Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிழல் நிலவு - Story

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 40

அனந்த்பூருக்கு வந்த முதல் நாளே, மிருதுளா தங்கிருந்த வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு வந்தான் அர்ஜுன். எதிர்படுபவர்களின் பார்வைகள் எல்லாம் தன்னையே துளைப்பது போல் உணர்ந்த மிருதுளா சங்கடத்துடன் மாடிப்படிகளில் ஏறினாள். கால்கள் கூச சின்ன நடுக்கத்துடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள்.

கையில் புத்தகத்துடன் வந்து கதவைத் திறந்த கண்ணாடியணிந்த அந்த பெண், காணாமல் போன தன் தோழி திடீரென்று யாரோ ஒரு புதியவனுடன் ஜோடியாக வந்து நிற்பதைக் கண்டு, “மிருதூ” என்றாள் அதிர்ச்சியுடன்.

பிறகு தன் கண்ணாடியையே பூதக்கண்ணாடியாக பாவித்து அர்ஜுனை தலை முதல் கால் வரை உற்றுப் பார்த்தாள்.

அவளுடைய பார்வையை புரிந்துக்கொண்ட மிருதுளா, “இவர் அர்ஜுன். ஃபேமிலி ஃப்ரண்ட்..” என்று அவன் சொல்லிக் கொடுத்திருந்ததை கிளிப்பிள்ளை போல் அப்படியே கூறினாள்.

அவனுடைய வயதும் பக்குவப்பட்ட தோற்றமும் மிருதுளாவின் கூற்றை ஓத்திருந்ததால் அந்த கண்ணாடி பெண்ணுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. மூவரும் அந்த சின்ன வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

“உட்காருங்க..” என்று ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை அர்ஜுனுக்கு எடுத்து போட்டாள் மிருதுளா. அவன் அமராமல் அந்த வீட்டை பார்வையால் ஸ்கேன் செய்தான்.

“திடீர்ன்னு எங்க போய்ட்ட நீ? அன்னைக்கு நைட் முழுக்க நீ வரலைன்னதும் நா ரொம்ப பயந்துட்டேன். உங்க அம்மா வேற.. போன் பண்ணிகிட்டே இருந்தாங்க.”

“அம்மாவா! போன் பண்ணினாங்களா?” - பரபரப்புடன் இடையிட்டாள் மிருதுளா.

“ஆமாம்.. பண்ணினாங்க.. ஆனா அன்னைக்கு மட்டும் தான். மறு நாள்லேருந்து அவங்க போன் ஆஃப் ஆயிடிச்சு. என்னால அவங்களை காண்டாக்ட் பண்ண முடியல.”

மிருதுளா கலவரம் படிந்த கண்களுடன் அர்ஜுனை பார்த்தாள். பார்வையாலேயே அவளை தைரியப்படுத்தியவன், அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்து பேசவைத்தான்.

மிருதுளாவின் தாய் என்றைக்கு - எப்போது - எந்த நம்பரிலிருந்து அழைத்தார்? கடைசியாக என்ன கூறினார் என்கிற விபரங்களையெல்லாம் வாங்கிக் கொண்டான்.

“என்ன ஆச்சு? அவங்களையும் காணுமா?” - அவனுடைய கேள்விகளின் எதிரொலியாக இந்த கேள்வி அவளிடமிருந்து எழுந்தது.

“நோ-நோ.. இது ஜஸ்ட் ஃபேமிலி ஈகோ இஷு.. அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு வாழறாங்க. பொண்ணு இரண்டு பேருக்கும் இடையில கஷ்ட்டப்படறா” - இந்த விஷயங்கள் அரைகுறையாக அவளுக்கும் தெரியும் என்பதால் அவன் கூறிய பொய்யை நூறு சதம் உண்மை என்றே நம்பினாள் அந்த பெண்.

எத்தனை இலகுவாக உண்மை போலவே பொய்யை அள்ளிவிடுகிறான் என்று மிருதுளாவே அசந்து போனாள்.

“நீ எஸ்கேப் ஆனா அதே நாள்.. இங்க ஒரு மர்டர் நடந்துடுச்சு மிருதூ. செத்தவன் கேங்ஸ்டராம். கேங் வார்ல போட்டுத்தள்ளிட்டானுங்க. மறுநாள் போலீஸ் வந்த பிறகுதான் எங்களுக்கெல்லாம் தெரிஞ்சுது. உன்னை வேற காணுமா.. ரொம்ப பயந்துட்டேன்” - அன்றைய நிலவரங்களை விவரித்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் டெல்லியில் வெவ்வேறு இடங்களில் ஒரே விதமாக ஆறு கொலைகள் நடந்தன. கண்கட்டி வித்தை போல் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் சிட்டுக்குருவிகள் புகுந்து சுட்டுவிட்டு பறந்துவிட்டன. சிட்டுக்குருவிகள் என்பது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிடான்ஸின் சங்கேத பெயர்.

அர்ஜுனின் அலைபேசி பீப் ஒலி எழுப்பியது. எடுத்துப்பார்த்தான்.

“பறித்து வைத்திருந்த மாங்காய் பழுத்துவிட்டது” - டேவிட்டிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. அந்த வாசகத்திற்கான அர்த்தம் என்ன என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

‘டெல்லி ஹோட்டலில் சிக்கிய நாயக் ஆளின் கதையை முடித்துவிட்டான். அவன் கதை முடிந்துவிட்டது என்றால் சித்திரவதை தாங்காமல் அவன் காட்டிக் கொடுத்த நாயக் ஆட்களின் கதையும் முடிந்திருக்கும்’ - அவன் மனம் மகிழவில்லை.. அமைதியடையவில்லை.. இன்னும் பசித்தது.. இரத்ததாகம் தீராமல் நாவறண்டது.. இன்னும் அந்த பகவானின் இருப்பிடம் தெரியவில்லையே.. ஜெகன் நாயக் சிக்கவில்லையே.. அதுவரை சாந்தமாக இருந்த அர்ஜுனின் முகம் பயங்கரமாக மாறியது.. மிருதுளா முதல் முறை அவனை பேஸ்மெண்டில் பார்க்கும் போது இருந்த அதே முகம்.. அதீத கோபம்.. கொடூரம்.. வேட்டை புலியின் வெறியை கண்களில் தேக்கியபடி அலைபேசி திரையையே வெறித்துக் கொண்டு நின்றான்.

“அர்ஜுன்.. என்ன ஆச்சு?” - அவனுடைய திடீர் மாற்றத்தில் பயந்து போன மிருதுளா அவன் கையைப் பிடித்து உலுக்கினாள்.

“லெட்ஸ் கோ..” - எந்த விளக்கமும் கொடுக்காமல் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

*******************

டெல்லியில் ஒரே நேரத்தில் ஒன்று போல நடந்த கொலைகள் மிகப்பெரிய சென்சேஷனல் நியூஸாக மாறி டெல்லி போலீஸின் குரல்வளையை நெரித்தது. எந்த டிவியை போட்டாலும்.. எந்த பேப்பரை புரட்டினாலும் அந்த ஒரே செய்திதான். சமூக வலைத்தளம் பற்றிக் கொண்டு எரிந்தது. பொதுமக்கள் இரண்டு பேர் ஒன்றாக சேர்ந்தாலே இந்த பேச்சுதான்.. காவல்துறையின் விழி பிதுங்கியது. தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணை முடுக்கிவிடப்பட்டது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.

யார் கொலையாளி என்கிற ரீதியில் நடந்த விசாரணை காவல்துறைக்கு தலைவலியைத்தான் கொடுத்தது. காரணம்.. கொலை செய்த அனைவரும் இருபதிலிருந்து இருபத்தி ஐந்து வயதுக்குள் உள்ள பெண்கள்.. அனைவருமே பிரிட்டனிலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள். யார் இவர்கள்.. என்ன மோட்டிவ் என்று எதுவும் புரியவில்லை. ஆனால் விஷயம் ஏதோ பெரிது என்பதை மட்டும் உறுதியாக நம்பினார்கள்.

அதன் பிறகு தான், கொலை செய்யப்பட்டவர்களுக்கு இடையில் என்ன ஒற்றுமை இருக்கிறது என்பதை தோண்டினார்கள். அனைவருமே பழைய கோர்த்தா ஆட்கள்.. அப்படியென்றால் இப்போது நாயக்கின் குழுவினராக இருக்கலாம்.. விஷயம் ஓரளவுக்கு பிடிபடுவது போல் இருந்தது. மேலும் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

பிரிட்டனில் உள்ள ஒரு ஏஜென்சி, அந்நிய நாடுகளில் கொலைகள் செய்வதற்கென்றே பல நாட்டுப் பெண்களையும் பணியமர்த்தி - பயிற்சி கொடுத்து கிடான்ஸாக வைத்திருந்தார்கள் என்கிற விபரம் கிடைத்தது. வந்திருந்தது அந்த ஏஜென்சியின் ஆட்கள் தான் என்பதற்கோ அவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. கரணம் கொலை செய்ய வரும் யாரும் தன் சொந்த பெயரில் - சொந்த பாஸ்ப்போர்ட்டில் வரமாட்டார்கள். இனி கொலை செய்த அந்த பெண்களே பிரிட்டனிலிருந்து இறங்கி வந்து நாங்கள்தான் கொலை செய்தோம் என்று ஒப்புக் கொண்டாலே ஒழிய டெல்லி போலீஸ் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது.

கேஸ் அதலபாதாளத்தில் சென்று விழுந்தது. மீடியாக்கள் காவல்துறையை கழுவி ஊற்றினார்கள். சமூக வலைத்தளங்களில் காக்கிச்சட்டை மீம்ஸ் பல வைரலாகிக் கொண்டிருந்தன. கொலை செய்தது யார்.. செய்யச் சொன்னது யார் என்று தெரிந்தும் மெளனமாக கையைக் கட்டி கொண்டிருக்க வேண்டிய சங்கடமான சூழ்நிலையில் இருந்தது காவல்துறை.

அதை சகிக்க முடியாமல், தனிப்படையின் தலைமை அதிகாரி, அன்-அஃபிஷியலாக ஒரிஸாவிற்கு வந்து கோர்த்தாவின் தலைமை ஆலோசகரை நேரில் சந்தித்தார்.

“உங்கள் ஆட்கள் தான்.. அதாவது கோர்த்தாவின் ஆட்கள்தான் டெல்லியில் நடந்த கொலைக்கு காரணமா?” என்று நேரடியாகக் கேட்டார்.

அவர் அப்படி கேட்டதும் லேசாக சிரித்த கோர்த்தாவின் மூத்த ஆலோசகர், “அதை நீங்கதான் கண்டுபிடிக்கனும்” என்றார்.

அதிகாரியின் முகம் கறுத்தது. “நாங்க உங்களைத்தான் சந்தேகப்படறோம்” என்றார்.

“கொலை நடந்தது உங்க ஊர்ல.. கொலை செய்தது வெளிநாட்டுப் பொண்ணுங்க.. எங்களை சந்தேகப்படுகிறீர்களா! ஹா.. ஹா..” என்று வாய்விட்டு சிரித்தார். பிறகு, “சரி.. இப்போ நான் என்ன பண்ணனும்?” என்றார்.

“உங்க ஆளுங்க யாரையாவது சரண்டர் ஆக சொல்லுங்க.”

“எப்படி? வெளிநாட்டுப் பொண்ணுங்க மாதிரி வேஷம் போட்டு கொண்டா?” - நக்கலாகக் கேட்டார்.

கொலை செய்தவர்கள் அனைவரும் வெளிநாட்டுப் பெண்கள் என்பது ஊரறிந்த ரகசியம். அப்படி இருக்கும் போது இவர்களுடைய ஆட்கள் சரணடைந்து என்ன பிரயோஜனம்?

அதோடு, கோர்த்தாவிடம் இல்லாத குடூஸா.. அல்லது கிடான்ஸா.. அப்படி இருந்தும் இவ்வளவு செலவு செய்து வெளிநாட்டிலிருந்து கிடான்ஸை இறக்குமதி செய்தது எதற்கு? இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து சரண்டர் ஆகுவதற்காகவா?

கோர்த்தாவை பொறுத்தவரை சுரங்கத் தொழில் முக்கியம். டெல்லியில் வெளிப்படையாக ஆபரேஷன் செய்து மத்திய அரசை சங்கடத்திற்கு உள்ளாக்கி அவர்களோடு உரசிப்பார்க்க கோர்த்தாவின் தலைமை விரும்பவில்லை. அதே நேரம் ராகேஷ் சுக்லா மீதே கை வைக்க துணிந்தவர்களை பழி தீர்க்காமலும் விட முடியாது. அதனால் தான் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை ஆள் வைத்து செய்தார்கள். உள்நாட்டு ஆட்களாக இருந்தால் என்றைக்கு இருந்தாலும் தலைவலி என்று எண்ணி வெளியிலிருந்து ஹயர் செய்து காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டு ஹாயாக இருக்கிறார்கள். இது எதுவும் புரியாமல் நேரடியாக வந்து பேரம் பேசும் அந்த அதிகாரியின் புத்திசாலித்தனத்தை நினைத்து அவருக்கு சிரிப்பு வந்ததில் வியப்பேதும் இல்லை.

அவருடைய சிரிப்பையும் நக்கலையும் நிதானமாக உள்வாங்கி கொண்ட அந்த அதிகாரி இவர்களை ஒழித்துக்கட்டியே தீர வேண்டும் என்கிற சங்கல்பத்தை தனக்குள் எடுத்துக் கொண்டார்.

அதன் பிறகு சில நாட்களில் எப்படியோ லிங்கை பிடித்து பகவானை சந்தித்து, கோர்த்தாவையும், அர்ஜுனையும் மண்ணில் சாய்க்க முறையான வியூகம் ஒன்றை வகுத்துக் கொடுத்தார்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 41

அர்ஜுன் ஹோத்ராவின் கார் மிருதுளா படிக்கும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது. நேற்று இருந்த அதே சங்கடத்துடனும் தயக்கத்துடனும் காரிலிருந்து கீழே இறங்கினாள்.

“எனக்கு என்னவோ போல இருக்கு அர்ஜுன்.. கிளாஸுக்கு போகவே பயமா இருக்கு.”

“நா வேணுன்னா உள்ள வந்து பிரின்சிபால மீட் பண்ணி பேசவா?”

“வேண்டாம் வேண்டாம்.. நானே பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க” - அவனிடம் விடைப்பெற்று வகுப்பறைக்குச் சென்றாள்.

பாடம் எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளரின் முகம் இவளை பார்த்ததும் கடுமையாக மாறியது.

“ஒரு மாசமா எங்க போயிருந்த? நீ நினைக்கும் போது வர்றதுக்கும் போறதுக்கும் இது என்ன சத்திரமா இல்ல சந்தைக்கடையா?” என்று எரிந்து விழுந்தார்.

அவமானத்தில் குன்றிப் போய் தலை கவிழ்ந்து நின்றவள் மீது மேலும் பல வசைமொழிகளை அள்ளி வீசிவிட்டு,

“பிரேக்ல ப்ரின்சிபால போய் மீட் பண்ணு.. நாளைக்கு பேரண்ட்ஸ்கிட்டேருந்து லெட்டர் வாங்கிட்டு வரனும்” என்று கடிந்துக் கூறி உள்ளே அனுமதித்தார்.

குனிந்த தலை நிமிராமல் உள்ளே வந்த மிருதுளா ஏதோ உள்ளுணர்வு உந்த நின்று திரும்பிப் பார்த்தாள். பகீரென்றது! அங்கே இடுங்கிய கண்களுடன் விரிவுரையாளரை முறைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

அவள் நின்று திரும்பிப் பார்த்ததால் விரிவுரையாளரின் பார்வையும் வாயில் பக்கம் சென்றது. அங்கே நிற்பவனைக் கண்டதும் அவர் முகம் மிரண்டதை மிருதுளா கவனிக்கவில்லை. அவளுடைய பார்வைதான் அர்ஜுனிடமே இருந்ததே.

‘இவன் எதற்காக இங்கே வந்தான்! ப்ரொஃபஸர் திட்டியதை கவனித்திருப்பானா!’ - பட்ட அவமானம் இருமடங்காகத் தோன்றியது. உதட்டை மடித்து கடித்துக் கொண்டு விரிவுரையாளரின் பக்கம் திரும்பி, “எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்றாள்.

“ஆங்.. எஸ்.. கோ-அஹெட்..” - தடுமாற்றத்துடன் வந்து விழுந்தன அவர் வார்த்தைகள்.

மிருதுளா அர்ஜுனிடம் நெருங்கி, “எ..ன்..ன?” என்றாள்.

“உன்னோட போன்” - அவளிடம் அலைபேசியை நீட்டினான்.

தேவையே இல்லாத இந்த அலைபேசி அவளுக்கு கூடுதல் சுமையாகவே தோன்றியது. இதை வைத்துக்கொண்டு யாரிடம் பேசமுடிகிறது.. - விவாதம் செய்ய நேரமில்லாமல் அவன் கொடுத்த அலைபேசியை வாங்கி கொண்டு, “தேங்க்ஸ்.. கிளம்புங்க” என்றாள்.

அவனுடைய பார்வை மீண்டும் ஒருமுறை அந்த ப்ரொஃபஸரிடம் சென்று மீண்டது.

அர்ஜுன் கிளம்பியதும், “யார் அது?” என்று அவர் மீண்டும் மிருதுளாவிடம் பாய்ந்தார்.

“ஃபேமிலி ஃபிரண்ட் சார்..”

“ஃபேமிலி ஃபிரண்டா!” - பார்வையால் அவளை துளைத்தவர், “உன்னோட சேர்க்கை ஒன்னும் சரியில்ல.. படிக்கிற வயசுல படிப்பை மட்டும் பாரு.. வீணா போயிடாத” என்றார் எச்சரிக்கும் விதமாக.

கல்லூரி முடிந்து மிருதுளா வெளியே வரும் பொழுது கார் பார்க்கிங்லேயே அர்ஜுன் காத்திருந்தான். ஆச்சரியத்துடன் துள்ளிக் கொண்டு அவனிடம் ஓடியவள், “எப்போ வந்தீங்க?” என்றாள்.

அவளை வியப்புடன் பார்த்தவன், “உன்கூடத்தானே வந்தேன்” என்றான்.

“வாட்!” - அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

“என்ன?” - எதற்கு இத்தனை அதிர்ச்சி என்பது போல் குழப்பத்துடன் அவளை நோக்கினான் அர்ஜுன்.

“காலையிலிருந்து இங்கதான் இருக்கீங்களா!”

“ஆமாம்.. ஏன்?”

“அதை நான் கேட்கனும். எதுக்கு இங்கேயே இருக்கீங்க?”

“குழந்தை மாதிரி கேள்வி கேட்காத.. உன்னை அட்டாக் பண்ண இரண்டு தரம் முயற்சி நடந்திருக்கு. மூணாவது தரம் மேல போயிடுவ. உன்ன டார்கெட் பண்ணியிருக்க குடூஸ் உன் காலேஜ்லேயே கூட இருக்கலாம்” என்றான் தீவிரமாக.

“இங்கேயா! என்னோட காலேஜ்லேயா!” - அகலவிரிந்த விழிகளுடன் அவனை இமைக்காமல் பார்த்தாள். அவன் கூறுவதை அவளால் நம்பவே முடியவில்லை.

ஆந்திரா மண்ணில் காலடி வைத்ததுமே பாதுகாப்பை உணர்ந்தவள், ஒடிசாவிலிருந்து ஆந்திரா வரை ஆபத்து தன்னை பின்தொடர்ந்து வரக் கூடும் என்று எண்ணவில்லை.

அவன் சற்று மிகைப்படுத்தி கூறுகிறானோ என்று தோன்றினாலும், இரண்டு முறை சாவின் விளிம்பை தொட்டு மீண்டவளுக்கு முற்றிலும் அவன் கூறுவதை புறந்தள்ளவும் முடியவில்லை. கொஞ்சம் சந்தேகமும்.. கொஞ்சம் பயமும் கலந்த கலவையான உணர்வு அவள் அடிவயிற்றில் என்னவோ செய்தது.

சிறு நடுக்கத்துடன், “நிஜமாவே உங்களுக்கு அப்படி தோணுதா அர்ஜுன்?” என்றாள் அப்பாவியாக.

அவளை கனிவோடு பார்த்தவன், “உனக்கு அப்படி தோணலையா?” என்றான்.

“இதுவரைக்கும் தோணல.. ஆனா இப்போ கொஞ்சம் பயமாத்தான் இருக்கு” - என்றபடி பார்வையை சுற்றும் முற்றும் சுழலவிட்டாள்.

“இந்த பயம் நல்லதுதான். எச்சரிக்கையோடு இருப்ப.”

“இப்போ என்ன பண்ணறது? நீங்க டெய்லி இப்படி வந்து எனக்காக இங்க நிற்க முடியாதே!”

“ஏன் முடியாது?”

“ஏன் முடியாதா! இது காலேஜ்.. இங்க எப்படி? எல்லாரும் என்ன நினைப்பாங்க?”

“சரி காலேஜ் வேண்டாம்.. வீட்லேருந்து படி.”

“அங்க மட்டும் அட்டாக் பண்ணமாட்டாங்களா?”

“என்னை மீறி எவன் உன் மேல கை வைப்பான்?”

மீண்டும் விழிகள் விரிய ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள் மிருதுளா.

“வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்? ஏன் என்ன சொன்னாலும் இப்படி முழிக்கிற?”

“எங்க வீட்ல நீங்க எப்படி?”

“வாட்!” - புருவம் சுருக்கியவனுக்கு உடனே புரிந்துவிட்டது. முகம் கடுகடுக்க, “இங்க வந்த முதல் நாளே உன்னோட வீடு எதுன்னு உன்கிட்ட க்ளியரா சொல்லிட்டேன்” என்றான் அழுத்தமாக.

“ஆனா அது உங்க வீடு”

“கார்ல ஏறு..”

“அங்க எப்படி நான்..”

“கெட் இன்..”

“ஆ..வ்.. அர்ஜுன்.. என்.. என்ன இது!” - அழுத்தமாக அவள் கையைப் பிடித்து இழுத்து காருக்குள் தள்ளி கதவை அடித்து மூடியவனின் பார்வை சென்ற திசையில் வெறித்த கண்களுடன் அவர்களையே பார்த்தபடி அந்த ப்ரொஃபஸர் நின்றுக் கொண்டிருந்தார்.

“ஏன் இப்படி பண்ணுனீங்க?” - அவனுடைய கார் பிரதான சாலையில் ஏறி டிராஃபிக்கில் கலந்துவிட்டது.

“நீ ஏன் தேவையில்லாம ஆர்க்யூ பண்ணற?”

“உங்க வீட்ல நான் எப்படி ஸ்டே பண்ண முடியும்?”

“மகல்பாட்னால எங்க இருந்த?”

“அது வேற. அங்க எனக்கு வேற சாய்ஸ் இல்ல. ஒரு கெஸ்ட் மாதிரி தங்கியிருந்தேன். ஆனா இங்க அப்படி இல்ல. என்னோட அம்மா எனக்காக செட் பண்ணி கொடுத்த வீடு இருக்கு. அதைவிட்டுட்டு உங்க கூட வந்து தங்கினா, நாளைக்கு என்னோட அம்மாவே என்ன சொல்லுவாங்க?”

“அவங்க சொல்றதை கேட்கறதுக்கு நீ முதல்ல உயிரோட இருக்கனும்” - அவன் கூறுவதும் நியாயம் தான். மிருதுளா சிந்தித்தாள்.

“அர்ஜுன்.. நீங்க சொல்றது சரிதான். என்னோட உயிருக்கு ஆபத்து இருக்கு. அது எனக்கு நல்லா புரியாது. அதே சமயம் என்னால உங்க வீட்டுலேயும் தங்க முடியாது. இதுக்கு வேற ஏதாவது சொல்யூஷன் இருக்கா?”

“இதுக்கு ஒரே ஒரு சொல்யூஷன் தான்.. நீ என்னோட.. என் வீட்ல.. என் பாதுகாப்புலதான் இருக்கனும். டாப்பிக் க்ளோஸ்ட். நோ மோர் ஆர்க்யூமென்ட்ஸ்” - அந்த பேச்சுக்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

*******************

புதுடெல்லிக்கு வெளியே மக்கள் புழக்கம் குறைவாக உள்ள புறநகர் காபி ஷாப் ஒன்றில் தனிப்படை அதிகாரி அமர்ந்திருக்க, அவருக்கு எதிரில் தீவிர முகபாவத்துடன் பகவான் அமர்ந்திருந்தார்.

தனிப்படை அதிகாரி சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“இங்க - டெல்லியில சமீபத்தில சுட்டுக்கொல்லப்பட்ட ஆறு பேரும் நாயக் குழுவை சேர்ந்தவங்கன்னு எங்களுக்கு - அதாவது டெல்லி போலிஸுக்கு தெரியும். அவங்களை கொன்னது கோர்த்தா தான்னு நாங்க சந்தேகப்படறோம்.”

“எஸ்.. நாங்களும் அப்படித்தான் நினைக்கிறோம்” என்றார் பகவான்.

அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மோதலை பெரிதாக்க விரும்பினார் அந்த அதிகாரி. எனவே,

“அவங்களோட டார்கெட் இந்த ஆறு பேரும் மட்டும் இல்ல.. நீங்க எல்லாருமேதான். ஆபரேஷன் கண்டினியூ ஆகும்ங்கறது எங்களோட இன்டெலிஜென்ஸ் இன்ஃபர்மேஷன்..” என்று பொய் தகவலை உண்மை போலவே கூறினார்.

பகவானின் முகத்தில் சின்ன அதிர்வு தோன்றி மறைந்தது. சாதாரண மனிதனாக இருந்திருந்தால் கண்டுபிடித்திருக்க முடியாது. ஆனால் போலீஸ் கண்கள் அந்த அரை நொடி பொழுதில் தோன்றி மறைந்த மாற்றத்தை துல்லியமாக கண்டுக்கொண்டது. வெற்றி வெகு தொலைவில் இல்லை என்கிற எண்ணத்துடன் மேலும் தொடர்ந்தார்.

“டெல்லியில இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கறதை நாங்க விரும்பல. அதனாலதான் உங்களை எச்சரிக்க நினைத்தோம்.”

“தேங்க்ஸ்”

“இதை எப்படி ஹாண்டில் பண்ண போறீங்க?”

“நாங்க சாதாரணமானவங்க.. பெருசா என்ன செஞ்சுட முடியும்? எங்களுடைய ஆட்களை எச்சரித்து கவனமாக இருக்கச் சொல்லுவோம்” என்றார்.

பதுங்கியிருக்கும் புலியை சாதாரணமாக எண்ணிவிட முடியாது என்பதை நன்கு அறிந்த அதிகாரி, “வேற எதுவும் செய்யப் போறதில்லையா?” என்றார்.

“வேறன்னா? எதை சொல்லறீங்க?” - குழப்பமாக கேட்டார்.

தனிப்படை அதிகாரி சற்று நேரம் மெளனமாக அமர்ந்திருந்துவிட்டு, “கோர்த்தா ஆளுங்க உங்களை ஏதாவது செய்யறதுக்கு முன்னாடி, நீங்க முந்திக்கிற உத்தேசம் ஏதாவது இருக்கா?” என்றார்.

“அதெப்படி முடியும்? ஒருமுறை செஞ்ச முயற்சியே தோல்வியில முடிஞ்சிடிச்சு. இப்போ திரும்ப ட்ரை பண்ணறதுன்னா ரிஸ்க் அதிகம். அதோடு ஒடிசாவுக்குள்ள நாங்க நுழையிறது இயலாத காரியம்” என்றார்.

அவர் கூறுவது உண்மைதான். அவர்கள் விழிப்போடு இருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் மீது கை வைக்க நினைப்பது, தானாக சென்று முதலையின் வாய்க்குள் தலையை கொடுப்பது போன்றது.

ஆனால் அதிகாரி வேறு விதமாக சிந்தித்தார்.

“உங்க ஆளுங்க உள்ள போனாதானே பிரச்சனை?”

“என்ன சொல்றீங்க?”

“நீங்க யாரும் ஒடிசாவுக்குள்ள நுழையாமலே காரியத்த முடிச்சிடுங்க.”

“அதெப்படி முடியும்” - பகவான் இப்படி கேட்டதும் அதிகாரியின் முகத்தில் புன்னகை தோன்றியது. ‘சில நேரங்களில் புலிகளுக்கு கூட வேட்டையாட சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்பது போன்ற புன்னகை.

“இப்போ வரிசையா உங்க ஆளுங்கள போட்டுத்தள்ளினது கோர்த்தான்னு உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். ஆனா நிரூபிக்க முடியாது.. ஏன்னா உங்க ஆளுங்கள டார்கெட் பண்ணினது பிரிட்டன் பொண்ணுங்க. அதே ஃபார்முலாவை நீங்களும் பயன்படுத்தலாமே” என்றார்.

பகவான் சிறிது நேரம் யோசித்தார் - தங்களுடைய தாக்குதலுக்கு நாயக் குழுவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கோர்த்தா ஊகித்திருக்கும். காரணம் பகவான் எப்படி சிந்திப்பார் என்பதை கோர்த்தா நன்கு அறியும். இந்த நேரத்திலவர் பதுங்குவார் என்பதுதான் அவர்களுடைய ஊகமாக இருக்கும். இந்த நேரத்தில் பாய்ந்தால்..? ஒடிசாவிற்குள்ளேயே பாய்ந்தால்? அவர்களுடைய ஃபார்முலாவிலேயே பாய்ந்தால்? - இதை நிச்சயம் அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். வெளிநாட்டுக்காரர்களின் நடமாட்டம் ஒடிசாவிற்குள் அதிகம்.. அவர்களோடு கலந்து டார்கெட்டை சாய்ப்பது வெள்ளைத்தோல் வாடகை கொலைகாரகளுக்கு மிகவும் எளிது - நல்ல யோசனையென்றே தோன்றியது.

நம்பிக்கையுடன் அதிகாரியை பார்த்தார்.

“இந்தமாதிரி காரியங்களை செய்யிற ஆளுங்க கூட உங்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கா?”

“யோசிக்கனும்..” - சிந்தனையில் அவர் புருவம் சுருங்கியது.

அவர் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லாமல், “இவரை பிடிங்க.. காரியத்தை கச்சிதமா முடிச்சு கொடுப்பார்” என்று அதிகாரி ஒரு ஆளை கைகாட்டிவிட்டார்.

அவர் கூறிய பெயரை கேட்டதும் வியப்புடன், “அவரா!” என்றார் பகவான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 42

“உல்ஃப்” என்று போலீஸ் அதிகாரி கூறியதை கேட்டதும், “அவரா!” என்று வியந்தார் பகவான். அந்த மனிதரின் உண்மையான பெயரைவிட ‘ஓநாய்’ என்கிற அவருடைய பட்டப்பெயர் நிழல் உலகிலும், உளவு வட்டாரங்களிலும் மிகவும் பிரசித்தியானது. அவர் ஒரு வாடகை கொலையாளி. வாடகை கொலையாளி என்றால் லோக்கல் கூலிப்படை அல்ல, தனக்கென்று ஒரு திறமையான டீமை வைத்துக்கொண்டு சிஸ்டமேட்டிக்காக செயல்படும் இன்டர்நேஷனல் கொலையாளி. பிறப்பால் இந்தியர்தான்.. தொழில் துவங்கியதும் இந்தியாவில்தான்.. ஆனால் இப்போது அவர் ஒரு துருக்கி பிரஜை.

ஒரு கொலையாளி வெளிநாட்டில் சென்று கால் ஊன்றுவதும் அங்கிருந்து தன் தொழிலை தொடர்வதும் சாதாரண விஷயம் அல்ல. அப்படி செய்ய வேண்டும் என்றால் தொடர்புகள் பெரிதாக இருக்க வேண்டும். இருந்தது.. ஓநாய்க்கு துருக்கியில் மட்டும் அல்ல, இன்னும் சில முக்கிய நாடுகளிலும் தொடர்புகள் இருந்தது. தொடர்பு என்றால் அரசாங்கத்தோடு நேரடி தொடர்பல்ல.. உளவுத்துறை அதிகாரிகளுடன் அண்டர் டேபிள் தொடர்பு இருந்தது.

தங்கள் நாட்டுக்குள் எந்த ஆபரேஷனும் செய்யக் கூடாது.. தங்கள் நாட்டு பிரஜைகள் மீது வெளிநாட்டிலும் கை வைக்க கூடாது என்கிற எழுதப்படாத ஒப்பந்தத்துடன், ஓநாய் போன்ற திறமையான ஆட்களை பயன்படுத்திக்கொள்வதும் அதற்கு கைமாறாக தங்கள் நாடுகளில் அவருக்கு தேவைப்படும் சலுகைகளை பெற்றுக் கொடுப்பதுமான அண்டர் டேபிள் தொடர்புகள் உளவுத்துறைக்கு வழக்கமானதுதான். ஒருவகையில் பார்க்க போனால், உளவுத்துறையும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கூலிப்படைதானே.. அரசாங்கத்தின் கூலிப்படை. எனவே அவர்களுக்குள் தொடர்பு இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அப்படியென்றால் பகவான் எதற்காக வியந்தார்? அதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது.

‘கோர்த்தா ஒரு நபரை குறிவைத்துவிட்டால் அவருடைய கதை முடிந்துவிட்டது என்று அர்த்தம்’ - இந்த கூற்றை மாற்றி எழுதியவர் தான் அந்த ஓநாய். ஆம்! கோர்த்தாவால் எட்டுமுறை குறிவைக்கப்பட்டு தப்பித்தவர். அதுவே ஆரம்ப காலத்தில் அவருடைய அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது.

கோர்த்தாவின் பளபளக்கும் வெற்றி பலகையில் ஒரு பெரும் கரும்புள்ளியை வைத்த இந்த ஓநாய் இன்று வரை கோர்த்தாவின் ஹிட் லிஸ்டில் இருக்கும் முக்கியமான ஆள்.

கோரப்பற்களும் கொடும்பசியுமாக தனக்காக காத்திருக்கும் கோர்த்தாவை எதிர்த்து அவர் எப்படி களம் இறங்குவார் என்பதுதான் பகவானின் வியப்புக்கு காரணம்.

ஆனால் அதிகாரியோ, “பேசி பார்க்காமல் யூகத்தில் முடிவெடுக்காதீர்கள்” என்றார்.

அவர் கூறுவதில் ஏதோ குறிப்பு இருப்பது போல் தோன்ற ‘சரி’ என்பது போல் தலையசைத்தார் பகவான்.

பகவான் எண்ணியபடியே அதிகாரி ஒரு குறிப்போடுதான் ‘பேசி பார்க்காமல் முடிவெடுக்காதீர்கள்’ என்று கூறினார். காரணம், பகவானை சந்திக்க வருவதற்கு முன்பே, தன்னுடைய மேலதிகாரியை வைத்து இன்னொரு பெரும்புள்ளியை பிடித்து ஓநாயை தொடர்பு கொண்டுவிட்டார் அந்த அதிகாரி. அந்த பெரும்புள்ளி, இந்திய உள்நாட்டு உளவுத்துறையில் பணியாற்றும் ஒரு முக்கிய நபர்.

ஓநாய் இதற்கு முன் இந்தியாவில் பல ஆபரேஷன்களை செய்திருந்தாலும் இப்போதெல்லாம் அவரால் அவ்வளவாக இங்கு கால்பதிக்க முடியவில்லை. அரசாங்கம் ஒரு பக்கம் கோர்த்தா இன்னொரு பக்கம் என்கிற இருமுனை தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒதுங்கியிருந்தார். இப்போது அவருடைய ஒரு எதிரியை அழிக்க இன்னொரு எதிரியின் உதவி கிடைக்கிறது. அதுவும் கூலியோடு.. கசக்குமா என்ன? “ஆலோசனை செய்கிறேன்” என்று கூறினார்.

நிழலைக் கூட சந்தேகிக்கும் நிழல் உலக மனிதர் அந்த உல்ஃப். அவ்வளவு சுலபமாக சம்மதித்துவிடுவாரா? இதில் ஏதேனும் சதி இருக்கக்கூடுமா என்கிற கோணத்தில் யோசித்தார். துருக்கியில் இருந்தபடியே இந்தியாவில் கோர்த்தாவின் நிலவரத்தை அலசி, பகவானின் நோக்கத்தை ஆராய்ந்து, போலீஸ் எதற்காக உதவுகிறார்கள் என்பதை விசாரித்து அனைத்திலும் திருப்தியடைந்த பிறகு ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார்.

********************

மெல்ல மெல்ல மிருதுளாவின் உறக்கம் கலைந்தது. கண்விழிக்க மனமில்லாமல் பஞ்சு மெத்தையின் இதத்தை அனுபவித்தபடி இன்னும் ஆழமாக போர்வைக்குள் சுருண்டாள். நாசியை ஏதோ ஒரு நறுமணம் வருடியது. கலையா உறக்கத்துடன் கண்களைத் திறந்தாள். குளியலறை கதவு திறந்திருந்தது. பார்வையை பக்கவாட்டில் திருப்பினாள். சட்டென்று மூளையின் விழிப்புநிலை நன்றாகவே உயிர்பெற்றது.. சோம்பலும் தூக்கமும் பறந்தோடிவிட கண்களை அகல விரித்தாள்.

அங்கே இடுப்பில் சுற்றிய ஒற்றை துண்டை தவிர, நீர்த்திவலைகள் பூத்த வெற்றுடம்புடன் கண்ணாடிக்கு எதிரில் அவளுக்கு முதுகுக்காட்டி நின்று கொண்டிருந்தான் அர்ஜுன். முகம் சிவக்க பதட்டத்துடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள் மிருதுளா.

‘ஐயோ! இங்கு என்ன செய்கிறான்!’ - இதயம் படபடக்க போர்வைக்குள் மறைந்தபடி ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து திருட்டுப் பார்வை பார்த்தாள்.

மென்புன்னகையுடன் அவள் உறங்கும் அழகை கண்ணாடி பிம்பத்தில் ரசித்தபடி ஈரத்தலையை துவட்டியவன், பாடி ஸ்பிரேயை பறக்கவிட்ட போதுதான் அவள் சோம்பலுடன் கண் விழித்தாள். அந்த நொடியிலிருந்து இப்போது போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டு கள்ளப்பார்வை பார்க்கிறாளே.. அதுவரை அனைத்தையும் அவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் அவன் பார்க்கவில்லை என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அர்ஜூனின் இதழ்கள் லேசாக விரிந்தன.

அந்த சின்னப்புன்னகை கண்ணில் பட்டுவிட, ‘சிரிக்கிறான்! ஏன்? ஏன் சிரிக்கிறான்?’ என்கிற பதட்டத்துடன் மீண்டும் போர்வைக்குள் முழுவதுமாக தலையை நுழைத்துக் கொண்டாள் மிருதுளா.

இப்போது வரிசைப்பற்கள் பளீரிட வெளிப்படையாகவே சிரித்தவன், “நா ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன்” என்றான்.

மாட்டிக் கொண்டோம் என்று அவளுக்கு புரிந்துவிட்டது. ஆனாலும் புரியாதது போல், “என்ன?” என்றாள் போர்வையை விலக்கிவிட்டு.

“டைரக்ட்டாவே பார்க்கலாம்”

“நா.. நா.. எதையும் பார்க்கலையே..” - மீண்டும் போர்வைக்குள் போய்விட்டாள். அவன் சிரித்தான்.

“நீ பார்த்தாலும் எனக்கு ஒன்னும் இல்ல”

“பப்பி ஷேம்” - அவள் மெல்லிய குரலில் கூற அவன் அறையே அதிரும்படி சிரித்தான்.

அவள் போர்வையை விலக்காமல் கேட்டாள். “இங்க என்ன பண்றீங்க?”

“ஒரு பாத்ரூம்தானே இருக்கு? குளிக்க வந்தேன்” - அவளுடைய சங்கடம் அவனுக்கு வெகு ரசனையாக இருந்தது.

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவள், “சரி நா வெளியே வெயிட் பண்றேன்” என்று கூறியபடி சட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்து மின்னல் வேகத்தில் அறையிலிருந்து வெளியே ஓடினாள். அர்ஜுனின் வெடிச்சிரிப்பு அவளை துரத்தியது.

மேல்மூச்சு வாங்க ஹாலில் இருந்த அந்த சின்ன சோபாவில் வந்து அமர்ந்தாள் மிருதுளா. அனந்த்பூர் வந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகிறது. இருவரும் ஒரு நொடி கூட பிரிவதில்லை. அவளுடைய கல்லூரி நேரத்தில் கூட காவல்காரன் போல் கார் பார்க்கிங்கிலேயே காத்துக்கிடந்தான் அர்ஜுன். அவளை ஒரு மகாராணி போல் நடத்தினான். பகலெல்லாம் அவளுக்கு ஊழியம் செய்வதையே தொழிலாகக் கொண்டான். இரவில் படுக்கையறையை அவளுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு ஹாலில் வெறும் தரையில் போர்வையை விரித்து படுத்துக் கொண்டான். இப்படியெல்லாம் ஒருநாளும் நடந்ததில்லை.. இன்றுதான்.. மீண்டும் முகம் சிவந்தாள்.

“என்ன ஆச்சு? திடீர்ன்னு இவ்வளவு வெட்கப்படற?” என்று கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான் அர்ஜுன்.

மிருதுளா மெல்ல அவன்புறம் திரும்பினாள். உடைமாற்றியிருந்தான். ‘ஹப்பாடா!’ - அவளிடமிருந்து நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது.

சமையலறையில் வேலை செய்தபடியே சிரித்தான் அர்ஜுன்.

“எதுக்கு சிரிக்கிறீங்க?” - அவன் என்னவோ சொல்லப் போகிறான் என்று தெரிந்தும் வாயடக்கம் இல்லாமல் கேட்டாள் மிருதுளா.

“நல்ல ரெஸ்பாண்ட்ஸ்” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான்.

“ஆங்?” - அவளுக்கு புரிவது போலும் இருந்தது.. புரியாதது போலும் இருந்தது.

“சின்ன பொண்ணா இருக்கியேன்னு நெனச்சேன்.. பெருசா ஒன்னும் கஷ்ட்டப்பட தேவை இருக்காதுன்னு நினைக்கிறேன்” - படக்கென்று கண்ணடித்துவிட்டான்.

கப்பென்று மூச்சை அடைத்தது அவளுக்கு. அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் படபடத்தன. தொண்டை உலர்ந்து போக, உமிழ்நீரை கூட்டி விழுங்கினாள்.

‘ராஸ்கல்’ - மனதில் தோன்றுவதை வாய்விட்டு கூற முடியாமல் “நா.. குளிச்சுட்டு.. வரேன்..” என்று தப்பித்து ஓடி குளியலறையில் அடைந்து கொண்டாள். அவனோடு நெருக்கமாக இருந்திருக்கிறாள் தான். ஆனால் இந்த சரசமான பேச்சுக்களெல்லாம் பழக்கமே இல்லாதது.

‘திடீரென்று என்ன ஆயிற்று அவனுக்கு? இப்படியெல்லாம் பேசுகிறானே!’ - அவள் சமநிலைக்கு மீண்டு வர வெகு நேரம் ஆனது.

மிருதுளா குளித்துவிட்டு வரும் போது காலை உணவு மேஜையில் தயாராக இருந்தது. வழக்கம் போல இருவரும் சேர்ந்தே உணவருந்தினார்கள். அர்ஜுன் இன்று நல்ல மூடில் இருந்தானோ என்னவோ.. உணவின் போதும் கூட அவளை சீண்டி முகம் சிவக்க வைத்துக் கொண்டே இருந்தான்.

ஒன்பது மணியானதும் அவள் பேக்பேகை மாட்டிக் கொண்டு காலணியை அணிந்துகொள்ள அவன் கார் சாவியை எடுத்தான். வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வெளியேறினார்கள். மிருதுளாவை கல்லூரி வளாகத்தில் இறக்கிவிட்டு விட்டு, வழக்கம் போல் அவள் வகுப்பறையை நோட்டமிட்டபடி கார் பார்க்கிங்கில் காத்திருந்தான் அர்ஜுன்.

கடந்த ஒரு மாதமாக மிஸ் செய்திருந்த பாடங்களில் எழுந்த சந்தேகங்களை மிருதுளா ப்ரொஃபஸரிடம் கேட்ட போது, “இப்போது நேரத்தை வீணடிக்க வேண்டாம். பிரேக் டைமில் ஸ்டாப் ரூமில் வந்து கேள்” என்று கூறினார்.

அதன்படி அன்றைய மதிய உணவு வேளையில் ஆசிரியர்கள் அறைக்குச் சென்ற மிருதுளா திகைத்தாள். அந்த இருவரை தவிர அறையில் வேறு யாரும் இல்லை. வியர்வையும் பதட்டமுமாக ப்ரொஃபஸர் அமர்ந்திருக்க, இறுகிய முகமும் சிவந்த விழிகளுமாக அர்ஜுன் வெளியே வந்து கொண்டிருந்தான். இவளை பார்த்ததும் அவன் முகத்தில் சின்னதாய் ஓர் அதிர்வு தோன்றி மறைந்தது.

“இங்க என்ன பண்றீங்க?” - குழப்பத்துடன் கேட்டாள் மிருதுளா.

“ஒரு சின்ன பிசினஸ்.. கம்” - அவள் கையைப் பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தான்.

“நீங்க போங்க அர்ஜுன். எனக்கு சார்கிட்ட கொஞ்சம் டவுட் கேட்கனும்.”

“அவர் இப்போ உன்னோட டவுட்டை கிளியர் பண்ற மூட்ல இல்ல.. அப்புறமா கேட்டுக்க” - அவளை இழுக்காத குறையாக கேண்டீனுக்கு இழுத்துச் சென்று உணவருந்த வைத்தான்.

அப்போதுதான் அன்நோன் நம்பரிலிருந்து அவனுக்கு அந்த அழைப்பு வந்தது. அழைத்தவர் ப்ளூ ஸ்டார்.

தான் இல்லை என்றால் மிருதுளாவை ஆபத்திலிருந்து யார் ஒருவரால் காக்க முடியும் என்று அர்ஜுன் நம்பினானோ அதே ப்ளூ ஸ்டார் தான் இப்பொழுது அழைத்திருந்தார்.

பகவான் மற்றும் போலீஸ் அதிகாரியின் திட்டத்தை புட்டு புட்டு வைத்தார். அனைத்தையும் பொறுமையாக கேட்டபடி, மிருதுளாவுக்கு கூட்டையும் பொரியலையும் பரிமாறிக் கொண்டிருந்த அர்ஜுன் இறுதியில் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னான்.

“வெயிட்டிங்..” - அவன் முகத்தில் கபட புன்னகை கவிந்திருந்தது.

*******************

கோர்த்தாவின் மூத்த வழக்கறிஞர் அஞ்சானி லால் டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரியை சந்திக்க வந்திருந்தார். உடன் தனிப்படை அதிகாரியும் இருந்தார். அவர் என்ன சொல்ல போகிறார் என்று அதிகாரிகள் இருவரும் காத்திருக்க, அவர்கள் முன் ஒரு கோப்பை எடுத்து வைத்தார் அஞ்சானி லால்.

அவர் கொடுத்த கோப்பை புரட்டிப்பார்த்த மூத்த அதிகாரி புருவம் சுருக்கினார். ஓநாய் என்கிற பெயரால் அழைக்கப்படும் வாடகை கொலையாளியின் வரலாற்றை தொகுத்து அடங்கியிருந்தது அந்த பைல்.

“இதெல்லாம் எங்களுக்கு தெரிஞ்சுது தானே? எதுக்காக இதை இப்போ எங்ககிட்ட கொண்டு வந்திருக்கீங்க?” - உள்நாட்டு உளவுத்துறை அதிகாரியை பிடித்து, பாதுகாப்பு அதிகாரிக்கும் ஓநாய்க்கும் தொடர்பை ஏற்படுத்தியவர் இந்த உயர் அதிகாரிதான். அவருக்கு அனைத்து உள்விவரங்களும் தெரிந்திருந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியாதவர் போல் முகத்தை வைத்துக் கொண்டார்.

அதை பார்த்து மனதிற்குள் நக்கலாக சிரித்துக் கொண்ட அஞ்சானி லால், “இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச விஷயமா இருக்கலாம் சார்.. உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை இப்போ நான் உங்களுக்கு சொல்றேன்” என்றார்.

“என்ன?” என்றார் அதிகாரி.

“இந்த உல்ஃப் இன்னும் நான்கைந்து நாட்களில் டெல்லிக்கு வரவிருக்கிறார். அவரால் இந்தியர்களின் உயிருக்கு பெருமளவில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக எங்கள் ஆட்களுக்கு..” என்றார் நேரடியாக.

அதிகாரியின் இறுகிய இதயமே ஒரு கணம் நின்று துடித்தது. வெறும் நான்கே பேருக்கு தெரிந்த இந்த விஷயம் எப்படி கோர்த்தாவின் செவியை எட்டியது என்று புரியவில்லை அவருக்கு. அவருடைய பார்வை பாதுகாப்பு அதிகாரியை சந்தித்தது. அவரும் அதிர்ச்சியில்தான் இருந்தார். அப்படியென்றால் உளவுத்துறை அதிகாரியா? அல்லது பகவான் மூலம் தெரிந்திருக்குமா? - நேரடியாக அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆனால் எங்கோ.. ஏதோ.. ஓட்டை இருக்கிறது. - எதிரில் இருப்பவரை மறந்து சிந்தனையில் உலகை சுற்றியது அவர் மனம்.

அஞ்சானி லால் தொடர்ந்தார்.. “அவரால் எங்களை பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது. ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை இப்போது உங்களால் நன்றாகவே ஊகிக்க முடியும்” என்றவர் ஒரு நிமிடம் இடைவெளி விட்டு, “நாங்கள் சட்டத்தை கையிலெடுக்க விரும்பவில்லை. அதனால் தான் உங்களை அலர்ட் செய்ய வந்தேன்” என்றார்

அதிகாரியின் முகம் கறுத்தது.

“உங்கள் உளவு வட்டத்தை முடுக்கிவிட்டு விபரம் சேகரித்துக்கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று மென்புன்னகையுடன் கூறிய அஞ்சானி லால் கைகூப்பிவிட்டு எழுந்தார்.

இப்போது இருதலைக்கொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்டது காவல்துறை.

கோர்த்தாவை உறக்கத்தில் இருக்கும் போது அடித்தால்தான்.. விழித்திருக்கும் போது அருகில் நெருங்கக் கூட முடியாது. இப்போது விழித்திருப்பது மட்டும் அல்லாமல், அந்த உல்ஃபின் வருகைக்காக காத்து கொண்டும் இருக்கிறார்கள். நிச்சயம் தாக்குவார்கள்.. அவனை ஒரேடியாக மேலோகத்திற்கு அனுப்பிவிட்டால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் கடத்திவிட்டால்? இதில் யார் யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்துவிட்டால்? அவ்வளவுதான்.. அதிகாரிகளின் சந்ததியே வேரறுக்கப்பட்டுவிடும். நெற்றியில் துளிர்த்த வியர்வையை துடைத்துக் கொண்டார்.

அந்த உல்ஃபும் ஒன்றும் சளைத்தவன் அல்ல.. பெரிய கெட்டிக்காரன் தான். இப்போது இன்னும் வளர்ந்திருக்கிறான். முழுமையாக இல்லை என்றாலும் கோர்த்தாவின் ஓரிரு ஆட்களையாவது முடித்துவிட்டான் என்றால் அதுவும் பிரச்சனை.. ‘அப்போதே எச்சரித்தேனே.. என்ன கிழித்துக் கொண்டிருந்தாய்’ என்று வந்து விடுவான் அந்த ராகேஷ் சுக்லா. கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்துவிட்டு, ‘இப்போது என்ன செய்வது?’ என்பது போல் எதிரில் அமர்ந்திருந்த பாதுகாப்பு அதிகாரியை பார்த்தார். இருவரும் சற்று நேரம் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அதே நேரம் இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டதாகவும் அடுத்து தங்களுடைய பக்கத்திலிருந்து என்ன செய்ய வேண்டும் என்றும் அர்ஜுனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் அஞ்சானி லால்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 43

தில்லி சர்வதேச விமான நிலையம் வழக்கம் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பணியாளர்களும், பயணிகளும், வழியனுப்ப வந்தவர்களும் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். மேலோட்டமாக பார்த்தால் தெரியாது.. ஆனால் கண்களை சற்று கூர்மையாக்கினால் பொதுமக்களோடு மக்களாக காவல்துறையினரும் கலந்து நடமாடிக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளலாம். ஓரிருவர் அல்ல.. பலர்.. கிட்டத்தட்ட இருபது பேர் கழுகுப்பார்வையும், இறுகிய முகமுமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். அனைவருமே நன்கு பயிற்சி பெற்ற திறமைசாலிகள்.

துருக்கி இஸ்தான்புல் நகரிலிருந்து வந்திறங்கிய விமானத்திலிருந்து வெளியேறிய பயணிகள் இமிக்ரேஷனை முடித்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

காவலர்களிடம் பரபரப்பு தெரிந்தது. அவர்கள் அனைவருடைய பார்வையும் அந்த ஒரு மனிதனையே தேடிக் கொண்டிருந்தது. அவரும் வந்தார்.. உல்ஃப்.. உடன் மூன்று பெண்கள். மூவருமே கிடான்ஸ்.

அந்த நேரம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவர்.. அல்லது இருவராகக் கூட இருக்கலாம்.. உல்ஃபை தாக்கப் போகிறார்கள். அல்லது கடத்தப் போகிறார்கள். அதை தடுக்க வேண்டும். அதுதான் அந்த காவலர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அசைன்மென்ட்.

அவ்வளவு பேரையும் சோதனை செய்ய முடியாது.. வேறு என்ன செய்யப் போகிறார்கள்? எப்படி உல்ஃபை காப்பாற்ற போகிறார்கள்?

காவலர்களின் கூரியப் பார்வை ஒரு மானசீக வட்டமாக உல்ஃபை சுற்றி வந்து கொண்டிருந்தது. அந்த வட்டத்திற்குள் யார் வந்தாலும் காவலர்களின் பார்வைக்குள் வருவார்கள்.

அரைவல் ஹாலில் ஒரு பெரியவர் ஏதோ விளம்பரத்திற்காக போகிற வருகிற அனைவரிடமும் துண்டுப்பிரசுரம் கொடுத்துக் கொண்டிருந்தார். உல்ஃப் அங்கே வந்த போது அவரிடமும் ஒன்றை கொடுத்தார். கொடுக்கும் போது ஒரு கணம் உல்ஃபின் கண்களும் அந்த பெரியவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.

கையிலிருந்த துண்டு சீட்டை மேலோட்டமாக பார்த்துவிட்டு கசக்கி தன்னுடைய கோட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டபடி தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உல்ஃப் விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லாமல், உள்ளேயே இருந்த ஒரு உணவகத்திற்குள் நுழைந்தார். காரணம் அந்த துண்டுப்பிரசுரத்தின் ஒரு மூலையில் சிறிய எழுத்துக்களில் ஆங்கில வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது.

“கேர்ஃபுல்.. கோ டு த ரெஸ்டாரெண்ட்” (கவனம்.. உணவகத்திற்கு செல்லுங்கள்) என்கிற வாக்கியத்திற்கு கீழ் மொட்டையாக ‘எஸ்’ என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. ‘எஸ்’ என்றால் ‘ஷேடோ’ அவர்களுடைய அந்த ஆபரேஷனின் பெயர். தற்போது தன்னை வழி நடத்துவது போலீசார்தான் என்பதை அவர் உடனே புரிந்துக்கொண்டார்.

தன் கிடான்ஸுடன் உணவகத்திற்குள் நுழைந்த உல்ஃப் மெனுவை பார்த்து ஏதோ சில ஐட்டங்களை ஆர்டர் செய்தார். சற்று நேரத்தில் அவர் ஆர்டர் செய்த உணவு வந்தது. உணவு ஆறாமல் இருக்க ட்ரே அரைவட்ட வடிவ மூடி ஒன்றினால் மூடப்பட்டிருந்தது.

உல்ஃப் மூடியைத் திறந்தார். உணவு தட்டும், கூடவே துணியால் சுற்றப்பட்ட இன்னொரு பொருளும் இருந்தது. பார்த்ததுமே அனுபவம் வாய்ந்த அவர் கண்கள் அதை அடையாளம் கண்டு கொண்டன. அது ஒரு கைத்துப்பாக்கி.

அவர் ஒரு தொழில்முறை கொலைகாரர் என்பதால் எப்போதும் அவரிடம் ஆயுதத்திற்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இப்போது அவர் இருப்பது விமானநிலையம். விமானப்பயணத்தில் ஆயுதம் கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. எனவே விமானநிலையத்திற்கு வெளியேதான் அவர் ஆயுதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதை அறிந்தே அவருக்கு போலீசார் உதவுகிறார்கள்.

உணவு ட்ரேயில் துப்பாக்கியை பார்த்ததும் அதை சர்வசாதாரணமாக தன்னுடைய பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொண்டார் உல்ஃப். சாப்பிட்டு முடித்ததும் பில் வந்தது. பில்லின் மூலையில் “வாட்ச் அவுட் ஃபார் ஜி” என்று எழுதப்பட்டிருந்தது.

‘ஜி’ என்றால் கோர்த்தா என்பதை புரிந்துக்கொள்ள அவருக்கு நொடி பொழுதுகூட தேவைப்படவில்லை. கோர்த்தா தன்னை குறிவைத்திருக்கிறது என்று போலீசார் எச்சரிப்பதை புரிந்துக்கொண்ட உல்ஃப், உணவிற்கு உண்டான பணத்தை செலுத்திவிட்டு உணவகத்திலிருந்து வெளியே வந்தார். அவருடைய அனுபவம் மிக்க கண்கள் சுற்றத்தை ஆராய்ந்துக் கொண்டே வந்தன. அப்போதுதான் அது நடந்தது.

அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த பெண் தன் கைப்பைக்குள் கைவிட்டாள். அதே நொடி உல்ஃபும் தன் கோட் பாக்கெட்டிற்குள் கைவிட்டார். அரை நொடிக்கும் குறைவான நேரம்தான். அதற்குள் இருவரும் ஒருவரை ஒருவர் குறிவைத்து துப்பாக்கியை நீட்ட, அதே நொடி அந்த பெண்ணுக்கு பின்னால் வந்த மனிதர் அவள் மீது வந்து மோத, அவள் நிலைதடுமாறி கீழே விழுந்தாள். பொட்டுவெடி வெடித்தது போல் ‘பட்டென்று’ ஒரு சின்ன சத்தம் மட்டும் கேட்டது. சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி.. யார் யாரை சுட்டது?

அவளை மோதி கீழே தள்ளிய போலீசார் அவசரமாக ஆராய்ந்தார். உல்ஃப் வேகமாக தன் கிடான்ஸுடன் வெளிப்புறம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். கீழே விழுந்து கிடந்த பெண், கால் தடுமாறி விழுந்துவிட்டாள் என்கிற நினைவில் மற்ற பயணிகள் அவளுக்கு உதவிக்கு வந்தார்கள். தூரத்தில் இருந்த மற்ற போலீசாரும் அவளை நோக்கி வந்தார்கள். ஆனால் அவர்கள் உதவி செய்ய வரவில்லை. அவளை கைது செய்ய வந்தார்கள்.

அதுவரை டார்கெட் மட்டுமே யார் என்று தெரிந்திருந்தது அவர்களுக்கு. இப்போது தாக்க வந்தது யார் என்பதும் தெளிவாகிவிட, தாக்க வந்தவளை கைது செய்யும் நோக்கத்துடன் அவர்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்த போது அவள் தன் கையிலிருந்த கைப்பையை ஓங்கி தரையில் அடித்தாள்.

அடுத்த நொடி பெரிய சத்தத்துடன் அந்த இடமே புகைமூட்டமானது. வீரியம் குறைவான, கண்ணீர் புகை குண்டு.. மக்கள் சிதறி அங்கும் இங்கும் ஓடினார்கள். ஒரே கூச்சல்.. குழப்பம்.. கலவரம்.. எல்லாம் முடிந்து புகை மூட்டமும் அடங்கிய போது அந்த பெண் அங்கே இல்லை.

உல்ஃபும் அவருடன் வந்த பெண்களும் ஓட்டமும் நடையுமாக விமானநிலையத்திலிருந்து வெளியேறிய போது, சீறி வந்த கார் ஒன்று அவர்களுக்கு எதிரில் வந்து நிற்க அதன் கதவுகள் திறந்து கொண்டன.

இப்படிப்பட்ட நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது உல்ஃப் போன்ற ஆட்களுக்கு நன்றாகவே தெரியும். காரணம் இது போன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளை அவர்கள் கடந்துதான் வந்திருப்பார்கள்.

விமானநிலையத்திற்குள்ளேயே எச்சரிக்கப்படுகிறார்.. அங்கேயே கையில் ஆயுதம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.. அதற்கு தகுந்தாற் போல் அவர் மீது கொலை முயற்சியும் நடக்கிறது. சரியான நேரத்தில் அந்த முயற்சியும் முறியடிக்கப்படுகிறது என்றால் அவரை யாரோ காப்பாற்ற தீவிரம் காட்டுகிறார்கள் என்றுதான் அர்த்தம். அப்படி காப்பாற்ற முனைகிறவர்கள் அவர் தப்பிச் செல்லவும் நிச்சயம் ஏற்பாடு செய்திருப்பார்கள். இந்த காரும் அவர்களுடைய ஏற்பாடாகத்தான் இருக்கும். எதிரிகளின் காராக இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அனுபவம் மிக்க உல்ஃப் அரைநொடியில் முடிவெடுத்து முன் சீட்டில் பாய்ந்து ஏறிக்கொள்ள, அவரோடு வந்த பெண்கள் பின்னால் ஏறி கொண்டார்கள். கார் வேகமெடுத்து பறந்தது.

நான்கரை மணி நேர பயணத்தின் முடிவில் அந்த கார் ஜெய்பூர் சர்வதேச விமானநிலையத்தில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கும் போது ட்ரைவர் உல்ஃபிடம் ஒரு கவரை கொடுத்தார். அந்த கவரில் துருக்கி செல்ல நான்கு விமான டிக்கெட்டுகள் இருந்தன.

*******************

அன்று சனிக்கிழமை.. காலை எழுந்ததிலிருந்தே அர்ஜுன் கணினியில் பிஸியாக இருந்தான். ஹெட்போனை மாட்டிக் கொண்டு வரிசைகட்டி நின்ற ஆடியோ பைல்களை கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். ஆள் வைத்து செய்ய முடியாத ஏதோ முக்கியமான வேலை என்று அவளுக்கு புரிந்தது.

காலை உணவை அவளுக்கு வெளியில் ஆர்டர் செய்துவிட்டு, அவன் அவித்த முட்டையும் பழங்களும் எடுத்துக் கொண்டான். மதியமும் டெலிவரி பாய் அவளுக்கு மட்டும் ஒரு பிரியாணி பொட்டலத்தை கொண்டு வந்து கொடுத்த போது அவளுக்கு சங்கடமாக இருந்தது.

எந்த சூழ்நிலையிலும் அவளுடைய தேவைகளை அவன் மறந்ததில்லை. அவ்வளவு முனைப்போடு அவளை கவனித்துக் கொண்டான். ஆனால் அவனை கவனிக்கத்தான் யாரும் இல்லை. மூன்று நாட்கள் பட்டினி கிடந்தாலும் ஏன் என்று கேட்க ஒருவரும் இல்லை. ஏனோ அந்த எண்ணமே அவளுக்கு வலித்தது. அவனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறை துளிர்த்தது. சமையலறைக்குள் நுழைந்தாள். வேலையாட்கள் இல்லாத வீடு என்றே சொல்லமுடியாது. அவ்வளவு சுத்தமாக இருந்தது சமையலறை.

‘நீட் ஃப்ரீக் மேன்’ என்று முணுமுணுத்துக் கொண்டே அரிசியை கழுவி எலக்ட்ரிக் குக்கரில் வைத்தாள்.

‘சாப்பிடுவானா?’ - மனம் சஞ்சலப்பட்டது. ‘பார்த்துக்கொள்ளலாம்’ - மறுத்தால் பேச்சால் எப்படி அவனை சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே அடுப்பில் உருளைக்கிழங்கை வேக வைத்தாள். சற்று நேரத்தில் தயிர்சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் ரெடியானது.

சமையலறையில் அவள் ஏதோ உருட்டிக் கொண்டிருப்பதை அவன் கண்டுகொள்ளவில்லை. போரடிக்கிறது போலும்.. ஏதோ செய்து கொண்டிருக்கிறாள் என்பதற்கு மேல் எதையும் யோசிக்காமல் வேலையில் கவனமாக இருந்தவன், அவள் ட்ரேயை கொண்டு வந்து டீப்பாயில் வைத்த போது ஆச்சரியப்பட்டான்.

ஒரு கிண்ணத்தில் ஆர்டர் செய்த பிரியாணி, அதே போன்ற இன்னொரு கிண்ணத்தில் தயிர்சாதம், சிறிய கிண்ணங்களில் உருளைக்கிழங்கு வறுவல், குருமா, முட்டை, பச்சடி என்று அனைத்தும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

வாய் திறந்து எதுவும் கேட்காமல் ‘என்ன இது?’ என்பது போல் அவளை ஏறிட்டான் அர்ஜுன். அந்த பார்வையே அவனுடைய மறுப்பை தெளிவாக கூறிவிட, அவனை எப்படியாவது உண்ண வைக்க வேண்டும் என்கிற உத்வேகம் பிறந்தது அவளிடம்.

“எனக்கு தெரியும்.. சாப்பாடு விஷயத்துல நீங்க யாரையும் நம்ப மாட்டீங்க.. அதுக்குதான் இரண்டு பேருக்கும் ஒன்னாவே கொண்டு வந்திருக்கேன். சேர்ந்தே சாப்பிடலாம். எனக்கு நானே எதுவும் செஞ்சுக்க மாட்டேன்ல..” - படபடவென்று பேசினாள்.

எதிர்பார்ப்பையும் ஆவலையும் கண்களில் தேக்கி தன்னை இமைக்காமல் பார்ப்பவளை சுவாரசியமாக நோக்கினான் அர்ஜுன். அந்த கண்கள் மகிழ்ச்சியில் மலர்வதை காண வேண்டும் என்று தோன்றியது.

உடனே லேப்டாப்பை மூடி ஓரமாக வைத்துவிட்டு, “ப்ளேட் கொண்டு வா” என்றான்.

அவன் எதிர்பார்த்தபடியே அவள் முகம் தாமரையாய் மலர்ந்தது. கண்கள் மகிழ்ச்சியில் மின்னின. ஆனந்தத்துடன், “இதோ..” என்றபடி துள்ளிக் கொண்டு சமையலறை பக்கம் ஓடினாள். சில வினாடிகளிலேயே இரண்டு தட்டுகளோடு திரும்பி வந்தாள். அவளுடைய பரபரப்பையும் புன்னகையையும் ரகசியமாய் ரசித்தபடி இருவருக்கும் பரிமாறினான் அர்ஜுன்.

உள்ளே ஒரு குரல் எச்சரித்துக் கொண்டே தான் இருந்தது. ஆனால் அதை அவன் அலட்சியப்படுத்தினான். அவளால் தனக்கு ஆபத்து வராது என்று நம்பினான். அந்த நம்பிக்கை அவனுக்குள் ஒருவித அமைதியை கொண்டுவந்தது. காலையிலிருந்து இருந்த ப்ரெஷர் கூட வெகுவாக குறைந்துவிட்டது போல் தோன்றியது. மிகவும் ரிலாக்ஸாக உணர்ந்தான்.

அவளுடைய அருகாமை, பார்வை, பேச்சு, சிரிப்பு அனைத்தும் அவனை மகிழ்வித்தது. அதிகம் பேசிக்கொள்ளாமல் அமைதியாகவே இருவரும் உணவருந்தினார்கள். அப்போது அவனுடைய அலைபேசி அழைத்தது. எடுத்து பார்த்தான். அன்நோன் நம்பர்.. நம்பர் தெரியாததாக இருந்தாலும் அழைக்கும் நபர் யார் என்பது அவனுக்கு தெரிந்தே இருந்தது.. அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான்.

“உல்ஃபை பேக் பண்ணியாச்சு..” - அந்த பக்கத்திலிருந்து ஒலித்தது ப்ளூ ஸ்டாரின் கனத்த குரல்.

“பேக் பண்ணியாச்சுன்னா.. பாடி-பேக்ல இல்லையே?” - அவன் குரலில் சிரிப்பிருந்தது.

அவனுடைய கேலியை ரசித்ததற்கு அடையாளமாக அந்த பக்கத்திலிருந்து ஒரு அழுத்தமான அமைதி மட்டுமே கிட்டியது. பிறகு, “நல்ல மூட்ல இருக்க போலருக்கு..” - உணர்வற்ற அதே கனத்த குரல்.

ரசனையோடு மிருதுளாவை பார்த்தான் அர்ஜுன். உதட்டோரம் ஒளித்து வைத்த புன்னகையுடன், “எஸ்..” என்று பெருமிதத்தோடு பதிலளித்தான்.

மீண்டும் ஒரு சின்ன அமைதிக்குப் பிறகு, “கேர்ஃபுல்” என்கிற எச்சரிக்கையுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

உல்ஃபை திருப்பி அனுப்பிவிட்டோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் போக்கு காட்டிவிட்டு, டொமஸ்டிக் ஃப்ளைட் எடுத்து இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களுக்கு அந்த நால்வரும் தனித்தனியாக பறந்தார்கள்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 44

அர்ஜுன் மற்றும் மிருதுளா இருவரின் உலகமும் மற்றவரை சுற்றியே சுழலத் துவங்கியிருந்தது. காலை நேர ஜாகிங்கில் ஆரம்பித்து காபி, டிபன் என்று தொடரும் அவர்களுடைய இணைந்த பயணம் மாலை வாக்கிங் வரை வந்து இரவு உணவு வரை நீளும். அதற்கு பிறகும் கூட இருவருக்கும் உறங்க செல்ல மனம் வராது. ஏதாவது கதை பேசியபடி வராண்டாவில் அமர்ந்திருப்பார்கள். நிலவொளியும் குளிர்தென்றலும் நேசம் கொண்ட நெஞ்சமுமாக அழகாய் கழியும் நேரத்தை அனுபவித்தார்கள்.

அதுமட்டும் அல்ல. அர்ஜுன் அவளுக்கு குத்துசண்டை சொல்லிக் கொடுத்தான். தப்பும் தவறுமாக சண்டையிட்டு அடிபட்டு கொள்பவள் வெகுண்டு அவனிடம் எகிறி குதிப்பாள். அவளுடைய குழந்தை கோபத்தை ரசித்து, வித்தைக்காரன் போல் அவளை தூக்கி தலைகீழ் சுற்றி இறக்கி சத்தமாக சிரிப்பான் அவன்.

துப்பாக்கி சுட கற்றுக் கொடுத்தான். ஹெட்செட்டை மீறி காதை அதிரும் சத்தத்தில் இலக்கை தவறவிட்டுவிட்டு அவன் சொல்லித்தருவது சரியில்லை என்று காலை உதறுவாள் மிருதுளா. அவள் சிறுபிள்ளை தனத்தை கண்டு சிரிக்கும் அர்ஜுன், அவள் கன்னத்தை வலிக்க கிள்ளியிழுத்து கொஞ்சுவான்.

அவள் அடிக்கடி சமைப்பதும் அதை அவன் தயங்காமல் சுவைப்பதும் கூட நடந்தது. இருவருக்குள்ளும் நெருக்கமும் நம்பிக்கையும் வெகுவாய் அதிகரித்திருந்தது. அப்படியே இரண்டு வாரங்கள் உற்சாகமாக கழிந்தது. அதன்பிறகுதான் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணியிருக்கும்.. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் முடிந்து அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பிரதான சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்த அர்ஜுன், அடிக்கடி கவனம் சிதறி மிருதுளாவை திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தான். கல்லூரி முடிந்து வந்து காரில் ஏறியதிலிருந்தே, ஏதோ சிந்தனையும் குழப்பமுமாக அமைதியாகவே இருந்தாள்.

“என்ன ஆச்சுன்னு சொன்னாதானே தெரியும்..?” - பத்துமுறை கேட்டும் அவளிடமிருந்து பதில் வராததையடுத்து குரலில் சற்று அழுத்தத்தைக் கூட்டினான்.

அதற்கும் அவள் அசைந்து கொடுக்கவில்லை. “ப்ச்.. ம்ஹும்..” என்று உச்சுக்கொட்டி ‘ஒன்றும் இல்லை’ என்பது போல் தலையை குறுக்காக அசைத்துவிட்டு பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவள் தன் கண்களை சந்திக்க மறுக்கிறாள் என்று உணர்ந்த அர்ஜுன், அடுத்து வந்த திருப்பத்தில் ஸ்டியரிங் வீலை திருப்பி டிராபிக் இல்லாத சாலையில் காரை ஓரம்கட்டி நிறுத்தினான்.

சற்று நேரம் எதையும் உணராமல் தன் போக்கில் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவள், ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகே கார் நின்றுக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

குழப்பத்துடன் அவனை திரும்பிப் பார்த்து, “ஏன் ஸ்டாப் பண்ணியிருக்கீங்க?” என்றாள்.

அவள் பக்கம் நன்றாக திரும்பி அவள் முகத்தை ஆழமாக நோக்கிய அர்ஜுன், “என்கிட்ட சொல்லக்கூடாத விஷயமா?” என்றான்.

சட்டென்று அவள் முகம் வெளுத்தது. கண்களில் கலக்கம் தெரிந்தது. “இ..இல்லையே..” என்றாள் தடுமாற்றத்துடன்.

விஷயம் ஏதோ முக்கியமானது என்பதும் அதை தன்னிடம் பகிர்ந்துகொள்ள அவள் தயங்குகிறாள் என்பதும் அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. உடல் இறுக ஓரிரு நிமிடங்கள் அவளை வெறித்துப் பார்த்தவன் பிறகு சாலையை நோக்கி பார்வையை திருப்பினான். சிந்தனையில் அவன் புருவங்கள் முடிச்சிட்டன.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
திடீரென்று கடுமையாக மாறிவிட்ட அவன் முகத்தை திகைப்புடன் பார்த்த மிருதுளா, “அர்ஜுன்..” என்று தயக்கத்துடன் அழைத்தாள்.

அவன் திரும்பியே பார்க்கவில்லை. வெகு அழுத்தமாக அமர்ந்திருந்தான். பிறகு சாலையை பார்த்தபடியே, “நா உன்ன நம்பினேன்” என்று கூறியவன் மெல்ல அவள் பக்கம் திரும்பி, “நீயும் என்னை நம்பறேன்னு நெனச்சேன்” என்றான் வெறுமையாக.

“அஃப்கோர்ஸ் அர்ஜுன்.. ஐ பிலீவ்..” - அவசரமாக விளக்கம் சொல்ல முயன்றவளை, “டோன்ட்..” என்று குரலை உயர்த்தி இடைமறித்தவன், ஒரு வெறித்த பார்வைக்குப் பிறகு “டோன்ட்.. ஸே எனிதிங் அன்டில் யூ மீன் இட்..” என்றான் அழுத்தம் திருத்தமாக.

‘உண்மையாக உணராமல் எதையும் சொல்லாதே’ - உதடுகளை அழுந்த மூடினாள். உண்மை சுட்டது. அவனை நம்புகிறேன் என்று சொல்கிறவள் உண்மையில் நம்பியிருந்தால் அந்த விஷயத்தை மறைத்திருக்க மாட்டாளே! அப்படியென்றால் அவனுடைய பேச்சில் என்ன தவறு? அவனுடைய கோபத்தில் என்ன தவறு? குற்றமுள்ள நெஞ்சம் குத்தியது. வார்த்தைகள் வற்றி போய்விட இமைக்காமல் அவனை பார்த்தாள்.

விடைத்த நேர் நாசியும் கனல் வீசும் கண்களுமாய் அவனும் அவளை நேருக்கு நேர் பார்த்தான். வெகு நேரம் அந்த பார்வையை அவளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உதட்டை கடித்துக் கொண்டு தலை கவிழ்ந்தாள்.

கண்களை மூடித்திறந்து தலையை அழுந்தக்கோதி, ஏமாற்றத்தை ஜீரணிக்க முயன்றான் அர்ஜுன். அவள் பர்ஸை திறந்து ஒரு காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். அதில் ஏதோ ஒரு போன் நம்பர் எழுதியிருந்தது.

அவனை மீறி யாரோ அவளை நெருங்கிவிட்டார்கள். அதைத்தான் அவள் மறைக்க முயன்றிருக்கிறாள்! - நடந்ததை ஊகித்தவனின் முகம் தணல் போல் சிவந்தது.

“யாருன்னு தெரியல. முதல் தரம் இன்னைக்குத்தான் அவனை பிரேக் டைம்ல பார்த்தேன். திடீர்ன்னு வந்தான்.. இந்த பேப்பரை கைல கொடுத்து, ‘ஆபத்துல இருக்க. இந்த நம்பருக்கு கால் பண்ணு. அர்ஜுனுக்கு தெரிய வேண்டாம்ன்னு’ சொல்லிட்டு போய்ட்டான்” - நடந்ததை அப்படியே ஒப்புவித்தாள்.

“சோ.. யாருன்னே தெரியாத ஒருத்தன் சொன்னதை நம்பி என்னை சந்தேகப்பட்டுட்ட.. இல்ல?” - கண்கள் இடுங்க உள்ளடங்கிய குரலில் வினவினான்.

அவனுடைய பார்வையும் குரலும் வயிற்றை பிசைய, “இல்ல அர்ஜுன். அப்படி இல்ல.. நா ஏதோ குழப்பத்துல..” என்று விளக்கம் கொடுக்க முயன்றவளை இடைமறித்து பேசினான்.

“ரிஸ்கிங் மை லைஃப், டு டைம்ஸ் உன்ன சேவ் பண்ணியிருக்கேன். மறந்துட்ட இல்ல?”

அவன் கூறிய உண்மையும் அதை கூறியபோது அவன் முகத்திலிருந்த கசந்த புன்னகையும் அவள் மனதை கசக்கி பிழிந்தது.

உண்மைதானே! அவளுக்காக உயிரை பணயம் வைத்திருக்கிறான். குண்டடி பட்டிருக்கிறான். இரத்தம் சிந்தியிருக்கிறான். கொலை கூட செய்திருக்கிறான். இன்னும் எத்தனையோ.. அவனை சந்தேகப்படலாமா? கனவில் கூட அவளுக்கு அந்த எண்ணம் எழுந்திருக்கக் கூடாது. - நன்றியுணர்ச்சியும் குற்றவுணர்ச்சியும் மனதை பிசைய கலங்கிப்போனாள்.

தன் மீதே ஆத்திரம் எழுந்தது. அழுகையில் கண்கள் கலங்கியது. “சாரி அர்ஜுன். ஏதோ ஒரு கன்பியூசன்ல அப்படி இருந்துட்டேன். ஐம் ரியலி சாரி” - இதயம் வலிக்க தவிப்புடன் மன்னிப்பு கோரினாள்.

அவன் மறுப்பாக தலையசைத்தான். “டோன்ட் பி சாரி. உன் மேல எந்த தப்பும் இல்ல. நா மாஃபியா மேன். கொலைகாரன். நம்பறது கஷ்டம்தான். நா எதிர்பார்த்திருக்கக் கூடாது. தப்பு எம்மேலதான். மாத்திக்கிறேன்” - இறுகிய குரலில் அமைதியாக கூறிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

அவனுடைய அமைதியின் ஆழம் என்ன என்பதை அடுத்து வந்த நாட்களில் அறிந்துக் கொண்டாள் மிருதுளா.

அர்ஜுனும் மிருதுளாவும் ஒரே வீட்டில்தான் இருந்தார்கள். ஆனால் தனித்தனியாக வாழ்ந்தார்கள். அவளுடைய உணவு, உறக்கம், விழிப்பு எதிலும் அவன் அக்கறை காட்டுவதில்லை.

ஜாகிங், சண்டை பயிற்சி, துப்பாக்கி சுடுதல் அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு கடுமையான உடற்பயிற்சியில் கூடுதல் நேரம் செலவழித்தான். அவளோடு சேர்ந்து செய்யும் வேலைகளை தனியாக செய்தான் அல்லது செய்வதையே தவிர்த்து அவளை ஒதுக்கினான்.

வீட்டில் ஓய்வாக இருக்கும் போது கணினியில் ஆழ்ந்தான். கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் போதும் வரும் போதும் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு அவள் அருகாமையை அலட்சியப்படுத்தினான்.

தனிமையில் தத்தளித்து போன மிருதுளா அவனுடைய புறக்கணிப்பை தாளமுடியாமல் வலிய வந்து பேசினாள். அவனோ கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்துவிட்டு மௌன கவசத்தை மாட்டிக்கொண்டான்.

வீடே ஓவென்றிருந்தது. பேச்சில்லை.. சிரிப்பில்லை.. சந்தோஷமில்லை.. எங்கும் வெறுமை சூழ்ந்திருந்தது. அவனுடைய இயல்பான பேச்சுக்கும், சின்ன சிரிப்புக்கும் அவள் ஏங்கினாள். அவனுடைய கண்டிப்பும் அக்கறையும் இல்லாமல் பிடியிழந்து பரிதவித்தாள்.

இருவருக்கும் மத்தியில் விழுந்த மௌனத்திரை இரும்புத்திரையாக மாறி கொண்டிருப்பதை உணர்ந்து காயப்பட்டாள். இதை சரி செய்யவே முடியாதோ என்று கலங்கி கண்ணீர்விட்டாள். ஏன் இப்படி செய்துவிட்டோம் என்று புழுங்கினாள். இந்த விலகல் பெரிதாகப்போகிறது என்கிற எண்ணம் அவளை அச்சுறுத்தியது. இரவெல்லாம் உறங்க முடியவில்லை. அதிலும் அன்று அவன் நடந்து கொண்ட விதம் அவள் நம்பிக்கையை நொறுக்கிவிட்டது.

என்னதான் கோபமாக இருந்தாலும் பேசாமல் ஒதுக்கினாலும் அவளை சுற்றித்தான் அவன் இருப்பான். ஆனால் அன்று அவளை வீட்டில் தனியே விட்டுவிட்டு, செல்லும் இடத்தைக் கூட சொல்லாமல் வெளியே சென்றான். அவளுக்கு உள்ளே வலித்தது. அவன் கோபத்தை வெல்ல முடியாமல் மெளனமாக இருந்தாள். விரைவிலேயே திரும்பி வந்துவிடுவான் என்று எதிர்பார்த்தாள்.

ஆனால், இரவு வெகு நேரம் ஆகியும் அவன் வீடு திரும்பவில்லை. அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தவித்துப்போனாள் மிருதுளா. அவனுடைய ஒதுக்கமும் புறக்கணிப்பும் மறந்து போய் அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டதோ, அசம்பாவிதம் நேர்ந்துவிட்டதோ என்று கலங்கினாள். நிலை கொள்ளாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். ஜன்னலை எட்டியெட்டிப் பார்த்தாள். வாசலில் போய் நின்றாள். நேரமாக ஆக மூச்சுமுட்டியது. நெஞ்சே அடங்கிவிடும் போலிருந்தது. ‘அர்ஜுன்-அர்ஜுன்’ என்று உருப்போட்ட மனம் ஊரில் உள்ள தெய்வங்களையெல்லாம் வேண்டி களைத்தது.

நள்ளிரவை தாண்டி ஓரிரு மணி நேரங்கள் கடந்திருக்கும்.. நெஞ்சுக்குழிக்குள் பந்தாய் உருண்டுக் கொண்டிருக்கும் பயத்தோடு வாசலில் நின்ற மிருதுளா, இன்னும் கொஞ்சம் வெளியே வந்து சாலையின் இருபுறமும் பார்வையை வீசினாள். தூரத்தில் ஒரு காரின் ஹெட்லைட் ஒளி தெரிந்தது. சுருக்கென்று உள்ளே ஓர் உணர்வு பாய்ந்தது. ‘அவன் தான்’ என்று இதயம் சொன்னது. மூச்சை பிடித்துக் கொண்டு அவனுடைய கார்தானா என்று பார்த்தாள். எதிர்பார்ப்பில் நெஞ்சம் விம்மி வெடித்துவிடுவது போலிருந்தது. தொண்டைக்குழிக்குள் ஏதோ அடைத்தது. கண்களை கரித்தது. உதடு துடித்தது. அவள் பார்வை விலகவில்லை. கார் அருகில் வந்தது. அவன்தான்.. - அதுவரை அடைபட்டிருந்த கண்ணீர் மடைதிறந்து, அருவியாய் கன்னத்தில் வழிந்தது.

அவளை ஒதுக்கி காரை உள்ளே செலுத்தி நிறுத்தியவன் அவள் நிற்பதையே அறியாதவன் போல் விறுவிறுவென்று உள்ளே சென்றான். நொறுங்கிப்போனாள் மிருதுளா. அது வரை நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்த பயம் துக்கமாக உருமாறியது. இமைக்காமல் அவன் முதுகையே பார்த்துக் கொண்டு நின்றவள், அவன் கண்ணிலிருந்து மறைந்ததும் தளர்ந்து போய் அங்கேயே ஒரு கல்லில் அமர்ந்தாள்.

நிராகரிப்பு மிக மோசமானது. மரணத்தைக்கூட விதி என்று ஏற்றுக்கொண்டுவிடும் மனித மனம் நிராகரிப்பை அத்தனை சுலபமாக ஏற்பதில்லை. மிருதுளாவுக்கும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எத்தனை பாசமாக இருந்தவன்! ஒரே நாளில்.. ஒரே சம்பவத்தில் இப்படி மாறிவிட்டான். அவ்வளவுதானா! அவன் காட்டிய அக்கறை.. அன்பு.. எல்லாம் அவ்வளவே தானா! இப்போது.. இங்கு.. இந்த இடத்தில் யாரேனும் அவளை சுட்டு தள்ளிவிட்டு போனாலும் கண்டுகொள்ள மாட்டானா! அப்போதும் கூட யாரோ ஒருத்தி செத்துக்கிடக்கிறாள் என்றுதான் அலட்சியமாக தோளை குலுக்கிவிட்டு போவானா? - தாங்க முடியவில்லை.

எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்தவள். பெற்ற அன்னையை காணாமல் தேடிக் கொண்டிருப்பவள். இன்னும் சந்திக்க வேண்டியவை ஏராளம். வாழ்க்கை நீண்டுகிடக்கிறது. எதுவுமே அவள் நினைவில் இல்லை. அவன் மட்டுமே வாழ்க்கை என்பது போலவும் அவனை இழப்பது அனைத்தையுமே இழப்பது போலவும் தோன்ற, அவனுக்கும் அவளுக்குமான அந்த இடைவெளி பூதாகரமாக அவள் எதிரில் எழுந்து நின்றது. உள்ளுக்குள் எரிமலை போல் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு பொங்கியது. அழுகை.. கோபம்.. ஆத்திரம்.. அனைத்தையும் மீறிய வேறொரு விசித்திர உணர்வு. விருட்டென்று எழுந்து வேகமாக உள்ளே சென்றாள்.

கோபத்தை விட அகங்காரம் தான் அர்ஜுனை ஆட்கொண்டிருந்தது. அவள் எப்படி அவனிடம் ஒன்றை மறைக்க நினைக்கலாம் என்கிற அகங்காரம் நெஞ்சுக்குள் தீயை வைத்தது போல் எப்போதும் எரிந்துக் கொண்டே இருந்தது. விலகி நின்றான். அவள் வருந்துவது தெரிந்தது. ஆனாலும் இறங்கி வர மனமில்லை. சந்தேகம் என்பது சாதாரணமானதல்ல. அதை விட்டுவைக்கக் கூடாது, வேரறுக்க வேண்டும். இனி ஒருமுறை அவனுக்கு எதிராக அவள் சிந்திக்கவே கூடாது. - சற்று முரட்டுத்தனம்தான். ஆனால் அதுதான் அவன் சுபாவம்.

வேண்டுமென்றுதான் சொல்லாமல் வெளியே சென்றான். உறங்காமல் காத்துக்கொண்டிருப்பாள் என்று தெரிந்து தான் வெகுநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்தான். ஆனால் ஒன்றை மட்டும் அவன் எதிர்பார்க்கவில்லை.

நள்ளிரவில்.. அரவரமற்ற சாலையில்.. தனிமையில்.. அவன் வரும் திசையையே பார்த்துக் கொண்டு நின்றவளைக் கண்டு அவன் உள்ளம் குலுங்கிவிட்டது. நிச்சயம் அவன் இதை எதிர்பார்க்கவில்லை. கோபம் அகங்காரமெல்லாம் நொடியில் உடைந்து நொறுங்கிவிட்டது. ஆனால் ஈகோ விடவில்லை. வரட்டு பிடிவாதத்துடன் அவளை ஒதுக்கிவிட்டு உள்ளே சென்றான். பின்னாலேயே வந்துவிடுவாள் என்று தான் நினைத்தான். ஆனால் அவள் வரவில்லை. கண்ணாடி வழியாக பார்த்தான். தாயில்லா சிறுமி போல் காலை கட்டிக் கொண்டு குறுகி அமர்ந்திருந்தாள். கூர்மையாய் ஏதோ ஒன்று உள்ளே பாய்வது போல் உணர்ந்தான். பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. உதடுகளை அழுந்த மூடினான்.

அவள் திடீரென்று எழுந்து வீட்டை நோக்கி வந்தாள். அவனும் சட்டென்று திரும்பி படுக்கையறைக்குள் நுழைந்து சட்டையை அவிழ்த்தெறிந்துவிட்டு பனியனோடு நின்று வோர்டரோபில் மாற்றுடையை தேடினான்.

வீட்டிற்குள் வந்த மிருதுளா அவன் படுக்கையறையில் இருப்பதை உணர்ந்து உள்ளே வந்தாள். மனதில் அலையடித்துக் கொண்டிருந்தாலும் அவளை கண்டு கொள்ளாதவனாக தன் போக்கில் அலமாரியை குடைந்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

அவள் ஏதாவது சொல்லுவாள் அல்லது சண்டை கூட போடுவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் செய்ததோ வேறு.

கண்ணீரும் கம்பலையுமாக முகம் சிவக்க அவன் எதிரில் வந்து நின்றவள், துணிகளோடு உறவாடிக் கொண்டிருந்த அவன் கையை வலுக்கட்டாயமாக பிடித்து உள்ளங்கையில் அழுத்தமாக முத்தமிட்டாள். அவன் திகைப்பும் ஆச்சரியமுமாக அவளை பார்த்தான். இப்போது அவள் கண்டுகொள்ளவில்லை. அவனுடைய அடுத்த கையையும் எடுத்து அங்கேயும் முத்திரையை பதித்தாள். பிறகு இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்து மாற்றி மாற்றி முத்தமிட்டுவிட்டு அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு நெஞ்சில் இதழ் பதித்தாள்.

அவன் உடல் விறைத்து நிமிர்ந்தது. சிலை போல் இறுகி நின்றான். அவன் பதிலுக்கு தன்னை அணைக்கவில்லை, எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை என்பதை சில நொடிகளிலேயே உணர்ந்தவளுக்கு துக்கம் பொங்கியது. அடக்க முடியாமல் வெடித்து அழுதாள். அழுகையினூடே, “சா..ரி.. ப்..ளீ..ஸ்.. சாரி.. ப்ளீ..ஸ்..” என்று திக்கலும் திணறலுமாக முணுமுணுத்தாள்.

style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>அவன்style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>இளகவேstyle='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>இல்லைstyle='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>. style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>அப்படியேstyle='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>சிலைstyle='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>போல்style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>நின்றான்style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>. “style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>டாக்style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>டுstyle='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>மீ.. ப்ளீஸ்.. lang=TA style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>செத்துக்கிட்டிருக்கேன்style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>.. ஐம் டையிங்style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> பிகாஸ் ஆஃப் யுவர்style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> நெக்லெக்ட்.. பேசுங்கstyle='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>.. style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>ப்ளீஸ்style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>..” - style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>நொறுங்கிப்போனlang=TA style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:
windowtext;mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>மனதிலிருந்துstyle='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>தேம்பலும்style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>தவிப்புமாகstyle='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>வந்துstyle='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>விழுந்தனstyle='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'> style='font-family:"Latha",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>வார்த்தைகள்style='font-family:"Nirmala UI",sans-serif;color:black;mso-color-alt:windowtext;
mso-ansi-language:EN-US;mso-bidi-language:TA'>.
சற்றுநேரம் எந்த உணர்வும் இல்லாமல் மரக்கட்டை போல் நின்றவன் பிறகு கனத்த குரலில் ஒற்றை வார்த்தையை உதிர்த்தான் “ஏன்?”

அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவன் பார்வையும் அவள் முகத்தில் தான் இருந்தது. இமைகள் தடித்து கண்கள் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது. முகமெல்லாம் வீங்கியிருந்தது. சற்று நேரத்தில் வெகுவாய் மாறிவிட்ட அவள் முகத்தை வெறுமையாக பார்த்தவன், “ஏன் இந்த அளவுக்கு அஃபக்ட் ஆகற?” என்றான் நிதானமாக.

அவனுடைய கேள்வி புரிந்தது. ஆனால் பதில் சொல்ல தெரியவில்லை. மூளை சிந்திக்கும் திறனற்று போயிருந்தது. எதுவுமே சொல்லாமல் தேம்பலுடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை விளக்கி நிறுத்தி, “டூ யு லவ் மீ?” என்றான்.

ஓரிரு நொடிகள் அவனையே பார்த்த மிருதுளா, ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள். அவன் முகமும் உடலும் மேலும் இறுகியது. கண்கள் ஏதோ புரிந்துக்கொள்ள முடியாத உணர்வில் பளபளத்தது.

“ஸே இன் வோர்ட்ஸ்..” - அவள் தோள்களை அழுந்தப்பற்றி உலுக்கியவன், “வார்த்தையால சொல்லு.. என்னை லவ் பண்றேன்னு வாய்விட்டு சொல்லு” என்றான்.

“ஐ.. லவ்.. யூ..” - காற்றாய் வெளிப்பட்டது அவள் குரல்.

“அகைன்..” - அவன் பிடி மேலும் இறுகியது. கண்கள் சிவந்தன.

“ஐ லவ் யூ.”" - வலியில் முகம் சுளித்தாலும் அவள் குரலில் அழுத்தம் கூடியது.

“ஒன்ஸ் அகைன்..” - முகமெல்லாம் .பரவிப்படர்ந்த உணர்வலைகளுடன் அவளை உலுக்கினான். அவன் உடல் நடுங்கியது. குரல் கரகரத்தது.

அவனுடைய ஆக்ரோஷமான வெளிப்பாடு அவளுக்கு விசித்திரமாக இருந்தது. ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான் என்று புரியவில்லை. ஆனால் அவள் மனதில் அவன் இருப்பது உண்மை.. அந்த உண்மையை சொல்வதில் அவளுக்கு எந்த தயக்கமும் இல்லை.

“ஐ லவ் யு.. ஐ லவ் யு.. ஐ லவ் யு.. ஐ லவ் யு சோ மச் அர்ஜுன்” - ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் திருத்தமாக அவள் உச்சரித்த போது முகத்தில் தண்ணீர் தெளித்தது போல் சட்டென்று அவன் உணர்வின் உச்சம் தணிந்தது. முகபாவம் மாறியது. சோகம்.. வலி.. வேதனை.. அவளை விட்டு விலகி நின்றான்.

‘என்னவாயிற்று!’ - மிருதுளாவின் மனம் தவித்தது. அவனுடைய அந்த சின்ன விலகலை கூட அவளால் பொறுக்க முடியவில்லை. ஏக்கமாக அவனைப் பார்த்தாள்.

அவன் ஏதோ டென்ஷனில் இருப்பவன் போல் தலையை கோதினான்.. கைகளால் முகத்தை அழுந்த துடைத்தான். மீசையை நீவினான்.. முகத்தில் குழப்பம்.. கலக்கம்.. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.

“அ..ர்..ஜு..ன்..” - பிடிவாதத்துடன் அவனை பிடித்து இழுத்து தன் பக்கம் திருப்பினாள்.

அவன் அவள் முகத்தை ஊன்றி பார்த்து, “என்ன சொன்ன?” என்றான்.

எதை கேட்கிறான் என்று புரிந்தது. ஆனால் அவன்தானே மீண்டும் மீண்டும் சொல்ல சொன்னான்! இப்போது என்ன சொன்னாய் என்று கேட்கிறானே! ஏன் இப்படி விசித்திரமாக நடந்துக்கொள்கிறான்! குழப்பமும் கவலையும் மேலிட “என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றாள்.

“ப்ச் ப்ச்..” - தலையை குறுக்காக அசைத்தான். “இல்ல.. இப்போ.. கொஞ்சம் முன்னாடி.. ஏதோ சொன்னியே.. திரும்ப சொல்லு.”

அவள் உதட்டை கடித்துக் கொண்டு ஓரிரு நொடிகள் அமைதியாக நின்றாள். “சொல்லு மிருதுளா” அவன் அதட்டினான்.

அவள் அவனிடம் நெருங்கிச் சென்றாள். வெகு அருகில்.. இருவருக்கும் இடையில் ஒரு இன்ச் இடைவெளிதான் இருக்கும். அவ்வளவு நெருக்கமாக.. அவன் கண்களுக்குள் இதயத்தை தேடுவது போல் கூர்ந்து பார்த்தபடி அவன் முகத்தை கைகளில் ஏந்தினாள்.

“ஐ லவ் யு அர்ஜுன்.. ஐ லவ் யு சோ மச்..” மெல்ல முணுமுணுத்தபடி நுனி கால்களில் எக்கி அவன் தடித்த இதழ்களை தன் பூவிதழால் ஒற்றியெடுத்தாள்.

அவன் உடல் மேலும் விறைத்தது. தன் கைகளுக்குள் அடங்கியிக்கும் அவன் தாடை இறுகுவதை உணர்தவளுக்கு உள்ளே வலித்தது. அந்த வலியை அதிகமாக்குவது போல் அவன் அவளை விலக்கி நிறுத்தினான்.

“அர்ஜுன்!” - அவனை பரிதாபமாய் பார்த்தாள்.

“அர்..ஜு..ன்! அர்..ஜு..ன் ஹோ..த்ரா! - பெரிய மாஃபியா மேன் - பவர் - மணி - அதிகாரம் இதையெல்லாம்தான் லவ் பண்ற, நாட் மீ ரைட்?” - கசப்புடன் கேட்டான்.

மிருதுளா அவனது குழப்பத்துடன் பார்த்தாள். “இதெல்லாம் தானே நீங்க?”

அவன் மறுப்பாக தலையசைத்தான். “நோ.. இதெல்லாம் நா இல்ல. நா வேற.. என்னோட எமோஷன்ஸ்.. பீலிங்ஸ்.. ஹார்ட்.. ஸோல்.. இதெல்லாம் தான் நான்.. டெல் மீ நௌ. டூ யு லவ் மை எமோஷன்ஸ்? டூ யு லவ் மை பீலிங்ஸ்? டூ யு லவ் மை ஹார்ட்? டூ யு லவ் மை ஸோல்? டூ யு லவ்.. மீ..?” - உள்ளத்தில் பிரவாகமெடுத்த உணர்வு குவியல் அவன் முகத்தில் பிரதிபலித்தது.

மிருதுளா அவனை கனிவுடன் பார்த்தாள். அவனுக்குள் ஏதோ ஒரு பாதுகாப்பின்மை இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. வாய்விட்டு எதையும் சொல்லாமல் புன்னகையும் கண்ணீருமாக தலையை மட்டும் மேலும் கீழும் அசைத்தாள்.

“ஸே இன் வோர்ட்ஸ்..” - கரகரத்த அவன் குரலில் எதிர்பார்ப்பிருந்தது.

அதை புரிந்து, “எஸ்.. ஐ லவ்” என்று அவள் ஆரம்பிக்கும் போதே வலுவான அவன் கரம் ஒன்று அவள் இடையை வளைத்து இழுக்க, மறுகரம் பின் தலையை தாங்கிப்பிடித்து. அதே நொடி மென்மையான அவள் செவ்விதழ்கள் அவன் வன்மையான தாக்குதலுக்கு ஆட்பட்டன.

நீண்ட முத்தத்தில் நெடுநேரம் தடைபட்ட சுவாசம் உலுக்க தன்னிலைக்கு மீண்டு அவன் சற்று விலகிய போது பெரிதாய் மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றியபடி, “யூ..” என்று தடைபட்ட வாசகத்தை முடித்தாள் மிருதுளா.

பூரிப்பில் மலர்ந்திருந்த அவள் முகத்தை பார்வையால் பருகி முத்திரையால் குளிப்பாட்டி செவ்வானமாய் சிவக்கச் செய்தவன் மேலும் முன்னேறி அவள் கழுத்து வளைவில் தன் சுவாசத்தை தேடினான். அவள் உடல் சிலிர்த்து நடுங்கியது. பிரிவின் தாக்கத்தில் வலுவிழந்து போயிருந்த அவள் மனம் தடையற்று அவனோடு உறவாட தயாரானது. ஆனால் அவ்வளவு நெகிழ்ந்திருந்த நேரத்திலும் எல்லையில் நின்று அவள் கண்ணியம் காத்தான் அர்ஜுன்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 45

தட்டிலிருக்கும் உணவை ஸ்பூனால் அளந்தபடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் மிருதுளா. ஜூஸ் நிறைந்த கண்ணாடி கோப்பையை அவளிடம் கொண்டு வந்து வைத்துவிட்டு எதிரில் அமர்ந்த அர்ஜுன், அவளுடைய இலக்கற்ற பார்வையை கவனித்துவிட்டு அவள் முகத்துக்கு நேராக கையை உயர்த்தி இருமுறை சொடக்குப்போட்டான். சட்டென்று சிந்தனையிலிருந்து மீண்டு அவன் முகத்தில் பார்வையை பதித்தாள்.

“என்ன? சாப்பிடற உத்தேசம் இல்லையா?” - கேள்வி கேட்டவன் பதிலை எதிர்பார்க்காமல், “அந்த ஜுஸையாவது குடி” என்றபடி தன் உணவில் கவனமானான்.

சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா, “நம்பர் கொடுத்து போன் பண்ண சொன்னவங்க, எதுக்காக போனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வைக்கனும்? இட் டஸின்ட் மேக் எனி சென்ஸ் ரைட்?” - அவனிடம் கேட்பது போல் தன்னிடமே மீண்டும் ஒரு முறை அந்த கேள்வியை கேட்டுக் கொண்டாள்.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான் அர்ஜுன். ‘இதைத்தான் இவ்வளவு நேரமா யோசிச்சுகிட்டு இருந்தியா?’ என்றது அவன் பார்வை.

நேற்று இரவு கோபம் தீர்ந்து அவனோடு சமாதானமாகிவிட்ட சந்தோஷத்தில் அந்த தொலைபேசி எண் சங்கதியை அறவே மறந்திருந்தாள் மிருதுளா. இன்று காலை அவன்தான் அதை அவளுக்கு நியாபகப்படுத்தி, அந்த நம்பரை டயல் செய்ய சொன்னான். அவளும் செய்தாள். அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அப்போதிலிருந்தே அவளுக்கு குழப்பம். அந்த கேள்வி அவளை குடைந்துக் கொண்டே இருத்தது. இப்போதுதான் வாய்விட்டு கேட்க தோன்றியது.

“கைல செல்போன் வச்சுருக்க. நம்பர் கிடைச்சதும் போன் பண்ணியிருந்தேன்னா எடுத்திருப்பாங்க. இப்போ ஒரு வாரம் ஆயிடிச்சு. என்கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருப்பேன்னு தெரிஞ்சிருக்கும். அதான், ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டாங்க” - இயந்திரம் போல் கூறிவிட்டு மீண்டும் உணவில் கவனமானான்.

“என்கிட்ட போன் இருக்கறது அவங்களுக்கு தெரியுமா!” - வியப்புடன் கேட்டாள் மிருதுளா.

“தெரியும்” - கூடுதல் குருமாவை தன் தட்டில் பரிமாறியபடி அவள் கண்களை சந்திக்காமல் பதில் கூறினான் அர்ஜுன்.

“போன் இருக்கது தெரியும்னா நம்பர் கூட தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்குல்ல?”

“எஸ்..” - அப்போதும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.

“அப்படின்னா அவங்களே கால் பண்ணி பேசியிருக்கலாமே! எனக்கு நம்பர் பாஸ் பண்ணி.. வெயிட் பண்ணி.. இப்போ ஸ்விட்ச் ஆப் பண்ணி.. எதுக்கு இவ்வளவு காம்ப்ளிகேஷன்ஸ்?” - உண்மையில் அவளுக்கு புரியவில்லை. சுலபமாக செய்ய வேண்டிய ஒரு வேலையை எதற்காக தலையை சுற்றி மூக்கை தொடுகிறார்கள்? என்று குழம்பினாள்.

அவளுடைய குழப்பத்தை தீர்க்க அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. “சீக்கிரமே உனக்கு கால் வரும்” என்று மட்டும் கூறிவிட்டு எழுந்து கை கழுவச் சென்றான்.

அவன் பின்னாலேயே ஓடிச் சென்று, “எப்படி?” என்றாள் மிருதுளா.

“தே ஆர் வாட்சிங் யூ” - அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்லியபடி, ஈர கையை டவலில் துடைத்தான் அர்ஜுன்.

“வாட்! ஹௌ டூ யூ நோ தட்?” - வியப்புடன் கேட்டாள்.

“ஐம் வாட்சிங் தெம்” - டவலை அவள் தோளில் போட்டுவிட்டு அவன் நகர்ந்துச் செல்ல, அகல விரிந்த விழிகளுடன் அவன் முதுகை திகைத்து நோக்கியவள், ஓரிரு நொடிகளில் தன்னிலைக்கு மீண்டு அவசரமாக கை கழுவிவிட்டு அவன் பின்னால் ஓடினாள்.

“அர்ஜுன்.. அர்ஜுன்-அர்ஜுன்.. வெயிட். யாரு அவங்க? என்னை ஏன் கண்காணிக்கிறாங்க? ஐம் ஜஸ்ட் எ காமன் கேர்ள்.”

அவன் உதடுகள் மேல் நோக்கி வளைந்தன. “நோ.. யு ஆர் நாட்” என்றான் அழுத்தமாக.

“வாட் யூ மீன்?”

“ஐ மீன்.. யூ.. ஆர்.. நாட்.. எ.. காமன் கேர்ள்..” (நீ ஒரு சாதாரணப் பெண் அல்ல) என்று வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து அவன் கூறிய விதத்தில் குழப்பமுற்று, “அப்புறம்?” என்றாள்.

“மை ஸோல்..” - முகத்தில் வசீகர புன்னகையுடன் நெஞ்சில் கை வைத்து கூறியவனின் குரல் குழைந்து கரைந்தது.

மனம் கொள்ளா மகிழ்ச்சியில் நெஞ்சே அடைப்பது போலிருந்தது அவளுக்கு. என்ன பேசுவதென்றே தெரியாமல் வாயடைத்து போய் அவனை பார்த்தபடியே நின்றாள். அதை எதிர்பார்த்துதான் அவனும் அந்த வார்த்தையை சொன்னானோ என்னவோ.. வேகமெடுத்து பாய்ந்து வந்த அவளுடைய கேள்வி கணைகளுக்கு தடைபோட்டுவிட்டு எங்கோ வெளியே செல்ல தயாரானான்.

செல்ல நாய்க்குட்டி போல் ஏதேதோ பேசியபடி அவன் செல்லுமிடமெல்லாம் பின்னாலேயே சென்றுக் கொண்டிருந்த மிருதுளா, கார் சாவியை கையில் எடுக்கும் வரை அவன் என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்பதையே கவனிக்கவில்லை. அவன் ஷூ ராக்கை நெருங்கும் போதுதான் சுதாரித்தாள்.

“வெளியே கிளம்பறீங்களா அர்ஜுன்!” - வியப்புடன் கேட்டாள். கோபமாக இருக்கும் போதுதான் எதுவும் சொல்லாமல் அவளை தனியேவிட்டு விட்டு சென்றான். இப்போது என்ன வந்தது! எதுவுமே சொல்லாமல் கிளம்புகிறானே!

வாடிய அவள் முகத்தை கவனித்த அர்ஜுன் அவளிடம் நெருங்கி முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியில் இதழொற்றி, “ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்” என்றான் மென்மையாக.

அவள் முகம் தெளியவில்லை. சங்கடத்துடன் அவளை சற்று நேரம் பார்த்தவன், “யூ நோ மை ஜாப் ரைட்? உன்ன கூட்டிட்டு போக முடியாத இடம். என்ன புரிஞ்சுக்க மாட்டியா?” என்றான் இறங்கிய குரலில்.

அவள் கீழுதட்டை கடித்தபடி முகத்தை திருப்பிக் கொண்டாள். “என்னை பாரு” என்று அவள் தாடையை பிடித்து வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பி, “நீதான் என்னோட பலம்.. நீதான் என்னோட பலவீனமும் கூட. சொல்லு, இப்போ நா போகட்டுமா வேண்டாமா?” - தீவிரமாக கேட்டான்.

அவளை தன்னுடைய பலம் என்கிறான், பலவீனம் என்கிறான் ஏன் உயிர் என்று கூட சொல்கிறான். ஆனால் அவளுடைய உயிர் மீது அவனுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?

“நீங்க இல்லாத நேரத்துல யாராவது என்னைய அட்டாக் பண்ணி கொலை செஞ்சுட்டா என்ன செய்வீங்க? அதை பற்றி உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா?” - நேற்று இரவு மனதில் தோன்றிய அந்த கேள்வியை இப்போது கேட்டுவிட்டாள்.

சட்டென்று ஏதோ திரை விழுந்தது போல் அவன் முகத்திலிருந்த உணர்வுகளெல்லாம் மறைந்து போயின.

அவள் முகத்தையே சற்று நேரம் இமைக்காமல் பார்த்தான். பிறகு, “பயப்படறியா?” என்றான்.

தனக்குள் பயம் என்கிற உணர்வு சிறிதும் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தாள் மிருதுளா. ஆச்சரியமாக இருந்தது. உயிருக்கே அச்சுறுத்தல் இருக்கும் போது அவளிடம் அச்சமே இல்லையே! இது எப்படி சாத்தியம்? எப்போது வந்தது இந்த தைரியம்? - சுய அசலில் இறங்கியவளின் பார்வை தன் எதிரில் ஆஜானுபாகுவாய் நின்ற அர்ஜுனின் மீது விழுந்தது.

‘இவன்தான்.. இவன்தான் அவளுடைய தைரியம்.. இவன்தான் அவளுடைய நம்பிக்கை..’ - உண்மை பொட்டில் அறைந்தது.

“என்ன ஆச்சு? ஏன் அப்படி பார்க்கற?” - அவள் சிந்தனையில் குறுக்கிட்டான் அர்ஜுன்.

“ம்ஹும்.. ஒன்னும் இல்ல..” - மறுப்பாக தலையசைத்தாள்.

“பயப்படறியான்னு கேட்டேன்” - மீண்டும் அந்த கேள்வியை கேட்டான்.

“இப்போ இல்ல.. ஆனா நீங்க போயிட்டா என்னோட தைரியம் என்கிட்ட இருக்குமான்னு சொல்ல முடியாது” - முணுமுணுத்தாள்.

“நா உன்ன விட்டு எங்கேயும் போகமாட்டேன். உன் கூடவேதான் இருப்பேன். எப்பவும். நீயே போகனும்னு நினைச்சாலும் முடியாது. நா விடமாட்டேன். நீ ப்ராமிஸ் பண்ணியிருக்க. கடைசிவரைக்கும் கூடவே இருப்பேன்னு எனக்கு வாக்கு கொடுத்திருக்க.”

“அந்த வாக்கையெல்லாம் காப்பாத்த முடியும்னு தோணல. எவனாவது துப்பாக்கியை கொண்டு வந்து நெத்தி பொட்டுல வச்சு ஒரு அழுத்து அழுத்தினா போய் தானே ஆகனும்?” என்றாள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு.

தாடை இறுக உதடுகளை அழுந்த மூடி அவளை வெறித்துப்பார்த்தான் அர்ஜுன்.

“டோன்ட் ஒர்ரி. அப்படி எதுவும் நடக்காது” - இறுகிய குரலில் கூறினான்.

“நடந்ததே.. மிராஜ்பாடாலேருந்து வரும் போது என்மேல ஒரு அட்டெம்ட் நடந்ததே! இப்போ மட்டும் எப்படி நடக்காது? நடக்கலாம்னு எதிர்பார்த்துதானே என்னை இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்கீங்க? காலேஜ்ல கூட கூடவே இருக்கீங்களே?” - கேள்விகளை அடுக்கினாள்.

அர்ஜுன் தலையை அழுந்த கோதினான். உதட்டை மடித்து கடித்தான். அவன் முகத்தை இயல்பாக வைத்திருக்க சிரமப்படுவது போல் தோன்றியது. ஆனால் ஏன்? என்ன பிரச்சனை? அவளிடம் சொல்லக் கூடாதா? - மிருதுளாவின் மனம் சுணங்கியது.

ஓரிரு நிமிடங்களில் சமநிலைக்கு மீண்டு தெளிவாக பேசினான் அர்ஜுன்.

“மிருதுளா, சில விஷயங்களை தெரிஞ்சுக்காம இருக்கறதுதான் நல்லது. நிம்மதியா இருக்கலாம். உன்ன நிம்மதியா வச்சுக்க நா ட்ரை பண்றேன். நீயும் கோ-ஆப்ரேட் பண்ணு, சரியா?” - அவனுடைய தொனியில் இருந்த சின்ன கண்டிப்பு அவளுடைய அடுத்த கேள்விக்கு தடை போட்டது. எதுவும் பேச தோன்றாமல் அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.

“உனக்கு எந்த ஆபத்தும் வராது. ஒரு மணி நேரத்துல வந்துடுவேன். எதுவும் யோசிக்காத. உள்ள போ..” - அதற்கு மேல் பேசிக் கொண்டிருக்க அவகாசம் இல்லாதவனாக விறுவிறுவென்று வெளியேறினான்.

அவனுடைய கார் அந்த வீட்டு வளாகத்திலிருந்து வெளியேறி ஐந்து நிமிடம் கூட இருக்காது. அவளுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவர் அவளுடைய பேராசிரியர். ஏதோ அவசரம் என்றார். அவளை உடனே சந்திக்க வேண்டும் என்றார். உடனடியாக புறப்பட்டு தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கூறினார்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 46

அர்ஜுன் தெருமுனையை கூட தாண்டியிருக்க மாட்டான். அதற்குள் அவளுடைய அலைபேசிக்கு அழைப்பு வந்தது. நம்பர் புதிதாக இருந்ததால் அழைக்கும் நபர் யாரென்று தெரியவில்லை.

‘உன்னுடைய அலைபேசிக்கு அழைப்பு வரும்’ என்று சற்று நேரத்திற்கு முன் அர்ஜுன் கூறியது நினைவிற்கு வந்தது.

இது அந்த கொலைகார கும்பலிடமிருந்து வரும் அழைப்போ! அவளை குழப்ப மீண்டும் முயற்சி செய்கிறார்களோ! - சந்தேகம் எழுந்தது. உடனே அழைப்பை துண்டித்துவிட்டு அர்ஜுனை கூப்பிட்டு சொல்லிவிடலாமா என்று யோசித்தாள். ஆனால் ‘உனக்கு எந்த ஆபத்தும் வராது’ என்று அவன் கூறிய வார்த்தை அவளுக்குள் பெரிய சக்தியாய் உருவெடுத்து நின்று தைரியம் கொடுக்க, அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்து, “ஹலோ” என்றாள்.

மறுமுனையிலிருந்து “மிருதுளா” என்று ஒலித்தது ப்ரொஃபஸரின் குரல்.

“சார்.. நீங்களா?” - ஆச்சரியப்பட்டாள்.

அவளுடைய ஆச்சரியமோ வியப்போ எதுவும் அவர் கருத்தில் பதிந்ததாக தெரியவில்லை.

“ஒரு எமர்ஜென்சி மிருதுளா. நீ உடனே இங்க வரனும். உனக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார் பரபரப்புடன்.

“இப்போவா?”

“ஆமாம்.. இப்போ தான்.. உடனே..” - அவசரப்படுத்தினார்.

அர்ஜுன் வீட்டில் இல்லாத போது - அவளுக்கும் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு தடையில்லாத சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து சரியான தருணத்தில் அவர் தன்னை அழைக்கிறார் என்கிற விபரம் புரியாமல், வெள்ளந்தியாக “அர்ஜுன் வெளியே போயிருக்கார் சார். வந்ததும் வரட்டுமா?” என்றாள்.

“நோ.. நா உன்ன இப்போவே மீட் பண்ணனும். உன்கிட்ட முக்கியமான சில விஷயங்கள் பேசனும். உடனே வா..” என்றார்.

அவர் அவ்வளவு தூரம் வற்புறுத்தி அழைத்த பிறகு அவளால் மறுக்க முடியவில்லை. அதோடு அவரும் யாரோ தெரியாத மனிதர் இல்லை. அவளுடைய ஆசான். விஷயம் முக்கியமானதாக இல்லாமல் அவர் இப்படி அழைக்க மாட்டார் என்று தோன்ற, “எங்க வரனும் சார்?” என்றாள் மிருதுளா.

அவர் தன்னுடைய வீட்டிற்கே வரும்படி கூறினார். மேலே யோசிக்காமல் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்தாள். அர்ஜுனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடலாம் என்று எண்ணி அவனுடைய அலைபேசிக்கு தொடர்புகொள்ள முயன்றாள். போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

“ப்ச்..” - உச்சுக்கொட்டியபடி மேலும் இரண்டு மூன்று முறை முயற்சி செய்து கொண்டே பிரதான சாலை வரை நடந்தே வந்து ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து ஒரு ஆட்டோவை எடுத்துக் கொண்டு ப்ரொஃபஸரின் வீட்டிற்கு விரைந்தாள்.

புறநகர் பகுதியில் உள்ள தனி வீடு அது. குடியிருப்புகள் மிக குறைவான பகுதி என்றாலும் கல்லூரியிலிருந்து பக்கம் என்பதால் இங்கே வீடு எடுத்திருந்தார் ப்ரொஃபஸர். சுற்றுப்புறத்தின் அதீத அமைதி ‘ஓ’-வென்றிருந்தாலும், பகல் நேரம் என்பதால் பயம் ஏதும் தெரியாமல் அங்கே வந்து இறங்கினாள் மிருதுளா.

உயரமான மதில் சுவர்கள் வீட்டை சூழ்ந்து மறைத்திருக்க கேட்டும் மூடியிருந்தது. ஆட்டோ டிரைவரிடம் பணத்தை கொடுத்து கணக்கை முடித்துவிட்டு கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள் திகைத்து நின்றாள்.

‘இந்த கார்.. இது எப்படி இங்கே!’ - வெளிப்புறம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் தான் அவளுடைய திகைப்புக்கு காரணம்.

அந்த கார் அவளை நெருங்கி வந்து நின்றது. கண்ணாடியை இறக்கிவிட்டு அவளை பார்த்த அர்ஜுன், “இங்க என்ன பண்ற?” என்றான்.

அவள் கேட்க வேண்டிய கேள்வி. ஆனால் அவன் குரல் ஏன் இப்படி! யாரோ தெரியாதவர்களிடம் பேசுவது போல்! அந்நியமாக!

“மிருதுளா” - அதட்டிய அவன் குரல் அவள் சிந்தனைக்கு தடை போட, “ஆங்..” என்று விழித்தாள் அவள்.

“கேட்டது காதுல விழல? இங்க என்ன பண்ற?” - குரலில் கடுமை ஏறியது.

“நீங்..நீங்க.. இங்க?”

“பிசினஸ்..” - அவள் கேள்வியை கத்தரித்து பதில் சொன்னவன், மறுபக்க கதவை திறந்துவிட்டு, “கெட் இன்..” என்றான்.

“இல்ல.. நா.. சாரை பார்க்க வந்தேன். பார்த்துட்டு வந்துடறேன்.”

“அவர் வீட்ல இல்ல..”

“என்னை வர சொன்னாரே!”

அவன் புருவம் சுருங்கியது. பார்வை கூர்மையாக அவள் முகத்தை ஆராய்ந்தது. அதை தொடர்ந்து “எப்போ?” என்கிற கேள்வியும் கணையாய் பாய்ந்தது.

“இப்போதான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணினார். நீங்க வீட்லேயிருந்து கிளம்பி ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும்.”

“ஓ!” என்றதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஸ்டியரிங் வீலை பற்றியிருந்த கைகளில் இறுக்கம் கூடியது போல் தோன்றியது. ஓரிரு நொடிகள் அசையாமல் அமர்ந்திருந்தவன் பிறகு அவள் புறம் திரும்பி, “இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.. வண்டில ஏறு” என்றான்.

ஒரு கணம் அவனை யோசனையுடன் பார்த்த மிருதுளா அவனை மறுத்துப் பேசாமல் சொன்னதை செய்தாள்.

தன்னை அவசரமாக வர சொல்லிவிட்டு அவர் எங்கு போயிருப்பார் என்கிற கேள்வி அவளுக்குள் பெரிதாய் எழுந்தாலும் அதைப்பற்றி அவனிடம் எதுவும் அவள் பேசவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவளால் பேச முடியவில்லை. அவ்வளவு இறுக்கமாக இருந்தான் அர்ஜுன்.

‘அவனிடம் சொல்லாமல் இங்கு வந்ததால் கோபமாக இருக்கிறானா!’ - அதுதான் உண்மை என்று தோன்றியது அவளுக்கு. மெல்ல பேச்சு கொடுத்து பார்த்தாள்.

“அர்ஜுன்..”

“ம்ம்ம்ம்”

“கிளம்பறதுக்கு முன்னாடி நான் கால் பண்ணினேன். உங்க போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருந்தது. என்னால உங்கள ரீச் பண்ண முடியல. சா..ரி..”

“நோ இஷ்ஷுஸ்..” - பிரச்சனை இல்லை என்று கூறினாலும் அவன் அதை பிரச்சனையாகத்தான் நினைக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது. அவனை எப்படியாவது சமாதானம் செய்தே ஆகவேண்டும் என்று தோன்றியது. எனவே, “வீட்டுக்கு போய் என்ன செய்ய போறோம்? எங்காவது வெளியே போயிட்டு வரலாமா?” என்றாள் இனிய குரலில்.

“எங்க போகனும்?” - வறண்ட குரல் அவன் இலக்கமின்மையை எடுத்துக் காட்டியது.

அவளுக்கு என்னவோ போல் இருந்தது. ஆனாலும் முயற்சியை விடாமல், “ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?” என்றாள்.

“வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கலாம்” என்றான் அவன் இயந்திர மனிதன் போல்.

மிருதுளாவின் முகம் விழுந்துவிட்டது. வழக்கமாக அவள் இப்படி ஏதாவது கேட்டால் அவன் மறுக்கவே மாட்டான். இன்று என்னவாயிற்று! மிகவும் கோபமாகிவிட்டானா! - அவள் மனம் கலங்கியது.

அவளுடைய கலக்கம் எதுவும் அவன் கவனத்தில் படவில்லை. கர்மசிரத்தையாக காரை செலுத்தினான்.

கார் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்ததும் அவள் இறங்கிக்கொள்ள அவன் காரை கராஜிற்குள் செலுத்தி நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தான்.

சோபாவில் அமர்ந்திருந்த மிருதுளாவை கண்டுகொள்ளாமல் குளியலறைக்குள் நுழைந்தான்.. வெகு நேரம் கழித்து அவன் வெளியே வந்த போது, டிவியில் ஏதோ ஒரு ஆங்கிலப்படம் ஓடிக் கொண்டிருந்தது. திரையில் பார்வை பதிந்திருந்தாலும் மிருதுளாவின் எண்ணங்கள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தன.

நேற்றுதான் சமாதானம் ஆனான். அதற்குள் மீண்டும் இன்னொரு மனஸ்தாபமா! ஏன் இப்படி நடக்கிறது? அவளும் அவசரப்பட்டு போயிருக்க வேண்டாம். ஏதோ போய்விட்டாள்.. அவனும் அவளை புரிந்துக்கொள்ள மாட்டேன் என்கிறானே! - மனம் வருத்தத்தில் உழன்று கொண்டிருக்க, கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளை பார்த்தபடியே சமையலறைக்குள் நுழைந்து பிரிட்ஜை திறந்து ஒரு கப்பில் அவளுக்கு பிடித்த சாக்லெட் ஐஸ்க்ரீமை நிரப்பிக் கொண்டு வந்து அவளுக்கு அருகில் அமர்ந்தான் அர்ஜுன். அதற்காகவே காத்திருந்தவள் போல் அனிச்சையாய் அவன் தோளில் சாய்ந்தாள் மிருதுளா. அவனுடைய அருகாமை மட்டுமே அத்தியாவசியம் என்பது போல் தோன்றியது அவளுக்கு.

அவன், அவளிடம் ஐஸ்க்ரீம் கப்பை நீட்டினான். தொலைக்காட்சியிலிருந்து பார்வையை விலக்காமலே அதை வாங்கியபடி, “கோவம் போச்சா?” என்றாள்.

“கோவமா!” என்று வியந்தவன் தொடர்ந்து, “என்ன கோவம்?” என்றான் புரியாதவனாக.

சட்டென்று நிமிர்ந்து அவனை ஏறிட்ட மிருதுளா “உங்ககிட்ட சொல்லாம ப்ரொஃபஸரை பார்க்க போனேனே! கோவம் இல்ல?” என்றாள்.

“இல்ல..” - ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான்.

தன் மீது கோபம் இல்லை என்றால் பிறகு எதற்காக இந்த மௌனம் - இறுக்கம்? என்கிற குழப்பம் மேலிட்டது அவளுக்கு. அதோடு அவன் காட்டிய விலகலும் மனதை சங்கடப்படுத்தியது. எனவே,

“அப்புறம் ஏன் என்னவோ போல இருக்கீங்க?” என்றபடி மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்.

“பெருசா எதுவும் இல்ல. ஜஸ்ட், ஒர்க் பிரஷர்” என்றபடி அவளை தன்னிடமிருந்து விலக்கி எழுந்தவன், “என்ஜாய் யுவர் ஐஸ்க்ரீம்” என்று ஜீவனற்ற ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

அப்போது மட்டும் அல்ல அன்று முழுவதுமே அர்ஜுனின் நடவடிக்கைகள் வித்தியாசமாகத்தான் இருந்தது. அவனுடைய மௌனம், இறுக்கம், விலகல் எல்லாம் அவள் ஏற்கனவே பார்த்ததுதான். ஆனால் இன்று என்னவோ புதிதாக.. என்னவென்று புரிந்துக்கொள்ள முடியாத வித்தியாசத்தை அவனிடம் உணர்ந்தாள் மிருதுளா.

அதை பற்றி யோசித்து யோசித்து அன்று இரவு கூட அவளுக்கு சரியாக உறக்கம் வரவில்லை. புரண்டு கொண்டே படுத்திருந்தவள் ஏதோ தோன்ற எழுந்து வெளியே வந்தாள். அர்ஜுன் உறங்கவில்லை என்றால் அவனிடம் பேச்சு கொடுத்து பார்க்கலாம் என்று எண்ணினாள். நள்ளிரவு நேரத்தில் இது பைத்தியக்காரத்தனமான யோசனைதான். ஆனால் தூக்கம் வரவில்லையே! அவனும் தூங்கவில்லை என்றால் ஒருவருக்கொருவர் கம்பெனி கொடுக்கலாமே என்று எண்ணியபடி வெளியே வந்தவள் திகைத்து நின்றாள். ஹாலில் விரித்துக் கிடந்த படுக்கையில் அர்ஜுன் இல்லாதது விடிவிளக்கின் வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது.

‘இந்த நேரத்தில் எங்கே போய்விட்டான்!’ - அவசரமாக மின்விளக்கின் விசையை தட்டி வீட்டை வெளிச்சமாக்கிவிட்டு சமையலறைக்குள் ஓடி பார்த்தாள். காணவில்லை.. ‘ஒரு வேளை ரெஸ்ட்ரூமில் இருப்பானோ! அவன் உள்ளே வந்தது போலவே தெரியவில்லையே! விழித்துத்தானே இருந்தோம்!’ - சந்தேகத்துடன் குளியலறைக்குள்ளும் எட்டிப்பார்த்தாள். ம்ஹும்.. அது ஒன்றும் பெரிய மாளிகை அல்ல.. எத்தனை முறை சுற்றி வந்தாலும் ஒரு ஹாலும், சமையலறையும், படுக்கையறையும்தான். நிச்சயமாக அவன் வீட்டில் இல்லவே இல்லை.. அவளை தனியாக விட்டுவிட்டு எங்கு போனான்! - பயத்தில் நெஞ்சு படபடத்தது.

மெயின் கதவை திறந்துக் கொண்டு வெளியே எட்டிப்பார்த்தாள். எங்கும் ‘கும்’ இருட்டு. உள்ளே படபடத்தது. பயத்தில் வயிற்றுக்குள் ஏதோ பிசைவது போல் இருந்தது.

“அர்ஜுன்!” - அழைத்து பார்த்தாள். அவள் குரலே பயங்கரமாக மீண்டும் வந்து அவள் செவியில் மோதியதே தவிர அவனிடமிருந்து பதில் வரவில்லை. நாவறண்டது.

பக்கத்தில்தான் எங்காவது நிற்பான் என்று குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டு வராண்டா மின்விளக்கை ஒளிரவிட்டுவிட்டு கேட்டை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். சற்று தள்ளி இருந்த அக்கம் பக்கத்து வீடுகளில் ஏதேனும் அரவரம் தெரிகிறதா என்று பார்த்தாள். மயான அமைதி என்பார்களே.. அப்படித்தான் இருந்தது. ஆள் நடமாட்டம் என்ன.. நாய் நரி நடமாட்டம் கூட இல்லை என்று அவள் எண்ணிய போது எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது. அது அந்த சூழ்நிலையின் பயங்கரத்தை இன்னும் அதிகமாக்க, மிரண்டு போன மிருதுளா உமிழ்நீரை கூட்டிவிழுங்கியபடி சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருந்த போது, “இங்க என்ன பண்ற?” என்று ஒலித்த கனத்த குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.

“அர்ஜுன்!” - இதயம் எகிறி வெளியே குதித்துவிடுவது போல் படபடக்க, உடல் நடுங்க நெஞ்சை பிடித்துக்கொண்டு அவனை ஏறிட்டாள் மிருதுளா.

‘இவன் என்ன வீட்டுக்குள் இருந்து வருகிறான்!’ - அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ரிலாக்ஸ்” - இரத்தப்பசையற்று வெளிறிப்போயிருந்த அவள் முகத்தில் மிரட்சி அப்பியிருந்ததைக் கண்டு அவள் மனநிலையை ஊகித்த அர்ஜுன் அவளை அமைதிப்படுத்த முயன்றான்.

“எங்.. எங்க.. எங்க இருந்தீங்க!” - திக்கி திணறினாள். அவளுடைய சுவாசம் இன்னும் கூட இயல்பாகவில்லை.

“கராஜ்ல இருந்தேன்..”

“கராஜ்லயா! உள்ளேயிருந்து வர்றீங்க!”

“ம்ம்ம்.. கிட்சன் ஸ்டோர் ரூம் வழியா கராஜுக்கு போக ஒரு வழியிருக்கு.”

“வாட்!” - இத்தனை நாட்களாக அவளும் இந்த வீட்டில் தான் இருக்கிறாள். ஸ்டோர் ரூமுக்கு கூட சில முறை சென்றிருக்கிறாள். அப்படி ஒரு வழி இருப்பதை அவள் அறியவே இல்லையே! ரகசிய வழியா! இன்னும் என்னென்ன ரகசியங்கள் இருக்கிறது இந்த வீட்டில்! - அவள் விழிகள் விரிந்தன.

“நா.. நா.. அந்த.. அந்த வழியை பார்த்ததே இல்லையே!” - மேலண்ணத்தில் ஒட்டிய நாவை இழுத்துப் பிடித்து பேசினாள்.

“இன்னொரு நாள் பார்த்துக்கலாம். இப்போ உள்ள வா..” - இலகுவாக கூறினான். ஆனால் அவள் மனம் தெளியவில்லை.

“இந்த நேரத்துல கராஜ்ல என்ன பண்ணுனீங்க?” என்றாள் குழப்பத்துடன்.

“கார் சுத்தம் பண்ணினேன்..” - அவள் அவனை விசித்திரமாக பார்த்தாள். இன்று அவள் பயணம் செய்த அதே காரை தான் கூறுகிறான். ஏற்கனவே வெகு சுத்தமாக பளபளத்த அந்த காரில் இன்னும் சுத்தம் செய்வதற்கு என்ன இருக்கிறது! அதுவும் இந்த நேரத்தில்! - மனதில் தோன்றிய கேள்வியை அவள் வாய்விட்டு கேட்ட போது, ஒரு நொடி தயங்கிய அர்ஜுன், “நீ டிக்கியை பார்க்கல” என்றான்.

சுரீர் என்றது அவளுக்கு. அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். மேலே விபரம் கேட்கவே பயமாக இருந்தது. கேட்டால் சொல்லுவான் என்றுதான் தோன்றியது. ஆனால் தெரிந்துகொள்ளும் துணிவு அவளுக்கு இல்லை. திகைத்துப்போய் சிலை போல் நின்றவளை, “கம்” என்று கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான் அர்ஜுன்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 47

‘காரில் எதை வைத்திருந்தான்? அல்லது... யாரை? ப்ரொஃபஸருக்கு ஏதேனும்.. இல்லை.. இருக்காது.. அப்படி எதுவும் நடந்திருக்காது. நடந்திருக்க முடியாது’ - மனம் பதைபதைத்தது. மேலே சிந்திக்கக் கூட அச்சமாக இருந்தது. திகைப்பும் அதிர்ச்சியுமாக அவனை வெறித்துப் பார்த்தாள் மிருதுளா.

அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை. வெகு அமர்த்தலாக அவளிடம் நெருங்கியவன், “கம்” என்று கூறி அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். அவன் மீது ஏதோ கெமிக்கல் வாடை வீசியது. மிருதுளாவிற்கு அடிவயிற்றை பிசைந்தது.

“படு” - அவளை மெத்தையில் அமர வைத்தபடி கூறியவன், அலமாரியை திறந்து துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றான்.

“அர்ஜுன்” - இடையிட்ட அவள் குரலில் நின்று திரும்பிப் பார்த்தான்.

“டி.. டிக்கியில எ..என்ன..?” - கேட்டுவிட்டாள். ஆனால் அவன் பதில் சொல்லிவிடக் கூடாதே என்று மனம் அடித்துக் கொண்டது. காரணம், விரும்பத்தகாத பதிலை சொல்லிவிடுவானோ என்கிற பயம்.

மிரண்ட மான் போல் விழிகள் தெறிக்க தன்னை வெறித்து பார்ப்பவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து நோக்கிய அர்ஜுன், “இப்ப எதுவும் இல்ல.. தூங்கு” என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

அந்த பதில் அவளுடைய கலவரத்தை இன்னும் அதிகரிக்கத்தான் செய்தது. தலையை சாய்க்கக் கூட தோன்றவில்லை அவளுக்கு.

‘அந்த மனிதர்.. அவளுடைய ஆசான்.. அவள் மீது அக்கறை கொண்டவர்.. அவளுடைய வழிகாட்டி.. என்னவாயிற்று அவருக்கு?’ - உள்ளம் பதற, நடுங்கும் உதடுகளை அழுந்த மூடியபடி அசையாமல் அமர்ந்திருந்தாள்.

ஷவரில் சிதறும் குளிர்ந்த நீரில் தலையை கொடுத்தபடி வெகு நேரம் நின்றான் அர்ஜுன். மண்டையோட்டை இறுக்கி பிடிப்பது போலிருந்த அந்த உணர்வு குறையவே இல்லை. நேரம் செல்ல செல்ல அந்த இறுக்கம் தலையிலிருந்து உடல் முழுவதும் பரவுவது போலிருந்தது. சட்டென்று ஷவரை அணைத்துவிட்டு, டவலை எடுத்து சுற்றிக் கொண்டு விருட்டென்று வெளியே வந்தவன், அறையில் கிடந்த மேஜையில் கைகளை ஊன்றி குனிந்து நின்றான். அவன் அடர்ந்த கேசத்திலிருந்து வடிந்த நீர் சொட்டு சொட்டாக மேஜையில் விழுந்தது.

அவன் வெளியே வந்த வேகத்தையும் அவனிடம் தெரிந்த மாற்றத்தையும் கவனித்த மிருதுளா சட்டென்று எழுந்து அவனிடம் நெருங்கினாள். அவள் மனம் ஒரே நொடியில் ப்ரொஃபஸரை மறந்து அவனிடம் திரும்பிவிட்டது.

“என்ன ஆச்சு அர்ஜுன்?”

அவன் தலையை மட்டும் திருப்பி அவள் முகத்தை பார்த்தான்.

“ஆர் யு ஓகே?” - கவலையுடன் கேட்டபடி அவன் தோளை ஆறுதலாக பற்றினாள் மிருதுளா.

“தூங்கலையா?” - கனத்த குரலில் கேட்டபடி நிமிர்ந்து நின்றான்.

மிருதுளா விழித்தாள். பேய் துரத்துவது போல் அடித்துப்பிடித்துக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வந்து விழுந்தவன் என்ன கேள்வி கேட்கிறான்! பேச்சை மாற்ற விழைகிறானா! - அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் மீண்டும் கேட்டான்.

“ஏன் தூங்கலை?” - அவன் அந்த கேள்வியை கேட்ட போதுதான் அவளுக்கு மீண்டும் ப்ரொஃபஸரின் நினைவு வந்து, உள்ளத்தை சுருக்கென்று தைத்தது. மெளனமாக அவனை பார்த்தாள்.

“ஏதாவது தெரிஞ்சுக்கனுமா?” - அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அவன் எதையோ அவளிடம் கொட்டிவிட நினைக்கிறான். ஆனால் அதை தாங்கும் சக்தி அவளுக்கு இருக்கிறதா?

மிருதுளா யோசிப்பதற்கு முன்பே அவளுடைய தலை குறுக்காக அசைந்தது. “நோ.. எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். நா எதையும் தெரிஞ்சுக்க விரும்பல..” - மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

அர்ஜுனின் உதடுகள் அழுந்த மூடின. முகத்தில் உணர்வு குவியல்.. கண்களில் வலி.. சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்தான்.

“கிவ் மீ பீஸ்” (அமைதியை கொடு) என்றான்.

மிருதுளா அவனை புரியாமல் பார்த்தாள்.

விறைத்து நிமிர்ந்த உடல் அவன் உயரத்தை அரை இன்ச் கூட்டி காட்ட, “ஹக் மீ” என்றான்.

அவனுடைய கட்டளையிடும் தொனியில் அவள் சற்று தயங்கினாள். காரணம் புரியவில்லை. ஆனால் அவளுடைய தயக்கம் நன்றாகவே புரிந்தது அவனுக்கு. கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவன், “யு லவ் மீ ரைட்?” என்றான்.

“அஃப்கோர்ஸ் எஸ்” - யோசனைக்கு இடமின்றி வேகமாக வெளியே வந்து விழுந்தன வார்த்தைகள்.

“தென் டூ இட்” - வறண்ட குரலில் கூறினான்.

அவனுடைய நடவடிக்கையும் பேச்சும் அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. புரிந்துக்கொள்ள முயன்று அவனை நிலைத்துப் பார்த்தாள். முகம் பிடிவாதத்துடன் இறுகியிருக்க, கண்களில் மட்டும் ஏதோ கலக்கம் தெரிந்தது. மறுத்துவிடுவாள் என்று எண்ணுகிறானா! - அவள் யோசனையுடன் பார்க்க, கணத்திற்கு கணம் இறுகி கொண்டிருக்கும் தாடையும் முஷ்டிகளும் அவனுடைய டென்ஷனை பறைசாற்ற, ‘ஏன் இப்படி எதிர்மறையாக எண்ணுகிறான்?’ என்று அவன் மீது பரிதாபம் கொண்டு, இரண்டடி முன்னே எடுத்து வைத்து வந்து தானாக அவனை அணைத்துக் கொண்டாள்.

கற்சிலையை கட்டிக்கொள்வது போல் இலக்கமில்லாமல் இறுகியிருந்தது அவன் உடல். இதயம் துடிக்கும் வேகத்தில் அவன் நெஞ்சுக்கூடு அதிர்வதை அவளால் உணர முடிந்தது. தன் மெல்லிய விரல்களால் அவன் முதுகை வருடி அவன் கேட்ட அமைதியை அவனுக்கு கொடுக்க முயன்றாள்.

மெல்ல சீர்பட்ட அவன் சுவாசத்தில் தன் முயற்சியின் பலனை உணர்ந்தவளின் மனம் கனிந்தது. தன் மீதான அவனுடைய பாதிப்பு அவள் அடிமனதில் ஓர் இனிய உணர்வை சுரக்கச் செய்தது. தொடர்ந்து அவன் முதுகை வருடி பிடரி முடியை கோதி அவனை ரிலாக்ஸ் செய்துக் கொண்டிருந்தாள்.

“மிருதுளா” - கண்கள் செருக அவள் அணைவில் ஒண்டியபடி அடங்கி நின்றவன் மெல்ல அழைத்தான்.

“ம்ம்ம்” - ‘உம்’ கொட்டினாள்.

“நீ ஒரு விஷயத்தை எப்பவும் மறக்கக் கூடாது.”

“எதை?” - முணுமுணுத்தாள்.

“நா என்ன செய்றேனோ அது என்னோட வேலை மட்டும் தான். தட்ஸ் நாட் மீ” என்றபடி அவளை தன் வலிய கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டான்.

அவன் அணைவில் ஒட்டி உரசியபடி தன்னிலை மறந்து மயங்கி நின்றவளுக்கு ஒரு கணம் அவன் என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை. ஆனால் அந்த நிலை ஒரே கணம் மட்டும் தான். அடுத்த கணம் மின்னல் பளிச்சிட்டது போல் ப்ரொஃபஸரின் நினைவு அவள் மூளையில் உரைத்தது.

‘எப்படி மறந்தோம்!’ - மனசாட்சி குத்தியது.

அரைகுறையாக இருந்த சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது போல் உணர்ந்தவள் உடனடியாக அவனிடமிருந்து விலக முயன்றாள். அதை எதிர்பார்த்துத்தானோ என்னவோ அவளை இறுக்கமாக தன்னோடு சேர்த்துப் பிடித்திருந்தான் அர்ஜுன்.

அவள் பிடிவாதத்துடன் அவனை உதற முயன்றாள். ஆனால் அவனுடைய முரட்டுப்பிடி மேலும் இறுகியது.

“நோ.. யு காண்ட் லீவ் மீ ஹனி.. என்னால உன்ன விட முடியாது.”

“அர்..ஜு..ன்..” - அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவன் நெஞ்சை நனைத்தது. சற்று நேரம் அவள் தலையை கோதியபடியே மெளனமாக இருந்தவன் பிறகு, “ப்ராமிஸ் பண்ணியிருக்க. என்னவிட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்க. அதை எப்பவும் மறக்கக் கூடாது” என்றான்.

மிருதுளாவின் மௌன கண்ணீர் பெரும் கேவலாக மாறியது. இப்போது அவன், அவள் முதுகை ஆறுதலாக வருடினான்.

**************

அன்று கல்லூரிக்கு செல்லவே அவளுக்கு கால்கள் கூசின. நெஞ்சுக்கூடு பயத்தில் சில்லிட்டுப்போனது. மனம் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்திருந்தாலும் ப்ரொஃபஸருக்கு எதுவும் ஆகியிருக்காது என்கிற சின்ன நம்பிக்கையும் மனதின் ஏதோ ஒரு மூலையில் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கை தான் இப்போது அவளை கல்லூரிக்கு இழுத்துக் கொண்டு வந்திருந்தது.

அவன் முகத்தை ஏறிட்டுப்பார்க்காமல் காரிலிருந்து இறங்கி கட்டிடத்தை நோக்கி நடந்தவளின் கண்கள் அவர் எங்கேயாவது தென்படுகிறாரா என்று தேடி களைத்தன. செவிகள் அவரை பற்றி யாரேனும் பேசுகிறார்களா என்று கூர்ந்து கவனித்தே சோர்ந்து போயின. சாதாரணமாக செல்வது போல் ஆசிரியர்கள் அறை, லைப்ரரி, கேண்டீன் என்று முடிந்த அளவுக்கு எல்லா இடத்திலும் ஒருமுறை வட்டம் அடித்துவிட்டு வகுப்பறையை வந்தடைந்தாள். உள்ளே ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். காலதாமதம் அப்போதுதான் அவளுக்கு உரைத்தது. இடையூருக்கு மன்னிப்பு கேட்டு உள்ளே சென்று அமர்ந்தாள்.

ப்ரொஃபஸர் கல்லூரிக்கு வந்ததாகவும் தெரியவில்லை. அவரை பற்றி யாரும் பேசியதாகவும் தெரியவில்லை. அவளுடைய எதிர்பார்ப்பு வடிந்தது. மனம் ஏமாற்றத்தில் சோர்ந்தது. அவருடைய நினைவுகளிலேயே உழன்று பாடத்தில் கவனம் இல்லாமல் அவள் எங்கோ வெறித்துக் கொண்டிருந்த போது, “மிருதுளா” என்று ஓங்கி ஒலித்த ஆசிரியரின் அவளை நிகழுலகிற்கு மீட்டு வந்தது.

“சார்..” என்றபடி சட்டென்று எழுந்து நின்றாள்.

“பிரின்சிபால் ரூம்லேருந்து உனக்கு கால் வந்திருக்கு போய்ட்டு வா” என்றார். அப்போதுதான் வாயிலில் பியூன் நின்றுக் கொண்டிருப்பதை கவனித்தாள். ஏன் இந்த அழைப்பு என்று புரியாமல் முதல்வரின் அறைக்குச் சென்றாள்.

ஒரு மத்திய வயது பெண்மணி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தாள். மிருதுளா உள்ளே நுழைந்ததும் அளவெடுக்கும் பார்வையை அவள் மீது வீசினாள். துளைக்கும் அந்த பார்வையை சிரமப்பட்டு ஒதுக்கிவிட்டு முதல்வரிடம் கவனத்தை திருப்பி, “கூப்பிட்டீங்களாமே சார்” என்றாள்.

அவரும் உணர்வற்ற சிலை போல் தான் அமர்ந்திருந்தார். அவளை ஏறிட்டு பார்த்து ஒரு நொடி அமைதியாக இருந்தவர், பிறகு, “இவங்க க்ரைம் பிராஞ்ச் சப்-இன்ஸ்பெக்டர். உன்கிட்ட ஏதோ விசாரிக்கனுமாம்” என்றார்.

மிருதுளாவின் இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது.

“என்கிட்ட.. என்ன?” - வார்த்தைகளை கோர்க்க முடியாமல் தடுமாறினாள்.

“அதை இங்க பேச முடியாது. வா என்கூட..”

“எங்க!” - அவள் பார்வை அவசரமாக முதல்வரிடம் திரும்பி உதவியை யாசித்தது. அவரோ அசைய மறுத்து அமர்ந்திருந்தார்.

“உன்கிட்ட சில கேள்விகள் கேட்கனும். அதுக்கு நீ எங்க ஆபீஸுக்கு வரனும். நீயா வந்தேன்னா அமைதியா போயிடலாம். இல்லன்னா இங்க ஒரு ஸீன் கிரியேட் ஆகும். அதுக்கு பிறகு நான் உன்ன வலுக்கட்டாயமா இழுத்துகிட்டு போக வேண்டியிருக்கும்” - மிகவும் உள்ளடங்கிய குரலில் எச்சரித்தாள். அந்த குரலில் இருந்த அழுத்தம் மிருதுளாவை அச்சுறுத்தியது. முயன்று துணிவை இழுத்துப் பிடித்துக் கொண்டு, “என்ன விஷயம் மேடம்?” என்றாள் பணிவுடன்.

“ப்ரொஃபஸர் பால்கி மிஸ்ஸிங் ஃப்ரம் எஸ்டர்டே. நீதான் அவரை கடைசியா மீட் பண்ணியிருக்க. இன்பர்மேஷன் போதுமா இல்ல இன்னும் வேணுமா?” - வெடுவெடுத்தாள்.

‘நானா! நான்தான் அவரை பார்க்கவே இல்லையே! ஐயோ அர்ஜுன்! இதை சொன்னால் அர்ஜுன் மாட்டிக்கொள்வானே!’ - பதட்டத்துடன் எண்ணியவளுக்கு அர்ஜுனின் பெயரை நினைத்த மாத்திரத்திலேயே, ‘அவன் வெளியில் தானே இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான்’ என்கிற தெம்பும் வந்தது.

தைரியமாகவே அந்த பெண்மணியுடன் கிளம்பினாள். வெளியே வரும் பொழுதே அவள் கண்கள் அவனை தேட துவங்கின. வழக்கமான இடத்தில் அவனை காணாமல், கார் பார்க்கிங்கில் பார்வையை சுழலவிட்டவள் திகைத்தாள்.

‘காரை கூட காணவில்லையே! எங்கு போனான்!’ - மனம் பதைபதைக்க சுற்றும் முற்றும் கண்களால் தேடினாள். ‘அர்ஜுன்.. ஆர்ஜூன்’ என்று புலம்பியது அவள் உள்ளம்.

அவளை அலட்சியத்துடன் பார்த்த அந்த பெண், “ஏய், என்ன சுத்தி சுத்தி பார்த்துகிட்டு நிக்கிற? ஏறு” என்று அதிகாரமாக கூறியபடி தன் இருசக்கர வாகனத்தை உறும விட்டாள். அச்சத்துடன் அவள் பின்னால் ஏறி அமர்ந்தாள் மிருதுளா.

ப்ரொஃபஸர் கடைசியாக தொடர்புக் கொண்டு பேசியது மிருதுளாவின் அலைபேசிதான் என்று தெரிந்த போதே, இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பதை அர்ஜுன் எதிர்பார்த்தே இருந்தான். ஆனால் அது இவ்வளவு விரைவாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி எதிர்பார்த்திருந்தால் இப்போது என்ன வேலைக்காக அவன் வெளியே சென்றானோ அந்த வேலையை நேற்றே முடித்திருப்பான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 48

சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி இடமும் வலமுமாக தலையை ஆட்டியாட்டி உமிழ்ந்த காற்றில் அறையே குளிர்ந்திருந்தாலும் அவள் மட்டும் கொட்டும் வியர்வையில் குளித்திருந்தாள். மங்கலான வெளிச்சத்தில் மூழ்கியிருந்தது அந்த அறை. அங்கே நடுநாயகமாக போடப்பட்டிருந்த மர மேஜையின் ஒருபுறம் மிருதுளா அமர்ந்திருக்க மறுபுறம் மூத்த காவல் அதிகாரி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு பக்கத்தில் அவளை அழைத்து வந்த துணை காவல் ஆய்வாளர் நின்றுக் கொண்டிருந்தாள். அவர்களுடைய கூர்மையான பார்வை மிருதுளாவை குத்தி துளைத்தது.

“ஜஸ்ட் ஃப்யூ குவஸ்டின்ஸ்.. பதில் சொல்லிட்டா போய்கிட்டே இருக்கலாம். இல்லன்னா கஷ்டமாயிடும் புரியுதா?” - ஆழ்ந்து ஒலித்த அவருடைய குரல் அவளை அச்சுறுத்தியது.

மிரண்டு போனவளாக மேலும் கீழும் தலையை அசைத்தாள்.

“ஹூ இஸ் அர்ஜுன் ஹோத்ரா?” - அழுத்தம் திருத்தமாகக் கேட்டார்.

பதில் சொல்ல முடியாமல் எச்சிலை கூட்டி விழுங்கிய மிருதுளாவின் விழிகளில், ‘ப்ரொஃபஸரை விசாரிக்க என்று அழைத்து வந்துவிட்டு அர்ஜுனை பற்றி கேட்கிறார்களே!’ என்கிற கலவரம் தெரிந்தது. அதை கவனமாக கணக்கில் எடுத்துக் கொண்டவர், விலகாப் பார்வையுடன் அவளை பார்த்தார்.

உறுமீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல் அவர் தன்னுடைய பதிலுக்காக காத்திருப்பதை புரிந்துக்கொண்ட மிருதுளா, “ஃப்ரண்ட்” என்றாள் மெல்லிய குரலில்.

அவருடைய புருவம் ஏறி இறங்கியது. மீசையை நீவியபடி அவளை பார்வையால் அளவெடுத்தார். பிறகு,

“வாட் இஸ் ஹிஸ் பிசினஸ்?” என்றார்.

என்ன பதில் சொல்வதென்று ஒரு நொடி தயங்கி யோசித்த மிருதுளா, “மைனிங்” என்றாள்.

“ஆங்!” - அவள் கூறியது கேட்கவில்லை என்பது போல் காதில் ஒற்றை விரலைவிட்டு ஆட்டிவிட்டு, அவளை நேராகப் பார்த்து, “என்ன சொன்ன?” என்றார்.

அவருடைய உடல்மொழியும் பார்வையும் அவள் அடிவயிற்றை தடதடக்கச் செய்தது.

“மை.. மைனிங்.. ஐ மீன்.. ஒரு.. மைனிங் கம்பெனிக்கு ஒர்க் பண்றார்” - தடுமாற்றத்துடன் பதிலளித்தாள்.

“எனக்கு தெரிஞ்சு அனந்தப்பூர்ல எந்த சுரங்கமும் இல்லையே! வீட்டுக்குள்ளேயே எதுவும் சுரங்கம் தோண்டுறீங்களா என்ன?” - கடுகடுவென்று மாறியது அவர் முகம்.

“இல்.. இல்ல சார்.. அவர் ஒடிசால உள்ள கம்பெனில ஒர்க் பண்றார்.”

“அப்போ அனந்தப்பூர்ல என்ன வேலை?”

“அது.. அவர்.. வந்து..” - தனக்காகத்தான் அவன் இங்கு வந்து தங்கியிருக்கிறான் என்பதை சொல்ல முடியாமல் தவித்தவளுக்கு இன்னொரு சந்தேகமும் எழுந்தது.

‘உண்மையிலேயே அவளுக்காகத்தான் இங்கு தங்கியிருக்கிறானா!’ - குழப்ப மேகம் சூழ்ந்து அவள் கண்ணை மறைத்தது. ப்ரொஃபஸரை என்ன செய்தானோ என்கிற எண்ணம் மேலெழ துக்கம் நெஞ்சை அடைத்தது.

“ஸ்பீக் அவுட் மிருதுளா. இங்க என்ன அசைன்மென்ட்காக வந்திருக்கான்” - விழிகளை உருட்டி அதட்டினார். அவர் கண்களில் தெரிந்த வெறியைக் கண்டு மிருதுளா நடுங்கிப் போனாள். அவர் அர்ஜுனை வேட்டையாட துடிப்பதை புரிந்துக்கொண்டவளின் மனம் பதறியது.

“இல்ல சார். அப்படி எதுவும் இல்ல” என்று பயத்துடன் படபடத்தாள். அந்த நொடி அவளுக்கு அனைத்தையும் விட அவன் மட்டுமே பெரிதாக தோன்றினான். ஆபத்து அவனிடம் நெருங்குவதை அவளால் அனுமதிக்க முடியவில்லை. ஆனால் இது சரியா? அவள் செய்வது நியாயமா? - மனசாட்சி குத்தியது. காதல் கொண்ட மனம் அதை கடந்து செல்ல உந்தியது. முன்னுக்குப் பின் முரணாக போராடிய உணர்வு பிரவாகத்தில் தத்தளித்தவள், தனக்குள் ஒரு மாயையை உருவாக்கிக் கொண்டாள். ப்ரொஃபஸர் எங்கோ நலமாக இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டாள். ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் அவள் தனக்குள் உருவாக்கிக் கொண்ட அந்த எண்ணத்தை, மீண்டும் மீண்டும் அசைபோட்டு நம்பிக்கையாக உருவேற்றி, அதையே பற்றுக்கோளாக பிடித்துக் கொண்டு தன்னைத்தானே தேற்றி கொண்டாள்.

ஆனால் அவளுடைய நம்பிக்கையை உடைத்து, பற்றுக்கோலை பானகத்துரும்பாக மாற்றியது, அடுத்து அந்த அதிகாரி அவள் மீது எடுத்துவைத்த குற்றச்சாட்டு.

“நேற்றையிலேருந்து ப்ரொஃபஸர் மிஸ்ஸிங். நீதான் அவரை கடைசியா பார்த்திருக்க. உனக்கு தெரியாம அவர் எங்கேயும் போயிருக்க முடியாது. சொல்லு..”

“சார் நான் ப்ரொஃபஸரை பார்க்கவே இல்ல. நா போனப்ப அவர் வீட்லேயே இல்ல” - தவிப்புடன் மறுத்தாள் மிருதுளா.

“நீ எவ்வளவு பெரிய பிரச்சனையில இருக்கன்னு உனக்கு புரியல” என்று அவளை ஒரு விதமாக பார்த்தவர், “பேசலைன்னா உன்னால இங்கிருந்து போக முடியாது” என்றார்.

அச்சுறுத்தி அவள் உறுதியை குலைத்துவிடும் நோக்கில் அவர் பேசிக் கொண்டிருக்க அவளோ மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதில் ஆத்திரமடைந்தவர், “ஷட் அப்..” என்று அங்காரத்துடன் மேஜையை ஓங்கி அடித்தார்.

விக்கித்துப்போன மிருதுளா மூச்சைப் பிடித்துக் கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தாள். பிடிபட்ட பறவை போல் படபடத்தது நெஞ்சம். அகல விரிந்த அவள் விழிகளில் திரண்ட கண்ணீர் கரை புரள நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

சற்று நேரம் அவளை வெறித்துப் பார்த்த அந்த மூத்த மனிதர், “கொன்னுட்டியா?” என்றார் அமைதியாக.

திக்கென்றிருந்தது அவளுக்கு. ‘கொலையா! அவளா!’ - நெஞ்சுக்குழிக்குள் கட்டை விழுந்தது போன்ற உணர்வில் சுவாசம் சீரற்று போக வாயை திறந்து திறந்து மூடினாள். விழிகளில் தொக்கி நின்ற கண்ணீர் தடையை உடைத்துக் கொண்டு பெருகியது.

“என்ன மோட்டிவ்?”

“நோ..”

“எப்படி பண்ணின?”

“கடவுளே!”

“பாடியை எப்படி டிஸ்போஸ் பண்ணின?”

“இல்ல.. இல்ல.. நா எதுவும் பண்ணல” - கதறிவிட்டாள்.

ஓரிரு நொடிகள் அவளுக்கு அவகாசம் கொடுத்தவர், “அப்போ வேற யார் பண்ணினது?” என்றார் நிதானமாக.

நிலைகுலைந்து போய் குலுங்கிக் கொண்டிருந்தவள், சட்டென்று நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தாள். ‘அர்ஜுனை பற்றி எதுவும் தெரிந்திருக்குமோ!’ - அந்த நேரத்திலும் அவளுக்கு அவனை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம்தான் எழுந்தது. விட்டுக்கொடுக்கவே முடியவில்லை.

“எனக்கு எதுவும் தெரியாது” - பட்டென்று கூறினாள். ப்ரொஃபஸருக்கு செய்யும் துரோகம்தான். ஆனால் அவனுக்கு எதிராக சிந்திக்கக் கூட முடியவில்லையே! என்ன சுழல் இது! அவளுடைய மனிதம் எங்கு தொலைந்து போனது! குற்றவுணர்வு அறுத்தது.

“அர்ஜுனை எப்படி தெரியும்?”

அவள் பதில் சொல்லவில்லை.

“நீ ப்ரொஃபஸரை பார்க்க போனப்ப அர்ஜுன் எங்க இருந்தான்?”

“ஐ டோன்ட் நோ” - கண்ணீர் வற்றி போனவளின் குரலில் ஒருவித பிடிவாதம் தெரிந்தது.

புருவம் நெரிய அவளை வெறித்துப் பார்த்த அதிகாரி, “போலீஸ்காரனோட கடினமான பக்கத்தை பார்க்க விரும்புற இல்ல?” என்றார் கண்கள் பளபளக்க.

அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவனை காட்டிக்கொடுக்க முடியாது. குற்ற உணர்ச்சியிலிருந்தும் தப்பிக்க முடியாது. நடப்பது நடக்கட்டும். பழியும் பாவமும் அவள் மீதே விழட்டும்.. இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.

அப்போது அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. தணல் போல் செக்கச்சிவந்த முகத்துடன் அர்ஜுன் உள்ளே நுழைந்தான். அவனைத் தொடர்ந்து, கருப்பு பேண்ட்டும், வெள்ளை சட்டையும் அணிந்து கையில் கத்தை காகிதத்தை கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரும் உள்ளே நுழைந்தார்.

காவல்துறை அதிகாரியின் கவனம் அவர்களுக்கு பின்னால் நின்ற காக்கிச்சட்டையின் மீது கண்டிப்புடன் படிந்தது.

“என்கொய்ரி போயிட்டு இருக்கும் போது என்ன இடையில” - அதட்டினார்.

“சார் ப்ளீஸ் வெயிட் அவுட் சைட். டென் மினிட்ஸ்ல முடிஞ்சிடும்” - விசாரணையில் உடன் இருந்த துணை ஆய்வாளர் அவர்களை வெளியே அனுப்ப முயன்றாள்.

“எங்ககிட்ட பேப்பர்ஸ் இருக்கு. ஆர்டர் இல்லாம அவங்களை நீங்க இங்க கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது. அனுப்புங்க” - வழக்கறிஞர் வாதம் செய்தார்.

அவரை ஏற இறங்க பார்த்த காவல்துறை அதிகாரி, “உங்க டியூட்டியை செய்யுங்க.. ஆனா என்னோட டியூட்டியை டிஸ்டர்ப் பண்ணாம செய்யுங்க” என்று என்று கடுப்புடன் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

“இன்னும் சில கேள்விகள் கேட்கனும். பதில் கிடைச்சதும் அனுப்பறேன்” - அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மிருதுளாவின் பக்கம் திரும்பி, “கெட் அப்” என்றான் அர்ஜுன். குரலில் ஒருவித அதட்டல் இருந்தது. அது தனக்கானது என்பதை புரிந்துக்கொண்ட அதிகாரி, “யு காண்ட் டூ திஸ்” என்றார் கோபத்துடன்.

“ஐ கேன்” - சீற்றத்துடன் முறைத்தான் அர்ஜுன். அவன் கண்களில் தெரிந்த அக்னி அவரை நிதானிக்க செய்தது.

“இது நம்ம கடைசி சந்திப்பா இருக்கப்போறது இல்ல அர்ஜுன். சீக்கிரமே உன்ன தேடி வருவேன்” என்றார் சவால் போல.

“வெய்டிங்” - எள்ளல் தெறித்தது அவன் குரலில்.
 
Top Bottom