- Messages
- 111
- Reaction score
- 52
- Points
- 28
⬇️அத்தியாயம் ...10 👇
என்ன குருவே ஆரம்பத்துல இருந்த வருமானம் இப்போதைக்கு இல்லையே என்றான் சிஷ்யன்.
அவசரப்படாத டா கொஞ்சம் கொஞ்சமா தான் .பிடிக்கணும் ஒரேடியா இந்த ஊரை மிரட்டினாள் அப்புறம் ஊருல பேய் தொல்லை அதிகமாயிடுச்சு அதனால இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி பண்ணையார்றிடம் சொல்லிட்டா. அதுக்கப்புறம் அந்தப்
பண்ணையாரு உண்மையான மந்திரவாதியை அழைத்து வந்து பார்க்கச் சொல்வார் . உண்மையான மந்திரவாதி நம்முடைய செட்டப்பை கண்டுபிடித்துவிட்டால் அப்புறம் நம்மளால இந்த ஊர்ல இருக்க முடியாது .
பேயே இல்லாத ஊர்ல நம்ம செல்போன் வச்சுக்கிட்டு பேய் இருக்கிறதா மிரட்டி பணம் சம்பாதிக்கிறோம் இப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் கொஞ்சம் பொறுமையா தான் கையாள னும் சிஷ்யா .
இதில் பணத்துக்கு ஆசைப்பட்டு அவசரப்படக்கூடாது . தங்க முட்டை போடும் வாத்து கதை போல நம்முடைய கதையும் ஆகிவிடும் என்றார் சாட்டையடி சாமியார்.
நீங்கள் சொல்வதும் சரிதான் குருவே . இதுக்கு முன்னாடி நம்ம இருந்த ஊருல அந்த ஊர் மக்கள் முட்டாளாக இருந்தாலும் .
கேள்வி கேட்பதில் வல்லவனாக இருக்கிறாங்க . ஆனா இந்த ஊருல அப்படி யாருமே இல்லை .
நம்ம பேய் இருக்குதுன்னு சொன்னதும் மறு பேச்சு பேசாமல் பணத்தை கொடுக்குறாங்க என்று மற்றொரு சிஷ்யன் சொன்னான்.
ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்தால் . அந்த குழந்தை அவன் தாத்தா ஜாடையில் இருப்பான் இல்லை அவன் அப்பா ஜாடையில் இருப்பான் அப்படியும் இல்லை என்றால் . அவன் சொந்தங்களில் யாராவது ஒருவர் ஜாடையில் இருப்பான் இதுதான் வழக்கம் இதை மையமாக வைத்துதான் நான் அந்த ஊரில் பூஜை செய்து உன் அப்பா மீண்டும் உன் வயிற்றில் பிறப்பார் என்று சொல்லி பணம் சம்பாதித்து இருந்தோம் .
ஆனால் அந்த முட்டாள் பசங்கள் நம் பூஜையை நம்பி பணமும் கொடுத்தார்கள் . ஆனால் கேள்விகளும் அதிகமாக கேட்கிறாங்க .
அவர்கள் கேட்கும் கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல முடியவில்லை அந்த தொல்லையால் இங்கு இந்த ஊருக்கு ஓடி வந்து விட்டோம் ஆனால் இந்தப்
பண்ணையார்புறத்தில் யாரும் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை அதனால் இந்த ஊர் மக்களை சாதாரணமாக நினைக்கக்கூடாது .
இந்த ஊர் மக்களுக்கு எல்லாம் தலைவன் .பண்ணையார் .அடுத்தது அவருடைய நண்பன் முத்தையா . இந்த இரண்டு பேரின் பேச்சுதன் இந்த ஊர் மக்கள் கேட்பாங்க . அதனால் நம்ம கொஞ்சம் உஷாராக இருக்கணும் இந்த பண்ணையாரும் இந்த முத்தையாவும் நம்மை மதிக்கிறது கிடையாது. எல்லோரும் நம்மளை பார்த்தால் கையெடுத்து கும்பிடுகிறார்கள் ஆனா இந்த பண்ணையாரும் . பண்ணையார் பசங்களும் நம்மள மதிக்கிறதே கிடையாது . அதேபோல இந்த முத்தையாவும் அவனுடைய மகன் சங்கரும் நம்மள மதிக்கிறதே கிடையாது அதனால இந்த ஊர் மக்களிடம் நம்ம உஷாரா இருக்கணும் . இன்னும் முழுசா இந்த ஊர் மக்கள் நம்மை நம்பள அப்படிதான் நம்ம எடுத்துக்கணும் என்னைக்கி பண்ணையார் பசங்களும் முத்தையாவின் மகன் நம்மள மதிக்கிறார்களோ அன்னைக்குத்தான் இந்த ஊரே நம்ம கைக்கு அடங்கிடாங்க என்று நினைச்சுகணும் .
அதுவரைக்கும் நம்ம இந்த ஊர் மக்களிடம் கொஞ்சம் உஷாராக தான் இருக்கணும் .
என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் சொன்னார்.
ஆமாம் குருவே பண்ணையார் பசங்க பாக்குறதுக்கு தேவர் மகன் கமலைப் போலவே மூன்று பேரும் இருக்கானுங்க .அவனுங்க நம்மல ஒரு அடி அடிச்சா கூட நம்மால தாங்க முடியாது . அதேபோலத்தான் முத்தையாவின் மகன் நம்ம விஜயகாந்த் மாதிரி இருக்கான் அவன் அடிச்சாலும் நம்மள தாங்க முடியாது . அதனால இந்த ஊருல நம்ம கொஞ்சம் அடங்கித்தான் இருக்கணும் குருவே என்று அந்த சிஷ்யன் சொன்னான்.
சிறிது நாட்கள் போகட்டும் ஊர் மக்கள் எல்லோரும் பண்ணையார் மகன் திருமணத்தைப் பற்றியும் முத்தையாவின் மகன் திருமணத்தைப் பற்றியும் பேசிக்கொண்டு சந்தோஷமா இருக்காங்க .
இந்த நேரத்தில நம்ம பயமுறுத்தின அவ்வளவு நல்லா இருக்காது கொஞ்ச நாள் போகட்டும் என்றார் சாட்டையடி சாமியார்.
பம்புசெட்டில் ஏற்கனவே காணாமல் போன குடும்பத்தை தேடுவதற்காக பரந்தாமனும் அவனது தம்பிகளும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
மூன்று பேரும் ஒரே இடத்தில் தேடாமல் ஆளுக்கொரு திசையில் தேடுங்க . அப்பத்தான் ஏதாவது ஒரு தகவல் கிடைக்கும் என்றால் சாந்தி.
சற்று சோர்வாக இருந்த பரந்தாமன் சாந்தியின் பேச்சு மேலும் எரிச்சலை உண்டாக்கியது .இவளுக்கும் என் அப்பனுக்கும் வேற வேலையே இல்ல . எப்ப பார்த்தாலும் சீக்கிரம் கண்டுபிடிக்கணும் சீக்கிரம் கண்டுபிடிக்கணும் என்ற நெனப்பவே இருக்காங்க .
என்று மனதில் நினைத்துக்கொண்டு எரிச்சலோடு சாந்தியை பார்த்தான் பரந்தாமன்.
நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாங்கள் மூன்று பேரும் ஆளுக்கு ஒரு திசையில் தான் தேடுகிறோம் நிச்சயம் சீக்கிரத்துல அவங்க கிடைத்திடுவாங்க என்று சாந்தியிடம் சொன்னான் பரந்தாமன்.
என் மகன்களுக்கு எல்லாமே தெரியும் . இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை அவர்களை தேடுவதை நிறுத்தாதீங்க என்று பண்ணையார் சொல்லிக்கொண்டே தனது அறையிலிருந்து வெளியே வந்தார்.
சந்திரனின் திருமணத்திற்குல் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து விட்டால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் ஏனென்றால் ஊரே நம்ம வீட்டு திருமணத்தைப் பற்றியும் என் நண்பனோட மகன் திருமணத்தைப் பற்றியும் நினைத்து சந்தோஷப் படுகிறார்கள் . ஆனால் . பாவம் அந்த வயதான பெரியவரும் அவர் மனைவியும் நமது மகன் இல்லையே என்ற ஏக்கத்தில் அவர்கள் யாரிடமும் பேசுவதே இல்லையாம் . அதனால் நீங்கள் அந்தப் பெரியவரின் மகனையும் மருமகளையும் திருமணத்துக்கு முன் கண்டுபிடித்துவிட்டால்
இந்த ஊரே சந்தோஷமாக இருக்கும் எனக்கும் மன நிறைவாக இருக்கும் அப்படியில்லையென்றால்
என் மனசுக்கும் ஒரு வருத்தம்தான் நமது பம்புசெட்டில் தங்கி வேலை செய்த ஒரு குடும்பம் காணாமல் போய்விட்டது . அதைப்பற்றி கவலை இல்லாமல் பண்ணையார் அவருடைய மகன் திருமணத்தை சிறப்பாக நடத்துகிறார் என்று ஒரு சிலர் மனதுக்குள் நினைப்பார்கள் அவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ . என் மனது அப்படிதான் நினைக்கும் என்று பண்ணையார் சற்று வருத்தமாக சொன்னார்.
நிச்சயம் தம்பி திருமணத்திற்குல் அவர்களை நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அப்பா என்று சொல்லிவிட்டு பரந்தாமனும் அவனது தம்பிகளும் புல்லட் பைக்கில் கிளம்பிவிட்டார்கள்.
பரந்தாமன் பைக்கை ஓட்டிக்கொண்டு சிறிது தூரம் சென்றதும் . அப்போது சந்திரனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தான்.
தம்பி உனக்கு இந்த பெண்ணை பிடித்து இருக்கா என்றான் பரந்தாமன் மோட்டார் பைக்கை ஓட்டியபடி.
சந்திரன் சற்று கூச்சத்தோடு பிடிச்சிருக்கு நா என்று மெதுவாக சொன்னான்.
பயப்படாத சொல்லு தம்பி . உனக்கு இந்தப் பெண்ணை விட இன்னும் அழகான பெண்ணை பார்த்து நான் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் . நீ உன் மனசுல பட்டதை என்னிடம் சொல்லு தம்பி என்றான் பரந்தாமன்.
அப்பாவுக்கும் . அன்னிக்கும் எல்லோருக்குமே இந்தப் பெண்ணை பிடித்து விட்டது அண்ணா என்றான் சந்திரன்.
அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே . உனக்கு பிடித்திருக்கிறதா அதை மட்டும் சொல் . ஏனென்றால் உன் மனதில் நல்ல அழகான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று நீ மனதில் நினைத்து இருப்பாய் அதனால் தான் கேட்கிறேன் உனக்கு அந்தப் பெண் பிடிக்கவில்லை என்றால் என்னிடம் சொல் .
நான் உனக்கு அடுத்த வாரத்திலேயே இவளைவிட அழகான பெண்ணை பார்க்கிறேன் என்று சொல்லி.
பரந்தாமன் .சந்திரனின் மனதை மாற்றுவதற்கு முயற்சி செய்தான்.
அண்ணே .....அண்ணன் எப்ப பார்த்தாலும் அந்த பெண்ணோட போட்டோவை வச்சுக்கிட்டு சிரிச்சுகிட்டே இருக்காரு .
அவருக்கு அந்தப் பெண்ணை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அண்ணே என்று தீனா பரந்தாமனிடம் சொன்னான்.
தீனா உனக்கு இதெல்லாம் புரியாது சந்திரன் சொல்லட்டும் அந்தப் பெண் அவனுக்கு பிடிச்சிருக்கு என்று சொன்னான் பரந்தாமன்.
எனக்கு இந்தப் பொண்ணு ரொம்பவே பிடிச்சிருக்கு அண்ணா அவள் முகத்தைப் பார்த்ததுமே எனக்கு அவளுடன் ஏற்கனவே பழகியது போல உணர்வு ஏற்பட்டுவிட்டது அண்ணா . எனக்கு இந்தப் பெண்ணை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அண்ணா என்று ஆணித்தரமாக பளிச்சென்று சொல்லிவிட்டான் சந்திரன்.
சந்திரனின் பேச்சைக் கேட்டதும் பரந்தாமனுக்கு மேலும் கோபம் தலைக்கேறியது . தம்பியிடம் ஏதாவது சொல்லி மனதை மாற்றி விடலாம் என்று நினைத்தாள் .இவன் அந்த பெண்மீது இவ்வளவு ஆசையோடு இருக்கிறானே என்று நினைத்து பரந்தாமனுக்கு எரிச்சலும் கோபமும் அதிகமானது அப்போது அவன் பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தினான் கோபத்தில்.
அப்போது பரந்தாமனின் கண்ணுக்கு ஒரு மதுக்கடை தெரிந்தது உடனே பைக்கை அந்த மதுக்கடை அருகில் பைக்கை நிறுத்தினான் பரந்தாமன்.
பைக்கை விட்டு இறங்கியதும் பரந்தாமன் காணாமல் போனவர்களை தேடுவது போல சுற்றுமுற்றும் திரும்பித் திரும்பி பார்த்தபடி நின்றான்.
சந்திரனும் தீனாவும் அவர்களும் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்ததில் மதுக்கடை அவர்களின் கண்களில் பட்டது.
அண்ணன் குடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று சொல்லி இருக்காரே என்று தீனா மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.
இன்னும் கொஞ்ச நாளுல நமக்கு திருமணம் ஆகப்போகிறது இனிமேல் குடிப்பதை நிறுத்திவிட வேண்டும் . அப்போதுதான் நம் மீது நம் மனைவி பாசமாக இருப்பாள் என்று சந்திரன் நினைத்துக்கொண்டு அவனும் அமைதியாக இருந்தான்.
மதுக்கடையை பார்த்ததும் தம்பிகள் மது வேண்டும் என்று நம்மிடம் கேட்கவில்லையே . ஒருவேளை போனமுறை குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுங்கள் என்று திட்டி விட்டதால் .
அதனால் தயங்குகிறார்கள என்று நினைத்தான் பரந்தாமன்.
பரந்தாமன் சுற்றும்முற்றும் பார்ப்பதை தீனா கவனித்தான்.
உண்மையாகவே காணாமல்போனவர்களை தேட வேண்டுமா அண்ணா . என்றான் தீனா.
இல்லை இல்லை.. இங்கு அவர்கள் இருந்தாலும் நம்மால் அவர்களை அழைத்துச் செல்ல முடியாது ஏனென்றால் அவர்களுக்கு எதிரியே நம்ம மூணு பேரும் தான் . நம்மளை நமக்கே தெரியாமல் யாராவது கவனிப்பார்கள் .அதனால்தான் அவர்களை தேடுவது போல சுற்றும் முற்றும் பார்க்கிறேன் அப்போதுதான் நம் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்றான் பரந்தாமன்.
பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் சந்திரனும் தீனாவும் அவர்களும் தேடுவதை போல சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் மது வேண்டும் என்று பரந்தாமனிடம் அவர்கள் கேட்கவே இல்லை.
தம்பிகள் நம்மிடம் மது வேண்டும் என்று கேட்க மாட்டாரகள். நம் திட்டியதை நினைத்து பயந்து விட்டார்கள் . அதனால் நாமே அவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து இப்போதைக்கு குடிப்பழக்கத்திற்கு அவர்களை ஆளாக்கி விட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு .
பரந்தாமன் தீனாவிடம் பணத்தை கொடுத்து மது வாங்கிக் கொள் தம்பி என்று சொன்னான் பரந்தாமன்.
வேண்டாம் அண்ணா என்றான் தீனா.
பரவாயில்லை இருவரும் மது வாங்கிக் கொள்ளுங்கள் நான் திட்டியதை நினைத்து பயந்து விட்டீர்களா என்று பாசமாக சொன்னான் பரந்தாமன்.
பரவாயில்லை அண்ணா இன்னைக்கு வேண்டாம் என்றான் சந்திரன்.
இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு திருமணம் நடக்கப் போகுது அதுக்கப்புறம் உன்னால குடிக்க முடியாது. அப்படி குடித்தாலும் சிறிதளவு தான் குடிக்க முடியும் அதுவும் உன் மனைவிக்குத் தெரியாமல் . அதனால்தான் சொல்கிறேன் இப்போது நன்றாக குடித்துவிடுங்கள் ஆசைதீர என்றான் பரந்தாமன்.
பரந்தாமனின் பேச்சு சந்திரனுக்கும் தீனாவுக்கும் சரியாகப்பட்டது அண்ணன் சொல்வதை போல் இப்போது குடித்து விடலாம் திருமணத்திற்கு பிறகு குடிப்பழக்கத்தை நிறுத்தி விடலாம் என்று இருவரும் நினைத்து மதுக்கடைக்கு சென்று மதுவை வாங்கிக் கொண்டார்கள் .
பிறகு மூவரும் வழக்கம்போல வீட்டுக்கு திரும்பினார்கள் அப்போது மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.
பரந்தாமனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது சந்திரனும் தீனாவும்
மது குடிக்க சம்மதித்தது.
பிறகு மூவரும் வழக்கமாக பசுமையாக காணப்படும் வயல்பகுதியில் தண்ணீர் தொட்டி மேலே அமர்ந்தபடி மூவரும் தனிமையில் மது அருந்தினார்கள் அப்போது பரந்தாமன் மது அருந்தினான் . ஏனென்றால் அவன் மனம் சோகத்தில் இருந்ததால் .
பிறகு மூவரும் அந்த தண்ணீர் தொட்டி மேலே மல்லாக்காக படுத்துக் கொண்டார்கள் .
சந்திரன் மனதில் அவன் வருங்கால மனைவியே நினைத்தபடியே உளறிக்கொண்டு படுத்திருந்தான் போதையில் . பரந்தாமன் தம்பியின் திருமணத்தை இந்த முறை நம்மால் நிறுத்த முடியாது என்று நினைத்து வருத்தத்தில் புலம்பினான் . தீனாவின் மனதில் அழகாக நமது கட்டழகி கனகா தீனாவின் மனதில் நிரம்பி இருந்தால் கவர்ச்சியாக . இப்படி மூவரும் போதையில் படுத்திருந்தார்கள்.
முத்தையா ..லட்சுமி அம்மாள் ..ரேகா மூவரும் திண்ணை மீது அமர்ந்தபடி பேசினார்கள்.
கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடியே உன் அம்மா அப்பா உன் தம்பியை வர வச்சிடு என்று முத்தையா லட்சுமி அம்மாள் இடம் சொன்னார்.
ஆமாம் அப்பா முன்கூட்டியே வந்து ரேகாவுக்கு செய்யவேண்டிய முறையெல்லாம் என் தம்பி செய்யணும் . என்று லட்சுமி சொன்னாள்.
நம்ம ஊர் வழக்கப்படி எல்லோருடைய திருமணமும் நம்ம ஊர் அம்மன் கோவிலில் தான் நடக்கும் . இதை உன் அம்மா அப்பாவிடம் சொல்லிட்டியா.
நம்ம ஊரு பழக்கவழக்கம் எல்லாமே என் அப்பா அம்மாவுக்கு தெரியும் என்றால் லட்சுமி.
நம்ம ஊர் மக்களுக்கு கல்யாண சாப்பாடு ரொம்ப அற்புதமா செய்யணும் . எல்லோரும் வயிறார சாப்பிடணும் கல்யாணம் முடிந்த மறு நாளும் இந்த ஊர் மக்களுக்கு சாப்பாடு கொடுக்கணும் . இப்படி இரண்டு நாட்களுக்கு இந்த ஊர் மக்கள் வயிறார சாப்பிடனும் என்று முத்தையா சொன்னார்.
இப்படி முத்தையாவும் லட்சுமி அம்மாள் கல்யாணத்தைப் பற்றி சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார்கள் .
ரேகா ஒன்றுமே பேசாமல் அமைதியாக அவர்களின் பேச்சை கவனிப்பது போல அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் .ஆனால் உண்மையில் ரேகாவின் மனதுக்குள் சங்கரையே நினைத்துக் கொண்டிருந்தது எப்போது வேலை செஞ்சு முடித்துவிட்டு வருவாரோ என்ற ஏக்கத்தில் அவள் மனம் ஏங்கிக்கொண்டிருந்தது .
அப்போது சங்கர் சைக்கிளில் திடீரென்று வந்து நின்றான் .
உடனே ரேகாவுக்கு சங்கரை பார்த்ததும் சந்தோசத்தில் முகம் பளிச்சென்று ஆனது
கூடவே வெட்கம் அவளை கவ்விக்கொண்டது .
உடனே அங்கிருந்து எழுந்து எதிரே இருக்கும் தனது வீட்டுக்கு ஓடிவிட்டாள்.
ரேகா வெக்கப்பட்டு ஒடுவதை பார்த்த லட்சுமி அம்மாள் சிரித்தாள்.
இவ்வளவு நாளா இங்கதான் சுத்திகிட்டு வேலை செஞ்சுகிட்டு இருப்பா. கல்யாண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து . தம்பியை பார்த்தாலே வீட்டுக்குள்ள ஓடிப் போயிர வெட்கப்பட்டு கிட்டு என்று சொல்லிக்கொண்டு சிரித்தாள் லட்சுமி அம்மாள்.
சங்கர் சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு ரேகா அமர்ந்திருந்த இடத்தில் சங்கர் அமர்ந்துகொண்டான்.
அப்பா அடுத்த வாரம் பண்ணையார் குடும்பத்தோடு நம்ம வீட்டுக்கு வர போறாராம் சொல்லி அனுப்பினார் என்றான் சங்கர்.
அப்படியா வரட்டும் அவனை பார்த்து ரொம்ப நாளாச்சு .
எதுக்குப்பா குடும்பத்தோடு வரறு பண்ணையார்.
அவன் ஏற்கனவே சொல்லியிருந்தான் .
உன் மகனுக்கு திருமணம் முடிவு செய்தாள் . உன் மருமகளுக்கு நான்தான் சீர் செய்வேன்
இது என்னோட முடிவு இதற்கு நீ மறுப்புத் தெரிவிக்க கூடாது
அவள் உனக்கு மட்டும் மருமகள் அல்ல . எனக்கும் மருமகள்தான் அதனால் என் மருமகளுக்கு என் விருப்பம் போல நான் சீர் செய்வேன் என்று சொல்லியிருந்தான் அதனால் அவன் ரேகாவுக்கு சீர் கொண்டு வருவதற்குத்தான் அப்படி சொல்லியிருப்பான் என்று முத்தையா சொன்னார்.
அப்போது லட்சுமி அம்மாளுக்கு மனசு மேலும் சந்தோஷமானது பண்ணையார் குடும்பத்தோடு வந்து நம் மகளுக்கு சீர் செய்யப் போகிறார் . அதேசமயம் நமது மகள் திருமணம் இந்த ஊரே சந்தோசமாக கொண்டாடப் போகிறது என்று நினைத்து பெருமைப் பட்டாள்.
ஒரு நாள் ...கனகா ஏற்கனவே பம்புசட்டில் வேலை செய்து காணாமல் போனவர்களை பற்றி யோசித்திருந்தால் . எதனால் அவர்கள் இங்கிருந்து ஓடிவிட்டார்கள் என்று.
அப்படி என்ன அவர்களுக்கு இந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கும் எதற்காக துணிமணிகளையும் பாத்திரங்களையும் குழிதோண்டி புதைக்க வேண்டும் . என்று யோசித்தாள்
இவர்கள் காணாமல் போனதாள் பண்ணையாரும் ரொம்ப வருத்தப்படுகிறார் . ஊர் மக்களும் வருத்தப்படுகிறார்கள் இப்படி எல்லோருமே அவர்கள் மீது அக்கறையோடு இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் எதற்காக பாத்திரங்களையும் துணி மணியும் புதைத்துவிட்டு இங்கிருந்து ஓடினார்கள் என்ற சந்தேகத்தில் அங்குமிங்குமாக ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று சந்தேகப் பார்வையோடு பம்பு செட்டின் அறையில் எல்லாம் இடத்திலும் தேடிப்பார்த்தால்
அப்போது பக்கத்து அறையில் பண்ணையாரின் மனைவியின் படம் இருக்கும் பூஜை அறையிலும் சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தால் அப்போது அவளுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை .
பிறகு வெளியே வந்து குழப்பத்தோடு நின்றாள் .அப்போது அவள் கணவன் ஊமையன் இரண்டு கைகளில் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு வருவதை கவனித்தாள் .
ஊமையன் கனகாவிடம் மது பாட்டில்களை காண்பித்தான்.
கனகாவுக்கு சந்தேகம் மேலும் அதிகமானது . வேலை செய்யும் இடத்தில் யாரும் குடிக்க மாட்டார்கள் இதை யார் குடித்துவிட்டு போட்டிருப்பார்கள் என்று யோசித்தாள் . ஒரே மர்மமாக இருக்கிறதே இங்கு நடப்பதெல்லாம் புதிராகவே தெரிகிறதே இனிமேல் எதையும் நம்ம சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தாள் கனகா.
மர்மத்தை கண்டுபிடித்து விடுவாளா கனகா .....பொறுத்திருந்து பார்க்கலாம்.
தொடரும்.....