- Messages
- 111
- Reaction score
- 52
- Points
- 28
⬇️அத்தியாயம் ...30 👇
சங்கருக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி அவன் எதிர்பார்த்ததைவிட நல்ல தகவல் .... காணாமல் போனவர்களை பற்றி நல்ல தகவல் கிடைத்ததை நினைத்து சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் கையில் மல்லிகைப்பூவும் சிறிது அல்வாவும் வாங்கிக்கொண்டு..
முதலில் இந்த சந்தோஷமான செய்தியை பண்ணையாரிடம் சொல்லிவிட்டு பிறகு ரேகாவிடம் சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தான் சங்கர்..
நம்முடைய சந்திரன் திருமணத்தை நமது அம்மன் கோவிலிலே நடத்தலாம் என்று என் நண்பன் முத்தையாவும் ஊர் மக்களும் ஆசைப்படுகிறார்கள் . அவர்களின் விருப்பப்படியே நம் சந்திரனின் திருமணத்தை அம்மன் கோவிலிலே நடத்தலாம் நீ என்ன சொல்ற பரந்தாமா ..என்று பண்ணையார் கேட்டார்..
ஊர் மக்கள் ஆசைப்படியே அம்மன் கோவிலில் நடத்தலாம் அப்பா... ஆனால் கொஞ்ச நாள் போகட்டும் பிறகு திருமண வேலையை ஆரம்பித்துவிடலாம் என்று பரந்தாமன் சொன்னான்...
என்னங்க ..இன்னும் நாளெல்லாம் தள்ளிப்போட வேண்டாம் சீக்கிரமாகவே சந்திரன் திருமணத்தை முடிக்க வேண்டும் ஏனென்றால் ஏற்கனவே நிறைய நாள் தள்ளிப் போய்விட்டது இன்னும் நாட்களை தள்ளிப்போட வேண்டாம் அதனால் இன்னும் சில வாரங்களில் சந்திரன் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சாந்தி சொன்னாள்...
பரந்தாமன் யோசித்துப் பார்த்தான்
காணாமல் போனவர்களை சங்கர் கண்டுபிடித்துவிட்டால் அப்போது தெரியும் உங்களுக்கு எங்களைப் பற்றி ... இது தெரியாமல் எப்ப பார்த்தாலும் கல்யாண பேச்சு பேசிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுடைய சுயரூபத்தை தெரிஞ்சுக்கோவிங்க அந்த நாள் நெருங்கிக்கொண்டு வருது இந்த நிலைமையில எப்படி சந்திரன் திருமண வேலையை பார்க்க முடியும் என்று பரந்தாமன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்..
சந்திரனுக்கும் தீனாவுக்கும் புரிந்தது.. அண்ணன் திருமணத்தை தள்ளிப்படுவது எதனால் என்பது...
சாந்தி சொல்வதைப்போல சந்திரன் திருமணத்தை இன்னும் தள்ளிப்போட வேண்டாம் பரந்தாமா என்று பண்ணையார் சொன்னார்..
கோவிலில் சில அலங்கார வேலைகள் செய்துவிட்டு பிறகு திருமணத்தை கோவிலில் நடத்தலாம் என்று நினைத்துதான் நான் அப்படி சொன்னேன் அப்பா...
எனக்குத் தெரியும் ....நீ ஏதாவது ஒரு முடிவு செய்தாள் அதற்கு சரியான காரணம் இருக்கும் என்பது எனக்கு தெரியும் பரந்தாமா ....கோவிலில் உள்ள வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் சந்திரன் திருமணத்தை நடத்தி விடலாம் என்று பண்ணையார் உறுதியாக சொன்னார்...
இப்படி குடும்பத்தோடு பண்ணையார்... சந்திரன் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது வெளியில் ...ஐயா.. ஐயா என்ற குரல் கேட்டது..
இது சங்கர் குரல் மாதிரி இருக்கே என்று சொல்லிக்கொண்டே சாந்தி எழுந்து வந்து வெளியில் பார்த்தாள்... சங்கர் நின்றுகொண்டிருந்தான்..
வாப்பா உள்ளே... என்று சிரித்துக்கொண்டே சங்கரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றால் சாந்தி..
சங்கரை பார்த்ததும்... பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் சற்று லேசான பயம் தோன்றியது..
வாப்பா சங்கர் ...என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துட்ட. கையில பூவோடு ஏதாவது விசேஷமா என்று சிரித்துக்கொண்டே புன்னகையோடு கேட்டார் பண்ணையார்..
விசேஷமான செய்தி தான் ஐயா எனக்கு மட்டும் இல்ல நம்ம எல்லோருக்கும் தான் என்று சங்கர் சந்தோஷத்துடன் சொன்னாள்..
அப்படியா என்ன விஷயம்...
நம்ம கனகா குடும்பமும் .ஏற்கனவே காணாமல் போன பெரியவரின் மகனும் மருமகளும் உயிரோடுதான் இருக்கிறார்கள் ஐயா..
பண்ணையாரும் சாந்தியும் ஒரு கணம் ..சந்தோசத்தில் அப்படியே சங்கரை பார்த்தபடி நின்று விட்டார்கள்...
நீங்க சொல்றது உண்மையா என்று ஆச்சரியத்தோடு கேட்டால் சாந்தி..
ஆமாம் ...நான் அவர்களை பற்றின முழு தகவலும் இன்று எனக்கு கிடைத்துவிட்டது . கனகா குடும்பமும் அந்த பெரியவரின் மகன் குடும்பமும் ஒரே ஊரில் சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று சங்கர் சொன்னான்..
பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் பயத்தில் தலையே சுற்றியது . இனிமேல் நம்முடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று மூவரும் நினைத்து . என்ன செய்வது என்று தெரியாமல் வாயடைத்துப்போய் இருந்தார்கள்..
பண்ணையார் உடனே எழுந்து சங்கரின் அருகில் வந்து ..கட்டி அணைத்துக் கொண்டார் அப்போது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கண்களில் முட்டிக்கொண்டு இருந்தது..
ஆரம்ப காலத்தில் முத்தையா என்னுடைய எத்தனையோ தீர்க்கமுடியாத பிரச்சனைகளை தீர்த்து வைத்து என்னை கௌரவமாக பார்த்துக்கொண்டான் அதேபோல நீயும் உன் அப்பனைப் போலவே என்னுடைய தீர்க்க முடியாமல் இருந்த இந்த காணாமல் போன குடும்பத்தை நீ கண்டுபிடித்து விட்டாய்.. உன் குடும்பத்திற்கு நான் ஏழேழு ஜென்மமும் சேவை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் சங்கர் என்று உருக்கமாக சொன்னார் பண்ணையார்...
பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லாதீங்க ஐயா..
என் மூன்று மகன்களும் இவ்வளவு நாளா தேடியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை . ஆனால் நீ கொஞ்ச நாளிலே அவர்களை எப்படிப்பா கண்டுபிடித்தாய் என்று பண்ணையா சங்கரிடம் கேட்டார்..
எல்லாம் உங்களுடைய யோசனைப்படிதான் அவர்களை திட்டம்போட்டு தேடினேன் அவர்களும் கிடைத்து விட்டார்கள் ஐயா..
அவங்க எந்த ஊரில் இருக்கிறாங்க சங்கர் ..அவர்களை என்னைக்கு அழைத்துக் கொண்டு வர போறீங்க என்று சாந்தி கேட்டாள்..
அவர்களை பற்றின எந்த தகவலையும் கேட்க வேண்டாம்... ஏனென்றால்... ஐயா சொன்னது போல நம்முடைய எதிரி பக்கத்தில் தான் இருக்கிறான் இந்த தகவல் அவனுக்கு தெரிந்தால் ஆபத்து அந்த இரண்டு குடும்பங்களுக்கும் தான் ஏற்படும் அதனால் அவர்களைப் பற்றின தகவல் ரகசியமாகவே இருக்கட்டும் அவர்களை இன்னும் மூன்று நாட்களில் அவர்களை நம் ஊருக்கு அழைத்துக்கொண்டு வந்துவிடுவேன் என்று சங்கர் சொன்னான்..
நீ சொல்வதும் சரிதான் ... அவர்களை பாதுகாப்பாக நீதான் இந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் அதனால் நீ அவர்களை பற்றிய தகவலை ரகசியமாகவே வைத்துக் கொள் ... அதேசமயம் இந்த இனிப்பான செய்தியை நம் ஊர் மக்களுக்கு.. நீயும் உன் மனைவியும் சொல்லுங்கள் அப்போதுதான் ஊர் மக்கள் எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் ...அந்த பெரியவரிடமும் கனகாவின் சொந்தங்களிடம் இந்தத் தகவலை சொல்லுங்கள் அப்போதுதான் அவர்களுக்கு நிம்மதி பிறக்கும் என்று ஆனந்தத்தோடு சொன்னார் பண்ணையார்...
அப்போது பரந்தாமனுக்கு தன்னுடைய எதிர்காலம் முடிந்துவிட்டது என்று நினைத்து அவன் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது..
பரந்தாமா.. நம்முடைய குடும்ப கௌரவத்தை சங்கர் காப்பாற்றி விட்டான் அதே போல அவனுடைய குடும்பத்தையும் கௌரவமாக பார்த்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு. நான் இறந்து விட்டாலும் . நீங்கள் சங்கரை எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் அவனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பண்ணையார் பரந்தாமனை பார்த்து சொன்னார்...
தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து கண்கலங்கி கொண்டிருந்த பரந்தாமன் . பண்ணையார் சொன்ன வார்த்தையை கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை அசைத்தபடி நின்றான்..
சந்தோசத்தில் அழுகிறார் என்று நினைத்து ..சாந்தி பரந்தாமனை பார்த்து சொன்னாள்... என்னங்க இனிமேல் உங்கள் ஆசைப்படி உங்கள் தம்பியின் திருமணத்தை சிறப்பாக நடத்துங்கள் இனி உங்களுக்கு எந்த குறையும் வராது என்று சொல்லிக்கொண்டே பரந்தாமனின் கண்ணில் வடியும் நீரை துடைத்தால் சாந்தி...
நம்மீது உள்ள பாசத்தினால் இப்படிப்பட்ட தவறை செய்துவிட்டு நமக்காக இப்போது அண்ணன் கவலையில்
அழுது கொண்டிருக்கிறார் என்று நினைத்து சந்திரனும் தீனாவும் பெரும் சோகத்தில் தலை குனிந்து கொண்டார்கள்..
காணாமல் போன குடும்பத்தின் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறார்களே பண்ணையார் குடும்பம் . எல்லோரும் ஆனந்தத்தில் அழுகிறார்களே என்று நினைத்து பெருமைப் பட்டான் சங்கர்...
ஐயா ...நான் கிளம்புகிறேன்
இந்த செய்தியை நான் உடனே ஊருக்குள்ளே சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சங்கர் அங்கிருந்து கிளம்பி விட்டான்..
சங்கர் கையில் பூவோடு வேகமாக நடந்து வருவதை பார்த்து ரேகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது என்ன இன்னைக்கு மாமா சீக்கிரமாகவே வந்துவிட்டார் .. அப்படி என்றால் ஏதாவது நல்ல செய்தியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்போடு சங்கரை பார்த்தபடி நின்றிருந்தாள் ரேகா..
சங்கர் வந்ததும் கையிலிருந்த பூவையும் அல்வாவையும் ரேகாவிடம் கொடுத்துவிட்டு உடனே ரேகாவை தூக்கிக்கொண்டு சிரித்தான் சங்கர்..
ஐயோ கீழே இறக்குங்கள் விழுந்திட போறேன் என்று சிரித்துக்கொண்டே ரேகா சங்கரின் தோளை பிடித்தபடி இறங்கினாள்..
ஏ புள்ள ..காணாமல் போன கனகா குடும்பத்தையும் ஏற்கனவே காணாமல் போன அந்த பெரியவரின் மகன் குடும்பத்தையும் கண்டுபிடித்துவிட்டேன் என்று சந்தோசமாக சொன்னான் சங்கர்..
எனக்கு தெரியும் இன்னைக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்தது மாமா..
இன்னும் கொஞ்ச நாள்ல அவங்கள இந்த ஊருக்கு கூட்டிட்டு வரேன்..
இந்த செய்தியை பண்ணையாரிடம் சொன்னீங்களா மாமா..
அங்கு சொல்லிவிட்டு தான் நேரா இங்கே வரேன் .. உடனே இந்த செய்தியை நம்ம ஊர் மக்களிடம் சொல்லணும் புள்ள..
கண்டிப்பா சொல்லலாம் மாமா வாங்க ஊருக்குள்ள போகலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றார்கள்...
🏚️🛖⛺🏘️ சங்கர் ரேகாவும் ஊருக்குள்ளே சென்று இந்த செய்தியை எல்லோரிடமும் சொன்னார்கள் ... அப்போது முத்தையாவுக்கு எல்லை இல்லா சந்தோஷம் ஏற்பட்டது ...
நம் மகனால் இந்த ஊர் மக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை உருவாகி விட்டது என்று நினைத்து சந்தோசத்தில் பூரித்துப் போனார் முத்தையா...
காணாமல்போன குடும்பமும் கிடைத்துவிட்டது.. பண்ணையாரின் மகன் சந்திரன் திருமணமும் நடக்கப்போகிறது . இனிமேல் நம்ம ஊருக்கு நல்ல காலம்தான் என்று நினைத்து . ஊர் மக்கள் அனைவரும் பாட்டுப் பாடியும் ஆட்டம் ஆடியும் மகிழ்ந்தார்கள்..
ஊர் மக்கள் சந்தோஷமாக பாட்டுப் பாடிக்கொண்டு ஆட்டம் ஆடுவதை பார்த்த சாட்டையடி சாமியாருக்கும் அவனது சிஷ்யர்களுக்கு எரிச்சலாக இருந்தது..
குருவே நாம இன்னும் பொறுமையாக இருந்தால் இந்த ஊர் மக்கள் நம் வார்த்தைக்கு பயப்பட மாட்டார்கள் ...
உடனே நம்ம ஏற்கனவே திட்டம் போட்டபடி பண்ணையாரின் தோட்டத்தில் உள்ள கரும்பு தோட்டத்தை தீ வச்சி கொளுத்த வேண்டும் . அப்போதுதான் இந்த ஊர் மக்கள் கவலையோடு இருப்பாங்க இல்லன்னா எல்லோரும் இப்படி சந்தோஷமாக தான் இருப்பானுங்க ...
அதுக்கு அப்புறம் நம்ம சொன்ன வார்த்தைக்கு மதிப்பு இருக்காது என்று சிஷ்யர்கள் சொன்னார்கள்..
ஆமாம் சிஷ்யா ...நீ சொல்வது சரிதான் இனியும் பொறுமையாக இருக்கக்கூடாது உடனே கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்து எரித்துவிட வேண்டும் அப்போதுதான் இந்த ஊர் மக்கள் வேலையில்லாமல் மறுபடியும் சோகத்தில் இருப்பார்கள் ..
நான் சொன்ன வார்த்தைக்கும் மதிப்பு இருக்கும் என்று சாட்டையடி சாமியார் சொன்னார்...
தொடரும்.....