Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed பண்ணையார் தோட்டம் மர்மம்

vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
spr ud ............thambiggaluku yellaa therinja yenna pannuvaaga..............rekava yenna panna poraga nice ud anna 🤩 🤩 🤩
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்யாயம்-...33👇


பரந்தாமனின் வெறித்தனமான பேச்சு அவன் தம்பிகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது...

கதவை திறக்காமல் சத்தம் போடாமல் ரேகா பம்புசெட்டு குள்ளே விம்மி விம்மி அழுதாள் ..
அவளுக்கு இன்று பண்ணையார் மகன் களிடமிருந்து தப்பிக்கவே முடியாது ..
நம்முடைய கணவர் வந்துதான் நம்மை காப்பாற்ற வேண்டும் அதுவரைக்கும் கதவை திறக்கக் கூடாது என்ற முடிவில் ..
ரேகா அமைதியாக இருந்தாள் அதேசமயம் அவன் உள்மனதுக்குள் இன்று ஏதோ ஒரு பெரிய விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தது அதனால் அவளுக்கு பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அழுதபடி இருந்தாள் ரேகா...

தம்பி அவளை சும்மா விடக்கூடாது நம் மூன்று பேரும் பேசியதை அவள் இவ்வளவு நேரம் ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்தாள் இவளை விட்டால் ஊருக்குள்ளே சென்று நம்முடைய எல்லா ரகசியங்களையும் சொல்லிவிடுவாள்... அதனால் அவளை இன்று கொன்றுவிட வேண்டும் என்று பரந்தாமன் வெறித்தனமாக சந்திரனையும் தீனாவையும் பார்த்து சொன்னான்..


அண்ணனின் பேச்சு மீற முடியாமல் சந்திரனும் தீனாவும் மனக் குழப்பத்தோடு கதவைத் தட்டினார்கள்..

ரேகா முதலில் கதவைத் திற ... நீ உள்ள இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும் தேவையில்லாமல் எங்களின் கோபத்தை தூண்டாதே ரேகா கதவைத் திற ...
என்று சந்திரனும் தீனாவும் கதவைத் தட்டிக் கொண்டு சொன்னார்கள்...

கதவை வேகமாக தட்டியதால் ரேகாவுக்கு பயம் மேலும் அதிகமானது . உடனே சற்று தகிரியமானவள் போல ரேகா சிறிது நேரம் அழுகாமல் பண்ணையார் மகன்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள்..

இத பாருங்க ...என்னை விட்டுடுங்க இல்லன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல என் கணவர் வந்துடுவாரு அதுக்கப்புறம் . உங்க மூணு பேரையும் என் கணவர் சும்மா விட மாட்டார் மரியாதையா இங்கிருந்து போய் விடுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது இல்லன்னா தேவையில்லாம நீங்க மூணு பேரும் என் வீட்டுக்காரர் கிட்ட அடிவாங்கியே செத்து விடுவீங்க என்று சற்று பயம் இல்லாதவள் போல் ரேகா சொன்னாள்..

பாத்தியாடா தம்பி ...அவளுடைய பேச்சு இனியும் அவளை விட்டு வைக்கக்கூடாது கதவை நீங்கள் உடைக்க போகிறீர்களா இல்லை நான் உடைக்கட்டுமா என்று பரந்தாமன் கதவின் அருகில் ஆவேசத்துடன் சென்றான்..


அண்ணே நாங்களே உடைக்கிறோம் நீங்கள் கோபப்படாதீங்க என்று சொல்லிவிட்டு தீனாவும் சந்திரனும் கதவை தனது கால்களால் இருவரும் உதைத்தார்கள் அப்போது கதவு சிறிது நேரத்தில் தபால் உடைந்து திறந்துகொண்டது..


சங்கர் சிறிது சோர்வாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான் வேகமாக..

இன்று எப்படியாவது மலை கிராமத்திற்கு சென்று கனகாவை பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... ஆனால் இன்று நமக்கு நேரம் சரியாக அமையவில்லை தேன் வியாபாரம் முழுமையாக நடந்திருந்தால் அவர்களோடு மலை கிராமத்திற்கு சென்று இருக்கலாம் ஆனால் பாதிப் பேரின் வியாபாரம் சரியாக நடக்கவில்லை
அதனால் இன்று நாம் கனகாவை சந்திக்க முடியவில்லை பரவாயில்லை இன்று இல்லை என்றால் நாளைக்கு நிச்சயம் கனகாவை சந்தித்து நம்முடைய ஊருக்கு அழைத்து வந்து எல்லோரையும் சந்தோஷப்படுத்தலாம் என்று நினைத்துக்கொண்டு சங்கர் ரேகாவுக்கு மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு வேகமாக நடந்து வந்தான் சங்கர்...


கதவுத் திறந்ததும் சந்திரனும் தீனாவும் ரேகாவை பிடித்துக்கொண்டார்கள்...
ஆளுக்கு ஒரு கையை..

சந்திரனும் தீனாவும் ரேகாவை பிடித்துக் கொண்டிருக்கும்போது பரந்தாமன் ரேகாவை கொலைவெறியோடு பார்த்தான்.

பரந்தாமனின் பார்வை ரேகாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது..
குழந்தை போல இருந்தவர் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறாரே என்று நினைத்து ரேகாவுக்கு பயம் உச்சத்திற்கே சென்றது .. அவளால் அழுகாமல் இருக்க முடியவில்லை உடனே வாய்விட்டு கத்தி அழுதாள் .. என்னை விட்டு விடுங்கள் நான் என்ன பாவம் செய்தேன் என்னை விட்டு விடுங்கள் என்று கையை விம்பினாள் .. ஆனால் சந்திரனும் தீனாவும் ரேகாவின் கைகளை கெட்டியாக பிடித்திருந்தார்கள்...

ரேகா அழுதபடி சந்திரனையும் தீனாவையும் பார்த்து கெஞ்சினாள்..

அண்ணா என்னை விட்டுடுங்க நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன் ... நானும் என் கணவரும் உங்களுக்கு நல்லது செய்ய தானே இங்கு வந்தோம் இப்படி என்னை எதற்காக சித்திரவதை செய்யறீங்க ..
என்னை விட்டுடுங்க அண்ணா நான் உங்களைப் பற்றி ஊருக்குள்ளே எதையுமே சொல்ல மாட்டேன் அண்ணா ..
என்னை விட்டுடுங்க அண்ணா என்று அழுதபடி கேட்டாள்..

ரேகாவின் அழுகையும் செஞ்சலும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் பெரும் கவலையாக இருந்தது ..
உடனே இருவரும் ரேகாவின் வார்த்தைக்கு பதில் சொல்லாமல் பரந்தாமனை பார்த்தார்கள்...
பாவம் ரேகா விட்டுவிடலாம் அண்ணா என்பது போல அவர்களின் முக பாவம் இருந்தது..

அண்ணா இவள் ஊருக்குள்ளே நம்மைப் பற்றி எதையும் சொல்ல மாட்டாள் ..இவளை விட்டுவிடலாமா என்று சந்திரன் சொல்லும்போது பரந்தாமன் முகத்தில் கோபம் பொங்கியது..

என்ன தம்பி சொல்ற ...
இவளை இன்று விட்டு வட்டாள் எல்லாம் சரியாகிவிடுமா ...
கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருப்பாள் பிறகு நம்முடைய ரகசியத்தை இந்த ஊருக்கு சொல்லிவிடுவாள் ..இது தேவையா நமக்கு இவளை இன்று கொன்றுவிட வேண்டும் அப்போதுதான் நம்முடைய ரகசியங்கள் வெளியில் தெரியாது சங்கர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து நம்முடைய ரகசியங்களை உடைக்கும் போது நம்முடைய வாழ்க்கையை பற்றி அப்போது யோசிக்கலாம் ..
ஆனால் அதற்கு முன்னாடியே நம்முடைய ரகசியங்கள் யாருக்கும் தெரியக்கூடாது தம்பி.. அதனால்தான் இவளை கொன்றுவிட வேண்டும் என்று சொல்கிறேன் என்று பரந்தாமன் சொன்னான்..

ரேகாவுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது பரந்தாமனின் பேச்சில்...

நம்மை இவர்கள் கொள்ளப் போகிறார்களா என்ற மரண பயம் ரேகாவுக்கு ஏற்பட்டது அப்போது அவள் மனம் சங்கரை நினைத்தது..

மாமா உன்னை விட்டு போகப்போகிறேன் ..இனி உன்னை நான் பார்க்க முடியாதா மாமா.. என்னை பிரிந்து நீ எப்படி இருக்க போகிறே மாமா ..என்று அவள் மனம் வேதனையில் துடித்தது..

ஐயா உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் என்னை விட்டு விடுங்கள் .. என்னை பிரிந்து ஒருநள் கூட என் மாமா இருக்க மாட்டார் எங்களை வாழ விடுங்கள் நாங்கள் எங்கேயாவது ஓடி விடுகிறோம் எங்களை விட்டு விடுங்கள் ஐயா என்று கதறிக் கதறி அழுதபடியே கேட்டாள் ரேகா..


நம்முடைய விவசாய நிலங்களை பசுமையாக மாற்றியது சங்கரும் ரேகாவும் .. இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட ரேகாவை எப்படி கொள்வது என்ற தயக்கத்தில் சந்திரனும் தீனாவும் குழப்பத்தோடு நின்றார்கள்...

தம்பி இவள் எதையாவது சொல்லி நம்முடைய மனதை மாற்ற பார்ப்பாள் .. அதனால் இவளின் பேச்சை இனி கேட்கக்கூடாது இவளை உடனே கொன்று விடுங்கள் என்று பரந்தாமன் தம்பிகளிடம் சொன்னான்..


அப்போதும் சந்திரனும் தீனாவும் ரேகாவின் கையை பிடித்தபடி அமைதியாக மௌனமாக இருந்தார்கள்..

பரந்தாமனுக்கு மேலும் கோபம் தலைக்கேறியது .. நம் இத்தனை முறை சொல்லியும் தம்பிகள் அமைதியாக இருக்கிறார்கள் அப்படி என்றால் அவர்களுக்கு ரேகா மீது அனுதாபம் ஏற்பட்டு விட்டது என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் தம்பிகளை பார்த்து ஆவேசமாக சொன்னான்...

தம்பி இப்போது நீங்கள் ரேகாவை கொலை செய்யவில்லை என்றாள் உன் அண்ணனை நீங்கள் உயிரோடு பார்க்க முடியாது உங்களுக்கு நான் உயிரோடு வேண்டுமென்றால் இவளை இப்போது இங்கு கொன்றுவடுங்கள் இல்லையென்றால் நாளைக்கு என்னை நீங்கள் உயிரோடு பார்க்க முடியாது என்று பரந்தாமன் வெறிபிடித்தவன் போல தம்பிகளிடம் சொன்னான்...

பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் தீனா சட்டென்று ரேகாவின் கைகளை விட்டு விட்டான் உடனே சந்திரன் தீனா விட்ட ரேகாவின் கையை பிடித்துக்கொண்டான்..

சந்திரன் ரேகாவின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டிருக்கும்போது ..
ரேகா அவன் முகத்தை பார்த்து அண்ணா என்னை விட்டுடு அண்ணா என்று கெஞ்சினாள் அவளின் அழுகையும் கெஞ்சலும் சந்திரனால் பார்க்க முடியவில்லை அப்போது அவன் மனம் நொந்து போனது ரேகாவின் முகத்தை பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டான்..

சிறுவயதிலிருந்து உங்களை என் முதுகில் சுமந்து வளர்த்தேன் நாளைக்கு நீங்கள் எனக்கு கொல்லி வையுங்கள் என்று பரந்தாமன்..

அப்போது பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் தீனா சிறிதும் தயங்காமல் பம்புசெட்டு குள்ளே இருந்த கடப்பாறயை எடுத்து ரேகாவின் முதுகில் குத்தினான்..

ரேகாவின் கைகளைப் பிடித்தபடி சந்திரன் கண்களை மூடிக் கொண்டு இருக்கும்பது . ரேகா அவன் முகத்தை பார்த்து கெஞ்சிக் கொண்டிருக்கும் போது ..
கடப்பாரை ரேகாவின் முதுகில் குத்தி வயிற்றுப் பகுதியில் வந்தது அப்போது சந்திரன் முகத்தை பார்த்து அழுது கொண்டிருந்த ரேகாவின் வார்த்தை சிக்கியது...

உடனே சந்திரன் கண் திறந்து பார்த்தான் அப்போது தீனா ரேகாவின் முதுகில் கடப்பாரை குத்தி வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியே வந்து இருப்பதை பார்த்து சந்திரன் வாயடைத்துப் போனான்..

அதிர்ச்சியில் ரேகாவின் கைகளை விட்டுவிட்டான் சந்திரன்..

தீனா குத்திய கடப்பாரையை பிடுங்கினான் ...

அப்போது ரேகா கடைசி நினைவில் சங்கரை நினைத்துப்பார்த்தால் மாமா என்னை மன்னித்துவிடு
நான் உன்னிடம் சொல்லாமலே போகிறேன் என்று அவள் மனம் சங்கரை நினைத்து ஏங்கியது அப்போது ரேகா மயங்கி கீழே விழுந்தாள் ..
அவள் கை பட்டு .. 🦀 நண்டு குழம்பு கீழே கொட்டியது .. அந்த நண்டு குழம்பில் ரேகா துடிதுடித்துக் கொண்டு புரண்டாள் ..
நண்டு குழம்பும் ரேகாவின் ரத்தமும் ஒன்றாய் கலந்தது ...
அப்போது சந்திரன் தீனா பரந்தாமன் மூவரும் ரேகா துடிதுடிப்பதை பார்த்தார்கள்...

சந்திரனும் தீனாவும் வாய்விட்டு அழுதார்கள்.. ரேகாவை கொன்று விட்டோமே என்று நினைத்து..

பரந்தாமனின் மனம் பழைய நிலைமைக்கு திரும்பியது ..
ரேகா துடிதுடிப்பதை பார்த்ததும் அவனுக்கு பயம் அதிகரித்தது
முதல் முறை ஒரு கொலை செய்துவிட்டோமே என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது ..
அதேசமயம் சந்திரனும் தீனாவும் கதறிக் கதறி அழுவதை பார்த்ததும் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாய் நின்றான் பரந்தாமன்..

குடிபோதையில் செய்த தவறுக்கு இப்போது நல்லவர்களை கொலை செய்துவிட்டோமே அண்ணா என்று சந்திரனும் தீனாவும் சொல்லி அழுதார்கள்..

அப்போது பரந்தாமன் யோசிக்க ஆரம்பித்தான் ...
இன்னும் சிறிது நேரத்தில் சங்கர் வந்து விடுவான் அவன் வருவதற்குள் ரேகாவை தூக்கிச்சென்று கரும்பு தோட்டத்தில் புதைத்து விடலாம் என்று முடிவு செய்துகொண்டு உடனே தம்பிகளிடம் சொன்னான்..

தம்பி ஏதோ தெரியாமல் கொலை செய்து விட்டோம் ..
இன்னும் கொஞ்ச நேரத்தில் சங்கர் வந்துவிடுவான் அவன் வருவதற்குள் ரேகாவை தூக்கிச்சென்று கரும்புத் தோட்டத்தில் புதைத்து விடலாம்...

சங்கர் வந்து ரேகா எங்கே என்று கேட்டாள் . அவள் ஊருக்குள்ளே சென்றிருக்கிறாள் நாங்கள் வரும்போது அவள் இங்கு இல்லை என்று சொல்லிவிடலாம் ..
என்று தம்பிகளிடம் சொன்னான் பரந்தாமன் ..

உடனே சந்திரனும் தீனாவும் சங்கர் வருவதற்குள் ரேகாவை புதைத்து விட வேண்டும் என்று எண்ணி சந்திரன் பம்பு செட்டுக்கு உள்ளே சென்று மண்வெட்டியை எடுத்துக் கொண்டான் ...

தீனா பம்பு செட்டுக்குள்ளே சென்று ரேகாவை தூக்கி தனது தோளின் மீது போட்டுக் கொண்டு மூவரும் கரும்புத் தோட்டத்தை நோக்கி சென்றார்கள்...

பதட்டமாக பரந்தாமன் முன்னே செல்ல ...
சந்திரன் மண் வெட்டியோடு பின்னால் செல்ல ...
ரேகாவை தோள்மீது தூக்கிக்கொண்டு தீனா பின்னால் செல்ல .. மூவரும் பதட்டமாக நடந்து செல்லும்போது திடீரென்று பரந்தாமன் சிலைபோல நின்றுவிட்டான்..

எதிரில் சங்கர் வேகமாக நடந்து வருவதை பார்த்து பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் அதிர்ச்சியில் அப்படியே நின்றார்கள் ...இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் மரண பீதியில் சிலைபோல நின்றார்கள்..

ரேகாவை தோளில் சுமந்து கொண்டு நின்றிருக்கும் தீனாவுக்கு சங்கரை சற்று தூரத்தில் பார்த்ததும் நமக்கு இன்று மரணம் நிச்சயம் என்று அவன் உள் மனசு சொன்னது...



பண்ணையார் மகன்கள் சங்கரிடம் தப்பித்தார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்...



தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
111
Reaction score
52
Points
28
spr ud ............thambiggaluku yellaa therinja yenna pannuvaaga..............rekava yenna panna poraga nice ud anna 🤩 🤩 🤩
உங்கள் கருத்தை கேட்க காத்திருக்கிறேன்
நன்றி...vaishnaviselvam
 

vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
unexpected reka death so sad 🤧 :( ..............reka unmaiya solliduva sankar vanthuduvaanu nenacha na ippadi agiduchu:censored:
aniyathuku pandraga sankar ivagala vachu seinu:mad:...............yeppa evaga maattuvaga paranthaaman thambigala yella seiya sollittu nalla escap aaga pakkura ................
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ...34 👇


சங்கரை பார்த்ததும்.. பரந்தாமன் சந்திரன் ..தீனா மூவரும் மிரண்டு போனார்கள் . இப்போது எப்படி நம்ம தப்பிப்பது என்று மூவரும் குழம்பினார்கள் .. ரேகாவை எப்படி மறைப்பது என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டமாக தவித்தார்கள் மூவரும்..

வழக்கமான உற்சாகத்தோடு ரேகாவுக்கு மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு . சுறுசுறுப்பாக பம்புசட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான் சங்கர்..

உடனே பரந்தாமன் தனது தம்பிகளை அழைத்துக் கொண்டு மறுபடியும் பம்பு செட்டுக்கு திரும்பி வந்து விட்டார்கள் .. அப்போது பரந்தாமன் சுற்றும்முற்றும் பார்த்தான் .. பிணமாக இருக்கும் ரேகாவை என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்தோடு ஏதாவது வழி தெரிகிறதா என்று யோசித்தான் . அதே சமயத்தில் சங்கரும் இவர்களை நோக்கி அருகில் வந்து கொண்டிருந்தான்..

அப்போது தீனா என்ன செய்வது என்று தெரியாமல் அண்ணனிடம் கேட்டான்..

அண்ணே ..சங்கர் வந்துவிட்டான் ஏதாவது சொல்லுங்க
இவளை எங்கு மறைத்து வைப்பது என்று பயத்தோடு கேட்டான் தீனா..

அப்போது பரந்தாமனுக்கு அவசரத்தில் அவனால் எதையுமே சரியாக முடிவு செய்ய முடியாமல் பயத்தில் இங்குமங்கும் ஓடினான்

அப்போது அவன் . பம்பு செட்டின் அருகில் இருக்கும் கிணற்றை பார்த்து யோசித்தான் ...
உடனே தீனாவின் தோள் மீது பிணமாக இருக்கும் ரேகாவை இந்த கிணற்றில் போட்டுவிடலாம் என்று முடிவு செய்தான் பரந்தாமன்..

தம்பி ..ரேகாவை இந்த கிணற்றில் போட்டு விடு. சங்கர் வந்து கேட்டால் எதையுமே சொல்லவேண்டாம் என்று பரந்தாமன் தீணாவிடம் சொன்னான்..

உடனே சிறியதும் தாமதிக்காமல் தீனா தோள் மீது இருக்கும் ரேகாவை கிணற்றில் போட்டு விட்டான் ... ரேகா பிணமாக கிணற்றில் மிதந்த படி இருந்தாள்..

பயத்தில் பரந்தாமன் ஒரு பக்கம் தீனா ரத்தக்கறையுடன் ஒருபக்கம் சந்திரன் கையில் மண்வெட்டியுடன் ஒருபக்கம் இப்படி மூவரும் தனித்தனியாக பயத்தில் தரையைப் பார்த்தபடி நின்றார்கள்..


சந்தோஷமாக பம்பு செட்டை வந்தடைந்தான் சங்கர்...

பண்ணையார் மகன்களை பார்த்ததும் சங்கருக்கு லேசான அதிர்வு ஏற்பட்டது .. அவர்களின் திருட்டு முழி . பதட்டமாக இருப்பது இவையெல்லாம் சங்கருக்கு இலேசான பயம் ஏற்பட்டது... அப்போது தீனாவின் சட்டை முழுக்க ரத்தகரையாக இருந்ததை பார்த்த சங்கருக்கு மேலும் பயம் மெல்ல மெல்ல ஏறியது..

சங்கர் முகம் சோகத்தில் மாறியது இங்கு ஏதோ நடந்திருக்கிறது முதலில் நம்முடைய மனைவி எங்கே என்று பார்க்கலாம் என்று யோசித்தபடி பண்ணையார் மகன்களை பார்த்துக்கொண்டே பம்புசெட்டில் அறையை பார்த்தான் சங்கர்...

பம்பு செட்டின் உள்ளே பார்த்ததும் சங்கருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது ... அறை முழுக்க ரத்த கரைகள் அதோடு பாத்திரங்கள் நண்டு குழம்பு எல்லாமே கீழே கொட்டி. பம்பு செட்டின் அறையே அலங்கோலமாக இருந்ததை பார்த்த சங்கருக்கு பயம் உச்சத்திற்கே சென்றது...
நம்முடைய மனைவிக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதை நன்றாக புரிந்து கொண்டான் சங்கர் அப்போது சங்கரின் மனம் நொந்து போனது .. கைகால் உதறியதில் கையிலிருந்த மல்லிகைப்பூ தானாக ரத்த கரையில் விழுந்தது அவனால் பேசுவதற்கு கூட முடியவில்லை அந்த அளவுக்கு சோகம் அவனை சூழ்ந்து கொண்டது...

சுறுசுறுப்பாக இருந்த அவன் உடல் சில நிமிடத்தில் சோர்வாக மாறியது..

நிதானமாக பம்பு செட்டுக்குள்ள இருந்து வெளியே வந்து பண்ணையார் மகன்களை மூவரையும் பார்த்தான் சங்கர்...

இங்கே என்ன நடந்தது ...
ஏன் மனைவி எங்கே என்று நிதானமாக கேட்டான சங்கர்..

சங்கரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மூவரும் பதட்டமாக தரையைப் பார்த்தபடியே நின்றார்கள்..

மரியாதையா சொல்லிடுங்க என் மனைவி எங்கே அவளை என்ன பண்ணிங்க சொல்லிடுங்க என்று சற்று குரல் உசத்தி கேட்டான் சங்கர்..

அப்போதும் மூவரும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றார்கள்..

சங்கருக்கு .. இவர்களின் நடவடிக்கை பார்த்ததும்.. இவர்கள்தான் நம் மனைவியை ஏதோ செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான் அப்போது அவனுக்கு கோபம் மெல்ல மெல்ல ஏறியது..

இங்கே என்ன நடந்தது
என் மனைவியை என்ன
செய்திங்க டா இது தெரியாமல் நீங்கள் மூவரும் உயிரோடு இங்கிருந்து செல்ல மாட்டீங்க என்று கோபத்தில் சொல்லிக்கொண்டே சந்திரனின் கையிலிருக்கும் மண்வெட்டியை பிடுங்கி கொண்டான் சங்கர்..

அப்போதும் மூவரும் வாயை திறக்காமல சங்கரை பார்த்து பயத்தில் நடுங்கினார்கள்..

சங்கருக்கு மேலும் கோபம் அதிகமானது ... உடனே வெறி பிடித்தவன் போல பண்ணையார் மகன்களை மண்வெட்டியால் செம அடி அடித்தான் சங்கர்
பரந்தாமனும் சந்திரனும் தீனாவும் சங்கர் அடித்த அடியில் வலியால் துடித்தார்கள்..

மூவருக்கும் உடம்பெல்லாம் காயம் சங்கர் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்தான்..

அப்போது கூட அவர்கள் வாய் திறக்காமல் மூவரும் அடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்..

என் மனைவியை என்னடா பண்ணிங்க .. இது தெரியாமல் உங்களை உயிரோடு விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே மண்வெட்டியால் மூவரையும் வெறித்தனமாக அடித்தான் சங்கர்..

உடனே சங்கர் ஒரு முடிவுக்கு வந்தான்.. நம் மனைவியை இவர்கள் ஏதோ செய்துவிட்டார்கள் அதனால் இவர்களை உயிரோடு விடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டு .. பரந்தாமனை வெறியோடு பார்த்தபடி அவனை அடித்து கீழே படுக்க வைத்து மண்வெட்டியால் அவன் கழுத்தை வெட்டி விடவேண்டும் என்ற முடிவில் மண்வெட்டியை ஓங்கினான்..

அப்போது பரந்தாமன் வேண்டாம் சங்கர் வேண்டாம் என்னை கொல்லாதே என்று வாய் திறந்து அழுது கெஞ்சினான்..

சொல்லுடா சொல்லு ...
என் மனைவியை என்ன பண்ண இல்லை எனறால் உன் தலையை இப்போது தனியாக வெட்டி எடுத்து விடுவேன் .. என்று வெறித்தனமாக சொன்னான் சங்கர்..

என்னை கொல்லாதே சங்கர் என்னை விட்டுவிடு இன்று பரந்தாமன் கெஞ்சினான் ..

அப்போது சந்திரனும் தீனாவும் சங்கர் அண்ணனை ஏதோ செய்யப் போகிறான் என்று நினைத்து சங்கரை அடிக்க ஆரம்பித்தார்கள்..

உடனே சங்கர் சந்திரனையும் தீனாவையும் அடித்து விட்டு..
மறுபடியும் பரந்தாமனை இழுத்து கீழே தள்ளி அவன் தலையை வெட்டுவதற்கு மண்வெட்டியால் ஓங்கினான் ...

அப்போது இதை பார்த்த சந்திரன் என் அண்ணனை விட்டு விடு சங்கர் உன் மனைவியை இப்போதுதான் கிணற்றில் போட்டு விட்டேன் என்று கத்தினான்..

சந்திரனின் பேச்சைக் கேட்டதும் சங்கருக்கு இடி விழுந்தது போல இருந்தது .. உடனே மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு கிணற்றை எட்டிப் பார்த்தான் சங்கர் ..
அப்போது ரேகா பிணமாக மிதந்து இருப்பதை பார்த்து அவன் உள்ளம் வெடித்து சிதறியது ..
உடனே சிறிதும் தயங்காமல் சங்கர் கிணற்றில் குதித்து ரேகாவை பிடித்துக் கொண்டான்...

கிணற்றில் குதித்த சங்கர் ரேகாவை கட்டி அணைத்துக்கொண்டு ..
அவள் முகத்தைப் பார்த்து
ரேகா என்னை பாருமா ...மாமா வந்துட்டேன் என்னை பாரும என்று அழுதுகொண்டே கேட்டான்..

அப்போது ரேகாவின் வயிற்றிலிருந்து நிறைய ரத்தங்கள் வெளியேறுவதை பார்த்த சங்கருக்கு அவன் உள்ளம் சுக்குநூறாக வெடித்தது...

கிணற்றில் தத்தளித்தபடி ரேகாவை கட்டியணைத்துக் கொண்டு சங்கர் கதறி கதறி அதுதான்..

உன்னை ராணி போல வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனே கடைசியில் இந்த பாவிகள் இடம் உன்னை விட்டு விட்டேனே ..
என்னை நம்பி நீ இப்படி வீணாக போயிட்டியே ரேகா ..
இனி எந்த ஜென்மத்தில் நான் உன்னோடு வாழ போகிறேன் ரேகா.. வார்த்தைக்கு வார்த்தை மாமா.. மாமா ..என்று கூப்பிடுவியே இப்போது என்னை தனியா விட்டுட்டியே மா இனிமேல் எனக்கு யாருமா இருக்கா
இப்படி என்ன தவிக்க விட்டுடியே என்று கதறி கதறி கிணற்றில் அழுது கொண்டிருந்தான் சங்கர்..

பரந்தாமனும் சந்திரனும் தீனாவும் வலியால் புரண்டு புரண்டு துடித்தார்கள்..

அப்போது சந்திரன் பரந்தாமனை பாசத்தோடு பார்த்தான்.. நம் கண்ணெதிரே அண்ணனை கொன்று இருப்பானே சங்கர்.. எப்படியோ அண்ணனை காப்பாற்றி விட்டோம் . என்று பாசத்தோடு மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமனை பார்த்துக்கொண்டே வலியால் துடித்தான் சந்திரன்...

உன் அம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன் ரேகா ...என் அப்பா உன் மீது உயிரையே வைத்திருக்கிறாரே அவருக்கு நான் என்ன பதில் சொல்வேன் ரேகா ..
இப்படி என்னை அனாதையாக விட்டுட்டு போயிட்டியே அம்மா இனிமேல் நீ இல்லாமல் நான் எப்படி வாழப் போறேன் ரேகா .
என்று சங்கர் ரேகாவின் முகத்தோடு முகம் வைத்து கொண்டு அழுதான்..

உன்னை இந்த நிலைமைக்கு ஆக்கிய இந்த மூன்று பேரையும் நான் உயிரோடு விடமாட்டேன்
இந்த மூன்று பேரின் தலையை வெட்டி உன் காலடியில் வைக்கிறேன் ரேகா என்று ஆவேசத்துடன் கிணற்றில் சங்கர் ரேகாவை பார்த்து சொன்னான்..

சங்கரின் பேச்சைக் கேட்டதும் மேலே இருக்கும் பரந்தாமனுக்கு பயம் மேலும் அதிகரித்தது...

தம்பி சங்கர் சொன்னதை கேட்டியா நம்ம 3 பேரின் தலையை விட்டுவிடுவேன் என்று சொல்கிறான் ... அவன் மேலே வந்ததும் முதலில் என் தலையை தான் வெட்டுவான் தம்பி ...
என்று தம்பிகளிடம் பயத்தோடு சொன்னான் பரந்தாமன்..

உடனே சந்திரனும் தீனாவும் எழுந்து சங்கரை பார்த்தார்கள் ..
சங்கர் ரேகாவை தூக்கிக்கொண்டு மேலே எழுந்துவர முயற்சி செய்து கொண்டிருந்தான்..

அண்ணா ..சங்கர் இன்னும் கொஞ்ச நேரத்தில் மேலே வந்து விடுவான்.. நம்ம வீட்டுக்கு ஓடிவிடலாம் அண்ணா என்று தீனா பரந்தாமனிடம் சொன்னான்..

நம்ம வீட்டுக்குப் போனாலும் அவன் நம்மை இன்று உயிரோடு விடமாட்டான் தம்பி என்று சொல்லிக்கொண்டே பரந்தாமன் மண்ணில் புரண்டு புரண்டு அழுதான்..

உங்க மூணு பேரையும் வெட்டி
போதச்சீட்டுதாண்டா என் மனைவியை புதைப்பேன் ..
என்று வெறியோடு சொல்லிக்கொண்டு சங்கர் தண்ணீரிலிருந்து நீந்தி வந்து படிக்கட்டை பிடித்துக்கொண்டு மேலே ஏற முயற்சி செய்து கொண்டிருந்தான்..

மறுபடியும் மூவரும் மரண பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இங்குமங்குமாக ஓடிக்கொண்டே தவித்தார்கள் ..

அண்ணே இன்னும் கொஞ்சநேரத்தில் சங்கர் மேலே வந்து நம்மை கொன்று விடுவான் இப்போது என்ன செய்வது அண்ணா என்று சந்திரன் பயத்தோடு கேட்டான்..

தம்பி எப்படியாவது அவனை கொன்று விட வேண்டும் இல்லையென்றால் அவன் நம்மை கொன்று விடுவான் ..
அதனால் அவனை நீங்கள் எப்படியாவது கொன்று விடுங்கள் தம்பி என்று அழுதபடி தம்பிகளிடம் பரந்தாமன் சொன்னான்..

எப்படி அண்ணே அவளை நாம் கொல்ல முடியும் . என்று சந்திரன் சொல்லிக்கொண்டே சங்கரை கிணற்றில் எட்டிப்பர்த்தான்..

சங்கர் மெதுவாக ரேகாவை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு படிக்கட்டாக ஏரி வந்து கொண்டிருந்தான்..

அப்போது பரந்தாமன் ஒரு பெரிய கல்லை சந்திரனிடம் காட்டினான்..

தம்பி நீங்கள் இரண்டு பேரும் இந்த கல்லை தூக்கி சங்கரின் தலை மீது போட்டு விடுங்கள் என்று பதட்டத்தோடு அவசரத்தோடு சொன்னான பரந்தாமன்..

அண்ணா மறுபடியும் கொலையா என்று சந்திரன் அதிர்ச்சியோடு கேட்டான்..

தம்பி யோசிக்க இப்போது நேரமில்லை .. சங்கர் மேலே வந்தால் முதலில் என் தலையை தான் வெட்டி எடுப்பான்
அதனால் அவனை கொன்று விடவேண்டும் என்று பரந்தாமன் சொன்னதும் ..
வேறு வழியில்லாமல் சந்திரனும் தீனாவும் அந்தப் பெரிய கல்லை தூக்கி வந்து சங்கரின் தலைமீது போட்டார்கள் ...

சங்கரின் தலை உடைந்தது...
ரேகாவை தோள்மீது சுமந்தபடியே மறுபடியும் கிணற்றில் விழுந்த சங்கர்..

சங்கரின் இதயம் வேகமாக துடித்தது ...அப்போதும் சங்கர் ரேகாவை விடாமல் கட்டி அணைத்தபடியே தண்ணீரில் மிதந்தான்..

சங்கர் கடைசி நினைவாக மேலே இருக்கும் ..பரந்தாமன் சந்திரன் தீனா மூவரையும் முறைத்துப் பார்த்தான்..

சங்கரின் தலையில் வழிந்த ரத்தம் அவன் கண்களில் .பற்களில் இறங்கியது . அப்போது சங்கரின் முகம் கொடூரமாக இருந்தது ..

வெறியோடு கண்ணிமைக்காமல் மேலே இருக்கும் பரந்தாமன் சந்திரன் தீனா மூவரையும் பார்த்தபடியே கடைசி மூச்சு இழித்து சொன்னான்..

உங்களை சும்மா விட மாட்டேன் டா என்று கத்தி சொன்னான் சங்கர்.. அதே நிமிடத்தில் அவன் உயிர் பிரிந்தது..

சங்கரின் கண்களில் . பரந்தாமன் சந்திரன் தீனா மூவரின் உருவமும் பதிந்தது..

ரத்தக் கறையுடன் இருக்கும் பற்கள் முறைத்தபடியே பார்த்திருக்கும் கண்கள் ..
இப்படி கொடூரமானா முகத்தை பார்த்ததும் பண்ணையார் மகன்களுக்கு மேலும் மரண பயம் ஏற்பட்டது..

உடனே பரந்தாமன் அருகில் இருக்கும் நீளமான கல்லை தூக்கி வந்து..
கட்டியணைத்தபடி இருக்கும் சங்கர் ரேகா மீது பொட்டான் ..
இதேபோல சந்திரனும் தீனாவும் பெரிய பெரிய கற்களை தூக்கிவந்து சங்கர் மீதும் ரேகா மீதும் போட்டார்கள் ..

இப்படி நிறைய கல் சங்கர் மீதும் ரேகா மீதும் விழுந்ததில்... மிதந்து இருந்த இருவரும்
தண்ணீருக்குள்ளே கிணற்றின் அடிபாகத்தில் கற்கள் மூடிக்கொண்டது...

தம்பி நம்ம போட்ட கற்கள் சங்கரையும் ரேகாவையும் தண்ணீரில் மூடிக் கொண்டிருக்கும் இனிமேல் அவர்களுடைய உடல் மேலே வராது ...
அதனால் பயப்பட தேவையில்லை நம்ம இப்போது பம்புசட்டில் இருக்கும் சங்கர் உடைய துணிமணிகள் ரேகாவின் துணிமணிகள் பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்து..
கரும்புத் தோட்டத்தில் புதைத்து விட வேண்டும் .. பிறகு பம்புசெட்டை சுத்தமாக கழுவி விட வேண்டும் பிறகு இங்கிருந்து நம் சென்றுவிடலாம் மற்றதை நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்ன தான் நடக்கிறது என்று

இப்படி பரந்தாமன் தம்பிகளிடம் சொல்லிவிட்டு பம்பு செட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தான் ..
சந்திரனும் தீனாவும் துணி பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கரும்புத் தோட்டத்தில் புதைத்து விட்டார்கள் ..

இப்படி ஒரு தடயமும் இல்லாமல் செய்து விட்டார்கள் மூவரும் ...

உடனே பம்புசெட்டில் இருந்து கிளம்பி விட்டார்கள் மூவரும்....



தொடரும்.....
.
 

vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
aaiioo sankar ruma :rolleyes:............inime yenna nadakku yeppadi ivaga kandu pidippaaga yaru kandu pidippaaga.😞.............ithana murder pannium ithurnthala😣
ud spr sago...........🤩🤩but one doubt hero heroin ne sethuttaaga le...........yeppadi paranthaman santhiran deena nu punishment tharuvaga ...............next epi ku waiting na
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
111
Reaction score
52
Points
28
aaiioo sankar ruma :rolleyes:............inime yenna nadakku yeppadi ivaga kandu pidippaaga yaru kandu pidippaaga.😞.............ithana murder pannium ithurnthala😣
ud spr sago...........🤩🤩but one doubt hero heroin ne sethuttaaga le...........yeppadi paranthaman santhiran deena nu punishment tharuvaga ...............next epi ku waiting na
இனிமேல் ...கதை வேற லெவல்ல போகப்போகுது ...அதனால் சில கதாபாத்திரங்களின் உயிர்களை எடுக்கவேண்டிய அவசியம் உள்ளது 🙏நன்றி..vaishnaviselvam👍🏽
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ...35 👇


பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் தனது சட்டையை கழட்டி சங்கரின் துணியோடு வைத்து புதைத்து விட்டார்கள்... ஏனென்றால் மூவரின் சட்டையும் ரத்தக்கரை பதிந்து இருந்ததால்.



.....சூரியனும் மறைந்தான்..

உங்க பிள்ளைங்க காலையில போனாங்க தோட்டத்திற்கு இன்னும் வரல ...
அப்படி என்னதான் அங்கு வேலை இருக்குதுன்னு எனக்கு தெரியல மாமா ... கல்யாண வேலை அப்படியே இருக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம உங்க பிள்ளைங்க இருக்கிறாங்க என்று பண்ணையாரிடம் சாந்தி சொன்னால்..

ஊர் மக்கள் எல்லாம் சந்திரன் திருமணத்தை பத்தி பெருமையா பேசிக்கிட்டு இருக்காங்க
ஆனா இவனுங்க கல்யாணத்த பத்தி எந்த ஒரு கவலையும் இல்லாம சுத்திக்கிட்டு வர்றாங்க நாளைக்கு திருமணத் தேதியை குறிச்சிட வேண்டும்மா இன்னைக்கு உன் கணவனிடம் இத பத்தி பேசு ...
என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்..

இப்படி இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது மோட்டார் பைக் சத்தம் கேட்டது சிறிது நேரத்தில் மூவரும் சட்டையில்லாமல் வருவதை சாந்தி கவனித்தாள்..

என்னங்க ...என்ன ஆச்சு உடம்பெல்லாம் ஒரே சேர் இருக்கு தலையெல்லாம் மன்னா இருக்கு என்னங்க ஆச்சு என்று சற்று வியப்பாக கேட்டால் சாந்தி..

காணாமல் போனவர்களை தேடப் போன சங்கர் இன்னும் வரவில்லை ... ரேகாவும் காலையில் ஊருக்குள்ளே சென்றவள் அவளும் வரவில்லை தோட்டத்தில் வேலையெல்லாம் நிறைய இருந்தது ..
அதனால் நாங்கள் மூவரும் அந்த வேலையை முடிப்பதற்கு நேரம் ஆயிடுச்சு ..
தோட்ட வேலை செய்ததில் உடம்பெல்லாம் ஒரே சேர் அதனால் சட்டையை கழட்டி போட்டுவிட்டு வந்துட்டோம் என்று பரந்தாமன் பொய் சொல்லி சாந்தியை சமாளித்தான்...

இந்த ஊரே நம்முடைய தோட்டத்தில் வேலை பாக்குறாங்க அப்படியிருந்தும் நீங்கள் வேலை செய்தது ஆச்சரியமா இருக்கு என்று சொல்லி கிண்டல் அடித்தாள் சாந்தி..

விடுமா அவனுங்க இன்னிக்குத்தான் உருப்படியா தோட்டத்துல வேலை செஞ்சு இருக்கானுங்க...
தொழிலாளியின் கஷ்டம் என்னான்னு இன்னைக்கு புரிஞ்சிருக்கும் என்று பண்ணையார் சொன்னார்...

உடனே மூவரும் திரு திருவென முழித்துக் கொண்டு வீட்டுக்குள்ளே சென்றார்கள்..

ஆளுக்கொரு பாத்ரூமில் குளித்தார்கள்..

தீனா ..தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றும் போது
அவன் உடம்பில் இருந்த சேரும் ரத்தமும் கரைந்து ஓடுவதை பார்த்து வேதனையில் துடித்தான்...

அப்போது.. கிணற்றில் சங்கர் ரேகாவின் வயிற்றில் ரத்தம் வருவதை தொட்டுப் பார்த்துவிட்டு கதறிக் கதறி அழுததை நினைத்துப்பார்த்தான் தீனா..

சிட்டுக்குருவி போல பறந்து திரிந்து. நமது தோட்டத்தில் வேலை செய்து
நமக்கும் பெருமை சேர்த்த சங்கரையும் ரேகாவும் இப்படி அநியாயமாக கொன்று விட்டோமே நம்முடைய சுயநலத்துக்காக ...
குடிபோதையில் தெரியாமல் செய்த தவறை மறைப்பதற்காக இப்போது தெரிந்தே 2 உயிர்களை கொன்று விட்டோமே என்று நினைத்து தீனா வேதனையில் துடித்தான்...

பாத்ரூம்பில் .. சந்திரனுக்கு வாய்விட்டு அழுக வேண்டும் போல இருந்தது.. ஆனால் அவனால் அப்படி செய்ய முடியவில்லை.. தேவையில்லாமல் இரண்டு உயிர்களை கொன்று விட்டோமே இனி கடவுள் கூட நம்மை மன்னிக்க மாட்டார் என்று நினைத்து மௌனமாக அழுதான்.. அப்போது அவனுக்கு சங்கரின் திருமணம் நினைவுக்கு வந்தது ...

சங்கர் ரேகாவின் கழுத்தில் தாலி கட்டியதும் உடனே எழுந்து வந்து நம்முடைய அப்பாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதை நினைத்து பார்த்தான்..
அப்பாவும் சங்கரையும்
ரேகாவையும் வாழ்த்தினார்.. ஆனால் இப்போது அவருடைய ஆசீர்வாதத்தை பொய்யாக்கி விட்டோமே என்று நினைத்து அழுதான் சந்திரன் .. இனிமேல் நம்முடைய திருமணமும் நடப்பதில் சந்தேகம்தான் இப்படி எல்லோருடைய நிம்மதியை கெடுத்து விட்டோமே என்று நினைத்து அழுதான் சந்திரன்..


பரந்தாமன் பாத்ரூமில் குளித்துக்கொண்டே யோசித்தான் ...

இன்னைக்கு எப்படியாவது பம்புசெட்டில் இருக்கும் நம்முடைய அம்மா படத்தின் பின்னால் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வரலாம் என்று நினைத்து தோட்டத்திற்கு சென்றோம்...

ஆனால் நடந்தது வேற ...

எப்படியோ சங்கரையும் ரேகாவும் கொன்று விட்டோம் ..
இனிமேல் காணாமல் போனவர்களை யாரும் தேட போகமாட்டார்கள் ..
இருந்தாலும் நாளைக்கு எப்படிப்பட்ட பிரச்சனை உருவாகப் போகிறது என்று தெரியவில்லையே ..
இதிலிருந்து எப்படி தப்பிக்க போறோம் என்று தெரியவில்லையே என்ற குழப்பத்தோடு பரந்தாமன் குளித்தான்..

அப்போது பரந்தாமனுக்கு... கிணற்றில் சங்கர் ரத்த முகத்தோடு கொடூரமாக கோபத்தோடு முறைத்து பார்த்துக்கொண்டே ..
உங்களை சும்மா விட மாட்டேன் டா என்று சொன்ன வார்த்தை பரந்தான் நினைத்துப் பார்த்து பயந்தான்...

இப்படி மூவரும் யோசித்துக்கொண்டே குளித்து முடித்துவிட்டு வந்தார்கள்...

அப்போது சாந்தி பரந்தாமனுக்கு சூடாக காபி கொடுத்தாள்...

காப்பி வேணுமா ...இல்லை சாப்பிடப் போறீங்களா என்று சிரித்த முகத்தோடு பரந்தாமனிடம் கேட்டால் சாந்தி..

எனக்கு எதுவுமே வேண்டாம் தோட்டத்தில் வேலை செய்ததில் ரொம்ப களைப்பா இருக்கு அதனால நான் தூங்க போறேன் தம்பிகளையும் தொந்தரவு பண்ணாத அவனுங்க நல்லா தூங்கட்டும் ..
மத்ததை காலையில் பேசலாம் என்று பரந்தாமன் சாந்தியிடம் சொன்னான்..

நாளைக்கு உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கு உங்க தம்பியோட திருமணத் தேதியை நாளைக்கு குறிக்க வேண்டும் அதனால் காலையில சீக்கிரமா எழுந்திரிச்சு
வேலையை பாருங்க என்று சாந்தி சொன்னான்..

ஆமாம் நாளைக்கு எனக்கு முக்கியமான வேலைதான் வரப்போகிறது என்று மனதில் நினைத்துக்கொண்டு .. பரந்தாமன் சாந்தியிடம் மவுனமாக தலையை ஆட்டினான்...


சங்கரையும் ரேகாவையும் கொலை செய்ததில் மூவருக்கும் பயத்தில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து இருந்தார்கள் ..
கண்ணை மூடினால் கொலைசெய்த ஞாபகம் தான் வந்தது மூவருக்குமே ..
இப்படி தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்..


..பொழுது விடிந்தது..🌄

🛖🏘️⛺🏠 ஊருக்குள்ளே முத்தையாவிடம் சில பேர் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தார்கள்..

அண்ணே.. பண்ணையார் ஓட மகன் சந்திரன் திருமணத்துக்குள் காணாமல் போன இரண்டு குடும்பங்களும் . சங்கர் கண்டுபிடித்துவிடுவான அண்ணே.. என்று கேட்டார் நண்பர்..

நிச்சயம் ..அப்படி தான் நடக்கும் என்றார் முத்தையா..

பண்ணையார் போலவே அவர் மகன்களும் நல்ல குணம் கொண்டவர்கள் ..
மூன்று பேருமே எப்போதுமே ஒற்றுமையாக இருக்கிறார்கள் எங்கு சென்றாலும் மூவரும் ஒன்றாக ஒரே பைக்கில் தான் செல்கிறார்கள் ..
அண்ணன் தம்பி என்றால் இவர்கள் போல தான் இருக்க வேண்டும் ..
அதுவும் பரந்தாமன் தம்பிகள் மீது வைத்திருக்கும் பாசமும் ஊர் மக்கள் மீது வைத்திருக்கும் பாசத்திலும் பண்ணையாரை மிஞ்சி விடுவார் என்று பரந்தாமனை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்கள்..

அப்போது ஊர்மக்கள் பதட்டமாக ஓடி வருவதை கவனித்தார் முத்தையா.

என்ன ஆட்சி எதுக்காக எல்லோரும் இப்படி ஓடி வராங்க என்று முத்தையா சொல்லிக்கொண்டே மெதுவாக எழுந்து நின்றார்..

கூட்டமாக ஓடிவந்து முத்தையா விடம் எல்லோரும் அழுதார்கள் தலையில் அடித்துக்கொண்டு..

ஊர் மக்கள் அழுவதை பார்த்த முத்தையாவுக்கு மனசு படபடவென அடித்தது ..
ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து விட்டது என்று நினைத்து பதட்டமாக ஊர் மக்களிடம் கேட்டார்..

என்னப்பா ஆட்சி ...எதுக்காக இப்படி எல்லோரும் அழுகிரிங்க சொல்லுங்கப்பா ..
என்று முத்தையா கேட்டார்..

அண்ணே.. நம்மா மோசம் போய்விட்டோம் அண்ணே... இனிமேல் நமக்கு விடிவு காலமே கிடையாது அண்ணே.. என்று கூட்டத்தில் ஒருவர் தலையில் அடித்துக் கொண்டு அழுதபடி சொன்னார்..

என்னப்பா சொல்ற... என்ன ஆச்சு...

அப்போது ரேகாவின் அம்மா லட்சுமி ஒடிவந்து முத்தையாவின் அருகில் நின்றபடி ... ஐயா என்ன ஆச்சு சொல்லுங்க எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு என்று கேட்டாள்..

அம்மா...இதை நீங்கள் எப்படி தாங்கிக்கொள்ள போறீங்களோ தெரியவில்லையே ..
என்று மறுபடியும் சொல்லி அழுதார்கள்..

அண்ணே.. பம்புசெட்டில் வேலை செய்த நம்ம சங்கரும் ரேகாவும் காணாம போயிட்டாங்க அண்ணே ....
எல்லா இடத்திலும் தேடி பார்த்து விட்டோம் அவங்க எங்கேயுமே இல்லை பம்புசெட்டில் அவங்களோட துணி பாத்திரங்களும் எதுவுமே இல்லை அண்ணே ...
என்று சொல்லி அழுதார்கள்..

இதைக் கேட்டதுமே முத்தையாவுக்கு இதயம் நின்று போகும் அளவுக்கு துடித்தது... அவரால் நிற்க முடியவில்லை வலது கையில் வைத்திருந்த தடிக்கொம்பை கீழே போட்டுவிட்டு அப்படியே உட்கார்ந்துகொண்டார்..

ரேகா.. எங்களை விட்டுவிட்டு எங்கம்மா போயிட்ட ...
இனிமேல் நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி இருப்போம் ரேகா.. என்று வாய்விட்டு கதறி அழுதாள் லட்சுமி...

நம்முடைய மகன் வாழ்க்கையை நாமே கெடுத்து விட்டோமோ என்று நினைத்து முத்தையா வேதனையில் துடித்தார்...
இனிமேல் நம் மகனையும் மருமகளையும் பார்க்கவே முடியாதா ... என்று நினைத்து மனவேதனையில் துடித்தார்.. அப்போது அவரால் வாய் திறந்து பேசினால் மூச்சு நின்றுபோகும் என்பதை உணர்ந்தார் முத்தையா...

உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டது என்று நினைத்து சந்தோஷமாக இருந்தேனே இப்படி உன் வாழ்க்கை பாழாகிவிட்டதே ரேகா என்று லட்சுமி சொல்லிக்கொண்டே அழுதாள்..

இனிமேல் பண்ணையார் தோட்டத்திற்கு யாரும் வேலைக்கு போகக்கூடாது என்று கூட்டத்தில் ஒருவர் ஆவேசமாக சொன்னார்..

ஆமாம் ...யாருமே பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போகக்கூடாது .. அதுமட்டுமல்ல இந்த ஊரை விட்டு எல்லோரும் எங்கேயாவது போய்விடலாம் இல்லையெனறால் இப்படி ஒவ்வொரு குடும்பமாக காணாமல் போய்விடுவோம் என்று மற்றொருவர் சொன்னார்..

ஊர் மக்கள் பேசுவதை கேட்ட முத்தையாவுக்கு மேலும் கவலை அதிகமானது ..
பண்ணையார் தோட்டத்தை செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ..
ஊர் மக்கள் சந்தோஷமாக வேலை செய்து பிழக்க வேண்டும் என்பதற்காகவும் ..
நம்முடைய மகனை பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு அனுப்பினோம் ஆனால் நிலைமை இப்படி மாறி விட்டதே...
ஊர் மக்கள் எல்லோரும் ஊரைவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறார்களே என்பதை நினைத்து முத்தையாவுக்கு மேலும் கவலையில் துடித்தார்...

இன்னும் சிறிது நேரத்தில் நம்முடைய மூச்சு நின்றுவிடும் என்பதை உணர்ந்தார் முத்தையா...

முத்தையாவின் நிலைமையை பார்த்த லட்சுமி அம்மாள் ..
தனது மடிமீது முத்தையா வை படுக்க வைத்துக் கொண்டாள்..

முத்தையாவுக்கு ஊர் மக்களிடம் பேச வேண்டும் என்று நினைத்து தனது வலது கையை தூக்கினார் ஊர் மக்களும் முத்தையாவின் நிலைமையை புரிந்து கொண்டார்கள் ..
அப்போது எல்லோரும் மேலும் சத்தமாக அழுக தொடங்கினார்கள்...

அப்போது முத்தையாவின் கைகளை பிடித்தபடி எல்லோரும் அழுதார்கள்...

நம் வாய் திறந்து பேசினாள் மூச்சு நின்றுவிடும் என்று உணர்ந்த முத்தையா ... சற்று மனதை இருக்கமாக பிடித்துக்கொண்டு பேசத் தொடங்கினார்...

என் மகன் சங்கரும் .
என் மருமகள் ரேகாவும் நிச்சயம் திரும்பி வருவார்கள் அவர்களுக்கு எதுவும் நடந்திருக்காது..
நீங்கள் யா.. யா ..யாரும் இந்த ஊரைவிட்டு. போ ...போ.. போகக்கூடாது... இது என்மேல் சா.. சா..சா.. சத்தியம்.. இ.. இதை நீங்கள்..க..க.. என்று சொல்லி முடிப்பதற்குள் முத்தையாவின் உயிர் பிரிந்தது...

முத்தையாவின் உயிர் பிரிந்ததை உணர்ந்த ஊர் மக்கள் ..
ஒரு நிமிடம் எல்லோரும் அமைதியாக வாய்யடைத்து போனார்கள் ..
அவர்களால் முத்தையாவின் இறப்பை நம்ப முடியவில்லை அப்படியே எல்லோரும் அதிர்ச்சியில் சத்தம் போடாமல் சிலைபோல நின்றார்கள்...

இப்படி என்னை மட்டும் தனியாக விட்டு விட்டு போயிட்டீங்களே எல்லோரும் ...
இனி எனக்கென்று யார் இருக்கா அப்பா ...என்று ரேகாவின் அம்மா லட்சுமி முத்தையாவை தனது மடையில் களத்திக்கொண்டு கதறி கதறி அழுதாள்..



இனி பண்ணையார் தோட்டம் பசுமையாக மலருமா....
🌹🌾🌱🌿🍀🌴 ...பொறுத்திருந்து பார்க்கலாம்....


தொடரும்......
 

vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
nice epi na..........inime story yeppadi pogunu aarvama irukku ................waiting for next epi anna 🤩 🤩
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம்-...36👇


ஊர் மக்கள் எல்லோரும் சோகத்தோடு முத்தையாவின் வீட்டின் அருகில் ஒன்று சேர்ந்தார்கள்..

முத்தையாவின் பெருமைகளையும் சங்கர் ரேகாவின் பெருமைகளையும் ஊர்மக்கள் பேசிக்கொண்டு சோகத்தோடு முத்தையாவின் வீட்டு வாசலில்
ஒரே அழுகை சத்தத்தோடு ஊரே சோகத்தில் இருந்தது..

அப்போது சில பேர்..
இந்த தகவலை உடனே பண்ணையாரிடம் சொல்லவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு சில பேர் பண்ணையார் வீட்டுக்கு சென்றார்கள்...


இன்று சந்திரன் திருமண தேதியை முடிவு செய்து தீர வேண்டும் என்ற முடிவில் பண்ணையாரும் சாந்தியும் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்கள்..

பூஜையை முடித்துவிட்டு பண்ணையார் சாந்தியிடம் கேட்டார்..

பொழுது விடிஞ்சு இவ்வளவு நேரம் ஆச்சு உன் கணவனும் அவனுடைய தம்பிகளும் இன்னுமா தூங்கிகிட்டு இருக்கானுங்க..

ஆமா மாமா ..இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருக்காங்க .. நேத்து தோட்டத்தில நிறைய வேலை செஞ்சு இருப்பாங்க போல தெரியுது . அந்த கலைபில தூங்குறாங்க. நானும் எழுப்பாமல் விட்டுட்டேன் இதோ போயிட்டு எழுப்புகிறேன் மாமா என்று சாந்தி சொல்லிக் கொண்டிருக்கும்போது வீட்டு வாசலில் ஊர்மக்கள் அழுதபடி அய்யா அய்யா என்ற குரல் பண்ணையாருக்கும் சாந்திக்கும் கேட்டது...

உடனே சாந்தியும் பண்ணையாரும் பதறிப்போய் வீட்டு வாசலில் வெளியே வந்து பார்த்தார்கள்..

கூட்டமாக வந்த ஊர்மக்கள் பண்ணையாரை பார்த்ததும் துக்கம் தாங்காமல் அழுக ஆரம்பித்தார்கள்.

பண்ணையாருக்கும் சாந்திக்கும் அதிர்ச்சியாக இருந்தது ..

என்ன நடந்தது சொல்லுங்கப்பா எதுக்காக இப்படி எல்லோரும் அழுகிறீர்கள் .. எனக்கு ரொம்ப பயமாக இருக்குது என்னன்னு சொல்லுங்கப்பா என்று பதட்டத்தோடு பண்ணையார் ஊர் மக்களிடம் கேட்டார்..

ஐயா எல்லாமே முடிஞ்சு போச்சு இனிமேல் நம்ம யாரும் நிம்மதியா வாழ முடியாது என்று கூட்டத்தில் ஒருவர் சொல்லிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்..

பண்ணையாருக்கு சாந்திக்கும் பயம் மேலும் அதிகமானது..

என்னன்னு சொல்லுங்க பா..

ஐயா நம்ம தோட்டத்துல வேலை செய்த சங்கரும் ரேகாவும் காணாம போயிட்டாங்க ஐயா என்று இன்னொரு கூலித்தொழிலாளி சொல்லி அழுதார்..

இதைக்கேட்டதும் பண்ணையாருக்கு பெரும் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டார் சாந்தி தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்...

சாந்தியின் அழுகை குரல் தூங்கிக்கொண்டிருந்த பரந்தாமனுக்கு சந்திரனுக்கும் தீனாவுக்கும் கேட்டது..


நம்ம நினைச்சபடி பிரச்சனை ஆரம்பம் ஆகிடுச்சு ..
இனிமேல் எப்படி முடியப் போகுதோ இந்தப் பிரச்சனை தெரியவில்லையே என்ற மனக் குழப்பத்தோடு பரந்தாமன் 75 வெளியே வந்தான்..

சந்திரனும் தீனாவும் சோகத்தோடு எழுந்து வெளியே வந்தார்கள்...

என்னங்க ரேகாவும் சங்கரும் காணாம போயிட்டாங்க..
சங்கரை தானே மலைபோல நம்பி இருந்தோம் இப்படி அவங்களும் காணாம போயிட்டாங்க ..
இனிமேல் நம்ம குடும்ப பிரச்சனையை யாருங்க தீர்க்க போறாங்க .. சந்திரன் திருமணம் எப்படி நடக்கப்போகுது தெரியவில்லையே ..

கடவுள் நம் குடும்பத்தை இப்படி சித்திரவதை செய்கிறாரே என்று பரந்தாமனை கட்டியணைத்தபடி அழுதுகொண்டே சொன்னாள் சாந்தி..

ஊர் மக்கள் சங்கரும் ரேகாவும் காணாமல் போய்விட்டார்கள் என்று முடிவு செய்துவிட்டார்கள் ..
அதனால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று பரந்தாமன் மனதில் நினைத்துக்கொண்டான்..

ஐயா இன்னொரு முக்கியமான விஷயம் இதை நீங்கள் எப்படி தாங்கிக் கொள்ள போறீங்களோ எங்களுக்கு தெரியவில்லை ஐயா எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லாமலும் இருக்க முடியாது ஐயா என்று கூட்டத்தில் இன்னொரு கூலித்தொழிலாளி பண்ணையாரை பார்த்து சொன்னார்..

அப்போது பண்ணையார் அதிர்ச்சியில் பேசமடியாமல் கையசைத்தார் சொல்லுங்கள் என்று..

சங்கரும் ரேகாவும் காணாமல் போன தகவலை முத்தையா விடம் சொன்னதும் அதிர்ச்சிய உங்களுடைய உயிருக்கு உயிரான நண்பர் முத்தையா இறந்துவிட்டார் என்று ஊர்மக்கள் சொல்லி கதறி அழுதார்கள்..

முத்தையா என்னை விட்டுட்டு போயிட்டியா டா இன்று பண்ணையார் வாய்விட்டு தரையில் புரண்டு புரண்டு அழுதார்..

முத்தையா என் குடும்பத்துக்காக உன் குடும்பத்தையே தியாகம் செய்து விட்டாயே முத்தையா...

இனிமேல் எனக்கும் இந்த ஊர் மக்களுக்கும் யார் வழி நடத்துவாங்க முத்தையா ..

என் உயிரே என்னை விட்டு பிரிந்து விட்டது இனிமேல் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று பண்ணையார் சொல்லி அழுகும் போது
இதை பார்த்துக்கொண்டிருந்த சந்திரனும் தீனாவும் ..
நம் செய்த தவறினால் இப்படி இந்த ஊரும் நம்முடைய குடும்பமும் நிம்மதியை இழந்து விட்டார்களே என்று நினைத்து அவர்களும் அழுக தொடங்கினார்கள்..

இப்படி பண்ணையார் வீட்டில் ஊர்மக்களும் பண்ணையார் குடும்பமும் சேர்ந்து அழுதார்கள்...

அப்போது திடீரென்று பண்ணையார் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்று வேட்டியை சரியாக கட்டிக்கொண்டு பரந்தாமனை பார்த்து சொன்னார்..


பரந்தாமா ...சங்கர் ரேகா காணாமல் போனது பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கோபத்தோடு கேட்டார்..

திருதிருவென முழித்தபடி பரந்தாமன் .. எங்களுக்கு எதுவும் தெரியாது அப்பா என்று சொன்னான்..

அப்போது பண்ணையார் மறுபடியும் ஆவேசமாக ஊர் மக்களைப் பார்த்து சொன்னார்..

நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் இந்தப் பிரச்சனைக்கு இன்று ஒரு தீர்வு கிடைக்கும்
என் நண்பன் முத்தையா வை இந்த மண்ணில் புதைப்பதற்குல்.
நமக்கு எதிரியாக இருக்கும் அந்த கெட்ட எண்ணம் கொண்ட கொடியவனுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறேன் ..
அவனால் இனிமேல் இந்த ஊருக்கும் என் குடும்பத்திற்கும் எந்த கெட்டதையும் இனிமேல் அவனால் செய்ய முடியாது அப்படிப்பட்ட ஒரு முடிவை நான் என்று எடுக்கிறேன் ... அப்போதுதான் நம்முடைய எதிரிக்கு நான் யார் என்று புரியும்..
என்று ஆவேசத்தோடு பண்ணையார் சொன்னார்..

பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது ..
அப்பா நம்மை கண்டுபிடித்து விடுவாரா என்ற பயம் அவனுக்கு உருவானது..

நீங்கள் எல்லோரும் என் நண்பன் முத்தையாவின் வீட்டுக்கு போங்க நானும் என் பெரிய மகன் பரந்தாமனும் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவோடு அங்கு வருகிறோம் ..என் நண்பன் உயிர் பிரிந்த பிறகும் நான் இனியும் பொறுமையாக இருந்தாள் அது என் முட்டாள்தனம்...
இனிமேல் என்னுடைய நடவடிக்கையில் நம்முடைய எதிரி இனி தலை தூக்க முடியாது என்று ஆவேசத்துடன் சொல்லு அங்கிருந்தவர்களை அனுப்பி வைத்தார் பண்ணையார்..


சாந்தி அவள் மகன் சுரேஷ்
சந்திரன் தீனா ஊர் மக்களோடு முத்தையாவின் வீட்டிற்கு சோகத்தோடு சென்றார்கள்..

பண்ணையாரும் பரந்தாமனும் வீட்டில் இருந்தார்கள்...

பரந்தாமனுக்கு ஒரே பதட்டமாக இருந்தது அப்பா நம்மை கண்டு பிடித்து விடுவார என்று நினைத்து குழப்பத்தோடு இருந்தான்..

முத்தையாவையும் சங்கரையும் ரேகாவையும் நினைத்து மனம் நொந்து .. பண்ணையார் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் மறுபடியும்..

அப்பா இன்று எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் இதனால் நமக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற குழப்பமும் பரந்தாமனுக்கு ஏற்பட்டது..

பரந்தாமா ....நம்மா தோட்டத்தில் வேலை செய்துவந்த மூன்று குடும்பங்கள் காணாமல் போய்விட்டது . இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று சோகத்தோடு பண்ணையார் பரந்தாமனை பார்த்து கேட்டார்..

பரந்தாமனுக்கு தூக்கிவாரிப்போட்டது ..எதற்காக அப்பா இந்தக் கேள்வியை நம்மிடம் கேட்கிறார். ஒருவேளை நம் மீது சந்தேகப்படுகிறார என்றும் மனதில் நினைத்துக்கொண்டு ..

அதுதான் எனக்கு ஒண்ணுமே புரியல அப்பா .. எதனால நம்ம தோட்டத்தில் தங்கி வேலை செய்றவங்க திடீரென்று காணாம போறாங்க என்பதுதான் எனக்கு இதுவரைக்கும் தெரியல அப்பா என்று பரந்தாமன் சொன்னார..

எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு நம்முடைய எதிரி நம் பக்கத்திலேயே தான் இருக்கிறான் ..
அவன் தினமும் நம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான் அதனால தான் இன்று நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன் என்று பண்ணையார் சொன்னார்..

என்ன முடிவு அப்பா ...

நம்முடைய எதிரிக்கு நம் குடும்பத்தின்மிது கோபம் இல்லை ஊர் மக்கள் மீதும் கோபம் இல்லை அவனுக்கு நம்முடைய நிலங்கள் மீதுதான் ஏதோ ஒரு திட்டம் போட்டு இருக்கிறான்... அதனால்தான் நம் தோட்டத்தில் தங்கி வேலை செய்பவர்களை திட்டமிட்டு ஏதோ சதி செய்கிறான் ...
அவனுடைய எண்ணம் நம்முடைய நிலத்தின் மீது தான் இருக்கிறது

அதனால்தான் நம்முடைய நிலங்களை எல்லாவற்றையும் இந்த ஊர் மக்களுக்கு இன்று பிரித்துக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் .. அதுவும் என் நண்பன் முத்தையாவை மண்ணில் புதைப்பதற்கு இந்த வேலையை நம்ம செஞ்சாகனும் ..
அப்போதுதான் என் நண்பன் முத்தையாவின் உயிருக்கு நான் கொடுக்கும் மரியாதை ..

அதேசமயம் நம்முடைய எதிரிக்கும் நான் கொடுக்கும் பதிலடி என்று பண்ணையார் பரந்தாமன் இடம் சொன்னார்...

பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது ..
நம்முடைய திட்டத்தை அப்பா சரியாக கண்டுபிடித்துவிட்டாரே..

ஊர் மக்களுக்கு எல்லா நிலங்களையும் பிரித்துக் கொடுத்தால் . நம்முடைய லட்சியம் என்ன ஆகும் இதற்காக எவ்வளவு சதி செய்து இருக்கிறோம்
எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறோம் இதற்காக சங்கரையும் ரேகாவையும் கொலை செய்திருக்கிறோம் ..
இதற்கு நாம் ஒருபோதும் சம்மதிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு பரந்தாமன் சுற்று கோபத்தோடு பேச ஆரம்பித்தான்..

யாரோ ஒருவனுக்கு பயந்துகொண்டு நம்முடைய குடும்ப நிலங்களை இப்படி ஊர் மக்களுக்கு கொடுப்பது தேவையில்லாத காரியம் அப்பா..

என்ன பரந்தாமா புரியாமல் பேசறே நம்ம இவ்வளவு நிலத்தை வச்சுகிட்டு என்ன செய்யப் போறோம் .. பாதியை ஊர்மக்களுக்கு கொடுத்துவிடலாம் மீதியை நீயும் உன் தம்பிகளும் பிரித்து எடுத்துக்குங்க ..

நிலத்தையெல்லாம் யாருக்கும் கொடுக்க கூடாது இனிமேல் தோட்டத்தில் எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்
அந்த சதிகாரனை.. இனிமேல் நான் கவனித்துக் கொள்கிறேன் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் அப்பா..

அவனை சாதாரணமாக நினைக்காதே பரந்தாமா ..
எல்லாம் பிரச்சனைகளையும் எதிர்த்துக் கேட்கும் சங்கரை அவன் சதியல் சிக்கவைத்து ஏதோ செய்து இருக்கிறான் ..உங்களையெல்லாம் அவன் சாதாரணமாக அவன் வலையில் சிக்க வைப்பான் உங்களுக்கு அவனை எதிர்க்கும் அளவுக்கு துணிச்சல் கிடையாது அதனால் நான் சொன்னபடி கேளு பரந்தாமா..

அப்பா வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள் நான் கேட்கிறேன் ஆனால் நிலத்தை ஊர் மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதில் எனக்கு துளியும் விருப்பம் இலலை என்று சற்று குரல் உசத்தி சொன்னான் பரந்தாமன்..

பரந்தாமா.. எப்போது என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் எனக்கு நீ யோசனை சொல்லாதே நான் சொன்னபடி கேளு என்று பண்ணையாரும் சற்று ஆவேசமாக சொல்லிவிட்டு .. பீரோவில் இருந்த நில பத்திரங்களை கட்டுக்கட்டாக கொண்டு வந்து பரந்தாமன் முன்னாடி மேஜை மீது வைத்தார்..

இதோ எல்லாம் நில பத்திரங்களையும் உன் முன்னாடி வைத்திருக்கிறேன் ..
உனக்கு தேவையான நில பத்திரங்களை நீ எடுத்துக்கொள் மீதியை உன் தம்பிகளுக்கும் எந்த ஊர் மக்களுக்கும் நான் பிரித்து கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார் பண்ணையார்..

இனி பேசி பயனில்லை என்று முடிவு செய்துகொண்டு ..
பரந்தாமன் நில பத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து தனது கையில் வைத்துக் கொண்டிருந்தான்
அப்போது பண்ணையார் பரந்தாமனை கவனித்திருந்தார்..

பரந்தாமன் எல்லாம் நில பத்திரங்களையும் எடுத்துக்கொண்டே இருந்தான்..

பரந்தாமா..நீ என்ன செய்கிறாய் என்று கோபத்தோடு பண்ணையார் கேட்டார்..

புரியலியா அப்பா ...எனக்கு எல்லா நிலமும் எனக்கு வேண்டும் ..
இதில் இருந்து ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் கொடுக்க மாட்டேன் இது தம்பிகளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.. என்று பரந்தாமன் கோபத்தோடு சொன்னான்..

பரந்தாமனின் செயல் பண்ணையாருக்கு அதிர்ச்சியாக இருந்தது ...

அப்படி என்றால் நடந்த எல்லாம் சதிகளுக்கும் இவன்தான் காரணமா என்ற சந்தேகத்தோடும் கோபத்தோடும் பரந்தாமனை முறைத்தபடி பார்த்தார் பண்ணையார்..

பரந்தாமா...நீதான் இங்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமா..

அப்பா...தேவையில்லாமல் என்னை மிருகமாக மாத்தாதீங்க ..

இந்த கூலிகார பசங்க
நம்ம தோட்டத்துல வேலை செய்தாள் அவங்களுக்கு கூலி கொடுக்கிறோம். அதோட நம்முடைய வேலையும் முடிஞ்சிடுச்சு அதை விட்டுட்டு அவனுங்க குடும்பத்தைப் பற்றியும் அவனுங்க வாழ்க்கை பற்றியும் தேவையில்லாமல் நீங்கள் தலையிடுவது. எனக்கு சுத்தமா பிடிக்கல அதனால இனிமேல் நான் சொல்றபடி நடந்துக்குங்க என்று கைநீட்டி பேசினான் பரந்தாமன்..

என்ன பரந்தாமா.. பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு ..
பெத்த மகனாக இருந்தாலும் தப்புன்னு தெரிஞ்சா உயிரை எடுத்துடுவான் இந்த பண்ணையார் இது உனக்கே தெரியும்..

என் லட்சியத்திற்காக ..யாருக்கும் பயந்துக்கிட்டு விட்டுக் கொடுக்க மாட்டேன் .. இது என்னோட குணம் அப்பா..
என்று சொல்லிக்கொண்டே கையில் வைத்திருந்த எல்லாம் நிலை பத்திரங்களையும் மறுபடியும் மேஜை மீது வைத்துவிட்டு பண்ணையாரை முறைத்துப் பார்த்தான் பரந்தாமன்..

அப்படின்னா உன்னோட முடிவு என்று பரந்தாமனை முறைத்தபடியே கேட்டார் பண்ணையார்..

அப்போது பரந்தாமன் பண்ணையாரின் தோல் மீது இருந்த துண்டை எடுத்து கையில் வைத்து ... கயிறு போல முறுக்கிக்கொண்டு பண்ணையாரிடம் காட்டினான்..

நல்ல முடிவு செய்திருக்கிறாரே பரந்தாமா ... இப்படிப்பட்ட மகனை பெற்றதற்கு எனக்கு இந்த முடிவு தேவைதான் . நீயே உன் கையால என் கழுத்தை நெரித்து கொன்னுடு இல்லையென்றால் நான் உன்னை உயிரோடு விடமாட்டேன் ..
உன்னை நானே பெத்து நானே கொன்று விட்டேன் என்ற பாவம் என்னை சேரும் ..
அதனால் என்னை உயிரோடு விடாதே. அது உனக்குத்தான் ஆபத்து பரந்தாமா ...
என்று விறப்போடு சொன்னார் பண்ணையார்...

உடனே பரந்தாமன் கையில் வைத்திருந்த துண்டினால் பண்ணையாரின் கழுத்தில் மாட்டி இறுக்கிப் பிடித்து பற்களை நறநற வென கடித்துக் கொண்டு பண்ணையாரின் முகத்தை கோபத்தோடு பார்த்தான்..

பண்ணையார் வலியால் துடித்தார்..

பண்ணையாருக்கு தனது உயிர் போக போகிறது என்று நினைத்து துடித்தார் அப்போது சந்திரனையும் தீனாவையும் சாந்தியும் நினைத்துப் பார்த்தார்.. இந்த அரக்கனை நம்பி இவர்கள் எப்படி வாழப் போகிறார்களோ என்று நினைத்துக்கொண்டு வலியால் துடித்தார்..

பரந்தாமன். பண்ணையாரின் கழுத்தை துண்டினால் இறுக்கி பிடித்துக்கொண்டே சொன்னான்..

இந்த காரியத்தை அப்போதே செய்திருந்தால் தேவையில்லாமல் சங்கரையும் ரேகாவையும் கொன்று இருக்க மாட்டேன் .. என்று பற்களை கடித்துக்கொண்டே பரந்தாமன் சொன்னான்..

பரந்தாமனின் பேச்சி கேட்டதும் பண்ணையாருக்கு பெரும் அதிர்ச்சியானது...
அந்த அதிர்ச்சியில் அவர் இதய துடிப்பு நின்றுவிட்டது..

அப்பா இறந்துவிட்டார் என்று நினைத்து பரந்தாமன் கழுதை இறுக்கிப் பிடிப்பதை நிறுத்திவிட்டான்.

ஆலமரம் வேரோடு சாய்வதை போல பண்ணையார் கீழே விழுந்தார்..

சங்கர் ரேகாவை கொன்றுவிட்டேன் என்று சொன்னதும் உன் மூச்சு நின்றுவிட்டதே அப்பா..
சென்று சொல்லிக்கொண்டே பரந்தாமன் பண்ணையாரை தூக்கிக்கொண்டு கட்டிலில் படுக்க வைத்து விட்டு கையில் வைத்திருந்த துண்டை சரி செய்து அவர் தோள் மீது போட்டுவிட்டு உடனே ஊருக்குள்ளே சென்றான் பரந்தாமன்..


🏘️🛖⛺🏠 ஊருக்குள்ளே எல்லோரும் முத்தையாவின் வீட்டின் வாசலில் நிரம்பி ...
அழுது கொண்டிருந்தார்கள் சந்திரனும் தீனாவும் பெரும் கவலையில் இருந்தார்கள்

அப்போது தம்பி என்ற குரல் சத்தமாக கேட்டது ...

அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்

அப்போது பரந்தாமன் அழுதுகொண்டே ஒடி வருவதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியானார்கள்..

தம்பி ..அப்பா நம்மை எல்லோரையும் விட்டுட்டு போயிட்டாரு தம்பி என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்து அழுதான் பரந்தாமன்..

இதைக் கேட்டதும் ஊர் மக்களுக்கும் மேலும் அதிர்ச்சியாக இருந்தது..

சாந்தியால் இதை நம்பமுடியவில்லை...

சந்திரனுக்கும் தீனாவுக்கும் தலையே வெடித்து சிதறும் அளவுக்கு அதிர்ச்சியானது ..
உடனே அப்பா என்று இருவரும் கத்தி அழுதார்கள் பிறகு எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள்..



ஒருவன் செய்யும் சதியால் பண்ணையார் புறம்.. ஊர் மக்களே சோகத்தில் அழ்ந்தார்கள் ..

இனி பண்ணையார் புறம் பழைய நிலைமைக்கு மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..



தொடரும்....
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom