- Messages
- 50
- Reaction score
- 56
- Points
- 18
அத்தியாயம் 31
நாட்கள் நகர்ந்துக் கொண்டு இருந்தன. துர்கா CA நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள். அவனுடைய தமையன் அவன் முன்பே கூறியது போல அவளை அவன் நண்பன் சொன்ன இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து விட்டு இருந்தான், அவளும் முன்பு வேலை செய்த நிறுவனத்தை விட்டு, இன்ஸ்டிடியூட் பக்கத்திலேயே வேறு நிறுவனத்தில் கணக்காளராக வேலையில் சேர்ந்தாள். தான் தேர்வில் தேர்ச்சி பெற்றதை போனில் சுஹேலிடம் சொல்ல, அவனும் மகிழ்ச்சியடைந்தான். "மை ஸ்வீட் லிட்டில் டார்லிங், கீப் இட் அப்" என்று சொல்லி அவளை நாணமுற செய்தான்.
அந்த இன்ஸ்டிடியூட்டிற்கு சென்றவுடன் முதலில் துர்காவிற்கு சற்று பயமாகத்தான் இருந்தது. அங்கு உள்ளவர்களை பார்க்கும் போது படிப்பாளிகள் போல் தோன்றியது. இவர்களுக்கு இணையாக நம்மால் படிக்க முடியுமா என்ற கலக்கம் தோன்றியது. அவர்களிடம் பேசவே துர்காவிற்கு தயக்கமாக இருந்தது. அவர்கள் ஏதாவது கேள்வி கேட்டு இவளுக்கு தெரியாமல் போய்விட்டால் மிகவும் அவமானமாகி போய்விடுமே என்று யாரிடத்திலும் பேசாமல் அமர்ந்திருந்தாள். அப்போது அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்த பையன், ஹலோ என் பெயர் சந்தோஷ், நானும் இன்று தான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன், உங்கள் பெயர் என்ன? என்று கேட்கவும், அவனின் அணுகுமுறை துர்காவிற்கு பிடிக்கவே, அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவன் பார்க்க ஒடிசலாக, சிவப்பாக இருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். சொல்லப்போனால் அந்த காலத்து சினிமா டைரக்டர் பாலச்சந்தர் அறிமுகம் படுத்திய பழைய விவேக் போல இருந்தான். அவனும் துர்காவும் சிறிது நேரத்திலேயே நெருங்கிய நண்பர்கள் ஆயினர். அவன் படிப்பிலும் படு சுட்டியாக இருந்தான். துர்கா தனக்கு தெரியாத கணக்குகளை எல்லாம் அவனிடத்தில் கேட்டு தெரிந்துக் கொண்டாள். அவன் அவளுக்கு நல்ல தோழனாக விளங்கினான். அவன் துர்காவிடம் அவனுக்கு அப்பா இல்லை என்றும் அம்மா அரசாங்க உத்யோகத்தில் இருப்பதாகவும், அவனுக்கு ஒரு தங்கை இருந்ததாகவும் ஆனால் ஐந்து வயதிலேயே கடும் காய்ச்சலால் இறந்து விட்டதாகவும் தெரிவித்தான். துர்காவிற்கு அவன் பழகும் விதம் மிகவும் பிடித்திருந்தது. எப்போதும் சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டே இருப்பான். அவன் பேருக்கு ஏத்தாற்போல் அடிக்கடி நகைச்சுவை செய்து அடுத்தவர்களை சிரிக்க வைத்து சந்தோஷம் காண்பான். அவனை ஒரு முறை வீட்டிற்கும் அழைத்து வந்தால் துர்கா. வீட்டில் உள்ளவர்களையும் தன் சிரிப்பில் திக்கு முக்காட செய்தான். அவனை போன் மூலம் சுஹேலுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். அவன் பேசுவதை கேட்ட சுஹேல், பரவாயில்லை உனக்கு பொழுது போக்க ஒரு நல்ல நண்பன் கிடைத்து விட்டான். இனி இந்த காதலன் ஞாபகம் எல்லாம் வருமோ இல்லையோ என்று கேட்க, ஹே! அவன் கூட பேசுவது பழகுவது உனக்கு பொறாமையாய் இருக்கிறதா! என்று துர்கா கேட்க, பொறாமையெல்லாம் இல்லை. உன் புது நண்பனின் வரவால் என்னை மறந்து விடாமல் இருந்தால் சரி என்று கூற, உன்னை நினைக்காமல் இருந்தால் அல்லவா மறப்பதற்கு! நீதான் என் உயிர் வரை போய் அமர்ந்து இருக்கிறாயே! என்று கூற, அப்படியா! மை ஸ்வீட் லிட்டில் ஹார்ட் என்று அக மகிழ்ந்து போனான் சுஹேல்.
சந்தோஷ் அடிக்கடி துர்காவிடம்" நீ மட்டும் எப்போதும் அமைதியாய் இருக்கியே! எப்படி துர்கா உன்னால் முடிகிறது? நானும் ஒரு நாலாவது உன்னை போல் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன் ஆனால் என்னால் இருக்கவே முடியவில்லை என்று கூற, அது உன்னால் இந்த ஜென்மத்தில் முடியாதுடா என்று துர்கா கூறி சிரிப்பாள். ஏன் முடியாது? கண்டிப்பாக ஒரு நாள் உன்னை போல் அமைதியாய் இருந்து காட்டுகிறேன் பார்! என்று அவன் சவால் விடுவான், ஆனால் தான் ஒரு நாள் இல்லை ஒரு வாரம் அப்படி இருப்பான் என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை!
பெரும்பாலும் துர்கா காலையில் ஆறு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விடுவாள். இரண்டு மணி நேரம் CA வகுப்பை முடித்துக் கொண்டு பின் அருகில் இருக்கும் தான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று விடுவாள். அதற்கு பின் வீடு வந்து சேர இரவு ஏழு அல்லது எட்டு மணி ஆகிவிடும். முன்பு போல் அவளால் இரவு நேரங்களில் பார்வதிக்கு உதவி செய்ய முடியவில்லை, பார்வதியும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. துர்காவை பார்க்கவே அவளுக்கு மிகவும் பாவமாக இருக்க, அவளை இரவு நேரங்களில் வேலை செய்ய வேண்டாம் என்று தடுத்து விட்டாள். துர்காவிற்கு அலுவலகத்திலிருந்து வந்ததும், சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் படித்துவிட்டு தூங்கவே சரியாக இருந்தது,
சாம்சன் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அவன் வெளிநாட்டு ஆர்டர்களை அதிகமாக பிடித்தான். அவனிடத்தில் இருக்கும் வேலையாட்கள் போதவில்லை என்று புதிதாக நபர்களையும் நியமித்தான். காலை ஒன்பது மணிக்கு சென்றால் இரவு வீட்டிற்கு வர பதினோரு மணி ஆகிவிடும். அவன் வரும் நேரத்தில் கயல் ஆழந்த துயிலில் இருப்பாள். அவளை தொந்தரவு செய்யாமல் அவள் அருகில் படுத்து உறங்கி விடுவான். வார விடுமுறையில் தன் நிறுவனத்தை விரிவுபடுத்த தேவையான இயந்திரங்களையும் மற்றும் உதிரி பாகங்களையும் பார்த்து வெளிநாட்டில் இருந்து தருவிக்கவும், புதிதாக கட்டடம் கட்ட இடத்தை தேர்வு செய்யவும் அதற்காக வங்கி கடன் வாங்க அலைவது போன்ற வேலைகளே அவனுக்கு அதிகமாக இருந்தது. இதனால் கயலுக்கு அவனிடத்தில் சரியாக பேசக் கூட முடியவில்லை, அவளும் மருத்துவமனை செல்ல ஆரம்பித்திருந்தாள்.
ரெபேக்கா அவளுக்கு காலை எழுந்தவுடன் கையில் காபி கொடுத்து பின் காலை சிற்றுண்டி செய்து, அவள் எடுத்து செல்வதற்கு மதிய உணவும் கையில் கொடுத்துவிடுவாள். கயல் வேண்டாம் அத்தை. உங்களுக்கு ஏன் வீண் சிரமம், நான் வெளியில் பார்த்துக் கொள்வேன் அல்லது எங்கள் மருத்துவமனை கேன்டீனில் வாங்கி சாப்பிடுவேன் சொன்னால் கூட விட மாட்டாள. நான் இருக்கும் போது நீ ஏனம்மா வெளியில் சாப்பிடவேண்டும் அதெல்லாம் வேண்டாம். உடம்பு கெட்டுவிடும். நானே உனக்கு சமைத்து தருகிறேன் என்று மருமகளை தாங்கு தாங்கு என்று தாங்கினாள். கயலுக்கு சாம்சனிடம் ஒழுங்காக பேச முடியவில்லையே என்ற வருத்தத்தை தவிர அந்த வீட்டில் அவளுக்கு ஒரு குறையும் இல்லை. அவள் பேச்சுக்கு அந்த வீட்டில் மறுவார்த்தை இல்லை. அவள் அந்த வீட்டிற்கு சென்றதுமே நிறைய மாற்றங்கள் செய்தாள்.
வீட்டை முன்பு இருந்ததை விட இன்னும் அழகுபடுத்தினாள். வெளியில் இருக்கும் சிறிய இடத்தில் சிறு சிறு பூச்செடிகளை வைத்து அழகுபடுத்தினாள். தனக்கு புதிய ஆடை வாங்கும்போது தனது மாமியாருக்கும் பியூலாவுக்கும் சேர்த்து வாங்கினாள். ரெபேக்கா வாங்க மறுத்தும் அவளிடத்தில் வலுக்கட்டாயமாக கொடுத்து அவளை அணிய செய்தாள். பியூலாவின் விருப்பப்படி அவளை மருத்துவம் படிக்க தகுந்த கோச்சிங் சென்டரில் சேர்த்துவிட்டாள். படிப்பில் ஏற்படும் சிறு சிறு சந்தேங்கங்களை சளைக்காமல் சொல்லிக் கொடுத்தாள். ஜேக்கப்பிற்கு அடிக்கடி காலில் நரம்பு இழுத்துவிடும். அவர் வலியால் அவதிப்படும் போது அவருக்கு தகுந்த முதலுதவி செய்து மருந்து வாங்கி கொடுத்தாள். அந்த வீட்டையே தன் அன்பு கயிற்றால் கட்டி போட்டிருந்தாள். சாம்சனிடத்தில் இருந்து அவன் குடும்பத்திற்கு செய்யும் வேலைகளை எல்லாம் இவள் செய்தாள். ரெபக்காவுக்கு உதவியாக வேலை செய்ய ஒரு பெண்மணியை நியமித்தாள். அதன் மூலம் அவளுக்கும் சிறிது ஓய்வு கொடுத்தாள். தன் கணவனுக்கு தேவையானதையும் பார்த்து பார்த்து செய்தாள். ஆனால் சாம்சனோ தன்னுடைய மனைவி தன்னிடத்தில் இருந்து குடும்பத்தை கவனித்துக்கு கொள்கிறாள் என்ற சிந்தனையே இல்லாமல் தன் நிறுவனத்தை சுற்றியே அவன் நினைவு முழுவதும் இருந்தது. கயலுக்கு அவனை பார்க்க பார்க்க கோபமும் ஆதங்கமுமாய் இருந்தது. நாம் எப்படி இவனை விழுந்து விழுந்து காதலித்தோம்! இவன் தான் வேண்டும் என்று நம் பெற்றோரிடம் வாதாடி இவனை திருமணம் செய்தோம். இவனென்றால் நம்மிடம் ஒரு வார்த்தை பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் இப்படி நிறுவனத்தை உயர்த்த வேண்டும் என்று அவனுடைய வேளையிலேயே கவனத்தை செலுத்துகிறானே! என்று தான் என் அன்பை, காதலை புரிந்து கொள்வானோ? என உள்ளுக்குள் மருகினாள்.
சாம்சனுக்கு கயல் உடனே இருக்க வேண்டும். அவளுடன் தனியாக வெளியில் சென்று வர வேண்டும் என்ற ஆசை தான். ஆனால் நிறுவனத்தின் வேலை அவனை அழுத்தியது. அவன் ஒருவனே ஒவ்வொவென்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்பதால் அவனின் கவனத்தை கயலிடம் செலுத்தமுடியவில்லை
அன்று கயலுக்கு பிறந்த நாள் வந்தது. கயல் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு வந்தாள் அவள் கூடவே எழுந்த அவள் கணவன் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. அவன் அவசரமாக கிளம்பி உணவு மேஜை முன் வர, கயலும் அவன் கூடவே வந்தாள், அப்போது அங்கிருந்த ரெபேக்கா அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, கயல், ரெபேக்கா மற்றும் ஜாக்கோபின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள். பின் ரெபேக்கா அவள் விரலை பிடித்து சிவப்பு நிற கற்கள் பதித்த டைமென்ட் வடிவ மோதிரத்தை அணிவித்தாள். கயல் அதனை பார்த்ததும் மிகவும் நன்றாக இருக்கிறது அத்தை என்று மகிழ்ச்சியுடன் கூற, உன்னை விடவா இது நன்றாக இருக்கிறது என அவள் கன்னத்தை பிடித்து வலிக்காத வண்ணம் கிள்ளி விட்டாள். பியூலா அவளிடம் வாழ்த்து அட்டை கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாள். அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு சாம்சனை பார்த்தாள். அவன் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கயல் என்று சொல்லிவிட்டு செல்ல, கயலுக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது.
இருந்தும் அதை வெளிக் காட்டி கொள்ளாமல் " நான் இன்று என் பிறந்த வீட்டிற்கு செல்கிறேன் என்று கூற, சரி உன் விருப்பம். ஆனால் மூன்று மணிக்குள் வந்துவிடு என்று சொல்லவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டான். ஒரு காதல் பார்வை, பேச்சு எதுவும் இல்லை சரி ! பிறந்த நாள் வாழ்த்தாவது சிரித்துக் கொண்டு சொன்னால்தான் என்ன? குறைந்தா போய்விடுவான்! ! இவன் சொன்னால் நான் மூன்று மணிக்குள் வந்துவிட வேண்டுமா என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டே தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பலானாள்.
கயலை கண்டதும் வாஸந்தியின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் வாம்மா கயல்! என வரவேற்று, மாப்பிள்ளை வர வில்லையா? என்று ஏமாற்றத்துடன் கேட்க, அவரை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே அம்மா. அவர் விரைவிலேயே நம் வீட்டிற்கு கண்டிப்பாக வருவார் அம்மா என்று வாஸந்தியை சமாதானப்படுத்தினாள். ராகேஷ் வந்து வாழ்த்து கூறி பரிசு ஒன்றை அளித்தான். என்னடா அது? என்று திறந்து பார்க்க போக, ராகேஷ் தடுத்து, இதை இங்கே பார்க்காதே, உன் வீட்டிற்கு போய் மாமாவுடன் சேர்ந்து பார் என்று கூறவும், சரிடா! என்று புன்னகைத்து அதை தன்னிடம் வைத்துக் கொண்டாள். வாஸந்தி அவளை அமர வைத்து உள்ளே சென்று அவளுக்கு பிடித்த பால் பாயாசம் கொண்டு வந்து கொடுத்தாள். கயல் அதை சாப்பிட்டுக் கொண்டே, அப்பா எங்கேம்மா? என்று கேட்க, அவர் உன் பெயரில் அர்ச்சனை பண்ண கோவிலுக்கு போய் இருக்கிறார். நான் போகிறேன் என்றால் என்னை வேண்டாம் நீ இங்கேயே இரு கயல் வந்தால் அவளை பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். வாஸந்தி சொல்லி கொண்டே இருந்த போது கமலநாதன் உள்ளே நுழைந்தார். அவர் முகத்தில் பாசமும் பரிதவிப்பும் பார்த்த கயலுக்கு என்னமோ செய்தது.
Last edited by a moderator: