஒரு கிரவுண்டுல கொண்டந்து போட்டிருக்க மாதிரி அவியளையும் கொண்டு போய்ப் போட்டிருந்தானுவ... என்னதான் நடக்கும்ன்னு பார்த்துட்டு இருந்தோம்.. நல்ல கட்டத்துல போய் ஆ பண்ணி தொலைசிட்டியே...” என எழுந்து கத்தத் தொடங்கிவிட, இம்முறை அனைவருமே அவருக்கு ஆதரவாகக் கூச்சலிடத் தொடங்கி விட்டனர்.

“ஏமியா... படத்தைப் போடுமய்யா... இவ்ளோ தான் இன்னைக்கு, நாளைக்கு வாங்கனு சொல்லிட்டியருன்னா யாரும் வீட்டுக்குப் போவாம இங்கனயே தூங்கிருவோம்.. பாத்துக்கிடும்... வீட்டுல சமைச்சிட்டு இருந்த ஆளுக்களைக் கூட்டிட்டு வந்து படத்தைப் போட்டு காட்டிட்டு ஆர்வமா பார்த்துட்டு இருக்கும் போது பாதியிலேயே போவ சொல்லுதியரு.. நல்லாவா இருக்கு??” எனக் கூட்டத்திலிருந்த சில பெண்கள் குரலை உயர்த்திப் பேச, “பாரேன்..” என ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டனர் பெரியவர்கள்.

ஊர் மக்களின் கூச்சல் அதிகமாவதைப் பார்த்த பஞ்சாயத்து ஊழியர்கள், “ஏ.. சத்தம் போடாதிய.. ஒரு நிமிஷம்.. ஷ்... ஷ்... ஒரு நிமிஷம்... ஒரே ஒரு நிமிஷம்... நான் சொல்லுததை மட்டும் கேட்டுட்டு அடுத்து பேசுங்க...” எனப் பெரும்சிரமப்பட்டுத் தனது கீச்சுக்குரலால் கத்த, சிலர் அதைக் கவனிக்கத் தொடங்க, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசத் தொடங்கிவிட்டார்.

அவர் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என உணர்ந்த மற்றவர்களும் அவர் கூற வருவது யாதெனச் செவிமடுத்து கேட்கத் துவங்கி விட்டனர்.

“இங்க பாருங்க... எபிசொட் எபிசோடா போடணும்னு தான் கவர்மெண்டு சொல்லிருந்துது... நீங்க எல்லாரும் கேட்டதுனால தான் மொத்தமா போடுதோம்... மணி பத்தாச்சுது.. ஆனா இதுக்கு மேலதான் முக்கியமான கட்டம் வரப் போவுது... அதை எல்லாத்தையும் பொறுமையா கேட்டு, மண்டைக்குள்ள ஏத்திக்கணும்ன்னா வெறும் வயித்தோட இருந்தா முடியாது.. அதனால எல்லாரும் முதல்ல சாப்பிட்டுட்டு வாங்க..” என அவர் முழுவதுமாகக் கூறி முடிக்கும் முன்னரே, “அய்யா... ராசா... வீட்டுல சோத்துக்கு உலையைப் போடும் முன்னேயே வீடு வீடா தட்டி கூட்டியாந்துட்டாங்க... இனிமே நாங்க வீட்டுக்குப் போயி, இருட்டுக்குள்ள தடவி தடவி சமையல் பண்ணி சாப்பிட்டுட்டு எப்போ வர??” எனக் குறுக்கிட்டனர் சிலர்.

“யக்கா... முழுசா கேளுங்க... நான் இன்னும் சொல்லியே முடிக்கல... நல்லா சாப்பிட்டுட்டு இருந்தாதான் விழிப்பா அவிய என்ன சொல்ல வாராவன்னு கேக்க முடியும்ம்... அதுக்கு எல்லாரும் முதல்ல சாப்பிடணும்... ஆனா எல்லாரும் வீட்டுக்குப் போயிட்டு வரணும்ன்னா நேராயிரும்... அதான் நம்ம ப்ரெசிடென்ட் அண்ணாச்சி ஓட்டல்ல இருந்து எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காவ... க்ரவுண்ட் கேட்டுல குட்டி யானையில சாப்பாடு வச்சிருக்காங்க... இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா இருக்கு... ஒரு குடும்பத்துக்கு ஒருத்தர் வாங்க... உங்க வீட்டுக்கு எத்தனை பார்சல் வேணும், என்னென்ன வேணும்ன்னு சொல்லி இங்கே எழுதி கையெழுத்தை போட்டுட்டு சீட்டு வாங்கிட்டு போய் அங்கே போய்ப் பார்சல் வாங்கிக்கோங்க... நாளைக்குக் காலையில பத்து மணிக்கு எல்லார் வீட்டுக்கும் வருவோம்... துட்டை அப்போ வாங்கிக்கிடுதோம்..” என அவர் கூறி முடிக்க, “ச்சேரி... அப்போ ச்சேரி...” என்றனர் அனைவரும்.

அவர் கூறியபடி, அனைவரும் தங்களுக்குத் தேவையான உணவுகளை வாங்கிச் சென்று கும்பல் கும்பலாக அமர்ந்து உண்ணத் தொடங்க, பலருக்கு இது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது. பெரியவர்களும் நடுத்தர வயதினரும் தங்களது பள்ளிக் காலங்களையும் பால்யக் காலங்களையும் அசைபோட்டனர்.

தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு இது ஒரு மீண்டும் கிடைக்காத ஒரு அரியவகை நினைவாகிப் போனது. இருபதாம் நூற்றாண்டில் பிறந்து, (ஜெயில்)‘செல்’போன் மட்டுமே அனைத்துமாகிப் போன குழந்தைகளுக்கு, “Its a different experience... thrilling but interesting...”.

இவ்வாறாகச் சிரித்து, சிலிர்த்து, சிலாகித்து உண்டு இரவு உணவை உண்டுவிட்டு மீண்டும் தங்களது இடங்களுக்கே திரும்பியவர்கள், “இந்தச் சத்யா ஏன்கா இப்படிப் பண்ணுதா?? பிள்ளைய, புருஷன்னு எல்லாரும் நல்லாதானே இருக்காவ... பிறகு என்னவாம்??”, “இந்தச் சாரதா என்ன ஆனா?? அவளைக் காட்டவே இல்லையே.. ஒருவேளை எதுவும் அக்சிடென்ட் ஆகி செத்துக் கித்துப் போயிட்டாளோ... கூட வயசுப் பிள்ள வேற இருந்துச்சே... அதை என்ன பண்ணுனாளோ??”, “கண்ணம்மா மூஞ்சியைப் பார்த்தாலே பிடிக்கலம்மா எனக்கு... அவளும் அவளோட பேச்சும்... ஒழுங்கா படிச்சி ஒரு நல்ல வேலைக்குப் போக வேண்டியதுதானே... என்னத்த பேசிட்டு திரியுது??”, “அர்ஜுன் – ரோஜா நல்லாதான் பண்ணுதாவ... ஆனா நாலு சுவத்துக்குள்ள நடக்கதை வெளியே படம் போட்டு காட்டுதது நல்லாவா இருக்கு?? நல்லா இருக்கவியளுக்குச் சரி, கொஞ்சம் வாழ்க்கை சுமாரா இருக்கவியளுக்கு வருத்தமா தான இருக்கும்??, “இந்த வெண்ணிலா அந்தப் பயலை எதுவும் செய்யாம இருக்கணும்.. மத்தவியளுக்கு இந்தப் பிள்ள பரவால்ல...” எனத் தங்களுக்குள் விவாதித்தவாறே வந்து அமர்ந்தனர். அனைவரும் வந்து அமர்ந்த பின்னர்த் திரைப்படம் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்பட்டது.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

22

திரைப்படத்தில்...

‘டக்... டக்...’ என்கிற பூட்ஸ் ஒலியுடன் அவ்விடமிருந்து நகர்ந்த காவல்துறை ஆய்வாளர் அங்கே காவலுக்காக நின்று கொண்டிருந்த துணைக் காவலர்களிடம், “நாதன்... இவங்களைப் பத்திரமா பார்த்துக்கோங்க.. சாப்பாடு, ஸ்நாக்ஸ், ஜூஸ்ன்னு எது கேட்டாலும் வாங்கிக் கொடுங்க.. தப்பித் தவறி கூட ஆண்ட்ராயிட் போனைக் கொடுத்துடாதீங்க... அப்புறம் நம்ம வேலை போயிடும் பார்த்துக்கோங்க...” எனக் கூறிவிட்டுப் பாதிதூரம் வரை சென்றுவிட்டார்.

அதன் பின்னர் என்ன நினைத்தாரோ மீண்டும் அந்தக் காவலர்களிடமே வந்தார். “தம்பிகளா... நீங்க எல்லாரும் ஆன்ட்ராயிட் போன்தானே வச்சிருக்கிறீங்க...” எனக் கேட்க, “ஆமா சார்...” என்றனர் அனைவரும் ஒருசேர.

“எல்லாத்தையும் எடுங்க..” என அவர் கூறவும் அதிர்ந்து விட்டனர் அனைவரும்.

“சார்..” என அவர்கள் தயங்க, “தம்பிகளா.. அவங்க என்ன வேணும்ன்னாலும் சொல்லி உங்க மனசை மாத்துறதுக்கு வாய்ப்பு இருக்குது.. காசுன்னு இல்ல.. சிம்பதி க்ரியேட் பண்ணலாம்.. என்ன வேணாலும் பண்ணலாம்.. அதனால நீங்க உங்க போனைக் கொடுங்க... நான் ஸ்ட்ரிக்ட்ங்கறதால தான் கவர்மென்ட் என்னை இதுக்கு இன்சார்ஜா அப்பாயின் பண்ணியிருக்கிறாங்க.. சாயந்தரம் ஜெனிதா மேடம் வருவாங்க.. அதுவரைக்கும் இவங்களைப் பத்திரமா பார்த்துக்கோங்க போதும்... அதுக்கு அப்புறம் அவங்க எல்லாரையும் டீல் பண்ணிக்குவாங்க... இன்னும் ரெண்டு மூணு பெரிய பெரிய பார்டிகளை அரெஸ்ட் பண்ண போயிருக்கிறாங்க நம்ம டிபார்ட்மென்ட் ஆளுங்க.. அவங்களும் வந்து எதாவது கத்திட்டு இருந்தா நீங்க மனசு மாறிடக் கூடாது இல்லையா.. அதனால தான் சொல்றேன்.. எல்லாரோட போனையும் தாங்க..” என அவர் கண்டிப்புடன் கூற, அனைவரும் தங்களது அலைபேசிகளை எடுத்து அங்கிருந்த மேஜையில் வைத்தனர்.

அவர்கள் வேறேதும் அலைபேசி வைத்திருக்கின்றனரா என மீண்டும் ஒருதடவை சோதித்து, உறுதி செய்து கொண்டவர் தன்னிடமிருந்த பட்டன் கொண்ட அலைபேசியை நாதனிடம் கொடுத்து, “நாதன்... இதுல ஆயிரம் ரூபாய் ரீசார்ஜ் பண்ணியிருக்கிறேன்... சார்ஜ் புல்லா இருக்குது... எப்படியும் ரெண்டு நாளுக்குத் தாக்குப் பிடிக்கும்... ஜெனிதா மேடம் வர்ற வரைக்கும் எதுவா இருந்தாலும் இந்தப் போனையே யூஸ் பண்ணிக்கோங்க... என்கிட்டே பேசுறதா இருந்தாலும் வீட்டாளுங்களுக்குப் பேசுறதா இருந்தாலும் இதிலேயே பேசிக்கலாம்... புரிஞ்சிதா??” எனக் கேட்க, “எஸ் சார்..” எனச் சல்யூட் அடித்தனர் அனைவரும்.

“குட்... கீப் இட் அப்...” எனக் கூறிவிட்டு அவர் சென்றுவிட, “நாதா... என்னடா இவர் ஓவரா பில்டப் பண்ணிட்டு இருக்கிறாரு.. இவங்க என்ன அவ்ளோ பெரிய குத்தமா பண்ணிட்டாங்க?? ஏதோ இன்டர்நேஷனல் லெவல்ல கிரைம் பண்ணிட்ட மாதிரி ஸீன் போட்டுட்டு இருக்கிறாரு.. போன் கொடுக்கக் கூடாதாம்... நாமளும் போன் யூஸ் பண்ணக் கூடாதாம்.. கேட்கவே விசித்திரமா இருக்குது...” எனக் கேட்டான் ஒருவன்.

“என்னவோ.. ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. ஏதோ சோசியல் ஆக்டிவிஸ்ட் கொடுத்த கம்ப்ளெயிண்ட்டாம்... சிஎம்க்கு வேண்டப்பட்ட ஆளுங்க போல... நமக்கேன் வம்பு?? நாம பாட்டுக்கு வந்த வேலையைப் பார்த்துட்டு அமைதியா இருப்போம்..” என நாதன் பின்வாங்க, “டேய்.. இவங்களைப் பார்த்தா பெருசா சைக்கோ மாதிரி ஒண்ணும் தெரியல... ரொம்பச் சாதாரண ஆளுங்கதான்... கிங்காங் கோஷ்டி... ஒருவேளை அந்த ஆ பேமஸா இருக்கிறதால வேணும்ன்னே இப்படியெல்லாம் பண்றாங்களோ இதுக்குப் பின்னாடி எதுவும் அரசியல் இருக்குமோ??” எனக் கேட்டான் இன்னொருவன்.

“பெரிய ஜேம்ஸ்பாண்ட் அளவுக்குலாம் யோசிக்காத... நமக்குக் கொடுத்தது இந்த வேலை.. அதை மட்டும் செஞ்சிட்டு போவோம்... நமக்கு ஏன் தேவையில்லாத வேலை எல்லாம்...” என அனைவரும் ஜகா வாங்கிவிட, “நீங்க போங்கடா... என்னால சம்பளத்துக்காக மனசாட்சி இல்லாத வேலையெல்லாம் செய்ய முடியாது.. நான் அவங்ககிட்டே என்ன ஏதுன்னு ஒரு வார்த்தையாவது பேசிட்டு வந்துடறேன்.. இல்லைன்னா என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும்...” என முன்சென்றான் முகுந்த்.

“அதுக்கு மேல உன்னோட விருப்பம்...” என அனைவரும் தத்தமது பணிகளைத் தொடர, முதலில் அவன் சென்று நின்றது, கண்ணம்மாவின் செல் முன்னர்தான்.

“ம்மா... என்னாச்சு?? ஏன் உங்களைப் பிடிச்சிட்டு இங்கே வச்சிருக்கிறீங்க?” என அவன் மெல்லிய குரலில் கேட்க, “பாரதி... வந்துட்டியா?! நீ தானே என் பாரதி... இவனுங்ககிட்டே இருந்து என்னைக் காப்பாத்த வந்துட்ட தானே...” என ஓடி வந்து அவனது கையைப் பற்றிக் கொள்ள முற்பட்டாள் அவள்.

அந்த எதிர்பாராத செய்கையால் பதறிப் போனவன் இரண்டடி பின்னால் நகர, “பாரதி... வா பாரதி... நாம இங்கேயே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப் போவோம்..” என அவள் அழைக்க, “ஆத்தீ... நானில்ல...” என அங்கிருந்து நகர்ந்தவன்; அடுத்தச் செல்லை நோக்கிச் சென்றான்.

வாசலிலிருந்த கம்பியின் வழியே உள்ளே உற்றுநோக்க, ஒருவரையும் காணவில்லை. “என்னாச்சு?? யாரையும் காணலை?? ஒருவேளை ஓடிட்டாங்களோ?? அவர் வந்தா எல்லாரையும் சஸ்பென்ட் பண்ணிடுவாரே... அவனுங்க வேற பெரிய கைன்னு சொன்னாங்களே..” எனத் தனக்குள் அஞ்சியவாறே, “ஹலோ... ஹலோ.. யாராவது இருக்கிறீங்களா??” எனக் குரல் கொடுக்க, “நமஸ்தேவுங்கோ...” அறையின் சுற்றுச் சுவரிலிருந்து வெடுக்கெனத் தலையை நீட்டினாள் ‘நமஸ்தேவுங்கோ’ கலா.

இதை எதிர்பார்த்திராதவன்; தடுமாறி கீழே விழுந்துவிட, கொல்லெனச் சிரித்தனர் மற்ற காவலர்கள். “இருங்கடா... வந்து உங்களைக் கவனிச்சுக்கிறேன்...” என மனதிற்குள் கருவியவாறே அங்கிருந்து நகர்ந்தவன்; அடுத்தச் செல்லுக்குள் எட்டிப் பார்க்க, ஒருவன் உள்ளே இறந்து கிடந்தான்.

“அய்யயோ... டேய்... இங்கே வாங்கடா... இவன் செத்துக் கிடக்கிறான்டா... டேய்... இங்க பாருங்கடா...” என முகுந்த் பதற, மற்ற காவலர்களும் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.

“டேய்... சாவியை எடுத்துத் திறங்கடா.. உள்ளே போய் என்னாச்சுன்னு பார்ப்போம்...” என முகுந்த் அவசரப்படுத்த, சற்றே தயங்கினான் நாதன்.

“இப்படி மனசாட்சியையும் மனிதாபிமானத்தையும் அடகு வச்சி சம்பாதிச்சு என்னடா பண்ணப் போறீங்க?? நீங்கல்லாம் என்னதான் மனுஷங்களோ..” எனத் திட்டியவாறே சாவியை எடுத்து வந்து தானே திறந்தான் முகுந்த்.

காவலர் படையே உள்ளே நுழைய, அவனருகே அமர்ந்த முகுந்த், “தம்பி... தம்பி... எழுந்துருடா... தம்பி... டேய்...” என அவனது கன்னத்தைத் தட்ட, ஒருவன் தண்ணீர் எடுத்து வந்தான். இவ்வாறு பதட்டத்துடன் நிகழ்ந்து கொண்டிருக்க, அவனது மார்பு மேலும் கீழும் மெலிதாக ஏறி இறங்குவதைக் கவனித்து விட்டான் நாதன்.

“டேய்... மூச்சு இருக்குதுடா...” என அவன் கூற, இறந்தவன் போலப் படுத்துக் கொண்டிருந்தவன் பெருங்குரலுடன் சிரித்தவாறே எழுந்து அமர்ந்தான்.

“நம்பிட்டீங்களா?! சும்மா பிரான்க் பண்ணுனேன்...” எனக் கூறிவிட்டு அவன் ஓடத் துவங்க, அந்தச் சூழலை கிரகித்துக் கொள்ளவே அனைவருக்கும் சில நொடிகள் பிடித்தது. அதற்குள் அவன் குறிப்பிட்ட கட்டிடத்தைக் கடந்திருந்தான்.

“எல்லாம் உன்னால வந்தது... மனிதாபிமானமாம்...” என முகுந்தைத் திட்டியவாறே அவனைப் பின்தொடர்ந்து ஓடினர் அனைவரும்.

அனைவரும் தற்போதுதான் பணியில் சேர்ந்த இளம்காவலர்களாக இருந்ததால் அவன் அந்த மைதானத்தின் முனையை அடையும் முன்னரே மடக்கிப் பிடித்து விட்டனர்.

தன்னை முட்டாளாக்கி விட்டதற்காக முகுந்த் சினந்து, அவனை அடிக்கப் பாய, “முகுந்தா.. விடு... இப்படித்தான் ஏடாகூடமா எதாவது பண்ணுவாங்கன்னு வேணாம்ன்னு சொன்னேன்.. நீ கேட்டாதானே... இவங்க பண்ற அட்டூழியத்தை அப்பபோ பார்த்திருக்கிறேன்.. பேஸ்புக் டிவியில வந்துச்சு... அதான் அப்பவே சொன்னேன்.. சரி விடு.. பார்த்துக்கலாம்...” என அவனைத் தடுத்து, கைதியை அழைத்து வந்து குறிப்பிட்ட செல்லில் அடைத்து விட்டனர்.

அவர்கள் அவனை அடைத்து வந்த அடுத்த நொடியே ஐந்தாறு ஜீப்புகள் தொடர்ச்சியாக வரும் ஓசை கேட்டது. “ச்சே... இப்போதான் ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு நெனச்சோம்... அதுக்குள்ளே வந்துட்டாங்க... எல்லாம் உன்னால வந்தது...” என அனைவரும் முகுந்தை கடிந்து கொண்டனர்.

அங்கே நான்கு பேரை கண்களைக் கட்டி அழைத்து வந்தனர். “ஹலோ... என்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்க?? நான் எவ்ளோ பெரிய அல்ட்ரா மாடல் தெரியுமா? என்னோட ரேன்ஜ் என்னனு தெரிஞ்சா இப்படியெல்லாம் பண்ணவே மாட்டீங்க... ஒரு பொண்ணுக்கு இந்த நாட்டுல பாதுகாப்பே இல்லையா?? உங்களை மாதிரி ஆளுங்க இருக்கிறதாலதான் நாட்டுல மழையே பெய்ய மாட்டுது... நெல்லும் சரியா விளைய மாட்டுது...” என ஒருவள் கத்திக் கொண்டே வர, “யாருய்யா இது... சரியான க்ரிஞ்சா பேசிட்டு வருது??” எனத் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர் காவலர்கள்.

“இவங்களைத் தெரியாதா??! இவங்கதான் உலகத்தின் சிறந்த அல்ட்ரா மாடல் ஹீரா மிதுன்... உலகத்துல இருக்கிற எல்லாரும் இவங்களைப் பார்த்துதான் காப்பியடிக்கிறாங்கன்னு அப்பப்போ ட்வீட் போட்டு ஏதாவது க்ரிஞ்சா அட்டென்ஷன் சீக் பண்ணிட்டு இருப்பாங்க....” என ஒருவன் கூற, அனைவரும் சத்தமாகச் சிரித்து விட்டனர்.

கணவன் – மனைவி இருவரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட, “பாருங்கடா.. இவங்கதான் செலிபிரிட்டி கப்பிள்... உலகத்துல இருக்கிற அத்தனை கெட்ட வார்த்தைக்கும் காப்பி ரைட் வாங்கினது இவன்தான்.. அந்தம்மா ஜாடிக்கேத்த மூடி...” என்றான் ஒருவன். அவன் கூறியதற்கேற்ப அழைத்து வரப்பட்டவனது மனைவியும், “என்னங்க நெனச்சிட்டு இருக்கிறீங்க?? என் ஹஸ்பன்ட் எவ்ளோ பெரிய ஹார்ட் ஒர்க்கர் தெரியுமா?? ஒருநாளுக்கு ஒரு மணிநேரம்தான் தூங்குவார்... மத்த நேரம் எல்லாம் தூங்காம உழைச்சுதான் கார் எல்லாம் வாங்கியிருக்கிறோம்... என்ன தேவையில்லாம பேசுறீங்க? எங்ககிட்டே சொகுசு கார் அப்படிங்கறது கிடையவே கிடையாது... எங்ககிட்டே மூணே மூணு ஆடி கார் மட்டும்தான் இருக்குது.. மத்தபடி சொகுசு கார் எங்ககிட்டே இல்லவே இல்ல...” எனக் கூவி கொண்டே செல்ல, ஒருவரையொருவர் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டனர்.

அடுத்து வந்த பெண் அமைதியாக நடக்க, “சும்மாவா சொன்னாங்க... ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்ன்னு...” எனத் தோன்றியது அனைவருக்கும்.

இவர்கள் அனைவரும் வேலையில் சதா பிஸியாக இருப்பதால் இதுபோன்ற கேலிக்கூத்துகளை எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

அழைத்து வந்திருந்த நால்வரையும் தனித்தனி சிறையில் அடைத்த பின்னர்க் காவலர் குழுமத்திடம் வந்த காவல் ஆய்வாளர் அனைவரையும் கவனமாகக் கண்காணித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றார்.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் அவ்வப்போது அங்கிருந்த அனைவரிடமும் உண்பதற்கு ஏதாவது வேண்டுமா என வினவ, அனைவரும் எதுவும் வேண்டாமெனவும் தங்களுக்கு அலைபேசி தந்தால் போதுமெனவும் கூறிவிட, அதற்குமேல் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டனர் காவல்துறை அன்பர்கள்.

சில மணிநேரத்திலேயே வெண்ணிலாவும், சாரதா மற்றும் வெண்பாவும் அழைத்து வரப்பட்டிருந்தனர். நேரமாக ஆக அனைவரது கூச்சலும் அதிகமாகியதே தவிரக் குறைந்தபாடில்லை. ஆகவே காவலர் அனைவரும் பத்திரமாக வெளியே வந்து நின்று கொண்டனர்.

இரவு முழுவதும் அவர்களின் ஓலத்திலேயே கழிய, எப்போதும் ஓய்வு நேரங்களில் அலைபேசியிலேயே நேரம் செலவிடும் நாதன், முகுந்த் மற்றும் தோழர்கள் இப்போது அலைபேசி எதுவும் கைவசம் இல்லாத காரணத்தால் தங்களுக்குள் பேசியவாறே விழித்திருந்தனர். அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் லீலைகள் குறித்துத் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு நேரத்தைக் கழித்தனர். அது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது.

இரவு மணிக்கொரு முறை அழைத்துப் பேசிய காவல் ஆய்வாளர்; அனைவரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் அது அரசின் நேரடி கவனத்தின் கீழே நிறைவேற்றப்படும் அதிமுக்கியமானதொரு மிஷன் எனவும் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.

ஒருவாறாக இரவு கழிந்து, கதிரவனின் ஒளிக்கதிர்கள் பிரவாகிக்கத் தொடங்க, கிழக்கு வெளுத்தது. சோர்வில் தூங்கிப் போயிருந்த அனைவரும் விடிந்து விட்டதை அறிந்து கூச்சலிடத் தொடங்கிவிட்டனர்.

அப்போது ஐந்தாறு அரசு வாகனங்கள் கட்டடத்தின் முன்வந்து நின்றன. அவற்றிலிருந்து அரசு அதிகாரிகள் இறங்க, கடைசியாக நின்ற வாகனத்திலிருந்து இறங்கினார் நாட்டின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர்.ஜெனிதா.

அவர் நிகழ்த்தப் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்கச் செயலுக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் உடனிருந்த அதிகாரிகள் கைகளில் பத்திரமாக ஏந்தி நிற்க, “போகலாம்...” என்றவாறே கம்பீரத்துடன் உள்ளே நுழைந்தார்.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

23

சம்பந்தப்பட்ட நபர்கள் அடைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு அறையாகக் கடந்தவர், காவல்துறை அதிகாரியிடம் “சார்... இவங்க ஏதாவது சாப்பிட்டாங்களா??” என வினவ, “எதாவது சாப்பிட்டாங்களா??” என நாதனைப் பார்த்தார் அவர்.

“இல்லை சார்... நெறைய தடவை கேட்டோம்... எதுவும் வேணாம்ன்னு சொல்லிட்டாங்க... போன் மட்டும் தந்தாப் போதும், சாப்பாடே வேணாம்ன்னு கூச்சல் போட்டுட்டு இருந்தாங்க..” என அவன் கூற, இதழோரம் மெலிதாகக் கேலிப்புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு நடந்தனர் ஜெனிதாவும் அதிகாரியான ஜுபினும்.

“இவங்களை மாதிரி ஆளுங்களை என்ன பண்றதுன்னே தெரியல ஜெனிதா... சாப்பாடே வேணாம்ன்னு சொல்றாங்க அப்படின்னா எவ்ளோ திமிர் இருக்கணும்?? அப்படி என்னதான் இருக்குதோ அந்த வீடியோல?? இப்போ இவங்க பேன் பேன்னு பரிதவிக்கிற யாரும் இவன்களுக்காகச் சாப்பிடாம தூங்காம் உக்கார்ந்து வெயிட் பண்ணிட்டு இருக்கப் போறது கிடையாது.. வீடியோ வருதான்னு வெயிட் பண்ணி பார்ப்பாங்க... ரெண்டு மூணு தடவை ஓபன் பண்ணி செக் பண்ணுவாங்க.. வரலையா க்ளோஸ் பண்ணிட்டு போய்டுவாங்க இல்ல அடுத்த வீடியோவைப் பார்க்க போயிருக்கிறாங்க..” என ஜுபின் கூற, “இதெல்லாம் தெரிஞ்சா இவங்க ஏன் சார் இங்கே இருக்கப் போறாங்க?? இவங்களைச் சொல்லி தப்பில்ல... எல்லாம் இவங்களோட சூழ்நிலை, நாம வாழற சொசைட்டி, சுத்தி இருக்கிற மக்கள் எல்லாமே தான் காரணம்..” என விரக்தியாகப் பேசினார் ஜெனிதா.

“புரியுது மேடம்... இவங்களை எப்படி டீல் பண்ணப் போறீங்க? ஷாக் ட்ரீட்மென்ட் எதாவது கொடுக்கப் போறீங்களா இல்ல வேற எதாவது புது டெக்னாலஜி மூலமா கவுன்சலிங் கொடுக்கப் போறீங்களா??” என்ற ஜுபினின் கேள்விக்கு எதுவும் பேசாமல் மென்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு நடந்தார் ஜெனிதா.

“என்ன மேம்? என்ன சிரிக்கிறீங்க??” என ஜுபின் ஒன்றும் புரியாமல் வினவ, “நான் இவங்களை எதுவும் பண்ணப் போறதில்ல சார்... ஜஸ்ட் அவங்க வீடியோசை அவங்களைப் பார்க்க வைக்கப் போறேன்.. அவ்ளோதான்... அந்த வீடியோக்களோட தாக்கம், அதோட இன்னொரு பக்கத்தைக் காட்டப் போறேன்.. அவ்ளோதான்.. வேற எதுவும் பெருசா பண்ணப் போறதில்ல... மிஷன் வச்சு அக்கம்ப்ளிஷ் பண்ற அளவுக்கு இவங்க எல்லாம் தேசத்துரோகிகள், சைக்கோ கில்லர்சும் இல்ல... ஜஸ்ட் ஒரு கியூரியாசிட்டியில உள்ளே வந்து அறியாம மாட்டிக்கிட்டு வெளியே வர முடியாம தவிக்கிறவங்க... சோ இந்தச் சிம்பிள் ட்ரீட்மென்ட் போதும்ன்னு நெனைக்கிறேன்...” எனக் கூறிவிட்டு அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார் அவர்.

“ஜுபின்... எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லுங்க... அவங்க எப்படியும் இப்போதைக்குச் சாப்பிட மாட்டாங்க.. ஆனா டயர்டாகி நமக்குப் பசிக்கும் இல்லையா?!” என ஜெனிதா கூறவும், “டயர்டாகி என்றால்?! ஒருவேளை லத்தியால் அனைவரையும் தாக்கப் போகிறாரா??” என்பதாகச் சந்தேகத்துடன் பார்த்தார் ஜுபின்.

“ச்சில் ஜுபின்.. நான் சைக்கியார்டிஸ்ட்.. அவ்ளோ ஹார்ஷா நடந்துக்க மாட்டேன்.. இங்கே டயர்டாகும்ன்னு சொன்னதுக்கான ரீசன் அவங்க பண்ணப் போற கூத்துகளை வேடிக்கை பார்க்கணுமே.. அதைத் தான் சொன்னேன்..” என ஜெனிதா மெலிதாகப் புன்னகைக்க, அவர் கூறியவாறே அனைவருக்கும் உணவு எடுத்து வரப்பட்டது.

உணவு வருவதற்கான இடைவேளையில் ஒவ்வொரு அறையின் முன்னரும் சென்று நின்ற ஜெனிதா, “ஹாய்... எப்படி இருக்கிறீங்க??” என்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ரியாக்ட் செய்தனர்.

ஒருவர் ‘நமஸ்தேவுங்கோ..’ எனக் கூறிப் பயமுறுத்தினால், மற்றொருவர் பாரதியை என்னிடம் மீட்டுக் கொண்டு என மன்றாடினார். ஒருவர் நாங்கள் செய்த தவறென்ன, எதற்காக எங்களை இவ்விடம் அடைத்து வைத்திருக்கின்றீர்கள் எனக் கூறி வாதத்தில் ஈடுபட, மற்றொருவர் கத்தி கூச்சலிடத் தொடங்கிவிட்டார். அனைவர்க்கும் அல்டிமேட்டாக ஒருவர், “நான் யாரு தெரியுமா?? நான் அல்ட்ரா மாடல்... இப்போ நீங்க என்னை இங்கே கடத்தி வச்சிருக்கிறது தெரிஞ்சா டில்லியே ஆட்டம் காணோம்... எனக்காகப் பிரதமரே சாப்பிடாம விரதமிருந்து வேண்டிக்குவாரு...” எனப் பிதற்றத் தொடங்கிவிட, அதற்குமேல் ஜெனிதாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தனியே வந்தவர்; ஆசை தீரும்வரை சிரித்துத் தீர்க்க, உணவு வந்துவிட்டது. ஜெனிதா, ஜுபின், நாதன், முகுந்த் மற்றும் இதரபிற காவலர்கள், அரசு அலுவலர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஒன்றாக வட்டமாகத் தரையில் அமர்ந்து உண்ண, அடைக்கப்பட்டிருந்த அனைவரும் பெருங்குரலெடுத்து கதறத் துவங்கிவிட்டனர்.

அவர்களின் ஓலம் காதுகளைக் கிழிக்க, “இன்னும் கொஞ்ச நேரம்தான் சார்.. அப்புறம் அவங்களே ஆட்டமேட்டிக்கா அமைதியாகிடுவாங்க... சீக்கிரமா சாப்பிடுங்க...” என அறிவுறுத்தினார் ஜெனிதா.

அனைவரும் விரைந்து உண்டு முடிக்க, சிலரை அழைத்து அந்தக் கூடத்தின் அறையில் ஒரு திரையையும் அதனருகே ப்ரொஜக்டரையும் பொருத்த உத்தரவிட்டாள். அறைகள் அமைந்திருக்கும் நடுநாயகமாகச் சென்று நின்று கொண்டவள்; சற்றே குரலை உயர்த்திப் பேசத் தொடங்கினாள்.

“ஹாய் கைஸ்... என்னை உங்களுக்குத் தெரியாது.. பட் உங்க எல்லாரையும் எனக்குத் தெரியும்... நான் உங்க எல்லாரோடவும் பெரிய பேன்... ஒரு வீடியோகூட விடாம பார்த்துடுவேன்.. அவ்ளோ தீவிர ரசிகை.. உங்க எல்லாரையும் பெருமைப்படுத்துற விதமா ஒரு ட்ரிபியூட் வீடியோ ரெடி பண்ணிட்டு வந்திருக்கிறேன்... அதைப் பார்க்கணும் அப்படின்னா எல்லாரும் முதல்ல சாப்பிடனும்.. அப்போதான் அந்த வீடியோவை காட்டுவேன்.. வீடியோ பார்த்துட்டு எல்லாரும் போய்ச் சேர்ந்துடுவீங்க... ஐ மீன் வீட்டுக்குப் போய்டலாம்... சோ முதல்ல எல்லாரும் சாப்பிடறீங்களா?? சாப்பிட்டீங்க அப்படின்னா சீக்கிரம் வீடியோவை பார்த்துட்டு அவரவர் வீட்டுக்குப் போய் அடுத்த வீடியோ போடலாம்.. இல்லைன்னா இங்கேயே கத்திட்டு இருக்க வேண்டியதுதான்.. என்ன சொல்றீங்க??” என அவள் கேட்க, அனைவரும் ஒரு சேர, “வாக்கு மாற மாட்டீங்களே...” என வினவினர்.

“அதெல்லாம் மாற மாட்டேன்.. ஒருவேளை நான் சொன்னதைச் செய்யலை அப்படின்னா என்மேல கேஸ் போட்டுக்கோங்க... விசிட்டிங் கார்டு, அட்ரெஸ் கூடத் தர்றேன்...” என ஜெனிதா கூறவும்தான் அனைவருக்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. எனவே உண்பதற்கு ஒப்புக் கொள்ள, அவரவர் அறைக்கே உணவு பார்சலில் கொடுக்கப்பட்டது.

உள்ளேயே கைகழுவி கொள்ளத் தண்ணீரும், பருகுவதற்கான தண்ணீரும் வழங்கப்பட, அனைவரும் உண்டுமுடித்தனர். வெகுநேரம் பசியுடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்கள்; இப்போது உணவைக் கண்டது சற்றே ஆசுவாசமடைந்து ஆன்மாவை இளைப்பாற்றுவதற்காக உண்டனர். அனைவரது கண்களிலும் ஒரு ஆத்ம திருப்தி தெரிந்தது.

அனைவரும் அடைக்கப்பட்டிருந்த அறையைத் திறக்குமாறு உத்தரவிட்ட ஜெனிதா, ப்ரொஜக்டர் பொருத்தப்பட்டிருந்த அறைக்கு அழைத்து வருமாறு பணித்தாள்.

(Disclaimer : இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் காணொளிகளின் சாராம்சம் அனைத்தும், அவற்றில் பிரயோகம் செய்யப்பட்டிருக்கும் வார்த்தைகளும் பிரச்சனையின் தீவிரத்தையும் வீரியத்தையும் உணர்த்தும் நோக்கிலேயே சேர்க்கப்பட்டவை. சமுதாய அக்கறையேயன்றி வேறெதுவுமில்லை.)

கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்டோர் அந்தக் கூடத்தில் அமர வைக்கப்பட்டிருக்க, காவலர்கள் புடைசூழ உள்ளே நுழைந்த ஜெனிதா; காவலர்களைச் சுற்றிலும் அரணாக அமர்ந்திருக்குமாறு கூறிவிட்டு நடுவில் வந்து அமர்ந்தாள்.

தன்னுடன் எடுத்து வந்திருந்த பென்ட்ரைவை கொடுத்து அதில் இருந்த குறிப்பிட்ட காணொளி ஒன்றை ஓட விடுமாறு கூறினார்.

முதல் காட்சியிலேயே அர்ஜுனும் ரோஜாவும் காட்டப்பட, இதுகாறும் பிரித்து வைக்கப்பட்டிருந்த இருவரும் ஒருவரையொருவர் காதலுடன் நோக்கிக் கொண்டனர்.

இன்னும் அங்கே இருந்த சில திருமணமான / காதல் ஜோடிகளும், ஜோடியாக வீடியோக்கள் பதிவிடுவோரும் தாங்களும் அந்தக் காணொளியில் காட்டப்படுவோம் என்னும் ஆர்வத்தில் கண்கள் மின்ன அமர்ந்திருந்தனர்.

• முதல் காணொளியாகக் காதல் கல்யாணம் Vs நிச்சயக்கப்பட்ட திருமணம் என வித்தியாசத்தைக் காட்சிப்படுத்தும் வகையிலான காணொளி : பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனில் முதலிரவு அறைக்குள் சென்றதும் தயக்கத்துடன் அமர்ந்திருப்பராம். காதல் திருமணம் என்றால் வெகு இயல்பாக உரையாடிக் கொண்டிருப்பராம். இதற்குப் பின்னணியில் சுதி சேர்க்கும் வகையில், “தேவர் மகன்” திரைப்படத்தில் இடம்பெறும் “இஞ்சி இடுப்பழகா..” பாடலும், பின்னதான காணொளிக்கு அதே பாடலை ரீமிக்ஸ் செய்த ஆடியோவும் இணைத்திருந்தனர்.

இதைப் பார்த்த ஜுபின் அவர்களை ஒருமாதிரியாகப் பார்க்க, அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்தக் காணொளியைக் காணும் ஆர்வத்தில் அமர்ந்திருந்தனர்.

• அடுத்ததாக “சுந்தரி நீயும்... சுந்தரன் நானும்... சேர்ந்திருந்தால் திருவோணம்...” எனப் பாடல் ஒலிக்க, இருவரும் சற்றே நெருக்கமாக அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டி, காதலைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

• அடுத்த காணொளியில், சமைத்துக் கொண்டிருக்கும் ரோஜாவை பின்னாலிருந்து அணைத்துக் கொள்கிறான் அர்ஜுன். துணிகளைத் துவைக்கும் போதும் அவளுக்கு உறுதுணையாக இருக்கிறான். “ஞாயிறு மதியம் சமையல் உனது... விரும்பி நீ சமைத்திடுவாய்.. வேடிக்கை பாரென என்னை அமர்த்தித் துணிகளும் துவைத்திடுவாய்..” என்னும் பாடலுக்கு இதைக் காட்சிபடுத்தியிருந்தனர்.

• இதே காணொளிக்கு, “நான் சமையல் செய்திடுவேன்... நீ வந்து அணைத்திடுவாய்...” என்னும் பாடலையும் இணைத்துப் பதிவேற்றியிருக்க,

நாதன் அவர்களைப் பார்த்து சற்றே எள்ளலாக நகைத்தான். இதைப் பார்த்துவிட்ட அர்ஜுன், பதிலுக்கு முறைத்துவிட்டு, “ஹலோ... மக்கள் விரும்புனாங்க, நாங்க அப்லோட் பண்ணினோம்.. இதுல எங்களைப் பார்த்து நக்கலா சிரிக்க வேண்டிய அவசியம் இல்ல...” எனக் கூறிக்கொண்டிருக்கும் போதே, மற்றொரு ஜோடியின் காணொளி வந்துவிட்டது.

• “கோவிலிலே நான் தொழுதேன்... கோலமயில் உனைச் சேர்ந்திடவே... கோடிமுறை நான் தொழுதேன்... காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே...” என்னும் வரிகளுக்கான காட்சி அது. கோவிலுக்குச் சென்றிருக்கின்றனர் குறிப்பிட்ட தம்பதியர். அர்ச்சனை முடிந்ததும் அர்ச்சகர் இருவருக்கும் விபூதி மற்றும் குங்குமம் அளிக்க, அந்தப் பெண் மற்றும் பெற்றுக் கொண்டு தனது நெற்றியில் பூசிக் கொள்கிறார். “ஏய்... எனக்கு வச்சி விடு..” என அந்த ஆடவன் கேட்க, தனது மோதிர விரலில் விபூதியை எடுக்க முற்பட்டவளைத் தடுத்தவன்; அவளது நெற்றியில் தனது நெற்றியைப் பதித்து ‘நீ பாதி; நான் பாதிக் கண்ணே...’ ஆகி விட்டனர்.

• அந்தப் பெண் உணவை உண்டு கொண்டிருக்கிறாள்; அவள் கணவனும் குழந்தைகளும் அருகிலேயே அமர்ந்து உண்டு கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் அறியாவண்ணம், “எனக்கு ஊட்டிவிடு...” என ஜாடையால் கேட்கிறான் அவன். “போங்க... முடியாது... குழந்தைகள் இருக்கிறாங்க...” என அவள் தவிர்க்க, “ப்ளீஸ்டி...” எனக் கண்களாலேயே கெஞ்சுகிறான் கணவன். வேறுவழியின்றி, சமையலறைக்குச் சென்று உப்பை எடுத்து வருமாறு குழந்தையைப் பணித்துவிட்டு, அந்த இடைவேளையில் தன் கணவனுக்கு ஊட்டி விடுகிறாள் அவள்.

“இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா??” என மனதிற்குள் நினைத்துக் கொண்ட முகுந்த் அமைதியாக அமர்ந்திருக்க, அவர்களோ அசருவதாகத் தெரியவில்லை.

அடுத்ததாகக் கல்லூரி மாணவர்கள் போன்ற தோற்றத்தில் ஒரு ஜோடி அமர்ந்திருக்க, அவர்களது காணொளி ஒளிபரப்பப்பட்டது.

• கையில் ‘லேஸ்’ பாக்கெட்டை சுவைத்துக் கொண்டிருக்கின்றாள் அந்தக் காதலி. அவளிடமிருந்து பாக்கெட்டைப் பறித்துக் கொண்டவன்; “எனக்கும் கொடுடி...” என்பதாகக் கேட்க, தன் பற்களுக்கு இடையில் அந்தக் குறிப்பிட்ட லேஸ் துண்டின் ஒரு பாதியை வைத்துக் கொண்டு மற்றொரு பாதியை அவனுக்கு நீட்ட அவனும் அவ்விதமாகவே பெற்றுக் கொள்கிறான். இத்தனைக்கும் இவை அனைத்தும் நடப்பது பொது வெளியில், பொழுது போக்குப் பூங்காவில்.

இந்தக் காணொளியைப் பார்த்ததும் அதற்குமேல் ஜீரணிக்க இயலாதவனாக வெளியே சென்று வாயைக் கொப்பளித்துவிட்டு, முகத்தைக் கழுவி கொண்டு வந்து அமர்ந்தான் நாதன்.

• ஒரு குடும்ப விழாவில் கணவனும் மனைவியும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். மனைவி கையில் ஐஸ்கிரீம் வைத்து சுவைத்துக் கொண்டிருக்கிறாள். யாரோ ஏதோ வினவ, அவள் பதிலளிக்க முற்பட்ட அந்தக் குறுகிய இடைவேளையில் அவளது கையிலிருந்த ஐஸ் கிரீமை ருசி பார்க்கிறான் கணவன். இதைத் தெரிந்து கொண்டவள் வெட்கத்தில் நெளிந்தவாறே அவனது தோளில் இடிக்கிறாள்.

“கொரில்லா செல்லைவிட மோசமானவங்களா இருப்பாங்க போலயே... நான் வேற சிங்கிள்டா...” என நாதனும் முகுந்தும் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்ள, “ஏன்டா இப்படியெல்லாமா அப்லோட் பண்ணுவாங்க?? பார்க்கவே நாராசமா இருக்குதே.. இவங்கல்லாம் தன்னோட வீடியோவை தானே ஒருதடவை கூட ப்ளே பண்ணி பார்க்க மாட்டாங்களா?” எனச் சந்தேகமாகக் கேட்டான் ஒருவன்.

“அப்படி ப்ளே பண்ணி பார்த்திருந்தா இவனுங்க ஏன் இங்க வந்திருக்கப் போறாங்க, நாம ஏன் இப்படி ராப்பகலா காவலுக்குக் கிடக்கப் போறோம்..” என அலுத்துக் கொண்டான் மற்றவன்.

• கணவனோ (அ) காதலனோ மனைவி (அ) காதலி அருகில் இருக்கையில் அலைபேசியிலேயே கண்களைப் பதித்திருக்கிறான். அமைதியாக, சோகமாக அமர்ந்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பெண்ணானவள்; சற்றே சாய்ந்து அவனது மடியில் படுத்துக் கொள்ள, அப்போதுதான் தவறை உணர்ந்தவனாக அவளைப் பார்க்கிறான் ஆடவன். தன் கையில் வைத்திருந்த அலைபேசியை ஒரமாக வீசிவிட்டு அவளை அணைத்து நெற்றியில் இதழ் பதிக்கிறான் அவன்.

இதைப் பார்த்த அனைவருக்குமே சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தாலும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

• கணவன் மடிக்கணினியில் அலுவலக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கின்றான். அருகில் படுத்திருந்த மனைவி அலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாள். குறிப்பிட்ட லெவலில் தோற்றுவிட்ட பிறகே தன் கணவன் அருகில் இருப்பது அவளுக்கு நினைவு வருகிறது. அவனைத் தொந்தரவு செய்யும் பொருட்டு, அவனது மடிக்கணினி விசைப்பலகையில் காலை வைத்துத் தொந்தரவு செய்ய முற்படுகிறாள் அவள்.

சற்றே எரிச்சலுற்றவன் அவளது காலைத் தள்ளிவிட, அவனது தோளில் வைக்கிறாள் அவள். அவனும் சற்றே கோபம் தணிந்தவனாக மடிக்கணினியை மூடிவைத்துவிட்டு அருகில் படுத்துக் கொள்கிறான்.

• மனைவி கணவனுக்கு எண்ணெய் தேய்த்துவிடுகிறாள்; அவனது கைக்கு எண்ணெய் தேய்க்க முற்படுகையில் அவளது கையைப் பற்றி இழுத்து முத்தமிடுகிறான் அவன்.

• தூங்கி விழித்த கணவன் அருகில் மனைவியைக் காணாததால் அவளைத் தேடிக் கொண்டு சமையலறைக்கு வருகிறான். அவள் அங்கே ஆர்வமாகச் சமைத்துக் கொண்டிருக்க, தன் கையில் வைத்திருந்த தாலியை எடுத்துக் காட்டுகிறான். அதைப் பார்த்ததும், “அய்ய...” என அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு நாணத்தால் திரும்பிக் கொள்ள, ‘நெஞ்சினிலே.. நெஞ்சினிலே...’ என்னும் பாடல் ஒலிக்க, மீண்டும் அவளது கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து விடுகிறான் அவன். இருவரும் காதலுடன் ஒருவரையொருவர் அணைத்துக் கொள்கின்றனர்.

• கணவன் குளித்துக் கொண்டிருக்கிறான். அவன் குளித்துவிட்டு உடலைத் துடைத்துக் கொள்வதற்காகத் துண்டைக் கேட்கிறான். மனைவி அதை எடுத்துக் கொண்டு சென்று கதவைத் தட்ட, அவன் கதவைத் திறக்க, அவள் கண்களை மூடிக் கொள்கிறாள். சற்றே வெட்கத்தில் நெளிந்தவன் துண்டோடு சேர்த்து அவளையும் குளியலறைக்குள் இழுத்துக் கொள்கிறான்.

இந்தக் காணொளியைப் பார்த்ததும் அதற்குமேல் சகித்துக் கொள்ள முடியவில்லை அனைவராலும். ஆனாலும் உயரதிகாரியான ஜெனிதாவிற்குப் பயந்து, அவளது பதவிக்கு மரியாதை கொடுத்து அனைவரும் அமைதியா அமர்ந்திருக்க, கைது செய்து அழைத்து வரப்பட்டிருந்த கும்பலில் ஒருத்தியான வெண்ணிலா எழுந்து கொண்டாள்.

எழுந்து சென்றவள்; ஓடிக் கொண்டிருந்த காணொளியை பாதியில் நிறுத்தி விட்டாள். கோபமாக அந்தக் கப்பிள் வீடியோ செய்யும் கும்பலிடம் திரும்பியவள்; “என்னங்க பண்ணி வச்சிருக்கிறீங்க?? நாலு சுவத்துக்குள்ள பண்ண வேண்டிய விஷயத்தை இப்படித்தான் பப்ப்ளிகா வீடியோ எடுத்துப் போஸ்ட் பண்ணுவீங்களா?? இதெல்லாம் பத்திரமா பொக்கிஷமா பாதுகாத்து வைக்க வேண்டிய ப்ரைவேசி திங்க்ஸ்... எல்லாரும் பார்க்கிறாங்க அப்படிங்கறதுக்காக என்ன வேணா பேசலாமா?? எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை வேணாமா?? சின்னப் பசங்க யாராவது இதைப் பார்த்துட்டா என்ன ஆகுறது? அவங்க மனசு நஞ்சாகிடுமே.. வருங்காலச் சந்ததியே நாசமாகிடுமே...” எனக் கத்தத் தொடங்க, ஜெனிதாவும் ஜுபினும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

அவர்களது திட்டமே இதுதானே!! ‘கத்தியின்றி ரத்தமின்றி வரும் யுத்தம்’ போல ‘அரைப்பக்க அளவிற்கு அறிவுரை இன்றி, எந்த எபோர்டுகளும் இன்றி’ இனிதே திட்டம் நிறைவேறத் தொடங்கியது.

தங்களது திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற விதமாக வெண்ணிலா தயாராக இருக்கிறாள் என்பதை யூகித்துக் கொண்டவர்கள்; அடுத்ததான அஸ்திரத்தை எய்யத் தயாராகினர்.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

24

ஜெனிதா ஜுபினுக்குக் கண்களால் ஜாடைசெய்ய, எழுந்து வெண்ணிலாவை நோக்கிச் சென்றான் அவன். “மேம்... நீங்க உக்காருங்க முதல்ல.. டென்ஷன் ஆகாதீங்க மேம்... எதுவா இருந்தாலும் பாதியிலேயே கருத்து சொல்லாதீங்க... பாதிக்கு அப்புறம் என்ன வேணாலும் நடக்கலாம் இல்லையா?! நீங்க உக்காருங்க.. முழுசா பார்த்துட்டு பேசுங்க மேம்...” என அவளைச் சமாதானம் செய்து அமர வைத்தவன்; அந்த ஆப்பரேட்டரிடம் வேறொரு கோப்பை ஒப்பன் செய்யுமாறு கூறினான்.

அந்தக் காணொளியில் தோன்றுபவர்கள் அனைவரும் புதிதாகத் திருமணமானவர்கள். அதிலும் இருபது முதல் இருபத்து மூன்று வயதான இளம் தம்பதிகள்.

அவர்களைப் பார்க்கையில் ‘அவன் இவன்’ திரைப்படத்தில் ஆர்யாவை வர்ணிப்பதற்கு அம்பிகா பயன்படுத்திய வசனம் ஒன்று நினைவில் வந்து போனது ஜுபினுக்கு. ஜெனிதா பாராதவண்ணம் உதட்டை மடித்துச் சிரித்து, நகைப்பை விழுங்கினான். (அது என்னவாக இருக்கும் எனச் சிந்திப்பவர்கள் தனியாக என்னிடம் வினவுங்கள்)

கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்றுக் காலத்தில் மறுநாளிலேயே உலகம் அழிந்து விடுவதைப் போல விரைவாகத் திருமணம் செய்து கொண்டவர்கள் அனைவரும். ‘பாதி வெந்த முட்டைகள்’ என்பதன் ஆங்கிலப் பதத்தை உங்களின் மைன்ட் வாய்ஸ் மெலிதாக முணுமுணுப்பது என் காதுகளை அட்வான்ஸாக இப்போதே எட்டிவிட்டது. ஒருவேளை அவ்வாறு முணுமுணுக்கவில்லை என்றாலும் அடியாளுக்காக முணுமுணுத்தது எனப் பொய்யாவது கூறுங்களேன். மனதைத் தேற்றிக் கொள்கிறேன்.

பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்த மாணவிக்கும் மாணவனும் மணவாளன் – மணவாட்டியாக அமர்ந்திருக்க, பெற்றோர்கள் தலைமையில் ஊரார் முன்னிலையில் திருமணம் நடக்கிறது. “காதல் கணவா.. உந்தன் கரம்விட மாட்டேன்...”, “கண்ணே மணியே... உன்னைக் கைவிட மாட்டேன்...” என்பதான பின்னணி இசையை அவர்கள் ஒலிக்கவிட்டுப் பதிவேற்றியிருக்க, “இதுங்களை எல்லாம் அள்ளிட்டு வந்து ரெண்டு தட்டு தட்டியிருக்கணும்... நைன்டீஸ் கிட்ஸ் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு...” என மனதிற்குள் திட்டிக்கொண்டான் முகுந்த்.

வரிசையாகப் பத்து பதினைந்து பதின்ம வயது திருமணங்கள் ஒளிபரப்பப்பட, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டனர் சிலர். அத்தோடு நிறுத்தாமல் திருமணக் கோலத்திலும் கிங்காங் செயலில் காணொளி பதிவேற்றியிருந்தனர் சில அறிவுஜீவிகள்.

“சத்தியமா சொல்லுறேன்... தாலி ஒண்ணு கட்டுடா... தடுக்க யாரும் வந்தாலும் தாறுமாறா வெட்டுடா...” என அந்தப் பதினெட்டு வயது சிறுமி பதினெட்டு வயது சிறுவனைப் பார்த்து பாட, சிலருக்கு காதின் வழியே புகைவராத குறைதான்.

“ஏன்டா தடுக்க வர்றது இவளோட அப்பனா இருந்தாக்கூடத் தாறுமாறா வெட்டிடலாம்ன்னு சொல்றாளோ??” என நாதன் முகுந்தின் காதில் கிசுகிசுக்க, “அதான் யாரு வந்தாலும் வெட்டுன்னு சொல்லிட்டாளே... எந்தக் கொம்பன் வந்தாலும் பாரபட்சம் பார்க்காம வெட்டிவீசிட்டு போயிட்டு இருக்கலாம் போல..” எனப் பதிலிறுத்தான் அவன்.

“எனக்காகப் பொறந்தாயே எனதழகா!! பிரியாம இருப்போமே பகலிரவா!! உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம்...” எனப் பாடிய சிறுமியின் கழுத்தில் போட்டிருந்த புதுத்தாலியின் ஈரம்கூடக் காய்ந்திருக்கவில்லை. “என்னடா இது??! இந்தப் பாட்டுக்கும் இந்தப் பொண்ணுக்கும் என்னடா சம்பந்தம்?!” என நாதன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட, “இட்ஸ் அ மேனுபேக்ச்சரிங் டிபெக்ட்... ஒண்ணும் பண்ண முடியாது...” என உதட்டைச் சுளித்தான் மற்றொருவன்.

“அடேய் ஆண்டியப்பா... என்னை ஏன்டா இப்படியான ஆளுங்களோட பெத்து விட்டுட்டுப் போய்ச் சேர்ந்த??” என முகுந்த் விட்டத்தைப் பார்த்து பிதற்ற, “ஒருநாள் பார்க்கிற நமக்கே இப்படி இருந்தா உள்ளேயே ஊறிக்கிட்டு இருக்கிற இவங்க நிலைமையை யோசிச்சுப் பாரு.. மூளை எந்த அளவு மழுங்கியிருந்தா இப்படி ஆகியிருப்பாங்க...” என அவர்களுக்காகப் பச்சாதாபப்பட்டான் ஒருவன்.

இங்கே இவ்வாறான உரையாடல்கள், சீண்டல்கள், பரிதாபங்கள் சென்று கொண்டிருக்க, அங்கே காணொளிகள் ஜரூராக ஓடிக் கொண்டிருந்தது. இளம்வயது புதுமணத் தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தை அப்படியே காட்சிப்படுத்திப் பதிவிட்டிருந்தனர். நல்லவேளையாக அங்கே அமர்ந்திருந்த நைன்டீஸ் கிட்ஸ் எவரும் அதைப் பார்த்து மனதைக் புண்ணாக்கிக் கொள்ளவில்லை.

வெண்ணிலாதான் உச்சக்கட்ட கோபத்திற்குச் சென்றிருந்தாள். ஒரு வளரிளம் பருவ குழந்தையின் தாயாக வெகுண்டெழுந்திருந்தாள். ஜுபினின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்துதான் அவ்விடம் அமைதியாக அமர்ந்திருந்தாள். இல்லையேல் அந்த ரகக் காணொளிகள் பதிவிட்டிருந்த அத்தனை பேரின் கழுத்தையும் கடித்து, குருதியைக் குடித்திருப்பாள். அத்தகைய கோபம் கனன்று கொண்டிருந்தது அவளுக்குள்.

அவள் இவ்வாறென்றால் அங்கே இருந்த ஒருசிலருக்குமே ஒருவித ஒவ்வாமை மனநிலைதான். அவர்களுக்கு உண்மையும் தாங்கள் செய்துவந்த தவறும் சற்றே புரியத் தொடங்கியிருந்தது. ஏனென்றால் அப்படியானதொரு வலைத்தளச் செயலியில்தானே தாங்களும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக’ கிடந்திருக்கிறோம் என உணர்ந்தனர். என்னதான் தாங்கள் முகம் சுளிக்க வைக்காத காணொளிகளைப் பதிவேற்றினாலும் இருவருக்கும் ஒரே அளவுகோலன்றோ?! கழிவுநீரில் பூத்தது மணம்தரும் மல்லிகையே ஆனாலும் கூந்தலில் சூடிக்கொள்ள முடியாதல்லவா?! இப்போது அவர்களுக்குத் தாங்கள் செய்த காரியங்கள் அனைத்தும் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு உறுத்துவதைப் போல இருந்தது.

இந்த வகையிலான காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பட்டுக் கொண்டிருக்க, ஒரு கட்டத்திற்குமேல் வெண்ணிலாவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. “சார்... ப்ளீஸ்.. தயவு செஞ்சு ஸ்டாப் பண்றீங்களா??” என அவள் கத்திவிட, தங்கள் திட்டம் சிறிது சிறிதாக வெற்றிபெறுவதை மானசீகமாக உணர்ந்தனர் ஜெனிதாவும் ஜுபினும்.

“இதென்ன பிரமாதம்? இதைவிடப் பெசல் ஐட்டம் இருக்குது..” என மனதிற்குள் நினைத்துக் கொண்ட ஜுபின், “வினித்.... இதை ஸ்கிப் பண்ணிட்டு, அடுத்த வீடியோ ப்ளே பண்ணுங்க...” என உத்தரவிட்டான்.

அதுவும் இதைப் போன்றதொரு கப்பிள் சீரிஸ் காணொளிக் கோர்வை தான். ஆனால் அதில் ஆடிக் கொண்டிருந்தவர்கள் பலர் இன்னமும் பதின்பருவத்தைத் தாண்டாதவர்கள்.

அவற்றில் வெண்ணிலா ஒளிபரப்ப அனுமதித்த காட்சிகளின் தொகுப்பு இதோ...

• பதினைந்து சிறுவன் ஒருவன் நடந்து கொண்டிருக்க, பின்னாலிருந்து ஓடிவந்த பதிமூன்று மதிக்கத்தக்க சிறு பெண்ணொருத்தி அவனது கையைப் பற்றிக் கொள்கிறாள். “பயப்பட வேணாம்டி.. உன் புருஷன் நான்தான் டி...” எனப் பாடுகிறான் அவன். காதலுடன் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள் அவள்.

• பதினேழு வயது சிறுவனும் சிறுமியும் மொட்டை மாடியில் ‘டைட்டானிக்’ ஜாக் – ரோஸ் போஸில் நின்றுகொண்டு மழையை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

• கல்லூரி மாணவன் ஒருவன் தன் சொந்தக் குரலில் பேசுகிறான். “ஹாய் ப்ரெண்ட்ஸ்... என் லவ்வர்.. அவளைப் பார்த்து பத்து நாள் ஆச்சுது... அவளுக்கு அரையாண்டு லீவ் விட்டிருந்தாங்க.. அவ இப்போ ஒன்பதாவது படிச்சிட்டு இருக்கிறா... லீவுல அவளைப் பார்க்கிறதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினேன்.. பட்.. பார்க்க முடியல.. உப்ப்... இப்போ.. இந்த நிமிஷம்... பத்து நாள் கழிச்சு அவளைப் பார்க்கப் போறேன்.. வாங்க அவ எப்டி ரியாக்ட் பண்றான்னு பாருங்க..” என அலைபேசியை நண்பனிடம் கொடுத்து காட்சிகளைப் படமாகப் பதிவுசெய்யுமாறு கூறிவிட்டு, அந்தப் சிறுமியை நோக்கி நடக்கிறான். மரத்தடியில் பள்ளி சீருடையுடன் நின்று கொண்டிருந்த சிறுமி இவனைப் பார்த்ததும் பெருமகிழ்வுடன் ஓடி வருகிறாள். ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்கிறாள். “உண்மைக்காதல் யாரென்றால் உன்னையும் எனையும் சொல்வேனே... நீயும் நானும் பொய்யென்றால் திருடிக் கொல்வேனே...” என்னும் பாடலைப் பாடுகிறான் அவனது தோழன்.

அடுத்ததாக வரிசையாக வாயசைக்கும் வீடியோஸ் மட்டும் வரத் தொடங்கின.

“பூம் பூம் மாட்டுக்காரன்.. நீ உம் சொன்னா ஊட்டுக்காரன்...”, “ரெண்டுலதான் ஒண்ணைத் தொட வர்றியா??”, “திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பெரிய பூட்டு எனக்கு.. உன்கிட்ட தான் திறந்து பார்க்க கள்ளச் சாவி இருக்கு...”, “திண்ணையில இடமிருக்கு நீ தூங்கப் போயேண்டி... வெண்ணெயில மோர் கடையும் வேலையெல்லாம் வேணாம்டி...”, “மாரளவு இடிக்கையிலே ஓரளவு தொடவா??”, “மூச்சுக் காத்துல மாருதம் போல மாமா வா மார்போடு சாஞ்சுக்கோ... நெஞ்சில் சாஞ்சுக்கோ... என்னை மேய்ஞ்சிக்கோ...” என ஒவ்வொரு பாடல்களாக ஒலிக்கத் துவங்க, “டேய்... என்னடா... இதுங்களாம் இப்படிப் பண்ணிட்டு இருக்குதுங்க? இதுக்கான அர்த்தம் தெரிஞ்சுதான் இப்படியெலாம் பண்றாங்களா?? கேட்கவே காது கூசுற வகையில் இரட்டை அர்த்தம் கொண்ட வரிகள் இதெல்லாம்... பத்து பதினைஞ்சு வயசு பிள்ளைங்க இப்படி ஆடுறதையும் பாடுறதையும் எப்படிதான் எல்லாரும் ரசிக்கிறாங்களோ?” என முகத்தைச் சுளித்தான் நாதன்.

“டேய்ய்ய் இதைப் பார்க்கிறதுக்கும் ஒரு கூட்டம் இருக்குது... யாருமே பார்க்காம இருந்தா எப்படி அடுத்தடுத்த வீடியோ பண்ணத் தோணும்... எல்லாரும் ஆர்வமா பார்க்கப் போய்தான் அடுத்தடுத்து எல்லாரையும் அட்ராக்ட் பண்ணனும், சாடிஸ்பை பண்ணனும்ன்னு இவங்க இப்படிலாம் பண்றாங்க...” என்றான் கூட்டத்தில் ஒருவனான கார்த்திக்.

“ஆனாலும் கொஞ்சம் ஏத்துக்கக் கூடியதா இல்லைடா... எல்லாரும் பார்க்கிறாங்க அப்படிங்கறதுக்காக என்ன வேணா செய்யலாமா??” என மற்றொருவன் கூற, “அடேய்... குட்டி விவேக் பத்தி தெரியுமா?! மண்டை பத்தரம்...” என்றான் ஒருவன்.

“என்னடா குட்டி விவேக்??” எனத் தோழர்கள் அனைவரும் அவனிடம் கதைகேட்கும் நோக்கில் நெருங்கி அமர, “எவ்ரி ஒன் இஸ் தி லெஜென்ட் அன்டில் தி ரியல் ஒன் அரைவ்ஸ்...” எனக் கூறிவிட்டுச் சத்தமாகச் சிரித்தான் அவன்.

அனைவரும் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்க்க, இந்தச் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தான் ஜுபின். “நாதன்... அங்கே என்ன சத்தம்?!” என அவன் கேட்க, “பேசிக்கிட்டிருக்கோம் சார்...” என நாதன் கூற, “இல்ல சார்... குட்டி விவேக் வீடியோ இருந்தா போடணுமாம் சார்... எல்லாரும் ஆர்வமா இருக்கிறாங்க...” என முந்திக்கொண்டு உரைத்தான் முகுந்த்.

“ம்ம்ம்ம்...” எனக் கூறிவிட்டு திரும்பிக் கொண்ட ஜுபின், “வினித்... நேயர் விருப்பம்... அந்த விவேக் வீடியோ ஓட விடு...” என்றான்.

அதில் பதினான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தோன்ற, “இவனாடா குட்டி விவேக்?! இவனுக்காடா இவ்ளோ பில்டப்?” எனக் கேட்டனர் அனைத்து தோழர்களும்.

“ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச்...” என அவன் கூறவும், அனைவரும் ஆர்வமாகப் பார்க்கத் துவங்கினர்.

முதலில் சற்றே ஸ்டைலாகக் கதாநாயகன் போன்ற நடை, உடை பாவனைகளில் அவன் நடந்துவருகிறான். சட்டை பட்டன்கள் அனைத்தும் திறந்திருக்க, அருகில் கிடந்த கட்டையைக் காலால் ஒரு முனையில் மிதிக்க, அது மேலெழுகிறது. தன் கையில் அதை லாவகமாகப் பிடித்தவன் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவனை அடிப்பது போலப் பாவனைச் செய்ய, அவன் விழுகிறான். நாக்கின் அடியில் ஒளித்து வைத்திருந்த குச்சியை நாவு மற்றும் பற்களால் வெளியில் எடுத்து ஸ்டைலாகக் கடித்துக் கொண்டே நடக்கிறான். “ராஜூ பாய்... ராஜூ பாய்...” எனப் பாடியவாறே பின்னால் நடக்கின்றனர் அவனது தோழர்கள்.

அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் பாடல்கள், காட்சிகளை மறுஉருவாக்கம்(!) செய்திருக்க, அனைவருக்கும் அவன் ஒரு டுபாக்கூரு போலவே தெரிந்தான்.

பின்னர் ஒரு காணொளியில், “ப்ரெண்ட்ஸ்... நான் கமிட்டாகிட்டேன்... சோ யாரும் இனி எனக்கு ப்ரொபோஸ் பண்ணாதீங்க... ஆல்ரெடி என் மனசை அவகிட்டே கொடுத்துட்டேன்.. இனி என்னை யாரும் லவ் டார்ச்சர் செய்யாதீங்க... சாரி அக்காஸ், ஆன்ட்டீஸ்..” எனப் பேசியிருந்தான்.

அடுத்ததாக ஒளிபரப்பட்ட காணொளியில், “ப்ரெண்ட்ஸ்... ஏற்கனவே சொல்லியிருந்தேன்ல நான் கமிட்டாகிட்டேன்னு.. என் ஆளை உங்க எல்லாருக்கும் இன்டரடியூஸ் பண்றதுக்குதான் இந்த வீடியோ போடுறேன்... இங்க பாருங்க...” என அருகில் நின்று கொண்டிருந்த பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுமியைக் காட்டுகிறான். அவளும் அவனது மார்பில் சாய்ந்தவாறே புன்னகையுடன், “ஹாய் ப்ரெண்ட்ஸ்... நானும் இவரும் மூணு நாளா லவ் பண்றோம்.. எங்க லவ் ஸ்டோரி என்னனு நாளைக்கு லைவ்ல சொல்றோம்..” என்கிறாள் அந்தச் சிறுமி.

இப்போது அவர்களின் நேரலை காட்சி காட்டப்படுகிறது. “ப்ரெண்ட்ஸ்.. எல்லாரும் எங்க லவ் ஸ்டோரி என்ன, எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சோம்னு கேட்டுட்டு இருக்கிறீங்க... ஆக்சுவலி இதை நீங்க என்கிட்டே கேக்கக் கூடாது... உங்க குட்டி விவேக்கிட்டே தான் கேட்கணும்... அவர் பெர்மிஷன் கொடுத்தாதான் நான் சொல்ல முடியும்... என்ன பேபி சொல்லிடவா??” என மறுமுனையில் வீடியோ லைவில் இருக்கும் அந்தச் சிறுவனிடம் கேட்கிறாள் அந்தச் சிறுமி.

“ம்ம்ம் சொல்லு பேபி...” என அவன் அனுமதியளிக்க, “ஆக்சுவலி... நான் சென்னை சரிங்களா... அவரு பாண்டிச்சேரி... ரொம்ப நாளா அவரைப் பாலோ பண்ணிட்டு இருந்தேன்.. அவரோட கிங்காங் வீடியோஸ் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்.. அப்போதான் ஒருநாள் அவர் சென்னை வந்திருந்தார்... பார்த்ததும் ப்ரொபோஸ் பண்ணிட்டாரு... நானும் ஓகே சொல்லிட்டாரு.. திரும்ப ஊருக்குப் போனதும் அவரு அப்பா அம்மாகிட்டே சொன்னதும் அத்தை ஓகே சொல்லிட்டாங்க.. மாமா கொஞ்சம் தயங்கினாங்க... உடனே நான் ஒருநாள் கால் பண்ணி, மாமா எப்படி இருக்கிறீங்க மாமான்னு கேட்டேன்.. அவ்ளோதான்.. அப்புறம் அவரும் கிளீன் போல்டு.. எங்க வீட்டுல அவர் போன்ல பேசினதுமே ஓகே சொல்லிட்டாங்க.. இவ்ளோ தங்கமான பையன் நாமக்கு தேடினாலும் கிடைக்கமாட்டான்னு.. சோ நாளையில இருந்து நாங்க கப்பிளா பண்ற வீடியோஸ் எல்லாம் போஸ்ட் பண்ணுவோம்...” என அந்தப் பெண் பேசியதைத் தொடர்ந்து சில காணொளிகள் இணைந்தாற் போலக் காட்டப்பட்டன,

வெண்ணிலாவைத் திரும்பிப் பார்த்த ஜெனிதா, “இவங்க இப்படிப் பண்ணிட்டு இருந்ததைப் பார்த்து சிலர் அவங்க ஐடியை ரிப்போர்ட் அடிச்சிட்டாங்க... ஒருத்தர் ஒருபடி மேலே போய் ஹேக் பண்ணிட்டாரு.. அதுக்கு அவங்க ரியாக்ஷன் பாருங்க.. அதுதான் அல்டிமேட்டு...” என்றாள்.

நேரலையிலேயே அழுகிறான் அந்தச் சிறுவன். “டேய் யாருடா என்னோட ஐடியை ஹேக் பண்ணினது? ஒழுங்கு மரியாதயா கொடுத்துடுங்க சொல்லிட்டேன்.. எவ்ளோ கஷ்டப்பட்டுப் பாலோவர்ஸ், லைக் எல்லாம் சேர்த்து வச்சிருந்தேன் தெரியுமா?? என்னைக்கும் அடுத்தவங்க உழைப்பை சுரண்ட நினைக்காதீங்க... ப்ளீஸ்டா... திருப்பிக் கொடுத்துடுங்க..” எனக் கூற, நேரலை அழைப்பில் இணைகிறாள் அந்தச் சிறுமி.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

25

அந்தக் குட்டி விவேக் என்னும் சிறுவன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் அந்தச் சிறுபெண்ணால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தாங்கள் நேரலையில் பேசிக் கொண்டிருக்கிறோம், தங்களைச் சில ஆயிரம் நபர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து கத்தத் துவங்கிவிட்டாள்.

“யாருடா நீங்க?! எதுக்காகடா சேனலை ஹேக் பண்ணினீங்க?? உங்களுக்கு என்னதான் வேணும்?? பேமஸ் ஆகணும்ன்னா தனியா வீடியோ போடுங்கடா... இப்படி அடுத்தவன் உழைப்பை திருடாதீங்க.. இவன் ஒவ்வொரு நாளும் தூங்காம வீடியோ பண்ணினது எனக்குதான் தெரியும்... இதெல்லாம் என்ன பொழப்புடா? ஒழுங்கா அவன் ஐடியைத் திருப்பிக் கொடுத்துடுங்க... இல்லைன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...” எனத் தன்னவனைத் தேற்றும் விதமாகப் பேசி முடிக்க, அவனின் விசும்பல் அதிகமானதேயன்றி குறைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

அவளும் தளராமல் நேரலையிலேயே, “பேபி... நீ அழாத பேபி.. எல்லாம் சரியாயிடும்... நீ இப்போ என்னாத்துக்கு அழுதுட்டு இருக்கிற?? இவனுங்கதான் அழனும்... நீ அழாத பேபி...” எனப் பலவாறாகக் கூறிக் கொண்டிருந்தாள்.

அவன் நிறுத்தாமல் அழுது கொண்டேயிருக்க, “பேபி... அழாத பேபி...” என்பதை மந்திரம்போலத் தொடர்ந்து கூறி ஜெபிக்கத் தொடங்கிவிட்டாள் அந்தச் சிறுமி.

அதற்குள் பக்கத்தில் அமர்ந்திருந்த அவனை ஈன்றெடுத்த தியாகச் செம்மல், “மருமகளே... மருமகளே...” எனக் குரல்கொடுக்க, இந்த முனையில் பேசிக் கொண்டிருந்த சிறுமி, “அத்தை... அத்தை... அவரை அழ வேணாம்னு சொல்லுங்க அத்தை... எனக்குக் கஷ்டமா இருக்கு..” என்றாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த தொண்ணூறுகளில் பிறந்த அனைவரின் இருதயமும் ஒருநிமிடம் நின்று துடித்தது. அன்றைய நாளுக்குப் பின்வந்த சில நாட்களுக்குத் தமிழ்நாட்டின் “ஹாட் ட்ரோல் டாப்பிக்” இவர்கள்தான்.

அங்கே காணொளி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, வெண்ணிலாவை நோக்கித் திரும்பினாள் ஜெனிதா. “மேம்.. நீங்க படிச்சவங்க... இங்கே நடந்துட்டு இருக்கிற சில விஷயங்களை வச்சு நாங்க ஏன் இங்கே உங்களைக் கூட்டிட்டு வந்திருக்கிறோம்ன்னு புரிஞ்சிருக்கும்ன்னு நம்பறேன்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஒப்பீனியன் இருக்கலாம்.. ஆனா எல்லாத்தையும் மொத்தமா முடிஞ்சதுக்கு அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாமே... இது சுதந்திர தேசம்... தன்னோட கருத்துகளைப் பகிர்ந்துக்கிறது தப்பில்லை.. அதுக்கான டைம் அண்ட் ஸ்பேஸ் நாங்க நிச்சயமா தருவோம்... அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...” எனச் சற்றே தணிந்த குரலில் பேச, மௌனமாகத் தலையசைத்தாள் வெண்ணிலா.

சில நொடிகளில் நிமிர்ந்தவள்; “ஓகே மேம்... ஆனா தயவு செஞ்சு இந்த வீடியோவை மட்டும் ரெஸ்யூம் பண்ணி ஓட விட்டுடாதீங்க.. பார்க்கவே ரொம்பக் கொடூரமா இருக்குது.. திருத்தணிகையோட அம்மாவா என்னால இதை ஏத்துக்கவே முடியல.. என் பையனை இந்த மாதிரியான சமுதாயத்துல எப்படி வளர்த்தெடுக்கப் போறேன்னு எனக்குப் பயம் வந்துருச்சு... என் பையனோட திறமையை உலகறிய செய்யணும்ன்னு நான் வீடியோ பண்ணினேன்... ஆனா இப்படியானதொரு இருட்டு உலகம் இங்கே இருக்கும்ன்னு எனக்குத் தெரியவே தெரியாது...” என வருத்தத்துடன் பேசினாள்.

“ஆக்சுவலி இங்கே எல்லாருக்கும் அட்டென்ஷன் சீக் பண்றது மட்டும்தான் மோட்டிவ்... ஆனா அந்தத் தாகத்தோட அளவும் அதற்குத் தேர்ந்தெடுத்த வழிகளும்தான் வேற வேற.. பிரச்சனையோட தீவிரத்தைப் பொருத்துதான் ஒவ்வொருத்தரும் நல்லவங்களா கெட்டவங்களான்னு மெஷர் பண்றோம்... இன்னைக்கு உங்க பையனை உலகறிய செய்யுறதுக்காக வற்புறுத்தி பேச வச்ச நீங்க நாளைக்கே அவனை இந்த மாதிரியான வீடியோக்கள் செய்யுறதுக்கு அலோவ் பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?? பேமஸ் ஆகுறதுதான் குறிக்கோள்ன்னு ஆனதுக்கு அப்புறம் எந்த வகையில் பேமஸ் ஆனா என்ன??” எனக் காட்டமாகக் கேட்கத் துடித்த உதடுகளை வெகுசிரமப்பட்டு அடக்கியவாறு அமர்ந்திருந்தான் ஜுபின். ஏனென்றால் இப்போது இதைக் கேட்டுவிட்டால் அவர்களது திட்டம் சரிவரச் செயல்படாதே!

“இப்போ வரைக்கும் இவங்க இப்படித்தான் சுத்திட்டு இருக்கிறாங்களா மேம்?” என வெண்ணிலா வேதனையின் உச்சத்தில் வினவ, “இல்லம்மா... இவங்களை அரெஸ்ட் பண்ணியாச்சு... இவங்களை மாதிரி இன்னும் நெறய பசங்க இருந்தாங்க.. ஸ்கூல் யூனிபார்ம்ல வீடியோ போடறது, லைவ்ல இன்டிமேசி க்ரியேட் பண்றவங்கன்னு நெறைய பேர்... நாங்க ஒரு சாம்பிளுக்காக டீசன்டா இதை எடுத்து உங்களுக்குக் காட்டறோம்... இவங்க எல்லார் மேலேயும், பேரன்ட்ஸ் மேலயும் சோசியல் ஆக்டிவிஸ்ட் ஒருத்தங்க கம்ப்ளெயின்ட் கொடுத்ததால அரெஸ்ட் பண்ணி கவுன்சலிங் கொடுத்திருக்கிறோம்... வீடியோ போடமாட்டோம்னு இவங்களும் வாக்கு கொடுத்திருக்கிறாங்க..” என ஜெனிதா கூறவும்தான் நிம்மதியில் பெருமூச்சு விட்டாள் வெண்ணிலா.

“இந்தப் போல்டர்ல இன்னும் ஒரே ஒரு ஃபைல் மட்டும் பார்க்க வேண்டியது இருக்குது மேம்... அதையும் ப்ளே பண்ணிடவா?” என வினித் கேட்க, “ம்ம்ம்... போடுங்க...” எனக் கண்களால் ஜாடை செய்தாள் ஜெனிதா. ஏனெனில் வெண்ணிலாவை உக்கிரத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லப் போகும் காணொளியல்லவா அது?!!!!

அவளது கட்டளையை ஏற்று, அவன் அதை ஒளிபரப்ப, திரையில் இருவர் “காதல் மன்னனா... நீயும் கண்ணனா...” என்னும் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் பத்திற்கும் மேல் இருக்குமெனத் தோன்றியது. கண்களைக் குறுக்கி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, “இவங்களை உங்களுக்குத் தெரியாதா?? விஷு – கார்த்திக்... இவங்களும் நம்ம ஆப்ல ட்ரென்டிங் கப்பிள்தான்.. அப்பாவும் பொண்ணும் செமையா இருக்குதுல்ல...” என்றார் அருகிலிருந்தவர்.

இதைக் கேட்டதும் திக்கென்றிருந்தது அங்கிருந்த சிலருக்கு. அடுத்தடுத்த காணொளிகளில் பாரபட்சமே இல்லாமல், அம்மா – மகன், அக்கா – தம்பி, அண்ணன் – தங்கை, பாட்டி – பேரன், அப்பா – மகள், அக்கா கணவன் – கொளுந்தியாள் என இஷ்டமான பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்க, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிலர்மீது வீசத் தொடங்கி விட்டாள் வெண்ணிலா.

அவளைப் பார்த்து முகத்தைச் சுளித்த அங்கிருந்த ஒருவர், “இந்தப் பொம்பளையை இங்கே இருந்து கூட்டிட்டு போங்கம்மா... மனநிலை சரியில்லாதவளை அழைச்சிட்டு வந்திருக்கிறீங்க..” எனக் கூறி முடிக்கும்முன்னரே, “யாருடி பைத்தியம்... யாரு பைத்தியம்... நானா?! இப்படிக் கேவலமான வீடியோவை அப்டேட் பண்றவங்களுக்கும், ரசிக்கிறவங்களுக்கும் நல்லவங்க... நான் பைத்தியமா??” என எதிர்த்து நின்றாள் வெண்ணிலா.

“உங்களுக்குத் தெரியுமா?? உறவுகளோட உன்னத வாழ்க்கையை வாழுற ஒரே நாடு நம்ம நாடுதான்... வெளிநாட்டுல எல்லாம் அங்கிள், ஆன்ட்டின்னு ஒரே வார்த்தையில முடிச்சிடுவாங்க... நம்ம ஊருலதான் பெரியப்பா – பெரியம்மா, சித்தப்பா – சித்தி, மாமா – அத்தைன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு உறவுமுறை வச்சு கொண்டாடுறோம்... ஒண்ணுவிட்ட அக்கா, சகலை, பங்காளி, சொக்காரன் இப்படி நெறைய நெறைய சொல்லலாம்.. சில உறவுகள் எப்பவுமே போற்றத்தக்கவை.. அதிலே அப்பா – பொண்ணு, அம்மா – பையன் போன்ற புனிதமான உறவுகளும் அடக்கம்... எல்லாருக்கும் அந்த உன்னதமான உறவுகள் கிடைச்சிடாது... அதைப் போய்.... ச்சே... நெனச்சு பார்த்தாலே உடம்பெல்லாம் கூசுது...” என உணர்ச்சிப் பொங்க பேசிக் கொண்டிருந்த வெண்ணிலாவின் அருகே சென்ற ஜெனிதா, “மேம்.. ப்ளீஸ்... இன்னும் கொஞ்ச நேரம்தான்.. இந்த வீடியோசை எல்லாருக்கும் போட்டு காட்டணும்ன்னு பி.எம் சொல்லியிருக்கிறார்... மொத்தமா பார்த்து முடிச்சிட்டா எல்லாரும் மொத்த்த்த்தமா.... போயிடலாம்...” எனக் கூற, “சாரி மேம்...” எனத் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

“ம்ம்ம்... தொடங்கட்டும்... அடுத்தக் காட்சி!!” என நாதன் இங்கிருந்தவாறே தன் தோழர்களுடன் கூற, காணொளி தொடங்கியது.

இதுவரை ஓடிய இணையர் காணொளி காட்சிகளைக்கூடச் சற்றே சகித்துக் கொண்டு பார்த்துவிடலாம் போல, இது அந்தளவிற்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. இதற்கு அதுவே மேல் என எண்ண வைத்தது.

முதல் காட்சியிலேயே திரையில் காட்டப்பட்டது வெண்பாதான். அதைக் கண்டதும் தன் மகளைப் பார்த்து புன்னகைத்தார் சாரதா. அது அவள் ஆரம்பக் காலத்தில் பதிவேற்றிய காணொளி அன்று. வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்த் தங்களுக்கான வாய்ப்புத் தேடலின்போது பதிவேற்றிய ஒன்று.

தன் குடும்பத்தை விட்டு வெளியேறிய தாயும் மகளும் தங்களை அழைத்த குறிப்பிட்ட சின்னத்திரை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். தாங்கள் சவுகரியமாகத் தங்குவதற்கு வீடும் வாடகைக்குப் பிடித்து, குடியேறினர்.

வழக்கமாக மற்றவர்களின் கதைகளில் கேள்விப்படுவதைப் போலல்லாமல் எவ்வித ஏய்ப்புமின்றி அந்த வாய்ப்பு நன்றாகவே சென்று கொண்டிருந்தது. பள்ளியிலும் மாற்றுச் சான்றிதழை (Transfer Certificate) பெற்றுச் சென்றிருந்த சாரதா அவளை அருகிலேயே தங்களது படப்பிடிப்பைத் தடைசெய்யாத வண்ணம் தோதுவான ஒரு பள்ளியில் சேர்த்திருந்தார்.

கிடைத்த வாய்ப்புடன் சாரதாவின் ஆசை அடங்கிவிடவில்லை. மென்மேலும் முன்னேற வேண்டும் என்பதாகத் தழைத்து நின்றது அவருக்குள் இருந்த கவனமீர்ப்பு செய்யும் நுண்கிருமிகளின் தாக்கம்.

தங்களது இருப்பைக் கிங்காங் செயலியிலும் உணர்த்திக் கொண்டேயிருக்க வேண்டுமென முடிவு செய்தவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கும் காணொளிகளைப் பதிவிட ஆவன செய்திருந்தார்.

மற்றவர்களைப் போலத்தான். ஆரம்பத்தில் நாகரீகமான உடைகளை அணிந்து காணொளி பதிவுசெய்த வெண்பாவை சற்றே இறுக்கமான ஆடைகளை அணிந்துகொள்ள வலியுறுத்தினார். பாவம் பதின்பருவ பெண்! என்ன செய்வாள்? உற்றவளான தாய் உரைப்பதுதானே அவளுக்கு வேதமும் உபநிடதமும்!! எனவே ஏன், எதற்கு என்னும் கேள்விகளின்றிச் சாரதாவின் கட்டளைகளை அவ்வாறே சிரமேற்கொண்டு செய்தாள் அவள்.

“Costume Sponsor” என்பதெல்லாம் பெரிய விஷயமல்ல. சாதாரணமாகத் தொடர்ந்து காணொளி பதிவேற்றுபவர்களுக்கே உடைகளை வழங்குவதற்கு வரிசைகட்டி நிற்கையில், குறிப்பிடத்தக்கதொரு தொலைக்காட்சி சேனலில் நெடுந்தொடரில் நடிக்கும் வெண்பாவிற்கு ஆடைகளை வடிவமைத்து வழங்கமாட்டரா என்ன?? ஸ்பான்சர் செய்பவர்கள் குவிந்தனர்.

அவர்கள் அளிக்கும் ஆடைகளை அணிந்து விதவிதமான புகைப்படங்களைக் ‘க்ளிக்’க்கி புகைப்படங்களைப் பதிவிட்டு அவர்களைக் குறிப்பிடுவது, அவர்களைத் தொடர்புகொண்டு ஆடைகளைப் பெறுவது எல்லாம் சாரதாவின் வேலை. கிட்டத்தட்ட அவளின் மேலாளர் போல நடந்து கொண்டார்.

சின்னத்திரை காட்சிகள் என்றாலே தற்போதெல்லாம் நெருக்கமான காட்சிகள் வெகுசாதாரணமாகக் காட்டப்படுகின்றன. வெண்பாவின் காட்சிகள் காதல் காட்சிகளிலிருந்து அடுத்தகட்டத்திற்குப் பரிணமிக்கும் போது சற்றே நெருடலாகத்தான் இருந்தது. ஆனாலும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கும் இருவரும் சம்மதித்தனர்.

ஏற்கனவே கூறியதைப் போல, ‘குழந்தைத் தொழிலாளர்’ என்பதெல்லாம் பொருளாதாரத்தில் நலிந்த சிறுசிறு கூலித் தொழில்களுக்குத் தான் போல, திரைத்துறையில் எவரும் அதுகுறித்துச் சிந்திப்பதே இல்லை. பதினெட்டு வயதுகூட நிரம்பாத வெண்பா நெருக்கமான காட்சிகளில் வெகுதாராளமாக நடித்தாள்.

அதன்பின்னர் அவளை அணுகும் ஆடைவடிவமைப்பாளர்கள்கூடச் சற்றே கவர்ச்சிகரமான ஆடைகளையே வடிவமைத்து வழங்கினர். அதற்கெல்லாம் அசருவதாக இல்லை இருவரும். எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் அணியத் தொடங்கினாள் வெண்பா.

இருப்பினும் சாரதா எதிர்பார்த்த அளவு வாய்ப்புகளோ புகழோ கிட்டவில்லை. குறிப்பிட்ட தொடரைப் பார்ப்பவர்களைத் தவிர எவருக்கும் அவளைக் குறித்துத் தெரிந்திருக்கவில்லை. எனவே ஒரு சிறந்த திட்டத்துடன் குதித்தார் சாரதா.

மற்றொரு சமூக வலைத்தளத்தில் கணக்கைத் தொடங்கியவர்; அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் விதவிதமான புகைப்படங்களைப் பதிவேற்றத் தொடங்கினார். உடல்வளைவுகள் எல்லாம் தெரியும் வகையில் அவளை விதவிதமாகக் காட்சிப்படுத்திய புகைப்படங்கள் எல்லாம் பெரும்வரவேற்பைப் பெற்றன.

அவருக்குப் புரிந்துவிட்டது, எதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என. எனவே தினமும் ஆடைகுறைப்புச் செய்ய முடிவெடுத்து அதைச் செயல்படுத்தினார். அதன் கீழிருக்கும் கருத்துப் பக்கத்தில் போய்ப் பார்த்தால் கமெண்டுகள் காண சகிக்காது. அந்த அளவிற்கு மனதின் வக்கிரங்களைக் கொட்டித் தீர்த்திருப்பர் அனைவரும்.

“ஸ்வீட்டி, செல்லம், புஜ்ஜி....” என இன்னும் என்னன்னவோ... பல கருத்துரைகள் குவிந்தாலும் எதிர்மறையிலாவது தன் மகள் பிரபலமடைந்திருக்கிறாளே என மனதிற்குள் மகிழ்ந்தாள் அந்த ஏ.எஸ் வைரஸ் தாக்கப்பட்ட தாய்.

அவரின் அந்த வியூகம் வெற்றிபெற்று, பல வாய்ப்புகள் கிட்டின வெண்பாவின் பதினைந்தாவது வயதிலேயே. அவள் பிரபலமாக இருந்தாளே தவிர அவளின் எதிர்காலம் என்ன எனபது கேள்விக்குறிதான்?! உண்மையில் அநுதினமும் அவளை அப்டேட் செய்து கொண்டிருந்தாலொழிய அந்தத் துறையில் நிலைத்து நிற்பது சிரமம். ஏனென்றால் அவள் பிடித்திருப்பது புலிவாலை.

அதெப்படி எனில் அனைவரையும் தன்னை நோக்கி இழுக்கிறேன் என்னும் பெயரில் ஏதேதோ தகிடதத்தோம் வேலைகள் செய்து வைத்திருக்கின்றனர் இருவரும். இதற்குமேல் என்ன இருக்கிறது?? வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சியில் இருந்த வெண்பாவின் இடம் சற்றே ஆட்டம் காணுவதைப் போல இருக்கவும், அவளைப் பட்டினிபோட்டு உடலை இளைக்கச் செய்தார் சாரதா.

இவ்வாறாக அவர்களின் வளர்ச்சியும் , மேற்படி விஷயங்களும் வெண்பாவின் தந்தைக்குத் தெரியாமல் இல்லை. அவரும் எத்தனையோ முறை அலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துவிட்டார். சாரதா அழைப்பை ஏற்றாரில்லை. இரண்டு முறை நேரில் வந்தும், அவரைப் பார்க்காமல் தவிர்த்துவிட்டார் அவர்.

“நிகழ்காலத்தின் அற்ப சந்தோஷத்திற்காகத் தன் மகளின் எதிர்காலத்தை அடமானம் வைத்து, சிதைத்து விட்டாளே” என்னும் வேதனைதான் வெண்பாவின் தந்தைக்கு. அவளும் இவரது பேச்சைக் கேட்பதாக இல்லை. ஏனெனில் அவளுக்காக இத்தனை ரசிகர்களும், ரசிகப்பக்கங்களும் இருக்கின்றனரே. பின் தந்தையாவது, தக்காளியாவது?!

சாதாரணமாகப் பதிவிடும் காணொளிகளில் கூட உச்சக்கட்ட கவர்ச்சியும் ஆபாசமும் கலந்திருந்தது. இருவரும் எதிர்பார்த்தது போலவே ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனம் பல கோடி செலவில் நடத்தும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பல கோடி செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.

இத்தனை அபரிமிதமான வளர்ச்சியும் பதினைந்து வயதிலேயே என்றால் பாராட்டத்தக்கதுதான், வியந்து நோக்கத்தக்கதுதான். ஆனாலும் இதன் பின்னதான வெண்பாவின் வளமான, நலமான, உத்திரவாதம் மிக்க எதிர்காலம் என்பது சற்றே கேள்விக்குரிய ஒன்றுதான்.

இதை வெறும் அனுமானம் என்றுகூடப் பலரும் சிந்திக்கலாம். அதற்கு நடைமுறை உதாரணங்கள் என அடுக்கத் தொடங்கினால் பட்டியல் பத்தைத் தாண்டும். மாதிரிக்கு இங்கே சிலரை குறிப்பிடுகிறேன் கேளுங்கள்.

சில்க் ஸ்மிதா...

ஷகீலா...

நமீதா....

சோனா...

யாஷிகா ஆனந்த்...

இவர்கள் அனைவரும் தங்களுக்குள் சமகாலத்தவர்கள் அல்லதான். இருப்பினும் கடந்த காலத்தில் விரல்விட்டு எண்ணும் வகையில் இருந்த பட்டியல் இப்போதெல்லாம் “Big Data” என்னும் அளவிற்கு மீமீமீமீ பெரிது. (ஷகீலா மம்மியை இங்கே சேர்த்து விட்டமைக்காக மன்னித்தருள்க. ஒருவேளை CWCக்கு வரவில்லை எனில் அவரது எதிர்காலம் கருமையன்றோ!?)
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

26

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. “Great happenings take time; Earlier Success is a scam” என. இங்கே வெண்பாவின் விஷயத்திலும் அதுதான் நிகழ்ந்து கொண்டிருந்தது.

வெண்பா மட்டுமின்றி அடுத்ததாக இரண்டு மூன்று இளம்பெண்கள் காட்டப்பட்டனர். அவர்களும் குறிப்பிட்ட செயலி மூலம் பிரபலமடைந்தவர்கள் தான். ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காகத் தொடங்கிப் பின்னர் வெளியே வர இயலாத அளவிற்கு அமிழ்ந்து போனவர்கள்.

அவர்கள் பதிவேற்றியிருக்கும் காணொளிகள் குறித்ததான குறிப்புகள் எல்லாம் எழுத்து வரைமுறைக்கு அப்பாற்பட்டவை.

திரைப்பாடல்களில் பல வகைகள் உண்டு. அவை எவை என்றால் குத்துப்பாடல், டைட்டில் பாடல், இன்ட்ரோ பாடல், மெலோடி பாடல்... என. இவைகளில் ஒன்றுதான் இரட்டை அர்த்தம் தெறிக்கும் பாடல் வரிகள். பல பாடல்களில் இலைமறை காயாக வார்த்தைகள் பிரயோகம் செய்யப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்... அடடா பிரம்மன் கஞ்சனடி!!” என்பதைப் போல. சில பாடல்களில் எல்லாம் பட்டவர்த்தனமாக அனைத்தையும் குறிப்பிட்டுவிடுவர். “திண்டுக்கல்லு திண்டுக்கல்லு... பெரிய பூட்டு எனக்கு... உன்கிட்டேதான் தொறந்து பார்க்க கள்ளச்சாவி இருக்கு..” என்பதாக.

கேட்பது எவ்வித மாறுபாடும் புலப்படாவிடினும் சற்றே உன்னிப்பாக நோக்கினால் அறுதியாகக் கணித்துவிடலாம் அதிலிருக்கும் விரசம் கக்கும் வரிகளை.

இவ்வாறான வார்த்தைகள் குவிந்து கிடக்கும் பாடல்களைத் தேடிப்பிடித்து அதற்கேற்ப பாவனைகள் செய்து காணொளிகள் பதிவிடுவது ஒரு சிலரின் வழக்கம். இந்த வழக்கம் எவ்வாறாக ஏற்பட்டது எனில் பார்ப்போரின் ஆதரவால்தான். மேலும் இந்தக் காணொளிகளுக்கான வரவேற்பிற்கு மற்றொரு காரணமும் உண்டு.

ஏனென்றால் இப்படிப்பட்ட காணொளிகள் பதிவேற்றும் அனைவரும் வெகுவிரைவில் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தலைகாட்டும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். ஆகவே அதுதான் ஆதர்ச வழியென எவ்வித பரிசீலனையுமின்றிப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர் பலர்.

எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமென்றால், “கூதக்காத்து கொல்லுதய்யா... மல்லுவேட்டி தாய்யா.... இல்ல மல்லுக்கட்ட வாய்யா...” என்னும் பாடல் எத்தனை வன்மைமிக்கப் பாடல் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் பாடலுக்கு அழகாக அங்க வளைவுகள் அனைத்தும் தெரியும் வகையில் பட்டுடுத்தி, அதீத ஒப்பனைகளைத் தீட்டி, அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப உதட்டைக் கடித்து, கண்களைக் குறுக்கி, முகப்பாவனைச் செய்து, காண்போரைக் கிறங்கடிக்கும் (கிளர்ச்சியடைச் செய்யும்) காணொளிகள் பதிவேற்றப்படும்.

இந்த வகைக் காணொளிகள் நம்மனைவருக்கும் புதிதல்ல. ஏறக்குறைய அனைவருமே ஆங்காங்கே சமூக வலைத்தளங்களில் கண்டிருப்போம். மேலும் கண்ணியத்திற்கு இழுக்கான பல வரிகளும், செயல்களும் அவற்றில் மிகுந்திருப்பதால் அவற்றை இங்கே குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறேன் என்பதைத் தயைகூர்ந்து கருத்தில் கொள்க.

இவ்வாறான பல காட்சிகள் காட்டப்பட, அனைவரும் தங்களுக்குள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர். “என்னம்மா இது??! இப்படியெல்லாமா வீடியோ போடுவீங்க?? கொஞ்சமாவது மனசாட்சி வேணாமா?? நீங்க பேமஸ் ஆகணும்ன்னா என்ன வேணாலும் போஸ்ட் பண்ணுவீங்களா?? சின்னப் பசங்க யாராவது இந்த வீடியோவைப் பார்த்தா என்ன ஆகுறது??” என.

நாதனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் கோபமாக வந்தது. இவற்றைக் காண்கையில் சாமானியரான நாம் முகத்தைச் சுளிக்கிறோம், ஆனால் இவர்களோ அதைக் கூட உணராதவர்களாக இருக்கிறார்களே. அந்த அளவிற்காகப் புகழின்மீதும் கவனயீர்ப்பின்மீதும் மோகம் முற்றிவிட்டது என. இருப்பினும் ஜெனிதாவிற்கும் ஜுபினிற்கும் பயந்து, அவர்களது வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாக அமைதி காத்தனர்.

அமர்ந்திருந்த அனைவரிடமும் திரும்பிய ஜெனிதா, “இவங்க எல்லாரும் இந்த வீடியோவால பேமஸாகி, பெரிய பெரிய இடத்துக்குப் போனவங்க... பொதுவா மீடியாவைப் பொருத்தவரை கடின உழைப்புங்கறது ரொம்ப முக்கியம்.. பத்து வருஷம், பதினைஞ்சு வருஷம் ஹார்ட் ஒர்க் பண்ணினதுக்கு அப்புறம்தான் பலருக்கு ரெகக்னிஷன் கிடைச்சிருக்குது... சிலருக்கு கிடைக்காமலும் போயிருக்குது... இறுதிவரை அடிமட்ட லைட்மேனாவே வாழ்ந்து மடிஞ்சவங்க பல பேர்.. அப்படி இருக்கிறப்போ இவங்களுக்கு இவ்ளோ சின்ன வயசிலேயே, குறுகிய காலத்திலேயே இப்படி வாய்ப்பும் புகழும் கிடைச்சது சந்தோசம்தான்.. இதுக்குப் பின்னாடி இருக்கிற அரசியல், ட்ரிக்ஸ் எல்லாத்தையும் விட்டுடலாம்.. அதெல்லாம் இவங்க சாமர்த்தியம்... இதுமூலமா இவங்க எதிர்காலம் என்னவாகும் அப்படிங்கறதெல்லாம் இரண்டாம்பட்சம்... இப்போல்லாம் சமூக வலைத்தளத்துல போட்டோ போடாதீங்கன்னு சொல்லுறதுகூடப் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கிறதுன்னு சொல்லுறாங்க போலி பெண்ணியவாதிகள். நாமாகவே போய் ஏன் அடுத்தவங்களுக்கு மிஸ்யூஸ் பண்ற டெம்டேஷன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கணும்ன்னு ஒரு பிரிகாஷனுக்காகதான் சொல்றது... ஆனாலும் பலர் புரிஞ்சிக்கத் தயாரா இல்ல.. ஓகே.. அது போகட்டும்... இப்படிப் பல கட்டுப்பாடுகளும், கண்ணியங்களும் நடைமுறையில் இருக்கிற நம்ம நாட்டுல இப்படிப்பட்டதான வீடியோக்கள் கொஞ்சம் தகுதிக்கு மீறியதுதான். அண்ட் இதன் தாக்கத்தால இவங்க தனிப்பட்ட வாழ்க்கையில ஏற்படுற பாதிப்புகள் எல்லாம் அவங்க அவங்க வினைப்பயனால் விளைஞ்சவை அப்படின்னு எடுத்துக்கிட்டா கூடச் சமுதாயத்துல எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுதுன்னு ஒரு குட்டி டீசர் மாதிரி சூட் பண்ணியிருக்கிறோம்... பாருங்க...” எனக் கூறிவிட்டு திரும்பிக் கொண்டாள்.

அனைவரும் ஆர்வமுடன் அதைக் காணத் தொடங்கினர். முன்னர்க் காட்டிய பதின்வயது ஆர்வக்கோளாறுகள் செய்து கொண்டிருந்த அரும்பெரும் செயலை சிறுகுழந்தைகள் சிலர் செய்துகொண்டிருந்தனர்.

ஆம், அவர்கள் வாயசைவு செய்திருந்த ஆடியோக்கள் எல்லாம் வயதுக்கு மிஞ்சியவைதான்.

“கல்யாணம் ஆகிருச்சா??”

“இல்ல...”

“யாராச்சும் லவ்...”

“செட்டாவல...”

“அப்போ ஓகே...”

..........

“இந்தா பாப்பா.... அப்போ ஓகேன்னா என்ன??”

“ஷிப்ட் எட்டரை மணிக்கு முடிஞ்சிடும்... அப்புறம் வாங்க.. பேசலாம்...” எனத் திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிக்கு வாயசைத்து வைத்திருந்தாள் ஐந்து வயது சிறுமி.

“வரேன் அண்ணா... வரேன் அண்ணா...”

“ஏன் எங்களை மட்டும் அண்ணன்ன்னு சொல்ற... மாரிய சொல்லு...”

“அவரை அண்ணான்னு கூப்ட... எனக்கு நேச்சுரலா வரமாட்டிக்குது...” எனக் கூறி முடித்ததும் “டானு டானு டானு...” பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

இதைப் பார்க்கையில் ஆத்திரமாக வந்தது பாதிப் பேருக்கு. அடுத்ததாகவும் அனைவரது ரத்தக் கொதிப்பையும் அதிகரிக்கும் வகையில் இதுபோன்ற காட்சிகள் பலவும் ஒளிபரப்பப்பட்ட பின்னர் ஒரு காட்சி வந்தது. அதில் அனைவருமே விக்கித்துப் போய்விட்டனர்.

அது என்னவெனில்...

1) ஒரு குழந்தை மெல்ல மெல்ல ஓசை கேட்காவண்ணம் நடந்து சென்று தனது தந்தையின் சட்டைப்பையில் வைத்திருக்கும் வெண்சுருட்டை (Cigarette) எடுக்கிறது. எடுத்த பின்னர் எவரும் தன்னைப் பார்க்கின்றனரா என உறுதி செய்து கொண்ட பின்னர்ப் பற்ற வைப்பானின் (Lighter) உதவியுடன் தன் தந்தை பற்ற வைப்பதைப் போலவே பற்ற வைத்து, இழுத்துப் புகைக்கிறது. இதைக்கூடப் பதிவுசெய்து பதிவேற்றியிருந்தார் அதன் தந்தை.

இதைக் கண்டதும் நாதனும் வினித்தும் தங்களுக்குள் புகைந்தனர். “என்னடா தகப்பன் இவன்.. பெத்த புள்ள இப்படிப் பண்றதைப் பார்த்தா அதைக் கண்டிப்பான், தானும் அந்தக் காரியத்தைச் செய்யாம மனசு மாறுவான்... ஆனா இங்கே என்னடான்னா உக்கார்ந்து வீடியோ எடுத்துட்டு இருக்கிறான்??” என நாதன் கோபத்தில் கொப்பளிக்க, “அடப் போடா... இவன் இப்படி வீடியோ எடுக்கிறதைப் பார்த்தா இவனே இப்படிப் பண்ண சொல்லிட்டு வீடியோ எடுத்தானோ என்னவோ?! இப்போதான் எல்லாரும் வியூஸ்க்காக என்ன வேணா பண்ணுறாங்களே...” எனச் சலித்துக் கொண்டான் ஒருவன்.

2) ஒரு குழந்தையை அடித்துத் துன்புறுத்துகிறான் ஒருவன். அதைக் கண்ட அண்ணனாகிய குழந்தை அவனை அடிக்க முயற்சிக்கிறது. அந்தக் குழந்தையை ஓரமாகத் தள்ளிவிட்டு, மீண்டும் அடிக்கிறான் அவன். அவனைக் கடித்து வைக்கிறது அந்தக் குழந்தை.

3) ஒரு குழந்தையிடம் கேட்கிறான் ஒருவன். “டேய்... நீ சங்கத்துல சேர்ந்துக்கிறியா??” என. “ம்ம்... சரி...” என்கிறது அந்தக் குழந்தை. “அப்போ போ... உங்க அப்பா பாக்கெட்டுல இருந்து ஐயாயிரம் ரூபா எடுத்துட்டு வா...” என அவன் கூறவும், “சாப்பிட்டுட்டு வாரேன்...” என்கிறது அக்குழந்தை. “சாப்பிட்டுட்டு வாரியா?? அப்போ சங்கம் வேணாமா உனக்கு?? சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா??” எனக் கேட்கையில், “அப்போ நான் சாப்பிட வேணாமா?? எனக்குப் பசிக்கும்ல..” என அழுகிறது அந்தக் குழந்தை.

4) ஒரு சிறுவனைத் தனியே காட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான் ஒருவன். “யம்மோவ்... எங்கம்மா இருக்கிற?? இங்கே கூட்டிட்டு வந்து சாவடிக்கிறானுங்கம்மா என்னைய...” என அந்தக் குழந்தை கதறுவதைப் பதிவு செய்து பதிவிட்டிருந்தனர்.

இதைப் பார்த்ததும் சற்றே கோபப்பட்டாள் வெண்ணிலா. அவள் கோபத்தில் வார்த்தைகளைப் பேசுவதற்குள் எழுந்துவிட்டான் நாதன். “மேடம்... என்ன சொல்லப் போறீங்க?? இதைப் பார்க்கிறப்போ கோபமா வருதுன்னா?? இல்ல உங்க பையன் இந்தக் கேட்டகிரியில வரமாட்டான்னா?? இங்கே காட்டப்பட்ட வீடியோவுக்கும் உங்களுக்கும் பெருசா வித்தியாசம் ஒண்ணுமில்ல.. அந்த விஷயத்தோட வீரியம்தான் மாறுபட்டிருக்குதே தவிரப் பெருசா எந்த மாற்றமும் இல்ல..” என அவன் பேச, அவனுடன் இணைந்து கொண்டான் வினித்.

“ஆமாங்க... உங்க குழந்தையை டான்ஸ் ஆடவும் பாட்டுப் பாடவும் வற்புறுத்துற உங்களுக்கும் இந்த மாதிரி சிகரெட் குடிக்கிறதை வீடியோ எடுத்துப் போஸ்ட் பண்றவங்களுக்கும் எதாவது வித்தியாசம் இருக்குதா என்ன?? ஒட்டுமொத்தமா பார்த்தா ஒண்ணுதான்... ஒரு குழந்தையை அடிக்கிறது லீகல்லி அபென்ஸ்.. ஆனா அதையும் பார்த்து, சிரிச்சு ஊக்குவிக்கிறாங்க பார்க்கிறவங்க... நாங்கல்லாம் சின்ன வயசுல வீட்டைவிட்டு வெளியே போறப்போ அம்மா அப்பா சொல்லி விடுவாங்க.. யார் என்ன கொடுத்தாலும் வாங்கக் கூடாது, யார் என்ன கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடக் கூடாதுன்னு.. இங்கே ஒரு பையனை உண்மையாவே வெளியே தூக்கிட்டுப் போனாங்களோ இல்லை செட்டப்போ தெரியல.. ஆனா இதெல்லாம் என்ன வகையான மனநிலை?? அந்தச் சாப்பிடனும்ல பசிக்கனும்ல வீடியோ போட்டதுக்கான நோக்கம் என்ன?? ஜஸ்ட் எண்டர்டெயின்மென்ட்தானா?? அடுத்தவங்க கேட்டா காசு எடுத்து கொடுத்துடணும்ன்னு ஊக்குவிக்கிறீங்களா என்ன?? சத்தியமா குழந்தைகள் இருக்கிற மாதிரி இந்த வீடியோஸ் எல்லாம் என்ன காரணத்துக்காகப் போடறீங்கன்னு எனக்குப் புரியவே மாட்டுது...” என வினித் பேசினான்.

“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?? குழந்தைகளுக்கு அஞ்சு வயசு ஆகுற வரைக்கும் போனை கொடுக்கவே கூடாது.. இப்போல்லாம் குழந்தை உங்களைத் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு போனைக் கொடுத்து ஆ பண்ணிடறீங்க... சரி அதுதான் உங்க சூழ்நிலை அப்படின்னு வச்சிக்கலாம்... ஆனா... குழந்தை பண்ற சின்னச் சின்ன விஷயங்களையும் வீடியோ எடுத்து போடணும்ன்னு என்ன அவசியம் இருக்குது?? குழந்தை தம்மடிக்கிறதையும் தண்ணியடிக்கிறதையும் பார்த்து, ரசிச்சு, வீடியோ எடுத்துப் போஸ்ட் பண்ணி உலகத்துக்கே காட்டறது எல்லாம் வக்கிரத்தின் உச்சகட்டம்... இந்த வீடியோவை எல்லாரும் ஷேர் பண்ணி, திரும்பத் திரும்பப் பார்த்து ட்ரென்ட் ஆக்கிடுவீங்க... அப்புறமா அவங்களையும் பெரிய ஆளா இந்த உலகம் சித்தரிச்சிடும்... அவங்களும் செலிபிரிட்டி ஆகிடுவாங்க.. அவங்களையும் அவங்க பேரன்சையும் கூப்பிட்டு வச்சு ஒரு நாலு கேள்வி கேட்டு, கொஞ்சி வியூஸ் வாங்கிக்குவாங்க... இதெல்ல்லாம் வழக்கமா நடக்கிறதுதான்... ஆனா அந்தக் குழந்தைக்குக் கடைசி வரை தப்புன்னே தெரியாது... ஏதோ தன்னோட திறமையால முன்னுக்கு வந்த மாதிரி மார்தட்டிக்கும்... முன்னாடி சொன்ன மாதிரி இந்தக் குழந்தைகளோட எதிர்காலமும் கேள்விக்குறிதான்... இதுதான் உலகம்ன்னு இருக்கிறவங்க வாழ்க்கையில என்ன பண்ணுவாங்கன்னு நெனச்சா ரொம்ப வருத்தமா இருக்குது... பொண்ணுங்க பசங்கன்னு பாகுபாடே இல்லாம இப்போதான் எல்லாரும் கிங்காங் வீடியோ போடுறாங்களே... எல்லாரும் உலகம் இதோட முடிஞ்சு போகுதுன்னு தின்க் பண்ணிட்டு இருக்கிறாங்க... பொதுவா நம்ம ஊர்ல சொல்ற மாதிரி பசங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அது அவனோட முடிஞ்சு போயிடும்... ஆனா கல்யாணம் ஆகாத பொண்ணுங்க இந்த மாதிரி வீடியோஸ் போஸ்ட் பண்றதால வர்ற விளைவுகள் பத்தியெல்லாம் யோசிக்கறதே இல்ல... ஜஸ்ட் அந்த நிமிஷ அட்டென்ஷன் சீக்கிங்க்காக என்னனவோ பண்ணிட்டு பியூச்சர் ஸ்பாயில் பண்ணிட்டு இருக்கிறாங்க...” என மூக்குவிடைக்கப் பேசினான் ஒருவன்.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

27

தன்னைச் சுற்றியிருந்தவர்கள் இவர்கள் இவ்வாறு வாதம் புரிவதை பார்த்துக்கொண்டிருந்த முகுந்த்; “இவனுங்க என்னடா இப்படிப் பேசிட்டு இருக்காங்க?? இதுக்கே இப்படிப் பேசறாங்கன்னா நான் பார்த்தது எல்லாம் பார்த்தா என்னென்ன செய்வாங்க???” எனத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

ஒரு கணம் தான் இதுவரை கண்ட கிங்காங் காணொளிகளை மனத்திரையில் மீள்பதிவு செய்து பார்த்தான். இளம்வயது பெண்ணொருத்தி அரைகுறையான ஆடைகள் அணிந்து, குறிப்பிடவே நாகூசும் அளவிலான பாவனைகளுடன் செய்திருந்த காணொளி எப்போதோ எதேச்சையாக அவனது முகநூல் காலக்கோட்டில் காட்டப்பட்டது.

“ஏன் இவங்க இப்படிப் பண்றாங்க?? இவங்க அப்பா அம்மா எல்லாம் கேக்க மாட்டாங்களா??” எனத் தன்னைத் தான் நொந்து கொண்டவாறே திறந்து பார்க்க, அடுத்ததாகக் குப்பை போல் அனைத்தும் வந்து கொட்டியது. அனைத்திலும் காட்டப்பட்டது அத்தனையும் திருமணமாகாத இளம்பெண்கள்.

பொழுதுபோக்கிற்காகக் காணொளிகள் பதிவேற்றலாம் தான்; ஆனாலும் அவர்கள் செய்த காரியங்கள் அனைத்தும் மீமிஞ்சியது. தோழிகளுடன் அமர்ந்து புகை பிடிப்பது போலவும் பாட்டிலை திறப்பது போலவும் தங்களுக்குள் இரட்டை அர்த்த வசனங்களைக் கூறிச் சிரிப்பது போலவும் எனப் பல கூத்துக்களை அரங்கேற்றி பதிவிட்டு இருந்தனர்.

கவனயீர்ப்புக்காக ஆடை குறைப்பிலும் ஆபாசத்தைப் புகுத்தி, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளைப் பதிவேற்றி இருக்க ஒருவித ஒவ்வாமை சுழன்றது அவனது வயிற்றுக்குள். “இவங்கலாம் இவர்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை தப்பான வழியில யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.. உண்மையான சுதந்திரம், உண்மையான பெண்ணியம்ன்னா என்னன்னு தெரியல போல....” எனத் தனக்குத் தானே நொந்து கொண்டவன்; அடுத்தக் காணொளியை தட்ட, அதில் ஒரு பெண் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னுடா இப்படி மோசமா கமென்ட் பண்ணிட்டு இருக்கிறீங்க?? நான் எப்படி வேணா ட்ரெஸ் பண்ணுவேன், என்னோட இன்னர்வேர் தெரியுதுன்னு கமெண்ட் போடுறீங்க! ஏன் உங்களுக்குத் தெரியாதா பொண்ணுங்கன்னா இன்னர்வேர் போடுவாங்கன்னு...” என அவள் கேட்கும் காரியம் சரிதான் எனத் தோன்றியது முகுந்த்திற்கு.

கமெண்ட் பண்றவங்க ஏன் எல்லாரையும் ஒரே ஸ்கேலால மெஷர் பண்றாங்க?? எனத் தனக்குத் தானே கேட்டு கொண்டவாறே அமர்ந்திருக்க, அவனது எண்ணம் தவறு என அடுத்தக் கணமே தோன்ற வைத்திருந்தது அந்தப் பெண்ணின் பேச்சு. “ஏன்டா நான் 2000 ரூபாய்க்கு இன்னொரு வாங்குறேன்... அதை நான் தெரியிற மாதிரி வீடியோ போட்டா என்ன தப்பு?? அப்படித்தான்டா போடுவேன்... என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ...” என வாய்க்கு வந்த போக்கில் அவள் பேசத் தொடங்க, இவளுக்கு ஆதரவாகவா யோசித்தோம், பேசினோம் எனத் தன்னைத் தான் தலையிலடித்துக் கொண்டான் முகுந்த்.

ஒரு அரை மணி நேரமாக அதற்குள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வந்தவனுக்குச் சேற்றில் புரண்டு எழுந்து வந்ததைப் போன்ற ஒரு உணர்வு!! நினைவிலிருந்து மீண்டு வந்தவன் சுற்றிப் பார்க்க, அங்கே அடுத்தக் கேட்டகிரி காணொளிகள் ஒளிபரப்பப்பட்ட தொடங்கியிருந்தன.

“அச்சச்சோ மிஸ் பண்ணிட்டேனே...” என்றவாறு அவன் ஆர்வமாகப் பார்க்க தொடங்க, அது வழக்கமாகச் செய்யும் எனப்படும் பிராங்க் எனப்படும் வீடியோக்கள்.

இப்போது தான் அதன் பெயர் பிராங்க்... ஆனால் நாம் சிறுவயதில் அவற்றை ‘சும்மா லுலுலாய்க்கி...” என்று குறிப்பிட்டு இருப்போம். உதாரணமாக, “டேய் இன்னைக்கி கணக்கு வாத்தியார் வரலடா..” என அருகில் இருப்பவனிடம் கூறிவிட்டு, அவர் வகுப்பிற்குள் நுழையும்போது “சும்மா சொன்னேனே... சொடக்கு விட்டேனே...” எனப் பாடி இருப்போம்.

ஆனால் இப்போது இந்த நவீன யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டதால், அனைத்துமே ஒரு விதத்தில் அப்டேட் ஆகிவிட்டது. விளையாட்டிற்காக எனச் சொல்ல வைத்து அனைத்துமே விளையாட்டு ஆகிவிட்டது என்பதால் அனைத்துமே இவர்களுக்கு விளையாட்டுதான். சீரியசாக எடுத்துக் கொள்வது கிடையாது.

அங்கே காட்டப்பட்ட காணொளிகளின் தொகுப்பு இதோ:

• ஐந்து பெண்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் பின்னால் அலறியவாறே வந்து பயமுறுத்துகிறான் ஒருவன். அனைவரும் கத்திக்கொண்டு ஆளுக்கு ஒரு திசையில் ஓடிவிட, அவன் அனைவரையும் அழைத்து, “அங்கே கேமரா பாருங்க இது சும்மா பிராங்க் தான்..” என்கிறான் .அந்தப் பெண்கள் சற்று முறைத்தவறும் சிரித்தவாறும் கடந்து விடுகின்றனர்.

“கண்ணா இக்கட ச்சூடு..” என்பதாக ஜுபின் அவர்களைப் பார்க்க, இதையே வேறு ஒரு கோணத்தில் காணொளியாகப் பதிவு செய்திருந்தனர் ஜெனிதாவின் குழுவினர். அதே ஐந்து பெண்கள் இருக்குமிடத்தில் இப்போது சற்று நடுத்தர வயதினர் நான்கு பேர் நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இருந்து கத்தியவாறு ஒருவன் ஓடி, வர தங்களால் இயன்ற மட்டும் அங்கிருந்து செல்ல சிலர் முயற்சிக்க, ஒருவர் அந்த அதிர்ச்சி தாளாது அந்தப் பாதையிலேயே மயக்கமுற்று விழுந்து விடுகிறார். அனைவரும் பதறி போய் வந்து பார்க்க, அவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறது.

அட்ரீனலின் சுரப்பு அனைவருக்குமே அதிகமாக இருக்கிறது. அனைவரும் சேர்ந்து அந்த வீடியோ செய்பவனைத் துவைத்து எடுக்கின்றனர்.

அடுத்தச் செட் காணொளிகள் :

• பொதுவாகச் சென்னை மாநகரத்தில் அனைவருமே காதில் எப்போதும் செவிட்டு மிஷின்.... மன்னிக்கவும்... ஹெட்செட், ஹெட்போன்களுடன் வலம் வருபவர்கள்தான். நடக்கையிலும் பேருந்தில் பயணிக்கையிலும் சதா காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருப்பவர்கள்தான். இவ்வாறாக அந்தத் தெருவில் நடந்து கொண்டிருப்பவர்களில் ஏறத்தாழ அனைவருமே காதில் அதை மாட்டிக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். ஒரு ஒரு இளைஞன் அவர்களுக்கு எதிரில் நடக்கிறான். கையில் அலைபேசி உடன் நடந்து கொண்டிருப்பவரின் கையைத் தட்டிவிட, அந்த ஹெட்போனும் மொபைலும் விழுந்துவிடுகிறது. “கேமரா பாருங்க... சும்மா... இதோ உங்களுக்காகப் புது ஹெட்போன்..” என அவன் கொடுக்கவும் சிலர் முறைத்தாலும் பலர் போனா போகுது என வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். ஏனென்றால் அவன் கொடுத்தது விலை உயர்ந்த ஒன்று.

இதையே மற்றொரு கோணத்தில் காட்ட முற்படுகையில் ஒரு பெண் கையில் அலைபேசியில் எதையோ பார்த்தவாறு ஹெட்போனுடன் சென்று கொண்டிருக்கிறாள். அவள் அருகே சென்று, அவன் அந்த அலைபேசியில் மாட்டியிருந்த ஹெட்போனை உருவி, தரையில் விசிறி அடிக்கவும் அந்தப் பெண் அழ தொடங்கி விட்டாள். “அச்சோ... மேம்... இது ஜஸ்ட் ஒரு பிரான்க் ஷோதான்... அங்கே பாருங்க கேமரா இருக்குது...” என அவன் கூறவும், அவனது கன்னத்தில் ஓங்கி அடித்தவள் தரையில் அமர்ந்து அழ தொடங்கி விட்டாள்.

அவனும் அவனது குழுவினரும் “என்னாச்சு... என்னாச்சு...” எனப் பதறியவாறு அருகில் வந்து, “மேம்... உங்க ஹெட்போன்ஸ் வெறும் முப்பது ரூபாய் தானே... இங்கே பாருங்க புது ஹெட்போன்... இது டூ தவுசன்ட் ருபீஸ்...” என நீட்ட, முன்னிலும் அதிகமாகக் கோபமாகி விட்டாள் அவள்.

“இது என் அப்பாவோட ஹெட்போன்; அவருக்கு நான் ஆசையா வாங்கித் தந்தது என்னோட முதல் மாத சம்பளத்தில... இப்போ அவர் என்னோட இல்ல.. உன்னோட டூ தவுசன்ட் ருபீஸ் ஹெட்போனை வச்சு என் அப்பாவை திரும்ப வர வைக்க முடியுமா?? இதை அவரை யூஸ் பண்ண வைக்க முடியுமா?? வைக்க முடியுமா சொல்லுடா... என்னடா லூசு மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க....” என்ன அவள் அழுது கொண்டே எழுந்து செல்ல, இதைக் காண்போரது இதயம் குருதியை உகுத்தது.

அடுத்ததாகக் கணவன் மனைவி ப்ராங்க் வீடியோக்கள் :

வீட்டிற்குள் ஒருமுறை செய்தால் பிரச்சனை இல்லை; பல முறையும் பிராங்க் செய்து, அதை அதற்கும் நடிப்பதற்கும் பயப்படுவது போல நடித்தால் அது எத்தனை பெரிய அபத்தம்?!! எத்தனை பெரிய லாஜிக் மிஸ்டேக்?? ஆனால் அவர்களுக்கு அந்த அறிவைக் கூட ஏற்படாத வண்ணம் அவர்களின் மூளையை மழுக்கி வைத்திருந்தனர்.

சமையலறையில் மனைவி சமைத்துக் கொண்டு இருக்கிறாள்; அவளுக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றுகிறது. நேராகக் குளிர்பதன பெட்டியில் இருக்கும் தக்காளி சாஸ் எடுத்து, அவள் தன் கையில் ஊற்றிக் கொண்டு “அம்மா... கையில கத்தி பட்டுருச்சு... ஐயோ.... அம்மா... ரத்தம்...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்க, “அச்சோ... என்னாச்சு??” என அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான் அவளின் கணவன்.

“என்னாச்சும்மா??” என அவன் அவளது கையை நோக்க, தக்காளி சாஸ் எனத் தெரிந்ததும் அவன் அவளைப் பார்த்து முறைக்க, “சும்மா ப்ராங்க் பண்ணுனேன்... அங்கே கேமரா பாருங்க ங்க...” என்கிறாள் அவள்.

இங்கே யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது இங்கே அடுத்தவரின் உணர்வுகளை நாம் காட்சிப் பொருளாக ஆக்குவது. மனைவிக்கோ இல்லை மகளுக்கோ அடிபட்டால் ஒரு கணவனாக, தந்தையாக ஓடிவருவது ஒருவனின் ஆழ்மனதில் நிலைத்த அன்பு; ஆனால் அதையும் இப்படி ஒரு கேலிக்கூத்தாக ஆக்குவது என்பது உணர்வுகளைச் சிதைக்கும் ஒரு மனசாட்சியற்ற நிலைதான். ஆனால் பலரும் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர்.

“அப்பா நான் ஒரு பையனை லவ் பண்றேன்...” என்றவாறே வந்து நிற்கிறாள் மகள் ஒருத்தி. இதைக் கேட்டு அதிர்ச்சியான தந்தை, “என்னமா சொல்றே?? உன்னை நான் அப்படியா வளர்த்தேன்???” என மனவருத்தத்துடன் பேச, “அப்பா...எனக்கு அவரைக் கட்டி வைங்க... நான் இப்போ மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்” என அவள் கூறவும், அவர் கோபத்தின் உச்சத்திற்குச் சென்று அவளை அடிக்கக் கையை ஓங்குகையில் “அப்பா... அங்கே பாருங்கப்பா.. இது சும்மா.. விளையாட்டுக்கு... கேமிரா இருக்குது பாருங்க...” என்கிறாள் அவள்.

இதுவே இன்னொரு கோணத்தில் பார்த்தால், அந்தத் தந்தை தன் மகள் இவ்வாறாகச் செய்துவிட்டாள் என்னும் அதிர்ச்சியில் மாரடைப்பில் அந்த இடத்திலேயே விழுந்து உயிரை விட்டுவிடுகிறார்.

மற்றொன்று தன் மனைவியின் முன்னரே மற்ற பெண்களிடம் பேசுவது போல நடிக்கும் பிராங்க். அவனும் அவளும் காரில் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு அழைப்பு வருகிறது.

“ஆமா... ஆமா...

செல்லம்...

தங்கம்...

புஜ்ஜி..

அவளோட தான் வெளியே போய்க்கிட்டு இருக்கேன்...

ஆமா... என் பொண்டாட்டி தான்..” என அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, “யார் கிட்ட பேசுற நீ?? யார்கிட்டே பேசுற??? சொல்லு... சொல்லு...” என்பதாகக் கோபம் கொண்ட அவனது மனைவி அவனை அந்த இடத்திலேயே மொத்தத் தொடங்குகிறாள்.

கட்டிலில் கணவனும் மனைவியும் படுத்திருக்கின்றனர். கேமராவை ஆன் செய்துவிட்டு அவள் அருகே சென்றவன்; “விஜயா.. அடியேய் விஜயா...” என அழைக்க, “யாரு அந்த விஜயா... யாரு அவ???” என அவள் கத்தத் தொடங்க, “ஏய் சும்மா... சும்மா சொன்னேன்... அங்க பாரு... கேமரா ஓடிக்கிட்டு இருக்கு..” எனக் கை காட்டுகிறார்கள்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் விதமாக மற்றொரு காணொளி; அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் தன் கணவனிடம் வருகிறாள் மனைவி. “கார்த்திக்” என அழைக்க, அவன் நிமிர்ந்து பாராமல் வேலையிலேயே மூழ்கி இருக்கிறான்.

“கார்த்திக் நீ ஏன் எனக்காக டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்குற?? உனக்கு உன் வேலை தான் முக்கியமா போச்சு... அதனால நானும் உன் பிரண்ட் சஞ்சயும் சேர்ந்து வாழ தொடங்கிட்டோம்... இப்போ நான் இரண்டு மாதம் கன்சிவா இருக்கிறேன்...” என அவள் கூறவும் அவன் மடிக்கணினியை கீழே போட்டுவிட்டு அதிர்ச்சியில் எழுந்து கொள்கிறான்.

எத்தனை பெரிய அபத்தம் இது!! எத்தனை வீரியமான கலாச்சாரச் சீர்கேடு இது!! விளையாட்டுக்காகக் கூட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் தகுமா?? இவ்வாறு பயன்படுத்தவதே தவறு என்றால், அதைப் பதிவு செய்து, பதிவேற்றி, பகிர்தல் எத்தனை பெரிய முட்டாள்தனம்!! இங்கே பலரும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர்.

அத்தோடு நில்லாமல் பக்கத்து வீட்டு நடுத்தரப் பெண்மணியை அழைத்து வந்து திருமணம் செய்துவிட்டேன் என நிற்கும் பதினாறு வயது சிறுவன், இவள் கர்ப்பமாக இருக்கிறாள் எனக் கூறும் அக்காவின் கணவன் என விதவிதமாக வந்து குவிய, இதுபோன்ற காணொளிகளைக் காண்கையில் அங்கிருந்த அனைவருமே தங்களுக்குள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.

“டேய் நாதன்... இப்படி ஒரு விஷயம் எல்லாம் இருக்குனு எனக்குத் தெரியாமலேயே போச்சுடா.... செம கோவம் வருது... நாம பாட்டுக்கு நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்திருக்கிறோம்... ஆனா பாரு இங்கே இப்படி எல்லாம் நடந்து இருக்குதுன்னு... என்னதான் டிசைனோ??!! இவங்களுக்குக் கொடுக்கிற சுதந்திரத்தை ஏன் இப்படி எல்லாம் யூஸ் பண்றாங்க??” எனத் தனக்குள் தன் தோழர்களிடம் நொந்து கொண்டான் கார்த்திக்.

தெருவில் நடந்து கொண்டிருக்கும் பெண்ணிடம் சென்று, “இது எந்த ஊரு??” எனக் கேட்க, அவள் அதற்குப் பதில் கூற, அதன்பின்னர் “உங்களைப் பார்த்ததும் வழியையே மறந்துட்டேன்” எனக் கூறிவிட்டு, அவளை நாணச் செய்து அதைப் பதிவிட்டிருந்தனர்.

ஒரு இளம்வயது பெண்ணிடம் இதே போல் வழியைக் கேட்க, அவள் தெளிவாக அனைத்து பாதைகளையும் கூறிய பின்னர், “தேங்க்ஸ் ஆன்ட்டி...” எனக் கூறுதல் பொழுதுபோக்கு மெட்டீரியலாக இருந்தாலும் இவ்விடம் அந்தப் பெண்ணில் உதவும் குணம் மிதிக்கப்பட்டு, அவமதிக்கப்படுகிறது அல்லவா??

பெண்களின் வண்டியில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் பெண்ணின் முன்னே கையை நீட்டி, நிறுத்தி அவளிடம் ஏதாவது பேசி அதையும் பிராங்க் என்பது, எதிரில் வரும் பெண்ணைக் கட்டிப் பிடிப்பது போலச் சென்று பின்னால் நிற்பவனைக் கட்டிப்பிடித்து அந்தப் பெண்ணை அசௌகரியத்துடன் அங்கிருந்து நகரச் செய்வத இதெல்லாம் பிராங்கின் பல பரிமாணங்கள்.

கும்பலாக நின்று கொண்டிருக்கும் பெண்கள் கூட்டத்தில் நுழைந்து, திடீரென ஒரு பெண்ணிடம் ரோஜாப்பூவை நீட்டி, “உங்களை ரொம்ப நாளாக ஃபாலோ பண்ணிட்டு இருக்கிறேன்... உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு... ஐ லவ் யூ” என நீட்ட, அவள் ஒரு மாதிரியாகப் பார்க்கிறாள்.

இதையே வேறு கோணத்தில் காட்ட முற்படுகையில் அந்தப் பெண் ஒரு திருமணமாகாத பெண்ணாக இருந்து, அவளுக்கும் அந்தப் பையனை பிடித்துப் போய் விட்டால்??? இல்லையேல் சுற்றியிருக்கும் எவராவது அந்தப் பெண்ணின் உறவினராக இருந்துவிட்டால்??? அவளின் நிலை என்ன?? பிராங்க் என்னும் பெயரில் என்ன கூத்து வேணாலும் செய்யலாமா என்பதாகக் கேள்வி எழுந்தது அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு.

இருப்பினும் ஜெனிதா என்னும் ஒற்றை மனுஷியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அமைதியாக அமர்ந்திருந்தனர். வெண்ணிலாவின் முகத்தில் ஈயாடவில்லை. இத்தனை மோசமான வலைதளத்தில் தான் தன் மகனை உள்ளீடு செய்துள்ளோம் என.

தன்மீது தனக்கே கோபமாக வந்தது. அங்கிருந்து அனைவருக்குமே ஒருவித ஒவ்வாமை மனநிலைதான். தாங்கள் செய்தது தவறில்லைதான் ஆனாலும் சுற்றி இருப்பவர்கள் செய்தது தவறு என்பது போன்ற மனநிலை அவர்களுக்கு.

எப்போதும் அடுத்தவர்களை ‘நீதான்’ எனக் கை காட்டும் போது, எஞ்சிய மூன்று விரல்கள் நம்மை நோக்கி இருப்பது நமக்குத் தெரியாது. மேலும் நம்மில் பலர் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுக்காது அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பது தான் வழக்கமாக உள்ளது.

இவர்களும் தங்களைச் சுற்றி இருக்கும் பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்தாலும் தாங்கள் செய்தது சரி என்று நினைத்து வந்தனர். அப்போது ஜெனிதாவின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. ஜுபினைப் பார்த்தவள் ‘பேசிட்டு வரேன்’ எனக் கூறியவாறே எழுந்துகொள்ள, அது ஒரு காணொளி அழைப்பு. பிரதம மந்திரி தான் அழைத்திருந்தார்.

அவர் அருகில் இருக்கும் பெண் பேசுவதை அங்கிருக்கும் அனைவருக்கும் நேரலையில் ஒளிபரப்புமாறு கூற, “ஓகே சார்...” என்றவாறே அங்கே வந்து அமர்ந்த ஜெனிதா; “வினித் இந்த வீடியோவை அங்கே கனெக்ட் பண்ணுங்க... பி.எம் லைன்ல வர்றாரு..” என அவனிடம் தன் அலைபேசியைக் கொடுத்தாள்.

அனைவருக்கும் பிரதம மந்திரி தங்களுடன் காணொளியில் பேசப் போகிறார் என்பதும் ஏக ஆனந்தம்!! இப்போது அலைபேசி மட்டும் இருந்திருந்தால் அவருடன் செல்பி எடுத்தோ இல்லை அவரது பேச்சையும் பதிவு செய்தோ தங்களைப் பின்தொடர்பவர்களுக்குக் காண்பிக்கும் விதமாகப் பதிவிட்டு இருக்கலாம் எனச் சலித்து, அங்கலாய்த்தனர்.

அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த பிரதம மந்திரி; தன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணைப் பேசுமாறு கூறினார். அந்தப் பெண் சோகமே உருவாக அமர்ந்திருக்க, அவளை “பேசுமா...” எனத் தைரியப்படுத்தினார் பிரதம மந்திரி. அவளும் சரி என்று தலையசைத்துவிட்டு பேசத் தொடங்கினாள்.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

28

“வணக்கம்... என் பெயர் ரதி... என்னை ரதின்னு சொல்லி தெரிவதைவிட ஆதித்யா ரதின்னு சொன்னால்தான் நிறையப் பேருக்கு தெரியும்... ஏன்னா நாங்க ஆதித்யா ரதி அப்படிங்கிற பெயர்ல தொடர்ந்து வீடியோஸ் போட்டுட்டு வந்தோம்... என்னைப் பார்க்கிற நிறையப் பேருக்கு என்னைத் தெரியும்னு நினைக்கிறேன்... என்னுடைய பாலோவர்ஸ் அப்படின்னு நிறையப் பேர் சொல்லிட்டு இருக்கீங்க.. உங்க எல்லாருக்கும் நான் என்னுடைய கதையைச் சொல்லிட்டு போக வந்து இருக்கேன்... நான் காலேஜ் முதல் வருஷம் படிச்சிட்டு இருக்கும்போது தான் இந்த ஆப் எனக்குத் தெரிய வந்துச்சு.. நானும் என் கூடப் படிச்ச ஆதித்யாவும் சேர்ந்து அப்பப்போ வீடியோ பார்ப்போம்... அவனும் நானும் லவ் பண்ணிட்டு இருந்தோம்.. அப்போ ஒரு நாள் எனக்கு ஒரு ஆசை வந்தது... நாமளும் இந்த மாதிரி வீடியோ போட்டா என்ன?? அப்படின்னு... ஏன்னா பல பேர் எங்களை மாதிரி வீடியோ போட்டுட்டு இருந்தாங்க... நாமளும் போட்டா நல்ல ஃபேமஸ் ஆகும், அப்படின்னு நெனச்சிட்டு தான் போஸ்ட் பண்ண ஆரம்பிச்சோம்... நாங்க எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு... நாங்க ரெண்டு பேருமே மிடில் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ் தான்... எனவே எங்களுக்குப் பெரிய அளவில் பாராட்டு எல்லாம் இதுவரைக்கும் வாழ்க்கையில கிடைச்சதே கிடையாது.. அப்படி இருந்டேக எங்களுக்கு இவங்க கொடுத்த ஆதரவு எங்களுக்கு ரொம்பத் தன்னம்பிக்கை தருவதாகவும் மோடிவேட் பண்ணுறதாவும் இருந்துச்சு... அதனால நாங்க தொடர்ந்து வீடியோ போட ஆரம்பிச்சோம்... எல்லாரும் எங்களைக் கப்பிளா, ரியல் லைப் கப்பிளா அப்படின்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க... ஏற்கனவே காதலிச்சிட்டு இருந்த நாங்க கொஞ்சம் தைரியமாகவே வீடியோ போஸ்ட் பண்ண ஆரம்பிச்சோம்... அப்பதான் இந்த விஷயம் எங்க வீட்டுக்கு தெரிய வந்துச்சு... அப்பா கூப்பிட்டு கண்டிச்சார்... ஆனா இந்த விஷயத்தை நாங்க கிங்காங் ஆப்பில இருக்கும் எங்க ரசிகர்கள் கிட்ட சொன்னப்போ அவங்க நீங்க தான் மேஜர் ஆச்சே.. கல்யாணம் பண்ணிக்கோங்க அப்படின்னு சொன்னாங்க.. எங்களுக்கு அப்போது யோசிக்கிற தன்மை, மெச்சூரிட்டி எல்லாம் இல்ல... அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாதான் இருக்கும், நமக்குத் தான் காதல் இருக்குதே, சாப்பாட்டுக்குன்னு பார்த்தா இத்தனை பேரோட அன்பும் ஆதரவும் இருக்குதேன்னு தோணுச்சு... ஏன்னா அப்போ தான் எங்களுக்கு மாநாட்டைசேஷன் கிடைச்சிருச்சு.. இதுதான் உலகம், இதுல வர்ற வியூசும் காசும் தான் நிரந்தரம் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தோம் நாங்க... பத்தொன்பது வயசுல வீட்டைவிட்டு வெளியே வந்து கல்யாணம் பண்ணிகிட்டோம் ரெண்டு பேருமே... ஒரு டிகிரி கூட வாங்கலை, ஆனா எங்களுக்கு இந்த ஆப் மூலமா நிறையப் பணம் வந்துச்சு.. அதாவது எங்க குடும்பத்தை நடத்துற அளவுக்குப் பணம் வந்திருச்சு.. அதுக்கப்புறம் தான் எங்களுடைய தேவைகளுக்காக நாங்க நிறைய நிறைய வீடியோ பண்ண ஆரம்பிச்சோம்... எங்களுக்குள்ள நடக்கிற சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாத்தையும் ஷேர் பண்ணுவோம், ஃப்ரீ டைம்ல விதவிதமா மேக்கப் பண்ணிக்கிட்டு கப்பிள் வீடியோஸ் எல்லாமே பண்ணுவோம்.. இதெல்லாம் மக்கள் ரொம்ப ரசித்துப் பார்த்து அப்ரிசியேட் பண்ண ஆரம்பிச்சாங்க... அப்போதுதான் சாம் என் வயித்துல வந்தான்... அந்தக் கர்ப்பத்தை நாங்க ரொம்பக் கொண்டாடினோம்.. எங்களுடைய பாலவர்ஸ் கிட்ட இதைச் சொன்னப்போ ரொம்பச் சந்தோஷப்பட்டாங்க... அவங்க வீட்டு பொண்ணுக்கு நல்லது நடந்ததா நினைச்சு ரொம்பக் கொண்டாடினாங்க.... உண்மையாகவே உச்சி குளிர்ந்து போய் விட்டோம்... எங்களுக்கு அப்போ இதெல்லாம் தப்புன்னு தோணலை... ஒரு குழந்தையை வளர்க்குறதற்கான எந்த மெச்சூரிட்டியும் எதிர்காலத்தைக் குறித்ததான எந்த ஒரு பயமும் கவலையும் எங்களுக்கு இல்லை... அப்படியே வாழ்க்கை போய்க்கிட்டு இருந்துச்சு... கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நாங்க பதிவு பண்ணி போஸ்ட் பண்ணிட்டு இருந்தோம்... நாங்க எங்க பேரன்ட்ஸ ஏமாத்திட்டு, நம்பிக்கையை உடைச்சிட்டு வந்ததால அவங்களோட வயித்தெரிச்சலோ இல்ல பல கண் பட்டால் பாம்பும் சாகும்ன்னு சொல்ற மாதிரி ஏற்பட்ட கண் திருஷ்டியோ தெரியலை சாம் பிறந்த அடுத்த ஒரு மாதத்திலேயே ஆதித்யாக்கு பெரிய ஆக்சிடென்ட் ஆச்சு... லட்சக்கணக்குல அவனுக்குத் தேவைப்படும்ன்னு சொன்னாங்க... எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல... எனக்கு அப்போ 20 வயசு தான்... 20 வயசு பொண்ணால எப்படி அத்தனை லட்சங்களைத் தனியா திரட்ட முடியும்னு தெரியல... அப்பவும் பாலவர்ஸ் கிட்டே தான் வந்தேன்... எனக்கு அப்ப இரண்டு லட்சம் பாலோவர்ஸ் இருந்தாங்க... ஒருத்தர் ஒரு பத்து ரூபாய் தந்தால் கூட அது மிகப்பெரும் அமௌன்ட் கிடைக்கும். அது மூலமா ஆதித்யாவை சரி பண்ணிடலாம்ன்று எவ்வளவோ ட்ரை பண்ணுனேன்... உண்மையான அன்புகொண்ட பாபலோவர்ஸ் கடந்து போய்விடல்லை... அன்பாகவே அனைத்து காசையும் அனுப்பினாங்க... அதனை என் ஆதித்யாவை குணப்படுத்த முயற்சி பண்ணினேன்... ஆனா என்னோட கெட்ட நேரமோ என்னவோ, எட்டு மாதம் போராடி என் ஆதித்யா அந்தக் கடவுள்கிட்ட போய்ச் சேர்ந்துட்டான்... எனக்கு ஆதரவா யாருமே இல்லை... 20 வயசுல கைக்குழந்தையுடன் இளம் விதவையா நான் நின்னேன்... கையில ஒன்றுமில்ல... இந்தப் புகழ் மோகம் என்னை அப்படி ஆக்கி வைத்து இருந்தது... எங்கேயும் வேலைக்குப் போகக்கூட முடியாத நிலையில் கூனிக்குறுகி இருந்தபோது ஆதித்யா அம்மா ஆதரவுக்கு வந்தாங்க... அவங்க சொன்னதைக் கேட்டு அடுத்த இரண்டாவது மாதமே ஆதித்யாவோட ப்ரென்ட் வினோத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... அதையும் நாங்க பொதுவில் தான் வெளிப்படுத்தி, வீடியோ போட்டோம்.. அப்போ நிறையப் பேர் நிறையப் பேசினாங்க. எப்படி இரண்டு மாதத்தில் கல்யாணம் பண்ணிக்கலாம் என... பல மாதிரி பேசினாங்க.. ஆனால் அத்தை சொன்ன மாதிரி ஒரு பொண்ணு தனியா வாழ்றது கொஞ்சம் கஷ்டம் தான் அதுவும் இந்த மாதிரி ஒரு சொசைட்டில ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணை வாழ்வது என்பது ரொம்பவே சவாலான காரியம்தான்... சோ நான் எல்லார்கிட்டயும் தெளிவா சொல்லிட்டுதான் ரெண்டாவது கல்யாணம் பண்ணினேன்... ஆனால் என்னோட கெட்ட நேரம் அவருடன் வாழ முடியல... ஏன்னா ஆதித்யா மட்டும்தான் என் மனசுல இருந்தான்.... அவனுடைய இடத்திலே இன்னொரு பையனை நினைத்து பார்க்க கனவுல கூட முடியாது... அதனால நான் திரும்ப அந்தப் பையனை விட்டு வந்துட்டேன்... எனக்கு ஆதித்யா போதும், அவன் நினைவுகளுடன் வாழ்ந்தா போதும் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்... ஆனா அதுக்கும் பலர் பல மாதிரியா பேசினாங்க... சரியா முடிவெடுக்கத் தெரியாதவ, ஒழுக்கம் இல்லாதவ, இரண்டு பேரோட வாழ்க்கையை அழிச்சவ அப்படிலாம் பேசினாங்க... என்னால இதையெல்லாம் தடுக்க முடியல எப்பவும் எல்லா விஷயத்துலயும் பாசிட்டிவ் இருக்கிற அதே அளவுக்கு நெகட்டிவ்வும் இருக்கும் அப்படிங்கிற புரிதல் எனக்கு இல்லை... இந்தச் சோசியல் மீடியா, அட்டென்ஷன் சீகிங் எல்லாமே இருபுறமும் கூரான கத்தின்னு எனக்குத் தெரியாம போச்சுது... பாசிட்டிவா நாமம் உயரணும், அதுக்காக நான் எந்த ரிஸ்க் வேணா எடுக்கலாம் அப்படின்னு தைரியமாகத் துணிந்து நின்னேன்.. ஆனா அதனால நெகட்டிவ் வந்தாலோ இல்லை என்னுடைய பர்சனல் பாதிக்கப்பட்டாலோ அதை எப்படி ஃபேஸ் பண்றது அப்படின்னு தெரியாம போனேன்... இப்போவும் என்னுடைய கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பணத்துக்குப் போராட வேண்டிய சூழல்... ஒழுங்கா படிச்சிருந்தாலோ இல்ல அப்பா அம்மாவை மதிச்சு அவங்க சொல்ற பேச்சை கேட்டு இருந்தாலோ இந்த மாதிரி எல்லாம் நடந்து இருக்காது... அடுத்தவங்க போடுற சூப்பர், நைஸ் அப்படிங்கிற கமெண்ட்காக ஆசைப்பட்டு, என் வாழ்க்கையை மொத்தமாக அழிச்சுட்டேன்... இப்பவும் என்னால ஒழுங்கா வாழ முடியுமா என்னன்னு கூடத் தோணலை... என் குழந்தைக்கு ஒரு ஹார்லிக்ஸ் வாங்கிக் கொடுக்கிறதுக்குக் கூட என்கிட்ட காசு இல்ல... அதனால்தான் என் வாழ்க்கையை மாய்ச்சிக்க முடிவு பண்ணிட்டு, சூசைட் பண்ணிக்கப் போனேன்... ஆனால் அக்கம் பக்கத்துல இருக்கிற வாங்க என்னைக் காப்பாற்றிப் போலீஸ்ல தகவல் சொல்லிட்டாங்க... இந்த விஷயம் பிரதமர் வரைக்கும் போயிடுச்சு.. அவர் ஒரு கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி, எனக்கு ஆலோசனை கொடுத்தாங்க.. அவங்க கொடுத்த ஆலோசனையின் பேரில் நான் ஓரளவு நார்மல் ஆகிட்டேன்... இப்பவும் என் குழந்தையை என்னோட வச்சிக்கிட்டு, நான் மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்து சின்னச் சின்னத் தொழில்கள் பண்ணிக்கிட்டே தபால் முறையில் என்னுடைய படிப்பை தொடரலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்... தயவுசெய்து கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... தயவு செய்து யாரும் என்னை மாதிரி ஆகிடாதிங்க.. கவன ஈர்ப்பு செய்வதற்காக என்ன வேணா பண்ணலாம் தான்.. ஆனால் நம்முடைய சொந்த வாழ்க்கையின்னு ஒன்னு இருக்குது.. பார்க்கிறவங்க, பேசுறவங்க ஈஸியா பாத்துட்டு, பேசிட்டு ஒரு கமென்ட் போட்டுட்டு போயிடுவாங்க... ஆனால் நாம தான் நம்மைச் சுத்தி இருக்கிற விஷயங்கள் எல்லாம் நம்மோட செயலால் பாதிக்காத வகையில பார்த்துக்கணும்.. சேத்துக்குள்ள மூழ்கினா கூட எழுந்து வந்திடலாம், ஆனா புதைக்குழிக்குள் விழுந்தா எழுந்துக்கவே முடியாது... அப்படி ஒரு புதைக்குழி தான் இந்த ஆப்... எல்லாரும் நம்மைப் பார்க்கணும் அப்படிங்கற ஆசையில் யாரும் இந்தப் புதைக்குழிக்குள் மூழ்கி உங்க கிடைச்ச வாழ்க்கையைத் தொலைச்சு விடாதீங்க.... ப்ளீஸ்... கொஞ்சம் யோசிச்சுப் பார்த்துட்டு எதுவா இருந்தாலும் பண்ணுங்க... புகழ் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும்... ஆனா உயிர் போனா வராது... அதனால கொஞ்சம் யோசிச்சு பாருங்க... எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல... என்னுடைய அனுபவத்தை ஷேர் பண்ணினேன் அவ்வளவுதான்... அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்... யோசிச்சுக்கோங்க...” எனக் கூறிவிட்டு அவள் அங்கிருந்து நகர, இப்போது பிரதம மந்திரி தொடர்ந்தார்.

“ஜெனிதா... அந்தப் பெரிய பைல் ஒன்று இருந்துச்சே!! அதை ப்ளே பண்ணியாச்சா??” எனக் கேட்க, “சார்... அது வந்து... இனி தான் ப்ளே பண்ணனும்.... ஆல்ரெடி போட்ட வீடியோஸ்க்கே கொஞ்சம் எதிர்ப்பு வந்துச்சு... அதெல்லாம் மைல்ட் வீடியோஸ் தான்.. இது போட்டா எல்லாரும் என்ன பண்ணுவாங்களோ தெரியலையே!!” எனத் தயங்கினாள்.

அவளைக் கடிந்து கொள்ளும் விதமாகச் சற்றே குரலை உயர்த்திப் பேசிய பிரதம மந்திரி, “அதைத் தானே நீங்க முதலில் பிளே பண்ணி இருக்கணும் ஜெனிதா... அப்பதானே எல்லாருக்கும் ஒரு மாற்றம் வரும் இப்போ தூண்டப்பட்டதைக் காட்டிலும் அது மாற்றத்தைக்கொஞ்சம் வேகமா ஏற்படுத்தும் இல்லையா??” எனக் கேட்க, “சாரி சார்... எனக்கு இது தோணலை... இதோ இப்பவே ப்ளே பண்றேன்...” என்றாள் ஜெனிதா.

“சரி ஓகே... நீங்க சீக்கிரமா அந்த வீடியோவை பிளே பண்ணிட்டு, மொத்தமா முடிச்சிடுங்க..” என அவர் கூற, அங்கிருந்த அனைவரும் தாங்கள் வெளியே செல்லப் போவதை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர்.

வெளியே சென்றதும் தங்களுக்குக் கிட்டிய இந்த வித்தியாசமான அனுபவங்கள் குறித்துத் தனியே ஒரு காணொளி பதிவிட வேண்டும், அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனப் பலவாறாக யோசித்தவாறே தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

ஆனால் அவர் கூறிய தன் உள்ளார்ந்த அர்த்தத்தை ஜெனிதாவும் ஜுபினும் மட்டுமே அறிவர். வினித் அந்தக் குறிப்பிட்ட காணொளியை ஒளிபரப்ப முற்படுகையில் “இதைப் பாக்குறதுக்குக் கொஞ்சம் தைரியம் வேணும் தான்... ஆனாலும் எல்லாரும் மனசை ஸ்திரப்படுத்திக்கோங்க... ஒருவேளை இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் உங்களுக்கு ஏதாவது தோணுச்சு அப்படினா நீங்க வெளியே ஓப்பனாகப் பேசலாம், சண்டை போடலாம்...” அது மட்டுமில்லாம உங்க மனசுல தோணுறதை சொல்லலாம்... கடைசியா ஒரு சந்தோஷமான விஷயம்... இங்கே நடக்கிற ஆர்கியூமென்ட் எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி, உங்க எல்லாருடைய போனுக்கும் ஃபார்வேர்ட் பண்ணுவோம் உங்களுக்குத் தேவையான விஷயத்தை நீங்க கட் பண்ணி, உங்க கிங்காங் ஆப்ல போட்டுக்கலாம்... என்ஜாய்..” என ஜெனிதா கூறவும் ஆளாளுக்கு ஆர்வமாகக் கவனிக்க ஆரம்பித்தனர்.

முதலில் காட்டப்பட்டது மூர்த்திதான்; அவனது லீலைகள் தான். ஒவ்வொருவரையும் அவன், “எலேய்.. செத்த பயலுவளா... நாரப் பயலுவளா... யாம்ல இப்படிப் பண்ணிட்டு அலையுதிய... என்னல பண்ணி வச்சிருக்கிய??” எனப் பேசிக் கொண்டிருக்கும் காட்சி காட்டப்பட்டது.

இப்போது அவன் புகழேணியின் உச்சத்தில் இருக்கிறான். இவ்வாறு சபை நாகரீகம் தெரியாத சற்றும் அறியாத தெரியாத, மூளைக்கு வேலை தராத, வாய்க்கு வந்ததை எல்லாம் பொதுவெளியில் பேசும் ஒருவன் எவ்வாறு இப்படிப் புகழேணியில் ஏறினான் என அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

அது எவ்வாறெனில் தொடர்ந்து அவன் “எலேய்... லூசால நீங்க... என்னல பிரச்சனை உங்களுக்கு...” என்பது போன்ற காணொளிகளைப் பதிவேற்றிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்குப் பழக்கமாயினர் ‘ரவுடி பேபி’ சத்யா, கண்ணம்மா என இன்னும் பலர்.

அவர்கள் அனைவரும் இவனை ‘மாமா... மாமா...’ என அழைக்க, இவனும் அதைப் பயன்படுத்திக் கொண்டு இஷ்டத்திற்குப் பிதற்ற தொடங்கினான். இதைத் தெரிந்து கொண்ட உள்ளூர் யூடியூப் சேனல் ஒன்று இவனை அழைத்துச்சென்று பேட்டி எடுக்கிறேன் பேர்வழி என்று சிந்தையில் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் என்னும் தீய எண்ணங்களை, தீய வார்த்தைகளைக் குத்தி விட. இவன் பேசிய வார்த்தைகள் கழிவுநீர் ஆறாக ஓடியது.

பலருக்கு இதைப் பார்க்கையில் ஒரு நகைச்சுவையாக இருந்தது. ஏனென்றால் இது போன்ற வார்த்தைகள் அவர்கள் கேள்விப்பட்டிராத ஒன்று; மேலும் அவர்களால் வெளிப்படுத்த இயலாத ஒன்று... இவ்வாறு தங்களால் கூடாததை ஒருவன் பேசுகிறான் என்பதனால் அவர்கள் அதை ரசிக்கத் தொடங்கினர்.

நாம் காணும் காட்சிகளும் கேட்கும் வார்த்தைகளும் நம் சிந்தனையின் வெளிப்பாடு என்பதையோ சிந்தையைச் சிதைக்கும் என்பதையோ அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

தற்காலிக சந்தோஷத்திற்காக அவனது காணொளிகளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தொடங்கினர்; தன்னைச் சுற்றி இருக்கும் மக்களிடம் சற்றே பிரபலமாகத் தொடங்கினான் அவன். உள்ளூர் யூடியூப் சேனல் அவனிடம் பேட்டி எடுத்து சென்ற பிறகு அடுத்ததாக மாவட்ட அளவில் ஏதோ ஒரு சேனல் அவனைப் பேட்டி எடுப்பதற்காக வந்தது.

பேட்டி ஒருபக்கம் இருந்தாலும் அவ்வப்போது அவன் தனது கிங்காங் செயலில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்ய மறக்கவில்லை.

தனது வழக்கமான தொனியில் பேசி, அனைவரையும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்க, அவனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். தமிழ்நாட்டின் முன்னணியில் இருக்கும் யூடியூப் சேனல் ஒன்று வருடா வருடம் விருதுகள் வழங்கி, யூடியூப் திறமையாளர்களையும் வளர்ந்துவரும் கலைஞர்களையும் ஊக்குவிப்பது வழக்கம்.

இப்போதுதான் எங்குக் காணினும் மூர்த்தியின் பேச்சும் அவனது அரும்பெரும்(!) வார்த்தைகளும் காண கிடைக்கிறதே!! எனவே அவனுக்கும் அழைப்பு விடுத்தனர்.

சிறந்த நகைச்சுவை திலகமாக அவனுக்கு ஒரு விருதையும் அளித்து, மேடையில் தலைசிறந்த மாடல் ஒருவருடன் கேட் வாக் நடக்கும் வாய்ப்பையும் நல்கினர். அவனுக்கு இது எவ்வாறு இருந்ததோ தெரியாது ஆனால் இதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களுக்கும் அவனைப் போலவே மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்துக் காணொளியை பதிவேற்றினால் இவ்வாறாக அங்கீகாரம் கிடைக்கும் என ஒரு தவறான உதாரணத்தை மனதிற்குள் ஆழமாக விதைத்தது.

இத்தோடு நில்லாது அந்த விருது குறித்து, அந்த விருதிற்கான முகாந்திரம் குறித்து அடுத்தடுத்த பேட்டிகள் வர, புகழின் உச்சத்திற்குச் செல்ல தொடங்கினாள் மூர்த்தி.

அத்தோடு நிறுத்தி விடாமல் அவனுக்கு இருக்கும் பிரபலத் தன்மையைத் தங்களது அடுத்தடுத்த செய்கைகளுக்கு மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தனர் பலர். அனைவரும் அவனையும் ஒரு நகைச்சுவை நடிகராக நினைத்துக்கொண்டு தங்களது குறும்படங்களிலும் வெள்ளித்திரை படங்களிலும் அறிமுகப்படுத்த முன்வந்தனர்.

இதன் மூலம் அவனின் மார்க்கெட் எக்கச்சக்கமாக உயர்ந்தது. ஒருபுறம் ஷூட்டிங், வேலைகள், இன்டர்வியூ எனப் பிஸியாக இருந்தாலும் பழையது போலத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்த மறக்கவில்லை மூர்த்தி.

பொது இடங்களில், பொது மேடைகளில் அவனைச் சிறப்பு விருந்தினராக அழைப்பவர்கள், அங்கேயும் அவனை “மூர்த்தி ஐயா... கொஞ்சம் அந்தச் செத்த பயலுவளா நாரப் பயலுவளா சொல்லுங்களேன்...” எனக் கேட்டு, அதை ஊக்குவிக்கத் தொடங்கினர்.

இவற்றையெல்லாம் தவறு என அறியாமலேயே பலர் ரசித்துக் கைதட்ட தொடங்கினர்; கல்லூரிகளுக்கு அவனை அழைத்தாலும் இதுவே நிகழ்ந்தது. கூட்டத்தைத் திரட்டுவது எனத் திரட்டி அதை நிலைப்பதற்காக மூர்த்தியின் பேச்சை அனைவரும் ஆமோதித்தனர்.

இப்போது மூர்த்தி மூன்று திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறான். அவருக்குப் போட்டியாக அவ்வப்போது அவனைத் திட்டி காணொளி பதிவிடுவது ‘ரவுடி பேபி’ சத்யாவின் பழக்கம். அது ஏன் என்றால் ஒரு காலத்தில் அவளுடன் நெருங்கிய நட்பில் இருந்த மூர்த்தி இப்போது பிரபலம் அடைந்து விட்டதால் அவளைக் கண்டுகொள்வதில்லை என்கிற வருத்தம் அவளுக்கு. மேலும் சில நேரங்களில் மூர்த்தியின் பேச்சு கண்ணம்மாவிற்குச் சாதகமாக இருப்பதால் சற்றே வருத்தம்.

சரி விஷயத்திற்கு வருவோம் இப்போது திரையில் ஒரு வீடியோ கால் போன்ற காணொளி காட்டப்பட்டது. திரை சில பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்றில் மூர்த்தியின் காணொளி, மற்றொன்றில் ‘ரவுடி பேபி’ சத்யா. மற்றொன்றில் கண்ணம்மா, மற்றொன்றில் ‘நமஸ்தேவுங்கோ’ கலா எனப் பல பிரபலங்கள் இருந்தனர். ஆனால் இவர்களில் முக்கியமானவர்களாக இருந்தவர்கள் மேலே குறிப்பிட்ட நால்வர் மட்டுமே.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

29

முதலில் மூர்த்தியின் காணொளி ஆன் செய்யப்பட்டது. “எலேய்... என்ன பண்ணிட்டு இருக்கிய?? கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா??? என்னலாம் பண்ணிட்டு இருக்கிய?? எதுக்குல என்னையே பேசிட்டு கிடக்கிய?? நேத்து ஒருத்தன் அனுப்பி இருக்கான், ‘தலைவரே... நல்லா இருக்கியளா?? நல்லா தூக்கம் வருதா?? தூங்குததுக்கு வந்து காத்து வீசவா’ன்னு... தூங்கினா என்ன தூங்கிட்டேன் உனக்கு என்னால தூங்கினா பக்கத்துல உட்கார்ந்து இருக்கப் போறியா இல்ல அவன் பலவாறாகக் திக்கி பேசிக் கொண்டிருக்க அடுத்ததாக ரவுடி பேபி சத்யா ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேட்க தான் அப்படித்தான் இருக்கு இந்த மூர்த்திப் பயலுக்கு விருது கொடுத்தது அவனுக்கு என்ன தெரியும்?? என்ன பண்ணிட்டான்னு அவனுக்கு விருது கொடுத்து இருக்கீங்க?? நாலு கெட்ட வார்த்தை தெரியும்.. அடஹி வச்சு விதவிதமா மாத்தி மாத்தி பேசி ஒப்பேத்திட்டு இருக்கான்... அப்படிக் கெட்ட வார்த்தை பேச தெரிஞ்சாதான் விருது குடுப்பீங்க அப்படின்னா எனக்கும் தெரியும்.... எனக்கும் பேச வரும்... பேசிக் காட்டவா??? காட்டவா??? வரவர நல்லதுக்குக் காலமே இல்லாம போச்சு... அவன் எப்படிப்பட்டவன் என்னவெல்லாம் பேசுவான், என்னவெல்லாம் பண்ணுவான்னு எனக்குத் தெரியும்.. எனக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிஞ்சுது?? நீங்க அவனைக் கூப்பிட்டு விருது குடிக்க அதுலயும் மாடல்கூட நடக்கச் சொல்லுறீங்க, கேட்டு வாக்காம் கேட்டு வாக்கு... அவனும் ஈஈன்னு சிரிச்சிக்கிட்டு நடக்கான்... அப்படின்னா எனக்கும் ரெண்டு விருது கொடுங்கப்பா...”

இப்போது மூர்த்தி : “மக்களே... இந்த ‘ரவுடி பேபி’ சத்யாவா சொத்யாவா அவ சொல்லுததை யாரும் நம்பாதீங்க... அவ ஒரு பொறாமை பிடிச்சவா... என்னத்தையாவது பேசணும்னு பேசிட்டு கெடப்பா... அவளுக்குக் கொஞ்சம் மனநிலை சரியில்ல... கொஞ்ச நாளைக்கு முன்னாடி மண்டையில் அடிபட்டுடு... அதான் ஏதாவது பேசிட்டு கிடைப்பா... அதான் நல்லா இருந்த குடும்பத்தை விட்டு வெளியே வந்தா... நல்லா இருந்த புருஷன், பிள்ளைளின் குடும்பத்தை விட்டுட்டு இப்போ வந்து சிக்காவா சுக்காவா எவனோ ஒருத்தன் கூடத் தனியா இருக்கா...இவள்லாம் என்னைப் பத்தி பேசுதா??? நான் பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே போவேன்...”

அடுத்ததாக ‘ரவுடி பேபி’ சத்யா : “மூர்த்தி... என் வீட்டை பற்றிப் பேச உனக்கு யார் உரிமை கொடுத்தா?? உனக்கு என்ன அருகதை இருக்கு?? உன் பொண்டாட்டி நல்ல பேரல் மாதிரி இருக்கா... அவளுக்குச் சாப்பாட்டுக்கே நீ உழைக்கணும்... அதனால வாயை மூடிக்கிட்டு இரு என்ன... ஏன் என்னைப் பத்தி பேசுற?? நான் அழகா இருக்கேன்.. அதனால நான் இப்படியெல்லாம் பண்ணுறேன்.. புதுசா பெரிய இவன் மாதிரி ஒழுக்கம், குடும்பம் பத்தியெல்லாம் பேசுற?? உனக்கு என்ன இந்த ஒழுக்கம் எல்லாம் ‘சத்யா சத்யா’ன்னு என்னைச் சுத்தி வரும்போது தெரியலயாக்கும்... சும்மா பெயரும் புகழும் வந்துட்டுன்னு ஆடாத... சரியா... நீ பேசினது எல்லாம் என்கிட்ட ரெக்கார்டு இருக்கு.. லீக் பண்ணினென்னு வச்சுக்கோ... அவ்வளவுதான் சந்தி சிரிச்சிடும்... நீ நடிக்கிற படம், உனக்குக் கொடுத்த விருது அது இது எல்லாம் செல்லாக்காசாகி போகும்... பாத்துக்க...”

மூர்த்தி : ஏய் ரவுடி பேபி... ஏய்... உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?? என்னையே பேசிக்கிட்டு இருக்கிய... ஒழுங்கா போய் உன் குடும்பத்தைப் பாரு... அந்த டிக்கா பய பெண்டாட்டி வந்த என்கிட்டே அழுதா... என் புருஷனை எப்படியாவது மீட்டுக் கொடுன்னு...

ரவுடி பேபி சத்யா : மக்களே... மக்களே... நான் சொன்னேன்ல இந்த மூர்த்தி ஒரு பொறுக்கி பையன்னு.. அதான் சரியா அவனோட வேலையைக் காமிச்சிட்டான் பார்த்தீங்களா?? யை டிக்கா பெண்டாட்டி இவன்கிட்டே ஏன் வந்து சொல்லணும்?? அவகூட இவன் தொடர்புள்ள இருக்கான்னு தானே அர்த்தம்?? அவன்னு மட்டுமில்ல எல்லாப் பொண்ணுங்களோடவும் இவனுக்குத் தொடர்பு இருக்கு... எல்லாரோடவும் நல்லா பேசுவான்... ஆனா வெளியே பெரிய இவன் மாதிரி நடிப்பான்.. இவனையும் நல்லவன்னு நெனச்சிக்கிட்டு விருது ஒண்ணுதான் கொறச்சல்... அந்தக் கண்ணம்மா ‘மாமா மாமா’ன்னு அவன் கூடத் தான் சுத்துறா... அவ பாரதியை தேடி வந்தாளா என்னன்னுலாம் தெரியலை...

இப்போது கண்ணம்மாவின் குரலும் காணொளியும் திரையில் ஒளிர்ந்தது. “இங்க பாரு ரவுடி பேபி... தேவையில்லாம என்ன பத்தி பேசாத சொல்லிட்டேன்... உன்னைப் பத்தி யாரு பேசினா?? நான் எவ்வளவு கஷ்டத்துல இருக்கேன் தெரியுமா?? என் பாரதியை காணாம நான் தவிச்சுப் போயிருக்கிறேன்... எங்க போனாலாவது என் பாரதி கிடைச்சிடுவானான்னு அவனைத் தேடி பைத்தியம் மாதிரி ஊரு ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன்... சும்மா சும்மா என்ன பத்தி பேசாத சொல்லிட்டேன்... நான் அந்த மூர்த்திய பாக்கவே இல்ல... எனக்கு அவனை யாருன்னே தெரியாது.. என்னை என்ன உன்ன மாதிரி நினைச்சியா?? என் மனசுல பாரதி தவிர யாருக்குமே இடம் கிடையாது... வார்த்தையை அளந்து பேசு சொல்லிட்டேன்..”

இப்போது ரவுடி பேபியின் திரை ஒளிர்கிறது. “புதுசா ஒருத்தி வந்து இருக்கிறாளே... கண்ணம்மா.... ஆங்... அவதான்... என்ன? என்னை மாதிரி கிடையாதா??? நான் என்ன மோசமான பொண்ணா?? என்ன பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குது?? நீ ரோட்டுல ஒருத்தனுக்கு முத்தம் கொடுத்ததும் ரோடு ரோடா பாரதி, பாரதின்னு பைத்தியம் பிடிச்ச மாதிரி அலைஞ்சதும் யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சியா?? அடியேய்... நீயே தான போஸ்ட் பண்ணி உன் மானத்தை வாங்கிக்கிட்ட.. யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சியா?? திருநங்கைகள் கிட்ட மரண அடி வாங்கினதை மறந்துட்டியா?? அதைவிட அன்னைக்குக் கொடைக்கானல் மலையில் உன்னைப் போட்டுப் பந்தாடினாங்களே... மறந்துட்டியா?? எல்லாத்தையும் மறந்துட்டு சும்மா சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதடி...

கண்ணம்மா : “ரவுடி பேபி... நான் மட்டும் அங்கே வந்தேன்... உன்னை வகுந்துடுவேன்... நீ வந்து பாத்தியா என்ன நடந்துச்சுன்னு.. சும்மா வாய்க்கு வந்தபடி பேசாத... எனக்குத் தெரியும்... நீ ஏன் இப்படிலாம் பண்றன்னு... இப்போ உனக்கு மூர்த்தி மேல பொறாமை... அதுக்கு ஏதாவது ஒன்னு பேசணும்.. அதான் என்னைப் பேசிக்கிட்டு இருக்கே.. நான் என்னவோ பண்றேன்! உனக்கு என்னடி? இன்னைக்கு யூடியூப்ல இருக்கற முக்காவாசி சேனலுக்குக் கன்டென்ட் கொடுக்கிறதே நான்தான்... என்னை வச்சு தான் அவனுக லட்ச லட்சமாகச் சம்பாதிச்சிட்டு இருக்கானுங்க... நான் மட்டும் இப்படி எல்லாம் இல்லாம இருந்தா அவங்களுக்கு யாரு கண்டெண்ட் கொடுக்கிறது?? கன்டென்ட் குயினே நான் தான்டி ... யூடியூபின் ராணி... என்னை வச்சு தான் அந்த யூடியூபே ஓடுது தெரியுமா??

‘ரவுடி பேபி’ சத்யா : ஆமா அப்படித்தான் ஊருக்குள்ள சொல்லிக்கிட்டாங்க... உன்னைத் தெரிஞ்சவங்க எல்லாம் நீ பைத்தியம்ன்னு சொல்லுறாங்க.. அந்தப் பாரதின்னு ஒருத்தன் இருக்கானோ இல்லையோ ஒருவேளை இருந்திருந்தா அவன் நீ ஒரு பைத்தியம்ன்னு தெரிஞ்சுதான் ஓடிப் போயிருப்பான்... உன்னை விட்டு ஓடிப் போன அவனைக் கண்டுபிடிக்க வக்கு இல்ல... இதுல யூடியூப் ராணியாம்!! நீயும் அந்த நமஸ்தேவுங்க கலாவும் இப்பவும் அந்த மூர்த்திக்கு வலக்கை இடக்கையா இருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கீங்களோ?? எல்லாம் எனக்குத் தெரியும்... நீங்க எப்போ எப்போ எங்க எங்க போறீங்க, எங்க மீட் பண்றீங்க?? எல்லாம் எனக்குத் தெரியும்... எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம் வச்சிருக்கேன்... ரிலீஸ் பண்ணுனேன்னு வச்சிக்கோங்க... அவ்ளோதான்... ஜாக்கிரதையா இருங்கடி...

இப்போது நமஸ்தேவுங்க கலாவும் கண்ணம்மாவுடன் சேர்ந்து கொண்டாள். “யாருடி அது... ரவுடி பேபின்னு... உன்னை எல்லாம் ஒரு பொருட்டாவே எடுக்கலை... இவ்ளோ ஏன்?? நீ ஒருத்தி இருக்கிறதே எங்களுக்குத் தெரியாது... ஏன் தேவையில்லாம என்ன பத்தி பேசிக்கிட்டு இருக்க? என்ன பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குது?? நான் பாட்டுக்கு வீடியோ போட்டுட்டு என் பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன்... உனக்கு எங்கடி வந்து குத்துது? தேவையில்லாம என்னைப் பத்தி பேசிட்டு இருந்த மரியாதை அவ்ளோதான்..”

‘ரவுடி பேபி’ சத்யா : ஹாஹாஹ ஹா... வந்துட்டாளே உத்தம பத்தினி... இவ போன வாரம்கூடக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு ஒருத்தன் கூட வீடியோ போட்டு இருந்தா என்னன்னு கேட்டா மறுநாளே அது சும்மா ‘பிராங்க்;... ஷூட்டிங் போனேன் அப்படின்னு சொல்றா... இன்னொரு நாளு இன்னொருத்தன் கூட நின்னுக்கிட்டு, ‘இவன் என் மாமா... நான் இவனோட கமிட்டாகிட்டேன்..’ன்னு சொல்லிக்கிட்டு அதையும் அடுத்த நாளே பிராங்க்ன்னு சொல்லிக்கிட்டு சுத்துறா... என்ன ஆளு இவ??? என்ன புத்தி இருக்குது இவளுக்கு??” என மூவரும் மும்முரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அடுத்ததாகக் களமிறங்கினார் தலைவர் மூர்த்தி.

“மக்களே... இந்த ரவுடி பேபி சொல்றதை எல்லாம் கேட்காதீங்க... அவ என்னடான்னா அந்த டிக்கா கூட இருந்தா... திடீர்னு ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம், எனக்கும் அவனுக்கும் எதுவும் இல்ல அப்படின்னு சொல்லி அவன விளக்குமாறால் அடிக்கிற மாதிரி வீடியோ போட்டா... அவனும் இவளை மோசமா திட்டி ஒரு வீடியோ போட்டான்... அடுத்த ஒரு வாரத்தில் திரும்பவும் சேர்ந்துக்கிட்டு கப்பிள் வீடியோஸ் போட்டாங்க... அதுக்கு எடுத்து திரும்பவும் பிரிஞ்சு திட்டிட்டு இருந்தாங்க... ஆம்பளை துணை இல்லாமல் ஒரு பொண்ணால இந்த ஊரில் வாழ முடியாதா என்ன? நான் தனியா வாழ்ந்து காட்டுவேன் அப்படின்னு இந்த ரவுடி பேபி வீடியோ போட்டா.. அவனும் என்னை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டி விட்டுட்டா அப்படின்னு வீடியோ போட்டான்.. அதுக்கு அப்புறம் திரும்பவும் சேர்ந்துட்டாங்க... இவங்க பண்ற கூத்து எல்லாம் இப்படித்தான் இருக்கு...” இப்படியாக அந்த அந்தக் காணொளி பயணித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் அடிவயிற்றில் ஒருவித ஒவ்வாமை தோன்றியது.

“தயவுசெய்து இதை நிறுத்தி விடுங்கள்..” எனக் கெஞ்சத் தொடங்கிவிட்டனர்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom