Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed பண்ணையார் தோட்டம் மர்மம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்..... 42 👇


ஒருநாள் மூன்று பெரியவர்கள் பரந்தாமனை பார்த்து ஆறுதல் சொல்வதற்காக பண்ணையார் வீட்டுககு சென்றார்கள்...

பரந்தாமன் வீட்டு வாசலில் பைக்கை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.. அப்போது இந்த மூன்று பெரியவர்களும் பரந்தாமனை பார்த்து மரியாதை கொடுத்தார்கள் ..
பரந்தாமனும் அவர்களை நலம் விசாரித்தான்..

இப்போதைக்கு விவசாயம் செய்வதற்கான நேரம் சரியாக அமையவில்லை ஐயா .. கொஞ்சநாள் பொறுத்துக்குங்க நமக்குன்னு நேரம் கனிந்து வரும் என்று பரந்தாமன் அவர்களுக்கு ஆறுதல் சொன்னான்..

நாங்கள் உங்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தோம் ..ஆனால் நீங்கள் எங்களுக்கு ஆறுதல் சொல்றீங்களே சாமி ..
இது வரைக்கும் நம்ம தோட்டம் இப்படி எரிஞ்சி போனதா சரித்திரமே கிடையாது ..
இதை எல்லாம் பார்க்க கூடாது என்று தான் பண்ணையாரும் முத்தையாவும் சீக்கிரமாகவே போய் சேர்ந்துட்டாங்க போல தெரியுது அவங்க இருந்திருந்தா அவங்களால இதை தாங்கி இருக்கவே முடியாது..
என்று ஒரு பெரியவர் சொன்னார்...

உண்மைதான் ஐயா ...நமக்கு நேரம் சரியில்லையோ என்னவோ தெரியல ..நானும் எவ்வளவோ முயற்சி செய்யறேன் விவசாயம் நல்லபடியா நடக்கணும் என்று ஆனால் எதுவுமே கூடி வர மாட்டேங்குது ..நான் என்ன செய்ய முடியும் என்று வருத்தத்தோடு சொன்னான் பரந்தாமன்..

அதுக்குத்தான் நாங்களே ஒரு யோசனை சொல்லலாம் என்று வந்திருக்கிறோம் ..
ஆனால் இதைக் கேட்டு நீங்கள் கோபப்படக் கூடாது என்று இன்னொரு பெரியவர் சொன்னார்..

விவசாயம் நடக்க வேண்டுமெனறால் நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் ஐயா தயங்காமல் சொல்லுங்கள் என்று பரந்தாமன் சொல்லும்போது சந்திரனும் தீனாவும் வந்து அங்கு நின்றார்கள்...

நமது ஊரில் உள்ள சாட்டையடி சாமியார் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும் ..
அவர் கொஞ்ச நாளா நம்ம ஊருக்கு சோதனைக் காலம் வரப் போகுதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு ...
அதே போல தான் நமக்கும் சோதனைக்காலம் வந்து கொண்டேதான் இருக்கிறது அதனால் அவரை நீங்க சந்தித்து இதற்கு ஏதாவது பரிகாரம் செய்யனும் என்றால் அதை செய்து விட்டால் ..
எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம் ..
இது எங்கள் மனதுக்கு பட்டது உங்களுக்கு சரின்னு பட்டல் அவரை சந்திக்கலாம் என்று அந்தப் பெரியவர் சொன்னார்...

நீங்க ஒரு நல்ல யோசனையை சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தோம் ..
ஆனால் நீங்க சொன்ன யோசனை அவ்வளவாக எடுபடாது ஐயா என்று சந்திரன் அவர்களிடம் சொன்னான்..

முன்கூட்டியே நமக்கு கணிச்சி சொல்ற அவருக்கு ...
வரப்போறா நாட்களையும் நமக்கு நல்லபடியாக அமைத்துக் கொடுக்க மாட்டாரா தம்பி ...
அவர் மேல நம்பிக்கை வச்சா நிச்சயம் பலன் இருக்கும் தம்பி என்று மறுபடியும் ஒரு பெரியவர் சந்திரனுக்கு எடுத்துச் சொன்னார்..

இதுவரைக்கும் சொன்னது எப்படியோ அவர் சொன்ன மாதிரியே நடந்திருக்கலாம் ... ஆனால் அவர் சொல்றதுதான் நடக்கும் என்பது நிச்சயம் இல்லையா என்று தீனாவும் சொன்னான்...

ஆரம்பத்துல நானும் உங்களைப் போலவே தான் அவரைப் பற்றி பேசினேன் ..
ஆனால் ஒருநாள் என் வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது ஒரு பேய் சிரித்துக்கொண்டே எங்களை பயமுறுத்தியது ...மறுநாள் ஒருவர் எங்களுக்கு அவரின் பெருமையை எடுத்துச் சொன்னார் நானும் நம்பிக்கை இல்லாமல் அவரிடம் சென்று என்னுடைய பிரச்சனையை சொன்னேன் ..
மறுநாள் இரவு அவர் வந்து அந்தப் பேயை அங்கிருந்து விரட்டி அடித்து விட்டார் ...
அப்போதுதான் எனக்கும் அவர் மீது நிறைய நம்பிக்கை ஏற்பட்டது ..
அந்த பேய் தென்னைமரத்தின் மீது உச்சியில் இருந்தபடி சிரித்துக் கொண்டே எங்களை ரொம்பவே பயமுறுத்தியது ...
இவரால் இந்த பேயை விரட்ட முடியுமா என்ற சந்தேகம் கூட எங்களுக்கு இருந்தது ..
ஆனால் துளியும் பயப்படாமல் அவர் அந்த பேயை விரட்டிவிட்டார் அன்றுமுதல் எங்களுக்கு பேய் தொல்லையே கிடையாது ..
இப்படி எல்லா விஷயத்திலும் அவர் சக்தியோடு செயல்படுகிறார் அதனால்தான் சொல்கிறேன் அவரை நீங்கள் சந்தித்தால் நிச்சயம் உங்களுக்கு ஏதாவது பலன் இருக்கும் என்று அந்தப் பெரியவர் சொன்னார்...

அப்போது பரந்தாமனுக்கு ஒரு யோசனை தோன்றியது...

நாமும் இந்த சாமியாரிடம் பம்புசெட்டில் பேய் இருக்குது என்று சொல்லி ..
இவரை அழைத்துக்கொண்டு சங்கரையும் ரேகாவையும் விரட்டி விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான்..

அப்படின்னா ..அந்த சாமியாரு பேய் பிசாசு விரட்டுவதில் சாமர்த்தியமானவரா என்று பரந்தாமன் கேட்டான்..

நிச்சயம் அவர் நம் ஊரில் உள்ள நிறையபேர் வீட்டின் டேய் தொல்லையை விரட்டி இருக்கிறார் அதனால்தான் சொல்கிறேன்...

சரி ஐயா ..நீங்கள் இவ்வளவு தூரம் அவரைப் பற்றி சொல்லும் போது நாங்களும் அவரை சந்திப்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை ... ஒருவேளை நீங்கள் சொல்வதைப்பொல அவரால் நம்முடைய பிரச்சனைகள் தீர்ந்தால் அதுவே எங்களுக்குப் போதும் என்று பரந்தாமன் மகிழ்ச்சியோடு அவர்களிடம் சொன்னான்..

நாங்கள் கிளம்புகிறோம்
நீங்களும் கூடிய சீக்கிரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியா இருக்கணும் என்று கடவுளை நாங்கள் வேண்டுகிறோம் இந்த ஊர் மக்களுக்காக உங்கள் குடும்பம் படும் பாடு...
கொஞ்சம் நஞ்சம் அல்ல நிச்சயம் கடவுள் உங்களை சந்தோஷமா பாத்துக்குவார் என்று சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்..


அண்ணே ..அந்த சாமியாரைப் பார்த்தாலே ஏதோ பித்தலாட்டம் பண்றவன் போல தெரியுது ..
இந்த ஊர் மக்கள்தான் அந்த ஆளை நம்புறாங்க நீங்களுமா என்று தீனா கேட்டான்...

தம்பி இப்போ நமக்கு இருக்கிற பிரச்சினை பேயாக இருக்கும் சங்கரையும் ரேகாவையும் அங்கிருந்து விரட்டிவிட்டால் நமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது

இந்த ஊர் மக்கள் பேயை விரட்டுவதில் வல்லவன் என்று அந்த சாமியாரை சொல்கிறார்கள் அப்படி அந்த ஆளு வல்லவனாக இருந்தாள் ..
சங்கரையும் ரேகாவையும் விரட்டி அடிக்கட்டும் ...
அப்படி முடியவில்லை என்றால் நாம மூணு பேரும் சேர்ந்து அந்த ஆளை விரட்டி அடிக்கலாம் ...
என்னா நான் சொல்றது ...
என்று பரந்தாமன் தம்பிகளிடம் சொன்னான்...

எனக்கென்னமோ நம்ம தான் அந்த ஆளை விரட்டி அடிக்க போறோம் என்று தெரியுத அண்ணா என்று சிரித்தபடி சொன்னான் சந்திரன்...

சரி சரி கிளம்புங்க இன்னைக்கே அந்த சாமியாரை பார்க்கலாம் ஆனால் அவரிடம் எதையுமே வெளிப்படையாக நம்ம சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு மூவரும் பைக்கில் ஊருக்குள்ளே கிளம்பினார்கள் சாட்டையடி சாமியாரை சந்திக்க...


🏠🛖🏡⛺🏘️ பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் பைக்கில் ஊருக்குள்ளே சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ரேகாவின் அம்மா ஓடிவந்து இவர்களை வழி மறித்தாள்...


ஐயா எங்க போறீங்க ...
இதோ. இருக்குது எங்க வீடு
என் மகள் வந்துட்டாளா இதை சொல்றதுக்கு தான் நீங்க இங்கு வந்தீங்களா என்று சிரித்தபடியே அவர்களிடம் கேட்டாள்...

அப்போது பரந்தாமன் திருதிருவென முழித்தான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்..

என் மருமகன் சங்கரும் வந்துட்டானா ..என்னை கூட்டி வர சொன்னா ...அதுக்கு தான் நீங்கள் வந்தீங்களா என்று மறுபடியும் சந்தோஷமாக புன்னகையோடு கேட்டாள் லட்சுமி அம்மாள்..

லட்சுமி அம்மாளை பார்த்தது சந்திரனுக்கும் தீனாவுக்கும் பரிதாபமாக இருந்தது ...
பாவம் நன்றாக வாழ்ந்த குடும்பத்தை இப்படி கொன்று விட்டோமே என்று நினைத்து சோகத்தில் அமைதியாக லட்சுமி அம்மாளை பார்த்தபடி இருந்தார்கள்..


அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து லட்சுமி அம்மாவை சமாதானம் செய்தார்கள்...

ஆமாம் ..உன் மகளும் மருமகனும் சீக்கிரமாகவே வர போறாங்களாம் அதை சொல்றதுக்கு தான் வந்தாங்க ...அவங்களை விட்டுடுமா என்று சமாதானம் சொல்லி அழைத்துச் சென்றார்கள்....

லட்சுமி அம்மாளின் மன நிலைமையை புரிந்துகொண்ட சந்திரனும் தீணாவும் ரொம்பவே கவலையோடு இருந்தார்கள் அப்போது பரந்தாமன்.. உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்....


அண்ணே பாவம் அந்த அம்மா இனிமேலாவது இந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்து பாவத்தை கழிக்கணும் அண்ணே என்று சந்திரன் சொன்னான்...

அதுக்காகத்தான் நான் விவசாயம் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறேன் தம்பி அப்போதுதான் நாம் செய்த பாவத்தை எல்லாம் தீர்க்க முடியும் என்று நல்லவன் போல பதில் சொன்னான் பரந்தாமன்..


⛺ குருவே நம்மளை தேடிக்கொண்டு பண்ணையார் மகன்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் குருவே என்று சாட்டையடி சாமியாரிடம் அவனது சிஷ்யன் சொன்னான்..

என்னடா சொல்ற ....நம்மை தேடிக்கொண்டு பண்ணையார் மகன்கள் வராங்களா ...
ஒருவேளை இந்த ஊருக்கு சோதனை காலம் வரப் போகுதுன்னு சொன்னதுக்காக என்னை அடிக்க வராங்களா.... ஒண்ணுமே புரியலடா .. எப்படியாவது அவங்கள நீயே விசாரிச்சு அனுப்பி விடுடா .. என்னை கேட்டா குரு வெளில போயிருக்காரு ன்னு சொல்லிடு என்று பயத்தோடு சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் சொன்னார்..

பரந்தாமன் மோட்டார் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு சாட்டையடி சாமியாரின் பூஜை அறைக்கு சென்றான்..

என்ன ஐயா.. இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க என்று நடுக்கத்தோடு கேட்டான் சிஷ்யன்..

ஒன்றுமில்லை சாமியாரைப் பார்த்து ஒரு யோசனை கேட்கலாம் என்று வந்தேன்...

யோசனையா........ ஒன்றும் புரியவில்லையே ஐயா..

எங்களுக்கு எந்த விவகாரமும் கைகூடி வரமாட்டேங்குது அதனால் தான் சாமியாரிடம் ஏதாவது பரிகாரம் செய்யலாமா என்று கேட்க வந்தேன் என்று பரந்தாமன் சொன்னான்..

உடனே சிஷ்யன் முகம் பூ போல மலர்ந்தது நம்ம எதிர்பார்த்தபடியே பண்ணையார் மகன்கள் நம் வலையில் சிக்கி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷமாக சொன்னான்...

ஐயா நீங்கள் ஒன்றும் கவலைப் படாதீங்க எல்லாத்தையும் எங்க குரு பாத்துக்குவார் இதோ நீங்கள் வந்திருக்கும் விஷயத்தை எங்கள் குருவிடம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்...

⛺ என்னடா சொல்றானுங்க இனிமேல் அப்படியெல்லாம் எங்கள் குரு சொல்ல மாட்டார் என்று சொன்னாயா.... என்று பதட்டத்தோடு சிஷ்யனை பார்த்து சொன்னார் சாட்டையடி சாமியார்..

குருவே நீங்க பயப்படாதீங்க அவங்க நம்மகிட்ட யோசனை கேட்க வந்திருக்காங்க
நம்ம நினைத்தபடியே நம்ம வலையில் சிக்கிட்டாங்க குருவே இனிமேல் உங்களுடைய திறமையை காட்டி
இந்த ஊரை நம்ம கைக்குள்ள போட்டுக்கணும் குருவே ..
என்று இரண்டு சிஷ்யர்களும் சொன்னார்கள்...

அப்படியா சொல்றே இனிமேல் அவனுங்கள நான் பாத்துக்குறேன் உள்ள வர சொல்லு...

குருவே ஊர் மக்களிடம் கேட்பதுபோல ஆயிரம் இரண்டாயிரம் கேட்காதீங்க ஒரேடியா அஞ்சாயிரம் கேளுங்க குருவே ...
வருமானம் கிடைத்து ரொம்ப நாளாச்சு ..
இவனுங்களை விட்டால் அதுக்கப்புறம் பிடிக்க முடியாது குருவே என்று சிஷ்யன் சொன்னான்..

அஞ்சாயிரம் தானே ..நான் பார்த்துக்கொள்கிறேன் அவனுங்கள உள்ளே கூட்டிக் கொண்டுவா ....
என்று சாட்டையடி சாமியார் சொல்லிவிட்டு கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார்...

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் சாட்டையடி சாமியாரின் பூஜை அறைக்கு சென்று அவரை பார்த்து பணிவாக அமர்ந்தார்கள்..

சாமி எங்களுடைய பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்குது சாமி இதை நீங்கள் தான் சரி கட்டணம் என்று பரந்தாமன் பேச ஆரம்பித்தான்..


பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் கண்களை மூடியபடி இருந்த சாட்டையடி சாமியார் யோசிக்க ஆரம்பித்தார்...

இவனுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் ...
எந்த பிரச்சினையாக இருந்தாலும் நமக்கு தெரிந்தது பேய்
ஓட்டுவதுதான் இதையே சொல்லி சமாளிப்போம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு உடனே சாமி வந்தவன் போல தலையை ஆட்டிக் கொண்டே கம்பீரமாக சொன்னான் சாட்டையடி சாமியார்...

உங்களை அந்த பிசாசு நிம்மதியாக விடாது என்று வழக்கம்போல சொன்னார் சாமியார்...

சாமியாரின் பேச்சைக் கேட்டதும் ஆச்சரியத்தோடு வியப்போடு அவரைப் பார்த்தார்கள் மூவரும்...

கரெக்டா சொல்றாரு பரவாயில்லையே என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் மறுபடியும் சாமி நீங்கள் தான் இதை எப்படியாவது சரி செய்யணும்...


நிச்சயமா சரி செய்கிறேன் ஆனால் அதற்கு கொஞ்சம் பணம் அதிகமாகவே செலவாகும் ஏனென்றால் அங்கு இரண்டு பேய் இருக்கிறது என்று சாட்டையடி சாமியார் ஐந்தாயிரம் ரூபாய் வாங்குவதற்காக இரண்டு பேய் என்று சொல்லி விட்டான்...

மேலும் பரந்தாமனுக்கு அவனது தம்பிகளுக்கும் ஆச்சரியமும் வியப்பும் ஏற்பட்டது ...
இந்த சாமியார் உண்மையாகவே சரியாக சொல்கிறானே என்று நினைத்து ஆச்சரியப் பட்டார்கள்..

சாமி நீங்க நாளைக்கே வந்து அந்த பேயை விரட்ட வேண்டும் அப்போதுதான் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று பரந்தாமன் சொன்னான்..

நிச்சயம் நாளைக்கு வருகிறேன் இப்போது பூஜை சாமான் வாங்குவதற்கு 3 கொடுங்கள் பிறகு அந்த பேயை விரட்டியதும் 2 கொடுங்கள் என்று கண்களை மூடிக்கொண்டு சாட்டையடி சாமியார் சொன்னார்...

சாமி என்னிடம் இப்போதைக்கு இரண்டு தான் இருக்கிறது நீங்கள் அந்தப் பேயை விரட்டிய தும்3 தருகிறேன் என்று சொல்லி விட்டு பரந்தாமன் தனது இடுப்பில் இருந்து இரண்டு கட்டு பணத்தை எடுத்து சாமியாரின் முன்பு வைத்தான்...

அப்போது இதை பார்த்து இருந்த சிஷ்யர்களுக்கு தலைசுற்றியது நம்ம குரூப் 2 என்று சொன்னது 2000 ரூபாய் ஆனால் பண்ணையார் மகன்-2 என்று சொன்னதை ..
2 லட்சம் என்று நினைத்து விட்டார்களே என்று நினைத்து சந்தோசத்தில் அவர்களுக்கு தலையே சுற்றியது...

சாமி நாங்கள் கிளம்புகிறோம் நாளைக்கு நீங்கள் நிச்சயம் வரவேண்டும் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் தனது தம்பிகளுடன் அங்கிருந்து புறப்பட்டான்...

பண்ணையார் மகன்கள் சென்று விட்டார்கள் என்று நினைத்து சாட்டையடி சாமியார் கண் திறந்து பணத்தை பார்த்தார் ....
அப்போது பெரும் அதிர்ச்சியாக இருந்தது...

என்னடா இது இவ்வளவு பணம் என்று ஆச்சரியத்தோடு கேட்டார் சாட்டையடி சாமியார்...

குருவே இனிமே நமக்கு நல்ல காலம்தன்..
பண்ணையார் மகன்கள் நீங்கள்
5 ன்னு சொன்னதை அவனுங்க 5லட்சம் என்று நெனச்சு கிட்டாங்க அப்படினா நாளைக்கு மூன்று லட்சம் நமக்கு குடுப்பாங்க ...

நம்ம இனிமேல் இந்த கூலிக்காரன் பசங்களை எல்லாம் ஏமாற்ற வேண்டாம் ...
நேரா பண்ணையார் மகன் களையே ஏமாற்றி ...லட்ச லட்சமா பணம் புடுங்கலாம் குருவே என்று சிஷ்யர்கள் சந்தோஷமாக சொன்னார்கள்..

நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல டா இவ்வளவு சீக்கிரத்தில் இவனுங்க மாட்டுவானுங்க என்று...

குருவே அவனுங்க கிட்ட நீங்க 2 பேய் இருக்குதுன்னு சொல்லிட்டீங்க ஆனா நம்ம செல் போன்ல பொம்பள பேய் மட்டும் சிரிக்கிற மாதிரி தானே ரிங்டோன் வைத்திருக்கிறோம் இன்னொரு பேய் சிரிக்கிற ரிங்டோன் இல்லையே குருவே...

அட விடுடா ...இன்னொரு பேய் உண்மை என்று சொல்லலாம் இனிமே நம்ம சொல்றதுதான் அவனுங்க கேட்பானுங்க என்று சாமியார் தில்லாக சொன்னார்..


அண்ணே... அந்த சாமியார் எல்லாத்தையும் சரியா சொல்றான் என்று சந்திரன் கேட்டான்....

ஆமாண்டா தம்பி ...
நானும் கொஞ்சம் கூட எதிர்
பாக்கல டா ... எல்லாத்தையும் அவனே சொல்லிட்டான்...

இருந்தாலும் பணம் அதிகமா வாங்கு றாரே...

பரவாயில்லை சங்கரையும் ரேகாவையும் அந்த ஆளு விரட்டிவிட்டால் போதும்..
பணத்தை பொறுமையா சம்பாதிக்கலாம்...

ஒருவேளை சங்கரையும்
ரேகாவையம் விரட்ட முடியாமல் போனால்...

முதலில் சங்கர் அந்த சாமியாரை கொன்றுவிடுவான் ..
ஒருவேளை சங்கர் சாமியாரை விட்டுவிட்டாலும் ..
நம்ம சாமியாரை அடித்தே கொன்று விடலாம் என்று பரந்தாமன் தனது தம்பிகள் இடம் சொல்லிக்கொண்டு மோட்டார் பைக்கில் சென்றார்கள்....



சாமியாரிடம் பரந்தாமன் சிக்கிக்கொண்டான...

இல்லை பரந்தாமனிடம் சாமியாரிடம் சிக்கிக்கொண்டார ..

இல்லை இவர்கள் இருவருமே சங்கரிடம் சிக்கிக் கொள்வார்களா..
என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.....



தொடரும்........
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ...43 👇


சிஷ்யா செல்போனுக்கு ஃபுல் சார்ஜர் போட்டியா அப்பதான் சவுண்டு பலமா கேட்கும்..

எல்லாம் ரெடியா இருக்கு குருவே நான் இன்னும் கொஞ்ச நேரத்துல பண்ணையார் தோட்டத்துக்கு சென்று அந்த பம்பு செட்டுல ஒரு மூலையில் நம்ம செல்போன் ஒலிக்க வச்சுட்டு வந்துடுறேன் குருவே ... அதோட நைட்டுக்கு நம்முடைய வேலையை ஆரம்பிக்கலாம்..


கவனமா செல்போனை நார்மல் மோடுக்கு மாற்றி வைத்து விட்டு வா போன தடவை மாதிரி அந்த குடிகாரன் வீட்டுல சைலன்ட்ல போட்டு வந்த மாதிரி ஏதாவது செஞ்சு மாடிக்குப் போறோம் என்று சாட்டையடி சாமியார் தெளிவாக சிஷ்யர்களுக்கு சொன்னார்..

குருவே இந்த பண்ணையார் பசங்க நம்மள சோதனை செய்வதற்காக ஏதாவது திட்டம் போட்டு நம்மிடம் வந்து இருப்பாங்களா..

பார்த்தா அப்படி எல்லாம் தெரியலடா அவனுங்க எதையோ பார்த்து பயந்து துட்டு பேய் இருக்கிறதா நினைச்சு கிட்டு நம்மிடம் வந்து சொல்லிட்டாங்க... இனிமேல் நம்ம ஆட்டத்தை அவனுங்களுக்கு காட்ட வேண்டியதுதான்..

சரி டா இன்னைக்கு ராத்திரி என்கூட வழக்கமா யார் வருவீங்களோ வாங்க நம்ம பூஜை அறையில் இருந்து சரியா 12 மணியிலிருந்து போன் செய்ய ஆரம்பித்து விடு அப்பா தான் சரியா இருக்கும் நானும் பண்ணையார் பசங்களை கூட்டிக்கிட்டு பம்பு செட்டுக்கு போறேன்..

......இரவு நேரம் ஆனது...

மணி 11 ஆக போகுது இன்னும் இந்த சாமியாரை காணோமே என்று சந்திரன் புலம்பிக் கொண்டிருந்தான்...

இன்னைக்கு என்ன ஆச்சு மூன்று பேரும் யாரையோ எதிர்பார்த்து கிட்டு இருக்காங்களே தூங்காம என்ற சந்தேகத்தோடு சாந்தி இவர்களை கவனித்திருந்தால்...


அண்ணே இந்த சாமியார் வந்ததும் பணத்தை கொடுத்து விடாதீர்கள் வேலையெல்லாம் முடிந்த பிறகுதான் காலையில பணத்தை கொடுக்கணும் இல்லன்னா ஏதாவது மந்திர தந்திர வேலையை நம்மிடமே காட்டுவான் என்று தீனா சொன்னான்..

இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது சாட்டையடி சாமியார் தனது ஒரு சிஷ்யனை மட்டும் அழைத்துக்கொண்டு வந்தார்...

உடனே பண்ணையார் மகன்கள் சாட்டையடி சாமியாருக்கு மரியாதை கொடுத்து நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்கள்...

சாமி எங்க பம்புசெட்டில் ஏதோ காத்து கருப்பு இருக்குது என்று நினைக்கிறேன் அதை நீங்கள்தான் எப்படியாவது விரட்டிவிட வேண்டும்...

அதுக்குத்தானே நான் வந்து இருக்கேன்...


சாமி பூஜை சாமான் வாங்குவதற்கு 2 லட்சம் அட்வான்ஸ் வாங்குனீங்க ஆனால் கையில் ஒரே ஒரு சட்டை மட்டும் எடுத்துக்கிட்டு வந்து இருக்கீங்களே என்று சந்திரன் கேட்டான்..

தம்பி .. என் சட்டைக்கு பூஜை போட்டு தான் எடுத்து வந்து இருக்கேன் இந்த சட்டையோட மகிமையை இன்னும் கொஞ்ச நேரத்துல நீ பார்க்கத்தான் போகிறா..

சாமி அவன் இப்படித்தான் எதையாவது பேசிக் கொண்டிருப்பான். நீங்க மனசுல எதையும் வெச்சுக்காதீங்க ஆக வேண்டியதை பாருங்கள் என்று பரந்தாமன் சொன்னான்..

சரி வாங்கள் பம்பு செட்டுக்கு போகலாம் என்று சொல்லிக்கொண்டு சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யனும் கிளம்பினார்கள்..

சாமி ஒரு சிஷ்யனை மட்டும் தான் கூட்டி வந்து இருக்கீங்க இன்னொருத்தர் வரலையா என்று கேட்டான்..

அவனும் என் கூட வந்துட்டா அப்புறம் போன் செய்து உங்களை யாரு பயமுறுத்துவார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டு சாட்டையடி சாமியார் ...
அவனுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல அதனால அவனை பூஜை அறையிலேயே விட்டுட்டு வந்துட்டேன்..

நீங்க ரெண்டு பேரும் அந்த பேயை விரட்டி விடுவீங்களா...

நீங்க மூணு பேரும் பார்க்கத்தானே போறீங்க தம்பி...

நாங்க வரல சாமி.. நீங்க மட்டும் சென்று அந்தப் பேயை விரட்டி விட்டு வாங்க என்று சந்திரன் சொன்னான்..

குருவே நான் சொன்ன மாதிரியே இவனுங்க நம்மை சோதித்து பாக்குறாங்க விடாதீங்க...

ஆமாம் சிஷ்யா இவனுங்கள கூட்டிக்கிட்டு பம்பு செட்டுக்கு போயிட்டு நம்முடைய வித்தையை காட்டினால்தான் இவனுங்க நம்மை நம்புவானுங்க இல்லனா இப்படிதான் நக்கலா பேசுவார்கள் என்று சாட்டையடி சாமியாரும் சிஷ்யனும் ரகசியமாக பேசிவிட்டு...

இந்த சாட்டையடி சாமியார் இருக்கும்போது உங்களுக்கு என்ன பயம் ... நீங்கள் தைரியமாக என்னோடு வாங்க அந்த பேயை எப்படி கதற விடுகிறேன் என்று நீங்களே பாருங்கள் என்று தில்லாய் பேசினார் சாட்டையடி சாமியார்..

உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால் தான் நாங்கள் உங்களிடம் வந்து எங்கள் பிரச்சனையை சொல்கிறோம் ..
அதனால் நீங்களே இதை சரி செய்து விடுங்கள் நாங்கள் எதுக்காக வரணும் என்று பரந்தாமன் பொறுமையாக எடுத்துச் சொன்னான்..

அப்படியில்லை ..
நீங்கள் என்னுடைய திறமையை நேரில் பார்த்தால் தான் உங்களுக்கும் மனத் திருப்தி ஏற்படும் ..
அப்போதுதான் பணம் கொடுக்கும்போது கஷ்டமும் இருக்காது இல்லை என்றால் உங்களுக்கு சந்தேகம் இருக்கும் என்று சாட்டையடி சாமியார் சொன்னார்...

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சாமி நீங்களே அந்த பேயை விரட்டி விட்டு வாங்க என்று தீனா சொன்னான்...

தம்பி இப்படி எல்லாம் சொல்லி என்னை கோபப்படுத்தாதே
நீங்கள் மூவரும் என்னோடு வந்தே ஆகணும் என்று பிடிவாதமாக சொல்லி சாட்டையடி சாமியார் மூவரையும் அழைத்துக் கொண்டு பம்பு செட்டுக்கு சென்றார்...


என்னதான் நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல
இந்த சாமியாரை கூட்டிக்கிட்டு இந்த நடுசாமத்துல எங்கதான் போறாங்கன்னு தெரியல ..
இது எங்க போய் முடியப் போகுதோ என்ற மனக் குழப்பத்தோடு இருந்தால் சாந்தி...


முதலில் சாட்டையடி சாமியாரும் இரண்டாவது அவரது சிஷ்யனும் மூன்றாவது பரந்தாமன் நான்காவது சந்திரன் ஐந்தாவதாக தீனா இப்படி வரிசையாக வரப்பு மேட்டில் பம்புசெட்டை நோக்கி நடந்து சென்றார்கள்...

தீனாவுக்கு பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.. ஏற்கனவே சங்கரிடமும் ரேகாவிடமும் அடி வாங்கியதை நினைத்து பிதியில் நடுக்கத்தோடும் கடைசியாக நடந்து சென்று இருந்தான்..


அப்போது ஐந்து பேரும் களத்து மேட்டை சென்றடைந்தார்கள்...

என்னப்பா மின்கம்பம் இருக்கு ஆனால் அதில் விளக்கே இல்லை ஒரே இருட்டா இருக்கு என்று சாட்டையடி சாமியார் கேட்டார்...

விளக்கு எரிந்தது சாமி ..
ஆனால் அந்தப் பேய் வெடித்து சிதறும் படி பண்ணிடுச்சு சாமி என்று தீனா சொன்னான்...


குருவே இவனுங்க நம்மை பயமுறுத்த பாக்குறாங்க...

புரியுது எதற்கெல்லாம் நம்ம பாய்ந்திடுவும் என்று நினைச்சுகிட்டு சொல்றானுங்க சிஷ்யா... இவனுங்கள பாத்துக்கலாம் பொறுமையா இரு என்று சாட்டையடி சாமியாரும் சிஷ்யனும் ரகசியமாக பேசிக்கொண்டார்கள்..


சரி சரி நாளைக்கு இந்த கம்பத்துல புதிய விளக்கு ஒன்று போடுங்க இனிமே அந்தப் பேய் இந்த இடத்தில வாள ஆட்டாது என்று சொல்லிக்கொண்டு சாட்டையடி சாமியா பம்புசெட்டை நோக்கி நடந்து சென்றார்..

பம்பு செட்டின் அருகில் செல்ல செல்ல பரந்தாமனுக்கு சந்திரனுக்கும் தீணாவுக்கும் பயம் கண்ணில் தெரிந்தது....

இந்த சாமியாரை நம்பி இங்கு வந்துவிட்டோம் எப்படி தான் வீடு போய் சேர போகிறோமோ தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டே படபடப்போடு சென்றான் பரந்தாமன்..

பம்புசெட்டு சற்று தூரத்தில் இருக்கும் போது ஒரு பெண் சிரிக்கும் சத்தம் லேசாக இவர்களுக்கு கேட்டது...


உடனே பண்ணையார் மகன்களுக்கு கை கால் உதறல் எடுக்க ஆரம்பித்தது...

அண்ணே சிரிக்கும் சத்தம் கேட்குதா..

கேக்குது தம்பி என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே என்று புலம்பினார்கள்...

குருவே நம்மாளு போன் செய்ய ஆரம்பித்து விட்டான் சிரிக்கும் சத்தம் கேட்குதா குருவே...

கேக்குது சிஷ்யா.
லேசா கேட்டதற்கே மூன்று பேரும் எப்படி நடுங்குறானுங்க பாரு இன்னும் பம்புசெட்டு கிட்ட போனா இவனுங்களுக்கு பாதி உசுரு போய்விடும் என்று சாட்டையடி சாமியாரும் சிஷ்யனும் ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்..


வேண்டாம் அண்ணே இப்படியே நம்ம மூணு பேரும் திரும்பி போயிடலாம் இல்லன்னா அந்த சங்கர் நம்மை உயிரோடு விடமாட்டான் என்று தீனா சந்திரன் இடமும் பரந்தாமன் இடமும் ரகசியமாக சொன்னான்..

பம்பு செட்டின் அருகில் செல்ல செல்ல பெண் சிரிக்கும் சத்தம் தெளிவாக கேட்டது...


அந்த அமைதியான சூழலில் ஒரு பெண் விட்டு விட்டு ஒய்யாரமாக சிரிக்கும் சத்தம் பண்ணையார் மகன்களை பிதியில் நடுங்க வைத்தது....

ஏ பெண்ணே உன்னுடைய சிரிப்பை இன்றோடு முடித்து வைக்கிறேன் பார் ..
இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் கதையை முடிக்கிறேன் பார்
இதோ வருகிறேன் நீ தைரியமான பேய் என்றால் என் சாட்டைக்கு பதில் சொல் என்று ஆவேசமாக குரல் கொடுத்தபடி சாட்டையடி சாமியார் வேகமாக நடக்க ஆரம்பித்தார்..

சாட்டையடி சாமியாரின் துணிச்சலைப் பார்த்து பண்ணையார் மகன்கள் வியப்போடு பார்த்தார்கள்..

விடாமல் அந்தப் பெண் பேய் சிரித்துக் கொண்டே இருந்தது பண்ணையார் மகன்களும் பீதியில் நடுங்கிக்கொண்டு சென்றார்கள் சாட்டையடி சாமியாரும் நமது சிஷ்யன் பூஜை அறையில் இருந்து கொண்டு நன்றாக வேலை செய்கிறான் என்று நினைத்துக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார்...


ஒருவழியாக பம்பு செட்டின் அருகில் சென்று விட்டார்கள்..


என்னப்பா பம்புசெட்டு மேல விளக்கு எரியும் பய்பு இருக்குது ஆனா விளக்கு இல்லையே..

ஆமாம் சாமி எந்த விளக்கையும் அந்தப் பேய் வெடித்து சிதறும்படி செய்துவிட்டது என்று நடுங்கிக் கொண்டே சொன்னான் தீனா..


எதைக் கேட்டாலும் பேய் மேலேயே குறை சொல்லு என்று நக்கலாக சொன்னார் சாட்டையடி சாமியார்..

இப்போ நீங்க யாராவது ஒருத்தர் பம்புசெட்டு கதவை தரங்க அந்த பேயை நான் என்ன செய்கிறேன் என்று அப்போது உங்களுக்கு தெரியும் என்று ஆவேசமாக சொன்னார் சாட்டையடி சாமியார்...


அப்போது பம்பு செட்டுக்கு உள்ளே அந்தப் பெண் பேய் விடாமல் சிரித்தபடி இருந்தது...

சாமி எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்குது நீங்களே கதவை திறந்து பாருங்கள் என்று பரந்தாமன் பயத்தில் நடுங்கிக் கொண்டே சொன்னான்..

நான் இருக்கும்போது உங்களுக்கு என்ன பயம் இது எனக்கு அவமானமாக இருக்கிறது தம்பி என்று சாமியார் சொன்னார்..

அண்ணே இந்த சாமியார் பேச்சை எல்லாம் கேட்க வேண்டாம்
இப்ப கூட நம்ம வீட்டுக்கு ஓடிவிடலாம் இந்த சாமியார் எப்படியாவது சங்கரிடம் அடிபட்டுக் கொண்டு வரட்டும் என்று தீனா ரகசியமாக பரந்தாமன் இடமும் சந்திரன் இடமும் சொன்னான்..


சாமி எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு நாங்கள் வீட்டுக்கு போகட்டுமா என்று மெதுவாக கேட்டான் சந்திரன்..

உங்களுக்கு பயமாக இருந்தால் சற்று தூரமாக நின்று வேடிக்கை பாருங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த பேயை எப்படி என் சாட்டையால் அடுக்குகளையும் என்று...

ஒரு பக்கம் சிரிக்கும் சத்தத்தை கேட்டு பிதியில் நடுங்கிக் கொண்டிருந்த பண்ணையாரின் மகன்களுக்கு ...
சாட்டையடி சாமியாரின் துணிச்சலான பேச்சால் சற்று தைரியத்தோடு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார்கள்..


அப்போது சாட்டையடி சாமியார் சற்று தைரியமானவன் போல சாட்டையை அடித்துக்கொண்டே
ஏய் பெண் பேயை இதோ உள்ளே வருகிறேன் .. உன்னால் என்ன செய்ய முடியும் என்னை ...
இதோ வருகிறேன் பார் என்று ஆவேசத்துடன் பம்புசெட்டின் கதவை திறப்பதற்கு முயன்றார் சாட்டையடி சாமியார்...



கதவைத் திறந்தாள் என்ன நடக்குமோ....


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ....44 👇


அந்த நடுஜாமத்தில் சாட்டையடி சாமியார் வழக்கம்போல தனது வித்தையை காட்ட ஆரம்பித்தார்..

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள் ...
சங்கர் ரேகா உருவம் எங்கேயாவது தெரிகிறதா என்று அப்போது தீனா கிணற்றை பார்த்தபடி இருந்தான் புகை ஏதாவது வருகிறதா இல்லை சங்கர் உருவம் தெரிகிறது என்று நினைத்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

அண்ணே பம்பு செட்டுக்குள்ள ரேகா ஓயாம சிரிச்சுகிட்டு இருக்கா..
இந்த சாமியார் கதவை திறந்ததும் அவள் என்ன செய்வாள் என்று தெரியாது அதனால் நம்ம கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்கணும் சாமியாரை ரேகா அடிக்க ஆரம்பித்தாள் நம்ம உடனே இங்கிருந்து ஓடிவிட வேண்டும் அண்ணா.. என்று சந்திரன் பரந்தாமன் இடமும் தீனாவிடம் ரகசியமாக சொன்னாள்...

ஆமாம் தம்பி நம்ம கொஞ்சம் உஷாரா இருக்கணும்..
ஏதாவது அடிதடி நடந்தாள் உடனே ஓடிவிடலாம் என்று பரந்தாமனும் சொன்னான்..

சாட்டையடி சாமியார்
சாமி இறங்கியது போல ஆடிக்கொண்டு ஆவேசமாக பேசினார்..

நான் உன்னை எத்தனை முறை எச்சரித்தும் நீ சிரிப்பை நிறுத்த வில்லையா பெண்ணே ... உன்னை நான் சும்மா விட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த சாட்டையால் தரையை அடித்துக்கொண்டே பம்புசெட்டின் கதவை திறந்தார் சாட்டையடி சாமியார் ..

அப்போது அவனது சிஷ்யன் நாக்கைக் கடித்துக்கொண்டு முறைத்துக்கொண்டு பண்ணையார் மகன்களை அவனும் பயமுறுத்தினான்...

பம்பு செட்டின் ஆரை ஒரே இருட்டாக இருந்ததால் சாட்டையடி சாமியார் உடனே உள்ளே சென்று ஆவேசக் குரல் சத்தமாக கத்தினார்..

அடியே நீ இங்கு தான் ஒளிந்து கொண்டு இருக்கிறாயா . உன்னை என் சாட்டையால் என்ன செய்கிறேன் பார் என்று சொல்லிக்கொண்டே சட்டையை தூக்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார்..

அப்போது பண்ணையார் மகன்களுக்கு மரண பயம் கண்ணில் தெரிந்தது ..
இன்னும் கொஞ்ச நேரத்தில் ஏதோ நடக்கப்போகிறது நம்ம உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்து நடுங்கினார்கள் பலா மரத்தின் கீழே நின்று கொண்டு...

என்னிடமா உன் வேலையை காட்டுற. இத்தனை அடி வாங்கியும் நீ சிரித்துக் கொண்டே இருக்கிறாயா இனிமேல் உன்னை சும்மா விடப்போவதில்லை
ஏ பெண்ணே இந்த ஊரைவிட்டு உன்னை இன்று துரத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு சாட்டையால் அடித்துக்கொண்டு தனது நடிப்பை சிறப்பாக செய்தார் சாட்டையடி சாமியார்...

சிஷ்யனும் பம்புசட்டில் இருந்து வெளியில் பேய் ஓடிவந்தாள் அதை மடக்கி பிடிப்பது போல நாடகமாடி கொண்டு பண்ணையார் மகன்களை பயமுறுத்திக் கொண்டு இருந்தான் சிஷ்யன்...


மாட்டிக்கிட்ட யா வகயா உன் தலைமுடி இப்போது என் கையில் இனிமேல் உன்னால் என்ன செய்ய முடியும் என்று ஆவேசத்துடன் பம்புசெட்டு குள்ளே கத்தினான் சாட்டையடி சாமியார்..

சாமியாரின் பேச்சைக் கேட்டதும் பண்ணையார் மகன்களுக்கு சற்று தைரியமானர்கள் ...
இந்த சாமியார் உண்மையாகவே பெரும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறாரே .. ரேகாவின் தலைமுடியை பிடித்துக்கொண்டு அவளை அடித்துக்கொண்டு இருக்கிறாரே ..
இவர் துணிச்சலான சாமியார்தான் என்று நினைத்து பெருமை பட்டார்கள்..

சாட்டையடி சாமியார்.. பம்புசெட்டில்... மூளையில் ஒளித்து வைத்திருந்த தனது 📲செல்போனை எடுத்து சுவிட்ச் ஆப் செய்து கொண்டு தனது இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டு ..
பேய் தலை முடியை இடது கையால் பிடித்து இழுத்து வருவதைப் போல ..
வலது கையில் இருக்கும் சாட்டையால் அடித்துக் கொண்டேன் இழித்து வருவதைப் போல நடித்துக்கொண்டே பம்பு செட்டில் இருந்து வெளியே வந்தார்..

அப்போது சிஷ்யன் பேயின் கையை பிடித்தபடி வருவதைப் போல அவனும் நடித்தான்..

இப்படி சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யனும் சிறப்பாக நடித்தார்கள் ..
இதில் ஆச்சரியத்துடன் பயத்தோடும் பார்த்துக்கொண்டிருந்த பண்ணையார் மகன்களுக்கு சாட்டையடி சாமியாரின் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது..

பேய் அடித்துக்கொண்டு இழுத்துக் கொண்டும் செல்வதைப் போல சற்று தூரத்தில் சென்று
துரத்திவிட்டு வருவதைப்போல சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யனும் நடித்தார்கள்..

பெரும் பிரச்சனையை தீர்த்து வைத்தது போல பெருமூச்சு விட்டபடி பண்ணையார் மகன்களிடம் வந்து நின்றார்கள்...


பயங்கரமான ஆளா இருப்பாள் எவ்வளவு அடி அடிச்சாலும் திமிரோடு சிரிக்கிறாள் .. எப்படியோ அடிச்சு துரத்திட்டேன் என்று சாட்டையடி சாமியார் பண்ணையார் மகன்களிடம் சொன்னார்..

சாமி.. இன்னொரு ஆம்பள பேய் இருக்கிறதே அது உங்கள் கண்களுக்கு தெரியலையா என்று தீனா சொன்னான்..

என்னமோ நேரில் பார்த்தவன் போல சொல்றானே .
சரி நாமளும் இரண்டு பேய் இருக்கிறது என்று சொல்லிவிட்டோம் மறுபடியும் உள்ளே சென்று இழுத்து வருவதைப்போல இன்னொரு முறை நடிக்கலாம் என்று நினைத்துக்கொண்டு
சாட்டையடி சாமியார் மறுபடியும் ஆவேச குரலுடன் கத்திக்கொண்டே பம்புசெட்டின் உள்ளே போக சென்றார்..

சாமி ..அந்த பேய் கிணற்றுக்குள்ளேதான் இருக்குது .. அதுவும் ஆம்பள பேய் என்று தீனா சொன்னான்..

ஆமாம் சாமி ...இந்த ஆம்பள பேய் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கும் அதனால கவனமா அதை பிடிங்க என்று பரந்தாமனும் சொன்னான்..

என்ன இவனுங்க ..நம்மை வச்சு காமெடி கீமெடி பண்றாங்களா ஒன்னுமே புரியலையே

இவ்வளவு நேரம் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தானுங்க
ஆனால் இப்போ ஆம்பள பேய் கிணத்துல இருக்குது அதையும் பிடிங்க என்று சொல்றாங்களே இவனுங்கள புரிஞ்சுக்கவே முடியலையே.. என்ற குழப்பத்தோடு சாட்டையடி சாமியார் கிணற்று பக்கமாக தனது பார்வையை திருப்பினார்..

உடனே சிஷ்யன் ஓடி கிணற்றை எட்டிப் பார்த்தான்...

குருவே சீக்கிரமா வாங்க
இதோ அந்தப் பேய் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்று சிஷ்யன் சாட்டையடி சாமியாரிடம் சொன்னான்..

பரவாயில்லையே நம்ம சிஷ்யன் எள்ளுன்னா என்னையா வேலை செய்கிறானே என்று நினைத்துகொன்டு சாட்டையடி சாமியார் மறுபடியும் ஆவேச குரல் கொடுத்துக்கொண்டே கிணற்றின் அருகில் சென்றார்..

அண்ணே ..சங்கரை பிடிப்பாரா இந்த சாமியார் இல்லை அவனிடம் அடி வாங்குவார என்று சந்திரன் கேட்டான்..

சங்கர் நம்மிடம்தான் வாலட்டுவான். இவரிடம் வாலை ஆட்டினால் ஓட்ட நறுக்கி விடுவார் உண்மையிலேயே சங்கர் சக்தி வாய்ந்த பேயாக இருந்தால் ரேகாவை சாமியார் அடிக்கும்போதே வந்திருப்பான் ஆனால் அவன் வரவில்லையே அதனால் அவனுக்கு பயம் வந்துவிட்டது ..
நிச்சயம் சாமியார் அவனை பிடித்து விடுவார் என்று பரந்தாமன் தம்பிகளிடம் சொன்னான்..

நீ தலை கீழே தொங்கிக் கொண்டிருந்த உன்னை விட்டு விடுவேனா ..
இதோ பார் என் சாட்டையால் உன்னை இழித்து மேலே போடுகிறேன் பார் என்று ஆவேசத்துடன் பேசிக்கொண்டு சாட்டையடி சாமியார் தனது கையிலிருந்த சாட்டையை கிணற்றுக்குள்ளே அடிப்பதுபோல அடித்து
பேய் இழுத்து மேலே போடுவதைப் போல போட்டார்..

உடனே சிஷ்யன் அந்தப் பேயை மடக்கிப் பிடிப்பதைப் போல நடித்து அதன் கையை பிடித்துக் கொண்டது போல நடித்தான்..

உடனே சாமியார் மறுபடியும் பேயின் தலை முடியை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையால் சாட்டையால் அடிப்பதைப் போல நடித்தார்..

சாமி.. இந்த ஆம்பள பேய் சிரிக்கவே இல்லையே எதுக்காக சாமி என்று பரந்தாமன் கேட்டான்..

எங்ககிட்ட ஆம்பள பேய் சிரிக்கும் ரிங்டோன் இல்லடா முட்டாள் பசங்களா ..
இருந்தாள் அதை போட்டு இருக்க மாட்டேனா என்று மனதில் நினைத்துக்கொண்டு
சாட்டையடி சாமியார் இவன் அந்த பெண் பேய் அடுத்த அடியை பார்த்துவிட்டு பயத்தில் கிணற்றில் ஒளிந்துகொண்டான் அதனால்தான் இவன் சிரிக்கவில்லை நான் கண்டுபிடித்து விடுவேன் என்று..

அப்படியா சாமி இவனை கொஞ்சம் நல்லா அடிங்க அப்பத்தான் இங்கு வாலாட்ட மாட்டான் என்று சொன்னான் பரந்தாமன்..

அடப்பாவி... வெறும் கையால இன்னும் எவ்வளவு நேரம்டா நடிக்கிறது என்று மனதில் நினைத்துக்கொண்டு சாட்டையடி சாமியார் பேயை அடிப்பதைப் போல அடித்துக்கொண்டு இழுத்துச்சென்று கொஞ்சம் தூரத்தில் அடித்து விரட்டி விட்டது போல சாமியாரும் சிஷ்யனும் திரும்பி வந்தார்கள்..

என்னப்பா இன்னும் ஏதாவது பேய் பார்த்தீங்களா .. இருந்த இப்பவே சொல்லிடுங்க அதையும் அடிச்சு துரத்தி விடுகிறேன் என்று நக்கலாய் சொன்னார் சாட்டையடி சாமியா..

அவ்வளவுதான் சாமி இந்த இரண்டு பேய்தான் எங்களை பயமுறுத்திக் கொண்டே இருந்தது. மற்றபடி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை சாமி என்று பரந்தாமன் சொன்னான்..

சரி அப்பா நம்மா எல்லோரும் வீட்டுக்கு போலாமா என்று சாட்டையடி சாமியார் சொன்னார்..

போலாம் சாமி அதுக்கு முன்னாடி என் அம்மா பூஜை அறைக்கு சென்று நான் கும்பிட்டுவிட்டு வந்தவுடன் நம்ம எல்லோரும் வீட்டுக்கு போகலாம் சாமி என்று பரந்தாமன் சொல்லிவிட்டு பம்புசெட்டில் பக்கத்து அறையில் இருக்கும் தனது அம்மா படத்தின் அறைக்கு சென்றான்..

உடனே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனது அம்மா படத்தின் பின்பக்கமாக இருக்கும் பணப் பெட்டியை திறந்து அதிலிருந்து 300000 ரூபாய் எடுத்துக்கொண்டு அதை இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டு வெளியே வந்தான் பரந்தாமன்..

சாமி உங்களுக்கு சேரவேண்டிய மீதி பணம் 3 வாங்கிக்கொள்ளுங்கள் என்று இடுப்பில் வைத்த பணத்தை எடுத்து சாட்டையடி சாமியாரிடம் கொடுத்தான் பரந்தாமன்..

சாமியாருக்கும் சிஷ்யனுக்கு ம் எல்லை இல்லா மகிழ்ச்சி பொங்கியது ..
இனிமேல் இவர்களை நம் கைகுள்ள வச்சிக்கிட்டு இந்த நிலத்தையெல்லாம் இவர்களிடம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையுடன் மனதில் நினைத்துக்கொண்டு சாட்டையடி சாமியார் பணத்தை வாங்கிக் கொண்டான்..

ஒரு முக்கியமான விஷயம்
இதை செய்தால் தான் நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று மறுபடியும் புதிர் போட்டார் சாட்டையடி சாமியா..

பண்ணையார் மகன்கள் மறுபடியும் பதட்டத்தோடு சாமியாரைப் பார்த்து
என்ன சாமி நாங்கள் செய்ய வேண்டும் சொல்லுங்கள் இப்பவே செய்கிறோம் என்று கேட்டார்கள்..

நான் துரத்தி விட்ட இந்த இரண்டு பேய்யும் திரும்ப வரவே கூடாது என்றாள்..
இந்த இடத்தில் ஒரு ஓணானை பலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் .. அப்படி செய்தால் தான் இந்த இரண்டு பேய்யும் இந்த ஜென்மத்தில் இங்கு வராது என்று சாட்டையடி சாமியார் சொன்னார்...

அப்படியா சாமி அதை இப்போதே செய்து விடுங்களேன்
நாங்கள் ஓணானை பிடித்து வருகிறோம் என்று தீனா சொன்னான்..

அது சாதாரண ஓனான் கிடையாது ..
நம் மனித இனத்தில் ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் எப்படி திருநங்கைகள் இருக்கிறார்களோ .
அதே போல ஓனான் இனத்திலும் இருக்கிறது
அந்த ஓணானை உங்களுக்கு அடையாளம் தெரியாது
அது எங்களுக்கு மட்டும்தான் தெரியும் அந்த ஓணானை நாங்கள் தேடி பிடிப்பதற்கு ஒரு மாதம் காலம் ஆகும்..
அன்று இரவு பூஜையை செய்யலாம் .
அதற்கு ஒன்று செலவாகும் என்று சாட்டையடி சாமியார் மறுபடியும் தனது வித்தையை காட்டினார்..

இதைக் கேட்ட பரந்தாமனுக்கு மறுபடியும் ஒரு லட்சம் செலவாகும்மா என்று நினைத்து அதிர்ச்சியானான் ...
இருந்தாலும் வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டு... சாமி உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் நீங்கள் ஒனானை தேடி பிடித்ததும் நாங்கள் பூஜைக்கு தேவையான பணத்தை தருகிறோம் என்று கவலையோடு சொன்னான் பரந்தாமன்..

அடுத்த நாடகத்திற்கு தயாராகிவிட்டார் நம்ம குரு என்று நினைத்துக்கொண்டு சந்தோஷப்பட்டான் சிஷ்யன்...

பிறகு சந்தோஷமாக சாட்டையடி சாமியாரும் சிஷ்யனும் பண்ணையார் மகன்களும் வீட்டுக்கு திரும்பினார்கள் நள்ளிரவில்...



தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ...45 👇


எப்படியோ சங்கரையும் ரேகாவையும் பம்பு செட்டில் இருந்து துரத்தி விட் டோம் இனிமேல் பேய் தொல்லை நமக்கு கிடையாது என்ற நம்பிக்கையில் ..

பொழுது விடிந்ததும் வழக்கம்போல பரந்தாமனும் அவனது தம்பிகளும் சென்று பம்புசெட்டில் மின்சார பராமரிப்பு வேலைகளை பார்த்தார்கள்....


ஒருவழியாக விவசாய வேலையை ஆரம்பித்துவிட்டான் பரந்தாமன்..


ஊர் மக்களும் அனைவரும் வழக்கம் போல பண்ணையார் தோட்டத்திற்கு விவசாய வேலைக்கு சென்றார்கள்..


⛺ குருவே நம்ம குடிசையாக இருக்கும் பூஜை அறையை பெரிய அளவில் கோவில் போல கட்ட வேண்டும் குருவே அப்போதுதான் நம்முடைய மந்திரத்தின் திறமையை மற்ற ஊர்களுக்கும் பரவும் என்று ஒரு சிஷ்யன் சொன்னான்..

இதைப்பற்றி நானும் முடிவு செய்து தான் வச்சிருக்கேன் சிஷ்யா இன்னும் கொஞ்சம் பணத்தை பண்ணையார் பசங்களிடம் இருந்து புடிங்கி விட்டு பிறகு நம்ம பெரிய அளவில் பூஜை அறையை கட்டலாம் என்று சாட்டையடி சாமியார் சொன்னார்..

குருவே நம்ம நடிப்பை பார்த்து பயந்து போய்ட்டானுங்க பண்ணையார் பசங்க
இனிமேல் நம்ம என்ன சொல்கிறோமோ அதை நம்புவார்கள்..

ஆமாம் சிஷ்யா சரியான நேரத்தில் இங்கே இருந்துகிட்டு போன் செய்து இவனும் நல்லாவே வேலை செஞ்சான்.

நம்மா 📲செல்போனும் ஃபுல் சார்ஜ் இருந்ததால் நல்ல சவுண்ட் ரிங்டோன் வந்தது ..
அதுலதான் அவனுங்க பயந்துட்டன்னுங்க ..
இந்த மாதிரி பேய் சிரிக்கும் குரலை அவனுங்க ஜென்மத்துல மறக்கவே மாட்டானுங்க

இனிமேல் பண்ணையார் பசங்கள விடக்கூடாது
மாசம் மாசம் எதையாவது சொல்லிக்கிட்டு பணத்தை புடுங்க வேண்டியதுதான் என்று தனது சிஷ்யர்களிடம் சாட்டையடி சாமியார் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார்..

குருவே நமக்குத்தான் இனிமேல் நல்ல காலம் வந்துடுச்சு
அதனால இந்த ஊர் மக்களுக்கும் நல்லகாலம் வந்துருச்சுன்னு சொல்லுங்க குருவே அப்பதான் எல்லோரும் சந்தோஷமா இருப்பாங்க..


நீங்க ரெண்டு பேரும்தானடா எல்லாம் திட்டத்தையும் போடுறது அதை ஊர் மக்களிடம் சொல்லுவதும் நீங்கள் தானே அதனால் உங்க விருப்பப்படியே ஊர் மக்களிடம..
இனிமேல் இந்த ஊர் மக்களுக்கு நல்ல காலம் வந்துடுச்சுன்னு சொல்லிடுங்க என்று சாட்டையடி சாமியார் சொன்னார்..

அப்படியே செய்கிறோம் குருவே..


....நாட்கள் நகர்ந்தது....


மறுபடியும் பண்ணையார் தோட்டம் பச்சை பசுமையாக மாறியது..🍁🌾🌱🍃☘️🥀


வழக்கம்போல பண்ணையார் மகன்கள் பைக்கில் மூவரும் ஒன்றாக சென்று ..
களத்துமேட்டில் பைக்கை நிறுத்திவிட்டு தோட்டத்தில் ஊர் மக்கள் வேலை செய்வதை ரசித்தபடி பம்புசெட்டை நோக்கி சென்றார்கள்..

தம்பி விவசாயத்தில் நமக்கு வருமானம் கிடைச்சி ரொம்ப நாளா ஆச்சு..
நம்ம அறுவடை செய்யும் போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது

இதனால் என்னிடம் பணம் இல்லை ..
இனிமேல் மற்ற வேலைகளுக்கு எல்லாம் பணம் இருந்தால்தான் செய்ய முடியும் ..
அதனால் என்னுடைய தங்கசெயினை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் தான் இன்று ஊர் மக்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் ..

அதனால் இந்தச் தங்கச் செயினை எங்கேயாவது விற்று பணத்தை வாங்கி வாங்க என்று பரந்தாமன் கழுத்திலிருந்த பெரிய தங்க செயினை கழட்டி சந்திரனிடம் நீட்டினான்...

அண்ணே.. நீங்க உங்க செயினை போட்டுக்கங்க என்னுடைய செயினை விற்று பணத்தை வாங்கி செலவு செய்யலாம் என்று சந்திரன் சொல்லிக்கொண்டு தன்னுடைய கழுத்தில் இருந்த பெரிய தங்க சங்கிலியை கழட்டி பரந்தாமனிடம் நீட்டினான்..

இதுக்காகத்தான் டா என்னுடைய செயினை கழட்டினேன் என்று பரந்தாமன் மனதில் நினைத்துக்கொண்டு..

வேண்டாம் தம்பி நீங்க சின்ன பசங்க போட்டுக்குங்க..
நம்ம மூன்று பேருடைய செயினை பெற்றாலும் கூட பணம் போதாது ..அந்த அளவுக்கு நமக்கு விவசாயத்தில் செலவு இருக்கு ..

என்ன செய்வது எப்படியாவது ஊர் மக்களுக்காக விவசாயத்தை செய்துதானே ஆகவேண்டும்.

ஏதோ தெரியாமல் மூன்று குடும்பங்களை கெடுத்து விட்டோம் .. சங்கரையும் ரேகாவையும் கொன்று விட்டோம் இந்த பாவத்தை எல்லாம் தீர்க்க வேண்டும் என்றால்..
இந்த ஊர் மக்களை நம்ம தான் சந்தோஷமாக பாத்துக்கணும் அதனால் தான் இந்த நகைகளை விற்றாவது அவர்களுக்கு வேலை கொடுக்கணும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன் தம்பி.. என்று நல்லவன் போல நடித்தான் பரந்தாமன்..

அப்படின்னா என்னுடைய செயினையும் விற்று விவசாய வேலையை பாருங்கள் அண்ணா என்று தீனாவும் தன்னுடைய பெரிய தங்க சங்கிலியை கயட்டி பரந்தாமனிடம் கொடுத்தான்..

எப்படியோ.. சாமியாருக்கு கொடுத்த 5 லட்சத்தை சரி கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் இப்படி நடிக்கிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் தம்பி களிடம் இருந்த செயினை வாங்கிக்கொண்டு இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டான்..

அண்ணே நாங்கள் தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு சந்திரனும் தீனாவும் கிளம்பினார்கள்..

நம்ம சந்தோஷத்துக்காக நம்மோடு சேர்ந்து அண்ணனும் தவறு செய்துவிட்டார் ..
அதனால் இந்த நிலைமை அண்ணனுக்கு வந்துவிட்டது பாவம் அண்ணன் பணம் இல்லாமல் எப்படி கஷ்டப்படுகிறார் பாரு தம்பி .. நம்ம செய்த தவறால் இன்று அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி கூட விற்கும் நிலைமைக்கு வந்து விட்டார் பாரு தம்பி என்று சந்திரன் சொன்னான்.

இனிமேல் அவருக்கு உதவியாக இருந்து அவரை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் அண்ணா என்று தீனாவும் சொன்னான்..

இப்படி பேசிக்கொண்டு இருவரும் தோட்டத்தை சுற்றிப் பார்த்தார்கள்..

பரந்தாமன் வழக்கம்போல 🏠🏡பம்புசெட்டில் பக்கத்து அறையில் இருக்கும் தனது அம்மா படத்தின் பின்னால் இருக்கும் பணப் பெட்டியை திறந்து ..
இந்த மூன்று தங்கச் சங்கிலியும் அதில் போட்டுவிட்டு அழகு பார்த்தான் ..

அப்போது பணமும் தங்கச் சங்கிலியும் அவன் கண்களுக்கு கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது ..

பிறகு பணப் பெட்டியை மூடிவிட்டு வந்துவிட்டான் பரந்தாமன்..


நம்ம ஊருக்கு நல்ல காலம் வரப் போகுதுன்னு சாட்டையடி சாமியார் சொல்லிட்டாரு.. அதனால இனிமேல் நமக்கு நல்ல காலம் தான் வரும் என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டார்கள்..

ஆமாம்பா அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்குது என்று மற்றொருவர் சொன்னார்..

அப்படின்னா காணாமல் போனவர்கள் எல்லாம் திரும்பி வருவார்களா என்று இன்னொருவர் சொன்னார்..

இனிமேல் அப்படி கூட நடக்கலாம் ஏனென்றால் அவர் வாக்கு சரியானது இன்னும் கொஞ்ச நாளில் காணாமல்போனவர்கள் தானாகவே நம்ம ஊருக்கு வரத்தான் போறாங்க.. இனிமேல் நமக்கு நல்ல காலம்தான் என்று ஊர் மக்கள் சந்தோஷமாக பேசிக் கொண்டார்கள் பண்ணையார் தோட்டத்தில்..


மூன்று பேரின் கழுத்தில் தங்கச் சங்கிலி இல்லாமல் இருப்பதை சாந்தி கவனித்தாள்..

நம்ம இப்படியே இவர்களிடம் பேசாமல் இருந்தால்
இந்த குடும்பத்தில் என்ன நடக்குது என்று நமக்கு தெரியாமல் போய்விடும்
என்று முடிவு செய்துகொண்டு சந்திரன் இடமும் தீனாவிடமும் இதைப்பற்றி கேட்கலாம் என்று நினைத்தால் சாந்தி..

தம்பி இங்க வாங்க என்று சந்திரனையும் தீனாவையும் அழைத்தாள் சாந்தி..

அப்போது சந்திரன் முகமும் தீணவின் முகமும் மலர்ந்தது அண்ணி நம்மிடம் பேச நினைக்கிறார்கள் என்று நினைத்து இருவரும் சந்தோஷமாக சென்றார்கள்..

அண்ணி ..சொல்லுங்க அண்ணி ஏதாவது வாங்கிட்டு வரணுமா என்று புன்னகையோடு கேட்டான் சந்திரன்..

எனக்கு ஏதாவது வாங்கிக்கிட்டு வருவது இருக்கட்டும்.. உங்களுக்கு உங்க அப்பா நம்ம பரம்பரை தங்கச்சங்கிலியை கொடுத்தாரே அது உங்கள் கழுத்தில் இல்லையே அது எங்கே தம்பி..

அது வேறொன்றும் இல்லை அண்ணி .. விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் வந்ததால் இப்போது அண்ணனுக்கு கையில் பணம் இல்லை
அதனால் எங்களுடைய சங்கிலியை விற்று விவசாயம் செய்கிறோம் என்று தீனா சொன்னான்..

நீங்க சொல்றது எல்லாமே நம்பும்படியாக இல்லை தம்பி இதனால்தான் நான் உங்களிடம் எதையுமே கேட்கிறதே கிடையாது என்று வருத்தத்தோடு சொன்னால் சாந்தி..

உண்மையாகவே அண்ணனிடம் தான் கழட்டி கொடுத்தோம் அண்ணி.. என்று சந்திரன் சொன்னான்..

இப்படிதான் போனமுறை தெரியாம தண்ணீர் மோட்டார் ஆண் செய்ததில் பம்புசெட்டு எரிந்து தோட்டமும் எல்லாம் தெரிஞ்சு போச்சு னு சொன்னீங்க அதனால எனக்கும் நிறைய காயம் ஏற்பட்டது ன்னு சொன்னீங்க ..
இது நம்பும்படியாக இருக்கு..

இப்போ விவசாயத்தில் நஷ்டம் ஆயிடுச்சு பணம் இல்லாதனாள் செயினை விற்றுவிட்டோம் என்று சொல்றீங்க ..

இப்போ கொஞ்ச நாளா தான் விவசாயத்துல நஷ்டம் வந்தது இவ்வளவு நாளா விவசாயத்தில் லாபம் தானே வந்தது அந்த பணத்தை எல்லாம் என்ன செஞ்சீங்க என்று சாந்தி கேட்டாள்..

எங்களுக்கு என்ன தெரியும் அண்ணி .. அண்ணன் தான் பணம் இல்லை என்று சொன்னார் நாங்களும் தங்க சங்கிலியை கழட்டிக் கொடுத்து விட்டோம்..

உண்மையை சொல்லுங்க உங்க மூன்று பேரின் தங்கச்சங்கிலியை அந்த சாமியார் தானே வாங்கிட்டார் என்று சாந்தி முறைத்தபடி கேட்டாள்..


ஐயோ அவர் நல்லவர் அண்ணி அவர்தான் நம்ம பிரச்சனை எல்லாம் தீர்த்து வைத்தார் என்று தீனா சொன்னான்..

அந்த ஆளு வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றி வரான் ..
இதனால் உங்க அப்பாவுக்கும் அந்த சாமியாரை பிடிக்காது

ஆனால் இப்போது நீங்கள் மூன்று பேரும் அவரை நல்லவர் வல்லவர் என்று சொல்லிட்டீங்க உங்களையும் அந்த சாமியார் மயக்கி விட்டான் போல் தெரிகிறது ..

இனிமேல் இந்த குடும்பம் ஒரு வழியாக போகிறது என்று மறுபடியும் கோபித்துக்கொண்டு சாந்தி உள்ளே சென்றுவிட்டாள்..

சாமியாரைப் பற்றி அண்ணிக்கு எப்படி புரியவப்பது என்று தெரியாமல் குழம்பினார்கள் சந்திரனும் தீனாவும்..

அண்ணே ..இனிமேலாவது அண்ணி பேசுவாங்க என்று நினைத்தேன் மறுபடியும் நம்மிடம் அண்ணி பேசமாட்டார்கள் போல் தெரிகிறது அண்ணா என்று வருத்தத்தோடு தீனா சந்திரனிடம் சொன்னான்..

சரி சரி இதைப் பற்றி பெரிய அண்ணனிடம் எதையும் சொல்லாதே ..
அண்ணி கோபத்தோடு இருக்காங்க ..

அண்ணனும் இப்போதெல்லாம் அண்ணியே கண்டுக்கவே மாட்டேங்கிறார் ..
இந்த நேரத்தில் இதைப் பற்றி அண்ணனிடம் சொன்னாள் மீண்டும் அண்ணனும் அண்ணியும் சண்டை போட்டுக்குவாங்க என்று சந்திரன் சொன்னான்...

நம்ம குடும்பத்துல ஆரம்பத்திலிருந்த சந்தோஷம் மறுபடியும் வருமா என்ற நம்பிக்கை குறைஞ்சிக்கிட்டே போகுது அண்ணா .. என்று வருத்தத்தோடு தீனா சொல்லிக்கொண்டு இருவரும் சென்றார்கள்..


....நாட்கள் நகர்ந்தது.....


வழக்கம்போல பம்பு செட்டின் அருகில் இருக்கும் பலா மரம் தென்னை மரத்தின் நிழல்களில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள் பண்ணையார் மகன்கள்...


தம்பி இன்னும் கொஞ்ச நாள்ல அறுவடை செய்யலாம் அதனால் இந்த முறை கவனமா வேலை செய்யணும்...

இனிமேல் நமக்கு என்ன பிரச்சனை அண்ணா ..
சங்கர் ரேகாவையும் விரட்டி விட்டோம் இந்த முறை நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது அண்ணா என்று சந்திரன் சொன்னான்..

ஆமாம் தம்பி ..இனிமேல் நமக்கு நல்ல காலம்தான் என்று பரந்தாமனும் புன்னகையோடு சொன்னான்...

இப்போ நமக்கு எல்லா பிரச்சினையும் தீர்ந்து விட்டது அதேபோல நம்ம குடும்பத்தில அண்ணனின் திருமணம் தான் ஒரு பிரச்சனையாகவே இருந்து கிட்டு வருது ... அதையும் நடத்தி விட்டால் நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்கும் அண்ணா என்று தீனா சொன்னான்..

அப்போது பரந்தாமனின் முகம் சட்டென்று கோபத்தில் மாறியது..

இன்னும் நீங்கள் திருமணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டு தான் இருக்கீங்களா என்று நினைத்து கோபப்பட்டான் பரந்தாமன்...

பிறகு முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டு சந்திரனைப் பார்த்து ... தம்பி எனக்கும் உன் திருமணத்தை பற்றி கவலையாகத்தான் இருக்கிறது நம்முடைய அப்பாவின் தேவசம் முடிந்ததும் உன் திருமண வேலையை ஆரம்பித்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் என்று சந்தோசமாக சொல்வதைப் போல நடித்துக் கொண்டே சொன்னான் பரந்தாமன்..

அப்போது தீணாவின் முகம் மலர்ந்தது ஆனால் சந்திரனுக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லாதவன் போல அமைதியாக நின்றான்..


அப்பாவின் தேவசம் முடிந்ததும் அடுத்தது உங்களுக்கு தேவசம் செய்வேனே தவிர .. திருமணத்தை செய்ய மாட்டேன் டா உங்களுக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டான் பரந்தாமன்..

இப்படி மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது கையில் தூக்கு டிபனுடன் லட்சுமி அம்மாள் பம்பு செட்டை நோக்கி வேகமாக நடந்து வருவதை பரந்தாமன் பார்த்துவிட்டான்..

இந்தப் பொம்பளைக்கு தான் மனநிலை சரி இல்லையே இவங்க எதுக்காக இங்கே வராங்க என்று பரந்தாமன் சொன்னான்..

எனக்கும் அதுதான் குழப்பமாக இருக்குது அண்ணா ..
கையில் ஏதோ எடுத்துக்கொண்டு வராங்களே என்று சந்திரன் சொன்னான்..

சிரித்த முகத்தோடு லட்சுமி அம்மாள் பண்ணையாரின் மகன்களிடம் வந்து..

ஐயா பக்கத்து வீட்டில குறவை மீன் குழம்பு கொடுத்தாங்க என்னை சாப்பிட சொல்லி.. ஆனால் என் மருமகனுக்கும் என் மகளுக்கும் குறவை மீன் குழம்பு என்றால் ரொம்ப பிடிக்கும்... அதனால் தான் இங்கு எடுத்து வந்துடடேன் என் மகளும் மருமகனும் வந்தா கொடுத்துடுங்க என்று சொல்லிக்கொண்டே கையிலிருந்த தூக்கு டிப்பினை நீட்டினால் லட்சுமி அம்மாள்..

இவங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் லட்சுமி அம்மாளின் மன நிலைமையை புரிந்து கொண்டு சந்திரன் தூக்கு டிப்பினை வாங்கிக்கொண்டான்...

இன்னும் கொஞ்ச நேரத்துல உங்கள் மகளும் மருமகனும் வந்துடுவாங்க ..
நான் இந்த மீன் குழம்பை அவர்களிடம் கொடுத்து விடுகிறேன் நீங்கள் வீட்டுக்கு போங்க அம்மா என்று சந்திரன் சொன்னான்..

மறக்காம கொடுத்துடுங்க என்று சிரித்த முகத்தோடு சொல்லிவிட்டு லட்சுமி அம்மாள் சந்தோஷமாக வீட்டுக்கு திரும்பிச் சென்றான்..

பாவம் இந்த அம்மா ..நம்மா செய்த தவறாள் இப்படி சங்கர் குடும்பமும் இந்த அம்மாவின் குடும்பமும் வீணா போச்சு என்று தீனா வருத்தத்தோடு சொன்னான்..


சரி சரி அந்த டிபினில் உண்மையாகவே குழம்பு தன் இருக்கிறதா .. இல்லை வேறு எதையாவது எடுத்து வந்தாங்களா என்று பார் தம்பி என்று பரந்தாமன் எரிச்சலுடன் சொன்னான்..

உடனே சந்திரன் படிப்பினை திறந்து பார்த்தான் அதில் உண்மையாகவே மீன்குழம்பு நிரம்பியிருந்தது. நல்ல வாசனையோடு..

அண்ணே இந்த மீன் குழம்பை என்ன செய்யலாம்..

அப்படியே பம்புசெட்டு உள்ளே வச்சிடு வீட்டுக்குப் போகும்போது யாரிடமாவது சொல்லி அந்த அம்மாவிடம் கொடுக்க சொல்லலாம் ..
பாவம் அவங்க சாப்பிடாம இருப்பாங்க என்று பரந்தாமன் கவலைப்படுவதை போல நடித்துக் கொண்டு சொன்னான்..


உடனே சந்திரன் மீன் குழம்பை பம்பு செட்டுக்குள்ளே வைத்துவிட்டு வழக்கம்போல சந்திரனும் தீனாவும் தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றார்கள்

பரந்தாமன் கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தபடி தனது வருங்கால லட்சியத்தை நினைத்துக்கொண்டு சந்தோஷமாக அமர்ந்திருந்தான்..

நேரம் கடந்தது...

சந்திரனும் தீனாவும் தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள் ..

உடனே மூவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள் அப்போது தீனா பம்புசெட்டு குள்ளே சென்று மீன் குழம்பு எடுத்து வர சென்றான்..


பம்புசெட் குள்ளே சென்ற தீனா அண்ணே என்று அலறியபடி குரல் கொடுத்தான்..

தீணாவின் அலறல் குரலை கேட்ட பரந்தாமனுக்கு சந்திரனுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது..

உடனே இருவரும் பம்பு செட்டுக்கு உள்ளே ஓடினார்கள்..

அப்போது தீனா கையில் தூக்கு டிபனுடன் அதிர்ச்சியாக நின்றிருந்தான்..

என்ன ஆச்சு தம்பி என்று பதட்டத்தோடு பரந்தாமன் கேட்டான்..

அண்ணே டிபினில் இருந்த குழம்பு காணும் அண்ணே என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த வெறும் படிப்பினை திறந்து காட்டினான் தீனா..

இதைப் பார்த்ததும் பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் அதிர்ச்சியாக இருந்தது..

நான் இங்கே தான் இருந்தேன் யாருமே இங்கு வரவில்லை ஆனால் குழம்பு எப்படி காலியானது என்று பரந்தாமன் குழப்பத்தோடு சொன்னான்..


எனக்கும் ஒன்றும் புரியவில்லையே அண்ணா என்று தம்பிகளும் சொன்னார்கள்..


மீன் குழம்பு எப்படி காலியானது என்ற குழப்பத்தோடு மூவரும் வீட்டுக்கு சென்றார்கள்...



குழப்பம் அடுத்த அத்தியாயத்தில் தெளிந்துவிடும்....👽😈



தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்.... 46 👇


ஒரு நாள் வழக்கம் போல பண்ணையார் மகன்கள் தோட்டத்திற்கு சென்றார்கள்.. அப்போது இவர்களுக்கு முன்பாகவே சாட்டையடி சாமியார் பம்புசெட்டின் அருகில் அமர்ந்திருந்தார் ...
அவரை பார்த்ததும் இவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது....

சாமி ...என்ன என்த தகவலும் சொல்லாமல் காலையிலே வந்துட்டீங்க ...என்று பரந்தாமன் பணிவாக கேட்டான்..

ஒன்றுமில்லை உங்களையெல்லாம் பார்த்து இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது ...அதனால் தான் சும்மா விசாரிச்சுட்டு போகலாமுன்னு வந்தேன் என்று சிரித்த முகத்தோடு சாட்டையடி சாமியார் சொன்னார்..

சாமி இளநீர் சாப்பிடுகிறீர்களா என்று சந்திரன் கேட்டான்...

பரவாயில்லை தம்பி ....அப்புறம் விவசாயம் எல்லாம் எப்படி போகுது...

நீங்க சொன்ன வாய் முகூர்த்தம் நல்லபடியா நடக்குது சாமி இனிமேல் இந்த ஊருக்கும் எங்களுக்கும் நல்ல காலம் தான் என்று சந்திரன் சொன்னான்..

இப்ப மறுபடியும் ஏதாவது பேய் தொல்லை இருக்குதா...


அதெல்லாம் ஒன்றும் இல்லை சாமி நீங்கள் அடித்த அடியில் அந்த இரண்டு பேயும் எங்கேயோ ஓடி விட்டது சாமி...

பேய்களை எல்லாம் நம்ம மிரட்டிக் கொண்டே இருந்தால் தான்
அது நம்மிடம் நெருங்காது... மிரட்டுவதை நிறுத்திவிட்டாள் நம்மை மறுபடியும் தொந்தரவு செய்யும் ... இதுதான் பேயோட குணம் இதை தெரிந்து கொண்டுதான் நான் அந்த திருநங்கை ஓனானை இப்போதுதான் தேடிப்பிடித்து
என் பூஜை அறையில் வச்சிருக்கேன் நீங்கள் சம்மதித்தால் இன்று இரவு இங்கு ஒரு பூஜை போட்டு விடலாம் ...
என்ன இன்னைக்கு பூஜைய ஆரம்பிக்கலாமா என்று புன்னகையோடு கேட்டார் சாட்டையடி சாமியார்...

மறுபடியும் பூஜையா .... நீ என்ன சும்மாவா செய்யற ...
இப்ப செய்ற பூஜைக்கு ஒரு லட்சம் கேட்பேயே... என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் சற்று சிரித்த முகத்தோடு...
சாமி நீங்கள் அடித்த அடியில் இனிமேல் அந்த பேய் இந்தப் பக்கமே வராது ...
அந்த அளவுக்கு அந்தப் பேய்கள் மிரண்டு போச்சு..
அதனால தேவையில்லாமல் எதுக்கு சாமி இங்கு பூஜை செய்யணும் ...
அதனால நீங்கள் அந்த திருநங்கை ஓணானை விட்டுவிடுங்கள் பாவம் என்று பரந்தாமன் சொன்னான்..

சாமியாரின் முகம் சற்று கோபமாக மாறியது... பிறகு முகத்தை சற்று இயல்பாக வைத்துக்கொண்டு..
பேய்களை எல்லாம் அப்படி சாதாரணமாக நினைக்காதே தம்பி அது நம்முடைய அலட்சியத்தை பார்த்து ....சமயம் பார்த்து நம் காலை வாரி விட்டு விடும் அதனால் தான் சொல்கிறேன் இன்று பூஜை செய்தாள் நன்றாக இருக்கும்...


பூஜை செய்யலாம் இப்போதைக்கு வேண்டாம் சாமி ...எங்களுக்கு விவசாயத்தில் இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்ய வேண்டும் இந்த நேரத்தில் எங்களுக்கு பூஜை செய்ய நேரமில்லை சாமி ..
அதனால் இன்னொரு நாள் தேவைப்பட்டால் பூஜை செய்யலாம் சாமி நீங்கள் போயிட்டு வாங்க என்று அலட்சியமாக சொல்லிவிட்டு பரந்தாமனும் அவனது தம்பிகளும் தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றார்கள்...

பரந்தாமனின் செயல் சாமியாருக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது..
ஏதோ 5 லட்சத்தை கொடுத்தீங்களே என்பதற்காக உங்களை இரண்டு மாதம் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக உங்களை விட்டு விட்டேன் ...

ஆனால் இந்த இரண்டு மாதத்தில் உங்களுக்கு பயம் தெளிந்து விட்டது மறுபடியும் பம்புசெட்டில் செல்போனை📲 ஒளிக்க வச்சாதான் நீங்க என் வழிக்கு வருவீங்க..

என்னைய மதிக்காம போறீங்க மறுபடியும் என்னிடம் நீங்க ஓடி வருவீங்க அன்னைக்கு ஒரு லட்சம் இல்ல 2 லட்சம் உங்ககிட்ட புடுங்குற பாருங்கடா ...
என்று நினைத்துக்கொண்டு கோபத்தோடு திரும்பிச் சென்றார் சாட்டையடி சாமியார்...


💒 ஒரு நாள் சந்திரனும் தீனாவும் பரந்தாமனிடம் தயங்கிக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள்..

அண்ணே ...நீங்களும் அண்ணியும் பேசாமல் இருப்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது ..
நீங்கள் இருவரும் பேசி ரொம்ப நாள் ஆச்சு இனிமேலாவது நீங்கள் இரண்டு பேரும் சந்தோசமாக இருக்க வேண்டும் அண்ணா...


உங்க அண்ணி மேல எனக்கு எந்த கோபமும் இல்லை தேவையில்லாமல் அவள் தான் பிடிவாதமாக பேசாமல் இருக்கிறாள் இதில் நான் என்ன செய்ய முடியும் தம்பி..


அவங்க நம்ம மேல உள்ள அக்கறை என்னாலதான் நிலத்தை எல்லாம் ஊர் மக்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு நம்ம வீட்டோட இருக்கணும் என்று எதிர்பார்க்கிறாங்க இதில் எந்த தவறும் இல்லையே அண்ணா...


எனக்கும் ஊர் மக்களுக்கு நிலத்தை கொடுக்க ஆசைதான் ஆனால் அதற்கெல்லாம் ஒரு நேரம் காலம் வர வேண்டாமா இதற்கெல்லாம் உடனே அவசரப்பட வேண்டுமா நேரம் வரும்போது நானே கொடுக்கப் போறேன் இதுக்காக இப்படி பேசாமல் சண்டை போடுவது சரியா தம்பி...

நீங்கள் சொல்றதும் சரிதான் ஆனால் நீங்கள் இருவரும் இப்படி பேசாமல் இருப்பது எங்களுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு அண்ணா...

அதெல்லாம் காலப்போக்குல சரியாப் போகும் ..
கணவன் மனைவிக்குள் இப்படி அடிக்கடி நடப்பது சகஜம் தான் ஆனால் இந்த முறை கொஞ்ச அதிகமாகவே கோபப்பட்டு விட்டேன் அதனால் இவ்வளவு நாளாக அவளும் பிடிவாதமாக இருக்கிறாள் காலப்போக்கில் சரியாகிவிடும் இதற்கெல்லாம் நீங்க கவலைப் படாதீங்க...

சரி அண்ணா நான் தோட்டத்திற்கு கிளம்புகிறேன் என்று தீனா சொல்லிவிட்டு தோட்டத்திற்கு கிளம்பினான்..

தம்பி பார்த்து நீதானம்மா போ... நேத்து ராத்திரி நான் போகும்போது அந்த லட்சுமி அம்மாள் திடீரென்று என் எதிரில் வந்து நின்னாங்க... அவங்க ராத்திரியெல்லாம் எங்கேயாவது சுத்துறாங்க .. அதனால பார்த்து போ என்று சந்திரன் சொன்னான்...

சரி அண்ணா என்று சொல்லிவிட்டு வழக்கம்போல கையில் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு சென்றான் தீனா...


🌾🌱🍁🥀☘️ வழக்கம்போல தீனா இயல்பாக வயல்வெளியில் பம்புசெட்டை நோக்கி நடந்து சென்றான்..


நல்ல இருட்டு வரப்பு மேட்டில் டார்ச் லைட்டை அடித்தபடியே நடந்து சென்றான் தீனா..


அப்போது வழக்கம்போல களத்துமேட்டில் மின்கம்பத்தில் எரிந்துகொண்டிருக்கும் மின்விளக்கின் வெளிச்சத்தில் நின்றான்.. பிறகு சுற்று முற்றும் டார்ச் லைட் அடித்து பார்த்தான் மாடுகள் ஏதாவது பயிரை மேய்கிறத என்று...

அப்போது மின் கம்பத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெடித்து சிதறியது...

தீனாவுக்கு திக்கென்று ஆனது இவ்வளவு நேரம் நல்லாதானே எரிந்திருந்தது.. இதே போல தான் அன்னைக்கும் விளக்கு வெடித்து சிதறியது .. சங்கரும் ரேகாவும் நம்மை மிரட்டினார்கள் என்று நினைத்து மனசு படபடவென அடிக்க ஆரம்பித்தது தீனாவுக்கு..

பயத்தோடும் நடுக்கத்தோடும் பம்புசெட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் தீனா...

அப்போது அவன் அருகில் இருக்கும் நிலத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது .. அதில் யாரோ நடந்து செல்வதைப் போல சத்தம் கேட்டது தீனாவுக்கு..

உடனே டார்ச் லைட்டை அடித்து பார்த்தான்..
தண்ணீரும் .. சேராக கலங்கியது நடந்துசெல்லும் ஓசையும் கேட்கிறது ஆனால் உருவம் மட்டும் தெரியவில்லை இதை பார்த்ததும் தீனாவுக்கு பயம் மேலும் அதிகரித்தது...

மறுபடியும் சங்கரும் ரேகாவும் வந்துவிட்டார்களா என்று நினைத்தான்..

சேச்சே ...அப்படியெல்லாம் இருக்காது நம் கண்ணெதிரே சாட்டையடி சாமியார் அவர்களை சாட்டையால் வெளுத்து வாங்கினார் அவர் அடித்த அடியில் அவர்கள் மறுபடியும் இங்கு வர வாய்ப்பே இல்லை என்றும் அவன் உள் மனசு சொன்னது...

சாமியாரின் மந்திரத்தின் மேல் நம்பிக்கை வைத்து சற்று தைரியமாக பம்புசெட்டை நோக்கி நடந்தான் தீனா..

அப்போது நரி ஒன்று ஊளை இட்டது.... அதன் சத்தம் அந்த நேரத்தில் தெளிவாக கேட்டது..

அதே சமயத்தில் ..அன்று வந்த பெரிய கருவண்டு அவன் முன்னே வந்து நின்றது .. அவனை சுற்றி சுற்றி வந்து பயமுறுத்தியது .
அந்த கருவண்டின் சத்தம் அவனுக்கு மறுபடியும் பயத்தை அதிகரித்தது..

காற்றும் சற்று வேகமாக வீசத்தொடங்கியது...

தீனா ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் நிச்சயம் சங்கரும் ரேகாவும் வந்துவிட்டார்கள் ..
இனியும் நாம்மா பம்பு செட்டுக்கு போனால் உயிரோடு திரும்ப முடியாது ..
அதனால் இப்போது வீட்டுக்கு போய் விடலாம் என்று முடிவு செய்து கொண்டு தீனா திரும்பினான்...

வீட்டுக்கு திரும்பி நடக்க ஆரம்பித்த தீனாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது...
வரப்பின் மீது ஒரு கருப்பு உருவம் அமர்ந்திருப்பதை பார்த்தான்..

அவனால் என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப் போனான்
பம்பு செட்டுக்கும் போகமுடியாமல் வீட்டுக்கும் போக முடியாமல் தவித்தான்...

அப்போது அந்த கருப்பு உருவத்தின் மீது டார்ச் லைட்டை அடித்து பார்த்தான்..
தலை முதல் கால் வரை முகமெல்லாம் உடம்பெல்லாம் நிறைய மூடியுடன் அந்த உருவம் எழுந்து நின்றது .. டார்ச் லைட் வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தது அந்த கருப்பு உருவம்...

காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்ததாள் அந்த கருப்பு உருவத்தின் முடியலாம் கண்டபடி பரந்திருந்தது...
தீனாவை முறைத்தபடியே நின்றது அந்த கருப்பு உருவம்..

உடனே தீனா டார்ச் லைட்டை ஆப் செய்துவிட்டு சேற்றில் இறங்கி ஓடினான்...

அவனை எதுவுமே பின் தொடரவில்லை காற்று வேகமாக விசிக் கொண்டிருந்ததால்
அவனால் வேகமாக ஓட முடியாமல் தவித்தான்..

ஒரு வழியாக வீட்டுக்கு ஓடி வந்து விட்டான் தீனா ...நடு ஜாமத்தில்..

அண்ணே.. அண்ணே கதவை திரங்க அண்ணே ..என்று சத்தமாக கத்தினான் .. கதவையும் வேகமாக தட்டினான் தீனா ...படபடப்போடு...

தீனாவின் குரல் கேட்டதும் எல்லோரும் பயந்துபோய் எழுந்து கொண்டார்கள் ...
உடனே பரந்தாமனும் சந்திரனும் ஓடிவந்து கதவை திறந்தார்கள்...

தம்பி என்ன ஆச்சு பா என்று பதட்டமாக கேட்டான் பரந்தாமன்..

அப்போது தீனா பயந்தபடியே நடந்ததை சொல்ல ஆரம்பிக்கும்போது சாந்தி வந்து பதட்டமாக நின்றாள்...

உடனே தீனா எப்படி உண்மையை சொல்வது என்று தெரியாமல் தவித்தான் ..அப்போது அவன் பயந்தபடியே நடுங்கிக்கொண்டு..

அண்ணே ..களத்துமேட்டில் எரிந்திருந்த மின்விளக்கு வெடிச்சு சிதறிடிச்சி ..
அதனால நம்ம வீட்டில் இருந்து ஒரு மின் விளக்கை வாங்கிக் கொண்டு போகலாம் என்று வந்தேன் அண்ணா ... என்று மறைமுகமாக சொன்னான் தீனா...

பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் இடி விழுந்ததைப் போல அதிர்ந்தார்கள்..

என்ன தம்பி சொல்ற...
கம்பத்தில் இருந்த விளக்கு மறுபடியும் வெடித்து சிதறிடிச்சா என்று சொல்லிக்கொண்டே மூவரும் பயத்தில் நடுங்கினார்கள்..

ஒரு சாதாரண விளக்கு சூடு தாங்கமுடியாமல் வெடித்திருக்கும் அதுக்கு ஏன் மூன்று பேரும் இப்படி நடுங்குகிறார்கள் ..
நிச்சயம் இதில் ஏதோ ஒரு ரகசியம் இருக்கும் என்ற சந்தேகத்தோடு பார்த்துருந்தால் சாந்தி...


உடனே பரந்தாமன் பயத்தில் உலறியபடி... தம்பி க க காலையில் அந்த விளக்கை மமமமாற்றிவிடலாம் இப்போது நீநீநீ அங்கு போக வேண்டாம் என்று சொல்லி கொண்டு மூவரும் பயந்தபடி உள்ளே சென்றார்கள்..

அப்போது சாந்தி மூவரையும் முறைத்தபடி நின்றாள்...

நம் மூவரின் மீது முழு சந்தேகம் வந்துவிட்டது .... சாந்தியின் பார்வையில் புரிந்து கொண்டார்கள் பரந்தாமன் ..சந்திரன் ..தீனா..



தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்... 47 👇


உடனே மூவரும் ரகசியமாக தீனாவின் அறையில் பேசினார்கள்..


தம்பி .. நீ சொல்றதை பார்த்தா மறுபடியும் சங்கரும் ரேகாவும் பேயாக வந்துவிட்டார்களா என்று படபடப்போடு கேட்டான் பரந்தாமன்..

கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை அவர்கள் மறுபடியும் வந்து விட்டார்கள் அண்ணா..

இந்த சாமியார் நம்மை நல்லாவே ஏமாத்திட்டான் அண்ணா .. அவனுக்கு 5 லட்சம் கொடுத்தது நம்முடைய முட்டாள்தனம் என்று எரிச்சலோடு சந்திரன் சொன்னான்..

அவர் மேல எந்த தப்பும் இல்லை நம்ம அவர் சொன்ன மாதிரியே அந்த ஓணானை பலி கொடுத்து பூஜை செய்து இருந்தாள் ..

இப்போது சங்கரும் ரேகாவும் மறுபடியும் வந்து இருக்க மாட்டாங்க சரி இனிமேல் யோசிக்க நேரமில்லை உடனே சாமியாரைப் பார்த்து .. பேய் விரட்டி விட வேண்டும் .. இல்லன்னா மறுபடியும் எல்லாம் பயிர்களையும் எரித்திடுவான் சங்கர் ..
அதனால உடனே நாளைக்கே சாமியாரே தோட்டத்துக்கு கூட்டிட்டு போகணும் என்று அவசரமாக பேசினால் பரந்தாமன்..

அந்த சாமியார் லட்சக்கணக்குல கேட்பானே.. நம்மகிட்ட இப்போதைக்கு பணம் இல்லை அண்ணா என்று சந்திரன் சொன்னான்..


எந்த வகையிலாவது சாமியாருக்கு பணம் கொடுத்து தான் தீரவேண்டும் அதைப்பற்றி பிறகு யோசிக்கலாம் முதலில் பேயை விரட்டி விட வேண்டும் அப்போதுதான் நம் பயிர்கள் எல்லாம் காப்பாற்ற முடியும்...
சரி சரி உன் அண்ணி நம்மை சந்தேகத்தோடு பார்க்கிறாள் அதனால நீங்க இப்போதைக்கு படுத்து தூங்குங்க காலையில சாமியாரிடம் போகலாம் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு வந்து விட்டான்.....


...பொழுது விடிந்தது...🌄


⛺ என்ன குரு சொல்றீங்க உங்கள பண்ணையார் மகன்கள் கொஞ்சம் கூட மதிகிளையா..


ஆமாம் சிஷ்யா .. நான் எவ்வளவு சொல்லியும் இப்போதைக்கு பூஜை தேவையில்லை என்று சாதாரணமாக சொல்லிவிட்டு மூவரும் என்னை மதிக்காமல் தோட்டத்தை சுற்றிப் பார்க்க கிளம்பிட்டாங்க. நான் என்ன செய்ய முடியும்..

குருவே அவங்கள சும்மா விடக்கூடாது இப்படியே விட்ட அவங்க பழையபடி நம்மை இளக்காரமா பேச ஆரம்பிச்சுடுவாங்க
அதனால இன்னிக்கு நான் நம்முடைய செல்போனை அந்தப் பம்புசெட்டில் மறுபடியும் ஒலிக்க வச்சுட்டு வந்துவிடுகிறேன் இன்னிக்கி ராத்திரி அவனுங்க எவனாச்சும் ஒருத்தன் பம்பு செட்டுக்கு போவானுங்க
நம்ம கொடுக்கிற பிதியில நாளைக்கு காலையில நம்மகிட்ட ஓடி வருவானுங்க குருவே நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க...

எப்படியோ செய்யுங்க ..
எனக்கு மனசு சரியில்ல பண்ணையார் மகன்களை நம்பி கோயில் கட்டலாம் என்று கனவு கண்டோம் .. ஆனால் ஒரு பூஜையிலே நம்மை கண்டுக்க மாட்டேங்கிறாங்க இவனுங்களை நம்பி நம்ம கோவில் கட்டலாம் என்று திட்டம் போட்டோம்
இனி எப்படி முடியுமோ தெரியல என்று சோகத்தோடு சொல்லிக் கொண்டிருக்கும்போது 🏍️மோட்டார் பைக் சத்தம் கேட்டது...


உடனே ஒரு சிஷ்யன் மட்டும் வெளியே வந்து பார்த்தான் பண்ணையார் மகன்கள் வந்திருப்பதை பார்த்து உடனே உள்ளே ஓடினான்...


குருவே பண்ணையார் மகன்கள் தான் வந்து இருக்காங்க எதுக்குன்னு தெரியல குருவே...


சரி சரி நம்ம அமைதியா இருப்போம் அவனுங்க எதுக்காக தான் வந்திருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களுக்கு சொன்னார்..

சாமி நீங்க சொன்ன மாதிரியே நடந்துருச்சு சாமி என்று பரந்தாமன் சொன்னான்..

என்னப்பா சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே என்று நக்கலாய் சொன்னார் சாட்டையடி சாமியார்..

மறுபடியும் அந்த இரண்டு பேரும் வந்துருச்சு சாமி அதை உடனே இன்னிக்கி ராத்திரியே விரட்டிவிட வேண்டும் சாமி...

இன்னைக்கு ராத்திரியே வா
அது முடியாதே. நாங்கள் வேறு ஒரு இடத்திற்கு இன்னைக்கு பூஜை செய்யறதா சொல்லிட்டோம் வேணும்னா அடுத்த வாரத்தில் வச்சுக்கலாம் என்று நக்கலாய் சொன்னார்...

அடுத்த வாரம் வரை தாங்காது சாமி இப்போவே அந்த பேய் களத்துமேட்டில் இருந்த மின்விளக்கு வெடிச்சு சிதறும்படி செய் திருச்சி .. கொஞ்ச நாள் போனா வேறு ஏதாவது பெரிய அளவுல செய்திடும் சாமி .. நீங்கதான் கொஞ்சம் மனசு வச்சி இன்னைக்கி வரணும் சாமி என்று கெஞ்சுவது போல பரந்தாமன் மல்லாடி நான்...


நீங்க எவ்வளவு தூரம் கேட்கிறது நால இன்னிக்கி ராத்திரி நம்ம அந்த பேயை நான் விரட்டி விடுகிறேன் ஆனால் செலவும் அதிகமாகுமே...


எவ்வளவு சாமி...

ஏற்கனவே கொடுத்தது போல கொடுத்துடுங்க.....

அஞ்சு லட்சமா என்று மூவரும் அதிர்ச்சியானார்கள்...

சாமி இந்த முறை கொஞ்சம் குறைச்சிகுங்க சாமி...

நீங்கள் நான் சொன்ன படி ஓணானை பலிகொடுத்து பூஜை செய்து இருந்தால்
உங்களுக்கு ஒரு லட்சத்தோடு முடிந்திருக்கும்
ஆனால் நீங்கள் அதை செய்ய தயங்கினீங்க ..அதனால் வந்த வினை ..நான் என்ன செய்ய முடியும் இப்போது அந்த பேயை விரட்ட மறுபடியும் என் சாட்டைக்கு பூஜை செய்யணும் அதற்கு பணம் வேண்டாமா...

இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம் சாமி என்று குரல் உசத்தி தீனா சொன்னான்...

தீனாவின் கோபத்தை புரிந்துகொண்ட சாட்டையடி சாமியார் ..உடனே தனது விம்பை சற்று மாற்றிக்கொண்டு..
சரி தம்பி உங்களுக்காக மூன்று லட்சத்திற்கு வருகிறேன் என்று சிரித்தபடி சொன்னார் சாட்டையடி சாமியார்..

சரி சாமி நாங்கள் இன்று இரவு உங்களுக்காக காத்து இருக்கிறோம் நீங்கள் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து விடுங்கள் என்று பரந்தாமன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்..


⛺ எதுக்கு குருவே 2 லட்சத்தை கம்மி பண்ணிட்டீங்க
அவனுங்க தேவை என்ன சாமி என்று சொல்லிக்கிட்டு வருவானுங்க ..
தேவையில்லை என்றாள் நம்மை சட்டை கூட பண்ணாம போவானுங்க அவனுங்கள இதுதான் சமயம் என்று தண்ணி காட்டி இருக்கணும் குருவே..

விடுடா எங்க போ போறானுங்க நம்மோட லட்சியமே
இவனுங்கதான் இவனுங்கள பகச்சிகிட்ட நமக்குத்தான் நஷ்டம் அவனுங்க என்னிடம் மதிக்காமல் போனதற்காக அவனுங்களுக்கு 2 லட்சம் நஷ்டம் என்று சொல்லி மூவரும் சிரித்தார்கள்...


குருவே இப்பவும் எனக்கு ஒரு சந்தேகம்..

காசு கொடுப்பாங்களா கொடுக்க மாட்டார்களா என்று தானே...

அது இல்ல குருவே ..
அந்த இடத்துல பேயே இல்லை ஆனா இவனுங்க என்னமோ நேரில் பார்த்தவர்கள் போல நம்மிடம் வந்து சொல்றானுங்க ...
லட்சம் லட்சமா செலவு செய்யறாங்க ஒண்ணுமே புரியலையே குருவே அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு..

அடேய் வேற ஒன்னும் இல்ல அவனுங்க களத்து மேட்டுல இருக்கிற மின்கம்பத்தில் விளக்கு சூடு ஏறி வெடிச்சா பேய் இருக்குன்னு பயப்படுகிறார்கள் மத்தபடி ஒன்னுமே இல்ல .. அத்தோடு நம்மா செல்போனை வெச்சு ஆவணங்களை பயமுறுத்தியதில் உண்மையாவே நம்பிட்டனுங்க நம்மை ..
அதனாலதான் நமக்கு லட்ச லட்சமா பணம் கொடுக்கிறார்கள் இப்போதும் அந்த களத்துமேட்டில் இருக்கும் மின்விளக்கு சூடேறி வெடித்திருக்கும் ..
அதனால இப்போ நமக்கு மூன்று லட்சம் வருமானம் கிடைக்கப் போவது என்று சொல்லி மறுபடியும் சிரித்தார்கள்...


சிஷ்யா போன முறை மாதிரி இந்த முறையும் செல்போனுக்கு ஃபுல் சார்ஜர் போட்டு ..
பம்புசெட்டில் அதே இடத்துல ஒலிக்க வச்சிடு மத்ததை ராத்திரி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சிஷ்யனிடம் சாட்டையடி சாமியார் பொறுப்போடு சொன்னார்..


🏍️ மூவரும் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது தீனா கோபத்தோடு சொன்னான்...

அண்ணே ..எனக்கு என்னமோ இந்த சாமியார்தான் நம்மை நல்லாவே ஏமாத்துற மாதிரி தெரியுது அண்ணே...

அவர் ஏமாத்துறரோ இல்லையோ சங்கரிடம் இப்போதைக்கு யார் சண்டை போட முடியும் ..
நீயும் நானுமா அவனை விரட்ட முடியும் ..
அவன் பேயாக இருந்துகொண்டு நம்மை மிரட்டுகிறான்.. அவனுக்கு சரியான ஆளு அந்த சாமியார் தான் அவனுக்குத்தான் அவன் பயப்படுகிறான்
இப்படி இருக்கும்போது நம்ம சாமியார் கேட்கிறதை கொடுத்து தான் தீரவேண்டும்..


இப்படியே சாமியாருக்கு செலவு செய்து நம்முடைய சொத்துக்கள் எல்லாம் காலியாகிவிடும் போல் தெரிகிறதே அண்ணா..


இந்த முறை சங்கருக்கும் இந்த சாமியாருக்கும் ஒரு முடிவு கட்டுகிறேன் என்று ஒரு திட்டத்தோடு பரந்தாமன் சொன்னான்..


இரவு நேரம் ஆனது....🌘


💒 வீட்டில் தனது அண்ணன் மகனான சுரேஷிடம் விளையாடிக்கொண்டிருந்தார்கள் சந்திரனும் தீனாவும்..

அப்போது சாந்தி இவர்களை கவனித்திருந்தால் நேரம் 11 ..30 ஆகிறது சந்திரன் இன்று இரவு பம்பு செட்டுக்கு செல்ல வேண்டும் ஆனால் இவ்வளவு நேரமாகியும் போகாமல் இருக்கிறானே என்று நினைத்து சாந்திக்கு குழப்பமாக இருந்தது..


தம்பி ....என்று சந்திரனையும் தீனாவையும் அழத்தாள் சாந்தி..


என்ன அண்ணி என்று சொன்னபடி இருவரும் வந்து நின்றார்கள்..


இன்னைக்கு நீ பம்பு செட்டுக்கு போகவில்லையா நேரம் ஆயிடுச்சே..

இன்னைக்கு மூணு பேருமே பம்பு செட்டுக்கு போகப்போறோம் அண்ணி...

எதுக்கு மூணு பேருமே போறீங்க அந்த சாமியாரும் வரார..

ஆமாம் அண்ணி...


இப்போதெல்லாம் சாமியாரிடம் ரொம்பவே நெருங்கி பழகிரிங்க மூணு பேரும் எதுக்காக..


பதில் சொல்ல முடியாமல் சந்திரனும் தீனாவும் முழித்தார்கள்..

உங்க யாருகிட்ட பேசக்கூடாது என்று தான் நான் இருந்தேன் ஆனால் இங்கு நடப்பதெல்லாம் பார்த்தால் என்னால் உங்களிடம் பேசாமல் இருக்க முடியவில்லை சொல்லுங்க எதுக்காக சாமியார் வருகிறார்..

சாந்தியின் முகத்தை பார்க்க முடியாமல் இருவரும் தரையைப் பார்த்தபடி நின்றார்கள்...

எதையோ பெருசா என்கிட்ட நீங்க மூன்று பேருமே மறைக்கிறீங்க
அது இந்த குடும்பத்தை என்ன செய்யப் போகுதோ என்று எனக்கு தெரியல ...ஆனா நம்ம குடும்பத்தில் நிம்மதி வரும் என்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சம்கூட இல்லை நீங்கள் இப்படியே வாயை மூடிக்கொண்டு அமைதியா இருங்க என்னைக்காவது ஒரு நாளைக்கு நீங்க வருத்தப்படுவீங்க ...
என்று லேசாக அழுதபடி சொல்லிவிட்டு தனது மகனை தூக்கிக்கொண்டு அவளது அறைக்கு சென்றுவிட்டாள் சாந்தி...

உங்களிடம் எதையுமே சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறோம் அண்ணி எங்களை மன்னிச்சிடுங்க ...
என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சந்திரனும் தீனாவும் வாசலில் வந்து நின்றார்கள் அப்போது சாட்டையடி சாமியாரும் அவரது சிஷ்யனும் வழக்கம்போல சட்டையோடு வந்து நின்றார்கள்..

என்ன தம்பி பம்பு செட்டுக்கு போலாமா..

போலாம் சாமி இதோ அண்ணனை கூட்டிவருகிறேன் என்று சொல்லிவிட்டு தீனா பரந்தாமனிடம் ஓடினான்..


🌾🌱🍁☘️🥀 வழக்கம்போல சாட்டையடி சாமியார் முதலில் செல்ல பின்னால் சிஷ்யன் செல்ல அதற்குப்பின்னால் தீனா செல்ல அவன் பின்னால் சந்திரன் செல்ல கடைசியாக பரந்தாமன் செல்ல இப்படி அந்த அழகான வயல்வெளியில் நிலா வெளிச்சத்தில் ஐந்து பேரும் வரப்பு மேட்டில் நடந்து சென்றார்கள் பம்புசட்டை நோக்கி...


அப்போது காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது..

ஊருக்குள்ள காத்தே அடிக்கல ஆனா நீங்க மட்டும் காத்து வேகமா அடிக்குது என்று சாட்டையடி செமையா கேட்டார்..

இதுவும் அந்த பேய் வேலைதான் சாமி என்று தீனா சொன்னான்...

ஆரம்பிச்சிட்டா நம்மள பயமுறுத்த என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் சாட்டையடி சாமியார்...


மெதுவாக நடந்து சென்று களத்துமேட்டில் ஐந்து பேரும் நின்றார்கள்..

தம்பி ...இந்த கம்பத்துல தான் அந்தப் பேய் விளக்க வெடிக்கும் படி செஞ்சதா என்று சாட்டையடி சாமியார் கேட்டார்..

ஆமாம் சாமி ...இந்த இடத்தில் நிற்பதற்கே பயமாயிருக்கு..

நீ ஒன்றும் பயப்படாத தம்பி உன் பயத்தை இந்த இடத்திலேயே நான் விரட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு... தனது ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய மின் விளக்கை எடுத்து தனது சிஷ்யனிடம் கொடுத்தார் சாட்டையடி சாமியார்..

உடனே சிஷ்யன் அந்த பல்பை வாங்கிக்கொண்டு சிறிதும் தாங்காமல் அந்த நள்ளிரவில் மின் கம்பத்தில் ஏறி அந்த மின் விளக்கை மாற்றிவிட்டு கீழே இறங்கினான்...

தம்பி இப்போ சுக்ஸி போடு விளக்கு எரியட்டும் என்று நக்கலாய் சொன்னார் சாட்டையடி சாமியார்..

தீனா சற்று லேசான பயத்தோடு கம்பத்தில் இருந்த மின் விளக்கு சுவிட்சை ஆன் செய்தான்...

கம்பத்தில் விளக்கும் பளிச்சென்று எரிந்தது....

தம்பி சாமியாருக்கு நம்ம அதிகமாகவே செலவு செய்கிறோம் என்று வருத்தப்பட்டையே இப்போது அவருடைய திறமையை பார்த்தாயா என்று பரந்தாமன் சந்திரனிடம் ரகசியமாக சொன்னான்..

சாமியாரின் தைரியத்தை பார்த்த சந்திரனுக்கு பரந்தாமனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலையை மட்டும் ஆட்டினான்..


என்ன தம்பி உன்னோட பயம் போயிருச்சா என்று தீனாவை பார்த்து தெனாவட்டாக கேட்டார் சாமியார்...

லேசாக சிரித்தபடி தலையாட்டினான் தீனா..

எப்ப பாத்தாலும் கம்பத்தில் இருந்த விளக்கை பேய் வெடிக்க செய்தது என்று சொல்லுவீங்களே ..
இப்போது அந்த பேய்க்கு தைரியமிருந்தால்..
வெடிக்கச் செய்யட்டும் பார்க்கலாம் என்று சாட்டையடி சாமியார் கம்பீரமாக சொல்லும்போதே கம்பத்தில் இருந்த மின் விளக்கு வெடித்து சிதறியது...


மறுபடியும் இருள் சூழ்ந்தது....👽😈



ஐந்து பேரும் வீடு திரும்புவார்களா...



தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்...48👇


கம்பத்தில் இருந்த மின்விளக்கு வெடித்து சிதறியது ..

அங்கு இருள் சூழ்ந்தது ..

அப்போது பயத்தில் பண்ணையார் மகன்கள் மூவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு பயத்தில் நடுங்கினார்கள்..


அப்போது சாட்டையடி சாமியாருக்கும் சிஷ்யனுக்கும் சற்று வியப்பாக இருந்தது.. ஒருவேளை உண்மையாகவே பேய் இருக்கிறதா என்று இருவரும் ரகசியமாக பேசினார்கள்..

குருவே நீங்க சொன்ன மாதிரிதன் இந்த கம்பத்துல மின்சாரம் கோளாறு இருக்கு அதனாலதான் பல்பு வெடித்து சிதறியது..

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ...
இருந்தாலும் நாமளும் பேய் இருப்பது போலவே நடிக்கலாம் அப்பதான் இந்த கம்பத்தில் பல்பு வெடிக்கும் போதெல்லாம் நம்மை கூப்பிடுவாங்க ..
பேய் இருக்குதுன்னு என்று இருவரும் ரகசியமாக பேசிக்கொண்டார்கள்..

ஐயா.. இன்னைக்கு எங்களுக்கு ரொம்பவே பயமா இருக்கு சாமி நாங்கள் மூன்று பேரும் வீட்டுக்கு போகிறோம்
நீங்கள் அந்த பேயை விரட்டிவிட்டு வாங்க உங்களுக்கு தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன் சாமி என்று பயத்தோடு பரந்தாமன் சாமியாரிடம் சொன்னான்..

உடனே தன்னை ஒரு கோபக்காரன் போல காட்டிக்கொண்டு சாமியார் சொன்னார். சாதாரண ஒரு பல்பை வெடிக்க செய்து விட்டால். அந்தப் பேய் என்ன பெரிய சக்தி வாய்ந்த பேயா அதை நான் என் சட்டையால் இன்று வெளுத்து வாங்குகிறன் பாருங்கள் .

நீங்கள் ஒண்ணும் பயப்படத் தேவையில்லை என் பின்னாடியே வாங்க அந்தப் பேயை இன்னைக்கு ஒரு வழி பண்ணுகிறேன் என்று ஆவேசத்துடன் கம்பீரமாக நடித்துக் கொண்டே சொன்னார் சாட்டையடி சாமியார்...


சாமியாரின் தைரியமான பேச்சை நம்பி பண்ணையார் மகன்கள் மூவரும் பயத்தோடு சென்றார்கள்..

ஐந்து பேரும் சிறிது தூரம் சென்றதும் ..
கரும்புத் தோட்டத்தில் குள்ளநரிகள் கூட்டமாக ஊளை இட்டது..

குள்ள நரிகள் ஊளையிடும் சத்தம் பண்ணையார் மகன்களுக்கு மேலும் பயத்தை அதிகரித்தது..


குருவே... இன்னிக்கி எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு குருவே போனமுறை வந்தபோது இது போல குள்ள நரிகள் ஊளை இடவிலலை குருவே.. என்று ரகசியமாக சொன்னாள் சிஷ்யன்..

இதில் என்ன வித்தியாசம் இருக்குடா..
காத்தடிக்குது... மழை வரும் போல தெரியுது அதனால நரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அழகுறாங்க ..அதனால நமக்கு என்ன பிரச்சனை என்று சாதாரணமாக சொன்னார் சாமியார்..

காற்று பலமாக வீசியது ஒரு பக்கம் ஓநாய் கூட்டம் சத்தம் போட்டது...
இன்னொரு பக்கம் கருவண்டுகள் சத்தம் போட்டது இப்படிப்பட்ட சூழ்நிலையில் பண்ணையார் மகன்கள் பெரும் பயத்தோடு சாமியார் பின்னாடி சென்றார்கள் பம்புசெட்டை நோக்கி...

குருவே கொஞ்சம் நிதானமாக செல்லுங்கள் .
இன்னும் 12 மணி ஆகவில்லை நம்ம ஆளு 12 மணிக்குத்தன் போன் செய்ய ஆரம்பிப்பான்.... இப்போது நேரம் 11 தான் ஆகிறது அதுக்குள்ள நம்ம பம்பு செட்டுக்கு போகக்கூடாது..
அதனால மெதுவா போங்க குருவே..

சரி சிஷ்யா என்று சொல்லிக்கொண்டு சாமியாரும் சிஷ்யனும் தைரியமாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவர்களின் தலை மீது சேர் வந்து விழுந்தது..

இதைப் பார்த்த பண்ணையார் மகன்களுக்கு பயம் உச்சத்திற்கே சென்றது..

உடனே சாமியாரும் சிஷ்யனும் பயந்து போனார்கள்..

உடனே சாமியார் பின்னாலிருக்கும் பண்ணையார் மகன்களை பார்த்து முறைத்தார்..

சாமி உங்கள் மீது நாங்கள் சேர் அடிக்கவில்லை.
அந்த பேய்தான் அடித்தது சாமி என்று மூவரும் பயத்தோடு சொன்னார்கள்..

குருவே... பொய் சொல்றானுங்க இவனுங்க தான் சேரை அடித்துவிட்டு ..இல்லாத பேய் மீது பழி போடுறானுங்க குருவே என்று... சாமியாரின் காதோரமாக சிஷ்யன் சொன்னான்..

இருக்கட்டும் இவனுங்கள அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு..

சாமி இப்பவே அந்த பேய் சேறை வாரி அடிக்குது.. இன்னும் போகப் போக என்னென்ன செய்யப் போகிறதோ தெரியலையே சாமி என்று சந்திரன் சொன்னான்..

எங்கு எது நடந்தாலும் உங்களை மட்டும் நான் வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்..

என் மீது பேய் சேறை வாரி அடித்தாலும் சரி ..
கல்லெடுத்து அடித்தாலும் சரி உங்களை நான் வீட்டுக்கு மட்டும் அனுப்ப மாட்டேன்..

இன்று இரவு நீங்கள் மூன்று பேரும் என்னோடுதன் இருக்கணும்

அதனால் தேவையில்லாமல் சேர் அடிப்பதை எல்லாம் நிறுத்தி விடுங்கள் என்று சாட்டையடி சாமியார் சொன்னார்..

என்னடா தம்பி ...இந்த ஆளு நம்ம சேர் அடிச்சோம் மென்று சொல்றான் என்று பரந்தாமன் சந்திரனிடம் மெதுவாக சொன்னான்..

விடுங்க அண்ணே.. இன்னும் கொஞ்ச நேரத்துல சங்கரும் ரேகாவும். வேற எதையாவது எடுத்து அடிப்பாங்க அப்போது தெரியும் யார் சேர் அடிச்சாங்க என்று..

அப்போது திடீரென்று ரேகா சிரிக்க ஆரம்பித்தாள்..

சாமி அந்த பேய் சிரிக்குது சாமி என்று படபடப்போடு சொன்னார்கள் பண்ணையார் மகன்கள்...

எனக்கும் கேக்குது ..
அந்தப் பேயை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் பயப்படாமல் வாங்க என்று சொல்லிவிட்டு விரைவோடு சென்றார்கள்..

என்ன சிஷ்யா அரை மணி நேரம் முன்னாடியே நம்ம ஆளு போன் பண்ண ஆரம்பிச்சுட்டான்..

விடுங்க குருவே ஆர்வக்கோளாறில் பண்ணிட்டு இருப்பான்..

அண்ணே... எனக்கு என்னமோ இன்னிக்கி ஏதோ தப்பு நடக்கும் போல தெரியுது அண்ணா என்று தீனா பதட்டமாக சொன்னான்..

பயப்படாதே தம்பி ..போனமுறை சாமியார் எப்படி சங்கரையும் ரேகாவையும் வெளுத்து வாங்கினாரோ..
அதே போல இந்தமுறையும் கண்டிப்பா அவங்கள அடிச்சு துரத்தி விடுவார் தைரியமா இரு என்று பரந்தாமன் தீனாவுக்கு தைரியம் சொன்னான்..

ஒருவழியாக பம்புசெட்டு அருகில் ஐந்து பேரும் சென்றார்கள் அப்போது ரேகாவின் சிரிப்பு சத்தம் சற்று ஆக்ரோஷமாக இருந்தது..

வழக்கம்போல பலாமரத்தின் அருகில் பண்ணையார் மகன்கள் மூவரும் பயந்தபடி நின்றார்கள் சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யனும் தனது நாடகத்தை ஆரம்பித்தார்கள்...

அப்போது சாமியார்...
சாமி வந்தது போல ஆட ஆரம்பித்தார் சிஷ்யனும் அவரின் ஆட்டத்திற்கு ஏற்ப தாளமும் போட்டான்..

இப்படி இருவரும் தனது நாடகத்தை ஆரம்பிக்கும்போது கிணற்றிலிருந்து சங்கர் ஆக்ரோஷமாக சிரிக்க ஆரம்பித்தான்..

சங்கரின் மிரட்டலான சிரிப்பை கேட்டதும் .. சாமியாரும் அவனது சிஷ்யனும் ஆடுவதை லேசாக நிறுத்தினார்கள்...

நம்ம செல் போன்ல ஆம்பள பேய் சிரிக்கும் ரிங்க்டோனே கிடையாதே.. இது எப்படிடா வந்தது என்று லேசாக ஆடிக்கொண்டு சிஷ்யனிடம் கேட்டார் சாமியார்..

நமக்கு தெரியாமலே நம்ம ஆளு பதிவு பண்ணி இருப்பான் குருவே நீங்க விடாம ஆடுங்க என்று சிஷ்யன் சொன்னான்..

மறுபடியும் சாமியாரும் சிஷ்யனும் சாமி வந்ததை போல ஆடினார்கள்...

ஏய் பேய் நீங்கள் இருவரும் புருஷன் பொண்டாட்டிய... இன்றோடு உங்கள் கதையை முடிக்கிறேன் என்று ஆக்ரோஷமாக சொன்னார் சாட்டையடி சாமியார்...

நடப்பதையெலலாம் பார்த்து பண்ணையார் மகன்களுக்கு நிற்கக்கூட முடியவில்லை அந்த அளவுக்கு கை கால் நடுங்கியது சங்கரின் ஆக்ரோஷமான சிரிப்பை கேட்டதும் பரந்தாமனுக்கு சங்கரை கொலை செய்தது ஞாபகத்திற்கு வந்தது..


சாமியாரின் ஆட்டத்திற்கு ஏற்றார்போல் தளத்தை போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த சிஷ்யன் சாமியாரிடம் ரகசியமாக கேட்டான்.. குருவே நானும் கொஞ்சம் சீன் போடட்டுமா...

போடு சிஷ்யா ... நீ சொல்வதைக் கேட்டு பண்ணையார் மகன்களுக்கு பேதியாக வேண்டும் அப்படி ஒரு பயத்தை அவர்களுக்கு காட்டு என்று சாமியார் சொன்னார்..

உடனே சிஷ்யன் பேயிடம் சவால் விடுவதைப் போல சொன்னான்.
ஏய் பேயே நீ உண்மையாகவே சக்தி வாய்ந்த பேயாக இருந்தால் இதோ பம்புசெட்டு மேலே எறிந்து இருக்கும் மின் விளக்கை வெடிக்கும் படி செய் பார்க்கலாம் என்று தில்லாக சொன்னான் சிஷ்யன்..

பரவாயில்லையே நம்முடைய சிஷ்யனும் நல்லாவே பேசுகிறானே என்று சாமியார் நினைத்துக்கொண்டு சாமி வந்ததை போல ஆடிக் கொண்டே இருந்தார்...

அப்போது பம்பு செட்டின் மேலே இருந்த மின் விளக்கு வெடித்து சிதறியது.. உடனே அங்கு இருள் சூழ்ந்தது..

அப்போது.. பண்ணையார் மகன்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு நடுங்கினார்கள்..

வேகமாக காத்து வீசிக் கொண்டிருக்கும்போது இடி இடித்தது மின்னல் வெளிச்சத்தில் அந்த இடம் பயங்கரமாக இருந்தது..

சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யனும் ஆடுவதை நிறுத்திவிட்டு சிலைபோல நின்றார்கள்..


என்னடா ..உண்மையாகவே இந்த இடத்தில் பேய் இருக்கிறதா என்றார் சிஷ்யனிடம் சாமியார்..

எனக்கும் அப்படி தான் தோணுது குருவே... தேவையில்லாமல் கடைசி நேரத்தில் வீராப்பாக பேசிவிட்டேன் என்று சிஷ்யன் சொன்னான்...

ஐயையோ உண்மையான பேயிடம் வந்து
சிக்கிக்கொண்டோம்மா.. என்றார் சாமியார்..

சாமி அந்த இரண்டு பேய் வந்துவிட்டது உடனே அதை பிடிச்சிருக்குங்க என்று பரந்தாமன் சத்தமாக சொன்னான்..

அடப்பாவிங்களா ...இன்னுமா எங்களை நம்புறீங்க..
நாங்களே எந்த பக்கம் ஒடலாம் என்று நினைக்கிறோம்..
நாங்க எங்கருந்து அந்தப் பேய் பிடிக்கிறது... என்று மனதில் நினைத்துக் கொண்டார்கள்..

ரேகா விடாமல் சிரித்துக் கொண்டிருக்கும் போது.. திடீரென்று கிணற்றிலிருந்து புகை கிளம்பியது ...
இதை பார்த்ததும் அனைவரும் மிரண்டு போய் நின்றார்கள்..

குருவே .. வகையா வந்து சிக்கி கொண்டோம் குருவே...
நம்ம வரும்போது சேர் அடித்தது இந்த பேய் தான் குருவே நம்மதான் தேவையில்லாமல் வந்து மாட்டிக்கிட்டோம் பண்ணையார் மகன்கள் சொன்னது எல்லாமே உண்மை தான் குருவே ...என்று பிதியில் நடுங்கிக் கொண்டே சொன்னான் சிஷ்யன்...

இப்போ என்னடா பண்றது பயத்துல எனக்கு ஐடியாவே வரமாட்டேங்குது என்று உலறியபடி சொன்னான் சாட்டையடி சாமியார்..


இங்கிருந்து ஓடினாள் பண்ணையார் மகன்கள் நம்மை கொன்று விடுவார்கள் ... இங்கேயே இருந்தாள் இந்தப் பேய் நம்மை கொன்றுவிடும் குருவே ... ஆக மொத்தத்தில் இன்று நம் உயிரோடு செல்வதில் சந்தேகம்தான் என்ன செய்வது ஒன்றும் புரியவில்லையே என்று சிஷ்யனும் நடுங்கியபடி சொன்னான்..

சாமி... என்ன ரெண்டு பேரும் அப்படியே சிலைபோல நின்னுகிட்டு இருக்கீங்க.... போனமுறை அந்தப் பேயை அடித்து விரட்டிநீங்க..
இப்ப ஏன் தயங்குறீங்க சாமி உடனே அந்த பேயை அடிச்சு விடுங்க என்று தீனா சாமியாரிடம் சொன்னான்...


அடப்பாவிங்களா நீங்க எங்களை நம்பி வந்தீங்க இந்த இடத்துக்கு ஆனா நாங்க உங்க பேச்சை கேட்காம வந்திட்டோமே ..
இப்போ நாங்க என்ன செய்யறது என்று மனதில் நினைத்துக்கொண்டு பின்னாலிருக்கும் பண்ணையார் மகன்களை திரும்பி பார்த்து கேட்டார்..

மின்கம்பத்தில் பல்பு வெடித்து சிதறியதை மட்டும் சொன்னீங்களே ..
கிணற்றில் புகை வரும் என்று சொன்னீர்களா..

இதெல்லாம் உங்களுக்கு ஒரு விஷயமா சாமி என்று சந்திரன் சொன்னான்..

அப்போது சங்கர் ஆக்ரோஷமாக சிரித்தான் .. அவன் சிரிப்பில் உங்களை உயிரோடு விடமாட்டேன் என்பதைப்போல உணர்த்தியது பண்ணையார் மகன்களுக்கு...

பரந்தாமனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான் அப்போது சற்று கோபத்தோடு சாமியாரிடம் சொன்னான்..

சாமியாரே அவனைப்பற்றி உங்களுக்கு தெரியாது
அவன் பயங்கரமானவன் அதனால் உடனே அவனைப் பிடித்து உங்கள் சாட்டையால் அடித்து விரட்டுங்கள் இல்லையெனறால் அவன் நமக்கு தண்ணி காட்டுவான் என்று பரந்தாமன் சொன்னார்..

சாமியார்.. என்ன செய்வது என்று தெரியாமல் மிரண்டு போய் நின்றார் மரண பீதியில்.. அப்போது சிஷ்யன் மெதுவாக சாமியாரின் காதில் சொன்னான்..
குருவே நம்மைவிட பண்ணையார் மகன்கள்தான் ரொம்ப பயப்படுறாங்க..


எத வச்சு சொல்ற சிஷ்யா...

பயத்துல பண்ணையார் மகன்களுக்கு பேதி ஆகிடுச்சு அதனால்தான் இங்கு ரொம்ப நாத்தம் அடிக்கிறது குருவே..


பேதி அவனுங்களுக்கு ஆகல எனக்குத்தான் ஆயிடுச்சு சிஷ்யா என்று அழுதபடி சொன்னார் சாட்டையடி சாமியார் ...
அப்போது சிஷ்யன் உடனே தனது கைகளால் மூக்கை மூடிக் கொண்டான்..

அப்போது சங்கரும் ரேகாவும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார்கள் .. பம்புசெட்டின் கதவுகள் திறந்தும் மூடியும் அடித்துக்கொண்டது..


சாமியாரின் கை கால் நடுங்குவதை பண்ணையார் மகன்கள் கவனித்தார்கள்..


சாமியாருக்கு என்ன ஆச்சு இன்று என்ற சந்தேகத்தோடு பார்த்தார்கள்..


இங்கிருந்து எப்படியாவது உயிர் தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் சாமியார்.. பண்ணையார் மகளை பார்த்து பரிதாபமாக கேட்டார்..


ஐயா... ஒரு சின்ன தவறு நடந்துவிட்டது...

என்ன சாமி சொல்றீங்க தவறு நடந்து விட்டது என்று சற்று கோபத்தோடு கேட்டான் பரந்தாமன்..

ஆமாம் அய்யா பூஜை செய்த சாட்டையை விட்டுவிட்டு வேறொரு சாட்டையை மாத்தி எடுத்துட்டு வந்துட்டேன் ..
நீங்கள் கொஞ்ச நேரம் பொறுமையா இங்கேயே இருங்கள் நானும் என் சிஷ்யனும் ஓடிப்போய் சாட்டையை எடுத்துக்கொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு மெதுவாக அங்கிருந்து கிளம்ப பார்த்தார்கள் சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யனும்..

சாமியாரே இங்கிருந்து ..
இந்தப் பேயை விரட்டாமல் நீங்க போக முடியாது என்று கோபத்தோடு சொன்னான் தீனா..

சிறிதும் தயங்காமல் சாட்டையடி சாமியார் உடனே பண்ணையார் மகன்களில் காலில் விழுந்து அழுதார்..

சாமியாரின் செயலைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் பண்ணையார் மகன்கள்..

ஐயா.. நான் உண்மையான சாமியார் கிடையாது ஐயா என்னை மன்னித்து விடுங்கள் உங்களுடைய பணத்தை நான் திருப்பி தந்து விடுகிறேன் என்னை விட்டு விடுங்கள் ஐயா என்று அழுதார் சாட்டையடி சாமியா...

உடனே பரந்தாமன் சுதாரித்துக் கொண்டான் . இவன் ஒரு போலி சாமியார் இவனை நம்பி இனியும் இங்கு இருக்கக் கூடாது என்று முடிவு செய்துகொண்டான்..


என்னடா இங்கிருந்து ஓடிவிடலாம் என்று நினைக்கிறாயா என்று சங்கர் பம்பு செட்டின் அறையிலிருந்து ஆக்ரோஷமாக சொன்னான்..

இதைக் கேட்டதும் அனைவரும் பீதியில் நடுங்கினார்கள்..

அப்போது சங்கர் தனது கொடூரமான முகத்தை இடி மின்னல் வெளிச்சத்தில் காட்டினான் ஜன்னல்வழியாக..

சங்கரின் கொடூரமான முகத்தை பார்த்ததும் சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யனும் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள்... சிஷ்யா நீ பூஜை அறைக்கு சென்று நம்ம ஆளை கூட்டிக்கொண்டு வா இந்த ஊரை விட்டே எங்கேயாவது ஓடி விடலாம் .. இனியும் இந்த ஊரில் இருக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டே சாட்டையடி சாமியார் சேற்றில் இறங்கி ஓடினான் ...

மறுபக்கம் அவனது சிஷ்யன் ஓடினான் இதை பார்த்த பண்ணையார் மகன்கள் மிரண்டு போய் நின்றார்கள்..


தென்னை மரத்தின் மேல் இருந்து ஓலை ஒன்று பண்ணையார் மகன்கள் முன்னால் வந்து நின்றது.. மறுபக்கம் மண்வெட்டி வந்து பறந்தபடி நின்றது..😈👽


தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ...49👇


சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யனும் ஆளுக்கொரு திசையில் சேற்றில் இறங்கி ஒடுவதை பார்த்த பண்ணையார் மகன்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது...


சாட்டையடி சாமியாரின் மீது பரந்தாமனுக்கு அளவில்லா கோபம் ஏற்பட்டது..

இந்த ஊர் மக்களையும் ..
நம் குடும்பத்தையும் .. சாமர்த்தியமாக. இதுநாள் வரைக்கும் நம்ம ஏமாற்றிக் கொண்டு இருந்தோம்
ஆனால் இந்த சாமியார் இத்தனை நாளா இந்த ஊரையும் நம்மையும் ஏமாற்றி விட்டானே இவன் இன்னொரு முறை என் கையில் கிடைத்தால் இவன் உயிரை எடுக்காமல் விடக்கூடாது.. என்று பரந்தாமன் சாமியாரை பார்த்தபடியே நினைத்து கோபப்பட்டான்...

காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது ..
கருமேகம் சூழ்ந்து கொண்டதால் அந்த இடம் கருமை நிறத்தில் இருட்டாக இருந்தது
அதே சமயத்தில்
இடி இடித்தது மின்னல் வெளிச்சத்தில் மூவரும் பளிச்சென்று தெரிந்த படி நின்றார்கள். அப்போது அந்த இடம் பயங்கரமாக இருந்தது பார்ப்பதற்கு...

பரந்தாமனின் இடது பக்கம் சந்திரனும் வலது பக்கம் தீணாவும் நின்றார்கள்.. அப்போது சங்கரும் ரேகாவும் தீணாவையும் சந்திரனையும் பின்னால் தள்ளி விட்டார்கள்.

உடனே சங்கர் தென்னை ஓலையை எடுத்துக் கொண்டான்
ரேகா மண்வெட்டியை எடுத்துக் கொண்டு. பரந்தாமன் முன்னால் நின்றார்கள் . ஆனால் பண்ணையார் மகன்களுக்கு சங்கரின் உருவமும் ரேகாவின் உருவமும் தெரியவில்லை
வெறும் தென்னை ஓலையும்.
மண் வெட்டியும் பறந்தபடி நிற்பது மட்டும் தெரிந்தது...

அப்போது தென்னை ஓலையின் இலைகள் சரசரவென உரித்து கீழே விழுந்தது .. வெறும் மட்டை மட்டும் நின்றது இதைப்பார்த்த பரந்தாமனுக்கு மரண பீதி ஏற்பட்டது..

சந்திரனும் தினாவும் நடப்பதை பார்த்து இருவரும் துணிச்சலோடு எழுந்து நின்றார்கள்..

ஆரம்பத்தில் மரண பீதியில் பயந்து கொண்டிருந்த சந்திரனும் தீணாவும் தன் அண்ணனுக்கு ஆபத்து வரப்போகிறது என்று நினைத்ததும் அவர்கள் ரத்தம் சூடேறியது அவர்களின் பயம் தெளிந்து விட்டது வெறியோடும் கோபத்தோடும் நின்றார்கள்...

தம்பி சங்கரும் ரேகாவும் அண்ணனை சாகடிக்க போறாங்க நம்ம இரண்டு பேரும்.. எப்படியாவது அண்ணனை பத்திரமாக இங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி விடனும்... இதனால் நம் உயிர் போனாலும் பரவாயில்லை தம்பி அண்ணனை எப்படியாவது
சங்கரிடமும் ரேகாவிடமும் காப்பாற்றியே தீர வேண்டும் என்று வெறித் தனத்தோடு தீனா விடும் சொன்னான் சந்திரன்...

சங்கருக்கு பெரிய அண்ணன் மீது தான் அதிக கோபம் இருக்கும் அதனால் தான் இப்போது முதலில் அண்ணனை சாகடிக்க தயாராகிவிட்டான் இதை எப்படியாவது தடுத்து நிறுத்தனும்.. அண்ணனை காப்பாற்ற வேண்டும் அண்ணா என்று தீனாவும் சொல்லிவிட்டு தனது முழு பலத்தோடு நின்றான் ...

சந்திரனும் தீனாவும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தனது அண்ணனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு சண்டைக்கு தயாரானார்கள் இருவரும்...

தென்னை மட்டையும்
மண் வெட்டியும் பரந்தாமனை சுற்றி வந்தது ... அப்போது பரந்தாமன் முடிவு செய்தான் எப்படியாவது இங்கிருந்து நாம் தப்பித்து .. ஓடிவிட வேண்டும் சங்கரும் ரேகாவும் நம்மை அடித்துவிட்டு.. அடுத்ததாக தம்பிகளை அடிப்பார்கள்
அந்த சமயத்தில் இங்கிருந்து எப்படியாவது நாம் ஓடிவிட வேண்டும் என்று முடிவு செய்தான் பரந்தாமன்...

திடீரென்று சங்கரும் ரேகாவும் பரந்தாமனை அடிக்கத் தொடங்கினார்கள்... தென்னை மட்டையை திருப்பிக்கொண்டு அடிபகத்தில் பரந்தாமனை வெளுத்து வாங்கினான் சங்கர்

மண்வெட்டியை திருப்பிக்கொண்டு பரந்தாமனை அடி அடி என அடித்தாள் ரேகா...

அப்போது சந்திரனும் தீனாவும் ஓடி வந்து பரந்தாமனை கட்டியணைத்து கொண்டார்கள் ... பரந்தாமன் மீது அடி விழாதபடி அவனை சூழ்ந்து கொண்டார்கள் ..

சங்கரும் ரேகாவும் தீனாவையும் சந்திரனையும் பிடித்து தூரத்தில் வீசினார்கள்... அவர்கள் இருவரும் அருகிலிருந்த சேற்றில் போய் விழுந்தார்கள்..

மறுபடியும் பரந்தாமனை அடித்தார்கள் ...
ரேகா மண்வெட்டியால் பரந்தாமனின் முட்டி மீது அடித்தாள் அப்போது பரந்தாமன் வளியால் துடித்து கத்தி அழுதான்..

தனது அண்ணன் வலியால் துடிப்பதை பார்த்த சந்திரனும் தீனாவும் சேற்றிலிருந்து ஓடிவந்து.. சந்திரன் மண்வெட்டியை பிடித்துக்கொண்டான்
தீனா தென்னை மட்டையை பிடித்துக்கொண்டான் அப்போது சங்கரும் ரேகாவும் அவர்களை ராட்டினம் சுற்றுவதைப் போல சுற்றினார்கள் ...

அப்போதுகூட தீனா தென்னை மட்டையை விடாமல் பிடித்துக்கொண்டு ராட்டினம் போல சுற்றினான் சந்திரனும் மண்வெட்டியை பிடித்துக்கொண்டு ராட்டினம் போல சுற்றினான் ..
பிறகு அவர்களை மறுபடியும் சேற்றில் வீசினார்கள் சங்கரும் ரேகாவும்...

மூவரும் வலியால் துடித்தார்கள் அதே சமயத்தில் மழை பொழிய தொடங்கியது..

பலத்த மழையில் மூவரும் வலியால் துடித்து அழுதார்கள் ...
அப்போது சங்கரும் ரேகாவும் தனது கொடூரமான உருவத்தை காட்டினார்கள்...

உடம்பு முழுக்க முடிகள் சூழ்ந்திருந்த நிலையில் சங்கர் சிவப்புநிற கண்களுடன் ரத்தக்கரை பற்களுடன் பரந்தாமனை முறைத்தபடி நின்றான்..


ரேகா வெள்ளைநிற முகத்தோடு வெள்ளை நிற தலைமுடி யோடு பூனையின் கண்கள் போல
கருப்பு நிற பற்களோடு சிரித்தபடி பயங்கரமாக சங்கரின் பக்கத்தில் நின்றாள்..

இப்படி கொடூரமான உருவத்தை பார்த்த பண்ணையார் மகன்கள் பயத்தில் கண்களை மூடிக் கொண்டார்கள்..

அப்போது சங்கர் ஆக்ரோஷமான குரலில் சொன்னான்...

எங்களை சாகடித்தது கூட இந்த ஊருக்கு தெரியாமல் மறைத்து விட்டீர்களே பாவிங்களா ...
நாங்க என்ன தவறு செய்தோம் இப்படி எங்களை அநியாயமாக சாகடித்து விட்டீர்களே...
இனியும் உங்களை உயிரோடு விட்டால் இந்த ஊர் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது... அதனால் உங்களை இன்னைக்கு கொஞ்சம் கொஞ்சமாக துடி துடிக்க சாக அடிக்க போறேன் டா என்று ஆக்ரோஷமாக சொன்னான் சங்கர்...

ரேகா தனது கருப்பு நிற பற்களை காட்டியபடியே பேசினாள்..

உங்களை நாங்கள் நினைத்தால் ஒரே நிமிடத்தில் சாகடித்து விடுவோம் ....
அப்படி செய்தால் நீங்கள் நிம்மதியாக போய் சேர்ந்து விடுவீர்கள் ஆனால் உங்களை அப்படி சாகடிக்க கூடாது ...
உங்களை அணுவணுவாக துடிதுடிக்க அடித்தே சாகடிக்க வேண்டும் .. அதனால்தான் உங்களை தென்னை மட்டையலும் மண்வெட்டியலும் .. கொஞ்சம் கொஞ்சமாக அடித்துக் கொண்டிருக்கிறோம்
உங்களின் எல்லாம் ரத்தமும் வெளியே வரும்வரை உங்களை காயப்படுத்தி சாகடிக்க வேண்டும் என்று சொல்லிகொண்டே ஆக்ரோஷமாக சிரித்தாள் ரேகா...


மறுபடியும் சங்கரும் ரேகாவும் பரந்தாமனை அடிக்க ஆரம்பித்தார்கள்..

சந்திரனும் தீனாவும் மறுபடியும் பரந்தாமனை காப்பாற்ற முயன்றார்கள்...

அப்போது சங்கர் மூவரையும் வெளுத்து வாங்கினான்...


பரந்தாமனை அடிப்பதை விடாமல் தடுத்துக் கொண்டிருந்த சந்திரனையும் தீனாவையும் பார்த்த சங்கர் ஆக்ரோஷமான குரலில் சொன்னான்..

உங்கள் அண்ணனை பத்தின உண்மை தெரிந்தால் நீங்கள் உங்க அண்ணனை காப்பாற்ற மாட்டீங்கடா பாவிகளா என்று சந்திரன் இடமும் தீனாவிடம் சொன்னான் சங்கர்...


என் அண்ணன் ஆயிரம் தவறு செய்யட்டும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை
நீ சரியானவனாக இருந்தாள் எங்களை சாகடித்து விட்டு..
அதுக்கு அப்புறம் என் அண்ணனை அடி என்று வெறித்தனமாக சொன்னான் சந்திரன்...

சந்திரனின் துணிச்சலான பேச்சைக் கேட்டதும் ..சங்கருக்கும் ரேகாவுக்கும் கோபம் அதிகமானது உடனே பரந்தாமனை விட்டுவிட்டு சந்திரனையும் தீனாவையும் வெளுத்து வாங்கினார்கள்...

மழை விடாமல் வேகமாக பொழிந்தது இடி விடாமல் இடித்துக்கொண்டே இருந்தது...


சங்கரும் ரேகாவும் விடாமல் சந்திரனையும் தீனாவையும் அடித்துக்கொண்டு இருந்தார்கள் ஒருகட்டத்தில் சந்திரனும் தீனாவும் வாய்விட்டு அழுதார்கள் வலி தாங்க முடியாமல்...


உடனே பரந்தாமன் எழுந்து தனது வேட்டியை சரி செய்துகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்..

இதுதான் சரியான சமயம் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து ஓடி விடலாம் என்று முடிவு செய்துகொண்டு பரந்தாமன் வீட்டுக்கு ஓடினான்..


விடாமல் சந்திரனையும் தீணாவையும் அடித்துக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு சங்கர் ஆக்ரோஷமான குரலில் சொன்னான்..

உன் அண்ணனை அடிக்கும்போது நீங்கள் வந்து தடுத்திங்க
ஆனால் உங்களை அடிக்கும் போது உன் அண்ணன் உங்களை விட்டு விட்டு ஓடிவிட்டான் பார்த்திஙகளா இதுதான் உன் அண்ணனின் குணம்
இது தெரியாமல் அவனை நீங்கள் நம்பிக் கொண்டு இருந்தீங்க அதனால்தான் இத்தனை பிரச்சனைகளும் வளர காரணம் என்று சங்கர் கரகரப்பான குரலில் சொன்னான்..

முகமெல்லாம் இரத்தக் கறையோடு தீனா சிரித்துக் கொண்டே சொன்னான்..
என் அண்ணன் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் துடித்தோம் ...
அது இப்போது நடந்து விட்டது இனிமேல் நீ எங்களை என்ன வேணாலும் செய்துக்கொள் சங்கர் ...என்று சிரித்தபடியே சொன்னான் தீனா...

இவ்வளவு சொல்லியும் நீங்கள் திறந்த வில்லையா ..
என்று சொல்லிக்கொண்டு சங்கர் மறுபடியும் கோபத்தோடு சந்திரனையும் தீணாவையும் வெலுத்து வாங்கினான்...


ரேகா.. தீனாவின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று கிணற்றின் தடுப்பு சுவர் மீது இடித்தாள்..
அப்போது துடிதுடித்தான் தீனா உடனே ரேகா சிரித்துக்கொண்டே சொன்னாள்..
உன் அண்ணன் இங்கிருந்து ஒடி விட்டான் என்று நினைக்காதே அவனை எப்படி இங்கு வர வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் அண்ணன் இங்கு ஓடி வர போறான் பாருங்கள் என்று சொல்லிவிட்டு
கருப்பு நிற பற்களுடன் சிரித்தாள் ரேகா...

அண்ணன் மறுபடியும் இங்கு வருவாரா .....என்று நினைத்து சந்திரனும் தீனாவும் குழப்பத்தோடு பார்த்தார்கள்..


உடனே ரேகா பம்புசெட்டின்🏠🏡 மற்றொரு அறையான பண்ணையாரின் மனைவி பூஜையறையின் மேற்கூரையை தீயிட்டு 🔥எரித்தால்..


எப்படியோ ..தப்பித்து விட்டோம் தம்பிகளுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை ...
என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிக்கொண்டிருந்த பரந்தாமனுக்கு அவனது தாய் படம் இருக்கும் பூஜை அறை ஏறியும் வெளிச்சம் அவன் முன்னால் தெரிந்தது..

ஓடுவதை நிறுத்திவிட்டு பின்னால் திரும்பிப் பார்த்தான்... அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது..

பணத்தை மறைத்து வைத்திருக்கும் அறை எரிகிறதே என்ற எண்ணத்தில் அவன் உள்ளம் சுக்கு நூறாக வெடித்து.. இத்தனை நாளாக யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைத்த பணம் எரிந்து வீணாகி விடுமோ என்ற எண்ணத்தில்.. உடனே ஓடி எப்படியாவது பணத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்து திரும்பி பம்புசெட்டை நோக்கி ஓடிவந்தான் பரந்தாமன்...

பரந்தாமன் ஓடி வருவதை..
இடி மின்னல் வெளிச்சத்தில் பார்த்த சந்திரனும் தீனாவும் அதிர்ச்சியானார்கள்...

அண்ணே இங்கு வராதீங்க... போயிடுங்க ...எங்களுக்கு எதுவும் ஆகல நீங்க ஓடிடுங்க என்று சந்திரனும் தினாவும் கத்தினார்கள் பரந்தாமனை பார்த்து...

ஐயோ என் பணம் ...
ஐயோ என் பணம் ..
எரிய போகுதே என்று முனகியபடியே பம்புசெட்டை நோக்கி ஓடிவந்தான் பரந்தாமன்...

அப்போது சங்கரும் ரேகாவும் சிரித்தார்கள்...

பூஜை அறையின் மேலே எரிந்திருந்த தீ மெல்ல மெல்ல உள்ளே பரவியது..

பதட்டமாக ஓடிவந்த பரந்தாமன் பம்பு செட்டின் அருகில் வந்து நின்றான் ...அப்போது சங்கரும் ரேகாவும் சிரித்துக் கொண்டிருக்கும் சத்தம் அவனுக்கு பயத்தை உருவாக்கியது ...
அப்போது அவனது தம்பிகள் இருவரும் சொன்னார்கள்..
அண்ணே மறுபடியும் எதுக்கு வந்தீங்க எங்களுக்கு ஒன்னும் நடக்காது நீங்கள் பயப்படாமல் வீட்டுக்கு ஓடிடுங்க என்று பதட்டத்தோடு சொன்னார்கள்...

தம்பிகளின் பேச்சை காதில் வாங்காமல் ...பணம் இருக்கும் அறையை பார்த்தபடியே பரந்தாமன் ...பணம் ..பணம் என்று புலம்பிக் கொண்டு இருந்தவன் ..திடீர் என்று தலையில் அடித்துக்கொண்டு
என் பணம் ஏறிய போகுதே ...
என் பணம் ஏறிய போகுதே... அய்யோ நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லையே ...
என்று சொல்லிக்கொண்டே தலையில் அடித்துக்கொண்டு அழுதான்...


பரந்தாமனின் பேச்சு சந்திரனுக்கும் தீனாவுக்கும் குழப்பமாக இருந்தது ...
பணம் ஏறிய போகுதா ...
எங்கு இருக்கு பணம் என்று குழம்பினார்கள்...

தீ வேகமாக பரவுவதை பார்த்த பரந்தாமனுக்கு ..
தனது உயிரை விட பணம்தான் முக்கியம் என்று நினைத்து பூஜை அறைக்கு ஓடினான்...
என் பணம் ...
என் பணம் ...
என் பணம் .. என்று கத்திக்கொண்டே..

சந்திரனும் தீனாவும் வலியால் துடித்துக்கொண்டே.. படுத்தபடியே பரந்தாமனின் செயலைப் பார்த்து மிரண்டு போனார்கள் ...அண்ணன் பணம் பணம் என்று சொல்லிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் பூஜை அறைக்கு உள்ளே சென்று விட்டாரே என்ற குழப்பத்தோடு அழுதார்கள்....

ஓடிப்போன உன் அண்ணன் திரும்பவும் இங்கேயே வந்து விட்டான் பார்த்தீர்களா...
என்று சொல்லிவிட்டு
சங்கரும் ரேகாவும் கம்பீரமாக சிரித்தார்கள்...



வேகமான புயல் காற்றிலும்..
இடி மின்னலிலும் ..
அடைமழை பொழிந்துருக்கும் நிலையில்.. சங்கரின் ரேகாவின் வன்மம் மறுபடியும் தொடங்கியது..👽😈



தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் 🎇...50 👇


சங்கர் ரேகா இருவரும் அடித்த அடியில் சந்திரனும் தீணாவும்
தனது முழுபலத்தையும் இழந்து நிற்கக்கூட முடியாமல் வலியால் துடித்துக்கொண்டு படுத்திருந்தார்கள்...

அதே சமயத்தில் பரந்தாமன் பம்பு செட்டின் அருகில் இருக்கும் பூஜை அறையை பார்த்தபடி..
என் பணம் ....
என் பணம் ....
என்று புலம்பிக்கொண்டு தன்னுடைய முழு கவனத்தையும் பூஜை அறை மீது செலுத்தினான் பரந்தாமன்...

அண்ணனின் செயலைப் பார்த்து சந்திரனும் தீனாவும் குழம்பினார்கள்..


அப்போது சங்கரும் ரேகாவும் விடாமல் ஆக்ரோஷமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள் யாரையும் தாக்கவில்லை...


🏡🏠 பூஜை அறை மீது எரிந்த தீ மெல்ல மெல்ல பரவத்தொடங்கியது இதைப்பார்த்த பரந்தாமனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பித்துபிடித்தவன்போல இங்கும் அங்குமாக ஓடினான்...
என் பணம் ...
என் பணம் ....
என்று சொல்லிக்கொண்டே

ஒரு கட்டத்தில் அவனால் பொறுக்க முடியவில்லை...
இன்னும் சிறிது நேரத்தில் நம் பணம் எரிந்து சாம்பலாக போகிறது என்பதை உணர்ந்த பரந்தாமன்
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் எரிந்திருக்கும் பூஜை அறைக்குள் ஓடினான்...பணம்.... பணம் என்று கத்திக்கொண்டே...


இதைப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரனும் தீனாவும் என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப் போனார்கள்...

அண்ணா வெளியே வந்துவிடுங்கள். இது சங்கரோட சூழ்ச்சி அதனால் பூஜை அறை உள்ளே இருக்காதீங்க வெளிய வாங்க அண்ணா என்று கத்திக்கொண்டே வலியால் தரையில் படுத்தபடி துடித்தார்கள்..


பூஜை அறைக்கு சென்ற பரந்தாமன் சிறிது நேரத்தில் இரண்டு கோணிப்பை நிறைய பணத்தை போட்டு கொண்டு
தோல் மீது ஒரு முட்டையும் மற்றொரு மூட்டையை கையால் இழித்துக்கொண்டு வெளியே வந்து நின்றான்..


சந்திரனுக்கும் தீனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.... இத்தனை நாளா பூஜையறையில் இந்த இரண்டு மூட்டைகளும் எங்கு இருந்தது ...
அண்ணன் எதற்காக இந்த இரண்டு மூட்டைகளையும் தன் உயிரை பணயம் வைத்து எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்ற சந்தேகத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்தார்கள்..

பரந்தாமனின் கவனமெல்லாம் இங்கிருந்து எப்படியாவது இந்தப் பணத்தை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவன் மனதில் நிரம்பி இருந்தது அப்போது அவன் சந்திரனையும் தீனாவையும் சிறிதும் கவனிக்கவில்லை .. மெதுவாக தள்ளாடியபடி வீட்டுக்கு செல்ல முயன்றான்..

அப்போது அமைதியாக பரந்தாமனின் முன்னால் சங்கரும் ரேகாவும் தனது கொடூரமான உருவத்தை காட்டியபடி அமைதியாக முறைத்தபடி நின்றார்கள்..

உடல் முழுக்க முடியுடனும் ரத்தக்கரை படிந்த பற்களுடன் சிவப்பு நிற கண்களுடன் முறைத்தபடி நின்றான் சங்கர்..

வெள்ளை நிற முகத்துடன் கருப்பு நிற பற்களுடன் தெளிவான கருப்பு நிற கண்களுடன் வெள்ளை நிற நைட்டி அணிந்தபடி சிரித்துக்கொண்டு நின்றாள் ரேகா ..
புயல் காத்து வீசிக்கொண்டிருந்தால் ரேகாவின் வெள்ளைநிற தலைமுடி பறந்துகொண்டிருந்தது அப்போது அவளின் தோற்றம் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது ....

இதை கவனித்த பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் மறுபடியும் மரண பீதி ஏற்பட்டது...


பரந்தாமன் பயத்தோடு வீட்டுக்குச் செல்ல முயன்றான் ..
அப்போது சங்கரும் ரேகாவும் பரந்தாமனை அடிக்க ஆரம்பித்தார்கள்..


சங்கரும் ரேகாவும்... பரந்தாமனை அடித்த அடியில் தோல் மீது இருந்த பணம் மூட்டை கீழே விழுந்தது ... அதிலிருந்த பணக்கட்டுகள் சிதறியது அப்போது சந்திரனின் தங்கச் சங்கிலியும் தீனாவின் தங்கச் சங்கிலியும் வெளியே வந்து விழுந்தது ...
இதைப் பார்த்த சந்திரனும் தீனாவும் பெரும் அதிர்ச்சியோடு கண்ணிமைக்காமல் பார்த்தார்கள்...

அண்ணன் நமக்கு தெரியாமலே இவ்வளவு பணத்தை சேர்த்து வைத்திருக்கிறாரே..
விவசாயம் செய்வதற்கு பணம் இல்லை என்பதற்காக
நம்முடைய தங்கச் சங்கிலியை விற்று விவசாயம் செய்ய வேண்டும் என்று சொல்லி வாங்கினார் ஆனால் அதையும் மறைத்து வைத்திருக்கிறாரே அண்ணன் நமக்கு தெரியாமலே நிறைய விஷயத்தை செய்திருக்கிறார் என்று சந்திரனும் தீனாவும் புரிந்துகொண்டு சோகத்தில் அழுதார்கள்....

பரந்தாமனை வெறித் தனத்தோடு சங்கர் அடிக்க ஆரம்பித்தான் அப்போது பரந்தாமன் வலியால் துடித்தபடி கத்தினான்...

இதைப் பார்த்து இருந்த சந்திரனும் தீனாவும் தனது முழு பலத்தை பயன்படுத்தி எழுந்திருக்க முயற்சி செய்தார்கள் ...
ஒருகட்டத்தில் இருவரும் ஓடிவந்து பரந்தாமனை கட்டியணைத்து கொண்டார்கள்..
சங்கர் என் அண்ணனை விட்டு விடு என்று சொல்லிக்கொண்டே பரந்தாமனை கட்டியணைத்தபடி மறைத்துக் கொண்டார்கள்..

அப்போது சங்கர் சந்திரனின் தலைமுடியை பிடித்தபடி சொன்னாள் ...உன் அண்ணனை பற்றி தெரிந்த பிறகும் எதற்காகடா அவனை காப்பாத்துரிங்க என்று ஆக்ரோஷமான குரலில் கேட்டான் சங்கர்..

இந்த உயிர் என் அண்ணன் கொடுத்தது அவர் இல்லை என்றால் இன்று நாங்கள் இல்லை அவர் எந்த தவறு செய்தாலும் பரவாயில்லை நீ
சரியானவனாக இருந்தால் முதலில் எங்களுடன் மோதிப்பார் பிறகு என் அண்ணனை அடி என்று கோபத்தோடு முறைத்தபடி சொன்னான் தீனா..

சங்கருக்கு அளவில்லா கோபம் ஏற்பட்டது உடனே சந்திரனையும் தீனாவையும் இழுத்து தூரத்தில் வீசினான் பிறகு அவர்களின் முன்னால் தனது கொடூரமான உருவத்தோடு. நறநற வென பற்களைக் கடித்தபடி எதிரே நின்றான்...

தனது அண்ணனை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவோடு சங்கரின் உருவத்தை பார்த்தும் பயப்படாமல் சந்திரனும் தீனாவும் சங்கரோடு சண்டை போட தயாரானார்கள்..


உடனே சங்கர் சந்திரனையும் தீனாவையும் கடுமையாக தாக்க ஆரம்பித்தான் ...அப்போது ரேகா தீணாவின் தலைமுடியை இழுத்து வந்து கிணற்றில் தள்ளி விட முயற்சி செய்தாள்..


தீனா கிணற்றில் விழாமல் தடுப்பு சுவரை உறுதியோடு பிடித்துக்கொண்டு அண்ணா அண்ணா என்று கத்தினான் கிணற்றில் தொங்கியபடி...

உடனே சந்திரன் ஓடிவந்து தீணாவின் கைகளை உறுதியோடு பிடித்துக்கொண்டான்..
தம்பி பயப்படாதே என்று சொல்லிக்கொண்டு தீணாவை மேலே இழுக்க முயற்சி செய்தான் சந்திரன்..

சந்திரனால் தீணாவை மேலே பிடிக்க முடியவில்லை ..
அப்போது பரந்தாமனை பார்த்து சந்திரன் குரல் கொடுத்தான் அண்ணா ஓடி வாங்க தம்பி கிணற்றில் விழ போகிறான் ஓடிவாங்க என்று சந்திரன் கத்தினான் ...
ஆனால் பரந்தாமன் சந்திரனை கண்டுகொள்ளாமல் கீழே சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கோணிப்பையில் நிரப்பிக் கொண்டுருந்தான்..

பரந்தாமனின் செயலைப் பார்த்து மனம் நொந்து போனார்கள் சந்திரனும் தீனாவும் ...
பிறகு சந்திரன் தனது முழு பலத்தையும் கொண்டு தீணாவை கிணற்றில் விழாமல் பிடித்துக் கொண்டிருந்தான் ...
அப்போது சங்கர் தீனாவின் காலைப்பிடித்து தூக்கி தூரத்தில் வீசினான் ...அப்போது சந்திரன் தீனாவை உறுதியோடு பிடித்திருந்ததால் தீனாவும் சந்திரனோடு தூரத்தில் வந்து விழுந்தான்..

சங்கர் ....சந்திரனை பயங்கரமான பார்வையோடு முறைத்துப் பார்த்தான்..

சங்கரின் பயங்கரமான பார்வையை பார்த்து சந்திரன் புரிந்துகொண்டான் ...
சங்கர் நம்மை ஏதோ செய்யப்போகிறான் என்று நினைத்து பதட்டத்தோடு கீழே படுத்தபடி இருந்தான் சந்திரன்..


அப்போது கிணற்றிலிருந்து ஒரு பெரிய கல் மேலே வந்து சந்திரனின் முன்னால் நின்றது..

அந்த கல்லை பார்த்ததும் சந்திரனும் தீனாவும் பயணத்தால் நடுங்கினார்கள்..
அப்போது அவர்களுக்கு நினைவிற்கு வந்தது
இந்தக் கல் சங்கரின் தலைமீது தூக்கி போட்ட கல் என்று நினைத்துப் பார்த்தார்கள்...


அந்த பெரிய கல் சந்திரனை குறி பார்த்தபடி நின்றது ...
உடனே சங்கர் அந்தக் கல்லை தூக்கி சந்திரன் மீது வீசினான்... இதைப்பார்த்த தீனா சிறிதும் யோசிக்காமல் உடனே சந்திரன் மீது பாய்ந்து ...அவனை தள்ளி விட்டுவிட்டு அவன் படுத்துக்கொண்டான் அந்த இடத்தில்...
சங்கர் வீசிய கல் தீனாவின் இரண்டு கால்கள் மீது விழுந்தது தீனாவின் இரண்டு கால்களும் முறிந்தது அப்போது ரத்தம் சிதறியது தீனா கட்டியிருந்த வேட்டி முழுக்க ரத்தமானது தீனா வளி தாங்க முடியாமல் அமைதியாக துடித்தான் அவனால் வாய்விட்டு சத்தம் போட முடியவில்லை ...
அவன் உயிருக்கு போராடியபடி துடித்தான்...



50வது அத்தியாயத்தின் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்க்கலாம்....


தொடரும்.....
 
Top Bottom