Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நரகமாகும் காதல் கணங்கள் - Tamil Novel

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அடேங்கப்பா இவ்வளவு கதைகளா!!!

*சகாப்தம் தளத்தில் நடைபெறும் வண்ணங்கள் போட்டியில் களமிறங்கும் கதைகளும் எழுத்தாளர்களும்*

முதலில் வண்ணங்கள் போட்டியை சிறப்புற நடத்திக் கொண்டிருக்கும் நித்யா கார்த்திகன் அக்காவிற்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்💋

நீலம், சிவப்பு, பச்சை, சாம்பல், கருப்பு என ஐந்து வண்ணங்களாக கதை பிரிவுகள்.

மொத்தம் 173 கதைகள்.

நூறு நாட்கள்.

யாரும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது.

தப்புச்சிக்கு தப்புச்சிக்கு பிக்பாஸ். ச்சே! சகாப்தம்.

வாங்க என்ன வண்ணம் என்ன பிரிவு என்று பார்க்கலாம்❣️

**********************

உங்களுக்கு காதல் / குடும்பம் / நகைச்சுவை கதைகள் பிடிக்குமா?

அப்படியென்றால் உங்களுக்கான வண்ணம் நீலம்.

இதோ நீல வண்ணத்தில் களம்காணும் கதைகள்...

1. நேசத்தின் சுவாசம் நீ - ஷர்மி ஜெனிட்

2. மாறினேன் பாவையாலே! - சாகித்யா வருண்

3. உயிரான உறவை தேடி - ரம்யா சந்திரன்

4. காதலும் கனலாய் சுடுவதேனோ - ராஜேஸ்வரி கருப்பையா

5. உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி - சத்ய சஞ்சீவி

6. மனமறிய மணந்த மாயவளே! - இதழிகா

7. கனவு கைசேரும் நாள் வருமோ! - ஆனந்த ஜோதி

8. வாழ்க்கையே அலை போலே - ஸ்ரீஜா வெங்கடேஷ்

9. காதலில் விதிகள் ஏதடி - மலர் பாலா

10. தர்காவில் ஒரு துர்கா - ரேவதி

11. என் தளிர்மலரே! - ஷாலினி தங்கப்பாண்டியன்

12. தகிக்கிறேன் சகியே உன்னை நீங்கிடுகையில்- ஆதி சக்தி

13. சொப்பனத்தில் வரும் சுந்தரனே! - நிலவின் தோழி கனி

14. உள்ளத்தால் நெருங்குகிறேன் - காஞ்சனா கண்ணன்.

15. தொடுவானம் - சாரா மோகன்

16. அடடா பிரம்மன் வள்ளலடி - இளந்தளிர் வெண்பா

17. சிங்கமுகனைக் காக்கும் வேல்விழி! - சௌந்தர்யா

18. நாயகனின் நாயகி - திவ்யஶ்ரீ

19. நிசப்தமே சப்தமாய் - அஸ்வதி செந்தில்

20. என்ன தவம் செய்தனை! - பாலா சுந்தர்

21. வெப்பமாய் நீ தட்பமாய் நான் - ஈஸ்வரி

22. இ(த)டம் மாறிய காதல் - Anush Na

23. உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் - விஸ்வதேவி

24. நாரிகை - கிருபா ஜேபி

25. என் மனதில் அம்பு விட்ட நிலா - தீபா செண்பகம்

26. எனைப் பிரிந்தாலும் உனைமறவேனே - Priyanka Raja

27. மூச்சுகாத்து -Thoshi Yamuna

28.விண்மீன் விதையில் ஓர்மழைப்பூ- திக்ஷிதா லட்சுமி

29. வரமாய் வந்த வசீகரனே! - மிலோனி

30. குளக்கரை குயில் இவள் - அம்மு இளையாள்

31. ஆலம் விழுதுகள் - லக்ஷ்மி ப்ரீதிவர்தன்
32. ஆஹா கல்யாணம்! - வெண்பா

33.நீ கவிதைகளா? கனவுகளா? கயல்விழியே! - ஜானு முருகன்

34. ஒற்றை நிலவின் மேல் -Aara dilfar

35. நெஞ்ச வானில் நிலவாய் நீ! - Fathima Hilma

36. மார்கழித் திங்கள்! - மாதவன் நாராயணன்

37. உதிரிப்பூக்கள் - மது அஞ்சலி

38. முகையாழி பெண்ணே! - Writer X

39. தேவதை நீ மெய்யா பொய்யா? - உதயா விவேக்

40. மாதினி - மது ரவி

41. குவியமென்பது பாவையானது - கண்ணம்மாrvrv

42. ஏக்கங்கள் தீர்த்தாயே - விஜி விக்னேஷ்

43. வால் மொளைச்ச வானரமோ?! - மதிதூரிகா

44. உன்னைத் தீண்டுவேன் உயிரே - Writer X

45. போதை தரும் பேரின்பம் நீயடி - வனி லாவண்யா

46. என் நெஞ்சில் தேன்மழை! - இனிதா மோகன்

47. சப்தமிடும் மௌனங்கள் - சசிகலா திருமால்

48. ராதை மனதில் - அனு ஜெய்

49. உயிரினை மனம் தேடுதே - மகாராஜ்

50. நான் என்பதே நீயல்லவா - Writer X

51. சந்திரநகையே! - ரஜனி

52. காதல் கடிதம் தீட்டவே! - சுவிட்ஷரா

53. மொட்டுக்கள்- ஷர்மிளா

54. பொன்வசந்தமே - ஆர்த்தி மனு

💙நீலம் - 54 கதைகள்💙

நீல வண்ண கதைகளுக்கான லிங்க்,

*******************

உங்களுக்கு திகில் / திரில்லர் / சாகசம் / அறிவியல் மற்றும் விஞ்ஞானம்/ அமானுஷ்யம் / மர்மம் / பேண்டஸி கதைகள் பிடிக்குமா?

அப்படியென்றால் உங்களுக்கான வண்ணம் கருப்பு.

இதோ கருப்பு வண்ணத்தில் களமிறங்கும் கதைகள்..

1. அர்பிதா - ஈர்மத்தின் எச்சங்கள்.

2. ஜானு முருகன் - ஆன்மாவின் ராகங்கள் உறைந்திடுமோ!

3. ரம்யா சந்திரன் - ஆர்கலி ஈன்ற அற்புதமே!

4. ஹரிணி - நவயுகம்

5. சத்ய சஞ்சீவி - இரவின் நிறம் நீலம்

6. செவ்வந்தி துரை - கார்கால களவு

7. ஸ்ரீஜா வெங்கடேஷ் - உன் மூச்சுக்காற்றாய்

8.ரம்யா அனாமிகா - மாயவனின் மயவாதி

9. அருணா கதிர் - காற்றாய் காத்திருந்தேன்.

10. ப்ரியா பின்டோ - விக்கிரமாதித்தனும் வான்பரியும்

11. பகை தீர்க்கவா - ஹனி கீதன்

12. மனோஹரி - சக்தி பாஸ்கரன்

13. பீனிக்ஸ் கிளியே - Nancy Mary

14. சின்னஞ்சிறு கதைகள் சொல்லி - கமலி ஐயப்பா

15. மாய நிலா- பிந்து சாரா

16. என்னில் அவன் - அன்னபூரணி தண்டபாணி

17. புலராதே பூங்காந்தளே - சுந்தரி செழிலி

18. மெல்விண் யாழி - சுபாஷினி

19. புவியே காட்சிப்பிழையாய் - பார்கவி முரளி

20. காத்திருப்பேன்..! உனையே எதிர்பார்த்திருந்தேன்..! - தமிழ் வெண்பா

21. மந்தகாச மந்தாரகையே - அனு சந்திரன்

22. ரகசிய ராத்திரி புத்தகமே! - ஆதிரை

23. மர்மச்சாவி - Lakshmi Preethivardhan

24. யார் மீது குற்றம்? - ரிஷி

25. செப்பனிடா சொப்பனமே! - Viba visha

26. ஏதிலியின் ஏவாள் - அர்ஜுன்

27.அகலில் அமிழ்ந்த ஆன்மா- பெத்தனசுதா

28. கடவுளைச் சந்திக்கும் நாள் - ராம் ஸ்ரீதர்

29. அருவிக்கரைக் கோயில் - சாய்ரேணு சங்கர்

30. நிறம் மாறும் நிஜம் - சாய்ரேணு சங்கர்

31. கூட்டத்தில் எது ஓநாய்? - ப்ரியமுடன் விஜய்

32. மாயாஜாலக்கதை - அப்புசிவா

33. இருள் சூழ் பொழுதுகள் - சோனியா கார்த்திகேயன்

34. மாயப்புதிர் - Merbee

35.ஒழுகும் நிலவு - மீனாட்சி அடைக்கப்பன்

36. அசமஞ்சன் - திக்ஷிதா லட்சுமி

37. உன்னில் என்னை கண்டுப்பிடி - வனி லாவண்யா

38. ரெட்டை சூரியன் ஒற்றை தாமரை - ஈஸ்வரி

39. கனவாய் நான் வருவேன் - Writer X

40. கட்டங்கன் கணக்கு - தீபா செண்பகம்

41. இருளுக்குள் நிலா- ரைட்டர் x

42. கிரைம் ஸ்பாட் - கார்த்திகா

43. கொல்வதெல்லாம் உண்மை- ஈரோடு கார்த்திக்

🖤கருப்பு - 43 கதைகள்🖤

கருப்பு வண்ண கதைகளுக்கான லிங்க்,

**********************

உங்களுக்கு கிராமம் / எளிய மக்களின் வாழ்வியல் சார்ந்த கதைகள் பிடிக்குமா?

அப்படியென்றால் உங்களுக்கான வண்ணம் பச்சை.

பச்சை வண்ணத்தில் களமிறங்கும் கதைகள் இதோ…

1. மண்வாசம் - பாக்ய லட்சுமி

2. பாதம் பார்த்து வேதம் சொல்ல வா! - சாய்லஷ்மி

3. சிந்தா- ஜீவநதியவள் - தீபா செண்பகம்

4. கௌரவபுரம் - சத்ய சஞ்சீவி

5. இடைவெளியிலில் இடறிடுமோ என் நேசம் - ஆதி சக்தி

6. தமிழுக்கு அமுதென்று பேர் - ஆதிரை

7. காந்தப்பார்வையால் கவர்ந்திழுக்கும் மின்னலவள் - ரம்யா சந்திரன்

8. மனமெங்கும் சாரல்மழை தூவினாய்! - தமிழ் வெண்பா

9. உயிரின் சுவாசம் நீயடி - கனிமொழி

10. பனியில் நனைந்த தாழம்பூ - சசிகலா எத்திராஜ்

11. தீச்சுடராய் எழுந்த பூவையோ.. - கௌதமி ராஜா

12. மாறிலி மானிடர்கள் - மின்மினி

13. தித்திப்பாய் ஓர் சாரல்!! - Writer X

14. விடியலை நோக்கி - நர்மதா செந்தில்குமார்

15. கடைசி ரயில் பெட்டி - அகிலாண்ட பாரதி

16. கை சேருமோ காணல் நீர் - சோனியா கார்த்திகேயன்

17. செந்நிற பூமியில் சிவந்தமலரே - தேவி கண்மணி

18. மருதாணி பூவே! - Writer X

19. வானவில் வண்ணங்கள் - சுஜாதா நடராஜன்

20. பட்டம்மா - ஷாருகன் மூ

21. கிராமத்து மண் வாசனை - சத்திய பானு

22. நீதியின் காவலர்கள் - கோவி சேகர்

💚பச்சை - 22 கதைகள்💚

பச்சை வண்ண கதைகளுக்கான லிங்க்,

*****************

வணக்கம் வாசக தோழமைகளே 🙏🙏🙏,
உங்களுக்கு சமூகம் /அரசியல் / வரலாற்று கதைகள் பிடிக்குமா?

அப்படியென்றால் உங்களுக்கான வண்ணம் சிவப்பு.

சிவப்பு வண்ணத்தில் களமிறங்கும் கதைகள் இதோ....

1. சதுரங்கம் - சுகீ

2. சதுரன் - சரண்யா வெங்கட்

3. மனிதமே மடியாதிரு - மகாசமுத்ரா

4. பாலைவன பைங்கிளியே - லராஸ்ரீ

5. ஒற்றை ரோஜா - சத்யா சஞ்சீவி

6. தேறல் சூழ் செண்பகப் பொழில் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

7. வான்சூழ் உலகு - எழில்மதி ஜிஎஸ்

8. எழுத்தாளினி நிசப்தா - நிலவின் தோழி கனி

9. மாண்புறு மங்கையே - சித்து

10. சின்ன சின்ன அன்பில் - இளந்தளிர் வெண்பா

11. சமர சேனா -இலக்கியா சுப்பிரமணியன்

12. கார்குழல் கடவையே - அஸ்வதி செந்தில்

13. அவளு(னு)க்கோர் மனமுண்டு - ரைட்டர் X

14. விடாது அரசியல்! களமாடவா! - தீபாஸ்

15. முகவரியற்றவை - மீ.ரா

16. கண்டீரவன் கோட்டை - ரைட்டர் X

17. பச்சைத் துண்டு - லட்சுமி ப்ரீத்திவர்தன்

18. யாவரும் கேளிர் - ரைட்டர் X

19. ஏ.எஸ் வைரஸ் - மின்மினி

20. என் மர்ம ராணியே நில் நில் - உதயா விவேக்

21. மௌரியனின் மயூரி - தேவி

22. சிவதாசன் எனும் நான் - மீரா ஜோ

23. கொல்லிமலை கோமகள் - தமிழ் வெண்பா

24. வானில் ஏணி போட்டு... - ரைட்டர் X

25. மரபணு மாற்றம் ALK +ve - சுசி கிருஷ்ணமூர்த்தி

26. (அட)மானம் - தீபா செண்பகம்

27. அழியாத சுவடுகள் - ஆர்த்தி மனு

28. போகாதடி பெண்ணே - ரைட்டர் x

29. பாஸ்ட் டிராக் - ரைட்டர் x

❤️சிவப்பு- 29 கதைகள்❤️

சிவப்பு வண்ண கதைகளுக்கான லிங்க்,

******************

உங்களுக்கு எதிர்மறை குணம் / ஆன்டி ஹீரோ/ பியூட்டி அண்ட் பீஸ்ட் வகையறா கதைகள் பிடிக்குமா?

அப்படியென்றால் உங்களுக்கான வண்ணம் சாம்பல்.

சாம்பல் வண்ணத்தில் களமிறங்கும் கதைகள் இதோ...

1. வினவக் கண் விழித்தேன் சகியே! - சத்ய சஞ்சீவி

2. நரகமாகும் காதல் கணங்கள் - ஷிவானி செல்வம்

3. வென்றிடுவாயோ? வீழ்ந்திடுவாயோ? - ரைட்டர் X

4. மன்னிப்பாயா மான்விழியே! - காஞ்சனா கண்ணன்

5. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - நந்தினி

6. மாயநதி கரையினிலே - சுபாஷினி

7. இராவண காதலி - Nagaveni Alagar Rajan

8. பொய்த்துப் புன்னகை - Priya Pintoo

9. ஹாசினி சந்திரா - தீபா செண்பகம்

10. மாயோனின் மலரோவியம் - Mythili MP

11. வேய்ந்தனனின் வல்லினம் - திவ்யஶ்ரீ

12. மருகும் மனதின் ரகசிய அறையில் - அம்மு இளையாள்

13. நீ நான் மட்டும் நிஜமாய்! - ரிஷா

14. அன்பே!அன்பே!கொல்லாதே! - இனிதா மோகன்

15. நானும் ஆன்டி ஹீரோ தான் - கமலி ஐயப்பா

16. என்னை யாரென்று தெரியாமல் - அனு ஜெய்

17. இருளில் தொலைந்த ஒளி அவள் - தமிழுக்கினியாள்

18. உன்னை நம்பாதே - ராம் ஸ்ரீதர்

19.எங்கேயும் எப்போதும் நான் தான் -விஜி விக்னேஷ்

20. நீ அறியாயோ முகிலினமே! - வத்சலா ராகவன்

21. நிந்தன் காதலின் ஸ்பரிசம் - பாரதி நந்து

22. நாயகன் நானா? -Writer X

23. எதிரெதிர் துருவமாய் - அம்முஸ்ரீ

24. என் பிரதிபிம்பம் நீயடி - மிலோனி

25. அனலில் மிதந்த மலர் - ரஜனி

🐋சாம்பல் - 25 கதைகள்🐋

சாம்பல் வண்ண கதைகளுக்கான லிங்க்,

***********************

வண்ணங்கள் 2021ல் எழுத்தாளர்களுக்கு தான் போட்டியா? எங்களுக்கு இல்லையா என்று வாசகர்கள் கேட்பீர்களாயின், நிச்சயம் உங்களுக்கும் போட்டி உண்டு.

வாராவாரம் மோஸ்ட் ஆக்டிவ் ரீடர் ஆப் த வீக் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவர்களுக்கு சகாப்தம் சார்பில் பரிசும் அளிக்கப்படுகிறது.

நீங்கள் ஒரு வாரத்திற்குள் எவ்வளவு கதைகளை வாசித்து தளத்தில் கருத்துப் பதிவிடுகிறீர்களோ அதற்கேற்ப வெற்றி வாய்ப்பு.

போட்டி தொடர்பான அறிவிப்புகளையும் கதைகளுக்கான அப்டேட்டுகளையும் தொடர்ந்து பெற, சகாப்தம்.காம் முகநூல் குழுவில் இணைந்திருங்கள் ப்ரெண்ட்ஸ்.

****************

#sahavannangal
#Vannangal
#sahaptham
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 15​



"சாந்தாம்மா, மாப்பிள்ளைக்கு ஒரு பூஸ்ட் கொண்டா" என்று விஜயாதித்தன் கூக்குரலிட்டதுமே வந்திருப்பது தன் ஷிவா அத்தான் தான் என்று அனுமானித்துக்கொண்டு தன்னறையிலிருந்து ஓடி வந்து எட்டிப் பார்த்திருந்த ஷ்ரதாஞ்சலிக்கு அங்கு வீசியைக் கண்டதுமே நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது.

உள்ளுக்குள் ஹார்மோன் நதியானது வஞ்சமில்லாமல் ஊற்றெடுத்தது.

கீழே அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஊமை நாடகம் பார்ப்பது போலவே சகலமும் தெரிந்தது.

திடீரென வீசியும் காவலதிகாரி ஒருவரும் தன் பலத்தை நிரூபிக்க போராடுவதைப் பார்த்ததும் தன் மனதிற்கினியவனை ஜெயிக்க வைக்கவேண்டும் என்று உள்ளே ஓடிப்போய், தேடுதல் வேட்டையில் இறங்கி, கையில் சிக்கிய அழிப்பியை எடுத்துக்கொண்டு வந்தாள். சரியாய் குறிபார்த்து எறியவும் செய்தாள்.

தன் திட்டப்படி அவன் ஜெயித்ததும் ஆவலோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்ததுமே வெட்கத்தில் உள்ளே ஓடிவிட்டாள்.

விஜயாதித்தன், "சரிங்க மாப்பிள்ளை, நீங்க இருந்து சாப்பிட்டுட்டு போங்க.. நான் முக்கியமான வேலை ஒண்ணு வந்திருக்கு; போய் முடிச்சிட்டு வந்திடுறேன்" என்று கிளம்பினார்.

அவர் அந்தப் பக்கம் கிளம்பியவுடனேயே, "டேய் வீசி! நீ வெளிய நியூ டீலக்ஸ் தியேட்டர் கிட்ட வெயிட் பண்ணு.. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்திடுறேன்" என்றான் சிவனேஸ்வரன். வீசியும் சந்தேகத்துடனே சரியென்று வெளியேறினான்.

அவன் அகன்றதுமே வெக்கு வெக்கென்று மாடிப்படியேறி நேரே ஷ்ரதாவின் அறைக்கு முன்பு வந்து நின்றவன், அவள் ஜன்னலில் ஏறி உட்கார்ந்திருப்பதைக் கண்டு கதவை 'டொக் டொக்கென்று தட்டினான்.

ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து சற்று முன்பு நடந்ததையே நினைத்து நினைத்து தன்னால் சிரித்துக் கொண்டிருந்தவள், கதவு தட்டப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள்.

அங்கு சிவனேஸ்வரனை கண்டதும், "ஷிவாத்தான்!" என்று துள்ளிக் குதித்து ஓடி வந்து அவன் கையைப் பற்றிக்கொண்டாள்.

"ஷ்ரதா உன் முகம் இன்னைக்கு ரொம்ப டாலடிக்குதே.." உண்மையை கேலித் தொனியில் கூறினான் அவன்.

"அது உங்களைப் பார்த்த சந்தோசம் தான்.." என்று சமயோஜிதமாய் சமாளித்தாள் அவள்.

"உண்மையாவா?"

"சத்தியம் பண்ணினா தான் நம்புவீங்களா?"

அவன் அங்கிருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தபடியே மறுத்தான். "இல்ல இல்ல.. எங்க உங்க வீட்டு மகளிர் அணியை காணோம்?"

"அம்மாவும் அண்ணியும் யாரோ தூரத்து சொந்தக்காரங்களாம்.. அவங்க வீட்டு மேரேஜ்க்கு போயிருக்காங்க.. சரி சொல்லுங்க நீங்க என்ன வேலையா இன்னைக்கு இங்க வந்தீங்க?"

"அது மாமாக்கிட்ட சொல்லி என் ப்ரெண்ட் ஒருத்தனுக்கு வேலை வாங்கி கொடுக்கலாம்னு வந்தேன்.."

"ப்ரெண்டா? யாரு?"

அவன் நாற்காலியில் ஆடியபடியே, "நீ பார்க்கலையா? ரப்பர் எல்லாம் எறிஞ்சு அவனை ஜெயிக்க வச்ச?" என்று தன் கையிலிருந்த அழிப்பியை அவளிடம் நீட்டினான்.

அவள் அதனை வாங்கிக்கொண்டு நேக்காக அவன் நாற்காலிக்கு பின்னால் வந்து நின்று அவன் உச்சந்தலையில் நாடி புதைத்தபடியே ரகசியம் பேசினாள். "அது நான் உங்க மேல இல்ல எறிஞ்சேன்.. தவறி அந்த போலீஸ் மேல பட்டுடுச்சி.." என்றாள்.

கண நேரத்தில் தான் இமயமலையில் இருப்பது போலுணர்ந்த சிவனேஸ்வரன், 'இறைவன் எனக்குள் செலுத்திய காதலை உனக்குள்ளும் செலுத்திவிட்டானா ஷ்ரதா?' என்று சிலிர்ப்புற்றான்.

"ஷ்ரதா, இன்னைக்கு என் கூட வந்தது யார் தெரியுமா?"

"யாரு அத்தான்?"

"எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆண்மகன் தான்.." பீடிகை போட்டான் அவன்.

"ம்ம்…. சொல்லுங்கத்தான்" ஏகபோகமாய் சிணுங்கினாள் அவள்.

"உங்க அண்ணியோட தம்பி வருண் சக்கரவர்த்தி இருக்கான்ல.. அவன் தான் என் ப்ரெண்ட்.."

"ஓஹோ.. முகத்தை சைடா பார்க்கும்போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன் அத்தான்.."

"ஷ்ரதா, அத்தான் உனக்கு ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்.. எங்கே அது என்னன்னு சரியா சொல்லு பார்க்கலாம்?"

முன்னே வந்து நின்றவள் சாய்வு நாற்காலியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "தெரியலை அத்தான்.. நீங்களே சொல்லுங்களேன்" என்று அவன் முகத்திற்கு நேராக குனிந்தாள்.

அவள் வாசனையின் அடர்த்தியில் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. தன் முகத்தை முயன்று பின்னோக்கி இழுத்தான். அந்நிலை இன்னும் அபாயகரமாக இருந்தது. வலதுபுறம் அந்த மச்சம்.... கண்களைத் திருப்ப ரொம்பவே மெனக்கெட்டான் சிவனேஸ்வரன். உள்ளுக்குள் எதிரிக்கும் இந்நிலை வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டான்.

அவன் கையிலிருந்த, தான் அவனுக்கு கொடுத்தனுப்பிய பிரவுன் அட்டை நோட்டைப் பார்த்தவள் முகத்தில் சோககீதம் வாசித்து, "போங்கத்தான், முந்தாநாள் நான் போட்டுக் கொடுக்க சொன்ன சம்மை போட்டுட்டு வந்திருப்பீங்க.. அதைத்தானே இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் வச்சி பெருசா பில்டப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்டபடியே கட்டிலில் போய் அமர்ந்தாள்.

அதுவும் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை தொங்கவிட்டும் அம்பாள் போல் அழகாய் அமர்ந்திருந்தாள்.

ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த அவள் வலது பாதத்தைப் பிடித்து முத்தமிட வேண்டும் போல் அவனுக்குள் ஒரு உந்துதல். ஆசையை அடக்கிக்கொண்டான். 'இப்போது வேண்டாம்.. அவள் சின்னப்பெண்.. பயந்து விடுவாள்' என்று தனக்குத்தானே புத்திமதி சொல்லிக்கொண்டான்.

"இது இல்ல, வேற ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்.. சொல்லு பார்க்கலாம்?"

"ம்ம்? தெரியலையே.. நீங்களே சொல்லுங்கத்தான்" சலிப்பாக பதில் வந்தது அவளிடம்.

அருகில் வந்து தன் முதுகின் பின்னால் செருகி வைத்திருந்த அந்த சப்பட்டையான செவ்வகப்பெட்டியை "டொட்டடொயிங்" என்று வெளியே எடுத்து நீட்டினான்.

"வாவ்! மல்டி கலர் கியூடெக்ஸ்!! அதுவும் ஃபாரீன் ப்ராண்ட்!!!!"

"ம்ம், ஆதி அண்ணாகிட்டயிருந்து உனக்காக அனுப்ப சொன்னேன்.."

"ஹை! பெரிய அத்தான் கொடுத்தனுப்பினாங்களா?" அவள் கண்கள் மின்னியது.

"ம்ம்"

"ஸோ ஸ்வீட்.."

அவள் உடனே தனது வலது கால் பாதத்தை கட்டிலின் மீது தூக்கிவைத்து நீளமான தன் கால்விரல் நகங்களுக்கு வண்ணம் தீட்ட ஆரம்பித்தாள்.

அவனுக்கு அந்த நகப்பூச்சை வாங்கி தூர வைத்துவிட்டு அவள் கால் விரல்களைப் பிடித்து கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருந்தது. கூடவே குணா கமல் போல் முத்தமிடவும் தோன்றியது.

ஆனால், நெருங்க துணிவின்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஷ்ரதாஞ்சலி அப்போது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பாவை. அவள் பயந்து விட்டால் என்ன செய்வது என்பதை காட்டிலும், என்னை அவள் தவறாக எண்ணி விட்டால் என்ன செய்வது என்பது தான் பெரிய பிரச்சினையாக இருந்தது அவனுக்கு.

மெதுவாய் அவளருகில் அமர்ந்து, "உனக்கு என்னை பிடிக்குமா ஷ்ரதா?" என்றான்.

அவள் விழிகளை மட்டும் உயர்த்தி, "ஓ பிடிக்குமே" என்றாள்.

அவன் அதில் தைரியம் பெற்று, "ஷ்ரதா, நான் இப்போ உன்கிட்ட ஒண்ணு கொடுப்பேன்.. நீ அதை படிச்சிட்டு உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்..." என்று ஆரம்பித்தவன், தன் இடக்கையிலிருந்த நோட்டை திறந்துப்பார்த்து அதிர்ந்தான். மிகப்பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தது! அவன் எடுத்து வந்த காதல் கடிதத்தை காணவில்லை. அய்யோ கடவுளே! உள்ளே தானே வச்சேன்!

"என்னது அத்தான்? என்ன நான் பதில் சொல்லணும்? படிச்சிப் பார்க்கணும்?"

அவன் ரத்த அழுத்தம் ஏறி அங்கேயே கீழே குனிந்து தேடிக்கொண்டிருந்தான்.

"நான் போட்டுக் கொடுக்க சொன்ன கணக்கை எல்லாம் போட்டுட்டீங்களா? நோட்டைக் குடுங்க" என்று அவன் கையிலிருந்த நோட்டை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.

சிவனேஸ்வரனின் கண்கள் அலை பாய்ந்தது. 'கடிதம் எங்கே தவறியிருக்கும்?' என்ற பயம் அவன் குரல்வளையை கவ்விக் கொண்டிருந்தது.

அவன் அந்த குழப்பத்துடனேயே அவளிடமிருந்து விடைபெற்றான். 'எங்கே போயிருக்கும்?' என்று யோசித்தபடியே கீழேயும் தேடிக்கொண்டே வந்தான்.

அவனுக்காக நியூ டீலக்ஸ் தியேட்டர் அருகே சோடா குடித்துக்கொண்டு காத்திருந்தான் வீசி.

பைக்கில் வந்து சேர்ந்தவனின் சோர்ந்த முகத்தைப் பார்த்து ஆருயிர் நண்பன், "டேய்! என்னாச்சு? ஏன் இப்படி எதையோ பறிகொடுத்தவன் மாதிரி இருக்க?" என்று விசாரிக்க, "இல்ல மச்சி" என்றபடியே இன்னும் சிந்தனா உலகிலேயே சிக்கிக்கிடந்தான் சிவனேஸ்வரன்.

வீசி அவனிடம் ஆழம் பார்ப்பவனாக விளையாடினான். "எதையாவது தொலைச்சிட்டியா சிவா?.. எதையாவதுன்னா?.. காதல் கடிதத்தை.. காதல் கடிதத்தைன்னா?.. என்னுயிர் ஷ்ரதாஞ்சலிக்குன்னு ஆரம்பிக்குமே அப்படி.." என்று சொல்லவுமே, போன உயிர் போன வாக்கிலேயே எக்ஸ்பிரஸ் பிடித்து திரும்பி விட்டதை போல் பெருமூச்சு விட்ட சிவனேஸ்வரன், "திருட்டு படவா, நீ தான் எடுத்து வச்சிருக்கியா?" என்று பைக்கிலிருந்து இறங்கி வீசியின் சட்டைப்பையிலும் பேண்ட் பாக்கெட்டிலும் துழாவினான்.

எதுவும் அகப்படவில்லை எனவும், "எங்கேடா?" என்று அவன் சட்டைக்காலரை பிடித்து பரிதாபமாக கேட்டான்.

அவன் கையை எடுத்துவிட்ட வீசி, தன் சட்டையின் உள்பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான்.

சிவனேஸ்வரன் படக்கென்று வாங்கி தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

வீசி, "என்னடா லவ்வா?" எனவும், அவன் உட்கார்ந்திருந்த பெஞ்சிலேயே தானும் ஒட்டிவந்து அமர்ந்துகொண்ட சிவனேஸ்வரன், தன் காதல் கதையை அவனுக்கு கடைவிரித்தான்.

சிறுவயதிலிருந்தே ஷ்ரதாவை தனக்குப் பிடிக்கும் என்றும், தனியொரு பிரியம் ஏற்பட்டதற்கு காரணம் தனக்கே தெரியவில்லை என்றும் கூறினான்.

பொறுமையாய் அனைத்திற்கும் செவிமடுத்த வீசி, "அக்கா கல்யாணத்தப்பவே பார்த்தேன் சிவா.. ரொம்ப பகட்டா தெரிஞ்சது அந்தப்பொண்ணு.. கிட்டவே போகல.. இதுவரைக்கும் பேசினதுமில்ல.. ஆமா உங்க வீட்டுல சொன்னா தான் ஈஸியா முடிஞ்சிடுமேடா.. அப்பறம் ஏன் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு திரியுற.." என்று அலட்சியமாகக் கேட்டான்.

"டேய் வீசி! வீட்டுல பேசி முடிவெடுக்கிறது வேற.. நாங்க எங்களுக்குள்ள பேசி முடிவெடுக்கிறது வேற.. எனக்கு அவளை பிடிச்சிருக்கிற மாதிரியே அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கான்னு தெரிய வேண்டாமா?"

"சிவா! அவ ஸ்கூல் படிக்கிற பொண்ணுடா.."

"டேய்! அவளுக்கு இன்னும் ஆறு மாசத்துல ஓட்டுப்போடுற உரிமை.."

"நீ என்ன சொல்லு, நீ பண்றது தப்பு.. படிக்கிற பொண்ணு மனசுல இது மாதிரி சபலத்தை உண்டு பண்ணுறது, உங்க ரெண்டு பேரோட பியூச்சருக்குமே நல்லதில்ல.."

"டேய் வீசி! நீ என்ன தான்டா சொல்ல வர்ற?"

"இப்போதைக்கு அவகிட்ட எதையும் சொல்லாதன்னு சொல்றேன்.." என்று முடிந்தளவு அறிவுரை கூறினான் வீசி.

அவனின் இந்த அறிவுரையில் அவன் கண் முன்னமே அந்தக் கடிதத்தை சுக்குநூறாக கிழித்துப் போட்டான் சிவனேஸ்வரன். பின், அச்செயலே தான் தன் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்றும் புலம்பினான்.

காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கீழே உள்ள லிங்கை க்ளிக்கி கருத்துப் பதிவிட்டால் 24 மணி நேரத்திற்குள் நல்ல செய்தி கிட்டுமாம் ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
ஓம் சகாப்தமே நமஹ!

இப்பதிவை ஷேர் செய்தால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே நல்ல செய்தி கிட்டுமாம் ப்ரெண்ட்ஸ்😉
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 16​



"ஐயா காபி" என்று வேலைக்காரப்பெண்மணி வந்து கொடுத்துவிட்டு செல்ல, மீண்டும் குமைந்தான் சிவனேஸ்வரன்.

"நான் அவனை நம்பியிருக்கக்கூடாது ஷ்ரதா.. நான் அவன்கிட்ட உன்னை அனுப்பியிருக்கக்கூடாது.. நான் மட்டும் அவன்கிட்ட உன்னை அனுப்பாம இருந்திருந்தா நீ என்னைத்தானே விரும்பியிருப்ப?"

**********************

வீசி புத்தகக்கடையில் வேலைக்கு சேர்ந்த மூன்று மாதங்களுக்குப் பின்பு, அபூர்வமாக ஒருநாள் சிவனேஸ்வரன் அவனைத்தேடி புத்தகக்கடைக்கு வந்திருந்தான். அப்போது புதிதாக வந்திருந்த புத்தகங்களையெல்லாம் வகைபிரித்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்தான் வீசி.

"வீசி.. வீசி.." என்று அழைத்துக்கொண்டே வந்து மூன்றாவது கட்டுக்குள் அவனை சந்தித்தவன், "டேய் ஒரு ஹெல்ப்டா" என்று அவசரக்கதியில் கூறினான்.

"ஹெல்ப்பா? சொல்லுடா என்ன புக் கண்டுபிடிச்சு கொடுக்கணும்.. ஃப்ளூயிட் மெக்கானிக்சா? எது?" என்றான் வீசி.

"டேய்! அதெல்லாம் இல்லடா.. இது வேற ஹெல்ப்.."

"வேற ஹெல்ப்?"

"நெஸ்ட் வீக் எனக்கு மாடல் எக்ஸாம்டா.."

"டேய்! நான் ரோபோ இல்லடா"

"வீசி"

"சரி, கன்டினியூ"

"இவ்வளவு நாள் நான் என் மாமாப் பொண்ணுக்கு ட்வெல்த் மேத்ஸ் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன் இல்ல?"

"ஆமா சொன்னியே.. தடுமாற்றமா இருக்குன்னு.."

"ம்ம், இப்போ அவளுக்கும் ரிவிஷன் எக்ஸாம்டா.. ஒரே டைம்ல எங்க ரெண்டு பேருக்கும் எக்ஸாம் வந்திட்டதால எனக்கு இப்போ அவளுக்கு சொல்லிக் கொடுக்க முடியாத நிலைமை.. நீ தான் இதுல இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணனும்டா"

"நான் என்ன பண்ண முடியும்?" தோள்களை குலுக்கினான் வீசி.

'புரியலை?' என்பது போல் பார்த்தான் சிவனேஸ்வரன்.

வீசி மூளையில் மின்னல் வெட்டிய அடுத்த நொடி, "டேய்! இந்த புக் ஸ்டாலை விட்டு என்னால எங்கேயும் நகர முடியாதுன்னு உனக்கு தெரியுமில்ல?" என்றான்.

"ம்ம் தெரியும், அதுக்குத்தான் அவங்களை இங்க வர சொல்லலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.."

"அதெல்லாம் சரிபட்டு வராதுடா.. நீ வேற ஆளை பார்த்துக்கோ.."

"டேய் ப்ளீஸ் டா.. உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா? வெறும் ரெண்டு வாரத்துக்கு மட்டும் தான்டா.."

புத்தகத்தை வகை பார்த்து அங்குமிங்குமாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தபடியே அலுத்துக் கொண்டான் வீசி. "உன்னோட ஒரே ரோதனையா போச்சுடா.."

"உனக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்ததே நான் தான்டா.. பழசெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வச்சிக்கோ.."

"டேய்! நான் பாட புத்தகத்தை தொட்டே மூணு வருஷம் ஆகுதுடா.. எல்லாம் டச் விட்டுப்போச்சு.."

"அதெல்லாம் ஒன் டைம் பார்த்தா ஞாபகம் வந்திடும் வீசி.." எனவும், கொஞ்சம் யோசித்தவன், "டேய் ப்ளீஸ் டா.. இதுல என் வாழ்க்கையும் அடங்கி இருக்குடா.." என்றவனின் அனத்தலில், "உன் வாழ்க்கையுமா?" என்றான்.

"ம்ம், இப்போ நீ சொல்லிக் கொடுக்க ஒத்துக்கிட்டா தான் ரெண்டு வாரத்துக்கப்புறமும் ஷ்ரதா தொடர்ந்து எங்க வீட்டுக்கு மேத்ஸ் படிக்க வருவா.. இல்லைன்னா மாமா வேற யாரையாவது கோச்சிங் கொடுக்க கூப்ட்டுட்டு வந்திருவாரு.."

"என்னடா நீ.. சரி, வரச்சொல்லு.. ஆனா சரியா ஒன்றரை மணிநேரம் தான் கிளாஸ்.. மோகன் அண்ணா சாயங்காலம் சிக்ஸ் டூ செவன் தேர்ட்டி கடையில இருக்க மாட்டாரு.. அந்த டைம் அவளை வரச் சொல்லு.."

"ம்ம் சொல்றேன் டா.. தான்க்யூ ஸோ மச் டா.. அப்படியே அவ கூட அவ ப்ரெண்ட் ஒரு நந்தியும் வரும் வீசி.."

"டேய் சிவா, எத்தனை பேருடா? ஒழுங்கா சொல்லு?"

"ப்ளீஸ் ப்ளீஸ்டா.. அவ ஒருத்தி மட்டும் தான்டா" என்று கெஞ்சினான் சிவனேஸ்வரன். வீசியும் வெறுப்பாக சரியென்றான்.

அப்போது ரொம்ப மனநிறைவாக உணர்ந்தான் சிவனேஸ்வரன். இந்த உலகிலேயே அவனுக்கு ரொம்ப உத்தமனாகப்பட்டவன் வீசி மட்டும் தான். அவன் நிச்சயமாக ஷ்ரதாவிடம் கல்மிஷப் பார்வையோ கேலிப்பேச்சோ வைத்துக்கொள்ள மாட்டான் என்று நம்பினான் அவன். பெண்கள் என்றாலே அவனுக்கு கூச்சம் என்று தெரியும். ஆனாலும் வீசி பார்ப்பதற்கு கொஞ்சம் அழகானவன் ஆயிற்றே என்று மட்டும் பயந்தான். ஆம், அவன் பயப்படுவதிலும் அர்த்தமில்லாமல் இல்லை. வீசி சிரித்தாலே மன்மத லட்சணமாக இருக்கும்.

இந்த இக்கட்டில் சிவனேஸ்வரன் தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டான். "இருக்கட்டும்! நண்பனான என்னிடமே இதுவரை நூறு முறைக்கு கீழே தான் வீசி சிரித்திருப்பான்.. ஆகையால் சிரிப்பதற்கு வாய்ப்பில்லை. சிரித்தாலும் அவன் சிரிப்பில் ஷ்ரதா விழ அறிகுறியில்லை" என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான்.

மேலும் வீசிக்கு மேல்வர்க்கத்தினரைக் கண்டாலே ஆகாது. இவ்வழமையால் அவன் ஷ்ரதாவிடம் நற்பெயர் சம்பாரிப்பதும் கடினமே என்று கருதிக்கொண்டான்.

முடிவாக 'நண்பனின் காதலியை கைப்பற்றும் அளவிற்கு வீசி வஞ்சகன் அல்ல' எனும் நம்பிக்கையே அவனுக்கு பெரும் ஆறுதலை தந்தது.

மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்ற சிவனேஸ்வரன், ஷ்ரதாவை சந்தித்த நாளில் அடுத்தகணமே விஷயத்தை அவளிடம் தெரிவித்தான். அவள் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிகாட்டவில்லை. ஆனால், 'வேண்டாம் அத்தான்' என்று மட்டும் மறுதலித்தாள்.

அவன் அரும்பாடுபட்டு கெஞ்சி அவளை சம்மதிக்க வைத்தான். அவனுக்கு அவளுக்கு தன்னை விட்டு செல்வது பிடிக்கவில்லை என்பதே திருப்திகரமாக இருந்தது.

ஷ்ரதாவிற்கோ வீசியை எதிர்கொள்வதென்பது சவாலாகத்தான் பட்டது. இதைவிட ஒரு அவஸ்தையை தான் தன் வாழ்நாளிலேயே சந்திக்கமுடியாது என்று எண்ணிக் கொண்டாள்.

"என்னை கூமுட்டையாக நினைப்பார்" என்று பல் விளக்கும் போது பாத்ரூம் கண்ணாடி பார்த்து சொன்னாள்.

"அவர் முன்பு போய் எப்படி இது தெரியவில்லை, எனக்கு அது புரியவில்லை என்பேன்? நிச்சயம், ஏய் மக்கு! உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது என்று கோபிப்பார்" - தலை பின்னும் போது அவள் பின்னல் தப்பாய் போனது.

"இது கூட உனக்கு தெரியாதா என்று நிச்சயம் மட்டம் தட்டுவார்" - "சாப்பிட உட்கார்ந்திருக்கும் போது தட்டைப் பார்த்து என்ன புலம்பல்?" என்ற மீனாட்சியின் அதட்டலில் ஸ்பூனிலிருந்த பொங்கல் அவள் வாய்க்குள் போனது.

"இந்த அத்தான் ஏன் இப்படி அவரிடம் போய் என்னை கோர்த்து விட்டார்? முருகா, ப்ளீஸ் எனக்கொரு வழி சொல்லு"- "என்ன ஷ்ரதா, பரீட்சை அன்னைக்கு கூட நீ இப்படி வேண்டி பார்த்ததில்லையே.. அப்படி என்ன வேண்டுற முருகன்கிட்ட?" அவளின் தோள் தொட்டாள் தாரிணி சந்து.

ஆனால், தலையெழுத்துபடி அவள் வீசியை நேரில் சென்று சந்திக்கும்படி தான் நிகழ்ந்தது.

சம்பவம் அன்று மாலையில் ஷ்ரதா சீருடையை களைந்துவிட்டு, புதிதாக எடுத்திருந்த பிஸ்தா பச்சை குர்த்தியையும், பழுப்பு பச்சை பட்டியாலாவையும் அணிந்து கொண்டாள். கிளம்பும் அவசரத்தில் அவள் வலப்புற தோளில் ஒழுங்கின்றி தொங்கிக் கொண்டிருந்த பழுப்பு பச்சை துப்பட்டாவை கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டாள். அதிக மெனக்கெட்டு கண்ணில் இரண்டுமுறை காஜலைத் தீட்டினாள். பிறகு கண்ணாடியில் பார்க்க தன் அலங்காரம் திருப்தியாக இருக்கவும் கீழே புறப்பட்டு வந்தாள்.

இவ்வளவு நாளில் இல்லாமல் இன்று அவள் அதிக சிரத்தையெடுத்து கிளம்பியிருந்தது அவளை உற்றுப் பார்க்க வைத்தது அவளது உற்றத் தோழியை. காரணம் கேட்டதற்கு அது இதுவென்று மழுப்பிவிட்டாள் ஷ்ரதா.

புத்தகக்கடையை நெருங்க நெருங்க அவள் நடை அன்னநடையானது.

அவள் அகப் போராட்டம் புரியாமல், "வேகமா வா ஷ்ரதா" என்று துரிதப்படுத்தினாள் தாரிணி சந்து.

இருவரும் சரியாக ஆறுமணிக்கு, 'ஷ்ரதாஞ்சலி புக் ஸ்டால்' என்று பெரிதாக பெயர்ப்பலகை மாட்டப்பட்டிருந்த அந்த கடைக்குள் நுழைந்தார்கள்.

வீசி முதலில் தாரிணி சந்துவை மட்டும் பார்த்துவிட்டு, "என்ன புக் வேணும்?" என்று எழுந்து நின்றான். வாடிக்கையாளர்கள் என்று நினைத்துக் கொண்டான் போலும்.

சுவாச ஓட்டம் அதிகமாகியது ஷ்ரதாவிற்கு. உடலின் உஷ்ணம் கூடி காய்ச்சல் வரும் போல் இருந்தது.

தாரிணி துடுக்காக, "சார், நாங்க டியூசனுக்கு வந்திருக்கோம்" என்றாள்.

"ஆமா! ஆமா! சிவனேஸ்வரன் சொன்னான்.. வாங்க" என்று உள்ளே அழைத்துச் சென்றவன் புத்தகம் படிக்க போடப்பட்டிருந்த வட்டமேசை நாற்காலிகளைக்காட்டி இருவரையும் அமர சொன்னான்.

எதிர் சுவரில், "தலை குனிந்து என்னைப் பார்.
உன்னை தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறேன்.
இப்படிக்கு புத்தகம்" என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

இன்னொரு பக்கம்,
"ஆயிரமாயிரம் கருத்துகள் உள்ளிருப்பினும், மூடிக்கொண்டு அமைதியாய் தான் இருக்கின்றன புத்தகங்கள்" என்று இருந்தது. வாசித்துவிட்டு நாசுக்காக சிரித்துக்கொண்டாள் ஷ்ரதா.

"ம்ம் சிவா சொன்னான்; மேத்ஸ்ல தான் நீங்க வீக்குன்னு.. எக்ஸாம் எப்போ ஸ்டார்ட் ஆகுது?"

"கம்மிங் மண்டே சார்.."

"ஓஹ் ஒரு வாரம் இருக்கா? சிவாவுக்கு தான் இன்னைக்கு எக்ஸாம் இல்ல?"

"ம்ம்.."

"சொல்லுங்க இன்னைக்கு என்ன ஹோம் வொர்க்?" என்று கேட்டவன் அதற்கும் தாரிணியே பதிலளித்து தன் புத்தகத்தை எடுத்து நீட்டவும், எடுத்துக்காட்டு கணக்குகளை வைத்தே பயிற்சி கணக்குகள் முழுமையும் போட்டு முடித்தான்.

அவனின் இந்த அயற்சியிலா செயலில் ஷ்ரதாவும் தாரிணியும் கண்சிமிட்டும் சிலைகளாகினர்.

இந்தியக் குழந்தைகளை பொறுத்தவரை பயிற்சி கணக்குகள் என்பது அநியாயத்தின் கருப்பை. ஐம்பதையும் ஐம்பதையும் கூட்டினால் எவ்வளவு என்பது எடுத்துக்காட்டு கணக்காக இருந்தால், நிச்சயம் ஆயிரத்து நூத்து பனிரெண்டையும் தொள்ளாயிரத்து பதினைந்தையும் கூட்டி, ஏழால் கழித்து, முப்பத்து மூன்றால் பெருக்கினால் எவ்வளவு என்பதே பயிற்சி கணக்காக இருக்கும். எனவே, அவர்களின் அதிர்ச்சிக்கு காரணமில்லாமல் இல்லை.

ஆனால், ஷ்ரதா தான் கூடுதலாய் மலைத்துப் போயிருந்தாள். பனிரெண்டு பூத கணக்குகளை இருபத்தைந்து நிமிடத்தில் போட்டு முடித்துவிட்டவனின் அசாத்தியத் திறமை இரும்பில் ஏறிய துருவாய் இன்னும் அவள் மனதைப்போட்டு அரிக்கவாரம்பித்துவிட்டது. தான் பிறப்பெடுத்ததே வீண் என்று எண்ணுமளவிற்கு வந்துவிட்டாள்.

'முருகா! என்னவொரு மோசடி இது.. ப்ளீஸ் எப்படியாவது அவரோட இந்தத் திறமையை மறக்க வச்சிரு.. தைப்பூசத்துக்கு பால்குடம் தூக்குறேன்' என்று தீவிரமாய் திருப்பரங்குன்றம் முருகனுக்கு வேண்டுதல் ஒன்றையும் வைத்தாள்.

'அப்படி என்ன ஜாலம் இவர் கைகளில் மட்டும்! சே! முத்து முத்தான கையெழுத்து' அவன் அவள் மனதுக்குள் பேசும் பொருளானான்.

"என்ன பார்க்கிற? புரிஞ்சதா?"

அவன் தன்னிடம் பேசிய முதல் வார்த்தை பரவசப்படுத்துவதற்கு பதில் பதைபதைக்க வைத்தது.

"ஆங் புரிஞ்சது! புரிஞ்சது!" என்று இருமுறை தலையாட்டினாள் புரியாமலேயே.

"சரி, எக்ஸாம்பிளுக்கு நம்பர் மாத்தி நான் ஒரு சம் கொடுக்கிறேன்.. நீங்க ரெண்டுபேரும் தனித்தனியா செஞ்சி காட்டுங்க.. ம்ம்?" என்றவன் கையுடனே இருவருக்கும் தனித்தனி நோட்டுகளில் கணக்கெழுதி கொடுத்தான்.

அவன் சொல்லிக் கொடுத்ததை சரியாக புரிந்துகொண்ட தாரிணி எருமை விறுவிறுவென்று விடை எழுதத் தொடங்கிவிட்டது கடுப்பாக இருந்தது ஷ்ரதாவுக்கு.

'தாரிணியை பார்த்து எழுதலாம் என்றால் முனீஸ்வரி டீச்சர் மாதிரி அசையமாட்டேன் என்கிறானே இந்த உத்தம புருஷன்' என்றவள் தவித்த போதே தூணிலும் துரும்பிலும் இருக்கும் முருகன் அவளை காப்பாற்றி விட்டார்.

யாரோ ஒரு பெண்மணி ராஜேஷ்குமாரின் துப்பறியும் நாவலை கேட்டு வந்திருந்தார்.

'கோடி புண்ணியம் ராஜேஷ்குமார் சாருக்கு' கும்பிடு போட்டவள் அவன் அவர் கேட்ட புத்தகத்தைத் தேடி எடுத்துத் தருவதற்குள் தாரிணியைப் பார்த்து விடையெழுதிவிட்டாள்.

வியாபாரத்தை முடித்து விட்டு அருகில் வந்தவன், "முடிச்சாச்சா?" என்று வினவ, இருவருமே கோரசாக "ஓ" போட்டார்கள்.

இருவரினது நோட்டையுமே வாங்கிப் பார்த்தவன் "குட்" என்றான்.

பின்பு அடுத்த அடுத்த கணக்குகளை பொறுமையாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். ஷ்ரதா இம்முறை ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. ரொம்பவே சிரமப்பட்டு மனதை ஒருநிலைபடுத்தி கணக்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

நிமிட முள் அரைவட்டம் போட்டு முழுதாக முப்பது நிமிடங்கள் கடந்தது. அவனும் இரண்டு முறை "குட்" சொல்லியிருந்தான்.

அவ்வேளை பக்கத்து டீக்கடையிலிருந்து அவன் எப்போதும் டீ அருந்தும் நேரத்திற்கு சரியாக டீ ஒன்றை எடுத்து வந்திருந்தார் நாகூர் அண்ணா.

அவர் காதில் பென்சில் செருகியிருந்தது ஏழுமணி இட்லியும் பரோட்டாவும் ரெடி என்று வீசியிடம் ரகசியம் பேசியது.

நடையில் அவசரம் காட்டியவரை நிற்பாட்டி, "உங்களுக்கு குடிக்க என்ன வேணும்?" என்றபடியே பெண்களிடம் திரும்பினான் அவன்.

ஷ்ரதா "வேண்டாம்" என்று குனிந்தபடியே மறுப்பாக தலையாட்டினாள்.

தாரிணியோ பசியில் "பால் சார்" என்றாள்.

ஷ்ரதா அவளின் தொடையை நிமிண்டியதைப் பார்த்துவிட்ட வீசி நாகூர் அண்ணாவிடம், "ரெண்டு பால்" என்று சொல்ல, தாரிணி, "இவளுக்கு பால் பிடிக்காது.. பூஸ்ட் கொண்டு வாங்க.." என்று உரக்க சொல்லி அதற்கும் ஷ்ரதாவிடம் வாங்கிக்கட்டி கொண்டாள்.

ஷ்ரதா தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாததற்கும், தாரிணியின் தொடையை நிமிண்டியதற்கும் அவளின் பணத்திமிரே காரணம் என்று நினைத்தான் வீசி.

அவன் யோசனைக்கேற்ப அடுத்த கால்மணி நேரமும், "சார், இது என்ன சொல்லுங்க? சார், அது எப்படி வரும்?" என்று தாரிணி தான் மாற்றி மாற்றி அவனை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாளே தவிர ஷ்ரதா வாயையே திறக்கவில்லை.

அவன் இடையிடையே கேள்வி கேட்டபோது கூட "ஹான்.. ஹூம்.. இல்ல.. ம்ம்" என்றே பதிலளித்தாள்.

அவனுக்குள் 'இவளது சுபாவமே இப்படி தானா? இல்லை அகம்பாவமா?' என்று கேள்வி எழுந்த வண்ணமிருந்தது.

முழுதாக ஒன்றரை மணி நேரம் ஆனதும், "போயிட்டு வர்றோம் சார்" என்று இருவருமே எழுந்து நின்றார்கள்.

"ம்ம்" என்று தலையை ஆட்டியவன், ஷ்ரதா தன் செருப்பின் வாரை மாட்டிக்கொண்டிருந்த போது, "அக்கா எப்படி இருக்காங்க?" என்று நலம் விசாரித்தான்.

திருமணமாகி இரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த மதுபாலா அப்போது தான் கருத்தரித்திருந்தாள். 'மதுபாலாவை எங்கள் வீட்டிற்கு ஒரு வாரம் அழைத்துச் செல்கிறோமே' என்று அபிராமி கேட்டபோது கூட அருண்மொழியும் விஜயாதித்தனும் மறுத்துவிட்டார்கள். அந்தக் கோபம் அவனுள் கனன்று கொண்டு தான் இருந்தது.

"ம்ம் நல்லா இருக்காங்க.." என்று சொல்லிவிட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டாள் ஷ்ரதா. அவன் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

wnVdGCy2u8g3AEDuULmW17f4TVZeIdj5LX6JbM7lOUM7Jz6ktgR_Yo5FJO82Xks8cwU-L8l_9AyVpmEB_2i4Y0Zu87QhswqqeNDBWTuk4JmCntngHmyYXjmpYTnBN3oJX3bKaDkS


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்😊

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

சே! எவ்ளோ அழகா பாடுறாங்க ஐஸ்வர்யா ராய்😜👇

கருத்துத்திரி,
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறுமுறை பிறந்திருப்பேன்.
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 17​



ஷ்ரதா புத்தகக்கடைக்கு வரத்தொடங்கி இரண்டுநாள் கடந்தநிலையில், ஒருநாள் தான் மட்டும் கடையில் தனித்து உட்கார்ந்திருந்தான் வீசி.

அப்போது 'க்ரீச்' என்ற சப்தத்துடன் வந்து நின்ற ஒரு சுமோவிலிருந்து திமுதிமுவென்று அடியாட்கள் நால்வர் இறங்கினார்கள்.

அவர்களைக் கண்டதும் அவர்களின் ஆகிருதியிலேயே அவர்களுக்கும் இவ்விடத்துக்கும் சம்பந்தம் இல்லையென்று புரிந்துகொண்ட வீசி, கல்லாவிலிருந்து எழுந்து நின்றான்.

வந்தவர்கள் அவன் கையில் ஒரு நூறு ரூபாய் தாளைத் திணித்து, அந்த மாகாளிப்பட்டி சாலையின் மூலையில் உள்ள பனைமரத்து பிரியாணி கடையில் சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார்கள்.

அவனுக்கு அவர்களின் திட்டம் புரியவில்லை எனினும் ஏதோ தவறு என்று மட்டும் பட்டது. கோபத்தில் கையிலிருந்த ரூபாய் தாளைக் கசக்கினான்.

வந்திருந்தவர்களில் ஒருவன் அவனைப் பார்த்து முறைக்க, வீசி அவனது காலைப் பார்த்தான். வீசியின் உள்ளக்கொதிப்பிற்கு தூபம் போடும் விதமாய் அந்த முறைமுகத்தான் செருப்பு காலுடன் உள்ளே வந்திருந்தான்.

மேலும் இன்னொருவன் மூன்றரையடி உயரத்தில் இருந்த புத்தக அடுக்கின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு, ஒரு புத்தகத்தை விரலில் வைத்து சுற்றிக்கொண்டிருந்தான்.

வீசியால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை.

"புத்தகத்தை தொடாதீங்க" என்று கிட்டதட்ட கட்டளையிடும் குரலில் கத்தினான்.

புத்தக அடுக்கிலிருந்து குதித்திறங்கி வந்தவன், "என்னடா எங்கக்கிட்டயே சத்தத்தை கூட்டுற?.." என்று கடுத்த குரலில் கேட்டான்.

வீசி அசையாமல் அவனையே முறைத்து பார்த்தபடி நின்றிருந்தான்.

தன் சகாக்களிடம், "டேய்! பாருங்கடா இவனை.. முறைக்கிறான்.." என்று நக்கலடித்தவன், "அய்யோ பயமாயிருக்குப்பா.." என்று கேலி செய்துகொண்டே அவனருகில் வந்தான்.

"இது விஜியண்ணாவோட கடைடா.. நீ இங்க வேலைப் பார்க்கிறவன்.. நீயே முதலாளி கிடையாது.. சொன்னதை செய்டா.. வெளிய போடா" என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினான்.

அவ்வளவு தான்! அடுத்தநொடி வீசி அறைந்த அறையில் தள்ளியிருந்த புத்தக அடுக்கின் மீது மல்லாக்க விழுந்துகிடந்தான் அந்த நக்கல்வாதி.

வீசியின் இந்தத் திடீர் தாக்குதலில் மற்ற மூவரும் சுதாரித்து, "ஹேய்!" என்று ஏககாலத்தில் சத்தம் எழுப்பி அவனை அடிக்கப்பாய, வீசி நிதானமாக கையையும் காலையும் அகட்டி வைத்து கராத்தே ஸ்டான்ஸ் அமைத்தான்.

வீசியின் கண்ணில் துளிகூட பயமில்லை. ஏதோவொரு வெறி மட்டுமே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

புத்தகங்களின் மீது விழுந்து கிடந்தவன், "ஜீவாண்ணா! அன்னைக்கு சொல்லலை.. கான்ஸ்டபிளையே ஒரு பொடியன் ஜெயிச்சிட்டான்னு.. அது இவன் தாண்ணா" என்று வலியில் முனகினான்.

வீசி இன்னும் அவர்களை அடிக்கும் தோரனையிலேயே நின்றிருந்தான். "இப்போ வெளியப் போறீங்களா, என்ன சொல்றீங்க?" என்று கர்ஜித்தான்.

'போகவில்லை எனில் உங்கள் தாய் இன்று பேரிழப்பை சந்திப்பாள்' எனும் செய்தி அதில் பொதிந்திருந்தது. வந்தவர்கள் சற்று நிதானித்தார்கள்.

சற்று முன்பு ஜீவாண்ணா என்று அழைக்கப்பட்டவன் மட்டும், "என்னடா இந்தப்பொடியன் நம்மளையே மிரட்டிப் பார்க்கிறான்.. டேய்! நீ ஒரு தடவை எங்கக்கிட்ட வாங்கினா தான்டா சரி படுவ.." என்று வேகமாக வீசியை நெருங்கி தன் வலக்கையை அவன் முகத்தில் குத்துவது போல் ஓங்க, லெஃப்ட் பார்வர்ட் ஸ்டான்ஸில் நின்றிருந்த வீசி முகத்தை பின்னால் இழுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் வலக்காலை உயர்த்தி, 'னச்'சென்று அவன் பின்புற குறுக்கில் உதைத்து முன்னால் தள்ளினான். சடக்கென்று இடுப்பு எலும்பு முறிந்து 'ஹா' என ஓலமிட்டபடியே தரையில் விழுந்து கதறினான் அந்த ஜீவாண்ணா.

புத்தகங்களின் மீது படுத்துக் கிடந்தவன் வேகமாக எழுந்து அருகிலிருந்த நாற்காலியை தூக்கிக்கொண்டு அடிக்க வரவும், ஜஸ்ட்டுமிஸ்ஸில் விலகிய வீசி, காற்றில் ஏறி அவனை ப்ரண்ட் கிக் கொடுத்து வீழ்த்தினான். அப்படியும் முயன்று எழுந்து நின்றவனை, மீண்டும் அவன் உயிர் உறுப்பில் உதைத்தே படுக்க வைத்தான்.

இந்த சாகசங்களை எல்லாம் அரண்டு பார்த்திருந்த மற்ற இருவரும், "டேய்! எங்க ஆளுங்க மேலயே கைய வச்சிட்டியாடா?" என்று கோபமாக ஓடி வர, அருகில் வகை பிரித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த பத்து ராட்சத புத்தகங்களையும் சரமாரியாக அவர்களை நோக்கி எறிந்து தன்னை தற்காத்துக்கொண்டான் வீசி.

முதல் மூன்று புத்தகத்தை தவிர்த்து மற்றவையெல்லாம் குறி தவறின. ஆனாலும் மேலே பட்டுவிட்ட புத்தகமே அவர்களின் வேகத்தை குறைக்க போதுமானதாக இருந்தது.

இன்னும் வீசியெறிய ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தவன் அருகிலிருந்த பேப்பர்வெயிட்டையும் குறிபார்த்து எறிந்தான். அது இரண்டாவதாக வந்தவனது நெற்றிப்பொட்டில் பட்டு ரத்த ருசி பார்த்தது. பின்னால் வந்தவனது அலறலிலேயே முன்னால் வந்தவன் நின்றுவிட்டான்.

இன்னொரு பேப்பர் வெயிட்டும் தன் கையில் சிக்கியிருக்க, தூக்கிப்போட்டு பிடித்துக் கொண்டிருந்தவனிடம், "ஹேய் வேணாம்.. வேணாம்.." என்று மீதமிருந்தவன் கெஞ்சிக் கொண்டிருக்க, வீசிக்கு பின்னாலிருந்து, "இங்க என்ன கலவரம்?" என்று ஒரு கம்பீரக்குரல் கேட்டது.

வீசி திரும்பிப் பார்த்தபோது அதிர்ந்துபோனான். அங்கு விஜயாதித்தன் தன் டிரைவருடன் அவனை கண்டிக்கும் பார்வையில் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் பேப்பர்வெயிட்டை கீழே போட்டுவிட்டு தலை குனிந்து நின்றான்.

நிலைமையை சாதகமாக்கி எழுந்து நின்ற அடியாட்கள் நால்வரும், "அண்ணே, இவன் எங்களை.." என்று வலியோடு பேச முயல, "ஹிம்" என்று கையுயர்த்தி நிறுத்தியவர்,

"என்ன தம்பி நம்ம பயல்வ கிட்டயே உன் வீரத்தை காட்டியிருக்க? நான் இப்போ இம்ன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்.. என் கண்ணு முன்னாடியே பொருளெடுத்து பொட்டுன்னு போட்டுட்டு போய்கிட்டே இருப்பானுக.. யோசிக்கத் தெரியாத காட்டுப்பயலுவ தம்பி.. இவங்கக்கிட்ட வச்சிக்காத.. இது என் கடை.. நான் சொல்லி தான் இவனுங்க இங்க வந்தானுக.. இனி வேலை இருந்தா வரவும் செய்வானுக.. அவனுகளை பகைக்கிறது என்னை பகைக்கிறதுக்கு சமம்.. உறவுக்காரப் பையனா போயிட்டியேன்னு தான் சும்மா விட்டுட்டுப் போறேன் தம்பி.. இல்ல? ம்ம்! போ தம்பி!" என்று உறுமினார்.

வீசியிடம் அடி வாங்காமல் பிழைத்திருந்தவன் விஜயாதித்தன் இருந்த தைரியத்தில் வீசியின் காலரைப் பிடித்து வெளியே சாலையில் இழுத்துவந்து தள்ளினான்.

வீசி கோபத்தில் விறுவிறுவென எதிரிலிருந்த பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்துவிட்டான். அங்கு தண்ணி டேங்க் அருகில்போய் உட்கார்ந்து கொண்டவனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. இவர்கள் உள்ளே வந்ததன் நோக்கம் என்ன? புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகப்போகிறார்களா? சே! ஒன்றும் விளங்கலையே.

அவர்களைப் பற்றிய குழப்பத்திலேயே அடுத்த அரைமணி நேரத்தை கழித்துவிட்டு கடைக்குள் வந்து பார்த்தபோது, ஆள் அரவமின்றி வெறிச்சோடி கிடந்தது கடை. உள்ளே சென்று அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டான் வீசி.

நாலாவது கட்டில் கடைசிப் பகுதியில் மட்டும் ஒன்றிரண்டு புத்தகங்கள் கீழே விழுந்து சிதறிக்கிடந்தன. எடுத்து ஒழுங்காக அடுக்கிவைத்தான்.

இங்கு அவர்கள் வந்த காரணம் என்னவென்று அன்று முழுவதும் குழம்பிக்கொண்டே இருந்தான். ஆனால், ஒன்றும் பிடிபடவில்லை.

சந்தையில் அரங்கேற்றமாகியிருந்த புதிய புத்தகங்களை கட்டுகட்டாக ஆட்டோவில் கொண்டு வந்து இறக்கிய மோகன் அண்ணாவிடம் கேட்டபோது, அவரும் தனக்கு தெரியாது என்று கை விரித்துவிட்டார். இதுபோல் அவர்கள் அடிக்கடி வருவார்கள் என்றும், நீ அவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார். அவனும் அதன்பின் விட்டுவிட்டான்.

ஷ்ரதாவின் கெட்டநேரம் அவள் படிக்க வந்துகொண்டிருந்த சமயமா முரடர்கள் இப்படி வீசியிடம் வம்பு வளர்க்கவேண்டும். அன்றைய மாலையில் ஷ்ரதாவைப் போட்டு காய்ச்சு காய்ச்சுவென காய்ச்சி எடுத்துவிட்டான் வீசி.

முந்தைய இரண்டு நாட்களும் அவனிடம் அவள் பேசாத கோபம் வேறு இதில் சேர்ந்துகொண்டது.

நிமிடத்திற்கொருமுறை அவளை முறைத்துக்கொண்டே இருந்தான். அவளுக்கு பகீரென்று இருந்தது.

அவன் அடிக்கடி, "புரிகிறதா?" என்று கேட்டு வைக்கவும், அவளும் வினை ஏன் என்று புரிகிறது என்று பலமாக தலையை ஆட்டி வைத்தாள்.

ஆனால், கணக்கை போடச்சொன்னால் மட்டும் சனிக்கிரகத்தின் பலனால் மோசமாக சொதப்பி வைத்தாள்.

அவனுக்கு கோபம் இன்னும் தலைக்கேறியது. 'ஏன்? புரியாது என்று சொன்னால் அவள் வம்சத்துக்கே அவமானமாமா? இந்த மாதிரி தற்குறிக்கெல்லாம் எதுக்கு படிப்பு?' என்று மனதிற்குள்ளேயே அவளை கடித்துக் குதறினான்.

பின், ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவே திட்ட ஆரம்பித்துவிட்டான். "கண்ணுல மை அது இதுன்னு இழுத்துக்கிட்டு நல்லா மேக்கப் பண்ணிக்க மட்டும் தெரியுது இல்ல? கணக்கு மட்டும் போடத்தெரியாதா?" என்று கடுமையாக திட்டிவிட்டான்.

கணக்கை சரியாகப் போட்டுக்கொண்டிருந்த தாரிணி சந்து அவளை பாவமாகப் பார்த்தாள்.

திட்டிவிட்டு அவன் வாடிக்கையாளர்களை சந்திக்க சென்றுவிட, கைக்குட்டையால் கண்களை துடைத்தபடியே இருந்தாள் ஷ்ரதா. கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

நாகூர் அண்ணா கொண்டு வந்து வைத்த பூஸ்ட்டையும் அவள் இன்று குடிக்க மறுத்துவிட்டாள்.

கெட்டதிலும் நல்லதாக அன்று அந்த ஒருமணி நேரத்திற்குள் மட்டும் எட்டு கணக்குகளுக்கு தீர்வு எழுதியிருந்தாள்.

அவளை கவனித்துக் கொண்டிருந்த வீசிக்கும் தான் அதிகமாய் பேசிவிட்டதாகப்பட்டது.

தன்னை அலங்கரித்துக் கொள்வதென்பது மனித இயல்பு. அலங்காரம் என்ற ஒன்றிற்காக கண்டுபிடிக்கப்பட்டவை தானே நமது உடைகளும். காலப்போக்கில் அது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. நமக்கு ஒரு விஷயத்தின் மீது நாட்டமில்லை என்பதற்காக மட்டுமே அதை குறை கூறுவதென்பது எந்த விதத்தில் நியாயம்! அவன் ஒரு மாதிரி உணர்ந்தான். அவள் விடாமல் அழுது கொண்டிருந்தது வேறு அவன் குற்றவுணர்வை அதிகப்படுத்தியது.

'அடேங்கப்பா! ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறாள்.. இல்லை அழுது கொண்டிருக்கிறாள்.. எவ்வளவு கண்ணீர்! இவ்வளவு நாள் இவள் அழுததே இல்லையா?' மிகப்பெரும் கேள்வி எழுந்தது அவனுக்குள்.

எப்போதும் கிளம்பும் நேரத்திற்கு தாரிணி எழுந்து நின்றாள். ஷ்ரதாவையும் அழைத்ததற்கு மீதி கணக்கையும் முடித்துவிட்டு தான் வருவேன் என்று மறுத்துவிட்டாள் அவள்.

தாரிணி நேரம் தாண்டிவிட்டதால் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.

ஷ்ரதா மட்டும் தொடர்ந்து கணக்கு போட்டுக்கொண்டிருந்தாள். அவ்வப்போது விரல்களை நீட்டி மடக்கி வேறு சிறுகுழந்தை போல் எண்ணிக் கொண்டிருந்தாள்.

கூடுதல் பதினைந்து நிமிடங்கள்... யாருமில்லா தனிமை... அவனுக்கு அவளை பார்க்கச் சொல்லிக்கொண்டே இருந்தது.

திரும்பி திரும்பி பார்த்தான். இன்னும் அழுகையை முழுகிய பாடில்லை அவள்.

அவனுக்கு கடுப்பாகயிருந்தது. எழுந்து அவள் அருகில் வந்து அமர்ந்தான். அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. இடக்கையிலிருந்த கைக்குட்டையைத் தான் அவனாக நினைத்து கசக்கிக் கொண்டிருந்தாள்.

பின், கடைசி கணக்கையும் போட்டு முடித்துவிட்டதாக நோட்டை அவன் பக்கம் தள்ளி வைத்தாள்.

அவனுக்கு இவ்வளவு நாள் எதுவும் பேசாமல் இப்போது திடீரென பேர் சொல்லி அழைக்கவே தயக்கமாக இருந்தது. பொறுமையாக நோட்டைத் திருத்தினான். போட்டிருந்த பனிரெண்டு கணக்குகளில் எட்டு மட்டுமே சரி. அவனுக்கு அந்த நான்கு கணக்குகளையுமே தப்பு என்று குறிப்பிட மனம் வரவில்லை.

அனைத்து கணக்குகளுக்குமே சரியென்று டிக்கிட்டு, வெரிகுட் என்று எழுதி, ஸ்மைலி வரைந்தான்.

அவள் நோட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அழுகை நின்றிருந்தது.

நோட்டை மூடியவன் அட்டையில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த கவன ஈர்ப்பு லேபிளை பார்த்தான். சிவப்பு ரோஜாக்களின் அருகில் பெயர், வகுப்பு, பிரிவு, பாடம், பிறந்த தேதி, ப்ளட் குரூப் என வரிசையாக கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்திற்கும் பொறுப்பாக பதிலளித்திருந்தாள் ஷ்ரதா.

"உன் பிறந்த நாள் ஜூலை இருபத்தியொன்பதா? அன்னைக்கு என்ன நாள் தெரியுமா?" இயல்பாக அவளிடம் பேச்சுக்கொடுக்க முயற்சித்தான் வீசி. அவள் இல்லையென்று தலையாட்டினாள்.

"வேர்ல்டு டைகர்ஸ் டே.. புலியெல்லாம் அழாது தெரியுமா? நீ என்னடான்னா ஒரு டேம்மே கண்ணுல கட்டி வச்சிருக்க.. ஒருவேளை அந்த டேம் லீக் ஆகிடக்கூடாதுன்னு தான் தினமும் டார்க்கா கண்மையில அணை கட்டிட்டு வர்றியோ?" சொல்லிவிட்டு மகிழ்ந்து சிரித்தான்.

அவள் சிரிக்கவில்லை. அவன் கன்னக்குழியையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

'என்ன சொன்னால் சிரிப்பாள் இவள்? இப்படி நிற்கிறாள்?' இறுதியில் அவனே இறங்கி வந்து மன்னிப்புக் கேட்டான். "என் வார்த்தைகள் உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா சாரி" என்றான்.

அவள் விழிகளை உயர்த்திப் பார்த்தாள். முதல்முறை இருவரின் கண்களும் நேர்கோட்டில் சந்தித்தது.

'ஹப்பா! என்ன கண்ணுடா சாமி! இப்படி பார்க்குறா' நோட்டை திருப்பிக் கொடுத்தான்.

"தனியா போயிடுவ இல்ல?"

"ம்ம்" என்று தலையாட்டிவிட்டு நோட்டை எடுத்துக்கொண்டு அவனை திரும்பிப் பார்த்தபடியே சென்றாள் ஷ்ரதா.

f5BbgcA9h_egXXD1jTjETy6DqNBGLBesspv15eScg-ElcP9AXZylHtov7A-HMcEaN1lJ-u1KrNOnIW2P8O6V06ACzBWbCCDg4_imRDG5MAXW_L1VLicCBREYw_icJjq_ZN295jqP


காதல் கணம் கூடும்…

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்😊

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கீழே உள்ள கருத்து குகைக்குள் செல்ல நீங்கள் "அண்டாகா கசம்.. அபுக்கா குக்கூம்.. திறந்திடு சீசேம்" மந்திரம் போடவேண்டாம் ப்ரெண்ட்ஸ். ஜஸ்ட் தொட்டாலே போதும்.

கருத்து பதிவிடுவதற்கான சுட்டி,
கருத்து குகை
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 18​



அடுத்த நாள் ஷ்ரதா வந்தபோது கணக்கில் அவள் இடறும் இடம் எவை என்பதை அவளிடம் பேச்சுக்கொடுத்தே கண்டுபிடித்துவிட்டான் வீசி.

ஆனால், தான் கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டால் கூட பிழிந்து பிழிந்து அழும் அவளின் வாடிக்கை தான் அவனுக்கு எரிச்சலைத்தந்தது.

ஒருமுறை நோட்டின் பக்கங்களை புரட்டிக்கொண்டே, "ஹேய்! இங்கப்பாரு.. எதுக்கு அழற? ம்ம்?" என்றான்.

அவள் நிமிர்ந்துப் பார்க்கவில்லை. "இங்கப்பாரு.. இங்கப்பாரு.." என்று சொடுக்கிட்டு அதட்டியதும் தான் நிமிர்ந்துப் பார்த்தாள்.

"தப்பு செஞ்சா தான் பயப்படனும்.. நீ தப்பு செஞ்சியா?" என்றதும், அவள் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

"அப்புறம் ஏன் பயப்படுற? அழற? உங்கப்பா அழுதா தான் காரியம் நடக்கும்னு உனக்கு சொல்லிக் கொடுத்தாரா?" எனவும் வேகமாய் இல்லை என்று தலையை இடவலம் ஆட்டினாள்.

"இல்லைல? அப்போ பயப்படக்கூடாது! அழக்கூடாது! புரியலைன்னா புரியலைன்னு சொல்லனும்.. உன் கண்ணைப் பார்த்தே நீ மனசுல என்ன நினைக்கிறேன்னு கண்டுபிடிக்க நான் என்ன ரிஷியா? நீ வெளிய சொன்னா தானே எனக்குத் தெரியும்? உன் ப்ரெண்ட் தானே தாரிணி? அவளுக்கு ஒரு விஷயம் புரியலைன்னா எப்படி என்னைப் போட்டு துளைச்சி எடுக்குறா.. அவளைப் பார்த்து கத்துக்கோ!" என்றான்.

இவர்கள் பேசுவதை ஒரு காதை மட்டும் செயல்பாட்டில் வைத்து ஒற்றுகேட்டுக் கொண்டிருந்த தாரிணி, "சார், இது வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி இருக்குதே" என்றாள்.

"சந்தேகமே வேண்டாம் தாரிணி.. வஞ்சப்புகழ்ச்சியே தான்.." என்று சிரித்தான் அவன்.

அவள், "ம்க்கும்" என்று சலித்து திரும்பிக்கொண்டாள்.

ஷ்ரதா அவனது சிரிப்பை கண்கொட்டாமல் பார்த்தபடியே ஆசையாக எண்ணிக்கொண்டாள். 'இவரை இப்படி சிரிக்க வைக்கவே எது வேணாலும் செய்யலாம்'

வீசி சிரித்துக்கொண்டே ஷ்ரதாவிடம் கேட்டான். "நீ ஏன் அவளை மாதிரி வெளிப்படையா பேச மாட்டேங்கிற ஷ்ரதா?"

'ஷ்ரதா' எனும் பெயருடனே அவளது அகவுலகம் சுழல மறுத்து நின்றுவிட்டது.

ஆம், அவள் பெயரை முதல்முறையாக உச்சரித்திருந்தான் வீசி. அது தெரியாமல் அவன் தொடர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டேப் போனான்.

தாரிணி அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்தாள். 'இவர் ஏன் அவளிடம் இப்படி அறுத்துத்தள்ளி கொண்டிருக்கிறார்? வகுப்பில் அவளது ஸ்பீக்கர் தான் எட்டு ஊருக்கு கிழியுமே.. என்னவோ இங்க வந்து தான் செய்வினை செஞ்ச பொம்மை கணக்கா உட்கார்ந்திருக்கா' என்று மனதுள் முரண் பேசிக்கொண்டாள்.

நீண்ட சொற்பொழிவின் முடிவில் அவன், "ம்ம் சொல்லு! இனி வாய் திறந்து பேசுவியா?" என்றதும், 'ம்ம்' என்று தலையாட்டி வைத்தாள் ஷ்ரதா.

அவன் சுத்தம் என்று தன் தலையில் கைவைத்துக் கொண்டான். தாரிணி அடக்க மாட்டாமல் சத்தம்போட்டு சிரித்தாள்.

அன்றைய கலகலப்பான நாளைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவன் ஒவ்வொரு கணக்கையும் அவளுக்குப் புரியும்படி ஒரு தடவைக்கு நான்கு தடவையாய் சொல்லிக்கொடுக்க, அது நடுநிசியில் எழுப்பிக்கேட்டால் கூட அடுத்த ஸ்டெப் என்னவென்று சொல்லும் அளவிற்கு அவளுக்கு மனப்பாடமானது.

அவன் தனக்கு கொடுக்கும் இந்த தனிப்பட்ட கவனமானது தன்னை பிரத்யேகமானவளாய் உணரச்செய்ய, அவனுக்காகவே வீட்டில் இரவு கண்விழித்துப் படிக்க ஆரம்பித்தாள் ஷ்ரதா.

சண்டித்தனம் பண்ணும் dx, dy கணக்குகளை எல்லாம் திரும்ப திரும்ப போட்டுப்பார்த்தாள்.

இதுவரை சாத்தானின் உறைவிடமாய் தோன்றிய கணக்குப் புத்தகம் சட்டென்று தேவதைகளின் கூடாரமாய் மாறிய விந்தை மயிர் கூச்செறிய செய்தது அவளை.

இரவில் கனவில் "MATHEMATICS" நகரத்துக்குள் நுழைந்தாள். நகரின் அனைத்துப் பகுதிகளிலும், தான் கணக்குப் புத்தகத்தில் பார்த்த குறியீடுகளும் எண்களுமே நகரவாசிகளாய் தெரிய, தலை கிறுகிறுத்துப் போனாள். எக்ஸ், ஒய், இசட், ப்ளஸ், மைனஸ், டெல்டா என்று சுற்றி குள்ள மனிதர்கள்.

அவள் விழிகள் விரிய அந்த 'கிராப் ஷீட்' கட்டமைப்பில் இருந்த நரகத்தின் வீதிகளுக்குள் நடந்துகொண்டே இருந்தபோது, ஒவ்வொரு கணித வகுப்பின் போதும் தான் சபித்த மேதைகளை எல்லாம் சந்திக்க நேர்ந்தாள். உளமார அவர்களிடம் மன்னிப்பும் கேட்டாள். கனவிலேயே தன் ஆத்மா பரிசுத்தமாகிவிட்டது போல் ஒரு புளகாங்கிதம் அவளிடம். அந்நிலையிலேயே தூக்கத்தில் முணுமுணுத்தாள், "தான்க்யூ வருண் அத்தான்" என்று.

காலத்தை நாம் இரு வகைகளில் தூற்றுவோம். ஒன்று கடினமான தருணங்களில் நகர்ந்து தொலையேன் என்போம். இரண்டு சுவையான தருணங்களில் இந்நிலை இப்படியே இன்னும் கொஞ்சம் நீடிக்கக்கூடாதா? ஏன் பறக்கிறாய்? என்போம்.

ஷ்ரதாவும் இரண்டு வார முடிவில் இரண்டாம் வகையில் தான் காலத்தை தூற்றிக்கொண்டிருந்தாள். இனி எப்போது இந்த வாய்ப்பு கிட்டுமோ என்றும் கலங்கிக் கொண்டிருந்தாள்.

'முட்டாள்கள் வாய்ப்பை தேடுகிறார்கள். ஆனால் அறிவாளிகள் உருவாக்குகிறார்கள்.' பள்ளியில் அறிவிப்புப்பலகையில் ஷ்ரதா அடிக்கடி பார்க்கும் வரிகள் இவை. நல்ல நேரம் அவளுக்கு அது இப்போது ஞாபகம் வந்தது. 'எப்படியாவது கணக்கில் நூத்துக்கு நூறு வாங்கி விட்டால் போதும்.. கௌரவமாக 'சாக்லேட் கொடுக்க வந்தேன் சார். நீங்க தான் சார் இதுக்கு காரணம்' என்று பெரிய ஐஸ்மலையையே அவர் தலையில் தூக்கி வைத்து நெருங்கி விடலாம்.. முடியுமா? இதே வேகத்தில் முயன்றால் நிச்சயம் முடியும்' என்று பலவாறு சிந்தித்தவாறே அதை செயல்படுத்தத் துவங்கினாள்.

அது நிச்சயம் எளிமையான காரியமாக இருக்கவில்லை அவளுக்கு. ஒரே நாளில் விதையை விருட்சமாக்க முடியுமா என்ன? ரொம்பவே சிரமப்பட்டாள்.

தன் மகளின் படிப்பார்வத்தை மீனாட்சி, விஜயாதித்தனின் காதிலும் கொஞ்சம் போட்டு வைத்ததின் பலனாக, அவரும் மகளை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்.

ஷ்ரதா, 'ஆஹா! ஒரே விரதத்திற்கு இரண்டு பலன்' என்று உற்சாகமாகினாள்.

தேர்வன்று ஷ்ரதாவின் கடினமுயற்சி அவளை கைவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வினாத்தாளை எளிமையாய் மாற்றித்தந்த முருகனுக்கு கோடிமுறை நன்றி சொல்லினாள்.

ஆனால், ரிசல்ட் தான் அவள் எதிர்பார்த்தபடி வரவில்லை. கணக்கில் இருநூற்றுக்கு நூற்றியெண்பது தான் எடுத்திருந்தாள். கந்தன் கருணையேயின்றி கவிழ்த்துவிட்டார். மற்ற பாடங்களிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. மொத்தத்தில் அவள் கூற்றுப்படி கிரகங்களின் திட்டமிட்ட சதியால் தொள்ளாயிரத்து ஐந்து மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாள் ஷ்ரதா. மிகுந்த கவலையால் அவள் முகம் கூம்பிப்போனது.

'சரி, கணக்கில் நூற்றியெண்பது வாங்கியதே பெரிய விஷயம். இதையும் விட்டால் அவரிடம் பேச வாய்ப்பே கிடைக்காது' என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு, தன் அன்னையிடம் தாரிணியின் வீட்டிற்கு செல்வதாக பொய்கூறிவிட்டு தங்கள் புத்தகக்கடைக்கு வந்தாள்.

ஆனால், அங்கு வீசியிடம் பேசிக்கொண்டிருந்த சிவனேஸ்வரனைக் கண்டதும் சமைந்துப் போய்விட்டாள். 'அத்தானா? இவர் எங்கே இங்கே? சாயங்காலம் ஆறுமணிக்குப்போனா அவரை தனியா சந்திக்கலாம்னு தானே திட்டம்போட்டு இப்போ வந்தேன்.. முருகா! என்ன இது அக்கிரமம்! அப்போ என் ரெண்டு மாச உழைப்பும் வீணா?'

புத்தகக்கடையின் வாசலில் பேயறைந்தவள் போல் நின்றிருந்தவளை, "என்ன ஷ்ரதா! நீயெங்கே இங்கே?" என்று கூப்பிட்டான் சிவனேஸ்வரன்.

இப்போது எப்படி சமாளிப்பது என்று கருவிழியை வல விளிம்புக்கும் இட விளிம்புக்கும் உருட்டியவள், "அது? அது? ஹான்! ரொம்பப் போரடிச்சதா அதான் கதை புக் ஏதாவது வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன் அத்தான்.." என்று தேடி காரணத்தை கண்டுபிடித்துவிட்டாள்.

"தனியாவா நடந்து வந்த?"

அவள் ஆமாம் என்றால், தானே அவளை தனது பைக்கில் கொண்டுபோய் விடலாம் என்பது அவனது திட்டமாக இருந்தது.

"இல்லத்தான், லீவுல அப்பா புது ஸ்கூட்டி வாங்கித் தந்தாங்க.. ட்ரைவிங் ஸ்கூல் போய் ஓட்டக் கத்துக்கிட்டேன்.. இப்போ அதுல தான் வந்தேன்.. வெளிய நிற்கிற பிங்க் கலர் ஸ்கூட்டி என்னோடது தான்" என்று இடையிடையே வீசியைப் பார்த்துக்கொண்டே பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

சிவனேஸ்வரனிடமிருந்து ஏமாற்றமாய் ஒரு 'ஓ' வந்தது.

பின், "ரிசல்ட் பாத்தேன்.. முன்ன சொன்ன மாதிரி என்ஜினீயரிங்கே அப்பிளை பண்ணிடு ஷ்ரதா.. மாமாக்கிட்ட பேசினேன்.. அவர் சிவில் என்ஜினீயரிங் சேர்ப்போம்னு சொன்னாரு.. உனக்கு சிவில் ஓகே தானே ஷ்ரதா?" என்றவன் கேட்டதும், 'சிவிலோ தவிலோ என்னவாவது படிக்கிறேன்.. சும்மா கேள்விக்கேட்டு கழுத்தறுக்காதீங்க அத்தான்' என்று மனசாட்சிக்கு விரோதமில்லாமல் அகவுலகில் பதிலளித்தவள், புறவுலகில் விரோதமாக, "ஓகே தான் அத்தான்" என்றுவிட்டு மீண்டும் வீசியைப் பார்த்தாள்.

இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த வீசி, "ஸ்டோரி புக்ஸ் அந்தப் பக்கம்" என்று கைகாட்டினான்.

அவளும் இப்போது என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டே கதைப்புத்தகங்கள் இருக்கும் கட்டிற்குள் சென்றாள். அப்போது தான் அவள் சிப்பி மூளைக்குள் யோசனை முத்தொன்று முளைத்தது.

இங்கு நண்பர்கள் இருவரும் புதிதாக சந்தையில் இறக்குமதி ஆகியிருந்த பைக்குகளை உரையாடலிலேயே உதிரிபாகங்கள் ஆக்கிக்கொண்டிருந்தார்கள்.

பத்து நிமிடங்கள் கழித்து சரியாக பதினைந்து புத்தகங்களை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தவள், அவற்றை நோட்டில் வரிசை மாற்றி குறித்து வைக்கப்போனவனை, "இல்ல! இல்ல! இதே வரிசையில தலைப்பு எழுதுங்க" என்று தடுத்தாள். அவனும் அதன்படியே செய்தான்.

பிறகு மீண்டும் உள்ளேப்போய் அடுத்த பதினைந்து செட் புத்தகங்களை தூக்கிக்கொண்டு வந்தாள். அதையும் வரிசை மாற்றாமலேயே நோட்டில் தலைப்பெழுதிக்கொள்ள சொன்னாள். வீசியும் பொறுப்பாய் எழுதிவைத்துக்கொண்டான்.

சிவனேஸ்வரன், "இவ்வளவு புக்ஸையும் வாசிச்சிருவியா நீ?" என்று திகைப்பாக கேட்டபோது, "ம்ம் வாசிச்சிருவேன் அத்தான்" என்று முறுவலித்தவள், திடீரென ஞாபகம் வந்தவள் போல் வீசியிடம், "ஒரு புக் மட்டும் மேல உயரத்துல இருக்கு.. எடுத்துக் கொடுக்க கொஞ்சம் வர்றீங்களா?" என்றாள்.

வீசிக்கு முன் சிவனேஸ்வரன் எழவும் ஷ்ரதா பதற்றமாக, "நீங்க உட்காருங்க அத்தான்.. நாமெல்லாம் முதலாளிங்க.. வேலைக்காரங்க இருக்கும்போது வேலை செய்யக்கூடாது.. அவரு எடுத்துத் தருவாரு.." என்று தடுத்தாள்.

ஷ்ரதாவின் 'நாமெல்லாம் முதலாளிங்க' என்ற வரியில் சிவனேஸ்வரன் ஜிவ்வென்று மேகங்களுக்கிடையே பட்டமான அதேவேளையில், வீசி 'வேலைக்காரங்க' என்ற பதத்தில் முகம் கருத்துப்போனான்.

'காட்டிவிட்டாள் அவள் பணக்காரப் புத்தியை.. அழகாய் வளைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருந்த பாம்பு கக்கிவிட்டது அதன் விஷத்தை.. இவளைப்போய் வெகுளி என்று நினைத்தேனே.. அகம்பாவி..' என்று புலம்பித் தள்ளினான்.

உயரத்தில் இருக்கும் புத்தகத்தை காண்பிப்பதற்காக அவள் ஒயிலாக முன்னே நடந்து செல்ல, அவள் முதுகில் அசைந்தாடிய பின்னலை வெறுப்பாக பார்த்துக்கொண்டே வந்தான் வீசி.

மூன்றாம் கட்டுக்குள் அவன் நுழைந்த உடனேயே, தோளில் தொங்கி தொடையை தட்டிய தனது ரவுடி கைப்பையைத் திறந்து, அவனிடம் டைரிமில்க் சாக்லேட்டை நீட்டினாள்.

அவன் விளங்காமல் பார்த்தபோது, "மேத்ஸ்ல நான் நூத்தியெண்பது சார்.. நீங்க தான் அதுக்கு காரணம்.. தான்க் யூ சார்" என்று அவன் கையைப் பிடித்து சாக்லேட்டை வைத்தாள்.

அவன் வேண்டாவெறுப்பாய் முகத்தைத் திருப்பினான். அவளுக்கு அதற்கு காரணம் புரியாமல் இல்லை. "வேலைக்காரர்னு ரொம்ப அலட்சியமா பேசிட்டதுக்கு சாரி சார்.. உங்கக்கூட தனியா பேசணுங்கிறதுக்காக தான் அப்படி வெடுக்குன்னு பேசிட்டேன் சார்.. அப்புறம் இப்போ நான் எடுத்துட்டுப் போகிற புக் லிஸ்ட்டை நிதானமா ஒரு தடவை வாசிச்சிப் பாருங்க சார்.. என் மனசு உங்களுக்குப் புரியும்" என்றுவிட்டு கைக்கெட்டும் உயரத்தில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கல்லாப்பகுதிக்கு சென்றுவிட்டாள்.

விதிர்த்து போயிருந்தவன் தலையை கோதிக்கொண்டு வெளியே வந்தான். பின், புத்தகங்கள் அனைத்தையும் அவள் எடுத்துச் செல்வதற்கு வசதியாக தாம்புப்போட்டு இறுக்கமாகக் கட்டினான். இறுதியில் இரண்டு கட்டு புத்தகங்களையும் ஸ்கூட்டியில் அவள் கால் வைக்கும் பகுதியில் சென்று ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டு, சிவனேஸ்வரனின் அருகில் வந்து நின்று கொண்டான்.

ஷ்ரதா கிளம்பும் முன்பு வாசலில் நின்ற சிவனேஸ்வரனுக்கு 'பை' காட்டிவிட்டுப் போனாள்.

வீசியின் ஆழ்மனம் சத்தமாக சொன்னது, சிவனேஸ்வரனிடம், 'சரியான டிராமா குயின் இவ'

பாபம்! அவனுக்குத் தான் அது கேட்கவில்லை.

வீசி மீண்டும் கல்லாவில் வந்து உட்கார்ந்தபோது சிவனேஸ்வரன் ஷ்ரதாவை பற்றித்தான் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான். இடையில், "சாரிடா வீசி, ஷ்ரதா ஒரு குழந்தை மாதிரி.. தெரியாம பேசிட்டா.. அவ பேசினது எதையும் மனசுல வச்சிக்காத" என்று அவள் பேசியதற்கும் மன்னிப்புக் கேட்டான்.

வீசி அந்த மன்னிப்பை காதில் ஏற்றிக்கொள்ளவில்லை. கையருகிலிருந்த கனத்த நோட்டில் தான் கண்களை ஓடவிட்டு வாசித்துக் கொண்டிருந்தான். அவள் எடுத்துச்சென்ற புத்தக தலைப்புகள் எல்லாம் வரிசையாக, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருந்தன.

*********************

என்னவென்று நான் சொல்ல
இமையோரம் உன் நினைவு

தீயாக உன்னைக் கண்டேன்
காதலாகி கசிந்துருகி
மாறியது நெஞ்சம்

தன்னந்தனிமையிலே
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன்னை விட ஓர் உறவா?

விடிகின்ற வேளையிலே
கனா கண்டேன்
உன்னோடு நான்
நிலா வெளியில்
நிழலோடு நிழலாக
நதியோரம் நடந்த போது
நேசம் மட்டும் நெஞ்சினிலே.

ஓரவிழி பார்வையிலே
பூவே மயங்காதே
சொன்னது நீதானா?

உயிரே உன்னைத்தேடி
அலை பாயுது மனசு

கன்னத்தில் முத்தமிட்டால்
வானம் வசப்படும்

காத்திருந்தேன் காற்றினிலே
பூகோலம் போட வா!
மனதோடு பேசவா!

நீயின்றி நான் இல்லை
எண்ணியிருந்தது ஈடேற
காற்றோடு தூது விட்டேன்

வைகறையே வந்துவிடு
உன் மனதை தந்துவிடு!

இப்படிக்கு உன் இதயம்


*********************

சிவனேஸ்வரன் இன்னும் அவனுக்கு முன்னால் உட்கார்ந்து ஷ்ரதாவை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். "ஷ்ரதா ஒரு தேவதை.. அவளை மாதிரி ஒரு அழகை நிச்சயமா எங்கேயும் பார்க்க முடியாது வீசி.. யோசிச்சிப்பாரு! அந்த அழகு மொத்தமும் எனக்கே சொந்தம்"

Lb4AzfIbPfBprVZZioL2IVkLNFAZXvt9Zi7n5qSDi0yD5D-8cU7UQNPNMpfZhKpKwYdWvV3kF8hVOoQaqAhZWUKWnbCwQn5VyMwaHc1SKQCEBFuLZgS-gFRmWJv4TFNrZDfVffiK


காதல் கணம் கூடும்...

ஷ்ரதா எடுத்திருந்தப் புத்தகங்களில் கடைசி புத்தகம் தவிர்த்து மற்ற அனைத்தும் முத்துலட்சுமி ராகவன் அம்மாவுடைய புத்தகங்கள் ப்ரெண்ட்ஸ். அவர்களுக்கு நான் செலுத்தும் சிறுஅஞ்சலியாக இந்த அத்தியாயத்தை கருதுகிறேன்.

அப்புறம் சென்ற அத்தியாயத்திற்கு கருத்துத்திரியில் 500-ஆவது கருத்தை பதிவிட்டிருந்த தோழி அரும்பு அவர்களுக்கு எனது அன்பும்❤️ கைதட்டல்களும்👏.

இதேபோல் தளத்தில் 1000-ஆவது கருத்தை பதிவிடுபவர்களுக்கு எனது அன்போடு முத்தங்களும் கிடைக்கும். பார்ப்போம் யார் அந்த அதிர்ஷ்டசாலியென்று.

என்றும் உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கீழே உள்ளதில் 'பச்சை'யென்று எழுதியிருப்பதை சரியாக கண்டுபிடித்து தொடுங்கள் பார்ப்போம்.

கருத்துத்திரி,
பசசை பச்ச பச்சை பட்சை

(முக்கியக் குறிப்பு: கருத்துத் திரியில் அல்லாமல் இங்கு கதை திரியில் வந்து கருத்து பதிவிடுபவர்கள் எல்லாம் அந்நியனால் கருட புராணத்தின்படி தண்டிக்கப் படுவார்களாம். ஏனென்றால் அவர்கள் எல்லாம் ரூல்ஸை மீறியவர்களாம்😂.
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 19​



என்ன தான் ஷ்ரதா தைரியமாக தன் காதலை வெளிப்படுத்திவிட்டாலும் வீசி என்ன சொல்வானோ, எப்படி நினைப்பானோ என்று பயந்துகொண்டு தான் இருந்தாள்.

அந்த பயத்தில் அவனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை கூட அவள் நடைமுறைபடுத்தவில்லை. வீட்டிற்கு எடுத்து வந்திருந்த புத்தகங்களின் கதைமாந்தர்களுடனே கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

புத்தகங்களை வாசித்து முடித்ததும் அவனை நேரில் சந்திக்கத் துணிவின்றி, ஏதோ புத்தகம் வாங்கச் செல்வதாக பேச்சுவாக்கில் கூறிய தாரிணி சந்துவிடமே கடைக்கும் கொடுத்தனுப்பினாள்.

ஆனால், தாரிணி ஷ்ரதாவிடம் சொன்னபடியே வெறும் புத்தகம் வாங்க மட்டும் கடைக்குச் செல்லவில்லை!

தேர்வு முடிவுகள் வெளியான சூட்டுடனே தன் அப்பாவின் கைங்கரியத்தால் பொறியியல் கல்லூரியில் எளிதாக இடம் கிடைத்துவிட்டாலும் ஷ்ரதா ஏனோ அவ்வளவு ஆர்வத்தோடு படிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் புதிய கல்லூரி, புதிய தோழிகள், புதிய பேராசிரியர்கள் என்றே தடுமாறிக் கொண்டிருந்தாள்.

அந்த நாட்களில் அவளும் வீசியும் சந்திக்க முயற்சிக்கவில்லை எனினும் விதி அவர்களை சந்திக்க வைத்தது. அதற்கு சிவனேஸ்வரனுக்கு பதில் மதுபாலாவையும் பயன்படுத்தியது.

ஆம், அப்போது தான் மதுபாலாவுக்கு ஏழாம் மாதம் நடந்து கொண்டிருந்தது. வீட்டில் அனைவரும் வளைகாப்பு செய்ய வேண்டும் முடிவு செய்திருந்தார்கள்.

வீசி இந்த விழாவிற்கு நிச்சயம் வருவான் என்பதால் விழாவன்று மிகுந்த கவனமெடுத்து தன்னை அலங்கரித்திருந்தாள் ஷ்ரதா.

அவள் எதிர்பார்த்தபடியே வீசியும் விழாவில் பங்கு பெற்றிருந்தான். அவனுடன் இரட்டை சகோதரன் போல் அவன் ஆதர்ச நண்பனான சிவனேஸ்வரன் திரிந்து கொண்டிருந்தது தொந்தரவாகத்தான் இருந்தது ஷ்ரதாவிற்கு. யூடியூபில் வீடியோவிற்காக விளம்பர தொல்லைகளை சகித்தல் போல அவனை சகித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அவஸ்தையறியாத வீசி சாண்டீலியரின் தீட்சையில் பொலிவுடன் காணப்பட்ட தன் தமக்கையையே, ஓவியத்தில் தெய்வம் போல் ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அருண்மொழி மதுபாலாவின் அருகில் ஏதோ நான்குபேர் தன் நெஞ்சில் இன்று மெடல் குத்தப்போவது போலவே பெருமையாக போஸ்கொடுத்து நின்றிருந்தான்.

வளைகாப்பு என்பதால் பெண்மையின் முழுமையை எட்டி மொத்த அழகும் முகத்தில் திரள மினுங்கிக் கொண்டிருந்தாள் மதுபாலா. அபிராமியைப் போலவே நல்ல நிறம் அவள். அவளின் அழகே கல்லூரியில் அரியருடன் வலம் வந்துக்கொண்டிருந்த அருண்மொழியை அவளை திரும்பிப் பார்க்கவும், திரும்ப திரும்ப பார்க்கவும் வைத்தது.

இந்த மகிழ்ச்சியான வைபவத்தில் வீசியின் முகம் என்னவோ வாட்டமாகவே காணப்பட்டது. ஷ்ரதா இதை கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.

அவனது அந்த முகவாட்டத்திற்கு காரணம், 'வளைகாப்பு முடிந்த பின் மதுபாலாவுக்கு பிரசவம் எங்கள் வீட்டில் தான் நடக்க வேண்டும்' என்று அருண்மொழி அதிரடியாக அறிவித்ததே.

இதை 'அண்ணா சொன்னது சரி தான். இங்கு தான் சகலவிதமான வசதிகளும் அண்ணிக்கு கிடைக்கும்' என்று நம்பிக் கொண்டிருக்கும் ஷ்ரதா அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

விழா துவங்கிய சிறிது நேரத்திலேயே அவள் உவந்து சாக்லேட் தட்டை தூக்கிக்கொண்டு அங்குமிங்குமாக வலம்வந்து கொண்டிருந்தாள். அந்த சாக்கில் அவள் ஓரமாக நின்றிருந்த வீசிக்கும் சிவனேஸ்வரனுக்கும் சாக்லேட் நீட்டியபோது வீசி வேண்டாமென்று மறுத்துவிட்டான். அதில் அவள் முகம் சட்டென்று வாடிப்போனது.

அவள் நீட்டிய சாக்லேட்டை வாயில்போட்ட சிவனேஸ்வரனுக்கு சாக்லேட்டின் தித்திப்பைக் காட்டிலும் அவள் அழகின் தித்திப்பே துளித்துளியாக உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது.

தூரமாகயிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயாதித்தன், வீசி சாக்லேட்டை மறுத்ததைப் பார்த்து, 'திமிரு பிடிச்சப் பய' என்று கருவிக் கொண்டார்.

நல்லநேரம் துவங்கியதும் முதலில் மாமனார் வீட்டின் சார்பில் தங்க வளையல்கள் அணிவிக்கப்பட்டது மதுபாலாவுக்கு. அடுத்து விஜயாதித்தனின் தங்கை கோகிலா வந்து வைரகற்கள் பதிக்கப்பட்ட காப்புகளை தோரணையாக அணிவித்துவிட்டார்.

மூன்றாவதாக வந்த அபிராமி தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் செய்திருந்த மெலிதான இரண்டு தங்க வளையல்களை அவள் கையில் அணிவிக்க முயன்றபோது அவரின் கஷ்டகாலம் அந்த வளையல் மதுபாலாவின் கைகளுக்குள் நுழையவில்லை. சபையின் முன் தர்மசங்கடத்தில் நின்றிருந்தார் அவர்.

சற்றுத் தள்ளி நின்றிருந்த மீனாட்சி, "அடடே! என்ன சம்பந்தி வளையல் சேரலையா? அளவு வளையல் எடுத்துட்டுப் போகாம வாங்கிட்டு வந்துட்டீங்க போல.. இப்போதைக்கு இருக்கட்டும் சம்பந்தி.. பின்னாடி கடைக்குப்போய் மாத்திக்கலாம்.." என்று சூழலின் கனத்தைக் குறைத்தார்.

ஆனால், கோகிலா நீங்கள் விட்டாலும் நான் விடுவேனா என்று, "உங்க வீட்டுல இருந்த போது எலும்பும் தோலுமா இருந்தா.. அப்போ இந்த அளவு பத்தியிருக்கும்.. இங்க வந்த பின்னாடி தான் எங்க அண்ணியோட ஊட்டத்துல திமுதிமுன்னு ஊதிட்டாளே.. இப்பவும் நீங்க பழைய அளவுலயே வளையல் எடுத்துட்டு வந்தா எப்படி சேரும்? ஒருவேளை கொண்டு போன காசுக்கு இது தான் சரியா வந்ததுன்னு எடுத்துட்டு வந்துட்டீங்களோ?" என்று வெடித்துச் சிரித்தார்.

வீசிக்கு தன் அன்னையை தட்டிக் கேட்காத சிவனேஸ்வரன் மீது கோபம் பழியாக வந்தது. 'இவன் அவரை அம்மா என்று அதட்டினால் தான் என்ன?'

நண்பனோ, 'எனது அம்மா எப்பவும் இப்படி தான்' என்பது போலவே நின்றிருந்தான்.

கோகிலாவின் இந்த கொக்கரிப்பில் அபிராமியுடன் சேர்த்து மதுபாலாவுக்குமே கண்களில் நீர் திரண்டு விட்டது. கர்பமானது முதல் தன் பிறந்த வீட்டிற்கே செல்லவில்லை அவள். அருண்மொழி தன்னுடன் இணக்கமாக இருந்த பொழுதுகளில் கூட மெதுவாக தனது பிறந்த வீட்டிற்கு செல்லும் அவாவைப் பற்றி எடுத்து சொல்லிப் பார்த்துவிட்டாள். ம்ஹீம், அவன் திண்ணமாய் மறுத்துவிட்டான்.

இப்போது இந்த அசௌகரியமான நிலையை சமாளிப்பது எப்படி என்று அபிராமி கைகளைப் பிசைந்துக் கொண்டிருக்க, மதுபாலாவின் அருகில் வந்த வீசி, தன் சட்டைப்பைக்குள்ளிருந்து ஒரு டப்பாவை வெளியில் எடுத்து திறந்தான்.

அனைவரும் அவன் திறந்த டப்பாவின் உள்ளிருந்த போகன்வில்லா பேப்பரையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் அந்த பேப்பரை விரித்து, "இது நான் என் சம்பளத்துல உனக்காக வாங்கினது அக்கா.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே வாங்கி வச்சிட்டேன்" என்று அந்த ஒரு ஜோடி வெள்ளி வளையலையும் வளையத்தின் கொக்கி நீக்கி தன் அன்னையின் உதவியுடன் அவளுக்கு மாட்டிவிட்டான்.

அவன் அன்பில் மதுபாலாவின் கண்களிரண்டும் ஆனந்தப்புயலை பெய்தவாறிருந்தன. குழந்தையும் மகிழ்ச்சியாக இருப்பதை அவளால் உணர முடிந்தது. வளையலை அணிவித்துவிட்டு நகரப்போனவனை "வருண்" என்று கீழே குனியச்சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டாள் மதுபாலா.

ஷ்ரதா, 'என்ன ஒரு பாசப்பிணைப்பு இவர்களுக்குள்!' என்று புல்லரித்துப் போனவேளை, அருண்மொழி அவர்களை பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த சாங்கியத்தோடு வீசியும் அபிராமியும் பிரகாஷ் சக்கரவர்த்திக்கு அருகில் வந்து நின்று கொண்டார்கள்.

ஈகோவாதியான விஜயாதித்தனுக்கு வீசி சபையில் கதாநாயகன் ஆனது பிடிக்கவில்லை. தனது சொந்தக்காரர்களிடம் பேசுவது போல் வீசியின் குடும்பத்திற்கு கேட்கும்படியாகவே உரக்க கத்திப் பேசினார்.

"என்னவோ சம்பளத்துல வாங்கினதுன்னு பையன் சொல்றான்.. சம்பளத்துல வாங்கினதோ இல்லை அப்பங்காரன் வேலை பார்க்கிற கடைலயிருந்து திருடிட்டு வந்ததோ யாருக்குத் தெரியும்? எந்தப் பாவமும் என் பேரப்புள்ளையை வந்து அண்டாம இருந்தா சரி தான்" என்று அபாண்டமாகப் பேசினார்.

அருகிலிருந்த சிவனேஸ்வரனின் தந்தை காசிராஜன், "ம்ம், நீங்க சொல்றதுக்கும் வாய்ப்பு இருக்கு மச்சான்" என்று வீசி மீதிருந்த பழியை தீர்த்துக் கொண்டார்.

ரோசத்தில் அவர்களை உண்டுயில்லை என்றாக்கப் புறப்பட்டவனை, அபிராமி கை பிடித்து வெளியே இழுத்துச் சென்றார். பல்லை கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த பிரகாஷ் சக்கரவர்த்திக்கு இவையெல்லாம் கேட்க மானக்கேடாக இருந்தாலும், மகளின் வாழ்க்கைக்காக பொறுத்துப்போனார் மனிதர்.

கொட்ட கொட்ட குனிவதால் தான் விஜயாதித்தன் கொட்டிக்கொண்டே இருக்கிறார் என்று தெளிவாக புரிந்துகொண்ட வீசி, "விடுங்கம்மா.. என்னை விடுங்க.." என்று திமிறியபடியே வந்தான்.

"தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு வருண்.. உன் தாத்தா மாதிரியே நீயும் பிடிவாதக்காரனா இருக்காதடா.. நம்ம தகுதிக்கு மீறின இடத்துல வந்து சம்பந்தம் வச்சிருக்கோம்.. நாம தான்டா பொறுத்துப் போகணும்.." என்றார்.

வீசி கோபத்தில் காட்டுக்கத்தலாகக் கத்தினான். "எதுக்குமா இந்த ரவுடி குடும்பத்துல வந்து நம்ம அக்காவை கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க?" என்றான்.

"அய்யோ கத்திப் பேசாத வருண்.. யார் காதுலயாவது விழுந்திறப் போகுது.. மதுபாலாவை பத்தி தெரிஞ்சுமா நீ இப்படியெல்லாம் கேட்கிற? இந்தக் கல்யாணம் அவ விருப்பப்பட்டது.. அவ ட்வெல்த் முடிச்ச சமயத்துல 'உன்னை என்ஜினீயரிங் காலேஜ்ல சேர்க்கிற அளவுக்கு நம்மகிட்ட வசதியில்லைம்மா'ன்னு உன் அப்பா பொறுமையா எடுத்து சொன்னதுக்கே பினாயிலை குடிச்சு சாதிச்சவ அவ.. இந்த சம்பந்தம் மட்டும் நல்ல சம்பந்தம் இல்லைன்னு நாம மறுத்திருந்தா உன் அக்காவை நாம உயிரோடவே பார்த்திருக்க முடியாது வருண்.. இப்போ நாம ஏதாவது எதிர்த்து கேள்விகேட்டு பிரச்சினை பண்ணினாலும் அவ தான் பாதிக்கப்படுவா.."

"ம்மா, நம்மளை அவங்க திருடங்கன்னு பட்டம் கட்டுறாங்கம்மா.. உங்க ரத்தம் கொதிக்கலை? முதலாளிங்க அவங்க மத்தவங்க வயித்துல அடிச்சி சம்பாரிச்சா நாமளும் அப்படித்தான் இருப்போம்னு நினைக்கிறது எந்த விதத்துலம்மா நியாயம்? சுத்த அபத்தம்"

"அவங்க சொல்லிட்டா நாம அப்படித்தான்னு ஆகிடுமா வருண்? ரோட்டுல ஒரு ரூபா கிடந்தாக்கூட அதை கோவில் உண்டியல்ல எடுத்துப்போட்டு புண்ணியம் தேடிக்கிறவங்க நாம.. நம்ம மனசுக்குத் தெரியும் வருண், நாம எப்படின்னு.. உன்னைப் பத்தி நீ என்ன நினைக்கிறியோ அது தான் வருண் நீ.. கண்ணு தெரியாத நாலு பேர் தடவிப் பார்த்து சொன்ன மாதிரியா யானை இருக்குது.. அது அதுவா இருக்குது பிரம்மாண்டமா.. நீயும் யானை மாதிரி இருக்கணும் வருண்.. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நிதானம் தவறக்கூடாது.. உன் கோபத்தை நீ கட்டுப்படுத்தணும்.. அவங்க சுபாவம் அப்படி தான்னு அனுசரிச்சுப் போகத் தெரியணும்.." என்று அவன் கன்னங்களைத் தாங்கி புத்தி கூறினார்.

வீசியின் கோபம் சற்றும் தணியவில்லை. தன் அன்னைக்காக அப்போதைக்கு மட்டும் பாகனின் அங்குசத்திற்கு கட்டுப்படும் யானை போல் கோபம் குறைந்தவனாக நடித்தான்.

மீண்டும் அவன் இயல்பாகி அபிராமியோடு உள்ளே நுழைந்த போது சபையில் கோகிலாவோடு எதையோ பேசி சத்தம்போட்டு சிரித்துக் கொண்டிருந்தார் விஜயாதித்தன்.

அந்நேரம் ஷ்ரதாவின் முகம் திகிலடைந்து காணப்பட்டதை எல்லாம் வீசி பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அபிராமி, பிரகாஷ் சக்கரவர்த்தியிடம், "என்னவாங்க?" என்று வினவியபோது, "நம்ம மாப்பிள்ளையோட தங்கச்சிக்கும், அவரோட அத்தைப் பையனுக்கும் கல்யாணம் பண்றது பத்தி பேசிக்கிட்டிருக்காங்க அபிராமி" என்றார் அவர்.

வீசி, மற்றொரு மூலையில் கலங்கிப்போய் நின்றிருந்த சிவனேஸ்வரனைப் பார்த்தான். 'கல்யாணம் பேசினதுக்கு சந்தோசப்படாம இவன் ஏன் மிரண்டுப் போயிருக்கான்? கிறுக்கன்' என்ற யோசனை ஓடியது அவனுக்குள்.

வளைகாப்பு முடிந்தவுடன் குடும்பத்துடன் வெளியே கிளம்பிய வீசியை தன்னுடன் பிடித்து வைத்துக் கொண்ட சிவனேஸ்வரன், "அம்மா வீசியை நான் என் பைக்ல வந்து விட்டுடுறேன்.." என்று அனுமதி கேட்டான்.

அபிராமியும், பிரகாஷ் சக்கரவர்த்தியும் சரியென்றுவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

வீசியை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு வேகமாக தெப்பக்குளம் வந்த சிவனேஸ்வரன், பைக்கை ஸ்டாண்டில் போட்டுவிட்டு, நீரின்றி வறண்டு கிடந்த தெப்பக்குளத்தின் நடுவேயிருந்த நீராழி மண்டபத்திற்கு அவனை அழைத்துச் சென்றான்.

மதியநேரம் என்பதால் கூட்டம் அவ்வளவு பிரமாதமில்லை. ஆங்காங்கே ஓரிருவர் மட்டும் மரத்தின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள்.

சற்றுத்தள்ளி ஆளரவமற்ற இடத்திற்கு வீசியை அழைத்துக்கொண்டு சென்றவன், "டேய்! என்னாச்சுடா?" என்று தொணதொணத்துக்கொண்டே வந்த வீசியை கட்டிப்பிடித்துக் கதறினான். "டேய் வீசி, முடிஞ்சி போச்சிடா.. எல்லாம் முடிஞ்சி போச்சி.. ஷ்ரதா என் கை நழுவி போய்ட்டாடா.." என்றான்.

'ஆஹா! அந்த லூசு நம்மளை லவ் பண்றதா இவன்கிட்ட சொல்லிட்டா போலயே!' என்று திடுக்கிட்டுப்போயிருந்த வீசி உள்ளுக்குள்ளேயே உஷாராகிக் கொண்டவனாக, "டேய்! என்னடா சொல்ற? உனக்கும் ஷ்ரதாவுக்கும் தான் கல்யாண நிச்சயம் எல்லாம் பண்ணிட்டாங்களே.. அப்புறம் ஏன்டா இப்படி எல்லாம் பேசற?" என்று எதுவும் தெரியாதவன் போலவே சமாளிக்க முயன்றான்.

அப்போது தான் ஆர்டிஎக்ஸ் பாம் ஒன்றை வீசினான் சிவனேஸ்வரன். "வீசி, கல்யாணம் நிச்சயம் பண்ணினது எனக்கும் ஷ்ரதாவுக்கும் இல்லடா.. ஷ்ரதாவுக்கும் என் அண்ணன் ஆதீஸ்வரனுக்கும்.. அவன் ஷ்ரதாவை விரும்புறதா சொல்லி எங்கம்மாகிட்ட சம்பந்தம் பேசச்சொல்லி இருக்கான்.." என்றான்.

வீசி எதிர்பார்த்திராத திருப்பம் இது. "ஹே! என்னடா சொல்ற?!" என்றான்.

"ஆமா வீசி, இனி நான் ஷ்ரதாவை மறக்க வேண்டியது தான்.. ஆனா, அது என்னால முடியுமாடா? எனக்குள்ள முழுசா இறங்கியிருக்கிறவளை எப்படிடா வெளிய எடுக்க முடியும்?"

வீசி இது எந்தப்பட வசனம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

"ஷ்ரதாவுக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லடா வீசி.. அவங்கப் பேசினதை கேட்டவுடனே அவ முகம் பிரதிபலிச்ச அதிர்ச்சியை நீ பார்க்கணுமே.. அவளாலயும் என்னை மறக்க முடியாதுடா.. எங்க ரெண்டு பேருக்குமே நரகம் இந்த வாழ்க்கை.." என்றான்.

சிவனேஸ்வரன் பேசிய கடைசி இரண்டு வரிகள் குபீரென்று சிரிப்பதற்கேற்பவையாக இருந்தாலும், அவள் முகம் அதிர்ந்ததாக சொன்னதுமே வீசிக்குள் மெலிதாய் ஒரு பூகம்பம். 'அவள் என்னை அல்லவா விரும்புவதாக சொன்னாள்!' என்று ஒரு குறுகுறுப்பு.

இயன்றளவு அவன் சிவனேஸ்வரனை சமாதானப்படுத்தினான்.

ஆனால், சிவனேஸ்வரன், "இல்ல வீசி, எனக்கு யோசிக்க டைம் வேணும்.. நிச்சயம் இதுக்கு ஒரு நல்ல தீர்வை நான் கண்டுபிடிப்பேன்டா" என்று திடமாக சொன்னான்.

வீசி அதற்கு பெரிதாக ஒன்றும் வினையாற்றிடவில்லை. "சரி புறப்படலாம்" என்றான்.

வீசியின் ஒட்டுதலற்ற பேச்சு சிவனேஸ்வரனுக்கு சுருக்கென்றது. ஆனால், காரணம் கேட்க முனையவில்லை அவன்.

அன்று என்னவோ வீசி வீட்டிற்கு வந்த பின்பும் அந்த சிக்கலைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் அம்மா தையல்மிஷினை இயக்கிக்கொண்டிருந்த சத்தம் கூட அவன் யோசனையை தடை செய்யவில்லை.

'இந்தக் காதல் என்ன பெரிய மாயாஜால வித்தையா? அக்காவை ஒரு ரவுடி வீட்டுலயே போய் தங்குற அளவுக்கு தைரியம் கொடுத்திருக்கு.. சிவாவை தேம்பி தேம்பி அழ வச்சிருக்கு.. ம்ஹீம் ரொம்ப டேஞ்சர்.. அது பக்கம் தலை வச்சும் படுக்கக்கூடாது' என்று நினைத்தபடியே புரண்டு படுத்தான்.

ஆனால், இதே காதல் உயிரையே போக்கிக்கொள்ளும் அளவிற்கு அசட்டுத் தைரியமும் கொடுக்கும் என்பதை ஷ்ரதாவின் மூலம் தான் அறிந்து கொண்டான்.

மதுபாலாவின் வளைகாப்பு முடிந்து ஒரு இரண்டு நாள் கடந்திருக்கும். அன்று எப்போதும் போல் மாலை ஆறுமணியளவில் கடையில், தான் மட்டும் தனித்து உட்கார்ந்திருந்தான் வீசி.

அந்த நேரத்தில் உள்ளே விறுவிறுவென நுழைந்த ஷ்ரதா, "கொஞ்சம் உள்ள வாங்க" என்றபடியே நேரே மூன்றாம் கட்டிற்கு சென்றாள்.

'இவ என்ன பூதத்தை இப்ப கிளப்ப வந்திருக்கிறாளோ?' என்று குழம்பியபடியே அவனும் அங்கு வந்து சேர்ந்தபோது, புத்தகங்களைப் பார்த்து திரும்பி நின்றிருந்தாள் ஷ்ரதா.

பயத்தில் முருகனை நெஞ்சில் நிறுத்தி, கண்களை இறுகமூடியபடியே பேசினாள். "நான் அன்னைக்கு சொன்னதை பார்த்திருப்பீங்களே.. என்.. என்.. மனசு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே.. அதுக்கு உங்க முடிவு என்ன சார்?" என்று கேட்டாள்.

பின், 'இவ்வளவு நேரமும் உருப்போட்டு வந்ததை சரியாக பேசிவிட்டேன். நன்றி முருகா!' என்றபடியே கண்களைத் திறந்து திரும்பினாள்.

அவள் எதிர்பார்ப்பிற்கு சற்றும் பிசகாமல் அவன் முகம் ஜிகுஜிகுவென்று தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது நைட் ரைடர் போல.

"எனக்கு இந்த காதல் கீதல் எல்லாம் பிடிக்காது.. இதுனால பல பேர் நம்பிக்கையை நாம இழக்க வேண்டியிருக்கும்.." என்றான் கறாராக.

அவள் கண்கள் நிரம்பி விட்டிருந்தன. "அப்போ உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா?" என்றாள்.

'கணக்கு நடத்துற போதும், அதுலயிருந்து கேள்விகள் கேட்கிற போதும் வாயையே திறக்கிறதில்ல.. இப்போ பார் பேசுறதை!' மானசீகமாக ஆச்சரியப்பட்டவன், "ஆமா, பிடிக்கலை.. யாராவது வர்றதுக்குள்ள இங்கயிருந்து கிளம்பு!" என்றான்.

அவள் அவனிடம் கண்களாலேயே காதல் யாசகம் கேட்டாள்.

தர்மபிரபுவாக விரும்பாதவன் நீ செல்லவில்லையென்றால் என்ன, நான் செல்கிறேன் என விலகத் திரும்பினான்.

"நில்லுங்க" என்று உத்தரவிட்டு நிறுத்தியவள்,

அவன் முன்பு வந்து நின்று படக்கென்று காலில் விழுந்து, "நான் விளையாட்டா சொல்லல.. உண்மையாவே நான் உங்களை விரும்புறேன்.. முதல் முதலா அண்ணா கல்யாணத்துல உங்களைப் பார்த்த போதுலயிருந்தே விரும்புறேன்.. ப்ளீஸ் என்னை பிடிக்கலை மட்டும் சொல்லாதீங்க.." என்று கண்ணீர்விட்டு கெஞ்சினாள்.

"ஹே ஹே எழுந்திரு.." என்று பதறி விலகியவன், 'இதென்ன வம்பாப்போச்சி.. இவளுக்கு அந்த தாரிணியே பெட்டர் போலயே.. பிடிக்கலைன்னு சொன்னவுடனே போயிட்டா' என்று ஒப்பீடு செய்தான்.

அவள் எழுந்து நின்றவள், அங்கு புத்தகப்பெட்டிகளின் கட்டுகளை அறுக்க வைத்திருந்த இரும்பாலான ரம்ப ஸ்கேலை எடுத்துக்கொண்டு, "நீங்க எனக்கு இல்லைன்னா நான் சூசைட் பண்ணிக்குவேன்.." என்று தன் மணிக்கட்டில் வைத்து மிரட்டினாள்.

"ஹேய்! உனக்கென்ன பைத்தியமா? ஸ்கேலை கீழப்போடு" என்று பதறினான் வீசி.

"இல்ல, நான் என் காதலை உங்களுக்கு ப்ரூவ் பண்ணப் போறேன்"

"சுத்த முட்டாள் தனம் இது.. ப்ளீஸ் ஸ்கேலை கீழப்போடு"

"இல்ல, இப்போ நான் உங்க மேல வச்சிருக்க காதலை நீங்க பார்க்கப் போறீங்க!"

"நான் ஒண்ணும் காட்டேரி இல்ல.. உன் ரத்தத்தை பார்த்து சந்தோசப்படுறதுக்கு.."

"அறுத்தா ரொம்ப வலிக்குமா?"

"தையல் போடும்போது உயிரே போய்டும்"

"போகட்டும்"

"உன் அப்பாவுக்கு என்னைப் பிடிக்காது.."

"நிச்சயம் அவருக்கு முத்தம் கொடுக்கிற நிலைமை உங்களுக்கு வராது.. ஐ லவ் யூ..
ஐ லவ் யூ அ லாட்.." சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

"ஹே.. வேணாம்.. ஐ லவ் யூ" என்று வெளியே வாசலில் நின்றிருந்த சிவனேஸ்வரனுக்கு கேட்குமளவிற்கு கத்தியிருந்தான் வீசி.

GhF2WWmfhzEehqbWuL6RxFNNQEKyA-sY0LOr-CHZjwaHbShnx-CPc6CEJhgONieEdUf_Zt4rWi24TwWeGe4ScHqIhz9L6nGzW7wn4B-uViNML9lZTXb1w4cjZHC2ZiXkooCbgCtW


காதல் கணம் கூடும்…

இத்தோடு பிளாஷ்பேக்கிற்கு ஒரு இண்டெர்வல் ப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயத்திலிருந்து நிகழ்கால வீசியையும் ஷ்ரதாவையும் காணுவீர்கள்.

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
என் பவர் என்ன தெரியுமா? என்னைத் தொட்ட அடுத்த நிமிஷமே உங்களை உள்ள தூக்கிப் போட்டுருவேன். நம்பிக்கை இல்லைன்னா என்னைத்தொட்டு பாருங்க😂
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 20​



நேற்றிரவு நடந்த அக்கப்போரில் கையில் கட்டுடன் தூங்கிக் கொண்டிருந்த ஷ்ரதாவுக்கு காலையில் கண்விழித்துப் பார்த்தபோது தலை ரொம்ப வலித்தது.

அவளுக்கு இருபத்திரண்டு வயதாக இருந்தபோதும் ஒருநாள் காலையில் இப்படித்தான் வலித்தது. தலையைப் பிடித்துக்கொண்டே அவளது அம்மாவிடம், "ம்மா, அண்ணாவும் அண்ணியும் ஸ்டேஜ்ல போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தப்போ தாரிணி என் பாவாடையில கூல்ட்ரிங்ஸ் கொட்டிட்டாம்மா" என்றாள்.

மீனாட்சி அவள் முகத்தை பரவசமாக அங்குலம் அங்குலமாக பார்த்து அறையில் இருந்தபடியே, "என்னங்க! நம்ம ஷ்ரதா பேசிட்டாங்க.. அவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.." என்று கத்தினார்.

"ஷ்ரதா பேசிட்டாளா? இவ்வளவு நாள் நான் என்ன ஊமையாவா இருந்தேன்? ம்மா என்னாச்சு உங்களுக்கு?" என்று குழப்பமாக கேட்டாள்.

"எனக்கு ஒண்ணுமில்லைடி கண்ணு.. உனக்கு தான்.. இரு! நான் உங்கப்பாக்கிட்ட சொல்றேன்.. எல்லாரையும் கூட்டிக்கிட்டு வர்றேன்" என்று சிறுமி போல் ஓடினார் அவர்.

அவள் அறையை சுற்றி முற்றி பார்த்தாள். அனைத்தும் மாறியிருந்தது. "எங்கே என் டெடியை காணோம்?"

சுவரில் வெள்ளி சட்டத்துக்குள் இருந்த புகைப்படங்களைப் பார்த்தாள்.

"என்னதிது? இதெல்லாம் எப்போ எடுத்தது? என்ன புக் செல்ப்ல எல்லாம் ஏதோ பெரிய பெரிய புக்ஸா இருக்கு.. யாரோடது இதெல்லாம்? ஒருவேளை அருண்மொழி அண்ணாவுடையதோ? என்னது வி.ஷ்ரதாஞ்சலி, பி.இ பர்ஸ்ட் இயரா?! இன்னைக்கு தேதி? ஆ! வால்ல ஸ்கை ப்ளூ கலர் பெயிண்ட்! லாங் ஹேர்! அய்யோ!" அனைத்தையும் பார்த்துவிட்டு, கண்ணாடி முன்சென்று நின்றாள். அவள் முகம் வேறு மாதிரி இருந்தது. தானே தனக்கு அந்நியமாகிவிட்டது போல் உணர்ந்தாள்.

பயத்தில் அறையே அதிரும்படி, "ம்மா! ம்மா!" என்று இரைந்து அழைத்தாள். வீட்டினர் அனைவரும் அவளது அறைக்குள் ஓடிவந்துப் பார்த்தார்கள்.

"ம்மா, எனக்கு எப்படியோ இருக்கு.. எல்லாம் புதுசா தெரியுது.. அங்கப் பாருங்கம்மா அண்ணிக் கையில குழந்தை.. எனக்குத் தலை ரொம்ப வலிக்குதும்மா.. எதுவுமே புரிய மாட்டேங்குதும்மா?" என்று விசித்து விசித்து அழுதாள்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயாதித்தன், 'ஷ்ரதாம்மா' என்று தந்திரமாக அருகில் வந்து அவளை சமாதானப்படுத்தினார்.

அவள், "ப்பா, எனக்கு என்னாச்சுப்பா? ஏன் எல்லாம் வித்தியாசமா தெரியுது? பாருங்க தேதியெல்லாம் கூட மாறி.. என் முடியெல்லாம் நீளமா.." என்று மீண்டும் தேம்பினாள்.

விஜயாதித்தன் சொல்கிறேன் எனும்படியாகவே தலையாட்டிக் கொண்டிருந்தார்.

அவள் வெறிக்கூச்சலாக, "சொல்லுங்கப்பா" என்று அவர் ஜிப்பாவைப் பிடித்து இழுத்தபோது பட்டன்கள் இரண்டு தெறித்து விழுந்தது.

வினோதமாக நடந்து கொண்டிருந்தவளை 'ஷ்ரதா' என்று ஓங்கி குரல் கொடுத்தான் அருண்மொழி.

அவள் மிரண்டு "ப்பா..ப்பா.." என்று விஜயாதித்தனின் மார்பில் பம்மினாள்.

அருண்மொழி தன் தலையிலேயே அறைந்துகொண்டான். "ஹேய்! என்னைப் பார்த்து ஏன் பயப்படுற? நான் உன் அண்ணன்ம்மா" என்றான்.

மதுபாலாவின் காலருகில் நின்றிருந்த நான்கு வயது அனன்யா, மதுபாலாவின் கையை சுரண்டி, "ம்மா, நாம நம்ப தம்பியோட அபி பாட்டி வீட்டுக்கு போயிடலாம்மா" என்றாள்.

இடுப்பிலிருந்த இரண்டு வயது மகன் அஸ்வினை செம்மையாக உட்கார வைத்த மதுபாலா, "ச்சு, சும்மாயிரு" என்று அதட்டினாள்.

ஷ்ரதா விழித்து எழுந்தவுடன் தன்னிடம் கூறியதை நினைவு கூர்ந்து அனைத்தையும் விளங்கிக்கொண்ட மீனாட்சி, "என்னங்க, இவ இடைபட்ட ஏழு வருசத்தை மறந்துட்டா போலங்க.. முழிச்சதும் அருண்மொழிக்கு நேத்து தான் கல்யாணம் நடந்தது போல பேசினா.. அய்யோ! இப்போ என்னங்க பண்றது? அருண்மொழி வண்டியை எடுப்பா.. இவளை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிடலாம்" என்றார்.

இரவு உடையில் நின்றிருந்தவனும் 'சரிம்மா' என்று உடைமாற்றச் சென்றான்.

ஷ்ரதா அலங்க மலங்க விழித்தாள். விஜயாதித்தன், "ஒண்ணுமில்லைடா" என்று அவள் தலையைத் தடவிவிட்டார்.

மருத்துவமனைக்கு சென்றபோது அவளை முழுமையாக பரிசோதித்த மருத்துவர் திரு.வெங்கடாசலம் நம்பிக்கைத் ததும்ப பேசினார். "நாம கொடுத்த மெடிசன்ஸ் தான் அவங்களுக்கு நல்ல பலனளிச்சிருக்கு.. இவங்களை இப்படியே விட்டுடுங்க.. ரொம்ப கேள்விகேட்டு குழப்பாதீங்க.. அவங்க ஏதாவது கேட்டாலும் பொறுமையா பதில் சொல்லுங்க.. ஏழு வருஷத்துக்கு முன்னாடி அவங்க லைஃப்ல ஏதோ மறக்க முடியாத சம்பவம் ஒண்ணு நடந்திருக்கு.. அதான் அந்த நினைவுலயே நிற்கிறாங்க.. இழந்த நினைவுல முக்கால்வாசி இப்போ கிடைச்ச மாதிரி, திடீருன்னு ஒரு நாள் மொத்தமும் கிடைக்கலாம்.. அதுவரை அவங்கக்கிட்ட பழசைப் பத்தி கேட்காதீங்க.." என்று அவள் குடும்பத்தினரிடம் அறிவுரை கூறி, முன்பு கொடுத்த மருந்து பட்டியலை பாதியாக குறைத்து அனுப்பி வைத்தார்.

விஷயத்தை கேள்வியுற்ற விஜயாதித்தனுக்கு அவளது இந்த நிலை ரொம்ப நல்லது என்று தோன்றியது. பழைய களங்கம் இல்லாமல் மகள் திரும்ப கிடைத்துவிட்டது போல் நம்பினார். அதில் அவளை அதிகம் சீராட்டவும் செய்தார்.

அவளும் "அப்பா" என்று மிகுந்த பாசத்தை கொட்டினாள்.

மருத்துவமனைக்கு சென்று வந்த நாளில் அவள் மெதுவாக தலையுயர்த்தி, "எப்படிப்பா எனக்கு எல்லாம் மறந்துபோச்சி?" என்று கேட்டபோது,

"ஒரு ஆக்சிடென்ட்ல தான்மா போயிடுச்சி.. நீ ஆட்டோவுல கோவிலுக்குப் போனியா? சைடுல ஒரு லோடுவண்டி வந்து தட்டிவிட்டுட்டான், படுபாவி.. அதுல தான் உனக்கு முழுசா எல்லாம் மறந்து போயிடுச்சி.. கிட்டத்தட்ட நாலு வருசமா நீ வீட்டுல தான் இருக்க.. எதுவும் பேச மாட்ட.. சிரிக்க மாட்ட.. நீ பாட்டுக்க எதையாவது வெறிச்சுக்கிட்டே இருப்ப.. இப்போ தான் நாம கும்பிடுற சாமி கண் திறந்திருக்கு.. ஆனா, கடந்த ஏழு வருஷத்து நினைவு மட்டும் உனக்கு இல்லைம்மா.. அதுவும் சீக்கிரம் வந்திடும்னு டாக்டர் சொல்லியிருக்காரு" என்று பொறுமையாக எடுத்துக் கூறினார்.

அவள் அவர் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதாள். தம்ளரில் பால் ஆற்றிக்கொண்டு வந்த அவள் அன்னையும் அருகில் அமர்ந்து அவளை சமாதானப்படுத்தினார். அவள் அவர் மடியில் படுத்துக் கொண்டாள். அப்போது அவள் வாயிலிருந்து அடிக்கடி வந்த கேள்வி, "எனக்கு எல்லாம் சீக்கிரம் ஞாபகம் வந்திருமாமா?".

அதன் பிறகான நாட்களில் நாள் முழுவதும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவளுக்கு, தனது நெருங்கிய சிநேகிதரான மத்திய அமைச்சர் பரமசிவத்தின் மூலம் மீண்டும் கல்லூரியில் இரண்டாமாண்டிலிருந்து படிக்க சீட் வாங்கிக் கொடுத்தார் விஜயாதித்தன்.

தினமும் வீட்டிலேயே வந்து டியூசன் சொல்லிக் கொடுக்கவும் ஆசிரியர்களை ஏற்பாடு செய்தார்.

இந்த இடைபட்ட நாட்களில் அடிக்கடி வீசி எப்படி இருக்கிறான், என்ன செய்கிறான் என்று மதுபாலாவின் மூலம் அறிய நினைப்பாள் ஷ்ரதா. ஆனால், அவள் தவறாக நினைத்து விடுவாளோ என்று பயந்து குழந்தைகளிடம் விசாரிப்பதோடு நிறுத்திக்கொள்வாள்.

கால வெள்ளோட்டத்தில் ஷ்ரதாவின் மறதி ஒன்றும் அவ்வளவு பெரிய உபத்திரவமாக மாறவில்லை அவள் வீட்டினருக்கு. ஆனால், யாராவது விளையாட்டாக குரல் உயர்த்திப் பேசினால் கூட, பயந்து உள்ளுக்குள் ஒடுங்கி, நினைத்து நினைத்து அழுவது தான் பெரும் ரோதனையாக இருந்தது.

ஷ்ரதாவின் இந்த விசித்திரமான நடவடிக்கையைப் பற்றிக் கூறியபோது, 'இவர் நல்ல டாக்டர் தானா?' என்று சந்தேகிக்கும் வகையில் தலை நிறைய முடியோடு காணப்பட்ட நரம்பியல் நிபுணர் திரு.வெங்கடாசலம், "இவங்களுக்கு இப்போ கவுன்சிலிங் தேவை.. நல்ல சைக்காட்ரிஸ்ட்கிட்ட அழைச்சிட்டுப் போங்க" என்றார்.

அப்படி தொடர்ந்து அழைத்துக்கொண்டு போனால் ஷ்ரதாவுக்கு இன்னும் பைத்தியம் தெளியவில்லை என்று யாரும் புரளி கிளப்பிவிடுவார்களோ என குதர்க்கமாக யோசித்த விஜயாதித்தன், "அவளை யார்கிட்டயும் அனுப்ப வேண்டாம்" என்று ஸ்பஷ்டமாக மறுத்துவிட்டார். இதன் விளைவு, பின்னாளில் அந்த பயமே அவளது இயல்பாகிவிட்டது.

தொடர்ந்து மூன்று வருடங்கள் விஜயாதித்தன் வெள்ளையப்பனை வாரியிரைத்ததின் பலனாக அனைத்து அரியர்களையும் க்ளியர் செய்து, இருபத்தைந்து வயதில் ஷ்ரதா பி.இ முடித்தாள்.

அவளிடம் திடுமென அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாக விஜயாதித்தன் தெரிவித்தபோது, தனது இந்த மறதி நோயால் எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டிருந்தவள், "வேண்டாம்பா, நான் உங்களோடவே இருந்திடுறேன்பா.. எனக்கு வேற வீட்டுக்குப் போக பிடிக்கலைப்பா" என்று ஒருபாடு அழுது தீர்த்தாள்.

இதனால் ஒரு மாதம் அந்த விஷயத்தை அப்படியே ஆறப்போட்டு வைத்தவர் மீண்டும் ஒருநாள் தனியாக அழைத்துப் பேசினார். அவள் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று திடமாக மறுத்தாள்.

அவளுக்கு வீசியைப் பற்றி மனதில் ஓடினாலும் விஜயாதித்தனிடம் சொல்ல பயம். சொன்னால் அப்பா எங்கே கோபித்துவிடுவாரோ என்று தயக்கம். ஏற்கனவே அருண்மொழியின் திருமணத்தின் போது வீட்டில் நடந்த களேபரங்கள் தான் அவளுக்குத் தெரியுமே. மீண்டும் காதல் என்றால் இந்த வீடு என்னவாகும்?

இதனால் மேலும் ஒரு மாதம் ஓடியது. அதன்பின் தான் விஜயாதித்தன் அவளை சென்டிமெண்டலாக மிரட்ட ஆரம்பித்தார். அவளுக்கு திருமணம் முடித்து வைக்காததால் ஊரில் தன்னை தவறாக பேசுவதாக பொய்க்கண்ணீர் வடித்தார். மகள் பதறினாள். அழுகையினூடே, "உங்க இஷ்டம்பா" என்றாள்.

ஆனால், சம்மதம் சொன்ன ஒருவாரத்திலேயே விஜயாதித்தன் நிச்சய தேதியைக் குறித்துவிட்டு வந்து நிற்பார் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அதிர்ச்சியில் உறைந்து போனாள். மாப்பிள்ளை இன்னார் தான் என்றபோது தான் உடல் உஷ்ணம் பெற்று, உயிர் கொண்டாள். அப்போது அவள் அடைந்த நிம்மதியும் மனக்களிப்பும் அலாதியானது. தன் முன்ஜென்ம பாக்கிய பலனே இது என்று கருதினாள்.

ஆனால், நிச்சயத்தன்று வீசியின் முகம் உர்ரென்று இருந்தபோது, ஏதோ தவறு என்று லேசாக பொறி தட்டியது அவளுக்கு. பின்னால் கேட்டுக்கொள்ளலாமென்று விட்டுவிட்டாள்.

ஆனால், பின்னால் அவனது மனவன்மம் அசுர வளர்ச்சியடைந்து தன்னை காலடியில் போட்டு நசுக்கியபோது உருக்குலைந்துபோனாள்.

அவள் பி.இ படிக்கும்போதும் சரி, வீட்டிலிருந்தபோதும் சரி, யாரும் அவளிடம் பழைய விஷயங்களைப் பற்றி கேட்டதும் கிடையாது, சொன்னதும் கிடையாது.

திருமணமாகி வந்த பின்பு வீசி தான் அவளை தனக்கு முன்பே தெரியும் என்பது போல் பேசிக்கொண்டும் காயப்படுத்திக்கொண்டும் இருந்தான்.

திருமணமான இத்தனை நாட்களில் எப்படி எப்படி என்றே புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு, இன்று காலையில் எழுந்தவுடன் ஏற்பட்ட பலமான தலைவலியால் கொஞ்சம் கொஞ்சமாக பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வர, தலையைப் பிடித்து இடவலம் ஆட்டினாள்.

எவ்வளவு முயற்சித்தும் பதினெட்டு வயது மங்கையான தன்னிடம் வீசி காதலை தெரிவிப்பதோடு மேற்படி எதுவும் ஞாபகம் வரவில்லை.

'இதென்ன ஞாபகம் விட்டு விட்டு வருகிறது? முழுதாக வந்து என்னை நிம்மதியாகவே வாழவிடாதா இது?' என்று முழங்காலில் முகத்தை புதைத்து அழுதாள்.

ஷ்ரதா அனைத்தும் ஞாபகம் வந்தால் நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கிறாள். ஆனால், இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் முழு ஞாபகத்தால் பறிபோய்விடும் என்பது அவளுக்கு தெரியவில்லை!

அழுது முடித்து தன் வலக்கையை தூக்கிப்பார்த்தாள். கட்டுபோடப்பட்டிருந்தது. வீசியின் வேலையாகத்தான் இருக்கும் என்று புரிந்ததும், 'அவர்கிட்ட நான் டியூசன் போயிருக்கேன்.. தாரிணிக்கு தினமும் பால், எனக்கு பூஸ்ட்.. ம்ம் இதுலயே தெரிஞ்சிருக்கும் எனக்கு பால் பிடிக்காதுன்னு.. அப்புறம் அந்த லேபிள் பார்த்தபோது பெர்த்டே வேர்ல்ட் டைகர்ஸ் டே, அப்புறம் ப்ளட் க்ரூப்.. சந்தேகமே இல்ல.. இப்படித்தான் தெரிஞ்சிருக்கும்.. இன்னும் இந்த மல்லிகைப் பூ, உரைப்பு ஒத்துக்காது, புடவை கட்டப் பிடிக்காது, பஞ்சுமிட்டாய், பூனைக்குட்டி, மீன்தொட்டி, பிடிச்ச ஸ்வீட்ஸ், டெடி, ப்ச் எப்படி? முருகா என்ன நடந்தது நீயாவது எனக்கு சொல்லேன்!" என்று மீண்டும் தலையைப் பிடித்துக்கொண்டாள்.

அப்போது தான் வீசி உடற்பயிற்சி கூடத்திலிருந்து வெளிப்பட்டான். "என்ன எழுந்துட்டியா? சீக்கிரம் கிளம்பு! இன்னைக்கு உன் முருகனைப் பார்த்துட்டு, ஒரு கும்பிடு போட்டுட்டு வந்திடலாம்.." என்றான்.

ஷ்ரதா, "எனக்கு.. எனக்கு.. தலை வலிக்குதுங்க.. பழசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வருது.." என்றாள் தெளிவற்ற குரலில்.

அவன் கண்கள் பளிச்சிட, "உண்மையாவா? எல்லாம் ஞாபகம் வந்திடுச்சா?.." என்று அருகில் வந்தான். வந்துவிட்டால் இதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக அல்லாமல், முழுமையாகவே அவளை நோகடிக்கலாம் என்றொரு ஆர்வம் அவனுக்கு.

"இல்லைங்க.. எங்க புக் ஸ்டால்ல வச்சி நீங்க என்கிட்ட ஐலவ்யூ சொன்னீங்க.. அது.. அதுவரைக்கும் தான் ஞாபகம் வந்தது.."

அவன் அவளருகில் வந்து உட்கார்ந்தான். அவள் கால்களை இன்னும் உள்ளிழுத்துக் கொண்டாள்.

அவன் சிரித்தபடியே கிண்டலாக வினவினான். "என்னது நான் உனக்கு ஐலவ்யூ சொன்னேனா? எப்படி? பாசமா அன்பா உன் முன்னாடி முட்டிப்போட்டு ரோஸ் நீட்டி ஐலவ்யூ ஷ்ரதான்னு சொன்னேனா? ம்ம்?"

பயத்தில் 'ம்ஹீம்' என்று தலையாட்டினாள் ஷ்ரதா.

"ம்ம், அப்புறம் எப்படி சொன்னேன்? சொல்லு?"

அவன் மிரட்டலாகக் கேட்டதும், "நான் உங்களை கட்டாயப்படுத்தி சொல்ல வச்சேங்க.." என்றாள்.

"ம்ம், கட்டாயப்படுத்தி சொல்ல வச்ச.. சரி சொல்லு! இது சரியா? தப்பா?"

"த.. த.. தப்பு தாங்க.."

"தப்புக்கு பிராயசித்தம் தேட வேணாம்? கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்க வேணாம்? சீக்கிரம் கோவிலுக்கு கிளம்பு.." என்று சொல்லிவிட்டு, கண்ணாடிப் பார்த்து இன்று ஷேவ் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்று தன் கன்னத்தை ஆராய்ந்தான்.

பின், லாவகமாக தன் பனியனை கழட்டிவிட்டு நான்கே எட்டில் குளியலறை புகுந்துகொண்டான்.

அவள் அவனது முதுகுத் தழும்புகளை முதல்முறை வெளிச்சத்தில் பார்த்தாள். கண்டதும் அரண்டு கண்களை மூடிக்கொண்டாள். அவளின் மூடிய இமைகளை மீறி கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

'கேட்டால் நிச்சயம் கூறமாட்டார்' என்று நினைத்துக்கொண்டு தலைவலியுடனேயே எழுந்து கோவிலுக்கு கிளம்பினாள்.

அபிராமிக்கு கோவிலுக்கு செல்கிறோம் என்று கிளம்பி நின்ற இருவரையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. 'நேற்றிரவு நடந்தவையெல்லாம் என் பிரம்மை தானோ?' என்று எண்ணுமளவிற்கு வந்துவிட்டார்.

காரில் செல்லும்போது தனது ஷிவா அத்தானைப் பற்றி யோசித்தாள் ஷ்ரதா. 'எப்படி இவங்க ரெண்டுபேரும் எதிரியானாங்க? கண்டிப்பா அத்தானை பார்க்கும் போது இதுபத்தி கேட்கணும்.. அத்தானை பார்க்கும் போதாவது?.. இன்னொரு வெட்டுக்காயம் வேண்டுமா ஷ்ரதா?' அவள் மனசாட்சி வீசியின் டூப்பு போல் அவளிடமே கேள்விகேட்டது. தன் காயமடைந்த கையைப் பார்த்து ஷிவா அத்தானை சந்திக்கும் யோசனையை கைவிட்டாள் ஷ்ரதா.

"ம்ம் இறங்கு! கோவில் வந்திடுச்சு!" என்றான் வீசி. அவளும் இறங்கினாள்.

இன்று கோவிலில் ஏதோ திருவிழா போல் எங்கும் பூவினால் தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் அவ்வளவாக இல்லை.

அர்ச்சனைத்தட்டு வாங்கியவள் கடைக்காரரிடம், "இன்னைக்கு கோவில்ல என்ன விசேஷம்?" என்று வினவவும், அவர் ரகசியக்குரலில் பதில் கூறினார். "ஏதோ பெரிய வீட்டு கல்யாணமாம்மா.. கோவிலுக்கு டொனேஷனே ஒரு லட்சம் கொடுத்திருக்காங்க.. அந்த ஏற்பாடு தான் உள்ள நடந்துக்கிட்டு இருக்குது" என்றார்.

கேட்டதுமே ஷ்ரதாவுக்கு இந்தத் தகவல் திகிலைக் கொடுத்தது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதாக அவள் உள்ளுணர்வு எச்சரித்தது. 'இல்லை.. அப்படி மட்டும் இருக்கவேக்கூடாது' என்று கோவிலின் கொடிக்கம்பத்தைப் பார்த்து கை கூப்பினாள் ஷ்ரதா.

Grk8-p-igfVQPKlF7clUlfkmqXvQ_LhDIE9Jj_ZwryoxrTnWR6fTYLfvdBP-zsuyMSWi_bvZtf5Xrc0cOCeKubxX4wCJxRKtaY4hD7onFd5vGQvTZQ4PFyDyLK2Bex_lBPsMLNQ4


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

இந்நாவலை எழுதி கொண்டிருப்பவர்?

கருத்துத்திரி,

A. ஷிவானி செல்வம்

B. அன்பானவர்

C. அறிவானவர்

D. திறமையானவர்

(பி.கு: மேலே உள்ள ஆப்சனில் எதை க்ளிக்கினாலும் கமெண்ட் த்ரெட் செல்வீர்கள்😂)​
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 21​



விக்கித்து நின்றிருந்த ஷ்ரதாவின் கையைத்தட்டிய வீசி, "என்ன கனவு கண்டுக்கிட்டு இருக்கியா? வா உள்ளப்போகலாம்" என்றான்.

அவளுக்கு அப்படியே வெளியே ஓடிவிடலாம் போல இருந்தது. கால்கள் இரண்டும் வேர் முளைத்து பூமியினுள் புதைந்து போனவள் போலவே நகர முடியாமல் நகர விரும்பாமல் நின்றாள்.

"என்னாச்சி? வா!" என்று வம்படியாக இழுத்துச்சென்றான் வீசி.

வித்யாவின் வீட்டில் பார்த்த அதே அடியாட்கள் இன்று 'ஒட்டிக்கோ கட்டிக்கோ' விளம்பர உடையில், நெற்றியில் திருநீற்றோடு நின்றிருந்தார்கள். வீசியைப் பார்த்ததும் தங்கள் சட்டைகாலரைப் பிடித்து தலையசைத்து வணக்கம் வைத்தார்கள்.

'இல்லை.. இல்லை.. வேண்டாம்.. அப்படி எதுவுமே நடக்க வேண்டாம் முருகா' என்று வேண்டிக்கொண்டே வந்தாள் ஷ்ரதா.

'பாலைவனத்தில் நான் மணலை பார்க்கவே கூடாது முருகா' என்பது போல் தான் ஷ்ரதாவின் வேண்டுதலும் இருந்தது.

காளியம்மன் சன்னதியில் இவர்களைப் பார்த்ததும், பேசிக்கொண்டிருந்த தர்மகர்த்தாவை வெயிட்டிங் லிஸ்டில் போட்டுவிட்டு வீசியின் அருகில் வந்தார் ராஜ மாணிக்கம்.

அன்றைக்குப் பார்த்ததற்கு இன்று மனிதர் ரொம்பவே மெலிந்து காணப்பட்டார். கழுத்தில் கொழுத்தப்பூனையும் மிஸ்ஸிங். ஆனால், நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் மட்டும் சௌக்கியமாக இருந்தது.

ஷ்ரதாவை தலையசைப்பிலேயே வரவேற்ற ராஜ மாணிக்கம் "கமலா, மாப்பிள்ளை வீட்டுல வந்தாச்சு பாரு" என்றார்.

கணவரின் உரத்த குரலைக் கேட்டதும் கமலா குத்துவிளக்கிற்கு பூ சுற்றிக் கொண்டிருந்தவர் வள்ளுவனின் வாசுகி போல் வேலையை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்தார். "வித்யா பியூட்டி பார்லர்ல இருந்து புறப்பட்டுட்டாளாங்க.. அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தான் கீரைத்துரை செக்போஸ்ட்டை தாண்டிட்டதா சொன்னா.." என்றார்.

இத்தனைக்கும் ராஜ மாணிக்கம் கண்ணைக்கூட அசைக்கவில்லை. ஆனால், கேட்காத கேள்விக்கு மனைவி பதிலளித்துக் கொண்டிருந்தார். அவரும் இதற்காகத்தான் உன்னை அழைத்தேன் என்பது போலவே செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

வீசி இயல்பாக, "எதுவும் பிரச்சினையில்லையே" என்றான்.

"இல்ல வீசி, கோவிலை சுத்தி ஃபுல்லா நம்ம ஆளுங்க தான்.. நமக்கு தெரியாம யாரும் உள்ளேயும் வரமுடியாது.. வெளியேயும் போகமுடியாது.. கிட்டத்தட்ட ஜெயில் மாதிரி தான்" என்று சிரித்தார், சிறந்த நகைச்சுவை ஒன்றை தான் சொல்லிவிட்டதை போல.

ஷ்ரதா அவர்கள் பேசுவதை கவனியாமல் கமலா வந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தாள். அங்கு முகூர்த்த மனையும் ஹோம குண்டமும் அமைத்திருந்தார்கள். ஐயர் தீனி போட்டு அக்னி வளர்த்துக்கொண்டிருந்தார்.

ஜமுக்காளம் எல்லாம் விரிக்கப்பட்டு, வரிசையாக தட்டுகளில் பொன் மஞ்சள் தாலி, மாலை, பூச்செண்டு, பழ வகைகள் என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பார்த்ததும் ஒரு அடைமழைக்கு துவக்கமாக ஷ்ரதாவின் உதடுகள் துடித்தன.

திருமணத்திற்கு சாட்சியாக ராஜ மாணிக்கத்தின் குடும்பவகையிலிருந்து வேறு ஐம்பது பேர் எண்ணிக்கையில் கூடியிருந்தார்கள்.

துக்கம் நெஞ்சை அடைத்து மூச்சிவிட சிரமப்பட்டவள் மனதிற்குள்ளேயே கசறினாள். 'நேத்து நைட் தானே சொன்னார்; ரகசிய கல்யாணம் பண்ணிக்கக்கூட தயங்க மாட்டேன்னு.. அதுக்குள்ளேயும் இப்படி ஒரு திட்டமா? தடபுடல் ஏற்பாடா? எப்பவும் என் கஷ்டத்தை முறையிட தான் இங்க வருவேன்.. ஆனா, இங்கேயே எனக்கொரு கஷ்டம்னா? முருகா உன் பனிரெண்டு கண்ணும் இந்தக்கொடுமைகளை பார்த்துக்கிட்டு தான் இருக்கா? அடியே ஷ்ரதா! அவர் திடுதிப்புன்னு கோவிலுக்குன்னா உனக்கெங்கப் போச்சி புத்தி? போ! போய் ஏதாவது நல்ல தூணாப் பார்த்து முட்டிக்கோ'

ராஜ மாணிக்கம் திருமண ஏற்பாடுகளைப்பற்றி பேசியவர், "நீ வேணும்னா போய் சாமி கும்பிட்டுட்டு வா வீசி" என்றார்.

அவனும், "சரிங்க மாணிக்ஜி" என்று சுற்றுப் பிரகாரத்தை நோக்கி நடந்தான்.

இன்னும் அலங்கார வேலைகள் எல்லாம் முழுமையாக நிறைவடைந்திராதபடியால் ஆங்காங்கு ஆட்கள் ஜோடிப்பதில் மும்முரமாயிருந்தார்கள்.

முதலில் விநாயகரை போய் தரிசித்தான் வீசி. கண்மூடி கும்பிட்டுக் கொண்டிருந்தவனை உலக அதிசயங்களில் ஒன்றை காண்பவள் போலவே பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா. அர்ச்சகர் விபூதி தந்தபோது கூட மறுக்காமல் பூசிக்கொண்டான் அவன்.

அவளுள்ளான குரல், 'இதுவே கடைசி வாய்ப்பு.. தவறவிட்டுவிடாதே ஷ்ரதா' என்று உசுப்பிவிட்டது. அவன் அந்த பிள்ளையார் கூடாரத்தை சுற்றத் துவங்கியதுமே தானும் அவன் பின்னாடியே சென்றாள். கைகளை கூப்பியபடியே அவனுக்கு கேட்கும்படியாகவே முணுமுணுத்துக்கொண்டு வந்தாள்.

"நேத்து அத்தையும் மாமாவும் அவ்வளவு சொல்லியும், இன்னைக்கு நீங்க இப்படி செய்யுறது சரியில்லைங்க.. சட்டப்படி இது தப்புங்க.."

அவன் நிற்காமல் சென்று கொண்டிருந்தான். அவள் கூறியதை காதில் வாங்கியது போலவே தெரியவில்லை.

"நீங்க நம்புற அந்த ராஜ மாணிக்கம் அவ்வளவு நல்லவர் கிடையாதுங்க.. அவர் மேல ஏகப்பட்ட கொலைகேஸு இருக்கு.. அப்பா சொல்லியிருக்காரு"

"ம்ம், புத்தர் பொண்ணு சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்.. ஒரு விஷயம் ஞாபகம் வச்சிக்கோ ஷ்ரதா.. இவங்களைப் பத்தின உன் குற்றச்சாட்டு எந்தளவுக்கு உண்மையோ அதேஅளவுக்கான குற்றச்சாட்டு உன் அப்பா மேலயும் இருக்கு.. உன் அப்பா பண்ற அடிதடி தொழிலையே அவருக்குப் போட்டியா இன்னொருத்தரும் பண்ணினா அவரு ரொம்ப கெட்டவரு, உன் அப்பா ரொம்ப நல்லவரா? பிரமாதம்!" கோபமாய் கேட்டுக்கொண்டே பிள்ளையார் கூடாரத்தை சுற்றி முடித்தவன் அடுத்து சிவன் சன்னதிக்குச் சென்றான்.

"என் மேல என்ன தப்புங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு நரகவேதனையைக் கொடுக்குறீங்க?"

"பிரசாதம் வாங்கிக்கோங்கோ!" என்ற அர்ச்சகர் வில்வஇலை தீர்த்தத்தை அவன் உள்ளங்கையில் விட, பாதி பருகி மீதியை தலையில் தடவியவன், அடுத்து தட்சிணா மூர்த்தி, நாகம்மை, துர்கையம்மன் என்று வரிசையாக கும்பிடு போட்டான். அவள் தன் கேள்விக்கான பதில்வேண்டி அவனை நெருங்கி அடிவைத்துக் கொண்டிருந்தாள்.

துர்கை சன்னதி அர்ச்சகர் குங்குமம் கொடுத்தபோது வாங்கிவிட்டு திரும்பியவனிடம் தன் தாலியைக்காட்டி குங்குமம் வைக்கச்சொன்னாள் ஷ்ரதா. அவன் குறுநகையிலும் கன்னத்தில் குழிவிழுந்தது. "என்ன? என்னை இந்த தாலி சென்டிமெண்ட்ல லாக் பண்ணலாம்னு பார்க்குறியா?"

ஷ்ரதா தயக்கமேயின்றி அந்தப் பொதுவெளியில் அவன் காலில் விழுந்தாள்.

வீசி அக்கம் பக்கம் பார்த்து, "ஹே! என்ன பண்ற? எழுந்திரு!" என்றான்.

அவள் கண்ணீர் கப்பிய கண்களுடன் மனதிலிருந்து பேசினாள். "நான் என்ன தப்பு செஞ்சேன் தெரியலைங்க.. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சுப் பார்க்குறேன்.. எதுவுமே எனக்கு ஞாபகம் வர மாட்டேங்குது.." என்று மூக்குறிஞ்சினாள்.

"ஷ்ரதா போற வர்றவங்க எல்லாம் பார்க்கிறாங்க மரியாதையா எழுந்திரு.."

"இல்லைங்க, அத்தையும் மாமாவும் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க.. என்னையும் என் குடும்பத்தையும் பழிவாங்கறதா நினைச்சி நீங்க அவங்க நம்பிக்கையை இழக்க வேணாம் ப்ளீஸ்.."

"ஷ்ரதா இடியட்! எழுந்திரிச்சித்தொலை.. எல்லாம் ஒரு மார்க்கமா பார்க்குறாங்க.."

"என்னை ஏன் இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கிறீங்க? என்னால முடியலைங்க.."

"ஷ்ரதா, நீயென்ன அந்த ஆண்டவனே வந்தாலும் இப்போ இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது.." என்று ஆணவமாய் சொல்லிவிட்டு அவ்விடம்விட்டு நகர்ந்தான் வீசி.

அப்போது அந்தக் கணத்தில் தான் கடவுளின் ஈகோ தூண்டப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். வீசிக்கு எதிராய் ஒரு சம்பவத்தை நிகழ்த்தி முடித்திருந்தார்.

ஷ்ரதா அவன் உறுதியில் முற்றிலுமாய் இடிந்துபோனாள். இனியும் அவனிடம் கெஞ்சுவது வீண் என்று புரிந்து கொண்டாள்.

முருகன் சன்னதி வந்ததும் அவள் கூடுதலாக கும்பிடு போடுவாள், கவசம் முணுமுணுப்பாள் என்று வீசி நினைத்துக் கொண்டிருக்க, முதல்முறை முருகன் சன்னதி வந்து விக்கிரகம் பார்க்காமல் கீழே தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

அவனுக்கு அவளது செய்கை தன்னை பலவீனப்படுத்துவது போல் இருந்தது. வித்யாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தனது முடிவிலிருந்து தன்னை அவள் பின்வாங்க வைத்துவிடுவாளோ என்றும் பயந்தான்.

அவன் மனசாட்சி அவளைவிடவும் மோசமாக புலம்பியது. 'முன்னாடி சரின்னு சொல்லிட்டு இப்போ முடியாது மாணிக்ஜின்னு சொன்னா சபையில வச்சி அவரை மூக்கறுத்தது மாதிரியிருக்கும்.. அப்புறம் அவர் முகத்தை மட்டுயில்ல என் முகத்தையே என்னால கண்ணாடியில ஏறெடுத்துப் பார்க்க முடியாது.. ஜென்மத்துக்கும் குற்றவுணர்வுல வெந்தே செத்துப்போவேன்.. இனி இவக்கூட தனிச்சிருக்கது பேராபத்து' என்று வேகமாய் ராஜ மாணிக்கத்தை நாடிநடந்தான்.

பின்னால் ஷ்ரதாவை யாரோ நிறுத்திப் பேசுவது கேட்டது. திரும்பிப் பார்த்தான். கமலா தான் அவளைப் பிடித்து வைத்திருந்தார். மானசீகமாய் அவருக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு ராஜ மாணிக்கத்தை நோக்கிச் சென்றான் வீசி.

அங்கு அவர் தன் அடியாட்கள் அனைவரையும் சுற்றி நிற்க வைத்து எதையோ தீவிரமாக சொல்லிக் கொண்டிருந்தார். வார்த்தைகள் அனைத்தும் கொப்பறை இட்லிகளாய் சூடாய் வந்து விழுந்தது.

வீசிக்கு தூரத்தில் எதுவும் கேட்கவில்லை.

அருகில் நெருங்கிய போது ராஜ மாணிக்கத்தின் வலதுகை மகா என்கிற மதி காமராசு பேசுவது கணீரென ஒலித்தது. "இல்ல மாணிக்கண்ணே.. பாப்பாவை அந்த விஜயாதித்தன் தான் கடத்தியிருப்பான்.. அந்த சிவனேஸ்வரன் விஜயாதித்தனோட தங்கச்சி மகன் தான்.. மாமனார் தூண்டுதல்ல மருமகன் கடத்தியிருக்கான்.."

ராஜ மாணிக்கம் மகாவின் பேச்சை மறுத்தார். "இல்ல மகா, பிளான் விஜயாதித்தனோடதா இருந்திருந்தா நமக்கு தகவல் வந்திருக்கும்.. இந்தப்பய சிவனேஸ்வரன் ஏதோ வேற ஒரு வன்மத்துல தான் கடத்தியிருக்கான்" என்றார்.

இவ்விடத்தில், "ஆமா, மாணிக்ஜி சொல்றது தான் சரி" என்று குறுக்கிட்டான் வீசி.

வீசியின் குரலைக்கேட்டதுமே மகாவின் கோபம் உச்சத்தைத் தொட்டது. "என்ன சரி? ஓஹோ இவரும் அந்த விஜயாதித்தனோட மருமகன் இல்ல.. அதான் மாமனாரை விட்டுக்கொடுக்காம பேசுறாரு.. யாருக்குத் தெரியும் பாப்பாவைக் கடத்த இவரேக்கூட ரூட் போட்டுக் கொடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல" என்று எகிறினான்.

வீசி கண்கள் சிவப்பாகி பதிலுரைக்கும் முன், ராஜ மாணிக்கம் மகாவின் செவிள் பிய்யும் அளவிற்கு ஒரு அறைவிட்டிருந்தார். "யாருக்கிட்ட குரலை உசத்திப் பேசுற மகா? அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை.. மொத அவர்கிட்ட மன்னிப்புக்கேளு" என்றார்.

வீசி கோபத்துடன், "வேண்டாம் மாணிக்ஜி" என்று கை உயர்த்தினான்.

மகா கன்னத்தைத் தடவிக்கொண்டு இன்னும் வீசியை முறைத்தபடியே நின்றிருந்தான். அவனுக்கு வீசியை முன்பிருந்தே பிடிக்கவில்லை. அதுவும் ராஜ மாணிக்கம் வீசியை மாப்பிள்ளை என்று தலையில் தூக்கிவைத்து ஆட ஆரம்பித்ததிலிருந்து சுத்தமாகப் பிடிக்கவில்லை.

"இவ்வளவு நாள் வேலை பார்த்த நம்மளை விட மாணிக்கண்ணே அவனை பெரிய ஆளா உசத்திப் பேசுறது பிடிக்கலைடா.. ஒரே சமயத்துல பத்துபேரை அடிச்சிட்டா அவன் பெரிய இவனாடா?" என்று எத்தனையோ தடவை சிந்தாமணி மதுக்கடையில் குடித்துவிட்டு புலம்பி இருக்கிறான்.

ஆனால், போதையில் மட்டுமே அவ்வார்த்தைகள் வீரியத்தோடு வெளிவரும். போதை தெளிந்தபின், "டேய்! மாணிக்கண்ணே சொல்றதுக்கு எவனாவது எதிர்ப்பு சொன்னீங்க குடலை உருவி மாலைப் போட்டுக்குவேன்" என்று படம் காட்டுவான்.

பின்னொரு சமயம், "பதினஞ்சு வயசுலயிருந்தே மாணிக்கண்ணே கூட இருக்கேன்டா நானு.. இப்போ ஏழு வருசமாத்தான்டா இவன்.. பதினஞ்சு பெருசா? ஏழு பெருசா?" என்று ரகளை செய்வான். எல்லாம் வயிற்றில் கிளம்பிய வாந்தியுடனே வெளியே வந்துவிழுந்துவிடும் அவ்வளவு தான்.

சிலநேரம் அடங்கி நடப்பவனை உடன் இருப்பவர்கள் வேறு, "என்ன மகாண்ணே! நீ தான் அடுத்த மாணிக்கண்ணேன்னு நினைச்சோம்.. அண்ணே புதுசா யாரையோ சொல்றாரு.." என்று ஆழ்ந்த அனுதாபங்களை சொல்லி அவன் அடிமன ஆசைகளை கிளறிவிட்டுப்போவார்கள்.

இடையில் வீசி ஷ்ரதாவை திருமணம் செய்துகொண்டபோது விஜயாதித்தனை விட மகாவே ரொம்ப சந்தோசப்பட்டான். ஏனென்றால் அவனும் விஜயாதித்தனை போலவே இனி வீசியை ராஜ மாணிக்கம் வெறுப்பார் என்று நினைத்தான்.

ஆனால், அவர்கள் இருவரின் ஆசையிலும் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, இப்போது தன் மகளை இரண்டாவது கல்யாணம் செய்து கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டார் ராஜ மாணிக்கம்.

அந்தக் கோபத்தில் ஒரு பகுதியை தான் இப்போது வீசிக்கு எதிரான பேச்சில் விட்டிருந்தான் மகா.

ராஜ மாணிக்கம் சுற்றி நின்றிருந்த தன் ஆட்களைப் பார்த்து அனல் பறக்க கட்டளையிட்டார். "நான் சொன்னது எல்லாம் புரிஞ்சது இல்ல? இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துல என் பொண்ணு என் வீட்டுல இருக்கணும்! இல்ல? ம்ம்!" என்று உறுமி எச்சரித்தார்.

அவர்கள் வேகமாக கலைந்து சென்றார்கள். வீசி, ராஜ மாணிக்கம் சொல்ல சொல்ல கேட்காமல் ஷ்ரதாவை மறந்துவிட்டு அடியாட்களுடனே வித்யாவைத் தேடி கிளம்பிவிட்டான்.

**************

துர்கையம்மன் சன்னதியில் ஷ்ரதா வீசியின் காலில் விழுவதைப் பார்த்தபோதே, 'இந்தப்பொண்ணு என்ன கால்லயெல்லாம் விழறா!' என்று கமலா முதலில் பதறிப்போனார்.

வீசி முகத்தில் கருணை அறவேயின்றி பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், பிரச்சினை எதுவென்று அவரே ஊகித்துக்கொண்டார்.

அவன் நகர்ந்துபோனதும் அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளில் கை வைத்தவர், "ஷ்ரதா" என்று அழைக்க, அவள் அவர் முகத்தை நிமிர்ந்துப் பார்க்க விரும்பாதவள் போல் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தாள். விழிநீர் வீசிக்காக அதுபாட்டுக்க அர்ப்பணமாகிக் கொண்டிருந்தது.

அவர் அவள் நாடியில் கைவைத்து முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தார். அவள் பரிதாபமாக அவரிடம் கேட்டாள். "உங்கப்பொண்ணு என் நிலைமைல இருந்தா நீங்க இப்போ என்ன செய்வீங்கம்மா?"

அவர் பதறி, "ஷ்ரதா, நீயும் என் பொண்ணு மாதிரி தாம்மா" என்றார்.

"உங்கக் கணவரை இன்னொரு பொண்ணுக்கு உங்களால விட்டுக் கொடுக்க முடியுமாம்மா?" என்றவள் கேட்டபோது அவர் பதில் பேச முடியாமல் தலை குனிந்தார்.

"இன்னைக்கு இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தது என்னை நீங்க உயிரோடவே பார்க்க முடியாதும்மா.." என்றுவிட்டு துப்பட்டாவால் வாயை மூடியபடியே நகரப்போனவளை, "நானும் என் வீட்டுக்காரரும் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு விருப்பமில்லையா ஷ்ரதா?" என்றவர் கூறிய கடைசி வார்த்தை பிடித்து நிறுத்தியது.

lkfTx1KAQLScVPa_XxfmjUuxT01iuWLIW80fwSM2wFCJqEr2usM0zm88NOuem48NWedf8XoWXtUUEpIgI5wA8rY-FFXllwMpENQQRhKmPQVVjTeUfizEEqzBTQ6hsuZXngo7piGH


காதல் கணம் கூடும்…

கதையின் போக்கில் புதுப்புது பாத்திரங்களாக அறிமுகப்படுத்திக்கொண்டு வருகிறேன் ப்ரெண்ட்ஸ். அவர்களை செகண்டரி மெமரியில் அல்லாமல் பிரைமரி மெமரியிலேயே சேமித்துவைத்துக் கொள்ளுங்கள்.

1. அறிவழகன் (கான்ஸ்டபிள்)

2.தாரிணி சந்து (ஷ்ரதாவின் தோழி)

3.ஆதீஸ்வரன் (சிவனேஸ்வரனின் பாரீன் அண்ணன்)

4.மகா (ராஜமாணிக்கத்தின் வலதுகை)

கருத்துத்திரி,

எபி 22-க்கான டீஸர்
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 22​



கலங்கி நிற்கும் ஷ்ரதா, வீறுகொண்டு புறப்பட்டிருக்கும் வீசி, கடத்தல்காரனான சிவனேஸ்வரன் மற்றும் கடத்தப்பட்டிருக்கும் வித்யா என எல்லோரையும் மறந்துவிட்டு, ஒரு இரண்டு நிமிடம் பொறுமையாக என்னோடு பயணிப்பீர்களானால், இதுவரை தலைகாட்டாமல் மறைமுகமாயிருந்து அனைவரையும் ஆட்டிவைத்துக் கொண்டிருந்த அந்த பெரிய தலையைப் பற்றி அறிந்துகொள்வீர்கள்.

கற்காலத்தில் சிக்கிமுக்கி கற்களை உரசி தான் நம் மூதாதையர்கள் நெருப்பைக் கண்டுபிடித்தார்கள் என்று சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் நாம் படித்திருப்போம். அச்சம்பவத்திற்கு பிறகு, பெரிதாக கற்களைப் பற்றி யோசித்திராத நம்மவர்களை பரபரப்பாக அதைப்பற்றி பேச வைத்த மகான், மதுரையின் பிரபல ஊழல் மன்னன் கேஆர்பி. அதுவும் சாதாரண கற்களைப் பற்றி அல்ல. வழவழப்பான கிரானைட் கற்களைப் பற்றி.

நீங்கள் படையப்பா படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் ஒரு பாடலில் ரஜினி 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா.. தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா' என்று மலையை மடுவாக்கி, ஒரே பாடலில் ஓஹோவென்று வருவாரே! அது இந்த கிரானைட் மலையின் புண்ணியத்தால் தான்.

சரி, கேஆர்பிக்கும் கிரானைட்டுக்கும் என்ன சம்பந்தம்? இல்லை கேஆர்பிக்கும் இந்தக் கதைக்கும் தான் என்ன சம்பந்தம்? முதலில் இந்த கேஆர்பி யார்? என்று நமக்குள் சில கேள்விகள் எழலாம்.

அவரைப்பற்றி தெரிந்துகொள்ள நாம் ஒரு முப்பத்திரண்டு ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் பொதுப்பணித்துறையில் ஒரு சிறிய காண்டிராக்டராக இருந்து, வைகை ஆற்றை தூறுவாறும் வேலையில் எல்லை மீறி மோசடி செய்து, 'காண்டிராக்டர்' என்ற உரிமமே ரத்து செய்யப்பட்ட யோக்கியவான் தான் இந்த கேஆர்பி.

தன் மாமா ஒருவரின் கிரானைட் தொழிற்சாலையை கைக்குள் போட்டு, ஆட்கள் பத்துபேரையும் சேர்த்துக்கொண்டு அடிக்கடி சுற்று வட்டாரத்தில் இருக்கும் கத்தோலிக்க கல்லறைகளின் விலையுயர்ந்த கிரானைட்டுகளை எல்லாம் திருடிக்கொண்டு வரச்சொல்லி, மறுபாலீஷ் செய்து புதிதுபோல் விற்று செம துட்டு பார்த்துக்கொண்டிருந்தார் இந்த கனவான்.

களவாடலும் கலவி போல் தான். முதல்முறை பயமாக இருக்கும். குற்றவுணர்வு இருக்கும். மாட்டிக்கொள்வோமோ என்று பல சூதானம் இருக்கும். ஆனால், ஒருமுறை சுகம் கண்டுவிட்டால் அடிக்கடி தப்பு செய்ய மனம் இஷ்டப்படும்.

சிறுவயதிலேயே பொய்யும் புனைசுருட்டும் கவசகுண்டலமாய் வாய்க்கப் பெற்ற கேஆர்பியிடம் நாம் மனசாட்சியை எதிர்பார்த்தால் முட்டாள்களே. நாட்கள் செல்ல செல்ல அவரின் அட்டூழியம் அதிகமானதே தவிர குறையவில்லை. சாம்பல் கிரானைட்டை பாலீஷ் போடும் போது சிவப்பு நிறம் கலந்து, சிவப்பு கிரானைட் என்று சொல்லி அதிக விலைக்கு தலையில் கட்டுவது, கருப்பு ஆயில் பூசி கிரானைட்டுகள் ஆழ்ந்த கறுப்பில் பளபளவென்று இருப்பதாகக் காட்டி ஏமாற்றுவது, பாலீஷ் போடும்போது விரிசல் விழும் கற்களை நேக்காக மெழுகு பூசி விற்பது என்று ராஜாவாக வாழ்ந்துக் கொண்டிருந்தார்.

எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களை எல்லாம் தாட்சண்யமின்றி தன் அடியாட்கள் மூலம் எமனிடம் அனுப்பிக் கொண்டிருந்தார்.

அவரது அடியாட்களில் இருவர் எப்போதுமே அவரது அண்டைக்குள்ளேயே இருந்தார்கள். வலதுகை இடதுகை ஒத்தாசையைக் கூட தலையில் ஏற்று செய்ய தயாராக இருந்தார்கள். அவர்களே பின்னாளில் எதிரெதிர் துருவங்களாக மாறிப்போன விஜயாதித்தனும் ராஜ மாணிக்கமும்.

கேஆர்பி பால் என்றால் நெய்யாக நின்றார்கள் சேவகர்கள் இருவரும்.

அவர்களின் ஒத்துழைப்பில் தான் தனது அழிச்சாட்டியங்களை எல்லாம் மாவட்டம் முழுவதும் கிளைபரப்பி கொண்டிருந்தார் கேஆர்பி.

இதன்படி, குவாரி வெட்டி கிரானைட் எடுப்பதற்காக படையப்பா பட மணிவண்ணனை போல் பாமரனின் நிலத்தை ஏமாற்றி வாங்குவது, தரமான கிரானைட் உள்ள நிலத்தை யாரேனும் தர மறுத்தால் சிங்கம் பட பிரகாஷ்ராஜைப் போல் மிரட்டியோ, தாக்கியோ பறிப்பது என்று செயல்பட்டு வந்தார். இதன் நீட்சியாக அரசு அதிகாரிகள் சிலரையும் கையில் போட்டுக்கொண்டார். பொது நிலங்கள், கண்மாய்கள், குளங்கள், மலைகள் என்று ஒன்றையும் விடாமல் கேஆர்பிக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைத்தார். இந்த வழியில் மக்களுக்குச் சொந்தமான எழுபது கண்மாய்கள், ஐம்பது ஊருணிகள், முப்பது சாலைகள், எண்ணிலடங்கா புறம்போக்கு நிலங்கள் என பலவும் உருமாறியிருந்தன.

கேஆர்பிக்கு உதவியாக கிரானைட் கொள்ளைக்கு மதுரை மாவட்டத்தைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட கூலிப்படை தலைவர்கள் இருந்தாலும் விஜயாதித்தனும், ராஜ மாணிக்கமும் தான் மிக நெருக்கமானவர்களாக அறியப்பட்டார்கள்.

பின்னால் ஒரு விதைக்குள் இரண்டு செடிகள் முளைக்காது என்பது போல் முன்னாள் நண்பர்களிடையே விரிசல் உண்டானது. நம் இருவரில் யார் கேஆர்பி அண்ணனுக்கு நெருக்கம் என்று அடிக்கடி சர்ச்சை எழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சண்டை பெரிதாக இருவருமே பிரிந்தார்கள். இன்றுவரை இருவருமே வேலை பார்ப்பதென்னவோ கேஆர்பிக்கு தான். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் பகை பாராட்டிக்கொண்டு கிடக்கிறார்கள்.

இவ்விஷயத்தில் கேஆர்பி வெளியே காட்டிக் கொள்ளவில்லையானாலும் உள்ளுக்குள் ராஜ மாணிக்கமும் விஜயாதித்தனும் அடித்துக்கொள்வதை பார்த்து ரசிக்கவே செய்தார்.

சண்டைக்கென்றே வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தினவு கொண்டால் உரிமையாளனுக்கு கொண்டாட்டம் தானே!

இன்னொரு சமாச்சாரம் கேஆர்பி அடிக்கடி அரசியல்வாதிகளுக்கு மஹாலெட்சுமியாகவும், திருப்பதி வெங்கடாஜலபதியாகவும் அவதாரம் எடுப்பதால் நெருங்கிய நட்பு உண்டு அவர்களிடம். அவர் மூலம் தான் மேலூர் தொகுதி எம்எல்ஏவின் பினாமியானார் விஜயாதித்தன். ராஜ மாணிக்கம் மதுரை மேயரின் பினாமி.

ஒருமுறை தேர்தல் சமயத்தின் போது கேஆர்பி பணப்பட்டுவாடா வேலையை விஜயாதித்தனிடம் கொடுத்துவிட, ராஜ மாணிக்கம் கொந்தளித்துவிட்டார். அப்போது நிகழ்ந்த பெரும் கலவரத்தின்போது கேஆர்பி பல்குத்திக்கொண்டே, 'எத்தனை தலைகள் உருண்டன?' என்று கேட்டாரே பார்க்கலாம். இப்படி புண் ஆறப்போகும் சமயமெல்லாம் போர்க் வைத்து கிண்டிக்கொண்டு கிடந்தார் அந்த காட்பாதர்.

ஒரு ஒற்றுமை தற்போது மகாவும் ராஜ மாணிக்கத்தை காட்பாதராக வரித்துக்கொண்டு வீசியுடன் குரோதம் பாராட்டுவது தான். ஆம், வரலாறு திரும்புகிறது கதை தான்.

வித்யாவை தேடிச்செல்லும் பயணத்தில் வீசி தன்னருகில் உட்கார்ந்திருக்கிறான் என்பதற்காகவே தன் ஆங்காரத்தை எல்லாம் ஸ்டியரிங்கில் காண்பித்துக் கொண்டிருந்தான் மகா.

வீசி பின்னாலிருந்தவர்களிடம், "சிவா வித்யாவை எங்க வச்சி தூக்கினான்?" என்று விசாரித்தான்.

"கீரைத்துரை சுடுகாட்டுப்பாதையில ஆள் நடமாட்டம் இல்லாத இடமாப் பார்த்து தூக்கியிருக்கான்.." என்று நிர்மலமானப் பார்வையுடன் பதிலளித்தான் மகா.

"நம்மாளுங்க ஸ்கார்ப்பியோல எத்தனை பேர் இருந்தாங்க?"

மீண்டும் மகாவே "ரெண்டு பேர்" என்றான்.

வீசி அடுத்தக்கேள்வியை நேரடியாகவே மகாவை பார்த்துக் கேட்டான். "சிவா ரெண்டு பேரையுமே அடிச்சிட்டானா?"

"ரெண்டுபேருமே இப்போ சாகக்கிடக்காங்க.."

வீசி புருவம் உயர்த்தி யோசனையாக, 'ஓ' என்றான்.

"அவன்கிட்ட பிஸ்டல், மயக்க மருந்துன்னு எல்லாம் இருந்திருக்கு.. அவன் பிஎம்டபிள்யூல வில்லாபுரம் பக்கம் போனதா ஃபர்ஸ்ட் எனக்கு தான் நம்ம பசங்க போன் பண்ணி சொன்னாங்க.. உடனே அவனியாபுரம் செக்போஸ்ட்ல நுழையுற அத்தனை பிஎம்டபிள்யூவையும் செக் பண்ண சொல்லி ஆட்களை ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. இப்போ அவனியாபுரம் செக்போஸ்ட்க்கு தான் நாமப்போறோம்.." என்றான் முன்னால் சென்ற ஸ்கார்பியோவை முந்தியபடியே.

'ம்ம்' என்றபடியே வெளியே பார்த்துக்கொண்டே வந்தான் வீசி.

அவனியாபுரம் செக்போஸ்ட்டை அடைந்த போது சந்தேகப்படும் வகையில் எந்த பிஎம்டபிள்யூவும் கிராஸ் பண்ணவில்லை என்றார்கள் அந்த கைக்கூலிகள்.

"எப்படியும் அவன் இந்தப்பாதை தானே வந்திருக்கணும்.. இங்கேயும் வரலைன்னா? அந்தப்பக்கமும் போக முடியாது, மெயின் பசாருக்கு போகும் ரோடு.. இந்த இடைப்பட்ட ஏரியாவுல அவன் எப்படிடா தப்பிச்சிருக்க முடியும்?" என்று வண்டியின் பேனட்டை போட்டுத்தட்டினான் மகா.

வீசி எந்தப் பதட்டமுமின்றி நிதானமாக சொன்னான். "இந்த வட்டாரத்தைத் தாண்டி அவன் எங்கேயும் போகல.. ஸோ, நம்ம வேலை ஈஸி.."

'எப்படி இப்படி எல்லா விஷயங்களிலும் நேர்மறையாகவே சிந்திக்க முடிகிறது இவனால்? அதான் மாணிக்கண்ணேனுக்கு இவனை ரொம்பப் பிடிச்சிருக்கு' மகாவால் வீசியின் புத்திசாலித்தனத்தை ரசிக்க முடியவில்லை.

தொடர்ந்து, "வில்லாபுரத்தையே நம்ம ஆளுங்களை அலச சொன்னா, இருபத்தினாலு மணிநேரத்துல வேலை சுலபம்.." என்றான் வீசி.

ஆளாளுக்கு போன் பேசத் தொடங்கினார்கள்.

ஒரு கூட்டம் இப்படி தன்னை வலைவீசி தேடிக்கொண்டிருக்க, மாப்பாளையத்துக்குள் உள்ள ஒரு தோப்புக்குள் தோளில் கோணிமூட்டையோடு நடந்துக் கொண்டிருந்தான் சிவனேஸ்வரன்.

ஆம், வித்யாவை கடத்திக்கொண்டு வந்த சிவனேஸ்வரன் வில்லாபுரம் செல்லும் சாலையில் திடீரென பாதை மாற்றி காரைத் திருப்பினான். சாலையிலிருந்து விவசாய நிலத்திற்குள் காரை இறக்கி குலுங்க குலுங்க ஓட்டிக்கொண்டுப் போனான்.

அப்படியே ஐந்து கிலோமீட்டர் சென்றவன், நாணல்கள் மறைக்கும்படியான இடத்தில் காரை நிறுத்தி, பின், அங்கிருந்து காருக்குள்ளேயே வித்யாவை ஒரு கோணிப்பைக்குள் போட்டு மூட்டையாகக் கட்டி தன் தோளில் தூக்கிச்சென்றான்.

வெகுநாட்களாகவே யாரும் பயன்படுத்திராத பகுதி என்பதால் காரை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. எல்லாம் திட்டம்போட்டு தான் செய்திருந்தான் சிவனேஸ்வரன்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை அது அவர்களுக்குச் சொந்தமான நிலமாகத் தான் இருந்தது. அப்போதெல்லாம் ஆள் வைத்து விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார் காசிராஜன். வார இறுதியில் மகன்களை அழைத்துக்கொண்டு வந்து தோட்டத்தை சுற்றிக் காண்பிப்பார். சிறுவனான சிவனேஸ்வரன் தன் அண்ணனுடன் சந்தோசமாக அங்குமிங்குமாக சுற்றித்திரிவான். பின்பு, துபாய்காரர் ஒருவர் பேக்டரி கட்டப்போவதாக நல்ல விலை கேட்டதால் விற்றுவிட்டார்.

இந்தப்பகுதியை கடக்கும் போதெல்லாம் சிவனேஸ்வரன் கேட்பான் அந்த துபாய்காரார் பேக்டரி கட்டவில்லையா அப்பா என்று. அவர் தன் மகன்களோடு வாடிப்பட்டி பக்கம் சென்றுவிட்டதாகவும், கோடிக்கணக்கில் பணம் புரண்டு கொண்டிருப்பவருக்கு இந்த நிலத்தை வாங்கியதுகூட ஞாபகம் இருக்காது என்றும் பதில் சொல்லுவார் காசிராஜன்.

அந்தத் தைரியத்தில் தான் தற்போது காரை இந்தப்பக்கம் உள்ளுக்குள் செலுத்தியிருந்தான் சிவனேஸ்வரன்.

இன்று காலையில் நண்பன் ஒருவனை சந்திக்க அனுப்பானடி வரை வந்திருந்தவன், எதேச்சையாக வித்யாவை பிரபல அனிதா அழகு நிலையத்திற்கு வெளியேப் பார்த்தான். அதுவும் ஆடம்பரமான பட்டுப்புடவையில்.

உடனே அவனுக்கு தலைமைச் செயலகத்தில் பல்ப் எரிந்தது. நடக்கப்போகும் விபரீதத்தை கணக்குப்போட்டவன், தனது தோழியிடம் பேசிவிட்டு அலங்காரம் செய்து கொள்வதற்காக விரித்துவிட்ட கார்குழலுடன் பார்லரினுள் சென்ற வித்யாவைப் பார்த்து வில்லங்கமாக சிரித்தபடியே பைக்கை எண்பதில் பாய்ச்சி வீட்டிற்கு வந்தான்.

தனது உடைகளை ஒரு வாரத்திற்கு தேவையானபடி மூட்டை கட்டியவன், தனது தந்தை அறைக்குள் சென்று அவர் மறைத்து வைத்திருந்த பிஸ்டலில் தோட்டாக்களை நிரப்பி தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் திணித்துக்கொண்டான். பிறகு, ஃப்ரிட்ஜை திறந்து விரைவில் கெட்டுப்போகாத பதார்த்தங்களாகப் பார்த்து இன்னொரு பைக்குள் எடுத்துப்போட்டான்.

தன்னை மிரட்சியுடன் பார்த்த வேலைக்காரியிடம், "நான் என் ப்ரெண்ட் கூட ஒரு வாரம் குற்றாலம் டூர் போயிருக்கேன்னு அம்மா அப்பாக்கிட்ட சொல்லு.. இந்தா என் போன், இங்க வீட்டுலயே மறந்து போட்டுட்டு போயிட்டேன்னு சொல்லு.. என்ன சொல்லுவியா?" என மிரட்டவும், அவளும் சரியென்று தலையாட்டினாள்.

வெளியே வந்தவன் பைக்கை விட்டு தனது அப்பாவின் பிஎம்டபிள்யூவை இயக்கினான். செல்லும் வழியில் தனக்குத்தேவையான இன்னபிற பொருட்களையும் வாங்கிக்கொண்டான். பிறகு, அனிதா அழகு நிலையத்திற்கு வெளியிலேயே அவளுக்காக காரில் காத்திருக்கலானான்.

தான் முதல்முறை இது போன்ற கடத்தல் தொழில்களில் எல்லாம் ஈடுபடுவதால் காட்டன் சட்டையில் ரொம்பவே வியர்த்து கசகசத்துப் போயிருந்தான் சிவனேஸ்வரன். பதட்டத்தில் விரல்களால் ஸ்டியரிங்கில் டைப்படித்தான்.

அவள் வெளியே வந்த போது மணப்பெண்ணாய் அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்ததுமே அவன் சந்தேகம் ஊர்ஜிதமானது. காரில் அடியாட்கள் இருவர் இருப்பதை கவனித்தான். குள்ளமாய் தோழி ஒருத்தியும் உடன் இருந்தாள்.

காரில் அவர்களை பின் தொடர்ந்துகொண்டே வந்தவன், கீரைத்துரை மின்தகன மையத்தை நெருங்கியதுமே அவர்கள் வண்டியை ஓவர்டேக் செய்து வண்டியை நிற்பாட்டி பிஸ்டலைக்காட்டி மிரட்டினான். இறங்கிய அடியாட்களை எங்கு அடிக்கிறோம் என்று புத்தியில் பதியாத அளவிற்கு கன்னா பின்னாவென்று தாக்கினான்.

அவனுக்குள்ளான பதட்டமும் அவசரமும் எதையும் யோசிக்கவிடவில்லை அவனை.

இருவரையும் கணநேரத்தில் தரையில் சாய்த்துவிட்டு பிஸ்டலைக்காட்டியே வித்யாவை தனது காரில் ஏறச்சொன்னவன், என்ன நினைத்தானோ கீழே விழுந்து கிடந்தவர்களைப் பார்த்து, "என் பேரு சிவனேஸ்வரன்.. விஜயாதித்தன் என் தாய் மாமா.. நான் என் ஷ்ரதாவுக்காகத் தான் இவளை கடத்திட்டுப் போறேன்" என்று அவர்கள் தன்னை பேட்டி எடுப்பது போல் கூறிவிட்டு, மயக்க மருந்து தெளிக்கப்பட்ட கர்ஷீப்பை வித்யாவின் மூக்கில் வைத்து அழுத்தினான்.

உதவி கேட்டு கத்திக் கொண்டிருந்தவள், அவனை எதிர்க்க முடியாமல் மூர்ச்சையானாள். அவளை அப்படியே பின்சீட்டுக்குள் தள்ளியவன் காரை இயக்குவதில் முஸ்தீபானான்.

தோழியானவள், "காப்பாத்துங்க! காப்பாத்துங்க! கடத்திட்டுப்போறான்! கடத்திட்டுப்போறான்!" என்று கத்துவது காற்றின் வேகத்தில் பின் தொடர்வது போல் இருந்தது.

இப்படி திட்டமிட்டு கடத்திக்கொண்டு வந்திருந்தவன் நேரே அவளை கிணத்து வீட்டுக்கு தூக்கிச்சென்றான்.

அங்கு கோணியிலிருந்து அவளை வெளியேற்றி குடிசையின் நிலைக்கம்பில் சாய்த்து வைத்து, கைகளை பின்புறமாக சேர்த்து கட்டிவைத்தான்.

பிறகு, ஒரு மலையையே நகட்டி வைத்தாற்போல் சோர்வாக ஓரத்து கயிற்றுக்கட்டிலில் போய் விழுந்துவிட்டான்.

மாலை ஆறு மணியளவில் டபடபவென சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தவனுக்கு அது மழையின் கும்மாளம் என புரியவும் ஆசுவாசம் உண்டானது. பிஸ்டலின் மேல் வைத்தக்கையை எடுத்தான்.

மயக்கத்தில் கிடந்தவள், "ஹ்ம்ம்..ஹ்ம்ம்" என்று முனகிக்கொண்டிருந்தாள். கூரையின் இடைவெளியிலிருந்து மழைத்துளி அவள்மேல் விழுந்து கொண்டிருந்ததால் சிவனேஸ்வரன் கணக்கிட்ட நேரத்திற்கு முன்னமே முழிப்பு தட்டியிருந்தது.

அப்போதுதான் அவளை நிதானமாக கவனித்தான் சிவனேஸ்வரன்.

கவர்ச்சியான முகம், நீளமான கண்கள், அடர்த்தியான கண்ணிமைகள், கோபக்காரி என்பதற்கேற்ப கூர்நாசி, அதிக சதைப்பற்றில்லா இதழ்கள், மாசுமருவில்லா கன்னங்கள் என்று இயற்கையின் கொடை போக, அழகுநிலையப் பெண்களின் கை வண்ணத்தில் அழகியாகத்தான் பரிமளித்தாள் வித்யா. அதிலும் மழைத்துளி அவள் மேல் தெரித்திருந்தது சற்றுமுன் தீட்டிய ஓவியம் போல் பேரழகியாகக் காட்டியது அவளை.

ஆனால், ஷ்ரதா பித்தனான சிவனேஸ்வரன் அவளை ஷ்ரதாவுடன் ஒப்பிட்டான். அப்படிப் பார்த்தால் வித்யா நிறமும் வனப்பும் கம்மி தான்.

'அவள் நிறம் எப்பேர்ப்பட்டது! பன்னீர் ரோஜாவை போலல்லவா முக அசைவுகள் இருக்கும்!' வில்லன் ரசனையுடன் ஷ்ரதாவை மனக்கண்ணில் கொண்டுவந்தான்.

வித்யா கண்களை திறக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.

சிவனேஸ்வரன் அவளை பார்ப்பதை தவிர்த்தான். சிறிதுநேரம் சாளரத்தின் வழியே மழையையே வெறித்துக் கொண்டிருந்தான்.

முயன்று கண்களைத் திறந்த வித்யா, கயிற்றுக்கட்டிலில் கால் மேல் கால்போட்டுப் படுத்திருந்த சிவனேஸ்வரனைப் பார்த்ததும் "டேய் பொறுக்கி" என்று கத்தினாள். ஆத்திரத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தாள்.

ஆனால், அவனிடம் எந்தவித சலனமும் இல்லை. சர்வ அலட்சியமாகப் படுத்திருந்தான்.

அவள் கைக்கட்டை அவிழ்க்க முயன்ற போது சுத்தமாக முடியவில்லை.


****************


"என்ன உங்களுக்கு அறுபதாம் கல்யாணமா?!" உச்சபட்ச அதிர்ச்சியிலிருந்தாள் ஷ்ரதா.

இந்த திருப்பத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் இது கனவு தான் என்றே முடிவுகட்டிவிட்டாள். தூரத்தில் கேட்ட கோவில் மணியோசைகூட அவள் நம்பிக்கையைப் பெறவில்லை.

கமலா அவளுக்கு விளக்கும் பொருட்டு பழசை நினைவுகூர்ந்தார். "ம்ம், ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் ஹாஸ்பிடல்லயிருந்து டிஸ்சார்ஜ் ஆனாரு.. இப்போ இதெல்லாம் தேவையான்னு கேட்டேன்.. கண்டிப்பா நடந்தே ஆகணும்னு சொல்லிட்டாரு.."

"ஹாஸ்பிடல்ல இருந்தா? என்னம்மா சொல்றீங்க?"

"அப்போ அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது உனக்குத் தெரியாதா ஷ்ரதா? வீசித்தம்பி உன்கிட்ட சொல்லலையா?"

"அய்யோ! சொல்லலையேம்மா.."

"அப்போ ரொம்ப பயமாயிடுச்சு அவருக்கு.. தம்பிக்கிட்ட என் பொண்ணை நீ தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு மரணப்படுக்கையில கிடந்தவர் மாதிரி கேட்டாரு ஷ்ரதா.. தம்பியும் ஒத்துக்கிடுச்சி.. திடீருன்னு நேத்து சாயங்காலம் இன்னைக்கு எங்க கல்யாணத்தோடயே அவங்க நிச்சயத்தையும் வச்சிக்கலாம்னு சொன்னப்போ, தம்பி மறுத்துப் பேசல.." எனும்போதே, ராஜ மாணிக்கம் பதட்டமாக வந்து, "கமலா, வித்யாவை விஜயாதித்தனோட தங்கச்சிப் பையன் கடத்திட்டானாம்.. மகாவும் வீசியும் தேடிப்போயிருக்காங்க.." என்றார்.

கமலா பதறிப்போனவராக, "என்னங்க சொல்றீங்க?" என்றார்.

உடன், "ஷ்ரதாவும் என்ன அன்க்கிள் சொல்றீங்க?" என்றாள்.

"இப்போதான் பசங்க போன் பண்ணினாங்க கமலா.. சொந்தக்காரங்களை எல்லாம் கிளம்பச் சொல்லு.. விசேஷத்தை இன்னொரு நாள் வச்சிக்கலாம்னு நான் சொல்லிட்டதா சொல்லு.." எனவும் அவரும் கண்களை துடைத்தபடியே தங்கள் உறவினர்களை நோக்கிச் சென்றார்.

அவர் சென்றதும் ஷ்ரதா ராஜ மாணிக்கத்தைப் பார்த்து நம்பிக்கையின்றி சொன்னாள். "இல்ல நீங்க பொய் சொல்றீங்க.. ஷிவா அத்தான் அப்படியெல்லாம் பண்ணக்கூடியவர் கிடையாது" என்றாள்.

அவருக்கு அது கடுப்பை வரவழைத்ததோ என்னவோ ஆவேசமாகக் கத்தினார். "அவன் தான் கடத்தியிருக்கான்.. கடத்திட்டு என் பேரு சிவனேஸ்வரன்.. என் ஷ்ரதாவுக்காக தான் இவளை கடத்திட்டுப் போறேன்னு வாக்குமூலம் கொடுத்திருக்கான்.. உன்னால தான் என் பொண்ணு காணாமப்போனா.." என்றார்.

"என்னாலயா? ம்ம் இருக்கலாம்.. என் வயித்தெரிச்சலும் கண்ணீரும் சும்மா விடுமா உங்கப் பொண்ணை? என்னப் பார்க்கறீங்க? ஷிவா அத்தான் பண்ணினது தப்புன்னா, நீங்க பண்ணயிருந்தது மகா தப்பு.. ஞாபகம் இருக்கா உங்களுக்கு? நீங்க என்னை அன்னைக்கு உங்கப் பொண்ணு மாதிரின்னு சொன்னீங்க.. உங்கப்பொண்ணு வாழ்க்கையை நீங்களே சீரழிப்பீங்களா?" எவ்வளவு முயன்றும் ஒருசொட்டு கண்ணீர் அவள் கண்ணிலிருந்து இறங்கிவிட்டது.

ராஜ மாணிக்கம் சபையில் குழந்தையை அழ வைத்தவர் போல அசௌகரியமாக உணர்ந்தார்.

"அவருக்கு உங்க மேல நன்றிக்கடன் அதிகம்.. நீங்க அதை வச்சி அவரை மிரட்டுறது சரியில்ல.."

அவளது பேச்சை அவரால் உதாசீனப்படுத்திவிட்டு செல்ல முடியவில்லை. குரலை தாழ்த்தி சொன்னார். "என் பொண்ணு ஆசைப்பட்டுட்டாளேம்மா.."

"உங்கப்பொண்ணு ஆசைப்பட்டுட்டாளா? ஒரு அப்பாவா நீங்க தானே அவங்களுக்கு நல்லது கெட்டது எடுத்து சொல்லனும்.. எனக்கென்னமோ இது உங்கப் பொண்ணு ஆசையா மட்டும் படலை.." என்று ஊடுருவும் பார்வையோடு சொன்னாள்.

உண்மை தான் என்பது போல் ஆமோதிப்பாக மௌனமாக நின்றார் ராஜ மாணிக்கம்.

"கோவிலுக்குள்ள சாமியை தவிர்த்து வேற யாரைப் பார்த்தும் கையெடுத்துக் கும்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க.. நான் உங்களை நான் கும்பிடுற சாமியா நினைச்சி கும்பிட்டு கேட்கறேன்.. அவரை எனக்கு மட்டுமே சொந்தமா என்கிட்ட கொடுத்திருங்க.." என்று கும்பிட்டு கேட்டாள்.

ராஜ மாணிக்கம் தொண்டையில் முள் சிக்கியவரைப் போல எதுவும் பேச முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்துசென்று விட்டார்.

ஷ்ரதா தனது இந்த முயற்சியும் தோல்வியடைந்த விரக்தியில் பொடிநடையாக தனது வீடு நோக்கிப் புறப்பட்டாள்.

அறைக்குச் சென்றதும் முதல்வேலையாக போனை கண்டுபிடித்து எடுத்து, சிவனேஸ்வரன் வித்யாவை கடத்தியதைக் குறித்து தன் தந்தையிடம் தெரிவித்தாள். விரைவில் வித்யாவை கண்டுபிடித்து அவள் அப்பாவிடம் ஒப்படைக்கும்படியும் கேட்டுக்கொண்டாள்.

ஆனால், இவ்விஷயத்தை முன்பே அறிந்திருந்த விஜயாதித்தன் சாமர்த்தியமாக வேறொரு திட்டத்துடன் ராஜ மாணிக்கத்திற்கு முன்பே வித்யாவை கண்டுபிடிக்கும்படி தன் ஆட்களை ஏவியிருந்தார். பாபம்! ஷ்ரதா இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

-RODxxHya9VsizxaSPP5migu-xL2p19CPJNpnDjHipvbbi2b51fzrntWHN7oL2Un8N1r395Oo9RcD81IDaHPBpxJKokLrwFyUiAVaRS0VA3yKvgipSXFpUGRTr2fBydVC3Lrz98U


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
❤️❤️❤️❤️❤️

இதுக்குப்பேர் தான் ஹார்ட் டச்சிங் கமெண்ட்😂
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 23​



அறையில் உட்கார்ந்து நடந்த விஷயங்களையே யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரதா கடவுளுக்கு நன்றி சொல்வோமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள்.

"ஷிவா அத்தான்கிட்ட உண்மையை சொன்னது தப்பாப்போச்சி.. வித்யாவை இப்படி கடத்திட்டாரே.. அதுவும் ஒரு வகையில நல்லது தான்.. வித்யாவுக்கும் அவருக்கும் நிச்சயம்னா என்னால தாங்கிக்கிற முடியுமா?" தலையைப்போட்டு உருட்டிக்கொண்டேயிருந்தவள் திடீரென எழுந்த அபிராமியின் நினைவில் அவரிடம் இதைப்பற்றி சொல்ல வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தாள். அவரின் நிம்மதியை குலைப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.

இன்று காலையில் அவளை கோவிலில் விட்டுச் சென்ற மகராசன், வைகறை இரண்டறை மணிக்கே வீடு திரும்பியிருந்தான்.

மெத்தையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ஷ்ரதா, அவனது அரவத்தில் விசுக்கென்று விழித்தெழுந்து உட்கார்ந்தாள்.

அவன் கசங்கிய முகத்தையும், சிவந்து கலங்கிய கண்களையும் பார்த்தபோது முதலில் மாது பயந்தே விட்டாள். அவனின் உடைமாறியிருந்தது வேறு அவளை குழப்பத்தில் ஆழ்த்தியது.

அவன் அவளின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டே, போனின் சிணுங்களில் பால்கனி சென்று யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான்.

அந்நேரத்திற்குள் நெஞ்சுரம் பெற்ற ஷ்ரதா, மெதுவாக பால்கனியை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

இறுதியாக, "ம்ம், பிடிச்சி வைங்க.. பத்து நிமிஷத்துல வரேன்" என்ற வீசி சட்டென்று அவள் முன்னால் திரும்பி பயமுறுத்தினான்.

அவள், "என்னங்க? வித்யா கிடைச்சிட்டாளா?" என்று திக்கினாள்.

தன் முதுகில் சொருகி வைத்திருந்த பிஸ்டலை அதிரடியாக உருவியவன், அவளையும் பிஸ்டலையும் மாறி மாறி பார்த்தான். பம்மி இரண்டடி பின்வாங்கியவள், கைகளை வேண்டாம் என்பதுபோல் அசைத்தாள்.

பிஸ்டலை சொருகிய கணத்திலிருந்தே வெளியே எடுக்காததால், முதுகில் அந்த இடம் முழுவதும் கடுத்து, வலியில் தான் பிஸ்டலை வெளியே உருவியிருந்தான் வீசி.

அவளின் பயத்தைக் கண்டதும் 'ப்ச்' என்றபடியே பிஸ்டலை தனது சாக்ஸின் கரண்டைக்கால் பகுதிக்குள் சொருகிக்கொண்டு, "இல்ல, ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல கிடைச்சிருவா" என்றான் குதர்க்கமாக. அவள் புரியாமல் பார்த்தாள்.

"என்ன உன் அப்பன் கூட சேர்ந்துக்கிட்டு நாடகமாடுறியா? சொல்லு வித்யா எங்க இருக்கா?" என்று உறுமினான்.

"இல்லைங்க.. எனக்குத் தெரியாது" என்று பயந்து நடுங்கினாள் ஷ்ரதா.

"பின்னே வித்யாவை கடத்திட்டுப்போன வில்லாபுரம் ரோட்டுல உங்கப்பன் ஆளுங்களா ஏன் திரியுறாங்க?" என்று குரலை உயர்த்தினான்.

"அது நான் தான் அப்பாக்கிட்ட வித்யாவை கண்டுபிடிச்சி அவ அப்பாக்கிட்ட ஒப்படைக்க சொன்னேங்க" என்று மெதுவாக சொன்னாள் ஷ்ரதா.

"ஓஹோ! உங்கப்பா அவ்வளவு நல்லவருன்னு நீ அவர்கிட்ட கண்டுபிடிக்க சொல்லி இருக்க.. வித்யா மட்டும் கிடைக்கட்டும், அப்போ இருக்கு அந்த சிவனேஸ்வரனுக்கு.." என்று பல்லைக்கடித்தான் வீசி.

"அய்யோ! அத்தானை ஒண்ணும் பண்ணிடாதீங்க.. அவர் எனக்கு நல்லது பண்றதா நினைச்சித்தான் இப்படியெல்லாம் பண்ணிட்டாரு.. அவர் உங்க ப்ரெண்டும் கூடங்க.. நினைச்சிப் பாருங்க.."

அவன் அவளை சமீபித்து, முகத்தில் விழுந்த முடிக்கற்றைகளை அவள் காதோரம் ஒதுக்கியபடியே வெறுப்பை உமிழ்ந்தான். "ம்ம், பழசை நினைச்சிப் பார்த்தா இப்போ ஒரு ஐடியா தோணுது.. உனக்கு இடது மார்லயும் வலது தொடையிலயும் ஒரு மச்சம் இருக்குமில்ல? அந்த மச்சத்தை கங்கால சுட்டுப்பொசுக்கி உங்க அத்தானை பயமுறுத்துவோமா?" என்று இடப்புருவத்தை தூக்கினான்.

அவள் கிலியில் வேண்டாமென்று தலையசைத்தாள்.

"இன்னும் அவன் எங்களை கான்டாக்ட் பண்ணலை.. பண்ணினான்னா இப்படித்தான் பண்ணனும்.. அப்போதான் அடுத்த செகண்ட் வித்யா வீட்டுல இருப்பா.." என்று அவளை பயமுறுத்தினான்.

'என் மச்சங்கள் பற்றி இவருக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை இந்த ரூம்ல கேமிரா எதுவும் வச்சிருக்காரோ?' முதல்முறை சந்தேகத்தோடு அந்த அறையை துழாவியது ஷ்ரதாவின் அஞ்சன விழிகள்.

"என்ன முழிக்கிற? இன்னும் தூங்காம என்ன பிளான் பண்ணிக்கிட்டு இருந்த?"

"இ.. இ.. இல்லைங்க.. ஒ.. ஒ.. ஒண்ணும் பண்ணலைங்க.."

"உன் ஷிவா அத்தான் போன் பண்ணினான்னா அடுத்த நிமிஷமே என்கிட்ட சொல்லுற.. சொல்லலைன்னு வை.."

"இல்லைங்க உடனே சொல்லிடுறேன்.."

"விலகு" என்றவன், நேரே கௌச்சில் போய் ஒருகாலை மடக்கிப்போட்டு உட்கார்ந்து, தான் வாங்கி வந்திருந்த பரோட்டாவை பிய்த்து சால்னாவை ஊற்றினான்.

அவள் கட்டிலில் அமர்ந்து தன் கைவிரல் நகங்களை ஆராயும் சாக்கில் அடிக்கடி அவனையே விழியுயர்த்தி பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் என்ன நினைத்தானோ, இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்பது போல் இத்தனை வார தாம்பத்தியத்தில் முதல்முறையாக அவளிடம், "நீ சாப்ட்டுட்டியா?" என்று கேட்டான்.

அவளுக்கு அவன் கேட்டது கேட்கவில்லை. மறுமுறை கேட்கவும் அவன் விரும்பவில்லை.

சாப்பிட்டு முடித்து வெளியே கிளம்பும் போது மட்டும் திரும்பிப் பார்த்து, "டெடி எங்கே?" என்று விசாரித்தான்.

மாலையில் அதனை பால்கனிக்கு தூக்கிக்கொண்டுபோய், தன் மனதிலுள்ள பாரத்தையெல்லாம் அதனிடம் இறக்கி வைத்தது ஞாபகம் வர, "பால்கனில.." என்று இடது ஆட்காட்டி விரலை பால்கனியை நோக்கிக் காட்டினாள் ஷ்ரதா.

அவன், "பக்கத்துல எடுத்து படுக்க வச்சிக்கோ" என்றதோடு வெளியேறிவிட்டான்.

ஆனால், ஏனோ அந்த இரவு முழுவதும் விண்மீன்களைப் போலவே கொட்ட கொட்ட கண்விழித்தபடியே கிடந்தாள் ஷ்ரதா.

*****************

சிவனேஸ்வரன் வார்த்தைகளைக் காட்டிலும் செயல்களுக்கு அதிகம் மதிப்பு கொடுப்பவன் போல் நடந்து கொண்டான். இவ்வளவு நேரமும் அவள் பேசிய கெட்ட வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் கிடந்தவன், கயிற்றை அவிழ்க்க முயன்றதற்கு மட்டும் இதழ் திறந்து எச்சரித்தான். "ஈஸியா இங்கயிருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காத.. இங்கயிருந்து போகணும்னா அஞ்சு கிலோ மீட்டர் நடக்கணும்.. இன்னும் ஒரு வாரத்துக்கு நீ இங்க தான் இருக்கப்போற.. ரொம்ப மெனக்கெடாத.." என்றான்.

வித்யாவுக்கு அப்போது தான் தானிருக்கும் மாளிகையை சுற்றிப்பார்க்க வேண்டிய கட்டாயம் உண்டானது.

அந்த அறையில் ஒரேயொரு நூறு வாட்ஸ் மஞ்சள் பல்பை தவிர்த்து மின்சாதனங்கள் என்று பெரிதாக எதுவும் கிடையாது. வீடு என்ற பாவனைக்கு கரையான் அரித்து இத்துப்போன ஒரு கதவு, தெற்கு வடக்கு இரண்டு சுவர்களிலும் கதவு தரத்தில் இரு சாளரங்கள், அவ்வளவே.

வந்தமழை வெக்கையை கிளப்பிவிட, சிவனேஸ்வரன் சட்டையின் முதலிரண்டு பட்டன்களை கழற்றிவிட்டு ஊதிக்கொண்டான்.

ஏதோ வயல்பகுதியின் நடுவே தான் வசமாக மாட்டிக்கொண்டிருப்பது தெரிந்ததும் பயத்தில் மீண்டும் கெட்டவார்த்தைகளுக்கிடையில், "என்னை விடு பாஸ்டர்ட்.. என்ன இடம் இது? பாரு வீசியும் எங்கப்பாவும் கண்டுபிடிச்சாங்க உனக்கு சமாதி தான்.." என்று எச்சரித்தாள்.

"வீசியா? உனக்கு வேணும்ன்னா அந்த வீசி பெரிய இவனா இருக்கலாம்.. ஆனா, எனக்கு அப்படி கிடையாது.."

"என்னவொரு அலட்சியம்! இங்க எதுக்குடா என்னை கடத்திட்டு வந்திருக்க? இப்போ என்னை என்னடா பண்ணப் போற?"

'ஒண்ணும் செய்யப்போறதில்ல.. எப்படியும் இந்நேரம் இந்தச் செய்தி ஷ்ரதாவோட காதுக்குப் போயிருக்கும்.. இப்போ அவளுக்கு நான் அவளை காப்பாத்த வந்த ரட்சகன் மாதிரி தெரிவேன்' ஆசைகள் சிவனேஸ்வரனை தொட்டிலிலிட்டு தாலாட்டின.

"இங்கப்பாரு! மரியாதையா என் கைக்கட்டை அவுத்து விட்டிரு.. இல்ல பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ.."

"என்ன மிரட்டுறியா? உன் அப்பாவோட லேடி வெர்சனா நீ? என் கஸ்டடில இருந்து நீ தப்பிக்கவே முடியாது.. அப்புறம் என்கிட்ட பேசும்போது மரியாதை ரொம்ப முக்கியம்.. இல்ல வில்லங்கமாகிடும்.."

மீண்டும் கைக்கட்டை அவிழ்க்க முயன்று பார்த்தாள் வித்யா. "ராஸ்கல்! எவ்ளோ இறுக்கமா கட்டி வச்சிருக்கான்"

"நீ எவ்ளோ முக்கினாலும் முடியாது.. அன்னைக்கு என் ஷ்ரதாகிட்ட எப்படி பேசின? அந்த வீசிக்கு ஒரு கல்யாணம் நடந்ததே தப்பு.. இதுல இன்னொரு கல்யாணமா? என் கல்யாணத்தை அவன் நிறுத்தினான் இல்ல.. இன்னைக்கு அவன் கல்யாணம் என்னால நிக்கட்டும்.."

"கல்யாணமா? முட்டாள்! எங்களுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம் மட்டும் தான்டா.. கல்யாணம் என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தான்.."

கட்டிலில் படுத்துக்கிடந்தவன், "என்ன?" என்று பதறி எழுந்தான்.

"ஒழுங்கு மரியாதையா என்னை வீட்டுல கொண்டுபோய் விட்டிரு.. இல்ல வீசி உன்னை சும்மா விடமாட்டாரு.."

'ஓஹோ' அவன் பார்வையில் இரையை குறிவைக்கும் சுறாவின் தீட்சண்யம் தெரிந்ததில் அடங்கிப்போனாள் வித்யா.

இன்று வீசிக்கு கல்யாணம் இல்லை என்றவுடனே அவன் தான் அவசரப்பட்டுவிட்டதாகவே நினைத்தான். ஆனால், அவள் வீசியை சொல்லி தன்னை மிரட்டியது அவனின் ஈகோவை சீண்டிவிட்டது. 'உன்னை எப்படி வந்து அவன் காப்பாத்துறான்னு நானும் பார்த்திடுறேன்' என்று தனக்குள்ளேயே சபதமெடுத்துக்கொண்டான்.

வினாடித்துளிகள், மழையின் மாநாடே பேரிரைச்சலாய் கேட்டது அவர்களுக்கிடையில்.

குடிசையின் பொத்தல் கசிவில் அவள் புடவை முழுவதும் நனைந்து உடல் பிடிங்கிக்கொண்டு தெரிந்தது. வித்யாவிற்கு தன் அங்க லாவண்யங்கள் மோகனவடிவம் காட்டுவது கவனத்தில் இல்லை. தேமேயென்று கிடந்தாள்.

சிவனேஸ்வரன் அவளை பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், கண் போவதை தடுக்க முடியவில்லை.

அவள் நிமிர்ந்து மேலேப் பார்த்தாள். தேங்கி வழிந்த மழைநீர் அவள் முகத்தில் விழுந்து சிதறியது. அவள் தாகத்தில் வாயைத் திறந்து மழைநீரைப் பருகினாள். முகத்திலிருந்து வழிந்த மழைநீர் கழுத்தில் இறங்கி.. உள்ளுக்குள் இறங்கி.. இன்னும் சிவனேஸ்வரனை அபாய கட்டத்திற்கு இழுத்துச் சென்றது.

அவளைப் பார்க்காமல் திரும்பி உட்கார்ந்துகொண்டான். அவள் அவனைப் பார்த்து தலையாட்டிக் கொண்டாள்.

சிறிதுநேரம் அவ்வாறு உட்கார்ந்திருந்தவன் திடீரென வெளியே எழுந்து சென்றான். வரும்பொழுது கைநிறைய எங்கிருந்தோ பனைஓலைகளை அள்ளிக்கொண்டு வந்தான்.

பின், பொறுப்பாக குடிசையில் அவள் அமர்ந்திருந்த பகுதிக்கு மேலே ஏறி குடிசையின் ஓட்டையை அடைத்தான். அவள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அந்த அரக்கனுக்குள் சில நல்ல குணங்களும் இருப்பதாக அவள் மனம் செப்பியது. திடீர் கரிசனத்தில் பழுதுநீக்கிவிட்டு வந்தவனிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள்.

"என்னைக் கடத்தும்போது என்ன சொன்னீங்க? என் பேரு சிவனேஸ்வரன்.. விஜயாதித்தன் என் மாமா.. அப்புறம்? ஹான்! நான் என் ஷ்ரதாவுக்காகத் தான் இவளை கடத்திட்டுப் போறேன்னு தானே?" உதவி செய்திருந்ததால் பேச்சில் மரியாதை கலந்திருந்தாள்.

அவன் பதிலேதும் பேசவில்லை. நூறு வாட்ஸையே வெறித்துக் கொண்டிருந்தான்.

"நான் வீசிய லவ் பண்ற மாதிரியே நீங்க ஷ்ரதாவை லவ் பண்றீங்க, ரைட்?"

அவன் திரும்பி ஒரு பார்வை பார்த்ததோடு சரி. கட்டிலில் மல்லாந்து படுத்துவிட்டான்.

'சரியான கர்வி.. அகம்பாவம் பிடிச்சவன்' என்று புழுங்கினாள் வித்யா.

அவள் வாழ்நாளில் இதுபோன்று ஒருநாளும் அடங்கி ஒடுங்கி அடிமை போல் இருந்ததில்லை. எதற்கெடுத்தாலும் அதிகாரம் தான். இன்று காலையில் எவ்வளவு சந்தோசமாக கிளம்பினாள். நினைக்க நினைக்க கண்கள் கனத்தன. பின்னால் கம்பில் நன்றாக சாய்ந்துகொண்டு, மழை நின்ற பின்னும் சொட்டிக்கொண்டிருந்த குடிசையின் ஓலைகளையே சாளரத்தின் வழியாக வெறித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது குடிசையின் ஓரத்துத் துளையிலிருந்து ரயில்பூச்சியொன்று அவளை நோக்கி புகை, ஊங்காரம் என்று எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியாக நெருங்க, கவனித்துவிட்டவள், "ஆ! பூச்சி! பூச்சி! காப்பாத்துங்க! காப்பாத்துங்க!" என்று உயிரேபோகும் வகையில் அலறினாள்.

அவன் படக்கென்று விழித்து, பதறி தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலில் கை வைத்தபடியே "என்ன? என்ன?" என்றான்.

அவள் எழுந்து நின்றபடியே, "பூச்சி! பூச்சி!" என்றாள்.

அருகில் வந்தவன் ரயில் பூச்சியைப் பார்த்ததும், "இதுக்கா இப்படி அலறின?" என்று அலட்சியமாக பூச்சியை தன் ஷூக்காலால் ஒரே நசுக்கில் நசுக்கிப்போட்டான்.

மீண்டும் அவன் மீதான அபிமானம் உயர்ந்ததில், "காலைல சாப்பிட்டது.. வெளிய இருட்ட ஆரம்பிச்சிடுச்சி.. எனக்கு இப்போ பசிக்குது" என்று சொல்லிப் பார்த்தாள் வித்யா.

அவன் அறையில் இன்னொரு மூலையிலிருந்த கோணிப்பைக்குள்ளிருந்து ப்ரெட் பாக்கெட்டையும் ஜாம் பாட்டிலையும் எடுத்து அவள் முன்னால் வந்து போட்டான். அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

'இதை நான் இப்போ எப்படி சாப்பிடுவேன்' எனும் விதமாய் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவன் பின்னால் சென்று அவள் கைகளை அவிழ்த்துவிட்டு, முன்னால் பிஸ்டலால் குறிபார்த்தபடியே எச்சரித்தான். "தப்பிச்சிப்போக ட்ரை பண்ணின யோசிக்காம சுட்ருவேன்"

அவள் தற்போது என் அவசரமும் தேவையும் அதுவல்ல என்பதுபோல் ஆவ் ஆவ் என்று ப்ரெட்டை ஜாம் தடவி தின்றாள். விக்கியதும் தண்ணீர் வேண்டும் என்பது போல் கட்டைவிரலால் சைகை செய்தாள்.

அவன் தலையெழுத்து என்று கோணிப்பைக்குள்ளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து நீட்டினான்.

அந்த பத்து நிமிடமும் பிஸ்டலை கட்டிலில் தட்டியபடியே இருந்தான். அவள் சாப்பிட்டு முடித்துவிட்டு, சிறிதுநேரம் தனது சிவந்த மணிக்கட்டுகளை தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். "அந்த ஷ்ரதாவை அவ்வளவு பிடிக்கும்னா, நீங்க ஏன் அவளை கல்யாணம் பண்ணிக்கலை?" தானாக பேசிக்கொள்வது போல் ஒரு பாவனை அவளிடம்.

"நான் அன்னைக்கு ஷ்ரதாவை கோவில்ல ஒரு ஆளோட பார்த்தேன் வீசின்னு சொன்னப்போவே, வீசி சிவனேஸ்வரனா சிவனேஸ்வரனான்னு கேட்டாரு.. எனக்கு ஒண்ணும் புரியலை.. உங்க அங்க அடையாளங்களை சொன்னேன்.. அவர் நீங்கதான்னு கன்பார்ம் பண்ணி, நீங்க ரொம்ப மோசமானவருன்னு சொல்லி என்னை ஜாக்கிரதையா இருக்க சொன்னாரு.. எனக்கு அப்போ புரியல.. ஏன்னு கேட்டதுக்கு காரணம் சொல்ல மறுத்திட்டாரு.. உங்களுக்கு வீசிக்கும் அப்படி என்ன பிரச்சினை? ஷ்ரதாவை வச்சா?"

"சாப்பிட்டாச்சில்ல? கையை கட்டிவிடவா?"

"சே! கல்லுனி மங்கன்" முணுமுணுத்தாள் வித்யா.

"இங்க எப்படி ரெஸ்ட் ரூம் போறது?"

முகத்தில் அசூயைக் காட்டியவன், "வெளிய வா" என்று அழைத்துச் சென்றான்.

அங்கு நாணல் அடர்ந்த மறைவான ஒரு இடத்தைக்காட்டி, "இதுக்கு பின்னாடி போ" என்றான்.

"என்ன இருட்டா இருக்கு? எனக்கு பயமாயிருக்கு" என்றவள் சொன்ன போது, கஷ்டம் என்று சலித்தபடியே தன் கையிலிருந்த பேனா டார்ச்சை கொடுத்து, "சீக்கிரம் போயிட்டு வா" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அவள் நாணலுக்குப் பின்னால் நிற்க இவன் இந்தப்புறம் திரும்பி நின்று கொண்டிருந்தான்.

அப்படியே நேரம் ஆக ஆக அவன் "என்ன ஆச்சா?" என்று கேட்க, அவளிடம் அனக்கமேயில்லை.

ஒரு சமயத்தில் அவனுக்கு சந்தேகம் வந்து, "ஹேய் இருக்கியா? நான் அங்க வரேன்" என்று சொல்லிவிட்டு வந்துபார்த்தபோது, அருமையாக அவனை ஏமாற்றி தப்பித்துப் போயிருந்தாள் வித்யா.

இங்கிருந்து மனித நடமாட்டம் உள்ள இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் எப்படியும் ஐந்து கிலோ மீட்டர் செல்ல வேண்டும். பைத்தியம் இப்படி ஓடிவிட்டாளே என்று அங்கிருந்த உயரமான புங்கமரத்தின் மீது ஏறி நின்று பார்த்தான்.

அவள் பேனா டார்ச்சுடன் ஓடிக்கொண்டிருப்பதும் அவளுக்கு எதிர்திசையிலிருந்து நாலு பேர் பெரிய டார்ச் லைட்டுடன் வந்துக்கொண்டிருப்பதும் தெரிந்தது.

உடனே இறங்கி அந்தத்திசையை நோக்கி தானும் ஓட ஆரம்பித்தான் சிவனேஸ்வரன்.

அங்கங்கு தண்ணீர் கெட்டிக்கிடக்க, இரவின் நிசப்தத்தில் சலக் சலக் என்று சத்தம் எழுப்பி தங்க மங்கை பி.டி.உஷாவின் தங்கை போல் ஓடிக்கொண்டிருந்தாள் வித்யா.

தவளைகள் வேறு இஷ்டத்திற்கு கத்தி இரவின் நிசப்தத்தை குலைத்துக்கொண்டிருந்தன.

திடுதிடுவென்று ஓடிக்கொண்டிருந்தவள் திடீரென எதிரே ஆட்கள் நால்வரை காணவும், மகிழ்ச்சியாக, 'அண்ணா! அண்ணா! என்னை காப்பாத்துங்கண்ணா.. என்னை ஒருத்தன் கடத்திட்டு வந்திருக்கான்.. அவன் கிட்டயிருந்து என்னைக் காப்பாத்துங்கண்ணா" என்று சொல்லி பலமாக மூச்சி வாங்கினாள்.

அவர்கள் நால்வரும் ஒருவர் முகத்தைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டார்கள்.

காதல் கணம் கூடும்...​

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
கருத்துப்பெட்டி
 
Last edited:
Top Bottom