கதை முடியும் தருணம் வந்துவிட்டது என நினைக்கிறேன். சுடரழகி திருமணத்துடன் 'சுபம்' போட போகிறீர்களோ?
".. அவளது மேனியில் நீர் இறங்கும் உணர்வானது, அன்று அவன், அவள் மீது மண்ணெண்ணெய் ஊற்றியதை நினைவுப் படுத்தியது." என்று எழுதுகிறார். அங்குதான் ஆசிரியர் தன் எழுத்து வல்லமையில் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறார். எப்படியெனில், சுந்தர் மரணத்துக்கு இவளும் பொறுப்பு என்று சமூகம் ஒருவேளை சொல்லக்கூடும். அப்படி யாராவது கூறினால், அப்படி இல்லை.. மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயற்சித்தவன் என்பதால் அவனுக்கு அந்த மரணம் நியாயமான தண்டனைதான் என்பதை இலக்கிய நயத்துடன் ஆசிரியர் இங்கு மறைமுகமாக சமூகத்துக்கு உணர்த்துகிறார்.
"... எம் நெஞ்சில் நீ குழைத்து பூசும் உம் அன்பு ஒன்றே, எம் தாய் கொடுத்த சீதனத்தை பெற தகுதி கொண்டதாம்!" என்று ஆசிரியர் ஞான தெளிவில் கதையின் பகுதியை முடிக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் அற்புத வரிகளோடு முடிக்கும் ஆசிரியரின் திறமைக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.