- Messages
- 70
- Reaction score
- 36
- Points
- 33
மிக்க நன்றி விமர்சனத்திற்கு....... உத்தமன் சுடரை சேர்ப்பதில் கலாச்சார பிரச்சினை எதுவும் இல்லை..முதல் திருமணம் தோல்வியுற்று சில மாதங்களே கடந்த நிலையில் அடுத்த ஒருவனை ஏற்றுக்கொள்ள சிலகாலமாவது பிடிக்கும் என்பதே உண்மை. அவன் அவளின் மனம் கவர்ந்தவனாகவே இருந்தாலும்..மேலும் உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றிகதை ஒரு வழியாக முடிந்துவிட்டது. மிகவும் உணர்வு பூர்வமான கதை. அதுமட்டுமல்ல, கிராம கலாச்சாரத்தை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டும் சிறப்புக்கு உரிய கதை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.
உத்தமன் சுடருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் உணர்வு பூர்வமாக காட்சியமைக்கப் பட்டிருப்பது மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
ஆனால் இருவரையும் ஜோடி சேர்ப்பதில் ஆசிரியருக்கு என்ன தயக்கம்? கலாச்சாரத்தில் கை வைக்கக்கூடாது என்ற தயக்கம் எதுவும் ஆசிரியருக்கு இருக்குமோ என்று தெரியவில்லை!
பொது புத்தியை, தேவைப்பட்டால், மீறும் அளவுக்கு ஒரு ஆசிரியருக்கு நேர்மறையிலான துணிவு இருக்க வேண்டும்! அதிலும் பெண் படைப்பாளிக்கு அவசியம் இருக்க வேணடும்.