மிக அற்புதமான வார்த்தைகளால் கதை கட்டமைக்கப் படுவது என்பது எளிதில் எல்லோருக்கும் வராது. இதன் ஆசிரியர் கிராமத்து வார்த்தைகளை பிசிரில்லாமல் கூறுவது கிராமத்து மன உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது! இது உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. உதாரணத்திற்கு சில வாசகங்கள் கீழே....
"உனக்கும்தான் வாய் வண்டலூர் வரை போகுது, உன்னை வைத்து தாத்தா குடும்பம் நடத்தல?..." என்று ஆசிரியர் எழுதுகிறார்.
இது கிராத்துக்கே உரிய மிகவும் ரசிக்கத் தக்க உரையாடல்!
"அந்த மொரட்டு உருவத்துக்குள்ளே கொழந்த மனசு இருக்கு தெரியுமா?" என்று இளம் பெண் தன்னம்பிக்கை கொள்வதும், அதே பெண், "நிம்மதியா இருக்குற இடத்துல போயி குடும்பம் நடத்துறது பெரிய விஷயம் இல்லை, சிதைந்து கடக்கும் குடும்பத்தை தூக்கி நிமித்துவதே பெரிது" என்று தன் தந்தை கூறியதை அந்த பெண் உள்வாங்கி அதை அந்த இளம் பெண் துணிவோடு ஏற்றுக் கொள்வதும் பாராட்டபட வேண்டியதாகும். இதன்மூலம் ஆசிரியர் தந்தைகளுக்கான மிகவும் அற்புதமான அறிவுரையையும் வழங்குகிறார்.
அதே தந்தை, பழைய சம்பவத்தில் தனக்கு உதவிய ஒரு நிகழ்வுக்காக பெண் குடுக்க முன்வருவது என்பது நன்றியறிதல் ஆகும். இது இன்றும் கிராமங்களில் மட்டும் உயிர்ப்போடு இருக்கும் கலாச்சாரம் ஆகும்!
மொத்தத்தில் இக்கதையின் மூலம் கிராம கலாச்சாரத்தை உலகறிய செய்யும் கால கண்ணாடியாக இந்த கதை இருந்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.