Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீயாய் சுடும் என் நிலவு!

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் மிருதி.

"மிரு முதல்ல நான்... என்னை மன்னிச்சிடு. என்னை பத்தி எல்லாமே நீ தெரிஞ்சுக்கணும். நான் வெளிநாட்டுல இருக்கும் போதே அங்கயே என் ஆஃபீஸ்ல... ஒரு பெண்ணும் நானும் விரும்பினோம். அவ பேரு சோபியா. ரொம்ப நல்ல பொண்ணு. அவளுக்கு அப்பா அம்மா யாரும் இல்ல." என்றான் மிக மெதுவாய்.

விழிகளை இறுக முடியவளை கண்டதும் சுருக்கென்றது தீரனுக்கு.

"மிரு ப்ளீஸ். இப்போ என் மனசுல உன்னை தவிர வேற எந்த பெண்ணுக்கும் இடம் கிடையாது." என்றான் உள்ளத்தில் இருந்து.

அதை உணர்ந்து கொண்டாலும் அமைதி காத்தாள் மிருதி..

"ரெண்டு வருஷம் நாங்க விரும்புனோம். அவளுக்கு யாரும் இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப விரும்பினாள். அந்த லீவ்க்கு வீட்டுக்கு வரும் போது அவளையும் கூட்டிட்டு வரனும்னு பிளான் பண்ணிருந்தேன். நாங்க லிவிங் டூ கெதர் ன்னு " என்று அவன் முடிக்கும் முன் அவனை எரித்து விடுவது போல் முறைத்தாள்.

"இரு இரு... நான் சொல்றேன். ஒரு நாள் திடீர்னு பெட்டி படுக்கையோட என் வீடு வாசல்ல வந்து நின்னா சோபியா. என்னன்னு கேட்டப்ப, வீட்டு வாடகை தராததால தன்னை வீட்டை விட்டு காலி செய்ய சொல்லி விட்டதாகவும் உன்கூட இங்கயே இருந்துட்றேன்னு சொன்னா." என்று நிறுத்தி மிருவை பார்க்க உணர்ச்சிகள் ஓய்ந்த நிலையில் சலனமற்று இருந்தாள் அவள்.

"அந்த நிலையில் அவளை தனியாக விட மனமில்லை. அதனால்..." என்று சற்று தயங்கினான்.

"வீடு தேடும் வரை அவளை இரண்டு நாள் மட்டும் என்னுடன் தங்க வைத்தேன்." என்றதும் மிருவின் விழிகள் தீரணை உரசி செல்ல உயிர் நெருப்பில் உரசுவது போல் உணர்ந்தவன்.

"மிரு நீ என்ன நினைக்கிறேன்னு புரியுது. என்ன தான் வெளிநாட்டில போய் வேலை செஞ்சாலும் நான் பிறந்தது இந்த மண்ணுல மிரு. திருமணத்துக்கு முந்தி எல்லை தாண்டக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தேன். அவள் மேலை நாட்டில் வளர்ந்த பெண் என்பதால் சில நேரம் வற்புறுத்திய போதும் மனம் ஒப்பாமல் மறுத்துவிட்டேன்." என்றவனை விழிகளில் லேசான மதிப்போடு பார்த்தாள்.

"சரியான வேலை இல்லாததால் பணத்திற்கு கஷ்டபட்டவளுக்கு நான் தான் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுப்பேன். திடீரென்று ஒரு நாள் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தகவல் வந்தவுடனே இங்க அவசரமா வந்துட்டேன்." என்று நிறுத்தினான்.

மெதுவாய் அவளின் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தான் தீரன். எதுவும் பேசாமல் உருவிக் கொண்டாள் மிருதி. பெரு மூச்சு விட்டவன்.

"இங்க வந்தப்புறம் தான் அம்மாவுக்கு நான் ஒரு வெள்ளைக்காரிய காதலிக்கிறேன்னு தெரிஞ்சுருக்கு. அதனால தான் பொய் சொல்லி என்னை வர வெச்சுருக்காங்கன்னு தெரிஞ்சு ரொம்ப கோபப்பட்டேன். இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாதுன்னு ஒத்தை கால்ல நின்னேன்." என்றான் தீரன்.

அடக்கி வைத்திருந்த கண்ணீர் முழுவதும் மடை திறந்த வெள்ளமாய் கொட்ட தொடங்கியது மிருதியின் விழிகளில்.

"ப்ளீஸ் மிருதி! நீ அழாம இருந்தா தான் என்னால சொல்ல முடியும்" என்று தயங்கினான்.

விழிகளை வேகமாய் துடைத்து கொண்டு அமைதியாய் தரையை நோக்கினாள்.

"ஆனா, அம்மா நான் என்ன சொன்னாலும் கேட்குற நிலமைல இல்ல. என் அண்ணன் பொண்ணு உன் மேல உயிரையே வச்சிருக்கான்னு சொன்னாங்க. அதோட நீ அவளை கல்யாணம் பண்ணிக்கலைன்னு ஏதாவது தப்பா நடந்தது அப்புறம் சும்மா இருக்க மாட்டேன்னு மிரட்டினாங்க. அன்னைக்கு..." என்று நடந்ததை கூறினான்.

*****

'நீங்க என்ன சொன்னாலும் என்னால உங்க அண்ணன் பெண்ணுக்காக நான் விரும்பின பெண்ணை ஏமாத்த முடியாது. நான் இப்போவே ஊருக்கு போறேன்' என்று தீரன் கிளப்பினான்.

'ஓ அப்படியா? எங்க அண்ணன்பொண்ணு தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரனும்னு நான் நினைக்கிறேன். ஆனா உன் விருப்பம் தான் நடக்கும்னு இருந்தா யாரு என்ன செய்ய முடியும். சரி நீ கிளம்பு. அதுக்கு முன்னாடி உன் கையாலையே எனக்கு கருமாதி பண்ணிட்டு போ.' என்றவர் வேகமாய் உள்ளே சென்றார்.

"அம்மா" தீரன் அவரின் பின்னே வேகமாய் செல்ல, படாரென சமையல் அறையின் கதவை சாற்றினார்.

உள்ளம் பதற, "அம்மா என்ன பண்றிங்க? கதவை முதல்ல திறங்க." என்று கதவை தட்டினான்.

"உனக்கென்னப்பா என் மேல கவலை. நீ போகணும்னு கிளம்பினியே போ." என்றவர் ஜன்னலில் தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி கொள்ள, உறைந்து போனான் தீரன்.

"அம்மா! ப்ளீஸ். எதுவும் தப்பா செய்யாதீங்க." என்றான் தீரன் கோபமாய்.

"உனக்கு என்கிட்ட நின்னு பேசுறதுக்கு கூட நேரம் இருக்காப்பா. நீ போய் அந்த வெள்ள காரி கூட குடும்பம் நடத்து." என்று தீப்பெட்டியை தேடினார்.

உடல் முழுவதும் உதற, கதவை உடைக்க முயற்சி செய்தான் தீரன்.

"அம்மா ப்ளீஸ்! நீங்க என்ன சொன்னாலும் செயறேன். எனக்குன்னு இந்த உலகத்துல இருக்கிறது நீங்க மட்டும் தான். உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா, இப்போ என்ன உங்க அண்ணன் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்ளோ தான? பண்ணிக்கிறேன். ப்ளீஸ் நிறுத்துங்க." என்று கெஞ்சினான்.

"உன்னையெல்லாம் நம்ப முடியாது." என்று தீஃப்பெட்டியை எடுத்தவர் பற்ற வைக்கும் நொடி நேரத்தில் கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தவன் தீஃப்பெட்டியை தட்டிவிட்டு அங்கே இருந்த தண்ணீர் குடத்தை எடுத்து அவரின் மேல் ஊற்றினான்.

எதுவும் பேசாமல் அமைதியாய் சிலை போல் அவரும் நிற்க, "அம்மா! என்ன காரியம் பண்ண பார்த்திங்க?" என்று அவரை அணைத்து கொண்டான்.

அப்பொழுதும் எதுவும் பேசாமல் நிற்க, "அம்மா! நீங்க சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிக்கிறேன். இது உங்க மேல சத்தியம்." என்றதும் தான் அவரின் முகத்தில் சற்று நிம்மதி பரவியது.

உடனே போனை எடுத்தவர்.

"அண்ணா! குறிச்ச மாதிரி அடுத்த முகூர்த்தத்துலயே ஏற்பாடு பண்ணிடலாம்." என்று வைத்தார்.


***********

"அந்த நேரத்துல எனக்கு உன் மேல ரொம்ப கோபம். நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு அடம் பிடிக்கலைன்னா இவ்வளோ தூரம் நடந்திருக்காதுன்னு தோணுச்சு." என்றவன்.

"முதல்ல உன்னை ஒதுக்கணும்னு முடிவு பண்ணினேன். ஆனா, அதுக்கும் அம்மா தடை போட்டாங்க." என்றதும் அவனை நோக்கினாள்.

"ஆமா, எந்த காரணத்தை கொண்டும் நான் வேறு ஒரு பொண்ணை காதலிச்சதும் கட்டாயபடுத்தி தான் என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தாங்கன்னும், உன் மேல கோபத்தை காட்டாம உன்கூட சந்தோஷமா வாழணும்னும் என்கிட்ட கல்யாணத்துக்கு முந்தின நாள் சத்தியம் வாங்கிட்டாங்க." என்றான்.

"எங்கம்மாவுக்காக என் ஆசை, காதல் எல்லாத்தையும் உதறிட்டு உன் கழுத்துல தாலி கட்டினேன். முதலில் மிகவும் வெறுப்பாக இருக்கும் உன்னை பார்க்க." என்று அவளை பார்க்க எதுவும் பேசாமல் எங்கோ பார்த்தாள்.

"என் மனக் கசப்புகளை ஒதுக்கி வைத்து கடமைக்கேன்னு உன் கூட வாழ ஆரம்பித்தேன். கொஞ்சம் நாள் செல்ல, உன் துடுக்கு தனம் என்னை கொஞ்சம் கொஞ்சமா கவர்ந்துச்சு. நீ செய்ற ஒரு ஒரு விஷயமும் ரசிக்க ஆரம்பிச்சேன். எனக்கும் தெரியாமல் உன் மேல ஒரு அன்பு உருவாச்சி. என் மனம் உவந்து உன் கூட வாழ்க்கையை பகிர ஆரம்பிச்சேன்.

நீ இல்லாமல் வாழுற வாழ்க்கை முழுமை ஆகாதுனு புரிய ஆரம்பிச்சது. அங்க வேலையை விட்டுட்டு இங்க வந்தோம். வந்த கொஞ்ச நாள்ல எனக்கு ஒரு போன் வந்துச்சு. அதாவது சோபியா .." என்று முடிக்க முடியாமல் தடுமாறினான்.

மிருதியின் கரம் அவனின் கரத்தின் மேல் லேசாய் அழுத்துவதை உணர்ந்து மெல்ல புன்னகைத்தான்.

" கல்யாணத்துக்கு அப்புறம் அவள் எத்தனை தடவை போன் செய்தும் அவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம நான் எடுக்கவும் இல்லை பதில் அளிக்கவும் இல்லை. சோபியா வை கொஞ்ச நாளா காணலைன்னு என் ஃப்ரெண்ட் போன் பண்ணி சொன்னான். நான் அங்க இருந்திருந்தா அவளுக்கு இப்படி ஏற்பட்டிருக்காதுன்னு என் மேல கோபம் வந்துச்சு. என்னோட சுயநலத்துக்காக அவளை ஏமாத்திட்டத்தா தோணுச்சு. என்னால தான் அவளுக்கு இந்த நிலமைன்னு என்னை குற்ற உணர்ச்சி கொல்ல ஆரம்பிச்சுது. அதனால உன்கிட்ட இருந்து விலகி என்னை தனிமை படுத்திக்கிட்டேன். நிறைய நேரம் என் குற்ற உணர்ச்சியை மறக்க தொடர்ந்து குடிக்க ஆரம்பிச்சேன்." என்று நிறுத்தினான் தீரன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 30:

"என்னை விரும்பின ஒரு பொண்ணு இப்படி கஷ்டப்படறது மனதை வருந்த அவளுக்கு பேசி புரிய வைக்கணும்னு நிறைய முறை போன் பண்ணேன். ஆனா, அவ எடுக்கலை. வீட்டுக்கு வந்து உன்னை பார்க்கவும் பாவமா இருந்துச்சு. உங்க ரெண்டு பேருக்கும் நான் உண்மையா இல்லைன்னு ரொம்ப நொந்து போனேன்.

அப்போ தான் அன்னைக்கு காலைல உன்கிட்ட சந்தோஷமா பேசிட்டு ஆஃபீஸ்கு போனேன். மறுபடியும் என் பிரென்ட் போன் பண்ணான். அவன் சொன்னதை கேட்டதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்துட்ட மாதிரி இருந்துச்சு" என்று நிறுத்தினான்.

அவனின் கரத்தை எடுத்து தன் இரு கரங்களுக்குள் மென்மையாய் பிடித்து கொண்டாள். அவளின் இந்த சின்ன ஆறுதல் கூட பெரிதாக பட்டது தீரனுக்கு.

"சோபியா விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிகிட்டதா எனக்கு தகவல் வந்தது. அவ்ளோ தான் எனக்கு என் மேலேயே ரொம்ப வெறுப்பு. எல்லோர் மேலயும் கோவம் எல்லை மீறுச்சி. ஆபிஸ்ல இருக்க முடியலை. சோபியா என்னை பத்தி என்ன நினைச்சிருப்பா? இவனை நம்பினதுக்கு அவ உயிரை விட்றது தான் ஒரே வழின்னு உயிரை விட்டிருப்பாளோன்னு தோணுச்சு. எத்தனை முறை நான் மன்னிப்பு கேட்டாலும் அவளோட ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காதுன்னு ஊமையாய் அழுதேன். என்ன இருந்தாலும் நான் நேசிச்ச முதல் பெண். அந்த சோகத்தை மறக்க முடியாதுன்னாலும் வழக்கம் போல் குடிக்க சென்றேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது அளவு தெரியாமல் குடித்தேன். எப்படி இருந்தாலும் தூங்க வீட்டுக்கு வந்து தான ஆகணும். போதை தலைக்கேறிய நிலையில நண்பனின் உதவியோடு வீட்டுக்கு வந்தேன்" என்றவன் தன் முகத்தை இரு கரங்களால் மூடிக்கொண்டு அழுதான்.

என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் போனாலும் தான் விரும்பிய உயிர் அழுவதை பார்க்க முடியாமல் அவனை தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு அன்னையானாள்.

சிறிது நேரம் கழிந்தவுடன் மீண்டும் பேச தொடங்கினான்.

"வீட்டு வாசல் வரை நண்பன் விட்டுட்டு போக அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு எதுவுமே ஞாபகம் இல்லை. மறுநாள் எப்பவும் போல கண் முழிச்சா நீ வீட்ல இல்ல. தலைவலி ரொம்ப அதிகமாக வீட்டுக்குள்ளயே தேடினேன். நீ இல்ல. அக்கம் பக்கத்துல கேட்டா யாருக்கும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. ஏற்கனவே ஒருத்தியை தொலைச்சிட்டேன். இப்போ உன்னையும் காணாமல் பைத்தியம் மட்டும் தான் பிடிக்கவில்லை." என்று நிறுத்தினான்.

அவனின் இடத்தில் தன்னை நிறுத்தினாள் மிருதி.

"ஒரு வேளை உன் வீட்டுக்கு போயிருந்தா? அதனால உன் வீட்டுக்கு போனேன். அங்க உங்கப்பா உன்னை காணோம்ன உடனே என்னை வாயில வசை பாடி கடைசில அவர் ஆத்திரத்தை என்னை அடித்து தீர்த்து கொண்டார்." என்று மெதுவாய் சிரித்தான்.

தன் வாயில் கரம் வைத்து மூடியவள் அதிர்ச்சியாய், "என்ன அப்பா உங்களை அடிச்சாரா?" என்றாள்.

"நீ வேற. அவர் அடியோடு நிறுத்திட்டார். என் பொண்ணுக்கு இந்த நிலைமைன்னா அவர் இடத்துல நான் இருந்திருந்தா கொலையே பண்ணிருப்பேன். என் மூஞ்சிலையே முழிக்காதன்னு சொல்லிட்டார். உனக்கு. என்ன ஆச்சுன்னு பதட்டத்துல எல்லா இடத்துலயும் தேடினேன். கிடைக்கலை. போலீஸ் கம்பலைன்ட் கொடுக்க போகும் போது அம்மா வந்தாங்க," என்று நிறுத்தியவன் அவளிடம் இருந்து நிமிர்ந்து அமர்ந்தான்.

"அத்தையா ?" என்றாள் மெதுவாய்.

"ஹ்ம். வந்தவங்க அவங்க பங்குக்கு கன்னம் பழுக்க வெச்சு வாங்கினாங்க. உன்னால அவ கஷ்டப்பட்டது போதும். எங்க அண்ணன் பொண்ணை கட்டி வச்சா உறவு நீடிக்கும்னு பார்த்தா மொத்தமா அறுத்துட்டியே. நீ யாரோ நான் யாரோ இனி என் முகத்துலையே முழிக்காதன்னு அம்மாவை திட்டி அனுப்பிட்டார் மாமா. என்ன ஆனாலும் சரி இனி நீ அவளை தேடக்கூடாது மீறி தேடினா என் உடம்பு கூட கிடைக்காத மாதிரி பண்ணிடுவேன்னு திட்ட வட்டமா சொல்லிட்டு போய்ட்டாங்க." என்று தலை குனிந்தவன்.

அப்பயும் எப்படியாவது உன்னை பத்தி தெரிஞ்சுக்கணும்னு முயற்சி பண்ணேன் முடியலை. வீட்டுக்குள்ளையே முடங்கினேன். ரெண்டு மாசம் அப்படியே இருந்தேன். நீ இல்லாத வீட்ல உன் ஞாபகங்களோடும் உன் வாசனையோடும் நினைவுகளோடும் உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம என் நாட்கள் நரகமா நகர்ந்துச்சு." என்றான் தீரன்.

அவனின் வலி அவளையும் ஆட்கொள்ள தொடங்கியது. கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

"ஒரு வழியாய் நீ நல்லபடியா இருக்கேன்னு மட்டும் தெரிஞ்சுது. அப்புறம் தான் நிம்மதியாச்சு." என்றான் தீரன்.

"ஆனா அதுக்கப்புறம் தான் எனக்கு வாழ்க்கையே புரட்டி போட்டுச்சு." என்றான் கண்ணீர் வழிவது கூட அறியாமல்.

என்ன என்பது போல் மிருதி பார்க்க, "சோபியா இறந்து போய்ட்டானு இருந்த எனக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. அடுத்த ஒரு வாரத்துல கிடைச்ச செய்தி. " என்றான்.

"என்ன?" என்றாள் மிருதி.

"சோபியா ன்னு நான் காதலிச்ச பொண்ணு பேரு சோபியாவே இல்ல. அவ பேரு ஜெரிட்டா. அவ என்னை விரும்பினது எல்லாமே சும்மா டிராமா. அவளுக்கு வேலையே இது தானாம். வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்யும் வாலிபர்களை காதலிப்பது போல் நடித்து பணம் பறிப்பது. நாங்க விரும்பின நேரத்திலேயே மேலும் ரெண்டு பேரை ஏமாத்திருக்கா. ஏதாவது ஒரு நேரத்தில் அவங்ககூட சண்டை போட்டுட்டு பிரிஞ்சிடறது இல்லைன்னா இது யாரையாவது செட். அப் செய்து தான் இறந்து விட்டது போல் காட்டிவிட்டு அடுத்த பையனை பார்ப்பது என்று இருந்திருக்கிறாள்.

முதல்ல கேட்டவுடனே என்னால இதை நம்ப முடியலை. ஆனா அவ ஏமாத்தினவங்கள்ல ஒருத்தர் போலீஸ் கம்பலைன்ட் கொடுத்துருக்கார். அதை விசாரிச்சு போலீஸ் அவளை அரேஸ்ட் பண்ணிருக்கங்க." என்றான் தீரன் தலையை கவிழ்ந்தபடி.

"என்ன இருந்தாலும் நம்ம மண்ணு பொண்ணுங்க வேற தான். காதலிச்சவனுக்காக உயிரையே கொடுக்கவும் தயங்க மாட்டாங்க. அவனுக்கு பிடிக்கலைன்னா அவனையே நினைச்சு தள்ளி நிக்கவும் தயங்க மாட்டாங்க... உன்னை மாதிரி" என்று சோகமாக புன்னகைத்தான் தீரன்.

என்ன சொல்லணும் என்று எதுவும் தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

"மிரு! அம்மா மட்டும் தான் எனக்கு. அங்க போனப்புறம் ரொம்ப தனியா பீல் பண்ணேன். அவளும் என்னை மாதிரி தனிமைல கஷ்டப்படரதை பார்த்து தான் கொஞ்சம் கொஞ்சமா விரும்ப ஆரம்பிச்சேன். ஆனா அவள் அந்த ரெண்டு வருஷமும் என்னை தன்னோட சுயநலத்துக்காக யூஸ் பண்ணிருக்கா.

என்னால இதை தாங்கவே முடியலை. இதுக்கும் மேல மதிப்பே இல்லாத அந்த காதலுக்காக உன்னை ரொம்ப கஷ்ட படுத்திருக்கேன். இதை எல்லாத்தையும் நினைச்சு நினைச்சு இந்த மூணு வருஷமா சொல்ல முடியாது அவ்ளோ வருந்திருக்கேன் மிரு. ஒரு நாள்கூட நிம்மதியா தூங்கினது இல்ல. உண்மையை சொல்லனும்னா இங்க வந்து நம்ம பொண்ணுகூட தூங்கினது தான் நல்லா தூங்கினது. " என்று நிறுத்தினான்.

திடிரென்று எழுந்து சென்றவள் ஒரு குவளை நீரை கொடுத்தாள்.

"இந்தாங்க. குடிங்க" என்று எதிரில் அமர போனவள் கரம் பற்றி தன் அருகே அமர வைத்தான்.

"நீ என்னை ஏத்துக்கலை ன்னு தெரியும் ஆனாலும் உன் பக்கத்துல இருக்கிறதே எனக்கு பெரிய நிம்மதி. இப்போல்லாம் நல்லா தூங்குறேன். தெரியுமா? " என்று சிரித்தான்.

"என் மனசுல இருக்கிறதை எல்லாம் யார்கிட்டயாவது சொல்லி அழனும் போல இருந்தது. இப்போ உன்கிட்ட சொன்னப்புறம் மனசு லேசான மாதிரி இருக்கு." என்றான் தீரன்.

"என்னை பத்தி எல்லாமே சொல்லிட்டேன். இப்போ எனக்கு ஒன்னு தான் தெரியனும். அன்னைக்கு நைட் என்ன நடந்தது? வேற யாருகிட்டயும் கேட்டு தெரிஞ்சுக்க முடியாது. ஏன்னா நம்ம ரெண்டு பேர்க்குள்ள நடந்தது எப்படி கேக்க முடியும்? ப்ளீஸ் சொல்லு என்ன நடந்துச்சு? நீ ஏன் வீட்டை விட்டு போன? அப்படி நான் என்ன பண்ணேன்? எனக்கு தெரியணும் இல்லன்னா தலையே வெடிச்சிரும் போல இருக்கு மிரு." என்றான் தீரன் பாவமாய்.

அவனை சில நொடிகள் பார்த்தவள் பெரு மூச்சொன்றை விட்டாள்.

"சரி நான் சொல்றேன். அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லுங்க." என்று தீரனை பார்த்தாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 31:
"என்னை விரும்பின ஒரு பொண்ணு இப்படி கஷ்டப்படறது மனதை வருந்த அவளுக்கு பேசி புரிய வைக்கணும்னு நிறைய முறை போன் பண்ணேன். ஆனா, அவ எடுக்கலை. வீட்டுக்கு வந்து உன்னை பார்க்கவும் பாவமா இருந்துச்சு. உங்க ரெண்டு பேருக்கும் நான் உண்மையா இல்லைன்னு ரொம்ப நொந்து போனேன்.

அப்போ தான் அன்னைக்கு காலைல உன்கிட்ட சந்தோஷமா பேசிட்டு ஆஃபீஸ்கு போனேன். மறுபடியும் என் பிரென்ட் போன் பண்ணான். அவன் சொன்னதை கேட்டதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்துட்ட மாதிரி இருந்துச்சு" என்று நிறுத்தினான்.

அவனின் கரத்தை எடுத்து தன் இரு கரங்களுக்குள் மென்மையாய் பிடித்து கொண்டாள். அவளின் இந்த சின்ன ஆறுதல் கூட பெரிதாக பட்டது தீரனுக்கு.

"சோபியா விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிகிட்டதா எனக்கு தகவல் வந்தது. அவ்ளோ தான் எனக்கு என் மேலேயே ரொம்ப வெறுப்பு. எல்லோர் மேலயும் கோவம் எல்லை மீறுச்சி. ஆபிஸ்ல இருக்க முடியலை. சோபியா என்னை பத்தி என்ன நினைச்சிருப்பா? இவனை நம்பினதுக்கு அவ உயிரை விட்றது தான் ஒரே வழின்னு உயிரை விட்டிருப்பாளோன்னு தோணுச்சு. எத்தனை முறை நான் மன்னிப்பு கேட்டாலும் அவளோட ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காதுன்னு ஊமையாய் அழுதேன். என்ன இருந்தாலும் நான் நேசிச்ச முதல் பெண். அந்த சோகத்தை மறக்க முடியாதுன்னாலும் வழக்கம் போல் குடிக்க சென்றேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது அளவு தெரியாமல் குடித்தேன். எப்படி இருந்தாலும் தூங்க வீட்டுக்கு வந்து தான ஆகணும். போதை தலைக்கேறிய நிலையில நண்பனின் உதவியோடு வீட்டுக்கு வந்தேன்" என்றவன் தன் முகத்தை இரு கரங்களால் மூடிக்கொண்டு அழுதான்.

என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் போனாலும் தான் விரும்பிய உயிர் அழுவதை பார்க்க முடியாமல் அவனை தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு அன்னையானாள்.

சிறிது நேரம் கழிந்தவுடன் மீண்டும் பேச தொடங்கினான்.

"வீட்டு வாசல் வரை நண்பன் விட்டுட்டு போக அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு எதுவுமே ஞாபகம் இல்லை. மறுநாள் எப்பவும் போல கண் முழிச்சா நீ வீட்ல இல்ல. தலைவலி ரொம்ப அதிகமாக வீட்டுக்குள்ளயே தேடினேன். நீ இல்ல. அக்கம் பக்கத்துல கேட்டா யாருக்கும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. ஏற்கனவே ஒருத்தியை தொலைச்சிட்டேன். இப்போ உன்னையும் காணாமல் பைத்தியம் மட்டும் தான் பிடிக்கவில்லை." என்று நிறுத்தினான்.

அவனின் இடத்தில் தன்னை நிறுத்தினாள் மிருதி.

"ஒரு வேளை உன் வீட்டுக்கு போயிருந்தா? அதனால உன் வீட்டுக்கு போனேன். அங்க உங்கப்பா உன்னை காணோம்ன உடனே என்னை வாயில வசை பாடி கடைசில அவர் ஆத்திரத்தை என்னை அடித்து தீர்த்து கொண்டார்." என்று மெதுவாய் சிரித்தான்.

தன் வாயில் கரம் வைத்து மூடியவள் அதிர்ச்சியாய், "என்ன அப்பா உங்களை அடிச்சாரா?" என்றாள்.

"நீ வேற. அவர் அடியோடு நிறுத்திட்டார். என் பொண்ணுக்கு இந்த நிலைமைன்னா அவர் இடத்துல நான் இருந்திருந்தா கொலையே பண்ணிருப்பேன். என் மூஞ்சிலையே முழிக்காதன்னு சொல்லிட்டார். உனக்கு. என்ன ஆச்சுன்னு பதட்டத்துல எல்லா இடத்துலயும் தேடினேன். கிடைக்கலை. போலீஸ் கம்பலைன்ட் கொடுக்க போகும் போது அம்மா வந்தாங்க," என்று நிறுத்தியவன் அவளிடம் இருந்து நிமிர்ந்து அமர்ந்தான்.

"அத்தையா ?" என்றாள் மெதுவாய்.

"ஹ்ம். வந்தவங்க அவங்க பங்குக்கு கன்னம் பழுக்க வெச்சு வாங்கினாங்க. உன்னால அவ கஷ்டப்பட்டது போதும். எங்க அண்ணன் பொண்ணை கட்டி வச்சா உறவு நீடிக்கும்னு பார்த்தா மொத்தமா அறுத்துட்டியே. நீ யாரோ நான் யாரோ இனி என் முகத்துலையே முழிக்காதன்னு அம்மாவை திட்டி அனுப்பிட்டார் மாமா. என்ன ஆனாலும் சரி இனி நீ அவளை தேடக்கூடாது மீறி தேடினா என் உடம்பு கூட கிடைக்காத மாதிரி பண்ணிடுவேன்னு திட்ட வட்டமா சொல்லிட்டு போய்ட்டாங்க." என்று தலை குனிந்தவன்.

அப்பயும் எப்படியாவது உன்னை பத்தி தெரிஞ்சுக்கணும்னு முயற்சி பண்ணேன் முடியலை. வீட்டுக்குள்ளையே முடங்கினேன். ரெண்டு மாசம் அப்படியே இருந்தேன். நீ இல்லாத வீட்ல உன் ஞாபகங்களோடும் உன் வாசனையோடும் நினைவுகளோடும் உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம என் நாட்கள் நரகமா நகர்ந்துச்சு." என்றான் தீரன்.

அவனின் வலி அவளையும் ஆட்கொள்ள தொடங்கியது. கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

"ஒரு வழியாய் நீ நல்லபடியா இருக்கேன்னு மட்டும் தெரிஞ்சுது. அப்புறம் தான் நிம்மதியாச்சு." என்றான் தீரன்.

"ஆனா அதுக்கப்புறம் தான் எனக்கு வாழ்க்கையே புரட்டி போட்டுச்சு." என்றான் கண்ணீர் வழிவது கூட அறியாமல்.

என்ன என்பது போல் மிருதி பார்க்க, "சோபியா இறந்து போய்ட்டானு இருந்த எனக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. அடுத்த ஒரு வாரத்துல கிடைச்ச செய்தி. " என்றான்.

"என்ன?" என்றாள் மிருதி.

"சோபியா ன்னு நான் காதலிச்ச பொண்ணு பேரு சோபியாவே இல்ல. அவ பேரு ஜெரிட்டா. அவ என்னை விரும்பினது எல்லாமே சும்மா டிராமா. அவளுக்கு வேலையே இது தானாம். வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்யும் வாலிபர்களை காதலிப்பது போல் நடித்து பணம் பறிப்பது. நாங்க விரும்பின நேரத்திலேயே மேலும் ரெண்டு பேரை ஏமாத்திருக்கா. ஏதாவது ஒரு நேரத்தில் அவங்ககூட சண்டை போட்டுட்டு பிரிஞ்சிடறது இல்லைன்னா இது யாரையாவது செட். அப் செய்து தான் இறந்து விட்டது போல் காட்டிவிட்டு அடுத்த பையனை பார்ப்பது என்று இருந்திருக்கிறாள்.

முதல்ல கேட்டவுடனே என்னால இதை நம்ப முடியலை. ஆனா அவ ஏமாத்தினவங்கள்ல ஒருத்தர் போலீஸ் கம்பலைன்ட் கொடுத்துருக்கார். அதை விசாரிச்சு போலீஸ் அவளை அரேஸ்ட் பண்ணிருக்கங்க." என்றான் தீரன் தலையை கவிழ்ந்தபடி.

"என்ன இருந்தாலும் நம்ம மண்ணு பொண்ணுங்க வேற தான். காதலிச்சவனுக்காக உயிரையே கொடுக்கவும் தயங்க மாட்டாங்க. அவனுக்கு பிடிக்கலைன்னா அவனையே நினைச்சு தள்ளி நிக்கவும் தயங்க மாட்டாங்க... உன்னை மாதிரி" என்று சோகமாக புன்னகைத்தான் தீரன்.

என்ன சொல்லணும் என்று எதுவும் தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

"மிரு! அம்மா மட்டும் தான் எனக்கு. அங்க போனப்புறம் ரொம்ப தனியா பீல் பண்ணேன். அவளும் என்னை மாதிரி தனிமைல கஷ்டப்படரதை பார்த்து தான் கொஞ்சம் கொஞ்சமா விரும்ப ஆரம்பிச்சேன். ஆனா அவள் அந்த ரெண்டு வருஷமும் என்னை தன்னோட சுயநலத்துக்காக யூஸ் பண்ணிருக்கா.

என்னால இதை தாங்கவே முடியலை. இதுக்கும் மேல மதிப்பே இல்லாத அந்த காதலுக்காக உன்னை ரொம்ப கஷ்ட படுத்திருக்கேன். இதை எல்லாத்தையும் நினைச்சு நினைச்சு இந்த மூணு வருஷமா சொல்ல முடியாது அவ்ளோ வருந்திருக்கேன் மிரு. ஒரு நாள்கூட நிம்மதியா தூங்கினது இல்ல. உண்மையை சொல்லனும்னா இங்க வந்து நம்ம பொண்ணுகூட தூங்கினது தான் நல்லா தூங்கினது. " என்று நிறுத்தினான்.

திடிரென்று எழுந்து சென்றவள் ஒரு குவளை நீரை கொடுத்தாள்.

"இந்தாங்க. குடிங்க" என்று எதிரில் அமர போனவள் கரம் பற்றி தன் அருகே அமர வைத்தான்.

"நீ என்னை ஏத்துக்கலை ன்னு தெரியும் ஆனாலும் உன் பக்கத்துல இருக்கிறதே எனக்கு பெரிய நிம்மதி. இப்போல்லாம் நல்லா தூங்குறேன். தெரியுமா? " என்று சிரித்தான்.

"என் மனசுல இருக்கிறதை எல்லாம் யார்கிட்டயாவது சொல்லி அழனும் போல இருந்தது. இப்போ உன்கிட்ட சொன்னப்புறம் மனசு லேசான மாதிரி இருக்கு." என்றான் தீரன்.

"என்னை பத்தி எல்லாமே சொல்லிட்டேன். இப்போ எனக்கு ஒன்னு தான் தெரியனும். அன்னைக்கு நைட் என்ன நடந்தது? வேற யாருகிட்டயும் கேட்டு தெரிஞ்சுக்க முடியாது. ஏன்னா நம்ம ரெண்டு பேர்க்குள்ள நடந்தது எப்படி கேக்க முடியும்? ப்ளீஸ் சொல்லு என்ன நடந்துச்சு? நீ ஏன் வீட்டை விட்டு போன? அப்படி நான் என்ன பண்ணேன்? எனக்கு தெரியணும் இல்லன்னா தலையே வெடிச்சிரும் போல இருக்கு மிரு." என்றான் தீரன் பாவமாய்.

அவனை சில நொடிகள் பார்த்தவள் பெரு மூச்சொன்றை விட்டாள்.

"சரி நான் சொல்றேன். அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லுங்க." என்று தீரனை பார்த்தாள்.

*****

ஹாய் குட்டீஸ்!
எல்லோரும் எப்டி இருக்கீங்க? பி.எட் முதல் வருஷ எக்ஸாம் முடிஞ்சுட்டு. ஆனா இப்போ ரெண்டாவது வருஷம் டீச்சிங் பிராக்ட்டிஸ் நடந்து முடிய போகுது. அடுத்து ரெக்கார்ட் எழுதுற வேலை பெண்டு நிமிர்த்து.என் பிள்ளைங்களுக்கும் ப்ரீ ஆன்வல் எக்ஸாம் நடக்குது அடுத்து பிராக்டிகள் எக்ஸாம் அண்ட் செகண்ட் இயர் எக்ஸாம் இருக்கு. எல்லாம் முடிய மே மாசம் ஆகும். அதுவரைக்கும் அடிக்கடி தலை காட்ட முடியாது. நேரம் கிடைக்கும் போது வந்து போறேன். பை டியர்ஸ்... லவ் யூ ஆல்....
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
Hi friends! Ellaarum eppadi irukinga? B.ed practical exam mudinju vandhutten. second year classeskooda start pannitaanga. ippo konjam free time kirakaradhaala updates poda vandhuruken. enakaga wait panna ella chellamskum rombha periya thanks.

தீயாய் சுடும் என் நிலவு 32
"போதுமா இது தான் நடந்தது? உங்க கடந்தகால வாழ்க்கையை எதுவுமே எனக்கு தெரியாதப்ப நீங்க பேசினதையும் பண்ணத்தையும் மன்னிச்சு உங்க கூட வாழறதுக்கு நான் ஒண்ணும் மகான் இல்ல உயிரும் சதையும் மனசும் உள்ள சாதாரண மனுஷி. எல்லா பொண்ணுங்களை மாதிரி எனக்கும் ஆசை கனவு எல்லாம் இருந்துச்சு.உங்க முகத்தை கூட பார்க்க கூடாதுன்னு தான் இங்க வந்துட்டேன்.

என்ன தான் நீங்க பண்ணது தப்புன்னாலும் என்னோட காதல் உண்மை தானே? அதனால என்னோட பொண்னை ஆனந்தமா பெற்றெடுத்தேன். நான் இங்க வந்தநாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் என்னோட ஒவ்வொரு அழுகைலயும் சிரிப்புலயும் ஸ்ரீஷாவும் அமுதனும் என்னோட என்கூடவே இருந்தாங்க.. இருக்காங்க." என்று நிறுத்தினாள்.

"எல்லாத்துக்கும் மேல நான் பிள்ளைத்தாச்சியா வெளிய போய் வேலை செய்ய கூடாதுன்னு அவங்க ரெண்டு பேரும் எனக்காக இந்த கேஃபை வாங்கி கொடுத்தாங்க. பணம் வேணா என்னுதா இருக்கலாம். ஆனா, வாங்கி கொடுத்து உன்னால முடியும்னு தைரியம் கொடுத்தது அவங்க தான்." என்று தன் தோழனை நினைத்து சிரித்தாள்.

சில நொடிகள் விழிகள் மூடி அமைதியாய் இருந்தவள் பெரு மூச்சை வெளிபடுத்தி அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

"இப்போ சொல்லுங்க இவ்ளோவும் தெரிஞ்சப்புறம் உங்கக்கூட சேர்ந்து வாழ என்னால முடியும்னு நினைக்கிறீங்களா? நீ தான் என்னை விரும்புறியே? என்கூட சேர்ந்து வாழ்றதுல உனக்கென்ன கஷ்டம்னு கேட்காதீங்க. அதுவேற. நான் உங்களை விரும்புறேன் உண்மை தான். ஆனால், என்னோட காதல் என்னைக்கும் நினைவுகளாவே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டேன்." என்றாள் நிதானமாக.

"என்ன சொல்...ற நீ?" என்றான் தீரன் தடுமாற்றமாக.

"இந்த முடிவுக்காக காலத்துக்கும் நான் அழுவேன்னு நல்லா தெரியும். இருந்தாலும் இதுக்கு மேலயும் என்னால உங்கக்கூட நிச்சயமா வாழ முடியாது." என்றாள் மிருதி விழிகளில் நீரோடு கனத்த மனதோடு.

"இல்ல.." என்றான் தீரன் அதிர்ச்சியாய்.

"உங்களை என் உயிருக்கும் மேலா விரும்புறேன். நான் இந்த மண்ணுக்குள்ள போகிற வரைக்கும் அது மாறாது. உங்களை விரும்பினதால இப்போ கூட உங்களை மன்னிச்சு ஏத்துக்கத்தான் என் மனசு மல்லுக்கட்டுது." என்றாள் மிருதி சோகமாய் புன்னகைத்து.

"ஆனா, நீங்க எனக்கு ஏற்படுத்தின காயம் அதைவிட ரொம்ப பெருசு. இதெல்லாத்தையும் விட நீங்க அடிச்சதுல இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஹெல்த் சரி இல்லாம இருக்கு. எப்போ சரியாகும்னு சொல்ல முடியாது. என்ன வேணா நடக்கலாம். அதனால தான் இப்போ உங்களை கூப்பிட்டு என் பொண்ணை உங்கக்கூட அனுப்ப முடிவு செஞ்சேன்." என்றாள்.

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தில் சம்மட்டியாய் விழ, பேசமுடியாமல் அவளிடம் மன்னிப்பு கேட்கும் குழந்தையாய் மண்டியிட்டு கண்ணீரில் கரைந்தான்.

"மிரு! நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. உனக்கு எவ்ளோ வலிகளை கொடுத்திருக்கேன்னு என்னால உணர முடியுது. ஏற்கனவே உன்னை இந்த மூணு வருஷம் பிரிஞ்சு வாடுறேனே இது போதலையா? ப்ளீஸ் அதுக்காக என்னை இப்படி ஒரேடியாய் ஒதுக்கி வச்சிராத. எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு. உன்னோட காயத்துக்கு மருந்தா இருக்க முயற்சி பண்றேன்." என்றான் தீரன்.

ஓடி சென்று அணைத்துகொள்ள மனம் துடித்தாலும், விழிகளை மூடி ஒரு சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தவள்.

"இல்ல எனக்கு இந்த கல்யாணத்தை நினைச்சாலே சொல்ல முடியாத தூக்கம் தொண்டையை அடைக்குது. அந்த கசப்பான நினைவுகளோட உங்களோட என்னால வாழமுடியாது. அது தான் உண்மையும்கூட. அதனால,..." என்று தடுமாறியவளை ஒரு முடிவோடு பார்த்தான் தீரன்.

"நீங்க திஷாவை கூட்டிக்கிட்டு கிளம்புங்க. உங்களுக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கோங்க. பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோங்க. எங்கூடயே இருந்ததால கொஞ்ச நாள் என்னை கேட்பா. அவ குழந்தை புரிஞ்சுப்பா. அடிக்கடி அவகிட்ட பேசுறேன். எனக்கு என்னைக்காவது அவளை பார்க்கணும்னு தோனினா நான் பார்க்க வரேன்." என்றவள் அதற்குமேல் தாளமுடியாமல் தனதறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

அவளின் வார்த்தைகளில் பலமாய் தாக்கபட்டவன் அதிர்ச்சியாய் நிற்க சுயத்திற்கு வந்து கதவை தட்டினான்.

"நீ எப்படி என்னை மறக்க முடியாதோ என்னாலயும் உன்னை மறக்க முடியாது. எத்தனை முறை வேண்டும்னாலும் திரும்ப திரும்ப முயற்சிப்பேன். என் வாழ்க்கைல இனி ஒரு பொண்ணுக்கு மட்டும் தான் இடம் உண்டு அது நீ மட்டும் தான் மிரு. " என்றான் தீர்க்கமாய்.

அழுகையில் கரைந்து கொண்டிருந்தவள் முகத்தை கோவமாக துடைத்து கொண்டு,

"சும்மா இங்க தேவை இல்லாததை பேசி நேரத்தை வீணடிக்காதீங்க. கிளம்புங்க. உங்க வீட்டுக்கு டைவோஸ் பேப்பர்ஸ் வரும். ஒழுங்கா சைன் பண்ணுங்க. அப்படி இல்ல இங்கிருந்து யாருக்கும் சொல்லாம போய்டுவேன்." என்றாள் முடிவாய்.

ஏது செய்வது என்று தெரியாமல் அங்கேயே அமர்ந்திருந்தவன் நீண்ட நேரம் கழித்து வெளியேறினான்.

"என்ன பா. என்ன தான் சொன்னா அந்த சண்டி ராணி?" என்றான் அமுதன் சிரித்து போனில்.

"என்ன சொன்னா?" என்று தன் தலையை லேசாக கோதியவன்.

தொண்டை அடைக்க, "என் வாழ்க்கையை புரட்டி போட்டுட்டா." என்றான் வேதனையாய்.

"தீரன்! என்ன நடந்தது? எங்க இருக்கீங்க? என்ன சொன்னா மிருதி?" என்றான் அமுதன்.

"மொத்தமா இத்தனை வருஷமா அவ மனசுல இருந்த எல்லாத்தையும் கொட்டிட்டா. என்னையும் வெளியே தள்ளிட்டா." என்று சிரித்தான் விரக்தியாய்.

"என்ன வீட்டை விட்டு வெளிய தள்ளிட்டாளா?" என்றான் அமுதன் அதிர்ச்சியாய்.

"அட நீங்க வேற பாஸ். என்னை அவ வாழ்க்கைல இருந்தே வெளியே தள்ளிட்டான்னு சொல்றேன். வீட்டை விட்டு தள்றது பெரிய விஷயமா?" என்றான் தீரன்.

"ப்ளீஸ் தீரன் எனக்கு டென்ஷன் ஏறுது. என்ன நடந்தது சொல்லுங்க?" என்றான் அமுதன் பதட்டமாய்.

"நான் திஷாவை கூட்டிட்டு போகனுமாம். இனி எங்க வாழ்க்கைல அவ இருக்க போறதில்லையாம். அதோட அவளுக்கு டைவோஸ் கொடுக்கணுமாம். இல்லன்னா.." என்று பேச முடியாமல் திணறினான்.

"இல்லன்னா" என்றான் அமுதன்.

"இல்லன்னா யாருக்கிட்டையும் சொல்லாம இங்க இருந்து போய்டுவாளாம்" என்றான் தீரன்.

"இப்போ எங்க இருக்கீங்க?" என்றான் அமுதன்.

"எங்க இருப்பேன்? நடுரோட்டுல" என்றான் தீரன்.

"இங்க என் வீட்டுக்கு வாங்க. அவகிட்ட நான் பேசுறேன். எங்க இருக்கீங்க சொல்லுங்க நான் வரேன்." என்றான் அமுதன் உடனே.

"இல்ல அமுதா. அவ ஏற்கனவே என்னால நிறைய இழந்துட்டா. ஸ்ரீஷாவையும் உங்களையும் இழக்க கூடாது. நான் இங்க பக்கத்துல ஹோட்டல்ல தங்கிக்கிறேன். நாளைக்கு ஊருக்கு போறேன். திஷாவை ஒரு முறை அவகிட்ட காட்டிட்டு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க. நாங்க அங்க இருந்து கிளம்புறோம்." என்று எதுவும் பேசுவதற்க்கு முன் துண்டித்தான் தீரன்.

உடனே ஸ்ரீஷாவிற்கு போன் செய்தவன். "உடனே வீட்டுக்கு போ. நா வரேன்." என்றான்.

"ஏன் என்னாச்சு? இந்த நேரத்துல போக சொல்ற?" என்றாள் ஸ்ரீஷா.

"ஸ்ரீ சொன்னா உடனே செய். இன்னும் அரைமணி நேரத்துல நீ அங்க இருக்கணும். நானும் இருப்பேன். உங்கக்கா என்ன வேலை செஞ்சு வச்சிருக்கானு போய் தெரிஞ்சுக்க." என்று பட்டென்று வைத்தான் அமுதன்.

அமுதன் இதுவரை கோபமாக பேசி பார்த்திராத ஸ்ரீஷாவிற்கு என்ன நடந்திருக்கும் என்று ஒன்றும் புரியாமல் கிளம்பினாள்.

வீட்டின் வாசலில் நின்று மணியை அடிக்க திறக்காமல் போனதால் மிருதிக்கு போன் செய்தாள்.

"என்னடா எந்த நேரத்துல? சாப்டியா?" என்றாள் மிருதி தன் துக்கத்தை மறைத்து.

"அக்கா! நான் வீட்டு வாசல்ல தான் நிக்குறேன். எவ்ளோ நேரமா பெல் அடிக்கிறேன். ஏன் திறக்க மாட்டேன்றிங்க?" என்றாள் ஸ்ரீஷா.

"அடடா! இரு வரேன்." என்று வந்து கதவை திறந்தவள்.

"நாளைக்கு தானே வரேன்னு சொன்ன? இன்னைக்கே வந்துட்ட?" என்றாள் மிருதி.

"ஆமா ஒரு நாள் முன்னதாவே கூட்டிட்டு வந்துட்டாங்க அக்கா." என்றவள் அவளின் முகத்தை பார்த்து எதுவோ சரியில்லை என்று புரிந்து கொண்டாள்.

"என்னாச்சு கா? ஏன் அழுதுருக்கிங்க? முகம் இவ்ளோ வீங்கிருக்கு?" என்றாள் ஸ்ரீஷா.

"அதெல்லாம் எதுவும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்." என்றாள் மிருதி.

"எது ஒண்ணுமில்லை தி?" என்று உள்ளே வந்தான் அமுதன்.

தூங்கும் திஷாவை தோள் மேல் கிடத்தியிருக்க, குழந்தையை வாங்கி கொண்டு உள்ளே சென்று படுக்க வைத்தாள் ஸ்ரீஷா.

இந்த நேரத்தில் அமுதனை எதிர்பார்க்காதவள் சற்று அதிர்ச்சியானாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், "என்ன இந்த நேரத்துல நீ வந்துருக்க?" என்றாள் மிருதி.

"எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காத தி?" என்றான் அமுதன் காட்டமாய்.

இதுவரை அமுதனை கோபமாய் பார்த்திராதவள் சற்று துணுக்குற்றாலும், "என்ன தெரியும் உனக்கு? என்ன இந்நேரத்திற்கு வந்துருக்கேன்னு கேட்டேன்? அதுக்கு இது தான் பதிலா?" என்றாள் மிருதி.

"பேச்சை மாத்தாத தி? நான் ரொம்ப கோவத்துல இருக்கேன். நாங்க நல்லா இருக்கணும்னு நீ நினைக்கும் போது நீ நல்லா இருக்கணும்னு நாங்க நினைக்க கூடாதா?" என்றான் அமுதன்.

"யார் சொன்னது அப்படின்னு? தாராளமா நினைக்கலாமே." என்றாள் மிருதி என்ன பேசுகின்றான் என்று புரிந்து.

"அப்போ ஏன் தீரன்கிட்ட டைவர்ஸ் கேட்ட தி? நீ உன் புருஷன் கூடவும் குழந்தை கூடவும் சேர்ந்து வாழனும் நாங்க நினைக்கிறதுல ஏதாவது தப்பிருக்கா? அவர் பண்ண தப்புக்கு தான் ஏற்கனவே தண்டனை கொடுத்திட்டியே அப்புறம் இது எதுக்கு?" என்றான் அமுதன்.

"அமு! ப்ளீஸ் நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன். என் முடிவை மாத்தா முயற்சிக்காத." என்றாள் மிருதி முடிவாய்.

ஒரு சில நிமிடங்கள் அமைதியாய் அவளை பார்த்தவன். "சரி. என்ன காரணம்னு தான் கேட்டேன். அதைக்கூட சொல்ல விருப்பம் இல்லன்னா பரவால்லை. நான் கிளம்புறேன்." என்று கிளம்பினான் அமுதன்.

"நில்லு அமு. சொல்றேன். ஆனா நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்." என்று தீரனின் கடந்தகால வாழக்கையும் நடந்த அணைத்தையும் கூறியவள் தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்தாள்.

 
Last edited:

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 33:

"இப்போ சொல்லு என்னை என்ன பண்ண சொல்ற? உனக்கே தெரியும் நான் அவரை எவ்ளோ விரும்புறேன்னு? ஆனா, அவரோட கடந்த கால காலத்துல மதிப்பே இல்லாத ஒரு பொண்ணுக்காக என்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டாரு. அப்படிபட்டவரோட என்னால வாழ முடியாது" என்றாள் ரோஷமாக கண்ணீரை துடைத்து கொண்டு.

"நீ சொல்றது எல்லாமே புரியுது தி. ரொம்ப பெரிய தப்பு பண்ணிருக்காரு தீரன். உண்மை தான். ஆனா, இப்போ திருந்தி நீயும் திசாவும் அவர்கூட சேர்ந்து வாழணும்னு கேட்கிறது எந்த விதத்துல நியாமம் இல்லைன்னு சொல்லு. எனக்கு மட்டும் நீ குடும்பமா இருக்கணும்னு ஆசையா இருக்காதா? சரி அவர் தப்பு செஞ்சுட்டார். இன்னும் எத்தனை நாளைக்கு இல்ல எத்தனை வருசத்துக்கு அவர் மேல கோவமா இருக்க போற? எத்தனை வருசத்துக்கு தள்ளி வைக்க போற?" என்றான் அமுதன்.

"நான் எதுக்கு கோவமா இருக்கணும்? தள்ளி வைக்க போறதில்ல. எனக்கு போதும் இந்த வாழ்க்கை. தயவு செஞ்சு எனக்கு டைவஸ் மட்டும் வாங்கி கொடுத்திடு." என்றாள் மிருதி.

"சரி. டைவஸ் வாங்கி தரேன். அதுக்கு அப்புறம் நீ காலம் முழுக்க தனியா இருக்க போறியா? " என்றான் அமுதன் உள்ளடக்கிய கோபத்தோடு.

"தனியா இருக்கனோ இல்லையோ கண்டிப்பா என்னால அவர்கூட சேர்ந்து வாழ முடியாது" என்றாள் மிருதி.

இவ்வளவு மனம் நொந்து அடம் பிடிக்கும் மிருதியை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது அமுதனுக்கு.

சிறிது நேரம் யோசித்தவன்,

"சரி தி. நீ அவர்கூட சந்தோஷமா இருக்க முடியாதுன்னு சொல்றப்ப எதுக்கு கட்டாயபடுத்தனும்? அதனால கண்டிப்பா டைவஸ் வாங்கிடலாம். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்" என்றான் அமுதன் திட்டவட்டமாக.

'என்ன?' என்பது போல் பார்த்தாள் மிருதி.

"அவரை பிரிஞ்சப்புறம் நீ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கறேன்னு எனக்கு சத்தியம் பண்ணு போதும்" என்றான் மனதுக்குள் அவளின் எண்ணவோட்டங்களை அறிந்து கொண்டு.

"என்ன?" என்றாள் அதிர்ச்சியாய் மிருதி.

"நா எதுவும் தப்பா சொல்லலையே? எனக்கு நீ குடும்பமா நல்லா இருக்கணும். அவ்ளோ தான். அதுக்கு நீ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தாலும் ஓக்கே தான்" என்றான் முகத்தில் எந்தவித உணர்வும் காட்டாமல்.

அவனின் தலையில் இரண்டு கொம்பு முளைத்தது போல் இருந்தது மிருதிக்கு.

"உனக்கு என்ன மூளை கேட்டு போச்சா?" என்றாள் மிருதி கோவமாக.

உள்ளுக்குள் விழுந்து விழுந்து சிரித்தாலும் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல்.

"அப்படி தான் வச்கிகோ. நான் சொன்னது மாதிரி நடக்கணும். இல்ல நானே நடத்திக்காட்டுவேன் பார்த்துக்க" என்று வேகமாக எழுந்து சென்றுவிட்டான் வெளியே.

எதுவும் பேசாமல் தரையிலேயே படுத்தபடி அழ தொடங்கினாள் இறுதி.

ஸ்ரீஷாவாலும் என்ன செய்வது என்று தெரியாமல், தேற்றவும் முடியாமல் அமைதியாய் இருந்தாள்.

மறுநாள் காலை,

"செல்லக்குட்டி. இன்னைக்கு அப்பாகூட ஊருக்கு போக போறீங்க நீங்க. அங்க போய் சமத்தா இருக்கணும். எந்த சேட்டையும் செய்யக்கூடாது. சரியா?" என்றாள் மிருதி கண்ணீரை மறைத்து கொண்டு.

"அம்மா நீ வரலையா?" என்றாள் குழந்தை.

"அது எனக்கு உடம்பு சரி இல்ல. டாக்டர் அங்கிள் கிட்ட போகணும். அதுவும் இல்லாம இனி நீங்க அப்பா கூட தான் இருக்க போறீங்க. " என்றாள் மிருதி.

"இல்ல நீயும் வா. நான் மட்டும் போகமாட்டேன்" என்றாள் திஷா குட்டி கண்ணீருடன்.

உள்ளே வராமல் வெளியே நின்றிருந்த அமுதனுக்கும் இது கேட்க கண்கள் கலங்கியது.

"இல்லடா கண்ணா. அம்மாவால இப்போ இல்ல இனி எப்போவும் வரமுடியாது. இனி இப்படி தான் நீ புரிஞ்சுக்க" என்று அவளின் நெற்றியில் முத்தமிட, கோபத்தில் குரல் மட்டும் வந்தது.

"ஹுக்கும்.. வளர்ந்தவங்களுக்கே எதுவும் புரிஞ்சு நடந்துக்க தெரியலை. இதுல மூணு வயசு குழந்தை புரிஞ்சு நடந்துக்கணும்னு அட்வைஸ் வேற?" என்றான் அமுதன்.

எதுவும் பேசாமல் இருந்த மிருதி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு. "சரிடா தங்கம். நேரமாகுது. போய்ட்டு வாங்க" என்றாள் கண்ணீரோடு.

திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றது குழந்தை.

இதை காண சகியாமல் உள்ளே ஓடினாள் மிருதி.

"தீரன் அவ தான் புரிஞ்சுக்க மாட்டேங்குறான்னா நீங்களும் அவளுக்கு துணை போன மாதிரி உடனே போகணும்னு சொல்ட்றீங்களே?" என்றான் அமுதன்.

"வேற என்னை என்ன பண்ண சொல்றிங்க அமுதன்? என்னால முடிஞ்ச அரைக்கும் இறங்கி வினதுட்டேன். அவதான் புரிஞ்சுக்க மாட்டேன்னு கண்ணை கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கா. எனக்கு இதுக்கு மேல என்ன செய்றதுன்னு புரியலை. நான் கிளம்புறேன்" என்று கிளம்பினான் தீரன்.

தீரனும் திஷாவும் சென்னைக்கு பயணமாகினர்.

அங்கிருந்து வந்துவிட்டாலும் மனம் கேட்காமல் மீண்டும் போன் செய்வான் தீரன். வழக்கம்போல் எடுக்க மாட்டாள் மிருதி.

மிருதியின் மேல் இருந்த கோபத்தால் அவளிடம் பேசாமல் இருந்தான் அமுதன். ஸ்ரீஷா மட்டும் எப்பொழுதும் போல் பேசினாள்.

நாட்கள் வேகமாய் கடந்தன.

மகளை பிரிந்த ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும் கணவனை மன்னிக்க முடியாமல் துடித்து கொண்டிருந்தாள் மிருதி.

இருந்தாலும் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று தீரனுக்கு விவாகாரத்து நோட்டீஸ் அனுப்பினாள் மிருதி.

அதை பார்த்து பதறி மீண்டும் மீண்டும் அவளுக்கு ஃபோன் செய்தான் தீரன் எடுக்க முடியாமல் தவிர்த்தாள் மிருதி.

அமுதனுக்கு இவ்விஷயத்தை தீரன் கூற மீண்டும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். அவன் எல்லாவற்றையும் திட்டி முடித்த பின், "பேசிட்டியா? நீ எவ்ளோ திட்டினாலும் என்னோட முடிவு இது தான்" என்று சென்றுவிட்டாள்.

அன்றிலிருந்து மிருதியை முழுவதும் ஒதுக்க ஆரம்பித்தான் அமுதன்.

மூன்று மாதங்கள் கடந்தது அவளின் முடிவில் எந்த மாற்றமும் இல்ல என்று உணர்ந்த தீரனும் ஒரு முடிவு செய்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு அனுப்பினான்.

திஷா சென்ற புதிதில் அம்மா அம்மா என்று அழுகிறாள் ஸ்ரீஷா கூற, போனில் அடிக்கடி சமாதானபடுத்துவாள் மிருதி. இருந்தும் தீரனிடம் எதுவும் பேசமாட்டாள்.

மாதங்கள் கடக்க, மிருதியின் உடல்நிலையில் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அடிக்கடி அவதிபட்டாள். உடனிருந்து எல்லா உதவியும் செய்தாலும் பேசமாட்டான் அமுதன்.

அவனின் மௌனம் வதைத்தாலும் மிருதி எதுவும் பேசமாட்டாள்.

ஒரு வழியாய் தீரன் மிருதி இருவருக்கும் விவாகரத்தும் கிடைத்தது.

திஷாவை தூக்கி கொண்டு வந்த தீரன், "நீ கேட்ட மாதிரி விவாகரத்து கிடைச்சிருச்சு இப்போ சந்தோஷமா? " என்றான் வெற்று சிரிப்பொன்றை உதிர்த்து.

விழிகளுக்கே எட்டாத சிரிப்பை இதழ்களில் பூசிக்கொண்டு "ரொம்ப சந்தோஷம். உங்ககிட்ட இருந்து எப்போ விடுதலை கிடைக்கும்னு இருந்தேன். கிடைச்சிருச்சு வெளியேறினாள் மிருதி.

"அம்மா" என்ற குரலில் மரமாய் நிற்க, மனம் துடிக்க திரும்பினாள்.

"அம்மா" அவளின் அருகில் நின்றிருந்தாள் திஷா.

"திஷா" என்று அவளை ஆசையாய் தூக்கி முகம் முழுவதும் முத்த மழையால் நனைத்தாள் மிருதி.

"நல்லா இருக்கியாடா?" என்றாள் கண்ணீரோடு.

"நல்லா இருக்கேன்" என்றாள் திஷா.

"அம்மா இனி நான் உன் பொண்ணு இல்லையா?" என்றது குழந்தை பாவமாய்.

"இல்லடா தங்கம். எப்பவுமே நீ என் பொண்ணு தான்." என்று அணைத்துக்கொண்டாள் மிருதி.

"என்கிட்ட எப்பவும் போல போன்ல பேசுவீயாம்மா?" என்றாள் திஷா.

"ஆமாடா தங்கம். அம்மா இருக்க வரைக்கும் எப்பவும் போல உன்கூட பேசிட்டே இருப்பேன். நீ சமத்தா இருக்கணும்." என்று திஷாவின் நெற்றியில் மூட்டினாள்.

இவர்களின் தழுவலை பார்த்து கொண்டிருந்த தீரனின் விழிகளிலும் கண்ணீர் துளிர்க்க மறைத்தபடி சுண்டி விட்டான்.

"திஷா போலாம்டா. அப்பாக்கு டைம் ஆகுது" என்றான் சற்று தூரத்தில் நின்று.

அவனின் குரலில் தன்னை இழந்தாலும் குழந்தையிடம் கூறிக்கொண்டு கிளம்பினாள் மிருதி.

அவளின் நடையில் இருந்த சோர்வை கண்டவன் வெளியில் நின்ற அமுதனிடம் குழந்தையை கொடுத்தனுப்பிவிட்டு அவளறியாமல் அவளை தொடர்ந்தான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 34

அவளறியாமல் சென்ற தீரன் அவளை பற்றி நான்கு உணர்ந்து கொண்டான்.

"நான் நினைச்சது சரியா போச்சு. மிரு நீ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு. உனக்கு நான் டைவோர்ஸ் கொடுத்தது ஒரு வகைல சரி தான்." என்று தனக்குள் பேசிக்கொண்டவன் அங்கிருந்து அவள் காணும் முன் வெளியேறினான்.

*******

"திஷா செல்லம். நீங்க நல்ல பொண்ணு தான?" என்று கெஞ்சி கொண்டிருந்தான் தீரன்.

"அம்மா வேணும்" என்று அழும் குழந்தையிடம் அவனின் பேச்சு எதுவும் எடுபடாமல் போனது.

"பட்டு இருங்க. நான் அம்மாவுக்கு போன் பண்ணி தரேன். நீங்க பேசுங்க" என்றான் தீரன்.

"ஹிம்" என்று தலையாட்டியது குழந்தை.

அவனிடம் இருந்த குழந்தையை வாங்கிய தீரனின் அன்னை, "மணி என்ன? இந்நேரத்துக்கு போன் பண்ணுவியா?" என்று முறைத்துவிட்டு குழந்தையை சமாதானபடுத்த முயன்றார்.

மூன்று வருடங்களாக தன்னிடம் பேசாமல் இருந்த அன்னை இன்று பேசியதை கண்டு உள்ளம் துள்ளி குதிக்க, பாட்டியையும் பேத்தியையும் மகிழ்ச்சியாய் பார்த்து கொண்டிருந்தான்.

தன் மகளை கூட்டி வந்த இரண்டாம் நாள் வீட்டின் முன் வந்து நின்ற அன்னையை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் தவித்த நிலையை இன்று நினைவு கூர்ந்தான்.

********

வாசலில் வந்து நின்ற அன்னையை அதிர்ச்சியாய் பார்த்தான் தீரன்.

அவன் எதுவும் பேசாமல் இருக்க, அதை பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் அவர் நேராக உள்ளே வந்தார்.

"நான் யாருக்காகவும் வரலை. என் பேத்தி வந்திருக்கான்னு சொன்னாங்க. நான் இருக்கும் போது எதுக்கு என் பேத்தி யாரும் இல்லாம தனியா இருக்கணும்? அதான் வந்தேன். இங்க வரதுக்கோ தங்குறதுக்கோ யாரோட அனுமதியும் எனக்கு தேவையில்லை." என்று பேத்தியை கொஞ்சி கொண்டிருந்தார்.

ஆம். அன்று முதல் அழும் பேத்தியை கதை சொல்லி சோறுட்டுவதும் பல வண்ண குழந்தை பேச்சால் திசை திருப்புவதும் என திஷாவை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார் அவனின் அன்னை.

அன்னையின் ஞாபகம் வராமல் அந்த பிஞ்சு மலரை கவனித்து கொண்டாலும் எல்லா நேரங்களிலும் இல்லை என்றாலும் ஒரு சில நேரங்களில் அன்னையின் அரவணைப்புக்கு ஏங்க தான் செய்தது குழந்தை.

ஒரு நாள் இரவு பிள்ளையை தூங்க வைத்துவிட்டு அவனிடம் வந்த அன்னை.

"இன்னும் எத்தனை நாளைக்கு குழந்தை உங்க ரெண்டு பேர் சண்டைல கஷ்டபடணும்?" என்றார் அமைதியாய்.

எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த தீரனிடம், "உனக்கு மட்டும் அம்மா வேணும். உன் பொண்ணுக்கு அம்மா வேணாமா? உன் பொண்டாட்டிகூட சேர்ந்து வாழ இதுவரைக்கும் என்ன செஞ்சுருக்க? சரி போகட்டும். இது வரைக்கும் என்ன முயற்சி பண்ணன்னு எனக்கு தெரியாது. ஆனா இனி நீங்க சேர்ந்து வாழறது எப்படின்னு கொஞ்சம் யோசிச்சு பொண்டாட்டிகூட சேர்ந்து வாழ்ற வழிய பாரு" என்றார் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து.

அன்னையிடம் ஒரு வார்தைகூட பேச முடியாமல் சரி என்று தலையாட்டினாலும் அது நடக்காது என்பது அவன் அறிந்தது தான்.

"எனக்கு மட்டும் அவக்கூட சேர்ந்து வாழ ஆசை இல்லையா என்ன? இந்த மூணு வருஷம் என்னை தவிக்க விட்டது பத்தாதுன்னு இப்பவும் அடம் பிடிக்கிறா?" என்று தனக்குள் முணுமுணுத்தான்.

அவர் காதில் அவை விழுந்ததும் திரும்பி முறைத்து, "அவ ஒண்ணும் ஏதோ பொழுது போக்குக்காக உன்கூட சண்டை போட்டுட்டு போகலை. என்னது? உன்னை அவ கஷ்டபடுத்தினாளா? உன் கஷ்டத்துக்கு முழு காரணம் நீ மட்டும் தான். வீணா அவமேல பழிய போட்றதை விட்ரு. மத்த பொண்ணுங்க மாதிரி அப்பா வீட்டுக்கு போய் கண்ண கசக்கிட்டு நிக்கலை. அதே நேரம் தைரியம் இல்லாம சாகவும் இல்ல. தைரியமா வாழக்கையோட போராடி தனக்குன்னு ஒரு இடத்தை உருவாக்கியிருக்கா. ஒரு பொண்ணு புருஷன் துணையும் பெத்தவங்க துணையும் இல்லாம இந்த சமுதாயத்துல வாழ்றதுக்கு எவ்ளோ போராடனும்னு எனக்கு தெரியும். அவ்ளோ லேசுல அவ கோவம் போகாது. ஏன்னா உன்னாலயே உன் குழந்தையை இழந்து இன்னும் உடல் சரியில்லாம இருக்கா... இருந்தும் யார்க்கிட்டயும் கையேந்தாம தன்மானத்தோட தனிச்சு நிக்குறா என் மருமக. அவளுக்கு திமிர் கொஞ்சம் இருக்க தான் செய்யும். அவளோட கோபத்தை எப்படியாவது குறைக்க என்ன செய்யலாம் யோசி" என்று உள்ளே சென்றுவிட்டார்.

தான் பார்த்து கொண்டிருந்த கோப்பை மூடிவைத்துவிட்டு இரு கரங்களையும் தலைக்கு பின் வைத்து மெத்தையில் சாய்ந்தான்.

'எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லாமலா போச்சு. என்னால முடிஞ்ச வரைக்கும் நான் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டேன். ஆனா அவளுக்கு அப்பவும் மனம் இறங்கலையே? சரி உனக்கு என் மேல தான கோவம். என்னை தண்டிக்கிற. உன்னோட அன்பு எனக்கு தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட. ஆனா நம்ம பொண்ணு என்ன பண்ணா? அவ உன் அன்புக்காக ஒவ்வொரு நிமிஷமும் எவ்ளோ ஏங்குறா. அவளை போய் உன்னால எப்படி ஒதுக்க முடிஞ்சது? எதுவுமே தெரியாத பச்சை குழந்தையை தவிக்க விட்றதை என்னால பொருத்துக்க முடியாது. மிஸஸ்.மிருதி கொஞ்சம் பொருத்துக்கோ. இனி தான் நான் யாருனு பார்க்க போற' என்று தனக்குள் புன்னகைத்து தன் அம்மா கூறியதையே நினைத்து கொண்டிருந்தவனின் எண்ணங்களில் மேலும் ஆயிரம் சிந்தனைகள் சுழ்ன்றோடின.

பத்து நாள் கடந்திருக்க, காலையில் இருந்தே மிருதியின் மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாமல் துடித்து கொண்டிருந்தது.

"ஸ்ரீஷா! நம்ம எதிர் வீட்டுக்கு யாரோ புதுசா வராங்க போல? யாரு? உனக்கு தெரியுமா?" என்றாள் மிருதி சமையலறையில் இருந்து.

"தெரியலையே கா" என்றாள் ஸ்ரீஷா.

"எதிர் வீடு அமுவோட ஃப்ரெண்ட் வீடு தானே? உன்கிட்ட எதுவும் சொல்லலையா அவன்?" என்றாள் மீண்டும் மிருதி.

"ஆமாக்கா. ஆனா, அவர் எதுவும் சொல்லலையே?" என்று அமுதனிடம் போனில் விசாரித்த பின், "அக்கா! அமு ஃப்ரெண்ட் வீடு சும்மா பூட்டிதானே இருக்குனு வீட்டை வாடகைக்கு விட்ருக்காங்களாம். ஒரு வேலை அவங்க தான் வராங்களோ என்னவோ?" என்றாள் ஸ்ரீஷா. .

"ஓஹ்! அப்படியா சரி மா. எனக்கு டைம் ஆகுது" என்று உள்ளே ரெடி ஆக சென்றாள்.

வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும் உள்ளே இருந்து மிருதி எட்டி பார்க்க, சாப்பிட்டு கொண்டிருந்த ஸ்ரீஷா எழுந்து சென்றாள்.

"சொல்லுங்க" என்றாள் எதிரில் நின்ற கொரியர் மெனிடம்.

"மேடம்! மிஸ்டர்.தீரன் இருக்காரா? கூப்பிடுங்க சைன் போடணும்" என்று கையில் இருந்த பார்சலில் முகவரி சரி பார்த்தபடி கூற, தீரனின் பெயர் அடிபட்டதும் வேகமாய் வெளியே வந்தாள் மிருதி.

"ஆமா. அவர் எங்க மாமா தான். ஆனா அவர் இங்க இல்லை.." என்று ஸ்ரீஷா முடிக்கும் முன் எதிரில் இருந்து குரல் வந்தது.

"சார்! இங்க வாங்க. நான் தான் தீரன். அது 18, இது 18a" என்ற குரலில் எதிர்வீட்டை நோக்கினாள் ஸ்ரீஷா.

எல்லையில்லா மகிழ்வுடன், "மாமா! எப்போ வந்தீங்க? திஷா எங்க? என்ன நீங்க இங்க இருக்கீங்க?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போக, மெல்ல சிரித்து "ஒரு நிமிஷம் டா" என்று தனக்கு வந்த பார்சலை கையெழுத்திட்டு வாங்கியவன் திரும்பி, "மிட் நைட் ரெண்டு மணிக்குடா. நீ எப்டி இருக்க?" என்றான்.

"நல்லா இருக்கேன் மாமா. பாப்பா எங்க?" என்றாள் உற்சாகமாய்.

மறந்தும் விழிகளால் அருகில் நிற்பவளை தீண்டாமல் பேசியவனை காண மனதில் ஒரு வலி உண்டானது மிருதிக்கு. இருந்தும் மகளை காண ஏக்கம் ஊற்றெடுக்க அதை மேலும் வளர்க்கும் விதமாய் கேட்டது "அம்மா" என்ற குரல்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 35:

"அம்மா" என்ற குரலில் தான் உயிர் தந்த அழகு மலர் விழிகள் துருத்துருவென மின்ன வண்ண பட்டாம்பூச்சியாய் ஓடி வருவதை கண்டு உள்ளம் நெகிழ மடங்கி மண்டியிட்டு விழிகளில் நீர் பெருக கரம் விரித்து "திஷா குட்டி! " என்றாள்.

இந்த காட்சியை காண தான் மனம் இவ்வளவு நாள் ஏங்கியிருந்தவனுக்கு நெஞ்சம் நிறைந்திட்டாலும் ஒருநொடி கல்லானவன். தன்னை தாண்டி செல்லும் மகளை "திஷா செல்லம்" என்றான்.

ஓடிக்கொண்டிருந்த குழந்தை ஒரு நொடி திரும்பி அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்துவிட்டு தீரனின் விரிந்த கரங்களுக்குள் அடைகலமானது.

"செல்லக்குட்டி எந்திரிச்சிட்டீங்களா என்று அணைத்து கொண்டவன் நிஷாவின் கன்னத்தில் முத்தமிட்டு சிறுகுரலில், "அப்பா சொன்னது ஞாபகம் இருக்கில்லடா செல்லாம். ப்ளீஸ் அதுமாதிரி செய்டா குட்டிமா" என்றான் யாருக்கும் கேட்காவண்ணம்.

தந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்து சிரித்த குழந்தை தலையாட்டியது.

குழந்தை தன்னிடம் வரவில்லை என்பதை உணர்ந்தவள் இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே வேகமாய் சென்றுவிட்டாள்.

இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீஷா என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாலும் பின், "திஷாகுட்டி! எப்படி இருக்கீங்க?" என்று குழந்தையை தூக்கவர, குழந்தையை தராமல் பின்னுக்கு இழுத்த தீரன் மிருதி தங்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்று அறிந்து, "இங்க பாருடா. நீ எப்போ வேணா திஷாகுட்டியை தூக்கலாம் கொஞ்சலாம்.. ஆனா உன்னை தவிர வேற யாரும் தூக்கக்கூடாது. உனக்கு பாப்பாகூட விளையாடனும்னா நம்ம வீட்டுக்கு வந்து நாள் முழுக்க விளையாடு. எந்த காரணத்துக்காகவும் என் பொண்ணை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போகக்கூடாது." என்று அழுத்தி மிரட்டும் குரலில் கூறினான்.

முதலில் சற்று தடுமாறினாலும் சரி என்று தலையசைத்தால் ஸ்ரீஷா.

இதனை பார்த்துக்கொண்டிருந்த மிருதிக்கு நெஞ்சம் கனத்தது.

'நீதானே அவங்க வேண்டாம்னு ஒதுக்கி வச்ச? இப்போ அழுதுபெண்ணா பிரயோஜனம். நீ பார்க்கிற தூரத்துளையாவது ரெண்டு பேரும் இருக்காங்களே என்று ஆறுதல் படுத்திக்கொண்டு சமயலறை ஜன்னலில் இருந்து நகர்ந்துவிட, அதனை கவனித்த தீரன்.

'நல்லா அழுடி பொண்டாட்டி. நீயா எடுத்த முடிவு தான். உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என்னையும் என் பொண்ணையும் வேணாம்னு சொல்வ? அதுக்காக தான் வந்துருக்கேன். இவ்வளவு நாள் நான் செஞ்ச தப்புக்கு நீ என்னை வெறுகிறேன்னு உன்கிட்ட இருந்து ஒதுங்கி இருந்தேன். ஆனா, நீ உன் உயிரைவிட என்னை அதிகமா நேசிக்கிறேன்னு தெரிஞ்ச பிறகு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். உன்கிட்ட இருந்து விலகியே உன்னை நெருங்க போறேன். இப்போ நீ செஞ்சிருக்க வேலைக்கு உன் ஒவ்வொரு அணுவிலையும் நான் தானே இருக்கேன். அதான் அணுஅணுவா உன்னை கொல்ல போறேன். இனி தான் உனக்காக உன் புருஷன் என்ன பண்ண போறேன்னு பார்க்க போற. இனி தான் உன்னை விரும்புற தீரன் யார்னு பார்க்க போறடி என் பொண்டாட்டி' என்று தனக்குள் கறுவி கொண்ட8ருந்திருந்தான்.

"மாமா" என்ற குரலில் களைந்தவன்.

"வா ஸ்ரீஷா உள்ள போகலாம்" என்று உள்ளே நடந்தான்.

"மாமா நீங்க வரபோறதா அமுதன் என்கிட்ட சொல்லவே இல்லையே" என்று சோபாவில் அமர்ந்தாள்.

"சொன்னா நீ தான் உடனே உங்கக்காக்கு சொல்லிருவியே? அதான் சொல்ல வேணாம்னு நான் தான் சொன்னேன்" என்று அவளுக்கு பழச்சாறு ஊற்றி கொடுத்தான்.

தீரனை பார்த்து குறும்பாக சிரித்தவள்.

" எனக்கு தெரிஞ்சுருச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல எங்க அக்காவும் குடும்பதோட சந்தோஷமா இருக்க போறா" என்று சிரித்தாள்.

தலையை சொறிந்தவன், "அப்டி உங்க அக்கா சந்தோஷமா இருக்கணும்னு நீ நினைச்சா என்ன நடந்தாலும் வேடிக்கை மட்டும் தான் பார்க்கணும். உங்க அக்கா அழறான்னு என்கிட்ட சண்டைக்கு வரக்கூடாது." என்றான் தீரன்.

"இவ்ளோ நாள் அழுதா மனசு தாங்கலை ஆனா இப்போ அழுத்தான்னாலும் மனசு கேக்காது தான் ஆனாலும் உங்ககிட்ட வந்து நிக்கமாட்டேன். சில குழந்தைகளுக்கு கூட்டட் சொல்லி கொடுத்தா தான் புரியும். உதவி வேணும்னா கேளுங்க மாமா. இந்த முறை நான் உங்க கட்சி." என்று சிரித்தாள்.

"நிச்சயமா கேட்பேன் டா. எனக்கு அமுதனையும் உன்னையும் விட்டா வேற யார் வருவா உதவி பண்ண?" என்று சிரித்தான்.

"சரி மாமா. நான் வரேன்." என்று எழுந்தாள் ஸ்ரீஷா.

"இருடா சாப்பிட்டு போகலாம்" என்றான் தீரன்.

" அங்க என் அக்கா கண்ணகசக்கிட்டு உக்கார்ந்திருப்பா. நான் போய் சமாதனப்படுத்தனும். இன்னொரு நாள் சாப்பிடறேன் மாமா" என்று நடந்தாள்.

"அதுவும் சரி தான். இனி நீ அடிக்கடி உங்க அக்காவை சமாதனப்படுதனும்" என்றான் மெல்லிய புன்னகையோடு.

"எல்லாம் சரி தான். இதெல்லாம் சீக்கிரம் சரி பண்ணிட்டு எனக்கு ஒரு ஹீரோவை பெத்துக்கொடுங்க ரெண்டு பேரும். இந்த அமுதன் பய வேற நான் சொல்றதை கேட்கவே மாட்றான். அவனை டீல்ல விட்டுட்டு உங்க பையனையாவது கட்டிக்கிறேன்." என்று கண்ணடித்து சிரித்தாள்.

"உன்னை..." என்று துரத்துவதற்குள் வாசலை தாண்டியிருந்தாள் ஸ்ரீஷா.

'வாலு' என்று நகைத்துக்கொண்டே உள்ளே சென்றான் தீரன்.

*******

முந்தானையில் முகத்தைதுடைத்து கொண்டிருந்த மிருதியிடம் வந்தாள் ஸ்ரீஷா.

"அக்கா இப்போ எதுக்கு அழற..?" என்று மிருதியின் அருகில் அமர...

"உங்க மாமாவையும் பாப்பாவையும் பார்த்துட்டு என்னை விட்டுட்டு போயிடல்ல என்கிட்ட பேசாதே. " என்று முகத்தை திருப்பினாள்.

" எங்க இப்படி என் முகத்தை கொஞ்சம் பார்த்து சொல்லு கா. நான் உன்கூடயே வந்திருந்தாலும் என்னை அங்க போய் பார்த்துட்டு வர சொல்லிருப்பிங்க. அதான் நானே போய் பார்த்துட்டு வந்தேன்." என்றாள் ஸ்ரீஷா.

"நல்ல சமாளிடி." என்று மிருதி முறைக்க.

"நம்பலைன்னா போங்க" என்று எழுந்து உள்ளே நடக்க, "என்னவாம்?" என்றாள் மிருதி.

"என்னதுக்கா என்னவாம்?" என்றாள் மிருதி புரியாதது போல் வேண்டுமென்றே.

"உங்க மாமாக்கு என்னவாம்? எதுக்கு இங்க வந்துருக்கார்?" என்றாள் எங்கோ பார்த்தபடி.

உள்ளுக்குள் சிரித்தாலும், " அது எனக்கு தெரியலைக்கா. நான் போய் பாப்பாகூட விளையாடிட்டு வந்தேன். அவ்ளோ தான்" என்று வேகமாய் உள்ளே சென்றாள் ஸ்ரீஷா.

**********
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 36

மனம் என்னவோ குழம்பிய குட்டையாய் தெளிவில்லாமல் அன்று பொழுதே செல்லாமல் யோசித்து கொண்டே இருந்தாள் மிருதி.

'என் பொண்ணை பிரிஞ்சது தப்போ?' என்று நினைக்க.

'ஏன் அதுவே உனக்கு இப்போ தான் புரியதா?' என்று கேலி செய்தது மனம்.

'சும்மா அவளை குழப்பாதே! நீ செஞ்சது தப்பு இல்ல. உனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால தான் உன் பொண்ணை அங்க அனுப்பிருக்க. சோ, பீல் பண்ணாத' என்றது இன்னொன்று.

'உண்மையா சொல்லு.. உன் பொண்ணை பிரஞ்சது மட்டும் தான் உனக்கு இப்போ வருத்தமா இருக்கா? இல்ல... உன் புருஷனையும் பிரிஞ்சதும் தானே?' என்று மீண்டும் ஒரு மனம் வம்பிழுத்தது.

'அதெல்லாம் எதுவுமில்லை. எதையாவது உளராதே!' என்று முறைத்தது.

'நீ என்னை சும்மா அதட்டி அமைதியாக செய்யலாம். ஆனா உண்மைன்னு ஒன்னு இருக்கத்தானே செய்யுது. இன்னைக்கு உன் புருஷன் உன்னை ஏறெடுத்தும் பார்க்கலைன்னும் உன் பொண்ணை தூக்க முடியலைன்னும் எவ்வளவு வருத்தம் இருந்தது. இது தான் நிஜம். சொன்னா என்னை முட்டாள்னு சொல்விங்க. எப்படியோ போங்க' என்று அமைதியானது.

"அய்யோ!" என்று இரு கரங்களாலும் தன் தலையை பிடித்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து நிமிர்ந்தவள் ஒரு நொடி லேசாக அதிர்ந்தாள்.

ஒரு டேபிளில் தீரனும் திஷாவும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

ஓடி சென்று குழந்தையை தூக்க சொல்லி மனம் தவித்தது.

மிகவும் சிரமப்பட்டு அடக்கியவள். விழிகளை மட்டும் அவர்களிடம் இருந்து விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"அப்பா! எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்பா." என்றது குழந்தை.

மிருதி தன்னை பார்த்து கொண்டிருப்பாள் என்று அறிந்தும் ஒர விழியால் அவளை நோக்கியவன்.

"பாப்பா! உங்க அம்மா அங்க இருந்து உன்னை தான் பார்த்துட்டு இருக்காங்க. இப்போ உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்தேன் நான் காலி" என்றான் மெதுவாய்.

"அப்பா! அம்மா நம்மகிட்ட வந்து பேசணும்ல அப்போ ஐஸ்க்ரீம் வாங்கி தாங்க" என்ற குழந்தையை வாய் பிளந்து பார்த்தான்.

தலையில் லேசாக அடித்து கொண்டவன்.

"என் பொண்ணு எனக்கு ஐடியா கொடுக்குற நிலையாகிருச்சே?" என்று புலம்ப.

"நல்ல ஐடியா யார் கொடுத்தா என்னப்பா?" என்று சிரித்தாள் திஷா.

"உங்க அம்மா மாதிரியே அடமும் வாயும் ஜாஸ்தியாகிடுச்சு உனக்கு" விழிகளை உருட்ட.

"சரி பா. அம்மாவை பார்க்கும்போது கண்டிப்பா மறக்காம இதை சொல்லிடறேன்" என்று நமுட்டு சிரிப்பு சிரித்தது.

"அடபாவமே! முதலுகே மோசமாகிடும். வேண்டாம்டா தங்கம். நீ குட் கேர்ள் தானே?" என்றான் சற்று கெஞ்சலாய்.

"சரி சரி ப்பா. ஐஸ்க்ரீம் சொல்லுங்க முதல்ல" என்றது.

"ரெண்டு ஐஸ்க்ரீம் கொண்டு வாங்க" என்றான் தீரன்.

இதை கேட்ட மிருதி நிமிர்ந்து அதிர்ச்சியாய் பார்த்தாள்.

"என்னது ஐஸ்க்ரீமா? திஷாக்கு ஒத்துக்காதே... யாராகேட்டு ஐஸ்க்ரீம் வாங்கித்தறார்." கோபம் வர அங்கே வேலை செய்யும் பெண்ணை அழைத்தாள்.

"அக்கா! இங்க வாங்க" என்ற மிருதியிடம் வந்து நின்றாள் பணிப்பெண்.

"என்னம்மா?" என்றார்.

சில நொடிகள் ஏதோ கூறியவுடன் அந்த பெண் இவர்களிடம் வந்தார்.

இவையனைத்தையும் அவள் அறியாமல் கவனித்து கொண்டிருந்தவன் தன் மொபைலில் எதையோ பார்த்து கொண்டிருக்க, "சார்!" என்ற பெண்ணிடம்.

" சொல்லுங்க. ஐஸ்க்ரீம் கேட்ருந்தேன் இன்னும் வரலையே?" என்றான் கேள்வியாய்.

" சார்! ஐஸ்க்ரீம் ஸ்டாக் இல்ல. வேற ஏதாவது வேணுமா?" என்று கேட்க, எதிர் டேபிளில் இருவர் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்தான்.

"சார்! அதான் லாஸ்ட் இருந்தது" என்றார் அந்த பெண்.

" ஓ! அப்படின்னா சரி நீங்க போங்க" என்றான்.

அவர் சென்றதும் " செல்லம்! இங்க ஐஸ்க்ரீம் இல்லையாம். சோ, நாம வெளில போய் சாப்பிடுவோமா? உனக்கு ரெண்டு வாங்கி தரேன்" என்று சிரித்தான் தன் எரிமலை வெடிக்க போவதை உணர்ந்து.

' என்னது நான் இங்கயே சாப்பிட கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன். இவரு வெளில போய் வாங்கி தர போறாரா? இவரை' என்று வேகமாக எழுந்தாள்.

அவள் அருகில் வருவது தெரிந்தும் தன் மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டிருக்க, இவர்களிடம் வந்து நின்றவள், "ஹுஹும்..." என்று செருமினாள்.

எதுவும் கேட்காதது போல் இருவரும் அமர்ந்திருக்க, "ஹலோ!" என்றாள் சற்று சத்தமாய்.

மெதுவாய் தலைநிமிர்த்தி, "யெஸ்!" என்றான் தீரன்.

"குழந்தைக்கு ஐஸ்க்ரீம் தரக்கூடாது" என்றாள் அமைதியாய்.

'அப்படி வா செல்லம்' என்று உள்ளுக்குள் குதுகளித்தாலும்.

"ஒஹ் உங்க குழந்தைக்கு தரக்கூடாதுன்றது எதுக்கு என்கிட்ட சொல்றிங்க? உங்க ஹஸ்பண்ட்கிட்ட போய் சொல்லுங்க. உங்க ஷாப்ல இல்ல இல்ல. என் பொண்ணுக்கு எங்க வாங்கி தரனும் இல்ல வாங்கி தரக்கூடாதுன்னு நான் முடிவு செய்துக்குறேன்." என்று காட்டமாய் முடித்தான்.

"அவளுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டா உடனே ரொம்ப சளி பிடிக்கும். அதனால அவளுக்கு ஐஸ்க்ரீம் தராதிங்க" என்றாள் மீண்டும் விடாமல்.

"எங்க அப்பாவை எதுக்கு மிரட்டுறிங்க? எங்கம்மாகே என் மேல அக்கறை இல்லை.... என்னை பிடிக்காம பார்த்துக்க முடியாதுன்னு விட்டுட்டு போய்ட்டாங்க.... எங்கம்மா மாதிரி அவர் விட்டுட்டும் போகலை. என்னை விடுதில சேர்க்கல. எங்கப்பா தான் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறார். அவருக்கு தெரியும் எது வாங்கி தரணும்னு. நீங்க போங்க. அப்பா வங்கப்பா." என்று நிறுத்தி நிதானமாக மழலை மொழியில் பேசிவிட்டு சேரில் இருந்து இறங்கி தீரனின் கரத்தை பிடித்து இழுத்தது.

அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்பட தீரன் எதுவும் பேசாமல் எழுந்து நடந்தான்.

"அப்பா! அம்மா நம்மலையே பார்க்கிறாங்களா?" என்றாள் திஷா. தீரனும் திரும்பி பார்க்க, அங்கே விழிகளில் நீரோடு நின்றிருந்தாள் மிருதி.

"பாவம் பாப்பா அம்மா. அம்மாகிட்ட அப்படியா பேசுவாங்க?" என்றான் தீரன்.

வெளியே வந்து நின்ற குழந்தை. "இல்ல. எனக்கு கூட அம்மாவை கட்டி பிடிச்சுக்கணும்னு ஆசையா இருக்கு போகட்டாப்பா..." என்றது கோபமாய்.

எதுவும் பேசாமல் திஷாவை பார்க்க, "அம்மா நம்ம கூட எப்பவுமே வேணும்பா. நான் என்ன பண்ணேன் எதுக்கு விட்டுட்டு போனாங்க" என்று அழுதாள் பெரிய மனுஷியின் தோரணையில்.

மகளை அணைத்துக்கொண்டவன் தனக்கு அன்னை போல் நடந்து கொள்ளும் மகளை பார்த்து விழிநீர் சுரந்தது.

"சரி டா. வா உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தறேன்" என்றான் தீரன்.

" எனக்கு வேணாம்பா. அம்மா சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. வாங்க வீட்டுக்கு போகலாம்" என்று நடந்தாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 37

வானம் ஏனோ போர்வை போர்த்தி கொண்டு இருளெனும் பாயை விரித்திட, தன் கைகடிகாரத்தை பார்த்த தீரன், "அடடா! மணி பத்தாகிடுச்சே.. பாப்பா சாப்பிட்டுருப்பாளா?" என்று யோசித்து கொண்டே அமுதனுக்கு போன் செய்தான்.

"அமுதன்! சாரி மீட்டிங் முடிய லேட் ஆகிடுச்சு. பாப்பா என்ன பண்றா? என்னை கேட்டு அழுதாளா? சாப்பிட்டாளா?" என்று படப்படப்பாய் கேள்விகளை அடுக்கி கொண்டே போக, எதிர்முனையில் கலகலவென்று சிரித்தான் அமுதன்.

"பொறுமை பொறுமை தீரா. ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறிங்க? உங்க பொண்ணு என் டார்லிங். அதை மறந்துறாதிங்க. உங்களை விட அவளை எப்படி ஹாண்டல் பண்றதுன்னு எனக்கு நல்லா தெரியும்." என்று புன்னகைத்தான்.

"அதுவும் கரெக்ட் தான்." தீரனும் சிரிக்க.

"திஷா இன்னைக்கு முழுக்க ரொம்ப நல்லா விளையாடினா, சாப்பிட்டா இப்போ தான் தூங்க வச்சேன். " என்றான்.

"சாரி அமுதா. உங்களுக்கு வேற எங்களால சிரமம்" என்றான் தீரன்.

"அட நீங்க வேற.. என் டார்லிங்கை பார்த்துகிறது எனக்கு சிரமமா? அவ அவங்க அம்மாகூட இருந்ததைவிட என்கூட தான் அதிகமா இருந்திருக்கா. " என்றான் அமுதன்.

"நான் இனி தான் கிளம்பனும். இன்னும் அரைமணி நேரம் ஆகும். " என்றான் தீரன்.

"சரி தீரா. நீங்க சாப்பிட்டிங்களா?" என்றான் சந்தேகமாய்.

"இல்ல இனி தான்" என்றான்.

"சரி. பார்த்து பத்திரம் வாங்க" என்று வைத்தான் அமுதன்.

கடையை பூட்டி கொண்டு இருசக்கர வண்டியில் வந்து கொண்டிருக்க, ஏற்கனவே இருளில் இருந்த வானம் பொத்துக்கொண்டு மழையை பொழிந்தது.

"அடடா! இன்னைக்குன்னு பார்த்து காரை நிறுத்திட்டு பைக்ல வந்தேன். இன்னைக்கு பார்த்து இந்த மழை பெய்யுதே? " என்று புலம்பியபடி மிருதியின் ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான்.

வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தவள் தீரன் தொப்பலாய் நனைந்து வருவதை பார்த்து மனம் பதற டவலுடன் ஓடி வந்தாள்.

அவளின் அக்கரையில் மனம் குளிர்ந்தாலும் அவளை சட்டை செய்யாது அவளை கடந்து சென்று டேபிளில் அமர்ந்தபடி, "ரெண்டு தோசை" என்றான் அருகிலிருந்த பணி பெண்ணிடம்.

"சரி சார்" என்று அந்த பெண் நகர்ந்துவிட.

'என்ன இவரு இப்படி நனைஞ்சுட்டு வந்துருக்கார்?' என்று தனக்குள் கேள்வி கேட்டபடி மீண்டும் அவனருகில் சென்று, "ஏன் இப்படி மழைல நனைஞ்சுருக்கிங்க? எங்கயாவது ஒரு ஓரமா நின்னு வந்துருக்கலாம் இல்ல. சளி பிடிக்க போகுது இந்தாங்க தொடைச்சுக்கோங்க" என்று டவலை நீட்டினாள்.

அவளை நிமிர்ந்து பாரத்து ஒரு அனல்பார்வை வீசியவன்.

"எக்ஸ்கியூஸ் மீ மேடம். யார் நீங்க? உங்க ஹோட்டலுக்கு சாப்பிட வந்துருக்க கஸ்டமர் நான். நான் மழைல நனைஞ்சு வந்தா உங்களுக்கு என்ன? இல்ல உங்க ஹோட்டலுக்கு யார் நனைஞ்சு வந்தாலும் இப்படி துடைக்க டவல் தருவிங்களா?" என்றான் மிக நக்கலாக.

அவனின் இந்த பதிலை எதிர்பாராதவள் ஒரு நொடி ஆடி போனாலும் எதுவும் பேசாமல் அவ்விடம் விட்டு நகர்ந்துவிட, தோசையை வேகமாக சாப்பிட்டு வெளியில் வந்தான்.

மழை விடாமல் பெய்து கொண்டிருக்க, 'பாப்பா திடீர்னு எழுந்தா கண்டிப்பா என்னை கேட்டு ரகளை பண்ணிருவா. ஏற்கனவே முழுசா நனைஞ்சுட்டோம். அதனால அப்படியே கிளம்பிடுவோம்.' என்று மீண்டும் அமுதனின் வீட்டை நோக்கி புறப்பட்டான்.

"என்ன இவரு என் மேல இருக்க கோவத்துல இப்படி நனைஞ்சுட்டே கிளம்பிட்டாரே?" என்று மீண்டும் புலம்பினாள் மிருதி.

'கடவுளே! இவங்க ரெண்டு பேரும் தூர இருக்கணும்னு தானே டைவஸ் வாங்கினேன். இப்போ எதிர்வீட்டிலேயே வந்து என் கண்ணு முன்னாடியே இப்படி கஷ்டப்பட்டா என்னால தாங்கமுடியலையே? நான் இப்போ என்ன பண்றது? இன்னும் கொஞ்ச நாள்ல கொஞ்சம் கொஞ்சமா தெரியவருமே.. என்ன செய்றது? எனக்கு எதுவுமே புரியலையே' என்று தலையில் கைகளை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் மிருதி.

"என்ன தீரா? இப்படியா நனைஞ்சுட்டு வருவாங்க?" என்று திட்டிக்கொண்டே டவலை எடுத்துக்கொடுத்தான் அமுதன்.

"பரவால்ல அமுதா. பாப்பா எங்க? கொஞ்சம் தூக்கிட்டு வந்து கார்ல படுக்க வைக்கிறீங்களா?" என்றான் தீரன்.

"எதுக்கு? மணி பதினொன்னு இதுக்கு மேல நீங்க போக வேண்டாம். நைட் இங்கயே ஸ்டே பண்ணிடுங்க தீரா" என்றான் அமுதன்.

"இருக்கட்டும் தீரா. நான் கிளம்புறேன். நாளைக்கு காலைலயே ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. இங்க தங்கிட்டா லேட் ஆகிடும்." என்று புன்னகைத்தான் தீரன்.

"அப்போ இப்படி செய்யலாம். திஷா இங்கயே இருக்கட்டும். நீங்க நாளைக்கு வேலை முடிஞ்ச பிறகு வந்து கூட்டிட்டு போங்க" என்றான் அமுதன்.

"இல்ல... அவ திடீர்னு எழுந்து அழுதா..." என்று தயங்கினான்.

"கம் ஆன் தீரன். அவ என்கூட இருப்பா. நோ ப்ராப்லம்." என்று கண்சிமிட்டினான்.

" சரி அமுதா. அப்போ நான் கிளம்புறேன். பாப்பா அழுதா எனக்கு கால் பண்ணுங்க. " என்று வீட்டிற்கு தன் காரில் கிளம்பினான்.

*****

விடிந்து இவ்வளவு நேரம் கடந்தும் தீரன் வெளியே வரவில்லை என்று நொடிக்கொரு முறை எதிர்வீட்டை பார்த்து கொண்டிருந்தாள் மிருதி.

அவளையும் எதிர்வீட்டையும் மாறி மாறி பார்த்த ஸ்ரீஷா.
'என்ன இன்னைக்கு மழை வரப்போகுதா? பூனை இங்கயும் அங்கேயும் நடக்கிற மாதிரி இருக்கே?' என்று தனக்குள் முணுமுணுத்தவள்.

"என்ன ஆச்சுக்கா? எதுக்கு அங்கயே பார்த்துட்டு இருக்கிங்க. மாமா எப்போ வருவார் நீங்க சைட் அடிக்கலாம்னு இருக்கீங்களா?" என்று குறும்புடன் கண்சிமிட்டினாள் ஸ்ரீஷா.

வெடுக்கென்று அவளை முறைத்த மிருதி "உனக்கு வாய் ரொம்ப அதிகமாகிடுச்சு. உதை வாங்க போற?" என்றாள்.

"என்னை அடிக்கிறது இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலை. எதுக்கு மாமா வீட்டையே டென்ஷனா பார்த்துட்டு இருக்கீங்க?" என்றாள் சீரியஸாக.

"ஹ்ம்ம் உங்க மாமா புதையல் எடுத்துட்டு வரராறான்னு பார்த்துட்டு இருக்கேன்." என்றாள் லேசாக சிரித்து.

"அக்கா. இப்போ நீங்க சொல்லல. எனக்கு தலை வெடிச்சிரும்." என்று சிணுங்கினாள்.

"அதில்ல ஸ்ரீ... நேத்து நைட் உங்க அவ்ளோ மழைல தொப்பலா நனைஞ்சிட்டு சாப்பிட வந்தார். திரும்பி நனைஞ்சிட்டே போய்ட்டார். எப்பவும் காலைல சீக்கிரம் எழுந்து ஜாகிங் போவார். இன்னைக்கு விடிந்து இவ்ளோ நேரம் ஆகுது. ஆனா இன்னும் வெளில வரலை. அதான் உடம்பெதும் சரியில்லையா தெரியலை. பாப்பாவையும் காணோம்." என்றாள் மிருதி.

திஷா அமுதனிடம் இருப்பது தெரிந்ததால் சொல்லலாம் என்று வாயெடுத்தவள்.

'ஹுஹும்... நான் சொல்ல மாட்டேன். மனசுல இவ்ளோ அன்பு வச்சுக்கிட்டு. சும்மா ஒன்னுத்துக்கும் உதவாத கோவதை தூக்கிட்டு சுத்துறீங்கள்ல? நீங்களே போய் பாருங்க' என்று தனக்குள் பேசி கொண்டிருந்தவளை மிருதியின் குரல் கலைத்தது.

"ஸ்ரீ! எனக்காக ஒரு ஹெல்ப். ப்ளீஸ் கொஞ்சம் போய் பார்த்துட்டு வரியா?" என்றதும் உஷாரான ஸ்ரீஷா.

"இல்லக்கா... எனக்கு ஹாஸ்ப்பிட்டல்ல மீட்டிங் இருக்கு இன்னும் கால் மணி நேரத்துல அங்க இருக்கணும். நேரமாச்சு வரேன்கா." நிற்காமல் வெளியே பறந்தாள்.

"அயோ! இந்த பொண்ணு ஓடிட்டாளே. இப்போ என்ன பண்றது?" என்று சோபாவில் குழப்பத்துடன் அமர்ந்தாள்.

மேலும் இருபது நிமிடங்கள் கடந்திருக்கும், தீரன் வெளியே வராததால் பதட்டமடைந்த மிருதி, "பேசாம நாமளே போய் பார்க்கலாமா? இந்த மழைல யாரு போய் நனைய சொன்னா? கடவுளே தூரமா இருந்தாக்கூட எதுவுமே தெரியாது. ஆனா இப்படி எதிர்வீட்ல வந்து அப்பாவும் பொண்ணும் என்னை படுத்துறாங்க." என்று அழாத குறையாக புலம்பினாள்.

*******
 
Top Bottom