Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிழல் நிலவு - Story

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
நிழல் நிலவு

அத்தியாயம் 1

மத்திய நவம்பர் மாதத்தில் ஒரு நாள், கீற்றாய் எட்டிப்பார்த்த பிறைநிலவை முற்றிலும் சூழ்ந்து மறைத்திருந்தது கருத்துத் திரண்டிருந்த கார்மேகம். காற்றில் கலந்திருந்த குளிர்ச்சியும் மண்வாசமும் அருகில் எங்கோ மழை பெய்து கொண்டிருப்பதை அறிவுறுத்தியது. அமாவாசை போல் எங்கும் கும்மிருட்டு. வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதியில் ஆங்காங்கே முளைத்திருக்கும் கடைகளும் வெகு நேரம் விழித்திருப்பதில்லை என்பதால் மின்விளக்கின் ஒளியும் குறைந்துவிட்டது. ஆள் நடமாட்டமும் அதிகமில்லை. சிவம் கம்ப்யூட்டர்ஸில் மட்டும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அடிக்கடி சுவர் கடிகாரத்தையும், கைக்கடிகாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா சரியாக பத்து மணியானதும் சட்டென்று எழுந்து அலைபேசி, தொப்பி மற்றும் சாவியை கையிலெடுத்துக் கொண்டு மின்விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்து ஷட்டரை இழுத்து மூடி பூட்டினாள்.

இடியும் மின்னலும் அச்சுறுத்தியது. பத்து நிமிடம் முன்பாகவே பூட்டிவிட்டு கிளம்பியிருக்கலாம். ஆனால் முதலாளி விசுவாசத்திற்கு எதிராக இம்மி பிசகவும் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. தோள்பட்டையில் தவழ்ந்த கூந்தலை உச்சியில் அள்ளி முடிந்து ரப்பர் பேண்டில் அடக்கியவள், கையிலிருந்த தொப்பியை தலையில் வைத்துக் கொண்டு சாலையில் இறங்கி வேகமாக நடந்தாள். அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்டும், உயரமான உடல்வாகும் தன்னை ஆண்பிள்ளை போல் காட்டும் என்பது அவளுடைய கணக்கு. தற்காப்பு கலைகளில் கைதேர்ந்தவள் என்றாலும், வரும் முன் காக்கும் எச்சரிக்கை உணர்வும் நல்லதுதானே!

ஆந்திரப்பிரதேசம் அனந்தபூர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பயிலும் மிருதுளாவிற்கு தாய் மட்டும் தான். அவர் அனுப்பும் சொற்ப பணத்தில் அறை வாடகை மட்டும்தான் கொடுக்க முடியும். சாப்பாடு மற்றும் இதர செலவுகளுக்கு தாயை துன்புறுத்தாமல் இருக்க அவள் கண்டுபிடித்த வழிதான், இந்த பகுதி நேர பிரவுசிங் சென்டர் வேலை.

சாலையில் ஜனநடமாட்டமே இல்லை. அவள் தங்கியிருக்கும் வீட்டை அடைய இன்னும் அரை மைல் தூரம் நடக்க வேண்டும். அவள் ஒரு தடகள வீராங்கனை என்பதால் நடப்பதோ, ஓடுவதோ அவளுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் இன்றைய பிரச்சனை உறுமும் வானம்தான். எந்த நேரத்திலும் கொட்டித் தீர்த்துவிடும் அபாயத்தில் இருந்தது. அடியை எட்டிப்போட்டு வேகமாக நடந்துக் கொண்டிருந்த போது கையிலிருந்த அலைபேசி ஒலித்தது. அம்மாதான். அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தாள்.

“சொல்லுங்கம்மா”

“கிளம்பிட்டேன்.. கிளம்பிட்டேன்..”

“பத்து நிமிஷத்துல போயிடுவேன்”

“இல்லல்ல.. பக்கத்துல வந்துட்டேம்மா.. வீட்டுக்கு போயிட்டு கூப்பிடுறேன்” அஞ்சிய அன்னைக்கு ஆறுதல் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். தூறல் துவங்கியது. மிருதுளாவின் நடையில் வேகம் கூடியது.

சாலை விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருந்தன. அதிலும் சில பழுதாகியிருந்ததால், இருளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. மழை வேறு நன்றாக பிடித்துவிட்டது. என்றைக்கும் இல்லாதவிதமாக அவள் மனம் ஏனோ பதட்டம் கொண்டது. சற்று முன்னதாகவே கிளம்பியிருக்கலாமோ என்று தோன்றியது. இனி யோசித்து பலனில்லை. இன்னும் சற்றுதூரம் தான். அதோ! அந்த வளைவில் உள்ள முதல் வீட்டின் மாடியில்தான், தோழி இனியாவோடு தங்கியிருக்கிறாள். இரண்டே நிமிடத்தில் போய் விடலாம். இன்னும் வேகமாக நடந்தாள். அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது. அவள் மனம் கொண்டிருந்த பதட்டத்தை மேலும் அதிகரிப்பது போல், ‘தட்.. தட்..’ என்கிற பெரிய சத்தம் மழையின் ‘ச்சோ..’ வென்கிற ஓசையையும் மீறிக் கொண்டு கேட்டது.

முகத்தில் வடியும் நீரை வழித்தெறிந்துவிட்டு பார்வையை கூர்மையாக்கி சத்தம் வந்த திசையை நோக்கினாள் மிருதுளா. ஒரு மனித உருவம், பருமனான ஆண் உருவம் தரையில் கிடந்தது. அதன் விசித்திரமான அசைவுகள் அவள் கவனத்தை கூர்மையாக்கியது. எழ முயற்சிக்கிறான். மண்டியிடக் கூட முடியாமல் மீண்டும் கீழே விழுகிறான். மீண்டும் முயற்சிக்கிறான். ‘ஓடு.. உதவி செய்!’ என்று உள்ளே ஓர் குரல் ஓங்கி ஒலிக்க, சூழ்நிலையைப் பற்றி சிந்திக்கக் கூட தோன்றாமல் அவனிடம் ஓடினாள். அருகில் செல்ல செல்ல, எமனிடம் மன்றாடும் அவனுடைய மரண முனகல் அவள் செவியை எட்டியது. துளைப்பட்ட அவன் உடலிலிருந்து பெருகும் செங்குருதி மழை வெள்ளத்தோடு கரைந்தோடிய காட்சி அவளை உலுக்கியது.

“ஐயோ” என்று பெருங்குரலில் கத்தினாள். கீழே கிடந்தவன் சிரமப்பட்டு அவளை திரும்பிப் பார்த்தான். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற மிருதுளாவின் முகத்தைப் பார்த்ததும் பேயை கண்டது போல் அவன் முகம் மிரண்டு போனது. மறுகணமே முணுமுணுப்பாக ஏதோ சொன்னான். மூளை மறைத்துப் போய் செயலற்று நின்ற மிருதுளா அவன் ஏதோ சொல்வதை உணர்ந்து, “எ.. என்ன சார்? யார் நீங்க? ஆம்.. ஆம்புலன்ஸ்.. கூப்பிடுறேன். பயப்படாதீங்க..” என்று தடுமாற்றத்துடன் பேசியபடி அவனிடம் அமர்ந்து அவன் கையைப் பிடித்து தைரியம் கூறினாள். கூடவே அலைபேசியை எடுத்து ஆம்புலன்ஸ் சேவை தொடர்பு எண்ணை தேடினாள்.

சட்டென்று அவள் கையிலிருந்த அலைபேசியை தட்டிவிட்ட அந்த மனிதன், “கோ..” என்றான் கரகரத்த குரலில். மிருதுளா புதிராக அவனைப் பார்த்தாள்.

மடிந்துக் கொண்டிருந்த உடம்பில் மிச்சமிருந்த அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி “போ இங்கிருந்து” என்று உறக்கக் கத்தினான்.

உடல் தூக்கிப்போட சட்டென்று பின்வாங்கிய மிருதுளா சிந்தனையுடன் அவனைப் பார்த்தாள்.

“ஐம்.. ஐம் ட்ரையிங் டு ஹெல்ப் யூ” என்று மெல்ல முணுமுணுப்பாக ஆரம்பித்து, “உனக்கு உதவி செய்ய ட்ரை பண்ணறேய்யா. என்ன பிரச்சனை உனக்கு?” என்று பதிலுக்கு கத்தினாள். கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது. அறிமுகமற்றவன்தான், ஆனால் அவனுடைய துடிப்பையும் துன்பத்தையும் அவளால் சகிக்க முடியவில்லை.

சட்டென்று அவளுக்குள் ஓர் அதீத தைரியம் தோன்றியது. அதை ஆதாரமாக பற்றிக் கொண்டு அவனை தூக்கி அமர வைக்க முயன்றாள். உதவிக்கு யாரேனும் வரமாட்டார்களா என்று சுற்றி சுற்றி பார்த்தாள். “யாராவது இருக்கீங்களா? ப்ளீஸ் ஹெல்ப்” என்று சத்தமாகக் கத்தினாள். மீண்டும் அலைபேசியை எடுத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடர்புகொள்ள முயன்றாள். அவளுடைய எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை.

அந்த மனிதனின் நிலைமை மேலும் மோசமானது. மூச்சுவிட சிரமப்பட்டான். கேவிக்கேவி இழுத்தது. உயிர் நிற்கப் போகிறதோ என்கிற சந்தேகம் எழுந்ததும் அவளுடைய பதட்டம் அதிகமானது.

“ஒன்னும் இல்ல சார். பயப்படாதீங்க, சரியாயிடும். ஹாஸ்ப்பிட்டல் போயிடலாம். யாராவது இருக்கீங்களா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. ஹெல்ப்..” என்று பெருங்குரலில் மீண்டும், மீண்டும் கத்தினாள். அடுத்த சில நொடிகளில் காலடி சத்தம் கேட்டது. உதவிக்கு யாரோ வந்துவிட்டார்கள் என்னும் நிம்மதியோடு நிமிர்ந்து பார்த்தவள் விதிர்விதிர்த்துப் போனாள். துப்பாக்கி முளைத்த கையோடு இருள் மறைவிலிருந்து வெளிப்பட்ட ஐந்தாறு பூதங்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தன.

மிருதுளா மிரண்டு போனாள். அவளுடைய இதயம் தாறுமாறாகத் துடித்தது. அம்மாவின் பிடிவாதத்தால் அரைகுறையாக கற்றிருந்த தற்காப்பு கலையெல்லாம் துப்பாக்கி முனையில் எம்மாத்திரம். முயன்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இம்மி கூட தோன்றவில்லை.

“ஓடு.. ஓ..டி..டு..” தட்டுத்தடுமாறி உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசினான் அந்த மனிதன்.

இரத்த வெள்ளத்தில் செத்துக் கொண்டிருக்கும் மனிதன், கையில் துப்பாக்கியோடு நெருங்கி வரும் பூதங்கள், ‘ஓடு! ஓடு!’ மூளை விரட்டியது. கீழே கிடப்பவனும் அதையே அறிவுறுத்தினான். நொடிப் பொழுதில் முடிவு செய்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை விட்டுவிட்டு இருட்டுக்குள் புகுந்து ஓடினாள்.

“புடிங்கடா அவனை” ஓடுவது ஆண் என்கிற எண்ணத்துடன் அந்த இரத்த வெறி பிடித்த மிருகங்கள் அவளைத் துரத்தின.

கண்மண் தெரியாமல் காட்டுத்தனமாக ஓடினாள் மிருதுளா. உயிருக்கு பயந்து ஓடுகிறவள் வைத்துப்பார்ப்பாளா என்ன! கையிலிருந்த போன், சாவி, கால் செருப்பு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பறந்துவிட, காற்றை கிழித்துக் கொண்டு பறந்தாள். அவர்களும் விடாமல் பின் தொடர்ந்தனர். அரணாய் சூழ்ந்திருந்த இருளோடு, அவளுடைய தடகள திறமையும் சேர்ந்துகொள்ள, அந்த அரக்கர்களிடமிருந்து வெகுதூரம் ஓடிவந்து மூச்சிரைக்க நின்றாள்.

மழை ஓய்ந்துவிட்டது, ஆனால் இதயத்தின் தடதடப்பு ஓயவில்லை, உடலின் நடுக்கம் குறையவில்லை. வாயாலும் மூக்காலும் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியேற்றியபடி மிரண்ட விழிகளுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தொடர்ந்துவரவில்லை, ஆனால் எந்த நேரமும் வந்துவிடலாம். ‘ஓடு ஓடு!’ என்று மூளை விரட்டியது. ஆனால் உடல் துவண்டது. வறண்டு போன நா மேலண்ணத்தில் ஒட்டியது. இதற்கு மேல் ஓடமுடியாது. இங்கேயே ஏதாவது உதவி கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் என்று எண்ணி மீண்டும் ஒருமுறை சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். குடியிருப்புப்பகுதிதான். ஆனால் வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகதான் இருந்தன. அதில் ஒரு வீட்டில் மட்டும் மின்விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அங்கு சென்று உதவி கேட்கலாம் என்று எண்ணி ஓடினாள். அருகில் சென்ற பிறகு மீண்டும் பயம் வந்தது.

இது எந்த இடம், எவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கிறோம் என்பதெல்லாம் புரியாத நிலையில், இப்போது அந்த வீட்டின் கதவைத் தட்டி தன்னிலை விளக்கம் கொடுத்து உதவி கேட்டு.. அவர்கள் இவளை நம்பி உதவி செய்வதற்குள் அந்த காட்டுமிராண்டிகள் இங்கு வந்துவிட்டால்? அல்லது இந்த வீட்டிற்குள் வேறு ஏதாவது சைக்கோ கொலைகாரன் இருந்தால்? பயத்தில் தறிகெட்டு ஓடிய சிந்தனைகள் முற்றுப்பெறுவதற்குள் வீட்டின் கதவு திறக்கப்பட்டது. சட்டென்று இருளில் பதுங்கினாள் மிருதுளா.

நெடிய உருவம் கொண்ட ஒருவன் வீட்டிலிருந்து வெளியே வந்தான். அதே நேரம் அவளை துரத்திக் கொண்டு வந்த பூதங்களில் ஒன்று சாலையில் வேகவேகமாக நடந்து வந்து கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது. “பீங் பீங்” இருளில் அவளுக்கு வெகு அருகில் நின்ற கார் அன்லாக் ஆனது. வீட்டிற்குள் இருந்து வெளிப்பட்ட அந்த நெடியவன்தான் கையிலிருக்கும் சாவியால் தூரத்திலிருந்தே அன்லாக் செய்திருக்க வேண்டும்.

அவ்வளவுதான்! அதற்கு மேல் அவள் எதையும் யோசிக்கவில்லை. சட்டென்று காரின் பின் கதவை திறந்து உள்ளே நுழைந்து சீட்டிற்கு இடையில் படுத்து தன்னுடைய மெல்லிய உடலை மறைத்துக் கொண்டாள். கண்களை இறுக்கமாக மூடி மூச்சுக்காற்றை சீராக்க முயன்றாள். உயிர் பயத்தில் அவள் உடல் நடுங்கியது. ‘தப்பித்துவிடலாம்! தப்பித்துவிடலாம்!’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். இந்த கார் எங்கு சென்று நிற்கிறதோ அங்கு இறங்கி கொள்ளலாம். மற்றதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி மனதை தைரியப்படுத்திக் கொண்டாள். மூச்சு மெல்ல சமன்பட்டது.

மறுகணமே அங்கு அடிபட்டுக் கிடந்த மனிதன் நினைவில் வந்தான். அவனுடைய வலியும், துடிப்பும், இரத்தமும் இவளை உலுக்கியெடுத்தது. கண்களை மூட முடியவில்லை. ‘செத்துருப்பானா, இல்ல இன்னமும் துடிச்சுக்கிட்டு இருப்பானா?’ உள்ளே வலித்தது. ‘சகமனிதனை இப்படி வதைக்கிறார்களே! இவர்களையெல்லாம் அந்தக் கடவுள் தண்டிப்பாரா?’ மனம் தவித்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது. கைகள் இரண்டாலும் வாயை அழுந்த மூடிக் கொண்டு மெளனமாக கண்ணீர் வடித்தாள்.

‘இந்த புது மனிதனிடம் நடந்ததையெல்லாம் சொல்லி உதவி கேட்கலாமா? அம்புலன்ஸுக்கு போன் செய்ய சொல்லலாமா? போலீசில் புகார் கொடுக்க துணைக்கு அழைக்கலாமா?’ என்றெல்லாம் யோசித்தபடி மெல்ல சீட்டுக்கு அடியிலிருந்து நகர்ந்து தலையை மட்டும் தூக்கி வெளியே பார்த்தவளின் முகம் மிரட்சியில் வெளிறியது. காரணம் அவளை துரத்திக் கொண்டு வந்த அரக்கன் இவனிடம் வெகு பணிவாக பேசிக் கொண்டிருக்க, அவன் தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டுவது போல் இவன் ஏதோ சொன்னான்.

‘சர்வநாசம்.. ஒழிந்தோம்..’ மிருதுளாவின் உடல் வெடவெடத்தது. ‘இவன் சொல்லித்தான் அந்த பூதங்கள் அந்த கொலையையே செய்திருக்கும் போலிருக்கிறதே! மூட்டை பூச்சிக்கு பயந்து காட்டு மிருகத்திடம் வந்து சிக்கிக் கொண்டோமா!’ நெஞ்சை அடைத்தது. ‘இப்போது என்ன செய்வது! மெல்ல காரிலிருந்து இறங்கி மீண்டும் இருளுக்குள் பதுங்கிவிடலாமா’ அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே நெடியவன் காரை நோக்கி திரும்பிவிட்டான். அனிச்சையாய் சீட்டுக்கு அடியில் பதுங்கினாள் மிருதுளா.

சற்று நேரத்தில் கார் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. உள்ளே ஒருவன் ஏறி அமர்வதும் தெரிந்தது. அவன் கதவை மூடிய வேகத்தில் இவள் இதயம் எகிறிக் குதித்தது.

சில நொடிகளுக்குப் பிறகு, “ஐம் கம்மிங்.. கெட் எவ்ரிதிங் ரெடி” என்கிற அவனுடைய அழுத்தமான குரலை தொடர்ந்து கார் மெல்ல நகர்ந்தது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 2

‘கோர்த்தா கேங்க்’ 1970களில் ஒடிசாவில் (ஒரிசாவில்) தலையெடுத்த இந்த மாஃபியா கேங்க் மெல்ல மெல்ல நாடு முழுவதும் பரவி இன்று அழிக்க முடியாத மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துவிட்டது. இவர்களுடைய முக்கியமான குறிக்கோள் கனிம சுரங்கங்கள் தான்.

ஒடிசாவில் உள்ள தொண்ணூறு சதவிகித கனிம சுரங்கங்கள் இவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இது தவிர மற்றவர்களின் கைவசம் இருக்கும் சில சுரங்கங்களிலும் இவர்களுடைய ஆதிக்கம் தலைதூக்கியிருந்தது. கனிமவள விதிகளை மீறி குவாரிகளில் நடக்கும் மோசடிகள் அநேகம். அனுமதிக்கப்படாத இடங்களில் கனிமங்களை வெட்டியெடுத்தல், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான கனிமங்களை வெட்டியெடுத்தல், அரசுக்கு காட்டும் கணக்குவழக்கில் குளறுபடி போன்ற பல மோசடிகள் அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருந்தன. இவை அனைத்திற்கும் முதுகெலும்பாய் இருந்த கோர்த்தாவை அணு அளவுக் கூட அரசால் அசைக்க முடியவில்லை.

காரணம், இன்று நாட்டை ஆளும் இருபெரும் சக்திகளான அரசியல்வாதிகளுக்கும், கார்ப்பரேட் எனப்படும் பெருநிறுவனங்களுக்கும் தடைகளை அகற்றும் தளபதிகளாக செயல்படும் மாஃபியாக்களில் முக்கியமானது இந்த கோர்த்தா கேங்.

இவர்கள் செய்யாத வேலை என்று எதுவும் இல்லை. வீடு மட்டும் அல்ல, நாடு புகுந்து ஆட்களை கடத்தியிருக்கிறார்கள், உளவு பார்த்திருக்கிறார்கள், ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள், வதந்திகளைப் பரப்பியிருக்கிறார்கள், லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள், திருடியிருக்கிறார்கள், பெண்களை தூண்டிலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், எண்ணற்ற கொலை செய்திருக்கிறார்கள். தங்களுடைய இலக்கை அடைய எதையும் செய்யத் துணிந்தவர்கள். ஒருவரை பலி கொடுத்தால் ஒன்பது பேரை பழிவாங்கும் போர் குணம் படைத்தவர்கள்.

இந்தக் குழு ஒருங்கமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பை உடைக்காமல் இவர்களை அழிக்க முடியாது. அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. கிட்டத்தட்ட இயலாத காரியம் என்று கூட சொல்லலாம். காரணம் இந்தக் குழுவை யார் எங்கிருந்து இயக்குகிறார்கள், எத்தனை பேர் இதில் இணைந்திருக்கிறார்கள், அவர்களுடைய தொடர்பு ஊடகம் என்ன, திட்டங்கள் என்னென்ன, எதுவும் யாருக்கும் தெரியாது. நெருங்க முடியாத இடத்தில் இருந்துக்கொண்டு நினைத்ததை சாதித்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கத்தின் அனைத்து குவாரி டெண்டர்களும் இவர்கள் விரும்பும் கைகளுக்கு மட்டுமே வந்து சேருவதால் இவர்களுக்கு ‘டெண்டர் மாஃபியா’ என்கிற பெயரும் உண்டு.

நாட்டின் பொருளாதாரத்தை செல்லரித்துக் கொண்டிருந்த, கண்ணுக்குத் தெரியாத இந்த மாஃபியா கேங்க், வருவாய் மற்றும் குற்றவியல் புலனாய்வு துறையின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தது. இதைப்பற்றி எல்லாம் செவிவழி செய்தியாகக் கூட கேள்விப்பட்டிராத மிருதுளா ‘கோர்த்தா’ என்னும் இரும்புக் கோட்டையின் முக்கிய தளபதி ஒருவனுடைய காரில் அவனுடைய அனுமதியில்லாமல் பயணம் செய்துக் கொண்டிருந்தாள்.

காரை ஓட்டிக் கொண்டிருந்த மனிதன் அமைதியாக இருந்தாலும் அவனை சுற்றியிருந்த காற்றில் கூட ஒருவித இறுக்கம் இருப்பதை உணர்ந்தாள் மிருதுளா. பேராபத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, கார் எந்த நேரத்திலும் நிற்கலாம், கிடைக்கின்ற முதல் வாய்ப்பிலேயே இறங்கி ஓடிவிட வேண்டும் என்கிற முடிவோடு பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சோர்ந்துப் போனாள். பின் மெல்ல நினைவுகள் மங்கி, மயக்க நிலையில் மரக்கட்டையாய் கிடந்தாள்.

அவள் மீண்டும் கண்விழித்தபோது, தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்துக்கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது. உணர்ந்ததும் சட்டென்று பரபரப்பு தொற்றிக்கொள்ள அவன் பார்த்துவிடுவானோ என்கிற பயத்துடன் மேலும் சீட்டிற்கு அடியில் பதுங்கினாள். மூச்சுவிடக் கூட அஞ்சியவளாக இறுகிப் போய் கிடந்தாள். அவளுடைய புலன்கள் காருக்குள் ஏதேனும் அரவரம் இருக்கிறதா என்பதை கூர்ந்து கவனித்தன. எந்த சத்தமும் இல்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு மெல்ல மண்டியிட்டு கண்ணாடி வழியே வெளிப்புறத்தை பார்த்தவளின் விழிகள் விரிந்தன. காரணம் பளபளவென்று புலர்ந்துவிட்ட வானம் உணர்த்திய நேரம். நேற்று நள்ளிரவுக்குப் பிறகுதான் என்றாலும் இன்று காலை வரை பயணம் செய்திருக்கிறாள் என்றால் எவ்வளவு நேரம்! எவ்வளவு தூரம்! மிருதுளாவின் வயிறு கலங்கியது. எங்கு வந்திருக்கிறோம்! கடவுளே! காய்ந்து போயிருந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு வெளிப்புறத்தை நோட்டமிட்டாள்.

செந்நிற ஓடு பதித்த நீண்ட ட்ரைவ்வே ஓரிடத்தில் பிரிந்து அரைவட்டமாக வளைந்து சென்றது. அதற்கு நடுவில் செராமிக் டைல்ஸால் செய்யப்பட்ட செயற்கை நீரூற்று. அதை சுற்றிலும் அலங்காரமாய் வண்ண மலர்கள். இருபுறமும் அழகிய தோட்டம். மேலும் சீரான இடைவெளியில் அடுக்கி வைக்கப்பட்டது போல் ட்ரைவ்வேயின் இருபுறமும் வளர்ந்து நின்ற மரங்கள். இவை எதுவுமே அவள் கருத்தில் பதியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை என்பது மட்டுமே அவள் கவனத்தில் இருந்தது.

மெல்ல கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தவள் திகைத்து நின்றாள். உள்ளே இருந்து பார்த்த போது அந்தக் கட்டிடம் அவள் கண்ணில் படவில்லை. கட்டிடமா! வெறும் கட்டிடம் என்று சொல்லிவிட முடியாது, பெரிய மாளிகை! வெண்ணிற மாளிகை! உயரமான தூண்கள், பிரம்மாண்டமான நுழைவாயில், கலைநயத்துடன் அகண்டு உயர்ந்த இரட்டை மரக்கதவுகள். அத்தனையும் அவளை அச்சுறுத்தியது.

மெல்ல நகர்ந்தாள், பூனை போல் அடியெடுத்து வைத்து அங்கிருந்து செல்ல எத்தனித்து மெயின் கேட் பக்கம் திரும்பியவள் தயங்கி பின்வாங்கினாள். இங்கிருந்து தப்பிக்க வழியே இல்லை என்று தோன்றியது. காரணம் அவள் நிற்கும் இடத்திலிருந்து மெயின் கேட்டிற்கு செல்ல வேண்டிய தொலைவு. அந்த தொலைவை யார் கண்ணிலும் படாமல் கடப்பதென்பது இயலாத காரியம். அப்படியே கடந்துவிட்டாலும் கேட்டிற்கு அருகில் நிற்கும் சீருடை அணிந்த கார்ட்ஸை சமாளிப்பது எப்படி? மிருதுளாவின் அடிவயிறு தடதடத்தது, உடல் நடுங்கியது. வேறு வழி ஏதேனும் இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“ஹேய்.. கியே தூம்?” எங்கிருந்தோ ஒரு குரல் அதட்டியது. ‘ஒரியா!” அவளுடைய தாய்மொழி ‘ஒடிசாவிற்கு வந்துவிட்டோமா!’ அவள் பார்வை அனிச்சையாய் குரல் ஒலித்த திசையில் பாய்ந்தது.

சிவந்த விழிகளும், கடுமையான முகபாவமுமாக அவளிடம் நெருங்கிக் கொண்டிருந்தான் ஒரு சஃபாரி மனிதன். அவனைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. மிருதுளாவின் கால்கள் பின்னோக்கி நடந்தன. அவனுடைய கை வெய்ஸ்ட் பெல்டிற்கு சென்றது.

‘துப்பாக்கியை எடுக்கப்போகிறான், சுடப்போகிறான். நோ!’ அடுத்த சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் தெறித்து ஓடத் துவங்கிவிட்டாள்.

“ஏய்! நில்லு.. நில்லு..” ஒரியாவில் கர்ண கொடூரமாகக் கத்தியபடி அவளை துரத்தினான். அடுத்த நொடியே இன்னும் சிலரும் அவனோடு சேர்ந்துக் கொண்டார்கள்.

பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடியவள் இறுதியாக அந்த மாளிகைக்குள் ஓடினாள். என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று எதுவும் புரியவில்லை. உயிர் பிழைத்தால் போதும் என்கிற ஒரே எண்ணம் அவளை விரட்டியது. பெரிய ஹால்.. பல அறைகள்.. அங்கும் இங்கும் புகுந்து.. சோபாவிலும்.. சேரிலும்.. மேஜையிலும் நுழைந்து இறுதியாக மாடிப்படியை நோக்கி ஓடினாள். தலைதெறிக்க மாடி காரிடாரில் ஓடியவள் கண்ணில் பட்ட ஒரு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாழிட்டாள்.

தான் மாடிப்படியில் காலடி எடுத்து வைத்த மறுகணமே தன்னை துரத்திக்கொண்டு வந்த படை ஷாக் அடித்தது போல் நின்றுவிட்டதையும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் திகைத்துப் போனதையும் அறியாமல் மேல் தாழ்ப்பாளையும், கீழ் தாழ்ப்பாளையும் மாற்றி மாற்றி அழுத்தி பூட்டிக் கொண்டிருந்தாள்.

உஸ், புஸ்ஸென்று மேல்மூச்சு வாங்கியது, இதயம் தடதடத்தது, உடல் வியர்வையில் குளித்துவிட்டது. சிறிதும் குறையாத பதட்டத்துடன் கதவின் மீதே ஓரிரு நொடிகள் சாய்ந்து நின்றாள். ‘தப்பித்துவிட்டோமா! பிழைத்துவிட்டோமா!’ நம்ப முடியவில்லை. பதட்டம் சற்று குறைந்தது, மெல்ல மெல்ல ஆசுவாசப்பட்டாள். திடீரென்று அதே அறையிலிருக்கும் இன்னொரு கதவில் அரவரம் கேட்டது. மீண்டும் பதட்டத்தின் உச்சத்திற்குச் சென்றாள்.

‘கடவுளே! கடவுளே! வந்துட்டானுங்களா!’ பயத்தில் இதயம் எகிறிக் குதித்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒளிவதற்கு இடம் தேடினாள். ‘அதோ கட்டில் ஓடு! ஓடு!’ மூளை விரட்டியது. சட்டென்று பாய்ந்துச் சென்று கட்டிலுக்கு அடியில் நுழைந்து, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு கடவுளின் நாமத்தை மனதிற்குள் முணுமுணுத்தாள்.

அறைக்குள் நடமாட்டம் தெரிந்தது. அழுத்தமான காலடி ஓசை அவள் இதயத்தை எகிறி குதிக்கச் செய்தது. அதோ! லெதர் ஷூ அணிந்த ஒரு ஜோடி கால்கள் அவளை நோக்கி தான் வருகிறது. ‘க..ட..வு..ளே!’ மிருதுளாவின் உடல் வெடவெடத்தது. மூச்சுக்காற்றின் வேகம் அதிகமானது. கைகளால் வாயை அழுந்த மூடிக் கொண்டு அமைதிகாக்க முயன்றாள்.

“கிர்.. கிர்..” அலைபேசியின் வைப்ரேஷன் ஒலி எங்கோ கேட்டது. அவளை நோக்கி வந்த கால்கள் இப்போது விலகிச் சென்றன.

“வாட்ஸ் த மேட்டர்?” அந்தக் குரல்! அவள் காரில் கேட்ட அதே குரல்! அமைதியாக, அழுத்தமாக ஒலித்தது. அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. கால்கள் மீண்டும் அவளை நோக்கி நெருங்கி வந்தன. கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு ‘கடவுளே கடவுளே கடவுளே’ என்று இடைவிடாது ஜெபித்தாள். மெல்ல இமைத்திறந்து பார்த்தாள். இப்போது கட்டிலுக்கு மிக நெருக்கமாக வந்து நின்றது அந்தக் கால்கள்.

‘குனியப் போறான், பார்க்கப் போறான், கொல்லப்போறான்!’ பீதியுடன் காத்திருந்தாள். நல்லவேளை, அவன் குனிந்துப் பார்க்கவில்லை. மீண்டும் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றான். ‘தேங்க் காட்!’ அவளுடைய இறுக்கம் தளர்ந்தது. முழுமையான விடுதலை இல்லைதான், ஆனாலும் மனம் சற்று ஆசுவாசமடைந்தது. ஒரு முறை இயல்பாக மூச்சுவிட்டாள். மறுநொடியே அவளுடைய கால்கள் அசுரத்தனமாக பின்னால் பிடித்து இழுக்கப்பட்டன.

******************

அனந்தபூரிலிருந்து மகல்பாட்னாவிற்கு ஒரே மூச்சாக பயணம் செய்திருந்தாலும் ஓய்வெடுக்கும் உத்தேசமில்லாமல் உடனடியாக ரெஃப்ரெஷ் செய்து உடைமாற்றிக் கொண்டு, பேஸ்மெண்ட்டுக்கு செல்லத் தயாரானான் அர்ஜுன் ஹோத்ரா. அங்கே மிக முக்கியமான வேலை ஒன்று அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. லெதர் கோட், கையுறை சகிதம் குளோசெட்டிலிருந்து வெளியே வந்தவன் அறையில் ஏதோ மாற்றத்தை உணர்ந்து சட்டென்று நின்றான். இறுகியிருந்த அவன் முகம் மேலும் இரும்பு குண்டலம் போல் மாறியது. அவனுடைய அழுத்தமான பார்வை அறையை வட்டமடித்து, தாழிட்டிருந்த கதவில் வந்து மோதியபோது எச்சரிக்கையானான். இடுப்பிலிருந்த துப்பாக்கி கைக்கு இடம் மாறியது. அதே நேரம் மேஜையில் இருந்த அலைபேசி வைப்ரேட் ஆனது. எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

“வாட்ஸ் த மேட்டர்?”

“இட்ஸ் எ கேர்ள். அத்துமீறி நுழைஞ்சிருக்கா. மாடிலதான் இருக்கா. கார்ட்ஸ் ஆர் வெயிட்டிங் ஃபார் யுவர் ஆர்டர்” சுருக்கமாகக் கூறினான் சுஜித் சிங்.

அர்ஜுன் ஹோத்ராவின் விழிகள் சிவந்தன. அவனுடைய புலன்கள் அனைத்தும் அறையை நோட்டமிடுவதில் கவனமாயின. மெல்ல அடியெடுத்து வைத்து அறையை சுற்றி வந்தவன் கட்டிலை நெருங்கும் போது அந்த மெல்லிய சத்தத்தை உணர்ந்தான். மூச்சுவிடும் சத்தம். அவனுக்கு புரிந்துவிட்டது. மெல்ல கட்டிலை சுற்றி வந்து சட்டென்று கீழே குனிந்து கையில் அகப்பட்ட அவளுடைய காலைப் பிடித்து வேகமாக வெளியே இழுத்தான். அலறிவிட்டாள் மிருதுளா.

குப்புறக்கிடந்தவளின் பின்னந்தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, “ஸ்டாப் ஷெளட்டிங்” என்றான் அடிக்குரலில்.

பேராபத்தின் தீவிரம் நெஞ்சை உலுக்க கைகள் இரண்டாலும் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள். கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது. வெடிக்க துடிக்கும் விம்மலை அடக்க பெரும்பாடுபட்டாள். மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது.

“டர்ன் அரௌண்ட்” (திரும்பு) கரகரத்தது அவன் குரல். பயத்தில் உறைந்துப் போய் கிடந்தவள் திரும்பவில்லை. அர்ஜுன் ஹோத்ராவின் தாடை இறுகியது. பற்களை நறநறத்தபடி துப்பாக்கியை மேலும் அழுத்தி, “டர்ன் அரௌண்ட்” என்றான் குரலை உயர்த்தி.

அவன் அதட்டிய வேகத்தில் அவள் உடல் தூக்கிப்போட்டது. மிரட்சியுடன் மெல்லத் திரும்பினாள். அவனுடைய பார்வை கூர்மையானது.

தலை குனிந்திருந்தாள். முன்பக்கம் சரிந்துவிழுந்த கேசம் அவள் முகத்தை முழுவதுமாக மறைத்திருந்தது. கைகளிரண்டையும் நெஞ்சுக்கு குறுக்கே இறுக்கமாகக் கட்டி கொண்டு குறுகி அமர்ந்தாள். ஆடை அழுக்கில் குளித்திருந்தது. உடல் வெடவெடவென்று ஆடியது.

“லுக் அட் மீ” ஆணையிட்டான். அவள் நிமிரவில்லை. அவளுடைய கீழ்படியாமை அவனுடைய கோபத்தை மேலும் தூண்டியது.

“காண்ட் யு ஹியர் மீ?” என்றான் கடுமையாக.

அவன் அதட்டிய வேகத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மிருதுளா. முன்பக்கம் சரிந்துக் கிடந்த கேசத் திரையின் வழியே அவள் பார்வை அவன் கண்களை சந்தித்தது.

அந்த அரைகுறை தரிசனம் அவனுக்கு போதவில்லை. அவளை முற்றிலும் அறிந்துகொள்ளும் ஆவலுடன் துப்பாக்கியால் அவள் முகத்தை மறைத்திருந்த முடியை விளக்கினான். அவன் புருவங்கள் உயர்ந்தன. பால்முகம் மாறாத சிறு பெண். துப்பாக்கியை உயர்த்திப் பிடித்திருந்த கை தானாக கீழே இறங்கியது.

மருண்ட விழிகள், கனிந்த இதழ்கள், சிவந்த முகம், அவன் பார்வை அவளை அளந்தது. அவளுடைய அதீத பயத்தை அவனால் உணர முடிந்தது. இமை மூடித் திறந்து அவன் பார்வையை சந்தித்த மிருதுளாவின் கண்களும் சூழ்நிலையை மறந்து அவனை ஆராய்ந்தன.

ஆறடி உருவம், அளவான உடற்கட்டு, மேல்நோக்கி படிய வாரியிருக்கும் கருங்கேசம், அகண்ட நெற்றி, அடர்ந்த புருவம், விடைத்த நேர் நாசி, இறுகிய முகம். பிறகு அந்தப் பார்வை.. எதிரிலிருப்பவர்களை துளைத்து ஊடுருவும் துஷ்டப்பார்வை.

“கெட் அப்” அவனுடைய அதிகாரக் குரல் அவளை தன்னிலைக்கு மீட்டது.

பயத்துடன் எழுந்த மிருதுளா கைகளைக் கட்டிக் கொண்டு குறுகி நின்றாள். துடிக்கும் இதழ்களை மடித்துக் கடித்து பயத்தை மறைக்க முயன்றாள். அந்த சிறுபிள்ளை முயற்சி அவன் கண்களில் சுவாரஸ்யத்தை கூட்டியது. ‘இந்த இடத்திற்கு பொருத்தமில்லாதவள். அதுவும் என் வீட்டிற்கு’ அவன் மனம் அடித்துக் கூறியது. ஆனாலும் அந்த கேள்வியை அவன் கேட்டான்.

“யார் உன்னை அனுப்பியது?”
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 3

“யார் உன்னை அனுப்பியது?”

‘யார் அனுப்பியது என்றால்!’ அவனுடைய கேள்வியின் அர்த்தம் புரியாமல் திருதிருவென்று விழித்தாள் மிருதுளா. மாட்டிக்கொண்டதால் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறாள் என்று புரிந்துக்கொண்ட அர்ஜுன் ஹோத்ரா, “பதில் சொல்லு” என்றான் உள்ளடக்கிய கோபத்துடன்.

அப்போதும் அவள் பதில் சொல்லாமல் போனதும் ஆத்திரத்துடன் துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்து அழுத்தினான். மிருதுளாவின் விழிகள் தெரித்துவிழுவது போல் விரிந்தன. அடக்க முடியாத அழுகை பீறிட்டது. தலையை இடவலமாக ஆட்டினாள். ஏதோ சொல்ல முயன்று தோற்றவளாக வாயைத் திறந்து திறந்து மூடினாள்.

“ஃபைவ் செகென்ட்ஸ்.. வாயத் திறந்து பேசு.. இல்ல செத்து போ” என்று வெகு தீவிரமாக அவன் கூற, “ஸ்..ஸார்.. ஸார்.. ப்..ப்..ப்ளீஸ்.. ஸார்” என்று உதறலுடன் படபடத்தாள்.

“குட்! பேச்சு வந்துடுச்சு. சொல்லு யார் உன்னை அனுப்பியது?” மீண்டும் கேட்டான்.

“அ..அ..அனந்தபூர்ல.. ரௌ.. ரௌ..டி..பசங்க.. பயந்து.. உங்.. உங்க கார்ல.. கார்ல.. ஏறிட்டேன். ஸ்..ஸா..ரி.. ஸாரி.. ப்..ளீஸ்” அவள் பேசப் பேச அவனுடைய முகம் ரௌத்திரமாக மாறியது.

“பொய்!” அர்ஜுன் ஹோத்ராவின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஒரு பெண் அவனுடைய காரிலேயே பயணம் செய்வதா! பொருந்தாத பொய்! அவனுடைய உதடுகள் இகழ்ச்சியில் வளைந்தன. மறுகணமே அவன் முகம் மாறியது. ‘இவன் அனந்தபூரிலிருந்து வந்தது இவளுக்கு எப்படி தெரியும்!’ புருவங்கள் நெரிந்தன.

“ஒரியா நல்லா பேசுறியே!” போலியாக வியந்தான்.

“சின்ன வயசுல.. ஒரிஸாலதான்..” "உண்மைய பேசு, இல்ல ஒரே புல்லட்தான். செத்..துடுவ..” அவளுடைய பேச்சை இடைமறித்து உறுமினான்.

“உ.. உண்..உண்மைதான்.. நிஜமாவே.. சார் ப்ளீஸ்.. பிலீவ் மீ.. ப்ளீஸ்” மன்றாடினாள்.

அவளுடைய பதட்டமும் கண்ணீரும் உண்மைக்கு வெகு அருகில் இருந்தது. அவனையே கன்வென்ஸ் செய்யும் விதத்தில் மிகவும் தத்ரூபமாக இருந்தது.

‘வெல் ட்ரெயிண்ட் ரிசோர்ஸ்’ என்று மனதிற்குள் நினைத்தவன், தான் வெகு நெருக்கமாக உளவு பார்க்கப் படுகிறோம் என்று உணர்ந்தான். முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் துப்பாக்கியை அவள் நெற்றியிலிருந்து இறக்கினான்.

“சரி சொல்லு. யார் நீ? ஏன் என்னோட கார்ல ஏறின?” இயல்பாக கேட்டபடி அங்கே கிடந்த கௌச்சில், ரிலாக்ஸாக அமர்ந்தான்.

“நா மிருதுளா. ரௌடி பசங்க தொரத்தினாங்க. அவங்ககிட்டேருந்து தப்பிக்க உங்க கார்ல ஏறிட்டேன் சார். வேற எதுவும்.. எனக்கு.. வேற எதுவும் தெரியாது சார்” பயத்துடன் படபடத்தாள்.

அவளுடைய ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக கவனித்தபடி, “யார் அந்த ரௌடிஸ். எதுக்கு உன்ன துரத்தினாங்க” என்றான். அந்த இடத்தில் மிருதுளா சுதாரித்தாள். அனந்தபூர் கொலைகாரர்களுக்கும் இவனுக்கும் தொடர்பு இருப்பதாக அவளுக்குள் அழுத்தமாய் பதிந்திருந்த எண்ணம் அவளை எச்சரித்தது.

‘இல்லை.. இவனிடம் எதையும் சொல்லக் கூடாது. நம்மைப் பற்றி எந்த விபரமும் இவனுக்குத் தெரியக்கூடாது’ உறுதியான எண்ணம் உள்ளே தோன்றியது.

“அவங்க ஏதோ.. ரோட் சைட் ரௌடிஸ்.. லேட் நைட்.. ரோட்ல யாரும் இல்ல.. நா ஒர்க் முடிஞ்சு தனியா வந்ததும் தப்பா நடக்க ட்ரை பண்ணினாங்க. அவங்ககிட்டேருந்து தப்பிச்சு ஓடிவந்துதான்” நடந்ததை மறைத்து சமாளித்தாள்.

“ம்ம்ம்.. பேரண்ட்ஸ் என்ன பண்ணறாங்க?”

“ஹாங்” சட்டென்று பதிலை யோசிக்க முடியவில்லை.

“பேரண்ட்ஸ்?” மீண்டும் கேட்டான்.

“இல்ல.. யாரும் இல்ல.. நா தனியாத்தான்.. அங்க.. வேல பார்த்துட்டு.. ஹாஸ்ட்டல்ல..” கோர்வையாக பேச முடியவில்லை. பொய் தொண்டையில் சிக்கிக் கொண்டு வெளியே வர மறுத்தது.

‘இந்த சிறு பெண் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்! நம்மை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்று எண்ணினாளா!’ வியப்பை வெளிக்காட்டாமல், “ஓ!” என்றான்.

“எங்க வேலை பார்க்கற?” அடுத்த கேள்வியை கேட்டான்.

“ஹாஸ்ப்பிட்டல்ல.. அட்டெண்டர்” ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லி வைத்தாள்.

“எந்த ஹாஸ்ப்பிட்டல்?”

“கா..க்..காவேரி..”

“எங்க தங்கியிருக்கேன்னு சொன்ன?”

“ஹாஸ்ட்டல்ல சார்”

“ஹாஸ்ட்டலுக்கு பேரு எதுவும் இருக்கா, இல்ல பேரு இல்லாத ஹாஸ்ட்டலா?” எவ்வளவு முயன்றும் எள்ளலை கட்டுப்படுத்த முடியவில்லை அவனுக்கு.

“ஆங்.. இருக்கு. பேரு.. தெரசா.. தெரசா உமன்ஸ் ஹாஸ்ட்டல்” அவள் மீது பதித்த பார்வையை அவன் விளக்கவில்லை. அலட்சியம், எள்ளல், ஆராய்ச்சி எல்லாம் கலந்திருந்தது அந்தப் பார்வையில்.

“சு..ஜீ..த்” திடீரென்று எழுந்த அவனுடைய பெருங்குரல் அவளை திடுக்கிடச் செய்தது. அந்த அழைப்பிற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல் உடனே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஒருவன்.

ஆறடிக்கு மேல் வளர்ந்திருந்தான். உடல், முற்றிய மரம் போல் பெருத்திருந்தது. அணிந்திருந்த கருப்பு கோட் அவனுடைய கம்பீரத்தை அதிகப்படுத்தியது. வலது கன்னத்தில் இருந்த பெரிய தழும்பு அவனை மேலும் துஷ்டனாகக் காட்டியது. அந்த அறையில் இருந்த இருபெரும் மலைகளுக்கு நடுவில் தன்னை ஒரு துரும்பை போல் உணர்ந்தாள் மிருதுளா. அடுத்து என்ன நடக்குமோ என்கிற பீதி அவள் அடிவயிற்றில் புளியை கரைத்தது.

“இந்த பொண்ண சர்வெண்ட்ஸ் ரூம்ல தங்க வை” திடமான குரலில் கூறினான். எதிர்த்து பேச முடியாத குரல். இட்ட கட்டளையை அப்படியே நிறைவேற்று என்று சொல்லாமல் சொல்லும் குரல்.

‘சர்வெண்ட்ஸ் ரூம்லயா! சர்வெண்ட்ஸ் ரூம்ல நான் ஏன்!’ கலவரமானாள் மிருதுளா. ஆனால் அதை யாரும் அங்கு பொருட்படுத்தவில்லை.

“ஏய்! வா என் கூட” அதட்டி அழைத்தான் சுஜித். அவனுடைய முகமும், பார்வையும் கடவுளே! சட்டென்று அர்ஜுன் ஹோத்ராவிடம் திரும்பினாள்.

அவனுடைய மிரட்டலுக்கு பயந்து இவனிடம் தஞ்சமடைவது போலிருந்தது அவளுடைய செயல். அர்ஜுன் ஹோத்ராவின் புருவம் உயர்ந்தது.

“நா போகனும் சார். ப்ளீஸ்” சின்ன குரலில் கெஞ்சினாள்.

“எங்க?”

“என்னோட ஊருக்கு.. அனந்தபூருக்கு” யாசிக்கும் அவள் கண்களையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், பதில் ஏதும் சொல்லாமல் சுஜித்தின் பக்கம் திரும்பினான்.

தலைவனின் குறிப்பை உணர்ந்து, “ம்ம்ம்..ம்ம்ம்.. கிளம்பு” என்று கட்டளையிட்டான் சுஜித். மிருதுளா பதைபதைப்புடன் அர்ஜுன் ஹோத்ராவைப் பார்த்தாள். அவனோ கற்சிலை போல் இறுகி நின்றான். வேறு வழியில்லாமல் சுஜித்தை பின்பற்றி அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

********************

அந்த பிரம்மாண்டமான மாளிகையின் கடைக்கோடியில் சமையலறைக்கு அடுத்தாற் போல் வேலைக்காரர்கள் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அங்குதான் மிருதுளாவின் அறையும் இருந்தது.

அட்டாச்ட் பாத்ரூம், மின்விசிறி, சொகுசான படுக்கை, சுவரோடு பொருத்தப்பட்டிருந்த மர அலமாரி மற்றும் காற்றோட்டமான ஜன்னல் என்று அனைத்து வசதிகளோடும் இருந்தது அந்த அறை. வேலைக்காரர்கள் தங்கும் இடம் என்று சொல்ல முடியாத அளவிற்கு வசதியாகவே இருந்தது.

“இதுதான் உன்னோட ரூம். குளிச்சுட்டு வெயிட் பண்ணு” கடுகடுத்த முகத்தோடு பேசினான். அவன் கண்களில் தெரிந்த வெறுப்பு மிருதுளாவை அச்சுறுத்தியது. பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள். ஓரிரு நொடிகள் அவளை உறுத்து விழித்தவன் பிறகு சட்டென்று திரும்பி அங்கிருந்து வெளியேறினான்.

அவன் அகன்றதும் கதவை மூடி தாளிட்டுவிட்டு தரையில் சரிந்து அமர்ந்தாள் மிருதுளா. மரண சூழலில் சிக்கிக் கொண்டது போல் மூச்சுமுட்டியது. எப்படி இங்கிருந்து தப்பிக்கப் போகிறோம் என்கிற கலக்கத்துடன் கால்களை கட்டிக் கொண்டு முழங்காலில் முகம் புதைத்து குலுங்கினாள்.

குபீரென்று ஆடையில் இரத்தவாடை அடித்தது. “உவ்வே” என்கிற குமட்டலுடன் எழுந்து குளியலறைக்கு ஓடினாள். நேற்று அடிபட்டுக் கிடந்த அந்த மனிதனின் இரத்தம் அவள் ஆடையில் எங்கோ படிந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் வீச்சம் இருந்திருக்கிறது. அதை இப்போதுதான் உணர்கிறாள்.

குடலே வெளியில் வந்து விழும் அளவிற்கு குமட்டல் அவளை புரட்டிப்போட்டது. ஆனால் காலியாக இருந்த வயிற்றிலிருந்து எதுவும் வரவில்லை. மேல்மூச்சு வாங்க கண்ணீரும் கம்பலையுமாக நிமிர்ந்து தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்தவள் அதிர்ந்தாள். முகமெல்லாம் அழுக்கு, ஆங்காங்கே சிராய்ப்புகள், கண்டபடி களைந்து கிடந்த கேசம், சேற்றில் துவைத்து எடுத்தது போல் கறைபடிந்திருந்த ஆடை. என்ன கோலமிது! தன்னை தானே அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறிப் போயிருந்தது அவள் உருவம்.

முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்தாள். யாரோ கதவை தட்டினார்கள். திறந்து பார்த்தாள். அரக்கு நிற சுடிதாரில் ஒரு பெண் நின்றுக் கொண்டிருந்தாள். இறுக்கமான முகபாவத்துடன் கையிலிருந்த கவரை நீட்டினாள். மிருதுளா அதை வாங்கி கொண்டதும் எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள். மீண்டும் கதவை மூடிக் கொண்டு உள்ளே வந்த மிருதுளா, அந்த கவரை பிரித்துப் பார்த்தாள். அந்தப் பெண் அணிந்திருந்த அதே அரக்கு நிறத்தில் ஒரு ஆடை இருந்தது.

அதை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். சுடுநீர் குழாயை திறந்து நன்றாக சோப்புப் போட்டு குளித்தாள். ஆனாலும் அவனுடைய இரத்தம் அவள் உடம்பில் படிந்திருப்பது போன்றதொரு உணர்விலிருந்து மீள முடியவில்லை. அந்த மனிதனின் நிலை என்னவாகியிருக்கும்? இறந்திருப்பானா? அல்லது நூற்றில் ஒரு வாய்ப்பாக எப்படியாவது பிழைத்திருப்பானா? என்றெல்லாம் எண்ணங்கள் அலைபாய்ந்தது. நாம், வேறு எப்படியாவது அவனை காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாம். சுயநலமாக பயந்து ஓடி வந்துவிட்டோம். அந்த பாவம் தான் இங்கு வந்து சிக்கிக் கொண்டோம் என்றெல்லாம் யோசித்து மனதை அலட்டிக் கொண்டாள். மொத்தத்தில் அமைதியில்லாமல் போராடியது அவள் உள்ளம்.

ஷவரை திறந்துவிட்டு வெதுவெதுப்பான நீருக்கு அடியில் நேரம் போவது தெரியாமல் நின்றுக் கொண்டிருந்த மிருதுளாவிற்கு, வெளியே அவளுடைய அறைக்கதவு தட்டப்படும் சத்தம் சிறிதும் கேட்கவில்லை. குளித்துவிட்டு நிதானமாக வெளியே வந்தபோது, உணவு ட்ரே ஒன்று டீப்பாயில் இருந்தது. குழப்பத்துடன் கதவை திரும்பிப் பார்த்தாள். லாக் செய்யப்பட்டுதான் இருந்தது. உள்பக்கம் பூட்டியிருந்த அறையை வெளிப்பக்கமிருந்து திறந்திருக்கிறார்கள்! நெருப்பில் நிற்பது போல் உணர்ந்தாள்.

அங்கிருந்து ஓடிவிட அவள் கால்கள் துடித்தன. ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை புத்தி அறிந்திருந்தது. டீப்பாயில் இருந்த ட்ரேயை பார்த்தாள். ரொட்டி குருமாவோடு ஜூசும் இருந்தது. உணவை பார்த்ததும் காலியாய் கிடந்த வயிறு சத்தமெழுப்பியது. ஆனால் அவள் அந்த உணவை உண்ண தயாராக இல்லை. அதில் ஏதேனும் கலந்திருந்தால்!

இங்கிருப்பவர்களை பார்த்தால் உணவில் விஷம் வைத்து கொலை செய்பவர்களாக தோன்றவில்லைதான். துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு விஷத்தை ஏன் தேடப் போகிறார்கள். ஆனால் மயக்க மருந்து ஏதேனும் கலந்து பெண்களை வெளிநாட்டுக்கு கடத்துபவர்களாக இருந்தால்! நினைக்கும் போதே நெஞ்சம் நடுங்கியது. பயனற்ற முயற்சி என்று தெரிந்தும், கதவின் லாக்கை இன்னொரு முறை நன்றாக அழுத்தி விட்டாள். வெளியிலிருந்து சாவியைப் போட்டால் திறக்கத்தான் போகிறது. ஆனாலும் மனதின் போராட்டம் அதை செய்ய சொன்னது.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிருந்து தப்பி செல்ல வேண்டும். இல்லையென்றால் அவள் அழிவது உறுதி. ஆழமூச்செடுத்து பயத்தை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஜன்னல் வழியாக வெளிப்புறத்தை நோட்டமிட்டாள். அந்த மாளிகையின் பக்கவாட்டுப்பகுதி தெரிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களாகத்தான் இருந்தது. ஏதோ பெரிய தோப்பு அல்லது காட்டுப்பகுதியாக இருக்கவேண்டும் என்று அனுமானித்தாள்.

இங்கிருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம்! மனம் சோர்ந்து. ‘அம்மா!’ உள்ளம் குமுறியது. கண்களில் கண்ணீர் கசிந்தது. மகள் இரவெல்லாம் ரூமுக்கு வரவில்லை என்னும் செய்தி இந்நேரம் அந்த தாயை எட்டியிருக்கும். என்ன பாடுபடுகிறாளோ! எப்படியெல்லாம் தவிக்கிறாளோ! தாயின் வேதனையை எண்ணி மகள் கலங்கினாள்.

கண் முன் நடந்த கொலை, உயிர் பயத்தில் ஓடிய ஓட்டம், இப்போது சிக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான இடம், எப்படி இதிலிருந்தெல்லாம் வெளிவரப்போகிறாள்! யார் காப்பாற்றப் போகிறார்கள்! எதுவுமே புரியவில்லை. சிந்தனைகள் சுழன்றுக் கொண்டே இருந்தன.

ஒருவேளை அந்த கொலை பழி இவள் மீதே கூட விழுந்திருக்கலாம். அலைபேசி, கால் செருப்பு, கடை சாவி எல்லாம் அங்குதான் எங்கோ கிடந்திருக்கும். போலீஸ் தடயங்களை சேகரித்திருப்பார்கள். அப்போது இவற்றில் ஏதேனும் அவர்கள் கையில் கிடைத்திருந்தால் சந்தேகம் இவள் பக்கம் தானே திரும்பியிருக்கும். சந்தேகமென்ன, இவள் தலைமறைவாகிவிட்டதாக எண்ணி குற்றவாளி என்றே முடிவு செய்திருக்கலாம். ‘கடவுளே!’ வயிறு கலங்கியது. கண்களில் கலவரம் கூடியது.

‘இல்லை! பயப்படக்கூடாது. தப்பிக்க வேண்டும், உயிரோடு பிழைத்து இங்கிருந்து வெளியேற வேண்டும்; ஆழமாக மூச்செடுத்து மனதை திடப்படுத்திக் கொண்டு சிந்தித்தாள்.

முதல் நாள் அவள் கடையை மூடும் பொழுது மணி சரியாக பத்து. அதற்கு பிறகு நடந்த சம்பவங்களையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், இவள் அந்தக் காரில் ஏறிய போது நேரம் நள்ளிரவை தாண்டியிருக்க வேண்டும். அதற்கு மேல் பயணம் செய்து ஒரிஸாவிற்குள் நுழைந்திருக்கிறாள் என்றால் எப்படியும் ஆந்திரா-ஒடிசா பார்டரில்தான் இப்போது அவள் இருக்க வேண்டும். எந்த ஊர், எந்த இடம் என்பதைத்தான் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவள் சிந்தனையுடன் நின்றுக் கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது.

மிருதுளா அசையாமல் நின்றாள். வந்திருப்பது யார்? எதற்கு? என்ற பல கேள்விகள் அவளுக்கு எழுந்து விடையை தேடிக்கொண்டிருந்த போது கதவு மேலும் பலமுறை தட்டப்பட்டுவிட்டது. ஓரிரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு சென்று கதவைத் திறந்தாள்.

மெல்லிய உடல்வாகில் ஜீன்ஸ் அணிந்த பெண் ஒருத்தி நின்றுக் கொண்டிருந்தாள். தோள்பட்டை வரை வெட்டிவிடப்பட்ட கூந்தலை போனி டெயிலில் அடக்கியிருந்தாள். அவள் அணிந்திருந்த கண்ணாடி அவளுடைய அழகை கூட்டிக் காட்டியது. முகத்தில் அறிவுக்களை இருந்தது. நீண்ட நாள் பழகிய தோழியை பார்ப்பது போல் மலர்ந்த முகமும், விரிந்த புன்னகையுமாக மிருதுளாவை நோக்கினாள்.

பதிலுக்கு புன்னகைக்க முடியாமல் அறிமுகமற்ற பார்வையோடு நின்றுக் கொண்டிருந்தாள் மிருதுளா.

“ஹாய் ஐம் பூஜா” தன்னை அறிமுகம் செய்துக் கொண்டாள்.

அப்போதும் பதில் பேச முடியாமல், “ஓ..” என்று தலையை ஆட்டிவிட்டு அசையாமல் நின்றாள் மிருதுளா.

“உள்ள வரலாமா?” மலர்ந்த முகம் மாறாமல் கேட்டாள் பூஜா.

தான் வழியை அடைத்துக் கொண்டு நிற்கிறோம் என்பதையே அவ்வளவு நேரம் உணராமல் போய்விட்ட மிருதுளா சற்று சங்கடத்துடன், “எஸ் ப்ளீஸ்” என்று வழிவிட்டு ஒதுங்கினாள்.

உள்ளே வந்த பூஜா டீப்பாயில் இருந்த உணவு ட்ரேயை கண்டுவிட்டு, “இன்னும் சாப்பிடலையா நீ?” என்றாள் ஆச்சரியமாக.

“ஆங்.. இல்ல.. பரவால்ல..” தடுமாறினாள் மிருதுளா. ஏன் சாப்பிடவில்லை என்பதற்கான காரணத்தை யோசிக்க வேண்டுமே!

“நைட்லேருந்து எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட. முதல்ல சாப்பிடு” அக்கறையோடு கூறினாள்.

மிருதுளா வாய் திறந்து எதையும் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய முகபாவத்திலிருந்தே அவளுடைய எண்ணவோட்டத்தை கணித்துவிட்ட பூஜா, “நீ நினைக்கற அளவுக்கு இங்க யாரும் மோசமானவங்க இல்ல மிருதுளா. பயப்படாம சாப்பிடு” என்றாள்.

‘துப்பாக்கி வைத்திருக்கிறார்கள், கொலை செய்கிறார்கள், ஆனால் மோசமானவர்கள் இல்லையாம்! ஆஹா!’ மனதில் தோன்றிய ஏளனத்தை வெளியே சொல்லவில்லை. ஆனால் அவள் முகம் காட்டிக் கொடுத்துவிட்டது. பூஜாவின் புன்னகை மேலும் விரிந்தது.

“குல்டா வசுந்தரா.. மஹாநதி மினரல் மைனஸ் எல்லாம் தெரியுமா?” என்றாள்.

“ஆங்..” இந்த சுரங்கங்கள் எல்லாம் ஒடிசாவில் புகழ்பெற்ற சுரங்கங்கள். குழந்தைக்குக் கூட தெரியும். அவளுக்குத் தெரியாதா! தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“அதோட ஓனர் அர்ஜுன் ஹோத்ராவோட வீடுதான் இது. நீ இங்க பார்த்த துப்பாக்கி, கார்ட்ஸ் எல்லாம் இங்க இருக்கவங்களோட பாதுகாப்புக்குத்தான். உனக்கு எந்த ஆபத்தும் இல்ல” பூஜாவின் பேச்சு மிருதுளாவிற்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. இங்கிருந்து சுமூகமாகவே வெளியே சென்றுவிடலாம் என்று எண்ணினாள்.

“இது எந்த ஊர்?” மெல்ல கேட்டாள்.

“மகல்பாட்னா. ஆந்திரா பார்டர். நீ எப்படி இவ்வளவு நல்லா ஒரியா பேசற?” மெல்ல விசாரணையை துவங்கினாள்.

மிருதுளா சாமர்த்தியமாக அர்ஜுன் ஹோத்ராவிடம் கூறியதை அப்படியே இவளிடமும் ஒப்புவித்தாள்.

அவள் கூறுவது அனைத்தையும் முழுமையாக நம்புவது போல் தலையை ஆட்டிக் கொண்டிருந்த பூஜா, அவளுடைய ஒடிசா வாழ்க்கையைப் பற்றியும் பெற்றோரைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினாள்.

ஆனால் அதைப்பற்றி கேட்பதற்கு முன் மிருதுளாவிடம் இனிக்கப் பேசி அவளுடைய நம்பிக்கையை சம்பாதித்தாள் அல்லது சம்பாதிக்க முயன்றாள் என்று கூட சொல்லலாம். அதன் பிறகு அவளை சமாதானம் செய்து உணவருந்த வைத்தாள். கடைசியாக தனக்குத் தேவைப்பட்ட விபரங்களை சேகரிக்கத் துவங்கினாள். ஆனால் அவளுடைய நுட்பங்கள் எதுவும் மிருதுளாவிடம் வேலை செய்யவில்லை.

அவள் ஒரு கொலையை நேரில் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள். அந்த கொலையாளிகளோடு இவர்களுக்கு நேரடி தொடர்பிருப்பதை நன்கு அறிந்திருக்கிறாள். அவ்வளவு சுலபமாக அதையெல்லாம் புறந்தள்ளிவிடுவாளா என்ன! பூஜா இனிக்கப் பேசினால், நட்பாக பழகினால் அதையே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் மிருதுளாவின் எண்ணம். எனவே அவள் பூஜாவின் எந்த கேள்விக்கும் உண்மையான பதிலை கொடுக்கவில்லை. பாதுகாப்பான பதிலை மட்டுமே கொடுத்தாள்.

மிருதுளாவின் அனுமானப்படி பூஜா இங்கு ஒரு முக்கியமான ஆள். இவளை மிகவும் நம்புகிறாள். அந்த நம்பிக்கையை பயன்படுத்தி எந்த சேதாரமுமின்றி இங்கிருந்து உருப்படியாக வெளியேறிவிட வேண்டும். இதுதான் அவளுடைய எண்ணம். அவளை அப்படி நம்ப வைத்தது பூஜா என்னும் மனோதத்துவ நிபுணரின் சாமர்த்தியம்.

பூஜா ஆய்வு செய்தவரை, மிருதுளா அதீத பயத்தில் இருக்கிறாள். அவள் கூறும் கதையில் உண்மையை விட பொய்கள் தான் அதிகம் நிறைந்திருக்கின்றன. அவளுடைய கணிப்புப்படி, இதுதான் மிருதுளாவின் முதல் அசைன்மெண்டாக இருக்க வேண்டும். இதைத்தான் ரிப்போர்ட்டாக அர்ஜுன் ஹோத்ராவின் கவனத்திற்கு அனுப்பினாள் பூஜா.
 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 4

மிருதுளாவின் குறுக்கீட்டால் தடைபட்ட அர்ஜுன் ஹோத்ராவின் வேலை அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது. கீழே இறங்கி வந்து பேஸ்மெண்டிற்கு செல்லும் பகுதியை நோக்கி நடந்தான். வழியில் நின்றுக் கொண்டிருந்த அவனுடைய ஆட்கள் சிலர் அவனை பார்த்ததும் மரியாதையுடன் தலை வணங்கினார்கள். அவர்களைக் கடந்து கடைகூடத்தை அடைந்து பேஸ்மெண்ட் கதவைத் திறந்து படிக்கட்டில் இறங்கினான். அவனுடைய உடல் இறுகியது. அழுத்தமான காலடிகள் அங்கே சூழ்ந்திருந்த நிசப்தத்தை கிழித்தது. படிக்கட்டு முடியும் இடத்தில் மீண்டும் ஒரு கனமான கதவு காணப்பட்டது. உள்ளே கொலையே நடந்தாலும் சத்தம் வெளியே வராத, அந்த சவுண்ட் ப்ரூஃப் அறைக்குள் பசித்த மிருகத்தின் வெறியோடு நுழைந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

அவன் உள்ளே நுழைந்ததுமே முதலில் கண்ணில் பட்டது சுஜித் சிங் தான். மிருதுளாவை அவளுடைய அறையில் விட்டுவிட்டு உடனே அவனும் பேஸ்மெண்ட்டிற்கு வந்துவிட்டான்.

தலைவனைப் பார்த்ததும் முன்னோக்கி வந்து, “வாயத் திறக்க மாட்டேங்கிறான்” என்றான் கடித்தப் பற்களுக்கிடையில். அவனுக்குள் சீறி கொண்டிருக்கும் எரிமலையை உள்வாங்கியபடி முன்னோக்கி நடந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

தொங்கிப்போன தலையோடு சேரில் கட்டப்பட்டுக் கிடந்தான் பட்டேல். நேற்றுவரை நண்பனாக இருந்தவன் ஒரே நாளில் துரோகியாகிவிட்டான். இல்லையில்லை, சரியாக சொல்ல வேண்டும் என்றால், நேற்று வரை நண்பனாக நடித்தவனின் சாயம் இன்று வெளுத்துவிட்டது.

எப்படி வந்தது இந்த தைரியம்! அர்ஜுன் ஹோத்ராவின் கண்களில் கோபத்தீ கனன்றது. பட்டேலை சுற்றி நான்கைந்து ஆட்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கைவரிசையால்தான் இவன் இப்படி கிழிந்த நாறாகக் கிடக்கிறான் என்பதை சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

இது போதாது. இன்னும் காட்டவேண்டும். அர்ஜுன் ஹோத்ராவிடம் சிக்கினால் என்ன நடக்கும் என்பதை இன்னும் திடமாகக் காட்டவேண்டும். சுஜித்தை நிமிர்ந்து பார்த்தான். அந்த கணமே தலைவனின் கட்டளையை புரிந்துக்கொண்டு, பட்டேலின் உச்சிமுடியைப் பிடித்து கடுமையாக இழுத்து தொங்கி கிடந்த அவன் தலையை நிமிர்த்தினான். வலியில் அலறினான் பட்டேல்.

முகம் நன்றாகவே சிதைந்திருந்தது. அதை திருப்தியுடன் பார்த்த ஹோத்ரா, “லுக் அட் மீ பட்டேல்” என்றான் அமைதியான குரலில். மெல்ல இமைகளை பிரித்த பட்டேலின் விழிகளில் பயம் இருந்தது.

“என்கிட்ட ஏதாவது சொல்ல விரும்புரியா?” அர்ஜுன் ஹோத்ராவின் பார்வையை சந்திக்க முடியாமல் தடுமாறிய பட்டேல் கண்களை மூடிக் கொண்டான். அவனிடமிருந்து பதில் வராததையடுத்து பொங்கியெழுந்த சுஜித் தன் பிடியில் இன்னும் அழுத்தம் கொடுத்து அவனை அலறவிட்டான்.

இவனிடமிருந்து விஷயத்தை கறப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இவர்களெல்லாம் எடுத்திருக்கும் பயிற்சி அத்தகையது. இதே நிலையில் இன்னும் சில மாதங்கள் கூட இவனால் உயிரை பிடித்து வைத்திருக்க முடியும். அர்ஜுன் ஹோத்ராவின் மனம் தோல்வியை ஏற்க மறுத்தது.

“உனக்கு இரண்டு ஆப்ஷன்ஸ் இருக்கு. ஈஸி டெத், பெயின்ஃபுல் டெத். வெரி பெயின்ஃபுல்.. உன்னோட சாய்ஸ்தான் பட்டேல்” இலகுவாகக் கூறினாலும் அவன் குரலில் எச்சரிக்கை இருந்தது.

“என்னோட சாய்ஸ் என்னன்னு உனக்கே தெரியும் அர்ஜுன்” மெல்லிய குரலில் குளறலாக உளறினான் பட்டேல்.

அர்ஜுன் ஹோத்ராவின் முகம் அக்னி பிழம்பானது. சற்று நேரம் பட்டேலை வெறித்துப் பார்த்தவன், “குட் சாய்ஸ். அட்லீஸ்ட் யு ஆர் லாயல் டு நாயக் ஃபேமிலி” என்றான்.

“யு காண்ட் அட்ரஸ் தெம் லைக் தட் அர்ஜுன். தே ஆர் கோர்த்தாஸ். ஒரிஜினல் கோர்த்தாஸ்” உடலில் எஞ்சியிருந்த ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி குரலை உயர்த்தினான். அடுத்த கணமே சுஜித்தின் இரும்புக்கரம் தாடையில் வந்து பலமாய் மோத வலியில் அலறினான்.

“அவனுங்க கோர்த்தாஸ்ன்னா அப்போ நாங்க யாரு? நா யாரு?” உறுமினான் அர்ஜுன் ஹோத்ரா.

ஒரு கையால் பட்டேலின் உச்சி முடியை இழுத்துப் பிடித்துக் கொண்டு மறுகையால் அவனுடைய தாடை எலும்பை இறுக்கிப் பிடித்தான் சுஜித். நேற்றுவரை தன்னோடு ஒன்றாகப் பழகியவன் என்கிற தயவு தாட்சண்யமே இல்லை அவனிடம். முழு மிருகமாக மாறியிருந்தான்.

“ஆஆ” அவனுடைய அலறல் ஒலி அறையெங்கும் எதிரொலித்தது.

“வாவ்! திஸ் இஸ் த மியூஸிக். மை மோஸ்ட் ஃபேவரிட் மியூஸிக். லிரிக்ஸ் தான் மிஸ்ஸிங். ஃபில் பண்ணிடு பட்டேல். வேர் ஆர் யுவர் டாஷிங் ரான் அவே லீடர்ஸ்?” (ஆஹா! இது தான் இசை. என்னை கவர்ந்த இசை. வரிகள் இல்லாததுதான் குறை. அதையும் பூர்த்தி செய்துவிடு பட்டேல். ஓடிப்போன உன்னோட டாஷிங் தலைவர்கள் எங்கே?) என்றான் அர்ஜுன்.

அவனால் பதில் சொல்ல முடியவில்லை. சில பல நிமிடங்கள் அவனை துடிக்கவிட்ட பிறகு கையை உயர்த்தி சுஜித்தை தடுத்தான் அர்ஜுன் ஹோத்ரா.

“யு வான டெல் மீ சம்திங் பட்டேல்?” அமைதியாகக் கேட்ட அர்ஜுன் ஹோத்ராவின் கண்களில் எட்டிப் பார்த்த அசுரன் பட்டேலை அச்சுறுத்தினான்.

“கில்.. கில் மீ.. ப்ளீஸ் கில் மீ”

“நீ அவ்வளவு சீக்கிரம் சாகமாட்ட பட்டேல். ஐம் கோயிங் டு ஷோ யு த ஹெல். நீ கற்பனையில கூட நெனச்சுப் பார்க்காத நரகம். மெதுவா.. கொஞ்சம் கொஞ்சமா.. என்ஜா..ய் மை மேன்” பட்டேலிடம் நரகத்தின் மேன்மையை ரசித்துக் கூறிவிட்டு, “சேர்” என்று சொடக்குப் போட்டு உறக்கக் கத்தினான்.

அடுத்த சில நிமிடங்களில் அவன் நின்ற இடத்திற்கு ஒரு குஷன் நாற்காலி வந்தது. அதில் அமர்த்தலாக அமர்ந்துக் கொண்டான்.

பேஸ்மெண்ட் பஜனை ஆரம்பமானது. பட்டேலின் அலறலையும் துடிப்பையும் ஒருவித குரூரத்துடன் பார்த்து ரசித்தான் அர்ஜுன் ஹோத்ரா. அவனுடைய நகங்கள் பிடுங்கப்பட்டன, எலும்புகள் நொறுக்கப்பட்டன, இரத்தம் தெறிக்க தெறிக்க உயிரோடு சிதைக்கப்பட்டான். இதற்கு மேல் தங்கமாட்டான் என்னும் நிலையில் அவன் உயிரோடு இருக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக பஜனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

“டாக்டரை வர சொல்லனுமா?” கேட்டான் சுஜித் சிங்.

“இது நம்ம பட்டேல் கேட்டு வாங்கின பெயின், இரண்டு நாள் என்ஜாய் பண்ணட்டும். அப்புறம் பார்த்துக்கலாம். லெட் ஹிம் ஸ்டே இன் திஸ் கண்டிஷன் அட்லீஸ்ட் ஃபார் பார்ட்டி எயிட் அவர்ஸ்” என்று கூறி ரத்தவெள்ளத்தில் கிடந்தவனை அப்படியே விட்டுவிட்டு சகாக்களோடு அந்த அறையிலிருந்து வெளியேறினான் அர்ஜுன் ஹோத்ரா.

*********************

இரவு பதினோரு மணி. அர்ஜுன் ஹோத்ராவின் அலுவலக அறையில் நடந்தது அந்த நள்ளிரவு சந்திப்பு. தலைவனுக்கான இருக்கையில், இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த அர்ஜுன் ஹோத்ராவிற்கு எதிரில் சுஜித் சிங், டேவிட் மற்றும் மாலிக் சர்புதீன் மூவரும் அமர்ந்திருந்தார்கள். உணர்வுகளற்ற இயந்திரம் போல் காணப்படும் இந்த மூவரும்தான் அர்ஜுன் ஹோத்ராவை சுற்றியிருக்கும் முதல் வட்டம். அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்.

இந்த மூவரோடு ஒருவராகத்தான் பட்டேலும் இருந்தான். மிகவும் நம்பிக்கைக்கு உரியவனாக, அர்ஜுன் ஹோத்ராவின் வலது கையாக இருந்தான். ஒருமுறை தன் உயிரை பணயம் வைத்து அர்ஜுன் ஹோத்ராவின் உயிரை காத்திருக்கிறான். ஆனால் இன்று அவனே துரோகியாக மாறி பேஸ்மெண்டில் அடைபட்டுக் கிடக்கிறான். இதுதான் இவர்களின் உலகம். நிழலைக் கூட நம்ப முடியாத உலகம்.

“குரு வாஸ் ஷார்ட் அட் அனந்தபூர். அண்ட் வி லாஸ்ட் ஹிம்” (மிஸ்டர் குருவுக்கு அனந்தபூர்ல குண்டடி பட்டுடுச்சு. நாம அவனை இழந்துட்டோம்) - அர்ஜுன் ஹோத்ரா.

“வாட்!” எஞ்சியிருந்த மூவரும் ஒருசேர அதிர்ந்தார்கள். ‘ஆம்’ என்பது போல் கண்களை முடித்திறந்து தலையசைத்தான் அர்ஜுன்.

“உயிரோட கேட்ச் பண்ணனும்கறது தானே ஆர்டர்” - சுஜித்.

“முயற்சி பண்ணியிருக்காங்க. பட் ஹி ஃபாட் பேக். எதிர்த்து சண்டை போட்டிருக்கான். ஷூட் பண்ண வேண்டிய கட்டாயம். பண்ணியாச்சு. செத்துட்டான். இனி அதைப்பற்றி டிஸ்கஸ் பண்ணி பிரயோஜனம் இல்ல. வி நீட் டு மூவ் ஆன்.”

“முக்கியமான லூப்ஹோலை விட்டுட்டோம். இனி எப்படி?” - மாலிக் சர்புதீன்.

“நமக்கு இன்னும் கூட வாய்ப்பு இருக்கு.”

“ரியலி?” - சுஜித் சிங்.

“எஸ், ஷூட் அவுட் நடந்த இடத்துல சம் ஒன் வாஸ் ட்ரையிங் டு சேவ் ஹிம்.”

“ஓ..ஹோ!” உற்சாகமாக கத்திய டேவிட், “நாம அவனை கேட்ச் பண்ணிட்டோமா?” என்றான்.

“நோ. ஹி எஸ்கேப்ட்.”

“ஷிட்.. ஷிட்.. ஷி..ட்..” கட்டுப்பாடிழந்து கத்தினான் சுஜித்.

“அவனோட ஐடன்டிட்டி ஏதாவது கிடைச்சதா?” - மாலிக்.

“நோ. குருவோட காண்டாக்ட்ஸ் அண்ட் மீட்டிங்ஸை ட்ரேஸ் பேக் பண்ணினா ஏதாவது க்ளூ கிடைக்கும். வி வில் கேட்ச் ஹிம் சூன்” கோணல் புன்னகையுடன் கூறினான். அந்த புன்னகையில் தெரிந்த சைத்தானை ரசனையோடு பார்த்து தலையசைத்தார்கள் மற்ற மூவரும்.

முதல் விவகாரம் முடிந்தது. அடுத்த விஷயத்திற்காகக் காத்திருந்தார்கள். அர்ஜுன் ஹோத்ரா எதுவும் பேசவில்லை. கண்களை மூடி ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தான்.

“அர்ஜுன்” சுஜித்தின் குரல் அவன் சிந்தனையில் குறுக்கிட்டது. ஆம்.. அர்ஜுன் ஹோத்ராவை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை அவனுக்கு இருந்தது. அவனுக்கு மட்டும் அல்ல, அந்த அறையிலிருந்த மூவருக்குமே அந்த உரிமை இருந்தது. இவர்கள் எல்லோரும் கோர்த்தாவில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் தங்களுடைய பயணத்தை துவங்கினார்கள். இவனுடைய வளர்ச்சி அதிவேகமாக இருந்ததால் தளபதியாகிவிட்டான். ஆனால் அந்த பழைய நட்பும் உரிமையும் அவர்களுக்குள் அந்தரங்கமாக இருக்கத்தான் செய்தது.

மெல்ல கண்திறந்து சுஜித்தை பார்த்தான். அவனுடைய முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

“மிருதுளா.. அட்டெண்டர் அட் காவேரி ஹாஸ்ப்பிட்டல், தெரசா வுமன்ஸ் ஹாஸ்ட்டல், அனந்தபூர், ஐ நீட் எ கம்ப்ளீட் பேக்ரௌண்ட் செக்” மிருதுளாவின் பின்புல விபரங்கள் அனைத்தும் தனக்கு வேண்டும் என்று கூறினான்.

அனைவரும் இறுகிப் போய் அப்படியே அமர்ந்திருந்தார்கள். இந்த மறுபுலனாய்வில் அவர்களுக்கு உடன்பாடில்லாதது தெரிந்தது.

“எனக்கு தெரியும். அவளோட பேரை தவிர அவ சொன்ன அத்தனையும் பொய். ஆனா அதை உறுதிப்படுத்திக்க வேண்டியது அவசியம்.”

“பேஸ்மெண்ட்டுக்கு கொண்டு போனா பத்து நிமிஷம் தாக்குப் பிடிக்கமாட்டா. ஜஸ்ட் கிவ் மீ எ சான்ஸ் அர்ஜுன். நா கண்டிப்பா..”

“கண்டிப்பா? கண்டிப்பா என்ன பண்ணிடுவ?” சுஜித் முடிப்பதற்குள் இடையிட்டு வெடுவெடுத்தான் அர்ஜுன் ஹோத்ரா.

“இரண்டு நாளா பட்டேல் பேஸ்மெண்ட்ல இருக்கான். உன்னால என்ன இன்பர்மேஷன் வாங்க முடிஞ்சுது?” எரிச்சலுடன் கேட்டான்.

“பட்டேலோட இவளை கம்பேர் பண்ண முடியாது.”

“எக்ஸாக்ட்லி. பட்டேலோட இவளை ஒப்பிட முடியாது. பட்டேலோட வீக்னஸ் என்ன? ஸ்ட்ரென்த் என்ன? எல்லாம் நமக்கு அத்துபடி. ஆனா இவளைப் பற்றி எதுவுமே தெரியாது. டூ யு ரிமெம்பர் தட்?” கடுப்படித்தான்.

பதில் சொல்ல முடியாமல் வாயை இறுக மூடிக் கொண்டு கற்சிலை போல் அமர்ந்திருந்தான் சுஜித்.

“ஐ வாண்ட் டு நோ ஹர் இன் அண்ட்அவுட்.. கம்ப்ளீட்லி” (நான் அவளை முற்றும்.. முழுமையாக தெரிந்துக்கொள்ள வேண்டும்) அழுத்தம் திருத்தமாகக் கூறியபடி எழுந்தான். மறுத்துப் பேசமுடியாத குரல். விவாதம் முடிந்துவிட்டது என்று பொருள். அதற்கு மேல் யாரும் எதுவும் பேசவில்லை. மெளனமாக அந்த அறையிலிருந்து வெளியேறினார்கள்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 5

நண்பர்களை அனுப்பிவிட்டு தனிமையில் அமர்ந்திருந்த அர்ஜுன் ஹோத்ராவின் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தாள் மிருதுளா. ‘சுஜித்தின் கோபம் நியாயமானது தான். அவளிடம் பொய் இருக்கிறது. அப்பாவி போல் நடிக்கிறாள். அவ்வளவு எளிதாக நீ தப்பிவிட முடியாது பெண்ணே. உன்னிடம் ஒளிந்திருக்கும் ரகசியம் ஒவ்வொன்றையும் வெளி கொண்டு வருவேன்’ கங்கணம் கட்டியபடி எழுந்து அவளுடைய அறையை நோக்கி நடந்தான்.

இரவு நேரங்களில் அர்ஜுன் ஹோத்ரா அவ்வப்போது இப்படி வீட்டை சுற்றி வருவது வழக்கம் என்றாலும் இன்று குறிப்பாக மிருதுளாவை நோட்டமிடத்தான் விழைந்தான். மாளிகை முழுவதும் அமைதியாக இருந்தது. பாதுகாவலர்கள் மட்டும் ஆங்காங்கே நடந்துக் கொண்டிருந்தார்கள். உணவு கூடத்தைத் தாண்டி வேலைக்காரர்கள் தங்கியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த போது மிருதுளாவின் அறையில் மட்டும் விடிவிளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. சந்தேகத்துடன்தான் அவளுடைய அறைக்கு அருகே சென்றான். அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் உள்ளே பேச்சு குரல் கேட்டது. அர்ஜுன் ஹோத்ராவின் உடல் விறைத்து நிமிர்ந்தது.

‘டா..மி..ட்..’ கோபத்தில் சிவந்தது அவன் முகம். இவ்வளவு விரைவாக மாட்டுவாள் என்று அவன் நினைக்கவில்லை. ‘என்ன பேசுகிறாள்? யாரிடம் பேசுகிறாள்?’ கதவிற்கு அருகே சென்று ஒட்டுக் கேட்க முயன்றான். எதுவுமே புரியவில்லை. ‘முணுமுணுவென்று இவ்வளவு மெல்லிய குரலில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாள்?’ பற்களை நறநறத்தான்.

கதவில் கைவைத்துத் தள்ளிப் பார்த்தான். உள்ளே தாழிட்டிருந்தாள். அந்தப் பக்கமாக கடந்துச் சென்ற பாதுகாவலன் ஒருவனை கையசைத்து அழைத்தான். அவனிடம் அந்த அறைக்கான மாற்று சாவியை கொண்டுவரும்படி கூறினான். அடுத்த சில நிமிடங்களிலேயே அவன் கேட்ட சாவி கையில் கிடைத்துவிட்டது. அதுவரை அந்த குரல் முணுமுணுத்துக் கொண்டேதான் இருந்தது. மெல்ல சாவியைப் போட்டு பூனை போல் உள்ளே நுழைந்தான். கையில் தயாராக துப்பாக்கியை பிடித்திருந்தான்.

அவனுடைய கண்கள் ஒரே நொடியில் அறையை ஸ்கேன் செய்தன. எரியும் விடிவிளக்கு, மூடியிருக்கும் ஜன்னல், மெத்தையில் மிருதுளா, அவளுடைய காலணிகள் கட்டிலுக்கு அருகே. இதைத்தவிர அறை சுத்தமாக இருந்தது. அங்கே அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. சந்தேகத்துடன் கட்டிலுக்கு கீழே பார்த்தான், கப்போர்டை திறந்து பார்த்தான், குளியலறையை திறந்து பார்த்தான்; பாதுகாவலனும் திரைச் சீலைக்கு பின்பக்கம், பால்கனி ஆகிய இடங்களில் சோதித்தான். யாரும் இல்லை.

‘வாட் த ஹெல்!’ வெறுப்பானான்.

“ம்ம்ம்.. ப்ளீ..ஸ்.. நோ..” மிருதுளா முணுமுணுத்தாள். சட்டென்று அவள் பக்கம் திரும்பினான் அர்ஜுன் ஹோத்ரா. உடலை குறுக்கி கால்களை கட்டிக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய புருவங்கள் முடிச்சிட்டன. என்னவாயிற்று இவளுக்கு? நடிக்கிறாளா? சந்தேகத்துடன் அவளிடம் நெருங்கினான்.

இவ்வளவு நேரமும் தனியாகத்தான் புலம்பிக் கொண்டிருந்தாளா! இல்லை.. இவள் நடிக்கிறாள். எங்கேயாவது அலைபேசியை ஒளித்து வைத்திருக்கிறாளா என்று சோதித்தான்.

“நோ..நோ..நோ.. ப்ளீஸ்.. நோ.. வே..ண்டாம்.. நோ.. ஆ.. ஆ..” தூக்கத்திலேயே அழுதாள். உடல் தூக்கி தூக்கிப் போட்டது. வேகமாக அவளிடம் நெருங்கி வந்தான். மிருதுளாவின் முகமெல்லாம் பதட்டம், பயம். தலையை இடமும் வலமுமாக வேக வேகமாக ஆட்டினாள். உடனடியாக அவனுடைய எண்ணத்தில் மாற்றம் வந்தது. ‘இவள் நடிக்கவில்லை.’ “மிருதுளா” குரல் கொடுத்து அவளை தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்றான்.

அவளுடைய நடுக்கம் அதிகமானது, பயம் அதிகமானது, புலம்பல் அதிகமானது, சத்தம் அதிகமானது, அழுகை அதிகமானது, இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“மிருதுளா.. ஹேய்.. என்ன ஆச்சு?” குரலை உயர்த்தினான்.

“இரத்தம்.. ஐயோ.. இரத்தம்.. ஆ.. ம்மா.. ஆ..” புலம்பலும் அழுகையுமாக கட்டிலிலிருந்து நழுவினாள். சட்டென்று அவளை தாங்கி மீண்டும் மெத்தையில் படுக்க வைத்தான். ஆனால் அவள் படுக்க மறுத்தாள். எங்கோ ஓட முயற்சி செய்வது போல் அவனுடைய பிடியிலிருந்து தன்னை உதறி விடுவித்துக் கொண்டவள் தரையில் தடுமாறி விழுந்தாள்.

“ஏ.. ஏய்!” பதற்றத்துடன் அவளை தாங்க முயன்று தோற்றான். அதுவரை அங்கே நின்றுக் கொண்டிருந்த பாதுகாவலன் மின்விளக்கை போட்டுவிட்டு அவளுக்கு உதவ எத்தனித்தான். அதற்குள் அர்ஜுன் ஹோத்ராவே அவளை தூக்கி, தோள்களைப் பிடித்து உலுக்கினான்.

“மிருதுளா.. என்ன ஆச்சு உனக்கு? வேக் அப். வேக் அப் டாமிட்” கத்தினான். அவளுடைய கண்கள் விழித்திருந்தன. அவனைத்தான் நோக்கிக் கொண்டிருந்தன. ஆனால் பார்வை இங்கு இல்லை. அது எங்கோ தொலைதூரத்தில் இருந்தது. “இரத்தம்.. என் கையெல்லாம்.. ட்ரெஸ்ஸெல்லாம்.. உடம்பெல்லாம்.. இரத்தம்..” உளறினாள்.

“இரத்தமா! எங்க இருக்கு இரத்தம்! தேர் இஸ் நோ பிளட்.. ஸீ.. கண்ணை திறந்து பாரு. மிருதுளா” உலுக்கினான்.

“இல்ல.. இதோ.. ப்ளீஸ்.. போகமாட்டேங்குது.. இது போகமாட்டேங்குது. ஐயோ! இந்த வாடை, இரத்த வாடை.. இது போகமாட்டேங்குது.. என்கிட்டேருந்து போகமாட்டேங்குது” பதறி துடித்தாள்.

“ஓ மை காட்! மிருதுளா உனக்கு ஒண்ணும் இல்ல. யு ஆர் ஆல்ரைட் பிலீவ் மீ” அவளை தேற்ற முயன்றான். அவனுடைய முயற்சிகளெல்லாம் எதுவும் பலனளிக்கவில்லை. உடல் நடுக்கம் அதிகமானது, மூச்சுவிட சிரமப்பட்டாள், கண்கள் மேல்,நோக்கி சொருகியது.

“ஓ மை காட்! ஜி.. ஷி காட் பேனிக் அட்டாக். பிரீத் பண்ண முடியல. வி நீட் டு கம்போஸ் ஹர்” அவசரமாகக் கூறினான் பாதுகாவலன்.

அவனுக்கும் தெரிந்தது, அவனுடைய ஆட்கள் சிலருக்கு இது போல் ஆகியிருக்கிறது. முதல் முறை கொலை செய்துவிட்டு இப்படித்தான் விசித்திரமாக நடந்துக்கொள்வார்கள்.

“நோ..நோ..நோ.. மிருதுளா டோன்ட் கோ பேனிக். யு ஆர் ஆல்ரைட். லுக் அட் மீ. லுக் அட் மீ மிருதுளா. என்னை பாரு.. காட்! யு லுக் அட் மீ டாமிட்” கத்தினான். ஏன் தனக்கு இத்தனை பதட்டம் என்று அவனுக்கே புரியவில்லை.

மிருதுளா முயன்றாள், நினைவிழக்காமல் இருக்க வெகுவாய் முயற்சி செய்தாள். ஆனாலும் பார்வை மங்கி கொண்டிருந்தது, காது அடைத்துக் கொண்டது. நினைவுகள் நழுவிக் கொண்டிருந்தன.

ஆனால் அவன் விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து அவளை நினைவிழக்கவிடாமல் தடுத்தான். அவளுடைய பார்வை தன்னை நோக்கி மெல்ல திரும்புவதை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் அவளிடம் பேச்சு கொடுத்தான்.

“என்னை தெரியுதா? தெரியுதா? பாரு தெரியுதா? யு ஆர் ஆல்ரைட் ஓகே. காம் டௌன். பிரீத் பண்ணு. நல்லா.. ஆங்.. அப்படிதான். குட் குட்.. எஸ்.. ஸ்லோலி.. எஸ்” அவளை அமைதிப்படுத்த முயன்றான்.

“ரெ..ஹாங்.. ஹாரெ..ங்.. ரெத்..ஹாங்..” வாயாலும் மூக்காலும் காற்றை உள்ளிழுத்து வெளியேற்ற மிகவும் சிரமப்பட்டாள். இடையிடையே, ‘இரத்தம்’ என்னும் வார்த்தையையும் சொல்ல முயன்றாள்.

“ஒன்னும் இல்ல மிருதுளா. யு பிலீவ் மீ ரைட்? ஐம் கோயிங் டு க்ளீன் இட் அப். நீ க்ளீன் ஆகப்போற. இரத்தத்தையெல்லாம் துடைச்சிடலாம் ஓகே” குழந்தைக்கு கூறுவது போல் கூறினான்.

“ரெ..த்.. ஹாங்..தம்.. ரெத்..தம்.. ஹாங்.. ரெ..த்..த..ஹாங்” அவனுடைய வார்த்தைகள் அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.

“கெட் மீ எ வெட் டவல்” கத்தினான். உடனே கபோர்டிலிருந்து ஒரு துண்டை எடுத்து நனைத்து அவனிடம் கொடுத்தான் பாதுகாவலன். அதை வைத்து அவள் கை, முகம், காலெல்லாம் துடைத்துவிட்டு, “யு ஆர் ஓகே நௌ.. ஸீ நோ மோர் பிளட் ரைட்” அவளை நம்பவைக்க முயன்றான்.

மூச்சுவாங்கியபடியே கைகளை திருப்பி திருப்பிப் பார்த்த மிருதுளா வெடித்து அழுதாள். அழுதபடியே அவன் மார்பில் புதைந்துக் கொண்டாள். படபடவென்று துடிக்கும் அவள் இதயத்தின் ஓசையை இவனால் உணர முடித்தது. அவனுக்குள் ஏதோ நழுவியது. பலவீனமானது போல் உணர்ந்தான்.

“தே.. தே..ங்..க்ஸ்” விம்மல்களுக்கிடையே வந்து விழுந்தது அந்த வார்த்தை. சட்டென்று தன் வலிய கரங்களால் அவளை வளைத்து இறுக்கமாக பிடித்துக் கொண்டான். அவளுடைய நடுக்கம் மெல்ல மெல்ல குறைந்தது, மூச்சு சீரானது, கண்கள் மெல்ல மூடியது.

“உஃப்” ரிலாக்ஸாக மூச்சுவிடும் போதுதான் அவனுக்குத் தெரிந்தது, தான் இவ்வளவு நேரமாக மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறோம் என்று. அதுவரை பதட்டத்தின் உச்சத்தில் இருந்தவன் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினான்.

“டாக்டரை கூப்பிடட்டுமா ஜி” என்றான் பாதுகாவலன்.

“நோ நீட்.. லீவ்” (தேவையில்லை.. வெளியேறு) கட்டளையை ஏற்று தலைவணங்கி விடைப்பெற்றான்.

மிருதுளாவை மெல்ல அணைத்தபடியே அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்துவிட்டு விலக முயன்றான். உடனே பதறி எழுந்தவள், “ப்ளீஸ்.. ப்ளீஸ்.. டோன்ட் லீவ்.. ப்ளீஸ் டோன்ட் லீவ் மீ” என்று மிரண்ட விழிகளுடன் கத்தினாள்.

“ஷ்ஷ்ஷ்.. காம் டௌன், காம் டௌன் பேபி. ஐம் நாட் லீவிங். காம் டௌன்” சமாதானம் செய்து படுக்க வைத்தான். அவள் அவனுடைய கோட்டை இருக்கமாகப் பிடித்திருந்தாள். விலகிச் செல்ல முடியாமல் கட்டிலில் அவள் அருகிலேயே அமர்ந்தான். அவள் புருவம் சுருங்கியிருந்தது, மூடிய இமைகளுக்குள் விழிகள் அலைபாய்ந்தன, உதடுகள் இறுகியிருந்தன. உள்ளுக்குள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தது. அந்த போராட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்கிற பேராவல் தனக்குள் எழுவதை ஆச்சரியத்துடன் உணர்ந்தான்.

அவள் தலையை கோதி, புருவத்தை நீவி, “இட்ஸ் ஓகே. ஐம் ஹியர். ரிலாக்ஸ் ஸ்லீப் வெல் பேபி” என்று அவளை அமைதிப்படுத்தினான். மெல்லமெல்ல மிருதுளா ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள். அப்போதும் அவளுடைய கரங்கள் அவன் கோட்டை இறுக்கிப் பிடித்தபடியே இருந்தன.

அவனுடைய பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது. ‘சில மணி நேரங்களுக்கு முன் தன்னுடைய அறையில், கட்டிலுக்கு கீழே ஒளிந்திருந்த அதே பெண்தானா இவள்!’ என்று எண்ணும் அளவிற்கு முற்றிலும் வேறு முகமாய் தெரிந்தது. ‘எத்தனை அழகு!’ வியந்தான். பால்நிலவு போல் பளிச்சென்றிருந்த அந்த முகம் ஏதோ ஒரு விதத்தில் அவனை வெகுவாய் ஈர்த்தது. நேரம் போவது தெரியாமல் தூக்கத்தை துறந்துவிட்டு அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான். எங்கோ திக்குத் தெரியாத திசைக்கு அவனை இழுத்துச் சென்றது அந்த முகம்.

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ, ஒரே நிலையில் அமர்ந்திருந்ததில் கால்கள் மரத்துப் போய்விட்டன. மணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்த்தான். விடிவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் இருந்தன. இவன் எழுந்தால் அவளுடைய தூக்கம் கெடும். அதை செய்ய மனமில்லை. ஓசையெழுப்பாமல் மெல்ல கோட்டை கழட்டி அவள் கையோடு விட்டுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 6

புது இடம் என்பதாலோ என்னவோ இரவு அத்தனை பாடுபட்டும் காலை விரைவாகவே விழித்துவிட்டாள் மிருதுளா. உறக்கம் கலைந்துவிட்டாலும் எழுந்துக்கொள்ள முடியாத அளவிற்கு உடலும், மனமும் சோர்ந்திருந்தது. சிரமப்பட்டு எழுந்தவள் படுக்கையில் கிடந்த அந்தக் கருப்பு கோட்டை கவனித்தாள்.

‘இது யாரோடது! எப்படி இங்க வந்தது!’ குழப்பத்துடன் அதை கையில் எடுத்தாள். இரவு நடந்ததெல்லாம் பனியில் மறைந்த பிம்பம் போல் அரைகுறையாக நினைவிற்கு வந்ததே தவிர கோர்வையாக எதையும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. முயன்று சிந்தனைகளை ஒன்றுதிரட்டி யோசித்தாள். தலை பயங்கரமாக வலித்தது. இரண்டு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு விடாமல் யோசித்தாள்.

அர்ஜுன் ஹோத்ராவின் வரவும் அவனுடைய உதவியும் நினைவிற்கு வந்தது. ஆனால் தனக்கு என்ன ஆயிற்று, ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்றுதான் அவளுக்கு புரியவில்லை. சற்றுநேரம் எதுவுமே செய்ய தோன்றாமல் அமர்ந்திருந்தவள் பிறகு தன்னை மீட்டுக் கொண்டு குளியலறைக்குச் சென்றாள்.

அவள் குளித்துவிட்டு வெளியே வந்த சற்று நேரத்தில் பூஜா அவளைத் தேடி வந்தாள்.

“குட் மார்னிங். நைட் நல்லா தூங்கி எழுந்தியா?” - பூஜா.

வாய் திறந்து பதில் சொல்ல முடியாமல் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் மிருதுளா. வீங்கியிருந்த முகமும் சிவந்திருந்த கண்களும் அவள் இரவெல்லாம் சரியாக உறங்கவில்லை என்பதை காட்டிக் கொடுத்தாலும், அதைப் பற்றி மேலும் குடையாமல், “வா என்கூட” என்று சமையலறைக்கு அழைத்துச் சென்றாள்.

வழியில் தென்பட்ட வேலையாட்களின் பார்வையெல்லாம் மிருதுளாவை துளைத்தது. நேற்று அவள் செய்த ஆர்ப்பாட்டம், இவள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை அவர்களுக்கெல்லாம் தூண்டிவிட்டிருந்தது. சங்கடப்படுத்தும் அந்த பார்வைகளை சகித்துக் கொண்டு பூஜாவை பின்தொடர்ந்து சமயலறைக்கு வந்து சேர்ந்தாள்.

‘அவளை கம்ஃபர்ட் பண்ணு. ஃப்ரீயா மூவ் பண்ண வை. அவ என்ன செய்ய இங்க வந்தாளோ அதை செய்ய வை’ - மிருதுளாவைப் பற்றி பூஜா ரிப்போர்ட் செய்த போது, அர்ஜுன் ஹோத்ரா பூஜாவுக்கு கொடுத்த அடுத்த வேலை இது. அதைதான் இப்போது செயல்படுத்திக் கொண்டிருந்தாள் பூஜா.

“இந்த பொண்ண கிச்சன்ல ஏதாவது உதவிக்கு வச்சுக்கோங்க மாஸ்ட்டர்” - தலைமை சமையல்காரரிடம் கூறினாள்.

‘என்ன!’ திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மிருதுளா. ‘நா எப்போ இங்க வேலை கேட்டேன். அதுவும் சமையல் வேலை!’ அவள் மறுத்து எதுவும் பேசுவதற்குள் மாஸ்ட்டர் தன் மறுப்பை கூறினார்.

“இங்க தேவையான அளவுக்கு ஆளுங்க இருக்கங்கமா. வேற பக்கம் ஏதாவது பாருங்க” முகத்தை திருப்பிக் கொண்டார். மிருதுளாவிற்கு இங்கு வேலை பார்ப்பதில் துளியும் விருப்பம் இல்லை என்றாலும் அந்த மனிதர் அவளை நிராகரித்த விதம் அவளை அவமதித்தது. எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் உதட்டை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.

பூஜா தன்னுடைய அடுத்த முயற்சியை செய்தாள். “சரி அப்போ ஹவுஸ் கீப்பிங்ல சேர்த்துக்கோங்க” வீட்டை பராமரிக்கும் குழுவின் தலைமை பொறுப்பாளி பானுவிடம் கூறினாள்.

“முடியாது முடியாது. இந்த பொண்ணு சரியில்ல. எங்க ஆளுங்க வீடு முழுக்க போவாங்க வருவாங்க. இவ ஏதாவது தப்பு பண்ணிட்டான்னா நா பதில் சொல்லனும். எனக்கு அந்த தலைவலி வேண்டாம். வேணுன்னா தோட்ட வேலை செய்ய அனுப்புங்க. அதுதான் வீட்டுக்கு வெளியே இருக்க வேலை. பிரச்சனை கம்மியாகும்” - கராறாகக் கூறினாள்.

அதே சமயம், “வாட்ஸ் த மேட்டர்?” ன்கிற கணீர்குரல் அவர்களுடைய விவாதத்தில் குறுக்கிட்டது.

*******************

அர்ஜுன் ஹோத்ராவின் தூக்கம் கோழி தூக்கம் தான். இரவெல்லாம் மிருதுளாவின் அறையில் விழித்திருந்துவிட்டு அதிகாலையில் வந்து படுத்தவன், ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் எழுந்துவிட்டான். இது அவனுக்கு பழக்கமான ஒன்றுதான். எனவே சிவந்திருந்த கண்களைத் தவிர வேறெந்த மாற்றமும் இல்லை அவனிடம்.

காலைக்கடன்களை முடித்துவிட்டு டிராக் சூட்டை அணிந்துக் கொண்டு உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றான். அங்கே அவனுக்காக சுஜித், மாலிக் மற்றும் டேவிட் மூவரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

“ஹூ இஸ் மை பார்ட்னர் டுடே” (இன்னைக்கு யாரு என்னோட பங்காளி?) - உற்சாகமாக பாக்ஸிங் ரிங்கில் இறங்கினான்.

மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “ஐம் ரெடி” - வார்ம் அப் செய்து கொண்டே ரிங்கில் எகிறி குதித்தான் டேவிட். இருவரும் காட்டுமிருகம் போல் மோதிக் கொண்டார்கள். இது வெறும் பயிற்சியா அல்லது போட்டியா என்று காண்போரை சிந்திக்க வைக்கும் அளவிற்கு இருந்தது அவர்களுடைய மோதல்.

இருபெரும் மலைகள் மோதிக்கொள்ளும் அந்த அற்புத காட்சியை உற்சாகத்துடன் பார்த்து ரசித்தார்கள் மற்ற இருவரும். தலைவன் என்கிற பாரபட்சமில்லாமல் கடுமையாக போரிட்டான் டேவிட். ஒரு முறையாவது அவனை வென்றுவிட வேண்டும் என்கிற ஆசை அவனுக்குள் இருப்பதை காண முடிந்தது.

பயிற்சியின் ஊடே, “பட்டேல் எப்படி இருக்கான்?” என்று கேட்டபடி அவன் முகத்தை குறிவைத்தான் அர்ஜுன் ஹோத்ரா.

அவனிடமிருந்து லாவகமாக தப்பித்தபடி, “உயிரோட இருக்கான்” என்று எள்ளலாக பதில் கூறினான் டேவிட்.

“இருக்கனும்.. எனக்கு தேவையான இன்ஃபர்மேஷனை கொடுக்கறவரைக்கும் அவன் உயிரோடுதான் இருக்கனும்” என்றபடி மீண்டும் ஒரு கையால் அவன் முகத்தை குறிவைத்து மறு கையால் விலாவை தாக்கி நாக் அவுட் செய்து, ‘அவன் சாக வேண்டிய நேரத்தை நான் முடிவு செய்வேன்’ என்று சொல்லாமல் சொன்னான்.

மூன்று மணி நேர தொடர்பயிற்சிக்கு பிறகு தன்னுடைய அறைக்கு வந்து குளித்து உடைமாற்றி கீழே வர தயாரானான். தொழில் சம்மந்தப்பட்ட பல விஷயங்களை சிந்தித்தபடி கீழே இறங்கியவன் கடைசி படியில் கால் வைக்கும் போது அவனுக்குள் ஒரு விசித்திர உணர்வு தோன்றியது.

‘அவள் இங்குதான் இருக்கிறாள்’ என்பது போன்றதொரு உணர்வு. காலை எழுந்ததிலிருந்து அவளைப் பற்றி அவன் யோசிக்கவே இல்லை. ஆனால் இப்போது! ஏன் இப்படி தோன்றுகிறது! அவனுக்கு புரியவில்லை. தலையை உலுக்கி சிந்தனையை திசை திருப்பியபடி உணவு கூடத்திற்குள் செல்ல எத்தனித்தவன் திகைத்தான். அவள் அங்கேதான் இருந்தாள்.

மிருதுளா, அவளைப் பார்த்த கணத்தில் அவனுக்குள் ஓர் தவிர்க்க முடியாத உற்சாகம் தோன்றியது. அதற்கு காரணமெல்லாம் தெரியாது. தோன்றியது அவ்வளவுதான்.

அவள் மீது பார்வையை பதித்தபடியே உணவு கூடத்திற்குள் நுழைந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். சமையலறை நுழைவாயில் பகுதியில் நின்றுக் கொண்டிருந்த, அவளுடைய பக்கவாட்டு உருவம் அவனுடைய கவனத்தை முழுமையாக இழுத்துப் பிடித்திருந்தது. தலையை உயர்த்தி சீவி குதிரைவால் போட்டிருந்தாள். வேலையாட்களுக்கான சீருடை அவளுக்கு கச்சிதமாய் பொருந்தியிருந்தது. வளர்ந்த உருவமும் மெலிந்த தேகமுமாக செதுக்கி வைத்த சிற்பம் போல் அழகாக இருந்தாள். தன்னை மறந்து மனுவர்தனின் கண்கள் அவளை அளந்துக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் அவன் ரசனையில் குறுக்கிட்டது.

“முடியாது முடியாது. இந்த பொண்ணு சரியில்ல. எங்க ஆளுங்க வீடு முழுக்க போவாங்க வருவாங்க. இவ ஏதாவது தப்பு பண்ணிட்டான்னா நா பதில் சொல்லனும். எனக்கு அந்த தலைவலி வேண்டாம். வேணுன்னா தோட்ட வேலை செய்ய அனுப்புங்க. அதுதான் வீட்டுக்கு வெளியே இருக்க வேலை. பிரச்சனை கம்மியாகும்” - அர்ஜுன் ஹோத்ராவின் முகம் கடுத்தது.

“வாட்ஸ் த மேட்டர்?” என்றான் கடுமையாக.

திடுக்கிட்டுக் குலுக்கினாள் மிருதுளா. குரல் வந்த பக்கம் திரும்பாமல் மெல்ல பூஜாவிற்கு பின்னால் பதுங்கினாள். அவளுக்குப் புரிந்தது. இது அவனுடைய குரல். நேற்று அவள் நடந்துக்கொண்ட விதத்திற்கு இப்போது எப்படி அவனை எதிர்கொள்வது! சங்கடத்துடன் மறைந்து நின்றாள். அவளுடைய ஒதுக்கம் அவனுக்கு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.

முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் எழுந்துச் சென்றான். அவன் அருகில் நெருங்கி வரவர அவளிடம் ஓர் இறுக்கம் உண்டானது. அதை அவனால் உணர முடிந்தது. அவன் புருவங்கள் நெரிந்தன.

மிருதுளாவின் கண்கள் மெல்ல உயர்ந்தன. பளபளக்கும் ஷூ, கருப்பு பேண்ட் அணிந்த நீண்ட கால்கள், அதே நிறத்தில் அவனுடைய இறுகிய தேகத்தில் கச்சிதமாய் பொருந்தியிருந்த கோட், ஆஜானுபாகுவான உருவம், இறுக்கமான முகம், அதில் அந்த கண்கள்.. பார்வையால் அவளை கூறுபோடும் கத்திக் கண்கள். சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள். உள்ளே தடதடவென்று ஆடியது. வியர்வை முத்துக்கள் அரும்பின. பதட்டம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. தன்னுடைய அருகாமை அவளை பாதிக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது. இறுக்கம் சற்று தளர்ந்து,

“ஐ ஆஸ்க்ட் யு சம்திங்” என்று பூஜாவிடம் புருவம் உயர்த்தினான்.

“புது பொண்ணு.. ஹவுஸ் கீப்பிங்ல.. எதுக்கு ரிஸ்குன்னு?” - பானு இழுத்தாள்.

“ஷட்” என்று சீரியவன், அவளை வெறித்துப் பார்த்து “நன் ஆஃப் யுவர் பிசினஸ்” என்றான் அழுத்தமாக. அவன் சற்றும் குரலை உயர்த்தவில்லை. ஆனால் அவனுடைய முகமாற்றமும் தீவிரமான பார்வையும் அவளை வாயடைக்கச் செய்தது.

“சாரி சார்” என்று முணுமுணுத்தபடி கீழே குனிந்துக் கொண்டாள். இப்போது அவனுடைய பார்வை பூஜாவின் பக்கம் திரும்பியது.

“ஷி நீட்ஸ் டு மிங்கில் வித் பீப்பிள்” (இவ மத்தவங்களோட பழகனும்) - பூஜா.

“தென் மேக் இட் ஹேப்பன்” (அப்போ அதை நடைமுறைப்படுத்து) என்று பூஜாவிடம் கூறிவிட்டு பானுவின் பக்கம் திரும்பி, “மிருதுளா இங்கதான் ஒர்க் பண்ணறா.. உன்கூட..” என்றான்.

“எஸ் சார்” தலையை மேலும் கீழும் ஆட்டினாள் பானு.

எதுவும் பேசமுடியாமல் இறுகிப் போய் நின்ற மிருதுளாவை பார்த்து, “மீட் மீ இன் மை ஆபீஸ் அட் 10 am ஷார்ப்” (பத்து மணிக்கு என்னை ஆபீஸ்ல வந்து பாரு) என்றான். அவன் முகத்தில் உணர்வுகள் ஏதும் இல்லை. ஆனால் தொனி உத்தரவிட்டது.

மிருதுளாவின் தன்மானம் வெடுக்கென்று மேலெழுந்தது. சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். கூர்மையான அவனுடைய பார்வை அவளை ஊடுருவியது. முகம் கன்றி சிவக்க, கைவிரல் நகங்கள் உள்ளங்கையில் பதிய, உதடுகளை அழுந்த மூடிக் கொண்டு ஆமோதிப்பாக தலையசைத்தாள். அமைதியாக அங்கிருந்து சென்றான் அர்ஜுன் ஹோத்ரா.

“எனக்கு இங்க வேலை பார்க்க விருப்பம் இல்ல. நா போகனும்” - அர்ஜுன் அகன்றதும் பூஜாவிடம் முறையிட்டாள் மிருதுளா.

“எங்க போகனும்?” - பூஜா.

“எங்கிருந்து வந்தேனோ அங்க” - பொறுமையிழந்து குரலை உயர்த்தினாள்.

“அங்க பாதுகாப்பு இல்லாம தானே ஓடி வந்த? திரும்ப அங்கேயே போகனும்னு சொல்ற?” - பூஜாவின் கண்கள் இடுங்கின.

“ஓ காட்! அதுக்காக நா இங்கேயே இருக்க முடியுமா? திஸ் இஸ் நாட் மை ப்ளேஸ். ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்.”

“ஐம் சாரி மிருதுளா. இது என்னுடைய முடிவு இல்ல.” - உதட்டைப் பிதுக்கினாள் பூஜா.

மிருதுளாவின் கண்கள் கலங்கின. பூஜாவுக்கு சங்கடமாக இருந்தது. அவளை சந்தேகத்திற்கு இடமானவள் என்று எண்ணவே இயலவில்லை. ஆனால் சூழ்நிலைகள் அனைத்தும் அவளுக்கு எதிராகவே இருக்கும் போது, உள்ளுணர்வுக்கு எல்லாம் மதிப்பளிக்க முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் அவள் வேலை செய்யவில்லை. எனவே சற்று இளகிய மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, “இட்ஸ் ஓகே. எல்லாம் சரியாயிடும். இட்ஸ் கோனா பி ஆல்ரைட்” என்றாள் அவளுக்கு ஆறுதலளிக்கும் விதமாக.

மிருதுளா மறுப்பாக தலையசைத்தாள். “இல்ல, எதுவும் சரியாகப் போறதில்ல” என்றாள். கண்களில் கண்ணீர் வடிந்தது. அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது பூஜாவுக்கு. அவளுடைய கண்ணீரை ஒதுக்க முடியவில்லை. தன்னுடைய கட்டுப்பாட்டையும் மீறி அந்த ஆலோசனையைக் கூறினாள்.

“அர்ஜுன்கிட்ட பேசிப்பாரு. ஹி மே பிலீவ் யு.”
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 7

அந்த அறையில் பெரிதாக எந்த ஆடம்பரமும் இல்லை. ஒரு பெரிய கண்ணாடி மேஜையும், சில நாற்காலிகளும், ஒரு தொலைபேசி இணைப்பும் மட்டுமே அந்த அறையில் அவள் கண்ட பொருட்கள். முதன்மை நாற்காலியில் அமர்ந்திருந்த அர்ஜுன் ஹோத்ரா கோட் சூட் அணிந்து பக்கா ப்ரொஃபஷனல் லுக்கில் இருந்தான். அவன் மட்டும் அல்ல, அவனை சுற்றியிருக்கும் அனைவருமே அப்படித்தான் இருக்கிறார்கள். கூடவே துப்பாக்கியையும் வைத்திருக்கிறார்கள். ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்’ அவள் முகம் கோணியது.

அர்ஜுன் ஹோத்ரா தன்னை அலுவலகத்திற்கு வந்து சந்திக்கும்படி கூறியதும், எஸ்டேட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கும், முடிந்தால் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடலாம் என்றெல்லாம் எண்ணியிருந்தாள் மிருதுளா. ஆனால் அதே மாளிகையில் இருக்கும் ஒரு அறைதான் அவனுடைய அலுவலகம் என்று தெரிந்த போது அவளுடைய மனக்கோட்டை நொறுங்கி தரைமட்டமாகிவிட்டது. விதியை நொந்துக்கொண்டு அமைதியாக நின்றாள்.

“ஹௌ ஆர் யு ஃபீலிங் நௌ?” - ஆழ்ந்த அவன் குரல் அவள் சிந்தனையில் குறுக்கிட்டது.

“ஐம்.. ஐம் ஓகே” - தடுமாற்றத்துடன் பதில் கூறினாள்.

“நேத்து நைட் என்ன நடந்ததுன்னு நியாபகம் இருக்கா?” மிருதுளாவை துளைத்தது அவன் பார்வை. அவள் சங்கடத்துடன் தலை குனிந்தாள்.

“சோ.. உனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு” அவளால் அவன் கண்களை சந்திக்க முடியவில்லை.

“லுக் அட் மீ மிருதுளா” அமைதியாகத்தான் கூறினான். ஆனால் அவளால் அந்த குரலை உதாசீனம் செய்ய முடியவில்லை. மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.

“எக்ஸ்ப்ளைன்” - உத்தரவிட்டான்.

அவள் என்ன அவனுடைய அடிமையா.. உத்தரவிடுவதற்கு! எரிச்சல் வந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள். கொலைக்கே அஞ்சாதவன்.. இவனிடம் பண்பை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். “இட் வாஸ் ஜஸ்ட் எ நைட்மேர்” (அது ஒரு கெட்ட கனவு அவ்வளவுதான்) என்றாள். அர்ஜுன் ஹோத்ராவின் தாடை இறுகியது.

“பொய் எனக்குப் பிடிக்காது.. ஐ ஹேட் தட்” - அவன் குரல் அவளை எச்சரித்தது.

மிருதுளாவின் முகம் சட்டென்று சூடாகி சிவந்தது. கண்டுப்பிடித்துவிட்டானா! அந்தக் கொலையை பார்த்தது நாம்தான் என்று தெரிந்துவிட்டதா! நேற்று இரவு எதையோ உளறிவிட்டோமோ! - இதயத்துடிப்பு அதிகரித்தது. உலர்ந்துபோன உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, “இல்ல.. ஐம்.. ஐம் நாட்..” என்று ஏதோ சமாளிக்க முயன்றவளை இடைமறித்துப் பேசினான் அர்ஜுன் ஹோத்ரா.

“நேத்து நைட் உனக்கு பேனிக் அட்டாக் ஆச்சு. உன் மேல ப்ளட் இருக்கறதா ஹாலுசினேஷன்ல கண்ட்ரோல் இல்லாம கத்தின. அழுத.. யு ஜஸ்ட் லாஸ்ட் ஸம்வேர் விச் இஸ் நாட் ஜஸ்ட் எ நைட்மேர்” - அழுத்தமாகக் கூறினான்.

மிருதுளாவின் முகத்தில் அதீத பயம் தோன்றியது. அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது. அவள் முகத்தையே சற்று நேரம் ஆழ்ந்து பார்த்த அர்ஜுன் ஹோத்ரா, “மிருதுளா! நீ ஏதாவது கொலையை நேர்ல பார்த்தியா?” என்றான் அமைதியாக.

சட்டென்று பதட்டத்தின் உச்சத்திற்குச் சென்றாள் மிருதுளா. மாரடைப்பே வந்துவிடும் அளவிற்கு இதயம் தாறுமாறாகத் துடித்தது. ‘ஆமாம்.. என் கண்ணு முன்னாடி ஒருத்தன் சாகறதை பார்த்தேன். நீதான்.. உன்னோட ஆளுங்கதான் அவனை கொன்னாங்க.. யு ஆர் எ கில்லர்.. யு ஆர் எ கல்ப்ரிட்’ - அலறியது அவள் உள்ளம். ஆனால் வெளிப்படுத்தும் தைரியம் இல்லை.

“ஆன்சர் மீ மிருதுளா” - கண்டிப்புடன் கூறினான்.

மிருதுளா தலையை இடமும் வலமுமாக ஆட்டினாள். “நோ.. நா எந்த கொலையையும் பார்க்கல” என்று மெல்ல முணுமுணுத்தாள். அர்ஜுன் ஹோத்ராவின் முகம் கடுமையாக மாறியது. சீற்றத்துடன் சேரை பின்னுக்குத் தள்ளிவிட்டு எழுந்து,

“அப்போ.. யாரையாவது கொலை பண்ணிட்டியா? கொலை பண்ணிட்டுதான் என்னோட கார்ல ஏறி தப்பிச்சு வந்தியா? ஆர் யு எ ப்ளடி கில்லர்?” என்று கத்தினான்.

“நோ” - அவனுடைய சீற்றத்தை மீறி ஓங்கி ஒலித்தது மிருதுளாவின் குரல். அவனுடைய பார்வை அவள் முகத்தை அலசியது. “நோ.. நோ..” - மேலும் மேலும் மறுத்தாள். உதடுகள் துடித்தன, கண்ணீர் கொட்டியது.

“மிருதுளா.. யு வேர் ஹாலுசினேட்டிங் அபௌட் ப்ளட் ஆன் யு. சோ.. ஒன்னு நீ யாரையாவது கொலை பண்ணியிருக்கனும்.. இல்ல.. கொலையை நேர்ல பார்த்திருக்கனும். எது உண்மை?” - அழுத்திக் கேட்டான். அவனுக்கு நிச்சயமாகத் தெரியும், இவள் எதையோ மறைக்கிறாள் என்று.

“ப்ளீஸ்.. நா எந்த கொலையையும் பார்க்கல, யாரையும் கொலை பண்ணல. அது ஜஸ்ட் ஒரு கனவு, கெட்ட கனவு.. அவ்வளவுதான். ப்ளீஸ் சார்.. ப்ளீஸ்.. பிலீவ் மீ” - பரிதாபமாகக் கெஞ்சினாள்.

அதற்கு மேல் அவனால் அவளை கட்டாயப்படுத்த முடியவில்லை. அந்தக் கண்ணீரும், அழுகையும் அவனை கட்டுப்படுத்தியது. கோவமும் விரக்தியுமாக தலையை அழுந்தக் கோதி கண்களை இறுக்கமாக மூடி ஆழ மூச்செடுத்தான். பிறகு, “நீ பார்க்க ரொம்ப சாஃப்ட்டா, இன்னோசென்ட்டா இருக்க.. பட் யு ஆர் சோ ஸ்டபர்ன் டாமிட்.. ஜஸ்ட் ஸ்டபர்ன்” என்று பல்லை கடித்தான்.

மிருதுளா எதுவும் பேசவில்லை. அவளுடைய கண்ணீரும் நிற்கவில்லை. ஓரிரு நிமிடங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் மெல்ல இலகுவானது. கண்களில் இருந்த கோபம் மறைந்தது. “மிருதுளா.. என்னை நம்பு. ஐ கேன் ப்ரொடெக்ட் யு. ஐ கேன் சேவ் யு. நீ என்ன பண்ணியிருந்தாலும், ஜஸ்ட் பிலீவ் மீ பேபி” என்றான் உருக்கமாக.. நெருக்கமாக.. மிருதுளாவின் கண்கள் வியப்பில் விரிந்தன. அவன் குரல்! அவன் கண்கள்! காட்! - இப்போது வேறு விதமான பயம் அவளுக்குள் உண்டானது. ஏதோ திக்குத் தெரியாத காட்டில் தொலைந்து போவது போன்றதொரு உணர்வு.. கடவுளே! - கண்களை மூடிக் கொண்டாள்.

அப்போதுதான் அவனுக்கே அது புரிந்தது. அவள் பிடிவாதமாக இருக்கிறாள். அவன் அவளுக்கு தகுந்தாற் போல் வளைந்துக் கொண்டிருக்கிறான். ‘இவள் நம்மை பலவீனமாக்குகிறாள்!’ - உண்மை உச்சந்தலையில் அறைந்தது. தன் மீதே கோபம் எழுந்தது. இறுகிப்போய் நின்றான்.

மிருதுளா மெல்ல கண்களைத் திறந்தாள். “ஐ வாண்ட் டு லீவ் திஸ் ஹவுஸ்” (நா இந்த மாளிகையைவிட்டு போகனும்) - மெல்ல முணுமுணுத்தாள்.

“ஓ! வாட் யு திங்க் அபௌட் திஸ் பில்டிங்?”

“காடு.. நரகம்..’ - மனதில் தோன்றியதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. “எதுவும் இல்ல.. இந்த இடத்தை பற்றி நா என்ன நினைக்கறது? எனக்கு என்ன தெரியும்?” என்றாள். அவன் பார்வை அவள் முகத்திலிருந்து மீளவில்லை.

“ஓகே. கம் வித் மீ” - அவளை அந்த மாளிகையின் மற்றொரு பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே வேலைக்காரர்களின் நடமாட்டம் இல்லாததை கவனித்துவிட்டு தயங்கியவள், “எங்க போறோம்?” என்றாள் பயத்துடன்.

“பார்க்கத்தானே போற?” - அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று மிருதுளாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. இருவரும் ஒரு அறைக்கு எதிரில் வந்து நின்றார்கள். அவள் முகத்தைப் பார்த்தபடியே அந்த கனமான கதவை திறந்தான் அர்ஜுன் ஹோத்ரா. மிருதுளாவின் உடல் விறைத்து நிமிர்ந்தது.

“விம்ப்.. ஆ.. விம்ப்.. ஆ.. விம்ப்.. ஆஆஆ..” – ‘என்ன சத்தம் இது! யார் யாரை அடிக்கிறார்கள்!’ - அடிவயிறு தடதடக்க மிரட்சியுடன் அர்ஜுன் ஹோத்ராவை பார்த்தாள்.

அவளுடைய பயத்தை நிதானமாக உள்வாங்கியபடி அதே அறையில் இருந்த இன்னொரு கதவை லேசாக தட்டினான். முக உயரத்தில் இருந்த ஜன்னல் ஒன்றை உள்ளேயிருந்து ஒருவன் திறந்தான். அப்போதுதான் அந்த கோர காட்சி அவள் கண்ணில் பட்டது.

ஆடைகள் முற்றிலும் களையப்பட்ட மனிதன் ஒருவனை மேஜையில் குப்புறக் கட்டிவைத்து சவுக்கடி கொடுத்து தோலை உரித்துக் கொண்டிருந்தான் ஒருவன். இரத்தம் தெரிக்க தெரிக்க வலி தாங்காமல் அலறிக் கொண்டிருந்தான் அந்த மனிதன்.

மிருதுளாவிற்கு உயிர்வரை வலித்தது. உடல் வெடவெடவென்று நடுங்கியது. மூச்சுக் குழலுக்குள் ஏதோ அடைத்தது. இதையெல்லாம் பார்க்கும் சக்தி அவளுக்கில்லை. சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“கீப் வாட்சிங்..” – (தொடர்ந்து பாரு) - சாதாரணமாக சொன்னான் அர்ஜுன் ஹோத்ரா. தொனி கட்டளையிட்டது.

“வாட்!” - அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா. இறுக்கமான அந்த முகம் அவளை அச்சுறுத்தியது.

இந்த பயத்தை தான் அவன் எதிர்பார்த்தான். ‘திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்திருக்கிறாள். கொலையோடு சம்மந்தப்பட்டிருக்கிறாள். என்னவென்று கேட்டால் கெட்ட கனவாம்.. டாமிட்!’ - பற்களை நறநறத்தபடி,

“பாரு..” என்று மீண்டும் வலியுறுத்திவிட்டு அவளை வெறித்துப் பார்த்தபடியே நின்றான்.

‘அந்த பார்வை! அந்த குரல்!’ அடிநாதம் வரை வறண்டு போனது அவளுக்கு. வேறு வழியில்லை.. - வெளிறிப்போன முகத்துடன் மீண்டும் ஜன்னல் பக்கம் பார்வையை செலுத்தினாள்.

‘இப்படி கட்டி வைத்து அடிக்கிறார்களே! வலி தாங்காமல் அந்த ஜீவன் துடிக்கிறதே! கடவுளே!’ - மிருதுளாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. தன்னிச்சையாய் வாய், “டார்..ச்..ச..ர்” என்று முணுமுணுத்தது.

‘ஹா..’ - அவன் முக்கத்தில் ஒரு கோணல் புன்னகை தோன்றியது.

“இது டார்ச்சர் இல்ல. பனிஷ்மென்ட். சம்திங் டிஃப்ரெண்ட். யு மே அண்டர்ஸ்டாண்ட் சூன்” (இது சித்ரவதை இல்ல. தண்டனை. இது வேற. நீயும் சீக்கிரம் புரிஞ்சுக்குவ” - நிதானமாகக் கூறினான்.

மிருதுளாவின் கண்கள் விரிந்தன. முகம் இரத்தப்பசையின்றி வெளிறிப் போய்விட்டது. கலவரத்துடன் அவனை ஏறிட்டாள். உள்ளே தடதடத்தது. அதை கட்டுப்படுத்த கைகளை நெஞ்சுக்கு குறுக்கே இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.

‘சீக்கிரம் புரிஞ்சுக்குவ என்றால்! உனக்கும் இது போல் நடக்கலாம் என்று சொல்கிறானா! அப்படித்தான் சொன்னானா!’ - அவன் சொன்னதை அவளால் உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உள்ளே குளிர்பிறந்தது.

அதோடு, ‘அந்த சத்தம்! இரத்தம்! அலறல்!’ - நிற்க முடியாமல் கால்கள் துவண்டன. உள்ளே அவனுக்கு விழும் ஒவ்வொரு அடியும் தனக்கு விழுவது போலவே உணர்ந்தாள். ஒவ்வொரு ‘விம்ப்’ சத்தத்திற்கும் அவள் உடல் தூக்கிப் போட்டது.

அவளை இதே நிலையில் இன்னும் சற்று நேரம் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அர்ஜுன் ஹோத்ராவின் விருப்பம். ஆனால் ஒவ்வொருமுறை அவள் உடல் அதிரும் பொழுதும் இவனுக்குள் தோன்றிய ஏதோ ஒரு பெயர் தெரியாத உணர்வு, அவனை தன் விருப்பத்திற்கு எதிராக செயல்படச் செய்தது.

“கம்” - சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். வெளியே வந்தும் அந்த சத்தம் அவள் செவிகளில் எதிரொலித்துக் கொண்டேதான் இருந்தது. நடக்க முடியாமல் கால்கள் பின்னின.

“ஆர் யு ஆல்ரைட்?” - இறங்கிய குரலில் கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. சொல்லும் நிலையில் அவள் இல்லை. சீரற்ற மூச்சும் தாறுமாறாக துடித்த இதயமும் அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தது.

அர்ஜுன் ஹோத்ராவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ‘ஏன் இவ்வளவு வீக்கா இருக்கா!’ - வருந்தினான்.

அதன்பிறகு எதுவுமே பேசாமல் அவளை மாளிகையின் முன் பக்கத்திற்கு அழைத்து வந்து, “உட்கார்” என்று சோபாவில் அமரச் சொன்னான்.

சமையலறைக்கு அழைத்து காபி கொண்டுவர சொல்லிவிட்டு அவளுக்கு அருகில் அமர்ந்தான். அவன்தான் அவளை அச்சுறுத்தினான். விரும்பித்தான் அதை செய்தான். ஆனால் இப்போது அவளை தேற்ற வேண்டும் என்கிற உந்துதலை அவனால் புறக்கணிக்க முடியவில்லை.

“ம்கூம்.. ரிலாக்ஸ்.. ஜஸ்ட் ரிலாக்ஸ். யு ஆர் ஆல்ரைட் ஓகே.. நோ ஒன் கேன் டச் யு ஹியர். யு ஆர் ஸேஃப்” (உனக்கு ஒன்னும் இல்ல.. இங்க யாராலயும் உன்ன தொட முடியாது. நீ பாதுகாப்பா இருக்க) - தைரியம் கொடுக்க முயன்றான். அவளிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை.

அர்ஜுன் ஹோத்ராவின் உதடுகள் அழுந்த மூடின. ‘ஷி இஸ் நாட் எ இன்ட்ரூடர். கண்டிப்பா இவ பயிற்சி எடுத்த பொண்ணு இல்ல. இன்னொசென்ட்தான்.’ அவள் இந்த இடத்திற்கு வந்த விதம் சந்தேகத்திற்கு உரியது. அவள் கூறும் காரணங்களில் பொய்கள் கலந்திருக்கிறது. பூஜாவின் ரிப்போர்ட் அவளுக்கு எதிராக இருக்கிறது. இத்தனை இருந்தும் அவன் மனம் அவளுக்கு சாதகமாகவே சிந்தித்தது. கண்களை மூடி ஆழ மூச்செடுத்து தன் முட்டாள்தனமான சிந்தனையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.

‘வாட்எவர்..’ - தலையை உலுக்கிவிட்டு கண்திறந்தான். வேலைக்காரர் காபி ட்ரேயோடு நின்றுக் கொண்டிருந்தார். காபி கப்பை எடுத்து, “ம்ம்ம்.. குடி. யு வில் ஃபீல் பெட்டர்” என்று அவளிடம் நீட்டினான்.

அவள் கப்பை வாங்க எத்தனித்தபோது, சட்டென்று ஏதோ தோன்ற கைகளை பின்னால் இழுத்துக் கொண்டான். மிருதுளா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

நடுங்கிக் கொண்டிருக்கும் அவள் கைகளைப் பார்த்து, “இட்ஸ் ஹாட். கேர்ஃபுல் ஓகே” என்றான். அவனுடைய எச்சரிப்பில் இருந்த அக்கறை அவள் கவனத்தில் பதிந்தது. ‘சரி’ என்பது போல் தலையசைத்துவிட்டு கப்பை வாங்கிக் கொண்டாள்.

அவள் குடித்து முடிக்கும்வரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், அதன் பிறகு பூஜாவை அழைத்து, “மிருதுளாவை ரூம்க்கு கூட்டிட்டு போ” என்றான்.

மிருதுளாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் பூஜா. பத்தடி எடுத்து வைத்திருக்க மாட்டார்கள்.

“பூஜா” - அவன் குரல் இடையிட்டது.

“எஸ் அர்ஜுன்” - நின்று திரும்பிப் பார்த்தாள் பூஜா.

“ஷி இஸ் லிட்டில் வீக். ஸ்டே வித் ஹர்” - உணர்வுகளற்ற குரலில்தான் கூறினான். ஆனால் பூஜாவின் புருவம் மேலேறியது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 8

“ஐம் சாரி மாலிக். நா இங்க இருந்தாகனும். இல்லைன்னா அர்ஜுனை என்னால ஃபேஸ் பண்ண முடியாது” - பூஜா.

“அர்ஜூன்கிட்ட நா பேசிக்கறேன். நீ இப்போ அந்த நாலு ஏஜென்ட்ஸோட மென்டல் ஸ்ட்ரென்த்தை மட்டும் செக் பண்ணி ரிப்போர்ட் கொடு போதும். இது ப்ரிஜிபூர்லிருந்து வந்த ஆர்டர். வி கான்ட் ஸ்கிப் இட். அதோட சுக்லாஜிக்கு உன் மேல ரொம்ப நம்பிக்கை. யோசிக்காத” - அவளை வற்புறுத்தினான் மாலிக்.

ஓரிரு நிமிடங்கள் யோசித்த பூஜா, “சரி.. பத்து நிமிஷத்துல வர்றேன்” என்று ஒப்புக்கொண்டுவிட்டு மிருதுளாவைப் பார்த்தாள்.

ஜன்னலோரம் நின்று எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் கலங்கிப் போயிருக்கிறாள் என்பது பூஜாவிற்குப் புரிந்தது. அதனால்தான் அர்ஜுன் தன்னை உடனிருக்கும்படி கூறியிருக்கிறான் என்பதையும் ஊகித்துக் கொண்டாள். ஆனால் இப்போது அவளால் அவனுடைய வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது. மாற்று ஏற்பாட்டைத்தான் செய்ய வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு, சுமன் நினைவிற்கு வந்தாள். அடுத்த சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் உடனே சுமனை அழைத்து மிருதுளாவிற்கு துணையாக வைத்துவிட்டு புறப்பட்டுவிட்டாள்.

சுமன் மிருதுளாவின் வயதை ஒத்தவளாகவே இருந்தாள். பார்க்க சற்று துடிப்பான பெண்ணாகத் தெரிந்தாள். மிருதுளாவைப் பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்தாள்.

“என்ன ஆச்சு? ஏன் மிரண்டு போயிருக்க? எதையாவது பார்த்து பயந்துட்டியா? இங்க அப்படித்தான். அடிக்கடி ஹண்டிங் நடக்கும். அதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத. இங்க யாரும் அப்பாவி கிடையாது. இந்த இடம் அதுமாதிரி” என்று எதிரிலிருப்பவளின் மனதில் இருப்பதை படித்தவள் போல் படபடவென்று பேசினாள்.

அவளுடைய பேச்சு மிருதுளாவின் கவனத்தை சட்டென்று ஈர்த்தது. “ஹண்டிங்ன்னா? இது என்ன காடா?” - மறைக்க இயலா கோபத்துடன் வெடுவெடுத்தாள்.

அவளுடைய கோபத்தை சுமன் பொருட்படுத்தவில்லை. “கிட்டத்தட்ட அப்படித்தான். இங்க சிங்கம், புலி, கரடியிலிருந்து நரி வரைக்கும் நிறைய அனிமல்ஸ் இருக்கு. அப்பப்போ உன்ன மாதிரி முயல்குட்டிங்க கூட வந்து மாட்டிக்கும்” என்று சிரித்தாள்.

தன் வகுப்பு தோழிகளைப் நினைவுபடுத்தும் அந்தப் பெண் மீது மிருதுளாவின் பார்வை சுவாரஸ்யமாகப் படிந்தது.

“நீ எப்படி இங்க வந்த?”

“புரியல?”

“இந்த காட்டுல நீ எப்படி?”

“ஓ! அதை கேட்கறியா? என்னோட அப்பா இங்கதான் நரியா.. ஐ மீன் கோர்த்தாவுக்கு உளவாளியா வேலை செய்தாரு. ஒரு அசைன்மென்ட்ல மேல போய்ட்டாரு. அப்புறம் நா கோர்த்தா ஸ்காலர்ஷிப்ல தான் படிச்சேன். அப்புறம் இங்கேயே நெருப்பு கோழியா ஜாயின் பண்ணிட்டேன்.”

“நெருப்பு கோழி! வாட் இஸ் தட்?”

“ஃபயர்வால் செக்யூரிட்டி அனலிஸ்ட்.”

“வாட்!” - வியப்புடன் அவளைப் பார்த்தாள் மிருதுளா.

“ஏன், என்னை பார்த்தா அனலிஸ்ட் மாதிரி தெரியலையா?”

“இல்ல.. அப்படி இல்ல.. ஆனா.. இங்க எப்படி ஃபயர்வால் செக்யூரிட்டி அனலிஸ்ட் ஜாப்?” - அவளுடைய குழம்பிய முகத்தைப் பார்த்து வாய்விட்டு சிரித்தாள் சுமன்.

“ஐ டோன்ட் நோ வாட் எக்ஸாக்ட்லி யு திங்க் அபௌட் திஸ் ப்ளேஸ். ஆனா இது அடியாட்களும், கொலைகாரர்களும் மட்டுமே வேலை செய்யற இடம் இல்ல. இங்க நிறைய டிபார்ட்மென்ட்ஸ் இருக்கு. டெக்னிக்கல், செக்யூரிட்டி, ஸ்குவாட்ஸ், டிஃபென்ஸ், மெடிக்கல் இன்னும் நிறைய இருக்கு. இது ஒரு குட்டி சாம்ராஜ்யம்” என்றாள். மிருதுளாவின் விழிகள் பெரிதாக விரிந்தன.

“இது எல்லாம் இந்த எஸ்டேட்டுக்குள்ளயே இருக்கா!” - வியப்புடன் கேட்டாள்.

“என்ன!” - அவளைவிட அதிகமாக வியந்த சுமன், “எப்படி இப்படி ஒரு கேள்வியை கேட்ட நீ? இது அர்ஜுன் பாய் வீடு அவ்வளவுதான். இது மட்டுமே கோர்த்தா கிடையாது” என்று விளக்கம் கொடுத்தாள்.

“இந்த வீட்ல நீ என்ன வேலை செய்வ?” - அவளுக்குப் புரியவில்லை. சிஸ்டம் செக்யூரிட்டி அனலிஸ்ட்டிற்கு இங்கு என்ன வேலை இருக்க முடியும்!

“இங்க இருக்க எலக்ட்ரானிக் டிவைசஸையெல்லாம் மறந்துட்டியா நீ? வீடு முழுக்க சர்வைலென்ஸ் கேமிரா இருக்கு. நெட்வொர்க், போன் எதையும் யாரும் ஹேக் பண்ணிடக் கூடாது. அது எங்களோட வேலை. ஹேக்கிங் டீம் தனியா இருக்காங்க. யார் போனையாவது ஒட்டுக் கேட்கனும்னா சொல்லு, ஃபிரண்ட்ஸ் இருக்காங்க ஜமாய்ச்சுடலாம். பாய் ஃபிரண்ட் இருக்கானா? ஸ்பை பண்ணனுமா? கமான்.. சும்மா சொல்லு” - கண்ணடித்து கேலியாய் சிரித்தாள்.

அவளோடு பேசிக் கொண்டிருந்தால் தான் மாட்டியிருக்கும் சிலந்தி வலை சிக்கல் கூட மறந்துவிடும் போலிருந்தது மிருதுளாவிற்கு. மனதிலிருந்து சிரித்து, “இனிதான் தேடனும். கண்டுபிடிச்ச பிறகு சொல்றேன்” என்றாள்.

இருவரும் இனிமையாகப் பேசிக் கொண்டிருந்த போது குறுக்கே வந்து விழுந்தது அந்த கர்ணகொடூரமான குரல்.

“நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” - சுஜித் சிங்கின் அதட்டலில் அதிர்ந்து நிமிர்ந்தாள் மிருதுளா.

சிவந்த விழிகளும், கருத்த முகமுமாக மூக்கை விடைத்துக் கொண்டு நின்றவனின் பார்வை சுமனின் முகத்தில் நிலைத்திருந்தது. அவனைப் பார்த்ததும் அவள் முகமும் சட்டென்று களையிழந்து போய்விட்டது. அதுவரை அவள் முகத்தில் இருந்த சிரிப்பு போன இடம் தெரியாமல் மறைந்துவிட்டதை கவனித்த மிருதுளா பதட்டமானாள்.

‘ஐயோ! பாவம் இந்த பொண்ணு. என்ன செய்ய போறான்!’ - பயந்துவிட்டாள்.

“நாங்க.. நாங்க.. சும்மா.. ஜஸ்ட் பேசிகிட்டு இருந்தேம். அவ வேற எதுவும் செய்யல” - இடையில் புகுந்து அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

அவளை புறந்தள்ளிவிட்டு சுமனிடம் நெருங்கிய சுஜித் அவள் முகத்திற்கு வெகு அருகில் வந்து கண்களுக்குள் பார்த்து, “நா உன்..கிட்ட கேட்டேன்” என்றான் பற்களை கடித்துக் கொண்டு. பதில் சொல்லாமல் இறுகிப் போய் நின்றாள் சுமன்.

மிருதுளாவின் பதட்டம் அதிகமானது. “ச.. ச.. சார்.. ப்ளீஸ்.. ப்ளீஸ் லிசன் டு மீ.. வி ஜஸ்ட் ஸ்பென்ட் ஸம் டைம் டுகெதர். அவ்வளவுதான். ப்ளீஸ்.. ப்ளீஸ் லீவ் ஹர்” - பதட்டத்தில் நடுங்கியது அவள் குரல்.

“ஸ்ஸ்ஸ்டே அவே” - சீற்றத்துடன் மிருதுளாவிடம் கத்திவிட்டு, சுமனின் கையை உடும்புப் பிடியாக பிடித்து இழுத்தான். அவனோடு செல்ல மறுத்து எதிர்திசையில் இழுத்தாள் சுமன்.

“விடு.. விடு என்னை.. ஐம் நாட் கம்மிங்.. வித் யு. விடு.. லீவ் மீ..” - கத்தியபடி அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடினாள்.

“ஹேய்” - அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்ற மிருதுளா சுமனை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். “நோ! நீங்க இப்படி செய்ய கூடாது. விடுங்க.. விடு.. விடு மேன். யு ப்ளடி சீப். விடுடா.. ராஸ்க்கல்.. விடுன்னு சொல்றேன்ல.. விடு” - அவளுடைய கையை அவனிடமிருந்து பிய்த்துவிட வெகுவாய் முயன்றபடி சத்தம் போட்டாள் மிருதுளா. அவளுடைய குரல் சுமன் குரலை மீறி சத்தமாக ஒலித்தது.

சட்டென்று சுமனின் கவனம் மிருதுளாவின் பக்கம் திரும்பியது. “மிருதுளா! காம் டௌன்” - அவளை சமாதானம் செய்ய முயன்றாள்.

ஆனால் சுஜித்தின் கவனம் முழுக்க சுமனிடம் மட்டுமே இருந்தது. இடையில் கொசுறாக வந்து கத்திக்கொண்டிருக்கும் மிருதுளாவை புறந்தள்ள முயன்றபடி அவளிடம்,

“வாட் யு திங்க் அபௌட் மீ? ஹாங்? சொல்லு.. ஜஸ்ட் டெல் மீ டாமிட்” என்று உறுமினான்.

“ஓ காட்! ஹேய்.. யு அரகென்ட் அனிமல். லீவ் ஹர்.. லீலீலீலீலீவ்வ்வ்வ்.. ஹர்ர்ர்ர்!” - தன் வசமிழந்து உரக்கக் கத்தியபடி, அவர்கள் இருவருக்கும் இடையில் புகுந்து அவனை பிடித்து தள்ள முயன்றாள். அவளை, “மிருதுளா! கொஞ்சம் அமைதியா இரு” என்று சுமன் அடக்கிக் கொண்டிருக்க, அதே நேரம் ‘கொசு தொல்லை தாங்கவில்லை’ என்பது போல லேசாகதான் கையை உதறினான் சுஜித் சிங். அந்த கையைப் பிடித்து தொங்கி கொண்டிருந்த மிருதுளா, அடுத்த கணம் காற்றில் பறக்கும் தூசு போல் சுவற்றோரம் சென்று விழுந்தாள்.

“ஆஆஆஆ.. ஐயோ!” - ஓங்கி ஒலித்த அவள் குரலில் அந்த அறையே அதிர, அதே கணம் ‘ரப்’பென சுஜித்தின் கன்னத்தில் வசமான அறை ஒன்று விழுந்தது.

கப்பென்று மிருதுளாவின் சத்தம் நின்றுபோய்விட்டது. ‘காட்!’ - மூச்சை பிடித்துக் கொண்டு கிடந்தாள். ‘செத்தா! ஷூட் பண்ணிட போறானா!’ - இதயம் வேகமாக துடித்தது.

“ஒருதரம் சொன்னா புரியாது?” - அதட்டினாள் சுமன். அப்போதுதான் இன்னொரு விஷயத்தை கவனித்தாள் மிருதுளா.

‘அவ்வளவு பெரிய அறையை வாங்கிக் கொண்டு ஆறரை அடியில் செய்துவைத்த சிலை போல் அப்படியே நிற்கிறானே இந்த சுஜித்! அடித்த அடியில் மூளை கலங்கிவிட்டதா! இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை மறந்துவிட்டானா!’ - அவள் பார்வை மெல்ல சுமனிடம் இடம் மாறியது.

அந்த மலை மனிதனுக்கு அருகில் கை கால் முளைத்த கத்திரிக்காய் போல் நின்று அவனிடம் எகிறி எகிறி கத்திக் கொண்டிருந்தாள். ‘இவள் அடித்தா அவனுடைய மூளை கலங்கிவிட்டது!’ தான் பறந்து வந்து விழுந்தது, இடுப்பை உடைத்துக் கொண்டது, தலையை சுவற்றில் மோதிக்கொண்டது அனைத்தையும் மறந்துவிட்டு, திறந்த வாய் மூடாமல் அவர்களையே மாறி மாறி பார்த்தபடி கீழே கிடந்தாள்.

“போ” - கட்டளையிட்டாள் சுமன். மறுத்துப் பேசாமல் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டான் அந்த கடோத்கஜன்.

கண்ணிலிருந்து மறையும் வரை அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சுமன், பிறகு மிருதுளாவிடம் வந்தாள்

“ஐம் சாரி. ஆர் யு ஆல்ரைட்? அடி ஒன்னும் பட்டுடலையே?” - அக்கறையோடு கேட்டாள்.

அவளுடைய கேள்வி எதுவும் மிருதுளாவின் செவியை எட்டவே இல்லை. அகல விரிந்த விழிகளுடன், “யு.. யு ஸ்லாப்ட் ஹிம்!” என்றாள் மிகுந்த ஆச்சர்யத்துடன்.

“எஸ்.. பட், நீ ஏன் அவ்வளவு டென்ஷன் ஆன?”

“அவன் உன்ன திருப்பி அடிக்கல!” - அவள் கேட்ட கேள்வி இவள் காதில் விழுந்த அறிகுறியே இல்லை.

“அடிக்க மாட்டான்”

மலங்க மலங்க விழித்த மிருதுளாவின் வாய், “எ..ப்..படி!” என்று மெல்ல முணுமுணுத்தது.

இப்போது சுமனின் முகத்தில் ஒரு வித மாற்றம் வந்தது. இதழ்கடையோராம் சின்ன சிரிப்பு தெரிந்தது.

“ஹி இஸ் மை மேன்” - அவளுடைய சிரிப்பு விரிந்தது. அந்த சிரிப்பில் ஒரு கர்வம் இருந்தது.

“ஹாங்!” - மிருதுளாவின் வாய் மேலும் பிளந்துக் கொண்டது.

“அவன்? அவன் உன்னோட? ஹேய்.. திஸ் இஸ்.. ரிடிகுளஸ்.. ஹொவ் கேன் யு லவ் ஹிம்! ஹி இஸ் ஜஸ்ட் எ பீஸ்ட்” (இது சுத்த அபத்தம்.. நீ எப்படி அவனை காதலிக்க முடியும்! அவன் ஒரு மிருகம்) - மிருதுளாவின் முகம் போன போக்கைக் கண்டு இன்னும் அதிகமாக சிரித்தாள் சுமன்.

“மிருகம் இல்ல.. மான்ஸ்டர்.. ஸ்வீட் மான்ஸ்டர்”- அத்தனை காதல் இருந்தது அவள் குரலில்.

‘இது என்ன பைத்தியக்காரத்தனம்!’ என்பது போல் பார்த்தாள் மிருதுளா.

அவளுடைய எண்ணத்தை துல்லியமாக புரிந்துக்கொண்ட சுமன், “உனக்கு காதல் வரும் போது இதெல்லாம் தானா புரியும்” என்றாள்.

“சாரி.. என்னால ஒரு கொலைகாரனை காதலிக்க முடியாது” - வெடுக்கென்று கூறிவிட்டாள். சுமனின் முகம் வாடிவிட்டது.

“ஜாப் இஸ் நாட் எ மேன் மிருதுளா. அவனோட வேலையே அவன் கிடையாது. அவன் வேற. அவனுக்குள்ள இருக்க மனுஷனை நா பார்க்கறேன். அவனைத்தான் நான் லவ் பண்ணறேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை கையைப் பிடித்து இழுத்தானே.. அவன் இல்ல சுஜித். நா அறஞ்சப்ப வாங்கிகிட்டு அப்படியே நின்னானே.. அவன் தான் சுஜித். மை லவ். அவனுக்காக நா எதையும் செய்வேன்.. எதையும் இழப்பேன்” - அவ்வளவு நேரமும் படபடவென்று பொரிந்துக் கொண்டிருந்த ஒரு வெகுளி பெண்ணிற்குள் இப்படி ஒரு சீரியஸான முகம் இருப்பதை மிருதுளா எதிர்பார்க்கவில்லை. வாயடைத்துப் போய் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

மிருதுளாவின் முகமாற்றத்தை கவனித்துவிட்டு உடனே தன்னுடைய மனநிலையை மாற்றிக் கொண்ட சுமன், “ஹேய்! நா உனக்கு ஒரு ஸ்ட்ராங் அட்வைஸ் கொடுக்கறேன் நல்லா கேட்டுக்கோ. நீ இங்கதான் கொஞ்ச நாள் இருக்க போற, உனக்கு வேற வெளியே பாய் ஃப்ரண்ட் இல்ல. அவசரப்பட்டு இங்க இருக்க யாரையும் ஃபிக்ஸ் பண்ணிடாத. தே ஆர் ஆல் சிக் மென். ஜஸ்ட் லைக் சுஜித். எல்லாத்துக்கும் சந்தேகம்.. எல்லாத்துக்கும் சண்டை.. நோ பீச்.. நோ ஷாப்பிங்.. நோ சினிமா.. சோ ப்ளீஸ் டோன்ட் பிக் எ மேன் ஃப்ரம் ஹியர்” – “மே ஐ கம் இன்.. லேடீஸ்..” - அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தான் அர்ஜுன் ஹோத்ரா.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 9

“மே ஐ கம் இன் லேடீஸ்” என்றபடி உள்ளே வந்த அர்ஜுன் ஹோத்ரா மிருதுளா அமர்ந்திருந்த நிலையைப் பார்த்துவிட்டு தயங்கி நின்றான். அவன் நெற்றி சுருங்கியது. “என்ன ஆச்சு?” என்றான் குழப்பத்துடன்.

சுமன் உதவி செய்ய மிருதுளா கைகளை தரையில் ஊன்றி எழுந்தாள். அவள் நெற்றியில் இருந்த புடைப்பு அவன் கண்களை கூர்மையாக்கியது.

“நத்திங் பாய்.. நாங்க ஜஸ்ட் பேசிட்டு இருந்தோம்” - சுமன்.

“நீ என்ன பண்ணற இங்க?”

“பூஜா பிஸியா இருக்காங்க”

“சோ..?”

“என்னை மிருதுளா கூட இருக்க சொன்னாங்க” - அர்ஜுன் ஹோத்ரா பேசவில்லை. ஓரிரு நிமிடங்கள் அமைதியாக நின்றவன், “சுஜித் இங்க வந்தானா?” என்றான் உள்ளடங்கிய குரலில்.

சுமன் பதில் சொல்ல தயங்கினாள். ஆனால் சொல்லாமல் தவிர்க்க முடியாது. “எஸ்.. ஹி கேம் டு மீட் மீ..” என்று முணுமுணுத்தாள்.

“ஐ அண்டர்ஸ்டாண்ட்” - தலையை மேலும் கீழும் ஆட்டினான். பார்வை மிருதுளாவிடம் இருந்தது. அவள் அவனுடைய பார்வையைத் தவிர்த்து வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹொவ் ஆர் யு ஃபீலிங் நௌ?” - அவனை நேரடியாக பார்க்கவில்லை என்றாலும் அவன் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் இப்போது தன்னிடம் தான் கேட்கிறான் என்பதையும் மிருதுளா உணர்ந்தாள்.

“ஐம் குட்” - மெல்லிய குரலில் கூறினாள். அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அங்கிருந்து வெளியேறிய அர்ஜுன், அலைபேசியை எடுத்து டயல் செய்தான்.

“எஸ் அர்ஜுன்” - பூஜா.

“மீட் மீ இன் மை ஆஃபீஸ் ரைட் நௌ” (இப்போவே என்னை ஆபீஸ்ல வந்து பாரு)

“அர்ஜுன்.. செஷன் போயிட்டு இருக்கு. வில் பி தேர் இன் டென் மினிட்ஸ்.”

“ரை..ட்.. நௌ.. யு ஹியர்ட் மீ?” (இப்..போ..வே.. காதுல விழுந்ததா?) - சீறினான். மறுத்துப் பேசமுடியாமல், “எஸ்” என்று முடித்துவிட்டு உடனே அர்ஜுனை சந்திக்கச் சென்றாள் பூஜா.

“சோ.. யு ஆர் டூ பிஸி.. என்னோட இன்ஸ்ட்ரக்ஷன்ஸை கூட ஃபாலோ பண்ண முடியாத அளவுக்கு.. ரைட்?” - குத்தலாகக் கேட்டான்.

“மாலிக் உங்ககிட்ட பேசிக்கறதா சொன்னாப்ல..”

“ஐ திங்க்.. நான் தான் உன்னோட பாஸ். நாட் ஹிம்”

“ஐம் சாரி.. நா..”

“எனக்கு உன்னோட சாரியெல்லாம் வேண்டாம். சின்சியாரிட்டி மட்டும்தான் வேணும். ஆம் ஐ க்ளியர்?” - அவள் சொல்ல வருவதை கேட்கக் கூட பொறுமையில்லாமல் கடுப்படித்தான்.

அவள் முகம் விழுந்துவிட்டது. “எஸ்..” - தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“இன்னொரு தரம் இந்த தப்பு நடக்கக் கூடாது. லீவ் நௌ” - முகத்தில் அடிப்பது போல் பேசி அவளை வெளியேற்றிவிட்டு அலைபேசியை எடுத்து அடுத்த நம்பரை டயல் செய்தான்.

**********************

“மிருதுளா, நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நா இப்போ வந்துடறேன்” - அர்ஜுன் ஹோத்ரா அங்கிருந்து சென்றதும் மிருதுளாவிடம் கூறினாள் சுமன்.

அவள் யாரை பார்க்கச் செல்ல துடிக்கிறாள் என்பதை புரிந்துக்கொண்ட மிருதுளா அவளை பைத்தியம் என்றே நினைத்தாள்.

அவள் நினைத்தது போலவே சுஜித் சிங்கை தேடித்தான் வீடு முழுக்க சுற்றிக் கொண்டிருந்தாள் சுமன். இறுதியாக அவனை ஜிம்மில் கண்டுபிடித்தாள்.

வியர்வை சொட்டச் சொட்ட பஞ்சிங் பேகை மூர்க்கத்தனமாகக் குத்திக் கொண்டிருந்தான் சுஜித். தன்னிடம் வாங்கியதை தான் பல மடங்காக பஞ்சிங் பேகிடம் திருப்பி கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிய சுமன் அவனுடைய முதுகை பார்த்தபடி வாயிலிலேயே நின்றுவிட்டாள்.

அவ்வளவு இறுக்கமான மனநிலையில் இருந்த போதும் கூட அவளுடைய வருகையை அவன் உணர்ந்தான். ஆனால் வீம்புடன் திரும்பிப் பார்க்காமல், பஞ்சிங் பேகை இன்னும் வேகமாக தாக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கோபத்தின் அளவை அதில் புரிந்துக்கொண்ட சுமன் உள்ளே சென்றாள். அவனுக்கு வெகு அருகில் வந்து அவன் முகத்தைப் பார்த்தபடி நின்றாள்.

அப்போதும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை. பற்களை கடித்துக்கொண்டு கை வலிக்க வலிக்க அந்தப் பையோடு யுத்தம் செய்தவன், ஒரு கட்டத்தில் ஊசலாடிய பையைப் பிடித்து நிறுத்திவிட்டு மூச்சிரைக்க நின்றான்.

இறுகிய முகமும் விரைத்திருந்த உடலும் அவனுடைய டென்ஷனை பறைசாற்றியது. சற்று நேரம் அமைதியாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுமன், “எதுக்கு என்னை தேடி வந்த?” என்றாள் வறண்ட குரலில்.

சட்டென்று திரும்பி அவளை முறைத்தான் சுஜித். “என்ன பார்க்கற? ரொம்ப நல்லவன் மாதிரி அடி வாங்கிட்டு அப்படியே அமைதியா வந்துட்ட.. திருப்பிக் கொடுத்திருக்க வேண்டியது தானே?” - கடுப்புடன் கேட்டவள் அடுத்த நொடி அவனுடைய இரும்பு கரங்களுக்குள் சிறைப்பட்டு மூச்சுக்காற்றிற்கு திணறினாள். பிறகு அடங்கி அவனோடு ஒன்றினாள். உணர்ச்சிகரமான ஆழ்ந்த அந்த முத்தத்தில் அவளுடைய கோபமெல்லாம் தண்ணீரில் விழுந்த பஞ்சுமிட்டாய் போல் இருந்த இடம் தெரியாமல் கரைந்து போனது.

நொடிகள் நிமிடங்களாக மாறியபோது அவனிடமிருந்து விடுபட்டவள், சிவந்துவிட்ட இதழ்களை புறங்கையால் துடைத்தபடி, “ராஸ்க்கல்.. இதுக்குத்தான் துரத்திக்கிட்டு இருந்தியா?” என்று கொஞ்சியபடி செல்லமாய் அவன் தோளில் தட்டினாள்.

அப்போதும் அவன் முகம் உர்ரென்றுதான் இருந்தது. ‘அடப்பாவி! இப்படி ஒரு பேஷனேட் மேட்டருக்கு அப்புறமும் எப்படிடா பட்ட மரம் மாதிரி விறைப்பாவே இருக்க! திருத்த முடியாதுடா.. உன்னையெல்லாம் திருத்தவே முடியாது..’ - அவள் முகம் அஷ்டகோணலானது.

அவளுடைய எண்ண ஓட்டம் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அதை பொருட்படுத்தும் மனநிலைதான் அவனுக்கு இல்லை.

“ஏன் என்னை இரண்டு நாளா அவாய்ட் பண்ணின?” - கையில் அணிந்திருந்த கிளவுஸை கழட்டி எறிந்துவிட்டு, துண்டை எடுத்து வியர்வையை துடைத்தபடி கேட்டான்.

“நீ பண்ணியிருக்க காரியத்துக்கு அவாய்ட் பண்ணாம கொஞ்சுவாங்களா?”

கழட்டி போட்டிருந்த டீ-ஷர்ட்டை அணிந்தபடி, “என்ன பண்ணினேன்?” என்றான் அலட்சியமாக.

“நடிக்காத மேன். ஐ நோ ஹூ யு ஆர்.. ரித்விக் என்னோட ஃபிரண்ட். அவனை எதுக்கு அப்படி போட்டு அடிச்ச?”

“அவன் சொன்னானா? நா அடிச்சேன்னு சொன்னானா?” - கோபத்துடன் சீறினான்.

“ஆஹா! சொல்லுவானே! உன்ன மாதிரி ராட்சசன் என் பக்கத்துல இருந்தா யாரு தான் என் கூட பேசுவாங்க”

“போயேன்.. நான் தான் ராட்சசனாச்சே.. எதுக்கு என்கூட இருக்க? போக வேண்டியதுதானே?” - நெருப்பு தணல் போல் சிவந்துவிட்டது அவன் முகம். அந்த கோபமெல்லாம் அவளை துளியும் அச்சுறுத்தாது.

“போனா விட்டுடுவியா, இரண்டு நாளா சுத்தி சுத்தி வந்த?” - சுருக்கென்று குத்திவிட்டாள்.

கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன், அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து ஜிம்மிற்கு வெளியே தள்ளி, “போ.. இனி என் பக்கம் வரவே வராத. வி ஆர் டன்” என்றான்.

சட்டென்று நுனி காலில் எக்கி, அவன் கழுத்தை வளைத்து இதழோடு இதழ் சேர்த்தாள். பட்டுப்பூச்சியின் மென்மை அவன் இதயத்தைத் தொட்டது. உள்ளே சூழ்ந்திருந்த இருளெல்லாம் ஒளியாய் மாறி அவன் உள்ளத்தை ஆக்கிரமித்தது. நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து ஊற்றெடுத்த இன்பம் அவனை முழுவதுமாக ஆக்கிரமிக்க, அவளுடைய துவக்கத்தை அவன் கைப்பற்றி கோலோச்சினான்.

நிமிடங்கள் சில கழிந்த பிறகு அவள் விலகினாள். அவன் முகம் பார்க்காமல் திரும்பிச் செல்ல எத்தனித்தாள். சட்டென்று அவள் கையைப் பிடித்துத் தடுத்து, “டோன்ட்.. டூ திஸ்.. டு மீ” என்றான். அவன் கண்கள் கெஞ்சின.

சுமனின் மனம் இளகியது. ஆனால் இறுக்கி பிடித்துக் கொண்டாள். அவனுடைய தவறை அவனுக்கு உணர்த்த வேண்டும்.

“நீ ஏன் அப்படி செஞ்ச?”

“அவன் ஏன் உன்ன வெளியே கூட்டிட்டு போனான்?”

“யு ஆர் ஜஸ்ட் எ ப்ளடி பொஸசிவ் பீஸ்ட்..” - கடுப்புடன் கூறினாள்.

சற்று நேரம் அவளை வெறித்துப் பார்த்த சுஜித், “எஸ்.. ஐ ஆம்..” என்றான் அழுத்தமாக. சுமன் பற்களை நறநறத்தாள்.

‘இவனுடைய அக்கப்போருக்கு அளவே இல்லையா!’ என்றது அவள் உள்ளம். என்றைக்கு இவர்களுக்குள் காதல் மலர்ந்ததோ அன்றிலிருந்து சிறிது சிறிதாக பல கெடுபிடிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஆளானாள் சுமன்.

ஆரம்பத்தில் தினமும் வீட்டுற்குச் சென்று வந்து கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் வாரம் ஒரு முறை தான் வீட்டிற்குச் செல்கிறாள். அதுவும் சுஜித்தின் துணையோடு. வீட்டில் இருக்கும் நாட்களில் வெளியே செல்லக் கூடாது. அப்படியே சென்றாலும் அவனிடம் சொல்லிவிட்டு அவன் துணையோடுதான் செல்ல வேண்டும். மீறினால் இப்படித்தான், ரித்விக்கை அடித்தது போல் ஏதேனும் மூர்க்கத்தனமாக செய்துவிடுகிறான். இவனை எப்படி கையாள்வது! - திணறினாள் சுமன்.

அவளுடைய மனப்போராட்டத்தை அவனால் உணர முடிந்தது. கலக்கமுற்ற காதலியின் முகத்தை கைகளில் ஏந்தி, “நா பயப்படறேன்.. உனக்கு புரியலையா?” என்றான்.

“அந்த அளவுக்கு நா ஒர்த் இல்ல சுஜித். என்னைய கடத்தியோ, இல்ல கொலை செய்தோ.. யாருக்கு என்ன ஆகப் போகுது? கோர்த்தால வேலை செய்ற எத்தனையோ பேர்ல நானும் ஒருத்தி. அவ்வளவுதான்! நீ தேவையில்லாம பயப்படற.”

அவன் ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தான். “நீதான் என்னோட ஸ்ட்ரென்த். அதே சமயம் நீதான் என்னோட வீக்கனஸும் கூட. நா ரிஸ்க் எடுக்க விரும்பல.”

“ஹும்ம்ம்..” - பெருமூச்சுவிட்டாள் சுமன். அதே நேரம் சுஜித்தின் பேண்ட் பாக்கெட்டிலிருந்து அலைபேசி அழைத்தது.

“எஸ் அர்ஜுன்.. ஐம் கம்மிங்” என்று அழைப்பிற்கு பதிலளித்துவிட்டு, “நா போகனும்” என்றான் அவளிடம்.

அழைப்பது யார், எதற்காக என்பதை புரிந்துக்கொண்ட சுமன், “மிருதுளாவோட ரூம்ல நடந்ததைப் பற்றி கேட்டா பொறுமையா பதில் சொல்லு” என்று அறிவுரை கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

*************************

“யு ஹாவ் டு ஒர்க் ஆன் யுவர் ஆங்கர் கண்ட்ரோல். எமோஷன்ஸை கட்டுப்படுத்த தெரிஞ்சவன் தான் இங்க வேணும். உணர்ச்சிவசப்படறன் இல்ல..” (உன்னோட கோவத்தை குறைக்கற வழியைப் பாரு..) என்று உள்ளடங்கிய கோபத்துடன் வார்த்தைகளைத் துப்பினான் அர்ஜுன் ஹோத்ரா.

“என்ன ஆச்சு?” - முகம் இறுக அழுத்தமாகக் கேட்டான் சுஜித்.

“யு நோ வெரி வெல்” (உனக்கு நல்லாவே தெரியும்)

“தெரிந்தது! நன்றாகவே தெரிந்தது! அந்த டாஷ் என்னை பற்றி கம்ப்ளைண்ட் பண்ணினாளா?” என்றான் முகம் சிவக்க.

“மைண்ட் யுவர் லாங்க்வேஜ்..” - பல்லை கடித்தான் அர்ஜுன் ஹோத்ரா.

அவன் முகத்திலிருந்த கடுமையை கண்டுவிட்டு சட்டென்று அமைதியாகிவிட்டான் சுஜித். பிறகு தன்னிலை விளக்கமாக, “நா சுமனை பார்க்கத்தான் அங்க போனேன். ஷி இன்டெரெப்டட் இன் மை வே. அவதான் என் கையைப் பிடிச்சு இழுத்து, ஏதோ வில்லனைப் பார்த்து கத்தற மாதிரி அனாயிங்கா கத்தினா. நா அவளை ஸ்டாப் பண்ணத்தான் ட்ரை பண்ணினேன். கீழ விழுந்துட்டா.. இட்ஸ் ஆன் ஆக்சிடென்ட்” என்றான்.

மிருதுளாவின் நெற்றியில் பட்டிருக்கும் காயத்திற்கு இந்த விளக்கம் போதாது என்று உறுமியது அவன் உள்ளம். குறையா கோபத்துடன் நண்பனை வெறித்துப் பார்த்தவன், “சுமனை பார்க்கனும்னா நீ சுமன் ரூமுக்குத்தான் போயிருக்கனும். மிருதுளாவோட ரூமுக்கு இல்ல” என்றான்.

சுஜித்தின் உடல் விறைத்தது. அசையாமல் சிலை போல் நின்றான்.

“இதுவே கடைசி முறையா இருக்கட்டும்” என்று கூறிவிட்டு அவனிடம் முகம் கொடுக்காமல் அலைபேசியை எடுத்து அடுத்த நம்பரை டயல் செய்தான் - வழக்கறிஞர் அஞ்சானி லால்.

*********************​

அர்ஜுன் ஹோத்ராவின் அறையிலிருந்து வெளியேறிய சுஜித்தை பாதி வழியில் எதிர்கொண்டாள் சுமன்.

“என்ன ஆச்சு?” - இறுகிப்போயிருந்த அவன் முகத்தை கண்டு சஞ்சலப்பட்டாள்.

“ஷி இஸ் எ விட்ச். சூனியக்காரி..” - பொங்கினான்.

“யாரு?” - புரியாமல் கேட்டாள். எரிச்சலுடன் அவளைப் பார்த்தான் சுஜித். அவன் பார்த்த பார்வையிலேயே தெரிந்துவிட்டது, அவன் மிருதுளாவை தான் குறிப்பிடுகிறான் என்பது.

“ஹேய்! அவளை ஏன் திட்டற? அவ எனக்கு உதவி செய்றதா நினச்சு உன்கிட்ட சத்தம் போட்டுட்டா.. விடுப்பா..”

“உனக்கு எதுவும் தெரியாது. அவளாலதான் இப்போ எனக்கு அர்ஜூன் கிட்ட கெட்ட பேரு.. அவ சரியில்ல.. அவ போட்டுக்கிட்டு இருக்க முகத்திரையை நா கிழிச்சு எறிவேன்.. சீக்கிரமே.. ஒரு சான்ஸ், ஒரே ஒரு சான்ஸ் மட்டும் கிடைக்கட்டும்.. பார்த்துக்கறேன்” - கங்கணம் கட்டினான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 10

அஞ்சானி லால் - கோர்த்தாவின் முக்கியமான வழக்கறிஞர். அதோடு அவர் ஒரு கொரியர் மேனும் கூட. கொரியர் மேன் என்றால் வீடு வீடாக பார்சலை கொண்டு கொடுப்பவர் அல்ல. கோர்த்தாவின் தற்போதைய தலைவரான ராகேஷ் சுக்லாவின் செய்திகளை உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் தனி நபர். இன்று அர்ஜுன் ஹோத்ராவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அப்படியென்றால் ராகேஷ் சுக்லாவிடமிருந்து செய்தி வந்திருக்கிறது என்று பொருள்.

சுஜித் சிங்கை கண்டித்து அனுப்பிவிட்டு அலைபேசியை எடுத்து அஞ்சானிக்கு அழைத்த அர்ஜுன் ஹோத்ரா, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலை கேட்டு தெரிந்துக் கொண்டு புறப்பட்டான். அவனுடைய கார் ஹோட்டல் இருக்கும் சாலையில் நுழைந்த போது, அங்கே ஒரு கடையில் அவனுக்காக காத்துக் கொண்டிருந்த அஞ்சானி ஓசைப்படாமல் எழுந்து வந்து சாலையோரம் நின்றார். அவருக்கு அருகே சென்று நின்ற அர்ஜுன் ஹோத்ராவின் கார் அவரை ஏற்றிக் கொண்டு மகல்பாட்னாவின் டிராபிக்கில் கலந்தது.

“என்ன விஷயம்?” சாலையில் பார்வையை பதித்தபடி கேட்டான் அர்ஜுன் ஹோத்ரா.

“டெல்லில ‘சர்க்கரை கட்டி’ சப்ளை ஆயிருக்கு நம்ம பேர்ல..” - சர்க்கரை கட்டி என்பது ஒருவித ட்ரக்ஸை குறிக்கும் அவர்களுடைய ரகசிய குறியீடு.

அவனுக்கு தெரிந்தவரை கோர்த்தா ட்ரக்ஸ் பிசினஸ் செய்வதில்லை. கனிமங்கள் மட்டும்தான் அவர்களுடைய குறி. அப்படியென்றால் இதை யார் செய்திருப்பார்கள்! - அவனுக்குள் ஒரு அனுமானம் இருந்தது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்து, “யார்?” என்றான்.

“கோர்த்தா பேர்ல பிசினஸ் நடந்திருக்கு. அப்படின்னா ஜெனார்த் நாயக் உள்ள வந்துட்டான்னு சுக்லாஜி நினைக்கிறாரு” - இதுதான் அவனுடைய அனுமானமும் கூட.

வெளியிலிருந்து பார்க்கும் பொழுது ஒரே குழுவாக தெரியும் கோர்த்தா கேங்கில், கோர்த்தா பிளாக் மற்றும் கோர்த்தா ஒயிட் என்று இரண்டு குழுக்கள் இருந்தன. நிலக்கரி சுரங்கங்களை கைவசம் வைத்திருக்கும் ‘கோர்த்தா பிளாக்’ குழுவின் தலைவன் ஜெகன் நாயக். நிலக்கரியை தவிர மற்ற கனிம சுரங்கங்களை கைவசம் வைத்திருக்கும் ‘கோர்த்தா ஒயிட்’ குழுவின் தலைவன் ராகேஷ் சுக்லா. இருவருமே இருபெரும் மலைகள். சம பலம் கொண்டவர்கள்.

சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அவர்களுக்குள் கேங் வார் ஏற்பட காரணமானது. அதில் ஜெகன் நாயக் இறந்துவிட்டார். அவருடைய மகன் ஜெனார்த் நாயக் தப்பியோடிவிட்டான். ‘கோர்த்தா பிளாக்’ கேங் முற்றிலும் சிதறிப்போனது. கோர்த்தாவின் மொத்த கடிவாளமும் ராகேஷ் சுக்லாவிடம் வந்துவிட்டது. இத்தனை வருடங்கள் கழித்து இப்போது அந்த ஜெனார்த் நாயக் தலை தூக்கியிருக்கிறான். நல்லதுதான்.. அவனைத்தான் இத்தனை ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கிறோம்! - அர்ஜுன் ஹோத்ராவின் உதடுகளில் ஆபத்தை உள்ளடக்கிய ஒரு மர்மப் புன்னகை தவழ்ந்தது.

“இந்த விஷயம் சம்மந்தமா டீலர்ஸ்கிட்ட பேசறதுக்கு சுக்லாஜி மீட்டிங் ஏற்பாடு செய்திருக்கார். மீட்டிங் நடக்க இருப்பது டெல்லியில்.. ப்ரொட்டெக்ஷன் பொறுப்பு உங்களோடது” என்றார்.

அர்ஜுன் ஹோத்ராவின் புருவங்கள் முடிச்சிட்டன. இந்த திட்டம் அவ்வளவு சரியானதாக அவனுக்குத் தோன்றவில்லை. காரணம் அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதைப் பற்றி யோசித்துவிட்டு தொடர்புகொள்வதாக கூறி அஞ்சானியை ஹோட்டல் வளாகத்தில் இறக்கிவிட்டான் அர்ஜுன்.

****************************

அன்று இரவு கண்களை மூடவே அச்சமாக இருந்தது மிருதுளாவிற்கு. சுமன் உடன் இருக்கும் பொழுது தெளிந்திருந்த அவள் மனம் தனிமையில் கலங்கியது. சவுக்கடி சத்தமும், அலறல் ஒலியும் அவள் செவிகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றியது. நேற்று நடந்தது போல் இன்றும் அந்த கனவு அவளை நிலைகுலைய செய்யப் போகிறது என்று உள்ளுணர்வு எச்சரித்தது. இமையோடு இமை சேர்க்க பயந்து கொட்டக்கொட்ட விழித்தபடி கட்டிலில் கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால் எவ்வளவு நேரம் அமர்ந்திருக்க முடியும். உடல் சோர்ந்து துவளும் பொழுது கண்கள் தானாக மூடத்தானே செய்யும். தன்னையறியாமல் சரிந்து போர்வைக்குள் புதைந்தாள்.

தூரத்தில் ஓர் ஒற்றை மலை.. அந்த மலையில் ஒரு மொட்டை மரம் தனிமையில் நிற்கிறது. திடீரென்று அந்த மரத்தில் தீ பிடித்துக் கொண்டது. மரத்தில் பிடித்த தீ மெல்ல மெல்ல மலை முழுவதும் பரவிவிட்டது. சுடர்விடும் செங்கொழுந்து உருக்கிய தங்கம் போல் தகதகக்கிறது. வெகுதூரம் வரை அந்தத் தீயின் ஜுவாலை தன் கொடுங்கரங்களை நீட்டி அகப்பட்டவற்றையெல்லாம் தனக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது.

யாரும் அருகில் நெருங்கமுடியாத அளவிற்கு கோரத்தீ ருத்ரதாண்டவம் ஆடி கொண்டிருந்த போது ஓர் அவலக்குரல் ஓங்கி ஒலித்தது. அது ஒரு பெண் குரல்.. யார் அந்த பெண்! சுற்றி வளைத்துவிட்ட தீக்கற்றைகளுக்கு மத்தியில் நின்று கதறிக் கொண்டிருந்தாள் அவள். முகம் தெரியவில்லை.. தலைவிரி கோலம்.. மெலிந்த தேகம்.. கணீர் குரல்.. இவைகள்தான் அடையாளம்! தீ அவளை தொட்டுவிட்டது.. அவள் ஆடையை தீண்டிவிட்டது.. கத்துகிறாள்! கதறுகிறாள்! துடிக்கிறாள்!

‘ஐயோ! எரிகிறது! எரிகிறது! உடம்பெல்லாம் எரிகிறது!’ - அவளுடைய கை, கால், மேனி, முகம், முடி எங்கும் நெருப்பு. தீயின் தகிப்பை தாங்க முடியாமல் கீழே விழுந்து புரள்கிறாள். தப்பிக்க முடியவில்லை.. ‘எரிகிறது.. எரிகிறது.. அம்மா.. எரிகிறது..’ - வாய்விட்டு புலம்பியபடியே கட்டிலிலிருந்து பொத்தென்று கீழே விழுந்தாள் மிருதுளா. திடுக்கிட்டு கண்விழித்தாள். மலை இல்லை, மரம் இல்லை, தீயில்லை.. ஆனால் எரிகிறது. அவளுடைய மேனி தீ பிடித்தது போல் திகுதிகுவென்று எரிகிறது. விருட்டென்று எழுந்து கட்டிலில் கிடந்த துணியை எடுத்து உடம்பெல்லாம் தட்டிக் கொண்டாள். அப்படியும் எரிச்சல் மட்டும் நிற்கவில்லை.

‘என்ன! என்ன ஆச்சு எனக்கு!’ - புரியாமல் அழுதாள். எரிச்சல் தாங்க முடியவில்லை. நேற்று இரவு இதே போல் தான் நடந்தது. அவன்.. அவன் ஏதோ செய்தான். என்ன செய்தான்! நினைவிற்கு வரவில்லை.. அழுதாள்.. ‘எ..ரி..யுது..’ - குளியலறைக்குள் ஓடினாள். ஷவரை முழுவதுமாக திறந்துவிட்டு குளிர்ந்த நீருக்கு அடியில் நின்றாள். உச்சந்தலையில் விழுந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாய் முகம் கழுத்து மேனி எங்கும் பரவி அவளை குளிர்வித்தது. வெளியே வர வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் வெகு நேரம் துவலைக்குழாய் பொழிவுக்கு கீழே நின்றுக் கொண்டிருந்தாள். குளிரில் உடல் நடுங்கத் துவங்கியது. மனம் மாய மருட்சியிலிருந்து மெல்ல வெளிவந்தது. ஷவரை மூடிவிட்டு வெளியே வந்தாள்.

‘ஏன் இந்த இந்த கனவு.. எதற்கு இந்த பாதிப்பு!’ - எதைப்பற்றியும் யோசிக்க முடியவில்லை. ஆடையெல்லாம் தொப்பலாக நனைந்திருந்தது. குளிரினாலோ அல்லது பதட்டத்தினாலோ உடல் வெடவெடவென்று நடுங்கியது. டவலை எடுக்க அலமாரியை திறந்தாள். மடித்து வைக்கப்பட்டிருந்த துவாலைக்கு மேல் அந்த கறுப்பு கோட் இருந்தது. மிருதுளாவின் புருவம் சுருங்கியது. ஓரிரு நிமிடங்கள் மெளனமாக அதைப் பார்த்தவள் பிறகு மெல்ல கையில் எடுத்தாள்.

***********************

அன்று இரவு, ராகேஷ் சுக்லாவின் டெல்லி பயணம் தொடர்பான திட்டங்களை யோசித்து ஆராய்ந்துக் கொண்டிருந்த அர்ஜுன் ஹோத்ராவின் சிந்தனையில் அடிக்கடி மிருதுளா குறுக்கிட்டாள். அவளுடைய நெற்றிக்காயம் அவன் கவனத்தை சிதறச் செய்தது. இத்தகைய பலவீனங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணி அவளுடைய நினைவுகளை ஒதுக்கித் தள்ள வெகுவாய் முயன்றான். ஆனால் தீட்டும் திட்டத்தில் விழும் பெரிய ஓட்டைகள் அவனுடைய தோல்வியை பறைசாற்றின. எரிச்சலுடன் கணினித்திரையை அடித்து மூடியவன், எழுந்து அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

‘விழித்துக்கொள்’ என்று மூளை எச்சரித்தது. மனமோ அவள் முகத்தை ஒருமுறை பார்த்தால்தான் அடங்குவேன் என்று ஆட்டம் காட்டியது. மனம் போகிற போக்கிற்கெல்லாம் போகிறவன் அவன் அல்ல. துளிர்விடும் இந்த அந்நிய உணர்வை முளையிலேயே கிள்ளிவிட எண்ணி முரட்டுத்தனமாக மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஜிம்மிற்கு விரைந்தான். அவனை பொறுத்தவரை ஜிம் தான் சிறந்த ஸ்ட்ரெஸ் பர்ஸ்டர்.

சில மணி நேரங்கள் ஜிம்மில் பயிற்சி செய்தவன் நள்ளிரவில் அறைக்கு திரும்பிய போது, இருளில் சமையலறை பக்கம் ஏதோ நடமாட்டம் தெரிவது போல் உணர்ந்தான்.

சட்டென்று அலர்ட் ஆனான். இடுப்பில் செருகியிருந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு சுவரோரம் சாய்ந்து மறைத்தபடி எச்சரிக்கையோடு சமையலறைப் பக்கம் சென்று உள்ளே பார்வையை செலுத்தியவன், “ஷ்ஷ்ஷ்..ஷி..ட்..” என்றான் ஏமாற்றத்துடன்.

சட்டென்று சுஜித்தின் கை வளைவிலிருந்து துள்ளி விலகினாள் சுமன். “ஐ.. ஐ.. ஜஸ்ட் கேம்.. ஃபார் வாட்டர்” - உளறினாள்.

“அர்ஜுன்.. ஐம்.. ஜஸ்ட்..” - வார்த்தைகளைத் தேடிய சுஜித் முடிப்பதற்குள், “யு கைஸ் ஹேவ் யுவர் வோன் ரூம்ஸ் மேன்” என்று கடுப்படித்துவிட்டு, உள்ளே சென்று ஃபிரிட்ஜை திறந்து தண்ணீர் குடித்தான் அர்ஜுன் ஹோத்ரா.

“சாரி” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள் சுமன்.

“ஸீ யு இன் மார்னிங்” என்று கூறிவிட்டு சுஜித் சிங்கும் அங்கிருந்து கிளம்பினான். அவர்கள் சென்ற பிறகு ஓரிரு நிமிடங்கள் சமையலறையில் தாமதித்த அர்ஜுன், தனது கட்டுப்பாட்டையும் மீறி சமையலறைக்கு அடுத்த பகுதியை திரும்பிப் பார்த்தான். அதில் முதல் அறைதான் மிருதுளாவுடையது. நேற்று போலவே இன்றும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

‘உறங்கியிருப்பாளா! அல்லது நேற்று போலவே இன்றும் பேனிக்காகி சிரமப்பட்டுக் கொண்டிருப்பாளா!’ - உள்ளே தோன்றிய ஒரு விசித்திர உணர்வு அந்த இடத்திலிருந்து அவனை விலகிச் செல்லவிடாமல் கட்டி இழுத்தது. கால்கள் அவன் அனுமதிக்கு காத்திராமல் அவள் அறையை நோக்கி அடியெடுத்து வைத்தன.

நனைந்த ஆடையுடன் தன்னுடைய கோட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டு குறுகி படுத்திருக்கும் மிருதுளாவை கண்ட கணமே அவன் மனதிற்குள் கூர்மையாய் ஏதோ பாய்வதை உணர்ந்தான். அவளுடைய பயமும் பாதுகாப்பற்ற உணர்வும் அவனை வருத்தியது. அதே நேரம், பற்றுக்கோலை இறுக்கிப் பிடித்திருப்பது போல் அவனுடைய கோட்டை அவள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு படுத்திருந்த விதம் அவன் இதழ்க்கடையோரம் சின்ன புன்னகையை கொண்டுவந்தது.

அவள் முகத்தையே பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றுக் கொண்டிருந்தவன் பிறகு, தைலத்தை எடுத்துக் கொண்டு அவளிடம் நெருங்கினான். அருகே செல்ல செல்ல இதயத்துடிப்பு அதிகமானது. மிகுந்த தயக்கத்துடன் அவள் அருகில் அமர்ந்தான். காயம்பட்ட அவள் நெற்றியில் தைலத்தை மெல்ல பூசியவன், மறு நொடியே அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டான். பட்டுப்போன்ற மென்மையான சருமமும் நாசியை தீண்டிய அவளுடைய பிரத்யேக நறுமணமும் அவனை மெய்மறக்கச் செய்துவிட அவளிடமிருந்து விலக மனமில்லாமல் நெற்றியோடு நெற்றி வைத்து கண்களை மூடி அசையாமல் அமர்ந்திருந்தான். கழியும் ஒவ்வொரு நொடியும் பொக்கிஷமாய் அவன் மனதை நிறைத்துக் கொண்டிருந்தன.

விடிந்து வெகு நேரம் கழித்து கண்விழித்த மிருதுளா முதல் நாள் இரவு அர்ஜுன் ஹோத்ரா தன்னுடைய அறைக்கு வந்ததையோ, தனக்கு தைலம் பூசிவிட்டதையோ, தன் கன்னத்தில் இதழ் பதித்ததையோ, தன் நெற்றியோடு நெற்றி வைத்தபடி வெகு நேரம் கட்டிலில் அமர்ந்திருந்ததையோ சிறிதும் அறிந்திருக்கவில்லை. கல்லை கட்டிவிட்டது போல் தலை பாரமாய் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து குளித்துவிட்டு சமையலறைக்கு வந்தாள்.

“நீ இந்த வீட்ல கெஸ்ட் இல்ல.. சர்வெண்ட்.. நியாபகம் இருக்கா?” - வெடுவெடுத்தாள் பானு. மிருதுளாவின் முகம் இறுகியது.

“இங்க நா கெஸ்டும் இல்ல சர்வெண்டும் இல்ல” என்று முணுமுணுத்துக் கொண்டே, சமையலறையிலிருந்த காபிமேக்கரில் இருந்து ஒரு கப் காபியையும், இரண்டு பிரட் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினாள்.

வழியில் எதிர்பட்ட அர்ஜுன் ஹோத்ரா, இவளை கவனிக்காமல் அலைபேசியில் பேசிக் கொண்டே கடந்துச் சென்றான்.

சின்னதாய் ஒரு ஏமாற்றம் அவளுக்குள் தோன்றியது. அந்த நொடியே தலையை உலுக்கி, முட்டாள்தனமான அந்த உணர்வை உதறிவிட்டு நடையைக்கட்டினாள் மிருதுளா.
 
Top Bottom