Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கரையும் காதலன் - கதை

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
"அகல்யா!" என்று குரல் வர திரும்பினாள்.

அங்கே ஷ்ரவன் நின்று அகல்யாவை முறைத்து கொண்டிருந்தான்.

"அண்ணா வாங்க. என்ன வேணும்? கூப்பிட்டு இருந்தா நானே வந்திருப்பேனே?" என்றாள் திரும்பி விழிநீரை துடைத்தபடி.

"அகல்யா! என்ன பேசிட்டு இருக்க நீ? நந்துகிட்ட இப்படி தான் பேசுறதா? அவன் இப்போ தான் உனக்கு கணவன். ஆனா எனக்கு சின்ன வயசுலேருந்தே நண்பன். அவன் நீங்க யாரும் என்கூட இல்லாதப்ப எனக்கு எவ்ளோ செஞ்சிருக்கான்னு தெரியுமா? வேற யாருமே என் கூட இருந்திருக்க மாட்டாங்க. நான் இந்த நிலைமைக்கு இருக்க காரணமே நந்து தான். அவன் இடத்துல நான் இருந்திருந்தாலும் அதையே தான் செஞ்சிருப்பேன். சந்தர்ப்ப சூழ்நிலை தான் காரணம். இன்னொரு வார்த்தை அவனை தப்பா பேச கூடாது.

அன்னைக்கு என்னால அப்பா செஞ்ச சூழ்ச்சியை கண்டுபிடிக்க முடியலை. ஆனா நந்து மட்டும் வரலைன்னா உன் நிலைமை என்ன ஆகியிருக்கும்? அவனை விட நல்ல புருஷன் உனக்கு கிடைக்க மாட்டான். எப்பவும் அவனுக்கு துணையா இருந்து சந்தோசமா இருக்கனும். எனக்கு இதெல்லாம் நடக்கணும்னு இருக்கு நடந்துமுடிஞ்சிருச்சி. அவ்ளோ தான். இனி இப்படி பேசாத புரியுதா?" என்றான் சற்று கடுமையான குரலில்.

'சரி' என்று தலையாட்டியபடி தலை கவிழ்ந்தாள் அகல்யா.

நந்துவிடம் திரும்பி, "அவள் ஏதோ சின்ன பொண்ணு. என் மேல இருக்க பாசத்துல அப்படி பேசிட்டா. அதை பெருசா எடுத்துக்காத டா. அவளை நல்லா பார்த்துக்க." என்றான் ஷ்ரவன்.

ஷ்ரவனை தழுவிக்கொண்ட நந்து.

"விடுடா. எனக்கு இதுகூட புரியாதா? நான் பார்த்துக்குறேன்." என்றான்.

ஷ்ரவன் நந்துவை அணைத்தபடி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

"உன்னை காப்பாத்த தான் என் தங்கச்சிய திட்டினேன். நான் இப்போ வரலை உன்னை தாளிச்சு கொட்டிருப்பா. உன் மேல கோபம் அப்டியே தான் இருக்கு. அது உனக்கும் எனக்கும் நடுவுல மட்டும் தான். நேரம் கிடைக்கும் போது தனியா உன்னை கவனிச்சிக்கிறேன்." என்று கிசுகிசுத்தான்.

அவனையே வாயை பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்த நந்துவின் வாயை மூடியவன் அங்கிருந்து நகர்ந்தான்.

சமயலரையின் வாசலில் நின்றவன் திரும்பாமல், "ஹ்ம்ம்.. நான் நீங்க பேசுறதை ஒட்டு கேட்கலை. ரூம்ல தண்ணி இல்லை. தாகமா இருந்துது அதான் வரப்ப நீங்க பேசுறது என் காதுல விழுந்துது." என்று அங்கிருந்து நகர்ந்தான்.

நந்து அகல்யாவிடம் நெருங்க அவள் அவனை பாராமல் வேகமாக தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள்.

'ஹ்ம்ம் அவ திட்டிட்டு இருந்தா கூட அவளை நான் சமாதானம் படுத்திருப்பேன். இவன் நடுவுல புகுந்து எனக்கு உதவுறேன்னு இப்படி கோர்த்துவிட்டு போய்ட்டான். பாரு. என் அகல் குட்டி பேசாம போறா' என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருந்தான் நந்து.

பின் வேகமாக ஒரு குவளை தண்ணீரை பிடித்து வெளியே வந்தான்.

"டேய் நில்லுடா!" என்றான் ஷ்ரவனை.

திரும்பியவனிடம் "இந்தா " என்று நீரை நீட்டினான்.

ஆழ்ந்த சிந்தனையில் நின்ற ஷ்ரவனை "என்னடா ஏதாவது பிரச்சனையா? ஏன் ஒரு மாதிரியா இருக்க? அப்பப்போ ஏதோ யோசிக்கிற?" என்றான் நந்து கவலையாய்.

"நந்து என்னன்னு சொல்ல தெரியலை. ஆனா இன்னும் முழு பிரச்னையும் நம்மை விட்டு போன மாதிரி எனக்கு தெரியலை டா. ஏதோ ஒரு பிரச்சனை நம்மகிட்ட இருக்க மாதிரி உள்ளுக்குள்ள சொல்லிட்டே இருக்கு. அது என்னன்னு தெரியலை. உங்க யாருக்கும் எதுவும் ஆகக்கூடாதுன்னு பயமா இருக்குடா" என்றான் ஷ்ரவன் தவிப்பாய்.

"டேய் நீ சும்மா மனசை போட்டு குழப்பிக்காத. உன் வாழ்க்கையை நல்லபடியா ஆரம்பிடா. உனக்காக என் தங்கச்சி காத்திட்டு இருக்கா" என்று சிரித்தான் நந்து.

அவனை பார்த்து புன்னகைத்த ஷ்ரவன், "எங்கடா உன் பொண்டாட்டி உள்ள ஓடிட்டாளா? போ போய் சமாதானம் பண்ணு" என்று தன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.

'உன்னை... எனக்கும் ஒரு நேரம் வரும்' என்று நினைத்து நந்து தன்னவளை காண நடந்தான்.

உள்ளே நுழைந்தவனது கண்கள் அகல்யாவை தேடியது.

அமைதியாக கட்டிலில் அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்திருந்தவளை காண மனம் வருந்தியது.

அருகில் சென்று "அகல்" என்று அவளின் தோளை தொட,

விருட்டென்று அவனது இடையினை கட்டிக்கொண்டு அழுது, "ஐ ஆம் சாரி! நான் அப்படி பேசியிருக்க கூடாது. அண்ணாக்கு இப்படிலாம் நடந்துருச்சு. நாம கூட இல்லையேன்ற கோபம் . அதான் அப்படி பேசிட்டேன்" என்றாள்.

அகல்யாவின் தலையை லேசாக வருடியவன் அவளருகில் அமர்ந்து தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.

"சரி விடுடா. அவன் ஏதோ பேசிட்டான். நீ அதை மனசுல வச்சிக்காத" என்றான் நந்து.

அவனை விழிகள் மூடாது கண்டவள்.

"நான் உங்களை நோகடிச்சிட்டேனேன்னு கவலை பட்டா. நீங்க என்னை பத்தி யோசிக்கிறிங்க? நான் உண்மையா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். உன் மேல உள்ள நேசம் இன்னும் வானளவு உயருது நந்து." என்றாள் மெதுவாக.

அவளை வேகமாக தன்னை நோக்கி நகர்த்தியவன்.

"இப்போ என்ன சொன்ன?" என்றான் ஆர்வமாய்.

"அது... அது... நான் ஒன்னும் சொல்லலையே" என்றாள் அகல்யா.

"கடைசியா என்னை என்ன சொன்ன?" என்றான் கண்களில் குறும்பு மின்ன.

"அது அது... நந்...து ன்னு ....' என்று முடிக்காமல் நிறுத்தினாள்.

"இத்தனை வருஷதத்துல எத்தனை தடவை கெஞ்சிருப்பேன். ஒரே ஒரு தடவை என் பேரை கூப்பிடுன்னு... ப்ளீஸ் இன்னும் ஒரே ஒரு முறை கூப்பிடு. எனக்கு சரியா கேக்கலை." என்றான் நந்து.

"ஹுஹும்ம்.. " என்று வெட்கத்துடன் முகத்தை கரங்கள் கொண்டு மூடினாள் அகல்யா.

****************************

"மதி " என்று குளியலறை நோக்கி குரல் கொடுத்தான் ஷ்ரவன்.

இரண்டு நொடி அமைதி காக்க, அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததால், "மதி என்ன பண்ற? எவ்ளோ நேரம் குளிப்ப? வெளிய வா." என்றான் எரிச்சலாய்.

இப்பொழுதும் எந்த பதிலும் வராததால் கதவை தட்டினான்.

கதவு திறக்காமல் இருக்க அவனுக்குள் ஏதோ ஒரு பதற்றம் கொண்டது.

பதற்றத்துடன் குளியல் அறையின் கதவை உடைக்க முயற்சித்தான்.

ஐந்து நிமிட போராட்டத்திற்கு பின் திறந்த கதவின் உள்ளே மதி...



 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
கரையும் காதலன் 44​

"மதி" என்றான் நடுங்கும் குரலில்.

அவனின் நிலை எதுவும் தெரியாமல், "என்ன?" என்றாள் மதி.

"இப்போ உனக்கு உடம்பு சரி இல்லை. நான் பக்கத்துலையே இருக்கேன். அமைதியா தூங்கு. " என்று அவளின் தலை கோத அவனின் முகத்தை நோக்கியபடியே உறங்கி போனாள் மதி.

"ஐ லவ் யூ. மதி குட்டி" என்று அவளின் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்து அவளை அணைத்துகொண்டு உறங்க முயன்றான்.

"என்ன கவி? கனியிடம் இருந்து தப்பிவிட்டதால் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துவிட்டாயோ? இல்லை..." என்று ஒரு முகம் தெரியாத குரல் ஒலிக்க, "யாரு?" என்று கத்தினான்.

"ஷ்ரவன்" என்று தன்னை யாரோ உலுக்குவது போல் இருக்க, விழிகளை திறந்த ஷ்ரவன் அப்பொழுது தான் தான் கண்டது கனவு என்று புரிந்து கொண்டான்.

"என்ன ஆச்சு ஷ்ரவன்? எதுக்கு இப்படி கத்தின?" என்றாள் மதி விழிகளில் கலக்கத்தோடு.

'இவகிட்ட சொன்னா கண்டிப்பா பயந்துடுவா.. பாவம் இப்போ தான் ஒரு கண்டதுல இருந்து தப்பி பிழைச்சு வந்துருக்கா. கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்' என்று தனக்குள் கூறிக்கொண்டவன். "ஒண்ணுமில்லை மதிம்மா" என்று அவளை சமாதானம் செய்து உறங்க செய்தான்.

ஆனால், அவனின் உறக்கம் பறந்து விட்டது. காரணம் தான் கண்டது கனவே அல்ல. அதில் ஏதோ ஒரு உண்மை இருப்பது போல் உணர்ந்தான் ஷ்ரவன்.

'அடுத்து என்ன வரபோகுதுன்னு தெரியலை.' என்று சிந்தனையில் மூழ்கினான்.

இரண்டு நாட்கள் அங்கு தங்கிய பின்னர், தங்களின் வீட்டிற்கு கிளம்பினர்.

"டேய் நந்து! உனக்கு ஒரு மாசம் தான் டைம். சீக்கிரம் இங்க இருக்க எல்லாத்தையும் முடிச்சிட்டு அங்க வந்து சேரு." என்றான் ஷ்ரவன். அவனை கட்டிக்கொண்ட நந்து "சரி டா" என்று சிரித்தான்.

அவர்களிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பியவர்களின் மனதில் வெவ்வேறு எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன.

'இப்போ எல்லாரும் இவரை எப்படி பார்ப்பாங்க. கேட்கிற எல்லாருக்கும் உண்மைய விளக்கி சொல்லிட்டு இருக்க முடியாது. என்ன பண்றது?' என்று மதி யோசித்து கொண்டிருக்க.

'எல்லாம் ஒரு வழியா முடிஞ்சு நான் மீண்டு வந்துட்டேன்னு நினைச்சா?? இப்போ புதுசா ஒரு பிரச்சனை கிளம்பிருக்கு. அந்த கனவுல வினாதத்து உண்மையா இருக்குமோ இல்ல சும்மா என்னோட கற்பனையா? என்ன பன்றது எப்படி தெரிஞ்சிக்கிறது? எது எப்படின்னாலும் என் மதிக்கு எதுவும் ஆகவிடமாட்டேன். அவள் ஒரு குழந்தை உள்ளம் கொண்டவள். அவ எவ்ளோ என்னை நேசிச்சா அவ உயிரை பணயம் வைச்சு என்னை காப்பாதிருப்பா?' என்று தனக்குள் சிந்தித்துகொண்டு வந்தான் ஷ்ரவன்.

யோசித்து கொண்டே வந்தவன் திடிரென்று சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்த, இதை எதிர்பார்க்காத மதி முன்னே சென்று வேகமாய் இடித்து கொண்டாள்.

"என்னாச்சு ஷ்ரவன்? எதுக்கு இப்போ வண்டியை இப்படி நிறுத்தின?" என்றாள் தலையை இடக்கையால் தேய்த்து கொண்டு.

பதில் ஏதும் கூறாமல் எதிரே பார்த்துக்கொண்டிருக்கும் ஷ்ரவனிடம்.

"என்ன நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன் நீ எங்கயோ பார்த்துட்டு இருக்க?" என்று அவன் விழிகள் நிலைத்து நிற்கும் இடத்தை திரும்பி பார்த்தாள் ஷன்மதி.

அங்கே நின்றிருந்தாள் ஒரு இளவயது பெண்.

"யாரு இந்த பொண்ணு? எதுக்கு நம்ம வினாடி முன்னாடி நிக்கிறா?" என்றாள் ஷன்மதி.

அவளை திரும்பி முறைத்தவன்.

"உன்கூட தானே நானும் வரேன். எனக்கு என்னவோ ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி கேக்குற?" என்றான் ஷ்ரவன்.

கார் விண்டோ வழியாக தலையை மட்டும் நீட்டி, "யாருங்க? எதுக்கு வண்டிக்கு முன்னாடி இப்படி நிக்கிறிங்க?" என்றான்.

"சார்! கேன் யு கிவ் மீ எ லிப்ட் ப்ளீஸ். என் கார் பஞ்சர் ஆகிடுச்சு. ட்ரைவர் யாராவது இருக்காங்களான்னு பார்க்க போயிருக்கார். ரொம்ப நேரமா யாருமே நிறுத்தலை. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க" என்றாள் விழிகளில் கெஞ்சலாய்.

"ஷ்ரவன் பாவம். ரொம்ப கெஞ்சுறாங்க. கூட்டிட்டு போகலாம்" என்றாள் மதி மதியும் கெஞ்சலோடு.

"நீயே சொல்லிட்ட அப்புறம் மறுப்பேது மதி குட்டி. கூட்டிட்டு போகலாம்" என்றான் ஷ்ரவன். இருந்தாலும் அவனின் உள்ளுணர்வு ஏதோ சரி இல்லை என்று கூறியது.

"சரி வாங்க" என்று அந்த பெண்ணை வண்டியில் ஏற்றி கொண்டு புறப்பட்டனர்.

"எங்க போகணும் நீங்க?" என்றாள் மதி.

"நீங்க எதுவரைக்கும் போறிங்களோ அதுவரைக்கும்?" என்றாள் அப்பெண்.

"என்ன சொல்றிங்க?" என்றான் ஷ்ரவன் பதட்டமாய்.

"ரிலாக்ஸ் சார்! எதுக்கு உடனே டென்ஷன் ஆகுறீங்க? நான் சும்மா சொன்னேன். நான் மெட்றாஸ் போகணும்" என்றாள் அப்பெண்.

"ஓஹ் அப்படியா! சரி" பேச்சை நிறுத்தி கொண்டு கவனத்தை முன்னே இருக்கும் ரோட்டின் முன் கவனம் செலுத்தினாள் அந்த பெண்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
கரையும் காதலன் 45​
'என்னவோ சரியில்லை' என்று ஷ்ரவனின் உள்மனது சொல்லிக்கொண்டே இருக்க பதற்றம் தொற்றிக்கொண்டது அவனை.

இந்த பெண் வண்டியில் ஏறிய பின் தான் ஏதோ நிலைமை தவருவதாக உணர, காரின் கண்ணாடி வழியே பின் நோக்கினான்.

அங்கே, யாரும் இல்லாமல் போக எழுத்துக்கள் மட்டும் தெரிந்தது.

"என் உயிரை தேடி வந்த என்னை தொலைக்க எண்ணி உன் உயிரை தொலைத்து விடாதே" என்று இருந்தது.

ஒரு நொடி ஷ்ரவனுக்கு தலையே சுற்றியது.

பின்னால் அமர்ந்திருந்த பெண் எங்கே போனாள் என்ற கேள்வி அவனை குடைந்து கொண்டிருந்தது.

பதற்றத்துடன் மதியின் கரத்தினை தொட, மேனி சிலிர்த்தாள் அவள்.

நாணத்தோடு மெல்ல தன் கரத்தினை விடுவிக்க முயன்றாள். ஷ்ரவனின் பிடி இன்னும் இறுக, விழிகளை விரித்து அவனை நோக்க, ஒலி எழுபாமல் விழிகளால் 'பிளீஸ்' என்றான் ஷ்ரவன்.

மீண்டும் கண்ணாடி வழியே பின் நோக்க, அங்கே அப்பெண் இல்லாததால் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

"என்னங்க? ஏன் திடிர்னு பிரேக் போட்டீங்க?" என்றாள் மதி.

"இல்ல ஒண்ணுமில்லை மதி..." என்று திக்கினான் ஷ்ரவன். மெல்ல பின்னால் திரும்ப பார்க்க அவளும் பார்த்தாள்.

"என்ன? எதுக்கு அங்கேயே பார்த்துட்டு இருக்க?" என்றாள் மதி.

அங்கே அந்த பெண் சிரித்தபடி "என்னாச்சு ஏன் வண்டியை நிறுத்திட்டீங்க? ஏதாவது பிரோப்லமா?' என்றாள்.

"இல்ல" வெடுக்கென்று கூறிய ஷ்ரவன், மீண்டும் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

இருந்தும் மதியின் கரத்தை விடாமல் இறுக்கமாய் பற்றினான். அவனின் சிந்தனை சிதறுவதை உணர்ந்தவள் ஆறுதலாய் மேலும் அழுந்த பற்றினாள்.

'ஏதோ சரி இல்லை' என்பதை மட்டும் உள்ளம் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்க, 'என்ன நடக்க போகிறதோ?' என்ற பதற்றதில் இருந்தான் ஷ்ரவன்.

"இந்த ஊருக்கு எப்போ வந்தீங்க?" என்றாள் மதி அப்பெண்ணிடம்.

"நான் அப்பா அம்மா எல்லோரும் கனடால இருக்கோம். இப்போ என் அம்மா ஊருக்கு வந்தேன்." என்றாள்.

"உங்க கூட உங்க அப்பா அம்மா வரலையா?" என்றாள் மதி.

"இல்ல... அவங்களால பிசினஸ் விட்டு வரமுடியாது. அதான் நான் மட்டும் பறந்து வந்துட்டேன்." என்றாள்.

"சென்னைல யார பார்க்க போறீங்க?" என்றாள் மதி.

"எங்க அம்மாவோட அண்ணன் இருக்காங்க. அங்க தான் போறேன்." என்றாள் அப்பெண்.

"அவங்க எங்க இருக்காங்க?" என்றான் ஷ்ரவன்.

"அவங்க சென்னைல ..." என்று ஷ்ரவனின் வீட்டு முகவரியை கூற, ஷ்ரவன் மதி முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

"திடீர்னு வந்துருக்கீங்க? எதாவது விஷேஷமா?" என்றாள் மதி விடை தெரிய.

"இல்ல...இல்ல.... எங்க மாமா பையன்னா எனக்கு உயிரு. அவருக்காக என் உயிரை கூட தருவேன்." என்று கூற ஷன்மதி திரும்பி ஷரவனை முறைத்தாள்.

'அயையோ எனக்கு இவளை யாருன்னே தெரியலை.. அப்புறம் எப்படி எனக்கு புடிக்கும். நல்லா இருக்கும் குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போய்டாதாம்மா' என்று தனக்குள் புலம்பியபடி, தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் தலையாட்டினான்.

"அவருக்கு என்ன?" என்றாள் ஷன்மதி ஓரவிழியால் ஷிரவனை பார்த்துக்கொண்டே.

'இப்போ எதுக்கு இவ இதை கேக்குறா? டேய் ஷிரவா இவங்க ரெண்டு பேரும் உன்னை வச்சு விளையாட்றாங்கடா' என்று தனக்குள் புகைந்தான்.

மதியின் பேச்சில் சிரித்தவள்,

"அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான்னா அவ்ளோ உயிரு. எனக்கும் அவருக்கும் கல்யாணம் நடக்க போகுது" என்றாள் அந்த பெண்.

"உங்க மாமா பையன்னா உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா? அவரை நீங்க பார்க்கலையா?” என்றாள் மதி ஷரவனை கோபமாய் முறைத்து.

"ஹ் ஹிம்.. அவங்கிட்ட நான் இதுவரைக்கும் பேசுனது இல்ல. நேர்ல தான் பார்க்கணும்ன்னு இதுவரைக்கும் போட்டோல கூட பார்த்தது கிடையாது."

"வாவ்! ஒரு வேல அவருக்கு வேற கல்யாணம் நடந்திருந்தா?" என்றாள் மதி.

"அவனுக்காக உயிரை கொடுக்க துணிஞ்ச நான். அவன் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டேன்" என்றாள் இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி.

அதற்கு மேல் பேச பிடிக்காமல் மனம் சஞ்ஜலிக்க அமைதியானாள் கேள்வி கேட்காமல்.

'இப்போ தான் பெரிய கண்டதுல இருந்து தப்பிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள இன்னொனு வந்து நிக்குது. ஆனா இது அவ்ளோ ஈஸியா மூடியும்னு தோனலை.

கடவுளே! என் காதலையும் கணவனையும் காப்பத்துறதுக்கு இவளை எதிர்த்து போராட எனக்கு தைரியத்தை கொடுப்பா.' என்று கடவுளிடம் விழிநீர் சுரக்க வேண்டினாள்.

அவளின் கண்ணீர் ஷ்ரவனின் காங்களில் பட்டு தெறிக்க, ஷண்மதியை ஆறுதலாய் அணைத்தான் ஷ்ரவன்.

ஓரமாக ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.

"மதி தலை பாரமா இருக்கு. ஒரு காப்பி சாப்ட்டுட்டு போகலாம்" என்றான் மதியின் விழிகளை ஊடுருவி.

"சரி. எனக்கு ஒரு லெமன் டீ மட்டும் போதும்" என்றாள் மதி.

"உங்களுக்கு?" என்றான் அவளை பார்க்காமல்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
கரையும் காதலன் 46

கரையும் காதலன் 46​
"உங்களுக்கு என்ன வாங்குறிங்களோ அதே எனக்கும்." என்றாள் அப்பெண்.

கடுப்பான ஷ்ரவன், "ஹ்ம்ம... எனக்கு விஷம் வாங்க போறேன். உங்களுக்கும் வேணுமா?" என்றான் வெடுக்கென்று.

சத்தமாக நகைத்தவள், "பரவால்ல! உங்களுக்கு அது பிடிக்கும்னா எனக்கும் வாங்கிட்டு வாங்க." என்றாள்.

'என்னது என் புருஷனுக்கு பிடிக்கும்னா உனக்கும் வாங்கிட்டு வரணுமா? என்னடா நடக்குது இங்க? நான் இங்க தான் இருக்கேன்.' என்று திரும்பி ஷரவனை முறைக்க.

'என்னை எதுக்கு முறைக்கிற? நானா சொன்னேன். அவ தானா சொல்றா?' என்றது அந்த பார்வை.

'இருடி உனக்கு இருக்கு... எனக்கு சக்களத்தியா வரலாம்னு பார்க்கிறியா?' என்று மனதிற்குள் ஏகத்துக்கும் அர்ச்சித்தாள்.

அவளின் எண்ணங்களை அறிந்த ஷ்ரவன் மனதிற்குள் சிரித்துகொண்டு.

'அய்யோ பொறாமை படும்போது கூட என் பொண்டாட்டி எவ்ளோ கியூட்டா இருக்கா.' என்று சிரித்து கொண்டு போனான்.

"உங்க பேர் என்ன?" என்றாள் மதி.

"இட்ஸ் அன் ஓல்ட் நேம்... மதுரஞ்சனி." என்றாள் அவள்.

மின்சாரம் தாக்குவது போல் மேனியில் மின்னல் வெட்ட அவளின் விழிகளை ஒரு நொடி நோக்கினாள் மதி.

"ஓஹ் நல்ல பேரு. நீங்க வரிங்கன்னு உங்க வீட்ல சொல்லிட்டீங்களா?" என்றாள் மதி.

"இல்ல... சஸ்பென்ஸ்... அதோட வந்தே ஆகவேண்டிய நிர்பந்தம்." என்றாள் ரஞ்சனி.

‘ஹ்ம் என்னவாக இருக்கும்?’ யோசித்தாள் மதி.

“அவன் வேற ஏதோ பெண்ணை லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதா கேள்வி பட்டேன்.” என்று நிறுத்தினாள் ரஞ்சனி.

இவற்றை எல்லாம் போனில் கேட்டுக் கொண்டிருந்த ஷ்ரவனின் உள்ளம் பதற தொடங்கியது.

"அதான்..." என்று இழுத்தாள் மதி பதறும் நெஞ்சதோடு.

"அதான் நான் உயிராய் நினைக்குறவனோட உயிர் எதுவோ அதை எடுக்க வந்துருக்கேன்." என்றாள் ரஞ்சனி.

நிலைமை வேறு விதமாக போவதை உணர்ந்த ஷ்ரவன் தான் மதுவின்அருகில் இருக்க வேண்டிய நேரம் என்று தோன்ற வேகமாக வெளியே வந்தான்.

ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியோடு மது பார்க்க.

"என்ன மதி இவ்ளோ ஷாக் ஆகிட்டிங்க? நீ தான் என் ஷரவனோட உயிர்ன்னு தெரியும். அதான் உன்னை அவங்கிட்ட இருந்து பறிக்க வந்துருக்கேன்." என்று அறக்கத் தனமாய் சிரித்தாள் ரஞ்சனி.

வேகமாக வெளியே வந்து கொண்டிருந்த ஷ்ரவன் இதை கேட்க, "இதை நான் எதிர்பார்க்கலையே?" என்று கூறியபடி வேகமாக தன் காரை நோக்கி ஓடினான்.

விழிகள் மனதில் நிறைந்திருக்கும் உயிர் காத்தவளை தேட, காற்றாய் மறைந்திருந்தாள் இருந்த இடம் தெரியாமல்.

காரிலும் வெளியிலும் அலைந்து தேட காணாமலே போயிருந்தாள் அவனின் உயிர் காதலி.

"அய்யோ மதி. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் உன் ஃபோன் மூலமா கேக்க தள்ளி வந்தேன். ஆனா அதுவே நீ என்னை விட்டு பிரிய காரணமாகிடுச்சே.. இப்போ நான் என்ன பண்ணுவேன் நீ இல்லாம." என்று தரையில் மடங்கி விழுந்து கதறினான்.

என்ன செய்வது? எங்கு சென்று தேடுவது? என்று தெரியாமல் ஷ்ரவன் நிலைகொள்ள முடியாமல் திணறியவன்.

பின் நந்துவுக்கு ஃபோன் செய்து, "நந்து உடனே நான் சொல்ற இடதுக்கு வா. ரொம்ப அர்ஜெண்ட்." என்றான் ஷ்ரவன்.

"என்னடா இப்போ தான கொஞ்ச நேரதுக்கு முந்தி கிளம்புனிங்க?" என்றான் நந்து..

"உடனே வாடா" என்று ஷ்ரவன் மேலும் பேசமுடியால் நா தழுதழுக்க.

"சரி டா வரேன். எங்க வரணும்?" என்றான் நந்து.

தான் இருந்த இடத்தின் முகவரியை கூறி கட் செய்தான் ஷ்ரவன்.

அவனின் குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்த நந்து ஓடி வர,

"நந்து அந்த மது ரஞ்சனி என் மதிய..." என்று கூறமுடியாமல் திணற..

"என்னாச்சு மதிக்கு?" என்றான் நந்து பதட்டமாய்.

"மதுவை காணம்டா." என்று ஷ்ரவன் கூற.

"என்னடா சொல்ற? என்ன நடந்தது தெளிவா சொல்லு." என்றான் நந்து.

நடந்ததை ஷ்ரவன் கூற, "டேய் உனக்கு சந்தேகம் இருக்கும்போது எதுக்குடா மதியை தனியா விட்ட?" என்று சீறினான் நந்து.

"சத்தியமா இது மாதிரி ஆகும்னு எனக்கு தெரியாதுடா." என்று அழுதான் ஷ்ரவன்.

"சரி டா. கண்டுபிடிச்சிடலாம்." என்று ஷரவனை அணைத்து ஆறுதல் கூறினான் நந்து.

ஷ்ரவனின் போன் அடிக்க இருவரின் கவனமும் அதில் சென்றது.

"ஷ்ரவன் யாரா இருந்தாலும் பொறுமையாய பேசு. நமக்கு மது தான் முக்கியம்." என்றான் நந்து.

'சரி' என்று தலையசைத்த ஷ்ரவன் படபடக்கும் இதயத்தோடும் நடுங்கும் கரத்தோடும், "ஹலோ!" என்றான்.

"என்ன ஷ்ரவன் சாரி சாரி கவி எப்படி இருக்கீங்க?" என்றாள் மது ரஞ்சனி.

"ரஞ்சனி" என்று வெறியோடு கர்ஜித்தான் ஷரவன்.

"ஹலோ! மாமா ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற?" என்றாள் ரஞ்சனி சிரித்து.

"சீ வாய மூடு. யாரு உனக்கு மாமா? என் மதி எங்க? ஒழுங்கு மரியாதையா அவளை விட்று." என்றான் ஷ்ரவன்.

"நீ கேட்ட உடனே விடவா அவ்ளோ கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்தேன்." என்றான் ரஞ்சனி.

"அவ யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவ. அவ பாவம் அவளை விட்று." என்றான் ஷ்ரவன் கலங்கும் குரலில்.

"சரி நீ இவ்ளோ கேக்குற. அதனால விட்டுட்றேன். ஆனா நான் சொல்றா மாதிரி நீ செஞ்சா தான் உன் மதி உயிரோட கிடைப்பா." என்றாள் ரஞ்சனி.

"நான் என்ன செய்யனும்?" என்றான் ஷ்ரவன் என்ன சொல்ல போகிறாளோ என்ற பதட்டதோடு.

அவள் கூறியதை கேட்டு அவனின் இதயமும் நின்று விடும் போல் இருந்தது.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
கரையும் காதலன் 47:

"ரொம்ப சிம்பிள். உனக்கு டைவோர்ஸ் பேஃப்பர் அனுப்பியிருக்கேன். சைன் பண்ணிட்டு நாளைக்கு என்கூட கனடா வந்துடு. என்னை கல்யாணம் பண்ணிக்க அந்த மதிய விட்று. அடுத்த நொடி அவளை விட்டுட்றேன்." என்றாள் எந்த வித தயக்கமும் இல்லாமல்.

"என்ன? உனக்கு மூளை குழம்பிடுச்சா என்ன? நான் இன்னொரு பொண்ணோட கணவன்?" என்றான் ஷ்ரவன் அதிர்ச்சியும் ஆத்திரமுமாக.

"எதை பத்தியும் எனக்கு கவலை இல்லை. எனக்கு நீ வேணும். உனக்கு உன் மதியோட உயிர் வேணும்னா என்னை கல்யாணம் பண்ணிக்க." என்றாள் ரஞ்சனி.

"ஷட் ஆப். என்னால என் மதிக்கு துரோகம் பண்ண முடியாது. உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்க." என்றான் ஷ்ரவன் கோபமாய்.

"அய்யோ மாமா!" என்று சிரித்தாள் ரஞ்சனி.

"ஹேய் மாமா! கீமான்ன அவ்ளோ தான் முகறைய பேத்துருவேன்." என்றான் ஷ்ரவன்.

"நான் இந்த நரம்பு இல்ல நரம்பு அதாவது நெர்வ்ஸ் சம்பந்தமா படிச்ச நியுராலஜிஸ்ட். எங்க எந்த நரம்ப கட் பண்ணா என்ன நடக்கும்னு அக்கு வேர் ஆனி வேரா தெரியும். நல்லா யோசிச்சு சொல்லு. நீ சொல்ற பதில்ல தான் அவளை உயிரோட விட்றதா இல்ல உயிர் எடுக்கிறதா இல்ல உயிர் மட்டும் விட்டுட்டு வெறும் ஜடமா விட்றதான்னு முடிவு பண்ணனும். நீ வேணா ஒரு ஒரு மணி நேரம் டைம் எடுதுக்கோ யோசிச்சு சொல்லு." என்றாள் ரஞ்சனி .

பேரதிர்ச்சியில் அப்படியே தரையில் அமர்ந்தவனை நந்து, "என்ன ஆச்சுடா?" என்றான்.

நடந்தவற்றை கூறிய ஷ்ரவன், "என்னால எப்படிடா என் மதிய மறக்க முடியும்? அது நான் சாகறத்துக்கு சமம். என் உயிரை கொடுத்தா அவளை காப்பாத்த முடியும்னா கண்டிப்பா யோசிக்காம கொடுத்திடுவேன். ஆனா, அவ கேக்குறது என்னை, அவகிட்ட இருக்கிறது என் உயிரைவிட நான் அதிகமா நேசிக்கிற என் மதியோட உயிர். இப்போ நான் என்ன செய்றது?" என்று இரு கரங்களால் தலையை பிடித்து கொண்டு கதறினான்.

"ஷ்ரவன்! எழுந்திரு முதல்ல. நிச்சயமா இதுக்கு ஒரு வழி இருக்கும். நீ ஷரவனா யோசிச்சா உனக்கு எதுவும் தோனாது. ஆனா கவி யா யோசி நிச்சயம் இதுக்கு ஒரு வழி கிடைக்கும்." என்றான் நந்து.

அவன் கூறியதை கேட்ட ஷ்ரவன் அவனை நோக்க ஆதரவாய் தலையாட்டினான் நந்து.

எழுந்து கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்த ஷ்ரவன் கண்களில் அருகிலிருந்த கோவில் தென்பட வேகமாக அங்கே நடந்தான்.

அவனை தனியாக விடமால் தானும் பின்னே சென்ற நந்து தூரத்தில் நின்று அவனை கவனித்தான்.

இறைவனின் முன் மண்டியிட்ட ஷ்ரவன் விழிகள் மூடி கரம் கூப்பி கண்ணீர் சுரக்க வேண்ட ஆரம்பித்தான்.

"கடவுளே! நான் என்ன செய்வேன் என் மதிக்கு இந்த உடலும் உள்ளமும் சொந்தம் தவிர ஒரு பெண்ணை எப்படி என்னால் மணக்க முடியும். நான் எப்படியாவது என் மதியை கண்டுபிடிக்க வேண்டும் என்ன செய்ய போகிறேன். எனக்கு ஏதாவது ஒரு வழிகாட்டவேண்டும்." என்று கதறினான்.

விழிமூடி வேண்டியவனுக்கு ஒரு ஒளி தெரிய, பிரகாசமாய் சிரித்தபடி மீண்டும் விழிகள் மூடி தன் திட்டம் செயல்படுகிறதா என்று பார்த்தான்.

விழிமூடி அமர்ந்தவன் ஆழ்நிலை தியானதுக்கு செல்ல, "மதி! மதி!" என்று அழைக்க எந்த விட பதிலும் இல்லாமல் போக சிறிது ஏமாற்றதுடன் மீண்டும், "மதி மதி! மதிம்மா நான் ஷ்ரவன் பேசுறது உனக்கு கேக்குதா? உன் கண்ணை மூடி மனசுக்குள்ள பேசு. எனக்கு கேக்கும். மதி. உன்னால முடியும் பிளீஸ் எனக்காக ட்ரை பண்ணுடா." என்றான்.

தூரத்தில் இருந்து இவனை கவனித்து கொண்டிருந்த அருகில் வந்து அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

விழிகள் மூடிய நிலையில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.

"மதி! என் குரல் கேக்குதா இல்லையாடி. பிளீஸ் பதில் பேசு. " என்றான்.

அங்கே,

'எனக்கு எங்க இருந்து இந்த குரல் கேக்குது. இது ஷரவனோட குரல் எனக்குள்ள மட்டும் தான் கேக்குதா? இல்ல எல்லோருக்கும் கேக்குதா? நான் வாய் திறந்து பதில் பேசுனா கேக்குமே. என்ன பண்றது?' என்று யோசித்தாள்.

கண்கள் மூடி தான் காண்பது கனவா என்று யோசிக்க, மீண்டும் அதே குரல் கேட்டது.

'இது ஷிரவனோட குரல் தான். இப்போ தான் எனக்கு உயிர் வந்த மாதிரி இருக்கு.' என்று நினைத்தவள்.

அவனுடன் பேச முயற்சித்தாள்.

'ஷ்ரவன்! எனக்கு இங்க பயமா இருக்கு ஷ்ரவன்.' என்றாள் மனதினில்.

தன்னவளின் குரல் கேட்க இதழ்கள் புன்முறுவல் பூக்க ஆனந்த கண்ணீர் வழிந்தது ஷரவனுக்கு.

'மதிம்மா! நீ எதுக்கும் கவலை படாத. நான் இருக்கேன். என் உயிரை கொடுத்தாவது உன்னை காப்பாத்துவேன்.' என்று ஷ்ரவன் கூற.

'ஷ்ரவன், நீ இருக்கும் போது எனக்கு எதுவும் ஆகாது.' என்றாள் மதி.

இந்த நிலமைல கூட என்னை தான் நம்பிட்டு இருக்கா என் மதி.

'மதி! உனக்கு நீ எங்க இருக்கன்னு ஏதாவது தெரியுமாடா?' என்றான் நம்பிக்கையோடு.

'இல்ல ஷ்ரவன். என் கண்ணை கட்டிருக்காங்க. என்கூட ஒரு ரெண்டு மூணு பேர் இருக்க மாதிரி தெரியுது.' என்றாள் மதி.

'வேற எதாவது உனக்கு தெரியுதா கொஞ்சம் நல்லா கவனிச்சு சொல்லுடா.' என்றான் ஷ்ரவன்.

'ஹ்ம்ம..' என்றவள் பின் எதுவும் பேசாமல் இருக்க.

'மதி! என்னடா எதுவும் பேச மாட்ற?' என்றான் ஷ்ரவன். மீண்டும் அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக, என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் திணறி போனான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
கரையும் காதலன் 48:

"என்னடா?" என்று நந்து ஷரவனை கேட்க, நடந்ததை கூறினான் ஷ்ரவன்.

"மதி ஏன்டா எதுவும் பேச மாட்றா? எனக்கு அவகிட்ட பேசனும் அவளை பார்க்கணும்." என்று அவன் தோளில் சாய்ந்து அழும் ஷிரவனுக்கு ஆறுதல் கூறமுடியாமல் நந்துவும் திணறினான்.

"சீக்கிரமே கண்டுபிடிச்சிடலாம். மதி உன்னைவிட ரொம்ப ஸ்ட்ராங்க் டா. அவளுக்கு எதுவும் ஆகாது. உனக்காக அவ எந்த எல்லைக்கும் போவா." என்றான் நந்து.

"ஆமா" என்று தலையாட்டிய ஷரவன், 'கடவுளே என் மதிய சீக்கிரம் என்கிட்ட சேர்த்துடு என்று வேண்டிக்கொண்டு எழுந்து வெளிய வந்தான்.

"நந்து! நீ வீட்டுக்கு போ. அகல்யா தனியா இருப்பா." என்று தன் காரை ஸ்டார்ட் செய்தான்.

"நீயும் என்கூட வாடா. நாம போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திடலாம்." என்றான் நந்து.

"தயவு செஞ்சு அதுமாதிரி எதுவும் செஞ்சிடாத. மதியோட உயிருக்கு ஆபத்தாகிடும்." என்றான் ஷ்ரவன்.

"டேய்! என்னடா சொல்ற? மதி எங்க இருக்கான்னே தெரியலை. எப்படி கண்டுபிடிக்கிறதுன்னும் தெரியலை. போலீஸ் கம்ப்ளைன்ட்ம் கொடுக்க வேண்டாம்னு சொல்ற? என்னதான் பண்றதுன்னு நீயே சொல்லு." என்றான் நந்து எரிச்சலாய்.

"எனக்கும் தெரியலைடா. மதியோட உயிர் இப்ப அவகிட்ட. நாம எது செய்றதா இருந்தாலும் யோசித்து தான் செய்யனும்." என்றான் ஷ்ரவன்.

"நீ சொல்றது சரி தான். முதல்ல வீட்டுக்கு போலாம் வா." என்று அவனை தன் வீட்டுக்கு கூட்டி வந்தான் நந்து.

"அண்ணா என்ன ஆச்சு? நீங்க மட்டும் வந்துருக்கீங்க? அண்ணி எங்க?" என்றாள் அகல்யா.

"அகல்யா! அவன் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். நான் உனக்கு எல்லாம் சொல்றேன்." என்று ஷரவனை உட்கார வைத்தான். பின் நடந்த அனைத்தையும் கூற,

"ஐயையோ! அண்ணி இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியலையே?" என்று அழுதாள் அக்லயா.

ஷ்ரவனின் போன் அடிக்க அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

"மதுரஞ்சனி தான்" என்றான் ஷ்ரவன் கலக்கமாய்.

"பேசு" என்றான் நந்து.

போனை ஸ்பீக்கரில் போட்டு, "ஹலோ!" என்றான் ஷ்ரவன் மனதினுள் நடுக்கத்தை வைத்து குரலில் கடினத்தை காட்டி.

"ஹலோ! மை டியர் ஹஸ்பண்ட். எப்படி இருக்கீங்க?" என்று சிரித்தாள் ரஞ்சனி.

"யாருக்கு யாரு டி புருஷன். கொஞ்சம் கூட வெட்கம் கிடையாது உனக்கு." என்றான் ஷ்ரவன் பி.பி எகிற.

"அப்போ நீ இன்னும் முடிவு பண்ணலை. உனக்கு உன் மதி முக்கியம் இல்லை போல இருக்கு?" என்றாள் ரஞ்சனி.

"இல்ல! அப்படி இல்லை. என் மதி எப்படி இருக்கா?" என்றான் குரலில் ஏக்கம் காட்டி.

"இப்போ வரைக்கும் நல்லா இருக்கா. ஆனா இனி.." என்றாள் ரஞ்சனி.

"இல்ல உன் சுண்டு விரல் கூட அவமேல படக்கூடாது." என்றான் ஷ்ரவன் கோபமாய்.

"அப்படி எதுவும் நடக்க கூடாதுன்னா என்னை கல்யாணம் பண்ணிக்க." என்றாள் எந்தவித அலட்டலும் இல்லாமல்.

எதுவும் செய்யமுடியாத தன் நிலையை எண்ணி அழுவதா இல்லை தன்னவளின் உயிர் காக்க தன்னையே தொலைப்பதா என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தான் ஷ்ரவன்.

சிறிதுநேரம் அமைதியாயிருக்க, "என்ன மாமா? உன் பொண்டாட்டி மேல உனக்கு பாசமே இருக்க மாதிரி தெரியலையே?" என்றாள் நக்கலாக.

"என் பொண்டாட்டி மேல நான் எவ்ளோ பாசம் வச்சிருக்கேன்னு உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல." என்றான் வெடுக்கென்று ஷ்ரவன்.

"இன்னும் ஒரு நிமிஷம் தரேன். உன் முடிவ சொல்லிடு. இது தான் உனக்கு நான் கொடுக்கிற கடைசி வாய்ப்பா இருக்கும்." என்றாள் சற்று அதிகாரமாக ரஞ்சனி.

ஒரு நொடி யோசித்தவன்.

"சரி. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா, என் மதிய நீ உடனே விட்றனும்." என்றான் ஷ்ரவன்.

"அப்படி வா வழிக்கு. கண்டிப்பா. அவளை வச்சுகிட்டு நான் என்ன பண்ண போறேன். எனக்கு தேவை நீ தான். நீயே வந்தப்புறம் வேற என்ன வேணும் எனக்கு?"என்றவள் உடனே,

"ஹம்.. அப்புறம் இன்னொரு விஷயம்... நாளைக்கு நாம கிளம்பி போய் என் கழுத்துல தாலி கட்டி என்கூட வாழ ஆரம்பிச்சபுறம் தான் உன் மதிய விடுவேன் அதையும் சொல்லிட்டேன். ஏன்னா கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிட்டு அப்புறம் எனக்கு அல்வா கொடுத்திடலாம்னு பிளான் பண்ணிட்டன்னா நான் என்ன பண்றது?" என்றாள் ரஞ்சனி.

"உனக்கு மனசாட்சியே இல்லையா? நான் உன் கழுத்துல தாலி கட்றேன்னு சொல்லிட்டேன். ஆனா உன்கூட வாழ்றது என்னால உடனே முடியாது. எனக்கு டைம் வேணும்." என்றான் ஷ்ரவன்.

அமைதியாயிருந்த ரஞ்சனி, "சரி. ஒன் மந்த் டைம் எடுத்துக்கோ. ஏதாவது எக்கு தப்பா செயலாம்னு நினைச்சா அவ்ளோ தான். அதுவரைக்கும் என் ஆளுங்க உன் மதி தலைல அவளுக்கே தெரியாம குறி வச்சிட்டு இருப்பாங்க போட்டு தள்ள." என்றாள் ரஞ்சனி.

எந்த பக்கம் போக நினைத்தாலும் தடுக்கும் இவளை எப்படி தோற்கடித்து தன் வாழ்வை மீட்டெடுப்பது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான் ஷரவன்.

"நாளைக்கு ஏர்போர்ட்டுக்கு வந்துடு." என்று வைத்துவிட்டாள் ரஞ்சனி.

"அண்ணா என்ன அண்ணா இப்படி பண்ணிட்டிங்க?" என்றாள் அகல்யா.

"நாளைக்கு அண்ணிக்கு இதெல்லாம் தெரிஞ்சா அவங்களே உயிரோட இருக்க மாட்டாங்க." என்றாள் அகல்யா.

"எனக்கும் தெரியும்டா. அதுக்காக என் மதியோட உயிர் அவ கையால போகட்டும்னு விடமுடியாது என்னால. நீங்கல்லாம் இருக்கிங்கல்ல சொல்லுங்க. அவ புரிஞ்சிப்பா." என்றான் புரண்டு வரும் கண்ணீரை துடைக்க மனமில்லாமல்.

"என்னடா இப்படி சொல்லிட்ட? அவளை நீ கல்யாணம் பண்ண போறியா?" என்றான் நந்து.

எதுவும் பேசாமல் இருந்த ஷ்ரவன், "எனக்கு மதிய காப்பாத்த வேற வழி தெரியலைடா" என்று எழுந்து தன்னறைக்கு சென்றான்.

மிகுந்த மன உளைச்சலில் மெத்தையின் மேல் படுத்தபடி விட்டத்தை வெறிக்க, இதயத்தில் நீர் ஊற்றுவது இருந்தது திடீரென்று ஷிரவனுக்கு.
 
Top Bottom