- Messages
- 111
- Reaction score
- 52
- Points
- 28
50 வது அத்தியாயத்தின் தொடர்ச்சி இதோ...
தீனாவின் மீது கல் விழுந்ததை பார்த்த சந்திரனுக்கு இதயம் சுக்கு நூறாக வெடித்தது ...
அவனால் அப்போது கதறிக் கதறி அழுவதற்கு மட்டும் தான் அவனால் முடிந்தது..
இடி இடித்ததும் நின்றுவிட்டது.... சூறைக் காற்றும் நின்றுவிட்டது... கனமழையும் நின்றுவிட்டது.... சங்கர் ரேகாவும் அடிப்பதை நிறுத்திவிட்டார்கள் ......
அந்த இடம் அமைதியான சூழல் ஏற்பட்டது ...
அந்த இடத்தில் அப்போது சந்திரனின் அழுகை குரல் மட்டும் சத்தமாக தெளிவாக கேட்டது..
என்மேல் விழ வந்த கல் நீ எதற்காக குறுக்கே வந்து விழுந்தாய் தம்பி உன்னை இந்த நிலைமையில் பார்ப்பதை விட
என் உயிர் போய் இருந்தாலே பரவாயில்லையே என்று கண்ணீர் மல்க வாய்விட்டு அழுதுகொண்டே சொன்னான் சந்திரன்..
அப்போது சந்திரனையும் தீனாவையும் பார்த்தபடி பரந்தாமன் சிலைபோல பம்புசெட்டின் அருகே நின்றான்..
தீனாவின் நிலைமையைப் பார்த்து கவலைப்பட்டான் பரந்தாமன் ...
இருந்தாலும் அவன் மனம் பணத்தின் மீது திசை திரும்பியது உடனே பரந்தாமன் தோல் மீது ஒரு மூட்டையை தூக்கிக்கொண்டு மற்றொரு மூட்டையை வலதுகையால் இழுத்தபடி வீட்டுக்கு கிளம்பினான்...
இதை பார்த்துருந்த தீனாவின் முகம் சற்று சந்தோஷமாக மாறியது..
அண்ணே ...அழுகாதிங்க பெரிய அண்ணன் இங்கிருந்து வீட்டுக்கு தப்பித்துவிட்டார் என்று சந்தோஷமாக சொன்னான் தீனா..
உடனே சந்திரன் பின்னால் திரும்பிப் பார்த்தான் பரந்தாமன் காணவில்லை...
அண்ணே ... நீங்களும் இங்கிருந்து போங்க இல்லன்னா சங்கர் உங்களை மறுபடியும் அடிப்பான் என்று வழியால் துடித்துக்கொண்டே சொன்னான் தீனா...
தம்பி உன்னை இங்கு விட்டுவிட்டு நான் போக மாட்டேன்...
நீயும் வா உன்னை நான் தூக்கிக்கொண்டு செல்கிறேன் என்று அழுதபடி சொன்னால் சந்திரன்...
அண்ணே ...நான் செய்த பாவத்திற்கு கடவுள் எனக்கு சங்கர் மூலமாக சரியான தண்டனை கொடுத்துவிட்டான் இனிமேல் என்னால் உயிர் பிழைக்க முடியாது ...
அதனால் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அண்ணா ...
நீங்கள் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து ஓடிடுங்க அதுவே எனக்கு போதும் என்று சொல்லிவிட்டு துக்கம் தாங்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டு அழுதான் தீனா...
தீனாவின் பேச்சைக் கேட்டதும் சந்திரன் ..அவனை தூக்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டு கதறிக் கதறி அழுதான் ..
தம்பி உன்னை விட்டு விட்டு நான் இங்கிருந்து போக மாட்டேன் உன்னை எப்படியாவது காப்பாற்றி விடுவேன் தம்பி என்று சொல்லிக்கொண்டே அழுதான் சந்திரன்...
தன் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் பிரிய போகிறது என்பதை உணர்ந்த தீனா... எப்படியாவது அண்ணனை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடைசியாக சந்திரனை பார்த்து கட்டி அணைத்துக் கொண்டான் தீனா... அண்ணே இங்கிருந்து எப்படியாவது ஓடிடுங்க என்னைப் பற்றி கவலைப்படாதீங்க அண்ணா என்று ..கெஞ்சுவதை போல அழுதுகொண்டே சொன்னான் தீனா..
உடனே சந்திரன் கண்களை துடைத்துக்கொண்டு..
எழுந்து நின்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தீணாவை தூக்கி தன் தோள் மீது போட்டுக்கொண்டு தள்ளாடியபடி நடந்து சென்றான் வீட்டுக்கு..
பார்க்குமிடமெல்லாம் தண்ணீர் நிரம்பி இருந்தது வயல்வெளியில் ...
அப்போது புதிதாக நடவு செய்திருந்த நிலத்தில் சந்திரன் தீனாவை தோள்மீது தூக்கிக்கொண்டு நடந்து சென்றான் ...
அந்த அமைதியான சூழலில் நள்ளிரவில் சந்திரன் தண்ணீரில் நடந்து செல்லும் ஓசை தெளிவாக கேட்டது...
தம்பி நீ ஒன்னும் பயப்படாதே உனக்கு ஒன்றும் ஆகாது அண்ணன் உன்னை எப்படியாவது காப்பாற்றி விடுவேன் ...
என்று சொல்லிக்கொண்டே தண்ணீரில் நடந்து சென்றான் சந்திரன் ...
ஆனால் சந்திரனின் தோள் மீது இருக்கும் தீனாவின் தலை தொங்கியபடி இருந்தது கைகளும் எந்த துடிப்பும் இல்லாமல் தொங்கியது...
தீணாவை தூக்கிக்கொண்டு தண்ணீரில் நடந்து
சென்றுருந்த சந்திரனின் கால் பாதத்தில் பணக்கட்டுகள் மீதி படுவதைப் போல உணர்ந்தான் சந்திரன்..
உடனே சந்திரன் கீழே கூர்ந்து கவனித்தான் ..
அப்போது தண்ணீரில் சில பணக்கட்டுகள் மிதப்பதை பார்த்து அதிர்ந்து போனான்..
பணம் எல்லாம் இங்கு சிதறிக் கிடக்கிறதே...
அப்படி என்றால் அண்ணன் எங்கே என்று பதட்டமாக சுற்றுமுற்றும் பார்த்தான் சந்திரன்..
மறுபடியும் சிறிது தூரம் நடந்து சென்றான் ...அப்போது பண மூட்டை தண்ணீரில் மிதப்பதை பார்த்து மேலும் பயந்து போனான் சந்திரன்..
பணமெல்லாம் இங்கே கொட்டிக்கிடக்கிறது அண்ணனை காணவில்லையே ..
ஒருவேளை பணத்தை போட்டு விட்டு ஓடி விட்டாரா
இல்லை இங்கு எங்கேயாவது இருக்கிறாரா என்ற பதட்டத்தோடு சுற்றும் முற்றும் பார்த்த சந்திரனுக்கு திடீரென்று அதிர்ச்சியில் நின்றான்...
தீனாவை தோள் மீது சுமந்தபடி அதிர்ச்சியில் சிலைபோல நின்றான் சந்திரன்...
அவன் பார்த்த காட்சி அவனால் நம்ப முடியவில்லை...
சற்று வேகமாக நடந்து வந்த சந்திரன் ...
அந்த காட்சியை பார்த்ததும் அவனால் நடக்கமுடியாமல் உடம்பெல்லாம் சிலிர்த்தது .. பிறகு மெதுவாக நடந்து சென்று அருகில் சென்று அந்த காட்சியை கூர்ந்து கவனித்தான் அப்போது அவன் உயிர் பிரிந்து விட்டதைப் போல உணர்ந்தான் சந்திரன்..
தண்ணீர் நிரம்பியிருந்த அந்த நிலத்தில் பரந்தாமன் கொண்டுவந்த பணமெல்லாம் முட்டையோடு மிதந்து இருக்க... பரந்தாமன் தலைகீழாக பாதி உடம்பு சேற்றில் புதைத்தபடி கால்கள் மேலே நின்றபடி இறந்து கிடப்பதை பார்த்தான் சந்திரன்...
இந்தக் காட்சியை அவனால் நம்ப முடியவில்லை ..
பெரிய அண்ணன் இறந்துவிட்டாரா என்பதை அவன் உள்ளம் ஏற்கவில்லை.. இருந்தாலும் அவனால் மறுக்கவும் முடியவில்லை
அப்போது சந்திரன் நடுங்கியபடி சொன்னான் ....தம்பி பெரிய அண்ணன் இறந்துவிட்டார் தம்பி என்று சொல்லும்போது தீனாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை ...
சந்திரன் தீனாவின் முதுகை தட்டிக்கொடுத்து கொண்டே மறுபடியும் சொன்னான்...
தம்பி பெரிய அண்ணன் நம்மை அனாதையாக விட்டு விட்டு போயிட்டாரு தம்பி என்று வார்த்தை திக்கியபடி சொல்லிக்கொண்டு தீனாவை தோல் மீது இருந்து சேற்றில் இறக்கினான் ....
அப்போது தீனாவின் தலை சாய்ந்து ...இதை பார்த்து சந்திரன் மறுபடியும் அதிர்ந்தான் ..
தம்பி அண்ணனை பாருடா தம்பி அண்ணன் இறந்து விட்டார் என்று சொல்லிக்கொண்டே தீனாவின் கண்ணத்தை தடவி கொடுத்துக்கொண்டே அசைத்தான் ...
அப்போது தீனா இறந்துவிட்டான் என்பதை உணர்ந்தான் சந்திரன்...
நள்ளிரவில் . பார்க்குமிடமெல்லாம் தண்ணீர் சூழ்ந்திருந்த நிலத்தின் நடுவே சந்திரன் தீனாவை கட்டியணைத்துக் கொண்டு... தலைகீழாக புதைந்திருக்கும் பரந்தாமனின் கால்களை பிடித்துக்கொண்டும் கதரி கதரி அழுதான் அந்த அமைதியான இடத்தில்...
அண்ணனும் இறந்துவிட்டார் தம்பியும் இறந்து விட்டான் என்பதை உணர்ந்த சந்திரனுக்கு தலை சுற்றியது ....
அப்போது சந்திரன் மயங்கி அவனும் சேற்றில் சாய்ந்தான்...
தொடரும்.....