Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
மாயவன் ரொம்ப அழகான பெயர் மட்டுமில்ல அருமையான மனிதன்...அப்படி ஒருத்தன் இருந்தா அவன கண்டிப்பா பாக்கனும்....சந்தனா பெயர்க்கு ஏத்த மாதிரி அவ கடைசி வர மணக்கதான் செய்றா..சாவித்திரிக்கு சத்தியவான் தேவை இல்லை மகிழன் போதும்...வழக்கம் போல அருமையான படைப்ப...💐💐💐👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼😘😘😘😘🤩🤩🤩😍😍😍
thank you so much meenu ma.. 😍😍❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
😍😍😍😍பர்ஸ்ட் கதை முடிஞ்சிடுச்சுன்னு நம்ப முடில அழகா இருக்கு உணர்வுகளால செதுக்கின கதை. பல சினிமா துறையில இப்படி தான் நடக்குதுன்னு கிசுகிசுக்கப்பட்டு பின்னால அவங்க கேரக்ட்ரையும் அசிங்க படுத்தி அவங்கள சார்ந்தவங்களையும் அசிங்க படுத்தின்னு சினீ பீல்ட சூஸ் பண்ணி போறவங்களுக்கோ அல்லது வலுக்கட்டாயமாக போக பட்டவங்களோன்னு அவங்க தேர்ந்தெடுத்த பாதை பத்தி தெளிவா சொல்லிறுக்கீங்க வதனி, சந்தனா மூலம் .
சாவித்திரி சந்தனாவா மாறினது வேணா விதி மற்றும் சதியோட வேலையா இருக்கலாம் பட் அவளோட மதியால சந்தனாவா இருந்து சாவித்திரியோட உணர்வுகளை கொன்னவங்கள வாய்ப்பு கிடைச்ச பொழுது பழி தீர்த்துட்டது👏👏👏 பாராட்டகுரியது.
மாயா ப்பா அடுத்த மதுரவன் தான்😇😇 சிரிப்பாலே சோகங்கள கடந்து பிழையா இருந்த சந்தாவை திருத்தமாய் வந்து திருத்தினது சானஸ்லேஸ்😘😘😘😘. மகேன், ஜெ சீன்ஸ் அப்போனா எவ்வளவு பக்குவமா ஹாண்டல் பண்ணான். அதோட ஜெ அம்மா ஒரு சீன்ல ஜெ லவ் பத்தி சொன்ன அப்போ நடந்த டயலாக்ஸ் எல்லாம் சூப்பர்.
ஜோடியோட சேரனும் , குழந்தையோட ஹாப்பி எண்டிங் இருக்கனும்ங்கிற அவசியம் இல்லாம உணர்வுகளால் நட்பும், காதலும் கடந்த நிலையில இருக்கிற பந்தம் மட்டும் போதும்ன்னு முடிச்சது நல்ல எண்டிங்கா இருந்திச்சு😇😇😇😇.
கதையோட ஆரம்பத்தில கிரேட் ஷாக் நந்து மா ஸ்டோரி தான் இதான்னு 😂😂 இப்போ கிளியர் ஆகிடுச்சு மதுரவன், மனோ வரிசையில மாயவன பார்த்ததில❤❤❤❤❤💙💙💙💙💙.
thank you so much archana ma.. ivvalavu thooram read panni comment panrathuku. Ungaluku pidichadula romba santhosam ma❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
ரொம்ப அருமையான கதை அக்கா😊..கடைசில சந்தனா மாயவன் சேர்ந்துதிருந்தா ஏதோ ரெண்டு பேருட கதாபாத்திரத்திற்கு முரணா இருந்திருக்கும் .. ஆனால் இத விடவும் சிறந்த முடிவு இல்லை. 👌👌 சந்தனாக்கு இனி மகிழன் இருக்கான்🥰😊 மாயவன் ரொம்பவே வித்தியாசமானவர்.. அந்த வித்தியாசம் சந்தனா வாழ்க்கையை சீர் படுத்திருக்கு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா ❤❤🌹💐💐💐
thank you so much da ma for your lovable words..❤️❤️
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதை.... சினிமாமோகம் எப்படி எல்லாம் மாதிடுத்து அதோட பாத்திப்பு எல்லாமே ரொம்ப தெளிவ சொல்லி இருந்தீங்க....

குறிப்பா கவிதைகள் எல்லாம் அருமை ஓ அருமை

மாயவன் எல்லார் மனசில் மையம் கொண்டு மாயம் செய்துதான்....


வாழ்த்துக்கள் நந்தினி
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
நான் படிச்சதுல வித்தியாசமான கதை...
மாயவன் இவன் புதுமையானவன் மட்டுமல்ல மாயங்களின் prince.....இவன் வந்த ஒவ்வொரு சீன்ஸ்ம்,பேசுன வார்த்தைகளும்,கவிதைகளும் awesome...சந்தனா துரோகம் பண்ணவங்களுக்கு கொடுத்த பதிலடி superb..துரோகங்கள் இருப்பினும் தொடர்ந்த நட்பு அழகு...கதைக்குப் பொருத்தமான தலைப்பு...முடிவும் அருமை.. வாழ்த்துக்கள் சிஸ்...
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
story arumai sis daily eagerly waiting for ud sis and mayavan character arumai all the best sis and come soon prathillipi sis
Thank you so much sis. ❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதை.... சினிமாமோகம் எப்படி எல்லாம் மாதிடுத்து அதோட பாத்திப்பு எல்லாமே ரொம்ப தெளிவ சொல்லி இருந்தீங்க....

குறிப்பா கவிதைகள் எல்லாம் அருமை ஓ அருமை

மாயவன் எல்லார் மனசில் மையம் கொண்டு மாயம் செய்துதான்....


வாழ்த்துக்கள் நந்தினி
Thank you so much ma..❤️❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
நான் படிச்சதுல வித்தியாசமான கதை...
மாயவன் இவன் புதுமையானவன் மட்டுமல்ல மாயங்களின் prince.....இவன் வந்த ஒவ்வொரு சீன்ஸ்ம்,பேசுன வார்த்தைகளும்,கவிதைகளும் awesome...சந்தனா துரோகம் பண்ணவங்களுக்கு கொடுத்த பதிலடி superb..துரோகங்கள் இருப்பினும் தொடர்ந்த நட்பு அழகு...கதைக்குப் பொருத்தமான தலைப்பு...முடிவும் அருமை.. வாழ்த்துக்கள் சிஸ்...
Thank you so much dharshini ma...❤️❤️❤️❤️😍
 

அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️....
உண்மையாவே என்ன சொல்றதுன்னு தெரியல. படிச்சு முடிச்சதும்.... கொஞ்ச நேரம் அமைதி. மாயவன் தனா ரெண்டு பேரும் சேர மாட்டாங்க'னு உறுதியாக நம்பினேன். அதே மாதிரிதான் முடிவும் இருந்துச்சு. ஆனா எதிர்பார்க்காத ஒண்ணு மகிழன் தான். எனக்கு மகிழன் பேரு ரொம்ப பிடிக்கும். மாயவன் குழந்தைக்கும் ஏற்ற பெயர்தான். மாயவன் மாதிரி... சிரிப்ப தொலைக்காம கடந்து போகனும்.
இந்த கதை ஆரம்பத்தில் சொன்ன மாதிரி முடிவு வரைக்கும் நான் இப்படித்தான்னு தனா இருந்து காட்டிட்டா. கதையில ரொம்ப பிடிச்ச விஷயம்... ஒரு இடத்தில் கூட தனா தன்னை நியாயப்படுத்தல. என்னைப் பொருத்தவரைக்கும் தனா மேலையும் நிறைய தப்பு இருக்கு. அதை அவளும் முழுசா உணர்ந்ததுக்கு அப்புறம் தான்... தனக்கான அடையாளத்தை தேடாம.... கொடுக்கப்பட்ட கஷ்டங்களுக்கு தண்டனை கொடுத்தா. ஒரு மனுஷனுக்குள்ள ஆசை வளர்ந்துட்டா அவன அடக்குறது ரொம்ப கஷ்டம். அதே தான் இந்த இரு பெண்கள் வாழ்க்கையிலும். அன்னைக்கு தனா நினைச்சிருந்தா வினய் கிட்ட இருந்து ஏதோ ஒரு வகையில வெளியே வந்திருக்க யோசிச்சிருப்பா. லேப்டாப் முன்னாடி அவளை உட்கார வெச்சி வினய் சொன்ன வார்த்தைக்கு அவனைத் திரும்பிப் பார்த்த நொடி தான் அவளுடைய வாழ்க்கை மாறின நொடி. இந்த கதையில நிறைய இடத்துல... வார்த்தைகள் வெளிப்படையா இருந்திருக்கு. ஆனா அத ஆராய்ச்சி பண்ணி பார்க்கிற அளவுக்கு மனச கொண்டு போகாம மாயவன் தனா பின்னாடி கொண்டு போன சாமர்த்தியம் எழுத்தாளரின் திறமையை காட்டுது. வார்த்தையை போல கூராயுதம் எதுவுமே இல்லை. அதே வார்த்தையை தான்.. முடிஞ்சு போன வாழ்க்கைக்கும் பிள்ளையார் சுழி போடுது. ஆணும் பெண்ணும் பேசக் கூடாத... அதுவும் சில சந்திப்புகளில் பழகிய இருவரும் பேசவே கூடாது பல விஷயங்கள் மாயா தனா குள்ள நிகழ்ந்து இருக்கு. அத ரெண்டு பேருமே இயல்பா கடந்து போகும் போது... பார்வையாளரா இருக்கிற வாசகியா நம்பமுடியாத பிரமிப்பு தான். பல இடங்கள்ல... எப்படி இதுன்னு யோசிச்சிருக்க. இப்படி நடந்திருக்க வேண்டாம்'னு பயந்து இருக்க. இதெல்லாம் உண்மையா நடக்குதுன்னு... மனசு ஓரத்துல ஒரு வலி. நல்லவளோ கெட்டவளோ... தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒரு நியாயத்தை தேடிக்கிட்டா. நான் இப்படிதான்னு கடந்து போக... நிறைய வலிகளை இந்த சமூக அனுப்பி விடும். அத்தனையும் சுமந்துகிட்டு போக வேண்டிய கட்டாயம். தனா அப்பா.. கேரக்டர் இயல்பா அடித்தட்டு மக்கள் சந்திக்கிற குணம் தான். பொண்ணு வசதியா இருக்கா ன்னு பார்க்காமல்... அப்பவும் பாரபட்சம் பார்க்காம திட்டுன அவருடைய குணத்துல கூட ஒரு அன்பை தான் நான் உணர்ந்தேன். அம்மாக்கள் எப்பவுமே தனி ரகம்... என்ன தப்பு செஞ்சாலும் தன் பிள்ளைனு அரவணைக்குற கடவுள். தனாவ பற்றி யார் என்ன பேசினாலும் இந்த தாய் உள்ளம் மட்டும் உண்மையான அன்பை கொடுத்து கிட்டே இருக்கும். அதுக்கு மற்றொரு சாட்சிதான் மகிழன். மத்த விஷயங்கள் அவங்க கண்முன்னே நடக்கல. ஆனா மகிழன்? சில உறவுகளுக்கு இந்த அம்மா கூட இல்லாம போகுது. அப்படி கிடைக்காம போனாலும் சரியான பாதையில போறவங்க ஒரு சிலர் தான். அதுல ஒருத்தன் தான் மாயவன். எங்கேயோ பிறந்து, யார்கிட்டயும் வளர்ந்து, தஞ்சம் புகுந்து தன்னுடைய அடையாளத்தை தேடிக்க, ஒவ்வொரு நாளும் தனக்குள்ள நம்பிக்கையை வளர்க்க, மாயவன் எவ்ளோ போராடி இருப்பான். தனா கண்ணுக்கு தெரிஞ்ச எதிரியோடு போராடி இருக்கானா...
மாயவன் யாருன்னே தெரியாத விதி கூட... இத்தனை நாள் போராடிட்டு இருந்திருக்கான்.

சாவித்திரியை கொன்னுட்டன்னு தனா பேசும்போது உச்சபட்ச இயலாமை. ஆண்களுக்கு பாலியல் தொந்தரவு நடக்கும்னு மாயவன் சொல்லும் போது வாழ்க்கையோட யதார்த்தம் புரிந்தது.
வதனி ஒரு இடத்தில் சொல்லி இருப்பா அழக பாத்து தான் காதலிச்சன்னு. என்ன பொறுத்த வரைக்கும் அந்த வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை. என்னதான் மனசுனு பேசினாலும்.. முதல்ல ஒருத்தர பார்க்க வைக்கிறது முகம் தான். எத்தனையோ பேர் அழகா இல்லைன்னு மனசை குத்தி கிழிக்கலையா? இங்கே பல பேரோட காதல்.. மனச பார்க்கிறது இல்லை. வாழ்க்கையோட யதார்த்தம் இதுதான். வெகு சிலருக்கே அந்த வாய்ப்பு வரமா அமையுது. தப்பு பண்ணி திருந்தி வாழும்போது கூட... உண்மையை சொன்ன வதனி குணம் நம்ம சராசரியா பார்க்கிற மனுஷங்கள் ல ஒன்னுதான்.

தனா மாதிரி திரும்பவும் குடும்பத்தை சந்திக்க துணிவு யாருக்கும் இருக்காது. அதே மாதிரி கூட பிறந்தவர்களும் கல்யாணம் பண்ணவங்களும் அவள சாதாரணமா விட்டிருக்க மாட்டாங்க. அந்தப் பதினேழு வயசு பையன் கேட்ட மாதிரியும், அக்கா புருஷன் பார்த்த மாதிரியும் இன்னும் ஆயிரம் கண்கள் ஆடையை தாண்டி வினய் பண்ணதை விட மோசமா கற்பனையில வாழ்ந்து இருக்கும்.

கதை ஆரம்பத்துல இருந்த குணமும் முடிவில் இருந்த குணமும் வேற வேற தனா உட்பட பலருக்கு. போலியான முகங்கள் அவிழ்ந்து உண்மையான முகம் பல வலிகளோடு வெளியே வந்து இருக்கு. ஆனா ஒருத்தன் மட்டும் தான்... தன்னுடைய இயல்பையும் வார்த்தையையும் மாற்றாம இது உண்மையா கற்பனையான்னு கடைசி வரைக்கும் மாய உலகத்தில் தங்க வைச்சிட்டான். அப்படி ஒரு அழுத்தம். இயல்பா அவனோட வாழவும் முடியாது. சரி போன்னு விடவும் முடியாது. அழகா ரசிக்கிற இயற்கை மாதிரி... அதுக்குள்ளேயும் சின்னதா ஒரு சீற்றம் இருக்கு. எப்ப வேணா அதுல நம்ம சாகலாம். சிந்தாத கண்ணீருக்கு விலை அதிகம். யார் வேணா மாறட்டும் என்னோட பார்வை கூட மாறாதுன்னு பிடிவாதமா நிகழ்த்திக் காட்டிடான். 30 வயசுக்கு மேலயும்... இல்லற வாழ்க்கையை தேடி போகாம இருக்க எப்படித்தான் மனசு வருதோ. ரொம்ப இயல்பா சாதாரணமா... அதான் குழந்தைகளுக்கு மகிழன் இருக்கான். சொல்லிக்க இந்த ஆசிரமம் இருக்குன்னு சொல்றத கேட்டதும்.. அவ்வளவுதான் அந்த வாழ்க்கை! ஒண்ணுமே இல்லையா? இதுக்கா இவ்வளவு போராட்டம்'னு ஒரு நிமிஷம் யோசிச்சேன். ஆனா உங்க கிட்ட ஒன்னு சொல்லி ஆகணும்... மாயவன் மாயாவி தான். அவனை மாதிரி அவன் மட்டும்தான். ஆனா என்ன என்னோட மதுக்கு தம்பி இவன் இல்ல 🙈🙈🙈.

இவங்க ரெண்டு பேர் நடுவுலையும் நிச்சயமா காதல் இல்லை. இல்லற வாழ்க்கை தேவையும் இல்லை. வாழ்க்கை முழுக்க இவர்களுடைய சந்திப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ரெண்டு பேருக்கும் பிரிவே இல்லாத பாலம் மகிழன். வாழ்க்கை முழுக்க நான் இருக்கேன்னு ஒரு நம்பிக்கை. உண்மையான அன்பு. எந்த நேரத்திலும் பாதுகாக்கிற அரவணைப்பு. நல்ல தோழமை. இன்னும் இந்த உறவு குள்ள என்னைமோ இருக்கு. அவங்கவங்க பாதையில.. அவங்க அவங்க போய்க்கிட்டு இருக்காங்க. நிச்சயமா இந்த பாதை மறைமுகமா இன்னோரு ஆள் வர தான்.

இப்பதான் முதல் அத்தியாயம் படிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள முடிவே வந்துடுச்சு. சில விஷயங்கள் கண்ணு இமைக்கிற நொடிக்குள் நடந்து முடிச்சிருது. அதுவும் உங்களுடைய எழுத்து நடை... அரை நொடி ஆச்சரியம். நிதானமா மனச கட்டுபாட்டுல வச்சிட்டு படிக்கனும். இல்ல'னா நிச்சயமா நீங்க எழுதுற தீவிரவாத இயக்கத்துல சிதைந்து போய்டுவோம். மெல்ல மெல்ல ... உங்க எண்ணங்களை எங்களுக்குள்ள விதைக்கிறிங்க... அதும் பெர்மிஷன் கேட்காம. ஓவரா புகழ்ந்தா பொங்கல் வைக்கிறாங்க🤣🤣🤣🤣🤣🤣 எதுக்கு வம்பு. ஆனாலும் மனசுல உங்காந்துட்டு சடுகுட ஆடுற உங்க கிட்ட மயங்கி விழுந்தத ஒத்துகிட்டு தான் ஆகணும் . இந்த போட்டியில உங்க படைப்பு நிச்சயம் பெருசா பேசப்படும். இந்த கதை வெற்றி பெறனுன்னு ரொம்ப விரும்புறேன். நிச்சயமா நடக்கும் நான் நம்புறேன்.

தொடர்ந்து.. ஊசியாய் இதயங்களை கிழிக்கும் கதாபாத்திரங்களை எழுத்துலகில் பிறக்க செய்யுங்கள். பேசட்டும் உங்க கதை வளர்ப்பு மரணம் இல்லாமல்.

லவ் யு சோ மச் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Last edited:
Top Bottom