Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கருப்பொருள்

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
இரவு 10 மணிக்கு வீட்டினுள் நுழைந்தாள் நந்தினி. நடு கூடத்தை நந்தினி கடக்கும் பொழுது தொலைக்காட்சியில் நாடகத் தொடரை பார்த்துக் கொண்டிருந்த ரவியின் தங்கை சுமதியும், தாய் வாசுகியும் தன்னை பார்ப்பதை உணர்ந்தாள். அவர்கள் சில நொடிகள் நந்தினியை பார்த்துவிட்டு தங்களுக்குள் பேசத் தொடங்கியதையும் நோட்டமிட்டாள். அவர்கள் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்பது புரிந்தாலும் அது அவள் மனதை பாதிக்கவில்லை. அவர்களை துச்சமாக மதித்து தன் அறைக்குள் நுழைய கதவை திறந்தாள். கதவை திறந்தவுடன் ரவி அந்த அறையின் வாயிலிலேயே நின்று கொண்டிருப்பதை பார்த்தாள். ரவியை பார்த்தவுடன் நந்தினியின் மனது பிரகாஷை ஞாபக படுத்தி ஒரு குற்ற உணர்ச்சியை உண்டாக்கியது. உடனே தன் கண்களை மூடிக் கொண்டு

'சே... என்ன மனசு இது?... இத சுத்தமா நம்பவே முடியலையே... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பிரகாஷ் அம்மாவோட பேசும் போது சந்தோஷமா இருந்துச்சு... இப்போ ரவியை பாத்தவுடனே மனசு மாறிடுச்சே.' என்று யோசித்தவாறே

'நந்தினி நீ வாழ தகுதியான இடம் இது இல்லை... ரவியும் உனக்கு ஏத்த ஆள் இல்லை... உள்ள தோன்ற குற்ற உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தராதே... அமைதியா போய் படுத்து தூங்கு.' என்று தனக்குள் பேசிவிட்டு வலுக்கட்டாயமாக தன் மனதை மாற்ற முயற்சி செய்தாள். ரவியை ஒரு பார்வை பார்த்து விட்டு அவனை கடந்து செல்ல முற்பட்டாள்.

ரவி அவள் முன்னே தன் கையை நீட்டி தடுத்தான். நந்தினி யோசனையாய் அவனைப் பார்த்து

'என்ன?' என்று கேட்டாள்.

ரவி புன்னகைத்தவாறே அவளிடம் ஊமை பாஷையில்

‘நான் உன்னோடு பேசமாட்டேன்.' என்பதை காட்டியது அவளிற்கு புரிந்தது மற்றும் சில சமிஞைகளை செய்து கட்டினான். அது அவளுக்கு புரியவில்லை.

'ப்ப்ச்... நீங்க என்ன சொல்லறீங்கன்னு புரியலை.' என்று கூறிவிட்டு அவனை கடந்து சென்றாள்.

உடைகளை மாற்றிக் கொண்டு படுக்கையில் படுக்கும் போது ரவி அவளிடம் ஒரு தாளை நீட்டினான்.

அதை வாங்கி படித்து பார்த்தாள்.

'எனக்கு தன்மானம் தான் முக்கியம்... நேத்தி நான் உன்கிட்ட சொன்ன மாதிரி வேற வேலை கிடைக்கற வரைக்கும் பேசமாட்டேன்... என்னோட இமைலுக்கு "டீம் லீஷ் கன்சல்டன்ஸி" ன்ற கம்பனிலேருந்து கால் பண்ண சொல்லி மெயில் வந்திருந்தது... நான் அவங்களுக்கு கால் பண்ணி பேசுனேன்... என்னை நாளைக்கு காலைல 9 .௦௦ மணிக்கு இன்டர்வ்யூவுக்கு வர சொல்லிருக்காங்க... நான் நாளைக்கு ஹாஃப் டே லீவ் போட்டுட்டு இன்டர்வ்யூ அட்டண்ட் பண்ண போறேன்... அதை க்ளியர் பண்ணிட்ட பிறகு தான் உன்கிட்ட பேசுவேன் ... அதுவரைக்கும் நான் உன் கூட பேச மாட்டேன்...' என்று எழுதி இருந்தது. அவனை பார்த்தாள். அவன் குழந்தை தனமாக தன் கட்டை விரலை உசத்தி காட்டி அவள் பக்கத்தில் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தான். அவள் தன் மடிக் கணினியில் அந்த நிறுவனத்தை பற்றி வலை தளத்தில் பார்த்தாள். சிலர், சம்பளத்தை இழுத்தடித்து தான் கொடுப்பார்கள் என்றும் சிலர் ஆரம்ப கால தொழில் ஞானத்திற்கு நல்ல நிறுவனம் என்றும் அந்த நிறுவனத்தை பற்றி கலவையான விமர்சனங்களை போட்டிருந்தனர்.

ரவியை பார்க்கும் பொழுது அவனுக்கு துரோகம் செய்கிறோமோ என்று உள்ளிருக்கும் கரு அவளை யோசிக்க வைத்தது. கசப்பு மாத்திரை உத்தியை பயன் படுத்தி யதார்த்தமாக யோசிக்க தொடங்கினாள்.

'ரவி இந்த கம்பெனில செலெக்ட் ஆனாலும் பிரகாஷோட உயரத்தை தொட முடியாது, எவ்வளோவோ பேர் முதல் கல்யாணத்தை டைவர்ஸ் பண்ணிட்டு ரெண்டாவது கல்யாணத்துல சந்தோஷமா வாழலியா?' என்று யோசிக்க,

'நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிடுவ... ரவியை பத்தி யோசிச்சு பாத்தியா?' என்று அவள் உள்ளிருந்து ஒரு கேள்வி எழுந்தது.

ரவியின் மீது அனுதாப உணர்வு ஏற்படும் பொழுது அவளின் கை பேசி ஒலித்தது. அது அவளின் தாய் பத்மாவதியின் அழைப்பு. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

'அப்பா கிட்ட விஷயத்தை சொல்லிட்டேன்... ரொம்ப யோசனையா தான் இருக்காரு...' - பத்மாவதி.

'ஏன்?' - நந்தினி.

'ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணுக்கு தன் பையனை கல்யாணம் பண்ணி தர்றோம்ன்ற விஷயம் அவங்க அம்மாவுக்கு தெரியுமான்னு கேட்டாரு... தெரியாது அதை பிரகாஷ் தான் அவர் அம்மா கிட்ட எடுத்து சொல்லணும்னு சொன்னேன்.' என்று பத்மாவதி சொல்லி கொண்டிருக்கும் பொழுது நந்தினியிற்கு வேறொரு எண்ணிலிருந்து அழைப்பு வருவத்திற்கான சமிஞை வந்தது.

'அம்மா வேற ஒரு கால் வருது... நான் அப்புறம் உனக்கு கால் பண்றேன்' என்று அந்த தொடர்பை துண்டித்து புதிதாக வரும் அழைப்பு எண்னை பார்த்தாள். அது அயல் நாட்டு எண். யோசனையாய் அந்த அழைப்பை ஏற்று

'ஹலோ...' என்றாள் நந்தினி.

மறுமுனையில்

'டியர்... நான் பிரகாஷோட அம்மா அவந்திகா பேசறேன்... சாரி டு டிஸ்டர்ப் யூ...' என்று பிரகாஷின் தாயின் குரல் கேட்டவுடன் நந்தினி பதட்டமாக ரவியை பார்த்தாள். அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். ஒரு செயற்கையான நகைப்பை வெளிப்படுத்தியவாறே

'இட்ஸ் ஓகே மா... என் நம்பர் எப்படி உங்களுக்கு தெரியும்?' என்று கேட்டாள்.

'உன் அப்பாவோட ஸ்கைப் ஐடியை கேக்கறதுக்கு தான் பிரகாஷ்க்கு கால் பண்ணினேன்... என்னமோ தெரியலை என் மருமகளோட பேசணும்னு தோணுச்சு... அதான் நானே அவ கிட்ட பேசி ஸ்கைப் ஐடியை வாங்கிக்கறேன்னு சொல்லி உன் நம்பரை கேட்டேன்... பிரகாஷ் தான் உன் நம்பரை நீங்க வொர்க் பண்ற கம்பெனி போர்ட்டல்லேருந்து எடுத்து கொடுத்தான்... நாளைக்கு இந்தியா டைம் 9 ஓ க்ளாக் நான் ஆன்லைன்ல வருவேன்னு உன் பாஃதர் கிட்ட சொல்லு.' - அவந்திகா.

அவளும் தன் தந்தையினுடைய நேரலை அடையாள எண்னை கொடுத்து விட்டு, சம்பிரதாயமாக ஓரிரு வார்த்தைகளை பேசிவிட்டு அந்த தொடர்பை துண்டித்தாள். பிறகு தன் தாய் பத்மாவதியின் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசத் தொடங்கினாள்.

'யாருடி லைன்ல?' - பத்மாவதி.

'அம்மா... பிரகாஷோட அம்மா அவந்திகா தான் கால் பண்ணிருந்தாங்க... அப்பாவோட ஸ்கைப் ஐடியை கேட்டிருந்தாங்க... நானும் கொடுத்துட்டேன்...' - நந்தினி.

'இப்போ என்ன பண்றது?' - பத்மாவதி.

'ஏற்கனவே எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு... ஏம்மா இப்படி இக்கட்ல மாட்டி விடற... எனக்கும் என்ன பண்றதுனே தெரியலை... நாளைக்கு காலைல 9 மணிக்கு அவங்க ஆன்லைன்ல வர்றாங்களாம், அப்பாவை அவங்களோட பேச சொல்லு... நான் நாளைக்கு பிரகாஷ் கிட்ட பேசி அவங்க அம்மா கிட்ட எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை சொல்ல சொல்லிடறேன்.' என்று பேசிவிட்டு அந்த தொடர்பை துண்டித்தாள். உறங்கத் தொடங்கும் போது தூக்க கலக்கத்தில் ரவி புரண்டு படுத்து அவளை கட்டிக் கொண்டான். அவளுக்கு "ரவியிற்கு துரோகம் செய்கிறோம்.” என்ற உள்ளுணர்வு தோன்றி உறுத்த தொடங்கியது. அவள் தன் மீது இருந்த ரவியின் கையை மெதுவாக விலக்கி விட்டு குழப்பத்துடனே அந்த இரவை கழித்தாள் நந்தினி.

மறுநாள் நந்தினி அலுவலகத்திற்கு செல்வது போல வீட்டை விட்டு வெளியே வந்து நித்யா, நித்யாவின் கணவர் மற்றும் பிரகாஷுடன் ஒரு வாடகை வாகனத்தில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு விடுதிக்கு சென்றாள்.

அங்கே தனக்கென ஒரு அறையை பதிவு செய்து சில நிமிடங்களில் தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு வெளியே வந்து கடற்கரையில் மற்ற மூவருடன் அமர்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு

'ஓகே...நந்து... நானும் என் ஹப்பியும் தனியா போறோம்... நீயும் பிரகாஷும் பேசிகிட்டு இருங்க... திஸ் ஹோல் டே ஐஸ் யுவர்ஸ்...' என்று நந்தினியிடம் கூறிவிட்டு அங்கிருந்து தன் கணவனுடன் நகர்ந்தாள் நித்யா.

சில நொடிகள் குழம்பிய நிலையில் கடல் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்த நந்தினியிடம்

'என்னாச்சு?... ஏன் அமைதியா இருக்கீங்க?' என்று கேட்டார் பிரகாஷ்.

'இல்ல... நேத்து உங்களுக்கு எப்படி கில்டியா இருந்திச்சோ... அதே மாதிரி தான் என் கணவரை நினைச்சு பாக்கும் போது எனக்கு கில்டியா இருக்கு... எனக்கென்னவோ நான் ரொம்ப சுய நலமா நடந்துக்கறேனோன்னு தோணுது... மனசுக்கு பிடிச்சவர் ஏழையா இருந்தாலும் அவர் கூட வாழறது மாட மாளிகைல வாழறதை விடவும் சந்தோஷத்தை கொடுக்கும் ன்ற நம்பிக்கைல தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... ஆனா சுத்தி இருக்கறவங்க எங்களை நடத்துற விதமும் , வருங்காலத்தை பத்தின பயமும் எங்களோட வாழ்க்கை தரத்தை உயர்த்தணும் ன்ற அழுத்தத்தை கொடுக்குது... அந்த அழுத்தத்தை நான் அவர்கிட்ட காட்டும் போது எனக்கும் அவருக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் உண்டாகி சண்டைல முடிஞ்சிடுது... இந்த மாதிரி சூழ்நிலைகள் தான் மனசுக்கு பிடிக்குதோ இல்லையோ ஒரு பணக்காரனை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை நிம்மதியா இருக்கும்ன்ற ஒரு கட்டாய எண்ணத்தை விதைக்குது... நேத்து கூட உங்களை நான் இன்னிக்கு பாக்கறது சம்மதிச்சிருக்க மாட்டேன்... ஆனா உங்க அம்மாவும் உங்க அம்மாவோட பேமிலி ப்ரண்ட்ஸும் என்னை கொண்டாடினதையும் இப்போ என் கணவர் வீட்ல என்னை நடத்துற விதத்தையும் நினைச்சு பாத்தேன் என்னை அறியாம உங்களை மீட் பண்ண ஒத்துக்கிட்டேன்.' என்று கூறிவிட்டு, தன் கண்களை மூடியவாறு ஒரு நீண்ட உள் மூச்சை இழுத்து விட்டு, பின் கண்களை திறந்து பிரகாஷை பார்த்து

'சாரி... நான் ரொம்ப கன்ஃப்யூஸ்ட் ஸ்டேட் ல இருக்கேன்...' என்றாள் நந்தினி.

அமைதியாக சில நொடிகள் அவளை பார்த்துக் கொண்டிருந்தார் பிரகாஷ்.

சில நொடிகள் கடல் அலைகள் பக்கம் பார்வையை திருப்பி யோசனையில் மூழ்கிய நந்தினி பிரகாஷை மறுமுறை பார்த்து

'நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சும் உங்களுக்கு எப்படி என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுது...’ என்று கேட்டாள்.

'உண்மையா சொல்லணும்னா உங்களுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சதுலேருந்து எனக்குமே நெருடலா தான் இருக்கு...' - பிரகாஷ்.

'இன் கேஸ் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னா "நான் ஏற்கனவே கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ணை தான் கல்யாணம் பண்ணிருக்கேன்"ன்னு உங்கள நெருடற விஷயமும், "ரவிக்கு துரோகம் பண்ணிட்டேன்"ன்ற என்னோட கில்டி பீலிங்கும் உங்களையும் என்னையும் சந்தோஷமா வாழ வைக்கும்னு நினைக்கிறீங்களா?' - நந்தினி.

பிரகாஷ் நந்தினியினுடைய கேள்வியை கேட்டு நகைத்தவாறே

'உங்க வீட்லயும் உங்கம்மா உங்கப்பாவை கன்வின்ஸ் பண்றேன்னு சொல்லிட்டாங்க... இன்னும் ஒரு வாரத்துல அம்மா வேற வர போறாங்க... எல்லாத்தையும் தீர்கமா யோசிச்சு முடிவெடுக்கற நான் என் அம்மா கால் பண்ணும் போது ஏன் அப்படி சொன்னேன்னு எனக்கே தெரியலை... அநேகமா இந்நேரத்துக்கு ஸ்கைப்ல ரெண்டு குடும்பமும் பேசிகிட்டு இருப்பாங்கன்னு நினைக்கறேன்... நம்மள மீறி நிறைய விஷயங்கள் நடந்துகிட்டு இருக்கு... நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னா நிச்சயமா நீங்க சொன்ன இந்த விஷயங்கள் நமக்கு நிறைய பிரச்சனைகளை கொடுக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு... நான் என்ன சொல்றேன்னா... யார் வாழ்க்கைல தான் பிரச்சனை இல்லனு சொல்லுங்க... நாம தான் இந்த பிரச்சனைகள் நம்மள அண்டாம நம்ம மனச டைவர்ட் பண்ணி வாழணும்... மே பி நான் சின்ன வயசுல நிறைய பொண்ணுங்கள லவ் பண்ணி கழட்டி விட்ட பாவத்துக்கு இந்த நெருடல் ஒரு தண்டனையா கூட இருக்கலாம்னு நினைக்குறேன்... ' என்றார்.

அவர் பேசியதை கேட்டவுடன் தன்னையும் மீறி சத்தமாக சிரித்தாள் நந்தினி.

பிராக்ஷும் நகைத்தவாறே

'ஏன் சிரிக்கறீங்க?' என்று கேட்டார்.

'இல்ல என் ப்ரண்ட் சங்கீதாவோட ஞாபகம் வந்திடுச்சு... அவளும் அப்படி தான்... காலேஜ் டேஸ்ல நிறைய பசங்கள லவ் பண்ணி கழட்டி விட்டிருக்கா...' என்றாள் நந்தினி.

'நீங்க யாரையும் லவ் பண்ணலியா?' - பிரகாஷ்.

'நான் ரொம்ப நல்ல பொண்ணு... படிப்பு உண்டு நான் உண்டுன்னு இருந்துட்டேன்.' - நந்தினி.

'அய்யயோ... தப்பு பண்ணிடீங்களே... நம்ம வாழ்க்கையை நகர்த்தறது நாம செஞ்ச புண்ணியங்கள் மட்டும் கிடையாது... நாம செஞ்ச பாவங்களும் சேர்த்து தான்... ப்ளஸ்ஸும் மைனஸும் சேர்ந்தது தான் வாழ்க்கை... நீங்க ஒன்னு பண்ணுங்க உங்க கணவரை டைவர்ஸ் பண்றது மூலமா உங்க பாவ கணக்கை துவக்குங்க...' என்றார் பிரகாஷ் நகைத்தவாறே.

நந்தினியும் புன்னகைத்தவாறு

'நீங்க விளையாட்டுக்கு சொல்லறீங்களா இல்ல நிஜமா சொல்லறீங்களானு தெரியலை... ஆனா நீங்க சொன்னது என் மனசுல இருக்கற பாரத்தை கொஞ்சம் இறக்கியிருக்கு.' என்றாள்.

'ஹப்பா... பாரம் இறங்கிடுச்சுல... என் அம்மா வர்றதுக்குள்ள கொஞ்சம் நெஞ்சம் இருக்கற பாரத்தையும் இறக்கிடலாம் கவலை படாதீங்க...' என்றார்.

இதை கேட்டு நந்தினி சிரித்தவாறே

'ஆமாம் உங்க அப்பாவை பத்தி சொல்லவே இல்லையே...' என்றாள்.

'சின்ன வயசுலேயே என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை... அவர் டைவர்ஸ் பண்ணிட்டு வேற வாழ்க்கையை அமைச்சுகிட்டாரு...' என்று பிரகாஷ் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது

நித்யாவும் அவளின் கணவரும் அங்கு வந்தனர்.

'வாங்க லஞ்சுக்கு டைம் ஆயிடுச்சு...' என்று நித்யா அவர்களிடம் கூறினாள். நால்வரும் அந்த விடுதியின் உணவகத்திற்கு நடந்துக் கொண்டிருக்கும் போது நந்தினியின் கைபேசி ஒலித்தது. அந்த அழைப்பு அவளின் தந்தையினுடையது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு தந்தையுடன் பேசத் தொடங்கினாள்.

'சொல்லு பா...' - நந்தினி.

'உனக்கு பிரகாஷை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?' - வெங்கடேசன்.

நந்தினி அமைதியாக இருந்தாள்.

'குழப்பமா இருக்கா?' - வெங்கடேசன்.

'ஆமாம்.' - நந்தினி.

'நீ ரவிக்கு துரோகம் பண்றோம்னேல்லாம் தப்பா நெனச்சு உன் மனசை குழப்பிட்டு இருக்காதே... அப்பா ஏற்கனவே சொன்ன மாதிரி நீ ரவியை டைவர்ஸ் பண்ணிட்டு பிரகாஷை கல்யாணம் பண்ணிக்கறது எந்த விதத்துலேயும் தப்பு கிடையாது... தப்பான வாழ்க்கையை தேர்ந்தெடுத்த உனக்கு அதை சரி செய்யறதுக்கு கடவுள் கொடுத்த வாய்ப்புன்னு நெனச்சுக்கோ... பழசை மறந்திடு... புது வாழ்க்கையை சந்தோஷமா தொடங்கு...' - வெங்கடேசன்.

'சரிப்பா...' - நந்தினி.

'அம்மா எல்லாத்தையும் நேத்திக்கு சொன்னா... யோசிச்சு பாத்தேன்... என் பொண்ணு, இப்போ அமைஞ்சிருக்கற வாழ்க்கைனால கஷ்டப்பட்டானா இந்த ஊரு உலகம் வந்து எந்த உதவியும் செய்ய போறதில்லை... அதனால எனக்கு ஊரு உலகம் என்ன பேசும்ன்றதை பத்தி கவலை இல்லை... பிரகாஷோட டீடைல்ஸை நித்யா எனக்கு மெயில் பண்ணிருந்தா... பார்த்தேன்... நல்லாத்தான் இருக்கு... அவரோட அம்மா அவந்திகா எங்ககிட்ட ஸ்கைப்ல பேசுனாங்க... உன்னோட போட்டோவை பாத்துட்டு "ரொம்ப அழகா இருக்கா... என் பையனுக்கு ஏத்த பொண்ணு"ன்னு சொன்னாங்க... அவங்க பேசற விதத்தை வெச்சு பாக்கும் போது உன்னை சந்தோஷமா வெச்சுப்பாங்கனு நம்பிக்கை இருக்கு... இவ்வளவு சீக்கிரமா இந்த நல்ல விஷயங்கள் நடந்ததுக்கு காரணம் நித்யா தான்... நாம நித்யாவுக்கு வாழ்க்கை முழுக்க கடமை பட்டிருக்கோம்... ஆனா ஒரே ஒரு விஷயம், உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை பிரகாஷ் தான் அவங்க அம்மாகிட்ட பக்குவமா எடுத்து சொல்லணும்...' - வெங்கடேசன்.

'சரிப்பா...' - நந்தினி.

'நான் அப்புறம் பேசறேன்...' என்று தொடர்பை துண்டித்தார் வெங்கடேசன்.

இவ்வளவு நாள் தன் தந்தையின் வார்த்தைகளால் உருவான கருவை நம்பிக்கை எனும் உரம் கொடுத்து வளர்த்து வந்த நந்தினி இப்பொழுது தன் தந்தையின் வார்த்தைகள் கொண்டே அதை மாற்ற முயற்சி செய்தாள். வேர் விட்டு விருட்சமாக தனக்குள் வளர்ந்த கரு அவளின் எண்ணத்திற்கு ஏற்றார் போல் வளைந்து கொடுக்க மறுத்தது. அந்த கரு 'நீ ரவிக்கு துரோகம் செய்கிறாய்' என்ற சிந்தையை தூண்டிக் கொண்டே இருந்தது. அதனால் தன் கருவினால் தோன்றும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் வெளியே இருக்கும் சூழலுக்கு தக்காற் போல் வலுக்கட்டாயமாக எண்ணத்தை விதைக்க தொடங்கினாள் நந்தினி.

உணவு விடுதியில் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது

நந்தினி பிரகாஷிடம்

'நான் ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணுன்றத உங்க அம்மா கிட்ட எப்போ சொல்ல போறீங்க?' என்று கேட்டாள்.

பிரகாஷ் அவளை பார்த்து

'ஆக்சுவலா உங்களோட கன்பர்மேஷனுக்காக தான் நான் சொல்லாம வைட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... பிகாஸ் நீங்க குழப்பமா இருக்கீங்களா... எனக்குமே இந்த ப்ரபோஸல் சக்ஸஸ்புல் ஆகுமான்னு ஒரே குழப்பமா இருக்கு... நான் என் அம்மா கிட்ட நீங்க ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணு ன்ற விஷயத்தை சொன்னா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலை... இதை சொல்றதுக்கு எனக்கு மன தைரியம் வேணும்... நீங்க "ஒகே நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க தயார்"னு ஒரு வார்த்தை சொன்னீங்கனா நான் உடனே சொல்லிடுவேன்' என்றார்.

இப்போது நந்தினி என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதி காக்க, மற்ற மூவரும் அவளினுடைய பதிலுக்காக அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சில நொடிகள் யோசனைக்கு பிறகு

'சரி... நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கறேன்.' என்றாள். இது வலுக்கட்டாயமாக விதைத்த எண்ணத்தில் உருவான வார்த்தைகள் ஆகும்.

உணவருந்திக் கொண்டிருந்த பிரகாஷ் பாதியிலேயே எழுந்து தன் அம்மாவை கை பேசி மூலம் தொடர்பு கொள்ள முனையும் பொழுது

நித்யா

'பிரகாஷ்... டைம் அங்க நைட் 12 இருக்கும்... இப்போ ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க?...' என்று கேட்டாள்.

'ஒன்னும் ப்ராப்லம் இல்ல... இப்போ போஃன் பண்ணி சொன்னா தான் கரெக்ட்டா இருக்கும்.' என்று தன் கை பேசியுடன் அவர்களை விட்டு விலகி சென்றார்.

அந்த நேரத்தில் அவ்வப்போது ரவியிடமிருந்து அவள் கை பேசியிற்கு அழைப்பு வந்து கொண்டிருந்தது. குற்ற உணர்ச்சியின் காரணமாக அந்த அழைப்பை ஏற்க மறுத்தாள் நந்தினி.

அரை மணி நேரம் ஆகியது. நந்தினியும் உணவருந்தாமல் காத்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் கழித்து பிரகாஷ் அங்கே வந்தார்.

'என்ன ஆச்சு?' என்று கேட்டாள் நந்தினி.

‘அம்மாவை எவ்வளவோ நான் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணினேன்... அம்மா ஒத்துக்குவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க...' என்றார் பிரகாஷ்.

"நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கறேன்" என்று பிரகாஷிடம் கூறியதை அவளின் சிந்தை நினைவு படுத்தி அவளிற்கு ஒரு தர்ம சங்கடமான மனநிலையை உண்டாக்கியது.

ஒரு வித குற்றவுணர்ச்சி தோன்றி அவளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

பிரகாஷ் நந்தினியிடம்

'நீங்க கவலை படாதீங்க... உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்றதுல நான் உறுதியா இருக்கேன்.' என்றார்.

நந்தினி பிரகாஷை பார்த்து

'எனக்காக நீங்க எதுக்கு உங்க அம்மா கிட்ட சண்டை போடுறீங்க... வேண்டாம் விடுங்க... என் வாழ்க்கை இப்போ இருக்கற படியே இருக்கட்டும்.' என்று கண் கலங்கியபடி கூறினாள்.

'நோ... அப்படி விட முடியாது... என்னை நம்பி அப்படி ஒரு வார்த்தையை சொல்லிருக்கீங்க... நான் எப்படி உங்களை கைவிட முடியும்... என் அம்மாவை நான் எப்படியாவது கன்வின்ஸ் பண்ணிக்கறேன்...' என்றார்.

'தப்பு பண்றேனோ... நான் இதுக்கெல்லாம் சம்மதிக்கறதுக்கு காரணமே பிரகாஷோட அம்மா என்னை கொண்டாடினது தான்... இப்போ அவங்களே மறுக்கறாங்க... பிரகாஷ் வேற உறுதியா இருக்காரு... இருக்கற குழப்பத்துக்கு தீர்வு காணலாம்னு பாத்தா புதுசா ஒரு குழப்பம் முளைக்குது.' என்று செய்வதறியாமல் குழப்பத்தோடு யாரிடமும் சரியாக பேசாமல் அந்த தினத்தை கழித்தாள்.

அதே கனமான மன நிலையில் தன் அறையினுள் நுழைந்தாள் நந்தினி.

உள்ளெ நுழைந்தவுடன் ரவி அவளை கட்டி அணைத்து

'உனக்கு சர்ப்ரைஸ்...' என்றான்.

இதற்கு இடம் கொடுத்தால், ஒரு வேளை பிரகாஷின் தாயார் ஒப்புக் கொண்டு மறுமணம் செய்ய நேரிடும் பொழுது ரவியை அவ்வளவு எளிதாக விட்டு பிரிய முடியாது என்ற காரணத்தினால் வலுக்கட்டாயமாக வெறுப்பை காட்டினாள். அவனை அருவெறுப்பாக தன்னிடமிருந்து தள்ளி விட்டு

'ரவி... இப்படியெல்லாம் என்கிட்டே நடந்துக்காதிங்க.' என்றாள்.

ரவியும் கோவமாக

'ஏன்?... நீ என் பொண்டாட்டி தானே?' என்று கேட்டான்.

'பொண்டாட்டியா இருந்தாலும்...' என்று அவனை முறைப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

'எங்க போற?' என்று சந்தேகமாய் கேட்டான்.

'டிரஸ் மாத்திக்க பாத்ரூமுக்கு போறேன்.' என்றாள்.

'வழக்கமா இங்க தானே மாத்திக்குவ... இப்போ என்ன புதுசா?' - ரவி.

'இனிமே எல்லாம் இப்படித்தான்.' என்று கூறிவிட்டு, குளியல் அறைக்கு சென்று தன் உடைகளை மாற்றிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.

ரவி சோகமாக படுக்கையில் அமர்ந்திருந்தான். நந்தினி அவனை பார்த்தவாறே படுக்கையில் அமர்ந்தாள். சில நொடிகள் அவனை பார்த்துவிட்டு படுத்து தன் கண்களை மூடினாள்.

'என்ன சர்ப்ரைஸ்ன்னு கேக்க மாட்டியா?' என்று ரவியின் குரல் கேட்டு கண்களை திறந்து சில நொடிகள் மெளனமாக அவனை பார்த்தாள். பிறகு

'என்ன சர்ப்ரைஸ்?' என்று ஆச்சர்யத்திற்கு முக்கியத்துவம் காட்டாமல் கேட்டாள்.

உடனே ரவி தன் தலையணை அடியிலிருந்து ஒரு தபால் உறையை அவளிடம் நீட்டி

'இன்னைக்கு இன்டர்வ்யூல செலக்ட் ஆயிட்டேன்... இதான் என் ஆஃபர் லெட்டர்.' என்றான்.

அதை வாங்கி உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

'அந்த ப்ரேக் அப் எனக்கு புரியலை... நான் டிரெக்ட்டா எச். ஆர் கிட்ட கேட்டேன்... அவங்க தான் பிடிப்பெல்லாம் போக கைக்கு முப்பதாயிரம் ரூபாய் தருவாங்கன்னு சொன்னாங்க.' என்று ரவி சொல்லிக் கொண்டிருக்கும் போது

நந்தினி ரவியை பார்த்து

'ரவி... நீங்க க்லைன்ட் சைட்ல வேல பாத்தா தான் கைக்கு முப்பதாயிரம் கிடைக்கும்... இந்த கம்பெனி ஆபிஸ்ல வேல பாத்தா இருபத்தி அஞ்சு தான்... அஞ்சாயிரம் க்லைன்ட் சைட் அல்லோவன்ஸ்... இப்போ எவ்வளோ வாங்கறீங்க?' என்று கேட்டாள்.

'கைக்கு இருபத்திரண்டு வருது.' - ரவி.

'வெறும் மூவாயிரம் தான் அதிகம்... பொறுமையா இருங்க... வேற கம்பெனி பாத்துக்கலாம்.' என்றாள்.

'ஐயோ... நான் என் கம்பெனில ரெஸிக்நேஷன் லெட்டரை கொடுத்துட்டேனே.' - ரவி.

நந்தினி திகைத்தவாறு

'ப்ப்ச்... ஏன் இந்த அவசரம்... எனக்கு கால் பண்ணி ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல.' என்று கேட்டாள்.

'நான் என்ன பண்ணட்டும்?... நான் இன்டர்வ்யூல செலெக்ட் ஆன கம்பெனி "இன்னும் ஒரு வாரத்துல நீங்க ஜாயின் பண்ணலைனா இந்த ஆஃபர் லெட்டரை கேன்சல் பண்ணிடுவோம்"னு சொன்னாங்க ... சரி உனக்கு கால் பண்ணி கேட்கலாம்னு பாத்தா நீ போஃனை எடுக்கவே இல்லை... அவனுங்க வேற ரெண்டு மூணுவாட்டி கால் பண்ணி என்னை பயமுறுத்திக்கிட்டே இருந்தானுங்க... கிடைச்ச வாய்ப்பை விடக் கூடாதுனுட்டு தான் நான் ரிசைன் பண்ணேன்... என் மேனஜர் ஒரு மாசம் கழிச்சு தான் உன்னை அனுப்ப முடியும்னு சொன்னாரு... நான் எங்க யூனியன் மூலமா போய் பிரஷர் பண்ணினேன்... என்னை நாளைக்கே ரிலீவ் பண்றதா சொல்லிட்டாங்க.' - ரவி.

ரவியினுடைய எதிர்காலத்தை நினைத்து நந்தினியினுள் லேசான பயம் முளைத்தது. இது இவளுடைய குற்றஉணர்ச்சியை அதிகப் படுத்தியது.

'இன் கேஸ் இந்த வேலை உங்களுக்கு செட் ஆகலைன்னா நீங்க மறுபடி உங்க பழைய கம்பெனிக்கே போகமுடியுமா?' - நந்தினி.

ரவி யோசனையாய்

'இல்ல... ஒரு வாட்டி ரிசைன் பண்ணிட்டோம்னா மறுபடி அதே ஆளை வேலைக்கு எடுக்க மாட்டாங்கன்றது கம்பெனி ரூல்ஸ்... இதை என் மேனேஜர் என்கிட்ட சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாரு... நான் தான் பிடிவாதமா வேலையை விட்டு போறேன்னு சொல்லிட்டேன்.' - ரவி.

"இந்த வேலையை தவிர வேற எந்த வேலையும் அவனுக்கு சரிப்பட்டு வராது" என்று தேசிகன் கூறியது நந்தினியின் நினைவிற்கு வந்தது.

ரவியின் எதிர்காலத்தை பற்றி யோசித்தவாறே அமைதியாக ரவியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'விடு... ரொம்ப யோசிக்காத... என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிச்சுக்கலாம்... நல்ல கம்பெனியோ இல்லையோ நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... இதுவரைக்கும் எனக்கு இப்போ வொர்க் பண்ற கம்பெனியை விட்டா வேற எங்கேயும் எனக்கு வேலை கிடைக்காதுன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு... ஆனா இப்போ நான் இந்த கம்பெனில செலெக்ட் ஆயிருக்கேன்... நான் ரிஸைன் பண்ண உடனே ஏதேதோ டிபார்ட்மென்ட்லேருந்து முன் பின் தெரியாத ஆளுங்கெல்லாம் வந்து கை கொடுத்துட்டு "உங்க நம்பர் கொடுங்க... என்னையும் அந்த கம்பெனிக்கு ரெஃபேர் பண்ணுங்க"னு சொல்லிட்டு போனது எனக்கு எவ்வளோ கெத்தா தெரியுமா இருந்துச்சு... நான் யோசிச்சு பாத்தேன்... இதுக்கெல்லாம் நீ தான் காரணம்... ஸ்கூல்லையும் சரி, காலேஜுலேயும் சரி எவனும் உதவி செஞ்சதில்லை... எல்லாரும் கூட இருந்தே பாதியிலேயே காலவாரி விட்டுட்டு போயிடுவானுங்க... நீ தான் என் கூட கடைசி வரைக்கும் இருக்க போறியே... எனக்கு இப்போ எந்த கவலையும் இல்ல...' என்று சொல்லிக் கொண்டே அவளை கட்டியணைத்தான்.

இந்த தடவை வலுக்கட்டாயமாக வெறுப்பை காட்ட முயற்சித்தவளை, அவள் உள்ளிருக்கும் கரு வென்றது. அவளால் அந்த அணைப்பை விலக்க முடியவில்லை.

மாறாக "பிரகாஷின் தாய் எப்படி இருந்தாலும் தன்னை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை... ஏன் இந்த குழப்பம்?... பிரகாஷிடம் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடலாம்." என்ற எண்ணம் சிந்தையில் தோன்றி மறைந்தது.

மறுநாள் காலை 9 .30 மணியளவில் அலுவலகத்தில் பிரகாஷிடம் "இந்த திருமணம் வேண்டாம்." என்பதை கூறுவதற்காக தன் கணினியில் உள்ள மென்பொருள் தொடர்பி மூலமாக தன்னை பார்க்க அலுவலக உணவகத்திற்கு வரச் சொன்னாள்.

அங்கே வந்த பிரகாஷிடம்

'சாரி பிரகாஷ்... இனிமேல் எந்த குழப்பமும் வேண்டாம்... நீங்க உங்க அம்மாவுக்கு ஏத்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க...' என்றாள்.

'ஏன்?... இப்படி சொல்லறீங்க?' - பிரகாஷ்.

'நான் இந்த செகென்ட் ப்ரபோசலை அக்ஸப்ட் பண்ணதுக்கு முக்கிய காரணமே உங்க அம்மாவோட கேரியிங்கான பேச்சும் அவங்க என் மேல காட்டின அன்பும் தான்... அவங்களே என்னை மறுக்கறாங்கனும் போது நாம கல்யாணம் பண்ணிக்கறதுல எந்த அர்த்தமும் இல்ல.' - நந்தினி.

'நந்தினி... அவங்க உங்களை ஏத்துக்கலைனாலும் அவங்களையும் மீறி உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க தயார்...' - பிரகாஷ்.

சில நொடிகள் யோசனையில் மூழ்கினாள் நந்தினி. ரவியின் முகம் சிந்தையில் தோன்றி "எனக்கு உன்னை விட்ட யாரு இருக்கா?" என்று கூறியது.

நந்தினி தலையை அசைத்தவாறே

'நோ பிரகாஷ்... என்னால உங்க அம்மாவை நீங்க எதிர்க்க வேண்டாம்... ப்ளீஸ்... என்னை மன்னிச்சிருங்க... நான் கிளம்பறேன்' என்று பிரகாஷிடம் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு, தன் இருக்கையில் அமர்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அவளின் கை பேசி ஒலித்தது. அது நித்யாவின் அழைப்பு. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு

'ஹலோ...' என்றாள்.

'நந்து... பிரகாஷ் கிட்ட என்ன சொன்ன?' - நித்யா.

'அவர் உன்கிட்ட என்ன சொன்னாரு?' - நந்தினி.

'பிரகாஷ் அவர் அம்மாவை கன்வின்ஸ் பண்ணிட்டாரா னு கேக்கறதுக்கு நான் தான் அவருக்கு கால் பண்ணினேன்... நீ இந்த கல்யாணமே வேணாம்னு உறுதியா சொன்னதா சொன்னாரு... ஏன் அப்படி சொன்ன?' - நித்யா.

'இதோ பார் நித்யா... இந்த செகென்ட் மேரேஜுக்கு நான் அக்ரீ பண்ணதுக்கு முக்கிய காரணமே பிரகாஷோட அம்மா என்கிட்டே நல்லபடியா நடந்துக்கிட்டதுனால தான்... இப்போ அவங்களுக்கே என்னை பிடிக்கலை.' - நந்தினி.

'எந்த அம்மா தான் ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணுக்கு தன்னோட ஒரே பையனை கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிப்பா?... அதான் பிரகாஷ் தன்னோட அம்மாவையும் மீறி உன்னை கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னாராமே... அப்புறம் உனக்கு என்ன பிரச்சனை?' - நித்யா.

'நித்யா... தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ... அவர் அம்மாவோட மனப்பூர்வமான சம்மதம் இல்லாம நான் இந்த செகென்ட் மேரேஜை அக்ஸப்ட் பண்ணிக்க மாட்டேன்...' - நந்தினி.

'அப்போ உனக்கு அவரோட அம்மா மனப்பூர்வமா சம்மதிச்சா நீ ரவியை டைவர்ஸ் பண்ணிட்டு பிரகாஷை கல்யாணம் பண்ணிக்க தயார்னு சொல்ற.' - நித்யா.

நந்தினி அமைதியாக இருந்தாள். சில நொடிகள் கழித்து

'இல்ல... வேற ஏதாவது ரீஸன் இருக்கா?' என்று கேட்டாள் நித்யா.

நந்தினி தயக்கமாக

'ரவிக்கு வேற வேலை கிடைச்சிருக்கு?' என்றாள்.

'என்ன பெரிய மேனேஜிங் டிராக்டர் உத்யோகமா கிடைச்சிருக்கு?' என்று கோவமாக கேட்டாள் நித்யா.

'இல்ல நித்யா... நான் அவரை அவாய்ட் பண்ண தான் ட்ரை பண்ணினேன்... அவர் என்கிட்ட வந்து... "எனக்கு...' என்று நந்தினி சொல்லி முடிவதற்குள்

'"எனக்கு உன்னை விட்ட யார் இருக்கா?... இந்த வேலையே உன்னால தான் கிடைச்சுது"... அப்புறம் மானே தேனே பொன்மானே அப்படி இப்படின்னு எதாவது ஸிம்பதி வேவ்ஸ் கிரியேட் பண்ணிருப்பாரு... அதானே.' - என்று கேட்டாள் நித்யா.

'ஆமாம்' என்றாள் நந்தினி தயக்கமாக.

'எனக்கு தெரியும்... இது நிச்சயமா நம்ம சீனியர் வருணோட ஆட்டிட்யூட் தான்... அவனும் அப்படி தான்... நான் அவனை விட்டு பிருஞ்சுடணும்னு நினைக்கும் போதெல்லாம் எப்போவாவது க்ளாஸ் டெஸ்ட் ல ஜஸ்ட் பாஸ் ஆனா கூட "நீ தான் காரணம்... எனக்கு உன்னை விட்ட யாரு இருக்கா... எல்லாரும் கூட இருந்து குழியை பரிக்கறாங்க ... என்னை காப்பாத்த வந்த தேவதை நீ தான்... ப்ளீஸ் என்னை மன்னிச்சு மறுபடி ஏத்துக்கோ" னு சொல்லி சொல்லியே என் மனசை மாத்திடுவான்... சரி திருந்திட்டானு நினைச்சு அந்த லவ்வை கண்டின்யு பண்ணினா... மறுபடி அவன் சுய ரூபத்தை காட்டுவான்... நோ நந்து நீயும் அந்த ட்ராப் ல மாட்டிக்காதே... இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் கேன்சர் கட்டி மாதிரி... முளையிலேயே வெட்டி எறிஞ்சுடணும்... வெட்டும் போது ரத்தம் வரத்தான் செய்யும்... வலி இருக்க தான் செய்யும் ஆனா வளர விட்டா அது உன் உயிரையே குடிச்சிரும்...' என்று நித்யா கூறிக் கொண்டிருக்கும் போது நந்தினியின் கைபேசியிற்கு வேறொரு அழைப்பு வந்ததற்கான சமிஞை வந்தது.

'ஹே நித்யா... எனக்கு வேற ஒரு கால் வருது... அதை அட்டண்ட் பண்ணிட்டு அப்புறம் நானே உனக்கு கால் பண்றேன்.' என்று நித்யாவின் அழைப்பை துண்டித்துவிட்டு மற்றொரு அழைப்பை ஏற்று

'ஹலோ...' என்றாள் நந்தினி.

மறுமுனையில்

'நான் பிரகாஷோட அம்மா அவந்திகா பேசறேன்.' என்று குரல் கேட்டவுடன் சற்றே பதைபதைத்த நந்தினி சில நொடிகளில் சுதாரித்து

'ம்ம்ம்... சொல்லுங்க மா.' என்றாள்.

'நேத்து நைட் முழுக்க பிரகாஷ் தூங்கவே இல்ல... அவன் என்னை கன்வின்ஸ் பண்ண முயற்சி பண்ணிகிட்டே இருந்தான்... இதுவரைக்கும் அவன் இந்த மாதிரி அடம்பிடிச்சு நான் பாத்தது இல்லை... ரொம்ப ஈஸி கோயிங் மேன்... அதனால தான் அவனால இந்த சின்ன வயசுல இவ்வளவு பெரிய பொசிஷனை அடைய முடிஞ்சுது... ஒருவேளை என் பையன் இந்த பாதிப்புனால வாழ்க்கைல கீழே விழுந்துடுவானோனு எனக்கு பயம் வந்திருச்சு... அவன் எதிர்காலம் பாதிக்க படக் கூடாதுன்றதுக்காக தான் அவன் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்க பிடிவாதம் பிடிக்கறான்னு யோசிச்சு பாத்தேன்... ஒரு தப்பான ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் பட்ட கஷ்டத்தை அவன் பாத்திருக்கான்... ஒரு வேளை அந்த வொர்ஸ்ட் மெமோரிஸ் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு அவனை தூண்டிருக்கும்... ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட் யூ டூ டியர்... ஒரு தப்பான ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் கூட வாழறது ரொம்ப கஷ்டம் தான்... ஒரு வேளை எனக்கு பிரகாஷ் பிறக்கலைனா நான் கூட வேற கல்யாணம் பண்ணிருந்திருப்பேன்... நான் மனப்பூர்வமா உன்னை என் மருமகளா ஏத்துக்கறேன்... எனக்கு என் பையனோட சந்தோஷம் தான் முக்கியம்.' என்று கூறிவிட்டு நந்தினியின் பதிலை எதிர் பார்த்தார் அவந்திகா.

நந்தினியிற்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. வேறு வழியில்லாமல்

'ரொம்ப நன்றிங்க மா...' என்றாள் நந்தினி.

'ஓகே... உன்னோட சந்தோஷம் உன் குரல் லியே தெரியுது... இந்த விஷயத்தை நீயே பிரகாஷ் கிட்ட சொல்லிடு... பை.' என்று அழைப்பை துண்டித்தார் அவந்திகா.​
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
'ஓகே... உன்னோட சந்தோஷம் உன் குரல் லியே தெரியுது... இந்த விஷயத்தை நீயே பிரகாஷ் கிட்ட சொல்லிடு... பை.' என்று அழைப்பை துண்டித்தார் அவந்திகா.

பிறகு நித்யாவிற்கு அழைப்பை விடுத்து நடந்ததை கூறினாள்.

'நந்து... அவங்க அம்மாவும் ஏத்துக்கிட்டாங்க... இப்போ பிரச்சனையே இல்ல...' - நித்யா.

'ரவியை நினைச்சா தான் எனக்கு நெருடலா இருக்கு... எனக்காக தனக்கு தோதா இருக்கற வேலையை விட்டுட்டு வேற வேலைல ஜாயின் பண்ண போறாரு... இந்த வேலை செட் ஆகலைன்னா அவரால பழைய கம்பெனில ரீஜாயின் கூட பண்ண முடியாதாம்... டீப்பா திங்க் பண்ணி பாத்தா அவர் மேல எந்த தப்பும் இல்ல... நான் தான் தப்பு பண்ணிக்கிட்டு இருக்கேன்...' - நந்தினி.

'இட் ஹாபேன்ஸ் நந்து... ஸம்டைம்ஸ் ஒருத்தருக்கு துரோகம் பண்றோம்னு தெரிஞ்சே நாம சில விஷயங்களை செய்ய வேண்டியது இருக்கும்... அப்படி பண்ணலைனா நம்ம வாழ்க்கை வீணா போய்டும்... யதார்த்தமா திங்க் பண்ணி பார்... பிரகாஷ் ஒரு அசிஸ்டன்ட் மேனேஜிங் டிரேக்டர்... இன்னும் அஞ்சு வருஷத்துல அவரோட பொசிஷன் இன்னும் உயரும்... இல்லனா தனியா கூட கம்பெனி ஸ்டார்ட் பண்ற பொடென்ஷியல் அவர்கிட்ட இருக்கு... இப்போ ரவிக்கு எந்த கம்பெனில வேலை கிடைச்சிருக்கு?' - நித்யா.

'டீம் லீஷ் கன்சல்டன்ஸி... ஏன் கேக்கற?' - நந்தினி.

‘ஒரு நிமிஷம் லைன்ல வைட் பண்ணு... நான் என் ஹப்பி கிட்ட கேட்டுட்டு சொல்றேன்.' என்று கூறிவிட்டு சில நொடிகளுக்கு பிறகு

'நந்து... எம்.என்.சி கம்பனிகளுக்கு டாகுமென்டேஷன் பண்றதுக்கு கான்ட்ராக்டர்ஸ் சப்ளை பண்ற கன்சல்டன்ஸி தான் இது... ஒரு வேளை உன் புருஷனோட பர்பார்மன்ஸ் சரியில்லைன்னா உடனே வீட்டுக்கு அனுப்பிடுவானுங்க... செய்யற வேலைனால எந்த முன்னேற்றமும் இருக்காது... வேலையும் இன்செக்யுர்ட்... சொல்லு... இந்த மண் குதிரையை நம்பி தான் ஆத்துல இறங்க போறியா?... இப்படி தான் கடவுள் வேஷம் போட்டுக்கிட்டு பேய் வரும்... அதை நம்பக கூடாது... ரவி மேல உனக்கிருக்கற அனுதாப உணர்ச்சியை நம்பாதே... இதே நீ பிரகாஷை கல்யாணம் பண்ணிக்கிட்டா யு ஆர் கோயிங் டு பி எ குயின்... ராணி வாழ்க்கை வாழப் போற... ரவியோட ஞாபகம் வந்து உனக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டதுனா தானம் தர்மம் பண்ணி உன் மனசை தேத்திக்கலாம்... இப்போ இந்த வாய்ப்பை நழுவ விட்டுட்டா மறுபடி நீ கஷ்ட படும்போது இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?... ' - நித்யா.

நந்தினி சில நொடிகள் மெளனமாக இருந்துவிட்டு

'இப்போ நான் பண்ணனும்?' என்று கேட்டாள்.

'போய் பிரகாஷ் கிட்ட விஷயத்தை சொல்லு... ரெண்டு பேரும் பேச ஆரம்பிங்க... உன் மனசு ரவியை ஞாபகப்படுத்தி குழப்பும்... உன்னோட எதிரி வெளிய இல்ல... இவ்வளவு நாள் உன் வளர்ச்சிக்கு காரணமா இருக்கற உன்னோட சித்தாந்தம் தான் உன்னோட எதிரி... உன் வாழ்க்கை இனிமேல் சீரும் சிறப்புமா இருக்கணும்னா நீ பிரகாஷை கல்யாணம் பண்ணிக்கணும்ன்றதை மட்டும் நம்பு... இப்போ பிரகாஷ் கிட்ட போய் பேசு.' என்று மறுமுனையில் கூறிவிட்டு அந்த தொடர்பை துண்டித்தாள் நித்யா.

இப்போது நந்தினி தனக்குள் கருவாக இருந்து தன் எண்ணம், சொல், செயலை ஆட்டுவிக்கும் சித்தாந்தத்தை எதிரியாக பாவிக்க தொடங்கினாள். வலுக்கட்டாயமாக தன் எண்ணம் சொல் செயலை தன் சித்தாந்தத்திற்கு எதிராக மாற்ற முயற்சித்தாள்.

பிரகாஷை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினாள்.

'இனிமேல் உங்களுக்கு எந்த கன்ப்யுஷனும் இல்லையே... ஸோ யூ ஆர் ரெடி டு மேரி மீ...' என்று கேட்டார் பிரகாஷ்.

உள்ளுக்குள்ளே ஒரு நெருடல் இருந்தாலும் நந்தினி தலையை அசைத்து அவர் கூறுவதை ஆமோதித்தாள்.

'இல்ல... உங்களை பாத்தா முழு மனசோட சம்மதிக்கற மாதிரி தெரியல... அதான் கேட்டேன்... ஏன்னா எனக்கும் வலுக்கட்டாயமா ஒருத்தங்களை கல்யாணம் பண்ணிக்கறோமோன்னு தோணுது. ' - பிரகாஷ்.

நந்தினிக்கு சுருக்கென்று தன்னையும் மீறி கோபம் தலைக்கேறியது.

'இதோ பாருங்க பிரகாஷ்... எனக்குள்ள நெருடல் இருக்கறது உண்மை தான்... என்னோட சூழ்நிலைல இருந்தா தான் என்னோட கஷ்டம் உங்களுக்கு புரியும்... சும்மா "என்னை கல்யாணம் பண்ணிக்க முழு மனசோட சம்மதமா?"னு கேள்வி கேக்காதீங்க... எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு... ஆமாம் எனக்கு நெருடலா தான் இருக்கு... என்னால முழு மனசோட இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியலை தான்... என்னை அந்த நெருடலேருந்து வெளிய கொண்டுவந்து முழு மனசோட சம்மதிக்க வெக்கறது உங்களோட பொறுப்பு...' என்று கோபமாக பேசிவிட்டு பார்வையை வேறு புறம் திருப்பினாள்.

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு பிரகாஷ்

'சாரி... நான் இனிமேல் உங்க கிட்ட அந்த கேள்வியை கேக்க மாட்டேன்... அம்மா இன்னிக்கு யூ.எஸ்லேருந்து கிளம்பிடுவாங்க... அநேகமா நாளை மறுநாள் இந்தியா ரீச் ஆயிடுவாங்க... ஒன்னு பண்ணுவோம் இன்னிக்கு நைட் டின்னர் ஹோட்டல்ல சாப்பிடுவோம்... உங்க ப்ரண்ட் நித்யாவையும் கூப்பிடுங்க நேத்து மாதிரி நாம ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி நமக்குள்ள இருக்கற நெருடலேருந்து வெளியே வர வழியை பாப்போம்.' என்று கூறினார்.

நந்தினியும் அதற்கு ஒப்புக் கொண்டாள். இந்த விஷயத்தை தன் பெற்றோர்களிடம் தெரிவித்துவிட்டு, நித்யாவிடமும் தெரிவித்தாள்.

'வீட்ல என்ன சொன்னாங்க?' - நித்யா.

'வீட்ல அம்மா கிட்ட தான் சொன்னேன்... ரொம்ப சந்தோஷ பட்டாங்க... அப்பாகிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்றதா சொன்னாங்க...' - நந்தினி.

'ஓகே டி... நானும் என் ஹப்பியும் இன்னிக்கு நைட் விஜய் பார்க் இன் னுக்கு வந்துடறோம்.' என்றாள் நித்யா.

அலுவலக பணிகளை முடித்து நந்தினியும் பிரகாஷும் ஹோட்டல் விஜய் பார்க் இன் னிற்கு சென்றனர்.

அங்கே முகப்பு அறையில் அமர்ந்தவாறே, நித்யா மற்றும் அவளின் கணவரின் வருகைக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் போது இருவரும் ஒருவருக்கொருவர் பேசத் தொடங்கினர்.

தங்களுக்குள் இருக்கும் நெருடலை பற்றி பேசாமல் வேறு விஷயங்களை பற்றி தான் பேச வேண்டும் என்பதில் கவனமாக பிரகாஷ் இருப்பது நந்தினிக்கு புரிந்தது. முதலில் பொதுவான விஷயங்களை பேச ஆரம்பித்தார்கள். போக போக அவர்களுக்குள் இருக்கும் நெருக்கமும் உரிமையும் அதிகமாகியது. நந்தினியின் மனது அவளது சித்தாந்தத்திலிருந்து மெதுவாக பிரிந்து வெளியே இருக்கும் சூழலோடு இசையத் தொடங்கியது. இப்போது நந்தினியும் பிரகாஷும் மிகவும் அன்னியோன்யமாக பேசத் தொடங்கினர்.

'சின்ன வயசுல நெறைய பொண்ணுங்கள லவ் பண்ணி கழட்டி விட்ருக்கேன்னு சொன்னீங்களே... ஏன் அப்படி செஞ்சீங்க?' - நந்தினி.

பிரகாஷ் சிறிய புன்னகையோடு

'நிறைய பொண்ணுங்கனு சொல்ல முடியாது... மூணு பொண்ணுங்கள கழட்டி விட்டுருக்கேன்... அதெல்லாம் பக்குவம் இல்லாத வயசுல செஞ்சது... இப்போ நெனச்சா கூட மனசுக்கு கஷ்டமா இருக்கு... அந்த மூணு பொண்ணுங்க பின்னாடி நான் தான் போய் என் லவ்வை சொன்னேன்... அவங்க ஓத்துக்கிட்டு என்னோட பேசி பழக ஆரம்பிச்சாங்க... கொஞ்ச நாள் கழிச்சு அவங்க மேல இருந்த அட்ராக்ஷன் குறைஞ்சு போச்சு... அதான் கழட்டி விட்டுட்டேன்...' என்றார்.

'ஐயோ அப்போ என்னையும் கழட்டி விட்ருவீங்களா?’ - நந்தினி.

'சே சே... எனக்கு நல்லா தெரியும்... என்ன தான் உலக அழகியையே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் கொஞ்ச நாளைக்கு தான் அழகா தெரிவா அப்புறமா கல்யாண வாழ்க்கையை நடத்திக்கிட்டு போறது நம்மளோட கமிட்மென்ட் அண்ட் ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ் தான்... ஐ திங்க் திஸ் கமிட்மென்ட் அண்ட் ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ் மஸ்ட் பீ தி ஸிம்டம் ஆஃப் ட்ரூ லவ்...' - பிரகாஷ்.

நந்தினி வியப்பாய் இரு புருவங்களை உசத்தி தலையை மேலும் கீழுமாய் அசைத்தாள்.

இதற்கிடையில் நித்யாவும் அவளின் கணவரும் அங்கு வந்தனர். நால்வரும் உணவக அறையிற்கு சென்று உணவருந்திக் கொண்டிருக்கும் போது நித்யா நந்தினியிடம்

'என்ன நந்து... இப்போ ரெண்டு பேருக்கும் அன்னியோன்யம் வளர்ந்திருக்கற மாதிரி தோணுது.' என்று புன்னகைத்தவாறே கேட்டாள்.

நந்தினியும் பிரகாஷும் ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டு வெட்கப் பட்டுக் கொண்டே உணவருந்தினர். நித்யா பேசுவதை தொடர்ந்தாள்.

'சரி இப்போ ரெண்டு பேருக்கும் ஒரு டெஸ்ட்' என்று பொதுவாக கூறிவிட்டு நந்தினியியை பார்த்து

'உனக்கு பிடிச்ச டிஷை ஆர்டர் பண்ணி பிரகாஷ் சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குனு உண்மையை சொல்லணும்.' என்று கூறிவிட்டு, பிரகாஷிடம் பார்வையை திருப்பி

'அதே தான் உங்களுக்கும்.' என்றாள்.

நித்யா கூறியது போல் இருவரும் தனக்கு பிடித்த உணவு வகையை கொண்டு வரச்சொல்லி அதை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.

அப்பொழுது நந்தினியின் தந்தை வெங்கடேசன் நந்தினியிற்கு அழைப்பு விடுத்து பேசினார்.

'சொல்லு பா.' - நந்தினி.

'பிரகாஷ் அம்மா சம்மதிச்சாலும்... ஒரு பிரச்சனை இருக்கு.' - வெங்கடேசன்.

'என்ன?' என்று முகத்தை சற்றே தீவிரமாக வைத்துக் கொண்டு கேட்டாள் நந்தினி.

'நமக்கு டைவர்ஸ் பத்தி அவ்வளவு விவரம் கிடையாதுன்னுட்டு இப்போ தான் என் ப்ரண்ட் மூலமா ஒரு வக்கீல் கிட்ட கேட்டேன்... நீயும் ரவியும் டைவர்ஸ் வாங்கறதுக்கு முன்னாடி ஒரு வருஷம் பிரிஞ்சு இருக்கணுமாம்... அப்புறமா பரஸ்பரம் ரெண்டு பேரும் விவாகரத்து செஞ்சுக்கறதுக்கு ஒத்துக்கிட்டா தான் டைவர்ஸ் கிடைக்குமாம்... டைவர்ஸ் பண்ணிக்கறதுக்கு முன்னாடி இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கறது ஐபிசீ செக்ஷன் 494 சட்டப்படி குற்றமாம்... அஞ்சுலேருந்து ஏழு வருஷம் வரைக்கும் சிறை தண்டனைனு சொன்னாரு... யுஸ்லியும் இது இல்லீகலாம்... விசா கிடைக்காதுனு சொன்னாரு. ' - வெங்கடேசன்.

இதை கேட்டவுடன் நந்தினியிற்கு தூக்கி வாரிப்போட்டது. பயத்தினால் இப்போது அவளின் மனது தனது சித்தாந்தத்துடன் ஒட்டிக் கொண்டது. மறுபடி மனதை பிரகாஷை திருமணம் செய்து கொள்ளும் படி கட்டாய படுத்தினாள். பக்கத்தில் இருந்த மூவரும் அவளை தீவிரமாக பார்க்கத் தொடங்கினர். அவர்களின் முக பாவனையை பார்த்த நந்தினி அவர்களை பார்த்து செயற்கையாக ஒரு நகைப்பை வெளி படுத்திவிட்டு

'நத்திங்.' என்று தன் தந்தையின் பேச்சை கவனிக்க தொடங்கினாள். மற்ற மூவரும் இயல்பாக சிரித்து பேசத் தொடங்கினர்.

வெங்கடேசன் பேசுவதை தொடர்ந்தார்.

'பிரகாஷ் அம்மாவுக்கு இதெல்லாம் தெரியுமா?... ஒரு வாட்டி பிரகாஷ் கிட்ட கேட்டு பாரு.' என்றார்.

'சரி... நான் அவர்கிட்ட கேக்கறேன்.' என்று அந்த அழைப்பை துண்டித்தாள்.

பிறகு பிரகாஷிடம் தன் தந்தை கூறிய விஷயங்களை கூறினாள்.

பிரகாஷும் சற்றே யோசித்த பிறகு நந்தினியிடம்

'ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணுன்னு நான் சொன்னதை அம்மா எப்படி எடுத்துகிட்டாங்கனு தெரியலை... ஒரு வேளை ஏற்கனவே டைவர்ஸ் ஆன பொண்ணுன்னு நெனச்சிட்டாங்களோ.?' என்று யோசனையாக சொன்னார்.

சந்தோஷ சூழல் மெதுவாக குழப்பத்திற்கு மாறுவதை உணர்ந்த நந்தினி செய்வதறியாமல் நித்யாவை பார்த்தாள். நித்யா உடனே பொதுவாக இருவரிடமும்

'இந்த விஷயத்தை அப்படியே விடுங்க... இந்த மாதிரி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்... நீங்க ரெண்டு பேரும் ஒன்னா வாழணும்னுறதுல உறுதியா இருங்க... இதெல்லாம் நாம டீல் பண்ணிக்கலாம்.' என்று கூறிவிட்டு பிரகாஷிடம்

'என்ன பிரகாஷ் நந்தினியோட பேவரைட் டிஷை சாப்டீங்க எப்படி இருக்குனு சொல்லவே இல்ல?' என்று அந்த சூழலை திசைதிருப்பினாள்.

பிரகாஷ்

'கொஞ்சம் காரமா இருந்துச்சு... நான் யூஷுவலா காரம் சாப்பிட மாட்டேன்...' என்று கூறிவிட்டு நந்தினியை பார்த்து

'பட் நந்தினிக்கு பிடிச்சதுனால எனக்கும் பிடிச்சிருக்கு.' என்றார்.

பிரகாஷை திருமணம் செய்து கொள்வதா இல்லை தன் சித்தாந்தத்தின் படியே நடந்து கொள்வதா என்ற போராட்டம் நந்தினியினுள் நடந்து கொண்டிருந்தது. அத வெளிகாட்டிக் கொள்ளாமல் செயற்கையான சந்தோஷத்தை வெளிப் படுத்தியவாறே பிரகாஷிற்கு பிடித்த உணவை சாப்பிட்டு முடித்தாள்.

'சரி நந்து... பிரகாஷ் சொன்ன மாதிரி எப்படி இருக்குனு உண்மையை சொல்லணும்.' - நித்யா.

நந்தினியும் நித்யாவிடம் ஒரு செயற்கை சிரிப்பை வெளிப் படுத்திவிட்டு பிரகாஷிடம் பார்வையை திருப்பி

'ம்ம்ம்... நல்லா இருக்கு...' என்று சொல்ல முற்படும் போது திடீரென்று தன் கட்டுப்பாட்டையும் மீறி வாந்தி எடுத்தாள். சட்டென்று தன் கைகளால் தன் வாயை மூடிக் கொண்டு கழிவறைக்குச் வேகமாக சென்றாள். உடன் நித்யாவும் சென்றாள். கழிப்பறையில் வாந்தி எடுத்துவிட்டு நந்தினி நிதானமான பிறகு, நித்யா

'அந்த டிஷ் நல்லா இல்லையா?' என்று கேட்டாள்.

'இல்ல ஓகே தான்… ஆனா அப்பா கிட்ட பேசுனதுலேருந்து ஒரு பயம் வந்துருச்சு... அதனால என்னால நார்மலா இருக்க முடியலை... அதே பயத்தோட சாப்பிட்டேனா அதான் வாந்தி வந்திருச்சுனு நினைக்கறேன்.' - நந்தினி.

'சரி விடு... பிரகாஷ் மனசு கஷ்டப்படாம இருக்க நான் ஏதாவது சொல்லி சமாளிக்க்கறேன்... நீ அமைதியா சந்தோஷமா இருக்கற மாதிரி என் பக்கத்துல நில்லு.' - நித்யா.

இருவரும் பிரகாஷின் முன் நின்றனர். பிரகாஷ் மிக சோகமாக

'என்ன ஆச்சு?' என்று கேட்டார்.

அதற்கு நித்யா

'நீங்க தப்பா நினைக்காதீங்க... அவளுக்கு உங்க டிஷ் ரொம்ப பிடிச்சிருக்கு... ஆனா ...' என்று கூறி முடிப்பதற்குள் நந்தினி மறுமுறை திடீரென்று தன் கட்டுப்பாட்டையும் மீறி பிரகாஷின் மீதே வாந்தி எடுத்தாள்.

பிறகு அங்கேயே ஒரு நாற்காலியில் சோர்வாக அமர்ந்தாள். நந்தினியினுள் இருக்கும் பயம் அதிகரித்தது. அவள் உடல் படபடக்க தொடங்கியது. நித்யா அவளை ஆசுவாச படுத்திக் கொண்டிருந்தாள்.

'ஹோட்டல்ல டாக்டர் இருப்பாரு... நந்தினியை அவர் கிட்ட கூட்டிட்டு போங்க... நான் ரூமுக்கு போயிட்டு ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்துடறேன்...' என்று பிரகாஷ் கிளம்பினார்.

அந்த உணவக அறையில் இருந்த அனைவரது பார்வையும் இவர்களது மேல் விழுந்தது. அந்த விடுதியின் தலைமை சமையல்காரர் அங்கே வந்து என்னாயிற்று என்று விசாரித்தார்.

நித்யா

'புஃட் பாய்ஸன் ஆயிடுச்சுனு நினைக்கறேன்.' என்றாள். உடனே தலைமை சமையல்காரர் அந்த விடுதியின் மருத்துவரின் அறைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் நந்தினியை சோதனை செய்து விட்டு ஒரு செவிலியரை அழைத்து தனி அறைக்கு நந்தினியை கூட்டி சென்று ஒரு குறிப்பிட்ட சோதனையை செய்ய சொல்லி கட்டளை இட்டார். சோதனை முடிந்த பிறகு நந்தினி அமைதியாக நாற்காலியில் உட்கார்ந்தாள்.

சில நிமிடங்கள் மருத்துவர் அந்த செவிலியரோடு உரையாடிவிட்டு

நந்தினியின் பக்கம் வந்து அமர்ந்து

'கங்கிராட்ஸ்... நீங்க கர்பமா இருக்கீங்க... இது உங்களுக்கு அஞ்சாவது வாரம்... ஆரம்ப காலம்...' என்றார்.

அவர் கூறியதை கேட்டவுடன் நந்தினியிற்கு உள்ளிருக்கும் பயம் அதிகமாகியது. நித்யாவும் நந்தினியும் பதட்டமாக ஒருவருக்கு ஒருவர் விழி பிதுங்கிய நிலையில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நித்யாவின் கணவர் தலையை சொறிந்தவாறே மெதுவாக வெளியே சென்றார்.

இவர்கள் இருவரின் முகபாவனையை பார்த்த மருத்துவர்

'உங்களோட அதிர்ச்சிகரமான சந்தோஷம் எனக்கு புரியுது... நான் சில வைட்டமின் டாப்லெட்ஸ் எழுதி தரேன்... எனக்கு தெரிஞ்ச கைனகாலிஜிஸ்ட் ஒருத்தங்களை ரெஃபேர் பண்றேன்... அவங்க கிட்ட ரெகுலரா போய் செக் அப் பண்ணிக்கோங்க.' என்று கூறிக் கொண்டிருக்கும் போது பிரகாஷ் உள்ளெ வந்தார்.

நந்தினியிற்கு படபடப்பு அதிகமாகியது.

'நித்யா என்னை தாங்கி பிடிச்சிக்க... என்னால இனிமேல் எந்த அதிர்ச்சியையும் தாங்க முடியாது.' - நந்தினி.

'எனக்கே இப்போ ஒரு சப்போர்ட் தேவை படுது நந்து.' - நித்யா.

பிரகாஷ் சோகமாக நந்தினியிடம் சென்று

'என்ன ஆச்சு?' என்று கேட்டார்.

நந்தினி என்ன கூறுவது என்று தெரியாமல் சில நொடிகள் பிரகாஷையே உற்று நோக்கிவிட்டு பிறகு கண்களை மூடி நித்யாவின் மேல் சாய்ந்தாள். பிரகாஷ் இப்பொழுது நித்யாவை பார்த்தார்.

நந்தினியிற்கு என்னவாயிற்று என்பதே அந்த பார்வையின் அர்த்தம்.

நித்யாவும் என்ன கூறுவது என்று தெரியாமல் பிரம்மை பிடித்தது போல பிரகாஷையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லேங்க.' என்று மருத்துவரின் குரல் கேட்டு, அவர் பக்கம் பார்வையை திருப்பினார் பிரகாஷ். அப்போது மருத்துவரின் கைபேசி ஒலித்தது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு காதில் கைபேசியை வைத்து

'ஹலோ... ஒரு நிமிஷம்.' என்று கூறிவிட்டு பிரகாஷை பார்த்து

'நீங்க தான் இவங்க புருஷனா?' என்று கேட்டார்.

'புருஷன்னு சொல்ல முடியாது... ஏன்னா நாங்க ரெண்டு பேரும் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல... ' - பிரகாஷ்.

மருத்துவர் லேசான அதிர்ச்சியை வெளிப் படுத்தி

'இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா?' என்று வினவிவிட்டு, நந்தினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பிரகாஷிடம்

'எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறிங்க?' என்று வினவினார்.

‘டைவர்ஸ் ஆன பிறகு தான் கல்யாணம்.' என்று பிரகாஷ் அளித்த பதிலை கேட்டு குழம்பிய மருத்துவர் யோசனையாய் பிரகாஷிடம் 'கங்கிராட்ஸ்...' என்று கை கொடுத்துவிட்டு

'அவங்க கிட்டையே கேளுங்க அவங்க சொல்லுவாங்க,' என்று நந்தினியை கை காட்டிவிட்டு தன் கைபேசியில் பேசியபடியே அந்த அறையை விட்டு நகர்ந்தார். லேசாக கண்களை திறந்து பிரகாஷ் தன்னை நோக்கி வருவதை பார்த்த நந்தினி சட்டென்று கண்களை மூடி நித்யாவின் மேல் சாய்ந்தாள். நித்யாவும்

'ப்ப்ச்..' என்ற சப்தத்துடன் நந்தினியை முறைத்து பார்த்துவிட்டு, சுற்றி முற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள். யாரும் இல்லை. உடனே பிரகாஷிடம் பார்வையை திருப்பி

'புஃட் பாய்ஸன் ஆயிடுச்சு... ஒன்னும் பயப்படுறபடி இல்லைனு சொன்னாரு... சீக்கிரம் வாங்க அவரு வரத்துக்குள்ள போயிடுவோம்.' என்று படபடத்தாள்.

'ஏன்?' என்று யோசனையாய் கேட்டார் பிரகாஷ்.

'நந்துவுக்கு வீட்டுக்கு போகணும்... டைம் ஆயிடுச்சு.' என்று கூறி சமாளித்தாள் நித்யா.

'ஓஹ்.. சரி' என்று பிரகாஷ் கூறியவுடன் அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

'நீங்க போங்க... நான் நந்தினியை வீட்ல ட்ராப் பண்ணிக்கறேன்.' என்று நித்யா பிரகாஷை அனுப்பிய பிறகு நந்தினியிடம் பதட்டத்துடன்

'என்னடி இது?... இப்போ போய் இப்படி கர்பமாயிட்டு வந்து நிக்கற?... நீயும் ரவியும் ஏன் அப்படி பண்ணீங்க?' என்று கேட்டாள்.

'ஹே... என்ன கேள்வி கேக்கற?... கல்யாணம்னு ஒன்னு ஆனா எல்லா சம்பிரதாயமும் நடந்து தானே ஆகணும்.' - நந்தினி.

'சரி... சேஃப்டியா யாவது இருக்க வேண்டாமா?' - நித்யா.

'இப்படி பிரகாஷ்னு ஒரு கேரக்டர் என் லைஃப்ல என்ட்ரி ஆகும்னு எனக்கு எப்படி தெரியும்?.‘ - நந்தினி.

'இப்போ என்ன பண்றது?' - நித்யா.

'வேற வழி பிரகாஷ் இதையும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.' - நந்தினி.

'ஹே... ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணை ஏத்துக்கறதே பெரிய தியாகம்... இதுல இது வேறையா?... பாவம் டி அந்த மனுஷன்... ஒன்னு பண்ணு... தேவை இல்லாம ஏன் குழப்பம்... பேசாம யாருக்கும் தெரியாம அபார்ட் பண்ணிடலாம்...' - நித்யா.

நித்யா கூறியதை கேட்டவுடன் நந்தினியிற்கு குற்ற உணர்வு அதிகமாகியது. தீவிரமான முகபாவனையோடு நித்யாவிடம்

'ஒரு உயிரை கொன்னு தான் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னா எனக்கு இந்த கல்யாணமே வேணாம்... ' என்றாள்.

மறுபடி நந்தினியை சமாதான படுத்த முனைந்த நித்யாவை அவளின் கணவர் கையமர்த்தி

'நித்யா... போதும்... ஏன் தேவையே இல்லாம மத்தவங்க விஷயத்துல அக்கறை காட்டி உன் மூக்கை உடைச்சுக்கற... அவங்க இஷ்ட படியே விடு.' என்று அவளிடம் கூறியது நந்தினியிற்கு ஒரு அசௌகரியத்தை கொடுத்தது.

அங்கிருந்து கிளம்ப நினைத்தவளை நித்யா கையமர்த்தி தன் கணவனிடம் சில வார்த்தைகள் ஆறுதலாக கூறிவிட்டு நந்தினியை அவரிடமிருந்து விலக்கி தனியே கூட்டிச்சென்று

'சாரி... நமக்குள்ள இருக்கற பாண்டிங் அவருக்கு தெரியாது... நீ தப்பா நினைக்காதே... நான் உன்னை கம்பெல் பண்ணலை... அபார்ட் பண்றது பாவம் தான்... ஒரு குழந்தை நல்லபடியா பொறக்கணும்னா அந்த குழந்தையோட அம்மா சந்தோஷமான சூழல்ல இருக்கணும்... ஒரு பாதுகாப்பான ஆள் கிட்ட இருக்கணும்... இப்போ இந்த வாய்ப்பை வேண்டாம்னு சொல்லிட்டு மறுபடி ரவியோட வாழ்ந்தா உனக்கு சந்தோஷமான சூழல் இருக்குமா... இல்ல ரவியால உனக்கு பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்க முடியும்னு நினைக்கறியா?... அம்மா சைக்கலாஜிக்கலா அபெஃக்ட் ஆனா பொறக்கற குழந்தை ஏதாவது சைக்கலாஜிக்கல் டிபெஃக்ட் ஓட தான் பிறக்கும்... 5 வீக்ஸ் தானே... இது ஒன்னும் பெரிய பாவம் கிடையாது ... ஜஸ்ட் ஒரு மாத்திரை தான்...' என்று கூறிய நித்யாவிடம் நந்தினி

'நித்யா... என்னால உடனே முடிவெடுக்க முடியாது... எனக்கு கொஞ்சம் டைம் கொடு... இப்போ நான் கிளம்பறேன்' என்று அங்கிருந்து கிளம்பினாள்.

வாடகை வாகனத்தில் பயணித்து கொண்டிருக்கும் கருவை கலைக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடனே பயணம் செய்தாள்.

வீட்டில் தன் அறையினுள் நுழையும் போது ரவி நாற்காலியில் அமர்ந்தவாறு மேஜையில் தலைவைத்தபடியே உறங்கி கொண்டிருந்தான். நந்தினி அவனை தொந்தரவு செய்யாமல் உடைகளை மாற்றிவிட்டு படுக்கையில் படுத்தாள். சில நிமிடங்களுக்கு பிறகு ரவியை எழுப்பி படுக்கையில் படுக்க சொல்லலாம் என்று நினைத்து அவனை எழுப்பினாள். ரவி கண்களை கசக்கிய படி அவளை பார்த்தவுடன் சட்டென்று அவளை கட்டிக் கொண்டான். அந்த அணைப்பு அவளிற்கு உள்ளிருக்கும் பயத்தையும் படபடப்பையும் அதிகப் படுத்தியது. செய்வதறியாமல் நந்தினி ஒரு மரக்கட்டையை போல் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்.

'ஏன் லேட்?... வேலை அதிகமா இருந்ததா?' என்று கேட்டான்.

நந்தினி அமைதியாகவே இருந்தாள். ரவி பேசுவதை தொடர்ந்தான்.

'என் கம்பெனிலேருந்து ரிலீவ் ஆயிட்டேன் ... என்னோவோ தெரியல புது வேல கிடைச்சப்போ இருந்த சந்தோஷம் இப்போ இல்ல... பத்து வருஷம் ஒரே கம்பெனி... ஒரே மெஷின்... விட்டுட்டு வரும் போது மனசு கனத்து போச்சு... அப்படியே அத பத்தியே யோசனையா உக்காந்துட்டேனா... எப்போ தூங்குனேனு தெரியலை... நிறைய மனுஷனுங்க எனக்கு துரோகம் பண்ணிருக்காங்க... ஆனா என் மெஷின் எனக்கு துரோகம் பண்ணதே இல்லை... என்னவோ என்னோட நெருங்கிய நண்பனை விட்டுட்டு போற மாதிரி ஒரு பீலிங்... சரி விடு அதான் நீ எனக்கு இருக்கியே... அது போதும்...' என்று ரவி கூறும் போது நந்தினியின் குற்ற உணர்வு அதிகரித்தது. நந்தினி அவன் முகத்தை பார்க்காமல்

'சரி... வாங்க போய் தூங்கலாம்...' என்று தன்னை அவன் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு படுக்கையில் படுத்தாள். ரவியும் படுத்தான். கொஞ்ச நேரம் கழித்து நந்தினியின் கைபேசி ஒலித்தது. அது அவளின் தாயின் அழைப்பு. ரவி நன்றாக உறங்கி கொண்டிருக்கிறான் என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்ட பிறகு அதை ஏற்றுக் கொண்டு

'சொல்லுமா...' என்றாள்.

'நீ கர்ப்பமா இருக்கற விஷயத்தை நித்யா என்கிட்ட சொன்னா... பிரகாஷோட அம்மா நாளைக்கு மறுநாள் காலைல இந்தியா வராங்க... ரிஸீவ் பண்றதுக்கு உன்னையும் அப்பாவையும் அனுப்பலாம்னு தான் ப்ளான்... ஆனா இப்போ வேற வழியில்லை உன் அப்பாவை மட்டும் அனுப்பி ஆகணும்... இன்னும் உனக்கு டைவர்ஸ் ஆகலைன்ற விஷயத்தையே அவங்க எப்படி எடுத்துக்கப் போறாங்கனு தெரியலை... இதுல இந்த பிரஷர் வேறையா?... பிரகாஷுக்கு நீ கர்ப்பமா இருக்கறது தெரியாதுன்னு நித்யா சொன்னா... வேற வழி இல்ல நந்தினி நீ அந்த கருவை கலைச்சு தான் ஆகணும்... இல்லனா டைவர்ஸ் பண்றது ரொம்ப கஷ்டம்.' - பத்மாவதி.

'அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியுமா?' - நந்தினி.

'தெரியும்...' - பத்மாவதி.

'என்னமா? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேசறீங்க... ஒரு உயிர் அதை போய் எப்படி கொல்றது...' - நந்தினி.

'தெரிஞ்சோ தெரியாமலோ விதி நம்மள இந்த மாதிரி சூழ்நிலைக்கு தள்ளிருக்கு... நானும் அப்பாவும் உன் மேல இருக்கற பாசத்துனால தானே நீ வேற நல்ல ஆளை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறோம்... இதே பிரகாஷோட அறிமுகம் கிடைக்கறதுக்கு முன்னாடி நீ கர்ப்பமா ஆயிருந்தீனா நாங்க இந்த கருவை கலைக்க சொல்லிருந்திருப்போமா?... எவ்வளவோ கணவன் மனைவி ஜோடிகள் ப்ளானிங் ற பேர்ல முதல் குழந்தையை அபார்ட் பண்ணிக்கறது இல்லையா... அப்படி இதை நினைச்சு சீக்கிரமா கலைச்சிடு... அது வளர வளர அது மேல உனக்கு இருக்கற பிணைப்பு ரொம்ப அதிகமாகும்... ' - பத்மாவதி.

நந்தினியும் யோசனையாய்

'சரி...' என்றாள்.

'இன்னொரு விஷயம்... அதிர்ஷ்டவசமா நாம இன்னும் இந்த கல்யாணத்தை சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ணலை... கல்யாணத்தோட போஃட்டோ வீடியோ ஆல்பம்ஸ் எல்லாமே நம்ம கைல தான் இருக்கு... இந்த பாயிண்டை வெச்சு வேற ஏதாவது பண்ண முடியுமான்னு வக்கீல் கூட அப்பா பேசிகிட்டு இருக்காரு... அப்புறம் ரவி கிட்ட விஷயத்தை சொல்லிட்டு நாளைக்கே பொட்டி படுக்கையை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்திடு.' - பத்மாவதி.

பத்மாவதியின் பேச்சு நந்தினியின் மனதில் உள்ள கனத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது. நந்தினி தழு தழுத்த குரலில்

'அம்மா... என்னால முடியாதுமா?... நான் அவ்வளோ ஸ்ட்ராங் கிடையாது... எல்லாமே என்னோட தப்பு மா... ரவிக்கு நான் துரோகம் பண்றேன்ற குற்ற உணர்ச்சி என்னை உறுத்திக்கிட்டே இருக்குமா...' என்று தன்னையும் மீறி தேம்பி தேம்பி அழ தொடங்கினாள்.

அப்பொழுது சட்டென்று

'என்னாச்சு?' என்று ரவியின் குரல் கேட்டு திரும்பினாள். பக்கத்தில் ரவி அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் பதட்டத்தில் தன் தாயின் அழைப்பை துண்டித்துவிட்டு, கண்களை துடைத்தவாறே
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
அப்பொழுது சட்டென்று

'என்னாச்சு?' என்று ரவியின் குரல் கேட்டு திரும்பினாள். பக்கத்தில் ரவி அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் பதட்டத்தில் தன் தாயின் அழைப்பை துண்டித்துவிட்டு, கண்களை துடைத்தவாறே

'ஒன்னும் இல்ல...' என்று போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தாள். அந்த அறையில் பரவி இருக்கும் மிதமான ஒளியின் உதவியால் போர்வையின் நூல்களின் இடையே உள்ள துளைகள் வழியாக ரவியை பார்த்தாள். ரவி சில நொடிகள் அவளையே பார்த்துவிட்டு பிறகு படுத்து உறங்கத் தொடங்கினான்.

நந்தினி உறங்க முயற்சி செய்து அவளின் கனமான மனதிடம் தோற்றுப் போனாள். அன்றிரவு தூங்காமல் கழித்தாள் நந்தினி.

மறுநாள் காலையில் உறக்கத்திலிருந்து எழுந்தாள். தூக்க கலக்கத்தில் கடிகாரத்தை பார்த்தாள். அது மணி 8 ஐ காட்டியது. எப்பொழுது உறங்க ஆரம்பித்தோம் என்பதே தெரியவில்லை அவளுக்கு. நந்தினி உறக்கத்திலிருந்து மெதுவாக சுயநினைவுக்கு திரும்ப திரும்ப அவளின் மனதின் கனம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ரவி குளித்து முடித்து புது நிறுவனத்திற்கு செல்ல தயாராகி இருந்தான். நந்தினி எழுந்ததை பார்த்த ரவி அவளிடம்

'நேத்து என்ன ஆச்சு?... நீ ஏன் அழுத?' என்று வினவினான்.

அமைதியாக 'ஒன்னும் இல்ல.' என்றாள்.

சில நொடிகள் அவளை யோசனையாய் பார்த்த ரவி

'என்னோவோ தெரியலை... கொஞ்சம் நாளாவே உனக்கும் எனக்கும் நடுவுல ஒரு பெரிய இடைவெளி இருக்கற மாதிரி தோணுது... நான் இன்னிக்கு புது கம்பெனிக்கு போய் ஜாயின் பண்ண போறேன்... வா நீயும் நானும் கோயிலுக்கு போயிட்டு வரலாம்.' என்றான்.

நந்தினி அவனை பார்க்க முடியாமல் வேறு எங்கோ பார்வையை வைத்தவாறே

'இல்ல... நீங்க போய்ட்டு வாங்க... எனக்கு உடம்பு சரியில்லை.' என்றாள்.

'ஆபிஸ்க்கு லீவ் போட்டுடு... வா டாக்டர் கிட்ட போகலாம்.' - ரவி.

'இல்ல... நீங்க கிளம்புங்க... நான் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பறேன்... இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு...' என்று போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள்.

ரவி கிளம்பியவுடன் அலுவலகத்திற்கு செல்லாமல் நேராக தன் பிறந்த வீட்டிற்கு சென்றாள் நந்தினி. மனதளவில் மிகவும் பலவீனமாக இருந்த நந்தினி தன் தாயிடம்

'நான் இப்போ இமோஷனலா ரொம்ப வீக்கா இருக்கேன்... என்னால ரவியை பாக்க கூட முடியலை... எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு...' என்று அழுதாள்.

அங்கிருந்த நந்தினியின் தந்தை வெங்கடேசன் யாழினியை (நந்தினியின் தங்கை) அழைத்து

'அக்காவை பெட் ரூமுக்கு கூட்டிகிட்டு போய் ஆறுதல் சொல்லிக்கிட்டு இரு.' என்று கூறிவிட்டு, பத்மாவதியை பார்த்து

'நீயும் நானும் இன்னிக்கு ரவி வீட்டுக்கு போய் இந்த விஷயத்தை முடிச்சிட்டு வந்துடுவோம்.' என்றார்.

யாழினியும் நந்தினியை படுக்கை அறைக்கு அழைத்து சென்றாள்.

இப்பொழுது நந்தினியின் மனது தனது சித்தாந்தத்துடன் முழுமையாக சார்ந்திருந்தது. ஆனால் வெளியில் உள்ள சூழல் அவளினுடைய சித்தாந்தத்திற்கு நேர் எதிராக இருப்பது மட்டும் அல்லாமல் அதனின் ஆதிக்கம் அவளிற்கு ஒரு வித மன அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த சூழலை எதிர்க்க முடியாத இயலாமையால்

'நான் தப்பு பண்றேன்... ரவிக்கு பெரிய துரோகம் பண்றேன்... ஒரு உயிரை கொல்ல போறேன்...' என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்த யாழினி

'அக்கா... நீ கில்டியா பீல் பண்ணாத அக்கா... நீ ஒன்னும் தப்பு பண்ணலை... இதெல்லாம் நடக்கறது சகஜம் தான்... நீ கண்டதை எல்லாம் யோசிக்காம உன் மனசை டைவர்ட் பண்ணு...' என்று தொலை இயக்கியை நந்தினியிடம் நீட்டி

'ரிமோட் வெச்சுக்கோ... உனக்கு பிடிச்ச டிவி ப்ரோக்ராமை பாரு...' என்றாள்.

'இல்ல வேணாம்... என்னை கொஞ்ச நேரம் தனியா விடு.' என்று நந்தினி கூறியவுடன் யாழினி அந்த அறையை விட்டு நகர்ந்தாள்.

அவள் சென்றவுடன் யோசித்தவாறே படுக்கையில் படுத்து தன்னை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். சில மணி நேரங்களுக்கு பிறகு விழித்தெழுந்த நந்தினியின் மனநிலையில் ஒரு தெளிவு இருந்தது.

'என்ன நடந்தாலும் பரவாயில்ல... ஒரு உயிரை கொன்னு எனக்கு அப்படி ஒன்னும் இன்னொரு கல்யாணம் வேணாம்னு சொல்லிடலாம்.' என்று முடிவெடுத்தவுடன் பலவீனமான அவளின் மனதில் இப்போது பலம் வந்தது. அதே உத்வேகத்துடன் அந்த அறையின் கதவை நோக்கி நடந்தாள். கதவை நெருங்கும் போது

'நல்ல வேளை அங்கிள், எல்லாம் நல்லபடியா இவ்வளவு சீக்கிரமா முடியும்னு எதிர்பாக்கலை.' என்று நித்யாவின் குரல் கேட்டது, உடனே

'ரவி நல்ல பையன் தான்... என்ன பண்றது...' என்று அவள் தந்தையின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும் போது கதவை திறந்தாள் நந்தினி.

நடுக்கூடத்தில் இருந்த அனைவரும் தங்களின் உரையாடலை பாதியிலேயே நிறுத்திவிட்டு நந்தினியின் மீது தங்களின் பார்வையை பதித்தனர். நந்தினி நடுக்கூடத்தில் ஒவ்வொருவரின் மீதும் தனது பார்வையை படரவிட்டு கடைசியாக தன் தந்தையிடம் நிறுத்தி , மெதுவாக தன் தந்தையின் பக்கத்தில் ரவியின் வீட்டிலிருந்து இருந்து எடுத்து வரப்பட்ட தன் உடமைகளை பார்த்தாள். இவ்வளவு நேரம் தெளிந்த நீரோடை போல் இருந்த தன் மனதில் ஒரு பெரிய கல் விழுந்தது போல உணர்ந்தாள் நந்தினி.

அவளைப் பார்த்த வெங்கடேசன்

'வா நந்தினி... நித்யா இப்போ தான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடி உன்னை டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போறதுக்கு வந்தா... நீ தூங்கிட்டு இருந்தியா... உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நாங்க கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தோம்.' என்றார்.

'என் பொட்டி படுக்கை இங்க எப்படி வந்தது?' என்று யோசனையாய் வினவினாள் நந்தினி.

'நானும் உன் அம்மாவும் ரவி வீட்டுக்கு போய் பக்குவமா எல்லா விஷயத்தையும் எடுத்து சொல்லி சுமூகமான முறையில இந்த பிரச்னையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துட்டோம்... இனிமேல் நீ சுதந்திர பறவை.' - வெங்கடேசன்.

'அங்க என்ன நடந்தது?... அவங்க வீட்ல என்ன சொன்னாங்க?' - நந்தினி.

'மொதல்ல நானும் உன் அம்மாவும் பெரிய பிரச்சனை நடக்குமோனு பயந்துகிட்டே போனோம்... ஆனா அவங்க வீட்ல அப்படி ஒன்னும் பெரிசா பிரச்சனை பண்ணலை... ரவி தான்...' என்று வெங்கடேசன் சொல்ல ஆரம்பிக்கும் பொழுது பத்மாவதி வெங்கடேசனை கையமர்த்தினாள். நந்தினி சந்தேகமாய் பத்மாவதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெங்கடேசனிடம் தன் பார்வையை திருப்பி

'ரவி என்ன சொன்னாரு?' என்று கேட்டாள்.

நித்யா குறுக்கிட்டு

'இதோ பார் நந்து... இப்போ அவரை பத்தி பேசினோம்னா மறுபடி அவர் மேல உனக்கு அனுதாப உணர்ச்சி வரும்... அது உனக்கு தேவை இல்லாத குழப்பத்தை குடுக்கும்... எல்லாம் நல்ல படியா முடிஞ்சு போச்சு... அவ்வளவு தான்... இனிமே நாம தேவை இல்லாம டைவர்ஸ்க்கு அலைய தேவை இல்லை... "எங்க மேரேஜ் ரெஜிஸ்டர் ஆகாததுனால டைவர்ஸ் ஒன்னும் அப்ளை பண்ண வேணாம்... பிரச்சனைனு பண்ணினா நான் தான் பண்ணனும்... இனிமேல் நான் நந்தினி வாழ்க்கைல குறுக்கிட மாட்டேன்... நீங்க தாராளமா அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெயிங்க..." னு ரவியே வாக்குறுதி குடுத்துட்டார்... போதுமா.' என்றாள்.

நித்யாவை பார்த்துவிட்டு நந்தினி வெங்கடேசனிடம் தழு தழுத்த குரலில்

'ரவி கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக்கலையா?' என்று கேட்டார்.

உடனே பத்மாவதி குறுக்கிட்டு

'இதோ பார்... மொதல்ல ரவி சண்டை போட்டாரு... "நான் ஒத்துக்கவே மாட்டேன்... அவளை வந்து என்கிட்டே சொல்ல சொல்லுங்க" உன் மொபைலுக்கு எல்லாம் கால் பண்ணாரு... உன் மொபைலை நல்ல வேளை உன் தங்கச்சி வெச்சுகிட்டு இருந்தா... அப்புறமா நான் தான் "தெரிஞ்சோ தெரியாமலோ என் பொண்ணுக்கு உங்கள பிடிச்சு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா... நீங்க மறுபடி அவளோட பேசுனா நிச்சயமா மனசு மாறிடுவா... ஏன்னா அவளுக்கு ரொம்ப இளகின மனசு... ஒரு அப்பா அம்மாவா நாங்க எடுத்த முடிவு தான் இது... நீங்க உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க என் பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கையை உங்களால குடுக்க முடியுமா?... " னு கேள்வி கேட்டேன்... "நான் அதுக்கு தான் மா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்" கண்கலங்கிட்டே சொன்னாரு... "என் பொண்ணு ராணி மாதிரி வாழணும்னு நான் ஆசை படுறேன்... அவளோட புகுந்த வீட்ல அவளை சரியான மரியாதையோட நடத்தணும்னு நான் நினைக்கறேன்..."’ என்று கூறிக் கொண்டிருக்கும் போது பத்மாவதியின் கண் கலங்கியது. கண்கலங்கிய வாறே பேசுவதை தொடர்ந்தாள் பத்மாவதி.

'"உங்க கால்ல வேணும்னா விழறேன்... ப்ளீஸ் என் பொண்ணுக்கு நாங்க நெனச்ச மாதிரி ஒரு இடம் இப்போ தான் அமைச்சிருக்கு... நீங்க அவளை உண்மையாவே நேசிச்சீங்கனா அவளோட வாழ்க்கையை விட்டுட்டு போய்டுங்க"னு அவர் கால்ல விழுந்தேன்... அப்புறம் ரவி இனிமேல் உங்க பொண்ணு வாழ்க்கைக்கு திரும்பி வரமாட்டேன்னு சத்யம் பண்ணிட்டு அவர் ரூமுக்கு போயி உன் உடமைகளை எடுத்துக்கிட்டு வந்து கொடுத்தாரு.' என்று கண்ணீரை துடைத்தவாறே கூறினாள்.

நந்தினிக்கும் அவளை மீறி கண்களில் நீர் சுரந்தது. அமைதியாக யாழினியை பார்த்து

'என் மொபைலை கொடு.' என்று கேட்டாள். யாழினியும் நந்தினியின் அலைபேசியை அவளிடம் கொடுத்தாள். நந்தினி தன் அலைபேசியை வாங்கி கடவு சொல்லை தட்டெழுதி அழைப்புப் பட்டியலைப் பார்த்தாள். அதில் ரவியிடமிருந்து பத்து தவறவிட்ட அழைப்புகள் வந்திருந்தன. அவனிடமிருந்து ஒரு தகவல் வந்ததிற்கான அறிகுறியும் இருந்தது. அந்த தகவலை திறந்து பார்த்தாள். அதில் "குட் பை" என்று எழுதி இருந்தது. அதை பார்த்தவுடன் அந்த அலைபேசியை அணைத்தவாறே "ரவி...ரவி..." என்று முனகியவாறே கண்களை மூடிக் கொண்டு, நின்று கொண்டிருந்த இடத்திலேயே மெதுவாக அமர்ந்தபடி தேம்பியவாறு அழ தொடங்கினாள். அங்கிருந்த மூவரும் அவளை ஆசுவாச படுத்த முயற்சி செய்தனர்.

நித்யா அவளை மெதுவாக எழுப்பி அவளை அணைத்தவாறே

'ஹே... நந்து... கமான்... எனக்கு உன் பீலிங்ஸ் புரியுது... ரவியோட சாஃப்டர் உன் லைஃப்ல முடிஞ்சு போச்சு... இப்போ அடுத்து நடக்கவேண்டிய விஷயங்களை பாரு.' என்றாள்.

'நித்யா என்னால இந்த கருவை கலைக்கற அளவுக்கு மனசுல திடம் கிடையாது... ப்ளீஸ்...' என்று நந்தினி தழு தழுத்த குரலில் சொன்னாள். அவள் எண்ணங்களை ஆட்டுவிக்கும் கருப்பொருள் மறுபடி அவளை ரவியிடம் திரும்பி செல் என்று மனதை மாற்ற முயற்சி செய்யும் பொழுது அவளின் அலை பேசி ஒலித்தது. அலைபேசியின் திரையை பார்த்தாள். அது பிரகாஷினுடைய எண். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு

'ஹலோ...' என்றாள்.

'ஹலோ... நந்தினி இப்போ உங்க உடம்பு எப்படி இருக்கு?' - பிரகாஷ்.

'ம்ம்ம்... பரவாயில்லை...' - நந்தினி.

'இல்ல... உங்க அப்பா இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணாரு... "எல்லாம் சுமூகமா முடிஞ்சு போச்சு... இனிமேல் எந்த பிரச்னையும் இல்ல"னு சொன்னாரு... நாளைக்கு காலைல நாலு மணிக்கு அம்மா வராங்க... உங்களுக்கு உடம்பு சரியில்லை நாளைக்கு என் அம்மாவை ரிஸீவ் பண்ணறதுக்கு உங்களை கூட்டிகிட்டு வரத்துக்கு முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்றேன்... நீங்க ரிகவர் ஆகலைனா உங்களை கூட்டிகிட்டு வர்றது கஷ்டம்ன்னு உங்கப்பா சொன்னாரு... அப்போ நாளைக்கு உங்களால வர முடியுமா?' - பிரகாஷ்.

நந்தினிக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். பக்கத்தில் இருந்த நித்யா நந்தினியிடம்

'என்னாச்சு?' என்று யோசனையாய் கேட்க, நந்தினியும் பிரகாஷ் கூறியதை நித்யாவிடம் கூறினாள்.

'நான் அவர் கிட்ட பேசிக்கறேன்.' என்று அவளின் அலைபேசியை வாங்கி கொண்டு பிரகாஷிடம் பேசத் தொடங்கினாள் நித்யா.

'ஹை... பிரகாஷ்... திஸ் ஐஸ் நித்யா... அவ இன்னும் புஃல்லா ரீகவர் ஆகல...' - நித்யா.

'.....' - பிரகாஷ்.

'நோ... நோ... இட்ஸ் ஓகே ... அது ... அது... வந்து... வேணாம்... பிரகாஷ்... நாங்க ஆல்மோஸ்ட் வீட்லேருந்து கிளம்பிட்டோம்... நீங்க வேண்டாம்...' - நித்யா.

'.....' - பிரகாஷ்.

'நோ... பிரகாஷ் ஒன் வீக் ஆவது டைம் குடுத்து பாருங்க... இப்போ போறது இவங்களோட பேமிலி டாக்டர் தான்... ஒரு வாரத்துக்கு அப்புறமும் உடம்பு சரி ஆகலைன்னா நாம நீங்க சொல்ற டாக்டரை அப்ரோச் பண்ணலாம்...' - நித்யா.

'.....' - பிரகாஷ்.

'ஓகே... பை.' என்று நித்யா கூறிவிட்டு நந்தினியிடம் அலைபேசியை கொடுத்து 'பிரகாஷ் லைன்ல இருக்காரு.' என்றாள்.

நந்தினியும் அதை பெற்றுக் கொண்டு

'ஹலோ...' என்றாள்.

'நந்தினி இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோங்க... நாளைக்கு உங்களை நல்ல டாக்டர் கிட்ட நான் கூட்டிகிட்ட போறேன்.' - பிரகாஷ்.

நந்தினி திகைத்தவாறு

'நோ... பிரகாஷ்... நாளைக்கு உங்க அம்மா வரும்போது எதுக்கு டாக்டர் கிட்ட போகணும்.. அது சென்டிமென்டலா நல்லா இருக்காது... இன்னிக்கு நித்யாவோட டாக்டர்கிட்ட போறேன்... ஒரு த்ரீ டேஸ் பாப்போம் இல்லனா நீங்க சொல்ற டாக்டர் கிட்டேயே போவோம்...' - நந்தினி.

'ஓகே... நந்தினி ஸீ யூ டுமாரோ... பை.' - பிரகாஷ்.

அந்த அழைப்பை துண்டித்து விட்டு நித்யாவிடம்

'எனக்கு கருவை கலைக்கறதுக்கு மனசு வரமாட்டேங்குது... ஏதோ ஒரு போஃர்ஸ் என்னையும் மீறி என்னை இந்த பாவ செயலை செய்ய வெக்குது...' என்றாள்.

'ஹே... கம்மான்... வேற வழியில்லை இந்த கருவை கலைச்சு தான் ஆகணும்... இதுக்கப்புறமா உனக்கு கிடைக்க போற வாழ்க்கையை கொஞ்சம் நெனச்சு பாரு... எனக்கும் உனக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னே தெரியலை... அதுக்கு இப்போ நேரமும் இல்லை... சீக்கிரமா வா... டாக்டர் ஜெய் னு என்னோட ஹஸ்பண்டுக்கு தெரிஞ்ச ஒரு கைனகாலிஜிஸ்ட் இருக்காரு... இப்போ அவர்கிட்ட தான் போறோம்...' - நித்யா.

'லேடி டாக்டர் யாரும் இல்லையா?' என்று பத்மாவதி குறுக்கிட்டு கேட்டாள்.

'இல்லமா... அபார்ஷன் பண்ண போறோம்... இது ரொம்ப சென்சிடிவ் ப்ராசெஸ் இல்லையா?... ஹைஜீனிக்கா இருக்கணும்... முன் பின் தெரியாத டாக்டர்ஸ் கிட்ட போறதை விட தெரிஞ்சவங்க கிட்ட போறது ரொம்ப சேஃப் மா... இந்த டாக்டர் என் ஹஸ்பண்டோட பெஸ்ட் ப்ரண்ட்... நீங்க பயப்படாதீங்க...' என்று நித்யா கூறியவுடன் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

மருத்துவமனைக்கு சென்று நித்யாவும் நந்தினியும் நித்யாவின் கணவர் பரிந்துரைத்த மருத்துவரை சந்தித்தனர்.

'ஆக்சுவலா அஸ் பெர் திஸ் ஹாஸ்பிடல் ரூல்ஸ் அபார்ஷன் பண்றதுக்கு ப்ராப்பர் ரீஸன் கொடுக்கணும்... அண்ட் யூ ஹாவ் டு சப்மிட் யுவர் மேரேஜ் சர்ட்டிபிகேட் ஆர் மேரேஜ் போஃட்டோ... நீங்களும் உங்க ஹஸ்பண்டும் ம்யூச்சுவலா அக்ரீ பண்ணி ஒரு பாஃர்ம்ல கையெழுத்து போடணும்... அப்படி நாம ப்ராப்பர் ரூட்ல போகலைன்னா தென் இப் எனி ப்ராப்லம்ஸ் பிகாஸ் ஆஃப் திஸ் அபார்ஷன்... இந்த ஹாஸ்பிடல் அதுக்கு பொறுப்பு ஏற்காது... இப்போ இதை என்னோட ஓன் ரிஸ்க்ல பண்றேன்... இன்கேஸ் ஏதாவது ஆச்சுன்னா நானும் பொறுப்பேத்துக்க முடியாது... டு யூ அக்ரீ பார் தட்...' என்று மருத்துவர் ஜெய் நந்தினியிடம் கேட்டார்.

அவர் கூறியதை கேட்டவுடன் நந்தினியினுள் பயம் துரிதமாய் வளர்ந்தது. மூச்சும் வாங்கியது. மெதுவாக நித்யாவை திரும்பி பார்த்தாள். நித்யா சில நொடிகள் அமைதியாக நந்தினியை பார்த்துவிட்டு மருத்துவரிடம் திரும்பி

'அப்படி ஏதாவது பெரிய ரிஸ்க் இருக்கா டாக்டர்?' என்று கேட்டாள்.

'நோ... பில்ஸ் எடுத்துக்கறதுனால பெரிய ரிஸ்க் எதுவும் வராது... அவங்களுக்கு வேற ஏதாவது ப்ராப்லம்ஸ் இருந்து அதை இது தூண்டிவிட்டுருமோன்னு தான் பயமா இருக்கு... அது நூத்துல ஒருத்தருக்கு தான் அப்படி நடக்கும்... அவங்கள ரொம்ப சென்சிட்டிவா இருக்கா விடாம ரொம்ப கேரிங்கா இருக்கற ஆளு பக்கத்துலையே இருக்கணும்... ஏன் சொல்றேன்னா... இந்த பில்ஸ் எடுத்துகிட்ட பிறகு ஹேவி ப்ளீடிங் இருக்கும்... வாமிட்டிங் சென்சேஷன் இருக்கும்... தலைவலிக்கும்... ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டேன்ட்...' என்று கூறிவிட்டு தன் மேஜையில் உள்ள ஒலிப்பான் கருவியின் பொத்தானை அழுத்தினார் மருத்துவர் ஜெய். அவர் அழுத்திய சில நொடிகளில் ஒரு செவிலியர் உள்ளே நுழைந்தார். செவிலியரிடம் மருத்துவர்

'நம்ம நான் இன்வெண்ட்ரி ஸ்டாக்லேருந்து ஆர். யூ 486ஸை எடுத்துட்டு வாங்க.' என்று கூறினார். நந்தினியிற்கு உள்ளெ படபடப்பு அதிகமாகியது. அதை உணர்ந்த மருத்துவர் நந்தினியிடம்

'நீங்க இவ்வளவு பயப்படணும்னு அவசியமே இல்ல... ஒரு நாளைக்கு நெறைய அபார்ஷன் கேஸஸ் வருது... அஸ் பர் சர்வே உலகத்துல முப்பது மில்லியன் அபார்ஷன் இந்த ப்ரொசீஜர்ல தான் வருஷாவருஷம் நடந்து கிட்டு இருக்கு... இட் ஐஸ் க்வைட் சேஃப்... நான் ஜஸ்ட் பாஃர்மலா தான் வார்ன் பண்ணினேன்...' என்று கூறிவிட்டு நித்யாவிடம்

'நீங்க அவங்ககிட்ட பேசி மைண்டை டைவர்ட் பண்ணுங்க.' என்றார்.

நித்யாவும் 'ஹே நந்து... கூல்... ஒன்னும் ஆகாது... நான் இருக்கேன்.' என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களுக்கு '

அந்த செவிலியர் இளஞ்சிவப்பு நிறத்தில் சில மாத்திரைகளை எடுத்து வந்து கொடுத்தாள். அதில் ஒரு மாத்திரையை கையில் எடுத்த மருத்துவர் நந்தினியிடம்

'இத சாப்பிடுங்க... 24 அவர்ஸ் கழிச்சு வேற ஒரு மாத்திரை இருக்கு... அதை எடுத்துகிட்டீங்கன்னா உங்களோட கர்பப்பை சுருங்கி விரிய ஆரம்பிச்சு அதிகமா ப்ளீட் ஆகும்... க்ராம்பிங் இருக்கும்... நார்மலா பதினஞ்சு நாள் வரைக்கும் ப்ளீடிங் இருக்கும்... ' என்று கூறிவிட்டு நித்யாவிடம்

'இந்த பதினஞ்சு நாளும் நீங்க கூட இருந்து ஆறுதல் சொல்லிகிட்டே இருங்க... பிகாஸ் இந்த பதினஞ்சு நாளும் அவங்க சைக்கலாஜிக்கலா அஃபெக்ட் ஆகறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு ...'என்று சொன்னார்.

நித்யா சற்றே தயக்கமாக

'ஓ.., நான் இன்னும் மூணு நாள்ல ஆஸ்திரேலியா போறேன்... ஆனா ஷ்யூர் அவங்க அம்மா கூட இருப்பாங்க.' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தினியிற்கு

'பிரகாஷ் அம்மா வேற வராங்க... இந்த மாதிரி சூழ்நிலைல நான் எப்படி அவங்க கிட்ட ஒழுங்கா நடந்துக்க முடியும்...' என்ற யோசனை அவளை படபடக்க செய்தது.

மருத்துவர் நித்யாவிடம் 'ஓகே தென் நோ இஷ்யூஸ்.' என்று சொல்லிவிட்டு நந்தினியிடம் மாத்திரையை கொடுத்தார்.

அந்த மாத்திரையை வாங்கும் பொழுதே ஒரு வித நடுக்கம் அவள் உடலை ஆட்கொண்டது.

'பயப்படாதீங்க...' என்று மருத்துவர் கூறிய பிறகு வலுக்கட்டாயமாக தன் பயத்தையும் மீறி அந்த மாத்திரையை வாயினுள் போட்டு பக்கத்தில் இருந்த குவளையில் இருந்த தண்ணீரை குடித்து, அந்த மாத்திரையை விழுங்கினாள்.
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
'பயப்படாதீங்க...' என்று மருத்துவர் கூறிய பிறகு வலுக்கட்டாயமாக தன் பயத்தையும் மீறி அந்த மாத்திரையை வாயினுள் போட்டு பக்கத்தில் இருந்த குவளையில் இருந்த தண்ணீரை குடித்து, அந்த மாத்திரையை விழுங்கினாள்.

விழுங்கியவுடன் நந்தினியின் குற்றவுணர்வின் விகிதம் அதிகமாகி நித்யாவின் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழ தொடங்கினாள். நித்யாவும்

'ஒன்னும் இல்ல... வருங்காலத்துல பிரகாஷ் கூட உன் வாழ்க்கையை கற்பனை பண்ணி பாரு... நீயும் அவரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு யு.எஸ்ல சந்தோஷமா இருக்கப்போறீங்க... ஒரு வருஷம் கழிச்சு உங்க ரெண்டு பேருக்கும் அழகான ஆண் குழந்தை பிறக்கும்... அந்த குழந்தை இந்த கனமான கடந்தகாலத்தை மறக்கடிச்சிடும்... அப்புறம் இன்னொரு பெண் குழந்தை... ரெண்டு குழந்தைகளையும் நல்ல படியா படிக்க வெச்சு ஒரு நல்ல வருங்காலத்தை நீயும் பிரகாஷும் அமைச்சு குடுப்பீங்க... ஒரு நாள் உன் பசங்க பெரிய சாதனை படைச்சு ஒரு பொது மேடைல பேசும் போது அம்மா தான் எங்க உயிர்னு சொல்லி உன்னை பெருமை படுத்தற தருணம் நிச்சயமா நடக்கும்...' என்று ஆசுவாச படுத்திக் கொண்டிருக்கும் பொழுது, நந்தினியின் குற்றவுணர்வு மெதுவாக குறைந்தது. நித்யா கூறியதை கேட்டு அவளின் மனம் மெதுவாக அவளின் சித்தாந்தத்திலிருந்து விடுபட்டு ஒரு சந்தோஷமான கற்பனை உலகில் மூழ்கியது. அப்போது நந்தினியின் நெஞ்சு அடைத்தது. சட்டென்று நெஞ்சை பிடித்துக் கொண்டு

'நித்யா... என் நெஞ்சு வலிக்குது.' என்று வலியில் கூறியவாறு மேஜையில் சாய்ந்தாள். நித்யாவும் பதட்டமாக 'டாக்டர்...' என்று கத்தினாள். மருத்துவரும் நந்தினியை நெருங்கி

'ஒன்னும் இல்ல... மெதுவா நிமிந்து உக்காருங்க.' என்றார்.

அந்த வலியையும் மீறி நிமிர்ந்து உட்க்கார்ந்தாள் நந்தினி. உட்கார்ந்த அடுத்த நொடியே அந்த மேஜையின் மீது வாந்தி எடுத்தாள். அதில் அவள் விழுங்கிய மாத்திரையும் வந்தது. அதை பார்த்த மருத்துவர் பக்கத்தில் இருந்த செவிலியரிடம் இன்னொரு மாத்திரையை வாங்கி நந்தினியிடம்

'இட் யூஷ்வலி ஹாப்பன்ஸ்... இந்தாங்க இன்னொரு வாட்டி மாத்திரையை போட்டுக்கோங்க...' என்று குடுத்தார். நந்தினி குழம்பிய மன நிலையில் அந்த மாத்திரையை விழுங்கினாள். அவள் விழுங்கிய அடுத்த கனமே அவள் உடம்பு அந்த மாத்திரையை மட்டும் வெளியே கக்கியது. இரண்டு மூன்று தடவை மருத்துவர் மாத்திரை கொடுத்தும் நந்தினியின் உடம்பு அதை ஏற்க மறுத்து வெளியே கக்கியது. பொறுமையிழந்த மருத்துவர் செவிலியரிடம் தன்னையும் மீறி கோவமாக

'மிஸோ பிரிஸ்டோல் டேப்லெட்டையும், இபோப்ரோபின் டேப்லெட்டையும் எடுத்துக்கிட்டு வாம்மா.' என்று சத்தமாக கூறினார்.

சில நிமிடங்களுக்கு பிறகு அந்த செவிலியர் மருத்துவர் கூறிய மாத்திரைகளை கொடுத்தாள். அதே பெற்றுக் கொண்டு அவர் நந்தினியிடம்

'இந்த டேப்லட்டை மொதல்ல சாப்பிடுங்க... அரை மணி நேரம் கழிச்சு இந்த நாலு டேப்லெட்டை நாக்குக்கு அடியில வெச்சுக்கணும்... இன்னொரு அரை மணி நேரத்துக்கு பிறகு அந்த நாலு டேப்லெட்டையும் வெளிய துப்பிடணும்... முழுங்கக் கூடாது.' என்று கூறிவிட்டு ஒரு மாத்திரையை குடுத்தார். நந்தினி செய்வதறியாமல் அந்த மாத்திரையை விழுங்கினாள். அரைமணிநேரம் கழிந்தது. அவள் அந்த மாத்திரையை கக்கவில்லை. அந்த மாத்திரையை அவளின் உடம்பு ஏற்றுக் கொண்டு விட்டது. பிறகு மருத்துவர் நான்கு மாத்திரைகளை அவளிடம் குடுத்து

'இதை நாக்குக்கு அடியில அரை மணிநேரம் வெச்சுக்கோங்க... அப்புறம் வெளியே துப்பிடுங்க... முழுங்கக் கூடாது.' என்றார். நந்தினியும் மருத்துவர் கூறியது போல செய்தாள். இருபது நிமிடங்கள் கழிந்தது. மருத்துவர் நந்தினியின் அருகில் சென்று அவளிடம்

'ஐ திங்க் இது கண்டிப்பா வொர்க் ஆகும்.' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது நந்தினி மருத்துவரின் முகத்தின் மீதே வாந்தி எடுத்தாள். அதில் நாக்கின் அடியில் இருந்த மாத்திரைகள் மட்டும் வந்திருந்தன. இதை சற்றும் எதிர்பாராத மருத்துவர் மின்கலம் செயலிழந்த பொம்மையை போல் அப்படியே சில நொடிகள் பிரம்மை பிடித்து அமர்ந்திருந்தார். பக்கத்தில் இருந்த செவிலியர் மருத்துவரை கைதாங்களாக கழிவறைக்கு கூட்டிச்சென்றாள். ஒரு குட்டி குளியலை போட்டுவிட்டு மறுபடியும் நந்தினியிடம் வந்த அந்த மருத்துவரிடம் நித்யா

'மொதல்ல என்ன மாத்திரை குடுத்தீங்க?... அது இவ எடுத்த வாமிட்ல வரலியே.' என்றாள்.

'அது பைன் கில்லர்... ஒரு மாத்திரை உள்ள போனதுனால ஒன்னும் பெரிய எபெஃக்ட் இருக்காது.' என்று நித்யாவிடம் லேசான பதட்டத்துடன் கூறிவிட்டு பக்கத்தில் இருந்த செவிலியரிடம்

‘மறுபடி இன்னொரு நாலு மாத்திரையை குடும்மா.' என்று கேட்டு வாங்கி கொண்டு நந்தினியிடம்

'முன்னாடி குடுத்த அதே நாலு டேப்லேட்ஸ் தான்... மறுபடி நாக்குக்கு அடில வெச்சுக்கோங்க... அரை மணி நேரம் கழிச்சு உங்களுக்கு வாந்தி வந்ததுனா கூட பிரச்சனை இல்லை... ஆனா அரை மணிநேரத்துக்கு முன்னாடியே வாந்தி எடுத்தீங்கனா இந்த மாத்திரை வேலை செய்யாதுன்னு அர்த்தம்.' என்று சொல்லிவிட்டு, அவள் கையில் மாத்திரைகளை கொடுத்த அடுத்த கணமே நந்தினியிடமிருந்து ஐந்தடி தள்ளி நின்றார். நந்தினியும் மறுமுறை நாக்கின் அடியில் வைத்துக் கொண்டாள். பத்து நிமிடத்திற்கு பிறகு மறுபடி வாந்தி எடுத்தாள். அந்த நான்கு மாத்திரைகளும் வெளியே விழுந்தது.

வாந்தியெடுத்த பிறகு நந்தினி பயங்கரமாக மூச்சு வாங்கிய நிலையில் தன் தலையை பிடித்துக் கொண்டு சோர்வாக நித்யாவின் தோளில் சாய்ந்தபடி

'இனிமேல் என்னால முடியாது நித்யா.' என்று கூறினாள்.

இதை பார்த்த மருத்துவர் பக்கத்தில் இருந்த செவிலியரிடம்

'ஹவுஸ் கீப்பிங்கை கூப்பிடு.' என்று சொல்லிவிட்டு பதட்டமாக வெளியே சென்றார். அவர் வெளியே சென்றவுடன் நித்யா அந்த செவிலியரிடம்

'ஏன் ரொம்ப டென்க்ஷனா இருக்காரு?' என்று கேட்டாள்.

'இல்ல... அவர் உங்களுக்காக தான் ஒன் ஹவர் முன்னாடியே வந்தாரு... இப்போ வெளியில பேஷண்ட்ஸ் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க... அதுவும் இல்லாம இந்த கன்சல்டேஷன் இந்த ஹாஸ்பிடல் அக்கவுண்ட்ல வராது... இது கிட்டத்தட்ட ஒரு இல்லீகல் அபார்ஷன்... இது மேனேஜ்மன்டுக்கு தெரிய வந்துச்சுனா அவருக்கு தான் பிரச்சனை... அதான் டென்க்ஷனா இருக்காரு... இப்போ வெளியே போய் ஸ்மோக் பண்ணிட்டு ஒரு பைவ் மினிட்ஸ் ல வந்துருவாரு.' என்றாள்.

பிறகு அந்த செவிலியர் வெளியே சென்று ஒரு பெண்மணியை அழைத்து வந்தாள். அந்த பெண்மணி அறையை சுத்தம் செய்து விட்டு கிளம்பிய ஐந்து நிமிடத்தில் லேசான பதட்டத்துடன் உள்ளெ வந்த மருத்துவர் நித்யாவிடம்

'இப்போ நான் அவுட் பேஷண்ட்ஸை செக் பண்ணனும்... நீங்க உள்ள ட்ரீட்மெண்ட் ரூமுக்கு போயிடுங்க... இன்னொரு நாலு டேப்லெட் அதை நீங்க உள்ள... ' என்று முழுமையாக அந்த வாக்கியத்தை பேசிமுடிக்காமல் தலையை சொறிந்தவாறே சில நொடிகள் யோசனையுடன் பக்கத்தில் இருந்த செவிலியரை பார்த்து

'இதோ பாரும்மா... அவங்களை உள்ள கூட்டிகிட்டு போய் வெஜினல் மிஸோபிரிஸ்டோல் டேப்லெட்டை ஜென்டிலா இன்ஸெர்ட் பண்ணு...' என்று கூறிவிட்டு நித்யாவிடம்

'இந்த டேப்லட் உள்ள போன பிறகு மூணு மணிநேரத்துக்குள்ள அவங்க கர்ப்பப்பை ரொம்ப வேகமா சுருங்கி விரிய ஆரம்பிக்கும்... அப்படி ஆகும்போது என்டோமெட்ரியம் பிரேக் ஆகும்... அது தான் ரத்தமா வெளிய வரும்..' என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போது நித்யா சந்தேகமாய்

'என்டோமெட்ரியம் னா என்ன?' என்று கேட்டாள்.

'அது கர்ப்பப்பையை சுத்தி கொழ கொழன்னு இருக்கற பிளட் லைனிங்... அது தான் உள்ள இருக்கற குழந்தைக்கும் அம்மாவுக்கும் கனெக்ஷன் கொடுக்கற பாலம்... இது பிரேக் ஆயுடுச்சுனா உள்ள இருக்கற கரு இறந்து போய் ப்ளீடிங் ஆகும் போது வெளியே வந்துடும்.' என்று மருத்துவர் கூறிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த நந்தினியால் மேற்கொண்டு கேட்க முடியவில்லை, தன் இரு காதுகளையும் மூடிக் கொண்டு

'ப்ளீஸ் டாக்டர்... இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க.' என்றாள்.

அவளை பார்த்த டாக்டர்

'சாரி... டூ டேஸ் கழிச்சு என்னை வந்து பாருங்க... ஒரு அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட் பண்ணிடுவோம்.' என்று நந்தினியிடம் கூறிவிட்டு பக்கத்தில் இருந்த செவிலியரிடம் 'உள்ள கூட்டிகிட்டு போம்மா...' என்று கூறியவுடன், செவிலியருடன் நித்யாவும் நந்தினியும் சிகிச்சை அறைக்கு சென்றனர். அங்கு நந்தினியிடம்

'இந்த நாலு டேப்ளேஸ்ட்டை உங்க பிறப்பு உறுப்பு குள்ள வைக்கணும்... நீங்க பாத்ரூம் போயிட்டு வந்துடுங்க.' என்றாள். நந்தினி கழிவறைக்குச் சென்றுவிட்டு வரும்பொழுதே தான் செய்வது சரியா தவறா என்று குழம்பியவாறு வெளியே வந்தாள். அதே குழம்பிய மனநிலையில் அந்த சிகிச்சைக்கு ஒத்துழைத்தாள். செவிலியர் சிகிச்சையை முடித்த பிறகு நந்தினியிடம்

'அரை மணி நேரம் படுத்துட்டு அப்புறம் நீங்க கிளம்புங்க... வீட்டுக்கு ரெண்டு மணி நேரத்துக்குள்ள போயிடுங்க... அதுக்கு மேல உங்களுக்கு க்ராம்ப்பிங் வர ஆரம்பிச்சுடும்... ஒரு வேளை ப்ளீடிங் இல்லாம மாத்திரை வெளியே வந்திருச்சுனா மறுபடி நீங்களே அதை உள்ளுக்குள்ள இன்ஸெர்ட் பண்ணிக்கோங்க.' என்று கூறிவிட்டு சில மாத்திரைகளை நித்யாவிடம் குடுத்துவிட்டு போனாள். அரை மணிநேரம் கழித்து நித்யாவும் நந்தினியும் புறப்பட்டனர்.

வீட்டிற்கு சென்றவுடன் நித்யா நடந்த விஷயங்களை நந்தினியின் தாயிடம் கூறினாள்.

'அம்மா நீங்க கூடவே இருங்க... மனசுக்கு ஆறுதலா ஏதாவது பேசிக்கிட்டே இருங்க.' - நித்யா.

'சரிம்மா... நாளைக்கு பிரகாஷ் ஓட அம்மாவை ரிஸீவ் பண்றதுக்கு நானும் அவரும் போறதா தான் இருந்தது... நான் யாழினியை அவர் கூட அனுப்பிகிறேன்... உன் உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் மா...' - பத்மாவதி.

'சே...சே... இது நான் செய்யற உதவி கிடையாது... இது என்னோட நன்றி கடன்... இவளுக்கு நல்ல படியா வாழ்க்கை அமஞ்சிதுன்னா எனக்கு அதுவே போதும்... நான் நாளைக்கு வந்து பாக்கறேன்.' என்று கூறிவிட்டு அவர்கள் இருவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு சென்றாள் நித்யா.

அன்று இரவு முழுக்க உடம்பில் தசை பிடிப்புகளால் உச்சமான வலியை உணர்ந்தாள். மருத்துவர் கூறியது போல திசுக்களாக ரத்தமும் வடிந்தது. அந்த இரவு முழுக்க வலியும் வேதனையாகவே கழிந்தது. என்ன தான் அவளினுடைய தாயார் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறினாலும் நந்தினியின் மனதில் தான் தனிமை படுத்தப்பட்டதை போல ஒரு உணர்வு ஆட்கொண்டிருந்தது.

மறுநாள்

கண்களை மெதுவாக திறந்தாள். அவள் அறை முழுக்க காலை சூரியனின் ஒளி பரவி இருந்தது. பயங்கர தண்ணீர் தாகமாக இருந்தது அவளுக்கு. அன்று இரவு முழுக்க அவளின் உடம்பு மோசமான வலிகளை மேற்கொண்டதால் தான் மிகவும் பலவீனமாக இருப்பதாய் உணர்ந்தாள்.

'யாரவது இருக்கீங்களா...' என்று கத்துவதற்கு கூட அவளிடம் தெம்பில்லை. மெதுவாக அவள் படுத்திருந்த கட்டிலை பிடித்துக் கொண்டு எழ முயற்சி செய்யும் போது அடிவயிற்றில் லேசான தசை பிடிப்பை உணர்ந்தாள். அந்த வலி அன்றிரவு திசுக்களாக ரத்தம் வடிந்ததை நினைவூட்டியது.

'அது கர்ப்பப்பையை சுத்தி கொழ கொழன்னு இருக்கற பிளட் லைனிங்... அது தான் உள்ள இருக்கற குழந்தைக்கும் அம்மாவுக்கும் கனெக்ஷன் கொடுக்கற பாலம்... இது பிரேக் ஆயுடுச்சுனா உள்ள இருக்கற கரு இறந்து போய் ப்ளீடிங் ஆகும் போது வெளியே வந்துடும்.' என்று மருத்துவர் கூறியதை அவள் சிந்தித்து பார்த்தாள். தன் வயிற்றுள் இருந்த கரு இறந்து வெளியே வந்து விட்டது என்பதை உணர்ந்த அவளின் மனது ரணமாக வலித்தது. அதை அவள் சத்தமான அழுகையாக வெளிப்படுத்த முனைந்த போது அவளின் வாயின் தசைகள் இருகிப் பிடித்துக் கொண்டன.

வேகமாக நடந்து சென்று கதவை திறந்து யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று நடக்க முனைத்தவளின் கெண்டைத்தசை பிடித்துக் கொண்டது. அப்படியே தரையில் மெதுவாக படுத்து கொண்டு கண்களை மூடி

'நந்தினி... பொறுமையா இரு... டென்ஷன் ஆகாதே... ரிலாக்ஸ் யுவர்செல்ஃப்...' என்று தன்னை தானே ஆசுவாச படுத்திக்க கொண்டாள். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தசை பிடிப்புகள் மெதுவாக விலகின. நிதானமான நந்தினியிற்கு தாகம் அதிகரித்தது. அந்த அறையில் உள்ள ஒரு மேஜையில் தண்ணீர் குடுவையை பார்த்தாள். நிதானமாக அதை நோக்கி நடந்து மடக் மடக்கென்று அந்த குடுவையில் இருந்த தண்ணீர் மொத்தத்தையும் குடித்து முடித்தாள். குடித்து முடித்த சில நொடிகளில் அவளுக்கு பசி எடுக்கத் தொடங்கியது. அந்த பசி மெதுவாக அதன் உச்சத்தை எட்டியது. நந்தினி பொறுமை காக்காமல் நீண்ட நாள் பசியில் இருந்த குரங்கு போல அந்த அறையில் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா என்று தேடினாள். அங்கு எதுவும் இல்லை. உடனே வேகமாக அந்த அறையின் கதவை திறந்தாள். அவளின் பசி மரியாதை, கௌரவம் போன்ற நற்பண்புகளை உடைத்தெறிந்து உள்ளிருக்கும் மிருகத்தை வெளிக் கொணர்ந்தது. அங்கு யார் வந்திருக்கிறார்கள் எவ்வளவு பேர் அமர்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் சற்றும் உணராமல் குரங்கு போல தன் இரையை தேடினாள்.

'ஹே... நந்து... நான் சங்கீ டி...'

'என்ன மா ஆச்சு?'

'நந்தினி வாட் ஹாப்பேண்ட்?... என் அம்மா வந்திருக்காங்க?'

என்று அந்த அறையில் இருந்த நபர்களின் பேச்சு சத்தத்தை பொருட்படுத்தாமல் ஏதாவது சாப்பிடுவதற்கு கிடைக்கிறதா என்று தேடினாள். பழம் வகைகள், முந்திரி மற்றும் பாதாம் இனிப்பு வகைகளை ஒரு தட்டில் ஒருவரின் கை ஏந்திக் கொண்டிருப்பது அவள் கண்ணில் தென்பட்டது. அதை குரங்கு போல தாவி பிடுங்கி கட கட வென பழங்களையும் இனிப்பு வகைகளையும் வாயினுள் திணித்தாள். அதை சாப்பிட்டு முடித்தும் அவளின் பசி ஆறவில்லை நேராக சமையல் அறைக்கு சென்றாள். அங்கு ஒரு பெரிய கூடையில் நிறைய பழவகைகள் இருந்தன. அப்படியே குரங்கு போல தாவி மொத்த பழவகைகளையும் உண்டு முடித்தாள், மூச்சு வாங்கியது. ஒரு நிமிடத்திற்கு பிறகு நிதானமானாள். மெதுவாக அந்தமிருகம் அடங்கி சுயநினைவு திரும்பியது. சுற்றும் முற்றும் பார்த்தாள். அனைவரும் அவளை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நந்தினி தனது பார்வையை தன்னை சுற்றி நிற்பவர்கள் ஒவ்வொருவர் மீதும் படரவிட்டாள். அதில் தனக்கு கொஞ்சம் கூட பரிச்சயமே இல்லாத ஒரு பெண்மணி தன்னை தீவிரமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். அந்த பெண்மணியின் பக்கத்தில் பிரகாஷ் நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன்

அவர்தான் பிரகாஷின் தாயார் அவந்திகா என்பதை யூகித்தாள். அப்படி யூகித்தவுடன் அவளினுள்

'எந்த தப்பும் பண்ணாத ரவியோட உறவை அறுத்துட்டு வந்ததே பெரிய தப்பு... ஒரு பாவமும் அறியாத அந்த சின்ன கரு என்ன தப்பு பண்ணிச்சு?... அநியாயமா கொன்னுட்டியே?' என்று ஒரு கேள்வி அவளினுள் எழுந்தது. உடனே சத்தமாக அழ தொடங்கினாள்.

அதை பார்த்து பதட்டமடைந்த வெங்கடேசன் திரு திருவென்று முழித்தவாறே பக்கத்தில் நின்று கொண்டிருந்த சங்கீதாவிடம்

'கொஞ்சம் அவளை கூட்டிகிட்டு போம்மா.' என்றார்.

சங்கீதாவும் நந்தினியை கைத்தாங்கலாக கூட்டிச் செல்லும் போது உடன் யாழினியும் செல்ல முற்பட்டாள். அப்பொழுது வெங்கடேசன் யாழினியை தடுத்து நிறுத்தி

'யாழினி நீ பிரகாஷையும் அவங்க அம்மாவையும் உன் ரூமுக்கு கூட்டிகிட்டு போய் பேசிகிட்டு இரு.' என்று அவளிடம் கூறிவிட்டு பிரகாஷின் அம்மாவிடம்

'சாரிங்க மா... அவளுக்கு புஃட் பாய்சன் ஆயிட்டதுனால நேத்து புஃல்லா சாப்பிட்டதை வாமிட் பண்ணிட்டா... அதான் அவளுக்கு அப்படி பசிச்சிருக்கு... இப்போ எல்லாம் சரி ஆயிடுச்சுனு நினைக்கறேன்... நீங்க யாழினியோட பேசிகிட்டு இருங்க... நான் அவளை ரெடி பண்ணி கூட்டிகிட்டு வந்துடறேன்...' என்றார்.

'இட்ஸ் ஓகே.' என்று செயற்கையாக ஒரு நகைப்பை சிந்தி விட்டு யாழினியுடன் சென்றார் பிரகாஷின் தாயார். உடன் பிரகாஷும் சென்றார்.

நந்தினியை அறையினுள் கூட்டிச் சென்ற சங்கீதா அவளிடம்

'ஹே... நந்து... நீ ஏன் இப்படி ஆக்வர்டா பிஹேவ் பண்ற?' என்று வினவினாள்.

நந்தினியும் கலங்கிய வாறே

'உனக்கு இதெல்லாம் புரியாது?... நித்யா எங்கே?' என்று கேட்டாள்.

'அதெல்லாம் அப்புறம் சொல்றேன்... நீ ஏன் இப்படி நடந்துக்கிட்டே?' - சங்கீதா.

'நான் என்ன பண்ணட்டும்... எனக்கு பயங்கர பசி.' - நந்தினி.

'அதுக்காக பிரகாஷோட அம்மா கைலேருந்தே ஸ்நாக்ஸ் பிளேட்டை பிடுங்கி சாப்பிடுவியா?... ஜென்ரலா பொண்ணு பாக்க வரும் போது எல்லா பொண்ணுங்களும் பட்டு புடவை கட்டிக்கிட்டு அமைதியா காஃபியை தன்னோட வருங்கால மாமியார் கிட்ட கொடுத்துட்டு நமஸ்காரம் பண்ணிட்டு போறத தான் பாத்திருக்கேன்... எனக்கு தெரிஞ்சு உலகத்துலியே எந்த மாமியாரும் இந்த மாதிரி பொண்ணு பாத்திருக்க மாட்டாங்க... சரி இதை கூட விடு... இப்போ தான் மொத தரவ அவங்களை பாக்கற... ஏன் அவங்களை பாத்த உடனே அப்படி பயங்கரமா சத்தம் போட்டு அழுதே?' என்று வினவினாள் சங்கீதா.

'இதோ பார் சங்கீ... நான் எவ்வளோ பெரிய தப்பு பண்ணிருக்கேன்ன்னு உனக்கு தெரியுமா?... ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு.' - நந்தினி.

'என்ன? உன் கருவை கலைச்சிருக்க அவ்வளவு தானே... ' - சங்கீதா.

நந்தினி கண் கலங்கியவாறே

'சங்கீ... செத்து போனது ஒரு சின்ன கரு... ஒரு உயிர்...' என்றாள்.

'அது மட்டும் உயிரில்லை... அன்னிக்கு நித்யா நம்மளுக்கு விஜய் பார்க் இன்ல ட்ரீட் வைக்கும் போது சிக்கன் மங்கோலியா, மட்டன் குருமானு நான் வெஜ் பஃப்பட் ல ஒரு கட்டு கட்டுனீயே அதெல்லாமே உயிர் தான்... ஏன் செடி கொடி கூட உயிர் தான்... ஒன்ன அழிச்சு தான் இன்னொன்னு வாழும்... இது தான் இயற்கையின் நியதி ... ஏன்?... இப்போ இறந்து போன உன் கரு கூட பல லட்சம் உயிரணுக்களோட போராடி தான் கருமுட்டைக்குள்ள நுழைஞ்சிருக்கும்... அப்போ செத்து போன பல லட்சம் உயிரணுக்களுக்காகவும் உனக்கு குற்ற உணர்ச்சி வரணும்... சிம்பிளா சொல்றேன் நாம ஒண்ணுத்தை அழிச்சு வாழும் போது நமக்கும் ஒரு நாள் நிச்சயமா அழிவு வரும்... அதுக்கு முன்னாடி நம்ம மனசை தேவை இல்லாம குழப்பிக்காம இருக்கற சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மனசை மாத்திக்க பழக்கணும் ...' - சங்கீதா.

'எனக்குன்னு ஒரு ஐடியாலஜி இருக்கு சங்கீ... அது தான் என்னோட பலமே.' - நந்தினி.

'பலசாலியான எந்த ஒரு உயிரினமும் சர்வைவ் ஆகாது... எது சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை மாத்திக்கிட்டு அந்த சூழ்நிலைல தனக்கு சாதகமான விஷயங்கள் இருக்கானு தேடுது பாரு அது தான் சர்வைவ் ஆகும்... இது தான் டார்வின்ஸ் சர்வைவல் ஆஃப் பிஃட்டஸ்ட் தியரி.' என்று நந்தினியிடம் சொல்லிவிட்டு அவளின் பார்வையை சற்றே நந்தினியிடமிருந்து விலக்கி அந்த அறையின் வாயில் வழியாக யாழினியின் அறையை எட்டிப் பார்த்தாள்.

அங்கு யாழினி பிரகாஷிடமும் அவரின் தாயாரிடமும் சகஜமாக நீண்ட நாள் பழகியவள் போல சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

மறுபடி தன் பார்வையை நந்தினியிடம் திருப்பி

'கொஞ்சம் வந்து இங்க பாரு.' என்றாள்.

நந்தினியும் தன் தங்கை அவர்களோடு உரையாடுவதை பார்த்து விட்டு

'என்ன சொல்ல வர?... எனக்கு புரியலை.' என்று வினவினாள்.

உடனே சங்கீதா யாழினியின் அறை பக்கம் திரும்பி

'யாழினி...' என்று சத்தமாக கூப்பிட்டாள். அப்போது யாழினி மட்டுமின்றி பிரகாஷின் தாயாரும் பிரகாஷும் திரும்பி பார்த்தனர். அவர்களிடம் செய்கையில் கெஞ்சலாக "கொஞ்ச நேரம் அவளை இங்க அனுப்ப முடியுமா?" என்று கேட்டாள் சங்கீதா.

அவர்களும் புன்னகைத்தவாறு யாழினியை பார்க்க, யாழினியும் பிரகாஷின் தாயாரிடம்

'கொஞ்ச நேரத்துல வந்துடறேன் மா...' என்று சொல்லிவிட்டு சங்கீதாவிடம் சென்று.

'என்ன கா?... சொல்லுங்க கா?' என்றாள்.

'ஆமாம்... என்ன அவங்க ரெண்டு பேர் கிட்டயும் ரொம்ப சகஜமா பேசற மாதிரி இருக்கு?... என்ன விஷயம்?' என்று கேட்டாள்.

'அப்பா தான் பேச சொன்னாரு... அதான் கா... மத்தபடி ஒன்னுமில்லை.' என்றாள் யாழினி.

உடனே சங்கீதா செல்லமாக முறைத்தவாறே யாழினியிடம்

'ஏய்... நான் உன்னை விட பெரியவ... லைஃப்ல நிறைய விஷயங்களை பாத்துட்டு வந்திருக்கேன்... முயல் பிடிக்கற நாயை மூஞ்சியை பாத்தே கண்டு பிடிச்சிருவேன்... மரியாதையா உண்மையா சொல்லு.' என்று கேட்டாள்.

யாழினியும் நந்தினியை சிறிய நகைப்போடு ஒரு பார்வை பார்த்துவிட்டு சங்கீதாவிடம்

'நான் அவங்களை ஏர் போர்ட்டுக்கு ரிஸீவ் பண்ண போயிருந்தேனா... நான் கொஞ்சம் அக்கா மாதிரி இருந்ததுனால அவங்க நான் தான் நந்தினினு நெனச்சு என்னை கட்டி அணைச்சு "ரொம்ப அமைதியா அடக்கமா ஹோம்லியா லட்சணமா இருக்கா... இப்படி தான் என் பையனுக்கு ஒரு பொண்ண தேடிகிட்டு இருந்தேன்... தேங்க் காட்.."னு சொன்னாங்க... அவங்க பையனுக்கு ட்ரடிஷனலா அழகா இருக்கற பொண்ணை ரொம்ப நாளா தேடிருப்பாங்க போலருக்கு... அப்புறம் அப்பா "இவ நந்தினி இல்லை அவளோட தங்கச்சி யாழினி... ரெண்டு பேரும் அசப்புல ஒரே மாதிரி இருப்பாங்க"னு சொல்லி சமாளிச்சாரு... எனக்கு அவங்களோட ஸ்டேட்டஸ் ஏற்கனவே தெரிஞ்சதுனால அந்த நொடி பொழுதுல தான் இவங்கள விடவே கூடாதுன்னு ஒரு முடிவு எடுத்தேன்... நிச்சயமா அவங்களோட பிரண்ட்ஸும் ஈக்வல் ஸ்டேட்டஸ்ல தான் இருப்பாங்க... அவங்க ப்ரண்ட்ஸ் சர்க்கிள்ல பிரகாஷை மாதிரியே யாராவது அமைதியா ஹோம்லியான பொண்ணை கேட்டாங்கனா இவங்க என்னை ரெஃபேர் பண்ணனும்... அதுக்கான முயற்சி தான் இது.' என்றாள்.

'அப்போ உங்க அக்காவுக்காக இல்ல.' - சங்கீதா.

யாழினி பதட்டமாக

'ஐயோ அக்கா... எனக்கும் நந்தினி அக்காவுக்கும் சேத்து தான் இந்த வேலைய பாத்துகிட்டு இருக்கேன்.' என்றாள்.

சங்கீதா புன்னகைத்த வாறே நந்தினியை பார்த்து

'சர்வைவல் ஆஃப் பிஃட்டஸ்ட்...' என்று சொல்லிவிட்டு யாழினியை பார்த்து

'ஏன் உன் அக்கா "ரவிக்கு துரோகம் பண்ணிட்டேன்... ஒரு கருவை கொன்னுட்டேன்"னு புலம்பிகிட்டே இருக்கா?' என்று கேட்டாள்.

யாழினியும் நந்தினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சங்கீதாவிடம்

'நந்தினி அக்கா எப்பவும் அப்படி தான்... கொள்கை படிப்புனு பேசிக்கிட்டே இருப்பா... நான் ஏதாவது அட்வைஸ் பண்ணினா "சின்ன பொண்ணு நீ எனக்கு அட்வைஸ் பன்றியா"னு என்னை அடக்கி வெச்சிருவா... இந்த காலத்துல கருவை கலைக்கறதெல்லாம் சாதாரணமான விஷயம்... அதேமாதிரி ரவிக்கு துரோகம் பண்ணிட்டோம்னு வருத்தப்படறதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்... லைஃப்ல ஒருத்தன கூட டிச் அடிக்கலைனா அப்புறம் பொண்ணா பொறந்ததே வேஸ்ட் கா.' என்று கூறினாள். உடனே சங்கீதா எழுந்து

'வாடி வாடி...' என்று அவளை அணைத்து விட்டு

'நீ எனக்கு தங்கச்சியா பொறக்க வேண்டியவ... எப்படி இவளுக்கு போய் தங்கச்சியா பொறந்த ...' என்று சொல்லிவிட்டு

'நான் ஒரு வருஷம் ஸ்கெட்ச் போட்டு பண்ண விஷயத்தை உங்க அக்கா அஞ்சே நாள்ல பண்ணிருக்கா... இது உலக அதிசயம்... அதை செலிப்ரேட் பண்றத விட்டுட்டு பொலம்பிகிட்டு இருக்க பாரு உன் அக்கா... சரி நீ உன் வேலைய கன்டின்யூ பண்ணு.' என்று கூறியவுடன் யாழினியும் இருவரிடம் விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தாள்.

யாழினி சென்றவுடன் சங்கீதா நந்தினியிடம்

'இதோ பார் எல்லாரும் அவங்க அவங்க சுயநலத்துக்காக தான் வாழறாங்க... நடந்ததை மறந்துட்டு உன் பழைய ஐடியாலஜி எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சிட்டு இந்த புது வாழ்க்கைல போஃகஸ் பண்ணு...' என்றாள்.

'நித்யா கூட எனக்கு இதே அட்வைஸ தான் குடுத்தா... நானும் என் மனசை மாத்த முயற்சி பண்ணினேன்... இன்பாஃக்ட் சம்டைம்ஸ் என் மனசும் மாறிடும்... ஆனா ஏதோ ஒரு போஃர்ஸ் எனக்குள்ள என்னோட ஐடியாலஜிக்கு சப்போர்ட் பண்ற எண்ணங்களை உருவாக்கி மறுபடி என் மனசை குழப்பி விட்டுடும்... பிரான்கா சொல்லனும்னா என் மனசு என்னோட கொள்கையை சார்ந்து இருந்தா தான் எனக்கு தன்னம்பிக்கையே வருது.' - நந்தினி.

'அணைய போற விளக்கு பிரகாசமா எரியும்னு ஒரு பழமொழி இருக்கு... ரொம்ப நாளா கொள்கைன்ற எரிபொருளை பயன்படுத்தி உன் தன்னம்பிக்கைன்ற ஜோதியை வளர்த்திருக்க... அதனால தான் உன் தன்னம்பிக்கை வேற ஒரு எரிபொருளை ஏத்துக்க மறுக்குது... நீ அந்த கொள்கையை மீறி நடக்கறதுனால உன்னோட தன்னம்பிக்கைக்கு சரியான எரிபொருள் கிடைக்க மாட்டேங்குது... அதனால தான் அந்த சிஸ்டமே உன் மனசை வலுக்கட்டாயமா உன் கொள்கையை பாஃலோவ் பண்ண வெக்குது... சின்ன வயசுலேருந்து உன் கொள்கையை நீ பாஃலோவ் பண்றதுனால அந்த சிஸ்டம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு... டோட்டலா அந்த சிஸ்டம் ஷட் டவுன் ஆகி வேற புது எரிபொருள் மூலமா உன் தன்னம்பிக்கைன்ற ஜோதி எரிய ஆரம்பிக்கற வரைக்கும் உன் தன்னம்பிக்கை குறைய தான் செய்யும்...' - சங்கீதா.

'சரி... இப்போ எப்படி அந்த சிஸ்டம் ஷட் டவுன் ஆகும்.' - நந்தினி.

'உன்னோட செயல் வடிவம் மூலமா தான் அந்த எரிபொருள் உற்பத்தி ஆகும்... இப்போ உன் தன்னம்பிக்கையை வளத்துக்கிட்டு இருக்கற கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்காத... ஒரு கட்டத்துல போக போக உன் சிஸ்டத்தோட வீரியம் அதிகமாகும்... அதை மீறி நடக்கறதுனால உனக்கு ஏகப்பட்ட குற்ற உணர்ச்சியை குடுக்கும்... கண்ட்ரோல்டா நடந்துக்கோ... அப்புறம் அதுவே தானா குறைஞ்சு ஒண்ணுமே இல்லாம ஆயிடும்.' - சங்கீதா.

சங்கீதா கூறிய விஷயங்களை கேட்ட நந்தினி ஆச்சரியமாய்

'எப்படி நீ இவ்வளோ சைக்காலாஜிக்கலா பேசற... ஏன் கேக்கறேன்னா இதான் பர்ஸ்ட் டைம் நீ இப்படி பேசி பாக்கறேன்.' என்றாள்.

சங்கீதாவும் புன்னகைத்த வாறே

'எல்லாம் ஒரு கசப்பானா ஒரு அனுபவம் கத்து தந்த பாடம் தான் இது... லெவென்த் ட்வெல்த் தானே நீயும் நானும் ஒரே ஸ்கூல்ல படிச்சோம்... டென்த் வரைக்கும் நான் வேற ஸ்கூல்... நான் எய்ட்த் ஸ்டாண்டர்ட் படிக்கும் ஒரு பையனை ரொம்ப சின்ஸியரா லவ் பண்ணினேன்... அவன் என்னை சட்டையே பண்ண மாட்டான்... அவன் கிட்ட சினிமாட்டிக்கா நிறைய தடவ என் லவ்வை சொல்லுவேன்... அவன் அசிங்கமா திட்டிட்டு போயிடுவான்... நான் அழுதுட்டு வந்துருவேன்... மறுபடி அவனை பாக்கும் போது அவன் என்னை ஒரு நாள் நிச்சயமா லவ் பண்ணுவான் னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை பிறக்கும்... நான் ப்ளேட்னால என் கைல அவன் பேரை எழுதி ரத்தம் வழிய வழிய போய் காமிச்சேன்... அப்பவும் அவன் என்னை மதிக்கலை... என்னை மத்த பசங்க எல்லாரும் பைத்தியம் லூசுன்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க... இந்த விஷயம் ஸ்கூல் புஃல்லா பரவி என் பேரு ரிப்பேர் ஆனது தான் மிச்சம்... "ஏன் என் மனசு எப்போ பாத்தாலும் அவனையே நினைக்குது"னு உக்காந்து யோசிச்சேன்... அப்புறம் தான் புரிஞ்சது நான் என்னோட நம்பிக்கையை அவன் மேல வெச்சிருக்கேன்னு... அப்புறம் என்னை நான் சேஞ் பண்ணிக்க முயற்சி பண்ணும் போது கிடைச்ச அனுபவ ஞானத்தை தான் உன் கிட்ட இப்போ சொன்னேன்.' என்றாள்.

சங்கீதாவின் வார்த்தைகள் நந்தினிக்கு ஒரு வித புரிதலை கொடுத்தது.

'தேங்க்ஸ் சங்கீ... குற்ற உணர்ச்சி வரும் போது நான் எப்படி அதை எடுத்துக்கணும்னு ஒரு ஐடியா கிடைச்சிருக்கு ...' என்று சொல்லிவிட்டு சந்தேகமாய்

'சரி நித்யா எங்கே?' என்று கேட்டாள்.

'நித்யா இன்னும் டூ டேஸ்ல ஆஸ்திரேலியா போறதுனால அவளோட புருஷன் "நீ என் கூட தான் இருக்கணும்"னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம்... அதான் அவ எனக்கு போஃன் பண்ணி நடந்ததையெல்லாம் சொல்லி இன்னிக்கு மட்டும் உன்னை பாத்துக்க சொன்னா...' - சங்கீதா.

'நீ அஞ்சு நாள் லீவ் போட்டுட்டு உன் பியான்ஸி கூட ஸ்பென்ட் பண்றதா சொன்ன... இப்போ இங்க வந்திருக்க.' - நந்தினி.

'அவரு நேத்தியே பிளைட் ஏறி கிளம்பிட்டாரு... நான் எக்ஸ்டராவா ரெண்டு நாள் லீவ் அப்பளை பண்ணி வெச்சிருந்தேன்... சரி இப்போ நீ தெளிவா இருக்க இல்ல.' - சங்கீதா.

'ம்ம்...' என்று சொன்ன பிறகு எழுந்து அந்த அறையை விட்டு வெளிய செல்ல முற்பட்ட நந்தினியை சங்கீதா கையமர்த்தி

'ஹே... எங்க போற?' என்று கேட்டாள்.

'இல்ல மறுபடி பசிக்குது.' - நந்தினி.

சங்கீதா யோசனையாய் நந்தினியிடம்

'ஹே... என்ன விளையாடுறியா?... இப்போ தான் ஒரு பழக் கடையை காலி பண்ணிருக்க... பத்தாததுக்கு உன் வருங்கால மாமியார் தட்டை பிடுங்கி வேற சாப்பிட்டிருக்க... என்ன ஆச்சு உனக்கு?' என்று கேட்டாள்.

'முன்ன பின்ன நீ அபார்ஷன் பண்ணிருக்கியா?' - நந்தினி.

'சே... சே... நான் நிறைய பசங்களை லவ் பண்ணிருக்கேன்... ஆனா எல்லாமே மேலோட்டமா தான்... இந்த அளவுக்கு எல்லாம் நான் போனதே இல்ல.' - சங்கீதா.

'இல்ல எதுக்கு கேக்கறேன்னா... எனக்கும் இத பத்தி ஒன்னும் தெரியாது... ஒரு வேளை அபார்ஷன் பண்ணா பயங்கரமா பசிக்குமோ என்னவோ.' - நந்தினி.

'மொதல்ல உன் மாமியாரை பாத்து நாலு வார்த்தை நல்லா பேசு... ஏற்கனவே அது நீ நடந்துக்கிட்டதை பாத்து "அய்யய்யோ இந்த குரங்கையா என் பையன் செலெக்ட் பண்ணிருக்கான்"னு ஒரே கலவரத்துல இருக்கும்... இந்த பசியை கொஞ்சம் பொறுத்துக்கோ... இப்போ வா.' என்று சங்கீதா கூறியவுடன் இருவரும் அந்த அறையை விட்டு சென்றனர்.

நந்தினி பிரகாஷின் தாயார் அவந்திகாவிடம் பேச ஆரம்பித்தாள். அவந்திகாவுடன் நந்தினியின் எண்ண அலைவரிசை பொருந்த மறுத்தது. வேலை தெரியாத ஒரு ஆள் நேர்முக தேர்விற்கு எப்படி பதட்டம் அடைவானோ அது போல நந்தினி மிகவும் பதட்டமாக பேசத் தொடங்கினாள். இருவரின் உரையாடலை கவனிக்க கவனிக்க மற்ற அனைவருக்கும் பதட்டம் உண்டாகியது. அவ்வப்போது நந்தினியின் பெற்றோரும் சங்கீதாவும் அவர்களின் உரையாடலில் நடுவில் குறுக்கிட்டு அவளை பற்றி பெருமையாக சொல்ல நினைத்து அது இன்னும் அந்த சூழ்நிலையை மிக மோசமாகியது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவந்திகா

'கேன் ஆல் ஆஃப் யூ லீவ் அஸ் அலோன்.' என்று தன் குரலை உசத்தி கூற, நந்தினியை தவிர மற்ற அனைவரும் அந்த அறையை விட்டு வெளியே சென்றனர். இப்பொழுது அந்த அறையில் அவந்திகாவுடன் நந்தினி மட்டும் தனியாக இருந்தனர்.

அவந்திகா நந்தினியை அணைத்து

'டியர்... நீ என்கிட்டே ப்ரண்ட்லியா இரு... உன்னோட இந்த பதட்டத்துக்கு காரணம் எனக்கு தெரியும்...' என்று அவர் கூறியவுடன் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியுடன் நந்தினி அவரை பார்த்தாள்.

'கவலை படாதே... பிரகாஷ் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டான்... ஒரு உறவை அறுத்துட்டு இப்போ தான் வந்திருக்க... அதனால உன் மனசு கொஞ்சம் செட்டில் டவுன் ஆகறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்...' என்று அவந்திகா கூறிக் கொண்டிருக்கும் போது

'நான் கருவை கலைச்சது பிரகாஷுக்கு எப்படி தெரியும்?' என்று யோசித்தாள் நந்தினி.

'ஏன்னா நானும் ஒரு டைவோர்ஸீ தான்... நீ என்கிட்டே வெளிப் படையா நடந்துக்கலாம்... கமான் ரிலாக்ஸ்.' என்று பேசுவதை தொடர்ந்தார் அவந்திகா.

இவர் ரவியை பற்றி கூறிக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது நந்தினியிற்கு.

அவர் மேற்கொண்டு பேசத் தொடங்கினார். அவரின் வார்த்தைகள் அவளின் மனதிற்கு இதமாக இருந்தது. அவளை அறியாமல் ரவியையும் அந்த கருவை கொன்ற குற்ற உணர்ச்சியும் கரைந்தது. மனதில் ஒரு வித சந்தோஷம் ஆட்கொண்டிருந்தது. நந்தினியும் இப்பொழுது பிரகாஷின் தாயாரிடம் சகஜமாக பேசத் தொடங்கினாள். அவர்கள் இருவரும் தோழிகள் போல் பேசிக் கொண்டு வெளியே வருவதை பார்த்த அனைவருக்கும் சந்தோஷம் ஆட்கொண்டது.

நந்தினியின் தந்தை வெங்கடேசன் ஜோசியரிடம் நிச்சயதார்த்தத்திற்கான நல்ல நாட்களை விசாரித்து பிரகாஷின் தாயார் அவந்திகாவிடம் ஆலோசனை செய்து அடுத்த வாரம் புதன்கிழமை நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார். பிரகாஷும் அவந்திகாவும் தனியாக மூன்று நட்சத்திர விடுதியில் வாடகைக்கு ஒரு அறையை எடுத்து நிச்சயம் முடியும் வரை தங்கலாம் என்று முடிவெடுத்தனர். அன்று அனைவரிடமும் பிரகாஷும் பிரகாஷின் தாயார் அவந்திகாவும் சந்தோஷமாக விடைபெற்று சென்றனர்.

நந்தினிக்கு பின் வரும் நாட்கள் சந்தோஷமாகவே நகர்ந்தாலும் அவளிற்கு அவ்வப்போது ஒரு அகோர பசியெடுத்து தன் கட்டுப்பாட்டையும் மீறி குரங்கு போல சாப்பிடும் பழக்கம் நெருடலாக இருந்தது. ஒரு நாள் நித்யாவும் அவளின் கணவரும் பிரகாஷையும் நந்தினியையும் சென்று நேரில் பார்த்து அவர்களது வாழ்த்தை தெரிவித்து விட்டு ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டனர்.

நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாள் முன்னர் அனைவரும் ஒரு பெரிய விடுதியில் உணவருந்த சென்றிருந்தனர். பிரகாஷும் நந்தினியும் ஒருவருக்கொருவர் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். பிரகாஷ் தனது வருங்கால திட்டங்களை நந்தினியிடம் கூறிக்கொண்டிருந்தார். அப்பொழுது அந்த விடுதியின் பணியாளர் உணவுகளை மேடையில் வைத்த மறுநொடியே நந்தினி பிரகாஷிடமிருந்து கவனத்தை நிறுத்தி தன்னை அறியாமல் உணவு வகைகளை எடுத்து கட கடவென குரங்கு போல உண்ண ஆரம்பித்தாள். அனைவரது பார்வையும் அவளின் மீது இருந்தது. சூழல் அசாதாரணமான நிலையை அடைந்து கொண்டிருப்பதை உணர்ந்த நந்தினியின் தாயார் பத்மாவதி

'நந்தினி....' என்று அழுத்தமாக உச்சரித்தவுடன் நந்தினிக்கு சுயநினைவு திரும்பி தன்னுடைய தவறான நடத்தையை உணர்ந்து பிரகாஷிடம்

'சாரி.' என்றாள்.

பிரகாஷும் சிரித்தவாறே 'என்ன ரொம்ப பசியா?' என்றார்.

உடனே அவந்திகா பிரகாஷிடம்

'பிரகாஷ், நீ கல்யாணத்திற்கு பிறகு இவள் பசியை ஆற்றுவதற்காகவே நிறைய சம்பாதிக்க வேண்டும்' என்று ஆங்கிலத்தில் நகைச்சுவையாய் கூற, அனைவரும் சிரிக்க, அந்த சூழல் சந்தோஷ சூழலாக மாறியது.

அனைவரும் உண்டு முடித்த பிறகு பிரகாஷும் நந்தினியும் தனியாக பேசத் தொடங்கினர். பிரகாஷ் வருங்காலத்தில் தான் ஆரம்பிக்க போகும் தனது சொந்த நிறுவனத்தின் திட்டங்களை பற்றி அவளிடம் கூறிக் கொண்டிருந்தார்.

'பிரகாஷ் உங்களோட பியூச்சர் பிசினெஸ்ல எனக்கு ஏதாவது பொறுப்பு குடுப்பீங்களா?' என்று கேட்டாள்.

'ம்ம்... ஷுயூர்... நீ தான் என் கம்பெனியோட கேன்டீன் இன்சார்ஜ்.' என்று நகைச்சுவையாய் கூற,

நந்தினி

'ஓய்...' என்று செல்லமாக பிரகாஷை தள்ளினாள்.

'ஹேய்... சாரி சும்மா ஜோக் பண்ணேன்... உனக்கு நிச்சயமா ஒரு பெரிய பொறுப்பு இருக்கு.' என்று பிரகாஷ் புன்னகைத்தவாறே கூறினார். இவர்கள் அன்னியோன்யமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மற்ற அனைவருக்கும் சந்தோஷம் அதிகரித்தது. பிரகாஷும் பிரகாஷின் தாயாரும் அவர்களிடமிருந்து அன்றைய தினத்திற்கு விடைபெற்று கொண்டு செல்லும் போது அவந்திகா நந்தினியிடம் சென்று அவளை அனைத்து அவளின் நெற்றியில் ஒரு முத்தமிட்டு

'ஐயம் வெரி ஹாப்பி டியர்.' என்று கூறிவிட்டு சென்றார்.

அவரின் இந்த செய்கை நந்தினியிற்கு தான் ஒரு பாதுகாப்பான தன்னை மதிக்கும் இடத்திற்கு தான் செல்கிறோம், இனிமேல் தனக்கு வாழ்க்கையில் நன்மை தான் நடக்க போகிறது என்று உற்சாகம் பிறந்தது. அந்த உற்சாகம் ரவியையும் அவள் கலைத்த அந்த கருவையும் சுத்தமாக மறக்கடித்தது. உற்சாகத்தின் காரணமாக அன்றிரவு அவளுக்கு தூக்கம் வரவில்லை. வருங்காலத்தில் பிரகாஷுடன் தனது வாழ்க்கையை பற்றி சிந்தித்தவாறே படுத்திருந்தாள். மணி நள்ளிரவு பன்னிரெண்டை தாண்டியது. திடீரென்று அவளிற்கு பசித்தது சமையலறைக்கு சென்று பழவகைகளை உண்டு முடித்து பசியை ஆற்றிக் கொண்டாள். என்ன தான் சந்தோஷத்தின் அளவு அதிகமாக இருந்தாலும் இந்த அகோர பசி மட்டும் அவளிற்கு நெருடலாக இருந்தது. ஏன் இப்படி பசிக்கிறது?... இந்த பசி எப்போது நிற்கும்...’ என்ற யோசனையுடனே அந்த இரவை கழித்தாள். மறுநாள் தன்னுடைய கரு கலைப்புக்கு ஆலோசனை வழங்கிய மருத்துவர் ஜெய்க்கு தன் அலைபேசியின் மூலமாக அழைப்பு விடுத்தாள். மறுமுனையில் தனது அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கான சமிஞ்சை வந்தவுடன்

'ஹாலோ டாக்டர் நான் நந்தினி பேசறேன்.' என்றாள்.

'எந்த நந்தினி?' - மருத்துவர் ஜெய்.

'லாஸ்ட் வீக் எனக்கு அபார்ஷன் பண்ணீங்களே... ஞாபகம் இருக்குங்களா?' - நந்தினி.

'ஏம்மா... இந்த ஒரு வாரத்துல நிறைய அபார்ஷன் கேஸை பாத்துட்டேன்... உங்க ப்ரிஸ்க்ரிப்ஷன் நம்பரை சொல்லுங்கமா?' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது

'டாக்டர் உங்கமேல வாமிட் எல்லாம் எடுத்தேனே... இன்னுமா ஞாபகம் வரலை.' என்று நந்தினி கூறிய பிறகு மறுமுனையில் சில நொடிகள் நிசப்தமாக இருந்தது. நந்தினி

'ஹலோ... ஹலோ டாக்டர் லைன்ல இருக்கீங்களா?' என்று கேட்க, மருத்துவர் இப்பொழுது பதட்டத்துடன் மரியாதையாக

'ஓஹ்... நீங்களா?... சொல்லுங்க மேடம்?' என்றார்.

'டாக்டர் அபார்ட் பண்ண பிறகு பயங்கரமா பசிக்குது... இப்படி தான் பசிக்குமா?' - நந்தினி.

மறுமுனையில் மருத்துவர் யோசனையாக

‘அபார்ஷன் பண்ணதுக்கு அப்புறம் உடம்பு வீக் ஆயிடும்... ஒருவேளை உங்க உடம்பு எனர்ஜியை ரிகைன் பண்றதுக்கு இப்படி பசிக்குதுன்னு நினைக்கறேன்... ஆனா உங்களுக்கு கன்டின்யுஸா அட்லீஸ்ட் ஒரு பிஃப்ட்டின் டேஸ் ஆவது ப்ளீடிங் இருக்கணுமே... அதுவுமில்லாம நீங்க இந்தளவுக்கு ஆரோக்கியமா பேசவே முடியாது... உங்களுக்கு எவ்வளவு நாள் ப்ளீடிங் ஆச்சு?' என்று கேட்டார்.

'மொதல் நாளோடயே நின்னு போச்சு டாக்டர்.' - நந்தினி.

'ஐயோ, இட் மைட் பீ அன் இன்கம்ப்ளீட் அபார்ஷன்... அதை அப்படியே விட்டுடீங்கன்னா உங்க கர்பப்பையை அது கன்டாமினேட் பண்ணிடும்... நீங்க இங்க வந்து ஒரு அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட் பண்ணிக்கோங்க... அதுல ஏதாவது கருவோட திசு இருக்குதான்னு பாத்துருவோம்... அப்படி இருந்ததுனா வேக்கம் ஆஸ்ப்பிரேஷன் மெத்தட் மூலமா ரிமூவ் பண்ண வேண்டியதா இருக்கும்... நீங்க உடனே வாங்க.' என்றார்.​
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
'ஐயோ, இட் மைட் பீ அன் இன்கம்ப்ளீட் அபார்ஷன்... அதை அப்படியே விட்டுடீங்கன்னா உங்க கர்பப்பையை அது கன்டாமினேட் பண்ணிடும்... நீங்க இங்க வந்து ஒரு அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட் பண்ணிக்கோங்க... அதுல ஏதாவது கருவோட திசு இருக்குதான்னு பாத்துருவோம்... அப்படி இருந்ததுனா வேக்கம் ஆஸ்ப்பிரேஷன் மெத்தட் மூலமா ரிமூவ் பண்ண வேண்டியதா இருக்கும்... நீங்க உடனே வாங்க.' என்றார்.

அந்த அழைப்பை துண்டித்துவிட்டு தன் பெற்றோர்களிடம் விஷயத்தை தெரிவித்துவிட்டு மருத்துவரை பார்க்க யாழினியை உடன் கூட்டிச் சென்றாள்.

இருவரும் மருத்துவரை சந்தித்தவுடன் அவர் அவர்களை பரிசோதனை கூடத்திற்கு அழைத்து சென்றார்.

பரிசோதனை கூடத்தில் இருந்த பெண் தொழில் நுட்பவியலாளரிடம்

'எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்களுக்கு இம்ப்ராப்பர் அபார்ஷன் ஆயிருக்கானு ஒரு அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட் பண்ணனும்... ஆனா இதை கணக்குல காட்டாதிங்க...' என்று சொன்னவுடன் அவரும் நந்தினியை படுக்கையில் படுக்கவைத்து அவள் தலைக்கு பின்னால் இருக்கும் அந்த பரிசோதனை கருவியை இயக்கினார். நந்தினியுடைய மேலாடையை விலக்கி அவளினுடைய வயிற்றில் பிசு பிசுவென்றிருக்கும் ஒரு வித களிம்பை தடவிக் கொண்டிருக்கும் போது உள்ளெ ஒரு பெண் மருத்துவர் நுழைந்தார். அவரை பார்த்தவுடன் பதட்டமாக அந்த பெண் தொழில்நுட்பவியலாளர் எழ, அந்த பெண் மருத்துவர்

'ஸிட் ஸிட்...' என்று கூறிவிட்டு அங்கு மேஜையில் உள்ள பேரேட்டை பார்த்தார்.

உடனே அவர் நந்தினியிடம் வந்து

'உங்க பேர் என்ன?' என்று கேட்டார்.

'நந்தினி.' என்று அவள் கூறியவுடன் மறுமுறை அந்த பெண் மருத்துவர் அந்த பேரேட்டை பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த பெண் தொழில் நுட்பவியலாளரிடம்

'ஏன் இதுல என்டர் பண்ணலை?' என்று கேட்டார்.

அந்த பெண் தொழில்நுட்பவியலாளர் பதட்டத்தில் முழிக்க

அந்த பெண் மருத்துவர் கோபத்துடன்

'சரி என்ன செக் பண்றீங்க?... அதையாவது சொல்லுங்க?' என்று கேட்க

அந்த பெண் தொழில்நுட்பவியலாளர்

'அபார்ஷன்...' என்று சொல்லி முடிப்பதற்குள்

'இம்ப்ராப்பர் அபார்ஷனா?... இவங்க எந்த ஹாஸ்பிடல்ல அபார்ட் பண்ணாங்க?... அந்த ரெகார்ட் இருக்கா?' என்று அந்த பெண் மருத்துவர் கேட்டார்.

இதற்கும் அந்த பெண் தொழில்நுட்பவியலாளர் பதில் கூற முடியாமல் முழிக்க, அந்த பெண் மருத்துவர்

‘இந்த மாசத்துக்குள்ள என்.ஏ.பி.எச் லேருந்து எப்போ வேணும்னாலும் சர்ப்ரைஸ் ஆடிட் வரலாம்... இப்படியெல்லாம் இரெஸ்பான்ஸிபிளா வேலை பண்ணீங்கன்னா நம்ம ஹாஸ்பிடலுக்கு அப்ரூவல் கிடைக்காது... இவங்க இங்க எந்த டாக்டரை கன்சல்ட் பண்ணினாங்க?... அவரை கால் பண்ணி இங்க வர சொல்லுங்க?' என்று சொன்னார்.

அந்த பெண் தொழில்நுட்பவியலாளர் நந்தினியை பரிசோதித்த மருத்துவர் ஜெய்யை அங்கிருந்த தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளும் போது அந்த பெண் மருத்துவரே அந்த கருவியுடன் இணைக்கப்பட்ட தேய்ப்பானை நந்தினியின் வயிற்றில் தடவி, அவளின் பின் புறம் இருந்த கருவியின் திரையை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். சில நொடிகளில் நந்தினியை பரிசோதித்த மருத்துவர் ஜெய் அங்கு வந்து அந்த தொழில் நுட்ப வியலாளரை பதட்டமாக பார்த்துவிட்டு, தணிக்கை செய்ய வந்த பெண் மருத்துவரிடம் ஒரு வித பயத்துடன் பார்வையை திருப்பினார். நந்தினியை பரிசோதித்த ஜெய்யும் அந்த தொழில் நுட்ப வியலாளரும் பரிட்சையில் பிட் அடித்து மாட்டிக்கொண்ட மாணவர்களை போல் திரு திருவென்று முழிப்பதை பார்த்த நந்தினியை ஒரு வித பதட்டம் ஆட் கொண்டது. அந்த கருவியின் திரையை மிக கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண் மருத்துவர் சில நிமிடங்களுக்கு பிறகு அவரது பார்வையை தன் பின்னே திரு திருவென்று முழித்துக் கொண்டிருக்கும் இருவரிடமும் திருப்பி சில நொடிகள் முறைத்து பார்த்து விட்டு நந்தினியிடம் பார்வையை திருப்பினார்.

நந்தினியும் அந்த பெண் மருத்துவரை பதட்டமாக பார்க்க

சட்டென்று லேசான புன்னகையுடன் அந்த பெண் மருத்துவர் நந்தினியிடம்

'பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல... உங்க குழந்தை நல்லா ஆரோக்கியமா இருக்கு...' என்று சொல்லிவிட்டு அந்த பெண் தொழில்நுட்ப வியலாளரிடம்

'ஏன் அபார்ஷன்னு சொன்னீங்க?' என்று கேட்டார்.

'பதட்டத்துல வாய் தவறி...' - பெண் தொழில் நுட்ப வியலாளர்.

'புதுசா ஜாயின் பண்ணிருக்கீங்களா?' - தணிக்கை குழு பெண் மருத்துவர்.

'ஆமாம் ...' என்று அவர் தலையசைக்க,

'இப்படியெல்லாம் பயப்பட கூடாது... ரெஜிஸ்டர்ல ப்ராபரா என்டர் பண்ணுங்க.' என்று சொல்லிவிட்டு நந்தினியை பரிசோதித்த மருத்துவர் ஜெய்யிடம்

'ஸாரி டாக்டர்...' என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு சென்றார்.

அவர் சென்றவுடன் இருவரும் பெருமூச்சை வெளியே விட்டு அந்த கருவியின் திரையை பார்த்தனர்.

அதில் ஏழு வார கருவின் பிம்பம் இருப்பது தெரிந்தது. நந்தினியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்த பெண் தொழில் நுட்பவியலாளர் அந்த கருவினுடைய இதய துடிப்பை பரிசோதித்தார். அதன் இதயம் இயல்பான விகிதத்தில் துடித்துக் கொண்டிருந்தது. உடனே அந்த தொழில் நுட்பவியலாளர் மருத்துவரிடம் திரும்பி

'டாக்டர் அபார்ஷன்னு சொன்னீங்க... அதுக்கான அறிகுறியே இல்லையே?' என்று கேட்டார்.

'எனக்கும் ஒன்னும் புரியலையே... சரி இங்க இதை பத்தி ஒன்னும் டிஸ்கஸ் பண்ண வேணாம்... நீங்க ரெஜிஸ்டர்ல நார்மல் ப்ரேக்னென்ஸி செக் அப் னே என்டர் பண்ணுங்க...' என்று கூறிவிட்டு அவர் நந்தினியை தன் ஆலோசனை அறையிற்கு அழைத்துச் சென்றார். அந்த பரிசோதனை கூடத்தின் வெளியே காத்துக் கொண்டிருந்த யாழினியும் அவர்களோடு சென்றாள்.

ஆலோசனை அறையில் மருத்துவர் நந்தினியிடம்

'மேடம்... நீங்க பில்ஸ் எடுத்துகிட்ட பிறகு அன்னிக்கு நைட் ப்ளீட் ஆச்சா?' என்று கேட்டார்.

'ம்ம்ம்... ஆச்சு டாக்டர்... அன்னிக்கு நைட்டு முழுக்க ப்ளீடாச்சு... ஹெவி க்ராம்பிங் இருந்துச்சு....' - நந்தினி.

'ப்ளீடிங்க செக் பண்ணீங்களா?... அது கெட்டியா இருந்துச்சா?' - டாக்டர்.

'ம்ம்ம்...' என்று தலையசைத்தாள்.

'அப்புறம் எப்படி?' என்று தன்னை தானே கேள்வி கேட்டுக் கொண்டு யோசிக்க தொடங்கினார் மருத்துவர்.

சில நொடிகளுக்கு பிறகு அவர் நந்தினியிடம்

'சரி அன்னிக்கு நைட் முழுக்க க்ராம்பிங்கும் ப்ளீடிங்கும் ஆச்சுன்னு சொன்னீங்க இல்ல... மறுநாள் என்ன ஆச்சு?' என்று கேட்டார்.

நந்தினியும் நடந்தவைகளை கூறி முடித்துவிட்டு

'அன்னிலேருந்து அந்த பசி மட்டும் நீங்கவே இல்ல...' என்றாள்.

அவள் கூறியதை கேட்ட டாக்டர் முகத்தில் ஆச்சர்ய பாவனையோடு

'இப்போ புரியுது... அன்னிக்கு நைட் காண்ட்ராக்ஷன்ஸ்னால உங்களோட எண்டோமெட்ரியம் அதாவது உங்க குழந்தையையும் உங்களையும் இணைக்கற அந்த லேயர் பார்ஷியலா ப்ரேக் ஆயிருக்கு... அபார்ஷன் பில்ஸ்னால உங்க கர்ப்பப்பை சுருங்கி விரியறதை எதிர்க்கறதுக்கும் மறுபடி உங்க எண்டோமெட்ரியத்தை மறுகட்டமைப்பு பண்றதுக்கும் எனார்மஸ் எனர்ஜியும் மூல பொருட்களும் தேவை... இப்போ புரியுதா ஏன் உங்களுக்கு அப்படி பசிச்சிதுன்னு... இந்த மாதிரி நூத்துல ரெண்டு பேருக்கு தான் நடக்கும்... அம்மாவுக்கும் குழந்தைக்கும் ஒரு அசாதாரண பிணைப்பு இருந்தா தான் இந்த அதிசயம் நடக்கும்...' - ஜெய்.

'அப்போ கருவை கலைக்க முடியாதா டாக்டர்.' -நந்தினி.

'இல்ல... வேற நிறையா மெத்தட்ஸ் இருக்கு... கருவை கலைக்கணும்னு முடிவு பண்ணிட்டா எப்படியாவது கருவை கலைச்சிடலாம்... அழிக்கறது ரொம்ப ஈஸி... ஆனா இப்படி ஒரு அதிசயம் நடந்தும் நீங்க இந்த கருவை கண்டிப்பா கலைச்சு தான் ஆகணுமா?' - ஜெய்.

மருத்துவரின் பேச்சு நந்தினியை பழையபடி யோசிக்க வைத்தது. மறுபடி அந்த கருவை கலைக்க அவளிற்கு மனசு வரவில்லை.

'ஒகே டாக்டர்... ரொம்ப தேங்க்ஸ்... நீங்க எவ்வளவு பீஸ் னு சொல்லுங்க... பே பண்ணிட்டு போயிடறோம். ' என்று அமைதியாக கூறிவிட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த யாழினியிடம்

'வா... கிளம்பலாம்.' என்றாள்.

யாழினி நந்தினியிடம் யோசனையாக

'அக்கா அப்போ கருவை கலைக்க போறதில்லையா?' என்று கேட்டாள்.

ஆமாம் என்பதை தலையசைத்து உணர்த்தினாள். உடனே யாழினி கலவரமாக

'அக்கா என்ன விளையாடுறியா?... நாளைக்கு உனக்கு பிரகாஷோட நிச்சயதார்த்தம்...' என்று வினவினாள்.

'இருக்கட்டும்.' - நந்தினி.

'பிரகாஷ் இந்த குழந்தையை ஏத்துப்பார்ன்னு நினைக்கறியா?' - யாழினி.

'ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.' - நந்தினி.

'அக்கா... சினிமால வேணும்னா பெருந்தன்மையா இருக்கற ஆம்பளைங்களை பாக்கலாம்... நிஜ வாழ்க்கைல எவனும் அப்படி கிடையாது... அப்படியே அவர் ஏத்துக்கிட்டாலும் உனக்கும் பிரகாஷுக்கும் நடுவுல இந்த குழந்தை நெருடலா தான் இருக்குமே தவிர சந்தோஷத்தை கொடுக்காது... பேசாம கலைச்சிரு.' - யாழினி.

'அப்போ நிச்சயதார்த்தை நிறுத்திடுவோம்... நான் ரவி கிட்டேயே போய்க்கறேன்.' என்று கூறி முடித்த பிறகு

'மேடம் ரவி யாரு?' என்று ஆர்வமாக ஒரு மெல்லிய குரல் ஒன்று கேட்க, அவர்கள் இருவரும் குரல் வந்த திசையில் பார்வையை திருப்பினார். அது வேறு யாருமல்ல, பக்கத்தில் அமர்ந்திருந்த நந்தினியை பரிசோதித்த மருத்துவர் ஜெய் தான். தனிமையாக விவாதிக்க வேண்டிய விஷயத்தை உணர்ச்சிவயப்பட்டு மூன்றாவது நபர் முன்னர் பேசியதை உணர்ந்த இருவரும் ஒருவருக்கொருவர் கலவரமாக சில நொடிகள் பார்த்துவிட்டு, அமைதியாக ஜெய்யை பார்த்தனர். மருத்துவர் ஜெய்யும் லேசான குற்ற உணர்ச்சியுடன்

'ஸாரி... க்யூரியாசிட்டி என்னோட மேனர்ஸை ஓவர் டேக் பண்ணிடுச்சு.' என்று வழிந்து கொண்டே கூறினார்.

இருவரும் மருத்துவமனையிற்கு வெளியே வந்து ஒரு பூங்காவில் விவாதித்தனர்.

'இந்த ஆள் மேல தான் நீ வாந்தி எடுத்தியா?' - யாழினி.

'ஆமாம்.' - நந்தினி.

'இவன் மேல சாணியையே கரைச்சு ஊத்தினாலும் தப்பில்லை... இப்படியா மத்தவங்க பேசறதை ஒட்டு கேப்பாங்க?' - யாழினி.

'ஹே... அந்த ஆள் முன்னாடி நம்ம பெர்சனல் விஷயத்தை பேசுனது நம்மளோட தப்பு... அதைவிட்டுட்டு அவனை திட்டிகிட்டு இருக்க... நீ அங்க அந்த டாபிக்கை ஆரம்பிச்சிருக்க கூடாது...' - நந்தினி.

'சரி... தப்பு என்னோடது தான்... ஒத்துக்கறேன்... போதுமா... இப்போ விஷயத்துக்கு வருவோம்... தயவு செஞ்சு இந்த கருவை கலைச்சிரு... இப்போ தான் உனக்கும் பிரகாஷோட அம்மாவுக்கும் நல்லா செட் ஆயிருக்கு... ஏன் மறுபடி அந்த சாக்கடைலையே விழணும்னு ஆசை படற... ' - யாழினி.

'இந்த மாதிரி ஒரு அதிசயம் நடந்தும் இந்த கருவை கலைக்கணுமா னு டாக்டர் கேட்டதுக்கு அப்புறம் எனக்கு இந்த கருவை கலைக்க மனசு வரலை... ' - நந்தினி.

'நீ பிரகாஷை பார்த்து ரெண்டு வாரம் இருக்குமா?... அதுக்குள்ள இவ்வளவு விஷயம் நடந்திருக்குனா இதுவும் தான் அதிசயம்... இந்த கருவை கலைக்கறதுனால உனக்கு நல்ல வாழ்க்கை அமைய போகுது... அதை பாத்து அப்பா அம்மா ரெண்டு பேரும் சந்தோஷ படுவாங்க... உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன் தயவு செஞ்சு இந்த கருவை கலைச்சிரு.' என்று யாழினி கெஞ்சியவுடன், நந்தினி அவளை சந்தேகமாய்

'ஹே... ரொம்ப பாசம் இருக்கற மாதிரி நடிக்காத... நீ ஏன் இந்த கருவை கலைக்கரத்துல ஆர்வமா இருக்கேன்னு எனக்கு தெரியும்.' என்றாள்.

நந்தினி அப்படி சொன்னவுடன் சில நொடிகள் அவளை முறைப்பாக பார்த்த யாழினி

'ஆமாம்... நான் சுயநலவாதி தான்... நீ பிராகாஷை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்களோட ரெஃபெரென்ஸ்னால எனக்கும் பெரிய ஸ்டேடஸ்ல ஒரு மாப்பிளை கிடைப்பாருன்ற ஒரு நம்பிக்கைல தான் நான் பிரகாஷ் கிட்டையும் அவர் அம்மா கிட்டையும் ரொம்ப க்ளோஸா மூவ் பண்ணிக்கிட்டு இருக்கேன்... என்னோட கனவு நனவாகாம போயிடுமோன்ற பயத்துல தான் இந்த கருவை கலைக்க சொல்றேன்... போதுமா... ஆனா ஒன்னு கா... என்னோட சுயநலத்துல அக்கா னு கொஞ்சம் பாசமும் இருக்கு... அத தயவு செஞ்சு நம்பு... என்னை ரொம்ப கேவலமா நினைக்காத…' என்று யாழினி கூறும் பொழுது அவள் கண்களில் நீர் சுரந்தது.

அவள் கண் கலங்கியதை பார்த்த நந்தினி அவளை அணைத்து ஆசுவாச படுத்தினாள். யாழினி அழுது கொண்டே

'அக்கா மறுபடி ரவி கிட்ட போய் மாட்டிக்காத கா... அங்க போனா நீ தான் ரொம்ப கஷ்ட படுவ... தெய்வாதீனமா உனக்கு நல்லா வாழ்க்கை அமைஞ்சிருக்கு... அதை கெடுத்துக்காத... ப்ளீஸ் இந்த கருவை கலைச்சிரு.' என்றாள்.

வேறு வழியின்றி நந்தினி மனதை திடப் படுத்திக் கொண்டு அதே மருத்துவரிடம் சென்றாள்.

அவரிடம் மறுபடி கருவை கலைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தவுடன்

'வேக்கம் ஆஸ்ப்பிரஷன் மூலமா அபார்ட் பண்ணலாம்... ஆனா இந்த ஹாஸ்பிடல்ல ப்ராப்பர் டாக்குமென்ட்ஸ் இல்லாம பண்ணினா நான் மாட்டிக்குவேன்... யாராவது பெரிய ஆள் மூலமா மூவ் பண்ணினா தான் இங்க முடியும்... உங்களுக்கு யாரையாவது பெரிய பொசிஷன்ல இருக்கற கவர்மெண்ட் அஃபீஷியலை தெரியுமா? ‘என்று கேட்டார்.

'இல்ல தெரியாது.' - நந்தினி.

'அப்போ வேற ஏதாவது லோக்கல் ஹாஸ்பிடல்ல எக்ஸ்ட்ராவா காசு செலவு பண்ணி தான் பண்ணனும்... எனக்கு தெரிஞ்சு ஒரு ஹாஸ்பிடல் இருக்கு... ரொம்ப லோக்கலா இருக்கும்... ஹாஸ்பிடல் பேரு செந்தில் விமன் அண்ட் சைல்டு கேர் சென்டர்... டி. நகர் பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்கு... பயப்பட வேணாம்... இந்த மெத்தட்ல 90 சதவிகிதம் எந்த பிரச்னையும் வராது... 15 நிமிஷ வேலை தான்... அப்புறம் நீங்க நார்மலா ஆயிடலாம்... நீங்க ஓகேன்னு சொன்னீங்கன்னா நான் அந்த ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி பேசுவேன்...' - மருத்துவர் ஜெய்.

நந்தினியும் அதற்கு ஒப்புக் கொண்டாள். உடனே மருத்துவர் ஜெய் தன் தொலைபேசி மூலமாக அவர் கூறிய மருத்துவமனையிற்கு தொடர்பு கொண்டு சில நிமிடங்கள் பேசிவிட்டு தொலைபேசியை அமர்த்தினார்.

'நான் பேசிட்டேன்... நான் அந்த ஹாஸ்பிடலோட அட்ரஸை தரேன்... போயிட்டு வந்துருங்க.' என்று கூறிவிட்டு நந்தினியிடம் அந்த மருத்துவமனையின் முகவரியை கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு இருவரும் அந்த மருத்துவ மனைக்கு விரைந்தனர்.

அந்த மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நந்தினியின் அலைபேசி ஒலித்தது. யாரென்று அந்த அலைபேசியின் திரையை பார்த்தாள். அது பிரகாஷின் எண். பக்கத்தில் இருந்த யாழினி

'அக்கா... கொடு நான் பேசிக்கறேன்.' என்று நந்தினியிடம் அலைபேசியை வாங்கிக் கொண்டு

'சொல்லுங்க பிரகாஷ்.' என்றாள்.

'.....'

'நானும் அக்காவும் ஷாப்பிங் வந்திருக்கோம்.' - யாழினி.

'....'

'டி. நகர்.' - யாழினி.

'....'

'இல்ல... வேண்டாம்... உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்... நாங்க இன்னும் ஆஃப் அன் ஹவர்ல கிளம்பிடுவோம்.' - யாழினி.

'....'

'பிரகாஷ் சொன்னா கேளுங்க... நீங்க...' - யாழினி.

'....'

'ம்ம்ம்ம்.... நாயுடு ஹால்.' - யாழினி.

'...'

பிரகாஷின் தொடர்பை துண்டித்தவுடன் நந்தினி

'என்ன ஆச்சு?' என்று கேட்டாள்.

'அவர் கிளம்பி வர்றாராம்... நம்மளை நாயுடு ஹால்ல வைட் பண்ண சொல்றாரு.' - யாழினி.

'ப்ப்ச்...'- நந்தினி.

'இந்த ட்ரீட்மெண்ட் பண்ணின ஒரு பதினைஞ்சு நிமிஷத்துல நார்மல் ஆயிடுவீங்கன்னு டாக்டர் சொன்னாருல்ல.' - யாழினி.

'ஆமாம்...' - நந்தினி.

'ஒன்னு பண்ணு கா... நீ மட்டும் ஹாஸ்பிடலுக்கு போ... நான் டி. நகர் நாயுடு ஹாலுக்கு போறேன்... நீ ட்ரீட்மெண்ட் முடிச்சிட்டு டிரெக்ட்டா அங்க வந்திடு... அவர் கிட்ட நான் எதையாவது சொல்லி சமாளிச்சிக்கறேன்.' என்று யாழினி கூறிவிட்டு நந்தினியிடம் விடைபெற்றுச் சென்றாள். சில நிமிடங்களில் நந்தினி பயணித்த வாகனம் அந்த மருத்துவமனை அருகில் நின்றது.

வாகனத்திற்கு கட்டணத்தை செலுத்திவிட்டு அந்த மருத்துவமனையின் வெளி தோற்றத்தை பார்த்தாள். அது மிகவும் சராசரிக்கும் குறைவான தரத்தில் காட்சியளித்தது. உள்ளே யோசனையோடு சென்றாள். நந்தினியிற்கு 'இங்க அந்த ட்ரீட்மெண்டை ஹைஜீனிக்கா பண்ணுவாங்களா?' என்ற கேள்வி அவள் மனதினுள் எழுந்தது.

அந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் அறையில் விசாரித்து உள்ளெ சிகிச்சை அறையில் காத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அருகில் இருந்த கருக்கலைப்பு இயந்திரத்தை பார்த்தாள். அவளை அறியாமல் அவளினுள் ஒரு பயம் முளைத்தது. மெதுவாக தனது பார்வையை அந்த இயந்திரத்தின் பக்கத்தில் இருக்கும் இரும்பு தொட்டியின் பக்கம் திருப்பினாள். அதனுள் இறந்த சின்னச்சிறு கருக்களின் தசைகள் துண்டு துண்டாக ரத்த வெள்ளத்தில் இருந்தன. அதை பார்த்தவுடன் அவளினுள் இருந்த பயம் அதிகரிக்க தொடங்கியது, உடன் அவளினுடைய இதய துடிப்பும் அதிகரித்தது.

"கருவை கலைக்கணும்னு முடிவு பண்ணிட்டா எப்படியாவது கருவை கலைச்சிடலாம்... அழிக்கறது ரொம்ப ஈஸி... ஆனா இப்படி ஒரு அதிசயம் நடந்தும் நீங்க இந்த கருவை கண்டிப்பா கலைச்சு தான் ஆகணுமா?" என்று மருத்துவர் ஜெய் கூறியது அவளின் நினைவில் தோன்றியது. சட்டென்று கதவு திறக்கப் படும் ஓசை அந்த பிஞ்சுகளின் சிதைந்த உடல்களின் மீதிருந்த அவளின் கவனத்தை திசை திருப்பியது. அவளிற்கு சிகிச்சை கொடுக்க ஒரு பெண் மருத்துவர் உள்ளே வந்து கருக்கலைப்பு செய்வதற்கான இயந்திரத்தை இயக்கினார். அது இயங்கிய சில நொடிகளிலேயே மின்வெட்டு ஏற்பட்டு நின்றது. ஐந்து நிமிடங்கள் காத்திருந்த அந்த பெண் மருத்துவர் தன் அலைபேசியை எடுத்து அழைப்பு விடுத்து பேசத் தொடங்கினாள்.

'ஜெனெரேட்டர் வொர்க் ஆகலையா?'

'.....'

'ஓ... சரி ... அப்போ நான் லன்ச் முடிச்சிட்டு வந்துடறேன்...'

'....'

'என்னது சிக்கன் மங்கோலியாவா ... நல்லா இருக்குமா?'

'...'

'பைஃவ் மினிட்ஸ் நான் பேஷண்ட் கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்’ என்று அந்த அழைப்பை துண்டித்து விட்டு நந்தினியிடம்

'மைண்டனென்ஸ் வொர்க் போய்ட்டு இருக்காம்... கரண்ட் வரதுக்கு அரை மணி நேரம் ஆகும்... நான் லன்ச் முடிச்சிட்டு வந்துடறேன்.' என்று கூறிவிட்டு, அந்த அறையின் வாசலிற்கு சென்று

'கிருஷ்ணம்மா... இங்க ரூம்மை க்ளீன் பண்ணி வைங்க.' என்று ஒரு நடுத்தர வயது பெண்ணிற்கு உத்தரவிட்டுவிட்டு சென்றார் அந்த பெண் மருத்துவர். உள்ளே வந்த பணிப்பெண் அந்த அறையை சுத்த படுத்திக்கொண்டிருக்கும் போது

நந்தினியிற்கு அந்த பெண் மருத்துவர் சிக்கன் மங்கோலியா என்று பேசியது

'அது மட்டும் உயிரில்லை... அன்னிக்கு நித்யா நம்மளுக்கு விஜய் பார்க் இன்ல ட்ரீட் வைக்கும் போது சிக்கன் மங்கோலியா, மட்டன் குருமானு நான் வெஜ் பஃப்பட் ல ஒரு கட்டு கட்டுனீயே அதெல்லாமே உயிர் தான்... ஏன் செடி கொடி கூட உயிர் தான்... ஒன்ன அழிச்சு தான் இன்னொன்னு வாழும்... இது தான் இயற்கையின் நியதி.' என்று சங்கீதா கூறியது நினைவிற்கு வந்தது. அப்போது அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்த பணிப்பெண் கிருஷ்ணம்மா நந்தினியிடம்

'குழந்தையை கலைக்கறதுக்கு வந்துக்கறீங்களா?' என்று கேட்டாள்.

அவளை மெளனமாக சிலநொடிகள் பார்த்த நந்தினி ஆமாம் என்பதை தலை அசைத்து உணர்த்தினாள்.

உடனே கிருஷ்ணம்மா நந்தினியிடம்

'பாவம் ஏன் மா கலைக்கறீங்க... அத பெத்தெடுத்து என்கிட்ட குட்துறுமா நான் வளத்துக்கறேன்.' என்றாள்.

அவள் பேசியதை கேட்டவுடன் நந்தினி அவளை முறைப்பாக பார்க்க தொடங்கினாள்.

'தப்பா எடுத்துக்காத மா... நான் கூட இப்படி தான் அபார்ஷன் பண்னேன்... அப்புறம் எனக்கு குழைந்தையே பொறக்கலமா... அதான் அவசர பட்டு பேசிட்டேன்... இங்க ஒரு மாசமா நான் வேலை செஞ்சினுக்கறேன்... எவ்வளோ குழந்தைகளோட பிஞ்சு சதைங்கள குப்பைல போட்ருப்பேன் தெரியுமா?... பாவம், அதுங்கள்ல எதாவது ஒன்னு உலகத்துல எங்களை மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு வழி காட்டுற பெரிய தலைவனா கூட வந்திருக்கலாம்... ஏன் உன் வயத்துல இருக்கறது கூட உலகத்துல பெரிய சாதனை படைக்கலாம்... நான் ஏதாவது தப்பா சொன்னா மனிச்சுக்கமா.' என்று கூறிவிட்டு கிருஷ்ணம்மா அந்த அறையை சுத்த படுத்த தொடங்கினாள்.

அவள் கூறியது நந்தினியின் மனதை குத்தியது.

கண்களை மூடி கொண்டு '... ஒன்ன அழிச்சு தான் இன்னொன்னு வாழும்... இது தான் இயற்கையின் நியதி.' என்று சங்கீதா கூறியதை நினைவூட்டி கருவை கலைக்கும் எண்ணத்தை வலுவேற்றினாள். அப்போது நந்தினியின் அலைபேசியில் உள்ள புலனத்தில் (WHATS APP ) அவளினுடைய நண்பர்கள் குழுவிலிருந்து யாரோ காணொளி தகவல் அனுப்பியதற்கான சமிஞை வந்தது. அந்த காணொளியை திறந்து பார்த்தாள். அதில் கும்பலாக புற்களை மேய்ந்து கொண்டிருந்த மான் கூட்டத்தை ஒரு புலி வேட்டையாட துரத்துகிறது. அதை பார்த்த நந்தினியிற்கு கருவை கலைக்கும் எண்ணம் மேலும் வலுவு பெற்றது. சட்டென்று இந்த பணிப்பெண் கிருஷ்ணம்மா தன் கருவை கலைத்ததால் அவளிற்கு குழந்தை பிறக்கவில்லை என்று கூறியது நினைவிற்கு வந்து ஒரு பயத்தை கொடுத்தது. உடனே அந்த காணொளியை இடை நிறுத்தம் செய்து விட்டு கிருஷ்ணம்மாவிடம்

'உங்களுக்கு கரு கலைப்பு செஞ்சதாலையா குழந்தை பிறக்கலை?’ என்று கேட்டாள்.

'தெரில மா... ஆனா அதுக்கு அப்புறம் என் வயத்துல கரு உண்டாவவேயில்ல.' – கிருஷ்ணம்மா.

'ஏன் கரு கலைப்பு பண்ணீங்க?... என்ன காரணம்?' - நந்தினி.

'என் சின்ன வயசுல நானும் ஒரு பையனும் லவ் பண்ணோம்... அவனுக்கு ஏகப்பட்ட கெட்ட பழக்கம் இருந்துச்சு... நான் எப்படி அவன் கிட்ட விழுந்தேன்னே தெரில... ஆனா என் பேச்சை கேட்டு கொஞ்சம் கொஞ்சமா தன்னை மாத்திக்கினான்... எங்க வீட்டுக்கு இந்த விஷயம் தெரிஞ்சு எனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணாங்க... எல்லாரும் சேந்து அவனை பத்தி இல்லாதும் பொல்லாதும் சொல்லி என் மனச மாத்தி வேற கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிட்டாங்க... கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி நான் கர்ப்பமா இருக்கறது தெரிய வந்து எனக்கு அவசர அவசரமா... இதோ இந்த மாதிரி ஒரு மெஷினை வெச்சு தான் கருக்கலைப்பு செஞ்சாங்க... அதுக்கப்புறம் எனக்கு குழந்தை பொறக்கவே இல்ல... எனக்கு குழந்தை பொறக்காதத காரணம் காட்டி என் புருஷனும் அவனோட குடும்பமும் என்னை ஒதுக்கி வெச்சு அவனுக்கு வேற கல்யாணம் பண்ணிட்டாங்க... ஒழுங்கா நான் லவ் பண்ண பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம்புடிச்சிருந்தேன்னா என் வாழ்க்கை ஒழுங்கா இருந்திருக்குமோ என்னவோ...' - கிருஷ்ணம்மா.

'மறுபடி நீங்க லவ் பண்ணவரை போய் பாத்தீங்களா?' - நந்தினி.

'எனக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆயிடுச்சின்னவொடனே அவன் அந்த ஊரை விட்டே போயிட்டான்... எங்க இருக்கானே தெரில... என் அப்பா அம்மாவும் இறந்துட்டாங்க... அவனை என்னிக்காவது ஒரு நாள் பாப்பேன்னு தான் இந்த உசுர கைல புடிச்சிகினு இருக்கேன்... இல்லனா நான் எப்பவோ செத்திருப்பேன்.' என்று கண்ணீர் மல்க தன் கதையை கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். கிருஷ்ணம்மாவின் கதை நந்தினியிற்கு ரவியை நினைவூட்டியது. அவளது மனம் மெதுவாக அவளினுடைய சித்தாந்தத்தோடு சாய தொடங்கியது. அதை கட்டுப்படுத்திக் கொள்ள சங்கீதா கூறிய வார்த்தைகளை நினைவுகோரி தன் அலைபேசியில் இடைநிறுத்தம் செய்த காணொளியை பார்க்கத் தொடங்கினாள். அந்த புலி ஒரு குறிப்பிட்ட மானை மட்டும் துரத்தி பிடித்தது. அப்போது கருவுற்ற அந்த மானின் வயிற்றிலிருந்து அந்த புலியின் தாக்குதலால் அதன் கரு வெளியே விழுந்தது. கடும் பசியில் இருந்த அந்த புலி அந்த கருவை பார்த்தவுடன் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்த கருவையும் அதன் தாயையும் தன் நாக்கினால் தடவி ஆசுவாச படுத்தியது. அது தன் பசியையும் பொருட் படுத்தாமல் தாய் மானையும் அதன் குழந்தையையும் மற்ற மிருகங்கள் அண்டாமல் தன்னுடைய பாதுகாப்பில் வைத்து கொண்டு, தாய் மான் குணமடைந்த பிறகு அவர்கள் இருவரையும் பாதுகாப்பான இடத்தில் விட்டுச் சென்றது. அந்த காணொளி முடிவில் "பரிவு, பச்சாதாபம் என்பது மனிதனுக்கு மட்டும் உண்டான குணம் கிடையாது" என்ற வாக்கியத்துடன் முடிந்தது.

இப்பொழுது நந்தினியின் மனம் மொத்தமாக அவளின் சித்தாந்தத்தோடு ஐக்கியமாகியது.

அவளின் பேச்சை கேட்டு படிக்க ஆரம்பித்தது, வேறு வேலைக்கு மாறியது என ரவி அவளிற்காக தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தது, மற்றும் தாயா மனைவியா என்ற சூழ்நிலையில் அவர்களை எதிர்த்து தன் பக்கம் சாய்ந்தது என ரவியின் ஞாபகங்கள் அவளின் எண்ணத்தை ஆக்கிரமித்தது. தன்னை கட்டுப் படுத்திக்கொள்ள முடியாமால் அழ தொடங்கினாள். இதை பார்த்த கிருஷ்ணம்மா

'என்னமா ஆச்சு?... ஏன் அழுவறீங்க?' என்று கேட்க

அவளை பார்க்காமல் நந்தினி

'தப்பு பண்ணிட்டேன்... நான் தனியா கஷ்டத்துல இருக்கும் போது என்னை உசத்தி விட்ட சித்தாந்தந்தை நம்பாம மத்தவங்க பேச்சை கேட்டு வழிமாறி எங்கேயோ போயிட்டேன்.' என்று தனக்குள் புலம்பிக் கொண்டே அந்த அறையை விட்டு நகர்ந்து சென்றாள்.

அவள் பின்னே கிருஷ்ணம்மாவ்வும்

'எங்க மா போற?... நில்லு மா... டாக்டர் வந்தா என்னை தான் திட்டுவாங்க.' என்று அவளை கூப்பிட்டவாறு பின் தொடர்ந்தே போனாள்.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்து ஒரு வாடகை வாகனத்தை பிடித்து தொடர்வண்டி நிலையத்தில் உள்ள ஒரு திண்ணையில் அமர்ந்தாள். நந்தினியிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கருவை கலைக்கலாமா? வேண்டாமா?... நாளை நிச்சய தார்தம் வேறு நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் இதை பிரகாஷிடம் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார். மறுபடி ரவியிடம் சென்றால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசனையில் மூழ்கி இருந்தாள். அவளின் அலைபேசி ஒலித்தது. அது யாழினியின் அழைப்பு. அதை எடுக்காமல் கண்களை மூடி யோசிப்பதை தொடர்ந்தாள். சிலநிமிடங்கள் கழித்து பிரகாஷிடமிருந்து அழைப்பு வந்தது. அதையும் ஏற்காமல் யோசித்துக் கொண்டிருந்தாள். இப்படியே சில மணி நேரங்கள் சென்றது. நந்தினியின் வீட்டிலிருந்து மாறி மாறி அழைப்புகள் வந்தபடி இருந்தன. சட்டென்று எழுந்து தன் வீட்டிற்கு சென்றாள். வீட்டினுள் அவளை பார்த்தவுடன் பதட்டமாக அவளின் தங்கை யாழினியும் மற்றும் அவளின் தாய் தந்தையும் சூழ்ந்தனர்.

'அக்கா எவ்வளவு தடவ கா உனக்கு கால் பண்றது... எங்க போயிருந்த?... என்னாச்சு...' என்று யாழினி கோவமாக நந்தினியிடம் கேட்கும் போது வெங்கடேசன் (நந்தினியின் தந்தை) அவளை கையமர்த்தி

'மொதல்ல பிரகாஷுக்கு போஃன் பண்ணி அவ வந்துட்டான்னு சொல்லு... காரணம் கேட்டார்னா வேற ஏதாவது ஏத்துக்கற மாதிரி ஒரு நல்ல காரணத்தை சொல்லு.' என்று கூறியவுடன், யாழினி தன் அலைபேசியை பிரகாஷை தொடர்பு கொண்டு

'பிரகாஷ் நான் யாழினி பேசறான்... அக்கா வந்துட்டா...' என்றாள்.

'.....'

'இல்ல... அவளோட ப்ரண்ட் பர்ஸை மிஸ் பண்ணிட்டாங்க அதுக்காக ஹெல்ப் பண்றதுக்கு போயிருக்கானு சொன்னேன்ல... துரதிர்ஷ்டவசமா அவளோட மொபைலையும் எங்கேயோ மிஸ் பண்ணிட்டா... அதை தேடி கண்டுபிடிக்கறதுக்கு தான் இவ்வளவு நேரம்.' - யாழினி.

'.....'

'சாரி பிரகாஷ்... ஷி இஸ் ஹாவிங் எ வெரி பேட் மெமோரி ஆன் போஃன் நம்பர்ஸ்... ஜஸ்ட் லைக் மீ....' என்று சிரித்தவாறே கூறிவிட்டு அலைபேசியை நந்தினியிடம் நீட்டினாள். நந்தினியும் அலைபேசியை காதில் வைத்தாள்.

'ஆர் யு ஆல்ரைட் நவ்.' -பிரகாஷ்.

'எஸ்... ஐயம் பெஃர்பெக்ட்லி ஆல்ரைட்.' என்று நந்தினி கூறியதை பார்த்த அனைவருக்கும் ஒரு வித மனத்திருப்தி ஏற்பட்டது. பிரகாஷின் தொடர்பை துண்டித்தவுடன் நந்தினியின் தாய் பத்மாவதி அவளிடம் வந்து

'கருவை கலைச்சது மனச ரொம்ப பாதிச்சிடுச்சா?... எங்க போயிருந்த?' என்று கேட்டாள்.

'என்கிட்ட எதுவும் கேக்காதீங்க.' - நந்தினி.

'நாளைக்கு நிச்சயதார்தத்துக்கு ரெடி தானே... ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸை மட்டும் தான் கூப்பிட்டிருக்கோம்... பிரகாஷோட பேஃமிலி ப்ரண்ட்ஸ் எல்லாரும் லைவா இன்டர்நெட் மூலமா இந்த பங்க்ஷனை பாக்க போறாங்க... உனக்கு எந்த பிரச்னையும் இல்லல?' -பத்மாவதி.

நந்தினி சிலநொடிகள் யோசனைக்கு பிறகு இல்லை என்று தலையசைத்து விட்டு மெதுவாக தன் அறைக்கு சென்றாள். மற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களை சந்தேகமாக பார்த்துவிட்டு நந்தினி போகும் திசையை யோசனையோடு பார்த்தனர்.

மறுநாள்

நந்தினி விழித்தெழுந்து நடு கூடத்திற்கு வரும் போது நிச்சயதார்த்த நிகழ்ச்சியால் அந்த வீடு பரபரப்பாக இருந்தது. நந்தினியை தவிர அவளின் வீட்டார் அனைவரும் ஆடம்பரமான உடை அணிந்திருந்தனர். பிரகாஷும் அவரின் தாயாரும் இணையதளம் மூலமாக நடுக்கூடத்தில் மாட்டப் பட்டிருந்த பெரிய திரையில் தங்கள் குடும்ப நண்பர்களோடு உரையாடி கொண்டிருந்தார்கள்
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
மறுநாள்

நந்தினி விழித்தெழுந்து நடு கூடத்திற்கு வரும் போது நிச்சயதார்த்த நிகழ்ச்சியால் அந்த வீடு பரபரப்பாக இருந்தது. நந்தினியை தவிர அவளின் வீட்டார் அனைவரும் ஆடம்பரமான உடை அணிந்திருந்தனர். பிரகாஷும் அவரின் தாயாரும் இணையதளம் மூலமாக நடுக்கூடத்தில் மாட்டப் பட்டிருந்த பெரிய திரையில் தங்கள் குடும்ப நண்பர்களோடு உரையாடி கொண்டிருந்தார்கள்.

'தங்களுடைய மருமகள் எங்கே?... அவளை பார்க்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்...' என்று ஒரு ஆங்கிலேய பெண்மணி கேட்க

'இன்னும் சில நிமிடங்களில் எங்கள் தேவதையை நீங்கள் நிச்சயமாக பார்க்க போகிறீர்கள்...'என்று புன்னகைத்தவாறே கூறினார் பிரகாஷின் தாயார் அவந்திகா.

நந்தினியின் குடும்பத்தாரின் தரப்பில் சங்கீதாவும், யாழினியின் நெருங்கிய தோழிகளும், வெங்கடேசனின் நெருங்கிய தோழர்களும் வந்திருந்தனர். இந்த சம்மந்தம் அமைந்ததிற்கு காரணமான நந்தினியின் தோழி நித்யாவும் இணைய தளம் மூலமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறியிருந்தாள்.

நடுக்கூடத்திற்கு வந்த நந்தினியை பார்த்து அவந்திகா

'டார்லிங் கெட் ரெடி சூன்...' என்றார்.

நந்தினி

'ஓகே ஆன்டி...' என்று கூறிவிட்டு தன் அறையினுள் சென்றாள்.

பத்து நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த நந்தினியை பார்த்து அனைவரும் அதிர்ச்சியுற்றனர். காரணம் அவள் தன் உடுப்பு பெட்டியை ஏந்தியவாறு சாதாரண உடையில் இருந்தது தான்.

'அக்கா... என்ன கா... என்னாச்சு... எங்க கிளம்பிட்ட?... எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க... போய் நிச்சய தார்த்தத்துக்கு ரெடி ஆகு.' - யாழினி.

'உன் வேலைய பாரு.' என்று அவளிடம் அழுத்தமாக கூறினாள் நந்தினி.

அவளிடம் பதட்டமாக நெருங்கிய பத்மாவதி

'என்ன பண்ற?... தயவு செஞ்சு எங்களை அவமான படுத்தாத... போய் ஒழுங்கா நிச்சயதார்தத்துக்கு ரெடி ஆகு.' என்றாள். பக்கத்தில் வெங்கடேசன் என்ன செய்வது என்று தெரியாமல் நந்தினியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மூவரிடமும் தனது பார்வையை படரவிட்டு நந்தினி

'நான் இன்னும் கர்ப்பமா தான் இருக்கேன்... பிரகாஷ் கிட்டேயும் அவர் அம்மா கிட்டேயும் மன்னிப்பு கேட்டுட்டு ரவி கிட்டேயே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.' என்றாள்.

'என்ன பைத்தியமா உனக்கு?... இவ்வளவு நாள் அமைதியா இருந்துட்டு அதென்ன கரெக்ட்டா நிச்சயம் பண்றப்போ திடீர் ஞானதோயம் உனக்கு?' என்று வெங்கடேசன் அவளிடம் கத்த,

'ஆமாம்... இவ்வளவு நாள் என்னோட சித்தாந்தத்தை மறந்துட்டு பைத்தியம் பிடிச்ச மாதிரி தான் இருந்தேன்... இப்போ தான் தெளிவா இருக்கேன்... இனிமேல் என் சித்தாந்தத்தை விடறதா இல்லை' என்று நந்தினி கூறியவுடன் வெங்கடேசன் தன் குரலை உசத்தி

'என்ன பெரிய பொடலங்கா சித்தாந்தம்... மண்ணாங்கட்டி... இப்போ எங்க பேச்சை கேக்காம போனேன்னா அப்படியே போயிட வேண்டியது தான்... இனிமேல் என் வீட்ல உனக்கு இடம் இல்ல... எங்களுக்கு ஒரே பொண்ணு யாழினி தான்' என்று கோபமாக பேசிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த பத்மாவதி வெங்கடேசனிடம்

'ரொம்ப கோவ படாதீங்க... உங்களுக்கு ப்ரெஷர் அதிகமாயிட போகுது.' என்று கையமர்த்தி அவரை ஆசுவாச படுத்தினாள்.

'என்னை எல்லாரும் தனியா ஒதுக்கி நான் எது பண்ணினாலும் ஒரு கேலி கூத்தா எடுத்துக்கற கூட்டத்துக்கு மத்தியில என்னை மேல உசத்தி, அவங்களை என்கிட்ட அடி பணிய வெச்சது என்னோட சித்தாந்தம் தான்... என்னை ரவி கிட்ட கொண்டு போனதும் என்னோட சித்தாந்தம் தான்... அந்த சித்தாந்தத்தோட விதையே "நியாயமா நேர்மையா மத்தவனுக்கு துரோகம் செய்யாம இருந்தாலே போதும் கடவுள் நமக்கு நல்லது தான் செய்வார்... யார் உதவியையும் எதிர் பாத்து வாழ வேண்டாம் "னு நீ உன் ப்ரண்டு ஒருத்தர் கிட்ட சொன்னது தான்... இப்போ அந்த சித்தாந்தம் தான் என்னை இயக்குது... இப்போ நான் உறுதியாவும் தைரியமாவும் இருக்கேன்.' என்று நந்தினி கூறிக் கொண்டிருக்கும் போது

'வாட் ஹாபேண்ட்? எனி ப்ராப்லம்?' என்று வினவிக் கொண்டே பிரகாஷின் தாயார் அவந்திகா அவர்களை நோக்கி நடந்து வர தொடங்கினார். உடன் பிரகாஷும் வந்து கொண்டிருந்தார். அவர்கள் வருவதை பார்த்த வெங்கடேசன் பதட்டத்துடன் நந்தினியிடம் தன் குரலை தாழ்த்தி கெஞ்சுகிற தொனியில்

'ஐயோ அத எப்போ சொன்னேனே தெரியலையே... ஏதாவது படத்தை பாத்து எவன்கிட்டயாவது உணர்ச்சிவசப்பட்டு பேசிருப்பேன்... அதெல்லாம் நீ அவ்வளவு சீரியஸா எடுத்துக்க கூடாது மா... பட்டு இல்ல... என் செல்லம் இல்ல... சொல்றத கேளும்மா... அப்பா அம்மா உன் நல்லதுக்கு தானே செய்யறோம்... பாரு அவங்க பக்கத்துல வந்துகிட்டே இருக்காங்க... தயவு செஞ்சு டக்குனு மனச மாத்திக்கமா...' என்று கெஞ்சும் போது நந்தினி அதை சற்றும் பொருட் படுத்தாமல்

'சாரி பா... என்னை மன்னிச்சிருங்க... என்னால என் சித்தாந்தத்தை மீறி இனிமேல் நடக்க முடியாது...' என்று கூறிவிட்டு பிரகாஷின் தாயாரிடம் அவளே சென்றாள். வெங்கடேசன் ஒரு பெரு மூச்சுடன் அவளை முறைக்க தொடங்கினார்.

அவந்திகாவிடம் நந்தினி சென்று

'சாரி ஆன்டி... உங்க கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன்... நான் ப்ரெக்னென்ட்டா இருக்கேன்... எனக்கு அதை அபார்ட் பண்ண மனசு வரலை... அதனால என்னால உங்க பையனை கல்யாணம் பண்ணிக்க முடியாது...' என்றாள். இதை சிறிதும் எதிர்பாக்காத பிரகாஷின் தாயார் அவந்திகா திடுக்கிட்டவாறு பிரகாஷை பார்த்தார். பிரகாஷும் அந்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் மெளனமாக அவரின் தாயை பார்த்தார். சில நொடிகள் அங்கே நிசப்தம் பரவியது. அப்போது பிரகாஷின் தாயை இணைய தளம் மூலமாக ஒலிபெருக்கியில்

'தங்கள் தேவதையை நேரில் சீக்கிரம் காட்டுங்கள்... நாங்கள் ஆவலாக எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அவந்திகா...' என்று ஒரு குரல் அழைத்தது.

அவந்திகா ஒரு நீண்ட உள் மூச்சை இழுத்து விட்டு நந்தினியை பார்த்து

'சரி... அந்த குழந்தையை நீ அபார்ட் பண்ண வேண்டாம்... நான் அதை வளத்துக்கறேன்... இப்போ உனக்கு பிரகாஷை கல்யாணம் பண்ணிக்கறதுல ஏதாவது பிரச்சனை இருக்கா?' என்று கேட்டார்.

அவர் கூறியதை கேட்டவுடன் அவளின் மனம் அவளின் சித்தாந்தத்தை விட்டு வெளியில் உள்ள சூழலோடு இணைந்தது. தன் கண்களை மூடிக் கொண்டு சில நொடிகள் கழித்து கண்களை திறந்து அவந்திகாவிடம்

'என்னை மன்னிச்சிருங்க மா... இனிமேல் நான் என்னை குழப்பிக்கறதா இல்லை... என் மனசுக்கு பிடிக்குதோ இல்லையோ நான் என்னோட ஐடியாலஜியை மாத்திக்கறதா இல்லை... கஷ்டமோ நஷ்டமோ நான் என் பழைய வாழ்க்கையையே வாழ்ந்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்... உங்க பையனுக்கு வேற நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணி வைங்க.' என்றாள். அந்த இடத்தில் இருந்த அனைவரும் அவளை முறைக்க தொடங்கினர். அதே நிசப்தம் தொடர்ந்தது. மறுபடி இணைய தளத்திலிருந்து

'யாரும் அங்கு இல்லையா...' என்று கூறிவிட்டு பிரகாஷின் தாயாரின் பெயரை அழைத்தது ஒரு ஆங்கிலேயரின் குரல். குரல் வந்த திசையில் திரும்பிய அவந்திகா இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் திரையின் முன் நின்றார்.

'தங்கள் தேவதை எங்கே?' என்று அவரின் ஆங்கிலேய நண்பர்கள் கேட்டவுடன் அமைதியாக சில நொடிகள் திரையையே பார்த்து, சட்டென்று ஒரு புன்னகையை சிந்தி விட்டு

'பொறுமையாக இருந்ததற்கு மிக்க நன்றி... இன்னும் சில நொடிகளில் உங்கள் முன் எங்கள் தேவதையை காட்டுகிறேன்.' என்று கூறிவிட்டு நந்தினியிடம் பார்வையை திருப்பினார். நந்தினி தன்னை கட்டுப் படுத்தி கொள்வதற்காக தன் பார்வையை வேறு திசையில் திருப்பிக் கொண்டாள். நந்தினியை பார்த்து புன்னகைத்த அவந்திகா அவளை பார்த்துக் கொண்டே

'யாழினி இங்க வந்து என்னோட ப்ரண்ட்ஸுக்கு ஒரு ஹை சொல்லு' என்றார்.

அனைவரும் திடுக்கிட்டு யாழினியை பார்த்தனர். யாழினியும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

'சீக்கிரம் வாம்மா.' என்று மறுபடி அவர் கூப்பிட

யாழினி தயக்கமாக அந்த திரையின் முன் நின்று

'ஹை...' என்று ஒரு செயற்கை புன்னகையை சிந்தினாள்.

அவளை பார்த்தவுடன் இணையதளத்தில் அனைவரும்

கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் ஒருவர்

'ஹை நந்தினி... தங்களுடைய முகம் இவர் அனுப்பிய புகைப்படத்தில் வித்யாசமாக இருந்தது...' என்று ஆங்கிலத்தில் கூற

உடனே அவந்திகா குறுக்கிட்டு

'நோ... ஷி ஐஸ் யாழினி... நந்தினி ஐஸ் ஹெர் சிஸ்டர்... ' என்று கூறிவிட்டு 'கல்யாண சந்தோஷம் என் தேவதையின் அழகை மெருகூட்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்... அந்த புகைப்படத்தை மறந்துவிட்டு நேரொளியை கண்டு மகிழுங்கள்...' என்று அவர் ஆங்கிலத்தில் கூறி சமாளித்தார்.

பிறகு திரையை விட்டு விலகி அவர் யாழினியிடம்

'சாரி... உங்க அக்கா அப்படி சொன்னவுடனே எனக்கு என்னை பண்றதுன்னு தெரியலை... அங்க அந்த ஸ்க்ரீன் முன்னாடி நின்னவுடனே தான் உன் ஞாபகம் வந்துச்சு... நிச்சயமா நீ இதுக்கு சம்மதிப்பேனு தோணுச்சு... அதான் உன் கிட்ட பெர்மிஷன் கேக்காமலே என் ப்ரண்ட்ஸ்கிட்ட உன்னை என் மருமகள்னு சொல்லிட்டேன்... உனக்கு இதுல ஏதாவது பிரச்சனை இருக்கா?' என்று கேட்டார்.

யாழினி இல்லை என்று தலையசைக்க, அவளை கட்டி அணைத்து பிரகாஷை பார்த்து

'ரெண்டு பேரும் ஜோடியா ஸ்க்ரீன் முன்னாடி நில்லுங்க.' என்று கூறிவிட்டு மற்றவர்களிடம்

'சீக்கிரம் நிச்சய தார்த்த பங்க்ஷனை ஆரம்பிங்க.' என்று கூறினார்.

நந்தினி அமைதியாக நின்று கொண்டிருக்க, வெங்கடேசனும் பத்மாவதியும் அவளின் வாழ்க்கையை எண்ணியவாறு அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரகாஷின் தாயார் அவந்திகா அங்கே வந்து

'என்ன ரெண்டு பேரும் அமைதியா நிக்கறீங்க... போங்க... பங்க்ஷனுக்கு நடக்க வேண்டிய வேலைய பாருங்க...' என்று வெங்கடேசனிடமும் பத்மாவதியிடமும் கூறிவிட்டு, நந்தினியை சில நொடிகள் பார்த்தார். சட்டென்று மாறிய சூழ்நிலையை நந்தினியின் மனம் ஏற்க மறுத்தது.

'நல்ல வாழ்க்கையை தவற விட்டுவிட்டாயே...' என்று அவளின் மனம் குத்திக் கொண்டே இருந்தது. அதனால் அவந்திகாவினுடைய பார்வையை அவளால் பார்க்க முடியவில்லை. மெதுவாக தன் தலையை குனித்தாள். சட்டென்று தன் மனதை கட்டுப் படுத்தி அதை விழிப்புணர்வு மூலமாக தன் சித்தாந்தத்தோடு இணைத்து, தன் தலையை குனித்த அடுத்த நொடியில் தலையை நிமிர்த்தி, அவந்திகாவினுடைய பார்வையோடு தன் பார்வையை பதித்தவாறே,

'அப்பா... அம்மா... இனிமேல் உங்களுக்கு ஒரு பொண்ணு தான் ... அது யாழினி தான்... நான் கிளம்பறேன்... என்னை பத்தி கவலை பட்டு உங்க நேரத்தை வீணாக்க வேண்டாம்... நான் நம்புற என்னோட ஐடியாலஜி என்னை நல்லபடியா வெச்சுக்கும்...' என்று கூறிவிட்டு அந்த வீட்டை விட்டு செல்ல முற்படும் போது சங்கீதா அவளை தடுத்து அங்கேயே இருப்பதற்கு சமாதானம் செய்ய முயற்சி செய்து தோற்று போனாள். ரவியின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது அவளின் அலைபேசியிற்கு அவளின் தந்தையும் சங்கீதாவும் மாறி மாறி அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். அது அவளிற்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால் அவளின் கைபேசியை அமர்த்தினாள்.

ரவியினுடைய வீட்டை நெருங்கும் போது அந்த வீட்டின் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. என்னவாயிருக்கும் என்ற பயத்தோடு வீட்டின் வளாகத்தினுள் நுழைந்தாள். அப்போது வெளியே அமர்ந்து கொண்டிருந்த ரவியின் தாயார் வாசுகி நந்தினியை பார்த்தவுடன் அவளை நோக்கி கோபமாகவும் வேகமாகவும் நடந்து வர, ரவியின் தங்கை சுமதி அவளை தடுத்து நிறுத்த முயற்சித்தவாறே உடன் நடந்து வந்தாள். நந்தினியை நெருங்கிய வாசுகி அவளை முறைத்தவாறே ஆக்ரோஷத்தோடு

'எங்க வந்த?... எல்லாரையும் கொன்னுட்டு போகலாம்னு வந்திருக்கியா?' என்று கேட்க, நந்தினி ஒரு நீண்ட உள் மூச்சை இழுத்துவிட்டு

'நான் மறுபடி ரவி கூடவே வாழலாம்னு வந்திருக்கேன்.' என்றாள்.

உடனே சுமதி குறுக்கிட்டு

'நந்தினி... பேசாம அமைதியா உங்க வீட்டுக்கே போயிடு...' என்றாள்.

நந்தினி தன் பார்வையை சுமதியிடம் திருப்பி

'நீ உன் வேலைய பாரு... அதை ரவி சொல்லட்டும் நான் போறேன்.' என்றாள்.

வாசுகி நந்தினியிடம்

'ரவி வந்து சொல்லனுமா உனக்கு?... அவன் தற்கொலை பண்ணிகிட்டான்... இப்போ திருப்தியா?' என்று கோபமாக கத்தினாள்.

வாசுகியின் வார்த்தைகளை ஏற்க மறுத்தது நந்தினியின் மனது.

'நான் நம்பமாட்டேன்.' என்று அவர்கள் இருவரையும் மீறி

'ரவி... ரவி...' என்று கத்தி கொண்டே வீட்டை நெருங்கினாள். அப்போது ரவியின் தந்தை அவளின் முன் நின்று

'நந்தினி... நீ உன் வீட்டுக்கே போயிடுமா... போய் வேற கல்யாணம் பண்ணி புது வாழ்க்கையை ஆரம்பி...' என்றார்.

'அப்பா நான் கர்பமா இருக்கேன்... இனிமேல் ரவி கூட தான் நான் வாழுவேன்னு எங்க வீட்ல சொல்லிட்டு வந்திட்டேன்... இனிமேல் நான் ரவியை விட்டு பிரிய மாட்டேன்... ப்ளீஸ் என்னை உள்ள விடுங்க...' என்றாள்.

சில நொடிகள் யோசித்த தேசிகன்

'ரவி இங்க இல்ல மா…' என்றார்.

'ஏன் அவர் எங்க போயிருக்கார்?' - நந்தினி.

அவள் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அருணை சில நொடிகள் பார்த்து விட்டு, மறுபடி நந்தினியை பார்த்து அமைதியாக நின்றார்.

அவர் அமைதியாக நிற்பதை பார்த்தவுடன் ரவியிற்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டதா என்ற பயம் அவளினுள் தோன்றியது.

பயத்தை கண்ணீராய் வெளிக்காட்டியவாறே

'ரவிக்கு என்னாச்சு?' என்று கேட்டாள்.

'உங்க அப்பா அம்மா வந்துட்டு போன ரெண்டாவது நாளே அவன் தற்கொலை பண்ணிக்கறதா லெட்டர் எழுதி வெச்சிட்டு போயிட்டான்... நாங்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்லைன் கொடுத்திருந்தோம்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன்லெருந்து கால் வந்துச்சு... அதான் நானும் அருணும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பறோம்.' என்றார் தேசிகன்.

'போலீஸ் ஸ்டேஷன்ல அவரை பத்தி ஏதாவது சொன்னாங்களா?' - நந்தினி.

அமைதியாக அவர் தலையை பக்கவாட்டில் அசைத்தவாறே

'"உங்க பையன் விஷயமா ஒரு தகவல் கிடைச்சிருக்கு"னு சொன்னாங்க மேற்கொண்டு கேட்டதுக்கு அவங்க சரியா பதில் சொல்லல...' என்றார்.

நந்தினியும் அவர்களோடு காவல் நிலையத்திற்கு புறப்பட எத்தனித்தாள்.

உடனே தேசிகன் கையமர்த்தி

'நந்தினி நீ வர வேண்டாம்... நீ கர்பமா வேற இருக்க... உனக்கு அங்க வர்றது உடல் வலியை மட்டுமில்ல மன வலியையும் கொடுக்கும்... அது உன்னுடைய கருவுக்கு நல்லதில்லை' என்று தேசிகன் கூறினாலும்

'என்ன நடந்தாலும் பரவயில்லை...' என்று தன்னை திடப் படுத்திக் கொண்டு அவர்களோடு காவல் நிலையத்திற்கு சென்றாள்.

காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது, இந்த வழக்கை கையாண்டு கொண்டிருக்கும் அதிகாரி

‘ஆனைமலை பகுதியில ஒருத்தர் சூசைட் பண்ணிகிட்டாராம்... அவரோட போஃட்டோவை அனுப்பியிருக்காங்க... உங்க பையன் முகமான்னு பாருங்க' என்று கூறிவிட்டு ஒரு புகைப்படத்தை காட்டினார்.

அந்த புகைப்படம் ரவியின் முகத்தோடு ஒத்திருந்தது.

உடனே தேசிகன் பதட்டமாக

'பாக்கறதுக்கு என் பையன் ரவி மாதிரி தான் இருக்கு... இப்போ இவரோட நிலைமை என்ன?... உயிரோட இருக்காரா?'

'தெரியலை... நீங்க வந்து கண்பர்ம் பண்ண பிறகு ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு போஃன் பண்ணலாம்னு இருந்தேன்... இப்போ போஃன் பண்றேன்...' என்று அந்த அதிகாரி கூறிவிட்டு, தன்னுடைய மேஜையில் இருந்த தொலைபேசியிலிருந்து ஆனைமலை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சில நிமிடங்கள் பேசிவிட்டு, அந்த தொடர்பை துண்டித்தவுடன் அவர்களைப் பார்த்த அதிகாரி சற்று தயக்கமாக

'அங்க பேசுனதுல போட்டோல இருக்கற ஆளோட நிலைமை பத்தி சரியான தகவல் கிடைக்க மாட்டேங்குது... இந்த கேஸ் சம்மந்தப்பட்ட அதிகாரி நாளைக்கு மார்னிங் ஷிப்ட் வருவாரு... ஒன்னு பண்ணுங்க நீங்க நாளைக்கு வாங்க...' - அதிகாரி.

உடனே நந்தினி குறுக்கிட்டு

'இல்ல பரவாயில்ல சார்... ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு நானே போய் இந்த கேஸ் சம்மந்தப்பட்ட அதிகாரியை கேட்டு விசாரிச்சுக்கறேன்... நீங்க அந்த போலீஸ் ஸ்டேஷனோட அட்ரஸை மட்டும் கொடுங்க... ' என்றார்.

ஆனைமலை சென்னையிலிருந்து 500 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. மூவரும் அந்த காவல் நிலையத்தின் முகவரியை பெற்றுக் கொண்டு ஆனைமலைக்கு ஒரு வாடகை சொகுசு வாகனத்தில் பயணித்தனர்.

பயணத்தின் போது நந்தினியிற்கு உறக்கம் வரவில்லை.

'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கையை உதறி தள்ளிட்டு வந்தேன்... நான் போற பாதை சரியா தப்பா... ' என்று தன் வாழ்கையை பற்றி சிந்தித்து கொண்டே வந்தாள்.

அப்பொழுது தேசிகன் நந்தினியிடம்

'நீ ஏன் மா அவனை விட்டுட்டு போன?... ஒரு வேளை நீ போகாம இருந்திருந்தா அவன் தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு போயிருக்க மாட்டான்னு தோணுது.' என்றார்.

அமைதியாக சில நொடிகள் யோசித்த நந்தினி

'உங்க கிட்ட ஒரு விஷயத்தை கேக்கணும்?' என்று தேசிகனிடம் வினவினாள்.

'என்னமா?' - தேசிகன்.

 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
'ஏன் யாரும் ரவியை ஒழுங்கா நடத்த மாட்டேங்கறீங்க?... அவர் தான் உங்க குடும்பத்துக்கே மூத்த பிள்ளை அவருக்கு தர வேண்டிய மரியாதையை ஏன் கொடுக்கல?... நீங்களும் உங்க மனைவியும் உங்க ரெண்டாவது பையனுக்கும் பொண்ணுக்கும் தான் முக்கியத்துவம் தரீங்க... ஏன் இந்த பாகுபாடு?... சரி அவரோட தம்பி தங்கச்சியாவது அவருக்கு அண்ணான்னு மரியாதை கொடுக்கறாங்களா?... அதுவும் இல்லை... அவரை ரொம்பவும் இளக்காரமா நடத்தறாங்க... அவங்க எனக்கு அண்ணி ன்ற மரியாதையும் கொடுக்கலை... மனசுக்கு பிடிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட ரவியை நான் விட்டுட்டு போனதுக்கு முக்கிய காரணமே நீங்க எல்லாரும் தான்... இப்படி இருக்கும் போது நீங்க என்னை மட்டும் கேள்வி கேக்கறது நியாயமா ?... அவர் தற்கொலை பண்ணிக்கறதுக்கு காரணம் நான் மட்டும் இல்ல நீங்க, உங்க மனைவி, அருண், சுமதி எல்லாரும் தான் காரணம்.' என்றவுடன் அருண் குறுக்கிட்டு

'நீங்க வேற ஒருத்தரோட மனைவியா இருந்திருந்தா நிச்சயமா உங்களுக்கு மரியாதை கொடுத்திருப்பேன்... நீங்க ரவியோட மனைவின்றதுனால எனக்கு இயற்கையாவே உங்கள மதிக்கணும்னு தோன மாட்டேங்குது.' என்றான்.

நந்தினி தன் பார்வையை அருணிடம் திருப்பி

'ஏன்?' என்று வினவினாள்.

அருண் முகத்தில் வெறுப்பை காட்டியவாறே

'ஏன்னா அவன் ஒரு பொறுக்கி... உலகத்துல வாழ தகுதியே இல்லாத ஒரு ஜந்து... அவனால என் அப்பா அம்மா எவ்வளவு அவமான பட்டிருக்காங்க தெரியுமா?... என்னோட பாசத்தையும் என் தங்கச்சியோட பாசத்தையும் புரிஞ்சிக்க தெரியாத ஒரு மிருகம்.' என்று கோவமாக பேசும் போது தேசிகன் அவனை கையமர்த்தினார்.

அருண் தேசிகனை பார்த்து

'அப்பா... நீங்க அமைதியா இருங்க பா...' என்று கூறிவிட்டு நந்தினியை பார்த்து

'நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க... அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை... திருடறது, கண்ட பொறுக்கிங்களோட சேர்ந்துக்கிட்டு பொறுக்கி தனம் பண்றது, பொண்ணுங்கள பாஃலோவ் பண்றதுன்னு ஏக பட்ட கெட்ட பழக்கங்கள்... வெளியில ஏதாவது பெரிய பிரச்னையை உருவாக்கிட்டு அதை வீடு வரைக்கும் எடுத்துட்டு வந்துருவான்... கொஞ்சம் கூட தகுதியே இல்லாத கண்ட கண்ட புறம்போக்கேல்லாம் என் அப்பா அம்மாவுக்கு அட்வைஸ் பண்ணிட்டு போவாங்க... இப்படி பட்டவனை நான் எப்படி அண்ணனா ஏத்துக்கறது?' என்றான்.

'சின்ன வயசுல அப்படி இருந்திருக்கலாம்... நான் அவரோட பழகினவறைக்கும் அவர் கிட்ட நீ சொல்ற இந்த குணங்களெல்லாம் பாத்ததே கிடையாது... அவர் திருந்துனதுனால தான் அவரால பத்து வருஷம் ஒரு கம்பெனில வேலை செய்ய முடியுது...' - நந்தினி.

'கம்பெனிக்கு போயிட்டு இருக்கும் போதும் அதே மாதிரி பிரச்சனைகளை பண்ணிட்டு தான் இருந்தான்... இப்போ தான் ஒரு ரெண்டு மூணு வருஷமா அமைதியா இருக்கான்... அவனை நம்பறதுக்கு இல்லை... இப்படி தான் திடிர்னு "நான் திருந்திட்டேன்... இனிமேல் நான் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டேன்"னு சொல்லுவான்... நாங்களும் அதை நம்பி அவனுக்கு மரியாதை கொடுப்போம்... அப்புறமா போக போக அவன் அவனோட சுய ரூபத்தை காட்டுவான்... எங்களோட சின்ன வயசுல தினமும் காலைல எழுந்திருக்கும் போது ஏதாவது பிரச்சனை இருந்துகிட்டே இருக்கும்... அதுக்கு காரணம் அவனா தான் இருப்பான்... வீட்ல நிம்மதியே இருக்காது... வீட்ல இருக்கற பொருளையெல்லாம் தூக்கி போட்டு உடைப்பான்... ஒரு வாட்டி என் அப்பாவை அடிச்சிருக்கான்... என்னையும் என் தங்கச்சியையும் அடிச்சிருக்கான்... என் அம்மாவை கழுத்த நெறிச்சு கொல்ல முயற்சி பண்ணிருக்கான்... அப்போ நானும் என் தங்கச்சியும் வெளியில போய் சத்தம் போட்டோம்... பக்கத்து வீட்டுக்காரங்க எல்லோரும் உள்ளே வந்து அவனை அடிச்சு வெளிய தள்ளினாங்க... போலீஸ் கிட்டேயும் கம்ப்லைன் பண்ணி அவனை அடி வாங்க வெச்சோம்... அப்புறம் என் அம்மா தான் அவனை விடுங்கன்னு சொல்லி கூட்டிகிட்டு வந்தாங்க... அக்கம் பக்கத்துல எங்களுக்கு ரொம்ப அவமானம் ஆயிட்டதுனால நாங்க இருந்த சொந்த வீட்டை வித்துட்டு வேற வீட்டுக்கு வாடகைக்கு மாறினோம்... எங்க போனாலும் அவன் அடங்குன மாதிரி தெரியலை... அவனால இதோட ஏகப்பட்ட வீட்டை மாத்திட்டோம்... அவனுக்குள்ள இருக்கற காட்டு மிராண்டி தனம் எப்போ வேணும்னாலும் வெளிய வரலாம்ன்ற பயம் எங்க எல்லாருக்கும் இருந்து கிட்டே தான் இருந்துச்சு... நான் எவ்வளோவோ வாட்டி என் அப்பா அம்மாவுக்கு "அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சு ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்காதிங்க"னு எடுத்து சொன்னேன்... என் அம்மா தான் கேக்கவே இல்ல... இப்போ கூட அவன் தற்கொலை பண்ணிக்கிட்டது எந்த வருத்தத்தையும் எனக்கு தரலை... எனக்கு உங்கள நெனச்சா தான் பாவமா இருக்கு... நீங்க உங்க வயத்துல இருக்கற கருவை அபார்ட் பண்ணிட்டு பேசாம வேற நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கோங்க.' - அருண்.

அவன் கூறியதை கேட்டவுடன் நித்யா தனது கணவர் கூறியதாக சொன்ன ரவியை பற்றிய விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்து போனது.

'இப்படி பட்ட ஒரு ஆளை ஏன் என் மனசு நேசிக்கணும்?... நான் ஏன் அவரை கல்யாணம் பண்ணிக்கணும்?... நான் போற பாதை சரியா இல்ல நான் என்னோட ஐடியாலஜியை பாஃலோவ் பண்றேன்ற பேர்ல பைத்தியக்காரதனத்தை பண்ணிக்கிட்டு இருக்கேனா?' என்று தன்னை தானே வினவிக் கொண்டு பயணித்தாள்.

ஆணை மலை பகுதி காவல் நிலையத்தை அடைந்தது அந்த வாகனம். மூவரும் இறங்கி சம்மந்தப்பட்ட அதிகாரியை சந்தித்தனர்.

'மலை பகுதில மலைவாசி மக்கள் யாரோ ஒருத்தன் மலைலேருந்து குதிக்கறதை பாத்துட்டு அவன் விழுந்த இடத்துக்கு ஓடி போய் பாத்திருக்காங்க... அங்க தலைல பலமா அடிபட்டு ரத்தவெள்ளத்துல இருந்த ஒரு ஆளை உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு வந்து அட்மிட் பண்ணிட்டாங்க... தலைல அடிபட்டதுனால இன்னும் மயக்கமா தான் இருக்கார்... மேற்கொண்டு நீங்க டாக்டர் கிட்ட தான் பேசணும்... வாங்க நாம அந்த ஹாஸ்பிடலுக்கு போகலாம்...' என்று அந்த அதிகாரி அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவமனையினுள் அவர்கள் மூவரையும் ஒரு பெண் மருத்துவரிடம் அறிமுக படுத்திவிட்டு அங்கிருந்து விடைபெற்று நகர்ந்தார் அந்த அதிகாரி.

'பேஷண்ட் தலைல அடிபட்டதுனால இன்னும் எந்த மூவ்மென்ட்ஸையும் நான் அப்செர்வ் பண்ணல... இன்னும் அவரோட ஹார்ட் பீட் துடிச்சிகிட்டு தான் இருக்கு... வாங்க மொதல்ல அந்த பேஷண்ட் நீங்க தேடுற ஆளானு கஃன்பெர்ம் பண்ணலாம்...' என்று அவர்களிடம் பொதுவாக சொல்லிவிட்டு, அவர்களை தீவிர சிகிச்சை பிரிவினுள் அழைத்து சென்று ஒரு நோயாளியை காண்பித்தார்.

நந்தினி அந்த நோயாளியை உற்று பார்த்தாள். அது ரவி என்று ஊர்ஜிதமாகியது. அவனை அந்த நிலைமையில் பார்த்தவுடன் அதிர்ச்சியை வெளி படுத்தி அழுதாள். பக்கத்தில் இருந்த பெண் மருத்துவர் நந்தினியை ஆசுவாச படுத்தினார்.

'ரவிக்கு எப்போ சரியாகும்... உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே ?' என்று மருத்துவரிடம் வினவினார் தேசிகன்.

'உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை... அவர் ஏன் மயக்கமா இருக்கார்னு இன்னும் டயக்னோஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம்... இன்னும் கொஞ்ச நேரத்துல ரிப்போர்ட் ரெடி பண்ணிடுவோம்... நீங்க இங்கேயே ட்ரீட்மெண்ட் பண்றீங்களா? இல்ல உங்க சொந்த ஊருக்கு கொண்டு போறீங்களா?' என்று கேட்டார் மருத்துவர்.

நந்தினி கர்பமாக இருக்கும் காரணத்தால் சென்னையில் இருக்கும் மருத்துவ மனையில் ரவியை அனுமதித்து அங்கேயே சிகிச்சை தர முடிவெடுத்தார் தேசிகன். அன்றே ரவியை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்தனர்.

இரவு 10 மணி அளவில் சென்னையில் ஓர் மருத்துவமனையில் ரவி அனுமதிக்கப்பட்டான். அந்த இடத்தில பரவியிருந்த நிசப்தத்தை அருண் தேசிகனிடம் பேச ஆரம்பித்து கலைத்தான்.

'நீங்களும் நந்தினியும் வீட்டுக்கு போங்க பா... நான் இங்க இருந்து ரவியை பாத்துக்கறேன்...' என்றான்.

உடனே தேசிகன்

'இருப்பா அம்மா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுவோம்...' என்று தேசிகன் அருணிடம் கூறிவிட்டு வாசுகியின் அலைபேசியை தொடர்பு கொண்டார்.

மறு முனையில் தொடர்பை ஏற்றுக் கொண்டதிற்கான சப்தம் கேட்டது.

'வாசுகி... தேசிகன் பேசறேன்... அருண் இங்க இருந்து ரவியை பாத்துக்கறானாம்... என்னையும் நந்தினியையும் கிளம்ப சொல்றான்...' - தேசிகன்.

நிசப்தமாக இருந்த அறையில் தேசிகனின் அலைபேசியில் வாசுகி பேசும் சத்தமும் தெளிவாக கேட்டது.

'அதெல்லாம் ஒன்னும் வேணாம்... நந்தினியே அங்க இருந்து பாத்துக்கட்டும்... நீங்க ரெண்டு பேரும் உடனே கிளம்பி வாங்க...' என்று வாசுகி கூறியது அருண் மற்றும் நந்தினி காதிலும் விழுந்தது.

உடனே அருண் அலைபேசியை தேசிகனிடமிருந்து பறித்து

'அம்மா... அவங்க ப்ரெக்னென்ட்டா இருக்காங்க... நான் ரவியை பாத்துக்கறேன்...' என்றான்.

'இது அவளோட வாழ்க்கை பிரச்சனை... அவளே தான் பாத்துக்கணும்... அப்பாவும் நீயும் கிளம்பி வாங்க...' என்று அலைபேசியின் தொடர்பை துண்டித்தாள் வாசுகி.

அருண் மெளனமாக நந்தினியை பார்த்துவிட்டு, தலையை சில நொடிகள் கீழ் நோக்கி குனித்து, பிறகு

'அப்பா நான் வெளியில வெயிட் பண்றேன்... வாங்க...' என்று அந்த அறையை விட்டு கிளம்பினான்.

தேசிகனும் நந்தினியை பார்த்து

'சரிம்மா... நான் கிளம்பறேன்...' என்று அவரும் அமைதியாக கிளம்பினார்.

நந்தினியிற்கு வாசுகி பேசியதும் தேசிகன் மற்றும் அருணின் நடத்தையும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது.

'தான் பெத்தெடுத்த பையன் ஹாஸ்பிடல்ல சீரியஸ் கண்டிஷன்ல இருக்கான்... அந்தம்மாவுக்கு வந்து பாக்கணும்னு கூட தோணலை... அதுவுமில்லாம நான் கர்ப்பமா இருக்கேன்னு அருண் சொல்லும் போதும் அவங்க ஏன் கொஞ்சம் கூட இறக்கமே இல்லாம நடந்துக்கிட்டாங்க...' என்று யோசித்தவாறே ரவியை பார்த்தாள். அவன் மயக்க நிலையில் இருந்தான். ரவியின் பக்கத்தில் ஒரு மெலிதான இரும்பு கம்பம் சத்துநீர் நிரம்பியிருந்த ஒரு கொள்கலனை ஏந்தி இருந்தது. அந்த கொள்கலனில் இருந்த குழாயில் இணைக்க பட்டிருந்த ஊசியின் மூலம் ரவியிற்கு சத்துநீர் உட்செலுத்தப் பட்டுக் கொண்டிருந்தது.

'இதெல்லாம் ஏன் நடக்குது?... எனக்கு ஏன் ரவியை பிடிக்கணும்... நான் ஏன் அவரை விட்டு போகணும்?... நான் ஏன் எனக்கு கிடைக்க இருந்த வாழ்க்கையை தவறவிட்டுட்டு மறுபடி ரவி கிட்டயே வரணும்... எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கா?... இல்ல இதெல்லாம் என்னோட முட்டாள் தனத்தோட விளைவா?' என்று சில நிமிடங்கள் யோசித்தவாறே தன்னை அறியாமல் உறங்கினாள்.

அவளின் உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. அந்த கனவில் மெல்லிய குளிர் காற்றின் வருடலில் எங்கும் மகரந்தம் சூழ்ந்து பச்சைபசேலென்றிருக்கும் ஒரு அழகிய பூஞ்சோலையில் நந்தினியும் ரவியும் ஒரு குழந்தையுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது. சட்டென்று யாரோ தன்னை எழுப்புவதை போல உணர்ந்தாள் நந்தினி. எழுத்து கண்களை மூடி கைகளால் அதை மெதுவாக அழுத்தி நீவினாள். நந்தினியிற்கு தான் எப்போது உறங்க ஆரம்பித்தோம் என்பதே நினைவில் இல்லை. கண்களை மெதுவாக திறந்தாள். அவள் கண் முன் அவளின் தந்தை வெங்கடேசன், தாய் பத்மாவதி மற்றும் தோழி சங்கீதா ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சில நொடிகள் பார்த்துவிட்டு ரவியிடம் பார்வையை திருப்பினாள்.

இப்போது அவன் கண்கள் திறந்திருந்தது. உடனே நந்தினி அவர்களை பொருட்படுத்தாமல்

'ரவி...ரவி....' என்று அவன் அருகில் சென்றாள். அவன் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ரவியின் கருவிழிகள் அசைந்தனவே தவிர மற்றபடி அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை.

'ரவி...ரவி... நான் பேசுறது கேக்குதா ?...' என்று மறுபடி ரவியை பார்த்து வினவினாள். ரவியிடம் எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அவனின் பார்வை நந்தினியின் மீது மட்டும் இருந்தது. அவன் கண்களின் ஓரங்களில் நீர் வருவதை பார்த்தாள். உடனே வெளியே சென்று மருத்துவரை கூட்டிவந்தாள். அவரும் ரவியை சில நொடிகள் பரிசோதித்துவிட்டு நந்தினியிடம்

'இவரோட ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் ஸ்டெடி பண்ணிட்டேன்...' என்று கூறினார். பிறகு

அங்கிருந்த அனைவரிடமும் பொதுவாக

'எல்லோரும் கொஞ்சம் வெளிய வெயிட் பண்றீங்களா?... நான் இவரை கொஞ்சம் செக் பண்ணனும்...' என்று கூறிவிட்டு, தன் அலைபேசி மூலமாக செவிலியர்களை அழைத்தார்.

உள்ளே செவிலியர்கள் நுழைந்தவுடன் மற்ற அனைவரும் வெளியே சென்றனர்.

அனைவரும் வெளியே வந்தவுடன்

'ஏன் நீங்க எல்லாருக்கும் இங்க வந்தீங்க?... இந்த இடம் உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று அவர்களை பார்த்து பொதுவாக வினவினாள்.

உடனே வெங்கடேசன்

'ஏன் வந்தீங்களா?... நீ பாட்டுக்கு வீர வசனம் பேசிட்டு வீட்டை விட்டு போயிட்ட... உனக்கு போஃன் பண்ணா நீ எடுக்கவும் இல்ல... கொஞ்சம் நேரம் கழிச்சு கால் பண்ணா ஸ்விச்ட் ஆஃப்னு வந்துது... உங்க மாமனார் வீட்டுக்கு கால் பண்ணினா உன் மாமியார் என் குரலை கேட்ட உடனே லைனை கட் பண்ணிடுது... அங்க எங்களால உன் நிலைமை தெரியாம பங்க்ஷனை ஒழுங்கா நடத்தவே முடியலை... இன்னிக்கு காலங்கார்த்தால சங்கீதாவை உன் மாமியார் வீட்டுக்கு கால் பண்ண சொன்னேன்... உன் மாமனார் தான் நடந்ததை சொல்லி இந்த ஹாஸ்பிடல் அட்ரஸை கொடுத்தார்... சரி கிளம்பு வீட்டுக்கு போகலாம். ‘ என்றார்.

'எதுக்கு வீட்டுக்கு வரணும்... அதான் உங்களுக்கு ஒரே பொண்ணு யாழினினு சொன்னேனே... நீங்க கிளம்புங்க.' - நந்தினி.

'முன்னாடியாவது பரவாயில்ல ஏதோ வேலைக்கு போயிட்டிருந்தான்... இப்போ தலைல அடிபட்டு என்னவோ மாதிரி இருக்கான்... கிளம்பு.' - வெங்கடேசன்.

'என்னால ரவியை இந்த நிலைமைல விட்டுட்டு வர முடியாது...' - நந்தினி.

'அவனோட அப்பா அம்மாவுக்கே இல்லாத அக்கறை உனக்கென்ன?... கிளம்பி வா.' - வெங்கடேசன்.

'ரவியோட இந்த நிலைமைக்கு நாம தான் காரணம்... இப்போ உங்களோட வந்தா அந்த குற்ற உணர்ச்சி என்னை நிம்மதியாவே வாழ விடாது.' - நந்தினி.

பத்மாவதி நந்தினியிடம்

'நந்தினி நீ வேற கல்யாணம் பண்ணிக்க வேணாம்... அந்த கருவையும் கலைக்க வேணாம்... கடைசி வரைக்கும் எங்க கூடவே இரு... நானும் உன் அப்பாவும் உன் குழைந்தையை வளர்த்து தரோம்... நீ இவனை அவங்க வீட்ல விட்டுட்டு வந்திரு... அவ்வளவு தான்.' என்றாள்.

நந்தினி 'முடியாதும்மா...' என்றாள்.

உடனே வெங்கடேசன்

'சரி... அவனையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வா... போதுமா?' என்றார்.

'இல்ல... நான் தனியா கூட வாடகை வீடு எடுத்து இருந்துக்கறேன்... இப்போ என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது... ' - நந்தினி.

கடுப்பாகிய வெங்கடேசன்

'சுத்தமா லாஜிக்கே இல்லாத பிடிவாதமா இருக்கு.' என்று தனக்கு தானே பேசி கொண்டே சங்கீதாவை பார்த்து

'அம்மா... அவளுக்கு நல்லபடியா புத்திமதி சொல்லி கூட்டிகிட்டு வாம்மா... எனக்கு வர கோவத்துக்கு இனிமேல் நான் இங்க இருந்தேன்னா எதாவுது ஏடாகூடமா நடந்துருமோ னு பயமா இருக்கு... நாங்க கிளம்பறோம்...' என்று பத்மாவதியை கூட்டிக் கொண்டு கிளம்பினார் வெங்கடேசன்.

அவர்கள் சென்றவுடன் சங்கீதா நந்தினியிடம்

'நந்து... உன் மனசுல என்ன தான் ஓடுது?... யாரவது தனக்கு கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கையை தூக்கி எறிஞ்சிட்டு வருவாங்களா?... வாழ்க்கைல எவ்வளவு பெரிய முட்டாள் தனம் பண்ணிருக்க தெரியுமா?... நீ பாட்டுக்கு பாதியிலேயே அந்த நிச்சய தார்த்த பங்க்ஷனை விட்டுட்டு வந்துட்ட... அங்க நடந்ததை கேட்டு நித்யாவுக்கும் அவளோட ஹஸ்பண்டுக்கும் பிரச்சனை ஆயிடுச்சு... நல்ல வேளை அந்த பிரச்சனை கொஞ்ச நேரத்துலியே சுமூகமா முடிஞ்சு போச்சு... இனிமேல் நித்யா உன்னோட பேசவே கூடாதுன்னு அவளோட ஹஸ்பண்ட் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு... அவளை கூட விடு... உன் அப்பா அவ்வளவு தூரம் சொல்றாரு... அவரையும் இன்சல்ட் பண்ற மாதிரி பேசுற... இப்போ நீ ரவியை உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போறது தான் சேஃப்...' என்று சொன்னாள்.

'அதெல்லாம் இருக்கட்டும்... சரி... ஏன் யாழினி வரலை?' - நந்தினி.

'அவ சரியான கேடி டி... அவளும் பிரகாஷும் எங்க கூட வர்றதா தான் இருந்திச்சு... கிளம்பும் போது கரெக்ட்டா "எனக்கு தலை வலிக்குது பிரகாஷ்... என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க"னு சொல்லி இங்க வர்றத அவாய்ட் பண்ணிட்டா... நிச்சயம் முடிஞ்ச உடனே அமைதிப்படை படத்துல அம்மாவாசை நாகராஜ சோழனா மாறின மாதிரி யப்பா அவளோட தோரணையை பாக்கணுமே... அவளுக்கு அக்காவா இருந்துகிட்டு நீ இப்படி இருக்கியேன்னு தான் எனக்கு வருத்தமா இருக்கு.' என்று சங்கீதா கூறினாள்.

'இப்போ தெரியுதா நான் ஏன் எங்க வீட்டுக்கு போக விரும்பலைன்னு?... அவளுக்கு கல்யாணம் ஆகி அந்த வீட்டை விட்டு போகட்டும்... அப்புறம் நான் ரவியை கூட்டிகிட்டு எங்க வீட்டுக்கு போறேன்...' - நந்தினி.

அவள் கூறியதை கேட்டு சில நொடிகள் யோசனையில் மூழ்கினாள் சங்கீதா.

'என்ன யோசிக்கற?' - நந்தினி.

'நீ புத்திசாலியா?... இல்ல முட்டாளானே தெரிய மாட்டேங்குது...' என்று சங்கீதா சொல்லி கொண்டிருக்கும் போது அங்கு ரவியை பரிசோதித்த மருத்துவர் வந்து நந்தினியிடம்

'மேடம்... நான் அவரோட ஸ்கேன் ரிபோர்ட்ஸை செக் பண்ணி பாத்தேன்... அவருக்கு தலைல அடிபட்டதுனால மூளைல பஸல் கேங்க்லியா (BASAL GANGLIA) னு ஒரு பகுதி பார்ஷியலா அஃபெக்ட் ஆயிருக்கு... இதனால அவருக்கு க்ராஸ் மோட்டார் ஸ்கில்ஸ் இருக்காது...' என்று கூறினார்.

'க்ராஸ் மோட்டார் ஸ்கில்ஸ் னா என்னது?' என்று புரியாமல் வினவினாள் நந்தினி.

'அப்படினா வாலண்டரி மூவ்மென்ட்ஸ் லைக்... அவரால நடக்க முடியாது, முழுமையா சாப்பிட முடியாது, கை காலை எக்ஸ்டெர்னல் புஷ் மூலமா மெதுவா அசைக்க முடியும் அவ்வளவுதான்... அவரோட வோகல் மஸில் மூவ்மெண்டும் பங்ஷன் ஆகலை... அதனால அவரால பேச முடியாது... உணவை விழுங்கும் போது மூணு ஸ்டெஐஸ் இருக்கு... ஓரல் பேஃஸ் (ORAL PHASE), பைரிஞ்சியால் பேஃஸ்(PHARYNGEAL PHASE), ஈஸோபாகள் பேஃஸ் (ESOPHAGEAL PHASE) ... இதுல பர்ஸ்ட் பேஃஸ் பார்ஷியலா அஃபெக்ட் ஆயிருக்கு... அதாவது அவரால உணவை மெல்ல முடியாது ஆனா முழுங்க முடியும்... அவரோட கண்ணு காது மூக்கு எல்லாமே வேலை செய்யும்... அவரால சுத்தி நடக்கற விஷயங்களை கிரகிக்க முடியும் ஆனா அவரால ரியாக்ட் பண்ண முடியாது... அதவாது அவர்கிட்ட நீங்க ஒரு பொருளை எடுக்க சொன்னீங்கன்னா அது அவர் காதுல விழும்... அதை எடுக்கறதுக்கான உந்துதலும் அவர் கொடுப்பார் ஆனா செயல் படுத்த முடியாது... நீங்க அவரை மெதுவா பின்னாடி இருந்து உந்துதல் குடுத்தீங்கனா கொஞ்சம் நகருவாரு... சாலிட் புஃட் அவருக்கு கொடுக்காதீங்க... உணவை நல்லா அரைச்சு ஊட்டுங்க... அவருக்கு உணவை ஊட்டும் போது அவரோட தாடையை ரெண்டு பக்கத்துலேருந்து மெதுவா உங்க விரலால அழுத்தம் குடுங்க... அவர் வாய் திறக்கும்... தொண்டை குழி பக்கத்துல அந்த உணவை கொண்டு போனீங்கன்னா தான் அவரால முழுங்க முடியும்... அவருக்கு ப்ரகபாலின் (PREGABALIN) ன்ற மருந்து சாப்பிடத்துக்கு அப்புறம் மூணு வேளை குடுக்கணும்... அவருக்கு என்ன தான் மருந்து குடுத்தாலும் தினமும் அவரோட கை காலுக்கு அரைமணிநேரம் காலைல மாலைல ரெண்டு வேளை மூவ்மெண்ட் குடுத்துகிட்டே இருக்கணும்... இது மஸ்ட்... முடிஞ்சா அளவுக்கு வீல் சேர் யூஸ் பண்றதை அவாய்ட் பண்ணுங்க... நான் முன்னாடி சொன்ன மாதிரி அவரை முன்னாடி உந்தி உந்தி நடக்க வெயிங்க... இவர் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணதுனால அஸ் பெர் ரூல் நீங்க சைகேட்ரிஸ்டையும் கன்சல்ட் பண்ணனும்... நீங்க அவருக்கு இங்க வெச்சு ட்ரீட்மெண்ட் குடுக்கறதைவிட உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்டுங்க... நான் வேற பேஷண்டை அட்டென்ட் பண்ணனும்... ஈவ்னிங் வந்து மறுபடி பாக்கறேன்...' என்று கூறிவிட்டு அந்த மருத்துவர் அங்கிருந்து விடை பெற்று சென்றார்.

அவர் சென்றவுடன் சங்கீதா நந்தினியை பார்த்து ஒரு பெரு மூச்சைவிட்டு

'இதோ பார் நந்து... உனக்கு என்ன அட்வைஸ் பண்றதுனு தெரியலை... என்னால என்னை உன்னோட நிலைமைல பொருத்தி பாக்க முடியலை... ' என்று சில நொடிகள் மெளனமாக யோசித்துவிட்டு

'சரி எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு நான் இப்போ கிளம்பணும்... ஈவ்னிங் எனக்கு கால் பண்ணு..' என்று சங்கீதாவும் விடைபெற்று கொண்டு நகர்ந்தாள்.

ரவியின் நிலைமை அவளினுடையே மனநிலையை பாதித்தது. அவளின் சித்தாந்தத்தின் மீதுள்ள நம்பிக்கை மெதுவாக குறைய தொடங்கி தான் செய்தது முட்டாள்தனம் என்று அவளிற்கு தோன்ற ஆரம்பித்தது. அவளின் சித்தாந்தத்தால் பெற்ற வெற்றிகள் நினைவிற்கு தானாக வந்து மறுபடி அவளின் நம்பிக்கையை புதுப்பித்தது. அப்போது ஒரு செவிலியர் அவளிடம் வந்து

'சைகேட்ரிஸ்ட் வந்திருக்காங்க... நீங்க ப்ரெஷ் அப் பண்ணிட்டு அவங்கள போய் பாத்துட்டு வந்துருங்க.' என்று கூறிவிட்டு சென்றாள்.

சங்கீதாவும் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றாள்.

நந்தினி மன நல மருத்துவர் இருக்கும் அறைக்குச் சென்றாள்.

அந்த அறையில் உள்ள மேஜையில் "தேவி, எம். டி சைக்கியாட்ரிஸ்ட் " என்று ஒரு பெயர் பலகை இருந்தது. உள்ளே நுழைந்த நந்தினியை பார்த்த பெண் மருத்துவர்

'உட்காருங்க....' என்றார்.

நந்தினி இருக்கையில் அமர்ந்தவுடன்

'ஐ யம் தேவி...' என்று கூறிவிட்டு ஒரு புன்னகையை சிந்தினார்.

'என் பேரு நந்தினி... ' - நந்தினி.

'உங்க கணவர் தற்கொலை பண்ணிக்கறதுக்கான காரணம் என்னனு உங்களால கணிக்க முடிஞ்சுதா?... ' - தேவி.

நந்தினியும் நடந்த விஷயங்களை தேவியிடம் கூறிவிட்டு

'ரவி மேல ஏன் அவரோட குடும்பம் அக்கறை இல்லாம நடந்துக்கறாங்கனு தெரியலை... ரவி தற்கொலை பண்ணிக்கறதுக்கு நான் தான் காரணம்... என்னோட குழப்பம் தான் காரணம்.' - நந்தினி.

'அப்போ நீங்க தான் என்கிட்ட கவுன்சிலிங் எடுத்துக்கணும்... முடிஞ்சா உங்க கணவரோட அப்பா அம்மாவையும் அடுத்த செஷனுக்கு கூட்டிகிட்டு வாங்க... இப்போ உங்க குழப்பத்துக்கான காரணம் என்னனு சொல்லுங்க...' - தேவி.

"நியாயமா நேர்மையா மத்தவனுக்கு துரோகம் செய்யாம இருந்தாலே போதும் கடவுள் நமக்கு நல்லது தான் செய்வார்... யார் உதவியையும் எதிர் பாத்து வாழ வேண்டாம் "னு என் அப்பா சொன்னதை என்னோட சின்ன வயசுல வாழ்க்கை சித்தாந்தமா எடுத்துக்கிட்டேன்... என்னோட சொல் செயல்களுக்கு பின்னாடி இருக்கற என்னோட எண்ணங்களோட கருவே என் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள் தான்... நான் என் வாழ்க்கைல தேர்ந்தெடுக்கற விஷயங்கள் எல்லாமே என் மனசுக்கு ரொம்ப பிடிச்சதா தான் இருக்கும்... அப்படி மனசுக்கு பிடிச்ச விஷயங்களை தேர்ந்தெடுக்கறதை என்னோட சித்தாந்தம் என்னை சரியான பாதைல வழி நடத்துதுன்றதுக்கான அறிகுறினு நம்பினேன்... நான் தேர்ந்தெடுத்த விஷயங்கள் எல்லாமே என்னோட வளர்ச்சிக்கு உறுதுணையா தான் இருந்திருக்கு... நான் எடுக்குற ஒவ்வொரு முடிவும் அந்த கருவிலிருந்து வந்தது தான்னு நம்பறேன்... இன்னும் நம்பிகிட்டு இருக்கேன்... என்னோட கணவர் எனக்கு மனசுக்கு பிடிச்சவறா இருக்கணும் அதே சமயத்துல அவர் ஒரு நிறுவனத்துல முக்கிய பொறுப்புல இருக்கற ஆளாவோ இல்லை பெரிய பிசினெஸ் மேனாகவோ இருக்கணும்ன்றது தான் என்னோட ஆசை... எனக்கு ரவியை பாக்கும் போது மனசுக்கு பிடிச்சது... நான் எதிர்பாத்த மாதிரி ரவிக்கு உத்தியோகம் இல்லைனாலும் என்னோட வரவு அவர் வாழ்க்கைல பெரிய மாற்றத்தை கொண்டு வரும்னு நம்பினேன்... அதனால தான் என் அப்பா அம்மா மறுத்தாலும் நான் விடாப்பிடியா ரவியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... நான் ரவியை கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் எனக்கு சந்தோஷத்தை கொடுத்துக்கிட்டு இருந்த என்னோட நம்பிக்கை அப்புறம் எனக்கு கஷ்டத்தையும் மன வேதனையையும் குடுக்க ஆரம்பிச்சுது... நான் எடுத்த முடிவு சரியா தவறா ன்ற குழப்பம் வர ஆரம்பிச்சுது... சுயமா முடிவெடுக்கற நான் என்னோட ப்ரண்ட் பேச்சை கேட்டு என்னோட சித்தாந்தத்துக்கு மாறா நடக்க ஆரம்பிச்சேன்... ஒரு கட்டத்துல ரவியை விட்டு பிரிஞ்சு நான் எதிர்பாத்த தகுதிகள் இருக்கற வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து ரவியை விட்டுட்டு வந்துட்டேன்... என்னோட இந்த நடத்தை தான் ரவியை தற்கொலை பண்ண தூண்டியிருக்கும்னு நினைக்கறேன்... - நந்தினி.

'அவரை விட்டுட்டு போன நீங்க ஏன் திரும்பி வந்தீங்க?' - தேவி.

''நான் எவ்வளவு முயற்சி பண்ணினாலும் என்னால என் சித்தாந்தத்தை மீறி நடக்க முடியலை...' - நந்தினி.​
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
''நான் எவ்வளவு முயற்சி பண்ணினாலும் என்னால என் சித்தாந்தத்தை மீறி நடக்க முடியலை...' - நந்தினி.
'"நியாயமா நேர்மையா மத்தவனுக்கு துரோகம் செய்யாம இருந்தாலே போதும் கடவுள் நமக்கு நல்லது தான் செய்வார்... யார் உதவியையும் எதிர் பாத்து வாழ வேண்டாம் " ன்ற உங்களோட சித்தாந்தம் உங்களுக்கு நல்லது செஞ்சிருக்கலாம்... ஆனா நாம வளர வளர ரியாலிட்டியை புரிஞ்சுகிட்டு நம்மளோட சித்தாந்தத்தை காலத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்த மாதிரி மாத்திக்கற பக்குவத்தையும் வளத்துக்கணும்... கண் மூடி தனமான நம்பிக்கையோட செயல் பட கூடாது... அப்படி பண்ணினா உங்களோட கண்மூடித்தனமான நம்பிக்கை ஏதாவது ஒரு கட்டத்துல உங்கள ஏமாற வைக்கும்... நியாயமா நேர்மையா மத்தவனுக்கு துரோகம் பண்ணாம வாழ்ந்தா கடவுள் வந்து உங்களுக்கு உதவி செய்யமாட்டார்... இன்பாஃக்ட் கடவுள்னு ஒருத்தர் கிடையவே கிடையாது... ஆதிகால மனுஷன் தன்னோட அறிவுக்கு புலப்படாத விஷயங்கள் தனக்கு நல்லது செஞ்சுதுனா அதை கடவுள்னு வணங்க ஆரம்பிச்சான்... தனக்கு கெட்டது செய்யற விஷயங்களை பாத்து சைத்தான்னு பயந்து ஓட ஆரம்பிச்சான்... இந்த அறியாமையை பயன்படுத்தி சில ஆதிக்க வர்க்கம் கடவுள் பேர்ல மக்களை அடிமை படுத்தி தன்னோட ராஜ வாழ்க்கைக்கு அவங்களை பயன் படுத்த ஆரம்பிச்சாங்க... இந்த ஆதிக்க வர்கத்தால தான் ஜாதி மதங்கள் உருவாச்சு... உதாரணத்துக்கு நீங்க நம்மளோட சமூக கட்டமைப்பை எடுத்துக்கோங்க... சூத்திரர்கள் கடவுளோட கால்லேருந்து வந்தாங்க, வைஷியர்கள் கடவுளோட வயிறுலேருந்தும் தொடையிலேருந்தும் வந்தாங்க, சத்ரியர்கள் கடவுளோட மார்புலேருந்தும், தோள்பட்டையிலேருந்தும் வந்தாங்க, பிராமணர்கள் கடவுளோட தலையிலிருந்து வந்தாங்கனு இருக்கு... இப்படி பாரபட்சம் காட்டுற நம்ம ஊரு கடவுள் தான் உங்களுக்கு வந்து உதவி செய்ய போறாரா?... சத்தியமா அல்லாஹ்வும் ஏசுநாதரும் இல்ல வேற எந்த கடவுளும் கூட வந்து உதவி பண்ண மாட்டாங்க... நியாயமா நேர்மையா நடக்கறது உங்களோட தன்மை... அந்த தன்மை நீங்க செய்யற வேலைல வெளிப்படும்... உங்களோட வேலையை பார்த்து உயர் பதவில இருக்கறவன் உங்களை உயர்த்துவான்... அதே சமயத்துல உங்களை பார்த்து பொறாமை படுறவன் உங்களை ஒழிக்க நினைப்பான்... அப்போ வெறும் நியாயமா நேர்மையா நடந்தா மட்டும் போதாது கொஞ்சம் பகுத்தறிவையும் சேத்துக்கணும்... மனசு அறிவு எல்லாமே உங்க மூளைல தான் இருக்கு... உங்களால கண்ட்ரோல் பண்ண முடிஞ்ச உணர்வுகளை அறிவுன்னும் உங்களால கண்ட்ரோல் பண்ண முடியாத உணர்வுகளை மனசுன்னும் நீங்க பிரிச்சு வெச்சிருக்கீங்க... இப்படி தான் நான் நினைக்கறேன்... எல்லாத்துக்கும் பின்னாடி சயின்ஸ் தான் இருக்கும்... கடவுள் இருக்க மாட்டார்... உளவியல் ரீதியா இளமை பருவத்துல ஆண் பெண் ரெண்டு பேருக்கும் எதிர் பாலின ஈர்ப்பு இருக்கும்... சினிமா பாத்தோ இல்ல வேற ஏதாவது கலை நிகழ்ச்சிகளை பாத்தோ இது தான் அழகுன்னு உங்க மனசு அதாவது யுவர் அன்கண்டரோல்ட் இமோஷன்ஸ் உங்க மூளைல பதிய வெச்சிருக்கும்... அந்த பதிவுக்கு பொருத்தமான ஆளை பாத்தவுடனே உங்களுக்கு பரவச நிலை உண்டாகுது... அவன் நம்மளோட வாழ்க்கைக்கு கடைசி வரைக்கும் பொருத்தமானவனா இல்லையான்னெல்லாம் ஆராய்ச்சி பண்ணாம உங்க கடவுள் சொல்றாருனு நம்பிகிட்டு கல்யாணம் பண்ணினா இப்படி தான் கஷ்ட படணும்... கூச்ச படமா எதிர் பாலினத்தோட பேசி பழகுனா தான் யார் நம்மளோட எண்ண அலைகளுக்கு ஒத்து வராங்கனு தெரியும்... உங்க மனசுக்கு பிடிச்சவன் கூட உங்க வேவ் லென்துக்கு மேச் ஆகாம இருப்பான் ஆனா சுமாரா உங்க கண்ணனுக்கு தெரியுற பையன் உங்க வேவ் லென்துக்கு மேச் ஆவான்.... அவனோட பேசி பழக பழக உங்க மனசு அவனை ஏத்துக்க ஆரம்பிக்கும்... இப்படி தான் நம்மளோட அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்கற துணையை தேர்ந்தெடுக்கணும்... இப்படி அவசர பட்டு சமுதாயத்துல கீழ் மட்டத்துல இருக்கற பொண்ணுங்க வீட்டை விட்டு வெளிய ஓடிவந்து அவங்க வாழ்க்கையையே நாசம் பண்ணிக்கறாங்க... உங்க புருஷன் குணமாயிட்டாருன்னா இட் இஸ் வெல் அண்ட் குட் அப்போ கூட ஒரு பிஸ்னஸ் மேனாகவோ இல்ல ஒரு கம்பெனில பெரிய பொருப்புல இருக்கற ஒரு ஆளாகவோ உங்க புருஷன் ஆகமாட்டார்... இவர் மூலமா அமையற வாழ்க்கையை ஏத்துக்கிட்டு தான் வாழ்ந்தாகணும் ன்ற எதார்த்தை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும்... ஒருவேளை உங்க புருஷன் கடைசி வரைக்கும் குணமாகலைன்னா உங்களோட விரக்தி தன்மை அதிகமாகும்... அந்த விரக்தி மிக பெரிய மன அழுத்தத்தை கொடுத்து உங்களை தற்கொலை பண்ணிக்கற சூழலுக்கு தள்ளும்... இல்லனா இந்த சமூகத்துக்கு தெரியாம உங்க மனசுக்கு பிடிச்ச யார் கூடவோ கள்ள உறவு வெச்சிக்க தூண்டும்...' என்று மருத்துவர் தேவி கூறியது நந்தினியின் குழப்பத்தை மேலும் அதிகப் படுத்தியது.
சில நொடிகள் யோசித்த நந்தினி
'நான் தற்கொலையும் பண்ணிக்க கூடாது... நான் தவறான பாதையிலேயும் போக கூடாது... இதுக்கு ஏதாவது வழி இருக்கா?' என்று வினவினாள்.
'இதுக்கு ஒரே வழி இந்த குழந்தையை அபார்ட் பண்ணிட்டு நீங்க எதிர் பாக்கற க்வாலிட்டிஸ் இருக்கற ஆளை மறுமணம் பண்ணிக்கறது தான்...' - தேவி.
தன் மூச்சை இழுத்து விட்டு சில நொடிகள் யோசனையில் மூழ்கிய நந்தினி
'நானே நினைச்சாலும் என்னோட சித்தாந்தத்தை மீறி என்னால நடக்க முடியாது... அப்படியே நான் இந்த குழந்தையை கலைச்சிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எனக்குள்ள கருவா இருந்து என்னை செயல் படுத்தற என்னோட சித்தாந்தம் எனக்கு குற்ற உணர்ச்சியை குடுத்துகிட்டே இருக்கும்... என்னால அந்த புது வாழ்க்கையையும் நிம்மதியா வாழ முடியாது...' என்று மருத்துவர் தேவியிடம் கூறினாள்.
'நீங்க சொல்ற மாதிரி உங்களுக்கு கிடைச்ச புது வாழ்க்கைல குற்ற உணர்ச்சி ஏற்பட்டு மன அழுத்தம் உண்டாகுதுன்னு வெச்சிக்குவோம்... அந்த மன அழுத்தத்தை போக்கறதுக்கு நிறைய பில்ஸ் இருக்கு... சித்தாந்தம் சித்தாந்தம்னு உங்கள நீங்களே ரெஸ்ட்ரிக்ட் பண்ணிக்காதிங்க... சுதந்திர பறவை மாதிரி பறக்க ஆசை படுங்க... டு பீ ப்ராங்க் சரியில்லாத புருஷனோட சகிச்சிக்கிட்டு வாழறதைவிட மனசுக்கு பிடிச்ச ஒருத்தனோட கள்ள தொடர்பு வெச்சிக்கறது தப்பே கிடையாது...' என்று நந்தினியிடம் அழுத்தமாக கூறினார் மருத்துவர் தேவி.
சில நொடிகள் நந்தினி தேவியை பார்த்துவிட்டு வேறு புறம் தன்னுடைய பார்வையை திருப்பிக் கொண்டாள். இப்பொழுது மருத்துவர் தேவி நந்தினியிடம் நிதானமாக
'ஸீ... சில சமயம் விஷம் கூட மருந்தா மாறும்... உங்களை தப்பான வழில போக நான் வற்புறுத்தலை... சின்ன வயசுலேருந்து உங்க ஐடியாலஜி மேல நம்பிக்கை இருக்கறதுனால அவ்வளவு சீக்கிரமா அதை மாத்திக்கறது ரொம்ப கஷ்டம்னு எனக்கு தெரியும்... ஒன்னு இப்போ இருக்கற வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி உங்க மனச மாத்திக்க முயற்சி பண்ணுங்க... இல்ல உங்க வாழ்க்கை துணையை மாத்த முயற்சி பண்ணுங்க... எப்படி இருந்தாலும் ரெண்டு சூழ்நிலையுமே உங்களுக்கு மன அழுத்தத்தை குடுக்கும்... உங்க மூளைல செரோடோனின் கம்மியா சுரக்கறதுனால தான் மன அழுத்தம் ஏற்படும்... நீங்க இந்த செரோடோனின் பில்ஸை எடுத்துகிட்டீங்கனா உங்களுக்கு மன அழுத்தம் போய்டும்... உங்களுக்கு குற்ற உணர்ச்சியும் இருக்காது... சாய்ஸ் இஸ் யுவர்ஸ்... வார கடைசீல என்னை வந்து பாருங்க...' என்று மருத்துவர் தேவி கூறியவுடன் நந்தினி அவரிடம் விடைபெற்று கொண்டு நகர்ந்தாள்.
மறுநாள் அந்த மருத்துவமனையிலிருந்து ரவியை வீட்டிற்கு கொண்டு வந்தனர். வழக்கம் போல் நந்தினி தன் வேலைக்கு சென்றாள். ரவியிற்கு மருத்துவரின் ஆலோசனை படி பரிந்துரைக்கப் பட்ட மருந்துகள் கொடுக்கப் பட்டன. வார கடைசியில் தன்னுடன் ரவியையும் மன நல மருத்துவர் தேவியிடம் அழைத்து சென்றாள் நந்தினி. சிறு வயதிலிருந்து தான் பின்பற்றிய சித்தாந்தம் தனக்கு கஷ்டத்தை கொடுப்பதால் நந்தினியிற்கு அந்த சித்தாந்தத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைய தொடங்கியது. இதுவே தேவியின் பகுத்தறிவு சிந்தனைகள் நந்தினியின் மனதினுள் புகுவதற்கு வழியமைத்தது. தேவியின் பகுத்தறிவு சிந்தனைகள் நந்தினியின் மனதில் பதிய தொடங்கியதால் அதற்கு நேர் எதிரான அவளினுடைய சித்தாந்தத்திற்கும் பகுத்தறிவிற்கு போராட்டம் நடந்து கொண்டிருக்கும். இந்த மன போராட்டம் நந்தினியை குழப்ப நிலையிலேயே வைத்துக் கொண்டிருக்கும். கருவுற்றிருக்கும் நந்தினியிற்கு ஏதாவது பக்க விளைவு ஏற்பட்டுவிடுமோ என்ற காரணத்தினால் மன அழுத்தத்தை போக்கும் மாத்திரைகளை கொடுக்காமல் அந்த ரசாயனம் இருக்கும் இயற்கை உணவை எடுத்துக்கொள்ள பரிந்துரைத்தார் மருத்துவர் தேவி.
இப்படியே ஆறு மாதங்கள் கழிந்தன. நந்தினி எட்டு மாத கருவை சுமந்திருந்தாள். இந்த ஆறு மாதங்களில் இப்போது ரவியிற்கு ஒரு வித தோல் நோய் வர ஆரம்பித்து அவன் உடம்பில் ஒரு வகை துறுநாற்றம் அடிக்கத் ஆரம்பித்தது. நந்தினியை தவிர வீட்டில் உள்ள யாரும் அவன் அறைக்கு செல்வதில்லை.
இதனிடையில் யாழினியின் கடைசி ஆண்டு பொறியியல் படிப்பு முடிவடைந்து பிரகாஷுடன் திருமணமும் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த உடனே யாழினியும் பிரகாஷும் அமெரிக்காவிற்கு சென்றனர். எங்கே மறுபடி தன் சித்தாந்தத்தை பின் பற்றலாமா வேண்டாமா என்ற குழப்பம் அதிகமாகிவிடுமோ என்ற பயத்தால் தன் தங்கையின் எந்த வித நிகழ்வுகளுக்கும் நந்தினி செல்லவில்லை. ரவியின் தம்பியிற்கு திருமணம் நடப்பதாக இருப்பதால் வாசுகியின் தூண்டுதலின் பெயரில் தேசிகன் ரவியையும் நந்தினியையும் தனி குடித்தனம் போகுமாறு வற்புறுத்தினர். வேறு வழியில்லாமல் தன் தந்தையிடம் வாடகை வீட்டை தேடுவதற்கு உதவியை நாடினாள் நந்தினி. அவளினுடைய தந்தை வெங்கடேசன்
'நீ என் வீட்டுக்கு வந்துடு... ரவியை ஒரு நல்ல காப்பகத்துல சேத்துடுவோம்...' என்று கூறிய யோசனைக்கு உடன்படாமல் தான் தனியாக வாழ்வதாக கூறினாள். வேறு வழியில்லாமல் ரவியையும் தங்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அவனை கவனிப்பதற்கு தனிப்பட்ட முறையில் ஒரு செவிலியரை ஏற்பாடு செய்து தருவதாகவும் வெங்கடேசன் கூறியவுடன் இருவரும் வெங்கடேசன் வீட்டிற்கு குடி புகுந்தனர். தன் பணிக்கு சென்று வரும் போது அக்கம் பக்கத்தினர் தன்னை பரிதாபமாக பார்ப்பதும் ரவியை பற்றி விசாரிப்பதும் அவளிற்கு ஒரு விரக்தி நிலையை கொடுத்தது. இதனால் அவளால் தன் பணியிடத்தில் ஒழுங்காக வேலை செய்ய முடியவில்லை. ஒரு நாள் நந்தினி பணி புரியும் அலுவலகத்தின் மனித வள அதிகாரி
'நிறுவனம் நட்டத்தில் ஓடுவதால் சிலரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்கிறோம்... அந்த சிலரில் நீங்களும் ஒருவர்... நிறுவனம் ஸ்திர நிலையை அடைந்தவுடன் தங்களை மறுபடி பணியில் சேர்த்துக் கொள்வோம்... ' என்று கூறி அவளை வேலையை விட்டு நீக்கினர். இந்த விஷயம் அவளிற்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தான் கருவுற்று இருப்பதால் அவளால் வேறு வேலையை கூட தேட முடியவில்லை. வேறு வழியில்லாமல் வெங்கடேசன் இருவரையும் தன் செலவில் பார்த்துக் கொண்டார். இந்த நிலைமை நந்தினியிற்கு தர்மசங்கடமாக இருந்தது.
அந்த குடும்பத்தின் சூழலில் சோகம் மற்றும் விரக்தியின் அளவு அதிகமாகியது. சந்தோஷம் அற்ற அந்த சூழலில் அனைவருக்கும் மன நிலை பாதிக்க பட்டிருந்தது. பத்மாவதி தன் முதல் பெண்ணின் நிலைமையை பார்த்து அழுது புலம்பத் தொடங்கினாள், அவ்வப்போது மன அழுத்தம் அதிகமாவதால் மயக்கமுற்றாள். அவளை வெங்கடேசன் மருத்துவரிடம் கூட்டிச்சென்று ஆலோசித்த போது
'அவங்களுக்கு பிரச்சனையே மன நிலைமை சரியில்லாதது தான்... அவங்களுக்கு தேவை ஒரு சேஞ் ஆஃப் ப்லேஸ் ... ஊட்டி கொடைக்கானல்னு அவங்களை டூர் கூட்டிகிட்டு போங்க... அவங்க மைண்ட் ரிலாக்ஸ் ஆயிடுச்சுனா தென் ஷி வில் பி நார்மல்...' என்று கூறினார் மருத்துவர்.
வெங்கடேசனுக்கும் பத்மாவதிக்கும் இருக்கும் ஒரே ஆறுதல் அமெரிக்காவில் இருக்கும் தன் இரண்டாவது பெண்ணோடு வலைதள நேரலையில் பேசுவது தான். ஒரு நாள் யாழினியோடு நேரலையில் பேசிக் கொண்டிருக்கும் வெங்கடேசன் பத்மாவதியின் நிலைமையை கூறி வருந்தினார். உடனே யாழினி
வெங்கடேசனிடம்
'அப்பா... நீயும் அம்மாவும் இங்க வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு போங்கப்பா... இந்த சேஞ் ஆஃப் ப்லேஸ் உங்களுக்கு பாசிட்டிவ் எனெர்ஜியை குடுக்கும்.' என்றாள்.
'இல்லமா... உங்க அக்கா எட்டு மாசம் கர்பமா இருக்கா... இன்னும் ஒன்றரை மாசத்துல குழந்தை பிறக்கும்னு அவளை செக் பண்ற டாக்டர் சொல்லிருக்காங்க… அதான் இப்போ எங்களால வர முடியாத சூழ்நிலை... அதுவுமில்லாம உடனே டிக்கெட் அரேஞ் பண்றதுக்கு அதிகமா செலவாகும்... உனக்கு ஏன் மா தேவை இல்லாத செலவு?' - வெங்கடேசன்.
'அப்பா செலவை பத்தி எல்லாம் கவலை படாதீங்க... விசா கூட சீக்கிரமா அரேஞ் பண்ணிக்கலாம்... அட்லீஸ்ட் ஒரு டூ வீக்ஸ் இங்க வந்து தங்கிட்டு போங்க...' - யாழினி.
இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த நந்தினி தன் தந்தையிடம்
'டூ வீக்ஸ் தானே... போயிட்டு வாங்க... நான் சமாளிச்சுக்கறேன்...' என்றாள்.
இரண்டு வாரங்கள் கழித்து அமெரிக்காவின் நுழைவு சான்று வெங்கடேசனிற்கும் பத்மாவதியிற்கும் கிடைத்தது. யாழினி அவர்களுக்கு பயண சீட்டை ஏற்பாடு செய்தாள்.
நந்தினியிற்கும் ரவியிற்கும் காலையிலிருந்து மாலை வரை சமைத்துக் கொடுத்து அவர்களை பார்த்து கொள்வதற்கு ஒரு பெண்மணியை ஏற்பாடு செய்துவிட்டு இருவரும் அமெரிக்காவிற்கு புறப்பட்டனர். இப்போது ரவியும் நந்தினியும் மட்டும் தனியாக இருந்தனர்.
ஒரு வார கடைசி சனிக்கிழமையில் தன் வீட்டில் பணிபுரியும் பெண்மணியையும் ரவியை கவனித்துக் கொள்ளும் செவிலியரையும் சீக்கிரமே அனுப்பிவிட்டு மதியம் ஒரு மணியளவில் மன நல மருத்துவரிடம் ஆலோசிக்க ரவியை அழைத்து சென்றாள்.
'நீங்க ஏன் இந்த நிலைமைல இவரை தனியா கூட்டிகிட்டு வரீங்க... உங்க அப்பா வரலையா?' - மன நல மருத்துவர்.
'எனக்கு டெலிவரிக்கு இன்னும் த்ரீ வீக்ஸ் இருக்கு... அம்மாவும் அப்பாவும் லாஸ்ட் வீக் தான் யு. எஸ் போயிருக்காங்க... இன்னும் ஒரு நாலு நாள்ல திரும்பி வந்துடுவாங்க...' - நந்தினி.
'பட்... இருந்தாலும் திஸ் இஸ் க்ரிட்டிக்கல் டைம் பார் யூ... இப்போ உங்க மன நிலை ரொம்ப சென்ஸிட்டிவா இருக்கும்... கோவம் வரும், திடிர்னு மன அழுத்தம் ஏற்படும்... பழைய ஞாபகங்கள் ஏதாவது மன உளைச்சலை குடுக்கும்... இந்த மாதிரி நிறைய மூட் சுவிங்ஸ் இருக்கும் ... கூட ஒரு ஆள் ஆறுதலா துணைக்கு இருக்கறது எப்பவுமே சேஃப் மா...’ – மருத்துவர் தேவி.
'இப்போ எங்க குடும்பத்துல சூழ்நிலை சரியில்லை... இதனால என் அம்மாவோட மன நிலைமை ரொம்ப பாதிக்க பட்டிருச்சு... இன்னும் என் டெலிவரிக்கு டைம் இருக்கறதுனால தான் ஒரு சேஞ்சுக்கு அவங்க யு. ஸ் போயிட்டு வரட்டும்னு முடிவு பண்ணினேன்... காலைலேருந்து ஈவ்னிங் வரைக்கும் எங்களை பாத்துக்கறதுக்கும் எங்களுக்கு சமைச்சு போடறதுக்கும் ஒரு ஆள ஏற்பாடு பண்ணிட்டு தான் அவங்க போயிருக்காங்க... நைட் டைம் பக்கத்துக்கு வீட்டு பொண்ணு எங்களுக்கு துணையா எங்க வீட்டுக்கு வந்து ஸ்டே பண்ணுவா.' - நந்தினி.
‘ஓ... அப்போ சரி... எனி இம்ப்ரூவ்மென்ட்ஸ் இன் ரவி.' - மன நல மருத்துவர்.
'இல்ல எந்த இம்ப்ரூவ்மெண்ட்ஸும் இல்ல... அவரை நைட் டைம் பாத் ரூமுக்கு நான் தான் கூட்டிகிட்டு போறேன்... அவருக்கு இருக்கற ஸ்கின் டிசீஸ்... அவர் மேல வர துர்நாற்றம் ... எதுவும் சரி ஆகலை ... மெடிக்கல் டாக்டர்ஸும் என்னென்னமோ மருந்து கொடுக்கறாங்க... ஆனா அவரோட நிலைமைல எந்த முன்னேற்றமும் இல்ல... அவருக்கு ஏன் இன்னும் சரியாகல?' - நந்தினி.
'தெரியலையே மா... உங்க கணவரோட நடவடிக்கைலேருந்து என்னால அவரோட பிரச்சனைக்கான கருவை பிடிக்க முடியலை... பாக்கலாம்... நிச்சயமா ஏதாவது வழி பிறக்கும்…' - மன நல மருத்துவர்.
மன நல மருத்துவரிடம் விடைபெற்று கொண்டு ரவியுடன் வெளியே வந்தாள். மருத்துவமனையின் வெளியே ஒரு வழி சாலை என்பதால் அவர்கள் வந்த வாடகை வாகனத்தை அடைய சிறிது தூரம் நடக்க வேண்டியிருந்தது. ரவியை கூட்டிக் கொண்டு போக்குவரத்து சாலையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவளின் கைபேசி ஒலித்தது.
கைபேசியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு
'ஹலோ...' என்றாள்.
'ஹலோ... நந்தினி நான் யாழினி பேசறேன்.' என்று யாழினியின் குரல் கேட்டது.
இவ்வளவு காலம் அக்கா என்று மரியாதையோடு கூப்பிட்டுக் கொண்டிருந்த யாழினி தன்னை நந்தினி என்று பெயரிட்டு கூப்பிட்டது நந்தினியின் நிதானத்தை உலுக்கி ஒரு வித கோவத்தை எழுப்பியது.
'என்ன விஷயம்?' என்று கூறும் போது தன் குரலில் கோவத்தை வெளிப் படுத்தினாள்.
'அம்மா பேசணும்னு சொன்னா... லைன்ல இரு...' என்று யாழினியின் குரல் கேட்டது. சில நொடிகள் கழித்து
'நந்தினி எப்படிம்மா இருக்கே... தனியா உன்னால சமாளிக்க முடியுதா?' என்று பத்மாவதியின் குரல் கேட்டது.
மறுபடி தான் பின்பற்றும் சித்தாந்தம் சரியா?... கிடைத்த நல்ல வாழ்க்கையை கோட்டை விட்டு விட்டு இப்படி கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேனே என்று நந்தினியின் மன நிலையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த மன நிலையில் அவள் தாயிடம் பேச பிடிக்காமல்
'அம்மா நான் அப்புறம் பேசறேன்.' என்று அந்த அழைப்பை துண்டித்தாள்.
அப்போது அவள் வயிற்றில் ஒரு அசைவை உணர்ந்தாள். தன் வயிற்றை தடவி பார்த்துவிட்டு பக்கத்தில் இருக்கும் ரவியை பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளினுடைய சோகம் உச்சத்தை எட்டியது. பீறிட்டு அழ தொடங்கினாள். அழுது கொண்டே ரவியை பார்த்து
'இப்படி வாழவும் முடியாம சாகவும் முடியாம ஆக்கிட்டியேடா?... நான் எப்படியெல்லாம் நம்ம வாழ்க்கையை கற்பனை பண்ணி வெச்சிருதேன் தெரியுமா?... எல்லாத்தையும் பொய் ஆக்கிட்டியேடா...' என்று கூறிவிட்டு சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் வாகனங்களை பார்த்தாள்.
'என் பாவ கணக்கு அதிகமானாலும் பரவாயில்ல ... என்னால இந்த குழந்தையை சுமந்துக்கிட்டு இப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியாது... நான் சாகறேன்...' என்று வேகமாக சாலையின் நடுவே நடந்தாள். அப்போது வேகமாக வந்த கனரக வாகனம் அவளை நோக்கி வந்தது. என்னதான் அந்த கனரக வாகனத்தின் ஓட்டுநர் அந்த வாகனத்தை நிறுத்த முயன்றாலும் அதன் வேகத்தின் கணம் காரணமாக அந்த வாகனம் அவளை நோக்கி ஓடியது. தன்னை நோக்கி வரும் வாகனத்தை பார்த்து கண்களை மூடினாள் நந்தினி. அப்போது சட்டென்று ஒரு கை அவளை பிடித்து இழுத்தது. நந்தினி மயிரிழையில் உயிர் தப்பினாள். யார் தன்னை காப்பற்றியது என்பதை தெரிந்துகொள்ள தன் பக்கம் பார்த்தாள். அங்கு ரவி பதட்டமாக
'நந்தினி கொஞ்சம் மிஸ் ஆயிருந்ததுனா உன் உயிரே போயிருக்கும்...' என்றான்.
நந்தினியிற்கு தான் காண்பது கனவா நினைவா என்றே தெரியவில்லை. ஆச்சரியமாய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை இடிக்க வந்த வாகனம் நின்றது.
அதிலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் கோபமாக அவளை நோக்கி நடந்து வந்து அவள் கருவுற்றிப்பாதை பார்த்தார். அவர் கோபம் சற்றே தளர்ந்தது.
'ஏம்மா நீ சாகரத்துக்கு என் வண்டியாம கிடைச்சது?' என்று கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த ரவியை பார்த்து
'நீ தான் இவங்களோட புருஷனா?' என்று கேட்டார்.
'ஆமாம்...' என்றான் ரவி.
அவன் பேசியதை கேட்டவுடன் ஆச்சரியமாய் ரவியை பார்த்தாள் நந்தினி.
'நல்ல வேளை கரெக்ட்டான சமயத்துல காப்பாத்துன... என்ன குடும்ப பிரச்சனையா?' - ஓட்டுநர்.
அவர் அப்படி கேட்டவுடன் ரவி சில நொடிகள் யோசித்துவிட்டு
' ஆமாம்...' என்றான்.
அங்கு கூட்டம் கூடியது போக்குவரத்து காவலர் ஒருவர் அங்கு வந்து கூட்டத்தை விலக்கி விட்டு அந்த ஓட்டுனரை அனுப்பினார்.
பிறகு ரவியை பார்த்து
'யோவ்... ஏற்கனவே பீக் ஹவர்... ஏன் யா உயிரை வாங்கறீங்க...' என்று ரவியை பார்த்து கூறிவிட்டு நந்தினியை பார்த்து
'இவன் தான் உன் புருஷனா?... என்ன உன்ன கொடுமை படுத்தறானா?' என்று கேட்டார்.
உடனே நந்தினி
'அவரை அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசாதீங்க.' என்று கோவமாக கூற, அந்த போக்குவரத்துக்கு காவலர் என்ன பேசுவது என்று தெரியாமல் நந்தினியை சில நொடிகள் பார்த்துவிட்டு, பிறகு ரவியை பார்த்து செயற்கையாக புன்னகையை சிந்தி
'சார்... பாத்து கூட்டிகிட்டு போங்க சார்.' என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
அவர் சென்றவுடன் ரவி அவளின் கையை பிடித்து மெதுவாக அவள் எழ உதவி செய்தான். அவள் எழுந்தவுடன்
நந்தினி ஆச்சரியமாய்
'ரவி... நீ பேசற ரவி... வா நாம டாக்டரை போய் பாக்கலாம்.' என்று அவன் கையை பிடித்துக் கொண்டு அந்த மன நல மருத்துவரை போய் பார்த்தாள்.
அந்த மன நல மருத்துவர் முன் அமர்ந்து
'டாக்டர் அவர் க்யூர் ஆயிட்டாரு...' என்று பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் ரவியை காண்பித்தாள்.
மருத்துவர் தேவியும் ரவியை பார்த்தார். அவன் வழக்கம் போல் நந்தினியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நந்தினி ரவியை பார்த்து
'ஏதாவது பேசுங்க ரவி... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசுனீங்களே ...' என்று ரவியை உலுக்கினாள். அவனிடம் எந்த பதிலும் வரவில்லை.
சில நொடிகள் ரவியை பார்த்த மன நல மருத்துவர், நந்தினியிடம் பார்வையை திருப்பி
'அவர் அப்படியே தான் இருக்காரு... இது உங்களோட ஹாலுசினேஷன்...' என்றார்.
நந்தினி வேகமாக அவரினுடைய கூற்றை மறுத்து
'இல்ல டாக்டர்... இப்போ என்கூட வேகமா நடந்து வந்தாரே... அவரால அப்படி நடக்க முடியாதே... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மன விரக்தில தற்கொலை பண்ணிக்கறதுக்கு முயற்சி பண்ணினேன் அப்போ என்னை ரவி தான் காப்பாத்தினார்... இது உண்மை... நீங்க நம்பலைனா நீங்க என்னோட வெளிய வந்து கேட்டு பாருங்க... ' என்றவுடன் மன நல மருத்துவர் சிறிய யோசனைக்கு பிறகு தனது உதவியாளரை கூப்பிட்டு வெளியே நந்தினியை உடன் அழைத்து சென்று விசாரிக்க சொன்னார். சில நிமிடங்களில் உள்ளெ நுழைந்த உதவியாளர் மன நல மருத்துவரிடம்
'ஆமாம் டாக்டர்... வெளிய ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் கிட்ட விசாரிச்சேன்... இவங்க சொல்றது சரி தான்.' என்றார்.
சில மணி துளிகள் யோசனையில் மூழ்கிய மருத்துவர் தேவி
அலைபேசியில் ஒரு மருத்துவரை தொடர்பு கொண்டு நடந்தவைகளை விளக்கினார். அந்த மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு நந்தினியிடம்
'இப்போ தான் ரவியோட மெடிக்கல் டாக்டர்கிட்ட பேசுனேன்... அவர் ஒரு இன்ஜெக்ஷன் போட சொல்லிருக்காரு... லெட் அஸ் செக்.' என்று கூறிவிட்டு தன் உதவியாளரிடம்

'இபின்ப்ஃரெயின் (EPINEPHRINE) ட்யூப் அண்ட் சிரஞ் எடுத்துக்கிட்டு வாங்க...' என்றார். அந்த உதவியாளர் மருத்துவர் கூறியதை எடுத்து வந்தார். மருத்துவரும் அந்த மருந்தை சிறிய அளவு ஊசியில் எடுத்து ரவியின் இடுப்பில் செலுத்தினார்.​

சில மணி துளிகள் கழித்து ரவி சட்டென்று தன்னை சுற்றி முற்றி பார்த்தான். நந்தினியை பார்த்தவுடன்
'நந்தினி நீ ஏன் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணினே... என்னோட இந்த கஷ்டங்களுக்கு காரணமான கருவை கண்டுபிடிச்சு அதை சரி செஞ்சிட்டோம்னா நீயும் நானும் சந்தோஷமா வாழ்க்கையை வாழுவோம்னு ரமேஷ் சொன்னான்...' என்று பதட்டமாக கூறினான்.
நந்தினி ரவியின் அருகில்
'யாரு ரமேஷ்?... என்ன கரு?' என்று புரியாமல் வினவினாள் .
'ரமேஷ் என்னோட கம்பெனில வேலை பாத்தான்... எனக்கு போரிங் மெஷினை ஓட்ட கத்து கொடுத்தவன் அவன் தான்... என்னால ரொம்ப நேரம் பேச முடியாது... நான் மலை மேலேருந்து கீழ விழுந்தவுடனே என்னோட கை காலெல்லாம் துண்டு துண்டா செதறிடுச்சு... எனக்கு கனவா நினைவானே தெரியலை என்னோட உடம்பு கீழ செதறி கிடைக்கறத நான் மேலேருந்து பாக்கற மாதிரி ஒரு உணர்வு... அப்போ ரமேஷ் சந்திரன் சாமியை கூட்டிகிட்டு வந்தான்... அவர் தான் எதோ மூலிகைகளை கொண்டு வந்து துண்டு துண்டா செதறின கை கால்களை ஓட்ட வெச்சார்... அப்புறம் மேலேருந்து பாத்துகிட்டு இருந்த என்னை என் உடம்புக்குள்ள நுழைச்சார்... ரமேஷ் என்கிட்டே வந்து "நாங்க ரெண்டு பேரும் இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது... சந்திரன் சாமி சுயம்புலிங்கேஸ்வரர் கோயிலுக்கு போகணும்... நான் என்னோட இடத்துக்கு போகணும்... உன்னோட கஷ்டங்களுக்கெல்லாம் காரணமா ஒரு கருப்பொருள் இருக்கு... இப்போ உனக்கு அமைஞ்சிருக்கற பிறவியோட சூழ்நிலை அமைப்பு உன் கஷ்டத்துக்கான கருவை அடையறதுக்கு சாதகமா இருக்கு... உன்னோட அடுத்த பிறவில உன் கஷ்டத்தோட கருவை தேடறது ரொம்ப சிக்கலான விஷயம்... இதை நீ சரி செய்யலைன்னா மறுபடி மறுபடி பிறவி எடுத்து கஷ்டப்பட்டுக்கிட்டே இருப்பே... இங்க எல்லாமே விதிப்படி தான் நடக்கும்... உன்மேல உண்மையிலேயே அன்பும் பாசமும் இருக்கறவங்களால தான் உன்னை அந்த கருப்பொருள் கிட்ட கூட்டிகிட்டு போக முடியும்... ஆனா உன் மேல அக்கறை வெக்கிறவங்க சீக்கிரமா உன்னை வெறுத்து ஒதுக்குவாங்க... இல்ல அவங்க இறந்து போயிடுவாங்க... இல்லனா நீ இறந்து போயிடுவ... இது தான் உன்னோட இந்த பிறவிக்கான விதி... உனக்காக நான் விதியை மீறி உன்னை காப்பாத்தியிருக்கேன்... நான் விதியை மீறினதுனால உன்னோட விதியில ஒரு சின்ன திருத்தம் ஏற்பட்டிருக்கு... இந்த பிறவியோட விதியோட சேர்த்து இன்னும் புதுசா ஒரு விதி இணைஞ்சிருக்கு... ஒரு முனிவர் குடுத்த சாபத்துனால ராஜேந்திரன் கல்லா மாறிடுவான் அப்புறம் அவனோட மனைவி முனிவர் கிட்ட கெஞ்சி கேட்டதுனால அந்த முனிவர் அவனால ஆறுவாட்டி மனுஷனா செயல்பட முடியும்... அவன் முழுமையா செயல் படறதுக்கான மருந்து ஒரு இடத்துல இருக்கு... நீ நேர்மையாவும் நியாயமாவும் நடந்து சுயமா யோசிச்சு உனக்கு வர பிரச்சனைகளை எதிர்கொண்டா மட்டும் தான் அந்த மருந்துக்கான பாதை கிடைக்கும்னு அந்த முனிவர் அவனோட மனைவி கிட்ட சொல்லுவார்... நான் சொன்ன கதைகள்லியே உனக்கு பிடிச்ச கதை இதுதான்... இப்போ உன்னோட நிலைமையும் இந்த கதைல வர ராஜேந்திரன் மாதிரி தான்... உன்னால சுத்தி நடக்கற விஷயங்களை கிரகிக்க முடியும் ஆனா செயல் பட முடியாது... எப்போவெல்லாம் சுத்தி நடக்கற விஷயங்கள் உனக்கு பதட்டத்தையோ கோவத்தையோ குடுக்குதோ அப்போ தான் உன்னால செயல் பட முடியும்... அதுவும் வெறும் ஆறு தடவை தான்... அதே மாதிரி நீ அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களோட கால அளவும் குறைஞ்சிருக்கு... ஆனா கஷ்டங்கள் குறையலை... இனிமேல் நீ சந்திக்க போற கஷ்டங்களோட கணம் ரொம்ப அதிகமா இருக்கும்... இதோட சேர்த்து நிறைய ஆபத்துகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்... உன் மனைவிக்கு வர கஷ்டங்களை அவ நேர்மையாகவும் நியாயமாகவும் முக்கியமா சுயமா சிந்திக்க கூடிய ஆற்றல் மூலமா எதிர் கொள்ளும் போது தான் அந்த கருவை அடையறத்துக்கான பாதை கிடைக்கும்... எனக்கும் நேரம் ஆச்சு"னு சொல்லிட்டு அவனும் சந்திரன் சாமியும் கிளம்பிட்டாங்க... அப்புறம் எனக்கு மயக்கம் வந்துச்சு... மயக்கம் தெளிஞ்சு கண்ணை விழிச்சு பாக்கும் போது நான் ஒரு ஹாஸ்பிடல்ல இருந்தேன்... நீ உங்க அப்பா அம்மாவோட பேசிகிட்டு இருந்த சத்தம் கேட்டுச்சு... என்னால பாக்க கேக்க முடியுதே தவிர என்னால என்னோட கை கால்களை அசைக்க முடியலை... பேச முடியலை’ என்று ரவி கூறிக்கொண்டிருக்கும் போதே அவன் பேசுவதை நிறுத்தினான். இப்பொழுது பழைய படி அவனால் செயல் பட முடியவில்லை.
நந்தினி குழப்பமாக மன நல மருத்துவர் தேவியிடம்
'டாக்டர் அவருக்குள்ள என்ன நடக்குது?... எனக்கு ஒண்ணுமே புரியலை?' என்று கேட்டாள்.
'ரொம்ப ஸ்ட்ரெஞ்சா இருக்கு... அவருக்கு அட்ரினலின் ஓவர் டோஸேஜ் குடுத்தா சுய நினைவு திரும்புது... இந்த சுரப்பி நாம கோப படும் போதோ இல்ல நம்மளை சுத்தி பதட்டமான சூழ்நிலைல இருக்கும் போதோ அதிகமா சுரக்கும்... இது நமக்கு ஒரு எக்ஸ்டரா எனெர்ஜியை குடுக்கும்... நமக்கு கோபம் கரஞ்சிட்ட பிறகு இல்ல அந்த பதட்டமான சூழ்நிலைலேருந்து தப்பிச்சிட்ட பிறகு அந்த அட்ரினலின் சுரப்பி நார்மல் ரேட்ல சுரக்க ஆரம்பிச்சுரும்... அதுக்கப்புறம் நீங்க ரொம்ப சோர்வாயிடுவீங்க... உதாரணம் கோயில்ல சில பேருக்கு சாமி வந்து ஆடுவாங்க இல்ல அப்போ அவங்களோட உச்ச பட்ச பக்தி மன நிலை இந்த அட்ரினலின் சுரப்பியை அதிக படுத்தும்... அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க நார்மலாயிட்ட பிறகு அவங்க அப்படியே சோர்வா படுத்துருவாங்க... இந்த அட்ரினலின் சுரப்பி தான் ஒரு திருடனை போலீசை விட அதிகமான வேகத்துல ஓட வைக்கும்... ' - மருத்துவர் தேவி.
'அவர் நார்மலா இருக்கும் போது என்னென்னமோ பேசறாரு... அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?' - நந்தினி.
ரமேஷ் கூறியதாக ரவி சொன்ன வார்த்தைகள் நந்தினியிற்கு அவளின் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கையை வளர்த்தது.
'இத உடனே கடவுளோட செயலாவோ இல்ல மாயாஜாலமாவோ நினைக்க வேண்டாம்... இதை பகுத்தறிவு சிந்தனைகளை பயன்படுத்தி பாக்கணும்... நம்ம உடம்புக்கு பிரச்சனை ஏற்பட்டதுனா அது தன்னை தானே சரி பண்றதுக்கு முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணும்... அப்படி தான் இயற்கை எல்லா உயிரினங்களையும் படைச்சிருக்கு... உங்க மைண்டை கான்ஷியஸ் மைண்ட், சப்கான்ஷியஸ் மைண்ட் அண்ட் அன்கான்ஷியஸ் மைண்ட்னு மூணு வகையா பிரிக்கலாம்... உங்களுக்கு ஏதாவது விபத்து நடந்துச்சுனா உங்களோட விழிப்புணர்வு கான்ஷியஸ் ஸ்டேஜிலேருந்து படி படியா இறங்கி அன் கான்ஷியஸ் ஸ்டேஜுக்கு வரும்... அப்படி வந்ததுனா உங்க உடம்புக்குள்ள இருக்கற இயக்கம் கொஞ்சம் கொஞ்சமா நின்னுரும்... அப்படி நிக்காம இருக்கறதுக்கு உதவி பண்றது தான் சப் கான்ஷியஸ் மைண்ட்... கான்ஷியஸ் ஸ்டேட்ல இருக்கும் போது நீங்க நினைக்கற விஷயங்கள் எதெல்லாம் உங்க மனசை திருப்தி படுத்துதோ இல்ல பிடிச்சிருக்கோ இல்ல எது உங்க மனசை பாதிச்சதோ அதெல்லாம் மட்டும் தான் உங்க மூளைல இருக்கற நியூரோன்ஸ் ஸ்டோர் பண்ணி வெச்சுக்கும்... உங்க மூளைல பதிவான ஒவ்வொரு சம்பவங்களுக்கும் இல்ல நபர்களுக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது... ஒவ்வொன்னும் வேற வேற கால கட்டத்துல நடந்ததா இருக்கலாம்... கான்ஷியஸ்னஸ் இல்லாததுனால சப் கான்ஷியஸ் நம்ம மூளைல பதிவாகியிருக்கற சம்மந்தமே இல்லாத நினைவுகளை கோர்வையா ஒரு கதை மாதிரி அசெம்பிள் பண்ணி ஒரு கற்பனை சூழ்நிலையை நம்ம மனசுக்கு உருவாக்கி நம்ம உடம்புக்குள்ள இருக்கற இயக்கங்களை செயல் பட வைக்கும்... அதாவது உடம்புல இருக்கற சுரப்பிகளை சுரக்க வைக்கும்... ஒரு கனவு மாதிரி வெச்சுக்கோங்களேன்... அதாவது உங்களோட சுய நினைவை நீங்க இழந்துட்டாலும் உங்களோட சப் கான்ஷியஸ் உங்களை இயக்க முயற்சி செய்யும்... தூக்கத்துல பேசுறது அப்புறம் மயக்கநிலைல பேசுறது எல்லாமே சப் கான்ஷியஸ்னால தான்... இது தான் ரவி அப்படி பேசறதுக்கு காரணமா இருக்கும்... இப்போ மறுபடி அந்த மருந்தை குடுத்து பாத்து ரவி எப்படி ரியாக்ட் பண்றாருனு பாப்போம்...' - மன நல மருத்துவர் தேவி.
மறுமுறை அந்த மருந்தை முன்பு கொடுத்த அதே அளவில் ஊசியின் மூலமாக ரவியிற்கு செலுத்தினார்கள்.
இந்த முறை ரவியிடமிருந்து எந்த அசைவும் இல்லை.
நந்தினி யோசனையாய் மருத்துவரை
'ஏன் இப்போ பேச மாட்டேங்கறாரு?' என்று வினவினாள்.
மருத்துவரும் சில நொடிகள் ரவியை பார்த்துவிட்டு நந்தினியை பார்த்து
'முன்னாடி குடுத்த அதே அளவு தான் மருந்தை குடுத்துருக்கேன்... ஏன் இதுக்கு ரவி ரெஸ்பாண்ட் பண்ண மாட்டேங்கறாருனு தெரியலை... என்னால சரியான காரணத்தை கண்டு பிடிக்க முடியலை... எல்லாருடைய மூளையும் அவங்களோட வாழ்க்கையின் புரிதலுக்கும் அவங்க பின் பற்றுற சித்தாந்தத்துக்கும் ஏத்த மாதிரி ஒரு குறிப்பிட்ட செயல்முறை வடிவத்தை பின்பற்றும்... ஒரு வேளை ரமேஷுன்றவர் சொன்ன கதை இவர் மைண்ட்ல ஆழமா பதிஞ்சிருக்கலாம்... அதன் படி ரவி ஆறு தடவ மட்டும் பதட்டமான சூழ்நிலையை சந்திக்கும் போது செயல் படலாம்... அப்படி அடுத்த தடவ செயல் படும் போது அவர் நிரந்தரமா செயல் படறதுக்கான தீர்வை கண்டுபிடிச்சிறலாம்... நான் ஒன்னு பண்றேன்... உங்களுக்கு இந்த மருந்தை பில்ஸ் பார்ம்ல தரேன்... டெய்லி ஒரு மாத்திரை குடுங்க... நெக்ஸ்ட் வீக் கூட்டிட்டு வாங்க... ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் இருக்கானு பாப்போம்.' என்றார்.
நந்தினியும் ரவியை அழைத்துச் சென்றாள்.
வெளியில் வந்து வாடகை வாகனத்தில் பயணித்து கொண்டிருக்கும் போது '"நீ அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களோட கால அளவும் குறைஞ்சிருக்கு... ஆனா கஷ்டங்கள் குறையலை... இனிமேல் நீ சந்திக்க போற கஷ்டங்களோட கணம் ரொம்ப அதிகமா இருக்கும்... உன் மனைவிக்கு வர கஷ்டங்களை அவ நேர்மையாகவும் நியாயமாகவும் முக்கியமா சுயமா சிந்திக்க கூடிய ஆற்றல் மூலமா எதிர் கொள்ளும் போது தான் அந்த கருவை அடையறத்துக்கான பாதை கிடைக்கும்... " என்று ரமேஷ் கூறியதாக ரவி சொன்னது நினைவிற்கு வந்தது. தேவி விதைத்த பகுத்தறிவு சிந்தனை நந்தினியிற்கு தெளிவை கொடுத்தாலும் தனக்கு மன நிம்மதியை கொடுக்காததால் மறுபடி தன் சித்தாந்தத்தின் படியே நடக்க முடிவெடுத்தாள்.
'யாரு அந்த ரமேஷ்?' என்று அவளினுள் ஒரு கேள்வி எழுந்தது. "இப்படி தான் ரமேஷ்னு ஒருத்தன் இப்போ வொர்க் பண்ற கம்பெனில இன்டர்வ்யூ க்ளியர் பண்றதுக்கு உதவி செஞ்சான்... போரிங் மெஷினை எப்படி ஓட்றதுன்னு சொல்லி குடுத்தான்... நான் ஏதாவது மனக்கஷ்டத்தோட வரும் போது குட்டி குட்டி கதைகள் சொல்லி என் மனச தேத்துவான்... அப்புறம் பாதியிலியே என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டான்..." என்று ரவி கூறியது அவளிற்கு நினைவிற்கு வந்தது.
தன் மனதில் என்ன எண்ணம் உதிக்கிறது என்று சில நொடிகள் கண்களை மூடி எண்ண ஓட்டங்களை கவனித்தாள். ரமேஷை பார்த்தால் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் முயற்சி செய்து பார் என்பதே அந்த எண்ணத்தின் வெளிப்பாடு. வாகன ஓட்டுனரை ரவி பணிபுரிந்த வோல்கா நிறுவனத்தின் தொழிற்சாலையை நோக்கி ஒட்டச் சொன்னாள். ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு வாகனம் அந்த நிறுவனத்தை அடைந்தது.
தொழிற்ச்சாலையின் வெளியே மக்கள் சிலர் கூடி "எங்கள் குடிநீரை நச்சுப் படுத்தாதே... வெளியேறு வெளியேறு வெளிநாட்டு நிறுவனமே வெளியேறு..." என்று பதாகைகளை ஏந்திய வாரும், ஆக்ரோஷமாக கூச்சல் போட்டவாறும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த போராட்டக்காரர்களை சுற்றி காவல்துறை அதிகாரிகள் நின்று கொண்டிருந்தார்கள். நந்தினி அந்த வாடகை வாகனத்தை விட்டு இறங்கி ஓட்டுனரின் உதவியுடன் ரவியையும் இறக்கினாள். வாகன ஓட்டுனருக்கு வேறு ஒரு சவாரி இருக்கும் காரணத்தால் நந்தினியிடம் கட்டணத்தை பெற்றுக் கொண்டு விடைபெற்றார்.
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
வெளியில் இருந்த அந்த தொழிற்சாலையின் பாதுகாவலர்களை தொடர்பு கொண்டு தான் இந்த தொழிற்சாலையின் மனிதவள அதிகாரியை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்தாள்.
போராட்டம் நடந்து கொண்டிருப்பதால் அந்த நிறுவனத்தின் பாதுகாவலர்கள் நந்தினியை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தன் பிரச்சனைக்கான தீர்வு உள்ளே தான் இருக்கிறது என்று நந்தினி தீவிரமாக நம்பியதால் கண்களில் நீருடன் கெஞ்சினாள். அந்த பாதுகாவலரும் வேறுவழியில்லாமல் மனிதவள அதிகாரியை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். தொலைபேசியில் பேசிவிட்டு பிறகு அந்த பாதுகாவலர் நந்தினியிடம் எதற்க்காக என்ற அந்த பாதுகாவலனுடைய கேள்வியிற்கு இங்கு ரமேஷ் என்று ஒருவரை பற்றி விவரங்கள் தெரிந்து கொள்வதற்காக என்று சொன்னாள். முறையான அனுமதி பெற்று அந்த தொழிற்சாலையின் மனித வள அதிகாரியை சந்திக்க அந்த தொழிற்சாலையின் உள்ளெ ரவியை அழைத்து சென்றாள். உள்ளே மனித வள அலுவலகத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது வழியில் பெரிய சரக்கு வண்டி நின்று கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் பாரந்தூக்கும் வண்டி பெரிய பெரிய இயந்திரங்களை தூக்கி அந்த சரக்கு வண்டியுனுள் வைத்துக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டே நந்தினி ரவியை மனிதவள அலுவலகம் பக்கம் அழைத்து சென்றாள். மனிதவள அலுவலகத்தை நெருங்க நெருங்க ரமேஷை பார்த்தால் தன்னுடைய பிரச்சனைக்கான தீர்வு நிச்சயமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நந்தினியின் மனதில் வலுக்க தொடங்கியது. ரவியை மட்டும் அந்த அலுவலக வாசலில் உள்ள நாற்காலியில் அமர வைத்துவிட்டு நந்தினி மட்டும் அலுவலகத்தினுள் நுழைந்தாள். மனிதவள அதிகாரி பதட்டமாக காணப்பட்டார். அவர் நந்தினியிடம்
'இப்போ உள்ள வர்றது ரிஸ்குமா... வெளியில வேற போராட்டம் பண்ணி எங்க உயிரை வாங்கிட்டு இருக்கானுங்க... சீக்கிரம்... உங்களுக்கு யாரை பத்தி டீடைல்ஸ் வேணும்?' என்று கேட்டார்.
நந்தினி ரமேஷை பற்றி விசாரித்தாள்.
அந்த மனிதவள அதிகாரியும் தனது கணிப்பொறியில் ரமேஷ் பற்றிய விவரங்களை தேடி பார்த்து
'மொத்தம் பத்து பேர் ரமேஷுன்ற பேர்ல இருக்காங்க... உங்களுக்கு எந்த ரமேஷ் வேணும்?' என்று கேட்டார்.
'என்னோட கணவர் ரவி டூல் ரூம்ல வேலை செஞ்சாரு... அந்த டிபார்ட்மெண்ட்ல இருக்கற ரமேஷ்...' - நந்தினி.
'அந்த டிபார்ட்மெண்ட்ல ரமேஷ்ன்னு யாருமே இல்லையே... ரிசைன் பண்ணவங்க லிஸ்ட்ல தேடிபாக்கறேன் ' என்று மறுமுறை கணினியில் தேடி பார்த்தார் மனிதவள அதிகாரி. சில நொடிகள் கழித்து
'இல்லையே ... நீங்க சொல்ற டிபார்ட்மெண்ட்ல பாஸ்ட் த்ரீ இயர்ஸ்ல ரமேஷ்ன்னு யாரும் வேலை பாக்கல... மே பி ஓல்டர் ரிகார்டஸ் ல தேடி பாத்தா கிடைக்கும்... இப்போ உடனே அதுல தேட முடியாது... நீங்க நேர்ல வரணும்னு கூட அவசியம் இல்லை... வெளிய போராட்டம் நடக்கறதுனால இப்போ கம்பெனியை க்ளோஸ் பண்ணனும்... நீங்க திங்கள்கிழமை எனக்கு கால் பண்ணுங்க... நான் தேடி சொல்றேன் ...' என்றார்.
'ப்ளீஸ்... நான் ரமேஷை பாக்கறதை ஏதோ ஒரு நெகட்டிவ் போஃர்ஸ் தடுக்குது... நான் அவரை பார்த்தா தான் பிரச்சனை தீரும்... ப்ளீஸ்...' என்று அழுதாள்.
அந்த மனிதவள அதிகாரி வேறு வழியில்லாமல் மூன்று வருடத்திற்கு முன் ராஜனாமா செய்தவர்களுடைய பட்டியலில் தேடி பார்த்தார். சில நொடிகள் கழித்து
'டூல் ரூம்ல ரமேஷ்ன்னு ஒரு பேரு ரெஸிக்னேஷன் லிஸ்ட்ல இருக்கு...' என்று அந்த மனிதவள அதிகாரி கூறும் போது நந்தினியின் நம்பிக்கை வலுத்தது. ரமேஷினுடைய விவரங்களை பார்த்துவிட்டு நந்தினியிடம்
'சாரி... ரமேஷோட டீடைல்ஸை செக் பண்ணி பாத்ததுல ரீஸன் பாஃர் ரெஸிக்னேஷன் டெத்ன்னு போட்டிருக்கு... மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு லாரி ஆக்சிடெண்ட்ல அவர் இறந்துருக்காரு...' என்று மனிதவள அதிகாரி கூறியவுடன் நந்தினி மெளனமாக யோசனையில் மூழ்கினாள்.
"கண்மூடித்தனமான நம்பிக்கை ஏதாவது ஒரு கட்டத்துல உங்கள ஏமாற வைக்கும்... நியாயமா நேர்மையா மத்தவனுக்கு துரோகம் பண்ணாம வாழ்ந்தா கடவுள் வந்து உங்களுக்கு உதவி செய்யமாட்டார்... இன்பாஃக்ட் கடவுள்னு ஒருத்தர் கிடையவே கிடையாது..." என்று தேவி கூறியது நினைவில் வந்தது. இப்பொழுது நந்தினியிற்கு தான் பின்பற்றிய சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை குறைந்தது. இவ்வளவு நேரம் தான் போராடியது அனைத்தும் பயனற்றது, பைத்தியக்காரத்தனமானது என்றும் இனிமேல் தன் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும் அதிசயம் நிகழப் போவதில்லை என்றும் எண்ணத் தோன்றியது நந்தினியிற்கு. விரக்தியுடன் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள்.
வெளியே வந்த நந்தினியிற்கு அதிர்ச்சி. ரவி அந்த நாற்காலியில் இல்லை. சுற்றும் முற்றும் தேடினாள்.
ரவி ஒரு பாரந்தூக்கும் இயந்திரம் பக்கம் நின்று கொண்டிருந்தான். அவனை நோக்கி மெதுவாக நடந்தாள்.
ரவியை அவள் நெருங்கியவுடன்
'ரவி... என்ன பேச மாட்டேங்கறீங்க?... என்னாச்சு?' என்று ரவியிடம் அந்த பாரந்தூக்கும் கருவியை ஓட்டுபவர் கேட்டுக் கொண்டிருந்தார். உடனே நந்தினி குறுக்கிட்டு
'அவரால நடக்கவோ பேசவோ முடியாது...' என்றாள்.
அந்த ஓட்டுநர் சந்தேகமாய் நந்தினியிடம் பார்வையை திருப்பி
'இல்லையே... இப்போ இவர் தான் இங்க ஓடிவந்து "ஏன் இந்த மெஷினை ஸ்க்ராப் பண்றீங்க"னு கேட்டார்... அப்புறம் கொஞ்ச நேரம் தேம்பி அழுதார்... நான் ஆறுதல் சொல்லிக்கிட்டு இருந்தேன்... இப்போ திடிர்னு ஒண்ணுமே பேச மாட்டேங்கறாரு...' என்றார்.
'அவருக்கு அதிர்ச்சி தர கூடிய விஷயங்கள் நடந்ததுனா தான் அவரால இயங்க முடியும் ... அவர் எதுக்காக இந்த மெஷினை பத்தி கேட்டார்னு சொல்ல முடியுமா?' - நந்தினி.
'எனக்கு இவரை தெரியும்... இவர் இந்த மெஷின்ல ரொம்ப வருஷமா வேலை செஞ்சதுனால இது மேல அவருக்கு ஒரு பிணைப்பு ஏற்பட்டுடுச்சுனு நினைக்கறேன்...' - ஓட்டுநர்.
நந்தினி ரவியை வெளியே போராட்டக்காரர்கள் பக்கமாக அழைத்து செல்லும் போது
"சாரி... ரமேஷோட டீடைல்ஸை செக் பண்ணி பாத்ததுல ரீஸன் பாஃர் ரெஸிக்னேஷன் டெத்ன்னு போட்டிருக்கு... மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு லாரி ஆக்சிடெண்ட்ல அவர் இறந்துருக்காரு..." என்று மனிதவள அதிகாரி கூறியதும்
"உன் மேல அக்கறை வெக்கிறவங்க சீக்கிரமா உன்னை வெறுத்து ஒதுக்குவாங்க... இல்ல அவங்க இறந்து போயிடுவாங்க..." என்று ரமேஷ் கூறியதாக ரவி சொன்னதும் நினைவிற்கு வந்தது. அப்போது திடீரென்று ஒரு கல் நந்தினியின் தலையை உரசி சென்றது. நந்தினி அப்படியே சாய்ந்தாள். சட்டென்று ரவி அவளை பிடித்தான். இதை பார்த்த காவல் அதிகாரிகள் போராட்டம் செய்பவர்களை தாக்க தொடங்கினர். போராட்ட காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் அதிகமாகியது. ரவி பதட்டமாக 'யாரவது வாங்க ப்ளீஸ்...' என்று கத்தினான். அப்போது காவலர்கள் சிலர் ரவியையும் நந்தினியையும் பாதுகாப்பாக சூழ்ந்தனர். ஒரு காவலர் நந்தினியையும் ரவியையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு நந்தினியிற்கு முதலுதவி கொடுக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த உயர் காவல் அதிகாரி ஒருவர் ரவியிடம்
'சார் நீங்க ஒரே ஒரு கம்ப்லைன் மட்டும் கொடுங்க... இந்த போராட்டம் பண்றவங்களோட கதையை முடிச்சிடறேன்...' என்று சொன்னார்.
ரவியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அந்த உயர் அதிகாரி சந்தேகமாய்
'ஹலோ சார்... என்ன ஆச்சு?... ஏன் பேச மாட்டேங்கறீங்க...' என்று கேட்டார்.
ரவியின் நிலைமையை அவரிடம் விளக்கினாள் நந்தினி.
'ஓ… அப்போ நீங்க ஒரு கம்ப்லைன் கொடுங்கம்மா...' - உயர் அதிகாரி.
சில நொடிகள் யோசித்த நந்தினி
'இல்ல சார்... ஏற்கனேவே எங்க நிலைமை சரியில்ல... இதுல வேற போலீஸ் கேஸ்னு எங்களால அலைய முடியாது... இது இன்னும் எங்க நிலைமையை ரொம்ப மோசமாக்கும்...' - நந்தினி.
'என்னமா இது... மக்கள் நீங்க எல்லாரும் தைரியமா இருந்தா தானமா எங்களால உங்களுக்கு உதவி செய்ய முடியும்...' - உயர் அதிகாரி.
'என்ன மன்னிச்சிருங்க... நான் கம்ப்லைன் குடுக்கற மனநிலைமைல இல்ல... தலையில எனக்கு ஒன்னும் பெரிய அடி இல்ல... நான் கிளம்பறேன்... எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுங்க... என்னையும் என் புருஷனையும் ஒரு ஆட்டோ ல ஏத்திவிடுங்க... அது போதும்...' என்றாள்.
உடனே அந்த உயர் அதிகாரி ஒரு காவலரை அழைத்து நந்தினியையும் ரவியையும் ஒரு வாடகை வாகனத்தில் ஏற்றி விட சொன்னார். இப்போது நந்தினியின் மனதை தேவியின் பகுத்தறிவு சிந்தனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. எப்பொழுதெல்லாம் தேவியின் பகுத்தறிவு சிந்தனையின் மீது நந்தினியிற்கு நம்பிக்கை பிறக்கிறதோ அப்போதெல்லாம் "கண்மூடி தனமாக தான் அமைத்துக் கொண்ட வாழ்க்கையிலிருந்து விடுபட முடியாது... அதனால் தன் பழைய சித்தாந்தத்தினால் உருவான கனவை மறக்க முயற்சி செய்து சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மன நிலையை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்..." என்ற எண்ணம் உருவாகும்.
ரவியும் நந்தினியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அந்த வாகன ஓட்டுனரின் அலைபேசி ஒலித்தது. அந்த தொடர்பை ஏற்றுக் கொண்ட ஓட்டுநர் அலைபேசியின் ஒலி பெருக்கியை அமர்த்தினார். மறுமுனையிலிருந்து ஒரு குரல்
'மச்சி எங்க இருக்க?' என்று கேட்டது.
'பிக் அப் ஒன்னு இருக்கு... திருமழிசை சுயம்புலிங்கேஸ்வரர் கோயில் பக்கத்துல இருக்கேன்... ஒன் ஹவர் ஆவும் வர்றதுக்கு...' என்று ஓட்டுநர் பேசியதை கேட்டவுடன் நந்தினியிற்கு " ரமேஷ் சந்திரன் சாமியை கூட்டிகிட்டு வந்தான்... அவர் தான் எதோ மூலிகைகளை கொண்டு வந்து துண்டு துண்டா செதறின கை கால்களை ஓட்ட வெச்சார்... அப்புறம் மேலேருந்து பாத்துகிட்டு இருந்த என்னை என் உடம்புக்குள்ள நுழைச்சார்... ரமேஷ் என்கிட்டே வந்து "நாங்க ரெண்டு பேரும் இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது... சந்திரன் சாமி சுயம்புலிங்கேஸ்வரர் கோயிலுக்கு போகணும்..."" என்று ரமேஷ் கூறியதாக ரவி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இப்பொழுது மறுபடி நந்தினியின் மனம் அவளின் சித்தாந்தத்தின் மீது சாய்ந்தது.
'கடைசியா ஒரு தடவ முயற்சி செஞ்சு பாப்போம்.' என்று முடிவெடுத்த நந்தினி ஓட்டுநர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு அந்த கோயிலில் தங்கள் இருவரையும் இறக்கி விடுமாறு கூறினாள். ஓட்டுனரும் வண்டியை அந்த கோயில் நோக்கி திருப்பினார். சில நிமிடங்களுக்கு பிறகு வாகனம் அங்கு அவர்களை இறக்கிவிட்டு சென்றது. ஆள் அரவமற்ற அந்த கோயில் மூடப் பட்டிருந்தது. அந்த கோயிலின் பக்கத்தில் ஒரு சிறிய விடு இருந்தது. அந்த வீட்டிற்கு சென்று அதன் கதவை தட்டினாள்.
கதவை திறந்த ஒரு பெண்மணி நந்தினியையும் ரவியையும் சில நொடிகள் பார்த்துவிட்டு
'வணக்கம் ... உங்களுக்கு என்ன வேணும்?' என்று கேட்டாள்.
'என் பேரு நந்தினி... நாங்க கோயில்குள்ள போகணும்.' -நந்தினி.
'என் பேரு உமா... இந்த கோயிலோடு ஆபிஸ் இன்ச்சார்ஜ் என்னோட கணவர் தான்... அவர் வெளிய போயிருக்காரு... இது நீங்க நினைக்கற மாதிரி குடும்பத்தோட வந்து பாக்கற கோயில் கிடையாது... இந்த கோயில் மனநலம் பாதிக்க பட்டவங்களை பாத்துக்கற இடம்... உள்ள சுத்தாமாவே இருக்காது... நீங்க வேற கோயில் போயிட்டுவாங்க...' - உமா.
'இல்ல.... இங்க சந்திரன் சாமின்னு யாராவது இருக்காங்களா?' - நந்தினி.
'ஆமாம்... உள்ள இருக்கற மன நோயாளிகளை பாத்துக்கறவரே அவர் தான்... ஏன் அவரை பாக்கணும்?' என்று கேட்டாள் உமா.
நந்தினியும் காரணத்தை விளக்கினாள்.
உடனே அவள்
'இன்னிக்கு சனிக்கிழமைன்றதுனால ஆஃபிஸ் வேற க்ளோஸ் பண்ணிட்டாங்க... என் புருஷனும் வெளியே போயிருக்காரு... வர்றதுக்கு நைட் ஆயிடும்... நீங்க திங்கள்கிழமை வாங்க... இந்தாங்க எங்க கோயில் ஆஃபிஸோட கார்ட்... வரும் போது கால் பண்ணிட்டு வாங்க...' என்றாள் உமா.
அந்த முகவரி அட்டையை பெற்றுக் கொண்டு அதை ரவியின் காற்சட்டை பையினுள் நுழைத்துவிட்டு, நந்தினி
'இல்ல... என்னால மறுபடி அலைய முடியாது... இன்னிக்கே பாத்துடறேன்...' என்று கூறியவுடன், சில நொடிகள் யோசித்த உமா தன் அலைபேசியை எடுத்து தன் கணவரின் அலைபேசியை தொடர்புகொள்ள முயற்சித்தாள். ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை.
'என் புருஷனோட மொபைலுக்கு தான் கால் பண்ணினேன்... ஆனா சிக்னல் கிடைக்க மாட்டேங்குது ...' என்று கூறிவிட்டு சில நொடிகள் யோசித்த உமா
'சந்திரன் சாமிக்கு மட்டும் கோயிலுக்கு பின்னாடி ஒரு வழியிருக்கு... ஆனா அந்த பக்கம் போனோம்னா மனநலம் பாதிக்க பட்டவங்க இருப்பாங்க... எனக்கு பயம் நான் உள்ள போகமாட்டேன்... உள்ள இருக்குற சந்திரன் சாமிகிட்ட மொபைல் கிடையாது... நான் வேணும்னா முன் வாசல் கதவை திறந்து விட்டு கொஞ்ச தூரம் வரைக்கும் வரேன்... அதனால நீங்க தனியா தான் போய் பாக்கணும்... பரவாயில்லைங்களா?' என்று கேட்டாள்.
பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையினால் நந்தினியும் அதற்கு சம்மதித்தாள்.
'சரி... வாங்க...' என்று நந்தினியை அழைத்து சென்றாள் உமா. நந்தினியும் ரவியை மெதுவாக உந்தி உந்தி அந்த கோயிலின் வாயிலை நோக்கி நகர்த்தினாள். வாயிலை அடைந்தவுடன் உமா வாயில் கதவை திறந்தாள். ஆள் நடமாட்டமின்றி அமைதியாக காட்சியளித்தது அந்த கோயில். சில அடி தூரம் நடந்த பிறகு படிக்கட்டுகள் இருந்தன. ரவியால் ஏறுவது கடினம் என்பதால் நந்தினி உமாவிடம்
'இவரால ஏற முடியாது... நீங்க இவரை இங்க பாத்துக்கோங்க... நான் மட்டும் போயிட்டு வந்துடறேன்...' என்றாள். உமாவும் பதட்டத்துடன்
'சீக்கிரம் வந்திருங்கமா... எனக்கு பயமா இருக்கு... பாத்து போயிட்டுவாங்கம்மா...' என்றாள்.
'சீக்கிரம் வந்துடறேன்...' என்று அந்த படி கட்டுகளில் மெதுவாக ஏற தொடங்கினாள்.
படிக்கட்டுகளை ஏறி கடந்தவுடன் ஒரு கோபுரம் தெரிந்தது. அந்த கோபுரத்தின் வாயிலை அடைந்து அதனின் மறுபக்க வாயிலை அடைந்தாள். அவள் கண்களுக்கு ஒரு சமவெளி தெரிந்தது. அதை தாண்டி ஒரு கோபுரம் இருந்தது. அங்கு தான் சந்திரன் சாமி இருக்க வேண்டும் என்பதை அவள் யூகித்தாள். அந்த சமவெளியில் நிறைய மன நல பாதிக்க பட்டவர்கள் அரை நிர்வாணமாகவும் சிலர் முழுநிர்வாணமாகவும் சுதந்திரமாகவும் நடமாடிக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அவர்களின் கழிவுகள் இருந்தன. இந்த காட்சி ஒரு அருவெறுப்பான மன நிலையை நந்தினியிற்கு கொடுத்தது. திரும்பி செல்லலாம் என்று நினைக்கும் போது
'இவ்வளவு தூரம் வந்து விட்டாய்... கொஞ்ச தூரம் தானே... சகித்துக் கொண்டு இந்த பாதையை கட... உன் பிரச்சனைக்கான தீர்வு அந்த கோபுரத்தினுள் இருக்கிறது...' என்று நந்தினியின் சித்தாந்தத்தினால் முளைத்த எண்ணம் அவளை அதன் படி செயல் பட உந்தியது. வேறுவழியில்லாமல் அந்த நம்பிக்கையோடு முன்னே நகர்ந்தாள். அந்த வாயிலிற்கு பிறகு கீழ இறங்க படிக்கட்டுகள் இருந்தன. அந்த படிக்கட்டுகளில் மெதுவாக கீழே இறங்கி அந்த சமவெளியில் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த மன நோயாளி ஒருவர் ஓ வென கூச்சல் போட்டார். இப்பொழுது சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்த அந்த மனநோயாளிகள் அனைவரது பார்வையும் நந்தினியின் மீது பதிந்தது. இதை கவனித்த நந்தினியிற்கு பயம் அதிகமாகியது. அனைவரும் ஒன்று கூடி அவளை நோக்கி வேகமாக நடந்து வந்தனர். பயந்த நந்தினி திருப்பி சென்றுவிடலாம் என்று திரும்பினாள். அப்போது ஒரு மன நோயாளி ஆக்ரோஷமாக ஓடி வந்து அவளின் பாதையை வழி மறைத்தார். இப்பொழுது அனைத்து மனநோயாளிகளும் நந்தினியை சூழ்ந்தனர். பயத்தினால் நந்தினியிற்கு மூச்சுவாங்கியது. அவளை சூழ்ந்த மன நோயாளிகள் இன்னும் அவளை நெருங்கி கொண்டிருந்தனர். நந்தினி செய்வதறியாமல் அலறினாள். அப்போது
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
அப்போது

'ஹே... ஹே... எல்லாரும் அங்கிருந்து போங்க... போங்க...' என்று காவி உடை அணிந்த ஜடாமுடி முதியவர் ஒருவர் நந்தினி செல்லவிருந்த கோபுரத்திலிருந்து கூச்சல் போட்டார். அவர் குரல் கேட்டவுடன் அனைத்து மன நோயாளிகளும் விலகி சென்றனர்.

'வாங்க... இனிமேல் அவங்க உங்க கிட்ட வர மாட்டாங்க' என்று அந்த நபர் கூறினார். அந்த கோபுரத்தை அடைந்தவுடன் நந்தினி தன்னுடைய பிரச்சனைக்கான தீர்வு நிச்சயமாக கிடைக்கப்போகிறது என்று நினைக்க தொடங்கினாள். அந்த நபரை பார்த்து

'நீங்க தான் சந்திரன் சாமியா?' என்று கேட்டாள்.

அவரும் 'ஆமாம்' என்றார்.

உடனே நந்தினி ரமேஷ் கூறியதாக ரவி சொன்ன விஷயங்கள் அனைத்தையும் கூறிவிட்டு

'எங்களுக்கு இருக்கற பிரச்சனைக்கான கருவை நாங்க தேடி கண்டுபிடிச்சு சரி செய்யணும்... அதனால தான் நாங்க ரமேஷை தேடி போனோம்... ஆனா அவர் இறந்துட்டாரு... ரவி சுயநினைவு அடைஞ்சு பேசும் போது நீங்க தான் அவரை காப்பாத்துனாதா சொன்னாரு... அதான் உங்களை தேடி வந்தேன்...' என்று சந்திரனிடம் கூறினாள்.

சில நொடிகள் நந்தினியையே மெளனமாக பார்த்த சந்திரன்

'எனக்கு புரியலை... இப்போ நான் என்ன பண்ணனும்?' என்று கேட்டார்.

அவரின் இந்த கேள்வி நந்தினியின் நம்பிக்கையை தளர்த்தி தான் செய்வது அனைத்துமே ஒரு முட்டாள் தனமான காரியம் என்று எண்ணத் தோன்றியது நந்தினியிற்கு.

சந்திரன் பேசுவதை தொடர்ந்தார்.

இந்த கோயிலுக்கு யாரும் வர மாட்டாங்க... ' என்று சொல்லிவிட்டு சில நொடிகள் யோசித்த அவர்

'ம்ம்ம்... இப்போ ஞாபகத்துக்கு வருது... மூணு வருஷத்துக்கு முன்னாடி ரவின்னு ஒருத்தன் உள்ள வந்து அழுதுகிட்டு இருந்தான்... அப்போ நான் எதேர்ச்சியா ஆபிஸ் ரூமுக்கு வந்தேன்... அவன் அழறத பாத்துட்டு என்ன ஆச்சுன்னு கேட்டேன்... "என்னோட உயிர் தோழன் ஒரு விபத்துல இறந்துட்டான்... இந்த உலகத்துல அவன் மட்டும் தான் எங்கிட்ட அன்பா பாசமா நடந்துப்பான்... இப்போ அவனும் இல்ல... விரக்தியா கால் போன போக்குல நடந்துகிட்டு இருக்கும் போது இந்த கோயிலை பாத்தேன்... கோயிலுக்கு போனா மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்னு அவன் சொல்லுவான்... எனக்கு முன்கோபம் அதிகம்... என்னை நிறைய கோயிலுக்கு கூட்டிகிட்டு போயிருக்கான்... இந்த கோயிலுக்கு வந்து உள்ள உக்காரும் போது அவன் ஞாபகம் வந்துடுச்சு... என்னால அழறத கட்டு படுத்த முடியலை..."னு சொன்னான்... அப்புறம் அவன்கூட கொஞ்ச நேரம் நான் ஆறுதலா பேசிட்டு அவனை அனுப்பி வெச்சுட்டேன்...' என்றார்.

அவர் பேசும் போது

"கான்ஷியஸ்னஸ் இல்லாததுனால சப் கான்ஷியஸ் நம்ம மூளைல பதிவாகியிருக்கற சம்மந்தமே இல்லாத நினைவுகளை கோர்வையா ஒரு கதை மாதிரி அசெம்பிள் பண்ணி ஒரு கற்பனை சூழ்நிலையை நம்ம மனசுக்கு உருவாக்கி நம்ம உடம்புக்குள்ள இருக்கற இயக்கங்களை செயல் பட வைக்கும்... அதாவது உடம்புல இருக்கற சுரப்பிகளை சுரக்க வைக்கும்" என்று மருத்துவர் தேவி கூறியது அவளின் நினைவிற்கு வந்து அவளின் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கையை இழக்க செய்தது. அமைதியாக யோசித்த படி சந்திரனிடம் எதுவும் மேற்கொண்டு பேசாமல் எழுந்து நடக்க தொடங்கினாள். அவள் போவதை பார்த்த சந்திரன்

'உனக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலை... கடவுளை நம்பு அவர் கை விட மாட்டார்' என்று கூறினார். அவர் கூறியதை கேட்டவுடன் நந்தினியிற்கு கோபம் உச்சத்தை எட்டியது. திரும்பி அவரை பார்த்து

'மண்ணாங்கட்டி... கடவுள் காப்பாத்துவாருன்றதெல்லாம் பொய்... முட்டாள் தான் அப்படி நினைப்பான்... பகுத்தறிவோடு சிந்திச்சு செயல் படுறது தான் சரி... இந்த உலகத்துல நடக்கற எல்லா விஷயத்துக்கும் பின்னாடி சயின்ஸ் தான் இருக்கு... சத்தியமா கடவுள் இல்லை... இப்படி கடவுள் வந்து உதவி செய்வாருன்னு நம்பி தான் என் வாழ்க்கையை தொலைச்சிட்டு வந்து நிக்கறேன்... என்னோட கடவுள் நம்பிக்கைக்கும் நான் நல்லா படிச்சு பாஸ் பண்ணதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது எல்லாமே தற்செயலா நடந்தது தான்னு இப்போ புரியுது...' என்று நந்தினி கோபமாக கத்துவதை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த சந்திரன்

'எல்லாமே சயின்ஸ் தான்... ஒத்துக்கறேன்... பகுத்தறிவும் தேவை தான்... அதோட உங்க மனசுக்கு தோதா ஒரு கடவுள் நம்பிக்கையை கலக்கறது நல்லது... வெறும் பகுத்தறிவும் சயின்ஸும் கொடுக்கற நம்பிக்கை கொண்டு போய் முட்டு சந்துல தான் உங்கள நிறுத்தும்... ஆனா கடவுள் நம்பிக்கை தான் அந்த முட்டு சந்துல சின்ன வழியை காட்டும்... அந்த வழி தான் உங்க பிரச்னையை தீர்க்கறதுக்கான வழியா இருக்கும்...' என்றார்.

'பிரச்சனைக்கு காரணமே உங்க கடவுள் நம்பிக்கை தான்... நம்ம சமுதாயத்துல சூத்திரர்கள் கடவுளோட கால்லேருந்து வந்தாங்க, வைஷியர்கள் கடவுளோட வயிறுலேருந்தும் தொடையிலேருந்தும் வந்தாங்க, சத்ரியர்கள் கடவுளோட மார்புலேருந்தும், தோள்பட்டையிலேருந்தும் வந்தாங்க, பிராமணர்கள் கடவுளோட தலையிலிருந்து வந்தாங்கனு இருக்கு... இங்கனு இல்ல உலகத்துல எந்த மதத்துலையும் இந்த மாதிரி பல ஏற்ற தாழ்வுகளை உருவாக்குனதே கடவுள் நம்பிக்கை இருக்கறவனுங்க தான்... இப்படி பாரபட்சத்தை வளக்கற கடவுள் நம்பிக்கை நமக்கு தேவைதானா?' - நந்தினி.

'அதை நீ அப்படி எடுத்துக்க கூடாது... நம்ம சமுதாயம் என்பது ஒரு மனிதனின் உடல் போன்றது... கால்கள் இல்லாமல் ஒரு மனிதனால் எப்படி முன்னேறி செல்ல முடியாதோ அது போல உழைக்கும் வர்க்கம் என்பது ஒரு சமுதாயத்தின் கால் போன்றது... நம் சமுதாயத்திற்கு உணவுகள் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களை ஏற்பாடு செய்து தரும் வைஷியன் என்பவன் இந்த சமுதாயத்தில் நம் உடம்பிற்கு தேவையான சத்துக்களை பகிர்ந்து தரும் வயிற்றை போன்றவன்... சத்ரியன் நம்ம சமுதாயத்துக்கு பாதுகாப்பா இருக்கறவன்... அதே சமயத்துல நெஞ்சுல ஈரம் இருக்கறவனாகவும் இருக்கணும்... அதுக்கு தான் சத்ரியனை இந்த சமுதாயத்தின் தோள்பட்டை மற்றும் மார்பு போன்றவன்னு உவமையா சொன்னாங்க.... காலங்களையும் சூழ்நிலைகளையும் கணித்து நம் சமுதாயத்தை நல் வழி நடத்தும் பிராமணன் சமுதாயத்தின் மூளைக்கு சமானமானவன்... இது பிறப்பின் அடிப்படையில உருவான வர்க்கங்கள் கிடையாது... பிராமணனாக இருக்கற ஒருத்தனோட பையன் சூத்திரனாக மாறலாம்... அதேமாதிரி சூத்திரனோட பையனும் பிராமணன் ஆகலாம்... இதெல்லாம் ஒவ்வொருத்தரோட விருப்பத்தை பொறுத்தது... இந்த நாலு வர்கமுமே சமமானது... இப்படி தான் மொதல்ல இருந்துச்சு... அப்புறம் போக போக அதிகார ஆசை, பொன் பொருளாசை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா முளைச்சு இந்த அமைப்பு முறையை இப்படி திரிச்சு மாத்திட்டாங்க... அதே மாதிரி கடவுள் படைக்கும் போது யாரையும் ஏற்ற தாழ்வோட படைக்கலை... எல்லாரையும்...' என்று சந்திரன் கூறி முடிப்பதற்குள் நந்தினி குறுக்கிட்டு

'தெரியும் எல்லாரையும் சமமா படைச்சாரு... மனுஷங்க தான் ஏற்ற தாழ்வை அவர் பேர்ல உருவாக்குனாங்க... அதானே சொல்ல போறீங்க...' என்று கேட்டாள்.

'நான் பேசி முடிக்கறவரைக்கும் பொறுமையா கேளு... கடவுள் யாரையும் சமமாகவும் படைக்கலை... இங்க யாரும் உயர்ந்தவனும் கிடையாது தாழ்ந்தவனும் கிடையாது சமமும் கிடையாது...' - சந்திரன்.

நந்தினி புரியாமல் யோசனையாய்

'அப்புறம்?' என்று கேட்டாள்.

'எல்லாரும் தனி தன்மை வாய்ந்தவர்கள்... ஒவ்வொருத்தரோட பாதையும் தேடலும் வேற வேற... ஒரே விஷயம் ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட தன்மையை பொறுத்து வேற வேற உணர்வை கொடுக்கும்... அதனால தான் நாம மத்தவங்களோட வாழ்க்கையை நம்ம வாழ்க்கையோட ஒப்பிட்டு பாக்க கூடாது... சில சமயம் சில பேரோட வாழ்க்கை பாதையும் நம்மளோட வாழ்க்கை பாதையும் சில தூரங்கள் ஒண்ணா அமையும்... அதெல்லாம் தற்காலிகம் தான்... அதாவது அம்மா, அப்பா, கணவன், மனைவி, சகோதரன், சகோதரி, நண்பர்கள் இதெல்லாமே தற்காலிகம் தான்... உன் பயணம் முடியற வரைக்கும் நீ மட்டும் தான் நிரந்திரம்... உனக்கு இயற்கையாவே கடவுள் மறுப்பு கொள்கை இருந்ததுனா அதை பின்பற்று... ஆனா மத்தவங்களோட கருத்தை வலுக்கட்டாயமா பின்பற்றாதே... அதே மாதிரி உன் கருத்தை வலுக்கட்டாயமா மத்தவங்களுக்கு திணிச்சு அவங்களை மூளை சலவை செஞ்சு உன்னை பின்பற்ற வெக்காதே... பிரச்சனையே இதுனால தான் வருது... இந்த மாதிரி சில தூரம் வாழ்க்கை பாதை ஒன்னா அமைஞ்ச மனிதர்களுக்கு அந்த சமயத்துல அவங்களுக்கு இருக்கற சூழல்னாலையும் மன பக்குவத்துனாலையும் உருவான சித்தாந்தங்கள் ஒன்னா தான் இருக்கும்... இயற்கையாகவே அவங்க ஒண்ணா சேர்ந்து ஒரு குழுவா செயல் படுவாங்க... அந்த குழுவோடு செயல் பாடுகள் இந்த சமுதாயத்துக்கு நல்ல விளைவை குடுக்கும்... ஆனா அந்த குழுவோட செயல் பாடுகளும் நிரந்தரம் கிடையாது... ஒரு கால கட்டத்துல அவங்களோட வாழ்க்கை பாதை மாற மாற அந்த குழு ஸ்திர நிலைமையிலிருந்து தளர்ந்து கொஞ்சம் கொஞ்சமா கலைய ஆரம்பிக்கும்... அப்புறம் புதுசா ஒரு குழு உண்டாகும்... இப்படி முளைச்சது தான் ஜாதி மதமெல்லாம்... ' - சந்திரன்.

'கடவுள் தான் நம்மளை படைச்சாருன்னா அப்புறம் ஏன் மனுஷனுக்கு ஏற்ற தாழ்வை விதைக்கற சிந்தனையை உங்க கடவுள் குடுக்கணும்...? மொதல்ல கடவுள் இருக்காருன்றத உங்களால நிருபிக்க முடியுமா?' - நந்தினி

'இந்த பிரபஞ்சமே நம்பிக்கையின் அடிப்படையில தான் இயங்குதே தவிர நிருபனத்தின் அடிப்படையில இல்ல... தேர் ஆர் நோ ப்ரூஃப்ஸ் (PROOFS) ஹியர்... தேர் ஆர் ஒன்லி பிலீப்ஃஸ் (BELIEFS)... ' - சந்திரன்.

'நீங்க சொல்றது ஏத்துக்கற மாதிரி இல்லை...' - நந்தினி.

சில நொடிகள் யோசித்த சந்திரன்

'நீ சூப்பர் மார்கெட்ல வாங்கி சாப்பிடற பொருளை சொந்தமா ஒரு ஆய்வு கூடம் வெச்சு ஆராய்ச்சி பண்ணியா சாப்பிடற?... அவன் போட்டுருக்கற எக்ஸ்பயரி டேட்டை நம்பி தானே சாப்பிடற... உன் விஞ்ஞான வழியிலேயே வரேன்... இந்த பிரபஞ்சம் பிக் பாங் ல தான் உருவாச்சு... பிக் பாங்குக்கு முன்னாடி சிங்குலாரிட்டியா இருந்துச்சு... சிங்குலாரிட்டின்றது ஒரு மாசிவ் பிளாக் ஹோல் அதாவது பெருத்த கருங்குழி... இரண்டு வகையான கருங்குழி இருக்கு... சூரியனை விட இருபத்தி ஐந்து மடங்கு இருக்கக் கூடிய நட்சத்திரங்களுக்கு அதை ஒளிவிக்க கூடிய எரிபொருள் தீந்து போச்சுன்னா அது ஒரு மிகப்பெரிய சூப்பர் நோவாவா வெடிச்சி சிதறும், அதுக்கப்புறம் அது பிளாக் ஹோலா மாறிடும்... இது முதல் வகை கருங்குழி... எல்லா காலக்ஸி நடுவிலேயும் மிகப்பெரிய பிளாக் ஹோல் இருக்கு... அது எப்படி உருவாச்சுனு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க... இது இரண்டாவது வகை... என்னுடைய புரிதலின் படி பிளாக் ஹோல் என்பது ஓட்டை கிடையாது... மிக அடர்த்தியான ஒரு திடப் பொருள்... ஒரு வேளை அது தான் டார்க் மேட்டர் னு எனக்கு தோணுது... சரி இப்போ விஷயத்துக்கு வரேன்... இந்த பிளாக் ஹோல் அதை சுத்தி இருக்கற எல்லா வஸ்துக்களையும் உள்ள இழுத்துட்ட பிறகு இந்த ப்ரபஞ்சத்துல வெறும் பிளாக் ஹோல்ஸ் மட்டும் தான் இருக்கும்... அப்புறம் எல்லா பிளாக் ஹோல்சும் ஒன்னோட ஒன்னு இணைய ஆரம்பிச்சு ஒரு மிகப்பெரிய பிளாக் ஹோலா மாறிடும்... அந்த மிக பெரிய பிளாக் ஹோலோட அடர்த்தி எணிக்கையிலடங்கா நிலையில இருக்கறதுனால அது வெடிச்சு சிதறும் ... இது தான் பிக் பாங்... மறுபடி இந்த பிக் பாங் னால வேற மாதிரி ஒரு பிரபஞ்சம் உருவாகலாம்... மறுபடி அந்த கருங்குழி எல்லாத்தையும் உள்ள இழுத்து ஒரு பெரிய பிளாக் ஹோலா மாறும்... மறுபடி பிக் பாங் நடக்கும்... இது மறுபடி மறுபடி நடந்துக்கிட்டே இருக்கும்... இது ஒரு லூப்... விண்வெளி பத்தின ஆராய்ச்சியாளர்கள் சிலர் "ஸ்ட்ரிங் தியரி"னு ஒரு கான்செப்ட் சொல்றாங்க... அது என்ன சொல்லுதுன்னா, இந்த ப்ரபஞ்சத்துல இருக்கற துகள்கள் அணுக்கள் மற்றும் உப அணுக்கள் எல்லாத்தையும் வெங்காயம் மாதிரி பிரிச்சு பிரிச்சு உள்ள போனோம்னா கடைசியா இருக்கறது ஒரு குறிப்பிட்ட அதிர்வலையை வெளிப்படுத்தற துடிப்பான ஆற்றல் தான்... இப்போ கடவுள் யாருன்னு சொல்றேன்... இந்த மாதிரி நிறைய பிரபஞ்சங்கள் இருக்கலாம்... அங்கேயும் இதே மாதிரி மறுபடி மறுபடி பிக் பாங் நடந்துகிட்டு இருக்கலாம்... இந்த இயக்கங்களுக்கு காரணமா ஒரு கரு இயக்கம் இருக்கணும்... அதை தான் நாம கடவுள்னு சொல்றோம்... எப்படி ஒரு நிறுவனத்துல அடிமட்டத்துல இருக்கற தொழிலாளி உயர் பதவி அடையணும்னு ஆசை படுவானோ அதே மாதிரி தான் பிக் பாங் அதாவது பெருவெடிப்புல உருவான ஆற்றல்கள் எப்படியாவது எல்லா ப்ரபஞ்சங்களோட இயக்கத்துக்கு காரணமான கருப்பொருளை அடைய முயற்சி பண்ணும்... அந்த ஆற்றல்கள் இருக்கற சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி ஒரு கருவியை உருவாக்கி அதன் மூலம் அந்த கருப்பொருளோட அலைவரிசைக்கு ஏத்த மாதிரி ட்யூன் பண்ணிக்க முயற்சி பண்ணும்... ஒரு ரேடியோ பெட்டி மாதிரி... நம்ம உலகத்துல நம்ம உடம்பு தான் அந்த கருவி... நம்ம ஒவ்வொருத்தரும் உள்ளேயும் ஒரு துடிப்பான கருவாற்றல் இருக்கு... அந்த ஆற்றலை தான் ஆன்மானு சொல்றோம்... வேற வேற கிரகங்கள்ல இந்த நிகழ்வுகள் வேற டைமென்ஷென்ல அதாவது வேற கால அளவுல நடந்துகிட்டு இருக்கும்... நம்மளோட ஐம்புலன்களோட இயக்கத்தின் கால அளவுனால உருவான ஆறாம் அறிவை வெச்சு இதையெல்லாம் ப்ரூவ் பண்ணவே முடியாது... அந்த கருப்பொருளோட ஆற்றலுக்கும் அது இயங்கற கால அளவுக்கும் முன்னாடி நம்மளோட ஆறாம் அறிவும் நம்மளோட ஆயுள் காலமெல்லாம் ஒண்ணுமே இல்லை... நீங்க எல்லாரும் உக்காந்து ரேடியோ பெட்டியை ஆராய்ச்சி பண்ணி அது எப்படி இயங்குதுன்னு கண்டு பிடிச்சி எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்லிக்கறீங்க... ஆனா அந்த ரேடியோ பெட்டியே நாம இனிமையான பாட்டை கேட்டு இன்பம் அடையறதுக்கு தான்றத உணராம இருக்கீங்க... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அலைவரிசை... உங்கள ட்யூன் பண்ணி அந்த கருப்பொருளை உணர ஆரம்பிசீங்கனா உங்களை சுத்தி ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகும்... நீங்க சாப்பிடாம உயிர்வாழலாம்... இந்த பிரபஞ்சத்துக்கு எந்த மூலைக்கும் போயிட்டு வரலாம்... நீ கேக்கற மாதிரி இதுக்கு வேணா நிரூபணம் இருக்கு... ராக்கெட்டும் சாட்டிலைட்டும் இல்லாம எப்படி நம்ம முன்னோர்களால வானியற்பியலை கணிக்க முடிஞ்சது?... இன்னொரு விஷயம் குஜராத்ல பிரகலாத் ஜானினு ஒருத்தர் எழுபத்தி அஞ்சு வருஷமா சாப்பிடாம, தண்ணி குடிக்காம உயிர் வாழறாரு... இது எப்படி சாத்தியம்னு நம்ம உள்நாட்டிலிருந்து வெளிநாட்டு சயின்டிஸ்ட் வரைக்கும் தலையை பிச்சிகிட்டு இருக்கானுங்க... அவர் கிட்ட இது எப்படினு கேட்டதுக்கு "நான் தீவிர அம்மன் பக்தன் என்னோட பன்னிரண்டு வயசுல அம்மன் வந்து கனவுல நீ இனிமேல் எதையும் சாப்பிட வேணாம்... நான் உனக்கான சக்தியை குடுக்கறேன்னு சொல்லிட்டாங்க..." னு சொல்றாரு... விஞ்ஞான அறிவு மூலமா இந்த மாதிரி அதிசயம் நடக்க வாய்ப்பில்லை... கடவுள் நம்பிக்கை மூலமா தான் இந்த மாதிரி அதிசயங்கள் நடக்கும்... இந்த ப்ரபஞ்சங்கள்ல இருக்கற விதிகள்ல முக்கியமான ஒரு விதி இருக்கு... ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும்... உனக்கு புரியும் படியா சொல்லனும்னா பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கற இடத்துல தான் நெகட்டிவ் வைப்ரேஷன் னும் இருக்கும்... அதே மாதிரி எங்கெல்லாம் நெகட்டிவ் வைப்ரேஷன் இருக்கோ அங்கெல்லாம் பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும்... நீ உன் இஷ்டம் போல உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி நடந்தா தான் அந்த கருப்பொருளோட அலைவரிசை கிடைக்கும்... நெகட்டிவ் வைப்ரேஷன் புலனின்பத்தையும் பொருள் சார் ஆசையையும் தூண்டி விடும்... இந்த போதை ஒரு மாயையை உருவாக்கி உன் மனசை குழப்பி உன் வாழ்க்கை பயணத்தை ஒரு மாய வட்டத்துக்குள்ள சிக்க வைக்கும்... நீ மறுபடி மறுபடி பிறவி எடுத்துகிட்டே இருப்பே... கடைசி வரைக்கும் உனக்கு அந்த கருப்பொருளோட அலைவரிசை கிடைக்காது... இந்த மாயைலேருந்து வெளிய வரணும்னா உன் ஆசை எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா உன்னை கட்டுப்படுத்தி அதுலேருந்து வெளிய வரணும்... இதெல்லாம் என்னோட புரிதல்... அதே மாதிரி உனக்குன்னு வர புரிதலை வெச்சு உன் வாழ்க்கையை நடத்து... உன் பிரச்சனையிலிருந்து தானா வெளிய வருவே...' என்று சொல்லி முடித்தார்.

'நீங்க பேசறதெல்லாம் நல்லா தான் இருக்கு... இப்படி நல்லா பேசறவங்க பேச்சை கேட்டு தான் கடவுள் நம்பிக்கையை வளத்துக்கிட்டேன்... நான் என்ன சொல்றேன்னா நீங்க பேசறதை நிறுத்திட்டு செயல்ல நிருபீங்க... ஒன்னு நீங்களும் சாப்பிடாம தண்ணி குடிக்காம வாழ்ந்து காட்டுங்க இல்ல கடவுள் பெயரை சொல்லி பறந்து காட்டுங்க... அப்போ நம்பறேன்...' என்று கூறிவிட்டு அங்கிருந்து நடக்க தொடங்கினாள்.

நந்தினியின் வார்த்தைகள் சந்திரனுக்கு கோபத்தை வர வைத்தது.

'நில்லு...' என்று சத்தமாக கத்தினார். நந்தினி திரும்பி அவரை பார்த்தாள்.

'நானும் ஒரு காலத்துல நாத்திக வாதி தான்... என் அம்மா நான் குழந்தையா இருக்கும் போதே இறந்துட்டாங்க... எனக்கு கல்யாண வாழ்க்கைல நம்பிக்கை இருந்ததில்லை... எனக்கு புகை மது மாதுனு பல பழக்கங்கள் இருந்துச்சு... முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னோட ஆஃபிஸ் ல வேலை பாத்த விவேக்ன்னு ஒருத்தன் அவனை கல்யாணம் பணிகிட்ட பொண்ணு கொஞ்ச நாள்லியே விட்டுட்டு போயிட்டான்னு தற்கொலை பண்ணிகிட்டான்... அவன் தற்கொலை பண்ணிக்கறதுக்கு சில நிமிஷங்கள் முன்னாடி அவன் அழுதுகிட்டு இருந்ததை பார்த்தேன்... அவன் தற்கொலை பண்ணிக்க போறதை தடுக்கறதுக்கு தான் இயற்கை எனக்கு ஒரு எச்சரிக்கையை என்னோட சிந்தனை மூலமா கொடுத்துச்சு... நான் உடனே அவன்கிட்ட போய் பேச்சு கொடுத்து அவனை ஆசுவாச படுத்த முயற்சி பண்ணினேன்... அப்போ அவனோட அம்மா கிட்டேருந்து போஃன் கால் வந்துச்சு... விவேக் அவங்க மேல கோபமா இருந்ததுனால அவங்களோட பேச மறுத்துட்டான்... நான் அவங்க அம்மா கிட்ட பேசுனேன்... அவங்க கிட்ட கண்டிப்பா உங்க பையன் நல்லபடியா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நான் பொறுப்பு ... நீங்க கவலை படாதிங்கனு வாக்குறுதி கொடுத்தேன்... அவங்க கிட்ட பேசிட்டு வர்றதுக்குள்ள விவேக் அவசரப்பட்டு தற்கொலை பண்ணிகிட்டான்... ரத்த வெள்ளத்துல அவனை பாத்த உடனே எனக்கு மயக்கம் வந்துடுச்சு... ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருந்தேன்... இந்த சம்பவம் என் மனசுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்குச்சு... ரத்த வெள்ளத்துல மெதந்துக்கிட்டிருந்த அவனோட முகம் அடிக்கடி தானா ஞாபகம் வந்து ஒரு பயத்தை கொடுக்கும்... அதே சமயத்துல விவேக்கோட அம்மாகிட்ட நான் குடுத்த வாக்குறுதி எனக்கு தானா ஞாபகம் வந்து எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை குடுக்கும்... என்னால முன்ன இருந்த மாதிரி நார்மலா வாழ முடியலை... என்னால தூங்க முடியாது... பல வருஷமா சரியான தூக்கம் இல்லாததுனால சைக்கலாஜிக்கலா ரொம்ப அஃபெக்ட் ஆயிட்டேன்... அவனோட அம்மாவை பாக்கணும்னு என் மனசு உந்தினாலும் எங்கே அவங்கள போய் பாத்தா இந்த பயமும் குற்றஉணர்ச்சியும் அதிகமாயிடுமோன்னு பயந்து என்னை கட்டு படுத்திக்கிட்டேன்... நானும் பாக்காத டாக்டர் இல்ல... அவங்களும் என்ன்னவோ மருந்து கொடுத்தாங்க... எந்த முன்னேற்றமும் இல்லை... குடி பழக்கமும் புகை பழக்கமும் அதிகமாயிடுச்சு... இப்படி என் வாழ்க்கை போய்கிட்டு இருக்கும் போது என் அப்பாவும் இறந்துட்டார்... இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு யோசிச்சு பாக்கும் போது தான் இந்த இயற்கையோட என்கிட்ட சொல்ல வந்த விஷயம் எனக்கு புரிஞ்சது... "விவேக்கை காப்பாத்தறதுக்கு தான் உன்னை ஏற்பாடு பண்ணினேன்... அவன் அவசர பட்டு தற்கொலை பண்ணிகிட்டான்... இனிமேல் உனக்கு அம்மா இல்லாத துயரத்தை போக்க நீ தான் விவேக்கோட அம்மாவை பாத்துக்கணும்"ன்றது தான் இயற்கை என் கிட்ட சொல்ல வந்த விஷயம்... இதை புரிஞ்சுக்காம ஒரு தற்குறி மாதிரி மாத்திரை மருந்துனு சாப்பிட்டு கிட்டு இருந்தேன்... உடனே விசாரிச்சு அவங்க வீட்டுக்கு போனேன்... "அவங்க பையன் இறந்ததுலேருந்து அவங்களுக்கு மன நோய் வந்துடுச்சு... அதனால விவேக்கோட அப்பா இந்த வீட்டை வித்துட்டு ரெண்டு பேரும் வேற இடத்துக்கு போய்ட்டாங்க"னு சொன்னாங்க... எங்க போயிருக்காங்கனு கேட்டதுக்கு “தெரியாது"னு சொல்லிட்டாங்க... நானும் ஊர் ஊரா பரதேசி மாதிரி அவங்கள தேடி அலைஞ்சுக்கிட்டு இருந்தேன்... ஒரு நாள் என் நண்பன் ஒருத்தன் என்னை மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்துக்கு கூட்டிகிட்டு போனான்... அங்க மன நலம் பாதிக்க பட்ட ஒரு குழந்தை திடீர்னு மழலையா சிரிச்சிகிட்டே வந்து அப்பானு கூப்பிடுச்சு... அப்புறம் என் கைய பிடிச்சு அதோட ப்ரண்ட்ஸ்கிட்ட என் அப்பா என் அப்பான்னு அறிமுக படுத்துச்சு... அந்த நேரம் என் மனசு உடைஞ்சு கண் கலங்கிடுச்சு... யாரோ ஒருத்தர் அவங்க அப்பாவை மத்தவங்க கிட்ட அறிமுக படுத்தி வெச்சதை இந்த குழந்தை பாத்துட்டு இப்படி சொல்லுதுன்னு அந்த குழந்தைகள் காப்பகத்துல இருக்கறவங்க சொன்னாங்க... அன்னிக்கு நைட் ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா தூங்குனேன்... அப்புறம் தினமும் அந்த குழந்தையை பாத்துட்டு வருவேன்... அதுவும் என்னை அப்பா அப்பா னு கூப்பிடும்... அப்படி பாக்க பாக்க என்கிட்டே இருந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் கொஞ்ச கொஞ்சமா விட்டு விலகி போயிடுச்சு... உலகத்துல இந்த உறவே எனக்கு போதும்னு நான் நினைக்கும் போது அந்த பொண்ணு ஒரு நாள் மூளை காய்ச்சல் ல என் மடியிலேயே கடைசி மூச்சை விட்டா... அவன் உயிர் விடறதுக்கு முன்னாடி என்னை பாத்து அப்பான்னு சிரிச்சிகிட்டே கண்ணை மூடினா...' என்று மேற்கொண்டு பேசமுடியாமல் தேம்பி தேம்பி அழ தொடங்கினார். நந்தினி அவரை எவ்வளவு தான் ஆசுவாச படுத்த முயற்சித்தும் அவரால் அழுகையை கட்டு படுத்த முடியவில்லை... சட்டென்று அங்கிருந்த மன நோயாளிகள் அங்கு வந்து அவருக்கு ஒரு கோப்பை தண்ணீரை குடுத்து அவரை ஆசுவாச படுத்தினர்...
 
Top Bottom